Sunday, October 1, 2023
முகப்புதமிழ்மணம் விருதுகள்: வாக்களித்தவர்களுக்கு நன்றி! வென்றவர்களுக்கு வாழ்த்து!!
Array

தமிழ்மணம் விருதுகள்: வாக்களித்தவர்களுக்கு நன்றி! வென்றவர்களுக்கு வாழ்த்து!!

-

vote-0122009 தமிழ்மணம் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. வெற்றி பெற்ற பதிவர்களுக்கும், பங்கேற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! இந்த போட்டியை திறம்பட நடத்தி பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணத்திற்கும், வாக்களிப்பில் ஈடுபட்ட வாசகர்களுக்கும் நன்றிகள்!

சென்ற ஆண்டு தமிழ்மணம் போட்டி குறித்த அறிவிப்பு வந்தபோது அதைக் கொண்டாடும் நிலையில் பலரும் இல்லை. காரணம் ஈழத்தில் தொடர்ந்த முடிவேயில்லாத் துயரம். போட்டியும்கூட அறிவித்தபடி முழுமையாக நடக்காமல் பதிவர்கள் அளித்த வாக்குகளோடு நிறைவுற்றது. எனினும் பதிவர்களுக்காக தமிழ்மணம் நடத்திய முதல் போட்டி என்ற வகையில் அதற்க்கேயுரிய முக்கியத்துவம் இருக்கத்தான் செய்தது.

பதிவுலகம் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது. அன்றாடம் புதிய பதிவர்கள் தமிழ்மணத்தில் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அல் பெருனியைப் போலவோ, யுவான் சுவாங்கைப்  போலவோ அலைந்து திரியாமல், உட்கார்ந்த இடத்திலேயே அம்மையப்பன் வடிவில் உலகைத் தரிசிக்கும் வாய்ப்பு பெற்ற விநாயகர்களாக நாம் இருந்தபோதிலும், எல்லோரும் எல்லோரையும் படித்து விடுவதில்லை, படிக்க முடிவதும் இல்லை. ஆற்றலின் வரம்பு காரணமாக ஏற்படுவது மட்டுமல்ல, இந்த இயலாமை. நமது விருப்பு வெறுப்புகளும், பல சந்தர்ப்பங்களில் இந்த இயலாமையை நம் மீது திணிக்கின்றன. “பிடித்ததை மட்டுமே படிப்பது” என்ற பழக்கத்திலிருந்து ஒருவர் மீள வேண்டுமானால், நமக்குப் பிடிக்கின்ற விசயங்கள், என்ன காரணத்தினால் நமக்குப் பிடிக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறு புரிந்து கொள்ளும் போதுதான் பிடித்தவற்றின் ‘அன்புப்பிடி’யிலிருந்து நாம் விடுபடத் தொடங்குகிறோம். வினவு என்பது இதற்கான முயற்சி. எங்கள் பெயரிலேயே இருக்கிறது இதற்கான விளக்கம்.

எங்களது இந்த முயற்சிக்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவே போட்டியில் பங்கேற்கிறோம்.

சென்ற ஆண்டு பங்கேற்ற மூன்று பிரிவுகளில் இரண்டில் முதலிடமும், ஒன்றில் ஐந்தாம் இடமும் தந்து எங்களைப் பதிவர்கள் அங்கீகரித்தனர். “ஒரு பதிவர் இரு பிரிவுகளில் மட்டுமே பங்கேற்கலாம்” என்று திருத்தியமைக்கப்பட்ட விதியின்படி, இந்த முறை இரண்டு பிரிவுகளில் பங்கேற்றோம். தமிழ் மணத்தின் பதிவர்களும் வாசகர்களும் இரண்டிலும் எமக்கு முதலிடத்தை வழங்கியிருக்கிறார்கள்.

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பங்கேற்பவர்களும் அதிகம், வாக்களித்தவர்களும் அதிகம் என்று அறிகிறோம். முக்கியமாக இந்த ஆண்டு வாசகர்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்பதால் எமக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பரிசின் ‘மதிப்பு’ பன்மடங்கு கூடிவிட்டதாக உணர்கிறோம்.

போட்டி… முதலிடம்… முதலானவற்றை விட்டு வெளியே வந்து, வினவு தளத்திற்குள் நுழைந்து அதன் பின்னூட்டங்களைக் கொஞ்சம் சுற்றிப்பார்த்தால், இவ்வளவு எதிர்ப்புகளா என்று வியப்பு தோன்றுகிறது. இந்துத்துவவாதிகள், இசுலாமியக் கடுங்கோட்பாட்டுவாதிகள், போலிக் கம்யூனிஸ்டுகள், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழினவாதிகள், சாதிவெறியர்கள், மொக்கைகள், இலக்கியவாதிகள் எனப் பலரையும் நாங்கள் ‘பகைத்துக்’ கொண்டிருப்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள இயலும். இவ்வளவு எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கும் நாங்கள் முதலிடத்தை வென்றிருப்பது எங்களுக்கே கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது. இந்த விவாதங்களில் பங்கேற்கவில்லையென்றாலும், அவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் மவுனப்பெரும்பான்மை எத்தனை வலிமையானது என்பது இப்போது தெளிவாக விளங்குகிறது.

மெய் உலகில் புறக்கணித்தக்க சிறியதொரு குழுவாகவும், காலாவதியாகிப்போன கம்யூனிச அரசியல், புரட்சி ஆகியவற்றை இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களாகவும், ஊடகங்களின் அங்கீகாரத்தைப் பெறாதவர்களாகவும் கருதப்படும் எமக்கு, மெய்நிகர் உலகில் அல்லது கருத்தியல் தளத்தில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் உற்சாகத்தைத் தருகிறது. நம்பிக்கையைக் கூட்டுகிறது.

சிலருக்கு நேபாளத் தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெற்ற வெற்றி அதிர்ச்சியூட்டியதைப் போல இதுவும் அதிர்ச்சியூட்டவும் கூடும். அது எங்களுக்கு புரிகிறது. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் புரிந்துதான் இருக்கிறது. அதன் விளைவுதான் ஆபரேசன் கிரீன் ஹன்ட். அப்படியொரு கிரீன் ஹன்ட் மெய்நிகர் உலகில் தொடங்கும் வரை இந்தக் களத்தில் எங்கள் ஆட்டம் தொடரும். அல்லது மெய்நிகர் உலகின் பதிவர்களும் வாசகர்களும் அத்தகையதொரு வேட்டையே நடத்தமுடியாமல் சிதம்பரங்களை முறியடிக்கவும் கூடும். அப்படியொரு வெற்றியை மெய்நிகர் உலகில் நாம் அடைவோமாகில், அது உண்மையான ஜனநாயகம் மெய் உலகில் பெறக்கூடிய வெற்றிக்கு ஒரு படிக்கட்டாக அமையும்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

    • தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ள பதிவுகளில் மற்ற அனைவரை காட்டிலும் ம.க.இ.க தோழர்களே அதிக திட்டுக்கள், சாபங்கள், எதிர்கருத்துக்கள், கேலிகள் முதலியவற்றை சந்தித்துள்ளனர்,

       இருப்பினும் நடத்தப்பட்ட தமிழ்மண போட்டிகளில் பங்குபெற்ற  நமது தோழர்கள் அனைவருமே வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் ஏச்சுக்களுக்கும் எதிர் கருத்துக்களுக்கும்  அசராமல் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக போராடிவரும் நமது தோழர்களின் அற்பணிப்பை நினைத்து பெருமிதமும் மிகுகிறது.

      பொதுவாக வென்ற பதிவுகளில் மொக்கைகள் தூக்கி கடாசப்பட்டிருப்பது வாசகர்களின் தரம் இலக்கியவாதிகளின் புலம்பல்களுக்கு நேர் மாறாக ஆரோக்கியமாக இருப்பதாகவே தெரிகின்றது.

      இனி வரும் காலங்களில் புரட்சிகர கருத்துக்களாலும், சமரமில்லாத பிற்போக்கு எதிர்ப்பு பதிவுகளாலும், பொருள்முதல்வாத சிந்தனைகளாலும், மக்கள் வாழ்வை எடுத்துச்சொல்லும் வரலாற்றாலும்  தமிழ் பதிவுலகின் முகவிலாசமான தமிழ்மணத்தை நிறைக்க மேலும் பல புதிய தோழர்கள் எழுதி வரவேண்டும், தற்காலிக  ‘ஓய்விலிருக்கும்’ தோழர்கள்  மீண்டு வர வேண்டும். 

      தமிழ்மணத்தில் வென்ற தோழர்களில் பதிவுகள்

    • கலகம் – மார்க்சிஸ்டு பாசிஸ்டுகளின் பரிணாம வளர்ச்சி
    • செங்கொடி ஒருமணிநேரம் விளக்கணைப்பது புவி சூடேற்றத்தை தடுக்குமா?
    • சுனா பானா தமிழ் பெயர்கள் – இனியவை இருநூற்றி ஐம்பது
    • குருத்து “என் பெயர் பிரேமா!” – ஒரு உண்மை கதை!
    • அனைவருக்கும் வாழ்த்துக்கள்
      தோழமையுடன்

      • //
        பொதுவாக வென்ற பதிவுகளில் மொக்கைகள் தூக்கி கடாசப்பட்டிருப்பது வாசகர்களின் தரம் இலக்கியவாதிகளின் புலம்பல்களுக்கு நேர் மாறாக ஆரோக்கியமாக இருப்பதாகவே தெரிகின்றது.
        //

        வலைப்பதிவுகளில் குப்பைகளும், மொக்கைகளும் மட்டுமே இருக்கின்றது என்பதை கட்டமைப்பதில் தான் இந்த எழுத்தாளர்களின், இலக்கியவாதிகளின் வெற்றி அடங்கி இருக்கிறது. மாறாக வலைப்பதிவுகளில் தரம் உள்ளது என்றால் வாசகர்கள் வலைப்பதிவுகளில் மொய்த்து விடுவார்கள் அல்லவா ?

  1. வாழ்த்துக்கள் வினவு. இத்துடன் தோழர் கலகம் CPMன் மக்கள் விரோத சமூக பாசிச அரசியலை விமர்சிக்கும் கார்ட்டூன் பதிவும். தோழர் செங்கொடியின் புவி சூடேறுதலை தடுப்பதாக செய்யப்படும் என் ஜி ஓ நடவடிக்கைகளை விமர்சிக்கும் பதிவும் வெற்றி பெற்றுள்ளன என்பது உற்சாகம் அளிப்பதாக உள்ளது.

  2. வாழ்த்துக்கள் வினவு!
    நிறைய ஒட்டு கட்சிகள்…கோடிக்கணக்கான தொண்டர்கள்…. இன்னும் இத்யாதி இத்யாதிகள் இருந்தும் சாதிக்க முடியாததை…. குறைவான தோழர்கள் ஆனால் அவர்கள் எழுச்சிகரமான தோழர்கள், தெளிவான சித்தாந்தம்,பெருவாரியான மக்கள் ஆதரவு ஆகியவற்றை கொண்டு ஆயிரம் ஆண்டு கால சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்னையில் நம் வெற்றி பெறவில்லையா? அது போலத்தான் இதுவும்!

  3. \\மெய்நிகர் உலகின் பதிவர்களும் வாசகர்களும் அத்தகையதொரு வேட்டையே நடத்தமுடியாமல் சிதம்பரங்களை முறியடிக்கவும் கூடும். அப்படியொரு வெற்றியை மெய்நிகர் உலகில் நாம் அடைவோமாகில்\\ கண்டிப்பாக அடைவோம். வாழ்த்துக்கள் .   
     

  4. வினவுக்கு வாழ்த்துக்கள்.

    மேலும் விருதுகள் பெற்ற தோழர்கள் செங்கொடி, கலகம், சுனா பானா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    புரட்சிகர கருத்துக்கள் மக்களை பற்றுகிறது என புரிகிறது.

  5. வாழ்த்துக்கள் வினவண்ணே..!

    நீங்கள் இரண்டு முதல் பரிசுகளையும் வெல்வீர்கள் என்று நான் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேன். அதுபோலவே ஆகிவிட்டது..!

    மெய்நிகர் உலகம், சிதம்பரங்கள், வேட்டைகளெல்லாம் இருக்கட்டும்..

    எனக்கு பார்ட்டி வேணும்னேன்..!

    என் வாய் முகூர்த்தம் பலிச்சிருச்சா இல்லையா..?

  6. அனைவருக்கும் நன்றி! விருது பெற்ற குருத்து, சந்தனமுல்லையின் பதிவுகள் அருமையானவை, அவர்களுக்கு வாழ்த்துக்கள்! உண்மைத்தமிழனும் முத்துக்குமாரின் இறுதிப்பயணம் பதிவுக்கு வென்றுள்ளார்! அவருக்கும் வாழ்த்து! மற்றபடி உண்மைத்தமிழன் சொன்னது நடந்திருப்பது ஆச்சரியம்தான். ஆச்சரியப்படத்தக்க அளவுக்கு இதுவும் உண்மைதான் என்பது உண்மைத்தமிழனுக்கும் தெரியுமே?

  7. முகம் தெரியாமல் நீங்கள் செய்துள்ள உதவி மூலம் கிடைத்த விசயங்கள் எந்த காலத்திலும் நினைவில் இருக்கும்.  உங்கள் கருத்துக்களுக்கு கிடைத்த அங்கிகாரத்திற்கு தேவியர் இல்லத்தின் சார்பாக வாழ்த்துகள் தோழரே.

  8. அன்பான நண்பர் திரு வினவு மற்றும் நண்பர்கள்,

    வணக்கம் சார். வாழ்த்துகள்.

    என்ன ஒன்று, இந்த மாதிரி ஓட்டுப்பொறுக்கி, ஏகாதிபத்திய சுரண்டல் சமூகங்கள் உங்களைப்போன்றவர்களுக்கும் அங்கீகாரம் வழங்குகிறது (இந்த தமிழ் மணத்தில் போட்டி போட்டு ஒட்டு குத்துவது யார் என்றெல்லாம் நீங்கள் ஆராயமாட்டீர்கள், ஏனென்றால் இப்போதைக்கு உங்களின் காழ்ப்புணர்ச்சி

    பொய்களை சொல்லல வடிகாலாக இருக்கும்ப்படியால்), atleast அங்கீகாரம் வழங்குவதாக சொல்லிக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தையாவது கொடுக்கிறது!

    ஆனால் பாருங்க. நீங்கள் ரசிக்கும், துதிக்கும், ஆக்கத்துடிக்கும் சோவியத் அல்லது மாவோ அல்லது ஸ்டாலினிய சமூகத்தில் இதைப்போல எதையும்

    செய்யமுடியாது சார்! இதையும் புரியாமல், சில முற்போக்கு முத்திரை வாங்கத்துடிக்கும் நண்பர்கள் (வெகு சிலரே என்றாலும்) நீங்கள் எழுதித்தள்ளும் திரிபுகளை நன்று என்று தலையை ஆட்டி கையை தட்டி அருமை என்று இடுகிறார்கள்! இந்த மாதிரி கும்பல்களை ஆங்கிலத்தில் usefull idiots என்பார்கள்! அதாவது உபயோகப்படுத்தியபின் தூக்கிஎரியப்படவேண்டியவர்கள்!

    இது அவர்களுக்கு புரியாது! கும்பலோட கூத்துக்குப்போனோம், காரணமில்லாம கரவொலி எழுப்பினோம், கட்டைய காட்டினதும் கத்திக்கொண்டே வீட்டுக்கு

    வந்திட்டோம் என்று என்று சும்மா ஜல்லி அடித்துக்கொண்டிருக்கிறார்கள்! இவர்களுக்கு சரித்திரம் தெரியாது! சோவியட்டுகள் இந்த மாதிரி இரண்டாங்கெட்டான்

    கூட்டங்களை, வேலை முடிந்தபின் அடித்து துரத்தி எஞ்சியவர்களை கூண்டோடு குலாகுக்கு அனுப்பி, முடியாதவர்களை மொத்தமாக போட்டுத்தள்ளினார்கள்!

    ஒரு நாட்டையே சுமார் நூறு வருடம் பின்னுக்கு இட்டுச்சென்று, செல்வத்தையெல்லாம் அழித்து, வேறு யாவரும் ஆட்சி செய்யமுடியாமல் தானே அனுபவித்து, அதையும் புரட்ச்சி என்று பெயரிட்டு அம்மக்களை ஏமாற்றிய, ஏமாற்றிக்கொண்டிருக்கும் பிடேல் காஸ்ட்ரோ என்ற ஒன்றுக்கும் உதவாத கொடுங்கோல் சர்வாதிகாரி இவர்களுக்கு “முற்போக்கு தலைவர்”! இதைவிட காமடி, மக்கள் முன்னேற்றத்திற்கு சிறிதளவும் உதவாத, மக்களின்எதிர்க்காலத்தைப்பற்றி

    சிறிதளவும் தொலைநோக்கில்லாத, மானிட முன்னேற்றத்திற்கான எந்த ஒரு சிறிய படிகளையும் காட்டியிராத சே குவேரா என்ற ஒரு அழிவுப்போராளி ஒரு மாபெரும் தலைவன்!

    சுற்றியிருப்பவர் தங்களை வித்தியாசமானவர்கள் என்று பார்க்கவேண்டும், நான் சராசரியைவிட மேலானவன் என்று சுற்றியிருப்பவர் மெச்சவேண்டும், அய்யோ நான் எதையாவது செய்யவேண்டுமே என்ற அரிப்பு நீங்கவேண்டும், என் வார்த்தைகள் பலமானவை நான் இந்த ஒரு சிறு வட்டத்திற்குள் சிக்காதவன், முர்போக்கானவன், மேலும் அதை என்ன என்பதை புரியாமல், விளக்கமுடியாமல், பார்த்தவரையில் இதுபோல பேசும் சிலருடன் சேர்ந்து நானும் பார் இந்த மாதிரிதான் என்று சொல்ல விழைபவன் என்பது போன்ற பல அரைகுறை மற்றும் உண்மையாகவே நல்ல எண்ணம் கொண்ட பலருக்கு நிற்க கிடைத்த புள்ளிதான் இந்த பிடேல் காஸ்ட்ரோ மற்றும் செ குவேரா ரசிகர் மன்றம்!

    பொருளியல், ஆய்வுக்குட்படுத்த, சார்பற்ற வரலாறு, சம கால விஞ்ஞானம், விரிவான படித்தலரிவு மற்றும் பலவற்றை இவர்களெல்லாம் கூர்ந்து நோக்காதவர்கள், அல்லது அறியாதவர்கள்! கிடைத்த அரைகுறை செய்திகளையும், புரிதல்களையும் வைத்துக்கொண்டு, நான் வித்தியாசமானவன் என்று உலகிற்கு காட்ட விழைபவர்கள் மட்டுமே!

    சொல்ல வருவது என்னவென்றால், இவர்கள்தான் நீங்கள் மற்றும் உங்களுக்காக ஜல்லியடிக்கும் சிலரும்!!!

    சரி சரி, தெரிந்த விடயத்திற்கு எதற்கு இவ்வளவு விளக்கம்! முக்கியமான விடயத்திற்கு வருவோம்!

    Our lives no longer feel ground under them.
    At ten paces you can’t hear our words.

    But whenever there’s a snatch of talk
    it turns to the Kremlin mountaineer,

    the ten thick worms his fingers,
    his words like measures of weight,

    the huge laughing cockroaches on his top lip,
    the glitter of his boot-rims.

    Ringed with a scum of chicken-necked bosses
    he toys with the tributes of half-men.

    One whistles, another meows, a third snivels.
    He pokes out his finger and he alone goes boom.

    He forges decrees in a line like horseshoes,
    One for the groin, one the forehead, temple, eye.

    He rolls the executions on his tongue like berries.
    He wishes he could hug them like big friends from home.

    மேலே உள்ளது “epigram ” எனப்படும் வகையை சார்ந்தது! ரஷ்ய மொழியில் எழுதப்பட்டதின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது!

    இதை எழுதியவர் ஓசிப் மான்டேல் ஸ்டாம் (Osip Mandelstam) எனும் ரஷ்ய (உக்ரானிய) கவிஞர்! உன்னிப்பாக படித்துப்பார்த்தால் இது யாரைப்பற்றி எழுதப்பட்டது, என்பது புரியும் ! இதை எழுதிய ஓசிப்.

    மண்டேல்ஸ்டாம் ஸ்டாலினால் குலாகில் அடைக்கப்பட்டு, காரணமேதும் சொல்லப்படாமல் மாண்டதாக அறிவித்தார்கள்!

    அதாவது கொல்லபட்டார்! இவர் ஒரு பெரும் கவிஞர்! உண்மையை பேசக்கூடியவர்! ஆதலால் ஸ்டாலினால் கொல்லப்பட்டார்!

    ஸ்டாலின் நடத்திய “ஜனநாயக” ஆட்ச்சியில் இருந்த கருத்து சுதந்திரம் அவ்வளவு பெரியது!!!! இப்பொழுது நண்பர் திரு வினவு எழுதுவதுபோல

    யாராவது எழுதினால் அவர்களின் கதி அதோகதிதான்! அட அவ்வளவு காரம் எதற்கு, மேலே மண்டேல்ஸ்டாம் எழுதியதுபோல பட்டும் படாமலும் கிண்டல் செய்தாலே போதும், சாவு நிச்சியம்! அதுதான் நம்ம உண்மையான கம்யூனிஸ்ட்களின், மன்னிக்கவும், ஸ்டாலினிஸ்ட் மற்றும் மாவோச்டுகளின் ஜனநாயகம்!!

    பிடேல் காஸ்ட்ரோ செய்ததும் இதுதான், மற்ற எல்லா கம்முனிஸ்டு சர்வாதிகாரிகள் செய்ததும் இதுதான்! என்ன சே குவேரா தனி சர்வாதிகார ஆட்சிக்கு வர முடியவில்லை (அதற்க்கு பிடேல் காஸ்ட்ரோ இடம் கொடுக்க முன்வராததால், தனக்கென்று ஒரு அடிமை குட்டம் மற்றும் தேசத்தை தேட சென்றுவிட்டார்)

    முடிந்திருந்தால், அவரும் இதே போல ஜனநாயக, பேச்சு மற்றும் எழுத்துரிமை கொண்ட ஒரு சமூகத்தைதான் ஒரு வாக்கியிருப்பார்!

    ஒரு பேச்சு வைத்துக்கொள்வோம், அதாவது, திரு வினவு இந்த நாட்டின் தலைவராகிறார் என்று (தயவு செய்து சிரிக்காதீங்க, ஒரு பேச்சுக்குதான் சொன்னேன், தாமாஷா இருந்தாலும் பொறுத்துக்கொண்டு மேலே படிக்கவும்). அவர் எந்த முறையான அரசாங்கத்தை மற்றும் சமூகத்தை அமைக்க விழைவார் என்று நினைக்குறீர்கள் ??? அதற்க்கு பதில், அதே ஜனநாயகமிலாத, கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியைதான்!!!!!

    இதை புரிந்து கொள்ளாத, அல்லது புரிந்து கொள்ள இயலாத ஜல்லிகள் எல்லாம், டமாரம் அடிக்கிறார்கள்!!!

    சோவியத் அரசாங்கம், ஸ்டாலினிச அரசாங்க முறை, மாவோவிச முறை, மற்றும் எல்லா கம்முனிச அரசாங்கங்களும் கொன்றது ஒரு ஓசிப் மாடல்ஸ்டாமை மட்டும் இல்லை, இவரைப்போன்ற பல ஆயிரம் மக்களை! அவர்தம் உணர்ந்து சொன்ன உண்மைகளை! இந்த வரலாறு ஆதாரங்களுடன் எழுதப்பட்டு, பல நூறு பெயர்களால் ஆராயப்பட்டு, உண்மையே என்றும் நிறுவப்பட்டு, இதன் காரணமாக, இந்த சோவியத் முறையே ஒரு பொய்களால் கட்டப்பாட்ட ஒரு மண் மண்டபம் என்று உணரப்பட்டு, உலகெங்கிலும் காரி துப்பலுக்கு உள்ளாக்கப்பட்டு விட்டன! நேபாளம், மற்றும் இந்தியாவில்தான் இந்த காமடியன்களுக்கு

    படங்களைக்காட்ட அரங்குகள் சில இன்று மட்டும் இருந்து வருகின்றது! அதுவும் இன்னும் சில வருடங்களில் வியாபாரம் இல்லாததால் இழுத்து மூடப்படும் என்பது திண்ணம்!

    சரி, மேல உள்ள கவிதை, அதாவது மான்டேல் ஸ்டாமை கொன்ற கவிதை அப்படி என்னதான் சொல்கிறது!

    ஏதோ எனக்கு தெரிந்த தமிழில் உங்களுக்காக மொழி பெயர்க்கிறேன்!

    ஏதோ எனக்கு தெரிந்த தமிழில் உங்களுக்காக மொழி பெயர்க்கிறேன்!

    ——— ———- —————-

    எங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரம் அமுங்கிவிட்டது

    பத்தடி போனால் வரும் கால்சத்தமும் அடங்கிவிட்டது

    கிடைக்கும் சிறிது நேரத்தில் வரும் பேச்சு

    கிரம்லினில் வாழும் அந்த மலை ஏறியைப்பற்றியே ஆச்சு

    புழுக்கள் பத்து அவனின் விரல்களாம்

    அமுக்கும் பளுதான் அவனின் வார்த்தைகளாம்

    பல் இளிக்கும் கரப்ப்பான்பூச்சிகள் போல அவன் மேல் உதடுகளிருக்க

    அணிந்த காலணிகளில் வெளிச்சம் தெறிக்க

    கோழிகளைப்போல சில சகதித்தலைவர்கள் சுற்றிவர

    அசைப்போட்டானாம் இந்த அரைமனிதர்களின் ஆராதனையைப்பார்த்து

    ஒன்று ஆர்ப்பரித்த்தாம், ஒன்று கொஞ்சிப்பார்த்ததாம், ஒன்று முக்கி முனகியதாம்

    விரல்காட்டிய அவனோ நான் மட்டுமே பேசலாம் என்றானாம்

    கட்டளைகள் கட்டவிழ்ந்தன கட்டியடித்த லாடம் போல

    கவட்டில் ஒன்று நெற்றியில் ஒன்று கண்களுக்கும் ஒன்றென

    மரணதண்டனைகள் உருட்டப்பட்டன சின்ன பழங்களை வாயினுள் தள்ளுவதுபோல

    அதை இழுத்தனைக்கவும் விரும்பினான் நன்கறிந்த நண்பர்களைப்போல

    —- ———— ——————– —————

    இந்த ஒரு பதினாறு வரிகளை தாங்க முடியாது அதற்காக ஒருவரை கொல்ல சிறிதளவும் சலனப்படாதவர்கள் இந்த சிவப்பு மாவீரர்கள்!

    சோவியத் கம்யூனிசமும், ஸ்டாலினிசமும், மாவோவிசமும், மற்றும் நீங்கள் கொண்டாடும் ஏனைய நிசங்களும் இதைப்போல ஆயிரக்கணக்கானவர்களை பலி பீடத்திற்கு அனுப்பியுள்ளீர்கள்!!! வாயைத்திறந்தால் வாட்டிவதைப்பு , கருத்தைச்சொன்னால் கட்டிவைத்து காட்டடி, உண்மையைப்பேசினால் உண்டுஇல்லை என உபசரிப்பு, அப்படியும் வாயைத்திறந்தால், கொடுத்தீர்களே நல்ல வாய்க்கரிசி, அதுவும் பல ஆயிரம்பெர்களுக்கு!

    இப்பேற்பட்ட ஒரு அரசியல் மற்றும் சமூக நாகரீகத்தை தொடங்கி, பல கோடி உயிர்களை பலி வாங்கி, வலிதாங்காமல் மக்கள் விழித்தெழுந்து , நீங்கள் வைத்த சிலைகளை, புரட்டு கதைகளை உடைத்து நொறுக்கி, உங்களை எல்லாம் ஓட ஓட விரட்டி, இப்பொழுது அதே சமூகம் உங்களுக்கு கொடுத்த, நீங்கள் அவர்களுக்கு தராத உண்மையான ஜனநாயக உரிமையை பயன்படுத்தி, அதே சமூகத்தை தூற்றி, பொய் மேல் பொய் எழுதி, கிடைத்தது பார் எங்களுக்கு அங்கீகாரம், விரிவடயுதுபார் எங்கள் அதிகாரம் என்று கட்டம் கட்டி ஆடுவது, கபடத்திலேயும் உச்ச கபடம், தமாஷிலும் உச்ச தமாஷ், நாணயமின்மையிலும் உச்ச நாணயமின்மை!

    நன்றி

    • வினவு வாங்கிய விருது நோ போன்ற எக்காலமும் அறியாத முனிவ சிரேஷ்டர்களுக்கு கடும் வயிற்றெறிச்சலை ஏற்படுத்தியுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் மக்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்த விருது இது என்ன செய்ய முடியும் நோ?

  9. வாழ்த்துக்கள்…
    மென்மேலும் வளர , திட்ட, திட்டு வாங்க, பஞ்சாயத்து பண்ண, பஞ்சாயத்து கேக்க, எல்லாவற்றுக்கும்.

  10. லீனா அக்கா பதிவைப் பாத்து பல பதிவுக்காரவுகளும் அரண்டு போயிருக்காகன்னு தெரியுது. அவுக வேற, அக்கா வேறன்னு வினவுக்காரவுக அவுகளுக்கு புரியவைக்கோணும். அப்பதான் வந்து போவாக. வாழ்த்தும் சொல்லுவாகன்னு நினைக்கேன். எது எப்புடியோ நம்ம தரப்புல வினவுக்காரவுகளுக்கு வாழ்த்த மனமாற சொல்லிக்கிடுதேன்.

  11. புதிய பின்னூட்ட எழுத்து மற்றும் வடிவம் அப்படியென்றும் வசதியாக இல்லையே! கண்ணை உறுத்துகிறதே! பழைய வடிவத்திலேயே மாற்றலாம். பரிசீலியுங்கள்.

  12. தமிழ்மண விருதுகள் மூலம் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்கிறீர்களா வினவு? அந்த விருது பெற்ற பதிவுகள் தான் இவருடத்தின் உங்கள் சிறந்த பதிவுகள் என்று நினைக்கிறீர்களா? மனசாட்சிப்படி சொல்லவும்.

    நாட்டுமக்களின் நலனில் அக்கறையான பதிவாக நமக்கே தெரியாமல் நம்மீது சூழும் சூழ்ச்சியை அக்குவேறு ஆணிவேராய்…விளக்கிய வில்லவனின் “பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!” பதிவே இவ்வாண்டின் வினவுதளத்தின் சிறந்த பதிவு. இதற்கு ஓட்டுப்போடாத கூட்டம் எல்லாம் மொக்கைகள்தானே. (அப்படித்தானே நீங்கள் சொல்வீர்கள் வினவு?) இம்மொக்கைகளின் போட்ட ஒட்டுதானே நீங்கள் பெற்ற விருதுகள். ஆனால், இன்றும் கூட இப்பதிவின் மையக்கருத்துகள் (வில்லவன்/அதியமான்/கார்க்கியின் கருத்துகள்) பாராளுமன்றத்தில் விவாதப்பொருளாகிக்கொண்டு இருக்கிறதே?

    http://thatstamil.oneindia.in/news/2010/01/15/ramesh-meets-with-protests-at-first.html
    இதில் மத்திய மந்திரி ஜெயராம் ரமேஷ் பிடி கத்தரிக்காய் வேண்டும் என்று குதிக்கிறார்.

    http://thatstamil.oneindia.in/news/2010/01/22/ministers-bicker-over-bt-brinjal.html
    இதில் அதே மந்திரி ஜெயராம் ரமேஷ் இன்னொரு மந்திரி சரத் பவாருடன் பிடி கத்தரிக்காய் வேண்டவே வேண்டாம் என்று சண்டை போடுகிறார். பவார் வேண்டும் என்கிறார்.

    இப்பதிவின் தரத்துக்கு இணையான ஒன்றாய் – அதியமானின் கேள்விகளுக்கு கார்க்கியின் மறுமொழிகளும்… எப்படி இந்த பொக்கிஷம் போன்ற ஒரு கட்டுரை தமிழ்மண விருதிலிருந்து தப்பியது? இப்படி மொக்கைகள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த தரமற்ற விருதுகளுக்காக பெருமையாக புளங்காகிதம் அடைய வேண்டியதில்லை, வினவு.

    • முஹம்மத், நீங்கள் சொல்கிற கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதில் ஐயமில்லை, அதே நேரத்தில் வெற்றி பெற்ற இரண்டும் சிறந்தவையே, 

      உ.பொ.ஒ அநியாயமாக இசுலாமிய வெறுப்பு கருத்து கட்டவிழ்த்து விடப்பட்ட நேரத்தில் முன்வைக்கப்பட்ட சரியான எதிர்வாதம். ஈழம், போரின் தோல்வியில் துவண்ட மனங்களை தளரவிடாமல் செய்யவும் தொடர்ந்து போராட நம்பிக்கையளிக்கவும், சரிதவறை பரிசீலிக்கவும் ஒரு வழிகாட்டி… ஒவ்வொன்றும் அது எழுதப்பெற்றபோது இருந்த சூழலையும் கணக்கில் கொள்ளவேண்டும். அதனால்தான் வாசகர்களும் அக்கட்டுரைகளை ஆயிரக்கணக்கில் படித்துள்ளனர்.

      பேக்ட் ஸ்பீக்கிங் – பொதுவாக தமிழ்மணத்தில் ஆட்டம்போடும் மொக்கைகளை விருதுகளில் வாசகர்கள் தூக்கி கடாசிவிட்டனர். வென்றவை ஒரவுக்கு தரமான பதிவுகளே

      டெக்னிகலி ஸ்பீக்கிங்- தமிழ் மணம் விருது நவம்பர் முதல் நவம்பர் வரைதான் டிசம்பர் மாத பதிவுகள் ஏற்கப்படமாட்டாது. கத்திரிக்காய் டிசம்பரில் வந்தது.

      • //தமிழ் மணம் விருது நவம்பர் முதல் நவம்பர் வரைதான்//-முற்றிலும் எனக்கு இது புதிய தகவல். அறியத்தந்தமைக்கு நன்றி, 1/2 டிக்கட்.

        ஈழம் : இதன் பின்னூட்டங்களிலேயே விமர்சனங்கள் பல இருந்தாலும்… இதனை பற்றி அதன் மண்ணின் மைந்தர்களின் வார்த்தைகளில் இன்னும் உயிரோட்டமாக எழுதப்பட்டிருந்தன என்றாலும்… சொல்லப்பட்ட விஷயங்கள் பல வெகுஜனமக்களுக்கு ஊடகங்கள் வழி முன்பே தெரிந்த விஷயங்கள் என்றாலும்… சரி.ஓக்கே.

        உ.போ.ஒ-னின் முகமூடியை வினவுக்கு முன்பே முதன்முறை நான் அறிந்து முழுசாக கிழித்தெறிந்த முன்னோடி : சுகுணாதிவாகர்..! அவருக்கே அதன் முழுப்பெருமையும் போக வேண்டும். அதற்கு பிறகே மற்றவர்கள் விழித்தெழுந்தனர்.

        ///ஒரே பதிவர் அதிகபட்சமாக இரண்டு வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம்/// என்ற விதி # 3 அடிப்படையில், செண்டம் வாங்கி இருக்கும் வினவுக்கு என் வாழ்த்துக்கள்.

        அதேநேரம் இவை இரண்டையும் எடுத்துக்கொண்டு, வினவின் மற்ற பிரபலமான ஆரவாரமிக்க அதிரடி ஆக்ஷன் மசாலா மத துவேஷ பதிவுகளை அவர் போட்டிக்கு அனுப்பாதது, அவருக்கே அவை பப்ளிசிட்டி பெற மட்டுமே எழுதப்பட்ட சரியான மொக்கை பதிவுகள் என்று தெரிந்துள்ளது என அறிந்து மிக்க மகிழ்ச்சி. இனி அவர் தன் மனசாட்சிப்படி நடப்பார் என்று நம்புகிறேன்.

        ஆனால், கத்தரிக்காய் பதிவு அவை போன்று அல்ல. தனித்துவமானது. சொல்லப்போனால், சுகுணாதிவாகரின் உ போ ஒ வை விட தனித்துவமானது. ஏனென்றால் அதற்கு பின்னாலும் யாரும் இந்த டாபபிக்கை கையில் எடுத்ததாய் நான் அறியவில்லை. எனவே, அடுத்த 2010 -ம் ஆண்டுகளின் விருதுகளில் கத்தரிக்காயின் நிலையை பார்ப்போமே..! (போட்டிக்கு பரிந்துரைக்க மறக்க வேண்டாம், வில்லவன்..!)

        • //உ.போ.ஒ-னின் முகமூடியை வினவுக்கு முன்பே முதன்முறை நான் அறிந்து முழுசாக கிழித்தெறிந்த /// இதில் முழுசாக கிழித்தெரிந்த என்பது சரியல்ல, முதலில் என்பது சரி. உ.போ.ஒ பொருத்தவரை சரியான புரிதலில் எழுதப்பட்டிருந்த கட்டுரையில் வினவினுடையதுதான் முன்னோடி, நான் எழுதியது போல சரியான எதிர்வினை இதுவே!

          ஈழத்தை பொறுத்தவரை வெகுஜன ஊடகங்கள் போர் முடிந்துவிட்டதாகத்தான் எழுதின ‘நீங்கள் குறிப்பிடும் பதிவின் தலைப்பே ‘போர் இன்னும் முடியவில்லை’ தவிரவும் விடுதலைப்புலிகளுக்கு கணமூடித்தனமான ஆதரவு-எதிர்ப்பு என்ற நிலைக்கு மத்தியில் சரியான அரசியல் விமரிசனத்தை கொண்டு சென்றதே அந்த கட்டுரையின் சிறப்பு

          //அதிரடி ஆக்ஷன் மசாலா மத துவேஷ பதிவுகளை.. // FYI சென்ற ஆண்டு ஷகிலா பர்தா பதிவு ஐந்தாவது பரிசு, சாதிவெறி-பார்ப்பனியத்துக்கெதிரான பதிவு முதல் பரிசு, சீமான் கைதுக்கெதிரான அதிரடி ஆக்ஷன் பதிவு முதல் பரிசு …

          //இனி அவர் தன் மனசாட்சிப்படி நடப்பார் என்று நம்புகிறேன்//  அப்படி அவர் மனசாட்சிப்படி நடப்பவர் என்றால் அடுத்த சாதி-மதவெறி எதிர்ப்பு பதிவை விரைவில் எதிர்பார்க்கலாம். பார்க்கலாம்
           

Leave a Reply to முஹம்மத் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க