Friday, June 2, 2023
முகப்புதலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை!!
Array

தலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை!!

-


vote-0122006 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் ஆதிதிராவிட நலத்துறை தலித்துக்களின் விமோச்சனத்திற்காக ஒரு திட்டத்தை பெரும் விளம்பரத்துடன் அமல்படுத்தியது. வருடத்திற்கு நூறு தலித் மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு விமானப் பணிப்பெண் பயிற்சி கொடுத்து வேலை வாங்கி கொடுப்பதுதான் அந்த விமோச்சனத் திட்டம். இந்தத் திட்டத்தின் பலனை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார் அஜிதா கார்த்திகேயன், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் (5.2.10).

இதற்கென்று சென்னையில் இருக்கும் பிரபலமான கல்லூரியைத் தேர்ந்தெடுத்து வருடத்திற்கு ஒரு கோடி ரூபாயை அரசு செலவழித்திருக்கிறது. ஒரு மாணவிக்கு ஒரு இலட்சமென்று இதுவரை நான்கு வருடங்களில் நானூறு பெண்கள் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு கிராம, நகரப் பகுதிகளிலிருந்து வந்த தலித் பெண்களுக்கு நடை, உடை, பாவனை, அலங்காரம், உள்ளிட்டு எல்லா எழவுகளும் தீவிரமாகப் பயிற்சி கொடுக்கப்பட்டன. நடுத்தர வர்க்கத்தின் கனவுப் பத்திரிகையான இந்தியா டுடே போன்றவை தலித் பெண்கள் விமானத்தில் பறக்கப் போவதை வைத்து இந்தியா முன்னேறிவிட்டதென்று செய்தி போடவும் தவறவில்லை.

ஆனால் என்ன பலன்? இந்த நான்கு ஆண்டுகளில் ஒரு தலித் பெண் கூட விமானப் பணிப்பெண் வேலைக்கு தேர்வு செய்யப்படவில்லை. இவ்வளவிற்கும் அந்தப் பயிற்சிக் கல்லூரி 60% மாணவிகளுக்கு வேலை வாங்கித்தர வேண்டுமென்பது அரசு செய்துள்ள உடன்பாடாம். இது குறித்து கேட்டதற்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி அந்தக் கல்லூரிக்கு தரவேண்டிய தொகையை நிறுத்தியிருப்பதாகக் கூறியிருக்கிறார். எவ்வளவு நாள் நிறுத்துவார்கள்? கமிஷன் வாங்கிய கைகள் குற்ற உணர்வு இல்லாமல் இருக்குமா என்ன?

வருடத்திற்கு ஒரு கோடியை ஸ்வாகா போட்ட அந்தக் கல்லூரி என்ன சொல்கிறது? மாணவிகள் எவரும் விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியில் இல்லையாம். அந்த எதிர்பார்ப்பு தகுதிகள் என்ன?

தமிழ் சினிமா இயக்குநர்கள் கதாநாயகிகளுக்காக உசிலம்பட்டி போகிறார்களா, இல்லை மும்பைக்கு பறக்கிறார்களா? வெள்ளையும், சொள்ளையும், வாட்ட சாட்டமாக இருக்கும் அழகிகள்தான் அவர்களது தேவை. இது ஒரு அக்மார்க் தமிழ்ப் பெண்ணிடம் இருக்காதில்லையா?

தமிழ்நாட்டு தலித் பெண்கள் மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ்ப் பெண்களும் சற்றே குள்ளமாகவும், கருப்பு, மாநிறமாகவும்தான் இருக்கிறார்கள். இந்தத் ‘தகுதிகளோடு’ ஆங்கில மொழி தேர்ச்சியின்மையும் ஒரு யதார்த்தமான பிரச்சினைதானே? விமானத்தில் பறக்கும் மேட்டுக்குடியினருக்கு சேவை செய்யும் பெண்கள் என்றால் சும்மாவா? இது குறித்து கேட்டதற்கு விமான நிறுவனப் பிரதிநிதிகள் தாங்கள் கலரெல்லாம் பார்ப்பதில்லை, பிளீசிங் பெர்சனால்ட்டியைத்தான் பார்க்கிறோம் என்றார்களாம்.

அப்படி ஒரு பெர்சனால்ட்டி வரவேண்டுமென்றால் அது சுண்டி இழுக்கும் வெள்ளையழகில் இருந்துதானே வரும்? பார்ப்பனியம் மட்டுமல்ல முதலாளித்துவம் கூட தலித்துகளை ஓரமாகத்தான் வைத்திருக்க விரும்புகிறது. இட ஒதுக்கீடு என்றால் தகுதி குறைந்து விடும் என்று கூப்பாடு போடும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் இத்தகைய அழகு விதிகளை வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் என்ன வேறுபாடு? அப்படி என்ன விமானத்தில் சேவை செய்து கிழிக்கிறார்கள்? சரக்கு ஊத்தி கொடுப்பது என்ன உலகில் யாரும் செய்ய முடியாத வேலையா என்ன?

“இதுதான் தகுதியென்றால் எங்களுக்கு அப்படி ஒரு பொய்யான நம்பிக்கையை ஊட்டி ஏமாற்றியிருக்க வேண்டியதில்லையே” என அங்கலாய்த்துக் கொள்ளும் அந்த தலித் மாணவிகளில் பெரும்பாலோர் வீட்டிலிருக்க சிலர் மட்டும் ஹவுஸ் கீப்பிங்க முதலான வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள்.

உண்மையில் இந்த அரசு செலவிட்ட நான்கு கோடி ரூபாயை ஆதி திராவிட மாணவர் விடுதிகளை மேம்படுத்துவதற்கு ஒதுக்கியிருந்தால் கூட பலனுண்டு. மாட்டுத்தொழுவங்கள் போல பராமரிக்கப்படும் அந்த விடுதிகளிலிருந்துதான் நமது தலித் மாணவர்கள் கல்லூரி படிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.

தலித் மக்களை முன்னேற்ற வேண்டுமானால் இந்த அரசு என்ன செய்திருக்க வேண்டும்? தலித் மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் நிலமற்ற விவசாயிகளாகத்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். அவர்களுக்கு நிலத்தை வழங்கினால் அது அவர்களது வாழ்க்கைப் பொருளாதாரத்தை மட்டுமல்ல ஆதிக்க சாதிகளிடம் சிக்கியிருக்கும் சுயமரியாதையையும் மீட்டு வரும். ஆனால் எல்லா அரசியல் கட்சிகளும் இந்த ஜீவாதாரமான பிரச்சினையை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு தலித்தை ஜனதிபதியாக்கிவிட்டோம், அமைச்சராக்கி விட்டோம், சில தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறோம் என்று ஏமாற்றி வருகின்றன.

தலித்துக்களில் படித்து முன்னேறியிருக்கும் மிகச் சிறுபான்மையினரான நடுத்தர வர்க்கத்தினை சாட்சியாக வைத்து மற்ற தலித்துகளும் முன்னேறலாம் என்ற மாயையை ஆளும் வர்க்கம் பரப்பி வருகிறது. இந்த செயல்திட்டத்தினை ஏற்றுத்தான் தலித் மக்களின் உரிமை பற்றி பேசும் தலித் அரசியல் கட்சிகளும் செயல்படுகின்றன. அதன் தொடர்ச்சிதான் இந்த விமானப் பணிப்பெண் வேலைத்திட்டம். ஆனாலும் இந்த அற்ப மாயையைக்கூட அமல்படுத்த முடியவில்லை என்பதுதான் இதன் அவலம்.

இத்தகைய கவர்ச்சி தூண்டிலுக்கு இரையாகாமால் தலித் மக்கள் பிற உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடும் போதுதான் அவர்களுடைய சமத்துவமும், பொருளாதாரமும் மீட்கப்படும். அதுவரை விமானங்களில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் கூட இடம் கிடைக்காமல் போகலாம்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. Dear Vinavu, As usual you’ve reviewed this in casteist prism,..The airline industry is undergoing a tough period and the are large scale layoffs,..If you keenly watch, the entire people of jet airways were sacked one day(and reinstated after lot of media pressure!) .Any way every industry has a standard and there are some tests needed to be cleared ! Your comment summa sarakku oothikodukkaa … is totally IRRELEVANT. In domestic planes NO alcohol is served in in international airlines no alcohol is served within indian skies,..ANYWAY the BIG news is some KAZHA KANMANI has minted crores of rupees claiming that these poor girls will ecome air hostess and that is the truth,..

    • பின்ன யாரைதான் விமான பணிப்பெண்ணாக இருக்கனுமாம், ரூல்ஸை மாத்திடலாமா, நல்லா கண்டாங்கி சேலையை கட்டிட்டு வாயில வெத்தலையை போட்டுகிட்டு வரும் பயணிகளிடம், “வாயா என் கன்னு, நீ நேரா போய் சோத்துக்கை பக்கம் இருக்கிற சீட்டுல குந்திக்கோ” அப்படியே ஜீட் பெல்ட்டையும் நல்லா இஸ்து கட்டிக்கோ, அப்பால வழிக்கி விழுந்துட்டேன்னு என்னாண்ட சொல்லக்கூடாது. அப்புறம் இது வரைக்கும் உலக அழிகியாக எந்த தமிழ் பெண்ணையும் தேந்தெடுக்காத அரசியலை பற்றியும் ஒரு பதிவெழுதுங்களேன். ஜாலியா இருக்கும்

      • தமிழ்குயின்,

        நர்சிங் அல்லது செவிலியர் வேலைக்கு இத்தகைய அழகு உடல்மொழி தேவையில்லயாமல் எல்லாரும் இருக்கிறார்கள். நோயாளியைக் கவனித்துக் கொள்வதற்கு இந்த அலங்காரங்கள் தேவையில்லை எனும் போது விமானப்பணிப்பெண்ணுக்கு மட்டும் ஏன்? இது அப்பட்டமான ஆணாதிக்க வெறிக்கு தீனிபோடுவது இல்லாமல் வேறென்ன?

      • மொழியை கேலி செய்யும் உங்கள் போக்கு ஏதோ தமிழில் மட்டும் இவ்வகை கொச்சையாக பேசுவது உள்ளது போல் உள்ளது. ஏன் தாங்கள் மேன்யாக கருதும் ஆங்கிலத்தில் இல்லையா? இதைவிட கேவலமான பேச்சு மொழி ஆங்கிலத்திலும் இருக்கிறது. அதே விமானத்தில் பற. அப்போது தெரியும் மேட்டுக் குடி பயன்படுத்தும் பேச்சு அதன் வக்கிரம். ஆனால் ஒன்று எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்களை பெரும்பான்மையில் அணுகும் கண்கள் ஒன்றே.

      • //உலக அழகியாக எந்த தமிழ் பெண்ணையும் தேந்தெடுக்காத அரசியலை பற்றியும் ஒரு பதிவெழுதுங்களேன். ஜாலியா இருக்கும்//

        வக்கிரம் தவிர வேறு என்ன சொல்ல

    • பஞ்சாப்ரவி,

      எல்லா முதலாளித்துவ நிறுவனங்களும்ம் பெண்ணை போகப்பொருளாக பயன்படுத்தும் நோக்கில்தான் இந்த அழகு, அலங்காரங்கள், உடல்மொழி, தகுதிகளை வைத்திருக்கின்றன. முக்கியமாக குறிப்பிட்ட வேலையின் பயன்பாட்டு மதிப்பை வைத்து தகுதிகளை வரையறுப்பதில்லை. விமான பயணிகளுக்கு உணவையும், குளிர்பானங்களையும் கொடுப்பதற்கு நெட்டையாக இருந்தால் என்ன, குட்டையாக இருந்தால் என்ன, கருப்பாக இருந்தால் என்ன, சுமாராக ஆங்கிலம்பேசினால்தான் என்ன?

    • நண்பர்களே,

      தலித் பெண்களுக்கு விமானப்பணிப்பெண் வேலை என்பது தலித் ஜனாதிபதி, தலித் நீதிபதி, தலித் அமைச்சர் என்று மேல்நிலையாக்கம் அல்லது நிறுவனமயபடுத்தும் போக்குதான். அதற்குள் ஏன் வேலை கிடைக்கவில்லை என்பதை விட உண்மையில் தலித் மக்களுக்கு விடுதலை என்பது எப்படிக் கிடைக்கும் என்று விவாதம் சென்றால் பயனுள்ளதாக இருக்கும்.

      • அப்பா உருப்படியான எதாவது வேலை இருந்த பாருங்க. airhostess வேலைய  தடை செய்யணும். இல்ல plane la travel பண்ணற  ஆம்பளைங்க அவங்க புத்திய மாத்தனும். அவனுங்க பாக்கறதுக்கு குளிர்ச்சியா இருந்தா எந்த பொண்ணுங்களையும் அவங்க எடுத்துக்குவாங்க. இதல்லாம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசறவங்கள பாத்து வர ஏக்கத்தின் விளைவு. pilot  ஆக்க ட்ரை பண்ணின பாராட்டலாம் . எதுக்கும் உதவாத முயற்சி 

  2. /இந்த நான்கு ஆண்டுகளில் ஒரு தலித் பெண் கூட விமானப் பணிப்பெண் வேலைக்கு தேர்வு செய்யப்படவில்லை. இவ்வளவிற்கும் அந்தப் பயிற்சிக் கல்லூரி 60% மாணவிகளுக்கு வேலை வாங்கித்தர வேண்டுமென்பது அரசு செய்துள்ள உடன்பாடாம்./
    அதிர்ச்சியளிக்கிறது!

  3. “An aviation industry representative said girls with a pleasing personality with orientation for customer service and linguistic ability could easily get through the selection process. We dont look for drop-dead gorgeous girls with extremely fair complexion and sharp features. There are many air hostesses with dusky complexion . On the whole, the aspirants should have a pleasing personality with good communication skills and carry themselves with confidence, he said. ”
    http://mobilepaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=7&sectid=edid=&edlabel=TOICH&mydateHid=05-02-2010&pubname=Times+of+India+-+Chennai&edname=&articleid=Ar00700&publabel=TOI

    கருப்பு நிறம் அல்ல காரணம் என்கிறார்களே.வினவு அதை மறைத்துவிட்டு எழுதுவது ஏன்.விமானப் பணிபெண்கள் எல்லோரும் ஐஸ்வர்யா ராய் போல் இருப்பதில்லை.இந்தியன் ஏர்லைன்ஸ் உட்பட அனைத்து விமானபயண நிறுவனங்களிலும் கருப்பு நிறமுடைய பெண்கள் விமானப் பணிபெண்களாக இருக்கிறார்கள். ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும், ஹிந்தியிலும் பேசத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் தன்னம்பிக்கையுடன் பழக தெரிந்திருக்க வேண்டும். இவர்களுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.அதற்காக செய்தியை அரைகுரையாக வெளியிட்டு வினவு நீட்டி முழக்க வேண்டாம். அனைத்து விமானப் பணிப்பெண்களும் வெள்ளைத் தோல் அல்லது சிவப்புத் தோல் கொண்டவர்கள் அல்லர். இதுதான் உண்மை.

    • air host

      கட்டுரையின் இறுதியிலேயே விமான நிறுவனப் பிரதிநிதிகள் கலர் காரணமில்லை என்று சொன்னதை எழுதியிருக்கிறோம். யதார்த்தத்தில் விமானப் பணிப்பெண்களில் கருப்பு நிறம் கொண்டவர்கள்தான் பெரும்பாலானோர் என்று சொல்ல முடியாதே? இந்தியன் ஏர்லைன்ஸ் அரசு நிறுவனம் என்பதால் அங்கு வேண்டுமானால் விதிவிலக்காய் சிலர் இருக்கலாம். மேலும் நடுத்தரவயதைக்கடந்த பெண்கள் வேலையை விட்டு நீக்கப்படுவது தனியார் விமான நிறுவனங்களில் விதிமுறை. இந்தியன் ஏர்லைன்சில் மட்டும்தான் அதுவும் ஒரு நீதிமன்றத் தீர்ப்புக்குப்பிறகு வயது பிரச்சினையில்லை என்று ஆக்கியிருக்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் முக்கியமாக தோற்றத்தையே விதிமுறையாக வைத்திதருக்கின்றன.

      விருந்தோம்பல் எனும் பண்பு யதார்த்தத்தில் கிராமத்து மக்களிடம்தான் அதிகம். நகரத்து நடுத்தவர்க்கமோ அண்டை வீட்டில் யார் இருக்கிறார்க் என்பதைக் கூட கவலைப்படாது. எனில் விருந்தோம்பல் பணியை சமூக பண்பாக கொண்டிருக்கும் கிராமத்து பெண்களை விமான நிறுவனங்கள் ஏன் எடுப்பதில்லை? அவர்களுக்கு தேவை விருந்தோம்பவது போன்ற நடிப்புத்தான். அந்த செயற்கையான நடிப்பையே உடல்மொழி என்றெல்லாம் சிலாகிக்கிறார்கள்.

  4. இட ஒதுக்கீடு என்றால் தகுதி குறைந்து விடும் என்று கூப்பாடு போடும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் இத்தகைய அழகு விதிகளை வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் என்ன வேறுபாடு? ”

    பல விமானசேவை நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள்,அதில் அரசு நிறுவனங்களும் உண்டு.ஏர் இந்தியா/இந்தியன் ஏர்லைன்ஸ் அரசு நிறுவனம். இட ஒதுக்கீட்டிற்கும் இதற்கும் என்ன தொடர்பு. பிராமணப் பெண் என்பதற்காகவே வேலை தரமாட்டார்கள்.

  5. தோழர் விமான பணிப்பெண்கள் குறித்த கட்டுரை ஒன்றிற்காக பிரபல விமானப்பணிப்பெண்கள் பயிற்சி நிறுவனத்தில் பேசிய போது , அரசு இது மாதிரியான ஒரு திட்டத்திற்க்காக பல நிறுவனங்களையும் அழைத்து ஆலோசனையில் ஈடுபடுத்தியுள்ளனர். அதில் பெரும்பாலான நிறுவனங்கள் இது தவறான யோசனை , என்னதான் பயிற்றுவித்தாலும் நிறைய ஆங்கில அறிவும் , மேற்கத்திய உடல்மொழியும் , பர்சனாலிட்டி என்று சொல்லப்படுகிற உடல் முகம் நடை உடை பாவனையிலும் தலித் மக்களை மேம்படுத்தவே முடியாது , அப்படியே மேம்படுத்தினாலும் இந்தத்துறையில் போட்டி அதிகமென்பதால் ஆயிரத்தில் இரண்டு பேருக்கு வேண்டுமானால் வேலைவாய்ப்பு இருக்கலாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதிலும் மல்லையாவின் விமானத்தில் ஏற வேண்டுமானால் உங்களுக்கு அறிவு திறமைக்கு மேல் நிறைய உதிரி திறமைகள் வேண்டுமாம். ஒவ்வொரு விமான போக்குவரத்து நிறுவனமும் படிப்பு அழகு பர்சனாலிட்டி போன்ற பல இத்தியாதிகளை முன்வைத்தே ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதில் நம் குப்பம்மாவும் பாண்டிஸ்வரியும் ஒருநாளும் தேர்வு செய்யபடமாட்டார்கள் என்பது தெரிந்தும் ஏதோ ஒரு டுபாக்கூர் நிறுவனத்திற்கு கூடுதல் கமிஷன் கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.

  6. ஒரு நண்பர் மின்னஞ்சலில் அனுப்பிய கடிதம்….

    /////Dear Vinavu,

    I am a regular reader of your website. Many times i wanted to share my thoughts / view with you , however since i feel i lack knowledge on social and political issued i just kept quiet.

    I am taking this opportunity to appreciate your tireless hard work and continuous fight against social injustice .

    Following are my views which i want to share

    Air hostess / Flight stewards/ Flight Pursers are not there to serve liquors / food to passengers. Their main priority is to maintain safety of the aircraft and its passengers. Say for eg , evacuate passengers during an emergency situation, controlling the passengers if they create any threat to others/ aircraft etc. This is their priority and for this only they are there for.

    Serving food / liquor and pleasing personality are nothing but an additional qualities. I do agree that these manners will be taught during their training how ever their entire training comprises of mainly Air safety. They have refreshers once in a year and will have to undergo tests to fly each year.

    Also alcohol will be served for international flights , no matter it is flying in indian skies . Only for domestic flights is not in practice.

    Just one more information , no matter the passenger load of a particular flight , Number of cabin crew/ air hostess are fixed as per the aircraft seating capacity . i.e 4 cabin crew are required for a 150 seater aircraft no matter the passenger load is 5 or 150./////

    மற்றவற்றை விட விமானபாதுகாப்புதான் முக்கியமென்றால் அதற்கு அழகான பெண்களை தேர்வு செய்யவேண்டிய அவசியம்தான் என்ன?

  7. Caste is not the issue here.Nor color of the skin is the deciding factor.They have some expectations and they choose whom they consider suitable.For every job there is more than one applicant and this job is no exception.Not all girls and boys who get trained get a job just like that.Many get jobs at ticket counters and ground operations. Perhaps great promises were made and the girls felt let down as those turned out to be false.The money had been spent by the govt. and not by them.They can try for other jobs or get training for other jobs. For you appearance may not be important.But mere good looks wont be sufficient. They dont need dumb beautiful dolls.There are flight stewarts (boys) and hence this is not a job reserved 100% for women.
    There are women pilots and women captains. In this industry women are at all levels doing all kinds of jobs. If I work as a customer service representative what matters is how i speak and how i respond and whether i can handle customers who have complaints.For that one should know how to speak in English with the right accent and conduct oneself with confidence and politeness. The same is expected of Air-Hostesses also.

    ‘விருந்தோம்பல் எனும் பண்பு யதார்த்தத்தில் கிராமத்து மக்களிடம்தான் அதிகம். நகரத்து நடுத்தவர்க்கமோ அண்டை வீட்டில் யார் இருக்கிறார்க் என்பதைக் கூட கவலைப்படாது. எனில் விருந்தோம்பல் பணியை சமூக பண்பாக கொண்டிருக்கும் கிராமத்து பெண்களை விமான நிறுவனங்கள் ஏன் எடுப்பதில்லை? ‘ If girls from rural areas are found suitable they too would be considered.What is rural and what is urban. These days there are beauty parlors in small towns and make up for occassions is a good business there.There are classes for spoken english in many towns.Many girls come to cities for studies and they adjust themselves to the cities. They pick up some skills fast if there is a need.You view the world through your ideological lens. That is why you are unable to understand the reality.

  8. “விமானப்பணிப்பெண்கள்” (???) : அதான் ஏன்?

    எண்ணே ஒரு ஆணாதிக்கம்? என்னே ஒரு பெண்ணடிமைத்தனம்?

    எதற்காக “விமானப்பணிஆண்கள்” என இருக்கக்கூடாது?

    சரக்கை ஆண்கள் ‘குனிந்து’ ஊத்திக்கொடுத்தால் குடிகாரப்பயலுகளுக்கு கிக் வராதாமா? பெண்கள், ‘தாங்கள் விளக்குமாராய் இருக்க விரும்பவில்லை’ எனும்போது அதை எதிர்த்து உங்கள் பெண்விடுதலைப்போக்கை பறைசாற்றுவதை விட்டுவிட்டு, ‘அதற்கு பட்டுக்குஞ்சம் எதற்காக அரசால் கொடுக்கப்படவில்லை’ என்று அங்கலாய்ப்பது வினவின் பக்கா ஆணாதிக்கத்தையே வெளிக்கொணருகிறது.

    பெண்கள் பைலட்டுகளாக ஆக ஊக்கப்படுத்தும் வகையில் அரசு நிறைய பெண்களுக்கான விமானப்பைலட்டுகள் பயிற்சிப்பள்ளியை ஆரம்பிக்க அறைகூவல் விடுவோம். இப்போது இந்தியன் ஏர்லைன்ஸ் ஆண் பைலட்டுகள் தண்ணி அடித்துவிட்டு போதையில் விமானம் ஓட்டுவதும், ஹைதராபாத்தில் புறப்பட்ட விமானம் மும்பையில் இறங்காமல் கராச்சிவரை சென்று விரட்டியடிக்கப்பட்டு திரும்பி மும்பை வருவதும்.. ரொம்ப கேவலமாக இருக்கிறது….

    • //“விமானப்பணிஆண்கள்” என இருக்கக்கூடாது?//
      ஆண் பணியாளர்கள் இருக்கிறார்கள் நாலில் ஒன்று ஆண்

  9. “விமானப்பணிப்பெண்கள்” (???) : அதான் ஏன்?

    எண்ணே ஒரு ஆணாதிக்கம்? என்னே ஒரு பெண்ணடிமைத்தனம்?

    எதற்காக “விமானப்பணிஆண்கள்” என இருக்கக்கூடாது?

    சரக்கை, ஆண்கள் ‘குனிந்து’ ஊத்திக்கொடுத்தால், வாங்கிக்குடிக்கும் குடிகாரப்பயலுகளுக்கு கிக் வராதாமா? ‘பெண்கள், தாங்கள் விளக்குமாராய் இருத்தப்படுவதை’ எதிர்த்து உங்கள் பெண்விடுதலைப்போக்கை பறைசாற்றுவதை விட்டுவிட்டு, ‘அதற்கு பட்டுக்குஞ்சம் எதற்காக அரசால் கொடுக்கப்படவில்லை’ என்று பதிவுபோட்டு, அதற்கொரு வெட்டி விவாதம் மூலம் அங்கலாய்ப்பது வினவின் & மற்றவர்களின் பக்கா ஆணாதிக்கத்தையே வெளிக்கொணருகிறது.

    பெண்கள் பைலட்டுகளாக ஆக ஊக்கப்படுத்தும் வகையில் அரசு நிறைய பெண்களுக்கான விமானப்பைலட்டுகள் பயிற்சிப்பள்ளியை ஆரம்பிக்க அறைகூவல் விடுவோம். அதுதான் நிஜமான பெண்விடுதலை. எவ்வளவு காலம்தான் அவர்களை பணிப்பெண்களாய் மட்டுமே வைத்திருப்பதாம்?

    இப்போது இந்தியன் ஏர்லைன்ஸ் ஆண் பைலட்டுகள் தண்ணி அடித்துவிட்டு தாமதமாய் வருவதும், பணிப்போருப்பை சுமக்க முடியாத போதையில் இருப்பதும், போதையில் விமானம் ஓட்டுவதும், ஹைதராபாத்தில் புறப்பட்ட விமானம் மும்பையில் இறங்காமல் கராச்சிவரை சென்று பாகிஸ்தான் ராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்டு திரும்பி மும்பை வருவதும்.. ரொம்ப அவமானமாகவும் கேவலமாகவும் இருக்கிறது…. ஏற் இந்தியாவின் இன்றைய சர்வீஸ் பற்றி கதைகதையாய் சொல்லலாம்…. சொன்னால் மானம் நம் போகும்… உலகமே சிரிக்கிறது….

    • சரீயா சொன்னீங்க ஒத்து, அப்படியே இங்க பாருங்க http://www.sevenstarsandstripes.com/airline.asp?pagetoshow=content/airline/emirates/index&sl=
      ஒரு முசூலீமு மொதலாளி எப்படி ஒரு பொண்ண சரக்கு ஊத்திகொடுக்க வைக்கிறான் பாருங்க…. அவனுக்கு ஆம்பளைங்களே கிடைக்கலியா?
      அதுவும் புர்கா போட்டு மூஞ்ச மூடாம எத்தன மூசுலீமு விமான ”பணிப்பெண்கள்” எமிரேட்ஸ் கம்பேனியில சரக்கு ஊத்தராங்களோ.. அல்லாவுக்கே அடுக்காது.. நீங்களும் பீஜேவுமா போய் எமிரேட்ஸ் ஒனர் ஷேக்அகமத கொஞ்சம் மிரட்டிட்டு வாங்க
      யா அல்லா அல்லா டொன்ட டொன்ட டொன்ட டொன்ய்

  10. இந்த அயோக்கியதனம் விமானப் பணிப்பெண்களிடம் மட்டுமில்லை, மருத்துவமனை வரவேற்ப்பரையில் இருந்து டுபாக்கூர் நிறுவனங்கள் வரை இருக்கிறது. பொம்பளைய வச்சு viயாவாரம் பார்க்குற பார்பன, ஆணாதிக்க கண்ணோட்டமே இது.

    • உங்களுக்கு எதெற்கு எடுத்தாலும் பார்ப்பன ஆதிக்கம் என்று சொல்வதையே வழக்கமா. குழாயில் தண்ணி வரலன்னா கூட  பார்ப்பன ஆதிக்கம் நு சொல்வீங்களா 

  11. Dear Vinavu, Previously ,i am a frequent air-traveller in South east asian region and the main criteria is BEAUTY-SLIM-FAIRNESS-COMMUNICATION-HEIGHT etc. It is the need of the airlines industry to stay competitive in the field . Let them employ the beauty queens to cater their travel customers.we can’t demand RESERVATION QUOTA for getting an employment in a night club or a hang out bar…. it is capitalism brother…they will not employ people who are dark -short- fat people which will make them LESS competetive .but it is entirely oppsite in BPO sector where a customer cannot see the face and can only hear the voice of the called so their they will make the advertisement as “EQUAL OPPURTUNITY EMPLOYER” OK thats ok for us. but the point i am trying to make is ————— let them have the right to choose the employees of their own choice..but these gentlemen should not come and BEG THE GOVERNMENT FOR SUBSIDIES AND OTHER HELP. LET THEM STAND ON THEIR OWN….let them choose cindrellas to work ..no matter … but they should recogonise the tradu union rights….

  12. Dear Vinavu, I request you to carefully select the essays i feel some times it is one sided and some cult followers should not be there for whatever come they will clap. essays should be scientific and well discussed with the people in the field… take my comments positively …

  13. தாழ்வுக்கும் இழிவுக்கும் உரியதாகக் கறுப்பு நிறம் கருதப்பட்டதன் சமூக வரலாற்றுக் காரணிகள் யாவை?

    இக்கேள்விக்கான விடையை சமூக அமைப்பில் காண இயலாது. மாறாக அதிகாரம் சார்ந்த அரசியல் அமைப்புக்குள்ளே தேடவேண்டும். அதுவும் தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னரே தேட வேண்டும்.

    கி.பி. 1310 முதல் 1323 வரை தமிழ்நாடு இசுலாமியர் படையெடுப்பால் அலைக்கழிந்தது. மீண்டும் 1383ல் விஜய நகரப் பேரரசின் தளபதிகளின் படையெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விஜய நகரப் பேரரசு இசுலாமியருக்கு எதிராக வைதிக நெறியை உயர்ந்த இலட்சியமாகக் கொண்டு தோன்றிய அரசமரபாகும். ஆட்சியதிகாரம் விஜய நகரப் பேரரசின் தள்பதிகளின் கைக்கு மாறியவுடன் தமிழ்நாடு ஒரு பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொண்டது. மேலும்…

    http://socratesjr2007.blogspot.com/2010/02/blog-post_08.html

      • மணி, ஒற்றை வரியில் புரியவில்லை என்றால்…. இங்குள்ளதை மட்டும் படித்தால் கண்டிப்பாக புரியாது. அந்த இணைப்பை சொடுக்கி படியுங்கள். படித்து விட்டு புரியவில்லை என்றால், குறிப்பாக கேளுங்கள்.

  14. என்னுடன் படித்த சக மாணவி இதில் சேர்ந்து படித்து தன்னுடைய முதுகலை படிப்பில் கவனத்தை சிதறவிட்டாள்.

  15. விமானத்தில் அந்த பெண்கள் படும் பாடு பெரும் பாடு. இதை விட கூலி வேலை எவ்வளவோ மேல்.செய்வது அடுப்படி வேலை ,அதை மறைக்க அற்ப மேக்கப் வேறு. விளக்கு மாற்றுக்கு குஞ்சம் போல.

  16. பெண்களின் புற அழகுக்கு மட்டுமே வேலை என்ற நிலை கவலையானது என்றாலும் இன்று அதுவே சில துறைகளில் யதார்த்தமாகிவிட்டது. பூசல்மாவுக்கும், உதட்டுச்சாயத்துக்கும், சிலிக்கான் மார்புகளுக்கும் மத்தியில் பெண்களின் திறமைக்கும் வேலை கிடைக்கிறது என்று யாராவது சொல்லுங்களேன்?? பெண்களின் self-fulfilling prophecy கல்வி, தன்னம்பிக்கை, உறுதியில் இருக்க வேண்டும் என்றும் சொல்லுங்கள். இதை Dr.Rudhran தான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். 

  17. உங்களில் எத்தனை பேர் பொண்ணுங்களை குள்ளமாகவும், கருப்புமாதான் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் கல்யாணம் கட்ட ரெடி?

  18. ஐயா மின்னல் அவர்களே; குள்ளமாகவும் கருப்பாகவும் உள்ள பெண்களுக்கு கல்யாணமே நடப்பதில்லையா ?????????/

    • அதுங்களை கட்டுறவன் ..அதுகளிலும் பார்க்க குறைபாடு உள்ளவனாக தான் இருக்கிறார்கள்.. 🙂

      • பார்ப்பதற்கு குள்ளமாகவும் கருப்பாகவும் அல்லது குறைபாடு இருப்பின் அது இது என்று ஏகமாக கூப்பிடுவீர்கள் போலிருக்கே !!!!

  19. விமான பனி பெண் வேலைங்கறது கவர்மன்ட் ஆஸ்பத்திரி ஆயா வேல மாதிரி தானே?? தலித் பொண்ணுங்களுக்கு எடம் குடுத்தா என்ன கொறஞ்சா போயடுவணுவ ?

    • அதாவது தலித் பெண்கள் ஆயா வேலை செய்யவே தகுதியானவர்கள்?. தலித் பெண்களை இதை விட வேறு யாராலும் கேவலபடுத்த முடியாது.

  20. விமான பணிப்பெண் பணி என்பது மிடுக்கான உடுப்பில்,தினம் ஒரு அயல்தேசத்திற்கு பறக்கும் வாய்ப்பு(?) மற்றும் ஒப்பிட்டளவில் அதிக ஊதியம் இவற்றால் மேல் நடுத்தர வகுப்பு பெண்களின் கனவாக உள்ளது. சில மலிவு விமான சேவைகளில் பெண்கள் பயண நேரம் முழுவதும் தள்ளு வண்டிகளில் வைத்து மது மற்றும் தின்பண்டங்களை விற்று தீர்க்க பணிக்கபட்டிருப்பதை பார்க்க நேர்ந்தால் இக்கனவு கலையக்கூடும்.மருத்துவர்,செவிலியர்,ஆசிரியர் போன்ற பணிகளில் சமூகப் பயன் நிரம்பிய பெருமிதத்தை விரும்புபவர்களின் கனவாக இதனை கருத இயலாது. (விபத்து, கடத்தல் போன்ற நெருக்கடியான காலத்தில் பல நேரங்களில் மெச்சத்தகுந்த வகையில் அவர்கள் பணி இருந்திருக்கிறது என்பதும் உண்மையே.)
    அழகு பற்றிய நுகர்வு கலாச்சார விதிமுறைகள் நம் பார்வையிலிருந்து நிச்சயமாக வேறுபட்டது. பார்பனரல்லாதோர் ஏன் அர்ச்சகராக முடியவில்லை என கேட்பதற்கும் இதற்கும் வித்தியாசம் இருப்பதாக கருதுகிறேன்.

  21. இந்த கட்டுரை ஜாதி உணர்வை தூண்டுகிறதே தவிர கட்டுரையில் உண்மைகள் இல்லை.
    1 ஆப்பிரிக்க விமானகளில் இவர்களை விட கருப்பாகவும் அழகில் குறைந்தவர்களும் விமான பனி பெண்களாக உள்ளனர். பனி பெண்களுக்கு தேவை தன்னம்பிக்கை, சரளமான ஆங்கிலம், வெளிப்புற சுத்தம், சமயோசித புத்தி. 2 ) தமிழக அரசுக்கு தலித்துகளை ஏமாற்றவும் தனியார் நிறுவனத்திடமிருந்து கமிசன் வாங்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. 3 ) விமான பணிப்பெண் வேலை வெறும் சரக்கு ஊற்றிகொடுக்கும் வேலை என இழிவாக பேசுவது இந்த தளத்திற்கு அழகல்ல. அவர்களும் உழைப்பாளர்களே. 4 இந்த பிரச்சனைக்கும் பார்பானுக்கும் என்ன சம்பந்தம்?. வேணுமின்னா இந்த வேலைகளுக்கும் இட ஒதுக்கீடு கேட்டு பாருங்களேன். 5 ) சுத்த ஜாதி வெறி பிடித்த தளம் இது.

    • ZAK அவர்களே இது ஜாதி வெறி பிடித்த தளம் இல்லை, ஆதிக்க ஜாதியின் உண்மையை வெளிக்காட்டும் தளம், தமிழக அரசாங்கம் தலித்துகளை ஏமாற்ற இப்படி செய்கிறது என்று சொல்கிறீர்கள், அது குறித்து எந்த பார்ப்பனன் தலித்துகளுக்காக குரல் கொடுத்தான்,

      ஆம் இது அனைத்து உழைக்கும் ஜாதி மக்களுக்கான தளம், இதில் பார்பனர் மட்டும் அல்லாத அனைத்து ஜாதி வெறியர்களுக்கான தளம், அதிலும் உயர்ந்த ஜாதி மதம் பிடித்த பார்ப்பனியத்தின் எதிர்ப்பு தளம்.

  22. மிகவும் கண்டிக்கத்தக்கது.

    ஆனால் தலித் பெண்கள் மட்டுமே கருப்பு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்ட்ட பெண்களிலும் கருப்பானவர்களும், மிகவும் மாநிறம் உள்ளவர்களும் இருக்கிறார்கள்.

    ஆனால் இந்த கட்டுரை தலித் பெண்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஆனால் கருத்துரையில் ” இது அனைத்து உழைக்கும் ஜாதி மக்களுக்கான தளம்” என்ற பொய் ஏன்.

    தலித்துக்கான தளம் என்றே சொல்ல வேண்டியதுதானே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க