Tuesday, June 28, 2022
முகப்பு கோவா, தமிழ்ப்படம்: செத்துச் செத்துச் சிரிக்கலாமா ?
Array

கோவா, தமிழ்ப்படம்: செத்துச் செத்துச் சிரிக்கலாமா ?

-

vote-012“ஒழுங்கா படி. இல்லேன்னா உன்னை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வெச்சிடுவேன்!” – ஒரு தந்தை மகனிடம் பேசுவதாக சமீபத்திய ஆ.விகடனில் வெளிவந்த நகைச்சுவை துணுக்கு. வினவில் நேற்றுதான் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும் பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் விளக்கிய கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்தவர்கள் எவரும் இந்த துணுக்கை படித்து சிரிக்க முடியாது.

கல்கி காலத்திலிருந்து இப்படித்தான் ஆ.விகடன் தீவிரமான சமூகப் பிரச்சினைகளை நையாண்டியின் பெயரில் நீர்த்துப் போகச்செய்யும் வேலையை செய்து வருகிறது. இதில் ஊழல், மோசடி, செய்யும் ஆளும் வர்க்க பிரதிநிகள் மட்டும் எப்போதும் இடம்பெறமாட்டார்கள். அதாவது அம்பானி, ஜெயேந்திரன் போன்ற ஒழுக்க சீலர்களை கேடி, கிரிமினல் காமடியன்களாக நீங்கள் சிரித்திருக்க முடியாது. நடுத்தர வர்க்கத்தின் நகைச்சுவை இரசனையை தீர்மானிக்கும் இதன் மற்றொரு வெளிப்பாடுதான் எஸ்.வி.சேகரின் காமடி நாடகங்கள். இன்றைக்கு ஆ.விகடனில் இத்தகைய நகைச்சுவைகள் அதிகம் வருவதில்லை. சேகரின் நாடகங்களும் முன்பு மாதிரி பரபரப்பாக நடைபெறுவதில்லை. ஏன்?

விகடனோ, சேகரோ திருந்திவிட்டதனால் இது நடைபெறவில்லை. இவர்களின் பங்கை தொலைக்காட்சியின் விதவிதமான நையாண்டி நிகழ்ச்சிகள் எடுத்துக் கொண்டுவிட்டன. அதனால் முழு சமூகமும் அப்படி பேசி, சிரிக்க, சிந்திக்க பழகிவிட்டது. இந்த நகைச்சுவை உணர்வு ஆரோக்கியமானதா?

அதற்கு முன் மக்கள் எதற்கு சிரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் தெருவில் கிடக்கும் வாழைப்பழத்தோலில் மிதித்து வழுக்கி மண்டை அடிப்பட்டு இரத்தம் ஒழுக கிடக்கும் போது முழு தமிழகமும் அவன் விழுந்ததை நினைத்து சிரிக்கிறது. சூழ்நிலையின் இயல்பில் நடக்கும் இந்த சிறு மாற்றமே சிரிப்பதற்கு போதுமானது என்பதால் சுருங்கச் சொன்னால் மக்கள் தங்களைப் பார்த்தே சிரிக்கிறார்கள்.

அரசியல், சமூக உரிமைகள், ஜனநாயகத்தில் என்ன தரம் இருக்கிறதோ அதுதான் நகைச்சுவையில் இடம் பெறுகிறது என்று சொன்னால் முதலில் உங்களால் ஏற்க முடியாமல் இருக்கலாம். ஜேயேந்திரன் பெண்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், ஜெயா ஈழம்பற்றி சவடால் அடிக்கும் போதும், அழகிரி நேர்மையான தேர்தல் முறை குறித்து பேசுவதும், ராகுல் காந்தி வாரிசு அரசியல் நல்லதல்ல என்று கூறுவதும், ரஜனி திருட்டு சி.டி குறித்து கோபப்படும் போதும் இங்கு யாருக்கும் சிரிப்பு வருவதில்லை. கோபமும் வருவதில்லை.

பிளாக் டிக்கெட் விற்ற காசில் சூப்பர் ஸ்டாரான கோடிசுவர ரஜினியும், வெளிநாட்டில் பீட்டர் வாழ்க்கையில் ஜாலியாக இருந்த ராகுல் வாரிசு என்ற ஒரே தகுதியில் வலம் வருவதும், மதுரை ரவுடிகளின் ரவுடி அழகிரி வள்ளலாகவும், தேர்தல் நிபுணராகவும் வரும் போது, ஈழம் பற்றி முனகினாலே போடாவில் போடும் ஜெயா ஈழத்தாயாக போற்றப்பட்ட போதும், ஜெயேந்திரனது கொலை, கூத்துக்களை மறந்து அவரது உலாச் செய்திகள் ஊடகங்களில் மரியாதையுடன் குறிப்பிடப்படும் நாட்டில் காமடிக்கு என்ன அருகதை இருக்க முடியும்?

உண்மையான கோபமும், ரோஷமும் வராத சமூகத்திடமிருந்து உண்மையான நகைச்சுவை மட்டும் வந்து விடுமா என்ன?

வாழ்க்கையின் போராட்டத்தில் முன்னேற்றம் இல்லாத போது மெலிதான சிணுங்கல் கூட தமிழனை சிரிக்க வைக்க போதுமானதாக இருக்கிறது. இந்த சிணுங்கலுக்கு தனது மூளையக் கழட்டி ஆணியில் மாட்டி விட்டு டி.வியின் முன்னால் அமரும் மனிதர்கள் சீக்கிரமே பழக்கப் படுகிறார்கள். வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் அவர்களது மொழி, அறிவு, இரசனை எல்லாம் இதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. சமூக அறிவினால் தீர்மானிக்கப்படும் நகைச்சுவை உணர்வு நேரெதிராய் நகைச்சுவை உணர்வால் அறியப்படும் சமூக அறிவாக ஆபாசமாக மாறிவிடுகிறது.

தமிழ்ப்படத்தின் முதல் காட்சியில் ஒரு கிராமத்தில் ஆண் குழந்தைகளை கள்ளிப் பால் வைத்து கொல்லும் வழக்கம் உள்ளதாக காட்டப்படுகிறது. அதற்கான பிளாஷ் பேக் பஞ்சாயத்து காட்சியின் கிண்டலில் சிரிக்க ஆரம்பிக்கும் ரசனையின் மூலம் தமிழ் நெஞ்சங்கள் பெற்றதென்ன?

தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறந்தால் கொலை செய்வது இன்னும் வழக்கில் உள்ளது. இவ்வளவு முன்னேற்றங்களும், வாழ்க்கை கருவிகளும் பெருகி விட்ட நாட்டில் இன்னும் ஒரு பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்க முடியாது என்ற அவலம் மாறவில்லை. சமூகத்தின் பாதி எண்ணிக்கையிலிருக்கும் அந்த பாவப்பட்ட பாலினத்தின் தலையெழுத்துக்காக ஒவ்வொரு மனிதனுக் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாட்டில் அதே விசயம் ஒரு திரைப்படத்தின் அறிமுக நகைச்சுவையாக இருக்கிறது. அதுவும் ஆண் குழந்தைகள் கொல்லப்படுவது போல. இனி கள்ளிப்பால் கொடுமைகள் ஏதும் செய்தியாக வந்தால் படிப்பவர்கள் தமிழ்ப்படத்தை நினைத்து சிரித்து விட்டு போய்விடுவார்கள். அல்லது அந்தக் கொடுமையை செய்வதற்கு சமூகக் காரணங்களால் தள்ளப்பட்டவர்கள் அடைய வேண்டிய குறைந்த பட்ச குற்ற உணர்வை கூட இந்தப்படம் இல்லாமல் செய்து விடுகிறது.

பதிவுலகில் இப்படத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டிய எந்தப் பதிவரின் அறிவுக்கும் இது தென்படவில்லை. ஏனெனில் அவர்கள் சிரிப்பதற்கு மட்டுமே பழக்கப்பட்டவர்கள் ஆயிற்றே.

கோவா, தமிழ்ப்படம் இரண்டிலும் ஆரம்பக் காட்சிகளாக கிராமப் பஞ்சாயத்து காட்டப்படுகிறது. தலைவர், மீசை, உறுமல், செம்பு, துண்டு, வேட்டி, வெற்றிலை எச்சில் எல்லாம் இருக்கிறது. ஆனால் தமிழ் சினிமா காட்டிய வகையிலும், காட்டாத வகையிலும் உள்ள நிஜ பஞ்சாயத்துக்களின் அருகதை என்ன? இந்த பஞ்சாயத்துக்களின் மூலம்தான் தீண்டாமை மறுப்பு மணம் செய்த காதலர்கள் எரிக்கப்பட்டிருக்கிறார்கள், தலித் பெண்களை வல்லுறவு செய்த ஆதிக்க சாதி ஆண் பொறுக்கிகள் சில நூறு ரூபாய்களை அபராதமாக கட்டிவிட்டு தப்பித்திருக்கிறார்கள், இரண்டாவது மணம் செய்வதற்காக முதல் மனைவிகள் எந்த நிவராணமுமின்றி வெட்டி விடப்பட்டிருக்கிறார்கள், தீண்டாமை குற்றத்தை மீறி செருப்பு போட்டதற்காகவோ, இல்லை சைக்கிள் மிதித்ததற்காகவோ பல தலித்துக்கள் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது ஊரை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள்… என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

சாதி ஆதிக்கத்தையும், பணம் படைத்தோரின் சட்டங்களையும் இன்றும் நிலைநாட்டி வரும் இந்தப் பஞ்சாயத்துக்கள் இந்த இரண்டு படங்களிலும் எப்படி செம்பு, வெத்தலையாக மாற்றப்பட்டிருக்கிறது பாருங்கள்? இதைப்பார்த்து வயிறு வலிக்க சிரிப்பவர்கள் இனி இத்தகைய கொடுமை பற்றிய செய்திகளை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? பொய்மையின் இருட்டில் உண்மையின் வெளிச்சம் அழிக்கப்படுகிறது.

தமிழ்ப்படத்தில் மாஸ் ஹீரோ, ஓப்பனிங் சாங், விரலைசைவு, கட்டவுட், வில்லன்களை வீழ்த்துவது எல்லாம் மேலோட்டமாக கிண்டலடிக்கப்படும் போது இரசிகர்கள் குறிப்பிட்ட காட்சிகள் எந்தப்படத்தை நினைவு படுத்துகிறது என்று பேசியவாறு சிரிக்கிறார்கள். உடன் கண்டுபிடிப்பவர்கள் பொது அறிவில் விற்பன்னராக ஆராதிக்கப்படுகிறார்கள். ஆனால் நினைவு படுத்தப்பட வேண்டிய விசயங்கள் என்ன?

சூப்பர் ஸ்டார்களை யார் உருவாக்குகிறார்கள்? சினிமா முதலாளிகள், ஊடக முதலாளிகள் இருவரும் பெரும் இலாபத்தை பறிக்க வேண்டுமானால் இந்த நட்சத்திரங்கள் அவசியம். குறிப்பிட்ட நடிகரின் குறிப்பிட்ட ஃபார்முலா நடிப்பு தற்செயலாக வெற்றி பெற்று விட்டால் அவருக்கு ஊதியத்தை கோடிகளில் பெருக்கி, பம்பாய் நடிகை, அமெரிக்க படப்பிடிப்பு என்று ரிச்சாக உயர்த்துவது யார்? ரஜினி அமெரிக்காவில் மொட்டை அடித்த கதையும், இமயத்தில் ஒன்னுக்கு போன கதையும், கனடா மாப்பிள்ளைக்காக வெட்கப்படும் ரம்பாவின் முகமும், நவ்யா நாயரின் திருமணத்தை விலாவாரியாக விவரிப்பதும் யார் செய்கிறார்கள்?

மணிரத்தினத்தின் வீட்டில் சிறு குண்டு வீசப்பட்டு அதை ரஜினி கண்டித்து அவர் அரசியலுக்கு வரப்போவதாக பேசப்பட்ட நேரத்தில் அதற்கு அஞ்சிய தளபதிகள், தமிழினத் தலைவர்கள், புரட்சிப்புயல்கள் எத்தனை பேர்?

இப்படி தமிழனின் அன்றாட கவலையாக மாறிவிட்ட நட்சத்திரங்களை கிண்டல் செய்யவேண்டுமென்றால் இவர்கள் எல்லோரையும் திரையில் நிறுத்த வேண்டும். அப்போதுதான் அடிமுட்டாளான ரஜினியும், ரேஷன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்து படியளக்கும் கோமாளி விஜயகாந்தும், தமிழ் தெரியாததை உயர்வாக நினைக்கும் தமிழ்ப்பெண் த்ரிஷாவும், தமிழ் மக்களின் தெய்வங்களாக போற்றப்பட்டதை போட்டு உடைக்க முடியும்.

தமிழ்ப்படத்தில் தமிழ் சினிமாவில் வரும் ரேப் சீன்களைக் கிண்டல் செய்வதற்காக சொர்ணா அக்கா எனும் ரவுடிப்பெண் ஒரு கல்லூரி இளைஞனை வல்லுறவு செய்ய முயல்வதாக காட்டுகிறார்கள். இதற்கு முன் கற்பழிப்புக் காட்சிகளில் ஜாக்கெட் எப்போது கிழியும் என்று எதிர்பார்க்கும் ஆண் இரசிகர்கள் இதையும் பார்த்து சிரிக்கிறார்கள். காமத்தின் இடத்தில் காமடி. ஆனால் இப்போதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகமாக நடக்கின்றன. கல்லூரி மாணவியோ, இல்லத்தரசியோ மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, வீடியோ எடுக்கப்பட்டு சொல்லக்கூசும் அருவெறுப்புகள் நிகழ்த்தப்படும் காலத்தில் ஆண் கற்பழிப்பு எனும் கற்பனையே யாருக்கும் விகாரமாகத் தெரியவில்லையே?

ஜாக்கெட் தேவைப்படாமல் முக்கால் உடம்பைக் காட்டுவதே நாயகிகளின் தகுதி என்ற இந்தக்கால நிலையில் ஜாக்கெட் கிழிபடும் எம்.ஜி.ஆர் கால கற்பழிப்புக் காட்சிகள் மறைந்து விட்டன. இதில் கிண்டலடிக்க வேண்டுமென்றால் கற்பழிப்பை தடுத்து நிறுத்த வரும் ஹீரோவை மட்டுமல்ல, நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு தவிக்கும் ஆண் இரசிகனையும் குறி வைக்க வேண்டும். பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்தும் விதமாக கணவன்மார்கள் மனைவிகளின் புடவையைத் துவைப்பதாக வரும் பத்திரிகை ஜோக்குகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

தமிழ்ப்படத்தில் பிளாட்பார வியாபாரியாகவும், பேப்பர் போடுபவனாகவும் வேலை செய்யும் ஹீரோ பணக்காரனாகி விடுகிறான். சைக்கிள் கேப்பில் ஹீரோக்கள் வாழ்வில் உயர்ந்துவிடுவதைக் கிண்டலடிக்கும் பார்வையில் அந்த உழைக்கும் மக்கள்தான் உண்மையில் நகைச்சுவையாக இழிவுபடுத்தப்படுகிறார்கள். நிஜத்திலோ, திரையிலோ உழைப்பால் உயர்ந்தவர் யாருமில்லை. மோசடி எனும் விதியன்றி யாரும் மில்லியனராகிவிடுவதில்லை. ஆனால குறுக்கு வழியில் பங்குச் சந்தை மூலம் லாட்டரி அடிக்கலாம் எனும் நடுத்தர வர்க்கம் தனது சேமிப்பு பணத்தை போட்டு எமாறுவது அதனுடைய தவறா இல்லை எல்லா பத்திரிகைளும் அப்படி பணக்காரராகிவிடலாம் என தன்னம்பிக்கை தொடர் வெளியிடுகிறதே அவர்களுடைய தவறா?

இலட்சக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்யும நாட்டில் இந்தியா 2020இல் வல்லராசாகி விடுமென்று கூவுகிறாரே தன்னம்பிக்கைகளின் பிதாமகன் அப்துல் கலாம், அவரை கிண்டல் செய்திருந்தால் நாமும் அதை வரவேற்றிருக்கலாம்.

கோட்டு சூட்டு போட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிபணிந்து மாமூல் பெற்று சுவிஸ் வங்கியில் பில்லியன் கணக்கில் சேர்க்கும் போது தமிழ்த்திரைப்படம் மார்க்கெட் மாமூலை கிண்டல் செய்கிறது. முன்னாள் ரவுடிகள், சாராயம் காய்ச்சியோரெல்லாம் கல்வி வள்ளலாக கல்லா கட்டும் நேரத்தில் இந்த மாமூலெல்லாம் எவனுக்கு வேண்டும்?

கோவா படத்தில் வெள்ளைக்கார பெண்களை மணம் செய்து ஃபாரினில் செட்டிலாகிவிடலாமென மூன்று இளைஞர்கள் கோவா செல்கிறார்கள். எப்போதும் பிகினி பெண்களை இரசித்துக் கொண்டு பீர் குடித்துக்கொண்டு ஜாலியாக வாழ்கிறார்கள். எந்தக் கதையும், பிரச்சினையும் இல்லாமல் குடி கும்மாளமென்று வாழும் இந்தப்படத்தை எடுப்பதற்கென்று இயக்குநருக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்?

கிராமங்களலிருந்து வாழவைக்க முடியாத வாழ்க்கையால் சென்னைக்கும், பெங்களூருக்கும், மும்பைக்கும் விரட்டியடிக்கப்படும் இளைஞர்களின் காலத்தில் கோவா அவர்களைக் கேலி செய்கிறது.

வெள்ளையினப் பெண்ணை ஒரு இந்தியன் காதலித்து மணக்கிறான் என்றால் அதில் கேலிக்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய விசயங்கள் உள்ளன. இருவேறு பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்த இருவரின் வாழ்க்கையும் மோதும்போது ஏற்படும் விளைவுகளில் சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கும் நிறைய உள்ளன. ஆனால் கோவா படத்தில் அந்த வெள்ளையினப்பெண் காலால் கோலமிட்டு வெட்கப்படும் தமிழ்ப்பெண்ணாக மாற்றப்படுகிறாள்.

கருப்பை தேசிய நிறமாகக் கொண்டிருக்கும் தமிழ் ஆண் வெள்ளை நிறத்தின் மீது கொண்டிருக்கும் காம ஈர்ப்பை கேலி செய்வதற்குப் பதில்படம் ஆராதிக்கிறது. அது நிறைவேறவும் கூடுமென ஆசையும் காட்டுகிறது. நிறம், அழகு குறித்து இளையோரிடம் நிலவும் மூடநம்பிக்கைகளை கேலிசெய்து உண்மையை புரியவைத்து அவர்களது தாழ்வு மனப்பான்மையை போக்குவதற்கு பதில் கோவா படம் பொய்மையை ஊதிப்பெருக்கி அதில் திளைக்க வைக்கிறது.

படத்தில் ஓரினச்சேர்க்கை பற்றிய நகைச்சுவையான சித்தரிப்பைப் பார்த்து சிலர் பாராட்டலாம். ஆனால் சிறுவர்களை குதறவரும் சீமைப்பன்றிகளின் உல்லாசபுரியாக இருக்கும் கோவாவை பாராட்ட முடியுமா? இந்தியாவின் எல்லா தேசிய இனப்பெண்களும் விபச்சாரத்திற்கென்றே அனுப்பப்படும் கோவாவை, தெற்காசியாவின் முக்கியமான குழந்தை விபச்சார மையமாக திகழும் இந்த நகரத்தை கோவா படம் இளையோர் செல்ல வேண்டிய அற்புத உல்லாச நகராக சித்தரிக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்து பிகினியில் இருக்கும் வெள்ளைக்கார பெண்களை சுலபாமாக மடக்கிவிடலாமென சிலருக்காவது தோன்றாமல் போய்விடுமா என்ன?

கோவா படத்தை ரஜினியின் மகளும், தமிழ்ப்படத்தை அழகிரியின் மகனும் தயாரித்திருக்கின்றனர். தமிழ் மக்களின் சாபக்கேடான அரசியல் கேவலமும், சினிமாக் கேவலமும் தத்தமது வாரிசுகளைக் கொண்டு இந்தப்படங்களை தயாரித்திருப்பது தற்செயலான ஒன்றா? யார் யாரைக் கேலி செய்கிறார்கள்?

சென்னையின் புறநகர் ஒன்றின் சுமாரான திரையரங்கு ஒன்றில் நள்ளிரவு காட்சியில் தமிழ்த்திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியேறும் போது அந்த அறிவிப்பு பலகை தென்பட்டது. வரும் வெள்ளியன்று அஜித் நடித்த அசல் ரிலீசாம். வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாளும் காலை ஏழுமணிக்கு சிறப்புக்காட்சிகளாம். தமிழ்படம் ஓடிய அதே திரையரங்கு. இன்று கைதட்டிய இரசிகர்கள் நாளைக்கு அதே திரையரங்கில் அஜித்தின் ஓபனிங் சீனுக்கும் பாட்டுக்கும், மாஸ் ஹீரோ சீன்களுக்கும் கைதட்டுவார்கள். பதிவுலகிலும் பட்டாசு வெடிப்பார்கள்.

எப்போதும் போல தமிழ் வாழ்க்கை தன்னைத்தானே கேலி செய்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கும். அந்த ஓட்டத்தில் பெரும்பாலானோர் தவறி விழுந்தாலும் சிரிப்பதெற்கென்று சிலர் இல்லாமலா போய்விடுவார்கள்?

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. என்ன இப்படி படம் பார்த்து புரட்சி பண்றீங்க சத்தியமா உங்க மனசாட்சி தொட்டு சொலுங்க நீங்க யேசுவ உத்தமரா சிரிப்பு குஉட இப்படி இருந்த தன சிரிப்பேன் என்று அடம் பிடிக்கிற வேஷகார நண்பா உங்களை என்ன சொல்லி சிரிப்பது

 2. //பிளாக் டிக்கெட் விற்ற காசில் சூப்பர் ஸ்டாரான கோடிசுவர ரஜினியும்//
  எத்தனை டிக்கெட் நீங்க அவர் கிட்ட வாங்குனீங்க ……….

  எல்லா படத்தையும் சும்மா பொய் ரசிச்சு பாத்துட்டு இங்க வந்து இப்படி பேசுனா நீங்க ரொம்ப சமூக பொறுப்புள்ளவரா ?

  • மிட்டல்கிட்ட கூடத்தான் நீ நேரடியா காசுகொடுத்து நீ சிம்கார்டு வாங்குறதில்ல ஆனா அவன் கோடிஈஈஈஸ்சுவரனாவுரானே எப்புடி??? அத யோசி இதுக்கு பதில் கிடைக்கும்

 3. படம் பார்த்து தமிழன் கெட்டுடுவான் என்று சொல்கிறீர்களா ? அப்போ பக்கம் பக்கமா விஜயகாந்த் பேசின வசனத்தை கேட்டு தமிழ்நாடு ரமணா படத்துக்கப்புறம் லஞ்சம் வாங்காம திருந்திட்டதா என்ன ? அட ஒரு ஆப்பீசர் திருந்தியதாக சொல்லுங்க சார். ஒத்துக்கலாம். சமூக பிரச்சினைகளை நேரடியாக எழுதுங்க, பாராட்டலாம். ஆனால் திரைப்படங்களால சமூகம் கெட்டுருச்சு என்று சொன்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியல. சமூகம் கெட பல வழிகள் இருக்கே ?

  • ரவி, படம் பாத்து கெட்டு போறாங்கன்னு இங்க சொல்லல, வீணாபோனவங்க இருக்குற ஊருல இதுமாதிரி வெளங்காத படம்தான் சக்கரன்னு செல்லீருக்காங்க

  • விஜயகாந்thin மருத்துவ கல்லூரியில் எவ்வளவு பணம் வாங்குகிறார்கள் என்று தெரியுமா ? ரமணா படம் வசனம் தான் அனைவருக்கும் தெரியும்

 4. என்னதான் செய்யச் சொல்றீங்க முருகா..?

  உங்க மூளைக்குள்ளாற இருக்குற ஹைப்போதலாமஸை அப்படியே எங்க எல்லோருக்கும் பாஸ் பண்ணிருங்க..

  நாங்களும் உங்களை மாதிரியே நல்ல பிள்ளைகளா மாறி விடுகிறோம். அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து எல்லாரையும்……………………..????????????????????????????????????

  • பக்திப்படத்த ரசிக்கரத்துக்கு ஐப்போதலாமசு கொடுத்த முருகன்தானே பிட்டு படத்தையும் ரசிக்கவைக்குறான், அவன் கிட்ட போய் கேக்க வேண்டியதுதானே

   • அவன்தான் சொல்றான்.. உனக்குப் புத்தியைக் கொடுத்தது நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்தத்தான்.. உன்னை எவன் போய் பிட்டு படம் பார்க்கச் சொன்னான்னு திருப்பிக் கேக்குறான்..!

    பிளாக்குல வினவு எழுதியிருக்காரேன்னு கேட்டதுக்கு.. பிளாக்குல நல்ல விஷயத்தை மட்டும் படிக்க வேண்டியதுதான.. உன்னை எவன் வினவை படிக்கச் சொன்னதுன்னு கேக்குறான்..!

    என்னதான் சொல்றது..?

    • உண்மைத்தமிழா உம்மை முருகனை கும்பிடவும், பிட்டுபடம் பார்க்கவும் நானா சொன்னேன், எங்கிட்ட எதுக்கு இத்த கேள்வி, ஐப்போதமாசு கேட்டது நீர், அதைப்போய் அந்த முருகன்ட கேளுன்னு சொன்னது நான். ஐப்போதலாம்ச முருகன்ட கேட்டீங்களா, கிடைச்சுதா கிடைக்கலையாங்கற முழு விவரத்தோட வந்தால் ஏதாவது பேசலாம்

 5. வினவு..எல்லாத்தையும் சீரியஸ் ஆ பார்த்த வாழ்க்கை நரகம் ஆயிடும். காமெடி படத்துக்கு போயிட்டு அது சரியில்ல இது சரியில்லன்னு சொன்னா …i am sorry ur making ur life miserable

  • ராஜா, சினிமாவுல ஒருத்தன் கீழ்விழுந்தா சிறிக்குற நீங்க, உங்கப்பா கிழவிழுந்து அடிபட்டத பாத்து எவனாவது சிரிச்சா என்ன பண்ணுவீங்க, கூட சேந்து சிரிப்பீங்களா?

 6. இங்கு சிரிப்பதற்கு எதுவுமே இல்லை. சகலமும் முகத்தில் ஓங்கி அறைகிற யதார்த்தங்கள்.

 7. வினவு: டேய் மச்சான் இவனுங்க என்னத்த எழுதுனாலும் படிக்கரானுங்கடா. எப்பவும் போல தமிழனுங்க ரொம்ப நல்லவங்கடா. இன்னைக்கு நாம எழுதுன இந்த “கோவா, தமிழ்ப்படம்: செத்துச் செத்துச் சிரிக்கலாமா ” படிச்சா முட்டா ரசிகனுங்க நாளைக்கு நம்ம எழுத போற “சானியா மிர்சாவின் திருமண முறிவும் அழகிரியின் அந்தரங்க சதியும்” படிச்சுட்டு நாமளா அஹா ஓகோனு புகழ்தான் போறானுங்க, பின்னூட்டம் எழுததான் செய்வானுங்க இந்த இளிச்ச வாய் கேன ரசிகனுங்க. நம்ம காட்டுல கொண்டாட்டம் தான். ஜாலி ஜாலி.

  • அண்ணன் மூட்டா… என்ன வாங்குன செருப்படி பத்தாம மாறுவேசத்துல வேற வற்றீங்க போல கீதே?

 8. நான் எதுவும் சொல்லவில்லை சொல்லவில்லை சொல்லவில்லை

  -தியாகு செம்மலர்

  • தோழர் தியாகு, நீங்கள் உங்கள் கருத்துக்களை விளக்க வேண்டும் அல்லது சுயவிமர்சனம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

   • தியாகு தான் ஒண்ணுமே சொல்லவில்லையே. அவர ஏன் போட்டு துவைக்கிற கார்கி? கொஞ்சம் பொறு..பல அடிவருடிகள் வந்து உனக்கு ஆம்மாம் சாமி போடுவாங்க.
    தியாகு சார் , இப்போ தெரிஞ்சுதா அந்த வினவோட மச்சான் யாருன்னு? வேற யாரும் இல்ல கார்கி தான். ஜாக்கிரதை நம்மள தூண்டுரானுங்க.

 9. இந்த விமர்சனம் தனிப்பட்ட முறையில் சில சுயவிமர்சனங்களைச் செய்து கொள்ள தூண்டியிருக்கிறது குறிப்பாக தமிழ்ப்படம் குறித்த வரிகள்..

  அடுத்து நன்பர்கள் சிலர், ஒரு படத்தை படமா பார்க்கக் கூடாதா? சிரிப்புக்குக் கூடவா உள்ளே போய் அரசியல் பண்ணனும்? படம் பார்த்து தான்
  இங்கே எல்லாரும் திருந்த போறாங்களா (அ) கெட்டுவிட போகிறார்களா? என்கிற ரீதியில் சில மறுமொழிகளை அளித்திருக்கிறார்கள். இன்னும்
  இது போல மறுமொழிகளை நிறைய எதிர்பார்க்கலாம்.. தொடரப்போகும் விவாதத்தில் இடையீடு செய்யும் வாய்ப்பு இல்லாததால் இப்போது
  இருக்கும் குறுகிய நேரத்தில் எனது கருத்தை இங்கே சொல்லிச் செல்கிறேன்.

  முதலில் – ரவி, பதிவில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் அதே விஷயம் தான் – சமூகத்தில் நிகழும் அநீதிகளைப் பார்த்து நாம் இயல்பாகக் கோபப்பட வேண்டிய விடயங்களில் நாம் கோபப்படாமல் இருக்கிறோமே ஏன்? எதார்த்தத்தில் பெண்ணடிமைத்தனம் இருக்கும் போது, விகடன் குமுதம்
  வகையறாக்கள் சொல்லும் ஆண் சமைப்பது / துணிதுவைப்பது போன்ற ஜோக்குகளுக்கு சிரிக்கிறோமே ஏன்? உண்மையில் அந்த துணுக்குகளில்
  சிரிக்க என்ன இருக்கிறது. சமைப்பதும் துணிதுவைப்பதும் ஒரு வேலை தானே? அதை ஆண் செய்கிறான் எனும் பேக்ட்ராப்பில் படிக்கும் போது
  சிரிக்கிறோமே அப்படியென்றால் அந்த சிரிப்புக்கு அர்த்தம் என்ன?

  நமக்கு எழும் உணர்ச்சிகள் எந்த அடித்தளத்தில் இருந்து எழுகிறது என்பதை ஆய்வு செய்து பார்ப்பது தானே முறை? மக்கள் ஒன்றை ரசிக்கிறார்கள்
  எனும் போது, அந்த ரசனையின் மூலம் என்ன என்று நோண்டிப் பார்த்து தான் ஆக வேண்டியிருக்கிறது. காசு கொடுத்து ஓட்டு வாங்கறானே
  என்று மக்கள் கோபப்படாமல் ‘அரசியல்ணா இதெல்லாம் சகஜமப்பா’ என்று துடைத்துப் போட்டு விட்டு போகிறார்களே அந்த கருத்தை
  உருவாக்கியது எது? அரசியல் / சமூக அநீதிகளை எதிர்ப்பது போல எந்த அரசியலுமற்ற வெற்றுக் காட்சிகளைக் காட்டி மெய்யான ஆத்திரத்தை
  நீர்த்துப் போகச் செய்யும் ஊடகங்கள் தானே – ஊடகம் எனும் போது அதில் சினிமாவும் அடக்கம் தானே?

  கலையின் ஒவ்வொரு வடிவமும் அதைக் காண்பவனிடம் நிச்சயமாக ஆதிக்கம் செலுத்தவே செலுத்துகிறது. ரவி சொல்ல வருவது போல, இரண்டு
  மணி நேரப் படம் தானே… பார்த்து தியேட்டரை விட்டு வந்தால் அவ்வளவு தானே? என்று இதை சுருக்கிப் பார்க்க முடியாது. தின்னும் எதுவும்
  கழிந்து தான் போகும் – ஆனால், உள்ளே சென்றதற்கும் வெளியே வருவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் அது உடலில் சிலவற்றை விட்டுச்
  செல்கிறதல்லவா? சினிமா உள்ளிட்ட கலைப்படைப்புகளும் அவ்வாறானதே – அரங்கிலிருந்து வெளியே வரும் இரசிகனுக்கு, அந்த இரண்டரை
  மணி நேர இடைவெளியில் காதுகள் மூலம் நுழைந்து மூளைக்குள் சேகரமாகும் குப்பைகள் வினையாற்றாமல் இருக்காது. நீங்கள்
  சொல்வது போல ரமணா திரைப்படம் மூலம் லஞ்சம் வாங்காமல் (அ) கொடுக்காமல் திருத்தும் அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை.
  வாங்கினாலோ கொடுத்தாலோ ஐ.சி.எஃப் போன்ற ஒரு சர்ரியலான (எதார்த்தத்திற்கு உட்படாத) ஒரு இயக்கம் எதார்த்தத்தில் தம்மை
  தண்டிக்க முடியாது எனும் தைரியத்தைத் தான் கொடுத்திருக்கும். பொதுஜனத்திற்கோ, இது தமது எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு தடுக்க முடியாத
  பிரம்மாண்டம் எனும் பிரமையைத் தான் உண்டாக்கியிருக்கும்.

  ராஜா எனும் அன்பருக்கு – “எல்லாத்தையும் சீரியஸாப் பாத்தா வாழ்க்கை நரகமாயிடும்” என்கிறீர்கள் அல்லவா.. நன்பரே உண்மையில் இங்கே
  எவரும் எதையும் சீரியஸாக பார்க்காமல் சிரிப்பாய் பார்த்துப் பார்த்து எல்லாம் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருப்பதாலேயே எங்கள் தோழர்கள்
  சீரியஸாக பார்க்கும் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

  அடுத்து சென்ற ஒரு பதிவில் தியாகு அவர்கள் சமூகத்தில் எத்தனையோ பிரச்சினை இருக்கும் போது சினிமாவுக்கு ஏன் விமர்சனம் எழுதி
  நேரத்தை வீணாக்குகிறீர்கள் எனும் அர்த்தம் வரும் வகையில் ஒரு மறுமொழி எழுதியிருந்தார் (அதற்கு அங்கேயே எதிர்விணை ஆற்ற இயலவில்லை).
  சினிமாவும் சினிமாக்காரர்களும் இந்த சமூகத்தில் தானே இருக்கிறார்கள்? இந்த சமூகத்தின் ஒரு அங்கம் எனும் வகையில் நல்லதாகவோ
  கெட்டதாகவோ அவர்களும் ஏதோவொரு தாக்கத்தை உண்டாக்கத்தானே செய்கிறார்கள்? எனில், அந்தத் தாக்கத்தின் போக்கு யாது என்பதைக்
  குறித்து எழுதுவதும் விவாதிப்பதும் கூட தவிர்க்கவியலாதது தான்.

  எனவே இது போன்று பரவலாக பொதுமக்களிடையே வரவேற்பு பெறும் கலைப்படைப்புகளையும் அதை இரசிக்கும் இரசிகர்களின் இரசனை என்ன
  வகையானது, அதன் தோன்றும் அடித்தளம் என்ன என்பதை தோலுரித்துக் காட்டும் வகையிலான பதிவுகள் அவசியமானது தான். புதிய கலாச்சாரம்
  வேறு அடிக்கடி வருவதில்லை – அது வெளியாகும் போது நடப்பில் இருக்கும் விஷயங்களைத் தான் கணக்கிலெடுத்துக் கொள்வார்கள்.. இரண்டு
  மூன்று மாதத்துக்கு முன் வந்த படங்களை பற்றியெல்லாம் எழுத வாய்ப்பிருக்காது என்ற வகையில் இது போன்ற விமர்சனக்கட்டுரைகள்
  வினவில் வருவது வரவேற்கத்தக்கதே.

  மற்றபடி பதிவு தனிப்பட்டு மிக ஆழமாய் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது எனும் வகையில் இதை எழுதிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

  • நீங்கள் சொன்னதை வழிமொழிகிறேன் ………..ஒரு ரசனை எப்படி உள்ளதோ அப்படியே தான் அந்த நாடு இருக்கும் ………….சினிமா முக்கியமான கலை வடிவம் அது சமூகத்தின் உள்ளே இருக்கிறது தாக்கத்தை ஏற்படுத்தும் போது கேள்வி கேட்க தான் வேண்டும் வினவு
   பாதை சரியே ……சினிமா என்ற மாயையை உடைக்க வேண்டும் ……….

   அற்புதமான பதிவு வினவு

  • சரிதான்.. ஆனாலும் நகைச்சுவைக்காக படைக்கப்படும் படைப்புக்களை ஆராய்வது அவ்வளவு சரியாகப் படவில்லை.. நம் மக்களின் ரசனை கெட்டுக்கிடக்கிறது என்பது உண்மைதான்.. ஆனாலும் ‘தமிழ்படம்’ மாதிரியானப் படங்கள் ஒரு நல்ல மாற்றம் உருவாக்கும் என்பது என் நம்பிக்கை.

 10. நான் மணி

  நல்ல விமர்சன கட்டுரை. சிலருக்கு அடிக்கடி சினிமா விமர்சனம் வருவது ஏதோ தவறான செயல் போல படலாம். ஆனால் இப்படி விமர்சனம் வருவதுதான் சரியானது.

  எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது. யாராவது விளக்கினால் உதவியாக இருக்கும்.

  1. உண்மையான கோபமும் ரோஷமும் இருந்தால்தான் உண்மையான நகைச்சுவை சாத்தியம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இதுதான் பெரும்பாலும் உண்மையாக இருக்கிறது என்றாலும், இதனை ஒரு விதி என வைக்கலாமா.. கோபம் இல்லாத சமூகத்தால் நல்ல நகைச்சுவை உணர்வு வெளிப்படுத்த முடியுமானால் அதற்கு என்ன எதிர்வினை செய்வது.

  2. மாஸ் ஹீரோக்களை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட சீன்களை ரசிகர்கள் எந்தப்படம், எந்ந ஹீரோ என ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் மூலம் ஹீரோ ஒர்சீப் குறையும்தானே.. அது நல்ல விசயம்தானே.. அதற்கு மாற்றாக நீங்கள் சொல்லும் விசயங்களும் சரிதான். இதுவும் சரிதானே.. தவறு என அதனை சொல்ல முடியாதுதானே…

  3. உழைப்பால் உயர்வதை காட்டுவது ஒருவகையில் கிண்டலடிப்பது என்ற கோணம் எனக்கு புதிதாக உள்ளது. கூடுதலாக யாராவது தெரிந்தவர்கள் விளக்கினால் உதவியாக இருக்கும்.

  4. அப்துல் கலாமை கிண்டல் செய்யவதை படத்தில் எந்த காட்சிக்கு பதிலாக வைத்திருக்க வேண்டும் எனச் சொன்னால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் எனக் கருதுகிறேன்.

  5. வெள்ளையினப் பெண்ணை இயல்பாகவே ஒரு இந்தியன் சந்தித்து காதலிக்க முடிந்தால் அதனை கிண்டல் செய்ய வேண்டும் என்பது சரியான விமர்சனமா எனப் புரியவில்லை. அது தாழ்வு மனப்பான்மை மற்றும் மூடநம்பிக்கை தான் வழிநடத்தும் என்பதையும் மீறி ஒரு ஹைபோதடிக்கலாக ஒரு காதல் வந்தால் கூட அதனை புறக்கணிக்க வேண்டுமா..

  மறுமொழி விவாதம் என இதனை யாரும் மாற்றி விடாதீர்கள்.

  • “நீங்க மணி” எல்லாருக்கும் புரிகிர மாதிரி கருத்து எழுதிட்டா சாமி உங்க கண்ண குத்திடுமா????

   • மன்னிக்கவும். நான் சந்தேகம் தான் கேட்டுள்ளேன். கருத்து சொல்லவில்லை என நினைக்கிறேன். முடிந்தால் எனது ஐயங்களை தீர்த்து வைத்தால் நன்று.

 11. சினிமா என்கிற கலை வடிவம் சமூகத்தின் சீர்கேட்டை பிரதி பலிக்கிறதா
  இல்லையா ?
  சமூகம் சினிமாவில் காண்பிக்கப்படுவது போல இருக்கிறதா இல்லையா ?
  இதில் சினிமாவை விமர்சிப்பதன் மூலம் சமூகத்தை விமர்சிப்பது சரிதானே
  அதை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்
  ஏன் சினிமா விமர்சனம் செய்ய கூடாது
  மக்கள் ரசனை மட்டம் சமூக மட்டத்தில் மிக கீழாக இருக்கும் போது
  அதை தட்டி கேட்க இம்மாதிரி விமர்சனங்கள் உதவுமே !

  கார்க்கி முதலில் ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் – இப்போது தமிழ் படம் விமர்சனம் – முன்பு உன்னை போல ஒருவன் விமர்சனம்

  இதில் உன்னைபோல் ஒருவன் – தமிழ் படம் கோவா இவற்றின் விமர்சனத்தில் எனக்கு மலை அளவு உடன் பாடு உண்டு
  சரியான வடிவத்தில் அவை வைக்கப்பட்டு உள்ளன

  ஆனால் ஆயிரத்தில் ஒருவனில் அதிகம் உடன்பாடு இல்லை

  அது ஒரு தயாரிப்பாளரின் மனநிலையை தனிமனிதனின் கீழான எண்ணங்களை விமர்சிக்க மட்டும் செய்யும் ஒரு படைப்பாக அது தெரிந்தது

  அந்த விமர்சனத்தின் கால்பங்கு சமூக விமர்சனமாக இருப்பதை ஏற்று கொள்கிறேன் ஆனால் பெரும்பங்கு தனி மனித விமர்சனமாக இருப்பதை அறிகிறீர்களா

  நமது வேலை சமூகத்துக்கு சொல்வது – தனிமனித தாக்குதல் அல்ல

  லீனா விசயத்தில் கூட அந்த கட்டுரையில் நான் வினவுடன் லீனாவின்
  தனிபட்ட விசயங்களுக்கு அவர் படம் எடுத்தார் நின்று போனது எனும் விபரங்களை எதிர்கிறேன்

  ஆனால் ஒரு பெண்ணிய வாதி என சொல்லி கம்யூனிசமே எனது யோனிக்குள் அடக்கம் என சொல்லும் அவரது வறட்டு திமிரை எதிர்த்ததை வரவேற்கிறேன்

  இதை எதுக்கு சொன்னேன் என்றால் எந்த ஒரு விசயத்தையும் அதன் மூலம் தனிமனித மன விகாரங்களை ஆராய்கிறேன் பேர்வழி என
  ஒரு அதிகார தோரணைக்கு வினவு வந்து விடும் போல் தெரிகையில்
  சொல்ல வேண்டியதாகி போகிறது

  மேலும் பேசலாம் எனது கருத்தில் ஏதேனும் தவறு இருப்பின்

  சுய விமர்சனம் ஏற்று கொள்கிறேன்

  அதே போல நீங்களும் கார்க்கி ………….

  அடடே தியாகு முதலில் எதோ காரணம் சொன்னார் இப்ப மாத்துறானும்
  கிளம்பிடாதீங்க கார்க்கி

  நான் முன்பு சொன்னது இதுதான் “சினிமா அதன் அடிப்படையில் விமர்சனம் ” என்ற விசயங்கள் அதிக மாகி போனதாக தெரிகிறது

  சமூகத்தின் பல்வேறு பட்ட பிரச்ச்னைகளை பேசும் தளமாக வினவை எதிர்பார்த்தேன் என்று நான் சொன்னது அப்படியே தான் இருக்கிறது

  சினிமாவே வேண்டாம் என்றும் நான் சொல்லவில்லை

  ஆனால் அதன் அளவு என்பது வினவு தோழர்கள் தீர்மானிச்சிக்கட்டும்

  • ரஜினி, கமல், நரேந்திர மோடி, துக்ளக் சோ, பினாயக் சென், பிர்சா முண்டா, பகத்சிங், டோண்டு இராகவன், வஜ்ரா, தமிழ் ஓவியா, சந்திப்பு செல்வபெருமாள், லூஷூன், மால்கம் எக்ஸ் ….. இவர்களும் தனிமனிதர்களே, ஆனால் தனிமனிதர்கள் தானா? 

  • @@@நான் முன்பு சொன்னது இதுதான் “சினிமா அதன் அடிப்படையில் விமர்சனம் ” என்ற விசயங்கள் அதிக மாகி போனதாக தெரிகிறது@@@ என்னங்க தியாகு இது அநியாயமா இருக்கு, போன பதிவுலயே இத மறுத்து ஆதார்த்தோட எழுதியிருந்தேன் மறுபடியும் ”விபரங்களை சரியாக தெரியாமல் விமர்சனம்” செய்யுறீங்களே…
   -=-=-=-=-=-=-=-
   வினவில் இதுவரை வந்துள்ள பதிவுகள் – 400
   அதில் சினிமா தொடர்பான பதிவுகள் – 27
   அதில் விமரிசனங்கள்-8 மற்ற 19 எதோ ஒரு வகையில் சினமா சம்பந்தப்பட்டவை (லீனா – ஸ்டாலின் சகாப்தம் – ஈழம் – நூல் அறிமுகம், ஜெகத் கஸ்பார், சீமான் etc…)
   பார்க்க https://www.vinavu.com/category/cinema/
   இப்படி 7 சதவிகிதம் மட்டுமே சினிமா பதிவுகள் இருக்கும் போது நியாயமே இல்லாமல் நீங்கள் ஒரு கருத்தை உறுவாக்க முனைவதை ஏற்குக்கொள்ளவே முடியவில்லை.

 12. //ரஜினி, கமல், நரேந்திர மோடி, துக்ளக் சோ, பினாயக் சென், பிர்சா முண்டா, பகத்சிங், டோண்டு இராகவன், வஜ்ரா, தமிழ் ஓவியா, சந்திப்பு செல்வபெருமாள், லூஷூன், மால்கம் எக்ஸ் ….. இவர்களும் தனிமனிதர்களே, ஆனால் தனிமனிதர்கள் தானா?
  //

  அந்த தனிமனிதன் பற்றிய விபரங்களை சரியாக தெரியாமல் விமர்சன செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது அரைடிக்கட் அவர்களே

 13. தோழர் சில நாட்களாக உங்கள் இணையதளத்தில் தொடர்ச்சியாக சினிமா அல்லது அது சார்ந்த பிரச்சனைகளும் லீனா போன்றவர்கள் குறித்த டேஷ்களுமாக இருக்கிறதே.. நமக்கு பேசவும் பரப்பவும் நிறைய பிரச்சனைகள் நாட்டில் இருக்கிறதே! உங்கள் தளத்தின் கடுமையான வாசகன் என்னும் உரிமையோடு இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன். சினிமாவை கொஞ்சம் குறைக்கலாம் நண்பா. அதற்கு என்னைப்போல் நிறைய மொக்கையர்கள் இருக்கிறோமே!

  • பதிவுலகம் அதிகம் கவலைப்படும் விசயமாக சினிமா இருக்கிறது. அதை மாற்றுவதற்குத்தான் இந்த சிறிய முயற்சி.

  • நாட்டில் நடக்கும் பிரச்சினைகளை பேசி விவாதிப்பதற்கு சினிமா பெரிய தடையாக இருக்கிறது. சினிமா மாயையை எவ்வ்வளுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அந்த அளவு சமூக பிரச்சினைகளை பேச முடியும். இதை மொக்கைகள் செய்ய முடியாதே? எனவே கடைந்தெடுத்த மசால படங்கள் தவிர்த்து வினவில் எல்லா படங்களையும் விமரிசனம் செய்வதாகத்தான் இருக்கிறோம். பேசப்படும் ஒரு படத்தின் மாயையை செல்வாக்கை எவ்வளவு சீக்கிரம் வீழ்த்துகிறோமோ அவ்வளவு சீக்கிரம் இரசிகர்கள் இதை விட்டு வெளியே வந்து விடுவார்கள். இதை பேசாமல் விடுத்தால் அவர்கள் அந்த உலகிலேயே இருப்பார்கள்.

   • //பேசப்படும் ஒரு படத்தின் மாயையை செல்வாக்கை எவ்வளவு சீக்கிரம் வீழ்த்துகிறோமோ அவ்வளவு சீக்கிரம் இரசிகர்கள் இதை விட்டு வெளியே வந்து விடுவார்கள். இதை பேசாமல் விடுத்தால் அவர்கள் அந்த உலகிலேயே இருப்பார்கள்.//

    தமிழ்நாட்டு இளைஞர்களை அவ்வளவு எளிதாக மீட்டெடுத்துவிட இயலுமா என்று தெரியவில்லை. நேற்று பல தியேட்டர்களிலும் வெறியோடு சுற்றிக்கொண்டிருந்த அசல் இளைஞர்களை பார்க்கும்போது இதெல்லாம் சாத்தியமா என்பது மலைப்பாகவே இருக்கிறது தோழர்

    • தமிழ்நாட்டு இளைஞர்களை எளிதாக மீட்டெடுக்க இயலாது என்றாலும் பதிவுலகில் கொஞ்சம் முற்போக்கு, கொஞ்சம் மொக்கை, நிறைய சினிமா என்று இருப்பவர்களைக்கூட மீட்டெடுக்க முடியாதா என்ன?

    • வினவு, நீங்க லக்கிலுக், அதிஷாவையா சொல்றீங்க??? மொதல்ல அவங்கள சாரு கிட்டேருந்து காப்பாத்துங்க… இந்த பேருக்கும் நமக்கும் ராசி செட்டேஆவாது போலக்கீதே????

     • கேள்விக்குறி, பொதுவில் பதிவர்களைச் சொன்னோம். நீங்கள் சொன்னது போல இந்த விவாதம் வினவு சினிமாவை எழுதலாமா என்று போய்விட்டது. பதிலாக எது நகைச்சுவை என்று போயிருந்தால் நன்றாக இருக்கும்.

      • ///இந்த விவாதம் வினவு சினிமாவை எழுதலாமா என்று போய்விட்டது. பதிலாக எது நகைச்சுவை என்று போயிருந்தால் நன்றாக இருக்கும்.///
       —–இனி ஒவ்வொரு வினவின் பதிவிற்கு அடியிலும் இப்படி ஒரு ‘டிஸ்கி’ போட்டு விடுங்களேன்…

       “பார்வையாளர்களும் தோழர்களும் இப்படி இப்படித்தான் விவாதம் செய்யவேண்டும், இந்தந்த விஷயங்களைத்தான் விவாதம் செய்ய வேண்டும், விவாதத்தின் போக்கு இவ்வழியில்தான் இருக்க வேண்டும்” —-என்று தெளிவாக.

       //விவாதங்களை திசைதிருப்பும் மறுமொழிகள்// —எதுவென்று உங்கள் தோழர்களுக்கே தெரியவில்லையே…

       இப்படிக்கு-
       நெத்தியடி முஹம்மத்
       (‘ஒத்துவராத மறுமொழிகள்’ பகுதியை வினவு நிரப்புவதற்கு உதவும் பொருட்டு பதிவுக்கு ஒத்துவரும் மறுமொழி போடுபவன்)

       • ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களிடம் விவாதிக்க ‘முடியாம்ல’, மானமிழந்து அம்மணமாய் ஒளிந்து கொண்டிருந்த சுயமொகமதுவின் மானம் காக்க டவுசர் வாங்கிக்கொடுத்த வினவுக்கு நன்றி. தயவு செய்து ஜூஜகான், ஆன்லைன் பிச்சை , பி.ஏ.ஜோக் ஊத்வாய் ஆகியோருக்கும் தலா 3 டவுசர் வாங்கிக்கொடுக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்

 14. Vinavu jakkubai pathi koncham eluthunga , vinavu I long back asked about to write a article abot tollgate collection on highways, please stop watching movie and write good article.

  amama TICKET evvalavu / blacka / originala !?

 15. கேள்வி குறி : ௭ சதவீதம் அதிகமில்லை என்பது உங்கள் கருத்து

  அதிகம் என்பது எனது கருத்து .

  நான் ஒரு கருத்தை உருவாக்க முயல்கிறேன் என்பது எப்படி என விளக்கும்படி கேட்டு கொள்கிறேன்

  இப்படி விமர்சிப்பது சரியல்ல என்றால் விமர்சிப்பதை நிறுத்தி விடுகிறேன்
  வினவு – வினை செய் என்பதில் வினவாமல் இருக்கிறேன்

  • /////சினிமாவே வேண்டாம் என்றும் நான் சொல்லவில்லை
   ஆனால் அதன் அளவு என்பது வினவு தோழர்கள் தீர்மானிச்சிக்கட்டும்//// விளக்கமாக கூறினாலும் ஏற்க மறுக்கிறீர்கள்.எனவே என்ன அளவு, அதை எந்த அடிப்படியில் தீர்மானிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் theriviththu விடவும்… வினை செய்யவே alaikkirom..

 16. மிக சிறப்பான பதிவு அத்தோடு இப்ப இருக்கிற காலத்துக்கு தக்க பொழைக்க கத்துக்க என பலர் சொல்ல கேள்விபட்டுருக்கேன்.பிழைப்பு வாதத்தை சரியென ஏற்றுகொள்ளும் மனோபாவத்தின் வடிவமாகவே காண்கிறேன்.ஒத்துகொண்ட ஒன்றை செய்ய எந்த தயக்கமும் இருக்க போவதில்லை.காண்பவர்களும் கமிடியாகவே எடுத்துகொல்வர்கள் இந்த விசயங்களை போல .

 17. You Know, it is often quoted that “Journalism can never be silent: that is its greatest virtue and its greatest fault. It must speak, and speak immediately, while the echoes of wonder, the claims of triumph and the signs of horror are still in the air.”I really appreciate This Vinavu Team exactly for that reason, they not only speak up, but they speak up at the right time too… I only wish that they do it faster and forever

  Hats off team vinavu
  P.K.P.

 18. வினவில் என்ன தொடர்ந்து சினிமா பற்றிய விமர்சனங்களா?  என்று முதலில் யோசித்தேன். கார்க்கி சொன்ன விளக்கம் தெளிவுபடுத்தியது. வாழ்த்துக்கள்.

 19. && ஆனால் சிறுவர்களை குதறவரும் சீமைப்பன்றிகளின் உல்லாசபுரியாக இருக்கும் கோவாவை பாராட்ட முடியுமா? ??&&&&&&&&&&&&&&&       சமீபத்தில் கோவாவில் ஒரு வெளிநாட்டு சிறுமியிடம் இந்தியர் தவறாக நடந்து கொண்டது.

 20. //நிஜத்திலோ, திரையிலோ உழைப்பால் உயர்ந்தவர் யாருமில்லை// அப்படியா? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியவில்லை?

  • ஆம்.

   /////நிஜத்திலோ, திரையிலோ உழைப்பால் உயர்ந்தவர் யாருமில்லை. மோசடி எனும் விதியன்றி யாரும் மில்லியனராகிவிடுவதில்லை///

   That is what you belive comrade. உங்கள் பார்வை எவ்வளவு பழுதுபட்டுள்ளது என்பதை நிருப்பிக்கிறது. எல்லோறையும் எல்லா காலாமும் ஏமாற்ற முடியாது. Business இல்
   நேர்மை மற்றும் goodwill மூலம் தான் brand buldling செய்ய முடியும். ஒரு சோனி நிறுவனமோ அல்லது இன்ஃபோசிஸ் நிறுவனமோ இப்படி மோசடி செய்து
   வளரவில்லை. முடியாது. எல்லாவற்றையும் black and white ஆக் பார்க்கும் உங்களுக்கு இதை புரியவைக்கவும் முடியாது.

   • //ஒரு சோனி நிறுவனமோ அல்லது இன்ஃபோசிஸ் நிறுவனமோ இப்படி மோசடி செய்து
    வளரவில்லை. முடியாது//

    மோசடி என்பதற்கான சட்ட விளக்கத்தை மாற்றிவிட்டால் அதியமான் சொன்னது உண்மைதான்.

    ஆமாம், அப்படித்தான் நடக்கிறது, ரிலையன்ஸ் செய்த மோசடிகள் அனைத்தும் சட்டங்கள் ஆக்கப்பட்டன. ரிலையன்ஸும் இந்தியாவின் அடையாளமாகிவிட்டது.

    அதியமானின் பார்வைக் கோளாறுகள் மாறப் போவதில்லை. அது ஒரு வகையில் ‘சோ’ வகையாறா போல நிலவுகின்ற அமைப்பின் விதிகளின் ஊடாக நியாய தர்மங்களை புரிந்து கொள்வது போன்றதே ஆகும். அதாவது, போலீஸ்காரன் ஏழை எளியவர்களை அடித்தால், அலையவிட்டால் அதுதான் யாதார்த்தம் அதனால் டோண்ட் கேர் (‘டோண்டு’ கேர் அல்ல). அதுவே, சமூகத்தில் செல்வாக்கான பிரிவை ஒரு சின்ன வழக்குப் பதிவுக்கு அலைய விட்டாலே ஜனநாயகம் செத்து விட்டது ரெட் டேப், பழைய சோசலிசத்தின் பின் விளைவுகள் என்று கூச்சலிடுவதுமான இந்த மன வக்கிரமும் முதலாளித்துவ சிந்தனை முடக்குவாதத்தின் விளைவே..

    இதற்கு அருமருந்து மனிதாபிமானமு, சுயமரியாதையும். சுருக்கமாக ஒரு வார்த்தையில் என்றால் கம்யூனிசம்.

    • ////அதியமானின் பார்வைக் கோளாறுகள் மாறப் போவதில்லை. அது ஒரு வகையில் ‘சோ’ வகையாறா போல நிலவுகின்ற அமைப்பின் விதிகளின் ஊடாக நியாய தர்மங்களை புரிந்து கொள்வது போன்றதே ஆகும். அதாவது, போலீஸ்காரன் ஏழை எளியவர்களை அடித்தால், அலையவிட்டால் அதுதான் யாதார்த்தம் அதனால் டோண்ட் கேர் (‘டோண்டு’ கேர் அல்ல)… ////

     யார் பார்வை கோளாறு என்பதை நீரே சொல்லி கொள்ள வேண்டாம் அசுரன். உமது பார்வை தான் கோளாறு என்று நான் கருதுகிறேன். ஓகே. மனித உரிமை மீறல்களை என்றும் நான் நியாயபடுத்தவோ, ஆதரிக்கவோ இல்லை. கம்யூனிச சித்தாந்தத்தின் பெயரில் அதை செய்வது நீர் தான்.

     ///அதுவே, சமூகத்தில் செல்வாக்கான பிரிவை ஒரு சின்ன வழக்குப் பதிவுக்கு அலைய விட்டாலே ஜனநாயகம் செத்து விட்டது ரெட் டேப், பழைய சோசலிசத்தின் பின் விளைவுகள் என்று கூச்சலிடுவதுமான இந்த மன வக்கிரமும் முதலாளித்துவ சிந்தனை முடக்குவாதத்தின் விளைவே////

     இப்படி யார் கூச்சலிடுகிறார்கள் அசுரன் ? பொதுப்படையாக உளர வேண்டாம். நான் இப்படி எங்கு சொல்லியுள்ளேன் ? மன வக்கிரம் உமக்குதான். முடக்குவாதம் என்றால் என்னவென்று வரலாறு நிருப்பித்துள்ளது.

    • //இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை:

     http://commerce.nic.in/pressrel.html//

     இதை மறந்துவிட்டீர்களே அதியமான்? வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறதே? பிறகு எங்கிருந்து ஏற்றுமதிசார் அன்னியச் செலாவணி அதிகரிப்பு நிகழும்? ரிசர்வ் வங்கியே இதனைச் சொல்லவில்லையே? வழக்கம் போல அது யானை, இது பூனை என்று ஜூ காட்டாமல் நீங்களே விளக்க வேண்டியதுதானே? சுட்டிகளைக் கொடுப்பது மட்டும செய்வது, அதெல்லாம் உனக்குப் புரியாது என்று மட்டும் சொல்வது, இதெல்லாம் கோயில் பார்ப்பான் சம்ஸ்கிருதம் பற்றி கதைப்பது போன்ற முட்டாள்தனமாகவோ, காரியவாத பிரச்சாரமாகவோ மட்டுமே எமக்குத் தெரிகிறது.

     //ரூபாயின் மதிப்பு வீழ்ந்தால், இறக்குமதி விலை அதிகமாகி, பெட்ரோயிலிய மற்றும் இதர பொருட்களின் விலை மிக அதிகரிக்கும். விலைவாசி அதிகரிப்பு, வறுமையை அதிகரித்து, பொருளாதார மந்தத்தை உருவாக்கும் என்பது அடிப்படை விதி.//

     மேலும், இவரது கூற்றுப்படி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தால் இந்தியாவில் பாதிப்பு இருக்கும். உண்மையில் வலுவாக குறைக்கிறார்களே அது ஏன்? அவ்வாறு குறைந்தால் விலைவாசி உயரும் இன்ன பிற பிரச்சினைகள் ஏற்படும், ஆனால் இன்போசிஸ் நாரயணமூர்த்தி என்ற கயவன் (அல்லது தர்மபிரபு) லாபம் சம்பாதிக்கும் பொழுது அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்கிறார் அதியமான்.

     http://commons.wikimedia.org/wiki/File:Value_of_Indian_rupee_as_per_dollar_&_pound_(1980-2005).png

     முன்பொரு முறை நடந்த விவாதத்திலேயே ரூபாயின் மதிப்பு எவ்வாறு டாலருக்கு நிகராக தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது என்பதையும் குறிப்பாக 1980களில் ஓரளவு ஸ்திரமாக இருந்துள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். 2000 முதல் 2005 வரை ஸ்திரமாக இருப்பதற்குக் காரணம் டாலர்தானேயன்றி(அமெரிக்க சரிவு) இந்தியப் பொருளாதாரம் அல்ல. இதனை பிரிட்டன் பவுண்டுடனான ருபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

     மேலும், கடன் அதிகமாக நமக்குக் கொடுக்கப்படுவதையே ஒரு அங்கீகாரமாக கதை விடுகிறார் பொருளாதாரப் புலி அதியமான். இந்த வகையில் நமக்கு முன்பே கடன் வாங்கத் தொடங்கிவிட்ட ஆப்பிரிக்க லத்தின் அமெரிக்க நாடுகள் பொருளாதாரப் புலிகளே.

     வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை அவரே முன்பு ஒத்துக் கொண்டது என்னவென்றால், சிறுவீத உற்பத்தியில் தான் வேலைவாய்ப்பு உள்ளது அது குறித்த புள்ளிவிவரம் கிடைக்காது எனவே அது உண்மை என்று எனது சொந்த அனுபவத்தில் கூறுகிறேன் என்பது ஆகும்.

     விசயம் இப்படியிருக்க இவரோ மீண்டும் மீண்டும் இன்போசிஸ்தான் வேலைவாய்ப்பை உருவாக்கியது போல கதை விடுகிறார். இவை குறித்து எமது கருத்து வேறு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

     இவர் மீனுக்கு வாலும், பாம்புக்கு உடலும் காட்டும் விலாங்கு மீன் முதலாளித்துவவாதி.

     இந்தியப் பொருளாதாரத்தின் தோல்விக்கு இல்லாத சோசலிசம் காரணம், அமெரிக்க பொருளாதாரத்தின் தோல்விக்கு அது சுத்த பத்தமான முதலாளித்துவமே அல்ல என்பது காரணம், மற்றபடி மக்களின் இயல்பான தொழில்முனைவு முன்முயற்சிகளால் ஆர்வத்தால் நிகழும் வளர்ச்சிக்கு நாங்கள் பெரு முதலாளிகள் மட்டுமே காரணம் என்பது ஒன்றுதான் இவரது வாதப் பொருட்கள். மற்றபடி விரிவாக அம்பலப்படுத்தினால் உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பார். செய்யப்பட்டுள்ளவற்றுக்கு ஆதாரமாக சோவியத்தையும் சீனத்தையும் காட்டினால், உடனே அவரது வழக்கமான அவதூறுகளை, கடந்த கால வரலாறுகளை(கதைகளை)ப் பேசுவார். நிகழ்கால வன்முறைகளைப் பற்றி சம்பிரதாயப் பூர்வமான கண்டனங்களை மட்டும் வேறு வழியின்றி பதிவு செய்வார்.

     தான் ஆதரிக்கின்ற அமைப்பின் தவறுகள் எதற்குமே பொறுப்பேற்காத, பதில் கூறும் கவலையற்ற அதற்கும் நம்மையே பொறுப்பாக்கும், சுத்தபத்தமான முதலாளித்துவவாதிதான் அதியமான் என்பதில் எமக்கு துளியளவவாது சந்தேகம் வரவேண்டுமே? ம்ஹூம்…

     அசுரன்

    • அசுரன், வர்தக பற்றக்குறை என்றும் இருக்கிறது. அதை பற்றி முன்பு போல இப்ப கவலை பட தேவை இல்லை. ay .எம்.எப் இடம் டாலர் கடன் வாங்குவதை நிறுத்தி வெகு வருடங்கள் ஆச்சு. இதை பற்றி பதில் சொல்ல முடியாமல் கதை பேசுகிறீர்கள். இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் அந்நிய செலவாணி ஈட்டுவதை பற்றி பேசாமல், avarhaLai கயவர்கள் என்று சொல்லும் நீர் தான் “……” ;

    • ///பெட்ரோல் முதல் வீட்டு வாடகை வரை பல்வேறு அடிப்படை சேவைகளுக்கும், பொருட்களுக்கும் மக்களிடமிருந்து வரி பிடுங்கும் இந்த அரசு. ///// ஆம். வரிகளை குறைக்க வேண்டும் என்று naangaalum சொல்கிறோம். பெட்ரோல் மீது nooru சதம் வரி.

    • அசுரன்,

     அறியாமையில் இருகிறீர். பண்பும் இல்லை உமக்கு. முதலில் அந்த trade deficit பற்றி :
     இன்ஃபோஸிஸ் போன்ற பல நிறுவனங்கள் செய்யும் ஏற்றுமதி அந்த பற்றாகுறையை வெகுவாக குறைக்க வழி செய்கிறது. அவர்களில் பங்களிப்பு மிக முக்கியம். இல்லாவிட்டால் அந்த பற்றாகுறை மிக மிக அதிகமாக இருக்கும். Balance of payments என்று ஒரு விசியம் உள்ளது. அதுதான் இன்னும் முக்கிய விசியம். அதை பற்றி தேடி படிக்கவும். 1991இல் நடந்தது balance of payments crisis. அன்று இரு வாரங்களுக்கு உண்டான இறக்குமதிக்கான டாலர்கள் தாம் இந்திய அரசிடம் இருந்தன. தங்கத்தை அடமானம் வைத்து அய்.எம்.எஃப் இடம் அவசர கடன் வாங்கி, நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலை. (இன்று அய்.எம்.எஃப் இடம் இருக்கும் உபரி தங்கத்தை வாங்கும் அளவிற்க்கு 300 பில்லியனுக்கு மேல் டாலர் கையிறுப்பு). 1991இல் இருந்த நிலைமைய ஈடுகட்ட, ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் வருமான வரி முற்றாக விலக்கப்பட்டது. மேலும் duty drawbackக்கும் அளிக்கப்பட்டது. All these to encourage and increase exports, so as to
     Earn more and more dollars to bridge the balance of payments. Until then, India borrowed dollars periodically from IMF to bridge the same. பிறகு நிலைமை படிப்படியாக (தாரளமயமாக்கலின் விளைவாக) சீரடைந்த பின், ஏற்றுமதியாளர்களுக்கான வருமானவரி சலுகைகள் நீக்கப்பட்டு, இன்று இதர துறையினருக்கு ஈடாக வரி விதிப்பு (income tax, service tax, etc) உள்ளது. சில பகுதிகளில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. Again to encourage industry and to enlarge growth and employment. The net result is unprecedented rise in total tax revenue (exponentially),
     Employment generation, and wealth creation for the nation and the people.

     இன்ஃபோஸிஸ் இதுவரை ஈட்டிய அன்னிய செலவாணி பல ஆயிரம் கோடிகள். செலுத்திய வரிகள் பல பல ஆயிரம் கோடிகள். உருவாக்கிய வேலை வாய்புகள் லச்சத்திற்க்கும் அதிகம். (and that doesn’t include the indirect job creation in services, suppliers, vendors, sub-contractors, etc) Ripple effect of all these has enabled maximum possible new taxes and employment and wealth creation in many secondary sectors. இதெல்லாம் 1991க்கு முன் கனவுகூட காண முடியவில்லை. இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்கள் மிக மிக அருமையான,
     உருப்படியான சேவை செய்துள்ளன. செய்கின்றன. ஆனால் உம்மை போன்றவர்கள் ஆதாரமில்லாமல், கீழ்தரமாக அவர்களை நொள்ளை சொல்ல மட்டும் தான் லாயக்கு.
     உருப்படியான தீர்வுகளை சொல்ல / உருவாக்க முடியாத இணைய புலிகள்.

     அசுரன், இரு விசியம் புரிந்து கொள்க. செம்புரட்சிக்கு பிறகு, கம்யூனிசத்தை அமலாக்கும் பயணித்திலும், நீங்க புதிய வேலை வாய்புகளை உருவாக்கி, வளத்தை பெருக்கி, வறுமையை ஒழிக்க முயல்வீர்கள். ஆனால் மந்திரத்தால் மாங்காய் விழாது. புரட்சி முடிந்த பின், ownership of means of production மட்டும் தான் மாறும். மற்றபடி, அதே நிறுவனங்கள், அதே தொழிலாளர்கள், அதே அரசு ஊழியர்கள் தான் தொடரப்போகிறார்கள். பூஸ்வாக்கள் மட்டும் அழிக்கப்படுவர். இருக்கும் தொழிற்துறையின் உற்பத்தி திறனை பெருக்கி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எளிதல்ல. இன்னும் சொல்லபோனால், தொழிலாளர்களை motivate செய்து, ஊக்கப்படுத்தி, வேலை செய்ய வைக்க வேண்டும். அதை முயன்று தோற்ற வரலாறு உமக்கு புரியவில்லை. மீண்டும் முயன்று பாருங்கள். அப்ப தெரியும்.
     நேற்று நான் எழுதிய பதிவு இது : ‘கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியவில்லை ? “ http://nellikkani.blogspot.com/2010/02/blog-post.html

   • //இன்ஃபோசிஸ் நிறுவனமோ இப்படி மோசடி செய்து//

    பெட்ரோல் முதல் வீட்டு வாடகை வரை பல்வேறு அடிப்படை சேவைகளுக்கும், பொருட்களுக்கும் மக்களிடமிருந்து வரி பிடுங்கும் இந்த அரசு. நாரயணமூர்த்தி போன்ற உத்தமர்களுக்கு பங்குகளின் மூலம் டிவிடெண்டாக கிடைக்கும் பணத்திலிருந்து ஒரு பைசா கூட வரி பிடுங்குவதில்லை இந்த அரசு. சட்டப்படி அவர் உத்தமர்தான்(300 கோடி, 500 கோடி என்று வருடத்திற்கு கிடைக்கும்).

    • அசுரன்,

     Divedend taxationஅய் எடுக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையின் விளைவாக அனைத்து கம்பெனிகளுக்கும் அவை நீக்கப்பட்டன. லாபத்திற்க்கு ஏற்கெனவே வருமானவரி விதிக்கப்பட்டு, பிறகு அந்த லாபத்தின் ஒரு பகுதியை பங்குதார்களுக்கு அளிக்ககும் போது மீண்டும் வரி விதிப்பது double taxation and unfair. 1991வரை அன்னிய செலவாணி, அய்.எமெஃப். கடன், மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் பற்றிய நிலை பற்றி சரியாக அறியாமல், இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்கள் ஆற்றிய பங்களிப்பை இகழ்வது உம்மை போன்ற அரைகுறைகளில் பாணி. உடனே ரிலையன்ஸின் ஊழல்களப் பற்றி பேசுவீர். நான் சொன்னது சோனி, இன்ஃபோஸிஸ் போன்ற ‘நல்ல’ நிறுவனங்களை பற்றி. ஊழல்வாதிகள் இல்லாத நாடோ, துறையே இல்லை. பொத்தாம் பொதுவாக அனைத்து நிறுவனங்களும் ஏமாற்றியே முன்னேறின என்ற கருத்தை வினவு இங்கு வைத்த்தால் மறுத்தேன்.

    • //1991வரை அன்னிய செலவாணி, அய்.எமெஃப். கடன், மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் பற்றிய நிலை பற்றி சரியாக அறியாமல், இன்ஃபோஸிஸ்/

     அதியமானின் இந்த வேலைவாய்ப்பு புலம்பலை முன்பொருமுறை தகுந்த புள்ளிவிவங்களுடன் அம்பலப்படுத்திய பொழுது அவர் தஞ்சமடைந்த புகலிடம் இன்போசிஸ் உருவாக்கிய வேலை வாய்ப்புகள் அல்ல.

     அது, இன்போசிஸ்க்கு வெளியே, சிதறிய, சிறு வீத முதலீடுகள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளே ஆகும்.

     அதியமானின் வாதங்களை ஏற்றுக் கொள்வது என்றால் கூட நியாயமாக சலுகைகள் கொடுத்து ஆதரிக்க வேண்டியது அவர்களைத்தான். ஆனால், அவ்வாறு நடப்பதில்லை.

    • தியாகு,

     1991க்கு முன் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டவை கண்டிப்பாக சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகள் அல்ல. அதற்க்கு மாற்றாக ஜனனாயக பாணி ‘சோசியலிசம்’ என்று காங்கிரஸ் சொன்னது. இடதுசாரிகளிம் ஒத்து ஊதினார்கள். அது போலி சோசியலிசமோ அல்லது வேறு என்ன இழவோ, எதோ ஒரு பெயர். இந்த பெயர் சொல் பற்றி ஏற்கெனவே நான் பத்தாயிரம் தடவை அசுரனுக்கு விளக்கியாயிற்று. ஆனாலும்
     நான் பொய்யன் என்று, அந்த சொல்லை பயன்படுத்தும் ஒவ்வொறு முறையும் கூவுவதை மாற்றவில்லை. சோசியலிஸ்டுகள் என்று ஒரு பெரும் பட்டாளம் அன்று இருந்தது. பல வகை சோசியலிஸ்டுகள் இருந்தனர். காங்கிராஸிலும் மற்றும் பல கட்சிகளும். அதனால் அந்த பெயரை தவிர்க முடியாது. அதன் அர்த்தம் உங்களுக்கு மாறுபடலாம். ஆளாளுக்கு நாங்கள் தான் ஒரிஜினல், மற்வர்கள் போலி என்று டிக்லரேசன் வேறு. சரி அன்று கடைபிடிக்கபட்டது கம்யூனிச பாணி சோசியலிசம் அல்ல, மாற்றாக இந்திய பாணி போலி சோசியலிசம் என்றே வைத்துகொள்வோம்.
     அப்படி என்றால் அதற்க்கு நேர் எதிரான கொள்கைகளான தாரளமயமாக்லை ஏன் எதிர்க்கிறீர்கள். ஏற்கெனவே இருந்ததுதான் ஒரிஜினல் சோசியலிசம் அல்லவே ?

     அசுரன்,

     இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்களும் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர். அதை விட முக்கியமாக பல ஆயிரம் கோடிகள் அண்ணிய செலவாணி ஈட்டி தருகின்றன்ர். அருமையான மென்பொருட்களை உருவாக்கி வருகின்றனர். பல ஆயிரம் கோடிகள் இதுவரை அந்நிறுவனமும், அதன் ஊழியர்களும், பங்குதார்களும் கட்டியுள்ளனர். மொத்ததில் உருப்படியான, பயனுள்ள வேலை மற்றும் பங்களிப்பு. மிக நேர்மையான நிறுவனம் என்றும் பெயர் எடுத்துள்ளனர். இன்னும் என்ன செய்ய வேண்டும் ? (அதன் நேர்மை பற்றி தான் இங்கு விவாதமே) வேண்டுமானால் அந்நிறுவனத்தை நாட்டுடைமையாக்கி, ஒரு அரசு அதிகாரையை நிர்வாக இயக்குனராக போட்டு நடத்தி பாருங்களேன். என்ன ஆகும் என்று. சோனி நிறுவனம் மிக மிக அருமையான பொருட்களை தயாரித்து, பரவலாக பயன்பாட்டிற்க்கு பெரும் சேவை செய்துள்ளது. 1945இல் அந்நிறுவனம் ஆரம்பித்த சூழல் மற்றும் ஒரு சிறு அறையில் துவக்கியத்தை பற்றி அறியாதவர் நீர். இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி இளைஞராக இருந்த போது ஒரு கம்யூனிஸ்டாக இருந்தவர். Idealism பேசியவர் தாம். பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து சேர்த்த சொற்ப முதலீட்டில், நண்பர்களுடன் சிறு இடத்தில் நிறுவனத்தை துவக்கினார்…. உம்மை போன்றவர்கள் உருப்படியாக ஒன்றையும் உருவாக்க லாயக்கில்லாதவர்கள். நொள்ளை சொல்லத்தான் லாயக்கு.

     1991க்கு முன் இருந்த கொள்கைகளையே தொடர்ந்திருந்தால் இன்று இருக்கும் வேலை வாய்ப்புகளை கூட உருவாக்கியிருக்க முடியாது. டாலர் பற்றாக்குறையினால்,
     மேலும் மேலும் அய்.எம்.எஃப் இடம் டாலர் கடன் வாங்கி, இறக்குமதி செய்ய முடியாமல் நாடே திவாலாகி, கடும் வறுமை மற்றும் நாசம் விளைந்திருக்கும். இதை பற்றி இன்று மாற்று கருத்து, விசியம் அறிந்தவர்கள் யாரிடமும் இல்லை. உங்களுக்கு தான் புரியவில்லை. அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லை. One track mind which is totally divorced from reality. That is all.

    • இது இங்கு பேசப்படும் பொருளுக்கு தொடர்பில்லாதது, எனவே விவாதம் நடத்தும் எண்ணம் இல்லை.

     கேக்குறவன் முட்டாள் என்றால் விஜய் நல்லா நடிச்சார் என்பார்களாம் (பழமொழிய மாற்றித் தொலைவோம்).

     அது மாதிரி, நம்ம அதியமானும் அவ்வப்போது பல ஜூக்களை நமக்குக் காட்டி வருகிறார். வேலை வாய்ப்பு, அன்னிய செலவானி அதிகரிப்பு போன்றவை அத்தகைய ஜூக்களே. வேலை வாய்ப்பு பற்றி முன்பே போதியளவு தோலுரித்து விட்டபடியால் இன்றைக்கு நாம் அன்னிய செலாவனியைப் பார்க்கலாம்.

     இவரது கூற்றுப்படு இன்போசிஸ் போன்றவர்கள் ஏற்றுமதி அதிகம் செய்வதால் அன்னியச் செலாவனி அதிகம் கிடைக்கிறதாம். இது ஒரு பொய். வர்த்தகப் பற்றாக்குறைப் பொருளாதாரமாக இந்தியா உள்ளது என்பதே உண்மை. இது ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையிலேயே அன்னிய செலாவனி அதிகரித்துள்ளதே எப்படி?

     அன்னியச் செலாவனி என்பது பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல ஏற்றுமதி, இறக்குமதி வித்தியாசம் உருவாக்கும் உபரி மட்டும் அல்ல. அது பல்வேறு காரணிகளைப் பொறுத்துள்ளது. அவற்றில் முக்கியமான சில, வெளி நாட்டில் வேலை செய்பவர்கள் இங்கு பணம் அனுப்பும் போது கிடைப்பது, இந்திய அரசு வெளிநாட்டில் செய்கின்ற முதலீடுகள், அன்னிய செலாவனிக்காகவே வாங்கும் கடன்கள்(short term credits)(சமீபத்தில் இலங்கை இவ்வாறு கடன் வாங்கி அன்னியச் செலாவனியை அதிகரித்துள்ளதை ஐ எம் எப் கண்டித்துள்ளது), சர்வதே வியாபரத்தில் வாங்கப்படும் கடன்கள் (external commercial borrowing)(டாடா கோரஸை வாங்குவதற்கு வாங்கிய கடன்).

     2006-2007(மார்ச் 2007 வரைக்கான காலகட்டம்) வருடத்திய அன்னியச் செலாவனி கையிருப்பு பற்றிய ரிசர்வ வங்கி அறிக்கை இன்போசிஸின் காரணமாகத்தான் அன்னியச் செலாவனி உயர்ந்தது என்று சொல்லவில்லை, மாறாக கடன் வாங்கி உப்ப வைத்துள்ளனர்.

     http://www.docstoc.com/docs/20948949/Report-on-Foreign-Exchange-Reserves-Reserve-Bank-of-India-Central

     Sources of Accretion to Reserves in the Recent Period
     The increase in foreign exchange reserves in the recent period has been on account of
     capital and other inflows. Major sources of increase in foreign exchange reserves for the year
     6
     2006-07 have been: (a) External commercial borrowings (b) foreign investment and (c) short-term
     credit. Table 3 presents sources of accretion to reserves during 2006-07.

     உண்மையைச் சொல்வதென்றால் இந்திய ரூபாயின் மதிப்பு கீழே இருப்பதை உறுதி செய்து அது டாலர் நிகராக உருவாக்கும் மதிப்பு வித்தியாசத்தில் கொள்ளை லாபம் அடிக்கும் திருட்டு பயல்கள்தான் இன்போசிஸ் போன்றவர்கள், இதற்காக இந்திய அரசின் அன்னிய செலாவனி கொள்கைகளின் மீது நிர்ப்ந்தம் செலுத்தும் கயவர்கள் இவர்கள்.

     இன்னும் சில விவரங்கள்:

     http://en.wikipedia.org/wiki/Foreign_exchange_reserves
     //In practice, few central banks or currency regimes operate on such a simplistic level, and numerous other factors (domestic demand, production and productivity, imports and exports, relative prices of goods and services, etc) will affect the eventual outcome.//

     http://en.wikipedia.org/wiki/External_Commercial_Borrowing
     “”
     commercial borrowings from the private sector lending arms of multilateral financial institutions—for instance, the International Finance Corporation and the Asian Development Bank. The ECB policy is monitored and updated by RBI on a regular basis, according to the macroeconomic conditions and foreign exchange liquidity situation.
     “‘

     “”
     While the boom was accompanied by substantial foreign direct investment, Indian enterprises have also accessed significant amounts of foreign debt. The cost of borrowing being higher in India compared with the international market, Indian companies started using the ECB route frequently. As an anti-inflationary measure, RBI amended the ECB policy, making it more restrictive.
     “”

     வெறுமனே சுட்டி மட்டும் கொடுக்காமல், அவற்றில் தொகுப்பாக என்ன சொல்லப்பட்டுள்ளது என்றும் கொடுப்பது எமது அனுகுமுறையாக உள்ளது. இதற்கு பதில் சொல்லும் அதியமான் தனது தளத்திலோ அல்லது வேறாதவது தளத்திலோ உள்ளதாக ஒரு வண்டி நிறைய சுட்டிகளை மட்டும் அளிப்பார். அது அவரது அனுகுமுறை.

     அசுரன்

    • அசுரன்,

     விவாதத்தை திசை திருப்ப எமக்கும் விருப்பமில்லைதான். ஆனாலும் :

     ////உண்மையைச் சொல்வதென்றால் இந்திய ரூபாயின் மதிப்பு கீழே இருப்பதை உறுதி செய்து அது டாலர் நிகராக உருவாக்கும் மதிப்பு வித்தியாசத்தில் கொள்ளை லாபம் அடிக்கும் திருட்டு பயல்கள்தான் இன்போசிஸ் போன்றவர்கள், இதற்காக இந்திய அரசின் அன்னிய செலாவனி கொள்கைகளின் மீது நிர்ப்ந்தம் செலுத்தும் கயவர்கள் இவர்கள்./// இது ஒரு பைத்தியகாரனின் உளரல் என்று financial and economic circles இல்
     இகழ்வார்கள் !!

     ஒரு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல முடியுமா : சுமார் கடந்த 15 ஆண்டுகளாக, அன்னிய செலவாணிக்காக அய்.எம்.எடிடம் வருடந்தோரும் கடன் வாங்கவில்லை இந்தியா. அதுவரை வருடந்தோரும் கெஞ்ச வேண்டியிருந்தது. 60கள் முதல் அதே கதை தான். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1947இல் இருந்து தொடர்ந்து சரிந்த கொண்டே இருந்தது. இறக்குமதி செய்ய போதிய டாலர் இல்லாமல் அன்று கடும் திண்டாட்டம். இதெல்லாம் எப்படி இன்று தீர்ந்தது ? 2007இல் ரூபாயின் மதிப்பு மொதல் தடவையாக ஏறியது. மேலும் இன்று மதிப்பு ஸ்திரமாக உள்ளது. 80கள் வரை மிக அபாயகரமான வருடாந்தர வீழ்ச்சி. எப்படி இது நடந்தது ? try to search for
     IMF loans to India since 1947 till date and SDR and soverign purchase/ sales of gold. Try to learn more about this vital matter with an open mind.

     Externel commercial borrowings பற்றி இப்பதான் தேடி படித்திருப்பீக போல ! ))). அன்று இதற்க்கு சாத்தியமே இல்லை. இன்று மிக அதிகம் அண்னிய செலவாணி சேர்ந்தால் தான் இதற்கு அனுமதி மற்றும் சாத்தியம். பல வழிகளில் டாலர் நம்மிடம் சேர்கிறது. ஏற்றுமதி முதல் காரணி. Foreign Direct Investments (FDI), Foreign institutional investments (FII), remittances from NRIs, etc போன்றவை பிற காரணிகள். இத்தனையும் 1991க்கு முன் மிக குறைவு அல்லது அனுமதிக்கப்படவில்லை. அய்.எம்.எஃபிடம் கடன், மேலும் கடன். தாரளமயமாக்கலை இன்று வரை உம்மை போன்ற விசியம் தெரியாத இடதுசாரிகளை அனைவரும் எதிர்க்கிறீர்கள். ஆனால் உங்க பேச்சை கேட்டிருந்தால் இன்று இந்த விவாதம் இணையத்தின் மூலம் நடந்திருக்காது. சிம்பாவே, சூடான் போல் இந்தியா சீரழிந்திருக்கும்.

     உருப்படியான வழிமுறைகள் உம்மால் சொல்ல முடியாதுதான். இன்ஃபோஸிஸ் கயவர்களா ? லூஸுங்கள் இப்படிதான் பேசும் !! நண்பர் செந்தழல் ரவி, நீங்க கொஞ்சம் எடுத்தியம்புங்களேன் !! தென் கொரியா அடிக்கடி செல்லும் நீங்க, வட மற்றும் தென் கொரியா பற்றி சொல்லுங்க. மென்பொருள் துறையின் சேவை

     மொத்ததில யாருக்கும் புதிய துறையான மென்பொருள் துறையில் வேலை கிடைத்திருக்க கூடாது. 70களை போல வேலை கிடைக்காமல் தெருத்தெருவா சுத்தனும். அப்ப தான் உங்களுக்கு திருப்தியா இருந்திருக்கும்.

    • //// இவரது கூற்றுப்படு இன்போசிஸ் போன்றவர்கள் ஏற்றுமதி அதிகம் செய்வதால் அன்னியச் செலாவனி அதிகம் கிடைக்கிறதாம். இது ஒரு பொய்.////

     எப்படி இது பொய்யாகும் ? இன்ஃபோஸிஸ் கடந்த 25 ஆண்டுகளில் பல லச்சம் கோடி
     ரூபாய் மதிப்பிலான அன்னிய செலவாணிகளை ஈட்டி, ரூபாயின் மதிப்பு வீழாமல் செய்ததில் முக்கிய பங்களிப்பாற்றியுள்ளது.
     http://www.infosys.com/investors/reports-filings/annual-report/annual/Documents/Infosys-AR-09.pdf

     1991க்கு பின் பல புதிய மென்பொருள் மற்றும் பல இதர ‘புதிய’ துறைகளில் ஏற்றுமதி பல பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன் நிகர விளைவு, இன்று அரசிடம் 13,02,793 கோடிகள் டாலர் இருப்பு. http://www.rbi.org.in/scripts/WSSViewDetail.aspx?TYPE=Section&PARAM1=2

     டாலரின் மதிப்பிற்க்கும், இந்திய விலைவாசி விகுதம், வட்டி விகிதம் மற்றும் வறுமைக்கும் இருக்கும் தொடர்பை பற்றி பெரும் அறியாமை நிலவுகிறது. இந்தியா நிகர இறக்குமதியாளர் நாடு. முக்கியமாக பெட்ரோசிய பொருட்கள், உரம் மற்றும் பல இதர முக்கிய பொருட்களை டாலரில் செலுத்தியே இறக்குமதி செய்தாக வேண்டிய நிலை. ரூபாயின் மதிப்பு வீழ்ந்தால், இறக்குமதி விலை அதிகமாகி, பெட்ரோயிலிய மற்றும் இதர பொருட்களின் விலை மிக அதிகரிக்கும். விலைவாசி அதிகரிப்பு, வறுமையை அதிகரித்து, பொருளாதார மந்தத்தை உருவாக்கும் என்பது அடிப்படை விதி. புதிய அன்னிய செலவாணி ஈட்டாமல் இருந்திருந்தால், இன்று விலைவாசி பலமடங்கு உயர்ந்திருக்கும். 80கள் வரை இருந்து விலைவாசி உயர்வு விகிதம் பற்றி புள்ளி விவரங்கள் மற்றும் நேரடி அனுபவம் பெற்ற முதயவர்களின் கூற்றுக்களை தேடி படிக்கவும். பிறகு முழங்கவும்..

     இந்தியாவின் கடன்கள் மற்றும் 1991 Crisis பற்றிய அய்.எம்.எஃப் இன் வலைமனை சுட்டி இது :

     http://www.imf.org/external/pubs/ft/wp/2000/wp00157.pdf

    • //இதற்கு பதில் சொல்லும் அதியமான் தனது தளத்திலோ அல்லது வேறாதவது தளத்திலோ உள்ளதாக ஒரு வண்டி நிறைய சுட்டிகளை மட்டும் அளிப்பார். அது அவரது அனுகுமுறை.//

     இன்போசிஸ் குறித்து சுட்டி மட்டும் அளித்துள்ளார் அதியமான் அதில் அன்னியச் செலாவணி குறித்து ஏதாவது இருக்கும் என்று தேட முயற்சி செய்தால் அது 100 பக்கங்களுக்கு மேல் உள்ள அறிக்கை. இவ்வாறு சுட்டிகள் மட்டும் கொடுத்து ஜூ காட்டுவ்து அதியமானின் ஒரு தந்திரம்.

    • அசுரன்,

     இன்ஃபோஸிஸின் வறுமானம் முழுவதும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இருந்த வருவதுதான். உள்நாட்டு வருமானம் அனேகமாக இல்லை. அந்த சுட்டியில் உள்ள Gross incomeகளை டாலராக மாற்றி படித்தாலே புரியும். ஆர்.பி.அய் சுட்டி மற்றும் இதர விசியங்கள் பற்றி ?

     அது இருக்கட்டும், அய்.எம்.எஃப் கடன் பற்றி ஒரு அடிப்படை கேள்வி கேட்டிருந்தேன். பதில் இல்லை. External Commercial Borrowings முன்பு ஏன் சாத்தியமில்லை, அனுமதியில்லை என்றும் கேட்டிருந்தேன். பதிலில்லை. ரூபாயின் மதிப்பு ஸ்திரமானது பற்றி ? அதனாலும், இறக்குமதிக்கான செலவு அதிகரிக்காமல், விலைவாசியை முன்பு போல 20 சதம் உயராமல் தடுத்தது பற்றியும் ? இன்னும் பல விசியங்கள் ?

    • //பெட்ரோல் முதல் வீட்டு வாடகை வரை பல்வேறு அடிப்படை சேவைகளுக்கும், பொருட்களுக்கும் மக்களிடமிருந்து வரி பிடுங்கும் இந்த அரசு. //

     இந்த வரிகள் மறந்துவிட்டதா அதியமான்? இரட்டை வரி விதிப்பு என்ற காரணம் நாராயண மூர்த்திக்கு மட்டும்தான் விலக்கா? ஆயிரம், ரண்டாயிரம் சம்பாதிக்கும் கோடீஸ்வரர்களுக்கு பல்முனை வரிவிதிப்பா?

    • அதியமானுடன் தோழர்களின் சில விவாதங்கள்:

     வேலை வாய்ப்பு உள்ளிட்ட சில முக்கிய பிரச்சினைகள் மீது அதியமானுடன் நடந்த விவாதம்:
     https://www.vinavu.com/2009/08/15/august15/

     டாலர் VS ரூபாய் மதிப்பு மற்றும் விலைவாசி குறித்து ஒரு oppiitu விவாதம்
     https://www.vinavu.com/2009/07/15/tata/

     https://www.vinavu.com/2009/07/15/tata/#comment-6846

    • //இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் அந்நிய செலவாணி ஈட்டுவதை பற்றி பேசாமல், avarhaLai கயவர்கள் என்று சொல்லும் நீர் தான் “……” ;//

     அன்னியச் செலாவணிக்கு கீழ்வருதுதான் காரணம் என்று ரிசர்வ் வங்கி சொல்லியுள்ளது. நீங்களோ இன்போசிஸ் அதிகமாக ஏற்றுமதி செய்து அன்னியச் செலாவணி ஈட்டுவதாக டம்பம் அடிக்கிறீர்கள். இதற்குப் பதில்தான் வர்த்தகப் பற்றாக்குறை என்ற விசயம்.

     ரிசர்வ் வங்கி சொல்வது:
     (a) External commercial borrowings (b) foreign investment and (c) short-term
     credit.

     அசுரன்

    • //லாபத்திற்க்கு ஏற்கெனவே வருமானவரி விதிக்கப்பட்டு, பிறகு அந்த லாபத்தின் ஒரு பகுதியை பங்குதார்களுக்கு அளிக்ககும் போது மீண்டும் வரி விதிப்பது double taxation and unfair//

     மேற்படி இன்போசிஸ் நாராயண மூர்த்தியினுடையதைப் போன்ற நிறுவனங்களுக்கு அரசு 15 வருட வருமான வரி விலக்கு (tax holiday_ ) விட்டுள்ளது.

     ஆக, அவர்களுக்கு ஒரு மசிரளவு கூட வரி கிடையாது என்பதுதான் உண்மை. வரி விலக்கு அவர்களுக்கு மட்டுமே அந்த நிறுவனங்களில் வேலை பார்த்து மாதம் 8,000 10,000 வீட்டு வாடகை கட்டும் ஐ டி ஊழியர்களுக்கு அல்ல.

 21. வினவு அய்யா, நான் எழுதும் பின்னூட்டத்தை வெளியிடாமல் தடை செய்கின்றீர்கள். இதற்க்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகா வேண்டும்.

  பின்குறிப்பு: தங்கள் இனைய தளம் உன்னிப்பாக தமிழ்நாடு உளவுதுரயினரால் கண்காணிக்க படுகின்றது என்று தெரிவித்து கொள்கின்றேன். இந்த இணைய தளத்தில் இருந்து மிக மிக முக்கியமான கட்டுரைகள் எல்லாம் மிகுந்த ஆராய்ச்சிக்கு உட்படுகின்றது என்பதையும் தங்களுக்கு தெரிவிக்க வேண்டியது என் கடமை. மூடு விழா மிக அருகில்.
  கவனிக்க சகட்டு மேனிக்கு யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இழிவு படுத்தி அசிங்கமாக எழுதும் போக்கை கை விடுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

  • mooto கட்டுரையில் நீங்கள் உடன்படாத விசயம் என்ன என்பதை விவாதியுங்களேன். உளவுத் துறையினரால் கண்காணிக்கப்படும் விசயத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

   • “உளவுத் துறையினரால் கண்காணிக்கப்படும் விசயத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.”
    ஆமா இந்த இணையதளத்தை உளவு துறை, உள்ளூர் துறை, ஐ நா சபை, ஒசாமா, ஒபாமா எல்லோரும் கண்காணிக்கராய்ங்க. அதை இவங்களும் பாத்துகிராய்ங்கலாம். போங்கடா……….

   • I have made a formal complaint to TN Commissioner. Hope I will get some response. They will come and respond your query “கட்டுரையில் நீங்கள் உடன்படாத விசயம் என்ன என்பதை விவாதியுங்களேன்”. I believe it happens soon.

 22. உணர்வுகளை நீர்த்து போக செய்யும் படம் தமிழ் படம். ஆம் உண்மை வினவு அற்புதமான பதிவு .
  கேட்டால் படத்தை படமாக பார் பாசிடிவாக பார் என்பார்கள் என்ன வெங்காயமோ?????

 23. தமிழக சமூக சூழ்நிலையில்… இள வயதினர் ஒன்று கூடினால்… பேசப்படுகிற விசயங்கள் ஒன்று. பெண்கள் மற்றொன்று சினிமா. இளவயது தாண்டியவர்கள் மத்தியில் பேசப்படுகிற விசயங்களிலும் பிரதானமாக இருக்கிறது சினிமா தான்.

  சந்திப்பவர்களில் நானும் பலரிடம் பொது விசயங்கள், அரசியல் விசயங்கள் பேசுகிறேன். ஆபூர்வமாய் ஒருவர், இருவர் தவிர மற்ற பலரும் சினிமா குறித்து தான் விவாதிக்கிறார்கள்.

  இப்படி பரவி கிடக்கும் சினிமா மோகத்தை கறாரான விமர்சனங்கள் மூலம் தான் சரியான் திசைக்கு கொண்டுவரமுடியும் என கருதுகிறேன்.

  மற்றபடி பதிவுலகில்… பதிவர்களில் பலர் தினத்தந்தி, மாலை முரசு திரை விமர்சனங்கள் தரத்திற்கு தான் இருக்கின்றன. என்ன ஒரே ஒரு வித்தியாசம். வெகுஜன பத்திரிக்கைகள் பலர் ‘கவர்’ வாங்கி விமர்சனம் (பாராட்டு மழை) வழங்குவார்கள். பதிவர்கள் வாங்குவதில்லை அவ்வளவு தான் வித்தியாசம்.

  இப்படிப்பட்ட நடப்பு சூழ்நிலையில், வினவு தொடர்ச்சியாக திரை விமர்சனங்களில் எழுதலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

 24. இப்போ இருக்கிற நிலையில் தமிழனுக்கு ஏதாவது வடிகால் தேவைப்படுது..சும்மா பார்த்தையே பார்த்து சலிப்பு வந்தவனுக்கு …இதே தயாரிப்பாளர் மறுபடியும் ஒரு மாஸ் ஹீரோவை வெச்சு படம் எடுத்தா திட்டலாம்..

 25. சினிமாவை விட சீரியல்கள் அதிகம் பேர் தினமும் பார்க்கிறார்கள்

  எதாவது ஒரு சீரியல் பற்றியாது வினவு எழுத வேண்டும்

 26. //பதிவுலகம் அதிகம் கவலைப்படும் விசயமாக சினிமா இருக்கிறது. அதை மாற்றுவதற்குத்தான் இந்த சிறிய முயற்சி.//

  அப்படீங்களா ? சரி சரி ,

  வினவு , உங்கள் பார்வையில் தமிழில் வந்த “சரியான “ சினிமா எது ?

  சும்மா சொல்லுங்க தெரிஞ்சிக்குவம் .

 27. அது வேற ஒன்னும் இல்ல மூக்கு கொஞ்சம் பொடப்பா இருந்தா இப்படிதான் சிந்திக்க சொல்லும்.

 28. //கோவா படத்தை ரஜினியின் மகளும், தமிழ்ப்படத்தை அழகிரியின் மகனும் தயாரித்திருக்கின்றனர். தமிழ் மக்களின் சாபக்கேடான அரசியல் கேவலமும், சினிமாக் கேவலமும் தத்தமது வாரிசுகளைக் கொண்டு இந்தப்படங்களை தயாரித்திருப்பது தற்செயலான ஒன்றா?//

  கள்ளப் பணத்தை நல்ல பணமா மாற்ற இவர்கள் படம் தயாரிக்கிறார்கள் அவ்வளவே. அதில் இலாப கணக்கு காண்பிக்க இதுபோன்ற சமாச்சாரங்கள் தேவைப்படுகிறது. அவ்வளவே

 29. ஒரு சினிமா வுக்கு எதுக்கு இந்த நாட்டில் இவ்வளவு முக்கியதுவம்னு புரியல. சமுதாயத்தை தாங்குகிற பொறுப்பை சினிமாவுக்கு என் குடுக்கணும். அது வெறும் பொழுதுபோக்குன்னு பாத்து தூக்கிபோட்டு போகாம, முக்கியத்துவம் குடுததாலத்தான் இவ்வளவு கேடு நாட்டுக்கு…நீங்களுமா? அதுக்கு பதில் சமுதாயத்தில் நடக்கிற விசயங்களுக்கு அறிவு ரீதியா, உணர்வு ரீதியா பதிவு பண்ணா நல்லது.

 30. //விளக்கமாக கூறினாலும் ஏற்க மறுக்கிறீர்கள்.எனவே என்ன அளவு, அதை எந்த அடிப்படியில் தீர்மானிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் theriviththu விடவும்… வினை செய்யவே alaikkirom..//

  வலையுலகில் இருப்பவன் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவனில்லை
  காலையில் சித்தாள் வேலைக்கு போய் மாலையில் வீடு திரும்பி
  கம்யூட்டரை இயக்கி வினவு கட்டுரை படிப்பவனல்ல

  யார் படிக்கிறார்கள் மத்திய தர வர்க்கம் அலுவலக மேசையில் அமர்ந்து கொண்டு பொழுது போகாமல் இருக்கும் போது படிப்பவர்கள்

  அவர்களின் ரசனை , அவர்களின் சிரிப்பு , அவர்களின் ரசனை மாற்றம் ஆகியவற்றை மாற்றுவது என்பது சாதாரண வேலை இல்லை

  அதை சினிமா விமர்சனங்கள்கள் மூலம் செய்விக்கலாம் என தோழர்கள் சொல்வதை ஏற்று கொள்ள முடியாது

  அடிப்படை விசயம் சமூக முரண்பாடுகளை விளக்குதல் , அரசியல் வாதிகளின் முகத்தை கிழித்தல் , சமூகத்தின் போக்கை மாற்ற வரலாற்று கடமை யாற்றுதல்,அன்றாட செய்திகளின் பின்னனியில் உள்ள வர்க்க நலன் இவற்றை விளக்குதல் என பல்வேறு பட்ட வேலைகளுக்குத்தான்
  தளம் எனில் அதை சினிமா விமர்சனம் மூலம் செய்ய முடியாது மறைமுகமாக விளக்கலாம்

  அதிகமான அளவில் கடைசியாக ஒரு மாதத்தில் மட்டும் அதிகமான சினிமா அது சார்ந்த பதிவுகள் வரும் போது அதை சுட்டி காட்டவேண்டியதாக இருக்கிறது .

  இப்படி சுட்டி காட்டுபவன் சுயவிமர்சனம் ஏற்று கொள்ள வேண்டும் என்பது சரியா

  இப்படி சொல்பவன் ஒரு கருத்தை உருவாக்க முயல்கிறான் என சொல்வதா
  சரி இப்படி ஒரு கருத்தை உருவாக்குதல் எனக்கே வினையான விசயமே
  அதை நான் செய்ய போவதில்லை

  நான் சுட்டி காட்டியது நாங்கள் விவாதித்த விசயமே தவிர எனது தனிபட்ட கருத்தும் அல்ல

  அழகி படத்துக்கு மூன்று மாதம் விமர்சனம் வந்தது
  என்றால் அந்த படம் மக்களிடம் படித்த மத்தியதர வர்க்கத்திடம்
  நல்ல படம் என்ற பிம்பம் ஏற்படுத்தி இருந்தது அதை உடைக்கும் நோக்கம்
  இருந்தது .

  ஆனால் இந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை யாரும் எட்டி கூட பார்க்க மாட்டார்கள் அதற்கு விமர்சனம் எழுதி பெரிசாக்க வேண்டிய தேவையே இல்லையே

  விமர்சனம் – எந்த படத்துக்கு என்பது ஒரு பிரச்சனை
  பதிவுகளில் எது அதிகமாக இருந்தால் நலம் எனும் கருத்து

  இவை இரண்டும் மைய்யமாக நான் சொல்லி இருக்கும் விசயங்கள்

  கார்க்கி இதில் எதற்கு நான் சுய விமர்சனம் ஏற்கனுன்னு சொல்கிறார்

  விளக்கம் அளித்தால் பரவாயில்லை

  கேள்வி குறி நான் “கருத்தை உருவாக்க முயல்கிறேன் ” என எதற்கு சொல்கிறார்

  என விளக்கம் அளித்தால் பரவாயில்லை

  தியாகு- செம்மலர்

  • வலையுலகில் உறவாடுபவர்களை எளிதில் மாற்றமுடியாது என்பது சரியானதுதான். 
   இருந்தபோதிலும் வினவின் முயற்சியில் சிலரை சிறிது மாற்றியிருப்பதாகவே நான் எண்ணுகின்றேன்.
   வினவில் சினிமா பற்றிய விமர்சனம் அதிகமில்லை என்பதே என்னுடைய கருத்து.
   தோழர்கள் வலைப்பதிவுகளில் மட்டும் வேலைசெய்து கொண்டிருப்பவர்கள் அல்ல.

  • @@@கேள்வி குறி நான் “கருத்தை உருவாக்க முயல்கிறேன் ” என எதற்கு சொல்கிறார் என விளக்கம் அளித்தால் பரவாயில்லை@@@

   400 பதிவுல 8 சினிமா விமரிசனம் மட்டுமேயிருக்கும்போது, வினவுல சினிமா நிறைய எழுதுறாங்கன்னு நீங்க எழுத..உங்களை வழிமொழிந்து பலர் அதயே எழுத…, இப்ப மொக்கையிலேருந்து ஆர்.எஸ்.எஸ் காரன் வரைக்கும் வந்து வினவுக்கு சினிமா எழுதுறதபத்தி அட்வைசு செய்யுறாங்க… பதிவ பத்தின விமர்சனும விவாதமும் நடக்காம எல்லாரும் இதுக்கு கருத்து சொல்லியாகனுமுங்கற நிர்பந்தம் உறுவாயிட்டுது.. இதத்தான் சொன்னேன்…

   மத்தவங்க ஒரு விமரிசனம் செய்வதுக்கும் தோழர்்கள் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கு.. தோழர்களுடைய விமரிசனம் மேம்்போக்கான ஸ்டேட்மென்டா இல்லாம ஆராய்ந்து போதிய விவரங்களுடன், மாற்றிக்கொள்கிற வழிகாட்டுதல்களோடும் இருக்கணும்கறது உங்களுக்கு தெரியாதா?????

  • நன்றி தோழரே.. மேலே உங்கள் விளக்கத்தை முதலிலேயே எழுதியிருந்தால் நான் கருத்தை உருவாக்குதல் என்ற வார்த்தையை பயன்ப்டுத்தியிருக்க மாட்டேன்.

 31. ///// உண்மையான கோபமும், ரோஷமும் வராத சமூகத்திடமிருந்து உண்மையான நகைச்சுவை மட்டும் வந்து விடுமா என்ன?
  ////

  புரியலையே. அதென்ன உண்மையான நகைசுவை ? தமிழ்படங்களில் பல விதமான நகைச்சுவைகள் உள்ளன. (உதாரணமாக கமல் மகாநதி, அன்பே சிவம் போன்ற படங்களில் கையாளும் subtle humour or irony). மேற்கொண்டு மருத்துவர் ருத்திரன் போன்றவர்கள் தொடரலாம்.

 32. கேள்விக்கு(மு)றி அதிகமான நபர்கள் பின்னூட்டம் எழுதினால் நீங்க பெரியாஆள் நாலு பேரு எழுதினால் அட்ரஸ் இல்லதவியிங்கே அவியுங்கே கிடக்கட்டும் எனக்கு செதி சொல்லு இந்த முதலாளிமார்கே பெருமையடிப்பயுங்கேளே அவியுங்களுக்கும் உங்க கூட்டாளிகளுக்கும் என்ன வித்தியாசம் நம்பர் ஒன் நாளிதழ் நாங்க தான் சொல்றாயுங்கே நிரைய பெரு படிச்சவுடனே நல்ல பெப்பருன்னு ஒத்துகிறிவியா பயந்தகொளிப்பயந்தோ நா வல்லரசு செல்லுவான் ஆனா கொள்க உள்ளவன் வல்லரச நடு ரொட்டுல நேருக்நேர் சந்திச்சு போட்டுப் பாத்துக்கிருஒமா ன்னு கேட்பான் ஆதாரம் வேனுமுன்ன ஈராக் ஆப்கான் மக்களை கேட்டுப்பாரு முதல்ல நா பெரிய ஆளு என்கிற முதலாளித்துவ பார்வையை எடுத்திட்டு என்னைபோன்ற பமரனின் பங்காளிய யோசிச்சு எழுத பாரு 

  • ஹைதர், இங்க என்ன நடக்குன்னு தெரியாம நீங்கத்தேன் குழம்பிபோயி எழுதியிருக்கீங்க…

   வினவு பெரிய்ய எடமுன்னல்லாம் நாஞ்சொல்ல. எனக்கு வினவுல நம்பிக்கையிருக்கு நான் இங்க கிடந்து பேசிகிட்டிருக்கேன், அது மாதிரி நெத்தியடியும், ஷாஜுவும் அவங்களுக்கு ஆதரவா எழுதற ஷேக்தாவூத்து தளத்துல பின்னூட்டம் எழுத வேண்டியதுதானே ஏன் அத செய்யல, ஏன்னா அவங்களுக்கு அவங்க நம்பிக்கைய வளக்க்கறதவிட வினவு மேல காண்டு அதிகமாக கிடக்கு, அதனாலதான் வினவு ஒரு முடிவுக்கு வரவேணுமுன்னு எழுதறாங்க. அது ஏன்னு நீங்க யோசிசீங்களா????

   அட அது போகட்டும் பாஸூ, இங்க வந்து வினவ திட்்டி நூறு பின்னூட்டம் போட்ட இவங்க, இதே தளத்துல வந்து இந்து மதவெறிய விசமா கக்குற ஆர்.எஸ்.எஸ், அம்பிகள எதுத்து ஏன் ஒரு பின்னூட்டம் கூட போடல??? அந்தாளு தாவூது ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மதவெறிய திட்டி எழுதனவிட அதிகமா வினவ திட்டித்தானே எழுதிகிட்டிருக்காரு.. அது ஏன்னு நீங்க யோசிசீங்களா????

   என்ன சொன்னீங், ஈராக்க ஆப்கானா, ஐயா சாமி அங்க தன் உயிரகுடுத்து போராடரவங்கள நான் தியாகின்னு சொன்னதுக்கு அவங்க கோழைங்கன்னு பின்னூட்டம் எழுதனவங்கயை இவங்க, கேட்டா அது தற்கொலையாம், அத தியாகம்முன்னு சொன்னா நாமளும் தற்கொல செஞ்சு சாகனுமாம்,….அது ஏன்னு நீங்க யோசிசீங்களா????

   ம.க.இ.க இங்க இந்துமதவெறிக்கு எதிரா களத்துல நிக்குற முதலும் முக்கியமுமான அமைப்பு, எங்களத்தான் மொதோ ஒழிக்கனுமுன்னு எல்லா ஆர்.எஸ்.எஸ். காரணும் ஸ்டேட்மென்டு விட்டாச்சு.. இப்ப இணைய இசுலாமிய மதெவெறியங்களுக்கும் நாங்கதான் மொத டார்கெட்டு ….அது ஏன்னு நீங்க யோசிசீங்களா????

   நெத்தியடி மாதிரி நாங்க அரபுல எவனுக்கோ குஷாலா குப்ப கொட்டிட்டு இங்க இணையத்துல உதார் உடற ஆளுங்க கெடயாது.. நேரடியா அரசியல் களத்துல செயல்பட்டுகிட்டுதான் இருக்கோம், மக்கள் பிரச்சனைக்காக செயிலுக்கும் கோர்ட்டுக்குமா அலஞ்சுகிட்டுத்தான் இருக்கோம்.. குஜராத் கலவரத்தை கண்டிச்சு தமிழகமெங்கும் கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டுல ‘பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு’ .நடத்துனது நாங்கதானே, அப்ப இந்த மதவெறி பிடிச்ச கூட்டம் சும்மாத்தானே இருந்துச்சு .. …அது ஏன்னு நீங்க யோசிசீங்களா????

   ஆப்கான் தாக்குதலுக்கு இணையான தாக்குதல்தானே ஒரிசா பழங்குடிக்கு மேல நடக்கு, அதுக்கு எதிரா போராடரவங்க எங்க தோழர்கள்தானே.. அதபத்தி ஏன் இந்த மதவெறி புடிச்ச கூட்டம் வாயே திறக்கறதில்லையே …அது ஏன்னு நீங்க யோசிசீங்களா????

   இந்து மதவெறியோ இசுலாமிய மதவெறியோ..நாங்க மதவெறிய எதிர்க்கறவங்கதான், அதனால தான் ஆர்.எஸ்.எஸ் காரணும் சரி, பீ.ஜே அடிபொடிகளும் சரி ஒ்ரே குரல்ல எங்கள திட்டறாங்க, நியாயமான நபர்கள் எங்கள ஆதரிக்கராங்க, சரி தவற விவாதிக்கிறாங்க.. உடன் படறவங்க உடன் சேந்துகிறாங்க, இந்த திசையில நீங்க விவாதிச்சா நாம மேல பேசலாம், இல்ல திட்டுவதுமட்டும்தான் உங்க நோக்கமுன்னா தாராளமா திட்டிட்டு போயிட்டே இருங்க,…

 33. “அதிகம் சிரித்தல் இதயத்தை மரணிக்கச் செய்து விடும்” அதனால தான் நம்மால் யாராவது கீழே விழுந்தால் சிரிக்க முடிகிறது. ஊனமுற்றவர்களின் நடையினையும், பேச்சினையும் இன்னும் யாரையும் அவமானம் அடையும் அளவுக்கு கேலி செய்யவும் முடிகிறது. சிரித்து…சிரித்து மனிதர்களுக்கு இதயம் மரணித்து விட்டது. இது மனித இதயங்களின் இறத்தலின் காலம். வேறு என்ன சொல்ல….

 34. கேள்விக்குறி says:
  February 6, 2010 at 11:18 pm////ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களிடம் விவாதிக்க ‘முடியாம்ல’, மானமிழந்து அம்மணமாய் ஒளிந்து கொண்டிருந்த சுயமொகமதுவின் மானம் காக்க டவுசர் வாங்கிக்கொடுத்த வினவுக்கு நன்றி. தயவு செய்து ஜூஜகான், ஆன்லைன் பிச்சை , பி.ஏ.ஜோக் ஊத்வாய் ஆகியோருக்கும் தலா 3 டவுசர் வாங்கிக்கொடுக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்////
  Your comment is awaiting moderation.
  February 7, 2010 at 1:21 am

  ‘?’ – இது போன்ற ஒரு கேவலமான, மதிப்பற்ற, மரியாதை தெரியாத ஒரு அற்பப்பிறவியை என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. முதலில் அம்மணமாய் நிற்கும் உங்களுக்கு ‘மானம்’ என்று ஏதும் இருந்தால் அதை மறைக்க ஒரு இலை தழை எதையாவது தேடிக்கொள்ளவும்… எங்களுக்கு, கைலிக்கு மேலே அல்லது பேண்டுக்கு மேலே டவுசர் போடும் பழக்கம் கிடையாது….

  உங்கள் பார்ப்பனீய படங்கள் ரிலீசானால், ஆர்.வி. , டோண்டு… போன்றவர் இன்றி வினவு தியேட்டர் காத்தாடுகிறது என்பதை புரிந்து கொண்டேனே…
  மேலும்,
  ‘லவ் ஜிஹாத்’ என்பது பலரால் பலமுறை பல இடத்தில் கிழித்தெறியப்பட்டு கந்தலான அரதப்பழைய சென்ற வருடத்திய காக்கி டவுசர்களின் குப்பையை தேடி எடுத்து எதோ ‘புதிதுபோல’ இங்கே கொட்டப்பட்டிருக்கிறது என்பதாலும்தான் வரவில்லை…

  பின்ன….முஸ்லிம்களுக்காக உடனே வெகுண்டெழுந்து நீங்கள் சூட்டோடு சூடாக ஆர்.எஸ்.எஸ்.-ஐ எதிர்த்து பதிவு போட்டு விட்டீர் பாருங்கள்…? ( = = = “என்னது….??? காந்திய சுட்டுட்டாங்களா!!!??? அடப்பாவிகளா!!! சுட்டவனை உடனடியாக பிடித்து தூக்கில் போட வேண்டும் என்று கோஷமிட, தோழர்களே, விரைந்து ஓடி வாருங்கள்….!!!
  நெத்தியடி நீங்கள் ஏன் வரவில்லை? அடடே…இவர் அப்போ ஆர்.எஸ்.எஸ். சப்போர்ட்டா? பார்த்தீர்களா? ஆர்.எஸ்.எஸ்.சை எதிர்த்து முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பது வினவு மட்டும்தான்…”)

  ‘முகமூடியற்ற’ ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களிடம் விவாதிக்க அவர்களின் தளம் சென்று இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு எழுதியவரிடம் கேள்வி கேட்பதே முறை…
  நீங்கள் உங்களை உங்கள் பதிவை எதிர்ப்பவருக்கு பதில் சொல்லித்தொலையுங்கள்… அது உங்கள் தலைவலி…
  அந்த வேலையை கூட செய்ய எண்ணமில்லாமல் எதற்காக எங்கள் தலையில் கட்ட துடிக்கிறீர்கள்? எங்களை ஏன் தேட வேண்டும்? தங்கள் கட்டளையை ஏற்க, நாங்கள் ம க இ க வின் அல்லக்கையா? அல்லது உங்களின் அடிமைகளா?

  மதச்சார்பற்ற முற்போக்கு முகமூடியுடன் வினவு, ‘இஸ்லாமியர்களின் காவலன்’ என்பதுபோல படங்காட்டினால்தான்…

  …நாங்கள் வர வேண்டும்….

  //இந்து மதவெறியோ இசுலாமிய மதவெறியோ..நாங்க மதவெறிய எதிர்க்கறவங்கதான்// –தெரியும்டி….நீங்க என்ன செய்றீங்க அல்லது என்ன செய்யாம இருக்கீங்க, எதுக்காக செய்றீங்க அல்லது எதுக்காக செய்யாம இருக்கீங்க, இதெல்லாம் ஏன் செய்றீங்க, எல்லாம் தெரியும்டி…. பச்சோந்தியிலும் கடைந்தெடுத்த சிறந்த பச்சோந்திடி நீங்க…

  சிறுவர்களுக்கு மதத்தை தவறாக சொல்லிக்கொடுத்து மதவெறியூட்டி மூளைச்சலவை செய்யும் தலிபானை, அல் காய்தாவை, பாகிஸ்தானின் பயங்கரவாதிகளை எல்லாம் எதிர்த்து…. மற்றும் ரஷ்யாவின்,சீனாவின் கம்யூனிஸ்டுகளின் இஸ்லாமியர் மீதான அடக்குமுறை, வன்முறை, இன அழித்தொழிப்பு அராஜகத்தை எதிர்த்து…… மேலும்…. விடுதலைப்புலிகளின் ஈழத்து இஸ்லாமியர் மீதான கொலைவெறித்தாக்குதல்…. என இவற்றை எல்லாம் பற்றி பதிவிட்டது உண்டா? சும்மா வேஷங்கட்டிக்கிட்டு வந்துட்டா நம்பிவிடுவோமா… ஆடு நனையுதேன்னு ஓநாய் தூக்கு மாட்டிக்குமா?

  ///அரசியல், சமூக உரிமைகள், ஜனநாயகத்தில் என்ன தரம் இருக்கிறதோ அதுதான் நகைச்சுவையில் இடம் பெறுகிறது என்று சொன்னால் முதலில் உங்களால் ஏற்க முடியாமல் இருக்கலாம். ஜேயேந்திரன் பெண்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், ஜெயா ஈழம்பற்றி சவடால் அடிக்கும் போதும், அழகிரி நேர்மையான தேர்தல் முறை குறித்து பேசுவதும், ராகுல் காந்தி வாரிசு அரசியல் நல்லதல்ல என்று கூறுவதும், ரஜனி திருட்டு சி.டி குறித்து கோபப்படும் போதும் இங்கு யாருக்கும் சிரிப்பு வருவதில்லை. கோபமும் வருவதில்லை./// — இதில் கம்யூனிஸ்டு வினவையும் அதன் ‘இஸ்லாமியர் ஆதரவு பதிவையும்’ சேர்த்துக்கொள்ளலாம்…

  ஆனால்….இதில்….ஒரு மாறுதலாய் எனக்கு கோபம் வருகிறது….

  அதனால்தான் இந்த // ‘ஒத்துவராத மறுமொழிகள்’ பகுதியை வினவு நிரப்புவதற்கு உதவும் பொருட்டு பதிவுக்கு ஒத்துவரும் மறுமொழி// இட்டேன்…

  இப்படிக்கு-
  நெத்தியடி முஹம்மத்
  (‘ஒத்துவராத மறுமொழிகள்’ பகுதியை வினவு நிரப்புவதற்கு உதவும் பொருட்டு பதிவுக்கு ஒத்துவரும் மறுமொழி போடுபவன்…)

 35. தொடர்புடைய ஒரு
  கட்டுரை… ஜெயராமும் மலையாளிகளின் ஈகோவும் மலையாளப் படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழர்கள் இழிவாகச் சித்த‌ரிக்கப்படுவது ஒரு பேஷனாகிவிட்டது. திரைப்படங்களில் இந்த மனோபாவம் எப்படி வெளிப்படுகிறது என்று மலையாளப் படங்களில் தமிழர் சித்த‌ரிப்புகள் என்ற கட்டுரையில் (2008 மார்ச்) வி‌ரிவாக எழுதியிருந்தோம். இந்த இரண்டு வருடங்களில் இந்த வியாதி மலையாள திரையுலகிலும், தொலைக்காட்சியிலும் படர்ந்து பந்தலித்துள்ளது.

  மலையாள சேனல்கள் ஒளிபரப்பும் காமெடி நிகழ்ச்சிகளில் தமிழ் அடையாளம் அதிக அளவில் நையாண்டிக்குள்ளாகிறது. குறிப்பாக அவர்களின் தோற்றம். கருப்பு பெயின்ட் பூசப்பட்டவனையே தமிழன் என்று காட்டுகிறார்கள். பிச்சையெடுப்பவன், குறி சொல்கிறவன், அம்மி கொத்துகிறவன், நாக‌ரிகமில்லாத குடிகாரன் இவர்களே தமிழர்களாக சித்த‌ரிக்கப்படுகிறார்கள்.

  FILEஇதன் தொடர்ச்சியாக‌தான் நடிகர் ஜெயராம் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை கறுத்து தடித்த எருமை போன்ற தமிழச்சி என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். இது குறித்து அவரை தொடர்பு கொண்டவர்களிடம் காமெடிக்காக அப்படி குறிப்பிட்டதாக பதிலளித்துள்ளார். ஜெயராம் சொன்னது உண்மை. தமிழர்களின் அடையாளம்தான் இன்று மலையாள தொலைக்காட்சிகளில் காமெடிக்கான கருப்பொருள்.

  சிங்களனுக்கு தமிழர்கள் மீதுள்ள வன்மத்தைப் பற்றி குறிப்பிடும் ஊடகவியலாளர் ஒருவர், தமிழர்களின் படிப்பும், அறிவும், உழைப்பும், முன்னேற்றமும் சிங்களனுக்கு ஏற்படுத்திய தாழ்வு மனப்பான்மைதான் அவனுக்குள் தமிழர் மீதான வன்மத்தை ஊட்டி வளர்த்தது என்கிறார். தமிழ‌ரின் அறிவுக்களஞ்சியமான யாழ் நூலகத்தை அவன் தீயிட்டு கொளுத்திய சம்பவத்தை இதற்கு உதாரணமாக அவர் சுட்டிக் காட்டுகிறார்.

  மலையாளிகளின் தமிழ் அடையாளங்கள் மீதான தாக்குதலும் தாழ்வு மனப்பான்மையின் பாற்பட்டதே. திரைத்துறையைப் பொறுத்தவரை செல்வராகவன், சேரன், பாலா, அமீர், சசிகுமார், வசந்த பாலன், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற இள ரத்தம் மலையாளத்தில் பாயவேயில்லை. ஜெயராமே ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டது போல மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என 25 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர்கள்தான் இன்றும் அங்கு முன்னணி நட்சத்திரங்கள். வீ‌ரியமான அடுத்த தலைமுறை அங்கு கருக்கொள்ளவேயில்லை. திலீப்பை தவிர மற்றவர்கள் உதி‌ரிகளே.

  ஆனால் தமிழில் அ‌ஜித், விஜய், விக்ரம், சூர்யா என்ற அடுத்த தலைமுறையும், தனுஷ், சிம்பு, பரத், நகுல் என்ற அதற்கு அடுத்த தலைமுறையும் வெற்றிகரமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இசை, ஒளிப்பதிவு, சண்டைப் பயிற்சி, நடனம், எடிட்டிங், கிராஃபிக்ஸ் என எல்லா‌த் துறைகளிலும் தமிழில் பிரவாகிக்கும் ஓட்டத்தையும், கேரளாவில் மந்தமான தேக்கத்தையும் நாம் காணலாம்.

  தமிழில் வெளியாகும் படங்கள் அதே நாள் கேரளாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடுவதும், தமிழ் திரையிசைப் பாடல்கள் கேரளா முழுவதும் ஆர்வத்துடன் ரசிக்கப்படுவதும் இன ‌ரீதியாக மலையாளிகளை தூண்டக் கூடியதே. சூப்பர் சிங்கர் தொடங்கி மலையாள சேனல்களில் ஒளிபரப்பாகும் அனைத்துப் பாடல், ஆடல் நிகழ்ச்சிகளில் தமிழ் திரையிசைப் பாடல்களின் அணிவகுப்பு நம்ப முடியாதது. சராச‌ரி ரசிகனின் மனதில் மலையாளப் பாடல்களைவிட தமிழ் திரையிசைப் பாடல்களுக்கே அதிக இடம் என்பது மலையாள அறிவு‌‌ஜீவிகளால் ‌ஜீரணிக்க முடியாத விஷயம். மேலும், முதல்தர கல்வி முதல் மருத்துவம் வரை அனைத்துக்கும் அவர்கள் தமிழக எல்லையை‌த் தாண்ட வேண்டியுள்ளது. ஜெயராம், மம்முட்டி முதலான மலையாள சூப்பர் ஸ்டார்களின் குழந்தைகள் சென்னையில்தான் வசிக்கின்றன, கல்வி கற்கின்றன. நகையை தவிர்த்து பட்டுக்கும், பச்சைக் காய்கறிக்கும் அவர்கள் தமிழக எல்லையை கடந்தாக வேண்டும். கேரளா தமிழ்நாட்டின் பச்சைக் காய்கறியை நம்பியிருக்கக் கூடாது என்று மோகன்லாலின் படத்தில் வசனமே உண்டு. இதை முன்னிறுத்தி படங்களும் வெளிவந்துள்ளன.

  தமிழர்களுக்கு மலையாளிகள் என்பவர்கள் பிழைப்புக்காக எல்லை தாண்டி வந்து டீக்கடை வைத்திருப்பவர்கள். திரைப்படங்களில் காமெடிக்காக சேர்க்கப்படும் கவர்ச்சி ஊறுகாய். ஆனால் மலையாளிகளுக்கு? அன்றாட வாழ்க்கையில் தெருவில், வீட்டில், அலுவலகத்தில், திரையரங்கில், தொலைக்காட்சியில் எங்கும் எதிலும் அவர்கள் ஈகோவை உரசிப் பார்க்கும் வெற்றிகொள்ள முடியாத பேராளுமை. தமிழனின் இருப்பு ஒவ்வொரு கணமும் அவனை பதற்றத்தில் தள்ளுகிறது.

  இந்த ஆற்றாமைதான் கிண்டலாக நையாண்டியாக குரூரமான முறையில் வெளிப்படுகிறது. பிழைப்புக்காக கேரள எல்லை தாண்டும் விளிம்புநிலை தமிழர்களான பிச்சைக்காரர்களை, அம்மி கொத்துகிறவர்களை, குறி சொல்கிறவர்களை காணும் போது மலையாளியின் ஈகோ குஷியாகிறது. இதுதான் தமிழன் என்று கைகொட்டி சி‌ரிக்கிறது, அடுத்தவனுக்கு சுட்டிக் காட்டுகிறது. ஜெயராமின் வாயிலிருந்து தெறித்த வார்த்தைகளும் இதுதான்.

  அன்றாட வாழ்க்கைக்கும் அதன் சௌக‌ரியத்துக்கும் தமிழனுக்கு மலையாளியின் தயவு தேவையில்லை. ஆனால் மலையாளிக்கு தமிழனின்றி ஒரு பருக்கையும் வேகாது. இதை அவன் நன்கு உணர்ந்து இருக்கிறான். இந்த தாழ்வு மனப்பான்மை உருவாக்கும் ஈகோவை ச‌ரி செய்ய தமிழனின் பலவீனமான பகுதிகளை அவன் கிண்டல் செய்கிறான். பகட்டான அரசியல், துதி பாடும் சினிமாத்துறை, சுகாதாரமற்ற தெருக்கள், சாலையை பொதுக் கழிப்பிடமாக்கும் மனிதர்கள் என்று நமது பலவீனங்களைத் தேடித் தேடி நையாண்டி செய்கிறான். அதன் ஒரு பகுதிதான் கருத்த தடித்த எருமை போன்ற தமிழச்சி. (மேனி பளபளப்பால் சில மலையாள நடிகைகள் மட்டும் தமிழில் வெற்றிகரமாக வண்டி ஓட்டியிருக்கிறார்கள். நம் பெண்கள் அழகு என்ற இறுமாப்பும் சேர்ந்ததுதான் ஜெயராமின் தமிழ் பெண்கள் பற்றிய இந்த வாந்தி).

  இந்த தருணத்தில் நாம் கொள்ள வேண்டியது கோபமல்ல. நமது பலவீனங்களை களைந்து மலையாளிகளின் ஈகோவை மேலும் தீயாக தூண்டிவிடுவதுதான். சொறிந்து கொள்ள தமிழனின் பலவீனங்கள் அகப்படாதபோது அவனது ஈகோ எதை பிறாண்டும் என்று பார்க்கவாவது நமது அசட்டுத்தனங்களை ஒழிக்க வேண்டும். மலையாளிகள் மட்டுமல்ல, நம் இனத்துக்கு எதிராக துளிர்விடும் எந்த விஷத்தையும் முறிக்க இதுவே ச‌ரியான வழி.

  (பி.கு. தடித்த கறுத்த ஒல்லியான பல் நீண்ட தமிழ்நாட்டு கிராமத்துப் பெண்களை ஜெயராமைவிட கேவலமான மொழியில் நமது தமிழ்த் திரைப்படங்கள் கேலி செய்துள்ளன. இந்த புற அடையாளங்களை கேலி செய்வதற்கென்றே நகைச்சுவை காட்சிகளை திரைப்படங்களில் நாம் திணித்திருக்கிறோம். அப்போதெல்லாம் நாம் கோபம் கொண்டதில்லை, யாருடைய வீட்டிலும் கல் எறிந்ததில்லை. இதன் பொருள் என்ன? தமிழச்சியை தமிழன் கேவலப்படுத்தலாம், பிற இனத்தவனுக்கு மட்டும் அந்த உ‌ரிமை இல்லை என்பதா? மலையாளிகள் தங்கள் இனத்துப் பெண்களை தமிழர்களைப் போல திரைப்படங்களில் கொச்சைப்படுத்துவது இல்லை என்பதையும் இந்த நேரத்தில் நாம் யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்)

 36. கேள்விக்குறி அண்ணே உங்கள திட்டுவதற்காக அந்த பின்னூட்டம் எழுதவில்லை உங்க நிலையில் இருந்து யோசிச்சு பாத்த உங்க ஞாயமான கோபம் எனக்கு புரிகிறது அப்படியே எங்க நிலைமையில நீங்க இருந்து யோசிச்சு பாருங்க காவிமயமான அரசு எந்திரம் மூன்றாம் தர குடிமக்களாக முசுலிம்கள் நடத்ப்படுகின்ற விதம் ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால் உண்மையாகிவிடும் என்ற நோக்கில் முசுலிம்களை திவிரவாதி தேசத்துரோகி என்று அம்பிகளின் ஊடக வலிமையை பயன்படுத்தி இடைவிடா பிரச்சாரம் ஊள்ளுரில் வோலைவாய்ப்பு இல்லை எதோ வேளிநாட்டுல பொழைக்க வந்த அரபுல எவனுக்கோ குஷாலா குப்ப கொட்டுறமுன்னு ஒங்க வசவு வேற உங்க அரசியலை நான்கு புரிந்து கொள்ளாத எங்களை பார்த்து கோபப்படதிர்கள் வேன்டும் மேன்றால் இவர்களுக்கு இந்த நல்ல விசயம் புரியவில்லையே என்று பரிதபப்படுங்கள் நான் உங்க கொள்கைகளை புரிந்துக்கொள்ள முயற்சி செய்கிறோன்

  • அன்புள்ள ஹைதர், முதலில் உங்களுக்கு வருத்தததை வரவழைத்த அந்த வாக்கியத்துக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். அது ஒரு தனிநபரை பற்றிய எனது விமரிசனமே அன்றி ஒரு சமூகத்தை பற்றிய எனது மதிப்பீடல்ல என்பதை உறுதிபட கூறுகின்றேன்.

   இஸ்லாமியர்களுக்கு வீடு கிடைப்பதுகூட அறிதான இந்தகாலத்தில் வேலைவாய்ப்புகள் இன்றி அல்லல்படும் உழைக்கும் வர்க்கத்தினர் கடைநிலை ஊழியர்களாக அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வதையும், அங்கே அவர்கள் கொடூரமான வாழ்வியல் சூழல்களில் உயிரைத்தவிர மற்ற அனைத்தும் சுரண்டப்படுவதையும் நான் அறிவேன், அவர்கள், நீங்கள் எங்கள் தோழர்களே, உங்களுக்கான அரசியலைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம். உழைக்கும் வர்க்கத்தினர் என்றவகையில் ஒன்றுபட்டிருக்கவேண்டிய மக்களை பிரிக்கும் மதவாதிகளை எதிர்கின்றோம்

   எப்போதுமே உழைக்கும் மக்கள் மதவெறி பிரச்சாரங்களில் ஈடுபடுவதில்லை, மதம் அவர்கள் மீது ஏறியுள்ள சுமை, மதவெறி பிரச்சாரம் என்பது அதனால் ஆதாயமடையக்கூடியவர்களின் செயல், அது உழைக்கும் மக்களை ஏமாற்றி சமூகத்தை பிளவடைய செய்வதோடு மட்டுமல்லாமல் உண்மையான எதிரியின் பால் திரும்ப வேண்டிய மக்களின் கோபத்தை தவறான வழிகளில் திருப்பி மக்களை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்கும் வழி. அதைத்தான் இந்தியாவில் பார்ப்பனி பாசிஸ்டுகள் செய்து வருகின்றனர், அதைப்போல ஒன்றையே பி.ஜே மற்றும் அவர் வழியினர் செய்ய விழைகின்றனர்.

   எனது வருத்தமெல்லாம் நெத்தியடி, ஷாஜஹான் போன்ற படித்த, வாய்ப்புள்ள இசுலாமிய இளைஞர்களே தங்களுடைய சமூகத்துக்கு தீங்கு விளைவிக்ககூடிய அடிப்படைவாதிகளின் பின்னாலே அணிதிரண்டு போனதுதான். பி.ஜேவின் இயக்கம் வாய்ப்பிருக்கும் பட்சத்தில் தாலிபானாய்தான் போகும். தன் சொந்த சமூகத்தையே ஒடுக்கும். பாசிஸ்டுகளின் பரிணாம வளர்ச்சி அப்படித்தான் இருக்கமுடியும்

   ஆனால் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் முன்வைக்கும் அரசியல் வேறானது, உழைக்கும் வர்க்கத்தினரின் கைகளில் அரசியல் அதிகாரத்தினை கொண்டுவருவதே எங்கள் பிரதான பணி. அந்த அடிப்படையிலேயே இங்களே எங்கள் களப்பணிகளை ஆற்றி வருகிறோம். அதில் மையமான அரசியல் எதிரியான ஏகாதிபத்தியங்களையும் அதற்கு சேவகம் செய்யும் இந்து மதவெறி பாசிசத்தையும் ஒரு சேர எதிர்க்கின்றோம். வினவு தளத்தின் மதம்-சாதி சார்ந்த இடுகைகளை வாசித்தால் உங்களுக்கு அது புரியும்.

   பொறுமையாய் எனது பின்னூட்டத்தை வாசித்தமைக்கு நன்றி. நாம் தொடர்ந்து பேசுவோம்

 37. /புரியலையே. அதென்ன உண்மையான நகைசுவை ? தமிழ்படங்களில் பல விதமான நகைச்சுவைகள் உள்ளன. (உதாரணமாக கமல் மகாநதி, அன்பே சிவம் போன்ற படங்களில் கையாளும் subtle humour or irony). மேற்கொண்டு மருத்துவர் ருத்திரன் போன்றவர்கள் தொடரலாம்.//
  அதிய மான்

  சில விசயங்களை நீங்கள் எழுதி நம் தோழர்களிடம் மாட்டி கொள்ளும்போது அங்கே வெடி சிரிப்பு போன்ற உண்மையான நகைசுவை நிகழ்கிறதே 🙂

  சிலர் பெண்களை கேலி செய்து நகைசுவை வரவைப்பார்கள்
  ஒரு பெண் நான் ஸ்கூலில் வேலை செய்கிறேன் என்பார்
  என்ன வேலை என்றால் கூட்டல் பெருக்கல் என்பார்
  போய் பார்த்தால் அவர் அங்கே கழிவறையை சுத்தம் செய்யும் வேலை
  ஆனால் டீச்சர் மாதிரி உடை உடுத்தி வருவார்

  இதில் கழிவறையை சுத்தம் செய்யும் வேலை செய்பவர்கள் கடுமையான எதிர்ப்பை கிளப்பி இருந்தால் அது சிரிப்பில்லாமல் போய் இருக்கும்

  இப்படித்தான் இன்று சமூகத்தில் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களை
  காமெடி ஆக்குகிறார்கள்

  செந்திலை திட்டுவார் கவுண்டமணி ” வீடு வீடா வாங்கி திங்கிற நாயி உனக்கு என்னடா ஆராய்ச்சி வேணும்னு”
  இந்த வார்த்தையை சொல்லாமலேயே அந்த காமெடி அழகாக வந்திருக்கும் கவுண்டமனி இதை சொல்லி கைதட்டல் வாங்குவார்

  முன்பெல்லாம் தீபாவளிக்கு வீடுகளுக்கு பலகாரம் வாங்க வருவார்கள் உடை வெளுக்கும் மக்கள் இப்போதெல்லாம் வருவதில்லை கிராமத்தில்
  உணவு வாங்குவது தொடர்கிறது -ஏனெனில் அவர்களுக்கு உள்ளூரில் கொடுக்கும் நாலு படி நெல் என்பது பத்தாது . அவர்களது வேலையே ஆடை வெளுப்பதுதான் வேறு வேலைகளுக்கு செல்ல முடியாது அதை சொல்லி காமெடி செய்யனுமா ?

  சிரிப்பை வரவைக்கனும் என்பதற்கு எதைவேணா சொல்லாம் என்றால்

  ஏன் ஆதிக்க சாதி மக்கள் கிண்டல் செய்யபடுவதில்லை என தெரியவில்லை

  ஒடுக்கப்ட்டவன் , ஊணமுற்றவன் ,திருநங்கைகள் என்பவர்கள்
  தவிர்து வந்துள்ள காமெடி குறைவானதாக இருக்கும் அதுதான் உண்மையான காமெடி

  தியாகு – செம்மலர்

  • தியாகு,

   தமிழ் படங்களில் இதுவரை வந்த நகைசுவைகள் அனைத்தும் இவ்வகை மட்டும் தான் என்று சொல்கிறீர்களா ? நான் குறிப்பிட்ட படங்கள் அப்படி அல்லவே ?

   விவேக் ஒரு படத்தில் பார்பனரகா நடித்து, பல விசியங்களை தோலுரிப்பார். பார்பனர்களின் போலித்தனங்களை கேலி செய்யும் படங்களும் உள்ளன. ஓ.கே.

   ///// சில விசயங்களை நீங்கள் எழுதி நம் தோழர்களிடம் மாட்டி கொள்ளும்போது அங்கே வெடி சிரிப்பு போன்ற உண்மையான நகைசுவை நிகழ்கிறதே ////

   எங்கு என்று சொல்லுங்களேன். இப்படி பொதுப்படையாக உளர வேண்டாம். ஓ.கே.
   யார் மாட்டி கொண்டனர், யார் எழுதவது நகைசுவை என்பதை வாசகர்கள் அறிவார்கள். நீரே முடிவு செய்து கொள்ள வேண்டாம்

 38. நான் தமிழ் படம் பார்கவில்லை ஆனால் ஒரு புகைப்படத்தில் ராமராஜனை கிண்டல் செய்வதற்காக அரைக்கால் சட்டையுடம் மாடு மேய்ப்பது போல் ஒரு புகைப்படம் பார்த்தேன்.அதேன்னவென்று தெரியவில்லை இந்த படமாகட்டும் அல்லது மற்ற லொள்ளு நிகழ்ச்சியாகட்டும் ராமராஜனை கிண்டல் செய்வதாக எண்ணிக்கொண்டு ஒருவன் அரைக்கால் சட்டையுடன் மாடு மேய்ப்பது போல் காட்டுவதும் அதை பார்த்து நடுவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பதும் என்ன நகைச்சுவையென்று தெரியவில்லை.இவர்கள் ராமராஜனை கிண்டல் செய்வதானால் கலர் சட்டை போட்டுகொண்டு செய்வதுதானே.அதை விடுத்தது அரைக்கால் சட்டையுடன் மாடு மேய்ப்பது எவ்வகையில் நகைப்பிற்குரியது?இவர்களெல்லாம் அந்த கேடு கேட்ட அம்பானி போன்றவர்களின் அடிவருடிகள் என்பது தெளிவாகிறது.மேலும் பல படங்களில் முடி திருத்துவதை இழிவு தொழில் போல் காட்டுவார்.மாடு மேய்ப்பது அல்லது முடி திருத்துவது கேவலமென்றால் மக்களை அடித்து நிலத்தை பிடுங்கி பல்லாயிரம் கோடி சம்பாதிப்பதுதான் உயர்ந்ததா?அல்லது தாய்மொழியில் பேசுவதை ஏதோ பரத்தையர் வீட்டுக்கு போவதை போல் இழிவாக என்னும் இந்த கேடு கேட்ட மென்பொருள் துறையில் பல லட்சம் சம்பாதிப்பது மட்டும்தான் உயர்வானதா?ஆனால் பின்பு நினைத்து கொண்டேன் இந்த படத்தைதயாரித்ததே ஒரு குடும்ப அரசியலில் கொழித்து கொண்டிருக்கும் வாரிசு என்பதால் இத்தகைய காட்சிகள் சகஜம் என்று .வாழ்க சன நாயகம்!!!

 39. அதியமான் ,,

  அனைத்து படங்களும் இப்படி புண்படுத்தும் விதமானவை அர்த்தமற்றவை என நான் எங்கேயும் சொல்லவில்லை ..

  அர்த்தமற்ற உளறல் என்றால் நீங்கள் இந்தியாவில் சோசலிசம் இருந்தது என பல இடங்களில் சொல்லி மாட்டி கொண்டீர்கள் அதான்

 40. அதியமான் ,

  //1991க்கு முன் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டவை கண்டிப்பாக சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகள் அல்ல. அதற்க்கு மாற்றாக ஜனனாயக பாணி ‘சோசியலிசம்’ என்று காங்கிரஸ் சொன்னது. இடதுசாரிகளிம் ஒத்து ஊதினார்கள். அது போலி சோசியலிசமோ அல்லது வேறு என்ன இழவோ, எதோ ஒரு பெயர். இந்த பெயர் சொல் பற்றி ஏற்கெனவே நான் பத்தாயிரம் தடவை அசுரனுக்கு விளக்கியாயிற்று. ஆனாலும்
  நான் பொய்யன் என்று, அந்த சொல்லை பயன்படுத்தும் ஒவ்வொறு முறையும் கூவுவதை மாற்றவில்லை. சோசியலிஸ்டுகள் என்று ஒரு பெரும் பட்டாளம் அன்று இருந்தது. பல வகை சோசியலிஸ்டுகள் இருந்தனர். காங்கிராஸிலும் மற்றும் பல கட்சிகளும். அதனால் அந்த பெயரை தவிர்க முடியாது. அதன் அர்த்தம் உங்களுக்கு மாறுபடலாம். ஆளாளுக்கு நாங்கள் தான் ஒரிஜினல், மற்வர்கள் போலி என்று டிக்லரேசன் வேறு. சரி அன்று கடைபிடிக்கபட்டது கம்யூனிச பாணி சோசியலிசம் அல்ல, மாற்றாக இந்திய பாணி போலி சோசியலிசம் என்றே வைத்துகொள்வோம்.
  அப்படி என்றால் அதற்க்கு நேர் எதிரான கொள்கைகளான தாரளமயமாக்லை ஏன் எதிர்க்கிறீர்கள். ஏற்கெனவே இருந்ததுதான் ஒரிஜினல் சோசியலிசம் அல்லவே ?//

  சோசலிசம் என்பது காங்கிரஸ் சொல்வது அல்ல
  தனி சொத்துரிமையை ரத்து செய்தல்
  உற்பத்தியை சந்தை உற்பத்தி நிலையில் இருந்து மாற்றுதல்
  விலையையும் உற்பத்தியையும் சந்தை தீர்மானிப்பதில் இருந்து விடுவித்தல்
  அதிகார பூர்வமாக தொழிலாளர்கள் தலைமையில் ஆட்சி நடத்தல்
  இதெல்லாம் இந்தியாவில் நடக்கவில்லை

  பிறகு அது சோசலிசம் என்றால் கேட்கிறவனெல்லாம் கேணையனா ?

  நீங்கள் கேப்பையில் நெய்வடிந்தது என சொன்னால்

 41. ஒரு திரைப்பட ரசிகனாகச் சில கருத்துகள்:

  சுற்றியுள்ள வீடுகளில் மக்கள் சிரிக்கும், மகிழ்ச்சியாக இருக்கும் அறிகுறிகளையே காணோம். ஒரு வித இறுக்கமான சமூகமாக மாறி வருகிறது. தமிழ்நாட்டில் பொழுதுபோக்குக்கு மிகப் பெரிய வறட்சி நிலவுகிறது. திரைப்படம் மட்டுமே முக்கிய பொழுதுபோக்காக மாற்றப்பட்டிருக்கிறது.

  இந்நிலையில், ஏனடா போனோம் என்று மண்டை காய்கிற மாதிரி படங்களுக்கு இடையில் 3 நேரம் பொழுதுபோக்க சில சிரிப்புப் படங்கள் வருவது தப்பு இல்லை. ஒரு அளவுக்கு மேல ஆராய்ந்து சிந்தித்தால் எதையுமே ரசிக்க இயலாத அளவுக்கு விரக்தியாகி விடும்.

விவாதியுங்கள்