முகப்புகுடியரசு தினம் ஜாக்கிரதை !
Array

குடியரசு தினம் ஜாக்கிரதை !

-

துரை – சண்முகம் கவிதைகள்

 1. ’குடியரசு’ தயார்!
 2. எதிரி

1.  ’குடியரசு’ தயார்!

vote-012கூட்டத்தைக் கூட்டி வித்தையைக்காட்ட
தேசிய கீதம் தயார்…
மேளத்தை கொட்டினால் மேலே பார்ப்பவர்களுக்கு
தேசியக் கொடி தயார்…

அமெரிக்க சிங்கத்தின் வாயில் தலையை விட்டு
வீரத்தைக் காட்டிட பிரதமர் தயார்…

அன்னியக் கம்பெனிகளிடம் ஒப்பந்தம் போட்டு
இந்தியக் ’குடியரசை’ தெருவில் நிறுத்த கலைஞர் தயார்…

இந்திய இறையாண்மையின் வசூலை மறந்து
இலவசமாக நடித்துக் காட்ட ஜெயலலிதா தயார்…
குணச்சித்திர வேடத்தில் ’குடியரசை’ காப்பாற்ற
சோனியா தயார்…

அறிமுக வில்லன் ராகுல்காந்தி
அடவு கட்டி இந்திய தேசியம் ஆடத்தயார்…
பங்குச் சந்தையின் சண்டைக்காட்சியில்
ப.சிதம்பரம் கலக்கத் தயார்…

ஆடையைக் குறைத்துக்காட்ட திரைப்படம் தயார்…
ஆயுதக் கவர்ச்சிகாட்ட முப்படை தயார்…

கழனிகள் இழந்தவர் கண்டுகளிக்க
அலங்கார வண்டியில் பச்சைவயல்கள் பார்வைக்குத் தயார்…

கால்நடை இழந்தவர் மனதைத்தேற்ற
குதிரைப்படையின் அணிவகுப்பு தயார்…

எல்லை தாண்டும் ஏவுகணைகள்
எதிரியைப் பொடியாக்கும் வெடிகுண்டுகள்
பிரமிப்பூட்டும் பீரங்கிகள், துப்பாக்கிகள்
காலாட்படைகள்… கையாள்படைகள்
கண்ணாரப் பாருங்கள்.. எல்லாமே உங்களுக்காகத் தயார்..
உண்மையிலேயே உங்களுக்காகத்தான்.

நெல்லுக்கு விலை கேட்டு நீங்கள் போராடினாலோ,
நிலத்திற்கு உரிமை கேட்டு நீங்கள் நிமிர்ந்தெழுந்தாலோ
வளம் கொழிக்கும் காடுகள் மலைகளை
வளைக்கும் முதலாளிகளை நீங்கள் எதிர்த்தாலோ
தொழிலாளர் உரிமையென்று துடித்தெழுந்தாலோ

நிச்சயம் முப்படையுடன்
உங்களுக்காகவே ’குடியரசு’ தயார்!

———————————————————————–

2. எதிரி

கடற்கரையோரம்
குடியரசு தின அணிவகுப்புக்காக நின்றிருந்த
பீரங்கியைப் பார்த்துவிட்டு
பேரன் கேட்டான்;

இது எதுக்கு தாத்தா?

எதிரிங்களைச் சுட.

எதிரிங்கன்னா?

பாகிஸ்தான் மாதிரி
நம்மளோட சண்டைக்கு வந்து
நாட்டை புடிக்கப் பார்க்குறவங்கதான்.

நாட்டை புடிச்சு
என்ன பண்ணுவாங்க?

பேரனின் கேள்விகள் விரிவடைய
ஊன்றிக் கொள்ள
வார்த்தைகளைத் தேடினார் தாத்தா.

என்ன பண்ணுவாங்கன்னா…
அதாவது.. நம்ம ஊரை புடிச்சிகிட்டு
நம்பளையே அடிமையாக்கி
ஊம்… சொன்னதை செய்யுன்னு மிரட்டுவாங்க..

பயமுறுத்திய தனது பாவனைகளைப் பார்த்து
பேரனின் கேள்விகள் முடிந்துவிடும்
என எதிர்பார்த்தார் தாத்தா.

ஆராய்ச்சிப் பார்வையுடன்
அடுத்து கேட்டான் பேரன்,
அப்படீன்னா…
”எங்கிருந்தோ வந்து
நம்ம ஊரையே வளைச்சுகிட்டு
ஒழுங்கா வேலையை செய்! இல்லன்னா தூக்கிடுவேன்னு!
நோக்கியா நம்பளையே அடிமையாட்டம்
மிரட்டுறான்னு மாமா சொன்னாரே…

நோக்கியா யாரு தாத்தா…
பீரங்கி அவனையெல்லாம் சுடாதா?

பேரன் கேட்டதும்
பீரங்கியால்  சுட்டது போல்
என்ன செய்வதென்று புரியாமல்
தடுமாறிப் போனார் தாத்தா.

தடுமாறுவது தாத்தா மட்டுமா?

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. //”எங்கிருந்தோ வந்து
  நம்ம ஊரையே வளைச்சுகிட்டு
  ஒழுங்கா வேலையை செய்! இல்லன்னா தூக்கிடுவேன்னு!
  நோக்கியா நம்பளையே அடிமையாட்டம்
  மிரட்டுறான்னு மாமா சொன்னாரே…//

  உண்மை ….இந்த முதலாளிகளுக்கு தானே குடியரசு தினமும் சுதந்திர தினமும் சுதந்திர தினம் முதலாளிகள் சுதந்திரமாய் சுரண்டுவதற்கு

 2. //எல்லை தாண்டும் ஏவுகணைகள்
  எதிரியைப் பொடியாக்கும் வெடிகுண்டுகள்
  பிரமிப்பூட்டும் பீரங்கிகள், துப்பாக்கிகள்
  காலாட்படைகள்… கையாள்படைகள்
  கண்ணாரப் பாருங்கள்.. எல்லாமே உங்களுக்காகத் தயார்..
  உண்மையிலேயே உங்களுக்காகத்தான்.//

  நல்ல வினா
  வினவு

 3. பாட்டாளி வர்க்க குடியரசில் ஏன் என்றால் சிறைவாசம் இம்மென்றால் வனவாசம். ஸ்டாலின், மாவோ அமைதியாக எதிப்பை கையாண்டார்களா.

 4. //”எங்கிருந்தோ வந்து
  நம்ம ஊரையே வளைச்சுகிட்டு
  ஒழுங்கா வேலையை செய்! இல்லன்னா தூக்கிடுவேன்னு!
  நோக்கியா நம்பளையே அடிமையாட்டம்
  மிரட்டுறான்னு மாமா சொன்னாரே…//

  உண்மை..நானும் ரொம்ப அவ்திபடுகிறேன், என்னயும் ஒழுங்கா வேலை செய் …இல்லன்னா தூக்கிடுவேன்னு கம்பெனியில் இருந்து சொல்றாங்க … ப்ளீஸ் வினவு நீங்க ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணுங்க..நான் அங்க வந்து வேல எதுவும் செய்யாம ஜாலியா என்ஜாய் பண்ணனும்.. …. ஆனா ஒன்னு நான் வேலை செய்யலன்னாலும் மாச சம்பளம் ஒழுங்கா கொடுக்கணும்.. வேலைய விட்டு துக்ககுடாது…சம்பளம் கொடுப்பது வினவு என்னும் முதலாளி கடமை…வேலை பார்க்காம இருப்பது என்னோட உரிமை.. இல்லன்னா நானும் வினவு சம்பளம் கொடுக்கல அல்லது வினவு என்னை வேலைய விட்டு துக்குவேன்னு மிரட்டுறாங்கன்னு கவிதை எழுதுவேன்…….அம்புதடுத்தான் சொல்லிபுட்டேன்…..

  • அருமையா சொன்நீங்க மோகன். வினவு கண்டிப்பா ஒரு கம்பனி ஸ்டார்ட் பண்ணுவார் நாம எல்லோருக்கும் சம்பளம் குடுப்பார் (வேலை கிடையாது) . நம்மள கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டாங்க… நோக்கியா கம்பனி இனிமே அம்போ தான்.

   இந்த மாதிரி வக்கனயா கவிதை எழுத தான் லாயக்கு அறிவு கெட்ட வெட்டி ஜென்மங்கள்.

  • ஹா ஹா. எனக்கும் அப்படி ஒரு வேலை தேவைப்படுகிறது. அப்படியே ஒரு பேச்சு துணைக்காக என் நண்பனையும் கூட்டி வரட்டுமா ?

 5. சரியான கூற்று..சல்வா ஜுடுமை ஏவி விட்டு ஆதி வாசிகளை காலி பண்ணிவிட்டு மலையையும் கடலையும் சேர்த்து அமெரிக்கா காரனுக்கு தாரை வார்ப்பது தான் காங்கிரஸ் அரசின் இந்தியாவின் சாதனை..வேறென்ன சொல்ல..வாழ்க சனநாயகம்

 6. ‘குடி’அரசு தினம்.
  இன்று மட்டுமா?
  ஆண்டு முழுதும்..!
  ‘குடி’அரசின் ஆதரவு
  என்றென்றும்
  ‘குடி’மக்களுக்கே..!!

 7. குடிகளின் அரசாக அறிவித்து 60 ஆண்டுகள்கடந்துவிட்டன. 60 ஆயிரம் மதிப்பில் 1,5 இலட்சம் வீடுகள் ஏழைகளுக்கு – தமிழக அரசு அறிவிப்பு, அணு ஆயுத தடுப்பு சட்டம் அமெரிக்காவின் கையில். குடிப்பதற்கு டாஸ்மாக், பார்ப்பதற்கு இலவச வண்ண தொலைகாட்சி. உழைப்பதற்கு…………………………

 8. குடிகளின் அரசாக அறிவித்து 60 ஆண்டுகள்கடந்துவிட்டன. 60 ஆயிரம் மதிப்பில் 1,5 இலட்சம் வீடுகள் ஏழைகளுக்கு – தமிழக அரசு அறிவிப்பு, அணு ஆயுத தடுப்பு சட்டம் அமெரிக்காவின் கையில். குடிப்பதற்கு டாஸ்மாக், பார்ப்பதற்கு இலவச வண்ண தொலைகாட்சி. உழைப்பதற்கு…………………………

 9. /நிச்சயம் முப்படையுடன்
  உங்களுக்காகவே ’குடியரசு’ தயார்!/ – அரசின் உண்மை தோற்றத்தை இலக்கியமாக தந்துள்ளீர்கள். சிறப்பு

 10. செந்நிற தோழர்களுக்கு ஒரே கடுப்பு இவ்வளவு அவலம் இருந்தும் தங்களது கொள்கைகளை ஒரு சொறி நாய் கூட தீண்டுகிறது இல்லை என்று..

  • thambi says:
   February 2, 2010 at 9:51 pm

   அண்ணே,
   மக்கள் முன்னாடி வாங்க. உங்க திட்டத்தை சொல்லுங்க விவாதிப்போம்.
   எல்லா அரசியல் கட்சிகளையும் சகட்டுமேனிக்கி திட்டுறீங்க. எல்லா மனுஷங்களையும் மானாவாரியா திட்டுறீங்க. இந்த சமூகத்துல எதெல்லாம் தப்ப இருக்கு அப்படின்னு நீங்க சொல்றது தொண்ணூறு சதவீதம் ரொம்ப சரியாவே இருக்கு. ஆனா அதற்க்கான மாற்று என்ன அப்படின்னும் அதை அடைய எது வழி அப்படின்னும் சொல்லவே மாட்றீங்க. ஒரு வேலை, அதை சொல்லிட்டா, உங்களையும் மத்தவங்க இதே மாதிரி கிழி கிழின்னு கிழிப்பாங்களோன்னு ஒரு பயமா. கேள்வி கேட்டாலே அதற்கு பதில் கேள்வி மட்டுமே கேக்காம, பதில சொல்ல முயற்சி பண்ணுவீங்கன்னு நெனைக்கிறேன்

   • ரொம்ப கேள்வி கேக்காதீங்க தம்பி….
    உங்களுக்கு பதில் வராது…..
    எங்களுக்கு கேள்வி கேக்கமட்டுந்தான் தெரியும்……

 11. அண்ணே,
  மக்கள் முன்னாடி வாங்க. உங்க திட்டத்தை சொல்லுங்க விவாதிப்போம்.
  எல்லா அரசியல் கட்சிகளையும் சகட்டுமேனிக்கி திட்டுறீங்க. எல்லா மனுஷங்களையும் மானாவாரியா திட்டுறீங்க. இந்த சமூகத்துல எதெல்லாம் தப்ப இருக்கு அப்படின்னு நீங்க சொல்றது தொண்ணூறு சதவீதம் ரொம்ப சரியாவே இருக்கு. ஆனா அதற்க்கான மாற்று என்ன அப்படின்னும் அதை அடைய எது வழி அப்படின்னும் சொல்லவே மாட்றீங்க. ஒரு வேலை, அதை சொல்லிட்டா, உங்களையும் மத்தவங்க இதே மாதிரி கிழி கிழின்னு கிழிப்பாங்களோன்னு ஒரு பயமா. கேள்வி கேட்டாலே அதற்கு பதில் கேள்வி மட்டுமே கேக்காம, பதில சொல்ல முயற்சி பண்ணுவீங்கன்னு நெனைக்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க