முகப்பு"சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி! உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!"
Array

“சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி! உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!”

-

vote-012புதுச்சேரி – செம்பியப்பாளையத்தில் கடந்த பத்தாண்டுகளாக சுமார் 300 ஆண்-பெண் தொழிலாளர்களின் உழைப்பில் இயங்கி வருகிறது பவர் அண்டு அபிராமி சோப்ஸ் நிறுவனம். தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நசுக்கியும் சுரண்டியும், அரசின் சலுகைகள் – மானியங்கள் என்ற பெயரில் உழைக்கும் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தும் இன்று சென்னை, காரைக்கால், வடக்கே சில்வாசா எனப் பல இடங்களில் கிளைகளைப் பரப்பி வளர்ச்சியடைந்துள்ளது.

இங்கு பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் பணியாற்றிய எந்தத் தொழிலாளிக்கும் பணி நிரந்தர ஆணை வழங்கப்படவில்லை. உற்பத்தி அடிப்படையிலான முறையான ஊதியமும், ஊதிய உயர்வும், சீருடையும் வழங்கப்படுவதில்லை. உரிமைகளைக் கேட்டால் திருட்டுப் பட்டம் கட்டி பணிநீக்கம் செய்வது, விடுப்பெடுத்தால் வாரக்கணக்கில் வாயிலில் நிறுத்தி அவமானப்படுத்துவது, அடியாட்களை வைத்து மிரட்டுவது – என அடக்குமுறையை ஆலை நிர்வாகம் கட்டவிழ்த்து விடுகிறது. அதேசமயம், விளம்பரத்துக்காக சினிமா கழிசடை நடிகை தமன்னாவுக்கு பல கோடிகளை வாரியிறைக்கிறது.

சட்டபூர்வ உரிமைகளைக்கூட காலில் போட்டு மிதித்து, கொத்தடிமைத்தனத்தை ஏவிவரும் பவர் அண்டு அபிராமி சோப்ஸ் நிர்வாகத்தின் அட்டூழியத்தை எதிர்த்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை நடத்தினர். புதுச்சேரியில் இயங்கிவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, உடனிருந்து வழிகாட்டி போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதையடுத்து, தொழிலாளர்கள் இச்சங்கத்தில் திரண்டனர். தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக,  இரு மாதங்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்து பூர்வமாக நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது. ஆனாலும் அதை நிறைவேற்றாமல் இழுத்தடித்தது. தொழிலாளர் துறையிடம் சங்கத்தின் சார்பில் முறையிடுவதைக் கண்டு ஆத்திரமடைந்து 8 தொழிலாளர்கள் மீது பொய்க்குற்றம் சாட்டி விசாரணை நடத்தி மிரட்டியது. ரவுடிகளை ஏவி முன்னணியாளர்களை அச்சுறுத்திப் பார்த்தது. தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையால் இவையாவும் பிசுபிசுத்துப் போயின. ஆத்திரமடைந்த நிர்வாகம் கடந்த நவம்பரில், தனக்கே உரித்தான வர்க்க வெறியுடன் முன்னணியாளர்கள் 6 பேரைப் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கியது. கொதிப்படைந்த தொழிலாளர்கள் 9.11.09 முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சுற்றுவட்டார உழைக்கும் மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இப்போராட்டத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு. தலைமையிலான இந்துஸ்தான் யுனிலீவர் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதற்கிடையே, பொய்யான காரணங்களைக் கூறி உயர்நீதி மன்றத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களை ஆலைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று நிர்வாகம் தடையாணை வாங்கியது. உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக முடித்துக் கொண்ட தொழிலாளர்கள், 26.11.09 அன்று ஆலை மேலாளரின் வாகனத்தை மறித்து முற்றுகையிட்டு, பொய்க் காரணம் கூறி தடையாணை பெற்றதையும், ஆலை விளம்பரப் பலகையில் தடையாணைக்கு மாறாக அனைத்துத் தொழிலாளர்களும் ஆலைக்கு வெளியேதான் போராட வேண்டும் என்று அறிவிப்பு செய்ததையும் பற்றி கேள்வி எழுப்பினர்.

ஆலை வாயிலில் குவிக்கப்பட்டிருந்த போலீசு, இதுதான் சந்தர்ப்பம் என்று தொழிலாளர்களைச் சுற்றிவளைத்து தடியடித் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. இக்காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆலை மேலாளரைத் தொழிலாளர்கள் தாக்கியதாகவும், அதனால் கூட்டத்தைக் கலைத்ததாகவும் நியாயவாதம் பேசி நிர்வாகத்துக்கு விசுவாசமாக வாலாட்டுகிறது போலீசு.

போலீசின் வெறியாட்டத்தை எதிர்த்து பவர் சோப்ஸ் தொழிலாளர்கள் உடனடியாக இவ்வட்டாரமெங்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு, 27.11.09 அன்று வில்லியனூர் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். முதலாளித்துவச் சுரண்டலுக்கும் போலீசின் அடக்குமுறைக்கும் எதிராக, விண்ணதிரும் முழக்கங்களுடன் வர்க்க உணர்வோடு பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அணிதிரண்டு நடத்திய இந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் முன்னணியாளர்களும் இந்துஸ்தான் யுனிலீவர், மெடிமிக்ஸ், லியோ பாஸ்ட்னர்ஸ், கோத்ரெஜ் சாராலீ முதலான ஆலைகளைச் சேர்ந்த தொழிற்சங்க முன்னோடிகளும் கண்டன உரையாற்றினர்.

புதுவை மாநிலத்தை மறுகாலனியாக்கத்தின் வேட்டைக்காடாக்கிவரும் ஆட்சியாளர்களையும், அரசின் ஆதரவோடு சட்டபூர்வ உரிமைகளைப் பறித்து தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கிச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளையும், அவர்களின் விசுவாச ஏவல்படையாகச் செயல்படும் போலீசையும் தோலுரித்துக் காட்டி, உழைக்கும் மக்களை இம்மறுகாலனியச் சூறையாடலுக்கு எதிராகப் போராட அறைகூவிய இந்த ஆர்ப்பாட்டம், தொழிலாளர்களிடமும் உழைக்கும் மக்களிடமும் பெருத்த வரவேற்பைப் பெற்றது. பவர் சோப்ஸ் தொழிலாளர்கள் புதிய உற்சாகத்தோடு அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

–   புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. எத்தனை கோடிகள் விளம்பரத்திற்க்கு அள்ளி கொடுத்தாலும் ஏழைகள் மட்டும் இவர்கள் கண்ணுக்கு எதிரிகளாகவே தெரிவார்கள்.எவளோ ஒரு நடிகைக்கு அள்லி தரும் இவர்கள் தனது தொழிர்சாலையில் வேலை பார்த்து குடும்பம் நடத்துபவனை எட்டி உதைப்பது ஏன்?

  • It is called Marketing. In order to improve your Market Share, you need icons who can influence people. Unfortunately Tamilians are inspired by Tamanna. Whose fault is that? If Tamil people follow cricket, Marketers will use Sachin. If Tamil people follow literature, Marketers will pay Jeyamohan or Charu. மக்கள் எவ்வழியோ மார்க்கெட்டிங் அவ்வழி. Meanwhile there are so many regulations and labor laws. It is an elected government that creates and enforces these laws. If you are not getting justice, you have to blame only yourself. For installing a government and installing a system where bribe takes precedence over everything else. அத விட்டுட்டு பாவம் அந்த பொண்ணு தமன்னாவ வம்புக்கு.. எதோ அது புண்ணியத்துல தமிழனுக்கு மனசு ஜில் என்கிறது.

   • @@@மக்கள் எவ்வழியோ மார்க்கெட்டிங் அவ்வழி@@@ அது அப்பிடியில்ல சாரே… மார்கெடிங் எவ்வழியோ மக்கள் (தலையெழுத்து) அவ்வழி… தமன்னாவின் கவர்ச்சிதான் முதலில் மார்கெட் செய்யப்பட்டது, அதில் நம்து மக்கள் ஜொள்ளித் திரியவே பிரகு தமன்னா சோப்பு முதல் ஜட்டி வரை விற்பனையாகும்… சரோஜாதேவி சோப்பு டப்பா வித்த ஊராச்சே 🙁

    • On a more serious note, All degeneration can be attributed only to people. And that is noone else but us. Even an extreme capitalist like USA takes care of it’s labour and makes sure all the businesses ENFORCE these laws properly. India is more Labour friendly in terms of laws, but very weak when comes to enforcement. Why, all these businesses contribute to election funds. When in power, political parties help them stay out of trouble and encourage this exploitation. And our voters, will unconditionally support these parties either for money or blind loyalty. DECIDE YOU WILL NOT BE A PART OF/ ENCOURAGE CORRUPTION. Then no one will any reason to favor any one. India has all the fair laws. When it comes to execution, corruption gets in the way.
     Blaming the movie stars is not fair. There are cricketers, other sports men and muscians around the world who make trillion times more than Tamanna.

 2. இதே நிலைமைதான் பல நிறுவனங்களிலும் உள்ளது. சென்னை சில்க்ஸ் மற்றும் அதன் நிறுவனங்களிலும் இதே நிலைமைதான். பல ஆண்டுகளாக வேலை பார்த்த தொழிலாளர்களை வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்புவது இது போன்ற நிறுவனங்களில் நடந்து வருகிறது, இந்நிலை மாறுமா?

 3. இந்தியாவிலும் தென்னாசிய நாடுகளிலும் தொழில் வளர்ச்சி வர்த்தகம் என்ற பெயரில் நடக்கும் அநியாயங்கள் மிக மோசமானவை பல மேற்கு நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் சமூக சீர்திருத்தம், பெண் விடுதலை ,பலம் வாய்ந்த தொழில் சங்கங்கள், ஊடக சுதந்திரம் ,வேரூன்றிய உண்மையான ஜனநாயகம் ,சுதந்திரமான நீதித்துறை என்ற அடித்தளங்கள் இருப்பதால் முதலாளித்துவம் சாமானிய மக்களை மிக கேவலமான மோசமான முறையில் பாதிப்பது குறைவு ஆனால் இந்திய மற்றும் தென்னாசிய நாடுகளில் மேலே சொன்ன பலமான அடித்தளங்கள் இல்லாத படியால் பொருளாதார வளர்ச்சி என்பது பல சாமானியர்களை நரகத்தில் தள்ளிக் கொண்டு இருக்கிறது.மிகச் சொற்ப பேர்வழிகள் மட்டும் பணத்தை குவித்து அனுபவிக்க மற்றவர்கள் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது .
  இரண்டு வீத மக்கள் பணத்தில் புரளுகிறார்கள் எழுபது வீத மக்கள் மூன்று வேளை உணவுக்கே அல்லாடுகிறார்கள் மிகுதியான படித்த நடுத்தர மக்கள் தங்கள் நலனிலே மட்டும் அக்கறையுள்ள தம்மை சுற்றியுள்ள மக்களைப் பற்றி அக்கறை இல்லாத சமூகப் பிரக்ஞை இல்லாத மனிதாபிமானம் துறந்த நுகர்வோர் கலாச்சாரத்தில் மட்டும் திளைத்துப்போய் உள்ளவர்களாக உருமாறிக் கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் தமன்னா போன்றவர்கள் தமிழ்நாட்டில் வந்து கோடி கோடியாக அள்ளுகிறார்கள் நான் இங்கே தமனாவை தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை ,இந்த நிலைக்கான காரணிகளை விமர்சிக்கிறேன்.

  • /////பல மேற்கு நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் சமூக சீர்திருத்தம், பெண் விடுதலை ,பலம் வாய்ந்த தொழில் சங்கங்கள், ஊடக சுதந்திரம் ,வேரூன்றிய உண்மையான ஜனநாயகம் ,சுதந்திரமான நீதித்துறை என்ற அடித்தளங்கள் இருப்பதால் முதலாளித்துவம் சாமானிய மக்களை மிக கேவலமான மோசமான முறையில் பாதிப்பது குறைவு//// இல்லை. அடிப்படை காரணம் அங்கு ஜனத்தொகை மிக குறைவு. பணவீக்கமும் குறைவு. Demand for labour is high while supply of labour is less when compared to over populated and impoversihed nations like India.
   ஆனால் மேற்க்கு அய்ரோப்பிய நாடுகள் hire and fire policy தான். வேலைக்கு பாதுகாப்பு உத்திரவாதம் கிடையாது. எந்த (அர்சு) வேலைக்கும் தான். எந்த நிமிடமும் வேலை போகும் நிலைமை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் அங்கு உள்ளது. மாற்று வேலைகளும், வேலையில்லாதவர்களுக்கு அரசு உதவிகளும் உள்ளதால் பெரிய சிக்கல்கள் இல்லை. Work ethics and efficiency of labour அங்கு மிக மிக அதிகம்.

   இங்கு நேர் எதிர். அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் குறைவு. மொத்த தொழிலாளர்கள்களில் அவர்களின் விகிதம் மிக குறைவு. ஆனால் அவர்களுக்கு job security மிக அதிகம். அதனால் indisipline and inefficency அதிகம். முக்கியமாக அரசு துறை நிறுவனங்களில் இது மிக மிக அதிகம். கடமையை செய்ய முயலாமல், உரிமைகளை மட்டும் கோரும் மனோபாவம் மிக அதிகம்.

   ஆனால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு job security இல்லை. அளித்தால் பிறகு அரசு துறை நிறுவனங்களின் நிலைக்கு வழிவகுக்கும் என்பதே வரலாறு. விலைவாசி உயர்வு, மிக அதிக மக்கட்தொகை : இவை தொழிலாளிகளின் வாழ்க்கை தரத்தை இங்கு கொடுமையான நிலைக்கு தள்ளியுள்ளன. அதனால் கொடுமையான working conditions, low pay இங்கு மிக அதிகம். 150 ஆண்டுகளுக்கு முன் மே.அய்ரோப்பாவின் நிலையை ஒத்தது இது. மாறுதல் வர பல பத்தாண்டுகள் ஆகலாம். 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைக்கு இன்று ஓரளவு பரவாயில்லை என்று சொல்லாம்.

   By the way, தமண்ணாவும் ஒரு ‘தொழிலாளி’ தான். கேவலமான சொல்லாடலை கொண்டு அவரை இழிவுபடுத்துவது ஆணாதிக்கத்தை காட்டுகிறது. அவரின் சம்பளம் அவரின் ‘உபரி மதிப்பை’ க்கு நிகராக அமைக்கிறது !!!! ஆனால் இன்னும் 15 ஆண்டுகள் கழித்து இதே தமண்ணாவிற்க்கு இந்த ‘வேலை’ கிடைக்காது. மேலும் விளம்பர உலக விலைவாசி தெரியாமல் கோடிகள் என்று சொல்கிறீர்கள். அவருக்கு maximum சில லச்சங்கள் கிடைத்திருக்கலாம்.

   • பவர்சோப் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை பற்றியெல்லாம் அதியமானுக்கு கவலையில்லை. தனது உடலை காட்டி ரசிகனது உணர்ச்சியை பணமாக சுரண்டும் தமன்னாவுக்கு இன்னும் பத்தாண்டுகள் கழித்து வேலையிருக்காது என்று கவலைப்படுகிறார். இப்படி வேலையில்லாமல் இருக்கும் ஹேம்மாலினி, ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா முதலான தொழிலாளிகளெல்லாம் இப்போது பிச்சையெடுத்துத்தான் கால் வயிற்று கஞ்சி குடித்து வாழ்கிறார்கள். ஆதாரம் வேண்டுவோர்க்கு அதியமான் லிங்குகள் நிறைய கொடுப்பார்.

    • அதியமான் கூறுவது எதார்த்த உண்மை, ப்ரிச்சனைகளின் கருவை பற்றி.அறிவுபூர்வமாக எழுதிருக்கிறார். வினவு மைய ப்ரச்சனையை சரி செய்வது எப்படி என்று எழுதாமல் தமான வின் மீது உள்ள வெறுப்பை தான் இங்கு காட்டிருக்கிறாய். ஒரு சாதரண வினவு பதிவிர்கே உங்கள்ளுக்கு தமன்னா போட்டோ தேவைப்படும் போது முன்னூறு பெயருக்கு வேலை தரும் கம்பெனி அவரை விளம்பரதிற்கு காட்டினால் என்ன தவ்று? உங்கள்ளுக்கு உண்மையிலேயே அக்கறை இறுந்தால் பவர் சோப்பு கம்பெனியின் முதலாளி படத்தை அல்லவா இங்கு போட்டிருக்க வேண்டும், உங்கள் கையாளாக தனத்தை என்னய்யா தம்மன்ன மேலே காட்டுகிறீர்கள்? இதிலே மிரட்டல்வேறு செய்கிறீர்கள். பெண்களை இழிவு படுத்துவது உங்கள்ளுக்கு ஒரு வாடிக்கையாக போயிவிட்டது.

    • மணிவண்ணன் உத்து பாருங்க, அது பவர்சோப் விளம்பரம்! உங்கள யாரு தமன்னா மூஞ்ச மட்டும் பாத்துட்டு பி்னஃனூட்டம் போட சொன்னது??????

    • தமன்னா நடித்த குறிப்பிட்ட விளம்பரத்தை போட்ட்தில் என்ன தப்பு. இந்த பதிவை வாசித்தவர்களன் கண்ணில் இனி இந்த விளம்பரம் படும் போது நிச்சயம் இந்த பதிவின் நினைவும் பாடுபடும் தொழிலாளிகளின் நினைவும் வரும். வினவு செய்தது புத்திசாலித்தனம்,

     அது சரி மணிவண்ணன் லீனாவுக்கு தமன்னாவும் மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு பெண்ணாய் தெரிவார்களோ

    • ஆதேபோல தான் அந்த கம்பெனி விளம்பரதிருக்கு தமன்னாவை காட்டியது தவறில்லை, இந்த பதிவிரிக்கு தமன்னாவின் பெயரும் தேவை இல்லை, பவர் சோப்பு படைத்தையோ அல்லது அதன் முதலாளி படத்தையோ உபயோகம் செய்திருந்தால் இன்னும் ஆழமாக இருந்திருக்கும். நாளை இந்த கம்பெனி சிம்ரனை விளம்பரத்துக்கு ஊபயோகம் செய்தல்?

    • பிரச்சனையே ஒரு கழிசடைக்கு அள்ளிக் கொடுக்க நோகாத நிருவாகம் தொழிலாளிக்கு கிள்ளிக்கொடுக்க மூக்கால் அழுவதேன். எல்லாம் மலிவாத சதை இரசனைதானே. நேற்று சிம்ரன் இன்று தமன்னா நாளை வேறொரு கழிசடை… எல்லோரும் குத்தாட்டம் போட்டு கோடிக்கணக்கில் அள்ளுவார்கள், தொழிலாளர்கள் விரல் சூப்பிக்கொண்டே நிற்க வேண்டியதுதானா? தட்டிக்கேட்டா போலீசா… இதே கேள்வியை இப்படிக்கேட்டுபாருங்கள்.. அல்லும் பகலும் அயராது உங்களுக்கு உழைத்துகொட்டுவது உங்கள் பெண்டாட்டி நீங்கள் வாங்கும் சம்பளத்தை வேறொரு பெண்ணின் மீது ்செலவு செய்தால் துடப்பக்கட்டை பிய்ந்துபோகுமா போகாதா?..

   • என்னுடைய குடும்பத்தின் பணவரவும் ஜீவனும் இந்த ‘வேறொரு பெண்’ செய்யும் விளம்பரத்தின் வாயிலாகதான் வருகிறது என்றால் எந்த தொடபகட்டையும் ப்பியாது. ஒரு கம்பெனி வளர்ச்சி (sustainable growth) அடைய வேண்டும் என்றல் மூன்றில் ஒரு பங்கு விளம்பரங்களுக்கு செலவ செய்ய வேண்டியது அவசியம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. எந்த ஒரு வீட்டிலும் ‘ஆகா இந்த கம்பனில் முன்னூறு தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்’, என்றா? இந்த சோப்பை வாங்குகிறார்கள், அல்ல இதை வாங்கினால் தமன்னா போல வெளுப்பாக உடைவுடுதலாம், பெரியயிடத்து சீமான் சீமாட்டிகள் போல இருக்கலாம் என்பதனால்தானே. இந்த மனோபாவம் மாறாதவரை தமன்னா சிம்ரன் போன்றவர்கள் விளம்பரங்கள் செய்யத்தான் வேண்டும் அவர்கள் மவுசு கூடிக்கொண்டுதான் போகும், அவர்கள் மேல் வெறுப்பை காட்டுவது அனர்தம், ‘தமன்னா கழுச்டை’ என்றெல்லாம் இழிவுபடுத்துவது சிறப்பு இல்லை.

    • மணிவண்ணன்,
     Sustainable Development ஆ விளம்ரத்துக்கு காரணம் முதலாளித்துவத்தின் anarchy and chaos which has resulted in a situation where the production exceeds the demand தான் உலகத்திலேயே வக்கீல்கள் அளவுக்கு கேவலமான தொழிலான விளம்பரத்துக் காரணம்…தமன்னாவின் விளம்பரத்துக்கு கோடிகள் செலவழிக்கும் அளவுக்கு காசுள்ள Market Leader நிறுவனம், தொலாளிக்கு ‘அல்வா’ கொடுப்பதை நீங்கள் எப்படி நியாயப்படுத்தப்போகிறீர்கள்…

     கொசுறு கழிசடை என்றால் என்ன்.. ரிப்பீட் பின்னூட்டம்

     கழிசடை என்றால் என்ன? எனக்கு தெரிந்த வரை ஆக கேவலமானவை, ஒதுக்கவேண்டியவை! இந்த சமூகத்தை கெடுத்து நாசமாக்கும் எதுவானாலும் அது கழிசடையே! கழிசடைகளின் அரசி-அரசன் சினிமா, அந்த சினிமாவில் வரும் புயல்கள் தளபதிகள் கனவுக் கன்னிகள் இன்னும் இன்னபிற ரசிகர்களை சுண்டிஇழுக்கும் ஜந்துக்களும் கழிசடையே. இதை மறுத்தால் பிட்டுப்படத்தை மறுக்கும் தகுதி போய்விடும், ஏனெனில் தமன்னாவுக்கும் சகிலாவுக்கும் என்ன வித்தியாசம், மார்புக் கச்சை தவிர?????

    • நீவீர் கூறும் ‘ கழுசடை’க்கானா விளக்கத்தை நாம் ஏற்றுகொள்கிறோம். தமன்னா என்பவள் ஒரு தனி நபர் அவரை இவ்வாறு அவதூறாக பேசுவது நாகரீகம் கிடையாது. இதே பவர்சோப்பு கம்பெனி நம்பிடம் வந்து ஒரு கோடி கொடுக்கிறேன் விளம்பரத்தில் நீங்கள் நடியுங்கள் என்றல், நாம் மாட்டோம் என்றா சொல்லப்போகிறோம் ? அல்லது உங்கள் கம்பெனியில் உள்ள தொழிலாளர்களுக்கு சரியான சலுகைகள், ஊதியம் குடுக்கிறீர்களா ? என்று கேள்விகள் கேட்டு பின்னர் ஒத்துக்கொள்வோம்மா? அதுவும் ஒரு கோடி வேண்டாம் இருவதயிரம் ரூபாய் போதும் அதுதான் என் தகுதிக்கு ஏற்புடையது என்று கூறுவோமா ? தமன்னாவும் அதை தான் செய்திருக்கிறார்கள், அவர்கள் ஒரு தனி கம்பெனியும் கூட அவர் வெற்றியை சார்ந்து பல தொழிலாளர்களும் இருக்கிறார்கள், மேக்கப் ம்மான், டிரைவர், பி ஆர், என்று, அவர்களுக்கு எல்லாம் என்ன பதில் கூற போகிறீர்கள் ?

     பவர்சோப்பு தொழிலாளர்கள் மீது அனுதாபம் தான் ஆனாலும் பத்து பண்ணிரண்டு வருடம் இப்பிடித்தான் நடக்கிறது, இன்று தான் போராட்டத்தில் இறங்கிநோம் என்றல் கோபமும் வருகிறது. இவ்வளவுகாலம் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இதுவெறும் தொழிலாளர் பர்ச்சனை போல தெரியவில்லை, போடியாளர்கள் (competitors) மற்றும் அரசியல் மற்றும் Greed செய்யும் வேலையாக இருக்ககூடும் என்னும் சந்தேகம்தான் வலுக்கிறது. இன்று திருப்பூர் பாக்டரீயில் பல அரசியல்செல்வந்தர்களிடம் இரையாகிவிட்டது, நன்றாக இயங்கிகொண்டு இருக்கும் வியாபாரத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க பல யுத்திகள் கையாளப்படுகின்றன, அதில் ஒன்று இதுவாகவும் இருக்கலாம் என்னும் சந்தேகம் என்னக்குள் உதிக்கத்தான் செய்கிறது.

 4. தமன்னா நடித்ததால் தான் இந்த பதிவை இதில் படிக்க முடிந்தது. தொழிலாளர்களின் பிரச்சினைகள் தெரிய வந்தது. எனவே தமன்னாவை குறை கூறி பிரயோஜனம் இல்லை.
  ஆலை நிர்வாகத்தை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

 5. அருமையான கட்டுரை. இதுபோல் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தொழிலாளர்களின் ரத்தங்களை உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன.

 6. ஐயா,

  இவ்வளவு தெரிந்த தாங்கள், தொழிலாளர்களின் வேலைத்திறன் பற்றி ஏன் எழுதுவது இல்லை..? அடிப்படை உரிமைகள் பற்றி பேசும்போது, தொழிலாளர்களின் உற்பத்தி திறன் குறைந்து கொண்டே போவது பற்றி ஏன் சிந்திப்பது இல்லை..? அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர் உரிமையை ஒப்பிடுவதைப் போல நம் தொழிலாளர்களின் உற்பத்தி திறமைகளையும் ஒப்பிட வேண்டுமல்லவா..?

 7. நல்லா இருக்குற தொழிற்சாலையை மூடினால்தானே உங்களுக்கு பொழப்பு நடக்கும். ரொம்ப காலமா அததான பண்ணிகிட்டு இருக்கிக.

  • பிள்ளைவாள் தொழிற்சாலைய முடிடுவான்னு பயம் காட்டியே இன்னும் எத்தன நாளைக்கு அடிமையா இருக்க சொல்றிஙக? வேலை செய்ய ஆள் இல்லன்னாலும் தொழிற்சாலைய மூடனும் அந்த பயம் ஒரு முதலாளிக்கும் இல்லயே அது ஏன்? 

   • கூலிக்காரன் கேக்கறத கொடுத்துட்டு அவன் மணியாட்டிகிட்டு போவானா.கம்பெனிகாரன் நஷ்டப்படும்போது தொணைக்கு நிப்பான?

    • பிள்ளைபூ… அப்படித்தான் கூப்பிடுவேன்!!! என்ன மயிறுக்கு சாதிப்பேரு????வினவு இந்தாளு சாதிப்பேரோட பின்னூட்டம் போட்ட எதுக்கு அனுமதிக்கிறீங்க????

    • கம்பனிக்காரன் தமனாவுக்கு காச குடுத்து நஷ்டப்பட்டா ஏன் அத கூலிகாரன் சுமக்கனும்? அப்பறம் நஷ்ட்டப்பட்டா என்னப்பன்றதுங்கிறது நல்ல கேள்வி ஆனா எந்த முதளாலியும் நஷ்டப்படுறது இல்ல. அதே மாதிரி கோடிக்கணக்குல சம்பாதிச்சவன் லாபத்த பிரிச்சா குடுக்க்றான் பிள்ளை? மாசம் முழுக்க வேல வாங்கிட்டு கடைசியாதான் கூலி குடுக்குராங்க மொதல்லயே எவனும் தர்றதில்ல நீங்க நஷ்ட்டப்பட்டா அந்த மாசம் மொதல்ல எங்க வயுத்தில தான அடிக்கிறீங்க 

 8. அய்யா, நீங்கள் சினிமா வை கழிசடை என்கிறீர்களா அல்லது தமன்னாவை சொல்கிறீர்கள? 

 9. கோவை பிரிகால் ஆலையில் நடந்த ’புரட்சி’கரமான ’வர்கப்போரில்’ ஒரு முதலாளித்துவ ’கைக்கூலி’ கொல்லப்பட்டதை போல் புதுச்சேரியிலும் நடக்காமல் இருந்தால் சரி. கோவையில் நடந்த படுகொலையை கொஞ்சம் கூட நடுனிலைமை இல்லாமல் நியாயப்படுத்தினீர்கள். சரி, அப்படுகொலை மூலம் தொழிலாளர்கள் சாதித்தது என்ன ? அவர்களின் பிரச்சனைகள் தீர்ந்தா ? எதிர்காலத்தில் பிரக்கால் மற்றும் இதர நிறுவனங்கள் புதிய தொழில்றசாலைகளை அங்கு துவங்க, அல்லது விரிவுபடுத்தும் எண்ணத்தை கெடுத்த ‘சாதனை’ மட்டும் தான் மிச்சம். அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி, மேலும் பல தொழில்ளார்களுக்கு வேலை கிடைக்கும் சாத்தியத்தை குலைத்த பெருமை தான் மிச்சம்..

  இதே போல் புதுச்சேரியிலும் ’சாதனை’ புரியாமல் இருந்தால் சரி.

  • அதியமான்,
   நடுநிலை என்பதே டுபாக்கூர். வினவை வேறு நடுநிலை எடுக்க சொல்கிறீர்கள்! நிர்வாகத்தின் தொட்ர்ச்சியான அடக்குமுறையால்… தொழிலாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்த கொலை அது. அதற்காகவெல்லாம், தொழிற்சாலைகள் தொடங்காமல் போய்விட மாட்டார்கள் முதலாளிகள். கவலைப்படாதீர்கள்

 10. இந்தியத்தொழிற்சாலைகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பலர் இறந்தும் இருக்கின்றனர். அவர்களைப் பற்றியோ நசுக்கப்படும் உரிமைகள் பற்றியோ முதலாளிகளுக்கோ அல்லது தூக்கிப்பிடிப்பவர்களுக்கோ அக்கறையில்லை. நெருக்கிக்கேட்டால் அதுவும் தவறு தான் என்று போகிறபோக்கில் சொல்லுவார்கள். ஆனால் தொழிலாளிகளுக்கு எதிராக எது கிடைத்தாலும் அதை ஆயுதமாக பிரயோகிப்பார்கள் உற்பத்தித்திறன் முதல் கோவை நிகழ்வுவரை. கோவையில் கைக்கூலி கொல்லப்பட்டதால் விரிவாக்கமா புதிய தொழிற்சாலைகளோ ஏற்படாமல் நின்றுபோனதாக நினைப்பது பொன்மாற்று(பம்மாத்து) தான். அவர்களுக்கு ஒரு புதுச்சேரி இல்லையென்றால் பழையசேரி; கோவை இல்லையென்றால் குடிவை அவ்வளவு தான். கசக்கிப்பிழிந்து லாபமீட்டத்தான் உலகம் முழுவதும் தொழிலாளர் பட்டாளம் கொட்டிக்கிடக்கிறதே. கிடைக்கும் லாபம் ஒன்று தான் அவர்களுக்கு குறிக்கோள், மற்றதெல்லாம் கழிப்பறை காகிதம் தான். லாபம் கிடைக்குமென்றால் தமன்னாவை சாகும்தருவாயிலும் உபயோகிப்பார்கள். மாறாக வேலை கொடுப்பதற்காக எந்த முதலாளியும் ‘சாதனை’ செய்வதில்லை.

  செங்கொடி

 11. பு.பெ.வி.மு தோழியரை அனுப்பி தமன்னாவிற்கு வகுப்பெடுக்க சொல்லவும்.யார் கண்டது அவர் மனம் மாறி/திருந்தி மார்க்ஸிஸ்ட் ஆகக்கூடும்.

 12. ////பவர்சோப் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை பற்றியெல்லாம் அதியமானுக்கு கவலையில்லை///

  அப்படினின்னு நீங்களே முடிவு செய்துகொள்ள வேண்டாம். அங்கு உண்மையில் என்ன
  நடக்கிறது என்று இரு தரப்பையும் நேரில் விசாரித்தால் தான் முழு உண்மைகள் தெரியும். நன்றாக, ஒழுங்காக வேலை செய்யும் ஒரு தொழிலாளியை காரணம் இல்லாமல் மாற்ற / நீக்க முயலமாட்டார்கள். வேலையை நேர்மையாக, ஒழுங்காக செய்யாமல், சங்கத்தின் ‘பலம்’ என்ற பின்னனியை கொண்டு ஏய்க்கும் தொழிலாளர்களை பற்றி கேள்விப்பட்டதில்லயா ? ரயில்வே சங்கமான SRMUவின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் work ethics மற்றும் நேர்மை பற்றி உங்களுக்கும் நன்றாக தெரியும் தான்.

  பவர் சோப்பில் நடந்தது பற்றி முழு உண்மைகளும் வெளி வரவில்லை. 1980கள் வரை
  தொழிற்சங்க போராட்டங்கள் என்ற பெயரில் எத்தனை தொழிற்சாலைகளை இழுத்து மூட வைத்தார்கள், அவற்றின் net result என்னவென்று 50 வயதிற்க்கு மேற்பட்டவர்களிடம் கேட்டால் தெரியும். மும்பாயில் 80களில் நடந்த பெரும் வேலை நிறுத்தத்தின் நிகர விளைவு, அங்கு 100 ஆண்டுகளாக இருந்த நூற்பாலைகள் அனைத்தும் வேறிடம் சென்றுவிட்டன. பல லச்சம் தொழிலாளர்கள் வேலை இழந்ததுதான் மிச்சம். இது போல பல உதாரணங்கள்.

  • சிப்லா என்ற மருந்து நிறுவனம் பெங்களூர் கிளை  இயங்கி வருகிறது அங்கு குறைந்தபட்ச எழுத படாத வேலை நேரம் பத்து அதிகபட்சம் இருபது நான்கு.பத்து மணி நேரத்துக்கு முன்னால் வெளியே செல்ல முடியாது.மனுதவள அலுவளிரடமும் புகார் செய்ய இயலாது அவருக்கும் அதே விதி தான்.அதிகமான வேலை நேரத்துக்கு பணம் கிடையாது .உணவு நம் செலவில் ஒரு தேநீர் கூட கிடையாது.யாரிடம் சொல்ல? நீதிமன்றம் சென்றால் வேறு எவன் வேலை கொடுப்பான் அதான் இப்போது முன்பு வேலை செய்த நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்ட பிறகே வேலை கொடுக்கிறார்களே .முக்கியமாக அங்கு சங்கம் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை .மாதம் இருமுறை இரு நாள் விடுமுறையில் ஒரு நாள் வேலைக்கு வர வேண்டும் சாப்பாடு வருபவன் செலுவு.மேலும் எனக்கு தெரிந்த நிறுவனங்களின் பெயர்கள் Strides, பயோகான்…..நண்பர்கள் யாரேனும் இருந்தால் தொடரவும் 

   • எனக்கு தெரிந்த நண்பன் பயோகான்னில் வேலை செய்தார் அவரும் இதே புகார்தான் கொடுத்தார். போராட்டம் எல்லாம் செய்வது செயல்படாது, கொன்று விடுவார்கள். தமிழ்நாட்டில் Biotechnology, Pharmaceutical sciences படிப்பு எல்லாம் வீண் பேச்சுதான் IT அல்லது மற்ற இன்ஜினியரிங் படிப்பது நல்லது, தொழிலை மாற்றிகொள்வது உசிதம், என் நண்பன் இப்போது IT துறையில் நுழைந்து நல்ல நிலைமையில் உள்ளான். all the best.

   • பாஸ்கர்,

    சிப்லாவில் என்ன வேலையில் இருக்கிறீர்கள் ? என்ன சம்பளம் ? அனுபவம், படிப்பு என்ன ? industry average salaray and perks என்ன ? மிகச்சிறிய நிறுவனங்களில் கூட
    டீ கொடுக்கிறார்கள். அங்கு டீ சொந்த சொலவில் வாங்கும் நிலையா ?

    10 மணினேரம் வேலை : இது பல இதர துறைகளுலும் தான்.

    • //10 மணினேரம் வேலை : இது பல இதர துறைகளுலும் தான்.// இது குறைந்த பட்ச வேலை நேரம் எங்களை போன்றவர்கள் காலை எட்டு முப்பது முதல் இரவு எட்டு முப்புது வரை இருக்க வேண்டும் .நான் சொன்னது அதிகமாக வேலை செய்யும் நேரத்திற்கு சாப்பாடு தேநீர் பற்றியது மன்னிக்கவும் தெளிவாக ezhuthamaikaga.அவ்வாறு அதிக நேரம் சம்பளம் இல்லாமல் அடிமை போன்று வேலை வாங்குவதை நாயபடுதுகிரீர்களே .எங்கள் உலகம் உறங்கும் மற்றும் வேலை இடத்தையும் தாண்டி சுழலவில்லை.வெறுத்து போய்தான் வெளியேறினேன் .பட்ட மேற்படிப்ப்பு  படித்தவர்களுக்கு எட்டாயிரம் தற்போது pathaayiram என்று கேள்விபட்டேன் .வேலை பெயர் நிர்வாக பணியாளர்.இரண்டு வருடத்திற்கு முன்னால் தற்போதும் நிலைமை மாறவில்லை என் நண்பர்கள் உள்ளனர்.

  • அதியமான்,

   உங்க பில்டப் தாங்க முடியவில்லை. உங்க பில்டப் எந்த அளவுக்கு இருக்குன்னா, தொழிற்சங்கம்-னு ஒன்னு தொடங்கினால் தானய்யா, ஸ்டிரைக் செய்வீங்க! அதனால தொடங்கவே விடமாட்டோம் என்கிற பெரும்பான்மை முதலாளிகளின் பார்வையாக தான் இருக்கிறது. நடைமுறையிலும் அப்படித்தான் இருக்கிறது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் அனுபவங்கள் நிறைய இருக்கின்றன.

   தொழிலாளர்கள் சங்கம் வைப்பது என்பது நக்சலைட் கோரிக்கை மாதிரி பேசுவது ரெம்ப அதிகம். இந்திய அரசியலைப்பு சட்டத்தில் உள்ள உரிமை தான் அது.

  • புதுச்சேரி பவர்சோப் கம்பெனியில் புஜதொமு சங்கம் கட்டுவதர்கு முன்பு அனைத்து தொழிலாளர்களுக்கும் தின சம்பளம்தான், சம்பளம் வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை அன்றே வழங்கப்படும். pf,esi  கிடையாது. தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடியபோது சுமார் 50 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தது நிர்வாகம். அதுசமயம் தொழிலாளர்கள் DPI சங்கத்தில் இருந்தனர். பின்பு நிர்வாகம் கதவடைப்பு செய்து இயந்திரங்களை தனது வேறு கிளைக்கு மாற்ற முயற்சித்தது. தொழிலாளர்கள் DPI ல் புகார் செய்தபோது அலட்சியமான பதில் வந்ததால் அவர்கள் புஜதொமு வை தொடர்பு கொண்ட்னர்,சிலர் புஜதொமுவில் இணைந்தனர். புஜதொமு வின் தொடர்ச்சியான போரட்டங்களூக்குப் பிறகே கழட்ட்ப்பட்ட இயந்திரங்கள் மீண்டும் பூட்டப்பட்டன. மாத சம்பளம் pf esi போன்றவற்றிற்கு நிர்வாகம் சம்மதித்தது, இருந்தபோதிலும் நிர்வாகம், தொழிலாளர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டுமென்றே உற்பத்தியை குறைத்து பழியை தொழிலாளர்கள் மீது சுமத்துகிறது. மேலும் புஜதொமு கட்டுவதற்கு முனைப்பாக செயல்பட்ட 6 தொழிலாளர்களை நிர்வாகம் வேலைநீக்கம் செய்துள்ளது. 

   நிர்வாகம் கதவடைப்பு செய்தபோது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற காலம். தேர்தலுக்காக கம்பெனி முதலாளியான திருவாளர்.நடராஜ்,வி.சி.யினருக்கு ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார். 

  • //நன்றாக, ஒழுங்காக வேலை செய்யும் ஒரு தொழிலாளியை காரணம் இல்லாமல் மாற்ற / நீக்க முயலமாட்டார்கள். //

   அதியமான்,
   மேற்சொன்னவாரு நீங்களே முடிவு செய்து கொள்ள வேண்டாம்.

 13. தொழிலாளர்களின் நியாயம் முக்கியம் தான். அதற்காக தமன்னாவையோ எந்த ஒரு நடிகரையுமோ கழிசடை என்று அழைக்கத் தேவை என்ன? அவர்களும் (உயர் கூலிகள் வாங்கினாலும்) தொழிலாளிகள் தானே? பரபரப்புக்காக வினவு இப்படி எழுதுவது சரி இல்லை.

  • ரவி, இந்தக் கட்டுரையும், தலைப்பும் புதிய ஜனநாயகத்தில் வந்தது. மற்றபடி துணை நடிகர்களும், நட்சத்திர நடிகர்களும் ஒரே போல தொழிலாளி என்று கருது முடியுமா? இருவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் கிடைப்பதில்லையே! ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் எம்.டியும், தொழிலாளியும் போல நட்சத்திரங்களும், மற்ற சினிமா ஊழியர்களும் இருக்கிறார்கள். மேலும் நட்சத்திர நடிகைகள் கவர்ச்சி எனும் உணர்ச்சி சுரண்டலை நிகழ்த்தியே அந்த அதி உயர் ஊதியம் அடைகிறார்கள். வயிற்றுப்பாட்டுக்காக விபச்சாரம் செய்யும் விலைமாதர்களுக்கும், கோடிகளில் திளைக்க கவர்ச்சி காட்டும் நட்சத்திரங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. முன்னவர்கள் மீது அனுதாபம் கொள்ளலாம். பின்னவர்கள் மீது கொள்ள முடியாது.

   • ஹலோ வினவு, நீங்கள் அனுதாபம் கொள்ளும் அந்த தொழிலாளிகளில் தொண்ணூறு சதவிதம் பேர் ஏன் அதற்கு மேலும் தம்மன்னா போன்ற சினிமா நடிகைகளின் (உங்கள் மொழியில் கழிசடை ) விசிறிகளாக தான் இருகின்றார்கள் என்கிற உண்மையை தங்களால் மறுக்க முடியாது. ஏன் நீங்களும் ஒரு பெண்ணாக இருந்து அதுவும் ஒரு அழகியாக-உங்களளுக்கு சினிமா வில் நடிக்க சான்ஸ் வந்தால் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பீர்களோ? சினிமா என்பது ஒரு தொழில் அதில் திறமையும் அழகும் உள்ளவர்கள் நடித்து சம்பாத்கிரர்கள் அவ்வளவுதானே உங்களுக்கு ஏன் அவர்கள் மேல் இவ்வளவு காழ்புணர்ச்சி? இந்த உணர்ச்சியை உங்களால் மற்ற பெரிய நடிகர் நடிகைகளின் மீது காட்ட உங்களுக்கு தயிரியம் இருகிறதா?

    சும்மா சும்மா அசிங்கமாக எழுதுவதை விட்டு விட்டு உருப்படியாக எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்.

    • வெட்டிபையா ரஜினி, உள்ளிட்ட பெரிய்ய்ய
     ஃ நடிகர்களின் டவுசர்கள் டாராய் கிழிக்கப்பட்ட இடம் வினவு, நிதானமாக வினவின் சினிமா பதிவுகளை வாசியுங்கள் https://www.vinavu.com/category/cinema/

    • ஹலோ கேள்வி குறி , நீதான் வினவா? இல்ல நீ என்ன வினவுக்கு அல்லக்கையா ? உன்னால கலைஞர் ஜெயலலிதா போன்றவர்களையும் கழிசடை என்று கூப்ட எழுத முடியுமா? அவங்களும் சினிமாவுல இருந்தவங்க தான் ஞாபகம் இருக்கா ?

   • புதிய சனநாயகத்தில் வந்த கட்டுரை தான். ஆனால், எதை வினவில் வெளியிடுவது என்பது உங்கள் முடிவு தானே?

    இந்தக் கட்டுரையின் கருத்துக்கு தமன்னாவை கழிசடை என்று அழைக்க வேண்டிய தேவை இல்லை. விளம்பரத்துக்கு ஏன் இவ்வளவு காசு செலவு என்று முதலாளியைக் கேட்டால் அதில் ஒரு நியாயம் உண்டு. ஏன் இவ்வளவு காசு வாங்குகிறாய் என்று நடிகை மேல் பாய்வதில் அர்த்தம் இல்லை.

    இந்த முதலாளி மட்டுமல்ல கிட்டத்தட்ட அனைவருமே ஊழியர்களுக்குத் தருவதை விட பல மடங்கு விளம்பரங்களுக்குச் செலவழிக்கிறார்கள்.

    @கேள்விக்குறி – ஆம், நான் தமன்னாவின் ரசிகன் என்று சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.

    //கவர்ச்சி எனும் உணர்ச்சி சுரண்டலை நிகழ்த்தியே அந்த அதி உயர் ஊதியம் அடைகிறார்கள்.//

    கவர்ச்சியால் மட்டுமே எல்லா நடிகைகளும் முன்னணியில் உள்ளனர் என்பது குறுகிய பார்வையே. அழகானவர்களும் கவர்ச்சி காட்டுகிறவர்களும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஆனால், எல்லாரும் வெற்றி பெறுவதில்லை. நடிப்பும் ஒரு கலை, தொழில் தான். முன்னணி நடிகர்களின் உழைப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது.

    நடிகை என்றால் எப்படி வேண்டுமானால் வாய்க்கு வந்தபடி பேசலாம் என்ற போக்கு இருக்கிறது. இதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லா மனிதர்களுக்கும் உரிய மரியாதையைத் தந்து கருத்தை மட்டும் முன்வைக்கலாமே? நன்றி.

    • @கவர்ச்சியால் மட்டுமே எல்லா நடிகைகளும்
     முன்னணியில் உள்ளனர் என்பது குறுகிய பார்வையே
     @கேள்விக்குறி – ஆம், நான் தமன்னாவின் ரசிகன்
     என்று சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.

     புறஅழகும் க்வர்ச்சியும் மட்டுமே உள்ள, வேறு எந்த ஒரு உழைப்போ தகுதியோ இல்லாத ஒரு நடிகையின் ரசிகன் என்ற நிலையிலிருந்து

     @@@நடிகை என்றால் எப்படி வேண்டுமானால் வாய்க்கு வந்தபடி பேசலாம் என்ற போக்கு இருக்கிறது.@@

     நீங்கள் இதை எழுதுதுதான் ஆச்சரியாமாக உள்ளது. உண்மையிலேயே தமன்ன்னா்வை கேவலப்படுத்துவது நீங்கள்தான் உங்களைப்போன்ற ‘ரசிகர்கள்’தான்

  • ரவிக்கு தமன்னா மேல் இருப்பது தொழிலாளர் வர்க்கம் எனும் பாசமா? இல்லை… அயனில் பிடித்து கண்டேன் காதுலுக்கு பின்னும் தீராத தோசமா ????

  • கழிசடை என்றால் என்ன? எனக்கு தெரிந்த வரை ஆக கேவலமானவை, ஒதுக்கவேண்டியவை! இந்த சமூகத்தை கெடுத்து நாசமாக்கும் எதுவானாலும் அது கழிசடையே! கழிசடைகளின் அரசி-அரசன் சினிமா, அந்த சினிமாவில் வரும் புயல்கள் தளபதிகள் கனவுக் கன்னிகள் இன்னும் இன்னபிற ரசிகர்களை சுண்டிஇழுக்கும் ஜந்துக்களும் கழிசடையே. இதை மறுத்தால் பிட்டுப்படத்தை மறுக்கும் தகுதி போய்விடும், ஏனெனில் தமன்னாவுக்கும் சகிலாவுக்கும் என்ன வித்தியாசம், மார்புக் கச்சை தவிர?????

 14. தொழிலாளர்களின் வேலைத்திறன் குறைந்து கொண்டே வருவது குறித்து ஏன் எந்த செங்கொடியும் வாய் திறக்க மறுக்கிறீர்கள்..? தொழிற்சங்க பெயரைச் சொல்லி மிடட்டிக்கொண்டே கழிவரையில் காலத்தை ஓட்டிய தொழிலாளர்களால்தான் கோவையில் பஞ்சாலைகள் காற்றில் பறந்து விட்டன….தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே முதலாளிகள் காலம் தள்ள முடியும் என்பதே இன்றைய நிலைமை, ஒரு சில நிறுவனங்களின் கண்மூடித்தனமான தொழிலாளர் விரோதப் போக்கால் அந்தந்த நிறுவனங்களே குறுகிய வட்டதிற்குள் அகப்பட்டு – வளர்ச்சி தடுக்கப் பட்டு-காணாமல் போய் விடும் ( நிறையப் போயும் விட்டது ). மேலும் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து தட்டிக் கொண்டிருப்பதை விட, முடிந்தால் ஐம்பது பேருக்கு வேலை கொடுத்து வேலை வாங்கிப் பாருங்கள்…அப்புறம் எழுதுங்கள். அதுவே நடு நிலைமை..தைரியம் இருந்தால் வாருங்கள் நான் உங்களுக்கு தொழில் அமைத்துத் தருகின்றேன்….

  • அயா சமி, இந்த முதல்வன் பட சீனெல்லாம் வேண்டாம், கம்பீட்டர்ல உக்காந்து புன்னூட்டம் போட்டா ஆச்சா??? போய் பவர்சோப்பு கம்பெனி முதலாளிகிட்ட கொஞ்ச நாள் தொழிலாளியா வேலய பாருங்க, அப்புறம் எழுதுங்க அது நடுவுநெலம. தகிரியம் இருந்தா வாங்கநீல்மெட்டல் பனால்கா கம்பேனியிலேருந்து நகர சுத்திகரிப்பு வேல வரைக்கும் நிறைய வேல காலியாதான் இருக்கு, நானே வாங்கித்தற்றேன். எப்படி வசதி?????

   • சூப்பர் அப்படி போடுங்க அருவாள. கேள்விகுறி எங்களை போன்றோர் கோவம் உங்கள் வரிகளில் வரும் வடிகால் – hats off to you!!!

   • ஹலோ கேள்வி க்குறி , உண்மையிலே நீதான் வினவா ? இல்ல வினவோட
    அல்லக்கையா ? நான் கேட்ட கேள்விக்கு குறி சாரு பதில் சொல்லறாரு.
    ஏன் வினவு பதில் சொல்ல மாட்டாரோ?

 15. சமி பேரு எனக்கு புடிக்கல..உங்களுக்கு .. அப்புறம் நெத்தியடி தொழிலாளர் பிரச்சனைக்கு உங்க 1500 ௦௦ வருச பழைய புஸ்தகத்துல ஏதாவது சல்யூசன் இருக்கா? அன்றே சொன்னது இசுலாமுல பவர் சோப்பு தமன்னா ்பத்தியெல்லாம் எழுதியிருக்கா. சீக்கிரம் வாங்கப்பா வினவுல உறு்பஃபுடியா விவாதம் நடந்தா உங்களுக்கு புடிக்காதே …????

 16. அழகு என்பதும் கவர்ச்சி என்பதும் இங்கே உருவாக்கப்படுகின்றது. இதுதான் அழகு இதுதான் கவர்ச்சி என்று திணிக்கப்படுகின்றது. ஒரு கதநாயகியை சுற்றி முப்பது நாற்பது வெள்ளை நிறம் குறைந்த பெண்களை ஆடவிடுவது அவர்களில் கதாநாயகிக்கு வித்தியாசமான நிறத்தில் உடை அணிவிப்பது. அலங்கரிப்பது. கதாநாயகன் கமடியன்கள் சாதராணமாக சப்பை பிகர் அட்ட பிகர் முகத்தை கண்ணாடியில் பார்திருக்கின்றாயா? போன்ற கேள்விகள் மூலம் அழகற்றவர்கள் என்று முத்திரை குத்துவது போன்ற பல்வேறு வகை நடவடிக்கைகள் மூலம் அழகும் கவர்ச்சியும் உருவாக்கப்படுகின்றது. திணிக்கப்படுகின்றது. நிறம் இங்கே மையப்பொருளாக இருக்கின்றது. இவர் அழகானவர் இவர் அழகற்றவர் என்ற வரைமுறை ஏற்படுத்தப்படுகின்றது. கறுப்பு நிறமும் மானிறிமும் நிறைந்த சமூகத்தில் வெள்ளை நிறமே அழகானது என்ற திணிப்பும் அதன் மீதான கட்டற்ற மோகமும் பூதகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுதந்திரமானதும் நேரடியானதுமான உடற்சேர்க்கை கலாச்சாரம் என்ற போர்வையில் மறுக்கப்படுகின்றது. இதன் எதிர்விழைவாக நமீதா குஸ்பு அசின் தம்னா என ஆண்கள் மோகம் கொண்டு அலைய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். கண்களுக்கு காட்சியாக திரையில் உலாவரும் இவர்கள் மிக தந்திரமாக பெருந்தொகை உழைக்கும் மக்களின் பணத்தை தமதாக்கிக் கொள்கின்றனர். இவற்றுக்கெல்லாம் மேலாக நிறத்தை மையமாக வைத்து இயங்க முற்படும் இந்தப்போக்கு நிறம்குறைந்தவர்களை தாழ்வுமனப்பான்மைக்குள் தள்ளுகின்றது. பெரும்பான்மைச் சமூகம் இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. நிறம் குறைந்தவர்கள் அதிகப்படியான வரதட்சணையை கொடுக்கவேண்டியுள்ளது. தமது நிறத்தை தாமே ஏற்கமுடியாத குற்ற உணர்வு இயல்புநிலையை அதிகளவாகப் பாதிக்கின்றது. இந்த மோசமான உளவியல் வர்த்தகம் கள்ளிப்பால் கொடுத்து பெண்குழந்தைகளை கொல்லும் கொடுமைவரை சம்மந்தப்பட்டது.

 17. சபாஷ் சவுந்தரி, அழகு என்பது பழக்கவழக்கம், ஒழுக்கம், செயல், சிந்தனை, நல்லாபேச்சு, இவற்றின் அடிபடையில் அமையவேண்டுமே அன்றி, நிறம், காமம், ஈர்ப்புணர்ச்சி, குட்டை ஆடை போன்றவற்றின் அடிப்படையில் அமையக்கூடாது. இவ்வாறு சமுதாயம் நம் உயிர்நேரத்தில் மாறும் என்ற எதிர்பார்ப்பு குறைகிறது. நம் நாட்டில் சினிமா மோகம் குறைந்தாலே பல பிரச்சனைகள் சீர்படும்.

 18. வேலைத்திறன் குறைவு என கவலைப்படுவது ஒருபக்கம் இருக்கட்டும், வேலைத்திறன் குறைவு என்றால் என்ன? மனோவியலில் ஒருவகை உண்டு. தன்னை நோக்கி ஒரு குற்றச்சாட்டு வருகிறது என்றால் அதற்கு முன்னதாகவே அந்த குற்றச்சாட்டை எதிரி மீது சுமத்திவிட்டால் நம்மீதான குற்றச்சாட்டு வலுவிழந்து விடும். உலகமெங்கும் தொழிலாளிகள் கசக்கிப் பிழியப்படுகிறார்கள் என்பது முதலாளிகளின் மீதான குற்றச்சாட்டு. இதை வலுவிழக்கச் செய்வதற்கு, கொடுக்கும் ஊதியத்திற்கு ஏற்ப தொழிலாளிகள் உழைப்பதில்லை என்று முதலாளிகள் எதிர் குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். இதன் பெயர்தான் உற்பத்தித்திறன் குறைவு என்பது. சரி, இந்த உற்பத்தித்திறன் குறைவு என்பதை எப்படி அளவிடுகிறார்கள்? மேலை நாட்டு தொழிலாளிகளோடு ஒப்பிட்டு, அங்கை விட இங்கு குறைவு; இங்கை விட இன்னொரு இடத்தில் குறைவு என்று ஒரு ஒப்பீட்டு முறைதான் உ தி குறைவு. உதி அதிகமுள்ள இடத்திற்கும் குறைவுள்ள இடத்திற்குமிடையே உள்ள தொழிலாளர்களுக்கான வசதிக்குறைவுகளை ஒருபோதும் ஒப்பிடமாட்டார்கள். இதை இன்னொரு கோணத்தில் பார்ப்போம், மேலை நாடுகளின் தொழிலகங்கலெல்லாம் இந்தியா போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்வதின் காரணம் என்ன? இங்கு அதிக லாபம் கிடைப்பதால் தானே. அதிக லாபம் கிடைக்கிறது என்றால், குறைந்த உற்பத்திச்செலவில் அதிக உற்பத்தி என்பது பொருள். உதி குறைவு என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறவல்லவா செய்யவேண்டும். மாறாக தினம் ஒரு ஒப்பந்தம் ஏன்? உற்பத்தி தேக்கம் அல்லது மிகை உற்பத்தி போன்றவற்றாலும் தொழிலகங்கள் மூடப்படும் என்பது உதி குறைவு அனுதாபிகளுக்கு தெரியாது போலும்.

  கழிசடை எனும் சொல்லால் தங்கள் கனவுக்கன்னியை(!) விளித்தது பொறுக்காது சிலர் குமுறியிருக்கிறார்கள். தங்களுக்கு படியளக்கும் தொழிலாளிகளை புழுவுக்கும் கீழாய் நடத்தும் முதலாளிகள் பற்றி கோபப்படாத மனிதாபிமானிகள் ஒரு நடிகைக்காக கண்சிவக்கிறார்கள். ஐம்பது ரூபாய்க்காக போராடும் தொழிலாளியை மறுக்கும் முதலாளி அரை நிமிட விளம்பரத்திற்கு அரை கோடி கொடுக்கிறான், அடித்து நொறுக்க போலீசுக்கு ஆயிரங்கள் இறைக்கிறான். பணமதிப்பல்ல இங்கு பொருட்டு மாறாக உழைப்பவனை ஒன்றுமில்லாதவனாக வைத்திருப்பதே முக்கியம். எல்லாவற்றையும் தள்ளிவிட்டு தமன்னாவை பிடித்துக்கொண்டவர்களை கேட்கலாம், சாலையில் செல்லும் முதியவரை அவரின் வயதில் பாதிகூட இல்லாத போலீசு ஒருமையில் விளிப்பதைக்கண்டு நீங்கள் என்றாவது கோபப்பட்டதுண்டா?

  செங்கொடி

 19. செங்கொடி,

  தொழிலாளிர்களின் உற்பத்தி திறன் பற்றி சொல்லவில்லை. நேர்மை மற்றும் ஒழுக்கம் பற்றி தான் விவாதம். SRMU மற்றும் இதர சங்கத்தில் இருப்பவர்களின் நேர்மை மற்றும்
  Work ethics பற்றி. Lumpen proletariat பற்றி. Permanent செய்தால் ஒரு காண்ட்ராக்ட் தொழிலாளியுன் நேர்மை மற்றும் dispiline எப்படி மாறுகிறது என்பதை அனுபவதில் தான் அறியமுடியும். இங்கு வெறும் theoritcal arguments..

  Voluantary free contract system : ஒரு முதலாளியும், ஒரு தொழிலாளியும் செய்து கொள்வது.
  வேலை விட்டு மிகச்சுலபமாக ஒரு தொழிலாளி நிக்க என்ன முறைகளோ, அதே ரிவேர்ஸில், வேலையை விட்டு அனுப்ப முதலாளிக்கும் உரிமை உண்டு. ஒரு unskilled தொழிலாளியை வேலைக்கு சேர்த்து, பல மாதங்கள் அவருக்கு நல்ல தொழிற் பயிற்சி அளித்து, படிப்படியாக சம்பளத்தை உயர்த்தி, பொறுப்பு அளித்த பின், அதிக சம்பளம் கிடைப்பதால், வேறு ஒரு நிறுவனத்திற்க்கு வேலைக்கு செல்ல அவருக்கு என்ன உரிமை உள்ளதோ, அதே உரிமை முதலாளிக்கு அவரை தேவைபட்டால் வேலையை விட்டு நீக்கவும் உரிமை உண்டு. வளர்ந்த நாடுகளில் இதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இருக்கிறது.

  நான் ஏற்கெனவோ எழுதியபடி, அதிக ஜனத்தொகை, குறைவான் வேலை வாய்ப்புகள், வறுமை மற்றும் அரசின் முட்டாளதனங்களால் பணவீக்கம் / விலைவாசி உயர்வு ; இவற்றால் கூலி உயர்வு போராட்டங்கள் தொடர்கின்றன. வெறும் முதலாளிகளை மட்டும் குறை சொல்லி பயனில்லை.

  சரி, வேறு பாணியில் பார்க்கலாம் :

  அந்த பவர் சோப் நிறுவனத்தை தொழிலாளர்களிடம் ஒப்படைத்துவிட்டால் என்னவாகும் என்று ஒரு கற்பனை ? அதாவது அந்த முதலாளியிடம் இருந்து பிடுங்கி,
  தொழிலாளர்களிடம் ஒப்படைத்து, கூட்டுறவு முறை அல்லது அதை ஒத்த முறையில் நடத்த அனுமதித்தால் ? அல்லது அரசுடைமையாக்கப்பட்டு, ஒரு அரசு அதிகாரியை நிர்வாகியாக போட்டு நடத்தினால் ? அல்லது ம.க.இ.க தலைமையும், தொழிற்சங்க தலைமையும் கூட்டாக அதை நிர்வாகிக்க சாத்தியமானால் ?

  இரண்டு வருடம் கழித்து அந்நிறுவனம் என்ன லச்சணத்தில் இருக்கும் ? தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்னவாகும் ?

  அனுபவஸ்தர்களுக்கு தான் இதற்க்கு விடை தெரியும்.

  • //நேர்மை மற்றும் ஒழுக்கம் பற்றி தான் விவாதம். SRMU மற்றும் இதர சங்கத்தில் இருப்பவர்களின் நேர்மை மற்றும்
   Work ethics பற்றி. Lumpen proletariat பற்றி. Permanent செய்தால் ஒரு காண்ட்ராக்ட் தொழிலாளியுன் நேர்மை மற்றும் dispiline எப்படி மாறுகிறது என்பதை அனுபவதில் தான் அறியமுடியும். இங்கு வெறும் theoritcal arguments..//

   இங்கு தொழிலாளிகளுக்கு நேர்மை , ஒழுக்கம் பற்றி வகுப்பெடுக்கும் அதியமான், அவர்களை நிரந்தரம் செய்தால் சீரழிகிறார்கள் என்று வருத்தப்படும் அதியமான் இதே போல வரிப் பணத்தில் சலுகைகள் அனுபவித்து பொருளாதாரத்தை சீரழிக்கும் முதலாளிகளைக் கண்டித்து தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார், செய்வார் என்று நம்புவோமாக….

   • அசுரன்,

    தவறு யார் செய்தாலும் அது தவறுதான். இந்திய சூழ்னிலையில் பல முதலாளிகள் வரிகளை ஏய்க்கிறார்கள். பல இதர சட்ட விரோத காரியங்களை தயங்காமல் செய்கிறார்கள். (முக்கியமாக சுற்றுச்சூழ் பாதிப்பு, பொல்யூசன் கண்ட்ரோல் இல்லாமல்).
    லைசென்ஸ் கோட்டா ராஜியத்தில் சீரழிந்த morals and ethics இன்னும் மாறவில்லை.

    வரி சலுகை என்பது vague term. 1980கள் வரை இருந்த வரி விகிதங்களோடு ஒப்பிட்டால்,
    இன்று அனைத்து கார்பரேட்களுக்கும், தனியாருக்கும் பெரும் வரிசலுகை என்று சொல்லாம். ஆனால் வரிவசூல் மிக மிக மிக அதிகரிக்க இந்த குறைப்புதான் அடிப்படை காரணி. Incentive to initiate new enterprises and re-invest : இவை பற்றி உமக்கு அனுபவமோ அல்லது வாசிப்பனுபவமோ பத்தாது. மேலும் பொருளாதாரத்தை அவர்கள் சீரழித்தார்கள் என்பது மிக தவறான, ஆதரமில்லாத வாதம்.

    சரி, இது இருக்கட்டும், தொழிலாளர்களின் work ethics பற்றி நான் சொன்னதை அப்ப ஏற்க்கிறீர்கள் ? அந்த பவர் சோப் நிறுவனத்தை அரசுடைமையாக்குவது அல்லது தொழிலாளர்களே ஏற்று நடத்துவது போன்ற ‘தீர்வுகளை’ பற்றி ஒருத்தரும் விவாதிக்க காணாம் ?

    நீங்க இப்ப உங்க மேற்படிப்பை முடித்திருப்பீங்க என்று நினைக்கிறேன். உங்களிடம் அந்த பவர் சோப் நிறுவனத்தை ஒப்படித்தால், நல்ல முறையில் நிர்வாகம் செய்து, தொழிலாளர் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண முடியுமா ?

  • அதியமான்,
   ”ஒரு காண்ட்ராக்ட் தொழிலாளியுன் நேர்மை மற்றும் dispiline எப்படி மாறுகிறது என்பதை அனுபவதில் தான் அறியமுடியும்.”
   ஒரு தொழிலாளியின் மனதில் ”நாளைய வேலை குறித்த அச்சம்” கொள்ளச் செய்வதால் தான் அவனை நேர்மையாக வேலை செய்ய வைக்கமுடியும் என்று நீங்கள் கூறுவதாகவே நான் எண்ணுகின்றேன்.  கி.பி. 1787ல் டவுன் செண்டு என்ற பாதிரியின் இரக்கமற்ற சொற்களை நீங்கள் வழிமொழிகின்றீர்கள். அதாவது தொழிலாளியை பட்டினி குறித்த அச்சம் கொள்ளச் செய்யவேண்டும் என்கிறீர்கள். ஒரு மாநிலத்தின் சிலவருட வரிச்சலுகையை பயன்படுத்திவிட்டு பின் தொழிலாளியை நடுத்தெருவில் விட்டுவிட்டு இரவோடிரவாக ஓடும் முதலாளி நேர்மையானவனா!  இது போன்ற நிறைய அனுபவங்களை நாமும் கொடுக்க முடியும். யாரை யார் வெல்வது. யாரை யார் ஏமாற்றுவது என்பதில்தான் முதலாளித்துவத்தின் குணமே அடங்கியிருக்கிறது. புழுத்து நாறிக்கொண்டிருக்கும் முதலாளித்துவம் தன்னைக் காத்துக்கொள்ள தினந்தோறும் சீரழிவுகளை சமூகத்தில் பரப்பிக் கொண்டே இருக்கிறது. ஒருபுறம் நுகர்வு வெறியை ப்ரப்பிக்கொண்டே மறுபுறம் வேலையில்லா திண்டாட்டத்தையும் ஆட்குறைப்பு மற்றும் சம்பளக் குறைப்பையும் செய்கிறது. சமூகத்தில் ஒருவன் மனநிறைவு கொள்ளும்போதுதான் அவன் நேர்மையாக செயல்படமுடியும்.  வேலையில் தேர்ச்சி பெற்றபின் அதிக சம்பளத்திற்கு வேறு நிறுவனத்திற்கு ஒரு தொழிலாளி செல்வதும், குறைந்த கூலிக்கு ஒரு தொழிலாளியை வேலைக்கமர்த்தி அவன் உழைப்பைச் சுரண்டுவதும் முத்லாளித்துவத்தின் ஒழுக்கமே. அதிக சம்பளம் என்பது முதலாளி பெறும் லாபத்துடன் ஒப்பிடுகையில் மிகச் சொற்பமே. சமூகத்தேவைகள் அதிகரிக்கும்போதும், முதலாளியின் நுகர்வின்பத்துடன் ஒப்பிடும்போதும் தொழிலாளி பெறுவது குறைவானதாகவே இருக்கும். அதனாலே அவன் மனநிறைவு கொள்வதில்லை. நமது விருப்பங்களும் இன்பங்களும் சமுதாயத்திலிருந்தே எழுகின்றன. தொழிலாளி பெறும் கூலியில் பல்வேறு உறவுகள் அடங்கியுள்ளது. தொழிலாளியை பண்டமாக பார்க்காதீர்கள். மனிதனாக பாருங்கள்.

    ஆசான் மார்க்ஸ் இதை அழகாக விளக்குகிறார்.
   கூலி குறிப்பிடத்தக்க உயர வேண்டுமாயின் உற்பத்தித் திறனுள்ள மூலதனம் வேகமாய் வளர்வது அதற்குரிய முன் தேவையாகும். உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் துரித வளர்ச்சி அதே அளவிற்கு துரிதமாய்ச் செல்வத்தையும் ஆடம்பரத்தையும் சமூகத்தேவைகளையும் சமூக நுகர்வின்பத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இவ்விதம் தொழிலாளியின் நுகர்வின்பமும் அதிகரித்திருக்கிறது என்றாலுங்கூட அதனால் உண்டாகும் சமூக மனநிறைவு, தொழிலாளிக்கு எட்டாதபடி மிகமிகக் கூடுதலாகிவிட்ட முதலாளியின் நுகர்வின்பத்துடன் ஒப்பிடுகையிலும், பொதுவில் சமுதாயத்தின் வளர்ச்சிநிலையுடன் ஒப்பிடுகையிலும் குறைந்துவிடுகிறது. நமது விருப்பங்களும் இன்பங்களூம் சமுதாயத்திலிருந்தே எழுகின்றன. ஆகவே சமுதாயத்தைக் கொண்டே நாம் அவற்றை அளவிடுகிறோமே அல்லாது, அவற்றை பூர்த்தி செய்ய உதவும் பொருள்களைக் கொண்டல்ல. இவை யாவும் சமூகத் தன்மை வாய்ந்தவையாய் இருப்பதால், இவை ஒப்பு இயல்புடையவையாகும்..

   • //ஆசான் மார்க்ஸ் இதை அழகாக விளக்குகிறார்.
    கூலி குறிப்பிடத்தக்க உயர வேண்டுமாயின் உற்பத்தித் திறனுள்ள மூலதனம் வேகமாய் வளர்வது அதற்குரிய முன் தேவையாகும். உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் துரித வளர்ச்சி அதே அளவிற்கு துரிதமாய்ச் செல்வத்தையும் ஆடம்பரத்தையும் சமூகத்தேவைகளையும் சமூக நுகர்வின்பத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இவ்விதம் தொழிலாளியின் நுகர்வின்பமும் அதிகரித்திருக்கிறது என்றாலுங்கூட அதனால் உண்டாகும் சமூக மனநிறைவு, தொழிலாளிக்கு எட்டாதபடி மிகமிகக் கூடுதலாகிவிட்ட முதலாளியின் நுகர்வின்பத்துடன் ஒப்பிடுகையிலும், பொதுவில் சமுதாயத்தின் வளர்ச்சிநிலையுடன் ஒப்பிடுகையிலும் குறைந்துவிடுகிறது. நமது விருப்பங்களும் இன்பங்களூம் சமுதாயத்திலிருந்தே எழுகின்றன. ஆகவே சமுதாயத்தைக் கொண்டே நாம் அவற்றை அளவிடுகிறோமே அல்லாது, அவற்றை பூர்த்தி செய்ய உதவும் பொருள்களைக் கொண்டல்ல. இவை யாவும் சமூகத் தன்மை வாய்ந்தவையாய் இருப்பதால், இவை ஒப்பு இயல்புடையவையாகும்..//

    மிகச் சரியான வாதம். அதியமானுடைய வாதங்களில் மிக மையமானது ‘முன்பு இருந்ததை விட இப்போது எல்லாம் முன்னேறிவிட்டது’ என்பதே ஆகும். இந்த வாதம் சமுதாய வளர்ச்சியை புரிந்து கொள்ள கிஞ்சித்தும் உதவாத மூடநம்பிக்கைதானேயன்றி வேறல்ல. இதனை அப்படியே எடுத்துக் கொண்டால், அது பிரிட்டிஸ் காலனி ஆதிக்கம் இங்கு ஏற்படுத்திய வளர்ச்சியின் அடிப்படையில் காலனித்துவத்தையும் நியாயப்படுத்திவிட முடிகின்ற வாதம் ஆகும்.

    சமுதாயம் வளங்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. வளர்ந்து கொண்டேதான் செல்கிறது. இதில் வளங்களை மனிதக் கூட்டங்கள் நுகர்வதில் இருக்கும் ஏற்றத்தாழ்வின் அளவுதான் ஒரு சமுதாயம் முன்னேறுகிறதா அல்லது சீரழிகிறதா என்பதை அளவிட உதவும் சரியான பார்வை. அந்த வகையில் பார்த்தால் இந்தியாவின் நிலை கீழ் நோக்கிச் செல்வதை ஒருவர் புரிந்து கொள்ள இயலும்

 20. ஒழுக்கத்தை போதிக்கும் அதியமானந்தா தன்னை உரசிப் பார்த்துக் கொள்ள ஒரு உரைகல்

  http://mathavaraj.blogspot.com/2010/02/blog-post.html

  //அந்த வார்த்தைகள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அமைப்பு ஒழுக்கமாக தன்னை காட்டிக் கொள்வதற்கு ஒரு பலிபீடம் வைத்திருக்கிறது. அதில் மெய்யப்பன்களின் தலைகளே உருளுகின்றன. ஒழுக்கத்தின் காவலர்கள் அந்தத் தலைகளை கோர்த்து மாலையாக்கி போட்டுக்கொண்டு உபதேசம் செய்து கொண்டிருக்கின்றனர். அமைப்பையும், ஒழுக்கத்தையும் காலில் போட்டு மிதிப்பவர்கள் எந்த கூச்ச நாச்சமுமில்லாமல் காமிராக்களுக்கு போஸ் கொடுக்கிறார்கள். சிரிக்கிறார்கள். கோடி கோடியாய் கொள்ளையடித்தாலும் அவர்களுக்கு இங்கே மகிமை இருக்கிறது. நாட்டையே கபளிகரம் செய்தாலும் மரியாதை இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டையும் தாண்டிய செல்வாக்கு இருக்கிறது. நடத்தை விதிகள் என்பது இங்கே கீழே உள்ளவர்களுக்காக மட்டுமே விதிக்கப்பட்டிருக்கின்றன. அரசன், தெய்வம், நீதி எல்லாம் சாமானியர்கள் அஞ்சுவதற்காகவும், பூஜிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.//

 21. பழைய விளக்கமெல்லாம் இருக்கட்டும். மேற்க்கு அய்ரோப்பாவில் கார்ல் மார்க்ஸ் 150 ஆண்டுகளுக்கு முன் கண்ட நிலையோடு இன்றைய நிலைமையை ஒப்பிட்டலாமே.
  The standard of living of an average worker in W.Europe had increased dramatically in the past 150 years,
  Opposie of Marx’s projection of business cycles and diminishing ‘surplus value’ impoverishing the workers more and more. அங்கு நிரந்தர வேலை என்ற conceptஏ கிடையாது. Hire and fire தான்.

  இந்திய நிலைமைகளை மட்டும் வைத்துக்கொண்டு முதலாளித்துவ சித்தாந்தத்தை (இந்த பெயரே தவறு. சுதந்திர சந்தை பொருளாதம் என்ற சொல் தான் சரியான தொடர்)
  எடை போடுவது சரியாகாது. மாதவராஜ் அவர்கள் ஒரு அரசு துறை வங்கியில் பணியாற்றுகிறார். அதன் மறுபக்கம் பற்றி விவாதம் செய்திருக்கிறேன். ஊழல் பற்றி அனுபவத்தில் நிறைய அறிந்திருக்கிறேன். அத்தனை சுலபமாக அதன் காரண / காரியங்களை பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாது. இதை பற்றி எமது ஆங்கில மற்றும் தமிழ் பதிவுகளில் விரிவாக எழுதியிருக்கிறேன்…

 22. முதலாளிதுவம் வாழ்க !!! முதலாளிதுவம் ஓங்குக!!! ஏ உலக முதலாளிகளே ஒன்று கூடுங்கள்!!! கொடி பிடித்து நம் வளர்ச்சியை கெடுக்கும் கூட்டதை ஒழிப்போம் !!!!

 23. இந்த பதிவிற்கே தமன்னாவின் முகம் தேவைப்படும் போது ஒரு கம்பனிக்கு ஏன் தேவைப்படாது?. சினிமாவ கழிசடைன்னு சொல்லுவ ஆனா சினிமாவுக்குன்னு தனி பக்கம் கொடுப்ப. போயா நீயும் உன் புரட்ஷி சிந்தனையும்.

  • hello, i think u r a great fan of thamanna, tats y u r speakin’ lik this, and here v r not speakin’ abt d bloody face of thamanna, v r speakin’ abt d difficulties of workers tat given by d idiotic fellows lik owners n ur thamanna…

   • அதைத்தான் நானும் சொல்லுறேன். இது பவர் சோப் ஊழியர் பிரச்சனை. அப்புறம் எதுக்கு தமன்னவோட போட்டோவ போட்டீங்க? + பவர் சோப் லோகோ அல்லது ஊழியர் போட்டோ போட வேண்டியதுதான?.

  • MR.ZAK உத்து பாருங்க, அது பவர்சோப் விளம்பரம்! உங்கள யாரு தமன்னா மூஞ்ச மட்டும் பாத்துட்டு பி்னஃனூட்டம் போட சொன்னது?????

   • நான் என்ன பண்ண? வினவு தம்மன்னவோட மூஞ்சிய மட்டும்தான் காமிச்சி இருக்காங்க. வேற ஏதாவது காமிச்சி இருந்தா அத பாத்துட்டு பின்னூட்டம் போட்டிருப்பேன்.

 24. கவுதம் இதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம் //சினிமாவ கழிசடைன்னு சொல்லுவ ஆனா சினிமாவுக்குன்னு தனி பக்கம் கொடுப்ப. போயா நீயும் உன் புரட்ஷி சிந்தனையும்.//

  • nanba ZAK naama cinema va kazhisadai nu solla la, cinema la irukkura kazhisadai thamanna nu dhan sollurom, adhu mattum illa ZAK idhu cinema pathi vinavura pagudhi illaye, idhu thozhilaalargalukku erpatta avalathai pathi paaka vendiya pagudhi, idha neenga nalla purinjikonga, unga kelvi தம்மன்னவோட மூஞ்சிய மட்டும்தான் காமிச்சி இருக்காங்க? nguradhu dhan huh?? ,,,, thamanna va kazhisadai nu sollittu asin foto va poduradhu?? konjam yosichi paarunga thamizhaa…

 25. கவுதம்..இருவிஷயங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1 ) இக்கட்டுரையின் கருத்துடன் நான் ஒத்து போகிறேன். 2 ) நான் நடிகையை ஆதரித்து பேசவில்லை. நான் சொல்லவருவது சினிமாவை எதிர்க்கும் வினவு ஏன் நடிகையின் படத்தை பயன்படுத்துகிறது என்பதே. மற்றபடி கட்டுரையை விமர்சிப்பது ஏன் நோக்கம் அல்ல. மேலும், தங்களின் பொறுமையான விளக்கங்களுக்கு நன்றி + பாராட்டுக்கள்.

 26. அண்ணன்களே!

  நாம எல்லோரும் எல்லாமும் பெற்று சந்தோஷமாக இருக்கிறது தானே நம்ப எல்லோருடைய இலட்சியம். அப்படி இருக்கும் போது எல்லோரும் சேர்ந்து யோசித்து நல்வழி எதுவோ அதை கடைபிடிக்க வேண்டும் இல்லையா? அதை விடுத்து நம்மில் நாமே சண்டையிட்டு கொண்டு இருக்கலாமா?

  வெளி வேஷம் மாறிய அளவு, நம்முடைய மனம் மாறியிருக்கிறதா? நாம் உண்மையாகவே நாகரீகமடைந்த மாந்தர்தானா? எல்லோருக்குள்ளும் மிருகம் இருக்கிறது உண்மை தானே. முதலாளி வர்கம் ஆகட்டும், துன்ப படும் தொழிலாளி வர்கம் ஆகட்டும், எல்லோரும் மற்றவரின் காலை வார காலத்தை எதிர்பார்க்கும் மனோபாவம் தானே நம் எல்லோருக்குள்ளும் உள்ளது.

  ‘எனக்கு, பசி, தாகம், வலி வேதனை என்பன எல்லாம் எப்படி வேண்டாதனவோ அதுபோலவே அவை மற்றவர்களுக்கும் வேண்டாதனவே’ என்னும் உயர்ந்த சிந்தனை நம்மில் வளர்ந்திருக்கின்றதா சொல்லுங்கள்? இந்த சிந்தனை மனித சமூகத்தில் வளர வளரத்தான் பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் எனக்கு கிடைக்கும் அனைத்தும் மற்றவர்களுக்கும் கிடைக்கட்டும் என்னும் போக்கு இயல்பானதாக உருவெடுக்கும்.

  அதற்காக நாம் காரியம் ஆற்றவேண்டுமே தவிர மிருகம் குடிகொண்ட மனங்களை போராட்டம் மூலம் மாற்றி விட முடியும் என்பது பிளேடு கொண்டு ஆலமரத்தை வெட்டுவது போலத்தான்.

  இந்த மாற்றம் வருவதற்கு, நம் குழந்தைகளின் கல்வி முறையில் மாற்றம், நம் இலக்கியங்களின் மாற்றம், யாரும் கண்காணிக்காத போதும் நான் என ஒழுக்க கோட்பாடுகளை கைவிடமாட்டேன் என்கின்ற கொள்கையில் பிடிப்பு கொள்ளுதல் போன்றவை பயன்படும். முதலில் ஒவ்வொரு தனிமனிதனும், ‘என்னளவில் இவைகளை கொண்டுவருதல் மிகவும் முக்கியம். எவ்வளவு துன்பம் வரினும் இந்த இலட்சியத்திலிருந்து நான் வழுவ மாட்டேன்’ என்று எண்ணி தன்னளவில் இந்த உயர்ந்த சிந்தனைகளின் இலட்சியத்தை நோக்கி நடைபோட ஆரம்பிக்க வேண்டும். இவைகளை நான் கடைபிடிக்கின்றேன்.

  ஒவ்வொரு தனிமனிதனும் இவ்வாறு செயல்பட ஆரம்பித்தால் தான் உண்மையில் நாம் நாகரீகம் அடைந்த சமூதாயமாக ஆகமுடியும். வேறு வழி ஏதும் இல்லை. இன்றே நம் நல் முயற்சிகளை தொடங்குவோம். கண்டிப்பாக நாம் அனைவரும் சேர்ந்து வாழும் காலம் உருவாகும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க