ஏறக்குறைய ஒரு மாதம் வீழ்த்திய வைரஸ் காய்ச்சலுக்குப் பிறகு பிறகு சொந்தமாக ஒரு பதிவு எழுதவேண்டுமென்று வந்தால் பதிவுலகில் நற்குடி பிரச்சினை. பிரச்சினையற்ற உலகில் நேர்மறையாக எழுதவேண்டிய விசயங்கள் மலையளவு இருக்கும் போது தொடர்ந்து பிரச்சினைகளையும், தகராறுகளையும் அலசி ஆய்வதிலிருந்து என்று விடுதலை கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் ஊர் உலகமென்றால் பிரச்சினைகளும் இருக்கும்தானே?
ஈரோடு பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியிருக்கிறது.
பதிவர் சந்திப்பிற்கு பதிவர் சுமஜ்லா சென்று வந்ததோடு “பர்தாவோடு சென்றேன், பர்தாவோடு இருந்தேன்” என்று யாரையோ திருப்திப்படுத்தவோ, முன்னெச்சரிக்கைக்காகவோ, ஜாக்ரதையாக எழுதி பதிந்து கொண்டார். இதன் பின்னணி என்ன? ஒரு பெண் அதுவும் இசுலாமியப் பெண் பதிவு எழுதுவது பெரிய விசயம். அதையும் அவர் வீட்டு ஆண்கள் அனுமதிப்பது பெரிய சுதந்திரம்.( இன்னும் இதுபோன்ற என்னவெல்லாம் சுதந்திரங்கள் இருக்கிறதோ?) இதில் சுமஜ்லா தமிழில் வேறு என்ன செய்திகளை எழுதுகிறார் என்பது தெரியவில்லை.
ஆக முசுலீம் பெண்பதிவர் சுமஜ்லா தனது சுதந்திரம் பாதுகாப்பு கருதி இந்த பர்தா சங்கதியை பதிவு செய்திருக்கிறார் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். இல்லையேல் நாளை ஒரு முசுலீம் பெரிசு ” காலம் கெட்டுக்கிடக்கு, நம்ம சுமஜ்லா பொண்ணு ஏதோ இன்டர்நெட்டுக்காரனுக கூட்டத்துக்கு போய்ட்டு வந்துச்சாமே?” என்று வாங்கிவிட்டால் என்ன செய்வது?
இதைப் புரிந்து கொள்ளாத ஒரு அனாமதேயம் பின்னூட்டத்திலோ வேறு எதிலோ இதை பகடி செய்து ” நான் பேண்டு போட்டு பேண்டோடு அமர்ந்தேன், நான் சேலை கட்டி சேலையோடு அமர்ந்தேன்” என்று எழுதப்போக, அக்மார்க் இசுலாமிய பெண்ணான சுமஜ்லா அதை ஓரம்தள்ளாமல் பிரஸ்டீஜ் பிரச்சினையாக பாவித்துக்கொண்டு பர்தாவின் மகத்துவம் பற்றி ஒரு தனி பதிவு போட்டார். ஆரம்பித்தது பிரச்சினை.
அதிலும் “நற்குடி” பெண்களென்றால் பர்தா இல்லாமல் வாழமாட்டார்கள் என்ற ரேஞ்சில் தனது அடிமைத்தனத்தை சிலாகித்திருந்தார். இப்பத்தான் பதிவுலகம் வந்திருக்கும் அந்த பேதைப்பெண்ணுக்கு உலகம், அடிமைப்பெண்கள், சுதந்திரப் பெண்கள், மத பிற்போக்குத்தனங்கள் எல்லாம் புரிவதற்கு பதிவுலகமென்ன முற்போக்கு சிங்கமாகவா உள்ளது? மொக்கைகள், சினிமாக்கள் என்று காலம்தள்ளும் பதிவுலகை விண்டு பார்த்தால் சாதியும், மதமும், ஆணாதிக்கமும்தானே கோலேச்சுகிறது?
அந்த்தபடிக்கு சுமஜ்லாவும் திருந்த வாய்ப்பில்லாதது நம் சூழலோடு இணைந்தது. இதனால் அந்தப் பெண்பதிவர் எதுவும் தெரியாத அப்பாவி என்று பரிதாபப்படவில்லை. பர்தா என்ற அடிமை சமாச்சாரத்தை அப்படி உருகி உருகி அவர் எழுதியிருந்ததைப் பார்த்தால் அது நிச்சயம் அல்லாவுக்கே பொறுக்காது. உலகம் எங்கேயே போய்க்கொண்டிருக்கும் போது இன்னும் அந்த பர்தாவைத் தொங்கிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. வன்புணர்ச்சிக்கு அலையும் ஒரு கொடூரனிடமிருந்து ஜீன்ஸ், சல்வார் போட்ட பெண்களாவது கொஞ்சம் கை, காலை ஆட்டி சண்டையாவது போட முடியும், சுதந்திரமாக ஓட முடியும். பர்தா அணிந்த பெண்கள்? மூலையில் தேமே என்று அழவேண்டியதுதான். இதனால் மிருகங்கள் ஒன்றும் பரிதாபப் படபோவதில்லை.
உடையின் இடையில் தெரியும் பெண்ணுடலை வக்கிரத்துடன் பார்க்கும் நோய் ஆண்களின் கண்களில் உருவாக்கப்பட்டிருக்கும்போது அதற்கு அல்லாவோ பர்தாவோ என்ன செய்ய முடியும்? அல்லது அந்த அல்லாதான் ஆண்களின் காமவெறியை கொஞ்சம் காந்தி மாதிரி தணிச்சலாக படைத்திருக்கலாம்தானே? தஞ்சை மாவட்டத்தில் வயலில் வேலை செய்யும் உழைக்கும் பெண்கள் தமது உள்பாவாடையை வரிந்து கட்டிக்கொண்டு கிட்டத்தட்ட ஷார்ட்ஸ் போல உடையை மாற்றிக் கொண்டு வேலை செய்வதை சுமஜ்லா பார்த்ததில்லையா? எந்த வேலையும் இல்லாமல் சும்மா அரட்டை அடிப்பவர்களுக்குத்தான் பர்தா லாயக்கு. உழைக்கும் பெண்களுக்கும், ஒட்டம், ஆட்டம் என சாதனை படைக்கும் பெண்களுக்கும் அது தடைச் சங்கிலி.
அடுத்து பர்தா என்னவோ இசுலாமியருக்கு மட்டும் சொந்தமென்று சிலர் நினைக்கிறார்கள். வட இந்தியாவின் பல இந்து சாதிகளில் பர்தா என்பது இருந்தே ஆக வேண்டிய கட்டாயம். பொதுவில் பெண்களை அடிமைகளாக பார்க்கும் எல்லா மதங்களும் ( கிறித்தவத்தில் கன்யாஸ்தீரியின் அங்கி கூட ஒரு பர்தாதான்.) இப்படித்தான் சட்ட திட்டங்களை வைத்திருக்கின்றன.
பர்தாவின் அநீதியை ஒருவர் எதிர்க்க வேண்டுமென்றால் அவர் எல்லா மதங்களையும் அதில் உறைந்திருக்கும் ஆணாதிக்கத்தையும் எதிர்ப்பவராக இருக்கவேண்டும். சுமஜ்லா பர்தாவைப்பற்றி பதிவு எழுதியதும், கலகலப்ரியா எனும் இந்து பெண்பதிவருக்கு ஆத்திரம் வான்தட்ட அவர் ஒரு கவிதையை தாளித்தார். இவர் ரௌத்திரம் பழகும் பாரதியின் பயங்கர விசிறியாம். இவருக்கு எழுந்த கோபம் பெண்ணுரிமையின் பாற்பட்டதல்ல. பர்தா போட்ட பெண்களெல்லாம் நல்லவர்கள் மற்றவர்களெல்லாம் கெட்டவர்களா என்ற அணி அதாவது இந்து அணியிலிருந்து வரும் கோபமே அடிப்படை.
இவ்வளவிற்கும் இவர் பர்தாவை எதிர்க்கவில்லையாம். அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கைகளை அவரவர் பின்பற்றுவது சரியாம். ஆனால் அதற்காக மற்ற மதத்தவர்களை நொட்டம் சொல்வது சரியல்ல என்பதே பிரியாவின் வாதம். பிரியாவின் இரசிகர் கூட்டம் இந்த கவிதைக்காக பின்னூட்டத்தில் ஒரு பெரும் ஆவேசக் கூச்சலையே எழுப்பிச் சென்றிருக்கிறது. சாராமாகச் சொன்னால் நாகரீகமான வார்த்தைகளில் துடித்துக்கொண்டிருக்கும் இந்துத்வ மனமே இதன் இயக்கம். இதற்கு நம்ம ”ஞானப்பழம்” உண்மைத்தமிழன் கூட விலக்கல்ல. அப்பப்பா மொக்கைகளுக்குள் மறைந்து நிற்கும் பதிவுலகம் மதம் எனும் வாதத்தில் எப்படி சிக்குண்டிருக்கிறது என்பதறிய அந்த பின்னூட்டங்களை வாசிக்க வேண்டும்.
இவர்கள் எல்லோரும் எமது இந்துமதத்தை இழிக்கிறாயா என்ற ஆவேசத்தில் பதிவர் சுமஜ்லாவை கிழிக்கிறார்கள், மைனஸ் ஒட்டு போட்டு ரசிக்கிறார்கள். மாற்றுமுகாம் பதிவுகளுக்கு கள்ள ஒட்டு போட்டு கைதட்டுகிறார்கள். ஒரு புறம் பதிவுலகம் மத மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டது என்று பல்லவி பாடிக் கொண்டே மறு புறம் இசுலாமிய வெறுப்பை நாசுக்காகவும் பகிரங்கமாகவும் கொட்டுகிறார்கள். கவிதையும்(?) பதிவுமாக எழுதி தள்ளுகிறார்கள். இவர்கள் எவருக்குமே பெண்ணை மதங்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அநீதி குறித்து கிஞ்சித்தும் கவலை கிடையாது. அது இருந்தால் இந்து மதம் பெண்ணை வதைத்திருக்கும், வதைத்துவரும் கொடூரங்கள் குற்ற உணர்வை கொள்ள வைத்திருக்கும். இந்த விசயங்களை அந்தப் பதிவர்களின் பின்னூட்டங்களில் தனியாக நின்று வாதிட்ட சுகுணா திவாகரின் பின்னூட்டத்தை பலரும் சீண்டவில்லை என்பது மட்டுமல்லாமல் அநாமதேயங்களாகவும் வந்து கிண்டலடித்தார்கள்.
“மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்கள் இப்படித்தான், யாரும் மாற்ற முடியாது” என்று இசுலாமியர்களை இழிக்கும் இந்த சிகாமணிகள் மாறாத இந்து மதத்தை மாற்ற என்ன கிழித்தார்கள்? பிறந்ததிலிருந்து தகப்பன், கணவன், பிள்ளை என மாறி மாறி எல்லா ஆண்களுக்குக்கும் கட்டுப்பட்டவள் பெண் என்பதே மனு வகுத்து இன்றுவரை அமுலிலிருக்கும் நடைமுறை. பெண்கள் வேலைக்கு சென்றாலும் இந்த முறை மாறிவிடவில்லை. இன்றும் மற்ற மதங்களை விட விதவை திருமணம் என்பது இந்து மதத்தில் மிகுந்த இழிவாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள விதவைப் பெண்கள் இன்னமும் ஒரு கல்யாணம் காச்சிக்கும இன்றும் செல்ல முடியாது. இதைப்பற்றியெல்லாம் ஏன் ப்ரியாவுக்கு சீற்றம் வரவில்லை?
வட இந்தியாவில் இன்று வரை சீரோடு நடந்து வரும் குழந்தை திருமணங்களினால் பெண்தானே பாதிக்கப்படுகிறாள்? கயர்லாஞ்சியில் உழைத்து முன்னேறி வாழ விரும்பிய பூட்மாங்கே குடும்பத்தை ஆதிக்க சாதி ஆண்கள் கற்பழித்து வாய்க்காலில் வீசினார்களே இதுவெல்லாம் கலகலப்பரியாவுக்கு ரௌத்திரத்தை எழுப்பாதா? நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூட பார்ப்பனப் பெண்கள் விதவையானால் அவளது முடியை ஒண்ணொண்ணாக பிடுங்கி மொட்டையடித்த நாடும் இதுதானே? இந்தக் கதையெல்லாம் தனக்கு தெரிந்த நல்ல பார்ப்பனர்களை வைத்து ஜெயேந்திரப் பார்ப்பனர்களை மறைக்கும் பழமைபேசி பஞ்சாங்கங்களுக்கு தெரியுமா?
பெண்ணின் இயல்பான மாதவிடயாக் காலத்தை வைத்தே எத்தனை சட்ட திட்டங்கள்? அவள் பூ சூடக்கூடாது, கோவிலுக்கு போகக்கூடாது, விசேசங்களுக்கு செல்ல கூடாது, வீட்டில் ஒரு மூலையில் மூன்று நாட்களும் அடங்கிக் கிடக்க வேண்டும் என்றெல்லாம் கிரிமினல் சட்டம் வகுத்தவர்களைப்பற்றி கோபம் வராதா?
அவ்வவளவு ஏன், தற்போது ஐயப்ப சீசன். என்னவெல்லாம் வாய் கிழியப் பேசுகிறார்கள், சபரி மலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று ஒரு விதியை இன்னும் அமல்படுத்தி வருகிறார்களே இதுவெல்லாம் ‘நற்குடி’ பதிவர்களுக்கு கோபத்தை கொண்டுவரும் தகுதி படைத்தது இல்லையா?
சீசன் வந்து விட்டால் சாமிகளின் அட்டகாசம் தாங்கமுடியாது. டீக்கடையில் பேப்பர் கப்பாகட்டும், டாஸ்மாக்கில் சரக்கடிக்க தனி பிளாஸ்டிக் டம்ளாராகட்டும் என சரக்கு தொடங்கி சகலத்திலும் அய்யப்பமார் சாமிகளின் புனிதம் காக்கப்படுகிறதாம். இதில் வயதுக்கு வந்த ஒரு பெண் ஐயப்பனை வணங்க வந்தால் அது தீட்டாம். இந்த மாதிரி கேவலம் உலகில் வேறு எங்கவாது உண்டா? கேட்டால் பெண்ணின் ரத்தவாடை அறிந்து காட்டு விலங்குகள் வந்து விடுமாம் என்றொரு அறிவியல் விளக்கத்தையும் தெளிக்கிறார்கள்.
ஏன் ஆணின் உடலில் கூட மல, சலம், வியர்வை, ரத்தம், சளி என எல்லா எழவும் இருந்துதானே தொலைக்கிறது. இதைப் பார்த்து காட்டு விலங்குகள் இது ஆண் சமாச்சாரம் என ஓடிவிடுமா? அப்புறம் சேலை கட்டிய பெண்கள் ஒட முடியாதாம். அதனாலென்ன ஜீன்ஸ் போட்ட பெண்கள் ஒடலாமே? ஏதோ சிந்து பாத்தின் சாகசப் பயணம் போல உதார் விடும் இந்த சாமிகள் எவரும் நோகமால் ரயில், பஸ், இதர வாகனங்கள், சுமைதூக்கிகள், சாப்பாட்டுக் கடைகள், மலையிறங்கியதுமே சரக்கடிக்க ஏற்பாடுகள் என எல்லா வசதிகளையும் வைத்துக் கொண்டே பயணம் செய்கிறார்கள்.
இப்பொதேல்லாம் சபரிமலைப் பயணம் என்பது ஒரு பிக்னிக் ஸ்பாட் பயணமாகி விட்டது. தேவைக்கேற்றபடி ஒரு மண்டல விரதம், ஒரு நாள் ஏன் ஒரு வேளை விரதம் என்பதாகவெல்லாம் சுருங்கிய நிலையில் பெண்கள் மட்டும் வரக்கூடாது என்ற அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்ல? இதைப்பற்றியெல்லாம் ரௌத்திரதாசர்களுக்கு ரௌத்திரம் வராதா?
பெண்களைக் கண்டால் முகம் சுளிக்கும் ஐயப்பன் பூசை செய்யும் கண்டலரு பாப்பானின் அயோக்கியத்தனங்கள் அதுவும் பண மோசடி, விலைமாதர் சகவாசம், கணபதி ஹோமம் மந்திரம் கூட தெரிந்திராத பக்திப் பரவசம் இதையெல்லாம் சகித்துக் கொண்ட சூட்சுமம் என்ன? இந்த கிரிமினல் பாப்பான் ஜெயிலில் கம்பி எண்ணவேண்டிய கேடி இன்னும் குஷாலாக வெளியில் சுதந்திரமாக சுத்தி வருகிறான். இதைக்கண்டெல்லாம் ஆண்பக்தர்களுக்கு கோபம் வருவதில்லை. ஜெயமாலாவும், சுதாசந்திரனும் சாமியைத் தொட்டதற்காக தீட்டு கழித்த கபோதிகள் எவரும் கண்டலறுவின் அயோக்கியத்தனங்களுக்காக அய்யப்பனுக்கு ஒரு எழவுத் தீட்டும் செய்யவில்லை. அப்படி செய்யவேண்டியிருந்தால் பூசாரியையும், சாமியையும் ஒரு சேர குண்டு வைத்து பிளப்பதே தீட்டுக்கழிப்பாக இருக்கும்.
இதைப்பற்றி எந்த சுரணையும் இல்லாத சாமிகள்தான் ஆண்டுதோறும் பயணம் சென்று சாஸ்தாவைத் தரிசித்து வீரமணி பாட்டுக்களையெல்லாம் குத்தாட்ட ஸ்டைலில் பாடி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.
இப்படி பக்தர்களிலேயே பிழைப்பு வாதம் வந்து விட்டாலும் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க கூடாது என்பதில் மட்டும் எல்லா சாமிகளும் ஒன்றுபடுகிறார்கள். அதற்கு ஆயிரத்தெட்டு அறிவியல் விளக்கம் வேறு சொல்லி வதைக்கிறார்கள். காலையில் மலத்திற்கு முன் சிறுநீர் வருவது ஏன்? அக்குளில் அரிப்பு வந்தால் ஏன் சொறியவேண்டும், மோர்ச்சோறு ஏன் கடைசியில் விழுங்க வேண்டும் முதலானவற்றுக்கு இந்து மதத்தில் அறிவியல் விளக்கங்கள் உண்டு என்றால் பாருங்களேன். சந்தேகம் உள்ளவர்கள் ஆர்.வியின் ஞானகுரு டோண்டு ஐய்யங்காரிடம் கேட்டால் பதில் பெறலாம். ஹை லெவல் இன்புளுயன்ஸ் உள்ளவர்கள் காஞ்சி காமகேடி ஜெயேந்திரனிடம் போய் கேட்டலாம், மனைவி-மகளோடல்லாமல் தனியாக போவது ஷேமம் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு.
சபரிமலைக்கு கிளம்பும் ஆண் சாமிகளுக்கு வேண்டிய எல்லா பணிவிடைகளையும் செய்யும் பெண் மட்டும் சாமி ஆக முடியாதாம். அந்தப் பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஆம்பளை சாமிகள் வீட்டில் இருக்க மாட்டார்களாம். அவ்வளவு சுத்தமாம். இதே சுத்தம் ஐயப்பனுக்கும் தேவையென்பதால் பெண்களுக்கு தடா!
கடவுள் என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும், பாக்டீரீயா, வைரஸ் முதலான சகலவற்றுக்கும் பொதுதானே என்றால் அது வேறு இது வேறு என்று இழுப்பார்கள். இப்படி மனிதகுலத்தின் சரிபாதி பெண்ணினத்தை இழிவு படுத்தும் சபரிமலை அய்யப்பனை வணங்கும் கேவலமான காட்டுமிராண்டிகளின் நாடுதான் இந்தியா. இந்த காட்டுமிராண்டிகளின் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் பர்தா விவகாரத்தில் மதப்பற்றோடு குமுறி எழுகிறார்கள்.
சபரிமலையின் இந்த அயோக்கியத்தனத்தை மென்மையான வரிகளில் சந்தனமுல்லை தன் பதிவொன்றில் கேட்டிருந்தார். உடனே ஆம்பளை சாமிகள் அவருக்கு எச்சரிக்கை இடும் விதத்தில் பின்னூட்டமிடுகிறார்கள். அதில் ஒரு கபோதி சபரிமலை ஆண்டவன் சக்தி உள்ளவன், அவனிடம் விளையாட வேண்டாம், கண்ணைப் பிடுங்கி விடுவான் என்று பச்சையாக மிரட்டியிருக்கிறார். இதுதான் பதிவுலகின் இந்துத்வ இலட்சணம்.
சந்தனமுல்லையின் நியாயத்துக்கு குரல் கொடுக்காத கோழைகள்தான் இப்போது சுமஜ்லாவின் பர்தா பற்றுக்காக பொங்கி எழுகிறார்கள்.
சினிமா, மொக்கை, அரட்டை, அக்கப்போர், தொடர்பதிவு, வடிவேலு ஸ்லாங், மீதபர்ஸ்டு, முதுகு சொறிதல் என்று பிழைப்பை நடத்தும் பதிவுலகின் ஆன்மாவைக் கீறிப்பார்த்தால் அங்கே சாதியும், மதமும்தான் கோலேச்சும். வினவின் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களில் இதை உணராதவர்களுக்கு ‘நற்குடி’ பிரச்சினை தெளிவாய் விளக்கியிருக்கும். இதை முட்டி, மோதி, தட்டி, கொட்டி மாற்ற வேண்டுமானால் வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை?
தொடர்புடைய பதிவுகள் – பதிவில் உள்ள சுட்டிகள் தவிர்த்து
- நீங்கள் பாலியல் குற்றவாளியா?
- ஷகீலா – கவர்ச்சி சுதந்திரமா ? பர்தா கண்ணியமா ??
- சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !
- கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி
- சிறுகதை: ‘பால்’ திரிந்த வேளை!
- வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!
- அமெரிக்காவில் ஒரு அம்பியின் சாதிவெறி !
- ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !
- தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!
- மொக்கைப் பதிவு உடல் நலத்திற்க்குக் கேடு !
- பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!
🙂
சென்ஷி,
எவ்வள்வு விசயங்களை வினவு எழுதியிருக்காரு! வினவு தளத்துலாயாவது கொஞ்சம் விவாதிங்கப்பா!
பெண் உரிமை உரிமை என்று பெண்களை விபசாரிஹலஹா மாற்றிவிட்டீர்ஹல்
ஹலோ வேற வேலை இருந்தா பாருங்கப்பா. எவனோ ஒருத்தன் கிருக்குறான் . அதை பல பேரு படிக்குறாங்க. வெட்டி மனிதர்கள்!!
பதிவுலகின் லட்ச்ணத்தை நார்நாராக கிழித்துவிட்டீர்கள். தொடர்க உங்கள் பணி
வைரஸ் காய்ச்சல் தான் வினவு பதிவுகள் குறைந்ததற்கு காரணமா?
திரும்ப வரும்போதே அடாவடியா வந்திருக்கீங்க.. சூப்பர்.
கம்யூனிஸ்டுகள் / நாத்திகர்கள் என்று வரும் போது, இந்துக்களும் இசுலாமியர்களும் மற்றெல்லா மதத்தவரும் ஒரே குரலில் பேசுவதைக் கேட்கலாம். நம்மை எதிர்கொள்வதைப் பொருத்தளவில் அவர்களுக்கு குரல்வளை ஒன்றாகிவிடுகிறது.
அப்படியே சீக்கிரம் மக்களிசையை ஒலிக்கவிடுங்கள்.
இந்த சிச்சுவேஷனுக்கு பொருத்தமான பாடலாக “இந்து என்னடா முசுலீமு என்னடா.. நிமிர்ந்து சொல்லுவோம் நாங்க பாட்டாளியடா” என்ற
பாடலை நேயர் விருப்பமாக பரிந்துரைக்கிறேன்.
நல்ல ஆலோசனை, தோழர் கில்லி உடன் இதை அமல்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
வினவு …
உஙகள் பதிவு அருமை…நல்ல கருத்து….சுமஜ்லா வின் கருத்து…இஸ்லமிய…பர்பனியம்னு சொன்னாங்க..அப்ப்டி சொல்ல வேண்டாம்…அவரை அந்த இடத்தில் முரன்படுகின்றேன்….கருத்து மோதல் இயற்கை…அவர் அவ்ர்கு வேண்டியதை எடுதுகொல்லட்டும்….உஙகலுக்கு….தமிழ் ல வல்க்கு சொல் ஒன்னு உண்டு….ஜாதிக்கு நாலு பேரு கெட்டவன் இருப்பான்…அதுனால…அந்த சமூகம் மொத்தத்தையும் குத்தம் சொல்வது…நியாயம் இல்லை….நாதிகம் பேசுறவங்க எல்லாரும் சரினு சொல்ல முடியதுல…உஙகளுக்காக இந்த இனைப்பு….
ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! – சகுந்தலா நரசிம்ஹன்
http://www.satyamargam.com/976
நீண்டநாள் கழித்து அக்மார்க் வினவு பதிவு. எப்படியிருப்பினும் சுஜ்மலாவின் ‘நற்குடி’ பிரயோகத்தை நான் ரசிக்கவில்லை. சுஜ்மலா பின்பற்றுவது இசுலாமிய பார்ப்பனீயம்.
//சுஜ்மலா பின்பற்றுவது இசுலாமிய பார்ப்பனீயம்.//
இதுவே தான் என் கருத்தும், பூனுல் போட்டதால் நான் உயர்ந்தவன் என்பது பார்பனியர்களின் பார்பனீயம் போல், பர்தா அணிவதால் நான் நற்குடி என சொல்வதும் பார்பனீயம் தான்
niruthu un pechai islamiya visayathil ulla mookai nulaikkatheee
யாரெல்லாம் தூரமாயிருக்கீங்களோ கை தூக்குங்க, காமக்கொடூரன் ஜெயேந்திரர் கேட்கிறார் மாணவிகளிடம்
Posted On Friday, 25 December 2009 at at 04:11 by Mike
தனது 75-வது பிறந்த நாளை ஊர் ஊராகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் காஞ்சி ஜெயேந்திரர். திருச்சியில் 3 பெண்கள் கல்வி நிறு வனங்களில் ஜெயேந்திரரின் பிறந்தநாள் டிசம்பர் 17, 18, 19 தேதிகளில் அமர்க்களப்பட்டது. மாணவிகளிடம் ஆசிரியர்கள், “”யாரெல்லாம் தூரமாயிருக்கீங்களோ கை தூக்குங்க. இது சாமி சம்பந்தப்பட்ட விஷயம். யாராவது தீட்டாயிருந்து ஏதாவது தப்பாயிடிச்சின்னா தெய்வ குத்தமாயிடும்” என்று சொல்ல, “”என்ன இப்படியெல்லாம் கேட்கு றாங்களே” என்று மாணவிகள் பதறிப்போய், ஓரிருவர் கை உயர்த்தினர். அப்போது ஒரு மாணவி, இவ்வளவு சுத்தம், ஆச்சாரம் பார்க்குறவர் ஏன் மேடம் ஜெயிலுக் கெல்லாம் போகணும்? அந்த விஷயத்திலும் சுத்தமா இருந்திருக்கலாமே” என்று சொல்ல, மாணவிகளிடம் சிரிப்பலை.
இந்திராகாந்தி பெண்கள் கல்லூரியில் நடந்த பிறந்தநாள் விழாவுக்கு வந்த ஜெயேந்திரர் உற்சாக மனநிலையில் இருந்தார். சங்கரராமன் வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து பல்டி அடிக்கிற விவரம் வந்துகொண்டே இருந்ததால்தான் இந்த மனநிலை. ஜெயேந்திரரை வாழ்த்த மதுரை, திருப்பனந்தாள் ஆதீனங்களும், விஸ்வ இந்து பரிஷத் வேதாந்தம், பா.ஜ.க ஹெச்.ராஜா ஆகியோர் வந்திருந்தனர்.
இந்த நாய் ஒரு பொருக்கி பொறம்போக்கு,ஏன் தோழரே இவனப்பத்தி எழுதி நேரத்த வீனடிகிறீங்க.
தமிழ் ஓவியா என்ற ஒரு மகத்தான பெரியார் அடிவருடி, பூனூல் போடுவது “இது பத்தினி வீடு” என்று எழுதி வைப்பதற்குச் சமம் என்றான்.
இங்கே, பர்தா அணிந்தவள் தான் பத்தினி என்று ஓப்பனாகச் சொல்லியும் அவன் ஒன்றும் பேசவில்லை.
பொண்டாட்டிக்கு பர்தா வாங்கப்போயிட்டான் போல இருக்கு….
நீ மொதல்ல ஓம் பேருல எழுதுடா தமிழ் ஓவியா பெரியார் அடி வருடியா முனி வருடியான்னு தெரியும் பொறம்போக்கு
தமிழ் ஓவியா என்ற ப்ளாக் ஒரு மகத்தானது,
கொஞ்ச நாளா பார்ப்பனர்கள் பூணூல் பெருமைகளை மார் தட்டி கூவுவதை நிறுத்திட்டாங்க !
இந்தம்மா ரொம்ப பெருமையா அறிக்கை விட்டுருக்காங்க
படியுங்கள் படித்து பாருங்கள்
பர்தா விவகாரம் விஜய் டிவிக்கு எதிராக முஸ்லிம்கள் கடும் கொந்தளிப்பு விவரம்
http://athiradenews.blogspot.com/2010/01/blog-post_3697.html
//சந்திப்பிற்கான உழைப்பில் வால்பையன் டிமிக்கி கொடுத்ததாகவும் //
டிமிக்கி கொடுக்கல, டிமிக்கி கொடுத்துருந்தா நல்லாயிருந்துருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு கலகம் செய்தேன்! ஒருத்தர்,ரெண்டு பேர் சொன்னாங்கன்னு நீங்களும் அதையே சொல்லகூடாது, என் பங்கு என்னவாக இருந்ததுன்னு விளக்கமா என் பதிவில் எழுதியிருக்கேன்!
//அந்த அல்லாதான் ஆண்களின் காமவெறியை கொஞ்சம் காந்தி மாதிரி தணிச்சலாக படைத்திருக்கலாம்தானே?//
இபிலீஸ்னு ஒரு சைத்தானாம், உலகம் படைத்த காலத்தில் இருந்து இருக்கானாம், அவனையே ஒன்னும் பண்ணமுடியல, இதுல எங்கிருந்து குறைந்த காமவெறியோட மனிதர்களை படைப்பது! மதத்தையும், அதன் நம்பிக்கையையும் கட்டி அழுபவர்களை திருத்த வாய்ப்பேயில்ல போல!
//எல்லா மதங்களையும் அதில் உறைந்திருக்கும் ஆணாதிக்கத்தையும் எதிர்ப்பவராக இருக்கவேண்டும். //
திருவள்ளுவர் ஆணாதிக்கவாதின்னு ரெண்டு உதாரண குறள் கொடுத்ததுக்கு விளக்கம் சொல்லாம என்னை குடிகாரபயன்னு சொல்றாங்க, எங்கிருந்து இவுங்களை மாற்ற!
//ஒரு கபோதி சபரிமலை ஆண்டவன் சக்தி உள்ளவன், அவனிடம் விளையாட வேண்டாம், கண்ணைப் பிடுங்கி விடுவான்//
நானா இருந்திருந்தா *யிரைக்கூட புடுங்கியிருக்க முடியாதுன்னு சொல்லியிருப்பேன்!
உங்களுக்கு ஐயப்பன் மேல எதுனா காண்டா
Great!
இசுலாமியப் பார்ப்பனீயமா ! இன்னாடா இது புச்சா ஒரு கல்ச்சர் வந்துகீதா ! அது இன்னா மேட்டர் கொஞ்சம் டீடைலு வான்டட்
//சினிமா, மொக்கை, அரட்டை, அக்கப்போர், தொடர்பதிவு, வடிவேலு ஸ்லாங், மீதபர்ஸ்டு, முதுகு சொறிதல் என்று பிழைப்பை நடத்தும் பதிவுலகின் ஆன்மாவைக் கீறிப்பார்த்தால் அங்கே சாதியும், மதமும்தான் கோலேச்சும். வினவின் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களில் இதை உணராதவர்களுக்கு ‘நற்குடி’ பிரச்சினை தெளிவாய் விளக்கியிருக்கும். இதை முட்டி, மோதி, தட்டி, கொட்டி மாற்ற வேண்டுமானால் வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை?
/
என்னால் இதை ஏற்று கொள்ளமுடியாது. ஓரு சில மூட நம்பிக்கைகளை எதிர்த்து விட்டதாலும், பல பதிவுகள் போட்டு விட்டதாலும் உங்களை முற்போக்கு பதிவராகவும் இதற்கு எதிராக பாடுபடுவராகவும் நினைத்து கொண்டால் .. நீங்கள்தான் மூடநம்பிக்கையாளர் என சொல்லுவேன்
அப்ப என்ன செஞ்சா நீங்க புரட்சி நாயகன்னு ஒத்துக்குவீங்க
“வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை? ”
இது தாங்க இந்த கட்டுரையிலேயே மிகப் பெரிய காமெடி!
வரலாறு முக்கியம் அமைச்சரே !
புவனேஷ்வரியும் ஷகீலாவும் பர்தா போட்டுவிட்டு நீதிமன்றம் சென்றது கூட பிரச்சனை ஆகியது. ஐயப்பன் கோவிலை இந்த இடத்தில் நுழைத்திருப்பது பொருத்தமாகத் தெரியவில்லை. அது ஒரு கோவில் அமைப்பு அங்கு செல்ல விரும்பும் பெண்களும் குறைவே. ஆண்கள் சட்டையைக் கழட்டிக் கொண்டு நுழையச் சொல்லும் கோவில்கள் கூட உண்டு. மாதவிலக்கு பெண்களை பூசை செய்ய அனுமதிக்கும் மேல்மருவத்தூர் கோவில்களும் உண்டு. நீங்கள் இந்துக்களின் ‘தாலி’ செண்டிமெண்ட் மற்றும் பர்தா பாரம்பரியம் ஒப்பிட்டு இருந்திருக்கலாம்
கோவி கண்ணன் பெண்ணை அடிமைப்படுத்தி இழிவு படுத்துவதற்காகவே சுத்தம், அசுத்தம் என்ற காரணங்கள் கொண்டு சபரி மலையியல் அப்படி ஒரு விதியை வைத்திருக்கிறார்கள். அதை ஒரு கோவில் அமைப்பு என்று எப்படி தள்ளுபடி செய்கிறீர்கள்? சந்தனமுல்லையின் சாமி பதிவு பின்னூட்டங்களை வாசித்துப் பாருங்கள். இந்து ஆண்கள் எப்படி ஆடியிருக்கிறார்கள் என்பது தெரியவரும். பொதுவில் கடவுள்கள் என்றால் எல்லாருக்கும் பொது என்று அளந்து விட்டு இப்படி ஒரு இழிவு ஒரு மதத்தின் பெயரால் கடைபிடிக்கப்படுகிறது எனும்போது நாம் அதை கிடைக்கும் வழிகளில் அம்பலப்படுத்துவதும், எதிர்தப்பதும் சரிதானே?
“எனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்” என்று சொல்லும் கோவி கண்ணன் இவ்வாறு பதில் அளிப்பதில் என்ன தவறு ??
ஒரு நடிகை சபரிமலைக்குச் சென்றது மிகப் பெரிய பிரச்சினயானதும் அதனை ஒட்டித்தான் ஹோமோசெக்ஸ் விளைபொருள் ஐய்யப்பன் பெண்ணடிமைத்தன விவாதப் பொருள் ஆனதும் நடந்தது. கோவி கண்ணனுக்கு இந்த விசயங்கள் மறந்துவிட்டதா என்ன?
பெண்களுக்கு எவ்ளோ கஷ்டம் அந்த மூன்று நாட்களும், அவங்கள போயி எண்டா இப்புடி கஷ்ட படுதுரிங்க.
//அங்கு செல்ல விரும்பும் பெண்களும் குறைவே//
அநியாயமான கருத்து பாஸ். பெண்கள் வரக்கூடாதுன்னு சட்டம் போட்டிட்டு அப்பறம் அவங்களே விரும்பலன்னு கதவிட்டா எப்படி? இது பெண்கள் “தானாகவே விரும்பி” பர்தா அணிவதற்கு இணையான காமெடி.
சரி. அப்படியே பெண்கள் தானாகவே செல்ல விரும்பாமல் இருந்தாலும் விரும்பிச் செல்லும் பெண்களைத் தடுப்பது நியாயமா?
//மாதவிலக்கு பெண்களை பூசை செய்ய அனுமதிக்கும் மேல்மருவத்தூர் கோவில்களும் உண்டு//
இந்தத் தகவலில் என் மனம் நெகிழ்கிறது. மாரில் முடி முளைத்த மனிதரை அம்மா என்று அழைக்கும் இடம்தானே அது?
//ஆண்கள் சட்டையைக் கழட்டிக் கொண்டு நுழையச் சொல்லும் கோவில்கள் கூட உண்டு. //
உள்ளே வருபவன் பூணூல் அணிந்திருக்கிறானா இல்லையா என்று தெரிந்து கொள்ளக் கொண்டுவரப் பட்ட வழக்கம் அது. வயதில் மூத்தவர்களுக்கு எழுந்திருந்து இடம் கொடுப்பது, எச்சில் கையால் சோறு போட்டுக் கொள்ளக்கூடாது என்பது போல இது ஒன்றும் சமூகம் சுகாதாரம் சார்ந்த மரியாதைக்குறிய பாரம்பரியம் அல்ல. சபரி மலையே ஒரு அயோக்கியத்தனம். அதற்கு வரிந்து கட்டிக் கொண்டு செல்பவர்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள். இதில் ஒரு பெண் தொட்டதும் என்ன பெரிய கேள்வி!!
பர்தா போடவைக்கும் அடிமைத்தனத்திற்கும் இதற்கும் அடிப்படையே பெண்ணை யோனியாக மட்டுமே பார்க்கும் அவலமான ஆணாதிக்க மனப்பாங்குதான். அவளுக்குப் பிற உருப்புகளும் உள்ளன.
மெயிலுக்கு வள்ளுவன் என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் வந்திருந்தது, அது இங்கே காணோம்! அவருக்கு பதில்!
நான் குடிக்கிறேன் இல்ல சாவுறேன்! கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்!
கலைஞர் திருக்குறளுக்கு எழுதிய உரையை வாங்கி அனைத்து குறளுக்கும் உள்ள விளக்கத்தை பாருமையா முதலில்.
//கலைஞர் திருக்குறளுக்கு எழுதிய உரையை வாங்கி அனைத்து குறளுக்கும் உள்ள விளக்கத்தை பாருமையா முதலில்//
கலைஞர் சொன்னா நான் ஏத்துகனும்னு சட்டம் இருக்கா!?
திருவள்ளுவர் நிலபுரபுத்துவ காலத்தில் வாழ்ந்த ஒரு சொம்பு தூக்கி!
அதனால அந்த வசனத்தை கலைஞர் சொம்பு தூக்கிகளிடம் சொல்லும்!
குடிக்காக சொம்பு தூக்கும் உன் போன்றவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
வினவு அவர்களே இது போன்ற குடிகாரன்களின் உளறலை எல்லாம் இங்கு அனுமதிக்க போகிறீர்களா.
கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது. நாமறிந்தவரை வால்பையன் பொருளோடு ஆழமாகவும், அழக்காவும் விவாதிப்பது இங்கு மட்டும்தான். இப்படி இருக்கையில் பதிவுலகையும் கொஞ்சம் மாற்றமுடியுமென நம்பிக்கையை சுகுணாவும் ஏனையோரும் வைத்துக்கொள்ளலாம்.
வால்பையன் பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை ஒத்துவராத மறுமொழிகள் என்ற தலைப்பில் கொண்டு செல்லப்படும் அதுதான் வள்ளுவனின் குடி செய்தி காணாமல் போனது
//வால்பையன் பொருளோடு ஆழமாகவும், அழக்காவும் விவாதிப்பது இங்கு மட்டும்தான். //
அதை அழகாகவும் என்றே எடுத்து கொள்கிறேன்!
நான் ரொம்ப நாளா இதை தான் செய்து கொண்டிருக்கிறேன்! நான் குடிப்பேன் என்று பொதுவில் சொன்னதால், கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் குடிகாரன் என்று தட்டி கழிக்கிறார்கள்!, இதற்கெல்லாம் நான் வருத்தப்பட போவதில்லை! மதங்களின் முகமூடிகளை கிழிப்பதே என் பெரும்பங்கு வேலை!
ஆகா வந்துட்டார்டா இன்னொரு பெரியார் ராமசாமி.
இவனுங்க அலம்பலும் சலம்பலும் தாங்க முடியல.
நன்றி தோழர். நற்குடிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த உண்மைத்தமிழன் தனது ‘வேலுபிரபாகரனின் காதல் கதை’ விமர்சனத்தில் ‘கீழ்சாதி’ப் பெண் ’மேல்சாதி’ ஆணைக் காதலிக்கிறாள் என்கிற ரீதியில் எழுதியிருந்தார். அது என்னடா சாதியிலே கீழ்சாதி என்று கேட்க ஒருவருமில்லை. நற்குடிக் கிளர்ச்சியாளர்களில் பெரும்பாலானோரின் யோக்கியதை இதுதான். அதைக்கூட விடுங்கள். இந்த சர்ச்சை தொடர்பாக ஒரு பின்னூட்டம் இட்டதற்காக ‘அரபுகளிலிருந்து மாதாமாதம் பணம் வருகிறது’ என்கிறார் ஒருவர். இன்னொருவர் ‘சுகுணாதிவாகரின் குழந்தைக்கு என்ன இனிஷியல்’ என்று குதர்க்கமாய் வினவுகிறார். இதற்கான அர்த்தம் என்ன என்பது யாருக்கும் தெரியாதா என்ன? ‘உலகத்திலேயே சிரமமான காரியம் முட்டாள்களோடு விவாதிப்பதுதான்’ என்றார் பெரியார். ஆனால் வாழ்நாள் முழுக்க அவர் அதைத்தான் செய்தார். அதனாலேயே அதைச் சொல்வதற்குக் கூடுதலான ‘தகுதி’யும் பெரியாருக்கு உண்டு. முட்டாள்களோடு விவாதிப்பதன் சிரமத்தைச் சமீபகாலமாக நன்றாகவே உணரமுடிகிறது. வலையுலகம் என்பது பெரும்பான்மை முட்டாள்கள் நிறைந்த கூடாரம். இதிலே ‘பதிவர்களுக்கிடையில் சாதியுணர்வு கிடையாது, மதமாச்சரியங்கள் கிடையாது, எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன’ என்கிற பம்மாத்துகள் வேறு.
டேய் வெண்ணை. நிறுத்துடா. துலுக்கப்பயலுவ எல்லாம் நற்குடின்னா அங்கே போயி துலுக்கனா இருக்கவேண்டியது தானே…
என்ன மயித்துக்கு இந்து மதத்துல இருந்துகிட்டு இருக்க. நீயெல்லாம் இந்துவா இருந்து ஆகணும்ன்னு யாரு அழுதா.
எல்லாரும் முட்டாள்ன்னா, நீ மட்டும் அறிவாளியா ?
அவ்வளவு அறிவு உனக்கு இருக்கும் பட்சத்தில் முட்டாள்கள் என்று நீ கருதும் கூட்டத்துடன் உனக்கென்ன வேலை. உன் அறிவுக்கு ஏற்றார் போல் உள்ள கூட்டத்துடன் கூடியிருக்கவேண்டியது தானே. அவர்கள் அந்த நற்குடிகளைச் சேர்ந்தவர்கள். அங்கே விவாதமே கிடையாது…ஒருவர் சொன்னால் அதை அப்படியே எல்லோரும் தலையாட்டிக் கேட்கவேண்டும். தலையாடாவிட்டால் தலைவெட்டப்பட்டுவிடும். அவ்வளவு அறிவாளிகள்.
மேலே சொன்ன எனது பின்னூட்டத்திற்குக் கூட கடுமையான கண்டனங்கள் வரக்கூடும். பதிவர்களை எப்படி முட்டாள்கள் என்று சொல்லலாம் என்று. மன்னிக்கவும் வடிகட்டின முட்டாள்கள் என்று வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளுங்கள். இவர்களது ‘விவாதங்களை’க் ‘கவிதைகளாக எழுதித்தொலைப்பது அதைவிட கொடுமை. சுஜ்மலா தொடங்கி கலகலப்ரியா, பிரபாகர் இன்னும் இன்னும் கவிதைகள், கவிதைகள், கவிதைகள். அதைப் பாராட்ட ஒரு முட்டாள் கூட்டம். நோ, நோ, கவிதை பாவம்!
சுகுணா,
நீங்க பதிவரா..?
கண்ணா!
அறிவா பேசுறதா நினைக்காதீங்க! விவாதியுங்கள். சுகுணாவின் கோபம் நியாயமானது.
சுகுணா ,
இந்த பதிவுலகத்தில் அதிக பின் தொடர்பவர்களை கொண்டிருப்பவர் யார் தெரியுமா ? வாத்தியார் சுப்பையா !! அவர் எழுதுவது ஜோதிட பாடங்கள். ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள் !! அதில் பெரும்பான்மையானோர் பதிவர்கள் !! அவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?
//சினிமா, மொக்கை, அரட்டை, அக்கப்போர், தொடர்பதிவு, வடிவேலு ஸ்லாங், மீதபர்ஸ்டு, முதுகு சொறிதல் என்று பிழைப்பை நடத்தும் //
லிஸ்ட்ல ஒரு முக்கியமான வகை விட்டு போச்சு தலைவரே- வாழ்த்து பதிவுகள் (பிறந்த நாள் வாழ்த்து, மணநாள் வாழ்த்து, நூறு ஹிட்ஸ் வாழ்த்து இப்படி !!
🙂
சரி…கடைசியா என்ன தான் சொல்ல வர்றீங்க ?
ஒருவருக்கு பிடித்த ஒரு விஷயத்தையோ,நபரையோ மற்றொருவர் கேவலப் படுத்தும் போது வரும் நார்மலான கோவத்தின் வெளிப்பாடுகள் தான் இந்தப் பிரச்சினை.
உடனே நாட்டாமை தோள்ல துண்டு போட்டுட்டு தீர்ப்பு சொல்ல வந்துட்டார்.
கம்யூனிச கும்பல்கள் ஏழைகளுக்காக பாடுபடுகிறேன் என்று ஏமாற்றி, ஆட்டோக்காரங்க கிட்ட, ரிக்ஷாக்காரங்க கிட்ட, கூலி வேலை செய்றவங்க கிட்ட 50 ரூ,100 ரூ உறுப்பினர் கார்டு போட்டு, ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு சந்தா செலுத்த சொல்லி சம்பாதிக்குற கம்பெனி தான்.
நாட்டுல மாவோயிஸ்ட்டுகள் கொலை, கொள்ளை என அடாவடி செய்துவருகிறார்களே…அதை பற்றி எல்லாம் எழுதுங்க வினவு !
அடுத்தவன் புண்ணில் சொறிஞ்சி விடுறதுலேயே கவனமா இருக்கீங்க…!
கபிலனின் வயிற்றெரிச்சல் நன்றாக உணர முடிகிறது. வினவு சரியான திசையில தான் எழுதிகிட்டு இருக்கீங்கன்னு நல்லா தெளிவா தெரியுது!
இதுல வயிற்றெறிச்சல் பட என்ன இருக்குங்க? வழக்கமான ஒருதலைப்பட்சமான சமய எதிர்ப்பு பதிவு. அதுமட்டுமல்லாமல், இந்தப் பிரச்சினைக்கு, சம்பந்தமே இல்லாம ஐயப்பனை இழுத்திருப்பது.
நடந்த கருத்து மோதல்கள் தப்பு இல்ல. தனி மனித விமர்சனங்கள் வந்தது தான் நெருடலா இருந்தது. சரி. அப்படியே எல்லோரும் தப்பு செஞ்சி இருந்தாலும், அனைவருக்கும் ஒரே விதமான தோரணையில் தான் பதில் சொல்லி இருக்கணும் ( வடிவேலு சொல்ற மாதிரி ” சேம் ப்ளட் .பாரபட்சம் பாக்காம திட்டுறா…..” ). வினவின் இப்பதிவு அப்படி அல்ல. நடுநிலை என்று சொல்லவே முடியாத நிலையில் இருக்கிறது அவர் எழுத்துக்கள்.
அதனால இது ஒரு டம்மி பீஸ் பாஸ்! வயிறு எறிச்சல் வருகிற அளவுக்கு இல்ல!
கபிலன் இங்க வினவு என்ன கம்மூனிஸ பத்தியா எழுதிச்சு, எதுக்கு இம்மாம் கோவம்…
ரெண்டு நாளா நாயாட்டம் அடிச்சு பொறான்டிகிட்டவங்களெல்லாம் இன்னா கம்மூனிஸ்டா?
ரெண்டு நாளா நடக்குற சண்டையே ….அதுவும் வன்முறை இல்லாம நடக்குற வாக்குவதமே, உங்களுக்கு பெருசா தெரியுதுன்னா….வருஷ கணக்கா ஆயுதம் ஏந்தி கொலை, கொள்ளைன்னு அட்டூழியம் செய்யும் மாவோயிஸ்டுகள் மீது ரொம்ப கோவம் வந்திருக்குமே! அதான், அதை பற்றி எழுதலையேன்னு ஒரு ஆதாங்கம் தாங்க : )
உங்களுக்கு நெய் பிடிக்காது என்பதற்காக நெய் கடைக்காரரை அடிப்பது போல இருக்குங்க உங்க விவாதங்கள்.
ஆயிரக்கணக்கான வருசமாய் நம் மக்களின் மீதான வன்முறையாய் பிரோயோகிக்கப்படும் பார்ப்பனியத்தை நாங்கள் எதிர்த்து எழுதினால் நீங்கள் பார்ப்பனியத்துக்கு கூஜா தூக்குவது ஏனோ…கொலைகாரளுக்கு வக்காலத்து வாங்குவது ஏனோ????
பார்ப்பானுக்கு கூஜா தூக்கலிங்க….எங்கள் நம்பிக்கையை கேவலப் படுத்துறதால தான் இப்படி இறங்க வேண்டியதா போச்சு. நீங்க சொல்ற விஷயங்கள் எல்லாம் இருந்துச்சு அந்த காலத்துல. பூநூலை வைத்து பெருமை பேசும் பார்ப்பனர்கள் காலம் மலை ஏறிப் போச்சு. சாதியில் உயர்வு தாழ்வு பார்ப்பது நகரங்களில் அறவே இல்லை எனலாம். கிராமங்களும் மாறி வருகின்றன. அது காலத்தின் மாற்றம், கட்டாயமும் கூட.
இப்போ ஏற்றத் தாழ்வு பணம் படைத்தவனுக்கும், இல்லாதவனுக்கும் தாங்க.
நிறைய பழங்கள் இருக்குற, ஒரு பெரிய மரத்துல ஒரு பழம் கெட்டுப் போய் இருக்கு என்பதற்காக, மரத்தை வெட்டி சாய்த்தல் நியாயமா?
@@பார்ப்பானுக்கு கூஜா தூக்கலிங்க@@ நான் எப்போ பாப்பானுக்குன்னு சொன்னேன், பார்ப்னியம்னுதானே சென்னேன்..சாதி யாரும் பாக்குறதில்லைன்னு நீங்க சொல்லுறீங்க.. ஆனா அது நடைமுறைல இல்லீங்க.. தமிழ்நாடு பரவாயில்லைங்கறது உண்மைதான்.. ஆனா வடநாட்டுல நெலம தலைகீழ்
///உங்களுக்கு நெய் பிடிக்காது என்பதற்காக நெய் கடைக்காரரை அடிப்பது போல இருக்குங்க உங்க விவாதங்கள்./////
நெய் உங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக, பால்காரரையும்
மாடுவளர்த்தவரையும் மொட்டையடிப்பது போல
இருக்குங்க உங்க விவாதங்கள்!
//பூநூலை வைத்து பெருமை பேசும் பார்ப்பனர்கள் காலம் மலை ஏறிப் போச்சு. //
ஓவர் டூ ஆர்வி…. இதே வினவு தளத்துல பூனூலு தூக்கிப் பிடிச்சுக்கிட்டு ஆர்வி போராடினாரு. அங்க நம்ம கபிலன் அண்ணாச்சி இருந்தராஅன்னு இன்ன வரை தேடிட்டு இருக்கேன்…
குடிகாரன் கொளந்தை மாதிரி !
கொழந்த சாமி மாதிரி
கொளந்தை என்னா பண்ணும் கத்தும்
அளப்பற பண்ணும் வாந்தி எடுக்கும் ( அதுக்கு பேரு கதக்கறது)
ஆனா உண்மை தான் பேசும்
இல்லாத ஒன்றிற்கு எத்துணை ஆர்பாட்டம். இவர்களை திருத்துவது கடினம். ஏனெனில் துங்குபவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்குவது மாதிரி நடிப்பவர்களை எழுப்புவது மிக மிக கடினம். கடவுளை நம்புபவன்(எந்த மதமானாலும்) ஒரு முட்டாள் (or) சீரிய சிந்தனையற்றவர்கள். period. மதபோதனைகளை மேற்கோள் காட்டுபவன் அதன் முட்டாள் தனங்களை பறைசாற்றுகிறான் (வெட்கமில்லாமல்). கொடுமை என்னவெனில் அதில் எவனும் இங்கு சளைத்தவன் இல்லை. குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாதவர்கள் தான் இங்கு மதத்தலைவர்கள். அவர்களுக்கு தெரியும் மக்களை முட்டாளாக்குகிறோம் என்று (அரசியல்வியாதிகளைப்போலவே) . நெஞ்சில் கை வைத்து சொல்லச்சொல்லுங்கள் அவர்களை….ம்ம் அப்போதும் கூசாமல் பொய் சொல்லி நமக்கு BP எகிற வைப்பார்கள். விலங்கினும் கீழோர்.
//நெஞ்சில் கை வைத்து சொல்லச்சொல்லுங்கள்//
ஹா ஹா ஹா ! எதுல வேணா வெச்சு பொய் சொல்லுவானுங்க தல
//கோவி கண்ணன் பெண்ணை அடிமைப்படுத்தி இழிவு படுத்துவதற்காகவே சுத்தம், அசுத்தம் என்ற காரணங்கள் கொண்டு சபரி மலையியல் அப்படி ஒரு விதியை வைத்திருக்கிறார்கள். அதை ஒரு கோவில் அமைப்பு என்று எப்படி தள்ளுபடி செய்கிறீர்கள்? சந்தனமுல்லையின் சாமி பதிவு பின்னூட்டங்களை வாசித்துப் பாருங்கள். இந்து ஆண்கள் எப்படி ஆடியிருக்கிறார்கள் என்பது தெரியவரும். பொதுவில் கடவுள்கள் என்றால் எல்லாருக்கும் பொது என்று அளந்து விட்டு இப்படி ஒரு இழிவு ஒரு மதத்தின் பெயரால் கடைபிடிக்கப்படுகிறது எனும்போது நாம் அதை கிடைக்கும் வழிகளில் அம்பலப்படுத்துவதும், எதிர்தப்பதும் சரிதானே?
//
கோவிலால் ஏற்படும் தடைகள் கோவிலுக்குச் செல்லும் பெண்களுக்குத்தான், ஒரு இந்துப் பெண் நினைத்தால் ‘போங்கடா உங்க சாமியும்’ என்று போய்விட முடியும்.நாம கோவில் நுழைவில் உரிமை வாங்கித்தருகிறோம் என்ற பெயரில் பெண்களையும் தலித்துகளையும் பார்பனியத்துக்கு அடிமை ஆக்கியதைத் தான் செய்துவருகிறோம். மாறாக புறக்கணிக்கக் கற்றுக் கொடுத்திருக்கனும். ஊர்கூடி தேர் இழுங்கன்னு ஆளை அனுப்புகிறோம். இல்லை என்றால் தேர் தெருவில் தான் நிற்கனும். ஆனாலும் நம அனுப்பும் ஆட்களுக்கு தேரை இழுக்கத்தான் உரிமை கிடைக்கிறது என்பதை நாம நினைப்பது இல்லை. அதைத் தான் நான் சொல்லவந்தேன். இதைச் செய்யாதே என்பது செய்ய விரும்புவர்களுக்கானத் தடை தான். செய்யப் பிடிக்காதவர்கள் அதை காதில் வாங்குவதும் இல்லை.
//.நாம கோவில் நுழைவில் உரிமை வாங்கித்தருகிறோம் என்ற பெயரில் பெண்களையும் தலித்துகளையும் பார்பனியத்துக்கு அடிமை ஆக்கியதைத் தான் செய்துவருகிறோம்.//
நானும் இதில் உடன்படுகிறேன்! மூடநம்பிக்கைகளை நம்பினாலும் பரவாயில்லை ஆனா எல்லோரும் ஒண்னா சேர்ந்து நம்புங்கன்னு சொல்ற மாதிரி தான் இருக்குது!
கோவி கண்ணன், பார்ப்பனியத்தின் பலமே தீண்டாமைதான். என் கோவிலில் வராதே, தனி கோவில் கட்டிக்கொள், என்தெருவில் வராதே, சேரியில் முடங்கிக் கொள், என் மொழியில் வணங்காதே, உன் மொழியில் வணங்கு என்று எல்லாவற்றிலும் சமூக உரிமைகளை மறுக்கும் அடக்குமுறையைத்தான் செய்து வருகிறது. எனவே இதை ஏற்றுக் கொண்டு நாமும் தனி கோவில், அல்லது புறக்கணிப்பு என்று சென்று விட்டால் இது பார்ப்பனியத்தின் வெற்றியைத்தான் குறிக்கும். மாறாக அது வழங்க மறுக்கும் சம உரிமைகளை போராடிப் பெறுவதே சமத்துவத்தின் முதல் படி. இது பார்ப்பனியத்திற்கு அடிமை ஆவது ஆகாது. சொல்லப்போனால் இந்தப் போராட்டங்கள் வெல்லும் போது பார்ப்பனியம்தான் செத்து விழும். பல முற்போக்காளர்களும் எதற்கு கோவில், இறைவழிபாடு என்று இவற்றை குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதில் அவர்கள் வடிவத்தைத்தான் பார்ப்பனியம் என்றுபார்க்கிறார்களே ஒழிய உள்ளடக்கத்தை அல்ல.
வினவு,
கோவி கண்ணனின் கருத்து பலருடைய கருத்துமாகவும் இருக்கிறது. வருங்காலத்தில் இது குறித்து வினவு ஒரு விரிவான பதிவிட வேண்டும்.
அது தான் இருக்கவே இருக்கிறதே! தில்லையில் “நந்தன் நுழைந்த நுழைவாயிலை உடைத்து திறப்போம்!” என்ற போராட்டம்
கோவி. கண்ணனுடன் மிகவும் உடன்படுகிறேன்….கடவுளையும், `மதத்தையும், அது சார்ந்த மற்ற எல்லா விஷயங்களையும் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்…. எந்த கடவுளின் பேரில் இந்த மோசடிகள்/அநீதிகள் செய்யப்படுகிறதோ அந்த கடவுளையே மறுப்பது தான் சிறந்த வழி என்றே நான் நினைக்கிறேன்….
பதிவுலப் போராட்டங்களில் தோழர்கள் கலந்துகொள்ளாத்தன் காரணமென்ன? தோழர்கள் மா.சே,கலகம், அதிரடி மாம்போ, ஜான், அசுரன், கேள்விக்குறி, வித்தகன்,ஜார்ஜ் புஷ், காளமேகம், அரைடிக்கெட், குருத்து, நொந்தகுமாரன்,மணி(கொஞ்சம் வில்லங்கமாக இருந்தாலும்), போராட்டம், ரதி, ரியல் என்கவுண்டர், சுனாபானா, அறிவுடை நம்பி இன்னும் பெயர் விடுப்ட்ட நண்பர்கள் மேடைக்கு வரவும்.
சரக்கடிக்கரத பத்தி ஓட்டறதா நெனச்சுகிட்டு காமெடி பண்ண ஆரமிச்சுட்டாங்க !
மப்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
மப்பே சிவமாதல் ஆரும் அறிகிலார்
ஹா..ஹா இதுதான் வினவு தளத்திற்கு முதல்முறையா வந்து கமெண்ட் போடுறது…
//வினவு
says:
பதிவுலப் போராட்டங்களில்
//
ங்கொய்யால இதான் பதிவுலக போராட்டமா………விளங்கிரும்…………..
பதிவும், பின்னூட்டத்தையும் பார்த்தா செம காமடியா இருக்கு…..
கண்ணா!
இந்த பதிவில் உள்ள பின்னூட்டங்களில் மொக்கையாக இருப்பது உன் பின்னூட்டங்கள் தான் கண்ணா!
இந்த நக்கல், கிண்டலை விட்டு, கருத்து ரீதியா கொஞ்சம் வாய் விட்டு உங்க கருத்துக்களை பேசு கண்ணா!. அப்ப தெரிஞ்சுரும். நீங்க எவ்வளவு முற்போக்குன்னு?
//ஆகா வந்துட்டார்டா இன்னொரு பெரியார் ராமசாமி.
இவனுங்க அலம்பலும் சலம்பலும் தாங்க முடியல.//
ஆராவது
கேள்விகேட்டாலே பெரியார் நெனப்பு தான் உங்களுக்கு வருது ! பரவால்ல … நல்லாத்தான் உங்களுக்கு ஆப்பு வெச்சு விட்டுருக்கார் ! நினைவிருக்கும் வரை மறக்க முடியாதபடிக்கு
//ஆகா வந்துட்டார்டா இன்னொரு பெரியார் ராமசாமி.
இவனுங்க அலம்பலும் சலம்பலும் தாங்க முடியல.//
மறுபடியும் நன்றி!
என்னை அடிக்கடி நன்றி சொல்ல வைக்காதீர்கள்!
விவாதத்திற்கு வாங்க, அப்படினா என்னானே தெரியாதா, என் ப்ளாக்குல போய் இந்த கும்மிய அடிங்க!
நேத்து மூக்குடபட்ட மாதிரி இங்கேயும் வாங்கிகாதிங்க!
கோவி.கண்ணன் நீண்ட நாட்களாக இந்த பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்கிற பாத்திரத்தை திறம்பட செய்து வருகிறார். அவ்வப்போது
அசந்தர்ப்பமான தருணங்களில் முகமூடி கிழிந்து விடுகிறது – அதில் வினவு தளமும் ஒன்று. ஒரு கையில் பெரியார் – இன்னொரு கையில்
பார்ப்பனியத்துக்கு கூஜா! நல்லா வேஷம் போடறீங்க கோவி.கண்ணன்.
இந்த விவாதமாகட்டும் முன்பு ஒரு முறை இசுலாமியம் பற்றிய ஒரு விவாதத்திலாகட்டும் இவருடைய பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள்
படித்துப் பார்க்கட்டும்.
//புறக்கணிக்கக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்//
இதைத் தான் டோ ண்டு தனி டீக்கடை வைத்துக்கொள்ளுங்களேன் என்று ‘ஆலோசனையாக’ சொல்லிவிட்டு இத்தனை வருடங்களாக ஏதோ
இரட்டைக் குவளை பிரச்சினைக்கு தான் கண்டுபிடித்த அருமருந்து போல பேசித் திரிகிறார். நாளையே கோவி.கண்ணன் இவ்வாறு சொல்லக்கூடும்
– “உன்னை வேசி மகன் என்று பார்ப்பனியம் சொன்னாலென்ன, காதில் பஞ்சு வைத்து அதைப் புறக்கணித்து விடு”.
எதைப் புறக்கணிக்கச் சொல்கிறீர்கள் கோவி? எதை? பார்ப்பனியம் உயர் சாதிகளுக்கு வழங்கியிருக்கும் மேல்நிலையென்பது கலாச்சார
ரீதியிலானது மட்டுமல்ல – மாறாக அதுவே பொருளாதார மேண்மைக்கான அளவுகோளாய் இருக்கிறது. தலித்துகளுக்கு நிலத்தின் மேல்
உரிமையில்லை – அவர்களை நிலத்தைப் புறக்கணிக்க வேண்டுமென்பீர்களா? வளங்களின் மேல் உரிமையில்லாவிட்டால் வளங்களைப் புறக்கணிக்க
வேண்டுமா?
நீங்கள் யாருக்கு நன்பர் கோவி.கண்ணன்?
இது தான் நிஜமான இரட்டை குவளை முறை ! இதெல்லாம் திருக் குவளை கத்துக் கொடுத்தது !
கலகிடிங்க ராஜன் உண்மைல நீங்க ஒரு கவிகுவளை
தோழர் கார்க்கியின் வார்த்தைகளை நூறுசதவீதம் ஒத்துக்கொள்கிறேன்.
பாசிஸ்டுகளின் பலமே மக்களை மூளை சலவை செய்து அவர்களின் சித்தாந்ததை மக்களின் மூளையில் ஏன் ஜீனிலேயே ஏற்றுவதுதான். அதுபோலத்தான், பர்தாவையும் பெண்களின் சிந்தனையில் ஏற்றி இருக்கின்றார்கள். தாலியை இந்து பெண்களின் சிந்தனையில் ஏற்றி இருக்கிறார்கள். இது பல நூற்றாண்டுகளாக மக்களின் இரத்தத்தில் கலந்து இருக்கிறது. இதனை மககளின் மயக்கத்தை தட்டி எழுப்புவதன் மூலமே தகர்க்க முடியும். அந்த வகையில் இந்த மாதிரி பதிவுகள் தேவைதான்.
உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பிங்க நல்ல இருக்கும்
ஐயா… தமிழகத்தில் பலர் சுயமரியாதை திருமணம் -தாலி-மந்திரம்-பார்ப்னன்- இல்லாமல் செய்து கொள்வது உமக்கு தெரியாதா
இதுவரை இங்கே நடந்த பர்தா நற்குடி, கரும்பன்றி மயிர் போன்ற பதிவர்களின் அற்புதமான (அவர்களைப் பொருத்தவரை) உரையாடல் மீதான ஆரோக்கியமான, சரியான மாற்றுப்பார்வை இக்கட்டுரை. நன்றி.
ஆனால் என்ன? வழக்கமாக உங்கள் கட்டுரைகளை உதாசீனப்படுத்திக் கடந்துசெல்ல ஊரார் கொண்டிருக்கும் “எப்பவுமே வினவு இப்படித்தானய்யா, கெடக்கறார் விடுங்க” எனும் முத்திரையை இங்கேயும் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக சில தவிர்த்திருக்கக்கூடிய (இந்தக் கட்டுரையில்) வெட்டி வீழ்த்தல்களையும் சேர்த்தே எழுதியிருக்கிறீர்கள். வினவின் தோழர்கள் தாண்டி வேறு யாருக்கும் கட்டுரை போய்ச்சேராமல் இருக்க நீங்களே போதும் வினவு:))
இதுகுறித்தும் டாக்டர் ருத்ரன் அவர்களின் “பெண்பதிவர்களுக்கு அன்புடன்” இடுகையின் தொடர்ச்சியாகவும் எழுத எண்ணங்கள் உண்டு, ஆனால் நேரப் போதாமை, பார்க்கலாம்.
நான் நேரம் கிடைத்து வரும்போது காலம் கடந்தும் விடும்.
தவிர்த்திருக்க கூடிய வெட்டிவீழ்த்துதல்களை பட்டியலிட்டு காட்டினால் உதவியாக இருக்கும் செல்வநாயகி
கருத்துக்களைச் சொல்ல காலம்தாழ்ந்துவிட்டதாய் நினைக்க வேண்டாம். சில விஷயங்கள் திரும்பத்திரும்பச் சொல்லப்படவேண்டும்.
//புறக்கணிப்பு என்று சென்று விட்டால் இது பார்ப்பனியத்தின் வெற்றியைத்தான் குறிக்கும். மாறாக அது வழங்க மறுக்கும் சம உரிமைகளை போராடிப் பெறுவதே சமத்துவத்தின் முதல் படி. இது பார்ப்பனியத்திற்கு அடிமை ஆவது ஆகாது.//
பெரியார் விடிய விடிய பிரச்சாரம் செய்தும் கோவில்களில் கூட்டம் குறைந்திருக்கிறதா பார், கூடியிருக்கிறதே என்று பார்பனர்கள் கூவுவதற்கு என்ன சொல்கிறீர்கள் ? அந்தக் கூட்டமே பெரியார் உரிமை பெற்று தந்ததால் வந்த கூட்டம் தான் என்று சொல்வேன். அனைவருக்கும் கோவில் உரிமை, ஆலய வருமானத்தைத்தான் பெருக்கி தந்திருக்கிறது, பார்பனர் திருந்தியது போல் தெரியவில்லை. சிதம்பரத்தில் உரிமை கேட்டு ஆறுமுக சாமி அடிவாங்கியது தான் மிச்சம்
கோவி.கண்ணன்,
சக்கரை வியாதிக்காரன் இனிப்பை ஒதுக்குவதற்கும் சக்கரை வியாதியற்றவன் தனது ஆரோக்கியத்துக்காக இனிப்பை விலக்கி வைப்பதற்கும்
நிறைய வேறுபாடு உள்ளது.
உரிமை மறுக்கப்படும் இடத்தில் விலகிப் போவது புறக்கணிப்பதல்ல – பலவீனம்.
எல்லா உரிமையும் இருக்கும் போது பக்தியின் போலித்தனத்தை உணர்ந்து அதை மறுப்பதே – பகுத்தறிவு.
கோடிக் கணக்குல பெத்து விட்டா கூட்டம் கூடத்தான் செய்யும் !
அப்பறம் ஆறுமுக சாமி என்ன அர்நால்டா? பாவம் கெழவனை அடிச்சு கெத்து காட்டின பயபுள்ளைக !
ராஜன், நீங்க நல்லவரா கெடவரா?
நாலு பேத்துக்கு நல்லவன் …. அதுவும் கடைசில என்ன தூக்கறதுக்கு தான்
பெருமதிப்பிற்குரிய முற்போக்கு சிந்தனையாளர் அண்ணன் வினவுக்கு..
உங்களைப் பீடித்த வைரஸ் காய்ச்சல் முருகன் புண்ணியத்தில் உங்களிடமிருந்து விலகியோடி, உடல் நலம் பெற்றுத் திரும்பி வந்ததில் மிக்க மகிழ்ச்சி.!
பர்தா அணிவதே அடிமைத்தனம் என்று நீங்கள் சொல்லி நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதுதான் காலத்தின் கொடுமை. இந்த பர்தா அடிமைத்தனத்தை முன் வைத்து எத்தனையோ இஸ்லாமிய அன்பர்களிடத்தில் பல பதிவர்கள் வாதாடியிருக்கிறார்கள். இதே சுமஜ்லா என்ற சகோதரியிடத்திலும், பீர் என்கிற அன்பரிடத்திலும் வேறொரு பதிவில் நான் கடந்த மாதந்தான் இந்த பர்தா விஷயம் பற்றி பேசி ஓய்ந்து போயிருந்தேன். அது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று சொன்னவுடன் உங்க மதத்தில் மட்டும் என்னவாம் என்று கேள்வி கேட்டு பிரச்சினையை திசை திருப்புவதுவதான் முற்போக்கு என்றால் நீங்கள் முற்போக்காளர்களாகவே இருந்து கொள்ளுங்கள்..
எங்களது வீட்டில் எந்த உடை அணிவது.. எப்போது கோவிலுக்குச் செல்வது.. எந்தக் கோவிலுக்குச் செல்வது என்பதையெலலாம் முதலில் பெண்கள் முடிவெடுத்து பின்புதான் நடைமுறைப்படுத்தும்போது ஆண்களிடத்தில் வந்து சேர்கிறது.. ஊரும், உலகமும் ஆண்களை மையப்படுத்திய உலகத்தில் இருக்கும்போது என் வீட்டுப் பெண்கள் மட்டும் என்ன செய்ய முடியும்..? இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எங்களது இல்லங்களில் பெண்களுக்கான சுதந்திரம் அவர்களாலேயே மீட்கப்பட்டு வருகிறது.. இது மறுக்க முடியாத உண்மை.
இன்னமும் உங்களைப் போன்ற மெத்தப் படித்த மேதாவிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் முற்போக்கு முண்டாசுகள் மட்டுமே எல்லார் வீட்டிலும் பெண்கள் அடிமைப்படுவதாகவே எழுதிக் குவித்து வருகிறீர்கள். என்னுடைய இந்த 40 வருட கால அனுபவத்தில் எனது அக்காமார்களும், அம்மாவும் உடையுடுத்துதல், கோவிலுக்குச் செல்லுதல் என்று எதிலும் தாங்கள் சுயமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். அதன்படியேதான் அத்தனை வீடுகளிலும். அவரவர் கடமைகளை நீங்கள் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல..!
நற்குடியில் பிறந்தவள்தான் மாரியம்மன் கோவிலுக்கு சேலையோடு வருவாள் என்று எனக்குத் தெரிந்து எந்த இந்து பக்தையும் சொல்லி நான் கேட்டதில்லை. அவரவர் கவலை அவரவர்க்கு.. அவங்களுக்கு எது தோதோ அதையணிகிறார்கள்.. கோவிலுக்குள் கைகூப்பி வணங்குவதுகூட அடிமைத்தனம்தான்.. அது ஆண்டவனுக்கு அடிமைத்தனம். ஆண்டவனையே உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் மீண்டும், மீண்டும் கேட்கிறேன் எதற்கு உங்களுக்கு இந்த மதப் பிரச்சினை..? மதத்தை விட்டொழித்துவிட்டு சமூகத்தை சீர்த்திருத்தப் போகலாமே..? உங்களை யார் மதத்தைத் தூக்கிப் பிடிக்கச் சொன்னது..?
எனக்கு முருகனைப் பிடிக்கும்.. நான் ஞானப்பழம்தான். ஆனால் இந்து என்பது எனது சர்டிபிகேட்டில் இருக்கின்ற ஒரு தகுதி.. அது இல்லாமல் இருந்தாலும் எனக்கு முருகனைப் பிடிக்கத்தான் செய்யும்..! முருகன் இந்துமதத்தின் குறியீடு என்று உங்களுடைய முற்போக்கு அறிவு சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.. நான் எனது கேடு கெட்ட வாழ்க்கையில் கிடைத்த அனுபவத்தின் வாயிலாகத்தான் எவனோ ஒருவன் எனக்கும் மேலே இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த எவனோ ஒருவனை நான் அழைக்கும் பெயர் முருகன்.
அந்த முருகன் என்ற பெயர் இந்துதானே என்றால் அதற்கு நான் என்ன செய்வது..? நான் இந்துவாக இருந்த அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பிறந்ததே தவறு என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்..? சிறு வயதில் நான் பார்த்த முருகன் எனது ஹைப்போதலாமஸில் புகுந்ததற்கு நான் பொறுப்பாக முடியுமா..? உங்களுக்கு ஏதோ ஒரு கணத்தில், ஏதோ ஒரு விஷயத்தில், ஏதோ ஒரு நாளில், ஒரு புத்தகத்தின் வாயிலாக இந்த முற்போக்கு வியாதி தொற்றியிருக்கும். யோசித்துப் பாருங்கள்.. அது போலத்தான் நானும், எனது முருகனும்..!
இந்து மதத்தில் எதுவெல்லாம் பெண் அடிமைத்தனம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ, அதுவெல்லாம் மற்றவர்களுக்கு கடமையாகவோ, பிரியமாகவோ, இஷ்டமாகவோ இருந்து தொலைக்கும்..! இதனை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்..! அறிவால் முடியாதது ஆண்டவனை உணர்தலும்தான்..!
முடிந்தால் உங்களது முற்போக்கான சிந்தனைகளை வைத்து இந்துவாக யாரையும் பிறக்கவிடாமல் செய்து, காமன்மேனாக பிறக்க வைத்துப் பாருங்கள்..
ஐயப்பன் கோவில் விவகாரம்.. ஒவ்வொரு கோவிலுக்கும், ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு வரலாறும், நடைமுறைக் கோட்பாடுகளும் உண்டு. அதனைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.. பெண்களுக்கு படியேற அனுமதியில்லைத்தான். ஆனால் வணங்குவதற்கு நிச்சயம் அனுமதியுண்டு. சிதம்பரம் கோவிலின் சித்சபைக்குள் நுழைவதென்றால் ஆண்கள் சட்டையில்லாமல்தான் நுழைய வேண்டும்.. நானும் அப்படித்தான் நடராஜனை பார்க்கச் சென்றேன். இது எனக்கு அவமானம், என்னை அடிமைப்படுத்துகிறது என்றால், எதற்காக நான் நடராஜனை பார்க்கப் போக வேண்டும். நடராஜன் என்ன என்னைவிட பெரிய நபரா..? அவரை வேண்டுமானால் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டில் இருந்து விடலாம்.. எந்த இந்து மத வியாதியோ அல்லது வாதியோ இதனை கேள்வி கேட்கக் கூடாது.. இதற்கு அத்தனை நடராஜன் பக்தர்களுக்கும் அனுமதியுண்டு.
[[[இதை முட்டி, மோதி, தட்டி, கொட்டி மாற்ற வேண்டுமானால் வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை?]]]
நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்குது என்பார்கள்.. அது இதுதான்.. இந்தாண்டில் கடைசி கட்டத்தில் நல்லதொரு நகைச்சுவை வரிகளை வாசித்த அனுபவம் கிட்டியது.. நன்றிங்கண்ணே..!
/். என்னுடைய இந்த 40 வருட கால அனுபவத்தில் எனது அக்காமார்களும், அம்மாவும் உடையுடுத்துதல், கோவிலுக்குச் செல்லுதல் என்று எதிலும் தாங்கள் சுயமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். அதன்படியேதான் அத்தனை வீடுகளிலும். அவரவர் கடமைகளை நீங்கள் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல..!//
இரண்டாயிரம் வருசமா இந்த தாழ்த்தப்பட்ட பயபுள்ளகை சுயமாகவேதான் தீண்டாமையை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இதனை அடிமைத்தனம் என்று பேசும் வினவு போன்ற மெத்தப்படித்த மேதாவிகளுக்கு என்ன ஒரு கொழுப்பு?
இவ்வாறு அவா அவா கடமைகளை அவா அவா முரன்பாடில்லாம செஞ்சிண்டு இருக்கறத நீங்க அடிமைத்தனம்னு சொன்னா அதுக்கு பார்ப்பனியம் பொறுப்பல்ல… சீ.. ஸாரி உண்மைத்?தமிழன் பொறுப்பல்ல (ரெண்டும் ஒன்னுதான்.. இருந்தாலும்…)
அசுரன்
//இது எனக்கு அவமானம், என்னை அடிமைப்படுத்துகிறது என்றால், எதற்காக நான் நடராஜனை பார்க்கப் போக வேண்டும். நடராஜன் என்ன என்னைவிட பெரிய நபரா..? அவரை வேண்டுமானால் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டில் இருந்து விடலாம்.. எந்த இந்து மத வியாதியோ அல்லது வாதியோ இதனை கேள்வி கேட்கக் கூடாது.. இதற்கு அத்தனை நடராஜன் பக்தர்களுக்கும் அனுமதியுண்டு.//
இப்படி சொல்வது சரி என்றால், அதாவது ஒதுங்கிப் போவது சரி என்றால் அது இன்னொரு விசயத்தையும் சேர்த்து உள்ளடக்கியுள்ளது.
நான் ஒதுங்கிப் போகிறேன். அதே நேரத்தில் என்னை இந்து லிஸ்டில் சேர்காதே என்று இந்து-பார்ப்பனிய மத வியாதியிடம் மூஞ்சில் அடித்து சொல்ல வேண்டும்.
இந்து என்ற பெயரில் பார்ப்பனிய பயங்கரவாதம் செய்யும் ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் ஆசனவாயான ‘சோ” போன்றோரை அடித்து விரட்ட வேண்டும்.
இத உண்மைத்?தமிழன் வசதியா மறந்துடுவாரு. ஏன்னா? பேசிக்கலி அவர் ஒரு அப்பாவி பக்தர்…. அதுதான் உண்மைத்?தமிழன் டச்….
//நற்குடியில் பிறந்தவள்தான் மாரியம்மன் கோவிலுக்கு சேலையோடு வருவாள் என்று எனக்குத் தெரிந்து எந்த இந்து பக்தையும் சொல்லி நான் கேட்டதில்லை.//
பப்புக்களுக்குள் புகுந்து பெண்களை அடித்ததும், முஸ்லீமை மணந்த பெண்கள் மற்றும் சாதி விட்டு திருமணம் செய்த பெண்களை கொல்வது-கடத்துவது, பெண்களுக்கு கன்னித் திரை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சொன்ன பாஜக, ஆர் எஸ் எஸ், பஜ்ரங்தள் பார்ப்பன பயங்கரவாதிகள் இந்து பார்ப்பன மத வியாதிகள் இல்லை என்று உண்மைத்?தமிழன் ஜஸ்ட் லைக் தாட் சொல்லி விடும் அபாயம் உள்ளது.
ஏனேனில், பொது நடைமுறைகளைப் பற்றி அவருக்கென்ன கவலை. அவருக்கு எதாவது ஒன்று தொந்தரவாக இல்லை ஆனால் அதனை விமர்சிக்காமல் இருப்பது மாரலி தப்பு எனில் அதற்கான விளக்கத்தை மட்டும் அவரது சொந்த டிக்சனரியில் மட்டும் மாற்றிக் கொள்வார் உண்மைத்?தமிழன் அண்ணாச்சி.
மேற்சொன்ன சம்பவங்கள் எல்லாமே நற்குடி பெண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ‘சோ’ வின் ஆதரவு பெற்ற ஆர் எஸ் எஸ் பயங்கரவாத படையினர்(கபிலன் வார்த்தையில் கலாச்சாரா அமைப்பினர்) செய்தவைகள்தான்.
அசுரன்
அசுரன்
இந்த பதிவு சரியான சவுக்கடி (இதில் வினவு கூறுவது முற்றிலும் பொருந்துபவர்களுக்கு ) …
[[[நற்குடிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த உண்மைத்தமிழன் தனது ‘வேலுபிரபாகரனின் காதல் கதை’ விமர்சனத்தில் ‘கீழ்சாதி’ப் பெண் ’மேல்சாதி’ ஆணைக் காதலிக்கிறாள் என்கிற ரீதியில் எழுதியிருந்தார். அது என்னடா சாதியிலே கீழ்சாதி என்று கேட்க ஒருவருமில்லை.]]]
எப்படி கேட்பார்கள்..?
வேலுபிரபாகரன் என்னும் கதாசிரியரின் கதையை நான் அப்படியே மறுபிரசுரம் செய்திருக்கிறேன்.. அந்தப் படத்தின் கதையில் இருக்கும் ஒரு காதலின் முக்கிய எதிர்ப்பே இருவருக்குமான சாதி பிரச்சினைதான். இதனைச் சொல்வதற்கு வேறு எப்படி விமர்சனம் எழுதி சொல்ல வேண்டுமாம்..!
படிக்கிறவன் பாட்டைக் கெடுத்தான்.. எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்றது இதுதான்..!
ஏன் இப்படி கதை என்றால் அதனைக் கேள்வி கேட்க வேண்டியது வேலு பிரபாகரனிடம்தான்.. இதுகூடத் தெரியாமல் என்னத்துக்கு பகுத்தறிவு வேஷம்..?
சுகுணா, மிகச்சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் முட்டாள்களோடு விவாதம் செய்வது என்று. ஒடுக்கப்பட்ட சாதி அல்லது தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல வேண்டும். அது என்ன கீழ்ச்சாதி இப்படி கேள்வியின் நுட்பம் கூட தெரியாத உண்மைத்தமிழன் மாதிரியான முட்டாள்களோடு விவாதிப்பது உண்மையிலேயே சிரமமானதுதான்.
[[[களப்பிரன் says:
December 30, 2009 at 4:08 pm
சுகுணா, மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் முட்டாள்களோடு விவாதம் செய்வது என்று. ஒடுக்கப்பட்ட சாதி அல்லது தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல வேண்டும். அது என்ன கீழ்ச்சாதி இப்படி கேள்வியின் நுட்பம்கூட தெரியாத உண்மைத்தமிழன் மாதிரியான முட்டாள்களோடு விவாதிப்பது உண்மையிலேயே சிரமமானதுதான்.]]]
இதிலென்ன நுட்பம் இருக்கிறது களப்பிரர்..? அத்திரைப்படத்தில் வருகின்ற வசனங்களில் இந்த வார்த்தைகள்தான் இடம் பெற்றிருக்கின்றன. அரசு அனுமதி பெற்ற சென்சார் போர்டும் அங்கீகரித்திருக்கிறது.. அதுவும் நடைமுறையில் உள்ள வார்த்தைகள்தான்.. உங்களை மாதிரி அறிவுஜீவித்தனமாகத்தான் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டுமெனில் உங்களை மாதிரியே மேலே கழண்டு போயிருக்கும் சிலர் இருப்பார்கள். அவர்களிடம் போய் பேசுங்கள் நீங்களும் உங்களது தோழரும்..!
///இந்துக்கள் கோவில் இந்துக்களுக்கே.. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இதில் நாத்திகக் கொள்கையுடைய நாத்திக அரசுகளுக்கு என்ன வேலை..? அந்தந்த ஊர்க்காரர்களிடமே கோவில்களை ஒப்படைத்துவிட்டு வெளியேறலாமே..? தினம்தோறும் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி கோவிலை நிர்வகித்துக் கொள்ளட்டுமே..///
இங்க உண்மைத்தமிழன் ஆர் எஸ் எஸ் குரலில் சொல்லியுள்ளது என்னவென்றால், கோவில் விவகாரத்தில் ஆயிரம் ஒடுக்குமுறை கேவலம் இருக்கும் அதை தனி அமைப்பாக அந்தந்த ஊர்காரர்களிடம் ஒப்படைத்தால் பிரச்சினை தீர்ந்து விடும். இது ஒரு பொய், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் உண்மை?த்தமிழன் கருத்து என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ஆனால், இதே உண்மைத்தமிழன் அதே பின்னுட்டத்தில் சொல்லியுள்ளார்:
//அவங்களை மேல் தட்டு மக்களோட ஒட்ட வைக்குறதுக்கு என்ன வழி..? அரசுகளை எப்படி இறங்கி வர வைப்பது அப்படீன்னு கொஞ்சம் யோசிங்க.. அப்புறமா வந்து இந்த ஆத்திகம், நாத்திகம், தலித்தியம், மேல் சாதி, கீழ் சாதின்னு, மற்ற புண்ணாக்குகளை யோசிப்போம்..!///
ஆஹ, இதுக்கு மட்டும் நாத்திகர்கள் வேண்டுமாம். யோவ் உண்மை இப்போதான்யா நீ உண்மையிலேயே யாருன்னு காட்டிருக்க. சோ மாறியோட கருத்துக்களை உன்னோட தளத்துல போட்டயே அதுக்கு காரணம் இந்த ஆர் எஸ் எஸ் கருத்துநிலைதான் அடிப்படை. ஏன் இத நீ யோசிக்க மாட்டியா? இதுக்கு மட்டும் நாங்க வேனுமாயா?
சிதம்பரத்துல கோயில் தீட்சித பாப்பான் கையிலதான் இருந்தது, உண்மைத்தமிழன் முருகா, முருகான்னு கதறும் தமிழ்க்கடவுளின் தமிழை உள்ளே விட மறுத்த கோயில் அது. போராடி இதனை எதிர்த்தவர்கள் நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள்-நக்சல்பாரிகள். இந்த அயோக்கியத்தனத்துக்கு நியாயம் பேசியவர்கள் (நாத்திகர்களுக்கு இங்கென்ன வேலை என்று உண்மைத்தமிழன் குரலிலேயே கேட்டு) ஆர் எஸ் எஸ் மற்றும் சோ மாறிகள். இதற்கு மௌனமாக இருந்து அங்கீகாரம் வழங்கியவர்கள் வேறு யாருமல்ல உண்மைத்தமிழன் மாதிரியான் அப்பாவி பக்தர்கள்.
கண்டதேவி/கோவில்பட்டி கோயில் தேர் இழுப்பு, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி இங்கெல்லாம் ஊரில் உள்ள பெரும்பான்மை ஆதிக்க சாதிகள் ஓன்னு கூடித்தான் சாதிய ஒடுக்குமுறை செய்தார்கள். உண்மைத் தமிழன் அண்ணாச்சியோ ஊரு கையில கட்டுப்பாட கொடுத்துட்டா பிரச்சினை தீர்ந்துடும்னு குன்சா கத வுடுறாரு.
இந்தப் பதிவின் மையமான விசயமாக இருக்கும் பெண்ணடிமைத்தனம் குறித்து உண்மைத்தமிழன் ஒன்றும் சொல்லவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அத பேசினா கொஞ்ச நஞ்ச டவுசரும் கிழிந்து தொங்கி விடும் அல்லவா?
//அரசு அனுமதி பெற்ற சென்சார் போர்டும் அங்கீகரித்திருக்கிறது.. அதுவும் நடைமுறையில் உள்ள வார்த்தைகள்தான்.. உங்களை மாதிரி அறிவுஜீவித்தனமாகத்தான் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டுமெனில் உங்களை மாதிரியே மேலே கழண்டு போயிருக்கும் சிலர் இருப்பார்கள்.//
மேலே உள்ளதும் உண்மை?த்தமிழன் அண்ணாச்சியின் ‘சோ’ பாணி கருத்துதான். அவரது பிற்போக்குத்தனம், சமூக ஒடுக்குமூறை போக்கிரித்தனம் குறித்து கேள்வி கேட்டால் சட்டப்படி அதை தவறு என்று சொல்லமுடியாது என்று சட்டவாதம் பேசுவது இவர்களின் இரட்டுற மொழியும் நாக்கு பிறழ்வு நடைமுறை. இதே ஆட்கள்தான் இவர்களின் அயோக்கித்தனக்கள் பாதுகாக்க முடியாத அளவு அம்பலப்பட்டு நிற்கும் பொழுது பொது அறிவு, தார்மீக நியாயங்கள், மனிதாபிமானம் அடிப்படையில் பேசுவார்கள்.
சட்டப்படி இஸ்லாம் ஒரு மதம், சட்டப்படி இஸ்லாமிய கருத்துக்களை பிரச்சாரம் செய்வதில் தவறில்லை எனும் போது பர்தா போடாத பெண் கேவலாமனவள் என்பது இஸ்லாம் கருத்து என்று ஒருவர் கூறுவதற்கு அவருக்கு முழு உரிமையுள்ளது என்று உண்மை?த்தமிழன் அண்ணாச்சியின் லாஜிக் படி யாரும் பேசலாம். ஆனால் இதனை உண்மைத்தமிழன் அண்ணாச்சி ஏற்றுக் கொள்ளமாட்டார்.
ஏனேனில், அவ்ரது மேற்படி இந்த லாஜிக் பின்வரும் இந்து பார்ப்பனிய ஒடுக்குமுறையை நியாயப்படுத்த மட்டுமே தேவைப்படும்:”சட்டப்படி கீழ்ச்சாதி என்று பேசலாம், ஏனேனில் சென்சார் போர்டு அனுமதித்துள்ளது”
இந்த மாதிரி நல்லவன் வேசம் போட்டு பார்ப்பனிய ஆர் எஸ் எஸ் வெறியோடு பேசுவதற்கு வேறு ஏதாவது செய்யலாம்.
உங்க பேர மாத்தி வைச்சிக்கோங்களேன் மிஸ்டர் உண்மைத்?தமிழன்
அசுரன்
தோழர் வினவு மற்றும் கார்கி,
உங்களது இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகள் இஸ்லாமில் சாதியம் மற்றும் பார்தா விவகாரம் இரண்டையும் இந்துத்துவம் அல்லது பார்பனியம் இரண்டையும் ஒப்பிட்டதாகவே இருக்கிறது. நேரடியாக கண்டிப்பதற்கு உங்களால் முடிந்தால் அது இஸ்லாமியர்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்கிற தேவையற்ற அச்சம் என்று நான் எடுத்துக் கொள்ளலாமா ? இங்கு நீங்களும் சரி சுகுணாதிவாகரும் சரி, பர்தா குறித்து மாறுபட்டக் கருத்துக்கள் கூறியவர்கள் யாவரும் பார்பனிய ஆதரவாளிகள் என்று காட்ட முயலுவது ஏன் ? செய்யதும் அவரது பதிவில் அதைத்தானே செய்திருக்கிறார். அவருடைய பதிவுக்கும் உங்கள் கருத்துகளுக்கும் பெரிய அளவில் வேறுபாடு தெரியவில்லை. ஒன்று தற்காப்பு மற்றொன்று பிரச்சனை எங்குதான் இல்லை நீங்கள் மட்டும் யோக்கியமா என்பது போன்ற திரித்தல். இதில் நீங்கள் வலியுறுத்துவது பெண்ணிய விடுதலை என்பதைவிட வழக்கமான பார்பனிய எதிர்ப்பு தான் தெரிகிறது
கோவி.கண்ணன்,
ஒரு குறிப்பிட்ட மதத்தின் பிற்போக்குத்தனங்களை எதிர்க்க வேண்டுமாயின், எதிர்ப்பவர் மதங்களைக் கடந்து சென்றுவிட்டவராய் இருக்க வேண்டும்,
அல்லது தான் சார்ந்த மதத்தின் உள்ளேயே இருந்து அதன் பிற்போக்குத்தனங்களை கடுமையாக விமர்சிப்பவராய் இருக்க வேண்டும்.
இது ஒரு அடிப்படை அறம்.
மாறாக, எனது மதம் மேண்மையானது உனது மதம் இழிவானது எனும் அடிப்படையில் விமர்சிப்பவர்களை நாங்கள் விமர்சிக்கும் போது உங்களுக்கு
ஏன் எரிகிறது?
நீங்கள் இந்த மறுமொழியிலேயே சொல்வதென்ன?
//இதில் நீங்கள் வலியுறுத்துவது பெண்ணிய விடுதலை என்பதைவிட வழக்கமான பார்பனிய எதிர்ப்பு தான் தெரிகிறது//
இருக்கட்டுமே! பார்ப்பனியம் பெண் விடுதலை ஆதரிக்கிறதா என்ன? நேரடியாக பதில் சொல்லுங்கள் பூசி மொழுக வேண்டாம்.
பார்ப்பனியம் தான் ஆகக் கேடாக பெண்ணை அடிமைப்படுத்துகிறது என்கிறேன்.. அதை ஆதரிப்பவர்களுக்கு இசுலாத்தின் பெண் அடிமைத்தன
கருத்துக்களை விமர்சிக்க ஒரு மயிரளவும் யோக்கியதையில்லை.
//இருக்கட்டுமே! பார்ப்பனியம் பெண் விடுதலை ஆதரிக்கிறதா என்ன? நேரடியாக பதில் சொல்லுங்கள் பூசி மொழுக வேண்டாம்.
பார்ப்பனியம் தான் ஆகக் கேடாக பெண்ணை அடிமைப்படுத்துகிறது என்கிறேன்.. அதை ஆதரிப்பவர்களுக்கு இசுலாத்தின் பெண் அடிமைத்தன
கருத்துக்களை விமர்சிக்க ஒரு மயிரளவும் யோக்கியதையில்லை.//
நானும் உலக நாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி கம்யூனிச தலைமைகளில் பெண்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன். இன்னும் ஒரு பெண்ணுக்கு கூட உங்களால் விடுதலை வாங்கித் தந்து கம்யூனிச தலைமை ஏற்கும் தகுதிகள் கொடுக்கப்பட்டது போல் தெரியவில்லையே
ஆமா ! இந்த கம்முநிஸ்ட் கம்முநிச்டுங்கரான்களே ! அது யாருங்க ? ஹாலிவுட் நடிகரா ?
கோவி கண்ணன் அவர்களே,
பர்தா குறித்து தனிப்பட்டு விமர்சனம் செய்யும் வினவு பதிவுகள் உள்ளன, ஆனால் அங்கு கோவி கண்ணன் தான் இல்லை என்பது வருந்தத்தக்கது.
இந்த பதிவு மைய்யமாக பேசுவது என்னவென்றால் பர்தா எனும் பெண்ணடிமைத்தனத்தை முன்னிட்டு இந்து-பார்ப்பனிய மற்றும் இஸ்லாம் மத ஆணடிமைத்தன, மதவெறி கருத்துக்களை பரிமாறிக் கொண்ட பதிவர்களின் மனநிலை குறித்தும், எல்லா மதங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது பெண்ணடிமைத்தனமே என்பது குறித்தும் ஆகும்.
எனவே இதில் தவறொன்றுமில்லை.
அசுரன்
[[[‘உலகத்திலேயே சிரமமான காரியம் முட்டாள்களோடு விவாதிப்பதுதான்’ என்றார் பெரியார். ஆனால் வாழ்நாள் முழுக்க அவர் அதைத்தான் செய்தார். அதனாலேயே அதைச் சொல்வதற்குக் கூடுதலான ‘தகுதி’யும் பெரியாருக்கு உண்டு.]]]
இதனால்தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக கருப்புச் சட்டைக்காரர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போக.. அவர்களைப் புறக்கணித்து கண்டு கொள்ளாமல் போகும் கடவுளர்களின் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது..
[[[முட்டாள்களோடு விவாதிப்பதன் சிரமத்தைச் சமீபகாலமாக நன்றாகவே உணரமுடிகிறது. வலையுலகம் என்பது பெரும்பான்மை முட்டாள்கள் நிறைந்த கூடாரம். இதிலே ‘பதிவர்களுக்கிடையில் சாதியுணர்வு கிடையாது, மதமாச்சரியங்கள் கிடையாது, எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன’ என்கிற பம்மாத்துகள் வேறு.]]]
ஐயோ பாவம்.. இந்த அல்டாப்புகளின் உளறல்களில் இதுவும் ஒன்று. இவரைத் தவிர மற்றவர்கள் முட்டாள்கள் என்று சொல்வதற்கும் கொஞ்சம் தனி மூளை வேண்டும். அது இவருக்கு நிறையவே இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன்..
பதிவர்களுக்கிடையே சாதி, மத மாச்சரியங்கள் இல்லை என்பதால்தான் எங்களுக்கிடையில் பல்வேறு உதவிகளும், கொடுக்கல், வாங்கல்களும், அன்பு பரிமாற்றங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இதையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் பகுத்தறிவு மூளையைக் கொஞ்சம் கழற்றிவைத்துவிட்டு சாதாரண மனிதன் என்னும் தோற்றத்தோடு வர வேண்டும்..! முடிந்தால் வாருங்கள் மிஸ்டர் சுகுணா.. இல்லையெனில் உங்களை நீங்களே வாழ்த்திக் கொண்டு பினாத்துங்கள்..!
வாழ்க பகுத்தறிவு..!
[[[இதனால்தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக கருப்புச் சட்டைக்காரர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போக..]]]
கருப்புச்சட்டைக்காரர்களின் எண்ணிககை குறைந்து கொண்டே போக என்று இருந்திருக்க வேண்டும். அவசரம்.. அவசரம்.. அவசரத்தினால் ஏற்பட்ட தவறு..
இந்தப் பின்னூட்டத்தை நான்தான் எழுதினேன்..!
//சுஜ்மலா பின்பற்றுவது இசுலாமிய பார்ப்பனீயம்.//
தலைவரே என்னைப் பொறுத்தவரை பார்ப்பனியம் என்ற சொல்லே ஜாதி வரிகளில் ஊரும் மானிடர்களைத் தான் குறிக்கும் என்று கூறுவேன். இதில் இஸ்லாமியப் பார்ப்பனீயம் என்று ஒரு புது வகையை உண்டு பண்ணிவிடாதீர்கள். இப்போது பதிவுலக மக்கள் நினைக்கின்ற பார்ப்பனர்களின் பிரச்சினையே இன்னும் ஒய்ந்த பாடில்லை.
இதைப் பற்றியே “யார் பார்ப்பனன்?” என்ற இடுகையை எனது அழிந்து விட்ட பதிவான ஏழு மாத காலங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். எனக்கும் வால்பையன் அவர்களுக்கும் கருத்து மாற்றங்களும் நடந்தது. ஆனால் அது நாகரீகமான முறையில் நடந்தது என்பது எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அதற்கு பிறகு என் பதிவை யாரோ அழித்து விட்டார்கள் என்பதே உண்மை. அதிலிருந்து நான் படிப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். இப்போது ஏனோ இங்கு பின்னூட்டம் இட வேண்டும் என்று தோன்றியது.நன்றி.
மேலே வினவிற்காக எழுதப்பட்ட பெரிய பதில் பின்னூட்டமும், சுகுணா திவாகருக்கான பதில் பின்னூட்டத்தையும் நான்தான் இட்டேன்.
வழக்கமா பிளாக்கர் என்று நினைத்து வேகமாக போஸ்ட் செய்து விட்டேன். தடங்களுக்கும், தவறுக்கும் மிகவும் வருந்துகிறேன்..!
நீண்ட விளக்கத்திற்கு அது தப்பாக இருந்தாலும் நன்றி உண்மைத் தமிழன். பதிவுலகில் பல பிரச்சினைகள் அது சமூகத்தைப்போலவே இருந்து வருகின்றன. அதை உரிய தருணங்களில் விவாதத்திற்கு கொண்டு வந்து பேசித்தான் பார்ப்போமே என்பதற்கே இந்தப்பதிவு. பதிவர்கள் என்றால் ஒரே அடியாக மட்டம் தட்டமால் அவர்களும் இருக்கும் சமூகத்தின் பிரதிபலிப்பாய்த்தான் இருப்பார்கள் என்று புரிந்து கொள்கிறோம். அந்த உரிமையில்தான் இந்த பதிவும் கருத்துப் போராட்டமும்.
சரி சரி சண்ட போட்டுக்காதீங்க ஏட்டையா!
//சுஜ்மலா பின்பற்றுவது இசுலாமிய பார்ப்பனீயம்.
தலைவரே என்னைப் பொறுத்தவரை பார்ப்பனியம் என்ற சொல்லே ஜாதி வரிகளில் ஊரும் மானிடர்களைத் தான் குறிக்கும் என்று கூறுவேன்//
ஜாதி வரிகளில் ஊறும் என்று மாற்றி படிக்கவும். எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்.
//ளையே கோவி.கண்ணன் இவ்வாறு சொல்லக்கூடும்
– “உன்னை வேசி மகன் என்று பார்ப்பனியம் சொன்னாலென்ன, காதில் பஞ்சு வைத்து அதைப் புறக்கணித்து விடு”.//
ஏன் பஞ்சு வைக்கனும் ?
கோவி.கண்ணன் எப்போதும் சொல்வது இது தான் “பார்பனரை பிராமணன் என்று அழைப்பதை நிறுத்தினாலே போதும் மற்றவர்கள் சூத்திரர் என்று அறியப்பட மாட்டார். பார்பனரை பிறர் பிராமணன் என்று அழைக்கும் வரை பார்பனரல்லாதோர் சூத்திரனாகத்தான் நினைக்கப்படுவர்.” எவரையும் பிராமணன் என்ற சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றே எழுதி வருகிறேன்
//பார்பனரை பிராமணன் என்று அழைப்பதை நிறுத்தினாலே போதும் மற்றவர்கள் சூத்திரர் என்று அறியப்பட மாட்டார். பார்பனரை பிறர் பிராமணன் என்று அழைக்கும் வரை பார்பனரல்லாதோர் சூத்திரனாகத்தான் நினைக்கப்படுவர்.” எவரையும் பிராமணன் என்ற சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றே எழுதி வருகிறேன்//
வாரே வாஹ்…
கோவி.கண்ணன், பார்ப்பனியம் என்பது பார்ப்பனியம் என்று சொல்வதாலோ பார்ப்பான் என்று கூப்பிடுவதாலோ இருப்பில் இல்லை. அதன் இருப்பு
சமூகத்தில் எதார்த்தத்தில் இருக்கிறது. நாம் பார்ப்பான் இல்லை என்று நம்ப ஆரம்பித்தவுடன் அவன் கீழே வந்துவிடவும் போவதில்லை – நாம்
மேலே போய்விடவும் போவதில்லை..
உங்க சமூக அறிவு புல்லரிக்க வைக்குதுங்க.. இருந்தாலும் உங்களுக்காக ஸ்பெஷலா ஒரு பழைய பழமொழியை சொல்லிக்கிட்டு எஸ்கேப்பாகிறேன்.
“காக்கா கா-கான்னு கத்தறதுனாலே தான் அதைக் காக்கான்னு சொல்றோம்”
“காக்காவை டா-டான்னு சொன்னோம்னா அது டா-டான்னு கத்தாது”
பார்பனனை பிராமணன் என்று சொல்வதை யார் நிறுந்த வேண்டும் பிராமணா மற்றவனா. அவாள் பிராமணா சங்கம் வைத்திருக்கா சூத்ராள் ஒரே சங்கமா வைக்காம தனித் தனி சாதி சங்கமா வைத்திருக்கா. இதுல எது எப்படி தானா மறையும் கோவி.
[[[ sugunadiwakar says:
December 30, 2009 at 12:26 pm
மேலே சொன்ன எனது பின்னூட்டத்திற்குக் கூட கடுமையான கண்டனங்கள் வரக்கூடும். பதிவர்களை எப்படி முட்டாள்கள் என்று சொல்லலாம் என்று. மன்னிக்கவும் வடிகட்டின முட்டாள்கள் என்று வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளுங்கள். இவர்களது ‘விவாதங்களை’க் கவிதைகளாக எழுதித்தொலைப்பது அதைவிட கொடுமை. சுஜ்மலா தொடங்கி கலகலப்ரியா, பிரபாகர் இன்னும் இன்னும் கவிதைகள், கவிதைகள், கவிதைகள். அதைப் பாராட்ட ஒரு முட்டாள் கூட்டம். நோ, நோ, கவிதை பாவம்!]]]
ஐயோ தமிழ் மேலும், கவிதைகள் மேலும் என்ன ஒரு அக்கறை..!
ஏதோ அடிமைத்தனம்.. அடிமைத்தனம் என்கிறார்களே.. அந்த அடிமைத்தனத்தை செய்யும் புத்திசாலி எஜமானர்களில் ஒருவர்தான் இந்த சுகுணா திவாகர்..
பதிவர்கள் எழுதுவதை கவிதை, கவிதையில்லை என்றெல்லாம் அளவுகோல் வைத்து மதிப்பீடு வழங்க இவர் யார்..? யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தது.. இவருக்குப் பிடிக்கவில்லையெனில் அதுவெல்லாம் கவிதை இல்லையாமா..? இப்படி மதிப்பீடு அளிப்பதற்கு சுகுணா என்ன எல்லாம் தெரிந்த கடவுளா..? இது ஒருவகையில் அறிவுத்திமிர்..! தூக்கிப் பிடித்த அத்தனை வலைப்பதிவர்களுக்கும் பொங்கல் போனஸ் இது.. சாப்பிடுங்கப்பா..!
ஓ முருகா.. இவர்களிடத்தில் போய் இப்படி தமிழைக் கொடுத்து அல்லல்பட வைக்கிறாயே.. கொடுமைடா சாமி..!
பதிவர்கள் அனைவருமே வடிகட்டின முட்டாள்கள் என்று சொன்ன பிறகும் இவரை வலைப்பதிவர்களில் ஒருவர் என்று சொல்லாமா என்று வலையுலகம் சிந்திக்கட்டும். இல்லாவிட்டால் முட்டுச்சந்தில் பட்டப்பகலில் முட்டக் குடித்துவிட்டு கூச்சலிடும் அரை லூஸாக நினைத்து ஒதுங்கிப் போக வேண்டியதுதான்..!
வலையுலகத்திற்கு வந்த சோதனை..!
வினவு..
நீங்க நினைச்சது நடந்தேறிவிட்டதா..? திருப்தியா போய்த் தூங்கிட்டு அடுத்த சொம்பைத் தூக்கிட்டு வாங்க..!
ஏன்னே உண்மை, ஒரு ஆளு சுகுணாகிட்ட உன்புள்ளக்கு யாரு அப்பன்னு கேப்பாரு, நீங்க வாய முடிகிட்டோ தொரந்துகிட்டோ நிப்பீங்க… அதுக்காக சுகுணா கோவப்பட்டு முட்டாளுன்னு எழுதுனா அதுக்கு வினவு தளத்த திட்டுவீங்களா.. நல்லாருக்குண்ணே உங்க நாயம்!!
யாரோ ஒரு அனானி எழுதியதாய் நினைத்து கம்மினாட்டி என்று குறிப்பிட்டு விட்டேன், தயவு செய்து அந்த வார்தையை நீக்கிவிடுங்கள்… ஐயா தண்டோரா நீங்கதானா இப்படி ஒரு கேள்வியை கேட்டது? நல்லா இருக்கு உங்க பதிவுலக ‘தோழமை’
பதிவு பிடித்திருந்தது.
//உங்க சமூக அறிவு புல்லரிக்க வைக்குதுங்க.. இருந்தாலும் உங்களுக்காக ஸ்பெஷலா ஒரு பழைய பழமொழியை சொல்லிக்கிட்டு எஸ்கேப்பாகிறேன்.//
உங்க அளவுக்கு சமூக அறிவு ஜீவி இல்லிங்க.
//கோவி.கண்ணன், பார்ப்பனியம் என்பது பார்ப்பனியம் என்று சொல்வதாலோ பார்ப்பான் என்று கூப்பிடுவதாலோ இருப்பில் இல்லை. அதன் இருப்பு
சமூகத்தில் எதார்த்தத்தில் இருக்கிறது. நாம் பார்ப்பான் இல்லை என்று நம்ப ஆரம்பித்தவுடன் அவன் கீழே வந்துவிடவும் போவதில்லை – நாம்
மேலே போய்விடவும் போவதில்லை..//
அப்படின்னா தாராளமாக கொண்டு போய் அனைவருக்கும் அர்சகர் ஆகும் உரிமை மற்றும் ஏனைய உரிமை பெற்றுத்தந்து அனைவரையும் பிராமணர் ஆக்கி பார்பனீயத்துக்கு புதியவர்களை “உற்பத்தி” செய்யுங்கள்.
கோவிலில் கூட்டம் குறையவில்லை என்று மார்த்தட்டுபவர்களுக்கு இன்னும் தாராளமாக ஏற்றுமதி செய்யுங்கள்.
//“காக்கா கா-கான்னு கத்தறதுனாலே தான் அதைக் காக்கான்னு சொல்றோம்”
“காக்காவை டா-டான்னு சொன்னோம்னா அது டா-டான்னு கத்தாது”//
கம்யூனிசத்தில் இருக்கும் பார்பனக் காக்கைகள் அனைவருமே கம்யூனிச காக்கை ஆகிவிட்டார்கள் என்று நீங்கள் நம்பினால் சரி
கோவி கண்ணன் விவாத்தில் கேட்ட கேள்விக்கு உரையாடாமல் தப்பிப்பதற்காக கம்யூனிசத்தை ஏன் இழுக்கிறீர்கள் அது உங்கள் உரிமை என்றாலும் கூட. கம்யூனிசத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே இருப்பார்கள், மற்ற சாதி, மத.இன,மொழி மாச்சரியங்களுக்கு இடமில்லை. வர்க்கம் மட்டுமே பொது அடையாளம். ஆனால் நீங்கள் நேசிக்கும் சொல்லிக்கொள்ளும் தமிழ் அடையாளம் அப்படிப்பட்டதல்ல. அங்கே எல்லா சாதிகளும், ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. பார்ப்பனியத்தை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் தமிழன் அடையாளத்தில் சாரமே ஆதிக்க சாதி திமிர்தான். முதலில் உங்கள் அடையாளத்தை திருத்திக் கொண்டு கம்யூனிஸ்டுகளை திருத்துவதற்கு வாருங்கள்.
//கோவி கண்ணன் விவாத்தில் கேட்ட கேள்விக்கு உரையாடாமல் தப்பிப்பதற்காக கம்யூனிசத்தை ஏன் இழுக்கிறீர்கள் அது உங்கள் உரிமை என்றாலும் கூட. கம்யூனிசத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே இருப்பார்கள், மற்ற சாதி, மத.இன,மொழி மாச்சரியங்களுக்கு இடமில்லை. வர்க்கம் மட்டுமே பொது அடையாளம். ஆனால் நீங்கள் நேசிக்கும் சொல்லிக்கொள்ளும் தமிழ் அடையாளம் அப்படிப்பட்டதல்ல. அங்கே எல்லா சாதிகளும், ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. பார்ப்பனியத்தை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் தமிழன் அடையாளத்தில் சாரமே ஆதிக்க சாதி திமிர்தான். முதலில் உங்கள் அடையாளத்தை திருத்திக் கொண்டு கம்யூனிஸ்டுகளை திருத்துவதற்கு வாருங்கள்.
//
பிரச்சனையே உங்களால் நேரடியாக ஒன்றை எதிர்க்க முடியவில்லை என்பதே. உங்கள் பர்தா ஐயப்பன் ஒப்பீட்டீர்கான காரணமே ? நாங்கள் தன் தீர்ப்பு சொல்லுவோம் என்கிற ஆதிக்க ஏதோசதிகார மனப்பான்மை. பர்தா விவாகரத்தில் கருத்து சொன்னவர்கள் அனைவருமே பார்பனிய ஆதரவாளர்கள் என்று உங்களிடம் சொன்னார்களா ? பார்பனியதை நீங்கள் இங்கே இழுத்ததே நீங்கள் இங்கே பர்தாவுக்கு எதிராக எழுதி இருப்பது கண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்கே என்றே நினைக்க முடிகிறது. உங்களால் ஏன் நேரடியாக கண்டிக்க முடியவில்லை ? மதவாதிகள் உங்கள் எதிரி என்றால் அதில் ஒரு சாரருக்கு சிறப்பு சலுகை கொடுப்பதும், மற்ற ஒப்பீடுகளும் உங்கள் தரப்பு வாதத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டிருக்கிறது என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் ?
கஷ்ட காலம், கோவியார் அவர்கள் பதிவை முழுதாகப்படித்தாரா என்றே தெரியவில்லை. பர்தா விவகாரத்தில் மற்றவர்களை விட இங்கே அதிகமாக இசுலாமிய பிற்போக்குத்தனம் உரிய மொழியில் விமரிசிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் எல்லா மத பெண்ண்டிமைத்தனத்தையும் எதிர்ப்பதில் நிற்பதால் வரும் முனைப்பு. சுஜ்ம்லா விவகாரத்தில் பர்தாவை யாரும் கண்டிக்கவில்லை. உனது முறை உனக்கு உசத்தி என்றால் என்னை ஏன் குற்றம் சொல்கிறாய் என்பதே? இதை கலகலப்பரியாவை எழுதியிருக்கிறார். ஆக இந்த விவகாரத்தில் பர்தாவை எதிர்ப்பவர்கள் என் இந்து மதத்தை இழிவு படுத்திவிட்டாயே என்ற கோபம்தான். அதனால்தான் சொந்த மதத்தில் ஆயிரத்தெட்டு முறைகளில் பெண்ண்டிமைத்தனத்தை பின்பற்றும் இவர்கள் பொய்யான அற உணர்ச்சியின்பாற்ப்ட்டு குதிக்கிறார்கள். ஏட்டிக்குப் போட்டி விவாதிப்பது என்பது அவ்வளவு நல்ல பண்பல்ல கோவி. இந்த பிரச்சினையை நீங்கள் முழுசாக படித்தீர்களா, புரிந்து கொண்டீர்களா என்பதே ஐயமாக இருப்பதால் விவாதிப்பதற்கு சிரமமாக இருக்கிறது.
கோவி, வினவில் பர்தா, திருச்சபை, பார்ப்பனியம் எல்லமே தனித்தனியாக விலாவாரியாக விமர்சிக்கப்பட்டுள்ளது… இந்து முசுலீம் என்ன பஞ்சாயத்து நடக்கும்போது இரண்டுபக்கத்தையும் எழுதுவதுதான் அறிவியல் பூர்வமானது.. அப்போதுதான் பிரச்சனையின் முழுப்பரிமாணத்தையும் அனைவரும் உணர முடியும். இதை எப்படி மறுக்கிறீர்கள் என்று புரியவில்லை?????
||ம்யூனிசத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே இருப்பார்கள், மற்ற சாதி, மத.இன,மொழி மாச்சரியங்களுக்கு இடமில்லை. வர்க்கம் மட்டுமே பொது அடையாளம். ஆனால் நீங்கள் நேசிக்கும் சொல்லிக்கொள்ளும் தமிழ் அடையாளம் அப்படிப்பட்டதல்ல. ||
அடடா, அது தான் வங்கத்து பார்ப்பனக் கம்முனிஸ்டுங்கலாம் அக்னிய வலம் வந்து , அனைத்துப் பார்ப்பன சடங்குகளுடன் தங்கள் புத்திர புத்திரிகளுக்கெல்லாம் மணம் புரிஞ்சு வச்சாங்களே, இது மாரித்தானே..
அடச்சே அவனுங்கலாம் மார்க்க்ஸிஸ்டுங்கறீங்களா…? உங்க கோஷ்டிக்காரெய்ங்க நம்ம பிரச்சண்டா அண்ணாத்தே கூட பார்ப்பன சாதி சங்க கூட்டத்துல கலந்துக்கிட்டு அடையாளத்த நல்ல வெளிப்படுத்தினாருங்களே? அவுரு கம்மூனிச்சிட்டு இல்லீங்கறீங்களா ?
கம்மூனிசத்துல கூட வலது ஓரம், நடுவு, இடது ஓரம் இருக்குங்க்ளே.. நம்ம வங்கத்து கேரளத்து பார்ப்புங்க, ராமமூர்த்தி, ஓட்டுப்பொறுக்கி கம்மூனிசிட்டுங்க எல்லாம் இடதுலயும் வலதாத்தானுங்களே இருக்காக, இருந்திருக்காக… சில மேலத்தேய மார்க்சிஸ்டுங்க கிறிஸ்தவம், புத்தம் எல்லாம் இணைச்சுக் கூட மார்க்சிசத்தப் பார்த்திருக்காக… மனிதங்கற அடையாளத்துக்குள்ள பல தேசிய எனங்க வராப்புல, பசுமைவாதம், சூழலியத்துக்குள இடது முற்போக்குவாதிங்களும், தாராளமையவாதிகளும், ஏன் மேலைத்தேய பரப்பில் இப்போது பழமைவாதிகளும் வாரங்களே.. கம்மூனிஸ்டு அடையாளத்தோட தானுங்களே நம்ம போல்போட்டு அண்ணாத்தேயும் அறியப் பட்டாரு.. என்னமோ போங்க, கேட்ட இவனுங்கலாம் நெசமான கம்மூனிச்சிட்டு இல்லீம்பீங்க! ஏதோ தோணுது கேக்கறேனுங்கோ..
எழுதுறதுக்கு மட்டும் தமிழப் பயன்படுத்துவீங்களாக்கும்? ஏதோ போங்க!
////இருக்கட்டுமே! பார்ப்பனியம் பெண் விடுதலை ஆதரிக்கிறதா என்ன? நேரடியாக பதில் சொல்லுங்கள் பூசி மொழுக வேண்டாம்.
பார்ப்பனியம் தான் ஆகக் கேடாக பெண்ணை அடிமைப்படுத்துகிறது என்கிறேன்.. அதை ஆதரிப்பவர்களுக்கு இசுலாத்தின் பெண் அடிமைத்தன
கருத்துக்களை விமர்சிக்க ஒரு மயிரளவும் யோக்கியதையில்லை.//
நான் பார்பனியத்தை ஆதரிப்பதில்லை, அதே சமயத்தில் ஆப்ரிக்கவில் ஒருவன் பாதிக்கப்பாட்டாலும் அதற்கும் இந்தியாவில் இருக்கும் பார்பனியமே காரணம் என்று சொல்வதும் இல்லை.
உலக நாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி கம்யூனிச தலைமைகளில் பெண்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன். இன்னும் ஒரு பெண்ணுக்கு கூட உங்களால் விடுதலை வாங்கித் தந்து கம்யூனிச தலைமை ஏற்கும் தகுதிகள் கொடுக்கப்பட்டது போல் தெரியவில்லையே
நீங்கள் பார்ப்பனியத்தை ஆதரிப்பதில்லையா? சரி…. விடுங்கள் அந்த ஸ்டேட்மெண்ட்டின் நேர்மை மேலே உள்ள மறுமொழிகளில் விரவிக்கிடக்கிறது.
பொதுவான வாசகர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.
இங்கே யாருக்கும் ஆப்ரிக்கப் பிரச்சினைக்கு பார்ப்பனியம் காரணம் என்று சொல்லவில்லை – வேண்டுமானால் வினவில் ஆப்ரிக்கா பற்றி
தோழர் கலையரசன் எழுதியுள்ள பதிவுகளைப் படித்துப் பார்த்து உங்கள் ஸ்டேட்மெண்ட்டை நீங்களே வெரிஃபை செய்து பார்த்துக் கொள்ளலாம்.
கம்யூனிஸ்டு தலைமைகளில் பெண்களைத் தேடிக் கொண்டு இருக்கும் உங்கள் “தேடல்” பற்றி மகிழ்ச்சி – கம்யூனிஸ்டு கட்சிகளில் ஒரு தனிநபர்
தலைமை இருக்காது என்று நினைக்கிறேன் – பொலிட்ப்யூரோ என்பது ஒரு கூட்டுத் தலைமை – இதில் பெண்கள் இருந்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.. ஆனால், மாவோயிஸ்டுகளின் மக்கள் விடுதலை இராணுவத்தில் பெரும்பான்மை பெண்கள் இருக்கிறார்கள் – அவர்களே பல படைப்பிரிவுகளுக்கு தலைமையும் ஏற்கிறார்கள் – இதை நீங்கள் யூடியூபில் கிடைக்கும் வீடியோக்களில் பார்க்கலாம்.
இங்கே பேசப்படும் விஷயத்தை விட்டு நீங்கள் ஏன் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறீர்கள் கோவி?
//கம்யூனிஸ்டு தலைமைகளில் பெண்களைத் தேடிக் கொண்டு இருக்கும் உங்கள் “தேடல்” பற்றி மகிழ்ச்சி – கம்யூனிஸ்டு கட்சிகளில் ஒரு தனிநபர்
தலைமை இருக்காது என்று நினைக்கிறேன் – பொலிட்ப்யூரோ என்பது ஒரு கூட்டுத் தலைமை – இதில் பெண்கள் இருந்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.. ஆனால், மாவோயிஸ்டுகளின் மக்கள் விடுதலை இராணுவத்தில் பெரும்பான்மை பெண்கள் இருக்கிறார்கள் – அவர்களே பல படைப்பிரிவுகளுக்கு தலைமையும் ஏற்கிறார்கள் – இதை நீங்கள் யூடியூபில் கிடைக்கும் வீடியோக்களில் பார்க்கலாம்.// தீவிரவாதம் என்று அரசுகளால் சொல்லப்படும் இயக்கங்களில் பெண்கள் இருப்பது நடைமுறையில் அல்கொய்தாவிலும் உண்டு. நான் கேட்பது கம்யூனிஸ்டுகள் ஆட்சி நடத்தும் நாடுகளில், மாநிலங்களில், கட்சித்தலைமைகளில் எத்தனை பேர் பெண்கள் ? பெண்கள் இன்னும் அந்த தகுதிக்கு வரவில்லையா ?
நீங்கள் பேசும் பெண் விடுதலை எல்லாம் ஊருக்கு உபதேசம் போல் இருப்பதால் நானும் இதைக் கேட்க வேண்டி இருக்கிறது. உங்கள் கொட்டை பாக்கு சாடலில் இது பற்றிப் பேச தவிர்பது புரிகிறது. நாங்க தான் யோக்கியம் எங்களுக்குத்தான் கண்டிக்கும் உரிமை இருக்கிறது என்று நீங்கள் மேலே சொன்னதை மீண்டும் என் கேள்வியுடன் தொடர்பு படுத்தினால் கொட்டை பாக்கு விலை சும்மா கேட்கவில்லை என்று விளங்கும்,
//இங்கே பேசப்படும் விஷயத்தை விட்டு நீங்கள் ஏன் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறீர்கள் கோவி?//
இப்ப விடை சொல்லிவிட்டேன்
கோவி நீங்கள் குறிப்பிடும் போலி கம்யூனிஸ்டு கம்பேனி பிரைவேட் லிமிடெட் பற்றி பதிவர்கள் மாதவராஜ், சந்திப்பு போன்றவர்களிடம் கேட்கவும், ”நாங்கள் தீவிரவாதிகள்”,
ஆமாம் வினவு , சீன பிராண்டு கம்மூனிஸ்டு பதிவர்களை தவிர எங்கும் நீங்க பின்னூட்டமிடுவதேயில்லையே ?
ஆர்வி உங்களுக்கு மறுப்பாக எழுதிய பதிவில் கூட நீங்கள் எழுதவில்லையே ,
அவ்வளவு மேட்டிமைதனமா இல்லை பதிவர்கள் எல்லாம் மதிப்பு கொடுக்க தகுந்த ஆட்கள் இல்லை என்ற எண்ணமா ?
என்னை போன்ற வாசகர்கள் ஓகே , பதிவர்கள் ஏன் உங்களுக்கு பின்னூட்டமிடவேண்டும் ?
நல்லகேள்வி மதி இந்தியா. ஒருவேளை நேரம் காரணமாக இருக்கலாம். இருந்தாலும் இவர்கள் கொடுத்து இருக்கும் முல்லையின் பதிவை இன்று தான் பார்க்கிறேன். வினவு, கார்க்கி போன்ற முற்போக்காளர்கள் அங்கே சென்று அவருக்கு ஆதரவாக விவாதம் செய்து இருக்கலாம். அந்த நிகழ்வை பல மாதங்கள் கழித்து வேறொரு இடத்தில் பயன்படுத்த மட்டுமே செய்துள்ளனர்.
கார்க்கியும் பார்க்காமல் இருந்திருக்கலாம். அதனால் வினவு ஏன் அவருக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட எழுதாமல் இன்று அனைவரையும் கேள்வி கேட்கிறார் ?
செய்யது தளத்தில் உங்கள் பின்னூட்டத்தை நான் முன்பே வாசித்தேன், மதவிகாரங்கள் உங்கள் சிந்தனையை தீர்மானிக்க் நீங்கள் விடவில்லை என்பது அதில் தெரிந்தது. கீழே சீகிலா-பர்தா மற்றும் ஐயப்பன் பற்றி ரெண்டு சூப்பர் கட்டுரைகளுக்கு லிங்க் இருக்கு, அதை படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்…
மணிகண்டன், முல்லையின் சாமி பதிவு டிசம்பர் 23ஆம்தேதி வெளியிடப்பட்டிருக்கிறது. அது மீள்பதிவு என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எனவே அது பல மாதங்களுக்கு முந்தைய பதிவல்ல. அடுத்து அந்த பதிவில் பின்னூட்டமிடாத்தற்கு காரணம் ஏற்கனவே அங்கு சிலர் ஐயப்பன் சக்தி வாய்ந்த சாமி பாத்து எழுதுங்கள் என்று மிரட்டியிருந்தனர். இதில் எங்கள் கருத்துக்களை தீவிரமாக எழுதப்போய் வினவில் எங்களுகுக்கு சேர வேண்டிய ஆபாச அர்ச்சனைகள் முல்லைக்கு போய் அவருக்கு ஒரு புதிய பிரச்சினையையும் தலைவலியையும் கொண்டுவரலாம் என்பதால் அதை தவிர்த்தோம். பல பதிவுகளில் பின்னூட்டமிடுவதை தவிர்ப்பதற்கு இதுதான் காரணம். சில பதிவுகளில் இடவும் செய்கிறோம். மற்றபடி இது மேட்டிமைத்தனத்தினால் இடாமல் இல்லை.மற்றபடி பின்னூட்டமிட்டாலும் இடாவிட்டாலும் பதிவுலக பிரச்சினைகளில் கலந்து கொண்டு எங்கள் கருத்தை தெரிவிப்பது நிச்சயம் மேட்டிமைத்தனமல்லவே. வினவின் முந்தைய பதிவுகளுக்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை என்பதிலிருந்தே இதைப் புரிந்து கொள்ளலாம். அடுத்து ஒரு பிரச்சினையில் முழுதாக எங்கள் கருத்தை தெரிவித்து விவாதத்தை முன்னெடுப்பதற்கு எங்கள் தளமே பேருதவியாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு வரும் திட்டுக்கள், பிரச்சினைகள் எங்களைச் சார்ந்தவையாக இருக்கும். நன்றி
&&&எனவே அது பல மாதங்களுக்கு முந்தைய பதிவல்ல.&&&You are right.
&&&இதில் எங்கள் கருத்துக்களை தீவிரமாக எழுதப்போய் அது முல்லைக்கு ஒரு புதிய பிரச்சினையையும் தலைவலியையும் கொண்டுவரலாம் என்பதால் அதை தவிர்த்தோம்&&&
ஒகே. understood.
&&&பதிவுலக பிரச்சினைகளில் கலந்து கொண்டு எங்கள் கருத்தை தெரிவிப்பது நிச்சயம் மேட்டிமை