முகப்பு"சந்திப்பு" தோழர் செல்வபெருமாள் மரணம் !!
Array

“சந்திப்பு” தோழர் செல்வபெருமாள் மரணம் !!

-

vote-012நாங்கள் போலிக்கம்யூனிஸ்டு என்றைழைப்பவர்களில் முதன்மையானவர்கள் சி.பி.எம் கட்சியினர். கம்யூனிசத்தின் பெயரில் திரிபுவாதக் கொள்கைகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்தக் கட்சியிலிருந்துதான் மார்க்சிய லெனினிய கட்சி பிரிந்து வந்தது. இன்றைக்கு வலது, இடது இரண்டு கம்யூ. கட்சிகளும் ஆளும் வர்க்கத்தின் கூட்டாளிகளாக மாறிவிட்டன. எது உண்மையான கம்யூனிசம் என்பதை மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கு முன் எவரெல்லாம் போலிக் கம்யூனிஸ்டுகள் என்பதை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது.

அவர்களோ எங்களை தீவிரவாதிகளென்றும் சி.ஐ.ஏவின் கைக்கூலிகளென்றும் தனிமைப்படுத்த முனைந்தனர். இந்தப் பின்னணியில்தான் சந்திப்பு தோழர் செல்வப்பெருமாளுக்கும், எமது தோழர்களுக்கும் இடையே இணையத்தில் தீவிரமான  கருத்துப் போராட்டம் நடந்து வந்தது.

பொதுவில் சி.பி.எம் கட்சி தமது அணிகளுக்கு புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் முதலான இதழ்களை படிக்கக்கூடாது, ம.க.இ.கவினரோடு சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவிக்காத விதிமுறைகளை கட்டளையிட்டிருக்கிறது. இதை ஊக்குவித்தால் தமது அணிகள் ம.க.இ.கவினரால் வென்றெடுக்கப்படுவார்கள் என தலைமை பயந்தது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் எமது தோழர்கள் அசுரன், ஏகலைவன், கேடயம் உள்ளிட்டு பலர் தீவிரமாக இயங்கிவந்த நேரம். இப்படி கூட்டம் கூட்டமாக ம.க.இ.கவினர் இறங்குவதைக் கண்டு கதிகலங்கிய சி.பி.எம் தலைமையின் ஆசிர்வாதத்தோடு இதை எதிர் கொள்ள களமிறங்கினார் செல்வபெருமாள். அவர் சென்னை சி.பி.எம் அலுவலகத்தின் முக்கிய ஊழியராக பணியாற்றிக்கொண்டு இணையத்திலும் பங்கேற்றார்.

அவர் எழுதிய இடுகைகளில் பெரும்பாலானவை ம.க.இ.கவை அம்பலப்படுத்துவதற்காக எழுதப்பட்டதுதான். தோழர்கள் போலிக் கம்யூனிஸ்டுகளை விமரிசித்து எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் எதிர்ப் பதிவு போடுவார் செல்வபெருமாள். பின்னூட்டமிட்டு விவாதிப்பார். இது கணிசமான காலம் நடந்து வந்தது.

தொடர்ந்து தோழர்கள் எழுப்பிய மையமான கேள்விகள், விமரிசனங்களுக்கு பதில் சொல்ல இயலாமல் பதட்டமடைந்த செல்வபெருமாள் பின்னர் அவதூறு செய்வதாக தனது எதிர் விமரிசனங்களை மாற்றிக் கொண்டார். ம.க.இ.க இரகசிய கட்சியென்றும், தீவிரவாதிகளென்றும், அமெரிக்க அடிவருடிகளென்றும் அவை நீண்டன. இறுதியில் இனவாதிகளின் பார்ப்பனத் தலைமை என்ற அவதூறையும் கடன் வாங்கிக் கொண்டார். இவ்வளவுக்கும் சி.பி.எம்மில்தான் தம்மை பார்ப்பனர்கள் என்ற அறிவித்துக் கொண்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.

ம.க.இ.கவின் அரசியல் சார்ந்த கட்சித் திட்டத்தை வாங்கி அவர்பாட்டுக்கு விமரிசனமென்று நிறைய எழுதினார். அந்த திட்டத்தை ஏதோ பயங்கரமாக கண்டுபிடித்தது போல பறைசாற்றிக் கொண்டார். சித்தாந்த விவாதத்தில் சோர்வுற்ற அவரது சிந்தனை இப்படி எளிதான விசமப் பிரச்சாரங்களில் நிலை கொண்டது.

முக்கியமாக இங்கே குறிப்பிட விரும்பியது பொதுவில் சி.பி.எம் கட்சியினர் அவர்களை விமரிசிக்காமல் மற்ற எதனையும் எவ்வளவு தீவிரமாக விமரிசித்தாலும் நட்பு கொள்ளவே விரும்புவார்கள். கம்யூனிசத்தையும், மார்க்சிய ஆசான்களையும் தீவிரமாக திட்டிக் கொண்டே சி.பி.எம்மை மட்டும் திட்டாமல் இருந்தால் கூட அவர்களுக்கு பிரச்சினை இல்லை. எமது தோழர்கள் தொடர்ந்து சி.பி.எம்மை தீவிரமாக அம்பலப்படுத்தியதுதான் அவருக்கும் பிரச்சினையாக இருந்தது.

வினவு ஆரம்பித்த போது ஆரம்பத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை, டாக்டர் ருத்ரன் கட்டுரை போன்றவற்றுக்கு பாராட்டி பின்னூட்டமிட்ட செல்வபெருமாள், பின்னர் சி.பி.எம்மை விமரிசித்து புதிய ஜனநாயகம் இதழில் வந்த கட்டுரைகளை வெளியிட்ட போது ஆத்திரம் கொண்டார். அடுத்து வினவை வசைமாறி பொழிந்து கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்தார். கூடுதலாக வினவு பெருவாரியான வாசகர்களால் அங்கீகரிக்கப்பட்டது அவருக்கு துக்கத்தை கொடுத்திருக்கும்.

செல்வபெருமாளுடன் நடந்த இந்த விவாதத்தின் அனுபவம் என்ன? நடுத்தர வயது, கட்சியின் முழுநேர ஊழியர், பொருளாதார ரீதியாக கட்சியை சார்ந்திருப்பது, தனது இருப்புக்காக கட்சியை விட்டுக்கொடுக்காமல் இருப்பது முதலிய பிரச்சினைகளால் அவரை வென்றெடுப்பது என்பது நிச்சயம் சாத்தியமில்லை. ஆனால் ஒரு சி.பி.எம் தோழர் எமது விமரிசனங்களால் என்ன வகை அணுகுமுறையை கையாள்வார் என்பதை தோழர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

காங்கிரசின் கூஜாவாக சென்ற ஆட்சியின் போது மாறிவிட்ட போலிக்கம்யூனிஸ்டுகள் தமிழகத்தில் போயஸ் தோட்டத்திற்கும், கோபாலபுரத்திற்கும் மாறி மாறி காவடி தூக்குவது என்ற சூழ்நிலையில் அந்தக் கட்சிகளில் இருக்கும் நேர்மையான அணிகளை புரட்சிகர கட்சிகள் வென்றெடுப்பது காலத்தின் கட்டாயாம். அந்த ஒன்றுக்காகவே நாங்கள் தொடர்ந்து சி.பி.எம்மின் சந்த்தர்ப்பவாதங்களை விமரிசிக்க விரும்புகிறோம். மேலும் நேர்மறையில் உண்மையான கம்யூனிஸ்டுகள் ஒரு சமகாலப் பிரச்சினையில் எத்தகைய நிலைபாட்டை எடுப்பார்கள் என்பதை விளக்குவதற்காகவும் போலிகளின் நிலைபாட்டை விமரிசிக்க வேண்டியிருக்கிறது.

சமரசங்களும், சரணடைதலும் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட சூழ்நிலையில் சி.பி.எம் கட்சியின் சந்தர்ப்பவாதம் அதன் அணிகளை ஊழல்படுத்துவதற்கு கூடுதல் பங்காற்றுகிறது. எமது தொடர்ந்த போராட்டத்தால் பல அருமையான தோழர்கள் சி.பி.எம் கட்சியிலிருந்து எம்மோடு இணைந்திருக்கின்றனர். ஒரு வேளை செல்வபெருமாள் இருந்திருந்தால் அது நடந்திருக்குமா, தெரியவில்லை.

எனினும் ம.க.இ.கவைக் கண்டால் தூரவிலகு என்பதை கடைபிடிக்கும் கட்சியில் எமது தோழர்களோடு இத்தனைகாலம் அது தவறென்றாலும் தொடர்ந்து விவாதித்த தோழர் செல்வபெருமாள் மறைவு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அவரை விடுத்து பதிவுலகில் இருக்கும் மற்ற சி.பி.எம் ஆதரவாளர்கள் எம்முடன் விவாதிப்பதை விரும்புவதில்லை. அந்த இடம் வெற்றிடமாகத்தான் இருக்குமோ என்பதும் தெரியவில்லை.

தோழர் செல்வபெருமாளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. தோழர் செல்வபெருமாளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கல்கள்

  • தோழர் செல்வபெருமாள்!தவறான ஒரு கட்சியுடன  அவர் இணைந்திருந்தாலும், தவறான தலைமையினால் அவர் வழிநடத்தப்பட்டிருந்தாலும். ஒரு சந்தர்ப்பவாத அரசியல் கொள்கையை பிரச்சாரம் செய்ய இவரை அவரது கட்சி பயன்படுத்தியிருந்தாலும், இணையவே முடியாத கோடுகளாக தீவிர அரசியல் முரண்பாடு கொண்டிருந்தாலும் தோழர்.செல்வபெருமாளின் மறைவு, மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. உயிர்கொல்லி நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இவர் எழுதுவதை நிறுத்தியபின்னர் சி.பி.எம் கட்சியில் வேறு எவருமே இவரின் செய்து வந்த வேலையை தொடராமல் போனது செல்வபெருமாள் எனும் தனிநபரின் ஈடுபாட்டை தனித்து காட்டுகிறது. இப்படிப்பட்ட நபரை சந்திக்க முயலாமலே இருந்த்து தவறோ என இப்போது சிந்திக்கிறன். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

 2. ///ஒரு வேளை செல்வபெருமாள் இருந்திருந்தால் அது நடந்திருக்குமா, தெரியவில்லை./// கருத்து வேறுபாட்டைக் கடந்த மனிதநேயம் இவ்வரியில் தெரிகிறது. தோழரின் குடும்பத்தாருக்கும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோருக்கும் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 3. உண்மையான தெளிவான பார்வையுள்ள ஒரு இரங்கல்

  நண்பர் சந்திப்போடு சில முறை விவாதங்களில் பங்கு கொண்ட அனுபவம் இருக்கிறது, அந்த நண்பரின் மறைவு அவர் பலமுறை நம் மீது விமரிசனங்ளையே பொழிந்திருந்தாலும் நமக்கு மிக்க வருத்தத்தையே தருகிறது.

  கலகம்

 4. தோழர் செல்வபெருமாளுக்கும் ம.க.இ.க தோழர்களுக்கும் நடந்த விவாதங்களை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். “உங்களுடைய கட்சி எது? உங்களது கட்சியின் எதிகால திட்டம்தான் என்ன?” என்று அவர் கேட்ட கேள்விகளும், அதற்கு மறு கேள்விகள் கேட்டு திசை திருப்பிய ம.க.இ.க. தோழர்களும், என்னால் மறக்கவே முடியாது. இனியும் தங்களை அது போன்று கேள்வி கேட்டு திரணடிக்க வேறு ஒரு ஆள்தான் பிறக்கவேண்டும்.

  • அப்படியே அந்த கேள்விகளுக்கு தோழர்கள் அளித்த பதிலை அவர் தளத்திலிருந்து இருட்ட்டிப்பு செய்ததையும், அப்பின்னூட்டங்களையே தனி பதிவுகளாக என தோழர்கள் வெளியிட்டதையும் வாசித்தீர்களா. கூகுளில்
   தே ‘தீ.பா.’ ர்த்தால் கிடைக்கும். மறைந்த தோழர் செல்வபெருமாள் வெளியிடாமல் இருட்ட்டிப்பு செய்த பின்னூட்டங்கள் எக்கச்சக்கம் இதை அவருடன் விவாதம் செய்த எவரும் கூறுவர்

   • உங்கள் பின்னூட்டத்தில் இடம் பெறுகிற வார்த்தைகளின் தரம்பற்றியும் அனைவரும் அறிவர்.

    • பின்னூட்டத்தில் வரும் வார்த்தைகள் தான் பிரச்சனை என்றால்இருந்தால் வினவு செய்த்தை போல https://www.vinavu.com/2008/12/24/cpim3/ அவைகளை வெளியிட்டு அம்பலப்படுத்த முடியுமே? 

     ஆனால் சந்திப்பு தளத்தின் பிரச்சனை அதன் சந்தர்ப்பவாத அணுகுமுறையே அதானால் தான் புரட்சிகர இயக்கங்களின் பதிவர்களோடு மட்டுமல்லாமல் பிற முற்போக்கு பதிவர்களிடமும் சந்திப்பு தளம் முரண்பட்டது.

     உங்களுக்கு தேடுதலில் சிரமம் இருக்க்கஃகூடாது என்பதற்காக ஒரு எ.க http://santhippiniruttadippu.blogspot.com/ இன்னமும் உண்டு. நீங்களும் சிபிஎம் பற்றி அவரிடம் விவாதித்த சுட்டியை கொடுங்களேன். எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

 5. cpim கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி ஏராளமான கேள்விகள் அவரை கேட்டிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் பொறுமையாக நிதானமாக பதில் அளிப்பார். அது ம.க.இ.க தோழர்களிடம் கொஞ்சம் குறைவுதான்.

  • நீங்கள் கேட்டு அவர் பதிலளித்த சுட்டி இருந்தால் தரவும், அனைவருக்கும் பயன்படும்

   • ஒருவரது மரண அஞ்சலியிலும் அவரை கேவலபடுத்த முயலும் உங்களை போன்றோரை என்னவென்று சொல்ல.

 6. அவருடன் ஈழம் தொடர்பான அவர் சார்ந்த சிபிஐ(மா(பாசிஸ்ட்) ) நிலைப்பாடு தொடர்பாகச் சண்டை போட்டிருக்கின்றேன். அக்கட்சியின் கொள்ளை… அதாவது கொள்கைப்படி, அவரும் சில சந்தர்ப்பங்களிலே பின்னூட்டங்களை அமுக்கியிருக்கின்றார். ஆனாலும், இயன்றவரை கீறல் ரெக்கோட்டினைத் திரும்பத் திரும்பப் போட்டேனும், தன் நிலைப்பாட்டினைச் சொன்னதற்கு நன்றியுடையேன்.

  அவரின் குடும்பத்தினருக்கு என் இரங்கல்.

 7. சில சமூகம்சார்ந்த இடுகைகளின் வழியாக சந்திப்பு அவர்களை அறிந்திருக்கிறேன். தான் சார்ந்திருக்கிற அமைப்பின் எல்லா நிலைப்பாடுகளையும் நியாயப்படுத்திவிடுகிற (அவை மற்றவர்களின் பார்வையில் விமர்சனத்திற்கு உட்பட்டதாக இருந்தபோதிலும்) சார்பு உந்துதல் மனநிலை அவரின் விவாதங்களில்(லும்) தென்பட்டிருக்கின்றன. ஆமாம் வெறெந்த அமைப்பு அல்லது கட்சியிலும்கூட உள்ளிருப்பவர்களுக்கு அவ்வமைப்பின் குறைகளை அல்லது தவறுகளைப் பொதுவில் ஒத்துக்கொண்டோ விமர்சித்தோ பேச ஜனநாயக உரிமை அல்லது கடமை இருக்கிறதா என்ன? என்ற கேள்வியும்கூடத் தொக்கி நிற்கவே செய்கிறது.

  ஆனாலும் விமர்சனங்கள், முரண்பாடுகளைக் கடந்தும் இணைய உலகில் என் போன்றவர்களுக்கும் இடுகைகள், பின்னூட்டங்கள்வழி அணுகவும், விவாதிக்கவும் எளியவராய்ச் சந்திப்பு இருந்திருக்கிறார். தன்மீது அள்ளித் தெளிக்கப்பட்ட மோசமான தனிப்பட்ட விமர்சனங்களுக்குக்கூட ஆவேசமடைந்து எதிராளியைத் தனிப்படத் தாக்காத நல் இயல்பையும் அவரிடம் கண்டிருக்கிறேன். இணையம்தாண்டிய அவரின் நல்ல செயல்பாடுகளையும் அறிந்தது அவர் மீதான மதிப்பைக் கூட்டுகிறது. அவர் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கு அவர் மறைவு தரும் வலியைக் கடக்கக் காலம் உதவட்டும்.

 8. தோழர் செல்வபெருமாள் , இந்த திருத்தல் வாதிகளின் முகமுடியை கிழித்தார் .. இவர்களின் சந்தர்பவாத திருகல் தாளங்ககளை தனது வலையில் பதிவு செய்துள்ளார் .. ஆனால் இவர்கள் இவ்வளவு நாட்களாக , தோழர் ரமேஸ் பாபு தான் சந்திப்பு வலையில் எழுதி வருவதாக சொல்லி அவரி பற்றி அவதுராகா பதில் அளித்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று… ஒரு  மனிதரின் விமர்சனத்தை தாண்டி தரம் தாழ்ந்து பதில் அளித்த .. அரை டிக்கெட் , கலக்கம் போன்றோர் இன்றும் தங்களின் அதி தீவர கற்பனையில் எழுதி உள்ளனர். நான் சி பி எம் உறுப்பினர் எங்களுக்கு இவர்களின் புத்தகத்தை படித்தல் நாங்கள் அவர்கள் பின் செல்லப்போவது கிடையாது.. காரணம் அவர்களுக்கு என்று தெளிவான அரசியல் பாதை கிடையாது . திட்டம் கிடையாது , தலைமை தெரியாது , இவர்களின்  ப்புதகம் விற்கும் இடமே எங்களின் மாநாட்டு  வாளாகம் தான்… தனை முகவரி அற்ற இந்த நபர்களை வெளிக்கொணர 1000  செல்வபெருமாள் உருவார்கள் ..செவ்வணக்கம்  தோழர் செல்வா பெருமாள்   

 9. நண்பர் வினவு… ஒவ்வொரு முறையும் தங்கள் தளத்திற்கு வரும் போது.. தளம் திறக்க வெகுநேரம் ஆகிறது.. ஏன் என்று தெரியவில்லை. அதையும் கொஞ்சம் கவனித்து சரி செய்தால்.. நன்றாக இருக்கும். பல முறை சொல்ல நினைத்து மறந்துவிடுவேன்.

  அதிகநேரம் எடுத்துக்கொள்வதால் வாசிக்கும் ஆர்வம் குறைந்துவிடுவதை தவிர்க்க முடியவில்லை. சரி செய்யவும். நன்றி!

 10. அவர் எந்தக் கட்சியை குழுவைச் சார்ந்திருந்தாலும், முனைப்போடும், தன கொள்கையில் ஒரு தீவிர நம்பிக்கையோடும் செயல்பட்டுள்ளார். அவரது மரணத்தை மௌனத்தில் ஏற்றுக்கொள்வதே நல்லது. கருத்துமோதல்களில் ஒரு மரணத்திற்கான மரியாதையை நாம் மறந்துவிட வேண்டாம்.

 11. கோட்பாடுகளிலும், கொள்கைகளிலும் எத்தனை மாறுபட்ட முரண்நிலைகள் இருப்பினும், சமூக பரப்பில் தன்னை இருத்தி பொருளாதார சிக்கல்களுக்கு நடுவே புரட்சிகர இயக்கங்களுக்குள்ளும், வெளியே வெகுஜன அமைப்புகளுக்குள்ளூம், செயல்படுவதும் விவாதிப்பதும் இன்றைய சூழல் சிக்காலானதெனினும் அதையெல்லாம் கடந்தும், கடமையாற்றியும் தங்களிடத்தில் மிகக் கடுமையான கருத்துப்போரையும் தோழர்.செல்வப்பெருமாள் நடத்தி வந்தவர் என்பதை அறிவோம் தாங்கள் குறிப்பிட்டவாறு விவாத அரங்கில் ஓர் வெற்றிடம்தான். அவருக்கு குழந்தைகள் அனைத்தும் சிறுவயது என்று அறியும்போது மனசு வருத்தமாகத்தான் உள்ளது. அவரின் இழப்புக்களால் துயருறும் அத்துனைபேருக்கும், குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அஞ்சலிகள், செவ்வணக்கம்!

 12. ஐயா ருத்திரன் அவர்களே சரியாக சொன்னீர்கள், இவர்கள் திருந்த போவது இல்லை. விமர்சனங்கள் என்ற போர்வையில் வசைமாறி பொழிவதையே நோக்கமாக கொண்ட மகஇக நன்பர் திருந்த வேண்டும் வாழ்நாள் எல்லாம் தனக்காக இல்லாமல் சமூக மாற்றத்திற்காக உழைத்த தோழர் சந்திப்பின் பணி யை தொடர்ந்து நடத்துவோம். எனது வீரவணக்கம்

  செல்வபெருமாளுக்கு செவ்வணக்கம்

  கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் கணினி ஊழியராக பணியாற்றி வந்த தோழர் செல்வபெருமாள் இளம் வயதிலேயே (40) நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பது துயரமிக்கது. அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் சேர்ந்து பல இயக்கங் களில் கலந்து கொண்டார். திருவொற்றியூர், எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளில் மதநல்லிணக்கத்தை உருவாக்கிட பாடுபட் டவர். தான் வாழ்ந்த பகுதியில் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளை கட்டிட முனைப் பாக செயல்பட்டார். இதன் தொடர்ச்சியாக கட்சி உறுப்பினரானார். கிளைச் செயலாள ராக சில ஆண்டுகள் பணியாற்றி திருவொற் றியூர் இடைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணி ஆற்றி வந்தார். கட்சியின் அழைப்பை ஏற்று கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக தீக்கதிர் சென்னைப் பதிப்பில் சேர்ந்தார். அங்கு அனைவரும் பாராட்டும் வகையில் பணியாற்றினார்.

  கட்சியின் மாநில மையத்திற்கு அனுபவம் வாய்ந்த கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தேவைப் பட்ட போது, செல்வப்பெருமாளை அழைத் தது. கட்சி முடிவு தான் என்னுடைய முடிவு என இன்முகத்துடன் ஏற்று மாநில மையத் திற்கு வந்து கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக கடந்த பத்தாண்டு காலமாக பணியாற்றி வந்தார்.

  அவர் கட்சியின் மாநிலக்குழு அலுவ லகக் கிளையில் உறுப்பினராக இருந்தார். அவர் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மட்டுமல்ல; அரசியல் ஆர்வமும், தத்துவ ஞானமும் உள்ள

  ஒரு முழுநேர ஊழியராக பரிணமித்தார்.

  ஒரு நிலையில் மீண்டும் களப்பணிக்குச் செல்ல வேண்டிய ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால், அலுவலகத் தேவையை கூறியபோது அதை ஏற்று மாநிலக்குழு அலுவலகத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வந்தார். கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணி செய்கிறபோது, இடையிடையே கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி பல நூல்களை படிப்பார்.

  கட்சி அலுவலகத்தில் உள்ள நூலகம் மட்டுமல்லாமல், பொது நூலகத்திலிருந்தும் நூல்கள் எடுத்துப் படித்து வருவார்.

  கட்சியின் தத்துவார்த்த இதழான மார்க் சிஸ்ட் மாத இதழில் பல கட்டுரைகள் எழுதி னார். மார்க்சிஸ்ட் மாத இதழை மாதந் தோறும் கணினியில் வடிவமைத்து அச்சுக்கு அனுப்பும் பணியை ஆர்வத்தோடு செய்து வந்தார். `மே தின வரலாறு’ என்று அவர் எழு திய சிறுபிரசுரத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டது.

  மேலும், சிங்காரவேலர் எழுதிய கட்டுரை களைத் தேர்வு செய்து தொகுத்தளித்து “என்ன செய்ய வேண் டும்?” என்ற தலைப் பில் அவரது முன்னு ரையோடு புத்தகாலயம் வெளியிட்டது.

  நமது கட்சியின் நிலைபாட்டை, நடை முறைக் கொள்கையை யாராவது விமர் சித்தாலோ, தாக்கினாலோ அல்லது கட்சியை அவதூறு செய்தாலோ அதற்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும், பதில் சொல்ல வேண்டும் என்று துடிப்பார். இதற்காக அவர் ‘சந்திப்பு’ என்ற வலைப்பக்கத்தை (க்ஷடடிப ளயீடிவ) உருவாக்கினார். அதில் அரசியல், பொருளாதார, சமூக பிரச்சனைகள் குறித்து பல கட்டுரைகள் தொடர்ந்து வெளியிட்டு வந் தார். அதில் ஓரிரு கட்டுரைகள் குறித்து மிரட் டல் வந்தபோது கூட, அதற்கெல்லாம் அஞ்சு பவன் நானல்ல என்று பதிலளித்தார்.

  12-4-2009 அன்று திருவொற்றியூரில் எஸ்சி/எஸ்டி சமூக சேவகர் மையம் என்ற தொண்டு அமைப்பினுடைய கூட்டத்தில் கலந்து கொண்டு ‘சிங்காரவேலரும் சாதி ஒழிப்பும்’ என்ற தலைப்பில் உரையாற்றி னார். தன்னுடைய உரையில் தீண்டாமை ஒழிப்பு பற்றியும், தலித் குழந்தைகள் கல்வி பெற வேண்டியதன் அவசியத்தையும் வலி யுறுத்தி பேசினார். அதை மையமாக வைத்து, தான் உருவாக்கிய வலைப்பக் கத்தில் கட்டுரை எழுதி இருக்கிறார். “தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த குழந்தைகள் கிராமத்தில் படித்தாலே ஆதிக்க சாதியி னருக்கு பிடிக்காது என்ற நிலையிலிருந்து சென்னை மாநகரத்திற்கு வந்து தனது கல் வியைத் தொடர நினைப்பவர்களுக்கு, ஆரோக்கியமான ஒரு சராசரி மாணவன் வீட்டில் என்னென்ன வசதிகளை அனுபவிப் பானோ அது போன்று குறைந்தபட்ச வசதி களை இந்த அரசால் ஏற்படுத்த முடியாதா?” என்பதே எனது கேள்வி.அரசின் முயற்சியை வலியுறுத்தும் அதே தருணத்தில், சமூகத்தில் ஓரளவு உயர்வு பெற்றவர்கள் இதுபோன்ற குழந்தைகளின் கல்விச் செலவினையும், அவர்களுக்கான உடை போன்றவற்றையும் வழங்கி உயர்த்திட முன்வருவதும் அத்தியா வசியமாகிறது. திருப்பதி வெங்கடாசலப் பெருமாளுக்கும் சபரிமலை ஐயப்பனுக்கும் வாரி வாரி வழங்கப்படும் பக்தர்களின் காணிக்கைகள் கோவிலின் சொத்துக்களை பெருக்க வைக்க உதவிடுமேயொழிய வேறு எதற்கும் பயன்படப் போவதில்லை. இப்படி வீண் விரயம் செய்யும் பொருள் உதவிகளை இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவலாமே” என தலித் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க அனைவரும் உதவிட வேண்டும் என தன்னுடைய கட்டுரையில் வலியுறுத்தி இருக் கிறார்.

  தோழர் செல்வபெருமாள் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிக் கொண்டே, அரசியல் பணியையும், அர்ப் பணிப்போடு செய்து வந்தார். கடந்த மே மாதம் இடையில் உடல் நலம் பாதித்து, சிகிச்சைக்காகச் சென்றவர் மீண்டும் அலுவலகத்திற்கு வர இயலாமலே போய்விட்டது. அவரை பாதித்த அந்தக் கடுமையான புற்று நோயிலிருந்து அவரை காப்பாற்ற முடியவில்லை. தொடர்ந்து அவருக்கு அளித்த சிகிச்சை பலனளிக்காமல் 22-01-2010 இரவு அவரது உயிர் பிரிந்தது. அவரோடு கட்சி அலுவல கத்தில் சேர்ந்து பணியாற்றிய மாநிலத் தலை வர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவரும் சனிக்கிழமையன்று காலையில் கூடி கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத் தினர்.

  அவர் பிறந்து வளர்ந்து, கட்சிப் பணி யாற்றிய திருவொற்றியூர் நகரத்தில் கட்சித் தலைவர்களும், தோழர்களும் இறுதி அஞ் சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றோம். அவரைப் பிரிந்து வாடும் துணைவியாருக்கும், 3 பெண் குழந்தைக ளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

  • போலி விடுதலைசந்திப்பின் புரட்சிகர அவதூறு பணியை தொடருவீரா?

 13. தோழருக்கு செவ்வணக்கம் தோழரை பிரிந்து வாடும் குடும்பத்துக்கு ஆறுதல்

 14. தோழர் செல்வபெருமாளோடு விவாதித்த சந்தர்ப்பங்கள் நினைவுக்கு வருகிறது.

  அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 15. தோழர் சந்திப்பு என்கிற செல்வபெருமாள் இறந்துவிட்டார் என தோழர்கள் செய்தி சொன்னதும், அதிர்ச்சியாக இருந்தது. அவருடனான ம.க.இ.க தோழர்களின் கருத்து மோதல்கள் நெஞ்சில் அலைமோதுகின்றன.

  புதிய கலாச்சாரத்தையும், புதிய ஜனநாயகத்தையும் படிக்காதே என வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டிருக்கு சிபிஎம்-ல் எஸ்.ஓ.சி.யின் திட்டம் முதற்கொண்டு தேடிப்படித்தவர் செல்வபெருமாள்.

  கடந்த 1978 ஆண்டு துவங்கி 2002 ல் நடந்த சிபி,எம். கட்சியினுடைய அனைத்து மாநாடுகளிலும் தனது அணிகளுக்கு சித்தாந்த பயிற்சி அளிக்கும் வேலை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது தவறு. தவறு என தொடர்ச்சியாக சுயவிமர்சனம் ஏற்றுக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

  32 ஆண்டுகளாக சித்தாந்த பயிற்சி அளிக்காமல் ஒரு கட்சி புறக்கணித்தது என்றால்… இரண்டு தலைமுறைகள் சித்தாந்த தெளிவு இல்லாமல் தான் கட்சியின் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என யாராலும் புரிந்து கொள்ள முடியும். அதனால், ம.க.இ.க தோழர்கள் கேட்கும் எந்த அரசியல் கேள்விக்கும் அரசியல் ரீதியான பதில் அளிக்காமல், அவதூறை மட்டுமே பதில் அளிக்க முடிகிறது.

  இந்த பின்னணியில் தோழர் செல்வபெருமாளை பொருத்திப் பார்க்கும் பொழுது, அவருடைய சுய ஆர்வம், உழைப்பில் தான் சித்தாந்த பயிற்சி கற்றிருக்கிறார். விவாதம் செய்திருக்கிறார் என புரிந்துகொள்ள முடிகிறது.

  இப்படி தொடர் விவாதத்தின் பொழுது தான், சிபிஎம் அணிகள் பலர் ம.க.இ.க பக்கம் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இந்த தொடர் விவாதத்தின் பொழுது, ஒரு கட்டத்தில் செல்வபெருமாளும் கூட நம் பக்கம் வந்திருக்கலாம். காலம் இல்லாது போய்விட்டது. சிபி.எம். வருந்துவதைவிட, நமக்கு தான் வருத்தம் அதிகம் வருகிறது.

  அவருடைய குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

  பின்குறிப்பு : 1978 துவங்கி 2002 வரைக்கும் என்ற குறிப்புக்கு ஆதாரம் – https://www.vinavu.com/2009/03/23/elec0902/ இந்த சுட்டியில் 10வது பின்னூட்டத்தை பாருங்கள். இது பத்திரிக்கையாளர் ஜவஹர் எழுதிய கம்யூனிசம் நேற்று இன்று நாளை என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

 16. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  *

  தோழர் குருத்து,
  சிறு திருத்தம் :

  புதிய கலாச்சாரத்தையும், புதிய ஜனநாயகத்தையும் மட்டுமல்ல எந்த சித்தாந்த நூல்களையும் படிக்காதே என வாய்மொழி உத்தரவு தங்கள் கட்சியில் வழங்கப்பட்டிருக்க, சிபிஐ (எம்-எல்) எஸ்.ஓ.சி.யின் திட்டம் முதற்கொண்டு தேடிப்படித்திருக்கிறார் செல்வபெருமாள்.

  🙂

 17. நான் மணி

  ம‌ரணம் இரங்கத்தக்கதுதான். ஆனால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் திட்டம் மற்றும் நடைமுறையை கேள்விக்கு இடமின்றி ஆதரித்து அதற்காக மற்றவர்களையும் அவதூறு பேசிய ஒருவரது மரணத்திற்காக வருந்த முடியாது. எளிய வர்க்கத்தில் பிறந்த நபராக இருந்தாலும் தமது தலைவர்களின் டாடாயிசத்தை ஆதரித்து அதற்காக டாடாவை எதிர்த்த ஏழை விவசாயி வீட்டுப் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய கட்சியின் கண்மூடித்தனமான ஆதரவாளரது மரணத்துக்காக எப்படி வருந்த முடியும்.

  • மணி, நகரத்துவாசி போலருக்கு, இங்க கிராமங்கள்ல ஊருல மாத்துகட்சிகாரன் பெரியகாரியத்துக்கு எல்லாரும் கட்சிவித்தியாசமில்லாம போவோம். உங்க விவிமு தோழருங்ககிட்ட கேட்டு பாருங்க.

   ஒரு அணியன் தலைமை வேறு அணிகள் வேறு, தலைமையின் மரணத்துக்கு வருந்த தேவையில்லைனு பேசுனா அது சரியான வாதம் ஆனா தவறான வழிகாட்டுதலுக்கு உட்படுத்தப்பட்ட அணிங்க என்ன தப்பு செஞ்சுது,ம் என்ன பொருத்தவரைக்கும் ஜோதிபாசுவும், செல்வபெருமாளும் ஒண்ணுன்னு நீங்க பாக்குறது தவறுன்னுதான் தோணுது. பாசு கடஞ்செடுத்த துரோகி, பெருமாள என்னால அப்படி பாக்கமுடியாது. ஒரு வேள நேருல தொடர்ந்து பேசியிருந்தா அவரோட கண்ண திறந்திருக்கலாம்,

   • செல்வபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்…..மார்க்சிஸ்டுகளை விமர்சிக்க உங்களுக்கு எந் தகுதியும் இல்லை…மக்களை புரிந்து கொள்ள muyarchiyaavadhu பண்ணுங்கள்   

    • தோழர் பாசு துரோகியா? ம க இ க பன்னாடைங்களா……
     நாய் கூட நன்றி உள்ளது…
     உங்கள நிக்க வச்சி சுடனும்..  

 18. //உங்கள நிக்க வச்சி சுடனும்.. // எப்படி பாஸ் சுடறது? நந்திகிராம், சிங்கூர்ல நம்ம ஆளுங்க பண்ண மாதிரியா பாஸ்? (பாஸ்-னு கூப்பிடுறது பழைய பேஷன்..தல அப்படிங்கலாமா? பாஸ்)

  • மேற்கு வங்கத்துள்ள 200௦௦க்கும் மேற்ப்பட்ட  மார்க்சிஸ்ட் தோழர்களை நர வேட்டை ஆடிநிங்கலே அது மாதிரி…cpm நிழல்ல  தான் உயிரோட நடமாட்ரிங்க…   

   • 200 பேர் கொல்லப்பட்டதாக பல்லை நரநரத்தீர்கள். ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்கள் ஆங்கிலேயருக்காக நிறையபேர் இராணுவ கூலி வேலை பார்த்தார்கள். இரண்டு முறை பெரும்பங்காக ஈழத்திற்கு சென்று நம் இந்திய இராணுவம் தமிழர்களை கொல்வதற்கு கூலிக்கு மாறடைத்தது. அதில் எதிர் தாக்குதல் நடத்தி பல ஆயிரம் பேர் கூட இறந்திருக்கலாம். ஆனால் அவர்கள் நமக்கோ, நம்மை போன்ற சராசரி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவா சென்றார்கள். அவர்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை நிலைநிறுத்த சென்றார்கள், இலங்கையில், ஈழத்தில் இந்தியா சுரண்டுவதற்கு சென்றார்கள், குறிப்பாக இந்திய ஏஜண்ட் முதலாளிகளுக்காக சென்றார்கள். அவர்களுக்கு தியாகம் செய்து செத்தார்கள். அதற்காக, அந்த வர்க்கத்திற்காக செத்தவர்களுக்காக நீங்கள் அழுவது எப்படி ஞாயமாகும். மன்மோகன் சிங் போன்றவர்களும், ப.சிதம்பரம் போன்றவர்களும் வேண்டுமானால் அழுவலாம், வருத்தம் தெரிவிக்கலாம். அதே போல்தான் மேற்குவங்கத்திலும். அவர்கள் டாடாவுக்காக, அந்நிய நாட்டு கம்பெனிகளுக்காக போலீசை பயன்படுத்தினார்கள், தன் கட்சி அப்பாவி ஊழியர்களை பயன்படுத்தினார்கள். தன் சொந்த மக்களுக்கு எதிராக வெறியூட்டினார்கள. அந்த வெறியின் எதிர்வினையால் இறந்தார்கள். முதலாளிய வர்க்கத்துக்கு கருத்து ரீதியாக துதிபாடும்போது நேரடி இழப்புகள் எழுதுவும் இருப்பதில்லை. அப்போது விவாதித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்காக இராணுவரீதியாக நேரடியாக இறங்கி அவர்களை நரவேட்டையாடும்போது அந்த மக்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். நீங்கள் உங்களை கடவுளாக நினைத்துகொள்கிறீர்கள் போல. மக்கள் வாழ்க்கையையே சூரையாடிவிட்டு அவர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து தூக்கியெறிய நினைக்கும் அனைவரும் அந்த சொந்த படுகுழியிலேயே புதைக்கப்படுகிறார்கள் என்பது வரலாறு. ஏன் இப்பொழுது காட்டுவளங்களை கொள்ளையடிக்க நினைக்கும், அந்நிய முதலாளிகளும், இந்நாட்டு முதலாளிகளும் தனக்கான படுகுழியை தானே தோண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரவில்லை. முன்னேற்றம் என்பது பெருவாரியான மக்களை அங்கிருந்து தூக்கியெறிந்துவிட்டு ஒரு சிறு கும்பலை அங்கு வாழவிடுவது என்பதல்ல. பெருவாரியான மக்களின் வாழ்க்கை தரத்தை எப்படி மேம்படுத்துவது என்பதுதான். வெறும் நிறுவனங்களை நிறுவிவிட்டாலே அங்கு மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறி விடும் என்று நினைக்கும் அசட்டு புத்திகாரர்கள் நிறையபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வருகை இந்தியாவை முன்னேற்றியது என்று எழுதும் பத்தாம்பசலி வரலாற்று ஆய்வாளர்கள் போலத்தான். நீங்களும் இதையெல்லாம் புரிந்துகொண்டு எந்த வர்க்கத்திற்கு ஒரு கட்சி போராடுகிறது என்பதை அதன் நடைமுறையிலிருந்து தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஏனேன்றால் அவர்கள் வார்த்தை ஜாலம் கூட சில நேரம் நம்மை ஏமாற்றிவிடும். எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம் மக்களையே எதிரியாக பார்க்கக் கற்றுக்கொள்வது என்பது நம் வீட்டையே கொளுத்துவதற்கு சமம். இரண்டு பேரும் விவாதிக்கும் போது உணர்ச்சியை விடுங்கள். அறிவுப்பூர்வமாக விவாதியுங்கள். எப்படி துரோகி என்பதை சிறு விளக்கம் கொடுத்தாவுது எழுதுங்கள். இந்த உணர்ச்சி அறிவாக மாற வழிவகுக்கும். நீங்கள் முன்னமே பின்னூட்டம் இட்டுவிட்டீர்கள் என்றாலும், ஒரு சுருக்கும் எழுதுவது ஒரு ஒழுங்குமுறையான விவாதத்திற்கு வழிவகுக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க