முகப்புமக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!
Array

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!

-

– அனைவரும் வருக –

தொடர்புக்கு – (91) 97100 82506

அழைப்பிதழின் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

மின்னிதழ் அச்சுத்தரமுள்ளது – கோப்பின் அளவு 1MB, கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

அவசியம் அழைப்பிதழை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். நன்றி

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. மாவோயிஸ்டுகள் சார்பில் யாரும் பிரதினிதிகள் பேசவில்லையா ? அவர்கள் தானே இந்த ’மக்கள் மீதான போரை’ எதிர்ப்பவர்கள் ? தங்களின் பங்களிப்பு மற்றும் யுத்த தந்திரங்கள் மற்றும் வழிமுறைகள் பற்றி எடுத்துறைக்க வாய்பளித்திருக்கலாமே.
    ULFA, Lasker-Ei-Toiba போன்ற அமைப்புகளும் கூட தம் பகுதிகளில் இதே போன்ற அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுகின்றனர். அவர்களை அழைத்து பேச சொல்லவில்லையா ?

    • தரகு முதலாளிகளையும் பன்னாட்டு முதலாளிகளையும் திட்டினால் தொழிலாளிக்கா கோபம் வரும், முதலாளிக்கு தானே கோபம் வரும் ?
      அதான் அதியமானுக்கு வந்துருச்சு.

      முதலாளிகள் என்ன காந்தியவாதிகளா ? உலகில் பல கோடி உயிர்கள் பலியாவதற்கு முதற்காரணமே முதலாளிகள் தான். உலகின் மிகக்கொடிய‌ பயங்கரவாதிகள் முதலாளிகள் தான். இதை அதியமான் என்றைக்குமே புரிந்து கொள்ள மாட்டார் என்று தான் நினைக்கிறேன்.

    • ////மாவோயிஸ்டுகள் சார்பில் யாரும் பிரதினிதிகள் பேசவில்லையா ?///

      அட அறிவாளி வரவரராவை பற்றி கூட உனக்கு தெரியவில்லையா. அப்புறம் எதுக்கு மாவோயிஸ்ட் வன்முறைன்னெல்லாம் கத்துற.

  2. அதியமான் பொதுவாக எல்லா பதிவுகளிலுமே உங்களின் பதிகள் பொறுப்பற்ற தனத்துடனுடம் திமிராகவும் இருக்கிறது. தயவு செய்து இதை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும். இழிவு செய்யாதீர்கள். லஷ்சர் ஈ தொய்பாவும், மாவோயிஸ்டுகளும் ஒன்றா? ஏன் இப்படி அரசுக்கு ஆதரவாக உங்களின் எல்லாக் கருத்துக்களும் இருக்கின்றன. தவறு

  3. அருள்,

    ///அதியமான் பொதுவாக எல்லா பதிவுகளிலுமே உங்களின் பதிகள் பொறுப்பற்ற தனத்துடனுடம் திமிராகவும் இருக்கிறது.///

    இப்படி ஆதாரமில்லாமல் பேசுவதுதான் பொறுப்பற்ற தனம் என்று நான் கருதுகிறேன்.
    முடிந்தால் நிருபியுங்களேன்.

    ஆம், எம்மை பொருத்தவரை மாவோயிஸ்டுகளும், லக்செரி தொய்பா போன்ற அமைப்புகளும் ஒன்றுதான். நோக்கங்கள், கொள்கைகளில் தான் வேறுபாடு. செயல்முறைகள் மற்றும் வழிமுறைகளில் பெரிய வித்தியாசம் இல்லை. விளைவுகளிலும் தான். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய அரசு மீது இவர்கள் அனைவரும் ‘போர்’ தொடுத்துள்ளனர். அப்பாவிகள் பலரையும் கொல்ல தயங்குவதில்லை. பொதுச்சொத்துக்களை குண்டு வைத்து நாசம் செய்கின்றனர். சகட்டு மேனிக்கு எங்கும், யாரையும் தாக்கி, கொல்ல தயங்குவதில்லை.
    நேற்று கூட ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் தகர்த்துள்ளனர். இதனால் யாருக்கு துன்பம் ?

    நீங்கதான் இவர்களுக்குள் இருக்கும் ‘வித்தியாசங்களை’ பட்டியலிடுங்களேன் பார்க்கலாம். Means and ends என்று சொல்வார்கள். வழிமுறைகள், நோக்கங்களை விட முக்கியமானவை. இல்லாவிட்டால், இலக்கை அடையாமல் ஃபாசிசமாக மாறும் என்பதே அடிப்படை.

    • எம்மைப் பொருத்தவரைன்னா நீங்க எத்தன பேரு? உங்கள் ‘மாபெரும்’ கருத்துக்களையெல்லாம் நீங்கள் ஏன் மேடை போட்டு பேசக் கூடாது? அதே எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில், ’மக்கள் மீதான போரை’ ஆதரித்து நீங்கள் ஒரு பொதுக் கூட்டம் நடத்தினால், நாங்கள் அலைஅலையாக அணிதிரண்டு உங்களுக்கு ஆதரவளிப்போம்.

      • Does mass support means, any violation of basic rights can be justified ? Hitler had mass support So ? try to understand the meaning for majoritarianism. Anyway, you people have no mass support, esp for your blind support for Maoists ways or war.

        The govt’s Green Hunt plan is against Maoists increasing violence. It is not against people as you try to portray here. In fact the poor adhivasis hate and fear Maoisits as much as they hate and fear govt forces. They are caught in between, almost similar to the plight of inncent vaanni Tamils who were trapped in the final moments of Eelam War iV. Maoists can be compared with LTTE.

        • @@@Anyway, you people have no mass support, esp for your blind support for Maoists ways or war.@@@

          இவ்வளவு காலமா அய்யா நம்மாளுகள பத்தி ஒன்னுமே தெரியாமத்தேன் திட்டிகிட்டிருக்காறா? , இத எங்க போயி சொல்லி அழ????

  4. ’இலக்கை அடையாமல் ஃபாசிசமாக மாறும் என்பதே அடிப்படை.’

    அதன் இன்னொரு பெயர் பட்டாளி வர்க்க சர்வாதிகாரம்.ம.க.இ.க, மாவோயிஸ்ட்கள் இருவரும் ஸ்டாலினிய,மாவோயிசத்தை தீர்வாக சொல்வார்கள்.அதிலும் அரசு இருக்கும், அரசு வன்முறை இன்னும் அதிகமாக இருக்கும்.குலாக் கள் இந்தியாவில் வேண்டும் என்றால் இவர்களை ஆதரிக்கலாம்.அரசை விமர்சிக்கும் வேளையில் நக்சலைகளையும் விமர்சித்து நந்தினி சுந்தர்,ராம் குகா எழுதியதை புதிய ஜனநாயகம் வெளியிடாது.காந்தியத்தை இகழ்வார்கள், காந்தியவாதி அரசுக்கு எதிராகச் சொன்னால் அதை மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள்.அருந்ததி ராய் போல்போட்டையும், ஸ்டாலினையும் ஏற்கவில்லை, அந்த கம்யுனிசத்தை விமர்சிக்கிறார்.
    அதற்கு பதில் சொல்லாமல் அவர் எழுதியதை வைத்து அரசியல் செய்வார்கள்.அருள் எழிலனுக்கு இதெல்லாம் தெரிந்திராவிட்டால் அவர் பத்திரிகையாளரே அல்ல.

    • பெயரிலி உங்கள் பெயரை போட்டுவிட்டே எழுதலாமே? போல்பாட்டையும், ஸ்டாலினையும் அருந்த்திராய் ஏற்கவில்லை என்பதெல்லாம் இரகசியமான ஒன்றல்ல. அதே போல போல்பாட், ஸ்டாலின் பற்றிய அவதூறுகளுக்கான பதில்களும் பலமுறை புதிய ஜனநாயகத்தில் வந்திருக்கிறது. இங்கே அருந்த்தி ராய் மறுகாலனியாதிக்கத்தையும், ஆதிவாசி மக்கள் மீதான போரையும் எதிர்க்கிறார். அதற்கு அவர் மாவோயிஸ்ட்டுகளையோ, கம்யூனிஸ்ட்டுகளையோ ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே போல மாவோயிஸ்ட்டுகள் மீதான ம.க.இ.க மற்றும் புதிய ஜனநாயகத்தின் விமர்சனங்களும் அரசியல் உலகில் பலரும் அறிந்த்தே.

      • ///அதே போல மாவோயிஸ்ட்டுகள் மீதான ம.க.இ.க மற்றும் புதிய ஜனநாயகத்தின் விமர்சனங்களும் அரசியல் உலகில் பலரும் அறிந்த்தே./// இதுவரை வினவு தளத்தில் ஒரு பதிவும் வரவில்லேய்எ ?Why don’t Vinavu republish or write a fresh post about the actions and atrocities of Maoisits based on facts ?

        • அதியமான், மாவோயிஸ்ட்டுகள் மீதான ம.க.இ.க விமரிசனம் எந்தப் பாதையில் மக்களை அணிதிரட்டி புரட்சி செய்ய முடியும் என்ற தத்துவ அரசியல் நடைமுறை ரீதியானது. கம்யூனிசத்தையே ஏற்காதவர்களுக்கு அந்த விமரிசனம் எவ்வளவு புரியும் என்பது தெரியவில்லை. அதையும் கணக்கில் கொண்டு ஒரு கட்டுரையை வினவில் வெளியிட முயல்கிறோம். அப்பாவி மக்கள் மீது தாக்குதல், பொதுச்சொத்துக்களின் சேதம் என்பதாக மட்டும் நீங்கள் மாவோயிஸ்ட்டுகளை எதிர்ப்பதை நாங்கள் ஏற்கவில்லை. அவர்கள் அறிந்தே அப்பாவி மக்களைக் கொன்றதில்லை. அப்படி செய்திருக்கும் ஒரிரு தருணங்களுக்கும் அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். அடுத்து பொதுச்சொத்துக்களை சேதமாக்குவது இந்தியாவின் எல்லா அரசியல் கட்சிகளும் செய்பவைதான். சமீபத்தில் தெலுங்கானா பிரச்ச்சினைக்காக ஆதரிப்போரும், எதிர்ப்போரும் பேருந்துகளை தாக்கியதை கூறலாம். ஊடகங்களின் போராட்டச் செய்திகள் வரவேண்டுமென்ற நோக்கத்துடன் நடக்கும் இந்நிகழ்வுகளைக் கண்டிக்க வேண்டுமென்றால் அதற்கு எல்லோரையும்தான் கண்டிக்க வேண்டும். ஏதோ மாவோயிஸட்டுகள் மட்டும்தான் என்று அதை குறுக்குவது தவறு.

        • மக்களை கொல்லும் அதிகாரம் அரசாங்கத்துக்குத்தான் உண்டு, மக்கள்னா துப்பாக்கியால சுட்டா தோட்டாவ வாங்கிகிட்டு சாகனும், திருப்பி சுட்டா அது அராஜகம், மாவோயிஸம், ஸ்டாலினிசம், போல்பாட்டிசம் எச்சட்றா எச்சட்றா.

        • ///அவர்கள் அறிந்தே அப்பாவி மக்களைக் கொன்றதில்லை. அப்படி செய்திருக்கும் ஒரிரு தருணங்களுக்கும் அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். அடுத்து பொதுச்சொத்துக்களை சேதமாக்குவது இந்தியாவின் எல்லா அரசியல் கட்சிகளும் செய்பவைதான். //// I see. Great Logic. What about the hundreds of polcie men and CPM workers who were killed so far by Maosists ? Were those who were killed all ‘class enemies’ and unfit to live ? Maoists do not discriminate when kiling any policeman or para millitary jawan. and yet you try to justify Maosits actions here. Does planned bombing of railway stations, EB towers, Schools, Govt offices same as mob violence during political rallies and banths ? If you can justify Maosits violence, then everyone can justify their own actions and agenda. Lakser-ai-Toiba too are looked on as liberators of Kashmir from Indian oppression. Those who train and support Lasker too justify themselves like you do. ok.

        • ///மக்களை கொல்லும் அதிகாரம் அரசாங்கத்துக்குத்தான் உண்டு, மக்கள்னா துப்பாக்கியால சுட்டா தோட்டாவ வாங்கிகிட்டு சாகனும், திருப்பி சுட்டா அது அராஜகம், மாவோயிஸம், ஸ்டாலினிசம், போல்பாட்டிசம் எச்சட்றா எச்சட்றா.///
          கேள்விக்குறி, ஸ்டாலினிசம் அரசு பயங்கரவாதம் தான். அது மக்களை கோடிக்கணக்கில் கொன்றது.

          அவை அவதூறுகள் என்று வரலாறு சொலவதில்லை.

        • @@அவை அவதூறுகள் என்று வரலாறு சொலவதில்லை.@@ யாருடைய வரலாறு, வரலாறுக்கு யாரு அத்தாரிட்டி? கடலுக்கடியில குரங்கும் அணிலும் பாலம் கட்டியிருக்குன்னு ஒரு புஸ்தகத்துல எழுதியிருக்கறதக்கூட வரலாற்று ஆவணமா கோர்டுல சாட்சிக்கு எடுத்துகுற காலம் இது. இந்து கோயில் இடிச்சதா சேனா வரலாறு , பாலாறும் தேனாறும் ஓடுதனதா அக்பர் வரலாறு… எல்லா இடத்துலையும் ஜெயிச்சவனுக்கு ஒரு வரலாறு, தோத்தவனுக்கு ஒரு வரலாறு… துரோகிங்க வரலாறு தனி…. நடந்தது, நடக்கல, நடந்தது, நடக்கல …………….. நிறுத்தலாமே!! எது நடந்திச்சோ அத யாராலும் மாத்த முடியாது ஆனா நடக்கபோற ஒன்னு, அத மாத்த முடியும், நடந்த வரலாற்ற பத்தின வியாக்கியானத்துல நீங்க கொல்றது நடந்துகிட்டிருக்கற வரலாற்ற.. பிளாசிசமடாவும், ஜெயங்கொண்டமும்..காஷ்மீரும்,, மிசோராமும்,, ஒரிச்சாவும், ஜார்கண்டும், விதர்பாவும்.. ஆந்திராவும் இங்கல்லாம் ஸ்டாலினிச ஆட்சியில்ல சுடுறவன் கேஜிபி இல்ல சாகறவன் உக்ரேனியன் இல்ல..நீங்க மட்டும் ஏன் சோல்சனிட்சினாவே இருக்கீங்க?????

  5. ஐயா, அதியமான் அவர்களே, தாங்கள் ஏன் வகை தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டு பின்னர் ஏன் பிரச்சனையை திசை திருப்ப நினைக்கிறீர். அடுத்த வேலை சோற்றுக்கு வழி உண்டா, என்ற நிலை போய், அடுத்த நிமிடம் உயிரோடு இருப்போமா என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்காக ஒரு பொதுக்கூட்டம் என்றால், தங்கள் எதோ ஹிட்லரின் வாரிசாக எட்டப்பனின் எடுபுடியாக பன்னாட்டு கம்பனிக்கு ப்ரோக்கராக வலம் வருகிறிரே…..!!!!!!! ………… என்ன விடயம் என்று அடியேன் அறிந்துகொள்ளலமா..????????

  6. ////சோற்றுக்கு வழி உண்டா, என்ற நிலை போய், அடுத்த நிமிடம் உயிரோடு இருப்போமா என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்காக ஒரு பொதுக்கூட்டம் என்றால்///// ஒத்துக்கிறேன். ஆனால் ஒரு தரப்பை mattum தான் பேசும் கூட்டம் ? மேலும் மாவோயிச்டுகளின் கொடுரங்களால் நேர்ந்த விளைவை பற்றி பேசபட்டுமா ? அல்லது…

    • அதியமான் உங்களுக்கு கூச்சமே இல்லையா!  முதலாளித்துவத்தின் வக்கிரம் அப்பட்டமாக தெரியப்பட்ட பின்னரும்……………

      • கலை,

        வினவு குழுவில் ஒரு கலை உள்ளார். அவர் தான் நீர் என்று மிக தவறாக நினைத்துக்கொண்டு உமக்கு முன்பு சீரியசாக பதில் சொன்னது எம் தவறுதான்.
        முதலில் இந்தியாவில் இருப்பது முதலாளித்துவம் அல்ல. ஜனனாயகமும் அல்ல.
        அரைகுறைதான். (உங்க டையலாக் தான் : உலகில் இதுவரை எங்கும் முழு கம்யூனிசம் வரவில்லை. Etc). மாவோயிஸ்டுகளின் கொலைகளை நீங்க கண்மூடித்தனமாக நியாயப்படுத்தும் போது, பதிலுக்கு இப்படி எம்மை பற்றி பேசுவது ரொம்ப ஓவராக தெரியவில்லை. இத்தனைக்கும் அரசு பயங்கரவாதத்தை நான் மறுக்கவில்லை. நியாயப்படுத்தவில்லை.

  7. சிபிஎம் ஆளுங்க போலீஸ்காரர், அவர் பொண்டாட்டி, புள்ளைங்க இவங்க எல்லாம் ம க இ கவுக்கு மக்களே இல்லைங்கற அளவில் அல்லவா வினவின் பதில் இருக்கிறது ? இவங்க செத்தா தப்பில்லையா ?

    • செந்தழல் ரவி,
      மேற்கு வங்கத்தில் சி.பி.எம் கட்சியினர்தான் மற்ற கட்சியினரை நூற்றுக்கணக்கில் கொன்றிருக்கிறார்கள். போலீஸ், இராணுவத்தின் யோக்கியதையை வீரப்பனின் காடுகளிலும், காஷ்மீரிலும், வடகிழக்கிலும் கேட்டால் தெரியும். சமீபத்தில் கூட காஷ்மீரில் ஒரு அப்பாவி சிறுவனை சி.பி.ஆர்.எப் போலீசு கொன்றிருக்கிறது. போலீசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் நடப்பது சண்டை. அந்த சண்டையில் போலீசைக் காப்பாற்ற நினைத்தால் மத்திய அரசு படைகளை வாபஸ் பெறலாமே.

  8. தாக்குபவனையும் தற்காத்துக் கொள்பவனையும் சமமாக பார்க்கும் தங்களது அறிவை பற்றி என்ன சொல்ல?????……!!!!!!!

    • யார் தாக்குபவன் ? யார் தற்காத்துக்கொள்பவன் ? அதை நீங்களே முடிவு செய்துகிட்டா எப்படி ? ஒருவருடைய அறிவை பற்றி நீர் சொல்ல வேண்டாமே.
      வாசகர்களே முடிவு செய்துகொள்வார்கள்.

  9. ////மேற்கு வங்கத்தில் சி.பி.எம் கட்சியினர்தான் மற்ற கட்சியினரை நூற்றுக்கணக்கில் கொன்றிருக்கிறார்கள். போலீஸ், இராணுவத்தின் யோக்கியதையை வீரப்பனின் காடுகளிலும், காஷ்மீரிலும், வடகிழக்கிலும் கேட்டால் தெரியும். சமீபத்தில் கூட காஷ்மீரில் ஒரு அப்பாவி சிறுவனை சி.பி.ஆர்.எப் போலீசு கொன்றிருக்கிறது. போலீசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் நடப்பது சண்டை. அந்த சண்டையில் போலீசைக் காப்பாற்ற நினைத்தால் மத்திய அரசு படைகளை வாபஸ் பெறலாமே.////

    சி.பி.எம் கட்சியினர் அங்கு பல அட்டூலியங்கள், படுகொலைகள் புரிந்துள்ளனர் தான். அதற்காக அனைத்து சி.பி.எம் உறுப்பினர்களையும் பதிலுக்கு கொல்வதுதான் ‘போர்’ முறையா ? போலிஸார் மற்றும் ராணுவத்தினரின் அத்துமீறலகள் அறிந்ததுதான். ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து போலிஸாரும். ராணுவத்தினரும் அனைத்து இடங்களிலும் இதே போல மீறல்களை செய்கின்றனரா ? தங்களை கன்னிவெடி வைத்து கொல்லும் மாவோயிஸ்டுகளை பதிலுக்கு தேடி கொல்லாமல் இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள் ? மாவோஸிஸ்டுகளால் கன்னிவெடி மூலமும், நேரடி தாக்குதல்கள் மூலமும் கொல்லப்பட்ட போலிஸார் மற்றும் ஜவான்களை அனைவருமே குற்றவாளிகளா ? நல்ல நியாயம். உங்க ஆளுங்க கொன்னா அது வரகப் போர், மக்கள் யுத்தம். போலிஸ் எதிர்வினையாற்றினா அது ஏகாதிபத்திய அடக்குமுறை, ஃபாசிசம். Tell it to the birds comrade. மாவோயிஸ்டுகளை வாபஸ் பெற அலோசனை சொல்லுங்களேன். உங்க ஆளுங்க தானே அவுங்க.
    போலிஸாரின் எதிர்வினைகளில் பல அப்பாவி பழங்குடியினர் பலியாவது உண்மைதான். ஆனால் மாவோயிஸ்டுகளும் பல அப்பாவிகளை போலிஸ் உளவாளிகள் என்ற பெயரில் கொல்கின்றனர். சில மாதங்கள் முன்பு ஒரு பள்ளி ஆசிரியரை தலையை வெட்டி கொன்றனர். பள்ளி கட்டிடங்களை, அரசு அலுவலகங்களை, மின்சார கோபுரங்களை வெடி வைத்து அழிப்பதுதான் மக்கள் யுத்தமா ? எந்த மக்களுக்காக போராடுவதாக சொல்லிக்கொள்கிறார்களோ, அந்த மக்கள் தான் மிக அதிகம் பாதிக்கப்டுகின்றனர். விடுதலை புலிகளின் செயல்களை இவர்களோடு ஒப்பிடலாம்.

    சரி, இருக்கட்டும், மாவோயுஸ்டுகள் வெற்றி பெற்று புரட்சி அரசை நிறுவனினால், எதிர்காலத்தில் எத்தனை லச்சம் ‘பூஸ்வாக்களை’ கொல்வார்கள் ? அதுதானே வரலாறு சொல்லும் பாடம். இதில் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில், மேலோட்டமான ஆதரங்களை கொண்டு, அல்லது ஆதாரங்களே இல்லாமல் மரண தண்டனை அல்லது வதை முகாம்களில் அடைக்கப்படும் மக்களின் எண்ணிக்கை எத்தனை லச்சம் இருக்கும் ?

  10. @@@@சரி, இருக்கட்டும், மாவோயுஸ்டுகள் வெற்றி பெற்று புரட்சி அரசை நிறுவனினால், எதிர்காலத்தில் எத்தனை லச்சம் ‘பூஸ்வாக்களை’ கொல்வார்கள் ? @@@

    நேபாள மாவோயிஸ்டுங்களுக்கு ஆதரவா பூர்சுவாங்களே வீதியில இறங்கி போராடினாங்க அதியமான் ஒய் ஒய் ஒய்????

  11. /// போலீசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் நடப்பது சண்டை.//

    அப்ப மேற்கொண்டு விவாதிக்க ஒன்னுமே இல்லையே. சண்டைனு வந்திட்டா அப்பறம் என்ன தர்ம நியாயம். முடிந்தத பார்த்துகலாம் என்பதுதான் யுத்த தர்மம். நடுவில் அப்பாவிங்க கொல்லப்படுவதை பற்றி ஏன் அலட்டிக்கனும். இரு தரப்பும் அதை பற்றி கவலைபடுவதாக தெரியவில்லை. ஆனால் இங்க…

    ஒரு முக்கிய விசியம் : பழங்குடிகளின் நிலங்களை பாதுகாக தான் மாவோயிஸ்டுகள் போராடுகின்றனர் என்பது முழு உண்மையல்ல. அவர்களுக்கு அது ஒரு காரணம் அல்லது சாக்கு. பழங்குடியினரின் நிலங்களை யாரும் அபகரிக்காமல் இருந்த காலங்களிலும் இவர்கள் தொடர்ந்து செம்புரட்சிக்காக அரசு எந்திரத்தை தாக்கி கொண்டுதான் கடந்த 42 வருடங்களாக இருக்கின்றனர். மேலும் பழங்குடியினரின் சொந்த நிலம் எது, பொது நிலம் எது என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஏற்கெனவே இதை பற்றி விவாதம் இங்கு நடந்துள்ளது.

    சரி, போகட்டும் : அரசு பயங்கரவாதத்தை பற்றி கம்யூனிஸ்டுகள் பேசுவது வேடிக்கை.
    புரட்சிக்கு பின், அவர்கள் செய்த / செய்யும் பயங்கரவாதங்கள் மிக கொடூரம். வேறு வழியே இல்லை. பூஸ்வாக்கள் மற்றும் பூஸ்வா ஆதரவாளர்கள், மற்றும் பலரையும்
    கொன்றழிக்க வேண்டிய வரலாற்று கட்டாயம் உள்ளது. வர்க போரில் இவற்றை தவிர்க்கவே முடியாது. இப்பவே இத்தனை ஆயிரம் மக்களை கொன்ற நக்ஸல்கள் / மாவோய்இஸ்டுகளின் செயல்களை நியாயப்ப்டுத்தும் வினவு, புரட்சிக்கு பின் நடக்கப் போகும் பெரும் கொலைகளை தடுக்கவா செய்வர் ? It is impossible to contruct a revolutionary govt without mass murder and deportation of all kinds of ‘opposition’, etc.

  12. /////அதியமான், மாவோயிஸ்ட்டுகள் மீதான ம.க.இ.க விமரிசனம் எந்தப் பாதையில் மக்களை அணிதிரட்டி புரட்சி செய்ய முடியும் என்ற தத்துவ அரசியல் நடைமுறை ரீதியானது. கம்யூனிசத்தையே ஏற்காதவர்களுக்கு அந்த விமரிசனம் எவ்வளவு புரியும் என்பது தெரியவில்லை. அதையும் கணக்கில் கொண்டு ஒரு கட்டுரையை வினவில் வெளியிட முயல்கிறோம். அப்பாவி மக்கள் மீது தாக்குதல், பொதுச்சொத்துக்களின் சேதம் என்பதாக மட்டும் நீங்கள் மாவோயிஸ்ட்டுகளை எதிர்ப்பதை நாங்கள் ஏற்கவில்லை. அவர்கள் அறிந்தே அப்பாவி மக்களைக் கொன்றதில்லை. அப்படி செய்திருக்கும் ஒரிரு தருணங்களுக்கும் அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். அடுத்து பொதுச்சொத்துக்களை சேதமாக்குவது இந்தியாவின் எல்லா அரசியல் கட்சிகளும் செய்பவைதான். சமீபத்தில் தெலுங்கானா பிரச்ச்சினைக்காக ஆதரிப்போரும், எதிர்ப்போரும் பேருந்துகளை தாக்கியதை கூறலாம். ஊடகங்களின் போராட்டச் செய்திகள் வரவேண்டுமென்ற நோக்கத்துடன் நடக்கும் இந்நிகழ்வுகளைக் கண்டிக்க வேண்டுமென்றால் அதற்கு எல்லோரையும்தான் கண்டிக்க வேண்டும். ஏதோ மாவோயிஸட்டுகள் மட்டும்தான் என்று அதை குறுக்குவது தவறு.////

    எங்களுக்கும் புரியும் தான். முதலில் எழுதுங்களேன். தத்துவ அரசியல் நடைமுறை எல்லாம் தியரி. நடைமுறையில் அவை எப்படி செயல்களாக உருபெறுகின்றன என்பதுதான் மிக முக்கியம். மாவோயிஸ்டுகளின் பாதை : இன்றே முடிந்தவரை போட்டுத் தள்ளுவது. உங்களின் பாணி : புரட்சி ஆரம்பித்த பின் போட்டு தள்ளுவது. அவ்வளவுதான் வித்யாசம். புரட்சிக்கு பின் பெரிய அளவில், நிதானமாக பல கோடி ‘எதிரிகளை’ (அதாவது enemy of the people / state) போட்டு தள்ளுவது அல்லது வதை முகாம்களில் அடைப்பது. இதை நீங்களும், மாவோயிஸ்டுகளும் சேர்ந்தே செய்வீர். மற்றபடி தத்துவம், அரசியல் சித்தாந்தம் எல்லாம் வெறும் தியரி.

    தெலுங்கான பிரச்சனைக்காக பஸ்களை சேதப்படுத்தியது, mob violence. முன் கூடி திட்டமிடல் பெரிதாக இருந்திருக்க முடியாது. எப்படியும் அது அராஜகம் மற்றும் முட்டாள்தனம். மாவோயிஸ்டுகளின் கொடூரங்களை இதனுடன் எப்படி ஒப்பிட முடியும். திட்டமிட்டு குண்டு வைப்பது, தலையை வெட்டி கொலை செய்தது, கன்னிவெடி வைத்து பல நூறு போலிஸாரை கொல்வது : இவை மாவோயிஸ்டுகளின்
    பாணி. இதில் ஊடகங்களை பற்றி என்ன..

  13. சென்னையில் 20/02/2010 அன்று ம.க.இ.க வினால் நடத்தப்படும் எதிர்ப்பு நிகழ்விற்கு தமது அமைப்பும் நேபாள மாவோயிஸ்டுக்களும் முழு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
    http://inioru.com/?p=10529

  14. உங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது!

    காந்தியவாதி ஹிமான்சு குமார்
    தமிழில் : தேவிபாரதி

    ங்குடிகள் வாழும் தண்டேவாடாப் பகுதியில் 17 ஆண்டுகளாகப் பணிபுரியும் மனித உரிமைச் செயல்பாட்டாளரும் காந்தியவாதியுமான ஹிமான்சு குமார் சத்தீஸ்கரில் உள்ள நிலைமை பற்றி மும்பை பிரஸ் கிளப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஆற்றிய உரை, பத்திரிகையாளர் ஜியோதி புன்வானியால் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கட்டுரையாக நவம்பர் 21, 2009 தேதியிட்ட EPW (Economic and Political Weekly) ஆங்கில வார இதழில் வெளிவந்துள்ளது.
    உண்மையான இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இளைஞர்கள் கிராமங்களுக்குச் சென்று அவற்றுக்குப் புத்துணர்வூட்ட வேண்டும் என்னும் காந்தியின் நம்பிக்கையை அடியொற்றிப் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நான் தண்டேவாடாவுக்குச் சென்றேன். ஆசிரமம் அமைப்பதற்கான நிலத்தை எனக்கு அங்குள்ள கிராமவாசிகள் வழங்கினர். ஐந்தாவது அட்டவணையின் கீழ் அதற்கான அதிகாரம் கிராமசபைக்கு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அரசு 1000 போலீசாரையும் கண்ணிவெடியை அகற்றும் வாகனங்களையும் அனுப்பி என் ஆசிரமத்தை இடித்துத் தள்ளியது…! இறுதியில் பழங்குடி மக்கள் நானும் அவர்களைப் போன்ற ஒருவன் என்று என்னை ஏற்றுக் கொண்டனர். என் வீடும் இடித்துத் தள்ளப்படலாம்!

    மேலும் படிக்க….

    http://socratesjr2007.blogspot.com/2010/02/blog-post_14.html

  15. பொதுக்கூட்டத்திற்கு ஜனநாயக ஆதரவாளர்கள் அனைவரும் வருவது அவசியமானது. நடப்பு அரசியலின் இந்திய அளவிலான அரசு ஒடுக்குமுறையை அறிந்து உணர்வுபெற எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.

  16. அதியமான… அவுங்க ப்ராடக்ட அவிங்க ப்ரமோட் பண்றாங்க.. புடிச்ச மக்கள் வாங்குவாங்க.. ஒங்களுக்கு ஒங்க ப்ராடக்ட்.. விடுங்க… அவுங்க எம்ஜியார் (அதாவது ஈரோங்கறாங்க).. ஒங்கள மாதிரி முதலாளித்துவத்த ஆதரிக்கிறவங்கள எம்என் நம்பியார்ன்னு (அதாவது வில்லன்)..சொல்றாங்க.. ஆனா இதுவதை ஓட்டப் பந்தயத்தல அவிங்க ஈரோவும் (ஒங்களப் பொருத்தவரை வில்லன்) ஒங்க ஈரோவும் (அவிங்களப் பொருத்தவரை வில்லன்) ஓடறாங்க… ஆனா இதுநாள் வரை ஒங்க ஆளதான் வெற்றி மேல வெற்றிய குவிக்கிறாங்க.. அவங்க என்னிக்காச்சும் அப்படி ஜெயிச்சாலும் டப்புன்னு ஒக்கார்ந்துறாங்க.. பாக்கலாம் என்ன ஆவுதுன்னு….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க