முகப்புபுத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றின் அரசியல் நூல்கள்! - அராஜகவாதமா? சோசலிசமா?
Array

புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றின் அரசியல் நூல்கள்! – அராஜகவாதமா? சோசலிசமா?

-

அராஜகவாதமா? சோசலிசமா?

–          ஸ்டாலின், பக்கம்: 96, விலை: ரூ.45.00

தோழர் ஸ்டாலின் 130வது பிறந்த நாள் சிறப்பு வெளியீடு.

நூலிலிருந்து,” வர்க்கப் போராட்டம்தான், சமகாலத்திய சமூக வாழ்வின் அச்சாணியான விசயமாகும். இந்தப் போராட்டத்தின் வளர்ச்சியில், ஒவ்வொரு வர்க்கமும் தனது சித்தாந்தத்தால் வழிகாட்டப்படுகிறது. முதலாளித்துவ வர்க்கம் தனக்கென ஒரு சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. இந்த சித்தாந்தம் தாராளவாதம் என்று அழைக்கப்படுகிறது. இது போலவே, பாட்டாளி வர்க்கமும் தனக்கென பிரபலமானதொரு சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. இது சோசலிசம் என்று அழைக்கப்படுகிறது.”

“தாராளவாதத்தை, ஏதோ முழுநிறைவான ஒன்று என்றும் பகுக்கப்பட முடியாதது என்றும் கருதக்கூடாது. இது வெவ்வேறு முதலாளித்துவ தட்டுகளின் தேவைகளுக்குப் பொருந்தும்படி பல்வேறு போக்குகளாக உட்பிரிவுகளாக்கப்பட்டுள்ளது. இதே போல, சோசலிசமும் முழுநிறைவான ஒன்றாகவோ பகுக்கப்பட முடியாத ஒன்றாகவோ இல்லை. இதிலும் கூட வெவ்வேறு போக்குகள் இருக்கின்றன.”

“நாம் இங்கு தாராளவாதத்தை பரிசீலிக்கவில்லை. அதை வேறொரு சந்தர்ப்பத்தில் நாம் பரிசீலிப்பதே மேலானது. இப்போது, சோசலிசம் மற்றும் அதன் வெவ்வேறு போக்குகளும் குறித்து வாசகருக்கு விளக்குவதையே நாம் இப்போது விரும்புகிறோம். தொழிலாளிகள் இதில் கூடுதலாக ஆர்வம் காட்டுவார்கள் என்றும் நாம் நினைக்கிறோம்.”

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

மனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு
மார்க்சிய-லெனினியமே ஒரே மாற்று
மக்களிடம் கொண்டு செல்லும் கீழைக்காற்று

சென்னை புத்தகக் கண்காட்சி
(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

  • உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.
  • வாருங்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள்!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. வினவு,

    அண்மைய இடுகைகள் பட்டியலை, வினவின் கட்டுரையாளர்களுக்கு மேல் போடுங்களேன். பார்ப்பதற்கு எல்லோருக்கும். வசதியாக இருக்கும்.

    • தோழர் குருத்து,

      முகப்பு பக்கத்தில் மேலே ‘புதியவை’ என்று தலைப்பின் கீழ் சுழல் முறையில் புதிய 10 இடுகைகள் வந்து கொண்டிருக்கின்றன. இடப்பக்கம் ‘இன்று’ என்ற தலைப்பின் கீழ் புதிய 23 இடுகைகளின் பட்டியல் இடம்பெற்றிருக்கிறது… அண்மைய இடுகைகள் பட்டியல் உள்ளபக்கங்களை வாசிப்போருக்கான வசதிக்காக கீழே வைக்கப்பட்டுள்ளது.

      தோழமையுடன்

  2. புத்தக கண்காட்சியில், கிழை காற்று அரங்கில் சிறிது நேரம் இருந்தேன். இந்த புத்தகத்தையும் புரட்டி பார்த்தேன். இதை ஸ்டாலின், 1905இல் எழுதியிருக்கிறார். அப்போது அவர் வயது 27 !

    Theory எல்லாம் இருக்கட்டும். நடை முறையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு, அவர், அவற்றை அமல்படுத்த முனைந்த வரலாறு தான் கண் முன் நிக்கிறது.

  3. அராஜகவாதமா ? சோசியலிசமா ? = ரூபாய்க்கு ரெண்டா ? ரெண்டு ஒரு ரூபாயா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க