Wednesday, September 27, 2023
முகப்புமீனவர்களை சுனாமியாக அழிக்கவரும் மேலாண்மைச் சட்டம் !!
Array

மீனவர்களை சுனாமியாக அழிக்கவரும் மேலாண்மைச் சட்டம் !!

-

இங்கே கடல், நிலம், மலை….மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் !! –பாகம் – 2

vote-012“ஒவ்வொரு பேரழிவுமே ஒரு வரப்பிரசாதம்.” ஐம்பதாயிரம் மக்களைப் படுகொலை செய்து வன்னிப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்திய விவசாயிகளை தற்கொலை விளிம்புக்குத் தள்ளிய மோசடி விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன் ஈழத்தில் தனது தொழில் முதலீடுகளுக்காக சென்ற போது சொன்ன வரிகள்தான் இவை. ஆனால் ஸ்வாமிநாதனின் இந்த வரிகள் அவரது கடந்த கால அனுபவங்களில் இருந்து விளைந்தது. உலக முதலாளித்துவத்தின் கொடுங்கரங்கள் அழிவை ஆதாயமாக மாற்றவல்ல யுத்தியை கற்றுக் கொடுத்தது  சுனாமியில்தான்.

வன்னிப் படுகொலைகளுக்கு முன்னர் நாம் சந்தித்த மிகப் பெரிய மனிதப் பேரவலம் சுனாமிதானே. இந்தியா காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொண்ணூறுகளில்  மெல்ல தன்னார்வக் குழுக்கள் இந்தியாவுக்கு ஊடுறுவி வந்தன.ஆனாலும் துல்லியமாக மக்களை நேரடியாக அணுகக் கிடைத்த வாய்ப்புதான் சுனாமி. சுமார் ஏழாயிரம் கோடிகள், 600 தன்னார்வக்குழுக்கள் என்று தென் கிழக்கு கரையோர நாடுகளை குறிவைத்து இறங்கின  இந்த கொள்ளை நிறுவனங்கள்.

இந்த நிறுவனங்கள் செய்த முதல் வேலை மீனவ மக்களின் எதிர்ப்புணர்வை மழுங்கடித்ததுதான். கடல், நீர், நிலம், மலை என எல்லாமே தனியாருக்குத்தான் என்கிறார்கள் இல்லையா? இந்த நிலங்கள் சார்ந்து என்ன பேரழிவு நடந்தாலும் அங்கே தன்னார்வக்குழுக்கள் உடனே களமிறக்கப்படுவார்கள். காரணம் அந்த மக்களிடம் இருக்கும் அரசியல் ரீதியாக, சிவில் உரிமைகள் தொடர்பாக இருக்கும் கோபங்கள் அரசுக்கு எதிராக திருப்பி விடாமல் பார்த்துக் கொள்வதுதான் இவர்கள் வேலை.

எண்பதுகளில் நான் சிறுவனாக இருந்த போது கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு தென் தமிழக கடலோரங்களில் தீவிரமாக இருந்தது. கிறிஸ்தவ பாதிரிகள் இப்போராட்டங்களில் அக்கறை காட்டினார்கள். கடைசியில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஏராளமான மீனவ கிராம மக்களின் வாழ்க்கைக்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் இன்றி வந்தமர்ந்திருக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையம். அப்படியானால் எண்பதுகளில் நடந்த போராட்டம்? அதுதான் தன்னார்வக் குழுக்களின் வேலைத் திட்டம். எதிர்ப்பில்லா எதிர்ப்புகளை உருவாக்கி ஏகாதிபத்திய நிறுவனங்கள் செய்ய நினைப்பதை தடையின்றி கொண்டு வந்து விட்டு சென்று விடுவார்கள். ஆபத்து வந்து நிற்கிறதே என்று போராடிய தன்னார்வக் குழுக்களைத் தேடினால் அவர்களை இப்போது காண முடியவில்லை. நிதி (ஃபண்ட்) இல்லை அதனால் போராட்டமும் இல்லை என்று போய் விடுவார்கள்.

மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ள இந்திய தீபகற்பத்தைச் சுற்றி மூன்று பக்கமும் 8.118 கி.மீ நீளத்துக்கு கடல் உள்ளது. 3,300 கிராமங்களில் 3.5 மில்லியன் மக்கள் குஜராத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை பாரம்பரிய மீனவர்களாக வாழ்கிறார்கள்.ஆண்டொன்றுக்கு 30,000 கோடி ரூபாய் கடற்தொழிலில் இருந்து வருமானம் வருகிறது. பெருமளவு அந்நியச் செலவாணியை ஈட்டித்தருவதும் மீன்பிடித்தொழில்தான். பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்ட கேரள எல்லையான நீரோடி வரைக்கும் சுமார் 1026 கிலோ மீட்டர் நீளமுடையது நமது தமிழக கடற்கரை. இந்த கடற்கரையை தனியார்கள் சூறையாடத் தடையாக இருந்தது மீனவ குடியிருப்புகள். சுனாமி வருவதற்கு முன்பே மீனவ மக்களை எப்படியாவது கடலோரங்களை விட்டு அப்புறப்படுத்தி விட வேண்டும் என்ற முயற்ச்சி மத்திய மாநில அரசுகளிடம் இருந்தது.

சென்னையில் சாந்தோம், பட்டினப்பாக்கம், பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவ மக்களை அப்புறப்படுத்தி விட்டார்கள். இப்போது அதே கடற்கரையில் பட்டினப்பாக்கத்தைப் போய் பார்த்தால் ஏதோ சிங்கப்பூருக்கு வந்த மாதிரி இருக்கிறது. பிரமாண்டமான அதி நவீன ஷாப்பிங் மால்களும், பிரமாண்டக் கட்டிடங்களுமாக உயர்ந்து நிற்கிறது.  கேட்டால் செட்டிநாட்டரசரர் எம்.ஏ. எம் மிற்குச் சொந்தமானது என்கிறார்கள். அலைவாய்க்கரையில் இருந்து ஐநூறு மீட்டர்களுக்கு அப்பால் மீனவர்களை துரத்தி விடுகிற அரசு. செட்டிநாட்டரசருக்கு மட்டும் இந்த இடத்தை ஏன் கொடுத்தது? அல்லது அவரும் இந்த அலைவாய்கரையிலேயே பிறந்த மீனவர்தானோ….?

பட்டினப்பாக்கத்தில் கண்ணுக்குத் தெரிகிற செட்டிநாட்டரசரின் கோட்டை இந்தியக் கடலோரங்கள் முழுக்க கண்ணுக்குத் தெரியாத பன்னாட்டு கோட்டைகளாகத்தான் மாறிக் கொண்டிருக்கிறது. சுனாமிக்கு முன்னரே திட்டமிட்டு சுனாமியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கொண்டு வரப்பட்டதுதான், கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம். ஒருங்கிணைந்த கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து ஒட்டு மொத்த கடலோரத்தையும் தொழில் சார் மண்டலங்களாக மாற்றுகிறது இந்த திட்டம். ஒட்டு மொத்த மீனவ மக்களையும் அப்புறப்படுத்தத்தான் இந்த கடற்கரை மேலாண்மை திட்டம் என்றும் கதறுகிறார்கள் மீனவ மக்கள்.

மீனவர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று பாரம்பரிய மீனவர்கள்.இன்னொன்று தொழிலுக்காக மட்டுமே கடலோரங்களில் வாழ்வோர். பாரம்பரிய மீனவர்களுக்கு கடல் கடற்கரை இதைத் தவிர வேறு போக்கிடம் கிடையாது. கடலின் கரையோரத்தில் இருக்கும் தனது குடிசைக்கு முன்னால் வைத்திருக்கும் கட்டுமரத்தை எடுத்துக் கொண்டு போய் தொழில் செய்து விட்டு மீண்டும் கரைக்கு வந்து குடிசையில் ஒண்டிக் கொள்கிற மீனவர்கள்தான் இவர்கள். தங்களின் குடிசைக்கு முன்னால் பரந்து கிடக்கிற கடல் அந்த கிராம மீனவர்களின் பொதுச் சொத்தாக இருக்கிறது. எப்போதும் அவர்கள் கடலுக்கு தீங்கு செய்யவோ மாசு படுத்தவோ மாட்டார்கள்.

ஆனால் கடற்கரையை ஒழுங்கு படுத்துகிறோம் என்று சொல்லி எம்.எஸ் சுவாமிநாதானின் குழு மத்திய அரசுக்கு கண்டு பிடித்துக் கொடுத்திருக்கும் இந்த கடற்கரை மண்டல் மேலாண்மை அறிவிப்பாணை கடலை தனியாருக்கு தாரை வார்க்கிறது. வசிப்பிடம் சார்ந்து கடற்தொழில் செய்யும் மக்களை துறைமுகம் சார்ந்து மீன் பிடிக்க நிர்பந்தித்து அவர்களை துறைமுக நகரங்கள் நோக்கி துரத்தி விட்டு விட்டு பின்னர் அவர்களின் வசிப்பிடங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதுதான் இந்த மேலாண்மைத்திட்டம். 1991-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை  மீனவ மக்களின் குறைந்த பட்ச உரிமையையாவது பாதுகாத்தது. ஆனால் அதை பல முறை திருத்திய மத்திய அரசு கடைசியாக இந்த எம்.எஸ் சுவாமிநாதன் குழுவின் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

1991- ல் கொண்டு வரப்பட்ட கடலோர ஒழுங்காற்றுச் சட்டம் எதை எல்லாம் தவறு, கடற்கரையில் செய்யக் கூடாது என்று சொன்னதோ அதை எல்லாம் சட்ட பூர்வமாக செய்ய அனுமதிப்பதுதான் இந்த கடற்கரை மேலாண்மைத் திட்டம்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மீனவ மக்களிடம் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து  இந்த திட்டத்திற்கு மக்கள் கருத்தறியும் கூட்டங்களை நடத்த மத்திய அரசு முடிவு செய்து குமரி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் நடத்தினார்கள். அதிலும் மீனவ மக்கள் தங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் காட்டினார்கள். ஆனாலும் இந்த எதிர்ப்பையும் மீறி உலக வங்கியின் நிர்பந்தத்திற்க்குப் பணிந்து இந்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதில் தீவீரமாக இருக்கிறது. தமிழ் நாடு அரசும் இந்த திட்டத்துக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கடல், காலம் காலமாக வாழ்ந்த மீனவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு தனியார் முதலாளிகள் கையில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த கடற்கரை மேலாண்மைத் திட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? கடலில் மீன் வளம் குறைகிறது, கடல் மாசுபடுகிறது, என்பதெல்லாம் இந்த மேதாவிகள் கண்டு பிடித்த உண்மை. ஆனால் மீன் வளம் குறைவதற்கும், கடல் மாசுபடுவதற்கும் காரணமானவர்கள் யார் என்று ஆராய்ச்சி செய்து இந்த படித்த சிகப்புத்தோல் ஸ்வாமிநாதன் கண்டிபிடித்தார். கடைசியில் சொன்னார் இதற்கெல்லாம் காரணம் மீனவர்கள். அதாவது மீனவர்களுக்கு மீன் பிடிக்கத் தெரியவில்லை. அவர்கள் கடலோரங்களை மாசு படுத்துகிறார்கள். கடலில் மீன் வளம் குறைகிறதே என்ன செய்யலாம் என்று கேட்டால் மீன் பிடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள் மீன் வளம் பெருகும் என்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துச் சொல்கிறார்கள் இந்த கடல் விஞ்ஞானிகள்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மீனவன் மீன் பிடிக்கிறான். அப்போதெல்லாம் அழியாத மீனினம் ஏன் இப்போது அழிகிறது என்றால் பன்னாட்டு கப்பல்கள் கடலை கபளீகரம் செய்வதும் ரசாயனக் கழிவுகளைக் கொண்டு போய் கடலில் கொட்டுவதும்தான் மீன் வளம் குறையக் காரணம். இந்நிலையில் இந்த மேலாண்மைத் திட்டத்தையும் கொண்டு வந்தால் மொத்தமாக கடலும் மீனவனும் வாழ்விழந்து போவான். இந்த திட்டத்தை மத்திய அரசுக்கு வகுத்துக் கொடுத்திருக்கும் எம்.எஸ் சுவாமிநாதன் யார் என்ற கேள்வியும் எழுகிறது. கடலுக்கும் மீனவ மக்களுக்கும் இந்த வெள்ளைத் தோல் மனிதருக்கும் என்ன சம்பந்தம்? மீனவ மக்களின் வாழ்க்கையைத் தீர்ப்பிடுகிற உரிமையையும் அவர்களின் வசிப்பிடங்களை விட்டு துரத்துகிற உரிமையையும் யார் இவருக்குக் கொடுத்தது?

படிப்பறிவில்லாத மீனவ மக்களின் வாழ்க்கைச் சூழலை பயன் படுத்திக் கொண்டு இவர்கள், கடலோரங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களைக் கொண்டு வர திட்டமிடுகிறார்கள். இது மீனவ மக்களின் வாழ்வுரிமையை மட்டுமல்ல மாநில அரசுகளின் கடலுரிமையையும் இந்த திட்டம் பறித்து  மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்று விடும் ஆபத்தும் உண்டு உள்நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக புதிய அமைச்சகம் தேவை என்கிறார் சிதம்பரம். அதாவது மக்களிடம் நிலவும் வறுமையும், வேலையிழப்பும் பிராந்திய உணர்வாக வெடிப்பதைக் கூட அனுமதிக்காத சிதம்பரம் போன்றவர்கள் இருக்கும் மத்திய அரசு கடல் பற்றிய ஆராய்ச்சிக்கான பொறுப்பாக நியமிப்பது வனத்துறையை. இது எவ்வளவு பெரிய மோசடி?

காலம் தோறும் புதிய வடிவங்களை எடுக்கும் இச்சட்டம்  பேரழிவுகளை வாய்ப்பாகப் பயன்படுத்தி ,மேலும் மேலும் மீனவ மக்களின் மூச்சை இறுக்குகிறது. இந்த மேலாண்மை சட்டத்தை மேலும் கொடிய சட்டமாக மாற்றியமைத்திருக்கிறது மத்திய அரசு. அதாவது கச்சத்தீவில் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் பேரினவாத இலங்கை அரசுக்கு எதிராக மீனவர்கள் கிளர்ந்தால் அங்கும் இச்சட்டத்தைக் கொண்டு வருகிறது மத்திய அரசு. எல்லை தாண்டும் மீனவர்களுக்கு விசாரணையே இல்லாமல் ஆறாண்டுகாலம் சிறைத்தண்டனை, ஒன்பது லட்ச ரூபாய் வரை அபராதம். சுட்டுக் கொல்கிறவனிடம் இருந்து எங்களைக் காப்பாற்று என்று அரசிடம் கோரினால் அரசோ  ””நீ ஏன் எல்லை தாண்டுகிறாய், உன்னைத்தான் கடற்கரையில் இருந்து போகச் சொல்கிறோமே, நீ ஏன் இங்கு வந்து மீன் பிடிக்கிறாய்? “ என்கிறது மத்திய அரசு.

ஆனால் எல்லை தாண்டுவதோ, சிறையோ எதுவும் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்குக் கிடையாது. அவர்கள் கட்டற்று வேட்டையாடுகிறார்கள். அவர்கள் பிடித்தது போக மிச்சம் மீதி இருக்கிற குஞ்சு குருமாக்களைக் கூட இந்த உள்ளூர் மீனவர் பிடிக்க முடியாதபடி சட்டம் போட்டு மீனவனை அழிக்கிறது அரசு. ஐநூறு மீட்டருக்கு அப்பால் என்பது இந்த பண முதலைகளுக்கு கிடையாதா? காலம் காலமாக கடலோரங்களில் வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறும் சுவாமிநாதன் குழுவுக்கு இந்த கோடீஸ்வர ஆகரமிப்பாளர்களை கண்ணுக்குத் தெரியவில்லையா?கடற்கரையில் சில தன்னார்வக் குழுக்கள் மீனவர்களுக்கு மீன் பிடிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்கள். சுறா வேட்டையில் ஆவேசமாக ஈடுபடும் மீனவனுக்கு மீன்பிடிக்க தன்னார்வக் குழுக்கள் கற்றுக் கொடுப்பது மாதிரி வேடிக்கை வேறு ஏதாவது உண்டா?

ஆக நான் என்ன சொல்கிறேன் என்றால் மீனவ மக்கள் பற்றிய உண்மையான அக்கறை இந்த மேலாண்மைத் திட்டத்துக்கும் கிடையாது இதை கொண்டு வந்தவர்களுக்கும் கிடையாது. தன்னார்வக் குழுக்கள் என்று சொல்லப்படும் பன்னாட்டு நிறுவனங்களிடமும் முதலாளிகளிடமும் நிதி பெற்று இயங்கும் குழுக்கள் ஒவ்வொரு முறையும் மத்திய மாநில பன்னாட்டு நிறுவனங்கள் கொண்டு வர நினைக்கிற சட்டத்திற்கு எதிராகப் பேசுவார்கள். மக்கள் விழிப்படைவதற்கு முன்னரே என்.ஜி.ஓக்கள் மக்களுக்காக போராடுவது மாதிரி போராடுவார்கள். ஆனால் எவ்வித இடைஞ்சலும் இன்றி மக்கள் வாழ்வை அழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் வந்தமர்ந்து விடும். இவர்கள் அவர்களிடமே நிதி வாங்கி போராடி விட்டு அவர்களையும் அழகாக கொண்டு வந்து இறக்கி விட்டுச் சென்று விடுவார்கள். எவ்வித எதிர்ப்புகளும் இன்றி பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரிக்க அவர்கள் வருவதற்கு முன்னர் முதன் முதலாக வந்து மக்களை அரசியல் நீக்கம் செய்து தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்க மக்களை தயார் படுத்துவதுதான் இந்த தன்னார்வக்குழுக்களின் நோக்கம்…

தொடரும்…..

அடுத்த பாகத்தில் “கிறிஸ்தவமும் மீனவ மக்களும்”

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. சரியான நேரத்தில் துரோகிகளை இனம் காணாத ஈழதைபோலலாமல் மீனவ மக்கள்  இப்போதாவது இனம் கண்டு கொண்டு புறக்கணிக்க வேண்டும் .

  2. இயற்கையின் மடியில் வாழ்வாதாரத்திற்க்காக எதிர்நீச்சல் போடும் மீனவ மக்களை அடியோடு அழிக்க நினைத்திடும் இந்தச் சட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டும்.

  3. ////சுமார் ஏழாயிரம் கோடிகள், 600 தன்னார்வக்குழுக்கள் என்று தென் கிழக்கு கரையோர நாடுகளை குறிவைத்து இறங்கின இந்த கொள்ளை நிறுவனங்கள்.//// கொள்ளை நிறுவனங்களா ? பல லச்சம் மக்களுக்கு பெரும் உதவிகளை செய்துவரும் என்.ஜி.ஒ அமைப்புகள் அனைத்தும் சதிகார்களா ? அல்லது இந்த நிறுவனங்களே செயல்படாவிட்டால், மக்கள் கோபம் கொண்டு, பெரும் போராட்டமாக வெடித்திருக்குமா ? புரட்சி உருவாகியிருக்குமா ? நல்ல கதை.

    யாராவது உருப்படியாக உதவி செய்ய முனைந்தால் அவர்களை இப்படி முத்திரை குத்தி ஏசுவீர்கள். நீங்களும் அப்படி உதவி செய்ய முடிவதில்லை. No wonder, people don’t care for your idealogy. மற்றபடி, இந்த மேலாண்மை சட்டம் பற்றி விவாதிக்க பட வேண்டும் தான்.

    • //யாராவது உருப்படியாக உதவி செய்ய முனைந்தால் அவர்களை இப்படி முத்திரை குத்தி ஏசுவீர்கள். நீங்களும் அப்படி உதவி செய்ய முடிவதில்லை. No wonder, people don’t care for your idealogy. மற்றபடி, இந்த மேலாண்மை சட்டம் பற்றி விவாதிக்க பட வேண்டும் தான்.///

      கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களின் மீது விவாதம் நடத்தும் எண்ணமில்லை. இவை தகவல்களுக்காக கொடுக்கப்படுகிறது.

      தமிழினி இதழில் NGOக்களைப் பற்றிய ஒரு தொடர் வருகிறது. நிறைய விவரங்களுடன் அதிர்ச்சியளிக்கும் தகவல்களுடன் உள்ளது. படித்துப் பார்க்கலாம்.

      கார்ப்போரேட் நிறுவனங்கள் NGOக்களை மட்டுமல்ல, NGOக்களை ஒத்த ஐநாவின் சுகாதாரத்துறை (WHO) வை தன்னுடைய வியாபாரத்திற்கு பயன்படுத்தியுள்ளதை சமீபத்திய பன்றிக்காய்ச்சல் நடவடிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன. அது குறித்த செய்தி

      Publication: The Times Of India – Chennai; Date: Jan 13, 2010; Section: Front Page; Page: 1

      http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrint_TOINEW&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2010/01/13&ID=Ar00100
      Pharma companies fund WHO flu docs

      Rema Nagarajan | TIMES INSIGHT GROUP

      Even as questions are being raised about whether the swine flu scare was exaggerated to benefit pharmaceutical companies, evidence has surfaced showing that several members of the World Health Organization’s (WHO) vaccine board, which pushed countries to buy the H1N1 vaccine, have had significant financial ties with various pharmaceutical companies.

      This fact, which is bound to raise significant issues of conflict of interest, was exposed by the Danish daily newspaper ‘Information’ last month. TOI attempted to get WHO’s response to the expose, but several emails sent to the office of the Director General of WHO on January 9 met with no response.

      Documents acquired through the Danish Freedom of Information Act revealed that Prof Juhani Eskola, a Finnish member of the WHO board on vaccines, ‘Strategic Advisory Group of Experts’ (SAGE), received almost 6.3 million euros in 2009 for his vaccine research programme, THL, from vaccine manufacturer GSK, qualifying GSK as THL’s main source of income. SAGE advices WHO chief Margaret Chan and recommends which vaccines and how much of it member countries should purchase for the pandemic, pointed out the Danish newspaper.

      However, Professor Eskola is not alone. The Danish journalists reported on six other members of SAGE with financial ties to various pharmaceutical companies. These include Dr Peter Figueroa, Dr Neil Ferguson, Prof Malik Peiris, Dr Arnold Monto, Dr Friedrich Hayden and Dr Albert Osterhaus. Barring Dr Figuero, who revealed that he had accepted a research grant from Merck, none of the others made any disclosures.

      Many of the pharmaceutical companies with which the vaccine board members had ties are also manufacturers of vaccines, including the H1N1 vaccine, like Glaxo-SmithKline (GSK), Novartis, Solvay, Baxter, MedImmune and Sanofi Aventis. None of the WHO members on the vaccine board, barring one, declared any conflict of interest despite having extensive financial ties with the pharmaceutical companies in the form of research grants and consultancies. In a statement issued on December 3, 2009, WHO claims that numerous safeguards are in place to manage possible conflicts of interest or their perception.

      FALSE ALARM?

      Strategic Advisory Group of Experts (SAGE) advices WHO director Margaret Chan which vaccines and what quantities member countries should purchase

      SAGE member Juhani Eskola received almost 6.3m euros in 2009 for his vaccine research programme from GSK

      6 other members of SAGE had financial ties to various pharma companies. Only 1 revealed that he had accepted a research grant from Merck

      Dr Wolfgang Wodarg, head of health at Council of Europe, has alleged that swine flu was a ‘false pandemic’ driven by drug companies Was H1NI outbreak a false alarm?

      Many of the pharmaceutical companies with which the vaccine board members had ties are also manufacturers of vaccines, including the H1N1 vaccine. Members of SAGE are required to declare all professional and financial interests, including funding received from pharmaceutical companies or consultancies or other forms of professional engagement with pharmaceutical companies.

      The names and affiliations of members of SAGE and of SAGE working groups are published on the WHO web site, together with meeting reports and declarations of interest submitted by the experts.

      Allegations of undeclared conflicts of interest are taken very seriously by WHO, and are immediately investigated,” says the statement. However, there is no such disclosure by these SAGE members on the WHO website.

      The accusation of Dr Wolfgang Wodarg, head of health at the Council of Europe, that the swine flu outbreak was a ‘false pandemic’ driven by drug companies that made billions of dollars from creating a worldwide scare has added fuel to this controversy.

      Dr Wodarg is quoted as saying: “They have made them squander tight healthcare resources for inefficient vaccine strategies and needlessly exposed millions of healthy people to the risk of unknown side-effects of insufficiently tested vaccines.”

      Despite the huge pandemic scare created by the WHO officials, less than 1% people infected with swine flu died as the disease swept through the world. Several European governments have admitted to being stuck with a huge surplus of H1N1 vaccines worth millions.

      The UK government has stated that it faced wasting millions of pounds if it was unable to get out of the huge orders for vaccines placed with the pharmaceutical giant GSK. The UK is already reportedly considering selling or giving away millions of doses. Several other countries, including France, have already announced plans to sell off their surplus vaccines.

      Interestingly, in the UK, it had earlier been reported that Sir Roy Anderson, a scientist who advised the UK government on swine flu, also held a post on the board of GSK, for which he was being paid £1,16,000 annually.

      However, GSK claimed that he had declared his commercial interests and had not attended any meetings related to the purchase of drugs or vaccine for either the government or GSK.

      #######

      கீழே உள்ள செய்தி NGO பிராடுகளைப் பற்றியது
      TN ranks 3rd in number of blacklisted NGOs
      http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrint_TOINEW&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2010/01/17&ID=Ar00104
      Bosco Dominique | TNN

      Puducherry: The Central Social Welfare Board (CSWB) has blacklisted 3,620 nongovernmental organizations (NGOs) throughout the country for reasons ranging from non-refund of loans and nonsubmission of accounts to misappropriation of grants, duplication of funding, forgery and other fraudulent activities. Now, there are about 1,900 functional NGOs that receive grants from the board.
      Tamil Nadu has the dubious distinction of ranking third in the country with regard to the maximum number of blacklisted NGOs next only to Uttar Pradesh and Meghalaya. On its website, the CSWB revealed that Uttar Pradesh led the list with 366 blacklisted NGOs, followed by Meghalaya (323), Tamil Nadu (306), Andhra Pradesh (289), Punjab (221), Manipur (198), Karnataka (171), Bihar (155), Assam (151), Haryana (150), Puducherry (140), Kerala (135), Maharashtra (128), Orissa (120) and Gujarat (115). Jharkhand has the least number of blacklisted organisations (1), while Sikkim had just 2, Lakshadweep 3 and Chandigarh 5. Inspections revealed irregularities by NGOs
      Puducherry: The Central Social Welfare Board has blacklisted 306 NGOs in Tamil Nadu. The CWSB, which was established in 1953 to streamline welfare activities, has been extending financial grants worth several crores of rupees every year to thousands of NGOs to execute a series of programmes like establishing crèches, family counselling centres, shortstay homes for girls and women, hostel for working women and other programmes.
      The board extends Rs 42,200 per annum to run a crèche, Rs 1.92 lakh for a family counselling centre, Rs 6 lakh for a short-stay home, Rs 40,000 for a hostel for working women and Rs 10,000 per event for awareness programmes. However, inspections carried out by the CSWB to review the performance of the NGOs exposed several irregularities. “Periodic inspections exposed that just 1,900-odd NGOs — of the total 5,520 in the country that availed themselves of our grant — are functional, while the rest did not comply with the prescribed guidelines. The board swiftly blacklisted those NGOs and stopped further grants to them,” CSWB chairperson Prema Cariappa said.
      Puducherry social welfare board secretary P Malathi told TOI that the state board had blacklisted 65 NGOs, of the total 120 NGOs in Puducherry, while the central board had blacklisted another 75, which were directly under its purview. “The board also gives opportunities to blacklisted NGOs to refund the loans and submit their accounts so that they can be removed from the blacklist and become eligible for financial assistance,” Cariappa added.

  4.  அதியமான் அண்ணாச்சிக்கு என்.ஜீ.ஓக்களைப் பத்தியும் தெரியல, புரட்சியைப் பத்தியும் புரியல, சும்மா தமிழுல டைப் அடிக்க மட்டும் கத்து வச்சுருக்காக. ஏம்.வே சுனாமிக்கு கணக்கு காட்டி பல கோடிகளை சுருட்டுன தன்னார்வக்காரவுகளை தெரியணும்னா வீராப்பு காட்டாம, குளச்சலுக்கோ, நாகப்பட்டினத்துக்கோ ஒரு நடை போயீட்டு வாரும்… மீனவ மக்கள சந்திச்சு பாரும்…அவுகளே எல்லா உண்மையும் சொல்லுவாக…

  5. அருமையான பதிவு வெண்மணி ////இந்த மேலாண்மை சட்டம் பற்றி விவாதிக்க பட வேண்டும் தான்/////
    வழக்கம் போல நீங்களே விவாதத்தை துவங்கி வையுங்கள் அதியமான், உங்க கை ராசியான கை

  6. புஸ்ஸூ தம்பி என்ன கொஞ்சநாளா ஆளையே காணோம். நல்லியிருக்கீகளா? இப்பத்தான் அதியமான் அண்ணாச்சிய குளச்சலுக்கு பார்சல் கட்டலாம்னு சொன்னேன். அதுக்குள்ள அண்ணாச்சியை ரிப்பன் வெட்ட கூப்புடீதகளே, ஞாயமா? 

    • அண்ணாச்சி, சௌக்கியமா, அதியமான் விவாதிச்சாத்தானே நம்ம அசுரன் அண்ணாச்சி, முதல்தலைமுறை தம்பி எல்லாரும் இங்க வருவாக, அதான் சொன்னேன்.

  7. உடன் பிறப்பே..

    நேற்று நீ அடித்த டாஸ்மார்க்கு போதை தெளிந்திருக்காது என்று எனக்கு தெரியும்..இருந்தாலும் உன்னை நல்வழிபடுத்த வேண்டிய பொறுப்பு கழகத்திற்கு இருப்பதால் இக்கடிதம் எழுதுகிறேன்.. இக்கடிதம் எழுதாமலே நீ ஊரை அடித்து உலையில் போட்ட காசை கொண்டு..ஏழை எளியவர்தம் உணவு மற்றும் பயணகளைப்பு அயர்ச்சியை குவாட்டரும் கோழி பிரியாணியையும் கொடுத்து ஊரை வளைத்து நம் கனிமொழி மாநாடுக்கு நிறைத்துவிடுவாய் என எனக்கு தெரியும்..

    இருந்தாலும் கடமை என்று உள்ளதல்லவா? எதிர்கட்சி அறிவீலிகளும் தமிழ் உணர்வு பதர்களும் இன்று எம்மை பார்த்து எகத்தாளம் இடுவதை கண்டாயோ.கழக கொள்கை என்னவேன்று கேட்கிறார்கள்.. கழகம் ஒரு குடும்பம் என்றார் அண்ணா.. இன்று அதே தான் நாமும் சொல்கிறோம் குடும்பம்தான் கழகம்..
    டெல்லிக்கு அஞ்சா நெஞ்சன் அழகிரியாம்..
    தமிழ்நாட்டு இளித்தவாயவர்களுக்கு ஸ்டாலினாம்..
    ஈழ உறவுகளுக்கு கனி மொழியாம்..
    கலைத்துறைக்கு உதயநிதியாம்..
    மக்களை எந்நேரமும் மயக்கி சினிமா மோகத்தில் வைத்திருக்க தயாநிதியாம்..
    ஊரை கொள்ளை அடிக்க எனது அமைச்சர்களாம்..
    இத்தாலிகாரிக்கு புடவை துவைக்க நானாம்..
    மக்களை எருமை மாடுகளாக வைத்திருக்க நீயாம்..
    காவிரி கைவிட்டு போனால் என்ன?
    முல்லை பெரியாறு அணையை பெயர்த்தால் என்ன?
    பாலாறு பணால் ஆனால் என்ன?
    ஈழ தமிழன் செத்தால் என்ன?
    தமிழ் மீனவன் செத்தால் என்ன?
    எவன் செத்தால் நமக்கென்ன? நமக்கென்ன?
    தமிழ் தமிழ் என்பதே ஊரை அடித்து உலையில் போடும் நமது தாரக மந்திரம்..
    பார்பானை திட்டுவது நமது கொள்ளை அடிப்பதை பொறுக்காமல் இருப்பவர்கள் மீது எரியும் எறிகணைகள்..
    தேதிகளும் ..பழையநிகழ்வுகளும் நாம் தப்பிக்கும் வழிமுறை..
    நடிகைகளின் குத்தாட்டம் நம் கண்ணை குளிர்ச்சி செய்யும் அருமருந்து..
    கடிதமும் தந்தியும் ஊரை ஏமாற்றுவதற்கு கிடைத்த ஆயுதங்கள்(நம்து அமைச்சர் ராசாவுக்கு வருமானமும் கூட)..
    இந்தியாவை எப்படி பாகிஸ்தான் ஒற்றுமையாக வைத்திருக்கிறதோ..
    அதே போல் பார்ப்பான்,பாப்பாத்தி ஜெயலலிதா போன்றோர் மக்களை நம்மிடம் வைத்திருப்பர்..
    இன்னும் பல சொல்லிகொண்டே போகலாம் ..
    என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே!
    பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும.

    இது போகட்டும்..கழக ஆட்சியில் டாஸ்மார்க்கு உன் பகுதியில் திறந்திருக்கிறதா? நீ விரும்பிய உற்சாக பானம் தங்கு தடையின்றி கிடைத்ததா?கழக ஆட்சி அளித்த 2 ஏக்கர் நிலத்தில் காய்கறிகளை பயிர் செய்து ..நாய் கூட சாப்பிட மறுக்கும் 1 ரூபாய்க்கு கொடுத்த புழுத்த அரிசியை பொங்கி.. தின்று ..இலவச வண்ண தொல்லைகாட்சி பெட்டியில் மானாட அடுத்தவன் பொண்டாட்டி மார்பாட நிகழ்ச்சியில் லயித்திருக்கின்றாய் என்பது எனக்கு தெரியும்.. இருந்தாலும் உன் கடமை ஒன்று உண்டல்லவா?

    கோவை கிடுகிடுக்க .. உலகம் நடுநடுங்க..கனிமொழியாம் செம்மொழி மாநாட்டுக்கு ஊரை அழைத்துவா.. உன் வீட்டை அழைத்துவா.. உன் உறவை அழைத்துவா.. அடுத்த த்மிழுக்கான வாரிசை நான் அறிவிக்கும் வேளையில் நீ அங்கு இருக்க வேண்டாமா? ஓடிவா..ஆடிவா..பாடிவா..

  8. அதியமான்,

    நீங்கள் என்.ஜி.ஓக்களின் நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும் கொஞ்சம் நோண்டிப்பாருங்கள். அவர்கள் பெரும்பாலும் தேசங்கடந்த பன்னாட்டுத்
    தொழிற்கழகங்களால் நடத்தப்படுவதாகவோ, அல்லது அவர்களிடமிருந்து பெருமளவு நிதி உதவி பெருபவர்களாகவோ தான் இருப்பார்கள். ஃபோர்டு
    ராக்ஃபெல்லர் போன்ற கம்பெனிகள் கூட தமக்கென என்.ஜி.ஓக்களை வைத்திருக்கிறது. இன்னொருபுறம் என்.ஜி.ஓக்கள் நேரடியாக
    அமெரிக்க அரசிடம் இருந்தும் நிதி உதவி பெற்றுக் கொள்கிறது.

    நீங்கள் சில நாட்கள் முன்னே மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பாதுகாப்பானது என்பதற்கு ஆதாரமான ஒரு சுட்டியைக் கொடுத்தீர்களே
    நினைவிருக்கிறதா? அந்த அப்பாரா (APAARA) போன்ற ‘ஆராய்ச்சி’ நிறுவனங்களையும் கூட பன்னாட்டுத் தொழிற்கழகங்களே தமது
    நிதி உதவியுடன் நடத்துகிறது.

    இதெல்லாம் எதற்கு? ஏன் இத்தனை செலவு செய்து என்.ஜி.ஓ நடத்த வேண்டும் என்பதற்குத் தான் கட்டுரை பதில் அளிக்கிறது.

    • ///ஃபோர்டு
      ராக்ஃபெல்லர் போன்ற கம்பெனிகள் கூட தமக்கென என்.ஜி.ஓக்களை வைத்திருக்கிறது./// ஆம். மிக அருமையான தொண்டுகளை பல பத்தாண்டுகளாக செய்கின்றனர். சென்னையில், தரமணியில் ரோஜா முத்தையா நூலகம் மற்றும் archives அய்க்கு பெரும் நிதி உதவி செய்து பேணுகின்றனர். கூடாதா ?

  9. NGO அமைப்புகளுக்குள் நிகழும் ஊழல் பற்றி அறிவேன். பல vested interests களும் உள்ளன தான். ஆனால் இவை ஒரு பகுதிதான். ஒட்டுமொத்தமாக தன்னார்வ அமைப்புகள் அனைத்தையும் இப்படி சொல்ல முடியாது / கூடாது. மேலும் மனிதாபிமான நோக்கம் பலருக்கும் உள்ளன. கார்பரேட் அமைப்பிலும் தான். சரி, அப்ப சுனாமி நிவாரண பணிகளை செய்யாமல் இருந்திருந்தால் பரவாயில்லையா ?
    ஆர்.எஸ்.எஸ் கூட நல்ல பணி செய்தனர். பயனாளிகளின் கோணம் தான் முக்கியம். easy to critisise and argue here.

    • திரு அதியமான்,

      சில கேள்விகள் –

      இவர்கள் தான் நூலகம் நடத்தித் தொலைய வேண்டும், தொண்டு செய்ய வேண்டும் என்றால் என்ன எழவுக்கு அரசாங்கம்? அரசாங்கம் போலீசு
      ராணுவம் கட்ட பஞ்சாயத்து( நீதி ) மாத்திரம் என்றால் அது அரசாங்கமா சட்ட ரீதியான ரவுடியா?

      போகட்டும். என்.ஜி.ஓக்கள் செய்யும் தொண்டு என்பது ஸ்பானிஷ் காலனியவாதிகள் செவ்விந்தியர்களுக்குக் (மாயன்) கொடுத்த கம்பளியைப்
      போன்றது.

      //ஆர்.எஸ்.எஸ் கூட நல்ல பணி செய்தனர். பயனாளிகளின் கோணம் தான் முக்கியம்//

      தாலிபான் கூடத்தான் ஆப்கானில் நல்ல பல பணிகள் செய்தனர். அங்கும் பயனாளிகளின் கோணம் தான் முக்கியம் – சரி தானே?
      வீரப்பன் கூடத்தான் பல நல்லதுகள் செய்திருக்கிறான் – இங்கும் பயனாளிகளின் கோணம் தான் முக்கியம் – சரி தானே?

      நீங்கள் வேறு ஒரு இடத்தில் மிஷனரிகளின் நோக்கத்தை விமர்சித்து எழுதியது நினைவுக்கு வருகிறது – அங்கு மட்டும் ‘பயனாளிகளின் கோணம்’
      பின்னுக்குப் போய் மிஷனரிகளின் ‘நோக்கம்’ முன்னுக்கு வந்ததன் மர்மம் என்ன?

      • இல்லை. நான் மிஷனரிகளை முற்றாக நிராகரிக்கவில்லை. அவர்களின் தன்னலமற்ற சேவை பற்றி பல முறை எழுதியிருக்கிறேன். எம் தந்தை கல்வி கற்றதே ஒரு சி.எஸ்.அய் பள்ளி மூலம் தான் இல்லாவிட்டால் நான் இங்கு இப்படி எழுத வாய்ப்பு கிடைத்திருக்காது என்றும் எழுதியிருக்கிறேன். மிஷ்னரிகள் பற்றி ஆர்.எஸ்.எஸ் பார்வை வேறு. அதை அப்படியே ஏற்க்க முடியாது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகள் ஏற்க்க முடியாதவையாக இருப்பினிம், அவர்களில் இன்னும் இடீல்சிம் உடைய நேர்மையாளர்கள் பலர் உள்ளனர். சுனாமி நிவாரண சேவையில் அவர்களின் பங்கு உண்டு. அதை அவர்கள் எந்த உள்னோக்கம் இல்லாமல் தான் செய்தனர். பல இதர அமைப்புகளும் தான். பல லச்சம் தனிநபர்களும் தான். அதைதான் குறிப்பிட்டேன்.

  10. நண்பர் அதியமானுக்கு தன்னார்வக்குழுக்கள் பற்ரிய உங்கள் கருத்து பிழையானது. பொதுவாக இவர்கள் வழங்கும் சேவைகள் மக்களுக்கு பலவிதமாகவும் சென்று சேர்வதான தோற்றம் ஒன்று உருவாகிறது. அதுவே மிகவும் தவறான பார்வை. சுனாமியை ஒட்டி வந்த நிதிகள் பெருமளவு கையாடல் செய்யபப்ட்டு. மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படாமல் பெரும்பாலான சுனாமியால் பாதிக்கபப்ட்ட மக்கள் இன்றும் அப்படியே நிர்கதியாய் நிற்கிறார்கள். தவிறவும் மக்களுக்கான நிவாரணங்களையும்…. உதவிகளையும் செய்ய தன்னார்வக்குழுக்கள் போதுமானவை என்றால் அரசு எதற்கு? சும்மா வேடிக்கை பார்க்கவா? தன்னார்வக்குழுக்கள் ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக நீர்த்துப் போகச் செய்வதர்கான வளர்ந்த நாடுகளின் ஒரு கருவி……..

    • நண்பர் அருள் எழிலன், உங்கள் பதிலுக்கு நன்றி. தன்னார்வ லச்சக்கணக்கில் உள்ளன. அனைத்தையும் ஒரே அளவில் பார்பது பகுத்தறிவல்ல. உள்ளே ஊழல் மற்றும் வேறு குறைகள் இருப்பதால், மொத்த துறையே அப்படிதான் என்று கருத முடியாது. (கம்யூனிஸ்டுகளில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினர் அயோக்கியர்களாக இருப்பதால், அனைத்து கம்யூனிஸ்டுகளும் அயோக்கியர்கள் என்று கருதுவது எப்படி பிழையோ, அதே போல !!!). நான் பார்த்த தன்னார்வ குழுக்கள் அருமையான சேவை செய்கின்றனர். விஸ்ராந்த்தி, பேன்யன், உதவும் கரங்கள், திஸா போன்ற சில. சுணாமி நிவாரணத்தில் ஊழல் நடந்ததுதான். ஆனால் எத்தனை சதம் என்று சொல்ல முடியுமா ? 50 சதமா அல்லது குறைவா அல்லது அதிகமா ? ஆதரம் இல்லாமல் நாம் வாதாடுகிறோம். /////////உதவிகளையும் செய்ய தன்னார்வக்குழுக்கள் போதுமானவை என்றால் அரசு எதற்கு? சும்மா வேடிக்கை பார்க்கவா? …..////// அரசின் சேவைகளுக்கு இவை ஒரு complementary service. மேலும் அரசின் சேவைகளுக்கான நிர்வாக செலவு மற்றும் ஊழல் பற்றி அறிந்த கொடையாளர்கள் தன்னார்வ குழுக்கள் மூலம் செயல்படுகின்றனர். அரசு மட்டும் தான் சேவை செய்ய வேண்டுமா என்ன ? இந்திய ஊழல் மிகுந்த நாடு. ஏறக்குறைய அனைத்து துறைகளும் ஊழல் மயம் தான். இதை கருதில் கொண்டு பார்க்க வேண்டும்.

      ////////தன்னார்வக்குழுக்கள் ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக நீர்த்துப் போகச் செய்வதர்கான வளர்ந்த நாடுகளின் ஒரு கருவி…////// இது மிகவும் எளிமைபடுத்தப்பட்ட வாதம். நாங்கள் ஏற்பதில்லை. over simplified theory of communists whose point of view is often disputed. மனிதனேயம் கம்யுனிஸ்டுகளுக்கு மட்டும் சொந்தமல்ல. பல மாற்று கருத்தாளர்களிடமும் நிறைய உண்டு. The donars of US and EU are all not cold calculating machines who have no humnatarian motives. They are as human as you and me. It is not so simple. more later.

      By the way, உங்கள் புத்தகம் ‘பேரினவாதத்தில் ராஜா’ பற்றி பேச வேண்டும்.. முக்கியமாக தலைப்பை பற்றி. அடுத்த முறை சந்திக்கும் போது பேசுவோம்.

  11. எதை எழுதினாலும் ஒரு நாலு பேரை திட்டவேண்டும் என்று எழுதினால் இப்படித்தான் இருக்கும்.கடற்கரை மேலாண்மை சட்டம் குறித்து மட்டும் எழுதினால் போதும்.இதில் எதற்கு என்.ஜி.ஒக்களை இழுக்கிறீர்கள். எம்.எஸ்.சாமிநாதனை ‘ இந்திய விவசாயிகளை தற்கொலை விளிம்புக்குத் தள்ளிய மோசடி விஞ்ஞானி’ என்று எழுதுகிறீர்கள்.இது என்ன நியாயம்.இதே பிரச்சினை குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.தனி நபர் தாக்குதல்.என் ஜி ஒக்கள் கைக்கூலிகள் இவற்றை தவிர்த்து விட்டு எழுத முடியாதா இல்லை தெரியாதா?.விவாதம் இந்த தளத்தில் திசை திரும்பி கட்டுரைகளின் மையப் பொருளுக்கு தொடர்பற்றவை குறித்தவையாக மாறிவிடுகிறது. இதுதான் உங்கள் விருப்பமா.இப்போது கூட என்.ஜி.ஒக்கள் குறித்த விவாதம் இங்கு உள்ளது.இதனால் என்ன பயன. உங்கள் தளத்தை எத்தனை மீனவர்கள் படிப்பார்கள்.அவர்களுக்கு இக்கட்டுரை எந்த அளவு புரியும்.

  12. புழுக்கள் உங்கள் பசிக்கான இரையல்ல, அது தூண்டில் பாருங்கள் நீர்ப்பரப்பை தாண்டி அது சென்று ஒரு மனிதனின் கையில் இருக்கிறது, என்றால்; எனக்கு பசிக்கிறது எதிரே உணவாக புழுவும் இருக்கிறது. ஏன் தேவையில்லாமல் கரையில் காற்று வாங்கிக்கொண்டிருக்கும் மனிதரை இதில் இழுக்கிறீர்கள்?

    இப்படி இருக்கிறது இவர்கள் வாதம்.
    சுவாமிநாதனின் பசுமைப்புரட்சி எத்தகைய வெம்மையை திணித்திருக்கிறது என்பது தெரியாமல் அவரை விஞ்ஞனி என்பவர்களை என்னவென்றழைப்பது?

    தன்னார்வக்குழுக்கள் தொண்டுசெய்யவே பிறப்பெடுத்தவர்கள் என்றால் அதை ஏன் பெருமுதலாளிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு செய்யவேண்டும்? முதலாளிகள் என்ன ஏழைகளை முன்னேறவேண்டும் என்றா பணம் கொடுக்கிறார்கள்?

    செங்கொடி.

  13. அதியமான்,

    ஆர்.எஸ்.எஸ் செய்த பணிகளுக்குப் பின் உள்நோக்கமில்லையா?

    பேரிடர் காலங்களில் அவர்கள் செய்த/செய்யும் ஒவ்வொரு பணிகளுக்குப் பின்னும் நிச்சயமாக உள்நோக்கம் இருக்கிறது. இந்து மதவெறி
    எடுபடாத இடங்களில் சேவை செய்வது என்பதன் போர்வையில் தான் அவர்கள் அமைப்பு கட்டுகிறார்கள். உங்களுக்கு எத்தனை உதாராணம்
    வேண்டும்? குஜராத்தில் மதக் கலவரங்கள் நடத்தி ஆயிரக்கணக்கான முசுலீம்கள் கொன்றொழிக்கப்பட்டனர். அதற்குப் பல ஆண்டுகள்
    முன்பிருந்தே அவர்களின் பரிவார அமைப்பான வனவாசி கல்யாண் ஆஷ்ரம் மூலம் ஆதிவாசி மக்கள் இடையே ஓராசிரியர் பள்ளிக்கூடங்கள்
    நடத்துவது மருத்துவ முகாம் நடத்துவது என்று அணிதிரட்டி வந்துள்ளனர்.

    அவர்களின் ஓராசிரியர் பள்ளி / மருத்துவ முகாம் போன்றவற்றைப் பார்த்து அப்போது எவரும் சந்தேகப்பட்டிருக்கவில்லை. கலவரம் முடிந்து
    ஆயிரக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்ட பின் அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது யார் – களத்தில் இறங்கி முசுலீம்களை கொன்றொழித்தது
    யார் என்று பார்த்தால், அது அத்தனையும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் தனது சேவைகளின் மூலம்
    திரட்டிய கும்பல்.

    இப்படி பல உதாரணங்கள் காட்டலாம்.

  14. நண்பர் அதியமான் தன்னார்வக்க்ழுக்கள் பற்றிய உங்களின் மதிப்பீடுகள் முழுக்க முழுக்க பிழையாகத்தான் இருக்கின்றன. மக்கள் அரசியலை பாழ்படுத்த ஒரு வெப்பனாக பயனப்டுத்தப்படும் என்.ஜீ.ஓ குழுக்களின் அதிக ஊழல் செய்தவர்கள், குறைவான ஊழல் செய்தவர்கள் என்றெல்லாம் பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது. தூண்டிலில் வைத்த இரை மீனுக்கு உணவாகாது………என்.ஜீ.ஓக்களும் தூண்டில்களே…

  15. ///மக்கள் அரசியலை பாழ்படுத்த ஒரு வெப்பனாக பயனப்டுத்தப்படும் என்.ஜீ.ஓ குழுக்களின் /// இல்லை நண்பரே. உங்கள் மதிப்பீடுகள் தாம் முழுக்க முழுக்க பிழையானது என்று நான் கருதுகிறேன். இன்னும் சொல்லப் போனால், இந்தியா ஊழல் மயமாகி, இன்னும் வளரும் நாடாக இருப்பதற்க்கு, இடதுசாரி சிந்தனைகள் மற்றும் ம.க.இ.க போன்ற குழுக்கள் மற்றும் சித்தாந்தங்கள் தாம் அடிப்படை காரணம் என்றும் கருதுகிறோம். Of course you may disgree. ‘The road to hell is paved with good intentions’ என்னும் முதுமொழி.. இதை பற்றி விரிவாக எமது பிளாகில் எழுதியுள்ளேன்.

    விவாதம் திசை திருபுவதால், இந்த மேலாண்மை சட்டம் பற்றி தொடர்வோம்.

  16. அபரேஷன் கீரின்ஹண்ட் பற்றிய பதிவில் ஹிமன்சு குமார் என்பவரைப் பற்றி எழுதியுள்ளீர்கள்.அவரது காந்திய ஆசிரமும் ஆக்ஸ்போம் போன்ற என்.ஜி.ஒக்களின் ஆதரவைக் கொண்டு நடப்படுவதுதான்.ஆகவே அவரையும் மக்கள் அரசியலை பாழ்படுத்த பயனப்டுத்தப்படுவர் என்று கருதுவீர்களா. என்.ஜி.ஒக்கள்
    பிடி கத்தரிக்காய் கூடாது என்கின்றன.அதுவும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக போடப்படும் நாடகமா. நாகப்பட்டினம் பகுதியில் இறால் பண்ணைகளுக்கு எதிராக மக்களை திரட்டியதில், உச்சநீதிமனறத்தில் வழக்குத் தொடர்ந்ததில் என்.ஜி,.ஒக்கள் கணிசமாக பங்காற்றின. சுவர் எழுத்து புரட்சியாளர்களுக்கு இது தெரியும்தானே.
    அதுவும் ஏகாதிபத்திய சதியின் ஒரு பகுதியா. கீரின்பீஸ் போன்ற அமைப்புகளின் வெளியீடுகளில் உள்ள படங்களை, தகவல்களை எடுத்து பயன்படுத்துகிறீர்களே.கிரீன்பீஸும் என்.ஜி.ஒ அதுவும் உலக முதலாளித்துவத்தின் ஆதரவு பெற்றது என்று கருதுகிறீர்களா. மாவோயிஸ்ட் பகுதிகளில் என் ஜி ஒக்கள் செயல்படுவதில்லையா?. உங்களுக்கு என்.ஜி.ஒகளின் ஆய்வுகள், வெளியீடுகள்,தகவல்கள் வேண்டும், அதை எங்கிருந்து எடுத்தோம் என்பதைக் கூட வெளியிட மாட்டீர்கள்.என்.ஜி.ஒ க்கள் பிரச்சினைகளை குறித்து மக்களிடம் பேசி எழுதி ஒரு விழிப்புணர்வை உருவாக்குவார்கள். அதைப் பயன்படுத்துவீர்கள். என் ஜி ஒக்களை திட்டுவீர்கள். என்ன ‘புரட்சி’ இது.

    • மிஸ்டர்.. கட்டுரையை ஒழுக்காக வாசியுங்கள் முதலில். என்.ஜி.ஓக்கள் மக்களுக்காக போராடுவது போல நடித்து அதன் வீச்சை நீர்த்துப்
      போகச் செய்கிறது என்பது தான் கட்டுரையின் சாராம்சம்.

    • நாந்தாம்வே காந்தி வந்துருக்கேன். இந்தியாவோட மொத என் ஜி ஓ நாந்தாம்வே….

      இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி(?)க் கொடுத்ததே ஒரு என் ஜி ஓதாண்டே….

  17. ட்சுனாமிக்கு நடிகர் விஜய் அவர்கள் உன்டி குலுக்கினார் , பாதிகபட்டவற்கு ஒரு க்ரம்மம் கட்டி தருவதாக சொன்னார் இதுவரை ஒரு செங்கல் கூடா கிடைகளைஅய்யா, இதை எந்த கனக்கில் சேர்ப்பது

  18. ட்சுனாமிக்கு நடிகர் விஜய் அவர்கள் உன்டி குலுக்கினார் , பாதிகபட்டவற்கு ஒரு க்ரம்மம் கட்டி தருவதாக சொன்னார் இதுவரை ஒரு செங்கல் கூடா கிடைகளைஅய்யா, இதை எந்த கனக்கில் சேர்ப்பது/////

    அட அதையெல்லாம் இன்னுமா ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்? தண்ணீரில் எழுதிய வார்த்தைகள்..தாய் பால் உனக்கு கோக்க கோலா என பாடி தாய்ப்பாலை இழிவு படுத்திய உத்தமர் அந்த விசய்

  19. .ஆண்டொன்றுக்கு 30,000 கோடி ரூபாய் கடற்தொழிலில் இருந்து வருமானம் வருகிறது. பெருமளவு அந்நியச் செலவாணியை ஈட்டித்தருவதும் மீன்பிடித்தொழில்தான். பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்ட கேரள எல்லையான நீரோடி வரைக்கும் சுமார் 1026 கிலோ மீட்டர் நீளமுடையது நமது தமிழக கடற்கரை. இந்த கடற்கரையை தனியார்கள் சூறையாடத் தடையாக இருந்தது மீனவ குடியிருப்புகள். சுனாமி வருவதற்கு முன்பே மீனவ மக்களை எப்படியாவது கடலோரங்களை விட்டு அப்புறப்படுத்தி விட வேண்டும் என்ற முயற்ச்சி மத்திய மாநில அரசுகள் நினைத்தன அதற்காக பிற தனியார்முதலாளிகளிடமும் கூட்டுசேர்ந்து பல இடையூறுகளை செய்து சோறு போட்டு,சாராயம் வாங்கிகொடுத்து ஊரு 2பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்ட கதையில் கூடங்குளத்தைச்சுற்றிய மக்களை விரட்ட அரசு சமயம் பார்த்து உண்னிப்பாக கவனித்து நாள்க்களை கடத்திகொண்டே வருகிறது.அதனால் மக்களே எச்சரிக்கை கச்சத்தீவு கொலைகள்,கடலோர நச்சுத்தொழிற்கூடங்கள்,ஆழ்கடல் மீன்பிடிப்பு பறிப்பு,அணு உலை,சேது சமுத்திரதிட்டம்,போன்ற இதில் குறிப்பிடாத பல எச்சரிக்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க