Tuesday, October 3, 2023
முகப்புஜக்குபாய் : திருடனை கொட்டிய தேள் !
Array

ஜக்குபாய் : திருடனை கொட்டிய தேள் !

-

vote-012உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஷூட்டிங் முடிந்து சில தினங்களே ஆன ‘ஜக்குபாய்’ திரைப்படம் இணையதளங்களில் ரிலீஸ் ஆக, தமிழ் திரைப்பட உலகம் பரபரப்புக்குள் ஆழ்ந்திருக்கிறது. ஓசியில் கிடைத்தாலும் ஜக்குபாயைப் பார்க்க ஆளில்லை என்பது வேறு விசயம். உடனே ‘இது கொலைக்கு சமமான குற்றம்’ என்று தமிழ் திரையுலக நடிகர்கள் பதறி துடித்தார்கள். ‘ஐய்யய்யோ… 15 கோடி’ என அழுதேவிட்டார் ராதிகா. முதல்வர் கருணாநிதியிடம் ஓடிப்போய் மனு கொடுக்க அவர் ஒரு கோயம்புத்தூர் பையனைப் பிடித்து உள்ளேப் போட்டார்.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர் என்பது மட்டுமல்ல, அவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவர். சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ‘ராடன் பிலிம்ஸ்’தான் ஜக்குபாயின் தயாரிப்பு நிறுவனம். கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இணைய தளத்தில் ரிலீஸ் செய்துவிட்டனர். ‘நடிகர் சங்கத் தலைவர் படத்துக்கே இந்தக் கதியா?’ என படை திரண்ட கோடம்பாக்க நடிகர்கள் ஆளாளுக்கு கண்டன அறிக்கைகள் விட்டார்கள். உணர்ச்சி இயக்குநர் சேரன், ‘‘இந்த திருட்டு வி.சி.டி. தயாரிக்கும் கும்பலை ஒழித்தால்தான் தமிழ் சினிமா உருப்படும். எங்காவது திருட்டு வி.சி.டி. தயாரிப்பதோ, விற்பதோ தெரிந்தால் அவர்களை அடித்து உதைக்க வேண்டும். இதற்காக திரையுலகம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு சம்பளம் தரலாம்’’ என அதிகாரப்பூர்வமாக ஒரு கூலிப்படையை உருவாக்கும் யோசனையை முன் வைத்திருக்கிறார். தனது குருநாதர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான ஜக்குபாய்க்கு நேர்ந்திருக்கும் கதி கண்டு உணர்ச்சிவசப்பட்டு சேரன் இவ்வாறு பேசிவிட்டார் என்று இதை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் காலம்தோறும் இப்படித்தான் பேசி வருகிறார். இப்படித்தான் பேசுவார். அதில் ஒன்றும் அதிர்ச்சி இல்லை. ஆனால் சினிமாத் தொழில் நசுக்கப்படுகிறது என்றும் அதைக் காப்பாற்ற ஒரு கூலிப்படையை உருவாக்க வேண்டும் என்றும் ஆவேசமாக பேசும் சேரன், அதே சினிமாத் துறையில் பல விதங்களில் நசுக்கப்படும் உதிரித் தொழிலாளர்கள் குறித்து இதுவரை என்ன பேசியிருக்கிறார்? லைட்மேன் தொடங்கி, மேக்&அப் மேன் வரை தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி, சுயமரியாதையையும் பறிக்கும் திமிர்த்தனத்தை என்ன விதத்தில் எதிர்த்திருக்கிறார்? தன் உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் கூட தராத எத்தனையோ இயக்குநர்களின் பட்டியலில் சேரனின் பெயரும் இருக்கிறது.

இந்த ஜக்குபாய் பிரச்னைக்காக திரையுலகினர் ஓர் அவசர ஆலோசனைக் கூட்டம் போட்டார்கள். சென்னை ஃபோர் பிரேம்ஸ் அரங்கத்தில் நடத்தப்பட்டக் கூட்டத்துக்கு, பொதுவில் இம்மாதிரியான எந்த நிகழ்ச்சிகளுக்கும் வந்திடாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் வந்திருந்தனர். கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் ‘‘ஜக்குபாய் கதையில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஜக்குபாய் என்ற டைட்டிலிலேயே ஏதோ மிஸ்டேக் இருக்கிறது. நானும் கே.எஸ்.ரவிக்குமாரும் பல மாதங்கள் டிஸ்கஸ் பண்ணியும் கதை நகரவே இல்லை. அதன்பிறகுதான் ஜக்குபாய் கதையில் சரத்குமார் நடித்தார். நமக்குதான் செட் ஆகவில்லை, சரத்குமாருக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கும் இப்போது பிரச்னை ஆகிவிட்டது’’ என்று சரத்குமார் தலையில் கூடுதலாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ‘சூப்பர் ஸ்டாரை அழைத்துப் பேச வைத்தால் விநியோகஸ்தர்களை சமாளித்து படத்தை விற்றுவிடலாம்’ என்று சுப்ரீம் ஸ்டார் கணக்குப் போட்டிருக்க, ரஜினியோ ‘டைட்டிலே வௌங்கலை. எவனோ பில்லி சூனியம் வெச்சுட்டான்’ என்று எக்ஸ்ட்ரா பஞ்சாயத்தை கூட்டினார். அதைத் தொடர்ந்த ரஜினிகாந்த்தின் பேச்சுதான் முக்கியமானது.

அவர் சொல்கிறார், ‘‘ஜக்குபாய்க்காக ‘Wasabi’ என்ற பிரெஞ்சு படத்தின் சி.டி.யை கே.எஸ்.ரவிக்குமார் கொண்டுவந்து கொடுத்தார். படம் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது. பத்து அலெக்ஸ் பாண்டியனுக்கு சமமான ஒரு ஓய்வு பெற்ற பெற்ற போலீஸ் அதிகாரியையும், அவருடைய மகளையும் பற்றிய கதை அது. அந்த போலீஸ் அதிகாரியின் மகள் வெளிநாட்டில் கோடீஸ்வரியாக இருக்கிறாள். அவளைப் பார்க்க அப்பா போகிறார். அந்த பெண்ணை சாகடிக்க ஒரு கும்பல் சதி செய்கிறது. அவர்களை அடித்து வீழ்த்தி மகளைஅந்த போலீஸ் அதிகாரி எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இது பிரமாதமான ஸ்க்ரிப்ட். நிச்சயம் வெற்றிபெறும். அதனால் இந்த வி.சி.டி. வெளியானதைப் பற்றி எல்லாம் சரத்குமார் கவலைப்படத் தேவையில்லை’’ என்று ரஜினிகாந்த் உள்ளது உள்ளபடியே போட்டுக்கொடுத்தார். ஒரு பிரெஞ்சு படத்தை அப்படியே திருடி தமிழில் எடுப்பது பற்றிய ஒப்புதல் வாக்குமூலமாக ரஜினிகாந்த்தின் பேச்சைக் கருதலாம்.

அதே விழாவில் பேசிய கமல் என்னும் காமன்மேனின் பேச்சு அபாயத்தின் உச்சமாகவும், விஷத் தன்மையுடனும் இருந்தது. ‘‘குறைந்த விலையில் வி.சி.டி.யிலும், டி.வி.டி.யிலும் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமாக நினைக்கிறார்கள். அதை திருத்த முடியாது. ஹேராம் சி.டி. பர்மா பஜாரில் விற்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் எல்லாம் கறுப்பு பணத்தில் இருந்து வருவதுதான். திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் எல்லாம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்’’ என்பது காமன்மேன் கமலின் பேச்சு.

மிக அபாயகரமான இந்தப் பேச்சின் பொருள் என்ன? திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில்தான் மும்பையில் குண்டு வைக்கிறார்கள் என்றால் கமல் யாரை சொல்கிறார்? இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மிக நேரடியாக முஸ்லீம்களை குறிவைத்தே இந்தக் குற்றச்சாட்டை அவர் சொல்கிறார். ஏன், திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில் இருந்து கரசேவையும், மாலேகான் குண்டுவெடிப்பும் நடக்காதா? பர்மா பஜாரில் திருட்டு வி.சி.டி. விற்கும் அத்தனை பேரும் பாய்களா? அப்படியே விற்றாலும் அந்த பணம் தேச விரோத செயல்களுக்குதான் பயன்படுத்தப்படுகிறது என்ற முடிவுக்கு கமல் எப்படி வருகிறார்? அவை அடிமனதில் ஊறிக் கிடக்கும் இஸ்லாமிய காழ்ப்பில் இருந்து வரும் சொற்கள். கமலின் இந்தப் பேச்சை வைத்து அவர் மீது வழக்கு தொடுப்பதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன. அப்புறம், திருட்டு வி.சி.டி. விற்கும் பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால், சினிமாக்காரர்கள் சம்பாதிக்கும் பணம் எல்லாம் நாட்டை வளமாக்கப் பயன்படுகிறதா என்ன?

கும்பகோணம் தீ விபத்தின்போது பந்தாவாக ‘நான் 5 லட்சம் தாறேன், நான் 10 லட்சம் தாறேன்’ என்று அறிக்கைவிட்ட கொழுப்பெடுத்த கோடீஸ்வர நடிகர்களில் முக்கால்வாசிப் பேர் இதுவரைக்கும் ஒரு பைசாவும் தரவில்லை. இதைப்பற்றி பலமுறை பத்திரிகைகளில் செய்திகள் வந்தும் அந்த நேர்மையின்மைப்பற்றி பேசவே மறுக்கிறார்கள். இந்த யோக்கியவான்கள்தான் இப்போது திருட்டு வி.சி.டி. பற்றி அலறுகின்றனர். ‘சரத்குமாருக்கே இந்த கதியா, ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கே இந்த நிலைமையா?’ என்று இழவு வீடு போல் நடிக்கின்றனர். சில நடிகர்கள் ஒரு படி மேலே போய் ‘தமிழனுக்கு சொரணை இல்லை. திருட்டு வி.சி.டி. பார்த்துக் கெட்டுப்போறான்’ என்று சாபம் விடுகிறார்கள். சினிமா என்பது ஒரு தொழில். அதில் ஏற்படும் பிரச்னைக்கும் தமிழனின் சொரணைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஒரு தொழிலில் சந்திக்கும் சிக்கலை சமூகப் பிரச்னையாக மாற்றுகின்றனர். ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா? உழைக்கும் மக்களின் பணத்தை கேளிக்கையின் பெயரால் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இவர்களின் அநியாயத் திருட்டைவிட வேறு பெரிய திருட்டு ஊரில் இல்லை.

ஒரு பொது மேடையில் ‘வாசபி’ என்ற பிரெஞ்சு படத்தை திருடிதான் ஜக்குபாய் எடுக்கப்படுகிறது என்று ரஜினிகாந்த் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார். இதைப்பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத நடிகர்கள், வி.சி.டி. திருட்டுப் பற்றி மட்டும் வாய் கிழியப் பேசுகின்றனர். பொதுவாக திருடர்கள், தாங்கள் திருடியப் பொருளை இழந்துவிட்டால் அதைப்பற்றி வெளியே சொல்வதற்கு தயங்குவது பொது எதார்த்தம். திருடனுக்குத் தேள் கொட்டியைதைப்போல என நாம் பழமொழியே வைத்திருக்கிறோம். ஆனால் வாசபியைத் திருடி ஒரு தமிழ் படத்தை எடுத்துவிட்டு, அதை ஒருத்தன் திருடிவிட்டான் என்றவுடன் எகிறிக் குதிக்கிறார்கள். மோசடியும், ஆபாசமும் நிறைந்த இந்த வர்த்தக விபச்சாரத்தைப்பற்றி எந்த நடிகரும் வாய் திறக்கவில்லை. உடலின் அனைத்து துவாரங்களையும் மூடிக் கொண்டிருக்கின்றனர். இப்போது மட்டும்தான் என்றில்லை. ஒரு சில தனிப்பட்ட காழ்ப்புகள் உச்சத்திற்கு வரும் சந்தர்ப்பங்கள் நீங்களாக எப்போதுமே தமிழ் சினிமா வென்றுகள், தங்களின் தவறுகளை ஒத்துக்கொண்டதோ, மன்னிப்புக்கேட்டதோ, அதைப்பற்றி விவாதம் செய்ததோ கிடையாது.

அண்மையில் தென்னாப்பிரிக்க படமான Tsotsi யை அப்படியே உருவி ‘யோகி’யாக்கி அமீர் எடுத்தப் படம் பற்றி கோடம்பாக்கத்தின் நேர்மையாளர்கள் என்ன கருத்தை சொன்னார்கள்? ஒரு விபத்து, அதில் சந்திக்கும் மூவரின் கதைகள் தனித்தனி கோணங்களில் விவரிக்கப்படும் அம்ரோஸ் ஃபெரோஸ் என்ற படத்தை சுட்டு மணிரத்னம் ஆயுத எழுத்து எடுத்தார். ‘sliding doors’ -ன் தாக்கத்தில் ஜீவா ‘12பி’ எடுத்தார். shoot em up-ல் ஐந்து விரல்களுக்கு இடையே ஐந்து தோட்டாக்களை வைத்து கையைத் தீயில் காட்ட, துப்பாக்கி இல்லாமலேயே தோட்டாக்கள் சீறிப்பாய்ந்து எதிரில் நிற்பவனைத் தாக்கும் காட்சியை அச்சு பிசகாமல் அப்படியே சுட்டு நியூட்டனின் மூன்றாம் விதியில் வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. இப்படியான கலைத் திருட்டுக்காக எக்காலத்திலும் குற்றவுணர்வு அடைபவர்கள் இல்லை இவர்கள்.

ஆனால் இவர்களின் நலன்களுக்காகவே இயங்கும் இந்த அரசு சினிமாக் காரர்களின் பிரச்னை என்றால் மட்டும் ஓடோடி வந்து தீர்த்து வைக்கிறது. சினிமா கலைஞர்கள் குடியிருக்க வீடு இல்லாமல் அல்லாடுவதால் மாமல்லபுரம் சாலையில் 95 ஏக்கர் நிலத்தை அவர்களுக்காக ஒதுக்கித் தந்திருக்கிறார் கருணாநிதி. அண்மையில் கூட கமல்ஹாசன் கலந்துகொண்ட சினிமா வர்த்தக கருத்தரங்குக்கு தமிழக அரசு சார்பாக 50 லட்ச ரூபாய் கொடுத்தார். பாவம், சினிமாக்காரர்கள் கஞ்சிக்கு இல்லாமல் பஞ்சத்தில் தவிக்கிறார்கள். இவர் போய் உதவியிருக்கிறார். என்ன அநியாயம் இது? சினிமா என்பது ஒரு தொழில். அதன் முன்னேற்றத்துக்காக கேட்டுக் கேள்வியில்லாமல் மக்கள் பணம் செலவிடப்படுவது எத்தனைப் பெரிய அநியாயம்? இன்று, ஆட்டோ ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், முடி திருத்துபவர்கள், வழக்கறிஞர்கள் என சமூகத்தின் உழைக்கும் சக்தியாக இருக்கும் எத்தனையோ வகையினர் முதல்வர் கருணாநிதியை சந்திக்க காத்திருக்கின்றனர். அதற்கான நியாயமான காரணங்களும் அவர்களுக்கு இருக்கின்றன. ஆனால் கருணாநிதியோ நடிகை சோனா, குஷ்பு போன்றவர்களை சந்திக்கவே முன்னுரிமை தருகிறார். அந்த அடிப்படையிலேயே ஜக்குபாய் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்த குற்றவாளிகளை மின்னல் வேகத்தில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் கருணாநிதி. இவ்வளவு வேகமான நடவடிக்கை வேறு எந்த மக்கள் பிரச்னைகளுக்கும் எடுக்கப்பட்டிருக்கிறதா என்று நினைத்துப் பாருங்கள். ஒரு வருமானச் சான்றிதழ் வாங்கவே வாரக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிற நாட்டில் ராதிகாக்களின், சரத்குமார்களின் பிரச்னைகளுக்கு மட்டும் உடனடி தீர்வை அளிப்பதில் இந்த அரசு கூடுதல் கரிசனம் கொண்டிருக்கிறது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. அருமையான கட்டுரை ஆழியூரான்! வாழ்த்துக்கள். இக்கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளை விரிவாக அலசி தனித்தனியே எழுதவேண்டும் என்பது என் விருப்பம். 

    கமல்ஹாஸன் எப்போது ரஸ் அமைப்பின் ஊதுகுழலாகிப்போனார் என்பதை அவரது இணையத் தளபதிகள் யாராவது கேட்டுச் சொல்வார்களா?

    • என்னங்க இது நியாயமே இல்லாமப் பேசறீங்க! “பர்மா பஜாரில் திருட்டு வி.சி.டி. விற்கும் அத்தனை பேரும் பாய்களா? ” என்று நீங்களே சரியான கேள்வியைக் கேட்டு விட்டு கமல் பர்மா பஜார் ஆளுங்களத் திட்டுனா பாய்களத் திட்டறதா சொல்லறீங்க! அவரு தேசத் துரோகிங்கன்னு தான சொன்னாரு… அத முஸ்லீம்கன்னு நீங்களே மொழிபெயர்த்துக்கிட்டு கமல் ஒரு ஆர் எஸ் எஸ் ஆளுன்னு தீர்ப்பு சொன்னா என்ன அர்த்தம்?

      பர்மா பஸார்ல திருட்டு சி.டி. விக்கிறவன் தேசத்துரோகிங்கற கருத்த ஏத்துக்கங்க, மறுங்க… ஆனா அவரு முஸ்லீம்களத்தான் சொல்றாருன்னு நீங்களா சொல்லாதீங்க… அப்படி சொன்னா நீங்கதான் பர்மா பஸாருக்கும் – முஸ்லீம்களுக்கும் – தேசத் துரோகத்துக்கும் முடிச்சு போடறதா அர்த்தம்.

      • ஆழியூரான்குறவருக்கு கமலஹாசன முஸ்லீம் விரோதியாக் காமிச்சே பேர் வாங்கணுங்கற வக்கிர எண்ணம் இருக்கு. ஒண்ணு இதுனாலயே தன்ன நாலு பேரு கவனிக்கணும், இல்லன்னா இந்தப் பேத்தல நம்பி கமலஹாசனுக்கு கெட்ட பேரு வரணும். அது வரைக்கும் அடங்க மாட்டாருன்னு நெனைக்கறேன். அந்த மொத்த பாராகிராஃபையும், குறிப்பாக “அடிமனதில் ஊறிக் கிடக்கும் இஸ்லாமிய காழ்ப்பில் இருந்து வரும் சொற்கள். கமலின் இந்தப் பேச்சை வைத்து அவர் மீது வழக்கு தொடுப்பதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன.” என்ற கேணத்தனமான வரியையும் “ஒத்து வராத மறு மொழிகள்” பிரிவுல தூக்கி எறிய வழி மொழிகிறேன்.

        எதற்கெடுத்தாலும் முஸ்லீம்களைத்திட்டுகிறார்னு ஃபிலிம் காட்டுற ஆழியூரான் உள் மனசுல முஸ்லீம் வெறுப்பாளராக இருக்கணும். அல்லது கமலஹாசன் கிட்ட வேலை கேட்டு விரட்டப்பட்டிருக்கணும். இது மாதிரி உளவியல் காரணங்கள் இல்லாமல் இவ்வளவு முட்டாள்தனமாக எழுதுவதற்கு அவர் மன நோயாளியாக இருப்பார் என்று நான் சத்தியமா நெனைக்கல.

        • வித்தகன்,

          நன்றாக படியுங்கள். கமல் கூறியிருப்பது,”இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் எல்லாம் கறுப்பு பணத்தில் இருந்து வருவதுதான். திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் எல்லாம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்”. இங்கு “மும்பை குண்டு வெடிப்பு” என்பது முஸ்லீம்களையே குறிக்கும். மேலும் குண்டு வைப்பவர்கள் முஸ்லீம்கள்தான் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டிருப்பதில் RSS வெற்றியடைந்திருக்கிறது.

          திருட்டு விசிடிக்கான காரணம் வேறு என்று தெரிந்தபோதும் இவன் ஏன் இந்த விளக்கத்தைக் கூறவேண்டும்?

        • அஸ்கர். “மும்பை குண்டு வெடிப்பு” என்பது முஸ்லீம்களையே குறிக்கும். ” என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். ஆர் எஸ் எஸ் கதைக்கு தலையாட்டுவது நீங்கள்தான். மும்பையில் குண்டு வைத்தவர்கல் தீவிரவாதிகள். அவர்கள் செய்யும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களுக்கு கருப்புப் பணம் தேவையென்பதில் சந்தேகமே இல்லை. வேண்டுமானால் திருட்டு விசிடி பணம் தீவிரவாதத்திற்குப் போகிறதா இல்லையா என்று பேசுங்கள். ஆனால் திவிரவாதிகள் என்றால் முஸ்லீம் என்றே குறிக்கும் என்று சொல்லாதீர்கள். அப்படி சொன்னால் நீங்கள்தான் ஆர் எஸ் எஸ்.

          //திருட்டு விசிடிக்கான காரணம் வேறு என்று தெரிந்தபோதும் இவன் ஏன் இந்த விளக்கத்தைக் கூறவேண்டும்?// உங்களுக்கு எது முதல் எந்து பின்னால் என்று புரிந்து கொள்வதில் குழப்பம் இருக்கிறது. யாருமே தீவிரவாதிகள் சிடி விற்பதாக சொல்லவில்லை. கறுப்புப் பணம் தீவிரவாதத்திற்கு பயன்படும் என்றுதான் சொல்லியிருக்கிறார்.

        • வித்தகன் ஏன் இவ்வளவு கோபம்?கட்டுரை மிகவும் சிறப்பாகவே இருக்கிறது, உங்கள் நோக்கம் ஆரோக்கியமான விவாதமாக இல்லையே ஆழியூரானை திட்டுவதுதான் உங்கள் நோக்கமாக இருக்கிறதே,
          //இது மாதிரி உளவியல் காரணங்கள் இல்லாமல் இவ்வளவு முட்டாள்தனமாக எழுதுவதற்கு அவர் மன நோயாளியாக இருப்பார் என்று நான் சத்தியமா நெனைக்கல.//
          இது ரொம்ப அதிகம் , நியாயமா உங்கள் பின்னூட்டத்தை ஒத்துவராத மறுமொழியில் போட்டால் சிறப்பாக இருக்கும்,

        • விடுதலை…
          இந்தப் பின் வரும் வரிசையைக் கவனியுங்கள்.

          “கமல் விசிடி விற்பவர்களின் காசு மும்பை தீவிரவாதம் வரை போகிறது என்கிறார்.
          முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் என்று ஆர். எஸ். எஸ், சொல்கிறது.
          எனவே கமல் ஆர். எஸ். எஸ். காரர்”

          தீவிரவாதத்தையும் முஸ்லீம்களயும் இணைத்திருப்பது கட்டுரையாளர்தான். சி டி விற்பவர்களயும் முஸ்லீம்களையும் அவர்தான் கோர்த்திருக்கிறார். பழியை மட்டும் கமல் மேல் போடுகிறார். ஆழியூரான் அடிமனதில் முஸ்லீம் வெறுப்பு உள்ளது என்று நான் சொல்ல நல்ல முகாந்திரம் இருக்கிறது. மும்பை குண்டு வெடிப்புக்கு முஸ்லீம்கள் காரணம் என்று அவர் சொல்வதற்காக அவர் மேல்தான் வழக்குப் போட வேண்டும்’

        • உங்களின் இந்த கேள்விக்கு  தோழர் கேள்விக்குறியின் பதிலில் உடன்படுகிறேன்இதற்கு தாங்கள் பதிலளிப்பிர் என்று நம்புகிறேன்,

          இரங்குவோன், வித்தகன்! ‘மும்பை குண்டு வெடிப்பு’ என்றவுடன் உங்களுக்கு காஞ்சி சங்கராச்சாரி நினைவுக்கு வற்றாரு; எனக்கு மும்பை குண்டு வெடிப்பு வழக்குகளுக்காக கைதாகியிருக்குற நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் நியாபகத்துக்கு வற்றாங்க; ஒருவேள கலைஞானிக்கு ஜார்ஜு புஷ் ஞாபகத்துக்கு வந்தாரோ என்னவோ?

        • விடுதலை. முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்று
          கேள்விக்குறிக்குத் தோன்றுகிறது.
          இதற்கும் கமலுக்கும் என்ன சம்பந்தம்?

        • நண்பர் வித்தகன்
          கமலுக்கும் சினிமா கும்பலுக்கும் என்ன சம்பந்தம் என கீழே எமது கருத்தை பதிவு செய்துள்ளேன்,

        • //நண்பர் வித்தகனா எழுதியது??? !!! //

          ஆமாம் விடுதலை. முஸ்லிம்களையும் தீவிரவாதத்தையும் பர்மா பஜாரையும் தான் இணைத்து விட்டு கமல் மேல் பழி போட்டிருக்கிறார் கட்டுரையாளர். என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

      • வித்தகனுக்கு தோன்றுவது போல்தான் எனக்கும் தோன்றுகிறது.
        திருட்டு விசிடி காசு குண்டு வைக்கப்பயன்படுதுங்றது பேத்தல்தான். அதே மாதிரி கமல் பேச்சு முஸ்லிம் விரோதம்கறதும் ரொம்ப அதீதம்.

      • //‘மும்பை குண்டு வெடிப்பு’ என்றவுடன் உங்களுக்கு காஞ்சி சங்கராச்சாரி நினைவுக்கு வற்றாரு; எனக்கு மும்பை குண்டு வெடிப்பு வழக்குகளுக்காக கைதாகியிருக்குற நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் நியாபகத்துக்கு வற்றாங்க//

        வரட்டுமே. அதனாலென்ன? மும்பையில் குண்டுவைத்த தீவிரவாதிகள் முஸ்லிம்களாக இருக்கட்டுமே! அதனால் தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்களைத்தன் குறிக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறு.
        அப்படி நீங்கள் நினைப்பதை கமலும் நினைப்பதாக சொல்வது இன்னும் தவறு.

        மாலேகான் தீவிரவாதிகள் இந்துக்களைத் திட்டுவதாக அர்த்தம் ஆகாது. இதற்கெல்லாம் தப்பர்த்தம் கற்பித்துக் கொண்டிருந்தாள் தீவிரவாதி என்ற சொல்லையே பயன் படுத்த முடியாது. இதனால் சிரமப் படப்பூவது உங்களையும் என்னையும் கமலையும் மாதிரி பொது மக்கள்தான்.

        • நண்பர் வித்தகன்
          ஆளும் வர்க்கம் ‘தீவிரவாதி’ என முத்திரை குத்துவது முசுலீம்களைத்தான்ஆனால் உண்மை அதுவல்ல என்பது நமக்கு புரிகிறது  முசுலீம்களை தீவிரவாதியாக சித்தரிப்பதில் ஆளும்  வர்க்கம் வெற்றியடைந்திருக்கிறது இதற்கு ஊடகங்களோடு சினிமாக்காரர்களின் பங்கு மிகவும் முக்கியம்,(தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் கீழைக்காற்று வெளியிட்ட சினிமா திரை விலகும்போது நூலில் ரோஜா பட விமர்சனத்தை படிக்குமாறு கோருகிறேன்)
          தீவிரவாதி என்றால் முசுலீம்கள்தான் என சாமன்யன் நினைக்கிறான் அவன் கமலின் கருத்தை எப்படி புரிந்து கொள்வான்?

          தீவிரவாதத்தையும் முசுலீம்களையும் இந்த  ஆளும்  வர்க்கம்தான் இணைத்து வருகிறது, கட்டுரையாளர் அதை உடைத்துதான் எழுதியுள்ளார்,
          என்னையும் உங்களையும் போன்றவர்களுக்குத்தான் பயங்கரவாதி ஆரிய பார்ப்பன கூட்டம் என்று தெரியும் ஆனால் சாமான்ய மக்களுக்கு?

          • இதில் என்ன தவறு முஸ்லீம் தீவிரவதிகள் இல்லவே இல்லயா தீவிரவாதிகளுக்கு முஸ்லீம் கள் உதவி செய்வதே இல்லயா முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்காதிர்கள்

        • //என்னையும் உங்களையும் போன்றவர்களுக்குத்தான் பயங்கரவாதி//
          மன்னிக்கவும் ஒரு சிறிய பிழை 
          என்னையும் உங்களையும் போன்றவர்களுக்குத்தான் நாட்டை அச்சுறுத்தக்கூடிய கொடிய பயங்கரவாதி- என படிக்கவும்

  2. அருமையான கட்டுரை .வார்த்தைக்கு ,வார்த்தை நிஜம் . ஒவொரு தமிழன் மனதிலும் கேட்டுகொண்டிருக்கும் நிஜம். கட்டுரையாளருக்கு என் பாதம் பனித்த வணக்கம்.
    சினிமா நடிகர்கள் , அதாவது வருங்கால முதல்வர் கனவுகளில் மிதக்கும் நடிகர்களுக்கு , எல்லோருக்கும் தான் அவர்கள் செய்யும் தொழிலில் பல பிரச்சனைகள் , உங்கள் பிரச்சனைகள் மட்டும் என்ன, மக்கள் பிரச்சனையா அல்லது தேச பிரச்சனையா? அளவுக்கு மீறின சுதத்திரதொடு வளம் வருகின்ற நீங்கள் , எங்கள் வெறுப்புகளை மட்டுமே சமபாதிகின்றிர்கள்.
    தொடை கறியும் , தொப்புள் கறியும் விக்கும் உங்களுக்கு , நாங்கள் கொடுத்த இடம் மிக அதிகம் . முதலில் சம்பாதித்த பணத்திற்கு வருமான வரி கட்டுங்கள் .

    • ஒரு தொழிலில் சந்திக்கும் சிக்கலை சமூகப் பிரச்னையாக மாற்றுகின்றனர். ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா?
      ஒரு தொழிலில் சந்திக்கும் சிக்கலை சமூகப் பிரச்னையாக மாற்றுகின்றனர். ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா?
      —————————————————–
      தயவு செய்து தொலைக் காட்சி தொடர்களைப் பற்றியும் எழுதுங்கப்பா.
      ——————————————————————
      அடியாள் வைக்க ஆசைப் படுகின்றாரா சேரன்…?
      என்ன செய்ய- அந்தப் பெயரே அப்படித்தானே.
      ———————————————————————

  3. அந்த அருமையான படத்தைப் பார்க்க எனக்குக் குடுத்து வைக்கலையே?அந்த இணையத் தள முகவரியை எனக்கும் குடுங்க பிளீஸ்!!!!!!!!!!

  4. வாழ்த்துக்கள் தோழர் ஆழியூரான் !   தொடர்ந்து எழுதுங்கள்

    நாட்டில் ஆயிரம் பிரச்சனை இதைபற்றி கவலையில்லாமல்
    உடலை காட்டி பிழைக்கும் நடிகர் கூட்டத்தின் காதில் அடிப்பது போல உள்ளது.

    தோழர்களே நினைத்து பாருங்கள் சுனாமி வந்த போதோ ,
    ஈழத்தில் தமிழன் பலி ஆகும்போது கண்ணீர் சிந்தாத
    கூத்தாடி கூட்டம் 15 கோடிக்காக கண்களால் கழிகின்றன,
    சமுதாயத்தில் சக மனிதனாய் கூட வாழ வக்கில்லாத
    வக்கிரமான பொறுக்கி திருடன்களான இவர்கள்
    மக்களுக்கு தத்துவம் வேற சொல்லுகிறார்கள்.

     தமிழன் நிலைமை ரொம்ப கொடுமை

    • //தோழர்களே நினைத்து பாருங்கள் சுனாமி வந்த போதோ ,
      ஈழத்தில் தமிழன் பலி ஆகும்போது கண்ணீர் சிந்தாத
      கூத்தாடி கூட்டம் 15 கோடிக்காக கண்களால் கழிகின்றன,
      சமுதாயத்தில் சக மனிதனாய் கூட வாழ வக்கில்லாத
      வக்கிரமான பொறுக்கி திருடன்களான இவர்கள்
      மக்களுக்கு தத்துவம் வேற சொல்லுகிறார்கள்.
      //

      உண்மை ஈழம் இவர்களுக்கு வணிக சந்தை …..வெளிஊரில் படம் ஓட வேண்டுமென்றால் “அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்கலாம்”

  5. எல்லாம் சரிதான். ஆனால் திருட்டு வி.சி.டி, இப்படி படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் ரிலிஸ் செய்வதை நியாயப்படுத்த முடியாது. சினிமாகாரர்களின் இரட்டை வேடம், போலித்தனம், கருப்பு பணம் போன்றவை விமர்சிக்கபட வேண்டியவை தான்.

    ஆனால் பொது மக்கள் மலிவான விலையில் திருட்டு வி.சி.டி வாங்கி பார்ப்பது அவர்களின் moralஅய் குறைக்கும். பணத்தை வாங்கி கொண்டு வாக்களிப்பது, சிறிய சட்ட விதிகளை கூட மீற முயலவது என்று அனைத்து விதங்களுலும் தார்மீக நேர்மை கெடும் சூழல். Slowly we have all become corrupt and cynical enough.

    சரி, இதே போல் அனைத்து படங்களும், திருட்டு வி.சி.டி மற்றும் திருட்டுகள் மூலம் தொடர் தோல்வி அடைந்தால், மொத்த துறையே நசிந்துவிடும். பிறகு சினிமா தொழிலாளர்கள், இணை இயக்குனர்கள் என்று யாருக்காக கவலை படுகிறீர்களோ, அவர்கள் பொழைப்பில் மண் தான்.

    • பதிவின் முக்கியமான கேள்வி ஐரோப்பிய, அமேரிக்க படங்களை திருடி எடுத்துவிட்டு, அதை எவனோ திருடி டி.வி.டி போட்டு வித்துவிட்டான் என்று இவர்கள் ஏன் கதருகிறார்கள்…என்பது தான்.

      கலையை மதிப்பவனே கலைஞன். அடுத்தவன் கலையைத் திருடி தன் கலை என்று சொல்லி விற்பவன் திருடன். திருடனிடமே திருடி காமன் மேன்களுக்குத் தருபவர்கள் தான் திருட்டு விசிடி போடும் ராபின் ஹுட்டுகள்.

      தார்மீக நேர்மை இந்தியாவில் திருட்டுத்தொழிலில் மட்டும் தான் இருக்க முடியும். அங்கே தான், அக்ரீமெண்ட் கிடையாது, வங்கி லோன் பத்திரம் கிடையாது, எழுத்து மூலம் எந்த ஒப்பந்தமும் கிடையாது, ஆனால் தொழில் மட்டும் கோடிக்கணக்கில் நடக்கும். தார்மீக நேர்மை என்பது பொறுப்புணர்ச்சியுடன் வருவது.

      பொறுப்பு இல்லை, என்றால் பொறுப்புணர்ச்சி வராது. பொறுப்புணர்ச்சி இல்லை என்றால் நேர்மை இருக்காது.

    • சரி அப்பொழுது டிக்கெட் விலையை குறைக்கலாமே …..VCD இல்லை என்றாலும் எல்லாரும் திரையரங்கு வர மாட்டார்கள் டிக்கெட் விலை கடுமையாக உள்ளதே ….என் ப்ளாக்கில் டிக்கெட் விற்க வேண்டும் ..பாமரன் படம் பார்க்க வேண்டாமா என்ன??மேட்டுக்குடி மக்கள் மட்டும் பெரிய திரையரங்கில் நூறு மேல் காசு செலவழித்து பார்க்கலாம் ……..என்ன கொடுமை …முதலில் ப்ளாக் டிக்கெட் கருப்பு பணம் டிக்கெட் விலை உயர்வு இதை எல்லாம் களையுங்கள் VCD தானாகவே குறையும்

  6. ///ஆனால் பொது மக்கள் மலிவான விலையில் திருட்டு வி.சி.டி வாங்கி பார்ப்பது அவர்களின் moralஅய் குறைக்கும். பணத்தை வாங்கி கொண்டு வாக்களிப்பது, சிறிய சட்ட விதிகளை கூட மீற முயலவது என்று அனைத்து விதங்களுலும் தார்மீக நேர்மை கெடும் சூழல். Slowly we have all become corrupt and cynical enough.
    ////

    மேலும், இது போன்ற நேர்மையில்லா சூழலில் யாராலும் எந்த மாற்றாத்தையும் கொண்டு வர முடியாது. எந்த சித்தாந்தங்களும் உருப்படியாக செயல்படுத்த முடியாது. அது கம்யூனிச / சோசியலிசமானாலும் சரி, சந்தை பொருளாதாரமானாலும் சரி. திருட்டுதனம் மற்றும் கள்ளதனம் தான் எங்கும்.

  7. //அதே விழாவில் பேசிய கமல் என்னும் காமன்மேனின் பேச்சு அபாயத்தின் உச்சமாகவும், விஷத் தன்மையுடனும் இருந்தது. //

    திருட்டு விசிடி  விற்பதை ஒழிக்கவேண்டும் என்ற சத்திய ஆவேசம் காமன்மேனுக்கு வரும்போது அவர் விசிடி  விற்கும் கரப்பான் பூச்சிகளை சுட்டுத்தள்ளுவார். ஜெய் ஹிந்த்!

  8. கூத்தாடிகளை ஒதுக்கித் தள்ளுங்கள். உண்மையாய் உழைப்போரை மதியுங்கள். நான் சின்ன பெரிய திரைகளை ஒதுக்கிப் பல நாட்கள் ஆகின்றன. இவர்களின் நீலிக் கண்ணீர் யாருக்கு வேண்டும்? நம் உழைப்பையே சுரண்டிவிட்டு, நமக்காக ஒரு வார்த்தை பேசாத ஓநாய்க் கூட்டங்கள். இதில் இந்த மானம் கெட்ட அரசு வேறு அவர்களை ஏதேனும் எறும்பு கடித்தால் கூட அத்தனை அரசு இயந்திரங்களையும் களத்தில் இறக்குகிறது. மீண்டும் மீண்டும் மக்கள் பணம் கூத்தாடிகளுக்கு இறைக்கப்படுகிறது. இவர்களுக்கு வரி விலக்காம், விருது வழங்குவார்களாம், என்ன கொடுமையான நிகழ்ச்சிகள்? ஊரான் பணம்தானே, அள்ளி இறைத்தால் வீடா முழுகிவிடும் என்ற எண்ணம். மக்கள் எண்ணற்ற பிரச்சினைகளை நாள்தோறும் சந்திக்கிறார்கள். விவசாயம் செத்துக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆட்சியாளர்களுக்கு நேரம் ஏது? குஷ்பூவா,ஷ்ரேயாவா, ஷகீலாவா இவர்களுக்கு மட்டும் தனி தரிசனம், நேரம் கிடைக்கும். ஓட்டுப்போடுகிறோமே? அனுபவிக்க வேண்டியதுதான்.

  9. இந்த திருட்டு டிவிடி ஒன்றும் சினிமாக்காரர்கள் ஆதரவு இன்றி வெளிப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.(ரஜினி சொன்னதுதான்). எய்தவனாகிய வில்லை ஒடிக்க முடியாத சினிமா கோழைகள் அம்பை முறிக்கிறார்கள். நமக்கு சம்பந்தமில்லாத இவர்கள் எப்படியோ தொலையட்டும்.

    ///அதில் ஒன்றும் அதிர்ச்சி இல்லை. ஆனால் சினிமாத் தொழில் நசுக்கப்படுகிறது என்றும் அதைக் காப்பாற்ற ஒரு கூலிப்படையை உருவாக்க வேண்டும் என்றும் ஆவேசமாக பேசும் சேரன், அதே சினிமாத் துறையில் பல விதங்களில் நசுக்கப்படும் உதிரித் தொழிலாளர்கள் குறித்து இதுவரை என்ன பேசியிருக்கிறார்? லைட்மேன் தொடங்கி, மேக்&அப் மேன் வரை தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி, சுயமரியாதையையும் பறிக்கும் திமிர்த்தனத்தை என்ன விதத்தில் எதிர்த்திருக்கிறார்?/// — இவர்களிலிருந்து பிற்காலத்தில் எத்தனை சேரன்களோ, எத்தனை ரஜினிகளோ, எத்தனை கமல்களோ, எத்தனை சரத்களோ, எத்தனை ராதிகாகளோ….. அவர்களும் ஒருகாலத்தில் கடைநிலை தொழிலாளிகளாய் இருந்தோர்தானே? மொத்தத்தில் மக்களை சுரண்டி ஏய்த்து பொய்சொல்லி படங்காட்டி பிழைப்பு நடத்தும் அனைவரும், அவர்தம் முன்னேற்றத்துக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாய் இருந்து ‘குடை பிடிப்போரும்’ சமுதாயத்தின் புல்லுருவிகளே. இவர்களில் ஒரு பிரிவினரை மட்டும் ‘தொழிலாளிகள்’ என்ற பெயரில் தனியே இனம்பிரித்து ஒரு வர்க்கத்தை ஆதரிப்பது கேலிக்கூத்து. கொள்ளிக்கட்டையில் நல்லது தீயதா?

    விபச்சாரத்தில் பணம் கொடுப்பவன் முதலாளி என்றால் தன் உடலை விற்பவள் ‘தொழிலாளி வர்க்கம்’ என்று அவளுக்காக போராடுவீர்களோ? ஒரு சில விஷயங்கள் அடிப்படையிலேயே தவறாய்-தீயதாய் ஆரம்பிக்கும்போது அவற்றில் நல்லது தீயதை இடையில் பாகுபடுத்துவது அடிப்படையற்றது.

    எனவே, ஒட்டு மொத்தமாய் மக்களை சுரண்டும் சுயநலமிகள் எல்லாரையும் எதிர்ப்போம்.

  10. அருமையான பகிர்வு. சவுக்கடி . திருந்துவார்கள் என நினைத்து ஏமாந்து விடவேண்டாம் . திருந்தமாட்டார்கள் . இருப்பினும் எதிர்போம். விடியும் ஒரு நாள் நம்பிக்கையுடன் தொடர்ந்து எழுதவும். 

  11. உங்களாள் மட்டும் எப்படி இப்படி எழுதமுடிகிறது….
    தொடர்ந்து எழுதுங்கள்

    அடுத்த பதிவு
    நம்ம திருநெல்வேலியில் இரண்டு மந்திரிகளின் மனிதாபிமான செயல் பற்றியா?

  12. //திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில்தான் மும்பையில் குண்டு வைக்கிறார்கள் என்றால் கமல் யாரை சொல்கிறார்? இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மிக நேரடியாக முஸ்லீம்களை குறிவைத்தே இந்தக் குற்றச்சாட்டை அவர் சொல்கிறார்// என்ன சொல்ல வருகிறீர்கள்? மும்பையில் குண்டு வைப்பது முஸ்லிம்கள் மட்டுமே என்கிறீர்களா? இன்னுமொரு விஷயம். அவர்கள் கதை திருடி படம் எடுப்பதால் நாமும் அவர்கள் உழைப்பை திருடி படம் பார்க்கலாம், அதில் தவறொன்றும் இல்லை என்கிறீர்களா?
    இந்த கட்டுரை ஒரு சுத்த பேத்தல்!

  13. நல்ல பதிவு,தனது சீரியல் மூலம் மக்களை அழ வைத்துக்கொண்டிருக்கும்
    ராதிகா இந்த காரணத்தால் அழுதது பரிதாபகரமானது .
    யாருக்குமே தன்னுடைய உழைப்பு திருடபட்டால் வருத்தம் வரவே செய்யும்.
    இது இங்குமட்டுமல்ல .உலகம் பூராவும் உள்ள பிரச்சனைதான்.

    ஆங்கில படம் X man origins 2009 மே மாதம் ரிலீஸ் என்றால் ஒரு
    மாதம் முன்னதாகவே ஏப்ரலில் இணையத்தில் வெளியாகி விட்டது.
    அறிவியல் வளர்ச்சியை தடுக்க முடியாது.

    ஆனால் முதலில் DVD வெளிவந்து வெற்றிபெற்று பிறகு தியேட்டரில்
    வெளியாகி சக்கைபோடு போட்டுக கண்டிருக்கிற படம் Paranormal Activity (2009)
    //முழுக்க முழுக்க.. ஒரேயொரு வீடியோ கேமரா. இரண்டே கேரக்டர்கள்! இன்னும் இரண்டு கேரக்டர்கள்.. வெறும் இரண்டு சீன் களுக்கு மட்டும் வந்து போக…, படம்… ரணகளம்.தற்போதைய.. “டாக் ஆஃப் அமெரிக்கா”, இந்தப் படம்தான். வெறும் $15,000 -ல் ஒரு ஹாலிவுட் திரைப்படம் சாத்தியம் என்பதை இயக்குனர் Oren Peli நிரூபித்துள்ளார்
    படம் Saw VI-ஐ கீழே தள்ளிவிட்டு $60 மில்லியன் டாலரை ($15,000 பட்ஜெட்) லபக்கியுள்ளது. நன்றி .-ஹாலிவுட் பாலா //

    முன்பு ஒருமுறை திரை பட துறைக்கு உதவி செய்ய கருணாநிதி கேளிக்கை வரியை குறைத்தார்.ஆனால் தயாரிப்பாளர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் சம பலன் கொடுக்காமல் லட்சங்களில் இருந்த
    நடிகர்களின் சம்பளத்தை கோடிகளககினர்
    வீடியோவில் பார்க்க விரும்புபவன் வீடியோவில்தான் பார்ப்பான் .
    காரணம் டிக்கெட் விலை மிக அதிகம் .ஒரு குடும்பம் சினிமா சென்றுவர
    ரூ.500-1000 ஆகிறது .இன்றஈக்கு உள்ள விலைவாசியில் பேரும்பாலனோர்
    இவ்வளவு செலவு செய்வது கடினம்.
    சரக்கு இருந்தால் எந்த படமும் கண்டிப்பாக ஓடும்.இல்லாவிட்டால் ரஜினி படமாக இருந்தாலும் படுத்துவிடும் .

    ஆரம்பத்தில் சாபமாக இருந்த டிவி இப்போது வரமானதை போல இதையும் மாற்றலாம்.
    CD Rs.20/- ,DVD Rs.50/- Blue Ray Rs.200/- என்று ரிலீஸ் செய்துவிட்டால் பிரச்சனை தீர்ந்தது.
    இன்னும் நிறைய சொல்லலாம்.

  14. //ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது//

    ஒன்னும் முழுகிப் போகாது. சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இழுத்து மூடி விட்டால், அதை நம்பி இருக்கும் ம.க.இ.க வின் பாசமிகு தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை போய்விடும். அப்புறம் எல்லாருக்கும் மருதையன் சோறு போடுவார். அப்புறம். மகஇக வின் உண்டியலுக்கு துட்டு போடுவது யார்?

    • ஆதிரை நீங்கள் சொல்வதை பார்த்தால் என்னமோ மகஇக தோழர்கள் சினிமாவ நம்பி இருப்பது போலிருக்கிறதே. சென்னையை தாண்டி வெளியே வந்து பாருங்கள் அங்கு சினிமாக்காரர்கள் இல்லை மகஇக தோழர்கள் இருக்கிறார்கள்தயவு செய்து கருத்து சொல்கிறேன் என்று உளராதீர்கள் கட்டுரையை ஒட்டி விவாதம் செய்யுங்கள், 
      தோழர் மருதையன் பெயரை இங்கு இழுத்தற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இதே பாணியில் நீங்கள் தொடர்ந்தால் நாமும் அப்படியே தொடர விரும்புகிறோம்,
      நன்றி

  15. சரி “தனிநபர்” என்று நீங்கள் முத்திரை குத்துவது போல் நாம் இருந்தால் தான் என்ன, நாங்கள் விமர்சகராகவே இருந்துவிட்டு போகின்றோம்.
    இது தான் ராயகரனின் உண்மையான முகம்.ரயாகரன் சிறந்த புலி எதிர்ப்பு வாதி .அது மட்டுமே .அதிகாரம் இருந்தால் பிரபாகரனை விட மோசமாக இருப்பார் என்பது தெரிகிறது.
    அதெல்லாம் சரி “வர்க்க கட்சி,வர்க்க கட்சி என்று புலம்புகிறாரே ,இவர்
    சரி “தனிநபர்” என்று நீங்கள் முத்திரை குத்துவது போல் நாம் இருந்தால் தான் என்ன, நாங்கள் விமர்சகராகவே இருந்துவிட்டு போகின்றோம்.
    அங்கம் வகிக்கும் வர்க்க கட்சியின் பெயர் என்ன ?
    கட்சி தான் எல்லாவற்றையும் விட பெரியது என்றார் லெனின் .தாங்கள் எந் எந்த கட்சியிலும் சேர மாட்டோம் என்கிறவர்கள் தான் போலி அறிவு ஜீவிகள். பிரான்சில் இவர் என்ன வர்க்க புரட்சி செய்கிறார் என அறிய விரும்புகிறோம்.

  16. “திருடனைக் கொட்டிய தேள்” – ங்கிறதே எனக்கு ஒப்புதல் இல்லாத தலைப்பு. தேள் திருடனைக் கொட்டினாலும் குழந்தையைக் கொட்டினாலும் அத அடிச்சுக் கொல்லணும்ங்கிறதுதான் உண்மை. வெளிநாட்டுப் படக் கதைகளைத் திருடிப் படம் எடுப்பவர்கள் தானே இவர்களுக்கு என்ன காப்பிரைட் உரிமை வேண்டிக் கிடக்கிறது என்ற நக்கல் புரிகிறது. ஆனால் இதன் உட் பொருள் “வினை விதைத்தவன் விதை அறுப்பான்” “முற்பகல் செய்யின் பிறபகல் விளையும்” “நல்லவன் வாழ்வான்; தீயவன் தண்டிக்கப் படுவான்” என்று உண்மையில்லாத பழமொழிகளில் சொல்லப் பட்டிருப்பதுதான். திருடன் சாலை விபத்தில் அடிபட்டால் “இவனுக்கு நல்லா வேணும்” என்று சொல்லும் முதிர்ச்சியற்ற மனநிலைதான். தவறு செய்தவனுக்கு ஆண்டவன் எப்படியும் தண்டனை கொடுப்பார் என்று சொல்லும் மூட நம்பிக்கைதான்.

    வெளி நாட்டுக் கதையைக் காப்பி அடிப்பது தவறுதான். ஆனால் அது தனி விஷயம்.

    சட்டத்துக்குப் புறம்பாக சி. டி. செய்து விற்பது எல்லா வகைகளிலும் பலருக்கு நட்டம் ஈட்டுவதை முதலில் எழுதுங்கள். திரைத்தொழிலில் இருப்பவர்களுக்கு வரும் நட்டத்தையும் தாண்டி, இப்படிப் படம் பார்க்கும் கலாசாரத்தை மக்களிடம் வளர்க்கும் அசிங்கத்தை நிறுத்த முயலுங்கள். வேலைக்கும், படிப்பும் லஞ்சம் கேட்கும் அரசியல்வாதிளுக்கும் அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்துக் கொடுத்து இப்போது பணம் கொடுத்து சாதிப்பது சரியென்று நினைக்கும் சமுதாயம் உருவாகியிருப்பதை மறக்காதீர்கள். திருட்டுப் பொருளை வாங்குபவன் இருப்பதால்தான் விற்பவனும் இருக்கிறான். திருட்டுத் தனமாக படம் பார்ப்பது தவறு என்று அடித்து சொல்லுங்கள். அவன் கதையே திருட்டுத் தனம் என்று அடிக்கோடிட்டு, அவன்கிட்ட பிக் பாக்கெட் அடிச்சா தப்பே இல்ல என்று நியாயப் படுத்தாதீர்கள். எல்லாமே திருட்டுதான். அதைக் கண்டிக்கையில் குரலில் கலப்படம் வரக் கூடாது.

    • வித்தகன், எல்லாமே திருட்டு என்கிற வாதத்தில், அதியமான் அவர்களின் ஐந்து கொடுத்தாலும் லஞ்சம். 500 கோடி கொடுத்தாலும் லஞ்சம் தான் என்கிற வாதம் நிற்கிறது. இதில் வர்க்க வேறுபாடும் வேறு இன்னபிற விசயங்களும் இருக்கின்றன.

      • ஒப்புக் கொள்கிறேன் நொந்தகுமாரன். ஆனால் ஒரு திருட்டால் இன்னொன்றை நியாயப் படுத்தக் கூடாது என்பதும் சரியான வாதமே,. ஐந்து கொடுத்தாலும் 500 கொடுத்தாலும் ஒரே அளவு தண்டனை இருந்தால் தவறு. ஆனால் இரண்டுக்குமே தண்டனை தர வேண்டும். திருடனிடம் இருந்து திருடினால் அது சரியாகி விடாது. ராபின் ஹூட் கதைகள் எனக்குப் பிடிக்காது.

  17. இரங்குவோன், வித்தகன்! ‘மும்பை குண்டு வெடிப்பு’ என்றவுடன் உங்களுக்கு காஞ்சி சங்கராச்சாரி நினைவுக்கு வற்றாரு; எனக்கு மும்பை குண்டு வெடிப்பு வழக்குகளுக்காக கைதாகியிருக்குற நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் நியாபகத்துக்கு வற்றாங்க; ஒருவேள கலைஞானிக்கு ஜார்ஜு புஷ் ஞாபகத்துக்கு வந்தாரோ என்னவோ?

    • எனக்கு தாவுத் இப்ராஹிமும் அவனது கடத்தல் தொழிலும்தான் நினைவுக்கு வருது. தீவிரவாதத்தையும் மதத்தையும் இணைக்கும் ஆர். எஸ். எஸ் எண்ணம் உங்களுக்கு இருப்பதில் எனக்கு மனவருத்தமே.

  18. திருட்டு விசிடி இன்னின்ன படத்துக்குத்தான் வருகிறது, இன்னின்னதுக்கு வரவில்லை என்று எதுவுமில்லை. எல்லாப் படத்துக்கும் வருகிறது. சிவாஜி படம் இணையத்தில் கிடைத்ததாக அலைபேசியில் சேமித்து வைத்திருந்தவர்களை எனக்குத் தெரியும்.

    ஓடுகிற படங்கள், இதையெல்லாம் மீறித்தான் ஓடுகின்றன.

    தியேட்டரில் பார்த்தால்தான் நன்றாக இருக்கும் என்கிற மாதிரி தொழிற் நுட்பம்தான் திருட்டு விசிடியை ஒழிக்க முடியும்.
    http://kgjawarlal.wordpress.com

  19. வித்தகன்,
    “திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்” என்கிறார் கமல். இங்கு யாரை மக்களுக்கு புரிய வைக்கவேண்டும் என்கிறார்?குண்டுவெடித்தவுடன் கைதாவது அப்பாவி முஸ்லீம்கள்தானே?

    • திருட்டுப் பணத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்புண்டு என்று மக்களுக்குப் புரிய வீண்டும் என்கிறார் கமல். மருதன், இதில் மதத்தை கலந்து நம்மை நாமே அசிங்கப் படுத்திக் கொள்ள வேண்டாம். அப்பாவிகளில் இந்துக்கள் என்ன முஸ்லிம்கள் என்ன… அதே போல் திவிரவாதிகளிலும் மதம் என்ன வேண்டியிருக்கிறது. தீவிரவாதி என்ற சொல்லை முஸ்லிம்களோடு இணைப்பது கட்டுரையாளர்தான். கமல் அல்ல. ஒரு பொய் திரும்பத் திரும்ப சொல்லப் படுவதால் உண்மையாகிவிடாது.

      • “தீவிரவாதி என்ற சொல்லை முஸ்லிம்களோடு இணைப்பது கட்டுரையாளர்தான். கமல் அல்ல. ஒரு பொய் திரும்பத் திரும்ப சொல்லப் படுவதால் உண்மையாகிவிடாது”.

         என்ன வித்தகன் இவ்வுலகில்தான் இருக்கிறீர்களா!ஆளும் வர்க்கங்களால்,  தீவிரவாதிகளென்றால் முஸ்லீம்கள் என்ற பிரம்மை உலகமயமாக்கப்பட்ட ஒன்று. இது உங்களுக்கும் கமலுக்கும் தெரியவில்லை என்பது நல்ல நகைச்சுவை. 

        • விடுதலை சொன்னது:

          //என்னையும் உங்களையும் போன்றவர்களுக்குத்தான் பயங்கரவாதி ஆரிய பார்ப்பன கூட்டம் என்று தெரியும் ஆனால் சாமான்ய மக்களுக்கு?//

          மருதன் சொன்னது:
          //ஆளும் வர்க்கங்களால், தீவிரவாதிகளென்றால் முஸ்லீம்கள் என்ற பிரம்மை உலகமயமாக்கப்பட்ட ஒன்று. இது உங்களுக்கும் கமலுக்கும் தெரியவில்லை என்பது நல்ல நகைச்சுவை. //

          இருவருடனும் ஒப்புக் கொள்கிறேன். இது எனக்குத் தெரியும். கமலுக்கும் தெரிந்திருக்கும் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் இதற்காக தீவிரவாதி என்ற சொல்லைப் பயன் படுத்துவதையே சந்தேகித்தால் எப்படி?

          இந்த இடத்தில் முஸ்லிம்களைத்தான் அவர் சொல்கிறார் என்பது கட்டுரையாளரின் புரிதலின் பிழை. இதை அடித்துக் சொல்வதால் கமலின் கருத்துக்கள் ஆர். எஸ். எஸ். சாயம் பூசப் படுகின்றன.

          கமல் சொல்லியிருக்கும் தகவலில் பல உண்மைகள் உள்ளன. தீவிரவாதிகள்தான் குண்டு வைத்தார்கள்,. கறுப்புப் பணப் புழக்கம்தான் அதற்கு உதவியிருக்கிறது. திருட்டு சிடி விற்பனைத் தொழிலும் கடத்தல் தொழில்தான். இதை எல்லாம் மறந்து விட்டு இங்கு மதச்சாயம் புசுவது அநியாயம்.

  20. ஆனால், நீங்கள் சொன்ன ஒரிஜினல் படம் பற்றி ஒரு அலசல் செய்தேன். அதற்கும் நீங்கள் சொன்ன கதைக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லையே.

    http://en.wikipedia.org/wiki/Wasabi_(film)