Wednesday, September 27, 2023
முகப்புஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!
Array

ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!

-

vote-012அமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை ஆக்கிரமித்துக்கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீது ஒரு அநீதியான போரை நடத்தி வருகிறது. சின்னஞ்சிறு ஏழை நாடாக இருந்தாலும், “ஆப்கான் ஏகாதிபத்தியங்களின் இடுகாடு” எனக் கூறப்படுவது மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

ஒசாமா பின்லேடனைப் பிடிப்பது, அல்-காய்தாவை நிர்மூலமாக்குவது, தாலிபானைத் தோற்கடிப்பது, ஆப்கானில் ஜனநாயக அரசைக் கட்டியமைப்பது – இவை அனைத்தையும் போரைத் தொடங்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே செய்து முடிப்பது எனத் தம்பட்டம் அடித்து, இந்த ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கிய அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனின் “நேடோ” கூட்டாளி நாடுகளும், தமது சபதங்களை நிறைவேற்றவும் வழியின்றி, அதே சமயம், ஆப்கானில் இருந்து கௌரவமாக வெளியேறவும் விருப்பமின்றி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன.

இப்படிபட்ட தருணத்தில், ஆப்கானுக்கு மேலும் 30,000 அமெரிக்கத் துருப்புகளை அனுப்பப் போவதாக அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. அதனுடன், “இன்றிலிருந்து 18 மாதங்கள் கழித்து, ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறப் போவதாகவும்” ஒபாமா அறிவித்திருக்கிறார். இராணுவச் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, போரை முன்னைவிடத் தீவிரமாக நடத்துவதற்கான முயற்சி என்பது பாமரனுக்கும் புரியும். ஆனால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் அல்லவா; அதனால், “ஆப்கான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத்தான் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக”த் தேன் தடவிப் பேசியிருக்கிறார், அவர். இந்த விளக்கத்தைக் கேட்கும் பொழுது கேப்பையில் நெய் வழிகிறது என்ற நம்மூர் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கான் ஆக்கிரப்புப் போருக்காக 2006-ஆம் ஆண்டு செலவழித்த தொகை ஏறத்தாழ 1,900 கோடி டாலர்கள் (95,000 கோடி ரூபாய்). இந்தப் போர்ச் செலவு 2009-இல் மூன்று இலட்சம் கோடி ரூபாயாக (6,020 கோடி அமெரிக்க டாலர்கள்) அதிகரித்திருக்கிறது. தற்பொழுது துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் போர்ச் செலவு 10,000 கோடி அமெரிக்க டாலர்களைத் தொட்டுவிடும் என மதிப்பிடப்படுகிறது.

வேலையையும் வீட்டையும் இழந்து, பொருளாதார நெருக்கடியால் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட அமெரிக்கர்களின் மத்தியில் இந்த ஊதாரித்தனமான போர்ச் செலவு ஆப்கான் போருக்கு எதிரான மனோநிலையைத் தோற்றுவித்திருக்கிறது. எனவே, இந்த ஆக்கிரமிப்புப் போரையும் போர்ச் செலவையும் நியாயப்படுத்த தேசிய வெறியைத் தூண்டிவிடும் அயோக்கியத்தனத்தில் இறங்கியிருக்கிறார், ஒபாமா. அமெரிக்காவை மீண்டும் தாக்கும் திட்டங்கள் போடப்படுவதாகக் கூறி, அமெரிக்கர்களின் மத்தியில் பீதியூட்டி வருகிறார், அவர். கூடுதலாக 30,000 அமெரிக்கத் துருப்புகளை ஆப்கானுக்கு அனுப்ப எடுத்த முடிவை இராணுவத்தினர் மத்தியில் அறிவித்து, ஒபாமா உரையாற்றியதைக் கேட்டால், போர் வெறியன் ஜார்ஜ் புஷ் ஆவி ஒபாமாவுக்குள் புகுந்துவிட்டதோ என்ற சந்தேகம் தோன்றும்.

ஒபாமா அதிபரான பிறகு, துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே ஆப்கான் போரில் வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற போர்த் தந்திரத்தைக் கையாண்டு வந்தார். பொருளாதார நெருக்கடி நிலவும் சமயத்தில் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், போர்ச் செலவு அதிகரித்து, ஏழை அமெரிக்கர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள நேரிடும்; அது, தனது எதிர்கால அரசியல் நலனுக்கு நல்லதல்ல என்பதாலேயே இந்தப் போர்த் தந்திரத்தைக் கையாள எண்ணி வந்தாரேயன்றி, வேறெந்த நல்லெண்ணமும் காரணம் அல்ல.

இதற்கு மாறாக, அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடேன், துருப்புகளின் எண்ணிக்கையைச் சற்று அதிகரிப்பதோடு, ஆளில்லா விமானத் தாக்குதலை ஆப்கான் மீது மட்டுமின்றி, பாகிஸ்தான் மீதும் தீவிரமாக நடத்த வேண்டும் எனக் கூறி வந்தார். அமெரிக்க அரசின் உள்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன், இராணுவச் செயலர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் அமெரிக்க இராணுவத் தளபதிகள் ஆகியோர் ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வந்தனர். துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு அமெரிக்காவின் பத்திரிகைகளும், குடியரசுக் கட்சியும், வலதுசாரி அறிவு ஜீவிகளும் ஆதரவு தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக இந்த மூன்று அணிகளுக்கு இடையே ஆப்கான் ஆக்கிரமிப்புப் போரை எப்படி நடத்திச் செல்வது என்பது குறித்து நடந்து வந்த நாய்ச் சண்டையில், அதிபர் ஒபாமா தீவிர வலதுசாரி கும்பலிடம் சரணடைந்துவிட்டார்.

“தீவிரவாதத்துக்கு எதிரான போர்” என்ற போர்வையில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்துவரும் இந்த ஆக்கிரமிப்புப் போர், தாலிபான் மற்றும் அல்-காய்தாவைத் தோற்கடிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, குறிப்பாக ஆப்கான் மக்கள் மத்தியில் மீண்டும் தாலிபானின் செல்வாக்கு வளருவதற்கு வளமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. அமெரிக்கா, ஆப்கான் மீது படையெடுத்த ஐந்து வாரங்களுக்குள்ளாகவே தாலிபானின் அதிகாரம் காபூல் பகுதியில் வீழ்த்தப்பட்டாலும், அப்பொழுதே ஆப்கானின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தும் அளவிற்கு, அப்பகுதியில் தாலிபான் செல்வாக்கு செலுத்தி வந்தது. இப்பொழுதோ, தாலிபானின் செல்வாக்கு ஆப்கானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வளர்ந்து வருவதாக முதலாளித்துவப் பத்திரிகைகள்கூட ஒப்புக் கொள்கின்றன.

இதனால், தாலிபானைத் தோற்கடிப்பதைவிட, அவ்வமைப்பின் செல்வாக்கு தலைநகர் காபூல் பகுதியில் மீண்டும் வளர்ந்துவிடாமல் தடுப்பதுதான் அமெரிக்காவிற்கும் அவர்களது கூட்டாளி நாடுகளுக்கும் தலைபோகிற விசயமாகிவிட்டது. இதற்காகவே துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதோடு, தாலிபானுக்கு எதிரான யுத்தப் பிரபுக்களோடு ஒரு புனிதக் கூட்டணியையும் அமெரிக்கா-நேடோ துருப்புகள் அமைத்துள்ளன. மேலும், தாலிபானை உடைத்து அமெரிக்காவிற்கு உதவக் கூடிய ‘நல்ல’தாலிபான்களை – கருங்காலிகளை- உருவாக்கவும் அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக அமெரிக்காவின் இராணுவ பட்ஜெட்டில் 130 கோடி அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

+++

அமெரிக்காவின் தயவிலும், பாதுகாப்பிலும் ஆப்கானை ‘ஆண்டு’ வரும் ஹமித் கர்சாய் அரசோ, ஊழல்பேர்வழிகள், போதை மருந்து கடத்தும் அரசியல் தாதாக்கள், தாலிபானை எதிர்க்கும் யுத்தப்பிரபுக்களால் நிரம்பி வழிகிறது. ஆப்கான் அதிபர் ஹமித் கர்சாயின் சொந்த சகோதரரான அகமது வாலி கர்சாய் ஆப்கானைச் சேர்ந்த போதை மருந்து கடத்தல் பேர்வழிகளுள் முக்கியமானவர் எனும்பொழுது, ஆப்கானில் அமெரிக்கா திணித்துள்ள ஆட்சியின் யோக்கியதைப் பற்றி மேலும் விரிவாக விளக்கத் தேவையில்லை. “அகமது வாலி கர்சாயின் போதை மருந்து கடத்தல் தொழிலை மேற்குலக பத்திரிகைகள் அம்பலப்படுத்தத் துணிந்தால், நேடோ-அமெரிக்கத் துருப்புகளுக்கும் அதில் பங்கு இருப்பதை அம்பலப்படுத்துவேன்” என அந்நாட்டின் போதை மருந்து கடத்தல் தடுப்பு அமைச்சரே எச்சரிக்கும் அளவிற்கு ஆப்கானில் போதை மருந்து கடத்தல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.

ஆப்கான் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான யுத்தப் பிரபுவாகக் கருதப்படும் முகம்மது ஃபஹிம்தான் அந்நாட்டின் துணை அதிபர். உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த மற்றொரு யுத்தப் பிரபுவான ரஷித் தோஸ்தம் அதிபர் கர்சாயின் நெருங்கிய அரசியல் கூட்டாளி. பஷ்டுன் இன மக்கள் வாழும் பகுதியில் அமெரிக்க-நேடோ துருப்புகளுக்குத் தேவைப்படும் ஆயுதத் தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை யுத்தப் பிரபுக்கள்தான் செய்து கொடுத்து, சன்மானம் பெற்றுக் கொள்கிறார்கள். போதை மருந்து கடத்தல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் யுத்தப் பிரபுவான நஸ்ரி முகமது, ஜெர்மன் ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து வருவதை அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்துலக கூட்டுறவு மையம் என்ற அமைப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆப்கானில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக நடந்த அதிபர் தேர்தலில் ஹமித் கர்சாய்க்கு விழுந்த வாக்குகளில் ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குகள் கள்ள வாக்குகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டதால், அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் கர்சாய் அடைந்த “வெற்றி”, பின்னர் ரத்து செய்யப்பட்டது. எனினும், கர்சாய் இரண்டாம் சுற்றுத் தேர்தலைச் சந்திக்காமலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயவால் மீண்டும் நாட்டின் அதிபராக முடிசூட்டிக் கொண்டுள்ளார். பாலஸ்தீனத்தில் அமெரிக்காவை எதிர்க்கும் ஹமாஸ் இயக்கம் நியாயமான முறையில் தேர்தலைச் சந்தித்து, காசா முனையில் வெற்றி பெற்றதை இதுவரை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், ஆப்கானில் நடந்த மோசடித் தேர்தலையும், ‘சட்டவிரோதமான’ முறையில் கர்சாய் மீண்டும் அதிபராகியிருப்பதையும் எவ்வித முணுமுணுப்புமின்றி ஏற்றுக் கொண்டுள்ளன.

அந்நிய ஆக்கிரமிப்பு, அமெரிக்க மற்றும் நேடோ படைகள் நடத்திவரும் படுகொலைகள் – கடந்த எட்டு ஆண்டுகளில் ஏறத்தாழ 31,000 ஆப்கானியர்கள் ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர் – கர்சாயின் ஊழல் ஆட்சி, ஐ.நா. மன்றம் போடும் சோத்துப் பொட்டலத்தை நம்பியே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய அளவிற்கு உள்நாட்டுப் பொருளாதாரம் நாசமாகிக் கிடப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்கான் மக்கள் மத்தியில் தாலிபானின் செல்வாக்கு மீண்டும் வளரத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா இப்பொழுது இதனையே காரணமாகக் காட்டி துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதோடு, ஆளில்லா விமானத் தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டும்; அல்-காய்தாவை ஒழிக்க பாகிஸ்தான், சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகள் மீதும் தீவிரவாதத்துக்கு எதிரான போரைத் தொடுக்க வேண்டும் எனக் கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது.

ஆப்கானில் அமெரிக்க-நேடோ படைகள் சந்தித்துவரும் தோல்வியையும், அங்கு நிலவும் உள்நாட்டுக் குழப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஆப்கானில் சமாதானத்தை ஏற்படுத்துவது என்ற பெயரில் ரசிய ஏகாதிபத்தியமும், சீனாவும் அந்நாட்டினுள் நுழைய முயன்று வருகின்றன. இந்தியா, ஆப்கானிலிருந்து பாகிஸ்தானை ஓரங்கட்ட வேண்டும் என்ற திட்டத்தோடு, அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு மட்டுமின்றி, கர்சாய் கும்பலுக்கும், தாலிபானை எதிர்க்கும் யுத்தப் பிரபுக்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், ஆப்கானைப் புனரமைப்பது என்ற போர்வையில் அமெரிக்க இராணுவத்திற்குத் தேவைப்படும் கள உதவிகளைச் செய்து கொடுத்தும் வருகிறது, இந்தியா. பாகிஸ்தானோ ஒருபுறம் அமெரிக்காவிற்கு ஆதரவளித்துக் கொண்டு, இன்னொருபுறம் தாலிபானுக்குக் கொம்பு சீவிவிடுகிறது. இப்படியாக ஆப்கான், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் வேட்டைக் காடாக மாற்றப்பட்டுள்ளது.

இரானின் எல்லையையொட்டி அமைந்திருப்பதாலும், மத்திய ஆசியப் பகுதியில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை அரபிக்கடல் பகுதிக்கு எடுத்துச் செல்லுவதற்கான தரைமார்க்கமாகவும் இருப்பதாலும், ஆப்கான் நாட்டைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. இந்த நிலையில் அதிபர் ஒபாமா பதினெட்டு மாதங்கள் கழித்து ஆப்கானில் இருந்து படைகளை முழுவதுமாகத் திரும்பப் பெற்றுக் கொள்வார் என நம்புவதற்கு இடமே கிடையாது. 19 -ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஏகாதிபத்தியமும், 20-ஆம் நூற்றாண்டில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் ஆப்கான் மக்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டதைப் போல், அமெரிக்க மேலாதிக்க வல்லரசும் தோற்கடிக்கப்பட்டதால்தான், அதற்குப் படைகளைத் திரும்பப் பெறும் “நல்ல புத்தி” வரும்!

– புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. இந்திய முதலாளிகள் கொள்ளையடிக்க ஈழம், அமெரிக்க முதலாளி கொள்ளையடிக்க ஆப்கான். இதில் கூடவே பொருக்கி திங்க நேட்டோ கூட்டணி.

 2. சோவியத் ரஷ்ய சிவப்பு ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை சுமார் எட்டு வருடம் ஆக்கிரமித்து அந்நாட்டு மக்களின் மீது ஒரு அநீதியான போரை நடத்தியது. இது நடந்தது (முழு வீச்சுடன்) 1980 முதல் 1988 வரை!
  சின்னஞ்சிறு நாடாக இருந்தாலும் ஆப்கான் ஏகாதிபதியங்களின் இடுகாடு என்று நிருபனமானது இருபது வருடங்களுக்கு முன்னரே! Courtesy – Soviet Russia
  வாசகர்களே, நண்பர் திரு வினவு எழுதியதில், அமெரிக்காவை எடுத்தவிட்டு சோவியத் ரஷ்யாவை போட்டு படியுங்கள்! ஜோ பிடேன்  மற்றும் ஒபாமாவை தூக்கிவிட்டு, லியோநிட் பிரெஷ்நேவ் மற்றும் யூரி அன்றோபோவ் போன்ற பெயர்களை போடுங்கள்!
  அப்பொழுது தெரியும் இந்த கட்டுரையை போட்டவர்களின் நேர்மை!!!!!
  ஆப்கான், சிஞ்சியாங், அர்மேனியா, டார்டரிச்டான், செசென்யா  – இவை எல்லாம் இஸ்லாமியர் வாழ்ந்த, சோவியத் ஸ்டாலினிஸ்ட் ஏகாதிபதிய கூட்டம் மற்றும் மாவோ விஸ்ட் ஏகாதிபதிய கூட்டம் சீரழிக்கப்பட்ட நாடுகள்!!
  இன்று இந்த கும்பலை சேர்ந்தவர்கள் வேடம் போடுகிறார்கள், சிறுபான்மையினரின் காவலர்கள் என்று!பொய், இமாலய பொய்…..இவர்கள் ஆட்ச்சியில் இல்லை, இருந்தால் தெரியும் இவர்கள் யாரின் காவலர்கள் என்று!
  ஸ்டாலினிஸ்ட் மற்றும் மாவோவிஸ்ட்கள் கொன்று போட்டு மற்றும் சீரழித்த இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மத நம்பிக்கையாளர்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு!
  Cathedral of Christ The saviour in Moscow – Blown away by powerfull bombs – Recorded footage is there in you tube. This was destroyed to build an head quarters for soviets.
  According to the report of a journal ‘Mir Islam’ published from Saint-Petersburg(then the capital of Russia) there were 26279 mosques in Russia in 1912. But according to another report of ‘Soviet War News’ the number of mosques in Soviet Union decreased to 1312 in 1942 [14. A. Bennigsen and CL. Quelquejay; Islam in The Soviet Union, page 151]. The other mosques were transformed into godowns, clubs or cinema halls showing the excuse of absence or lack of worshippers [15. A. Bennigsen and CL. Quelquejay; Islam in The Soviet Union, page 151].
  Within 1930 all Waqf properties of Soviet Union were nationalized. By this action Soviet government destroyed economic backbone of Muslim religious institutions and mosques [18. A Bennigsen and CL. Quelquejay: Islam in The Soviet Union. page 144-149] . After capturing properties of religious organizations, Soviet government targeted ‘Shariah Court’. These Shariah courts dealt with marriage, divorce, inheritance and such other matters according to Islamic jurisprudence. Soviet government banned all these Shariah courts in December 1917. At last in 27th September 1927 Soviet government issued a decree by which all Shariah courts were declared invalid [19. A Bennigsen and CL. Quelquejay: Islam in The Soviet Union. page 144-149].  In 1928 Soviet government closed all Muslim religious schools which survived even after loosing their Waqf property [20. A Bennigsen and CL. Quelquejay: Islam in The Soviet Union. page 144-149].
  Islamic ideology faced pressure from all corner in 1928. At that time the atheist organization ‘Union of Godless Zealots’ organized their aggressive propagation programme. They used to raise charge of stealing, bribery and other dishonesty against Muslim Alims. Often they termed them as the agents of Germany and ‘rootless parasite’. In 1935 Soviet government banned Hajj pilgrimage of Muslims [21. A Bennigsen and CL. Quelquejay: Islam in The Soviet Union, page 151.]
   The first joint study by Polish and Russian historians of the persecution of the Catholic Church during the Communist era has just been published by Warsaw’s Apostolicum press. Sentenced as Vatican spies (in Polish only) includes materials from the Soviet Union’s secret police archives, as well as documents from the notorious Solovets Islands prison camp. This White Sea camp opened in 1920 on the site of a Russian Orthodox Adj. 1. Russian Orthodox – of or relating to or characteristic of the Eastern Orthodox ChurchEastern Orthodox, Greek Orthodox, Orthodox The book is the fruit of four decades’ work by its editor, Fr. Roman Dzwonkowski, a member of Poland’s Pallotine order. In the early 1960s, he started slipping into Soviet territory, using fake family invitations. At the time, most older Russians remembered the great pre-Second World War purges, when Stalin sent millions to their deaths in labour camps and execution chambers.
  In 1995, a Russian State Commission, appointed by President Boris Yeltsin confirmed that 200,000 Russian Orthodox priests, monks and nunsMonks and Nuns were slaughtered in Communist purges before the Second World War. Although most priests were shot and hanged, the commission reported, many died after being crucified on church doors by Communist death squads in the years following the 1917 revolution. In a top-secret message sent in 1922 to the Soviet Politburo, published only in 1993, Lenin urged Communist officials to kill as many “reactionary clergy representatives” as possible
  Stalin modified the anti-religion campaign in September 1943, after secret Kremlin talks with three surviving Orthodox Metropolitans. The minutes, published in 1994, showed that all three were living in small flats and buying their food at Moscow markets. Fewer than 20 of the Russian Church’s 200 bishops were found alive in the camps and brought to Moscow two weeks later for an orchestrated synod meeting.The Catholic Church’s Mohilev archdiocese, based in St. Petersburg, was home in 1917 to 1.5 million Catholics, mostly ethnic PolesThis page is a list of notable people who are considered, either by others or by themselves, to be ethnically Polish. Names on this list are differentiated from those on List of Poles by including individuals whose Polish status is not entirely clear. , as well as 400 priests from the Latin, Greek and Armenian Catholic rites. All but two of its 1,240 churches and chapels were destroyed or closed over the next two decades. At least 140 priests were shot in 1937-38 alone, leaving only a dozen still at large after the Second World War.
  மேல சொன்னது ஒரு சிறிய சாம்பிள்தான். இவர்கள்  செய்த அராஜகம், அழித்தொழித்த மத நம்மிக்கயாளர்கள், வழிப்பாட்டு தளங்கள்  ஆயிரக்கணக்கானவை!இவை எல்லாம் இப்பொழுது உலகமெங்கும் வெட்ட வெளிச்சமாயிருக்க, அதைப்பற்றி எல்லாம் இங்கே இந்தியாவில் யாருக்கு என்ன தெரிய போகிறது என்று நினைத்து ஏதோ தாங்கள் சிறுபான்மையினரின் காவலர்களைப்போல நாடகமாடுகின்றனர்!
  இது மட்டுமா? இவர்கள் கொன்ற ஆப்ப்கானிய முஜாஹிதீன்கள் (அவர்கள் எல்லாம் தாலிபானோ அல்லது  அல் கைதாவோ  இல்லை, சாதாரண ஆப்கானிய பிரஜைகள், அதுவும் சோவியத்களின் அராஜகத்தை எதிர்த்த சாதாரண மக்கள்) எவ்வளவு ஆயிரம்!!!
  மேல சொன்னதை எல்லாம் கண்டித்துவிட்டு, பின்னர் இவர்கள் மற்றவர்களை விமர்சித்தால் அதை படிக்கலாம், பாராட்டலாம்!!!
  நன்றி

 3. ////…..20-ஆம் நூற்றாண்டில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் ஆப்கான் மக்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டதைப் போல்…..////
  —-இதற்கு பொருத்தமாய் எனக்கு எது இப்போது ஞாபகம் வருகின்றதென்றால்….
  ///ஜேயேந்திரன் பெண்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், ஜெயா ஈழம்பற்றி சவடால் அடிக்கும் போதும், அழகிரி நேர்மையான தேர்தல் முறை குறித்து பேசுவதும், ராகுல் காந்தி வாரிசு அரசியல் நல்லதல்ல என்று கூறுவதும், ரஜனி திருட்டு சி.டி குறித்து கோபப்படும் போதும் இங்கு யாருக்கும் சிரிப்பு வருவதில்லை. கோபமும் வருவதில்லை. — https://www.vinavu.com/2010/02/05/goa-tamil-padam  //// என்று வினவு சொன்னதுதான்….
  அதேபோலத்தான்…. வினவு, தலிபான்களுக்கு எதிராக – ஆப்கானிய முஸ்லிம்களுக்கு ஆதரவாய் பதிவு எழுதுவதும்….. எனக்கு சிரிப்பு வரவில்லை…. கோபம் வருகிறது…. அதனால்தான் இந்த // ‘ஒத்துவராத மறுமொழிகள்’ பகுதியை வினவு நிரப்புவதற்கு உதவும் பொருட்டு பதிவுக்கு ஒத்துவரும் மறுமொழி// இட்டேன்…

 4. //சோவியத் ரஷ்ய சிவப்பு ஏகாதிபத்தியம//…….. ஐயா நோ அவர்களே ஒரு திருத்தம். அது ரசிய சமூக ஏகாதிபத்தியம்..

 5. //சோவியத் ரஷ்ய சிவப்பு ஏகாதிபத்தியம// ஆம் அது பாட்டாளி வர்க்க சர்வதிகாரம்… உலகத்தில் அடிமை ஆண்ட இடம் சோவித் ரஷ்ய…

 6. USA is doing a great favor to India by containing Al-Qaida and Taliban. You would have noticed after Americans took control, violence in Kashmir has gone down a lot.
  USA is doing a great service to the humanity by helping Afghanistan and controlling terror network.

 7. உமா சங்கர்! கண்ணாடிய மாத்துங்க…
  அமெரிக்க மாமா இருக்கும் வரை எந்த நாடும் சுய மரியாதையுடன் ஜீவிக்க முடியாது..
  பாரத மாதா இருக்கும் வரை எந்த தமிழனும் எழுந்துகூட நிற்க முடியாது…
  ஒருவேளை டாலரில் சம்பளம் பெறும் ஆசாமியா நீங்கள்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க