Friday, October 7, 2022
முகப்பு வரதட்சணைக்காக நிர்வாணப்படத்தை வைத்து மிரட்டிய வக்கிரக் கணவன்!!
Array

வரதட்சணைக்காக நிர்வாணப்படத்தை வைத்து மிரட்டிய வக்கிரக் கணவன்!!

-

vote-012ஞாயிற்றுக் கிழமை (14.02.10) டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் புரட்டிக் கொண்டிருந்த போது அந்தச் செய்தி கண்ணில் தென்பட்டது.

செல்பேசி செக்ஸ் முறைகேடுகள் மலிந்து விட்ட நாட்டில் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக சொந்த மனைவியை நிர்வாணப் படமெடுத்து வரதட்சணைக்காக மிரட்டியிருக்கிறான் ஒரு சென்னைக் கணவன்.

26வயது சதீஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) டிசம்பர் 2008இல் திருமணம் செய்து கொண்டான். பொன்னும், பொருளும், பணமுமாய் 20 இலட்சம் வரை வரதட்சணையாக பெண் வீட்டிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகும் வரதட்சணை வெறியடங்காத சதீஷ் வீட்டார் அந்தப் பெண்ணை மேலும் கொண்டு வருமாறு வற்புறுத்தியிருக்கின்றனர். இதற்காகவே அந்தப்பெண்ணுடன் தாம்பத்ய உறவு கூட வைக்காமல் இருந்திருக்கிறான் அந்தக் கணவன்.

பொறுமையிழந்த அந்தப்பெண் தனது பெற்றோரிடம் இந்தக் கொடுமைகளை சொல்லி அழுதிருக்கிறாள். அவர்களும் இது குறித்து சதீஷ் வீட்டில் நியாயம் கேட்டிருக்கின்றனர். இதற்குப் பிறகு கொடுமை அதிகரித்ததே தவிர குறையவில்லை. சதீஷும் அவனது சகோதரர்களும் அந்தப் பெண்ணை சித்திரவதை செய்திருக்கின்றனர். சதீஷின் அப்பா மருமகளிடம் எல்லை மீறி நடக்க முயற்சித்திருக்கிறார். இதை கணவனிடம் புகாராகச் சொல்லியும் அவன் அதை சட்டை செய்யவில்லை.

இறுதியாக அந்தப் பெண்ணை தனியறையில் அடைத்து சன்னல் வழியாக உணவு மட்டும் கொடுத்து, அவளது நிர்வாணப் படங்களை நண்பர்கள் மூலம் வெளியிட்டு நாசப்படுத்துவேன் என்று சதீஷ் மிரட்டியிருக்கிறான். இதற்கு மேலும் பொறுமை காப்பதில் பலனில்லை என்று அந்தப் பெண் அந்தச் சிறையிலிருந்து எப்படியோ தப்பிவிட்டு தனது வீட்டுக்குக் கூட போகாமல் நேராக போலீசிடம் போய் புகார் செய்திருக்கிறாள். போலீசும் வரதட்சணை பிரிவு, பெண்ணை அடித்து துன்புறுத்துதல் முதலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் சதீஷையும் அவனது உறவினர்களையும் தேடிவருகிறார்கள்.

இதுவரை இந்தச்செய்தியை படித்துவிட்டு செல்லும் ஆண்கள் சதீஷின் வக்கிரத்தை எல்லோரையும் போல் கண்டித்துவிட்டு மறந்துவிடக் கூடும். ஆனால் தம்முள்ளும் சதீஷ் அளவுக்கு வக்கிரமாயில்லையென்றாலும் சற்று மென்மையான ஒரு சதீஷ் இருப்பான் என்பதை எத்தனை பேர் மறுக்க முடியும்?

ஊடகங்களில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை மூலம் காதலர் தினம் தனது பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்தி விட்டுச் சென்று விட்டது. இந்து மதவெறியர்கள் வழக்கம் போல தாலிகளை வைத்து காதல் என்றால் ஆபாசம், மேலைநாட்டு வக்கிரமென்ற உதார்களும் நம்மில் பலர் பார்த்திருக்கக் கூடும். சாதிக்குள்ளே மணம் முடித்து இந்து மதத்தின் மேன்மையை காப்பாற்றுவது அவர்களது நோக்கம். ஆனால் அவர்களது நோக்கத்திற்குப் பங்கம் வராமல் பெற்றோர் பார்த்து முடிக்கும் சம்பிரதாய திருமணங்கள்தான் நாட்டில் அதிகம்.

காதலும் கூட சாதி மறுப்பு என்பதை விட சம தரத்திலான சாதி, வர்க்கம், அந்தஸ்து, பணம், வேலை எல்லாம் பார்த்துத்தான் நடக்கிறது என்பது வேறு விசயம். இதையே சாதிக்குள் நடத்தினால் அது நிச்சயிக்கப்பட்ட திருமணம். இந்த எழவுகளை பொருத்தம் பார்த்து எப்படியோ திருமணம் செய்து கொண்டு ஒழியட்டும். ஆனால் எனக்கு வரதட்சணை வேண்டாமென்று இத்தகைய திருமணங்களில் கூட செய்து காட்டலாமே?

தன்னை முற்போக்காளன், நல்லவன், புரட்சிக்காரனென்று அற்ப விசயங்களுக்காக சித்தரித்துக் கொள்ளும் இளைஞர்கள் கூட இந்த வரதட்சணையை வேண்டாமென்று மறுப்பதில்லை. அல்லது நாசுக்காக மொக்கையான காரணங்களைச் சொல்லி சமாளிக்கிறார்கள்.

மணம் முடிக்கும் பெண்களை ஆண்கள் ஆயுசு வரைக்கும் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த வரதட்சணையை பெண்ணின் தந்தை தரவேண்டுமென்று பாரம்பரிய விளக்கத்தை முதலில் சொல்வார்கள். இதன்படி பெண்ணென்பவள் சுமை. அல்லது மாடு. அந்த மாட்டிற்கு தீனியும், தண்ணீரும் கொடுத்து தொழுவத்தில் கட்டிவைப்பதற்குத்தான் அந்த தட்சணை. பதிலுக்கு அந்த மாட்டுப்பெண் சமையல், துவையல், இல்லப் பராமரிப்பு, விருந்தினர் உபசரிப்பு, குழந்தைகள் வளர்ப்பு, செவிலியர் வேலை, இரவில் தாசி வேலை எல்லாம் நேரத்திற்கு செய்யவேண்டும்.

இப்படி எல்லாவகையிலும் பெண்ணின் இரத்தத்தை அட்டைகள் போல உறிஞ்சிக்கொள்ளும் ஆணிணத்து புண்ணியவான்கள் என்றைக்காவது இந்த வேலைகளை செய்வதற்கு முன்வந்தது உண்டா? கிடையாது. போகட்டும். செய்யாத, செய்ய முடியாத, விரும்பாதா இந்த வேலைக்கு ஊதியம் கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு கணவனும் முழு ஆயுளில் பல இலட்சங்களை செலவிட வேண்டியிருக்கும்.  குடும்பத்து வேலையை எல்லாம் பணத்தால் மதிப்பிட முடியாது என்று நொள்ளை பேசும் வீட்டின் பெருசுகள் திருமண நேரத்தில் வாங்கும் வரதட்சிணையின் மதிப்பை வைத்தே அந்தப் பெண்ணை அளவிடுவார்கள். கூடவே இந்த மதிப்பிட முடியாத வேலை செய்வதற்கு ஒரு பெண்ணோடு வரதட்சணையாக பெரும் சொத்தையும் பிடுங்குகிறோமே என்று எள்ளளவும் குற்ற உணர்வு கிடையாது.

அடுத்து இந்த வரதட்சணையை அந்த பெண்ணின் நன்மைக்காகத்தானே வாங்குகிறோம் என்று அளப்பார்கள். விசேசங்களுக்கு குடும்பத்தின் அந்தஸ்தை நிலைநாட்டும் அலங்காரக்கடை பொம்மையாக மருமகள் அவதரிக்க உதவும் நகைகள் மற்ற நேரத்தில் பீரோவில் தூங்கும். பெரும் செலவுகள் வரும்போது கணவனுக்கு கைகொடுப்பது அந்த நகைகள்தான். பின்னர் பெண் குழந்தை ஆளாகி மணமகளாக செல்லும்போது அந்த நகைகளும் புதிய தட்சணையாக செல்ல நேரிடும். இதைத் தவிர அந்த நகைகள் அந்தப் பெண்ணுக்கு ஒரு மயிரும் பலனளிப்பதில்லை.

“பையனை செலவு செய்து படிக்க வைத்திருக்கிறோம், அதனால் கை நிறைய சம்பளம் வாங்குகிறான், அப்படி உயர்ந்த இடத்திற்கு வாக்கப்பட வேண்டுமென்றால் வரதட்சணை கொடுப்பதுதானே முறை” என்று வியாபாரக் கணக்கு பேசுவார்கள். இல்லையென்றால் ஏழை பாழைகளைக் கல்யாணம் செய்யலாம் என்றும் உபதேசிப்பார்கள். காசுக்கேற்ற தோசை மாதிரி ஏழைகளும் ஏதாவது செலவழித்துத்தானே திருமணங்கள் செய்யவேண்டியிருக்கிறது. சமூகத்தில் வரதட்சணை என்பது அழிக்க முடியாத விதி என்று ஆகிவிட்டபோது ஏழை மட்டும் அதை மீறுவது எப்படி சாத்தியம்?

ஏற்கனவே கை நிறைய சம்பளம் வாங்கும் கபோதிகள் அத்தோடு திருப்தி அடையவேண்டியதுதானே? நியாயமான உழைப்பில் கல்விச் செலவை செய்திருந்தால் இந்த அநியாயமான தட்சணையை எதிர்பார்க்கத் தோன்றாது. ஊரைக் கொள்ளையடித்தோ, லஞ்சம் வாங்கியோ, முறைகேடுகள் செய்தோ செலவழித்திருந்தால் கண்டிப்பாக தட்சணை மூலம் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்றுதான் தோன்றும். சுயநிதிக் கல்லூரிகளில் சில பல இலட்சங்கள் கொடுத்து சீட்டு வாங்கி டாக்டராகவோ, இன்ஜினியராகவோ குதிப்பவர்கள் திருமண வியாபாரம் மூலமே அதை சரிக்கட்டுகிறார்கள்.

இத்தகைய உயர் குடி ஆண் குதிரைகள் அதிகம் விலைபோகும் என்பது பெண்கள் விற்கபடும் சந்தையை வைத்தே உருவாக்கப்படுகிறது. மணமகளின் தந்தையும் ஊரைக் கொள்ளையடித்து வந்திருந்தால் தட்சணையை கணக்கு பார்க்காமல் கொடுப்பான். நேர்மையானவானாக இருந்தால் இருக்கும் சொத்துபத்துக்களை விற்றுவிட்டோ இல்லை கந்து வட்டிக்கு கடன்வாங்கியோ வரதட்சணை கொடுப்பதற்கு தயாராக இருப்பான். இதன் மூலம் அந்த தந்தை தனது எஞ்சிய வாழ்நாட்களை ஆயுள்கைதி போல கழிப்பதற்கு தயாராவார்.

இதில் 100பவுனுக்கு ஒரு பவுன் குறைந்தால் கூட போதும், பையன் வீட்டார் அந்தப் பெண்ணை ஏமாற்றுக்காரியாகவே நடத்துவார்கள். தமிழகத்தின் ஏழை மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை என்பது இந்த வரதட்சணை அநீதியின் காரணமாகத்தான் நடக்கிறது என்பது உண்மை. அந்த வகையில் வரதட்சணை வாங்கும் ஒவ்வொருவரும் தருமபுரியிலோ, உசிலம்பட்டியிலோ கொல்லப்படும் பெண் சிசுக் கொலைக்கு காரணமாகத்தான் இருக்கிறார்கள்.

சமீபத்திய வரவான ஐ.டிதுறை மற்றும் அமெரிக்க மாப்பிள்ளைகள் என்பது மேட்டுக்குடியின் வரதட்சணையை ராக்கெட் வேகத்தில் எகிற வைத்திருக்கிறது. தனது பெண் அமெரிக்காவில் சீரும் சிறப்புமாக வாழ்வாள் என்று நம்பி மொத்த வாழ்க்கை சம்பாத்தியத்தையும் மகளுடன் அனுப்பி வைக்கும் தந்தைமார்கள் அதன்பிறகாவது நிம்மதியாக வாழ்கிறார்களா? இல்லை காரில் இருந்து தள்ளப்பட்டு குற்றுயிரும் கொலையுயிருமாக வரும் மகளுக்காக விமான நிலையத்தில் காத்திருக்கிறார்களா?

வாரிசுகளில் இருபாலாரும் இருந்தால் வரதட்சணை கொடுப்பதற்காக வரதட்சணை வாங்குவதாக நியாயம் பேசுவார்கள். ஏன் வரதட்சணை வாங்காதவனுக்குத்தான் எனது மகள் என்று முடிவெடுக்க வேண்டியதுதானே? அப்படி முடிவெடுத்து விட்டு திருமணம் செய்ய நினைக்கும் இளைஞர்களை சமூகம் பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்று வைத்திருக்கிறது என்பதால் எந்தத் தந்தையும் தனது மகளின் வாழ்வில் ரிஸ்க் அல்லது நல்ல முடிவு எடுப்பதில்லை.

இன்னும் விதவையாக இருந்தால் மனிதாபிமானம் அதிகம் இருக்கும் என்று எண்ணாதீர்கள். விதவையைக் கல்யாணம் செய்யும் ‘தியாக’ உள்ளங்களுக்கு பிரதிபலனாக லஞ்சம் அதிகம் கொடுக்க வேண்டும். அதுவும் குழந்தை உள்ள பெண்ணாக இருந்தால் ரேட் இன்னும் அதிகம். இரண்டாம் மணம் என்றாலும் அங்கே முதல் மணம் ஏன் தோல்வியுற்றது என்று பாடம் கற்காமால் அதே போல தட்சணை கொடுத்துத்தான் அடுத்த மணமும் நிறைவேறும்.

இறுதியாக “வரதட்சணையை நாங்களாக ஏதும் கேட்கவில்லை, நீங்களாக பார்த்து செய்தால் போதும்” என்று நல்லவர்கள் போல பேசுவார்கள். உறவினர்களை விட்டு குடும்பத்தின் மேன்மை, சமீபத்தில் நடந்த திருமணங்களில் கொடுக்கப்பட்ட வரதட்சணையின் அளவு எல்லாம் சொல்லி மறைமுகமாக ரேட்டை நிர்ணயம் செய்வார்கள். நேரடியாக கேட்பதை விட இரகசியமாக கேட்பது மகா கேவலமானது. இதன்மூலம்தான் பெண் வீட்டார் தங்கள் தகுதிக்கும் மேல் சீர்வரிசை செய்வது நடக்கிறது. வரதட்சணையில் நல்லது கெட்டது என்று ஏதும் இருக்க முடியுமா என்ன?

இப்படி எல்லா வழிகளிலும், வகைகளிலும் கண்கொத்திப் பாம்பாக பெண்களை குதறக் காத்திருக்கிறது வரதட்சணை.

இந்தக் கயமைத்தனத்தை ஜீன்ஸ் பேண்டிலும், செல்பேசியிலும் நவீனத்தை தேடும் இளைஞர்கள் நேரடியாகவும், நாசுக்காகவும், மறைமுகமாகவும் செய்தே வருகிறார்கள். ரொம்ப இறுக்கிப் பிடித்துக் கேட்டால் “நான் வாங்க மாட்டேன், என் பெற்றோர் விரும்பினால் என்ன செய்வது” என்று வாகாய் நழுவுவார்கள். சாதி பார்த்து, ஜாதகம் பார்த்து, அந்தஸ்து பார்த்து எல்லா எழவும் பார்த்துக்கூட தொலையட்டும். குறைந்த பட்சம் வரதட்சணையாவது வாங்க மாட்டேன் என்று முடிவெடுப்பதற்குக்கூட நேர்மையற்ற இந்த இளைஞர்களை வைத்துத்தான் அப்துல் கலாம் 2020இல் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறாராம்.

குழந்தைகள் உழைப்பை எதிர்ப்பார்கள், சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுப்பார்கள், சுயமுன்னேற்ற நூலென்றால் விழுந்து விழுந்து படிப்பார்கள், ரோட்டோரத்துப் பிச்சைக்காரனுக்காக சில்லறைகளையும் கொடுப்பார்கள்…இப்படியெல்லாம் நல்லது செய்வதாக கற்பித்துக் கொண்டிருக்கும் இந்த இளைய சமூகம்தான் இந்த வரதட்சணைப் பேயை இன்னும் வீரியமாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது. குறுக்கு வழியில் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதன் சமூக அங்கீகாரத்தில்தான் வரதட்சணையும் சாகாவரம் பெற்று ஜம்மென்று உயிர் வாழ்கிறது.

வட இந்தியாவில் கேஸ் அடுப்பு வெடித்து கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. தென்னிந்தியாவில் படித்தவர்கள் அதிகம் என்பதால் இந்த வரதட்சணை கொடுமைகள் சதீஷ் போல நாகரீக கனவான்களின் நவீன தொழில்நுட்ப சித்திரவதையாக பரிணாமம் பெற்றிருக்கிறது. சதீஷைப் பொறுத்தவரை அவனது மனைவி என்பவள் வெறும் உடம்பு மட்டும்தான். அந்த உடம்பிற்கு மானமிருக்கிறது என்பதனால்தான் அவன் அவளது நிர்வாண படங்களை வெளியில் விடுவேன் என்று பயமுறுத்த முடிகிறது. உடல் மானம் மட்டுமல்ல குடும்ப மானமும் போனால் கூடப் பரவாயில்லை என்று துணிந்து அந்தப் பெண் போலீசுக்கு வரவேண்டுமென்றால் அவள் எவ்வளவு துன்பம் அடைந்திருக்க வேண்டும்?

வரதட்சணைக் கொடுமைகளை நிறுத்துவது பெண்களிடம் இருந்துதான் துவங்க வேண்டும். இப்படி பொன்னும், பொருளும் வாங்கிக் கொண்டு திருமணம் செய்ய விரும்பும் இளைஞர்களை காறித்துப்புவதற்கு பெண்கள் முன்வரவேண்டும். வரதட்சணை மறுப்பதுதான் ஆண்மையின் தகுதி, விரைக்கும் ஆண் குறியில் அல்ல எனுமளவுக்கு அந்தப் போர் நடைபெற வேண்டும். காதலோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ வரதட்சணை மறுப்புத்தான் முதல் தகுதி என்றாக்கப்படவேண்டும். ஊழலால் சூழ வாழும் இந்த சமூக அமைப்பில் வரதட்சணைக்கெதிரான போராட்டம் துவங்கினால் அது ஏனைய பிணிகளை எதிர்த்து விரியும் போராட்டமாகக்கூட மாறும்.

எதெல்லாம் வரதட்சணை?

 1. பவுன் கணக்கில் கொட்டப்படும் நகையோடு பெண் திருமணமாவது – தங்க தட்சணை!
 2. பணம் வாங்குவது, திருமணச்செலவு முழுமையும் பெண் வீட்டார் செய்வது – ரொக்க தட்சணை!
 3. வரதட்சணைப் பணத்தை வைத்து வேலை வாங்குவது, அமெரிக்கா செல்வது – வேலை தட்சணை!
 4. வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் பெறுவது – சொத்து தட்சணை!
 5. தீபாவளி, பொங்கள் இதர நாட்களை வைத்து பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – பண்டிகை தட்சிணை!
 6. முக்கியமாக பிரசவ செலவை மாமனார் வீட்டிற்குத் தள்ளிவிடுவது – பிரசவ தட்சணை!
 7. குழந்தை பிறந்தால் அதற்கும் காது  குத்து, மொட்டையடிப்பது என்ற பெயரில் பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – குழந்தை தட்சணை!
 8. மனைவியை வீட்டுவேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதில் பங்கேற்காமல் இருப்பது – வேலைக்காரி தட்சணை!
 9. மனைவியை இருட்டுக்கு மட்டும் இலவசமாய் பயன்படும் பொருளாய் பார்ப்பது – தாசி தட்சணை
 10. எந்த முக்கியமான விசயங்களிலும் மனைவியோடு கலந்தாலோசிக்காமல் இருப்பது – அடிமை தட்சணை!
 11. மனைவியை அடிப்பது, சித்திரவதை செய்தவது – டார்ச்சர் தட்சணை!

……… மொத்தத்தில் முடிவு பெறாது இந்த வரதட்சணை!

இப்போது சொல்லுங்கள் உங்களில் யார் சதீஷை கண்டிக்கிறீர்கள்?

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. என்னுடைய குரு வரதட்சணை கூடாது, எளிய முறையில் திருமணம் நடத்த வேண்டும், எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அந்தக் காலத்திலும்.வரதட்சணை வாங்குவது பாவம் என்று சொன்னார்.யார் கேட்டார்கள்.முதலில் பிராமணர்கள் வாங்குகிறார்கள் என்றார்கள்.இப்போது கிறித்துவர்கள், முஸ்லீம்களும் வரதட்சணை வாங்குகிறார்கள்/கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
  என்னதான் தீர்வோ ஈஸ்வரா?

  • ஹிந்துக்கள் மட்டும் தான் வரதட்சணை வாங்குகிறார்களா??? அல்லது ஹிந்துக்கள் மட்டும் தான் காதலர் தினத்தை எதிர்கிறார்கள??? நீ தாண்டா மதவெறியன்…இந்தியாவில் காதலர் தினம் அதிகம் கொண்டாடுவது ஹிந்துக்கள் தான்…தாக்கரே எதிர்த்தால் அது ஹிந்து மதவெறி….சப்னா ஆஸ்மி எதிர்த்தால் அது இஸ்லாமிய கோட்பாடு….எதுடா உன் நியாயம்???

 2. உண்மை. இதில் உள்ளது எல்லாம் நூற்றுக்கு 114 உண்மை. ஆனாலும் எல்லாவற்றையும் மாப்பிள்ளையின் மீதே போடாதீர்கள். மாமனார்கள் ஊரில் தம்முடையப் பெருமை தெரிய வேண்டுமென்பதற்காக அவர்களாக முன்வந்து சில பலவற்றைச் செய்கிறார்கள். மாப்பிள்ளையின் அம்மாக்களும் அநியாயமாக மகனிடம் கேட்கச் சொல்லாமல் மருமகளிடம் நேரடியாக கேட்கிறார்கள். மகன் மறுத்து பேசினாலும், மருமகள் தன் வீட்டு பெருமையை தக்கவைக்க தன் அப்பாவிடம் பேசி வாங்கி தருகிறாள்.

  சில பேர் உள்ளனர். பூர்விகச் சொத்து மகன், மகள் இருவருக்கும் சரி பாதியாகத் தரவேண்டுமென்பதற்காக, மகளுக்கு கொஞ்சமாக வரதட்சணைக் கொடுத்து விட்டு மகளையும் மருமகனையும் ஏமாற்றுகிறார்கள். இதை எந்த வகையில் சேர்ப்பது ?

  • //மாமனார்கள் ஊரில் தம்முடையப் பெருமை தெரிய வேண்டுமென்பதற்காக அவர்களாக முன்வந்து சில பலவற்றைச் செய்கிறார்கள். மாப்பிள்ளையின் அம்மாக்களும் அநியாயமாக மகனிடம் கேட்கச் சொல்லாமல் மருமகளிடம் நேரடியாக கேட்கிறார்கள். மகன் மறுத்து பேசினாலும், மருமகள் தன் வீட்டு பெருமையை தக்கவைக்க தன் அப்பாவிடம் பேசி வாங்கி தருகிறாள்.//

   மாப்பிள்ளை ஏன் வாங்க அனுமதிக்கிறார்? கட் அண்டு ரைட்டாக ஒரு பைசா வாங்க முடியாது என்று சொல்ல வேண்டியதுதானே? அதுதானே தன்மானம்?

   //பூர்விகச் சொத்து மகன், மகள் இருவருக்கும் சரி பாதியாகத் தரவேண்டுமென்பதற்காக, மகளுக்கு கொஞ்சமாக வரதட்சணைக் கொடுத்து விட்டு மகளையும் மருமகனையும் ஏமாற்றுகிறார்கள். இதை எந்த வகையில் சேர்ப்பது ?//

   இது ஏதோ ஒரு வகையில் சேர்த்தியாக இருக்கட்டும். அந்த சொற்ப தொகையையும் வரதட்சனையாக அந்த மாப்பிள்ளை ஏன் வாங்கிக் கொள்கிறார்?

  • கையும் காலும் unaku எதுக்கு ..
   சொத்து விறும்பி கொடுக்கறது அத கேட்டு வாங்கறது கேவலம்
   மாமனார் மாமியார் மச்சான் இவ்வளு kodukanumum கேகர oru ஆணாவது avanghallukku முடியலைன ஓரறு தலைவலி மதரையவது வங்கி குடுத்து irukingala . அன்ன உங்க்ஹா அம்மா அப்பா நின்ன உகரத மட்டும் உங்க்ஹா பொண்டாட்டி தந்கநூம்

 3. //வரதட்சணை வெறியடங்காத சதீஷ் வீட்டார் அந்தப் பெண்ணை மேலும் கொண்டு வருமாறு வற்புறுத்தியிருக்கின்றனர். இதற்காகவே அந்தப்பெண்ணுடன் தாம்பத்ய உறவு கூட வைக்காமல் இருந்திருக்கிறான் அந்தக் கணவன்.//

  அவன் ஆம்பளையான்னு எனக்கு சந்தேகமா இருக்கு!
  வரதட்சணை கிரிமினல் குற்றம் என்றாலும் யாரும் புகார் கொடுக்க முன்வராமல் இருப்பது நமது மக்களீன் விழிப்புணர்வு நிலை!,

 4. மிக நல்ல நோக்கம்.
  நேர்மையான அறைகூவல்.
  மிகச்சிறப்பான இடுகை.
  நன்றி வினவு.

  வரதட்சினை வாங்கி/கொடுத்து நடத்தப்படும் திருமணத்தை-அது தோழர்களுடையதாயினும் சரியே- கலந்து கொள்ளாமல் எதிர்த்து புறக்கணியுங்கள். பிரியாணி உட்பட. காலி மண்டபங்களில் திருமணம் செய்ய மானமுள்ளோர் தயங்கட்டும்? வரதட்சினை ஒழிப்பில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது.

  ///முஸ்லீம்களும் வரதட்சணை வாங்குகிறார்கள்/கொடுக்கிறார்கள்…-jeyandrar /// —இந்த கொடுமையான மூடப்பழக்கவழக்கம் படுவேகமாய் முஸ்லிம்களிடம் குறைந்து வருகிறது. கண்கூடாக காணலாம். இதில், tntj-வின் இருபத்தைந்து வருட அயராத அசுர இஸ்லாமிய பிரச்சாரம் அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதோ இஸ்லாத்தை விளங்காமல் வாங்கியவர்கள் கூட தவறுணர்ந்து இறைவனுக்கு அஞ்சி மாமனாரிடம்/மாமியாரிடம் திருப்பித்தந்துகொண்டு இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன்.

  • வரதட்சனை சாதி,மத வேறுபாடுகளை கடந்து இன்று அபரிவிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது .குறிப்பாக முஸ்லிம் மததில்தன் கிலோ கணக்கில் தங்கம் வாங்குவதும் நவீன அடம்பர கார்கள் வாங்குவதும் அதன் காரணமாக ஏழை முஸ்லிம் பெண்கள் முதிர்கன்னிகளாக இருப்பதும் முஸ்லிம் மதத்தில் மட்டுமே அதிகம் என்பதை மறைத்து முற்போக்கு மதமாக காட்டுவதுதன முஸ்லிம் மத தர்மமா ?எங்கள் பகுதியில் TNTJ அமைபினரே மேற்கண்ட வரதட்சணைகலை அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கித்தான் வரதட்சனை ஒழிப்பு புரட்சி செய்கின்றனர் .வரதட்சணையை ஒழிக்க முதலில் தொடர்புடைய சமுதாயம் தனது தவறை குறைந்தபட்சம் ஏற்றுகொல்வதர்கவது முன்வரவேண்டும் .

   • எதையாவது மறுத்துகொண்டிருகனும் என்று சிலபேர் இருக்கிறார்கள். சொல்லப்பட்ட விஷயத்தை உள்வாங்கி சொல்கிறார்களா என்றால் இல்லை.

    25 வருடமாக தமிழகத்தில் TNTJ மூலமாக ஒரு புரட்சி நடந்து கொண்டிருப்பதை அறியாதிருப்பது குற்றமில்லை. அறியாதது போல் நடிப்பது பெருங்குற்றம்.

    ஒரு சவால்: TNTJ பிரச்சாரத்தின் பயனாக பல முஸ்லிம் சகோதரர்கள் வாங்கிய வரதட்சணையை திருப்பி கொடுத்திருக்கிராகள். வேறு எந்த சமுதாயத்திலாவது இந்த அதிசய நிகழ்வு நடந்திருக்கிறதா? ஒருத்தரை ஒரே ஒருத்தரை காண்பிக்கமுடியுமா?

    • இன்மை மற்றும் நெற்றியடி நண்பர்களே,

     வரதட்சணை வாங்குவது தவறு என்று இசுலாத்தின் துணை கொண்டுதான் உங்களுக்கு விளங்க வைக்க முடியும் என்பது வருத்தமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலிருந்து யோசித்தாலே இதன் மானுட விரோதம் தெரியவரும். இதற்குக்கூட உங்களுக்கு மதம் தேவைப்படுகிறது என்றால் நாட்டில் நடக்கும் எல்லா அநியாயங்களுக்கும் அது இசுலாமிய விரோதம் என்று நிரூபிக்கப்பட்டால்தான் கண்டிப்பீர்கள் போலும். எங்கள் தோழர்கள் எந்த மத துணையுமின்றி வரதட்சிணை மறுப்பு மட்டுமல்ல சாதி, சடங்கு, ஆடம்பரம் எல்லாவற்றையும் மறுத்துவிட்டு திருமணம் செய்கிறார்கள். அத்தகைய திருமணங்களை நீங்கள் காண விரும்பினால் ஏற்பாடு செய்யலாம்.

    • வினவு,

     உங்கள் வருத்தம் கண்டு வருந்துகிறேன். உங்கள் அறியாமையை கண்டு மேலும் பரிதாபப்படுகிறேன்.

     நான் முஸ்லிம். இஸ்லாத்தின் ஊடாகவே தான் நல்லது கெட்டதை பிரித்தறிகிறேன். இஸ்லாம் தான் சரி என்று முழுமையாக நம்புகிறேன். இதில் நீங்கள் வருத்தமடைய என்ன இருக்கு என்று தெரியவில்லை.

     உங்கள் கொள்கையின் துணை கொண்டு நீங்கள் சரிகான்பதை நான் வருத்தப்பட்டால் அதை ஏற்றுக்கொல்லும்படியாகும். சரியா?
     வினவு, உங்களுக்கு என்ன பிரச்சனை? மதம் துணைகொண்டு அநியாயத்தை அக்கிரமத்தை கண்டிக்ககூடாதா? மதம் துணையில்லாமல் கண்டித்தால் எப்படி சரி?
     இஸ்லாம் துணைகொண்டு உங்களைவிட முழுவீச்சில் வெற்றி பெறுகிறோமே அதை கண்டு வருத்தபடுகிறீர்களோ?
     சரி. நான் கேட்ட சவாலுக்கு பதில் உண்டா?
     வினவு உங்களிடம் ஒரு கேள்வி. சம்பந்தம் இல்லை என்றாலும் உங்கள் சிந்தனைக்கு:
     நீங்கள் உங்கள் கொள்கையின் மீது நம்பிக்கை வைத்து பல நல்ல காரியங்கள், சமூக சேவைகள், அறிய பெரிய தியாகங்கள் செய்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை முழுவதுமே. இதனால் இவ்வுலக ஆசா பாசங்களை துறக்கிறீர்கள் மக்கள் நலன் கருதியே. பிறகு ஒரு நாள் இறந்தும் விடுகிறீர்கள். அவ்வளவு தானா? இதனால் உங்களுக்கு என்ன பலன்? உங்கள் அருமையான உழைப்புக்கும் தொண்டுக்கும் தியாகத்திற்கும் என்ன பிரதி பலன்?
     மக்கள் நலமடைவார்கள் என்று பிதற்ற மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு என்ன பலன் என்பது கேள்வி.
     மேலும், ஒருவன் வாழ்கை பூராவுமே அயோக்கியன், கொலை, கொள்ளை, கற்பழிப்பை தொடர்ந்து செய்பவனை ஒரு நாள் மரணம் கவ்விகொள்கிறது. இதற்கெல்லாம் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டாமலே. அதாவது இப்படியாகப்பட்ட ஒரு ரவுடியை திடீர் என்று போலீஸ் என்கௌன்டர் செய்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். இவன் செய்த அத்துணை தீமைகளுக்கும் இப்போது எப்படி தண்டனை கொடுப்பது?
     மரணம் தான் தண்டனை என்று பிதற்ற மாட்டீர்கள் என்று மீண்டும் நம்புகிறேன்.
     இவனால் பாதிக்கபட்டவர்களுக்கு என்ன நீதி?
     உங்கள் கொள்கை துணை கொண்டு பதில் சொல்லுங்கள்.

    • நானும் பிறப்பால் ஒரு முஸ்லிம்தான் .முஸ்லிம் மதத்தில் நடக்கும் வரதட்டனை கொடுமைகளை அனுபவரிதியாக உணர்துதான் கூறுகிறேன் .முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் ஆடம்பர திருமணங்களும் ,லட்சகணக்கில் வரதட்சணை பணங்களும் ,பொருள்களும் வாங்குவதை பார்த்த மற்றமதங்க்களை சேர்த்தவர்கள் சாதாரணமாக ஒரு சைக்கில் அளவிற்கு வரதட்சணை வாங்கியவர்கள் ,இன்று பலபவுன் தங்கநகைகளும்,ஆயிரகணக்கான ரூபாய் மதிப்புள்ள இரண்டுசக்கர வாகனங்கள் வாங்கும் அளவீர்க்கு வரதச்னைகொடுமைதலைவெரித்துஆடுகிறது . எனவே ,தயவுசெய்து காலாவதி ஆகிப்போன மதக்கருத்துக்களை மட்டுமே பிடித்துதொங்குவது எந்த பிரச்சனைக்கும் அறிவியல் ரீதியான தீர்வை நமக்கு தராது. உதாரனமாக முஸ்லிம் மதத்தில் ஆண்கள் வரதட்சணை (மஹார்) kodukkavaendum endru

    • நானும் பிறப்பால் ஒரு முஸ்லிம்தான் .முஸ்லிம் மதத்தில் நடக்கும் வரதட்டனை கொடுமைகளை அனுபவரிதியாக உணர்துதான் கூறுகிறேன் .முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் ஆடம்பர திருமணங்களும் ,லட்சகணக்கில் வரதட்சணை பணங்களும் ,பொருள்களும் வாங்குவதை பார்த்த மற்றமதங்க்களை சேர்த்தவர்கள் சாதாரணமாக ஒரு சைக்கில் அளவிற்கு வரதட்சணை வாங்கியவர்கள் ,இன்று பலபவுன் தங்கநகைகளும்,ஆயிரகணக்கான ரூபாய் மதிப்புள்ள இரண்டுசக்கர வாகனங்கள் வாங்கும் அளவீர்க்கு வரதச்னைகொடுமைதலைவெரித்துஆடுகிறது . எனவே ,தயவுசெய்து காலாவதி ஆகிப்போன மதக்கருத்துக்களை மட்டுமே பிடித்துதொங்குவது எந்த பிரச்சனைக்கும் அறிவியல் ரீதியான தீர்வை நமக்கு தராது. உதாரனமாக முஸ்லிம் மதத்தில் ஆண்கள் வரதட்சணை (மஹார்) கொடுக்கவேண்டும் என்று உள்ளது. இந்தியாவில் இது பெயரலவிர்க்கு இருந்தாலும், இக்கொள்கையை அரபு நாடுகள் தீவிரமாக கடைபிடிக்கின்றன. அங்கு என்ன விளைவை இது ஏற்படுத்தி இருக்கின்றது என்றால் பணக்கார ஆண்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப இரண்டு, மூன்று மனைவிகளை திருமணம் (பணத்தால் வாங்கிவிடுகின்றனர்) செய்துகொள்கின்றனர். வசதி இல்லாத ஆண்கள் திருமணத்திற்காக ஏங்கி நிற்கும் நிலையை அதாவது பெண்களை நுகர்வு பொருளாக மாற்றும் எதிர்மறை விளைவை ஏற்பபடுதி ருக்கின்றது.

     நண்பர்களே! நிரந்தர உண்மை என்று உலகில் எதுவும் இல்லை. எனவே இஸ்லாத்தின் கொள்கை அன்று முர்போக்கனதாக இருந்திருக்கலாம் . ஆனால் இன்று விவாதத்திற்கும்,ஆய்விர்க்கும் உட்படுத்தி புதிய மனித சமுதாயம் படைக்க வேண்டியது சமூக ஆர்வலர்களிடம் உள்ள பெரிய சவால்கல் இல்லையா?

    • //முஸ்லிம் மதத்தில்//

     நீங்கள் முஸ்லிம்களா? அப்படியா. ஒரு முஸ்லிமின்
     சொல்லாடல் இப்படி இறுக்காது. சரி போகட்டும்.

     அது இஸ்லாமிய மார்கத்தில் இல்லை மண்டுகளா.
     முஸ்லிம்களிடம். அதை போக்கத்தான்
     போராடிக் கொண்டிருக்கிறோம். கணிசமாக வெற்றியும்
     பெற்றுக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

     உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் நீங்களே
     இதை எதிர்த்து போராடி இருக்கலாமே. உங்கள் வீட்டில்
     காணும் ஒரு சில தவறுகளை கண்டு வீட்டை துறக்கும்
     அறிவிழியாக இருக்கிறீர்களே.

  • மதம்சாராமல் இசுலாமியர்களால் எதனையும் சிந்திக்க முடியாது. ஏனெனில் அது அறிவியல்பூர்வமானது. ஆனால் ஒப்புக்கு 1001 ரூபாய் மகர் கொடுத்துவிட்டு பவுன் கணக்கில் தங்கமும் கட்டில், பீரோ, வாசிங் மிஷின், டிவி, ஃப்ரிட்ஜ் என மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டாரிடம் கேட்காமலே தானகவருகின்றச (மறைமுகமாக மனக்கணக்கிட்டு) சீதனங்கள் வாங்கிக்கொள்ளலாம். ஏனென்றால் அது ஹலால் ( அனுமதிக்கப்பட்டது}. “மகர்’ என்பதும் படு பிற்போக்கானதே. அது பெண்ணை விலைகொடுத்து வாங்குவது.

 5. //வரதட்சினை வாங்கி/கொடுத்து நடத்தப்படும் திருமணத்தை-அது தோழர்களுடையதாயினும் சரியே- கலந்து கொள்ளாமல் எதிர்த்து புறக்கணியுங்கள். பிரியாணி உட்பட. காலி மண்டபங்களில் திருமணம் செய்ய மானமுள்ளோர் தயங்கட்டும்? வரதட்சினை ஒழிப்பில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது.//

  மிகச் சரியான வாதம்

 6.  “வரதட்சணையை நாங்களாக ஏதும் கேட்கவில்லை, நீங்களாக பார்த்து செய்தால் போதும்” என்று நல்லவர்கள் போல பேசுவார்கள். உறவினர்களை விட்டு குடும்பத்தின் மேன்மை, சமீபத்தில் நடந்த திருமணங்களில் கொடுக்கப்பட்ட வரதட்சணையின் அளவு எல்லாம் சொல்லி மறைமுகமாக ரேட்டை நிர்ணயம் செய்வார்கள். நேரடியாக கேட்பதை விட இரகசியமாக கேட்பது மகா கேவலமானது.”
  இது பணக்கார முஸ்லீம்களுக்கு முற்றிலுமாக பொருந்தும். முஸ்லீம்களில் வரதட்சனை வாங்குவது ஹராம் என்பதினால், இவர்கள் ஒன்றும் கேட்காத அப்பாவிகளைப் போல் நடித்துக் கொள்வார்கள்.

 7. நானும் ஒரு பைசா கூட வாங்கவில்லை. அதற்கு காரணமும் TNTJ தான். (TNTJ – னு சொன்னதால் நான் மத வெறி பிடித்தவன் என்று யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்). உண்மையைச் சொன்னேன்.

  • என்ன ஒரு பிதற்றல். TNTJ என்ன மதவெறி அமைப்பா? அதன் அற்புதமான கடுமையான உழைப்பால் உங்களை மாதிரி எத்தனையோ பேர் நல்வழி பெறவில்லையா? அதன் பிரச்சாரத்தினால் தானே நீங்கள் வரதட்சனை வாங்காது சுயமரியாதையான ஆண் மகனாக தலைநிமிர்ந்து நிற்கிறீர்கள்.

   அல்லாஹுக்கு நன்றி சொல்லுங்கள். அவனிடம் TNTJ ன் பனி மேலும் சிறப்புற நடக்க பிரார்த்தியுங்கள்.

   அவதூறு பேசுகிறவனையும் அபாண்டமாக குற்றம் சுமத்துகிற அல்லகைகளை பொருட்படுத்தாதீர்கள்.

   • என்ன ஒரு பிதற்றல். TNTJ என்ன மதவெறி அமைப்பா? /////////////////////////
    என்னது காந்திய சுட்டுட்டாங்களா?

    • முன்பெல்லாம், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மட்டும்தான் முஸ்லிம்களை மதவெறியர்கள் என்றார்கள். இப்போது நீங்களும் கிளம்பி விட்டீர்கள். உங்களிருவருக்கும் என்ன வித்தியாசம்? சரி போகட்டும். TNTJ-வின் மதவெறி என்னவென்று சொல்லமுடியுமா? எத்தனை ஹிந்துக்களை கொன்றிருக்கிறார்கள்? எத்தனை கிருத்துவர்களை எரித்திருக்கிறார்கள்? மதவெறி என்றாலாவது என்ன என்று விளங்கி வைத்திருக்கிறீர்களா? பற்று – வெறி இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றாவது தெரியுமா? ‘என் பெயர் முஹம்மத்’ என்று கூறுவதே மதவெறியாகி விட்டதா இப்போது?

    • முஹம்மத்,

     விடுங்கள். இவர்கள் என்னதான் கூவினாலும்
     நியாயமான சரியான மனம் படைத்த பல மாற்றுமத
     சகோதரர்களை TNTJ ன் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்
     மூலமாகவும் சமுதாய சேவைகளின் மூலமாகவும்
     இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படவைத்திருக்கிறாகள். இதை
     அறிந்துதான் இவர்கள் பதறுகிறார்கள்.

     இவர்களும் காழ்ப்பில்லாமல் இஸ்லாத்தை அணுகினால்
     உணர்ந்துகொள்வார்கள் இஸ்லாம் உன்னதமான
     மார்க்கம் என்பதை.

     பிரார்த்திப்போம். அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக.

   • இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. யாரும் நீ மத வெறியனா? என்று என்னை கேட்கவில்லை. இங்கே அப்படி ஒரு எண்ணம் இருப்பதால் நானாக முன்வந்து சொல்கிறேன். இதை பெரிதுபடுத்த வேண்டாம்.

 8. பாஸ், கல்யாணம் பண்ணிகுறது எதுக்குன்னனா, பொன்னும் பையனும் அவங்கவுங்க குடும்பத்தோட சந்தோசமா இருக்குறதுக்கு! பொண்ணு வீட்டுக்கு போன பொண்ணு வீட்டுக்கு செலவே! இதையே சாக்க வைச்சு டிமாண்ட் பண்ணினா தான் அது தப்பு.

  அவர் அவர் பெண் பிள்ளை, அவள் குடும்பம்  நன்றாக வாழவேண்டும் என பெண் வீட்டார் செய்வது வரதட்சணை ஆகாது. அவர்கள் பிரியப்பட்டு  வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் கொடுப்பது அவரவர் பெண் பெயரிலேய செய்யட்டும். டிமாண்ட் செய்து வாங்குவதே தவறாகும்.

  திருமண செலவை சரி பதியாக பகிர்ந்துக்கலாம்.  

  அவங்க பொண்ணு , மருமகன் வெளி தேசம் போயி சந்தோசமா இருக்கொனுன்னு பெற்றவர்கள் ஆசை படுவது எப்படி தப்பாகும்?  அவங்களாலே “முடிஞ்ச அளவு”க்கு பிரியப்பட்டு செய்வது எப்படி தப்பு சொல்லுவீங்க? பெண் வீட்டாரை வற்புறுத்தி வாங்கினா அது நிச்சயமா தண்டிக்க பட வேண்டிய தண்டனையே! 

  • நியாய தராசு!

   சமூகத்தில் வரதட்சணை என்பது இருப்பதால் தான், கேட்காமலும் கொடுக்கிறார்கள். வற்புறுத்தினாலும்… புறுத்தவிட்டாலும், வரதட்சணை, வரதட்சணை தான்.

 9. வரதட்சணை கொடுக்காமல் பென்விட்டின் சகோதர்கள் சொத்தை கொள்ளை அடித்த சம்பவங்கள் நெறைய உண்டு . ஒரு வீட்டில் பெண் பிறந்தால் அவளுக்கும் அந்த வீட்டின் சொத்தில் பங்கு உண்டு அதை தட்சணையாக தரவேண்டோம் அதை அவள் பேரில் எழுதினால் அவங்கள் பிள்ளைகள் வளம் பெறுவார்கள் . இதை வீனவு ஒரு இடத்திலும் தெளிவாக சொல்ல வில்லை முற்றிலும் ஒரு தலை பட்சமான கட்டுரை .

  • சொத்தே இல்லாவிட்டாலும், கந்து வட்டிக்கு வாங்கியதை மாப்பிள்ளை வீட்டார் புடுங்குகிறார்கள். இதில், சொத்து இருந்தால்… மாப்பிள்ளையாவது விடுவதாவது! கட்டுரையில் இருப்பதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் புலிக்குட்டி. பிறகு, விடுபட்டவைகளை பார்க்கலாம்.

 10. வாழ்க்கைத் துணை ஒப்பந்தம். பேசி முடிப்பவர். பெற்றோர், உறவினர் மற்றும் முகவர்.

  பெண்ணிற்கு 21 வயதில்ஆரம்பிக்கப்பட்ட துணை தேடும் படலம் 28-30 ல் முடிவடையும் அவலம். அதற்குள் ஏற்படும் அவமானங்கள், கேட்கப் பட்ட கேள்விகள், பார்வைகள், விசாரிப்புகள் ஏராளம். உதாரணமாக நாளிதழ் ஒன்றில் வரும் விளம்பரத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். கேட்கப்படும் கேள்வி நகை/பணம் எவ்வளவு, குறைவாக கூறினால் அழைப்பு துண்டிக்கப்படலாம்.

  பெற்றோர் நிலை அவர்கள் பெற்றோர் இவ்வளவுதான் சீர் செய்தனர். அதே சீர்தான் இப்போதும் தன் மகளுக்கு செய்யமுடியும் என்பது. இது பொருளாதார நிலையால். ஆண்டுகள் செல்ல பெண்ணின் நிலை ஏதோ ஒன்று அமைந்தால் போதும். துணை ஒன்று வேண்டும். படித்தவனா, உழைத்து சம்பாதிப்பவனா என்பது பின் தள்ளப் படுகிறது.

  அதே பெற்றோர் தன் மகனுக்கு பெண் பார்க்கும் போது ஒன்னுமில்லாதவன் உன் தங்கைக்கு இத்தனை கேட்டான் உனக்கு இப்படி கேட்கனும். வினவு கூறியதை போல அவர்கள் தேடுவது அதிக சொத்துள்ள, அல்லது அதிக நகையோடு வரும் மருமகள். ஆனால் அங்கும் ஏளனத்தை காண்பது உறுதி. ஆனால் அவர்களுக்கு பழகி விட்டது. அல்லது குறிக்கோள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டது.

  கொடுமை என்னவென்றால் சம்பத்தபட்ட பெற்றோரே சந்தித்து இம்முடிவுகளை எடுக்கின்றனர். குறுக்கே சாதக பொருத்தம் வேறு. மன்னிக்கவும் சோதிட பொருத்தம். இது ஒரு பெருங்கதை. ஆனால் வாழ்க்கையில் இணையும் நபர்கள் சந்திப்பதேயில்லை. கருத்து பரிமாற்றமோ அறவே இல்லை.

  என் சகோதரன் ஒருவர் சொல்வார் சொந்தத்தில் பெண் தேடாதே வெளியில் எடு. சொந்தம் பெருகட்டும் என. வினவு சாதி கடந்து செய் என்கிறது. சரிதானே

  தாலி மறுத்த தோழர்களின் திருமணத்தை கண்ட என்னால் அதை புறக்கணிக்க இயலாது போனது ……………..

  திருமணச் செலவுகள், இரு வீட்டிலும் என்றாலும், பெண் வீடு அதிகமான செலவுகளை செய்ய/ஏற்க வேண்டியுள்ளது. இனத்திற்கு இனம் இதுவும் வேறுபடுகிறது.

  தாலியும், பெண்ணின் சேலையும மாப்பிள்ளை வீட்டார் செலவு. பெண்ணிற்கு இத்தனை பவுன் நகை என்பதே பேரம். பட்டுப்புடவைக்கு செலவிடும் தொகை அதை பயன்படுத்து காலம் சம்பந்தமே இல்லை. ஆம் அந்த இனம் அப்படியே பழக்கப்படுத்தபட்டு விட்டது.

  அடுத்து பரம்பரைச் சொத்து – மன்னிக்கவும் இது மிகக்குறைவாக இருக்கும் நடுத்தர வர்கத்திற்கு – திருமணச் செலவுகள் செய்து விட்டதால் சொத்துரிமை வழங்கப்பட்டும் பெண்ணிற்கு மறுக்கப்படும் வாரிசு சொத்துக்கள். முழுவதும் ஆணுக்கே என்றொரு உயில் அல்லது நிர்பந்ததில் கையெழுத்து பெறுவது.

  இரணடு பெண்கள் உள்ள வீட்டில் இன்னொரு பிரச்சினை. மூத்தவளுக்கு இத்தனை பவுன் போட்டியே எனக்கும் அதே மாதிரி.

  திருமணம் முகவர் மூலம் முடிந்தால் கழிவுத் தொகை முகவருக்கு. இதற்கான இணையதளங்கள், முகவர்கள் பலபல. இவர்களுக்கு செலுத்திய தொகையில் என்னென்னவோ செய்திருக்கலாம்.

  உழைப்பை மறந்து ஓசியில் பணம் கிடைக்குமா, திடீர் பணக்காரனாக முடியுமா, குறைந்த பட்சம், இரு சக்கர வாகனம் அல்லது 4 சக்கர வாகனம் தன் உழைப்பால் வாங்க வக்கில்லாதவர்கள், இந்த சந்தையை பயன் படுத்திக் கொள்கின்றனர்.

  பட்டியலிட்ட தட்சணைகள் எல்லாம் எழுதாத சட்டங்களாக உள்ளன. மக்களும் அதற்கு பழக்கப்பட்டு விட்டனர்.

  இந்த இடுகை மாற்றத்தை ஏற்படுத்தட்டும் மனதில், மானுடம் செழிக்கட்டும் உறவில்.

 11. நல்ல பதிவு, திருமணம் செய்து கொள்பவர்கள் திருமணத்துக்கும் முன்னர் செல்போனில் பேசுவது வரதட்சனை பற்றியதாக இருந்தால் முக்கால் வாசி திருமணம நின்றே போகும். மணமகள் தப்பிக்கலாம்.

 12. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

  அருமையான பதிவு…மிக்க நன்றி…

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

 13. இந்த வரதட்சணை கொடுமை என்பது சராசரியாக நூற்றில் இரண்டு … இன்று பெரும்பாலும் திருமணமான முப்பது சதவீத குடும்பங்களில் பெண்கள் ஆட்சி தான் நிலவுகிறது… இதனை குறித்து எழுதும் நீங்கள் பல குடும்பங்களில் மனைவிமார்களால் சித்திரவதை படும் கணவர்களின் அவஸ்தையை எழுதுவதில்லையே ?

 14. தமிழக இஸ்லாமிய இளைஞர்களிடையே வரதட்சனை ஒழிப்பில் பிஜேவும் அவர் சார்ந்திருந்த இயக்கங்களும் ஆற்றிய பணிகள் மறுக்கவியலாதவை. இந்திய அளவில் வரதட்சினை எனும் தீமைக்கு எதிரான பரப்புரைகள் என இவைகளை கொண்டாலும், சாராம்சத்தில் இது பாதிதான். இஸ்லாத்தில் வரதட்சணைக்கு பதிலாக ஒருவிதத்தில் தனதட்சினை இடம்பெறுகிறது. வரதட்சினை கொடுமைகள் அளவிற்கு மோசமாகிவிடவில்லை என்றாலும் சௌதியில், குறிப்பாக எகிப்தில் நாற்பதை நெருங்கியும் திருமணம் செய்துகொள்ள பணமின்றி முதிர் கண்ணன்கள் அதிகம்.

  செங்கொடி 

  • //சௌதியில், குறிப்பாக எகிப்தில் நாற்பதை நெருங்கியும் திருமணம் செய்துகொள்ள பணமின்றி முதிர் கண்ணன்கள் அதிகம்.//
   –இல்லை செங்கொடி. இது மிக மிக மிக அரிது. ஏனென்றால், அரசே முன்வந்து ஆண்களுக்கு ‘திருமண லோன்’ கொடுக்கிறதே… சவுதியில் இருக்கும் தாங்களுக்கு இது தெரியாதா என்ன? அப்புறம் எப்படி //பணமின்றி முதிர் கண்ணன்கள் அதிகம்// என்கிறீர்கள்?

   ஆணின் படுகேவலமான குணநலன், குற்றப்பின்னணி ஆகியவற்றால் அவன் புறக்கணிக்கப்படுதல் (அல்லது) நோய், ஊனம், நிறம், வருவாயிண்மை போன்ற குறையுடன், பணக்கார அழகிக்காக வேண்டி தம் சக்தி மீறி ஆண் முயற்சிப்பது (அல்லது) எல்லாமிருந்தும் மகர் கொடுக்க மனமில்லாத படு கஞ்சனாக இருப்பது போன்றவைதான் காரணங்களாக முடியும். பத்தாயிரத்தில் ஒருவன் என்ற ரீதியில்…

  • //இஸ்லாத்தில் வரதட்சணைக்கு பதிலாக ஒருவிதத்தில் தனதட்சினை இடம்பெறுகிறது//

   இது ஒரு புரட்சி இல்லையா? பெண்ணை மணமுடிப்பதற்கு பெண்ணிடமோ பெண்ணைச் சார்தவர்களிடமோ தட்சிணை கேட்பதற்கு பதிலாக பெண்ணுக்கு கொடுத்து முடிப்பது சமுதாய மறுமலர்ச்சி இல்லையா?

   காமாலை கண்ணுக்கு வேறு எப்படித்தான் தெரியும்?

  • நண்பர்கள் நெ.முகம்மது, இனிமை

   முதலில், வரதட்சனை கொடுமைகளை பற்றி பேசவேண்டிய இந்த விவாதம் இஸ்லாமிய எதிர்ப்பாக திரும்பிவிடக்கூடாது என நினைக்கிறேன். எனவே சிறு விளக்கம் மட்டும்.

   சௌதியில் திரும‌ண‌ம் முடிக்க‌முடியாம‌ல் இருப்ப‌து எண்ணிக்கையில் எவ்வளவு என்ப‌தைவிட‌ மூன்றாயிரம் சௌதி ரியால் வ‌ரை சுல‌ப‌த்த‌வ‌ணை க‌ட‌னாக‌ கொடுத்து திரும‌ண‌ம் செய்விக்க‌த்தூண்டும் அள‌வில் இருக்கிற‌து என்ப‌தே போதுமான‌து. ஆனால் இது போன்ற‌ க‌ட‌னுத‌வித்திட்ட‌ங்க‌ள் எதுவும் எகிப்தில் இல்லை, இதை க‌ருத்தில் கொண்டுதான் முத‌ல் பின்னூட்ட‌த்தில் \\சௌதியில், குறிப்பாக எகிப்தில்// என்று குறிப்பிட்டிருந்தேன்.

   பெண் வீட்டாரை கொடுக்க‌வைப்ப‌த‌ற்கு ப‌தில் ஆண்வீட்டாரை கொடுக்க‌வைப்பதால் ம‌ட்டுமே அது புர‌ட்சிக‌ர‌ உள்ள‌ட‌க்க‌த்தை கொண்ட‌தாகிவிடாது. அர‌பு நாடுக‌ளில் பெண்வீட்டார் கொடுப்ப‌து ம‌ர‌பில் இல்லை, அவ்வ‌ள‌வுதான்.

   செங்கொடி

   • நபி (ஸல்) அவர்களால் இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர் பண்டைய அரபுக்களிடம் பலவித மௌட்டீகங்களுடன் பெண்ணடிமையும், பெண்களை ஒரு போகப்பொருளாக கருதிய நிலைமைதான். பெண் ணுரிமை பெண்ணுரிமை என்று இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் போல் அல்லாமல் இஸ்லாம் அப்போதே பெண்களுக்கு பல புரட்சிகரமான உரிமைகளை சட்டங்களாகவே அமுல் படுத்தியது. அவற்றில் ஒன்று தான் திருமணக்கொடை(மஹர்).

    இல்லறவாழ்க்கையில் அதிகமாக இழப்புக்குள்ளாவது(அழகு, இளமை) சிரமத்திற்குள்ளாவது(மகப்பேறு) தியாகங்கள் செய்வது(தன் பிறந்த வீட்டையே துறப்பது) பெண்கள் தான்.

    இவ்வளவையும் எதிர்நோக்கின்ற பெண்களிடம் வரதட்சணை வாங்குகின்ற அயோக்கியத்தனத்தை விட்டு அவர்களுக்கு மணக்கொடை கொடுங்கள் என்று சொல்லுகின்ற மார்க்கம் அதை சட்டமாக்கின கடவுள் எவ்வளவு தீர்க்கமான அறிவுள்ளவனாக இருப்பான்.

    இழப்புக்கும் சிரமத்திற்கும் தியாகங்களுக்கும் உரிய பெண்களிடம் மணக்கொடையை பெறுகின்ற உரிமையை அவர்களிடம் கொடுப்பதுதானே நியாயம் அறியுடைமை.

    இதை எந்த மனித சட்டம் இஸ்லாத்திற்கு முன்பும் பின்பும் அமுல்படுத்தியுள்ளது. இதை அறிவுள்ளவர்கள் பெண்களை மீட்டெடுக்க வந்த புரட்சிகர திட்டம் என்றே புரிந்துகொள்வர்.

    பெண்ணுக்கு மணக்கொடை கொடுக்க வேண்டும் என்று நிற்பந்தமாகும்போது ஆண் கண்டிப்பாக நன்றாக உழைக்க வேண்டும். அப்படி உழைப்பவர்களுக்கு தான் கல்யாணம். அவர்கள் தான் கல்யாணத்திற்கு பிறகும் மனைவி, மக்களை காப்பாற்றுவார்கள் என்று இஸ்லாம் அக்கறைகொள்கிறது.

    பெண்களிடம் வாங்கித்தின்று பேடிகளாக இருக்காதீர்கள் என்று போதிக்கிறது.

    இந்த பேடிகளை கண்டு இஸ்லாம் வெறுக்கிறது.

    பேடிகளுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு? பேடிகளுக்காக வக்காலத்து வாகுபவர்களை தவிர?

    • //பெண்களிடம் வரதட்சணை வாங்குகின்ற அயோக்கியத்தனத்தை விட்டு அவர்களுக்கு மணக்கொடை கொடுங்கள் என்று சொல்லுகின்ற மார்க்கம் அதை சட்டமாக்கின கடவுள் எவ்வளவு தீர்க்கமான அறிவுள்ளவனாக இருப்பான்.//

     சிறு சந்தேகம், அந்த கடவுள் ஏற்கனவே பல தூதர்களை அனுப்பியிருக்காராமே! பல வேத புத்தகங்களையும் கொடுத்துள்ளாராமே! அப்போதே ஏன் இன் இந்த அறிவுள்ள செயலை செய்யவில்லை

    • //பெண்களிடம் வாங்கித்தின்று பேடிகளாக இருக்காதீர்கள் என்று போதிக்கிறது.
     இந்த பேடிகளை கண்டு இஸ்லாம் வெறுக்கிறது.//

     வரதட்சணை வாங்குபவன் எவனாக இருந்தாலும் பேடி தான்! ஏன் பெண்ணுக்கு கொடுக்கும் வழக்கம்! அப்போது பெண்களுக்கு மட்டும் தட்சணை என்பது பெண்கள் தொகை குறைவாக இருந்திருக்கலாம் என்ற லாஜிக்கில் வரும் இல்லையா!?

    • பையா,

     பல தூதர்கள் மூலம் சொன்னார்தான். உம்மைப்போல்
     மூடர்கள் அதை மறுத்து மறைத்து நின்றதால் மீண்டும்
     சொல்லவேண்டிய நிலை. நீர் கடவுளையே மறுத்து
     நிற்கவில்லையா? அவர்கள் கடவுளின் வார்த்தையை.

     அதுசரி நீர் அறிவுபூர்வமாக எதையும் பேசமாட்டீரா?

     TNTJ அலுவலகத்தை இன்னுமா தொடர்புகொள்கிரீர்?

   • ///பெண் வீட்டாரை கொடுக்க‌வைப்ப‌த‌ற்கு ப‌தில் ஆண்வீட்டாரை கொடுக்க‌வைப்பதால் ம‌ட்டுமே அது புர‌ட்சிக‌ர‌ உள்ள‌ட‌க்க‌த்தை கொண்ட‌தாகிவிடாது.///—தவறு செங்கொடி. அதுதான் புரட்சி.

    ஆண், தான் திருமணம் ஆகி பல குழந்தை பெற்ற பின்னும் பல வருடங்கள் கழித்தும் புது மாப்பிள்ளை போல இருப்பான். (௬௦ வயசானாலும் இளமை மாறாமல் கதாநாயகர்களாகவே நடித்த/நடிக்கும் நடிகர்களை உதாரமாக்கிக்கொள்ளவும். நடிகைகள்?) ஆனால் பெண்கள், அப்படியா? தாய்மை அடைவதினாலும் குழந்தை பெறுவதினாலும் தங்கள் அழகை, வனப்பை, சக்தியை, தன் தனிப்பட்ட சுய வாழ்க்கையை, சுதந்திரத்தை (குழந்தை அழுதால் பாலூட்ட அருகில் இருக்க வேண்டும்… அலுவலகம் செல்ல முடியுமா? வீட்டிலிருந்தால் கூட சாப்பிடுவதை நிறுத்திவிட்டு…, பாதி குளியலில் ஓடி வருவது.., இரவு/பகல் தூக்கமிழந்து…) எல்லாம் இழக்கும் பெண்களுக்கு ஆண்கள் என்ன நஷ்ட்ட ஈட்டை வழங்கி உள்ளார்கள்? இஸ்லாம் இதைத்தான் ரொம்பவே அட்வான்சாக மகர் என்ற தனதட்சினையை வழங்கிய பின்னர் கையை வைக்க சொல்கிறது. மகர் தொகையை மணப்பெண்களே நிர்ணயிக்கும் உரிமையும் கொடுத்துள்ளது. இதெல்லாம்…. ஆணாதிக்க… மதவாதிகளின்….. பிற்போக்கான…. அடிப்படைவாத…. காட்டுமிராண்டிகால…. பழமைவாத…. மூடச்செயல்….. என்று எதிப்பவர்களை பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

    //அர‌பு நாடுக‌ளில் பெண்வீட்டார் கொடுப்ப‌து ம‌ர‌பில் இல்லை, அவ்வ‌ள‌வுதான்.// —மரபில் இல்லையா? இஸ்லாத்தில் உள்ளதா? மரபை இஸ்லாம் உடைத்தெறிய வில்லையா?

    • “ஆண், தான் திருமணம் ஆகி பல குழந்தை பெற்ற பின்னும் பல வருடங்கள் கழித்தும் புது மாப்பிள்ளை போல இருப்பான். (௬௦ வயசானாலும் இளமை மாறாமல் கதாநாயகர்களாகவே நடித்த/நடிக்கும் நடிகர்களை உதாரமாக்கிக்கொள்ளவும். நடிகைகள்?) ஆனால் பெண்கள், அப்படியா? தாய்மை அடைவதினாலும் குழந்தை பெறுவதினாலும் தங்கள் அழகை, வனப்பை, சக்தியை, தன் தனிப்பட்ட சுய வாழ்க்கையை, சுதந்திரத்தை (குழந்தை அழுதால் பாலூட்ட அருகில் இருக்க வேண்டும்… அலுவலகம் செல்ல முடியுமா? வீட்டிலிருந்தால் கூட சாப்பிடுவதை நிறுத்திவிட்டு…, பாதி குளியலில் ஓடி வருவது.., இரவு/பகல் தூக்கமிழந்து…) எல்லாம் இழக்கும் பெண்களுக்கு ஆண்கள் என்ன நஷ்ட்ட ஈட்டை வழங்கி உள்ளார்கள்? ”

     🙂 🙂 🙂 Are you serious?

     நீங்க‌ள் சொல்லும் நட்ட ஈடு, த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளில் ரெள‌டிக‌ளின் த‌லைவ‌ன் தான் கொலையைச்செய்துவிட்டு தனக்கு கீழிருக்கும் ஒருவனுக்கு காசு கொடுத்து சரணடையச் சொல்வது போலுள்ளது.

     இல்லைத் தெரியாமல்த்தான் கேட்கிறேன், பிள்ளையை உருவாக்குவதில் முழுதாக ஒத்துழைக்கத் தெரிந்த உங்களிற்கு அக்குழந்தையை வளர்ததெடுப்பதில் ஏன் பங்கெடுக்கக் கடினமாக உள்ளது? அப்படி உங்களிற்கு குழந்தை வளர்ப்பில் பங்கெடுக்க விருப்பமில்லையெனில் ஏன் குழந்தை வேண்டும் என்று முடிவெடுத்தனியள்?

     குழந்தை வளர்ப்பதில் நீங்களும் உதவினால் ஏன் உங்கள் மனைவி தனது முழு தனிப்பட்ட சுய வாழ்க்கையையும் இழக்க வேண்டும்? சுயமாக எந்தவித interests ஓ, metal stimulation ஓ இல்லாமல் robort மாதிரி வாழ்ந்து அவ்வாறே பிள்ளையும் வளர்ப்பின் அப்பிள்ளையின் எதிர்காலம் என்னாவது?

     “குழந்தை அழுதால் பாலூட்ட அருகில் இருக்க வேண்டும்… அலுவலகம் செல்ல முடியுமா? வீட்டிலிருந்தால் கூட சாப்பிடுவதை நிறுத்திவிட்டு…, பாதி குளியலில் ஓடி வருவது.., இரவு/பகல் தூக்கமிழந்து”

     தேவையில்லை. இப்போது தொழில்நுட்ப‌ம் எவ்வ‌ள‌வோ வ‌ள‌ர்ந்து விட்ட‌து. Mother can express milk and store it. Then anybody can feed the baby. Infact it is actually good for the father to feed the frequently, so it gives him a chance to bond with the baby and also gives the mother some much needed break.

     இங்கெல்லாம் ஒரு தாய் பிள்ளை பிற‌ந்து சில‌ மாத‌ங்க‌ளில் வேலைக்கு ப‌குதி நேர‌மாக‌வோ, முழு நேர‌மாக‌வோ வேலைக்கு வர‌ விரும்பின் அநேகமான வேலைத்த‌ள‌ங்க‌ளில் இடையிடையே பால் express ப‌ண்ண‌ அனும‌தி வ‌ழ‌ங்க‌ வேண்டும். அத்தோடு midwives, doctors, nurses and other birthing educators encourage the father to get up some nights to feed the baby, again to give the mother some rest.

     பிள்ளை வ‌ள‌ர்ப்பில் (வீட்டு வேலகளிலும் கூட) அம்மா அப்பா இருவ‌ரின் ப‌ங்க‌ளிப்பும் இருப்பின் ஒருவ‌ரே த‌னியத் த‌ம்மைத்தியாக‌ம் செய்ய‌த்தேவையில்லை, இருவருக்கும் தமது இலட்சியங்களை அடைய வாய்ப்புக்கள் கிடைக்கும், அதுவே பிள்ளைக்கும் மிக‌ ந‌ன்மையாகும்.

   • “–பெண் வீட்டாரை கொடுக்க‌வைப்ப‌த‌ற்கு ப‌தில் ஆண்வீட்டாரை கொடுக்க‌வைப்பதால் ம‌ட்டுமே அது புர‌ட்சிக‌ர‌ உள்ள‌ட‌க்க‌த்தை கொண்ட‌தாகிவிடாது–” எந்த விதமான சமூக கட்டமைப்பு கோட்பாடுகளை கொண்டு இவ்வாறு கூறுகிறீர்கள் என் தெரியவில்லை. திருமணம் என்பது ஆணும் பெண்ணும் உடலால் சேர்வதற்கான ஊடகம் அவ்வளவுதான் எனவே யாரும் யாருக்கும் பொறுப்பு அல்ல என்ற ரீதியிலேயே உங்கள் கருத்து இருக்கிறது.
    மாறாக இஸ்லாம் சொல்லும் சமூக கட்டமைப்பு குடும்பம் சார்ந்ததாகவும் அதன் மனிதர்கள் சார்ந்ததாகவும் இருக்கிறது. அந்த கட்டமைப்பில் ஆண் தான் குடும்பத்திற்கான bread winner. அதன் அணைத்து பொருளாதார தேவைக்கும் அவனே பொறுப்பாளி. ஒரு பெண்ணிற்கான, தனக்கு பிடித்த பெண் கேட்கின்ற மஹரை (அது அவளுக்கான வாழ்வாதாரமாக, இந்த கணவன் விட்டுச்சென்றால் மரணித்தல் அவளது பராமரிப்பிற்கான தேவையாக அவள் கேட்கிறாள்) கூட தர முடியாத சோம்பேறியாக ஒரு ஆண் இருக்க வேண்டும் என சொல்கிறீர்களா? ஒரு ஆண் மகன் உழைத்து அவன் குடும்ப பொறுப்பை ஏற்க கூடியவனாக இருந்தால் அவனுக்கு மஹர ஒரு பொருட்டாகவே இருக்காது. ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு தீர்ப்பளிப்பதற்கு இஸ்லாம் ஒன்றும் Sattellite டிவி க்கள் நடத்தும் ஒரு மணி நேர பேச்சு போட்டியோ பட்டி மன்றமோ அல்ல. அது இறைவன் வழங்கிய முழுமையான வாழ்க்கை திட்டம். அணைத்து சாதக பாதகங்களையும் அலசித்தான் ஒரு தீர்வு சொல்ல வேண்டும். உங்களை போல சொல்ல ஆரம்பித்தால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை தான். பானை ஒன்றில் ஒரு ஓட்டையை அடைகிறேன் என்று புதிதாக பல ஓட்டைகளை போட்டு விடக்கூடாது பாருங்கள். வரதட்சணைக்கு தீர்வு சொல்லி (சீரான) குடும்பம் என்ற ஒன்று இல்லாத சமூகமகத்தை உருவாக்கிவிட கூடாது.

 15. //இந்த எழவுகளை பொருத்தம் பார்த்து எப்படியோ//

  //பார்த்து எல்லா எழவும் பார்த்துக்கூட தொலையட்டும்.//

  இதில் “எழவு” என்ற வார்த்த்தை தேவை இன்றி பயன்படுத்தப்பட்டிருக்கிறது  என நினைக்கிறேன்,

  //…கை நிறைய சம்பளம் வாங்கும் கபோதிகள் அத்தோடு திருப்தி….//

  யாரு கபோதி? கை நிறைய சம்பாதிக்கிரவனா? அதில் திருப்தி அடையாதவனா?

  ” கை நிறைய சம்பாதித்தும் திருப்தி அடையாத  கபோதி ”  இப்படி எழுதுங்க அதை விட்டுபுட்டு சம்பாதிக்கறவனை எதுக்கு கபோதி என திட்டணும்?.

  • தவறுதான் அரங்கப்பெருமாள். கட்டுரையின் வீச்சில் இப்படி சில நடந்துவிடுகின்றன. திருத்திக் கொள்கிறோம். இனி எச்சரிக்கையாக இருக்கிறோம். நன்றி

 16. திருமணம் பேசி நிச்சயிப்பது என்பது வரதட்சணை பேசி முடிப்பது தான். வரதட்சணை பேசும் பொழுது… உடனிருந்து யாராவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு வியாபார விசயம் மாதிரி, மிகவும் கறாராக, இரக்கமேயில்லாமல் விவாதிப்பார்கள். இந்த விவாதத்தில்… சம்பந்த பெண் உடனிருந்து பார்த்தால்… சுய மானமுள்ள எந்த பெண்ணும் கோபப்படுவாள்.

 17. //இப்போது சொல்லுங்கள் உங்களில் யார் சதீஷை கண்டிக்கிறீர்கள்?//

  இப்படி படிக்கிறவர்களை கேள்வி கேட்டு துளைக்கிறீர்கள். பாருங்கள். பின்னூட்டங்களே இல்லை. எல்லோருக்குள்ளும் சதவித ஏற்ற இறக்கத்தோடு சதீஷ் நீக்கமற நிறைந்திருப்பது தான் காரணம்.

 18. //உறவினர்களை விட்டு குடும்பத்தின் மேன்மை, சமீபத்தில் நடந்த திருமணங்களில் கொடுக்கப்பட்ட வரதட்சணையின் அளவு எல்லாம் சொல்லி மறைமுகமாக ரேட்டை நிர்ணயம் செய்வார்கள். நேரடியாக கேட்பதை விட இரகசியமாக கேட்பது மகா கேவலமானது.//

  இது பரவலாக இருக்கும் சமூக நடைமுறை தான். எனக்கே நேரிடையான அனுபவம் ஒன்று உண்டு. நெருங்கிய குடும்பத்தில்… பெண் பார்த்து பேசி முடித்தார்கள். அந்த குடும்ப நபரிடம் எவ்வளவு வரதட்சணை? என்றேன். அதெல்லாம்.. பேசவேயில்லை. “நீங்கள் உங்க பெண்ணுக்கு போடுவதை போடுங்கள்! என சொல்லிவிட்டோம்” என நல்ல பிள்ளையாய் பேசினார்கள்.

  “இவ்வளவு போடு என பேசுவதை விட… இது ரெம்ப அயோக்கியத்தனம்” என்றேன்.

  திருமண நாளில்… பெண் உம்மென்று இருந்தது. ஏன்? ஏதும் பிரச்சனையா? என விசாரித்தால்… நடுத்தர வர்க்கம் கூட அந்த பெண் குடும்பம் இல்லை. இருப்பினும் 30 பவுன் போட்டிருக்கிறார்கள். அது பத்தாது என அப்பாவிடம் சண்டை போட்டதாம் அந்த பெண். நல்ல பொண்ணுய்யா! ஜாடிக்கேத்த மூடி தான் என நினைத்துக்கொண்டேன்.

 19. என்னுடையது காதல் திருமணம். கணவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் அவருடைய வீட்டாரே முன்நின்று செய்தனர். திருமண செலவுகளை இருவரும் பகிர்ந்து செய்வதாக திட்டம். ஆனால் கணவர் வீட்டாரின் தேவையில்லாத செலவுகளால் என் வீட்டில் பணம் கேட்க வேண்டியதாகி விட்டது. என்னுடைய சேமிப்பும் என் பெற்றோர் கொடுத்த பணமுமாக கணவரைவிட பல மடங்கு என்னுடைய பணம் செலவானது. ஆனால் என் மாமியார் ஊரிலிருந்து திருமணத்துக்கு வந்த பெற்றோரை பைசா செலவில்லாமல் கல்யாணத்தை முடிச்சிட்டீங்களே என எல்லோர் முன்னிலையில் வைத்து கேட்டார். திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆன பின்னும் மாமியார், என்னைப் பார்க்க வரும் பெற்றோரிடம் தவறாமல் சொல்லும் வாக்கியம் இது. இத்தனைக்கும் வரதட்சணை தரவே மாட்டேன் என உறுதியாக கூறிக்கொண்டுதான் திருமணம் செய்தேன். கணவரைவிட நான்கு மடங்கு அதிகமாகவே சம்பாதிக்கிறேன். திருமணத்துக்காக அவர் வாங்கிய கடன்களை நானே அடைத்தேன். 2 பேர் குடும்பம் நடத்துவதற்கான பொருட்களோடுதான் திருமணம் செய்துகொண்டேன். என் மாமியாருக்கு இதெல்லாம் கணக்கில் வராதது. மூத்த மருமகள் 2 லாரி நிறைய வரதட்சணை பொருட்களோடு வந்தது மட்டும்தான் கணக்கில் இருக்கிறது. மாமியார் குடும்பத்துக்கும் பணம் கொடுத்தாலும் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து படிக்க வைத்த என் பெற்றோருக்கு பணம் கொடுப்பது அவர்களுக்கு உறுத்தலாக தெரிகிறது. பணமும் சம்பாதித்துக் கொடுத்து வேலைக்காரியாக, பொண்டாட்டியாக இருந்தும் பெரிதாக நல்ல பெயர் கிடையாது. சம்பாதிக்கிற திமிறு, அடங்காப்பிடாரி என பேர் கொடுப்பார்கள். இன்னும் நிறைய இருக்கிறது…திருமண அமைப்பில் இத்தனை எழவுகள் இருக்கும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பதைவிட அதைவிட்டு வெளியே வந்துவிடலாம் என்றால், சமூகத்தை நினைத்தால் இன்னும் கடுப்பாகிறது. இப்போதைக்கு என்னுடைய தேர்வு, அறியாமையில் இருக்கும் கணவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஏதாவது சொல்லி புரியவைக்கலாம் என்பதுதான். வேறு என்ன செய்ய?!

  • வாழ்த்துக்கள். தொடர்ந்து போராடுங்கள். ஒரு ஆண் என்ற முறையில் நீங்கள் சமூகம் பற்றி கூறிய சொற்களின் உண்மைக்கு முன்னால் கூனிக் குறுகுகிறேன். வெட்கமாக இருக்கிறது.

  • உங்களைப் போன்று பல பெண்கள் இந்தக்கையறு நிலையில் தத்தளிக்கிறார்கள். இருப்பினும் சூழ்நிலையைப்புரிந்து கொண்டு போராடும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்களைப்போன்றவர்கள்தான் ஆண்களின் உலகில் குற்ற உணர்ச்சியை சொரணையோடு ஏற்படுத்த முடியும். சொந்த வாழ்க்கை விசயத்தைக்கூட பொது நலனுக்காக பகிர்ந்து கொண்ட உங்கள் சமூக அக்கறைக்கு நன்றி

 20. அருமையான இடுகை. இப்போது வேலைக்கு போகும் பெண்களே பெரிதும் மணமகளாக விரும்பப்படுகிறார்கள். அதுவும் ஏடிஎம் கார்டை கணவனிடம் கொடுத்து விட வேண்டும். தேவையைச் சொல்லிவிட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற ஏற்பாட்டோடு! இது என் தோழிக்கு உண்மையில் நடந்தது. சிறிது நாட்கள் கழித்து கார்டை கேட்ட தோழிக்கு கிடைத்தது அடியும் உதையும் பின்னர் நடு இரவில் வீட்டை விட்டு துரத்தியதும்! உண்மையில் இது பெண்கள் விரும்பாவிட்டாலும் தகுதிக்காக கொடுக்க ஆரம்பிக்கும் பெற்றோர்களும் திருந்த வேண்டும்!

  • உங்கள் தோழிக்கு இத்தகைய பிற்போக்குத்தனங்களை எதிர்த்து போராடுவதற்கு நம்பிக்கை ஊட்டுங்கள் சந்தனமுல்லை.

 21. தோழர் வினவு நீங்கள் சொல்வதைப்பார்க்கும்போது இன்றைய திருமணங்கள்,காதல் யாவும் பெண்ணடிமைத்தனமாகவும்,ஆண்ணாதிக்கமாகவும் இருப்பது நன்றாக தெரிகிறது. நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்

 22. சுய மரியாதையுடன் வளர்க்கப்படும் அநேகமான பெண்கள் சீதனத்தை நிச்சயம் எதிப்பார்கள். சீதனம் ஒழிவதற்கு சமூகம் மாறவேண்டும். பெண்கள் பிறந்ததிலிருந்து திருமணமே பிறப்பின் ஒரே இலட்சியம் என்பதாகவே வளர்க்கப்படுகிறார்கள். பெண்களால் ஏன் முடியவில்லை, சீதனம் கேட்பவனுக்கு கழுத்து நீட்ட மாட்டேன் என்று சொல்வதற்கு? பெண்களைச் சுதந்திரமாகச் சிந்தித்து முடிவெடுக்க சிறுவயது முதல் பயிற்றுவிக்காமல் எப்பவும் ஒரு ஆண் மேல் சார்ந்து வாழவே பழக்குகின்றார்கள். சமூகத்தில் ஆண்‍பெண் சமத்துவம் கொஞ்சமாயினும் வராமல் சீதனத்தை ஒழிப்பது கடினம். பெண்கள் தமது சிந்தனையை மாற்றாது சீதனத்தை ஒழிக்க முடியாது. பெண்கள் சீதனம் கேட்பவனைத் திருமணம் செய்ய மாட்டோம் என முடியு செய்யின் ஆண்கள் காலத்தில் மாறத்தானே வேண்டும். கேட்கக் கேட்க கொடுப்பவர்கள் இருக்கும் மட்டும் கேட்பவர்களையும் ஒழிக்க முடியாது.

  நிறையத்தடவை யோசித்துள்ளேன் இவ்வளவு பணம், வீடு, நகை கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்வேன் என்பவனுடன் எவ்வாறு முழு மனத்துடன் குடும்பம் நடத்துவது என்று. என்னால் கற்பனை பண்ணியே பார்க்க முடியவில்லை அப்படி ஒரு வாழ்வை. என்னை ஒருத்தனுக்கு காசு கொடுத்து கட்டி வைத்து கேவலப்படுத்துவதற்குப் பதிலாக கருவிலேயே கலைத்து விடுவது எவ்வளவோ மேல் என்றே நிச்சயமாகச் சொல்வேன். அத்தோடு நான் இது பற்றி கதைக்கும் போது சொல்வதுண்டு, த‌மது மகளை இந்தளவு கேவலப்படுத்த முடிந்த பெற்றோரை முதலில் நடுத்தெருவில் நிற்க வைத்து சுட வேண்டும் என்று. ஆனால் அவர்களும் இச்சமூகத்தால் உருவாக்கப்பட்டவர்களே. எமது சமூகத்தில் தான் ஒரு பெட்டிக்கு வெளியே சிந்திக்கும் ஆட்கள் கிடைப்பதே கடினமே. அப்படிச் சிந்திப்பின் அதை செயற்படுத்த துணிந்தவர்களைக் கண்டு பிடிப்பது அதையும் விடக் கடினம்.

  • உங்களின் உறுதிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தோழி. நாங்கள் சார்ந்திருக்கும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் வரதட்சணை மறுப்பு மட்டுமல்ல, சாதி – தீண்டாமை மறுப்பு, பார்ப்பன சடங்குகள் மறுப்பு முதலிவற்றோடு மணமக்கள் ஜனநாயக ரீதியில் மணம் சம்பந்தமாக உறுதி மொழி எடுத்துக் கொண்டு எளிய முறையில் பல தோழர்கள் திருமணம் செய்கிறார்கள். பல இடங்களில் இத்தகைய திருமணங்களுக்கு பிரச்சாரம் செய்து பொதுமக்களை அழைத்து இந்த விசயங்களை அறிமுகப்படுத்துகிறோம். வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் அத்தகைய திருமணங்களை பார்வையிடலாம்.

    • மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்! அதையே உங்கள் நட்பு வட்டத்திலும் பரப்புங்கள். டிசம்பருக்குப்பிறகு உங்கள் வலைப்பூவில் பதிவில்லை. தொடர்ந்து எழுதுங்கள்.

 23. “மணம் முடிக்கும் பெண்களை ஆண்கள் ஆயுசு வரைக்கும் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த வரதட்சணையை பெண்ணின் தந்தை தரவேண்டுமென்று பாரம்பரிய விளக்கத்தை முதலில் சொல்வார்கள். இதன்படி பெண்ணென்பவள் சுமை. அல்லது மாடு. அந்த மாட்டிற்கு தீனியும், தண்ணீரும் கொடுத்து தொழுவத்தில் கட்டிவைப்பதற்குத்தான் அந்த தட்சணை. பதிலுக்கு அந்த மாட்டுப்பெண் சமையல், துவையல், இல்லப் பராமரிப்பு, விருந்தினர் உபசரிப்பு, குழந்தைகள் வளர்ப்பு, செவிலியர் வேலை, இரவில் தாசி வேலை எல்லாம் நேரத்திற்கு செய்யவேண்டும்.”

  Exactly. இந்தக் காரணத்தை நான் நிறையத் தடவை கேட்டுள்ளேன். எல்லாம் வீட்டில் செய்யும் வேலைகளுக்கு சம்பளம் யாரும் கொடுக்காததால் அதுக்கு எந்தவித மதிப்பும் இல்லை என்ற இந்த முட்டாள்களின் எண்ணம் தான் காரணம். அத்தோடு எப்பவாவது ஒருநாள் செய்து பார்த்தால் தானே அவ்வேலைகளின் அருமை தெரிவதற்கு. அத்தோடு பெண்ணும் ஆணுக்கு சமமாக வேலை செய்து சம்பாதித்தாலும் சீதனம் கொடுத்துத் தானே கட்டித்தொலைக்கிறார்கள்.

 24. சமுகம் பற்றிய நீங்கள் எழுதிய அனைத்தும் உண்மை.. எதெல்லாம் வரதட்சணை? என்று விவரித்துள்ள நிகழ்வுகள் எனது திருமணதிலேயும் நடந்துள்ளது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியிருகிறது.. ஆனால் என் மனைவியை அடிமையாகவோ, தாசியாகவோ நான் ஒருபோதும் நடத்தியதில்லை..

  *** நம்முடைய சமுதாயத்தில் இரு குடும்பங்கள் ஒன்றிணைந்தே திருமணங்களை நடத்துகின்றன, நானும் அவ்வாறே விரும்பி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு இரு வீட்டார்களுக்கிடையே நடந்த குழப்பங்கள் அனைத்திற்கும் நானே காரணம் என்று என் மனைவி என்னிடம் விவரித்தபோது என் திருமண முடிவு எனக்கே கேள்விகுறியாகி விட்டது..!! ***

  • நல்லது கார்த்திக், உங்கள் கருத்துக்களை உங்கள் நண்பர்க்களிடம் பேசிப்பாருங்கள், குறைந்த பட்சம் வரதட்சணை வாங்கக்கூடாது என்பதாவது நிறைவேற முடியுமா பாருங்கள்.

 25. சதீஷின் மனைவி மற்றும் இங்கே பெயர் குறிப்பிடாது எழுதியிருக்கும் தோழியின் நிகழ்வுகள் எல்லாம் வருத்தம் அளிப்பனவாகவும், எம் சமூகத்தின் முகங்களை எமக்குக் காட்டுவதாகவும் உள்ளன. சக துணையைத் தமக்குரிய உரிமைகளோடும், கடமைகளோடும் அங்கீகரிக்கிற மனங்களில் வரதட்சணை போன்ற பேச்சுக்களுக்குத் தேவையிருக்காது. ஆனாலும் இப்பிரச்சினைகளில் எமது பெண்களின் பங்களிப்பும் இருக்கவே செய்கிறது. தன் பெரியப்பா பெண்ணின் கல்யாணப் புடவையைவிடத் தன்னுடையது சில ஆயிரங்களேனும் அதிகமாகக் காட்டிக்கொள்வதில் பெருமையடைகிற பி.ஈ படித்த பெண்ணும், மேலைத்தேயங்களுக்கு வாழ்வு நடத்த வந்த பின்பும்கூட தம் தோழியர் கூட்டத்தில் தான் மட்டும் சும்மா இல்லை என்று காட்டுவதற்காகக் கணவனிடம் வாதிட்டு வென்று தங்கக் காப்பு வாங்கிக்கொள்கிற, அதைக் கூடிய வழிகளில் தோழியருக்கு அறிவித்து மகிழ்கிற எம்.சி.ஏ படித்த பெண்ணும் எமது சமூகத்தில் இருக்கிறார்கள் எனும்போது இவர்களின் தலைமுறைக்கு இவர்கள் எதைச் சொல்லித்தர இருக்கிறார்கள் எனும் கேள்வி இன்னும் வருத்தம் தரக்கூடியது.

  பதிவுக்கு நன்றி.

 26. //தன் பெரியப்பா பெண்ணின் கல்யாணப் புடவையைவிடத் தன்னுடையது சில ஆயிரங்களேனும் அதிகமாகக் காட்டிக்கொள்வதில் பெருமையடைகிற பி.ஈ படித்த பெண்ணும், மேலைத்தேயங்களுக்கு வாழ்வு நடத்த வந்த பின்பும்கூட தம் தோழியர் கூட்டத்தில் தான் மட்டும் சும்மா இல்லை என்று காட்டுவதற்காகக் கணவனிடம் வாதிட்டு வென்று தங்கக் காப்பு வாங்கிக்கொள்கிற, அதைக் கூடிய வழிகளில் தோழியருக்கு அறிவித்து மகிழ்கிற எம்.சி.ஏ படித்த பெண்ணும் எமது சமூகத்தில் இருக்கிறார்கள் எனும்போது இவர்களின் தலைமுறைக்கு இவர்கள் எதைச் சொல்லித்தர இருக்கிறார்கள் எனும் கேள்வி இன்னும் வருத்தம் தரக்கூடியது.//

  பெண்களுக்கு சமூகத்தில் கிடைக்கப்பெறும் சுதந்திரத்தில் இருந்துதான் மேலே செல்வநாயகி குறிப்பிட்டுள்ள அவர்களது பிற்போக்குத்தனம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

  அவர்களது வாழ்நாள் கடமைகளாக, குழந்தை வளர்ப்பும், இரவு நேரம் கணவனுக்கு செய்யும் கட்டில் சேவைகளும், இல்லப் பராமரிப்புமே முன்னிறுத்தும் படும் ஒரு சமூகத்தில், பெண்களிடமிருந்து வேறெதையும் அதிகபட்சமாக எதிர்பார்த்துவிட முடியாது. அவ்வாறு இல்லையெனில் பெண்களை இந்த இருட்டு உலகிலிருந்து தப்பிக்க வைக்க நாம் என்ன வகையான போராட்டத்தை மேற்கொண்டோம் என்ற அனுபவத்திலிருந்துதான் செல்வநாயகி குறிப்பிட்டுள்ள அவர்களின் பிற்போக்குத்தனம் எடை போடப் படவேண்டும்.

  • பூச்சாண்டி,

   பெண்களின் மீது ஏவப்படுகின்ற குடும்ப அல்லது பொதுவெளி வன்முறைகள், அப்படியான வன்முறைகளில் சிக்குண்டு நசுக்கப்படுகின்ற பெண்களை அல்ல நான் குறிப்பிட்டது. வரதட்cஅணையால் பாதிக்கப்படுகின்ற பெண்களின் மீதான அதே பார்வையைக் குறைந்தபட்ச சுதந்திரங்களோடும், வாய்ப்புகளோடும் வெளிவந்து அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான ஆதரவோடும் நிற்க முடிகிறபோதும் அந்தஸ்து, பெருமை, பீத்தல்களை விடமுடியாது அவற்றைத் தமக்குரிய ஆபரணங்களில் காட்டிக்கொள்கிற பெண்களின் மீது செலுத்த முடிந்ததில்லை என்னால். பெண்களும் இவற்றிலிருந்தெல்லாம் வெளிவருகிறபோதே நாம் நினைப்பது நடக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுவரமுடியும்.

   என் கொள்ளுப்பாட்டியும், பாட்டியும், அம்மாவும் வாழ்ந்த வாழ்விலிருந்து கொஞ்சமேனும் விடுபட முடிந்தபிறகு நானும் சமூகம் குறித்த, வாழ்வு குறித்த பார்வைகளில் அவர்கள் கொண்டிருந்த அதே மூடத்தனங்களைக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு அவர்களுக்கிருந்த அதே காரணிகளைச் சொல்லி என் தவறுகள் இயல்பென்று ஏற்றுக்கொள்ளப் படுவதைவிட நான் என் தவறுகளுக்காக விமர்சிக்கப்படவேண்டும் என்று கருதுகிறேன். நான் என்பதை இங்கு ஒரு குறியீடாகவே சொல்கிறேன். நன்றி.

   • //அவர்களது வாழ்நாள் கடமைகளாக, குழந்தை வளர்ப்பும், இரவு நேரம் கணவனுக்கு செய்யும் கட்டில் சேவைகளும், இல்லப் பராமரிப்புமே முன்னிறுத்தும் படும் ஒரு சமூகத்தில், பெண்களிடமிருந்து வேறெதையும் அதிகபட்சமாக எதிர்பார்த்துவிட முடியாது.//

    செல்வநாயகி,

    இது குறித்து உங்கள் கருத்து என்ன? பெண்களிடம் பேரதிகமாக செல்வாக்கு செலுத்தும் கருத்து நிறுவனம் மேலே உள்ளதுதான். எவ்வளவுதான் புரட்சிகர பாரம்பரியத்தில் புடம் போட்ட பெண்ணாயிருந்தாலும் சமூகத்தில் வலுவாக செல்வாக்குச் செலுத்தும் மேற்சொன்ன கருத்து நிறுவனம் அந்தப் பெண்களிடம் தனது வேலையை காட்டிவிடவே செய்கிறது. இதனை மீறி பெண்கள் முற்போக்கு, புரட்சிகர நடைமுறையில் ஊன்றி நிற்பது என்பதும், அற்பத்தனங்களை விட்டொழிப்பது என்பதும் வெகுவாக பாராட்டி, சிலாகித்து வரவேற்கப்பட வேண்டிய விசயமாகத்தான், அரிதான ஒன்றாகத்தான் இந்தியாவின் நிலை உள்ளது.

    இதில் இணைச் சேர்க்கையை தேர்வு செய்யும் உரிமை, கற்புநிலையும்-குடும்ப வாழ்க்கையும், இனப் பெருக்கம் ஆகிய விசயங்களில் பெண்களுக்கு வழங்கப்படும் ஜனநாயகமும் விவாதிக்கப்பட வேண்டிய மையப் பொருளாக உள்ளது.

    இப்படி ஒட்டு மொத்த சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்த கருத்துக்களை, நடைமுறைகளை கவனிக்காமல் ஒரு சில பெண்களிடம் ஓப்பிட்டளவில் நிலவும் சுதந்திரம், ஜனநாயகம், பொருளாதார கொழிப்பை வைத்து மட்டுமே அவர்களை ஒத்த மொத்த பெண்களின் அவர்களையொத்த அற்ப நடவடிக்கைகளை எடை போடுவது சரியாக இருக்காது. ஏனேனில், பெண்கள் நேரடி மறைமுக வன்முறைகளுக்கு ஆட்படுவதை வைத்து மட்டுமே பெண்களுக்கு கிடைக்கப்பெறும் சுதந்திரம் ஜனநாயகத்தை அளவிடுவது என்றால் நாம் தவறான புரிதலுக்கு ஆட்படுவோம். உண்மையில் பெண்களின் சிந்தனைப் போக்கில் ஆதிக்கம் செலுத்தும் சமூக கருத்துக்கள், பொருளாதார அடிப்படைகள் எவையெவை என்பதிலிருந்துதான் பெண்களின் நிலையை நாம் நோக்க வேண்டும்.

    இந்த அடிப்படையில்தான் உங்களது கருத்தில் சிறிது மாறுபட்டேன்.

    பூச்சாண்டி

    • பூச்சாண்டி,

     சமூகத்தின் கருத்தியல் ஆதிக்கமே பெண்களையும் அப்படிச் சிந்திக்க வைக்கிறது என்பதை ஒரு கருத்தாக ஒத்துக்கொண்டே பேசுகிறேன். ஆனால் அக்கருத்தாக்கங்களில் இருந்து விடுபடும் வாய்ப்புகளிருந்தும் அதிலேயே உழல்வதும் பேசப்பட வேண்டும். விடுதலை என்பது என்ன? யாருக்கு விடுதலை தேவையோ அவர்களுக்கும் தமது தளைகளில் இருந்து விடுபடும் முனைப்பின்றி அவ்விடுதலை எப்படி சாத்தியமாகும்? நான் சில பெண்கலை வைத்து பொதுமையாக என் கருத்தை எல்லோருக்கும் பொருத்தவில்லை என்பதைக் குறிப்பிட்டே பேசுகிறேன். ஆனால் நான் குறிப்பிட்டிருக்கும் சிலரை வெகு சிலராக நீங்கள் எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களும் பொருட்படுத்தத்தக்க அளவினராகவே இருக்கிறார்கள். இதை அனுபவப்பூர்வமாக அறிந்தும் இருக்கிறேன். வரதட்சணைப் பிரச்சினை, அழகிப்போட்டி எதிர்ப்பு என்று செயலாற்றிய அனுபவஙள்தான் எனக்குள் இப்படியான கருத்தையும் ஏற்படுத்தின.

    • //ஆனால் அக்கருத்தாக்கங்களில் இருந்து விடுபடும் வாய்ப்புகளிருந்தும் அதிலேயே உழல்வதும் பேசப்பட வேண்டும். விடுதலை என்பது என்ன? யாருக்கு விடுதலை தேவையோ அவர்களுக்கும் தமது தளைகளில் இருந்து விடுபடும் முனைப்பின்றி அவ்விடுதலை எப்படி சாத்தியமாகும்?///

     இதனை கருத்தில் கொண்டுதான் பின்வரும் விசயத்தையும் எனடுஹ் முதல் பின்னூட்டத்தில் கூறியிருந்தேன்.

     //அவ்வாறு இல்லையெனில் பெண்களை இந்த இருட்டு உலகிலிருந்து தப்பிக்க வைக்க நாம் என்ன வகையான போராட்டத்தை மேற்கொண்டோம் என்ற அனுபவத்திலிருந்துதான் செல்வநாயகி குறிப்பிட்டுள்ள அவர்களின் பிற்போக்குத்தனம் எடை போடப் படவேண்டும்.//

    • //அதே பார்வையைக் குறைந்தபட்ச சுதந்திரங்களோடும், வாய்ப்புகளோடும் வெளிவந்து அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான ஆதரவோடும் நிற்க முடிகிறபோதும் அந்தஸ்து, பெருமை, பீத்தல்களை விடமுடியாது அவற்றைத் தமக்குரிய ஆபரணங்களில் காட்டிக்கொள்கிற பெண்களின் மீது செலுத்த முடிந்ததில்லை என்னால்.//

     செல்வநாயகி/பூச்சாண்டி,

     நானும் இவ்வாறான பெண்களை பல தடவை சந்தித்துள்ளேன்.இவர்களின் சிந்தனை/நடத்தைகள் ஏன் இந்த மாதிரி குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருக்குது எனப் பலதடவை யோசித்துள்ளேன். ஒருவர் எப்படியான ஆளாக வளர்கின்றார் என்பது அவர்கள் பிறந்த சூழல், வளர்க்கப்படும் விதம், அவர்களின் பெற்றோரின் நடப்பு/சிந்தனைகள், சமூகம், பின் வளரும் போது அவர்கள் முகம் கொடுக்கும் சூழ்நிலைகள், அவர்களின் personality என்று பலவற்றில் தங்கியுள்ளது. அநேகமாக எமது சமூகத்தில் கிணற்றுத்தவளையாகவே எல்லோரும், குறிப்பாகப் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அவர்களின் அக்குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வரவோ சிந்திக்கவோ (சிந்திக்கும் தன்மையைத்தான் எமது கலாச்சாரமும் வளர்ப்பு முறையுமே சிறு வயதிலேயே ஒடுக்கிவிடுமே.) சந்தர்ப்பம் வருவதில்லை. அப்படிச் சிந்திப்பதே மிகப் பெரிய குற்றமாவே பார்க்கப் பழக்கப்படுகின்றனர்.

     என்னதான் மருத்துவமும் engineering உம் படித்து பட்டம் பெற்றாலும் அவர்களால் இவ்வாறு வட்டத்திற்கு வெளியே சிந்திக்க முடிவதில்லை. பெண்களால் மட்டுமல்ல அநேகமான ஆண்களாலும் தான். அவர்களுக்குப் புத்தகப் படிப்பால் மருத்துவமும் engineering உம் நன்றாகத் தெரிந்திருக்கும் ஆனால் வாழ்க்கையில் அவர்கள் எந்த traditional values உடன் வளர்க்கப்பட்டார்களோ அவற்றையே பின்பற்றுவர்.

     இவ்வகையில் பூச்சாண்டி எழுதிய பின்வரும் கருத்தை ஆமோதிக்கின்றேன்.

     //அவர்களது வாழ்நாள் கடமைகளாக, குழந்தை வளர்ப்பும், இரவு நேரம் கணவனுக்கு செய்யும் கட்டில் சேவைகளும், இல்லப் பராமரிப்புமே முன்னிறுத்தும் படும் ஒரு சமூகத்தில், பெண்களிடமிருந்து வேறெதையும் அதிகபட்சமாக எதிர்பார்த்துவிட முடியாது.//

     இதை மாற்றுவது சரியான கடினம். நானும் இங்கிருக்கும் எம்மவர்களுடன் சில‌ முயற்சிகள் செய்கின்றேன். ஆனால் படிப்படியாகத் தான் முடியும் என நினைக்கின்றேன். Not sure whether there are any other effective ways. There should be a cultural revolution, I reckon.

 27. /// வரதட்சணையை நாங்களாக ஏதும் கேட்கவில்லை, நீங்களாக பார்த்து செய்தால் போதும /// ……………..//// ஊடகங்களில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை மூலம் காதலர் தினம் தனது பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்தி விட்டுச் சென்று விட்டது /// ///// காதலும் கூட சாதி மறுப்பு என்பதை விட சம தரத்திலான சாதி, வர்க்கம், அந்தஸ்து, பணம், வேலை எல்லாம் பார்த்துத்தான் நடக்கிறது என்பது வேறு விசயம். இதையே சாதிக்குள் நடத்தினால் அது நிச்சயிக்கப்பட்ட திருமணம் ///// நச்…..

  தமிழ்நாட்டுல ஆண்களுக்கு இணையா பெண்கள் இல்லன்னு சொல்லுது ஒரு கணக்கெடுப்பு.. ஆனாலும் இந்த பயலுக கல்யாணமே இல்லனாலும் பரவில்லை,,,,, ஆனா, வரதச்சனை தெளிவாத்தான் இருக்கானுக..

 28. Dear vinavu,
  Any concept can only be explained through a spectrum. For vinavu, you have a makkal kalai ilakkiya kazhagam glass. In reply to analyst, you mentioned that your marriage vow is democratic. So you have some goggles. You view the world through that. Whereas for a Muslim, Islam is the glass through which they view the world so is Christianity for a Christian. There is nothing called neutral in this world. If someone says they are neutral and don’t belong to any platform then that itself becomes a platform.
  What is important is that is your platform causing harm to the world. If killing people are a crime then anyone who does that is to be taken as a criminal no matter in which platform he is.
  Vinavu doesn’t have to object Nethiyadi and inimai for their platforms. By doing that you are deviating from the crux of the discussion which is dowry.
  If I know only Tamil and if I say that what you saying in English is bullshit for me, then I am right and it’s not something which has to be condemned. I can understand it only when its explained in Tamil.
  Coming to the issue, despite the incidents of dowry among Muslims Islam as a religion stands tall against dowry and also goes well beyond those 11 points bulleted by you in the article and explaining those are beyond the scope of your article.
  We are proud to the fact we are the only religion on the face of the earth which says dowry is prohibited. We are the biggest nation on earth which has the highest number of males who contributed much to the marriage without burdening the bride side.
  I am a Muslim and in my family there has never been a talk about dowry whether it’s giving or taking. And I have not seen any disputes between the in-law families in the last two decades where I have visible memory.
  Kudos to you for your fight against dowry!!!. All the best.

 29. உங்கள் கடந்த பதிவுக்கும் சேர்த்து இந்த பின்னூட்டம்.

  எனக்கு இப்பூது நாற்பத்திஈழு வயது.முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னாள் எனுடன் படித்து ,படிப்பை விட்ட என் அப்பாவின் கடைநிலை ஊழியரின் பெண்(sakkiliyar) பாதுகாப்பிற்காகவும் ,வேலைக்காகவும் கொண்டுவந்து விடப்பட்டால் .(அவளுடைய வீட்டில் நிறைய பிரச்சினை, ஆகையால் அவளுடைய பேரூர் எங்களிடம் விட்டார்கள்)
  என் அப்பா காலையில் காயத்ரி சொல்லுபவர்.ஆனால், வினைவு ,ஒரு நாளும் நாங்கள் சாதி பார்த்ததில்லை.மனசாட்ட்சி தொட்டு சொல்கிரீன்.வர்க்கரீதியான சில்லரைதனங்கள், இருந்தது.அவள் வேரு அறையிலும் நாங்கள் வேரு அறையிலும் படுத்தும் . ஆனால் அவள் எங்குடநீய் தான் இருந்தால் . எல்லா அறைக்குளும் வருவாள் .அப்பாவின் பூஜை அரை உட்பட .ஆனால் உங்கள் கொங்கு நாட்டு katturaiyaippadiththu ஆச்சரியமாகவும் varuthamaagavum இருந்தது.

  என்னுடைய முதல் திருமணத்தில் சாதி இல்லாமல் thirumaNam வேண்டும் enru solli maNanthEn.avar udal nalamillaamal iRanthuvittaar.ஆனால் enggaL thirumaNathin pOthu avarudaya viitil ethirppu, EnenRaal naan vErU சாதி enru .

  athEy pOl varathaTCiNai..naan varathatchiNai kodupppathu kevalam enru ninaippavaL.ஆனால் innum இந்த irndu thImaigaLum nam naattil உள்ளது என்று எண்ணூM மனது வலிக்கிரது. இங்கே முஸ்லிம் சஹோதரர்கள் மிகவும் கோவப்பட்டு எழுதும் போது ஒன்ரு சொல்கிரேன். என் சித்தி இஸ்லாமியரை மணம் முஇத்துள்ளார். எனக்கு அதில் என்ன வருத்தம் என்றால் அவருடய் மபுகுந்த வீத்தில், அவர் மற்றவர்கள்ஐ விட வரதட்ச்சிணாஇ ஏதும் இல்லாமல் வந்தவர் என்பதால் ,பலவருடன்க்களுக்கு பின்னும் அவமானப் படுத்தபுகிறார்.அவருடய் மைத்துனரின் மனைவியை படுத்தும் கொடுமையைக்கேத்தால் கண்ணீல் ரத்தக் கண்ணீர் வரும். அதுவும் மததின் பேரால்.எல்லா மதங்களும் சொலும் நல்லதை எடுத்துக்கொண்டு த்தீயதை வித்தால் எவ்வள்வு நல்லது.எதர்காக இதை சொல்கிறேன் என்றால் பெண்பார்ப்பது, வரதச்சிணை ,சாதீ எல்லாம் நாம் பெரிதானால் மறைந்து விடும் என்ரு எண்ணினேன்.ஆனால் இவையெல்லாம் மிகவும் வலுவாகவே உள்ளது.நஆகர்கோவில் , நாடார் க்ரிஸ்தவர்கள் கொடுக்கும் வரதத்ச்சிண்ஐக்காகவே , விருதுனகர் நாடர்கள் அங்கிருந்து பெண் எடுப்பார்கள்.

 30. //
  பல தூதர்கள் மூலம் சொன்னார்தான். உம்மைப்போல்
  மூடர்கள் அதை மறுத்து மறைத்து நின்றதால் மீண்டும்
  சொல்லவேண்டிய நிலை. நீர் கடவுளையே மறுத்து
  நிற்கவில்லையா? அவர்கள் கடவுளின் வார்த்தையை.

  அதுசரி நீர் அறிவுபூர்வமாக எதையும் பேசமாட்டீரா?

  TNTJ அலுவலகத்தை இன்னுமா தொடர்புகொள்கிரீர்?//

  பல தூதர் மூலம் சொன்னதை என்னை போன்ற மூடர்கள் மறுத்ததால் மீண்டும் மீண்டும் தூதர்களை அனுப்பினார் என்பது உங்கள் கருத்து, இன்றும் என்னை போன்று மூடர்கள் உள்ளனரே பின் எவ்வாறு முகமது நபி கடைசி தூதர் என்கிறீர், என் போன்ற மூடர்களூக்கும் இன்னோரு தூதரை அனுப்ப மாட்டார் என்பதில் எவ்வாறு உண்மை தன்மை இருக்கிறது!

  அறிவுபூர்வமாக நீங்களே பேசி கொள்ளுங்கள்! அப்படியே காது வழி வழியும் அறிவையும் துடைத்து கொள்ளுங்கள்!

  என் தொடர்பு எண் கொடுத்தும் என்னை தொடர்பு கொள்ளாதது உங்கள் அமைப்பு தான்! உங்களுக்கு தான் வேறு பொழப்பு இல்லை, எனக்குமா இல்ல!

  • “பல தூதர் மூலம் சொன்னதை என்னை போன்ற மூடர்கள் மறுத்ததால் மீண்டும் மீண்டும் தூதர்களை அனுப்பினார் என்பது உங்கள் கருத்து, இன்றும் என்னை போன்று மூடர்கள் உள்ளனரே பின் எவ்வாறு முகமது நபி கடைசி தூதர் என்கிறீர், என் போன்ற மூடர்களூக்கும் இன்னோரு தூதரை அனுப்ப மாட்டார் என்பதில் எவ்வாறு உண்மை தன்மை இருக்கிறது!”
   அதற்குத்தான் பிஜே இருக்கிறாரே! அவரு தூதர் இல்லை தூதர் மாதிரி.

   • //அதற்குத்தான் பிஜே இருக்கிறாரே! அவரு தூதர் இல்லை தூதர் மாதிரி.//

    இது நல்லாயிருக்கே! புதுசா குரான் மாதிரி எதாவது கதை சொல்லுவாரா!?

    • இது நல்லாயிருக்கே! புதுசா குரான் மாதிரி எதாவது கதை சொல்லுவாரா!?”

     குரான் முழுமையுமே கதையல்ல. முஹம்மது தனது வாழ்நாளுக்கு முன்பானவைகளை கதையாக அளந்திருக்கிறார்.  பிறகு தனது வாழ்நாளில் தன்னிடம் கேட்கப்பட்ட சந்தேகங்கள், கேள்விகள் பிரச்சினைகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். தான் கூறுவதாக கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதற்காக வஹீ மூலம் அல்லா தனக்கு சொல்வதாக கொஞ்சம் அதிகப்படியாக அளந்திருக்கிறார்.

     இவற்றுக்கெல்லாம் தற்கால அறிவியலுக்கு தகுந்தபடி முலாம் பூசிக்கொண்டிருக்கிறார் பிஜே. இவருடைய விளக்கத்தை முஹம்மது காண நேரிட்டால் நிச்சயமாக ஆச்சரியப்படுவார்.

  • வாலு, இவங்க  பக்கத்துல போயி நின்னா கூட இவங்க நம்மள கூப்பிடமாட்டாங்க, டிஸ்டன்ட மெயின்டேயின் பண்ணி உடு என்ன உடு என்ன்னஃனு உதார் விடும் கேசுங்க, நானும் வினவுக்கோ, உங்களுக்கோ பறையோசைக்கோ போன் போட்டு பேசுவாங்கன்னு பாத்தேன்.. யாருக்கும் பண்ணல…

   ஒரு வேள பண்ணிட்டாங்கன்னு வச்சுகங்க அப்பவும்  இவங்கிட்ட போயி வாதாட போறீங்களா??? நான் கூடாதுங்கறேன்.ஊத்தவாய் ஜயேந்திரன மாதிரியான கேசுங்களையெல்லாம் பேசக்கூட தகுதியில்லாத ஆளுன்னு எப்படி ஒதுக்கி வைக்குறோமா அதுமாதிரிதான் இந்த ஆன்லைன் பிஜே அடிப்படைவாத கூட்டத்தையும் நோயைப்போல ஒதுக்கனும்.

   கான்சர்கிட்ட பேச்சுவார்தையா நடத்தமுடியும்..

 31. //
  Author: நெத்தியடி முஹம்மத்
  Comment:
  ///பெண் வீட்டாரை கொடுக்க‌வைப்ப‌த‌ற்கு ப‌தில் ஆண்வீட்டாரை கொடுக்க‌வைப்பதால் ம‌ட்டுமே அது புர‌ட்சிக‌ர‌ உள்ள‌ட‌க்க‌த்தை கொண்ட‌தாகிவிடாது.///—தவறு செங்கொடி. அதுதான் புரட்சி.//

  அடேங்கப்பா!
  என்ன ஒரு புரட்சி! அதே இஸ்லாம், பெண் விடுதலைக்கும், பெண் முன்னேற்றத்திற்கும் செய்துள்ள பிரட்சியை இந்த சுட்டியில் பாருங்கள், எனக்கு பல பக்கங்களில் சிரிப்பு வருது!

  http://dharumi.blogspot.com/2010/02/blog-post.html

 32. நண்பர்கள் நெ.முகம்மது, இனிமை,

  மதத்தின் வழியாக தெரிவதை மட்டுமே ஏற்போம் என்பதற்கும், ஒன்றை காரண காரியங்களோடு அலசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
  அரபு நாடுகளில் பெண்வீட்டார் கொடுப்பது மரபில் இல்லை, இது முகம்மது ஏற்படுத்திய ஒன்றும் இல்லை. இஸ்லாம் மரபை உடைக்கவில்லையா? என்றால் இஸ்லாம் மரபை ஏற்கவில்லையா? முகம்மதின் காலத்திற்குமுன் அரபில் யூத கிருஸ்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களும் பெண்களுக்கு கொடுத்திருக்கிறார்களே யன்றி வாங்கவில்லை. ஒரு ஒழுங்கின்றி இருந்ததை முகம்மது ஒழுங்குபடுத்தியிருக்கிறார். மரபில் ஆண் வாங்குவதாக இருந்திருந்தால் அதையும் முகம்மது ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும். பெண்களை போகப்பொருளாக கருதிய நிலைமை முகம்மதுவுக்கு முன்பும் இருந்தது. பின்பும் தொடர்ந்தது. மகரை பெண்களுக்கான பாதுகாப்பு என்பதெல்லாம் உயர்வுநவிற்சி தான். மகர் பெண்களை பாதுகாக்கவும் முடியாது. முகம்மது அப்படி சிந்திக்கவும் இல்லை. சில குரான் வசனங்களை கற்றுக்கொடுப்பதை மகராக அங்கீகரித்திருப்பது ஹதீஸ்களில் பதிவாகியிருக்கிறது அதுவும் மணப்பெண் கோராமல் முகம்மதுவாகவே முன்மொழிந்தது. ஆக மகரை பெண்களின் பாதுகாப்பிற்கு என்று முகம்மது புதிதாக ஏற்படுத்தவும் இல்லை, பாதுகாப்பு எனும் ரீதியில் அதை மாற்றீடாக வலியுறுத்தவும் இல்லை.

  பெண்வீட்டார் கொடுக்காமல் வாங்குவது புரட்சியாகுமா? பெண்ணையும் கொடுத்து பொன்னையும் கொடுப்பது ஆணாதிக்கத்தின் உச்சவடிவம் என்றால் பெண்ணை கொடுத்து பொன்னை பெறுவது ஆணாதிக்கத்தின் நீச்சவடிவம் என்று வேண்டுமானால் வித்தியாசப்படுத்திக்கொள்ளலாம். இரண்டிலுமே பெண்ணின் பாத்திரத்தில் ஒரு இருப்புமில்லை. வரதட்சனை கொடுமைகள் இந்தியாவில் இருப்பதற்கு பாதிக்கப்படும் பெண் ஒரு உரிமையுமின்றி அடிமையாக உழல்வது ஒரு காரணமென்றால் அரபு நாடுகளில் தனதட்சனையால் பாதிக்கப்படும் ஆண்கள் இந்தியப் பெண்கள் அளவிற்கு இழிவுகளை சந்திக்காததற்கு ஆண் எனும் சமூகஆதிக்கம் காரணம். இதில் புரட்சி எங்கிருந்து வருகிறது.
  புரட்சி எனும் சொல்லாடல் இருக்கட்டும், புரட்சியின் வீச்சை கற்பனையாகவேனும் உணரவேண்டுமென்றால் மதக்கண்ணாடியை துடைத்துவிட்டு வரலாற்றை பாருங்கள்.

  செங்கொடி

  • ///மரபில் ஆண் வாங்குவதாக இருந்திருந்தால் அதையும் முகம்மது ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்///

   —-ஆஹ்… ஹா… ஹா ….ஹா …ஹாஆஆ

   அப்புறம் செங்கொடி…. இதெல்லாம் மறந்துட்டீங்களே…

   அந்தக்கால் அரபுக்களிடம் இருந்த கீழ்க்காணும் “உயர்ந்த பண்புகளான”…

   “விபச்சாரத்தை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
   பெண் சிசுக்கொலையை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
   சிலை வணக்கத்தை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
   பல தெய்வ வணக்கத்தை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
   குடிப்பத்தை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
   வட்டியை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
   சூதாட்டத்தை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
   செத்த பிராணிகளை உண்பதை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
   திருமணத்தை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
   அடிமை முறையை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
   நிறவெறியை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
   மதவெறியை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
   மொழிவெறியை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
   கொலைப்பழிவாங்கலை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.”
   இதுபோல இன்னும் நிறைய இருக்கிறது செங்கொடி… சொல்ல மறந்து விட்டீர்கள்.

   அப்படியே இஸ்லாம் ஒழுங்குபடுத்த மறந்த கீழ்க்காணும் இந்த ஒரு விஷயத்தையும் ஒழுங்குபடுத்தி ‘புரட்சி’ செய்து விடுங்கள்.
   அது என்னவா?
   இனி இவ்வுலகில் பிறக்கும் அனைத்து பெண்களுக்கும், ஈஸ்ட்றோஜெனும், ஓவரிகளும், மாதவிடாயும், கர்ப்பப்பையும், மார்பகமும், பெண்ணுறுப்பும் இல்லாமல் பிறக்க ஏற்பாடு செய்துவிடுங்கள். ஆணும் பெண்ணும் சமம் என்றாகி விடும். அதற்குப்பிறகு எங்காவது தப்பித்தவறி “கல்யாணம்”(??? அது என்னத்துக்கா?) என்று ஒன்று நடந்தால்… ஒருவேளை நடந்தால்…. நாம் இருவரும் சேர்ந்து அங்கே தரப்படும் வரதட்சினை & மகரை எதிர்ப்போம்.

   வரவர ரொம்ப காமடி பண்ண ஆரம்பிச்சுட்டீங்க, செங்கொடி.

  • நண்பர் செங்கொடி,

   முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் முதற்கொண்டு இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை இறைவழிகாட்டல்கள் அந்தந்த கால மனித தேவையை கருத்தில்கொண்டு அருளப்பட்டன. அவைகள் தூதர்கள் மறைவுக்குப்பின் அந்தந்த கால மக்களால் மறைத்து திரித்து வழிகெட்டுப் போகும்போது அவசியமாகின.

   இது முதல் மனிதரும் முதல் இறை தூதருமான ஆதம்(அலை) அவர்கள் காலத்திளிருந்தே இந்த வழிகேடு ஆரம்பமாகிவிட்டது. ஏனென்றால் மனிதன் தவறிளைப்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

   இவ்வாறு அருளப்பட்ட இறை வழிகாட்டல்களை விட்டு மக்கள் பாதை மாறிப்போகும்போது அவர்களை முறைப்படுத்தி நெறிப்படுத்தி வழி நடத்துவதும் ஒரு புரட்சிதான்.

   அவ்வாறுதான் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்களுக்கு நடந்த பல கொடுமைகளை விட்டு சீர்திருத்தியதில் ஒன்றுதான் மணக்கொடை.

   இதில் மணப்பெண்ணே மணக்கொடையை நிர்ணயிக்கும் உரிமையை பெறுகிறாள். அந்த உரிமையைபெற அவள் சார்பாக உறியவரை நியமித்துகொள்ள அனுமதிக்கபடுகிறாள்.

   அந்த மணக்கொடை அளவில் சிறிதாகவோ பெரிதாகவோ இருக்க வேண்டுமானால் மணப் பெண்ணையோ அவள் உரிமையாலரையோ அணுகி முடிவெடுத்துகொள்ளலாம். இது இஸ்லாத்தின் அற்புதமான வழிகாட்டல்.

   ஆண் பெண் இரு பாலரில் படைப்பிலேயே பலகீனமானவள் பெண். என்னதான் முற்போக்குவாதம் பேசினாலும் ஆண்வர்கத்தால் பெண் எந்த வகையிலாவது காலாகாலமாக பாதிப்புகுள்ளாகத்தான் செய்கிறாள்.

   இதை கருத்தில் கொண்டுதான் பெண்களே நீங்கள் திருமணத்திற்கு முன்பே உங்கள் மணக்கொடையை பெற்றுகொள்ளுங்கள். அது திருமணத்திற்கு பின்பும் ஒருவேளை மண முறிவு ஏற்பட்டாலும் உங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று இஸ்லாம் வழியுறுத்துகிறது.

   இதில் என்ன பிரச்சனை. பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்க வழிகண்டால் பெண்கள் உரிமைபற்றி போலியாக வாதாடுபவர்கள் ஏன் மிரட்சியடைகிறார்கள்.

   தங்களிடம் இதுபோல் எந்த தீர்வும் இல்லை என்பதாலா? பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் இவர்கள் யார் என்று.

   இதுபோல் எந்த தீர்வும் இறைவனால் மட்டுமே வழங்க முடியும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

  • நண்பர்கள் நெ.முகம்மது, இனிமை,

   நான் எடுத்து வைத்திருப்பவைகளை விட்டுவிட்டு ஏதேதோ சலம்பி இருக்கிறிர்களே. நான் சொல்லியிருக்கும் கருத்துகளுக்கு உங்கள் எதிர்வினை என்ன?

   முன்பு ஒரு தோழர் கூறியதுபோல் மான் கராத்தே காட்டிவிடுவது தான் சிறந்தது என நினைக்கிறேன்.

   செங்கொடி

   • நண்பர் செங்கொடி….

    என்னாச்சு உங்களுக்கு? தங்களின் கருத்துகளுக்கு எங்கள் கருத்துகள் எதிர்வினையாக தெரியவில்லையா? 

    மான் கராத்தே காட்டுவது இருக்கட்டும். முதலில் சற்று சிந்தையை காட்ட வேண்டாமா? 

    வரதட்சினை கொடுஞ்செயல் என்கிறீர்கள். வழிமொழிகிறோம்.
    அதை ஒழித்துவிட்டால் ஆணும் பெண்ணும் சமம் ஆவார்கள் என்கிறீர்கள். ஆகமாட்டார்கள் என்கிறோம். மஹர் கொடுத்த பின்னர்தான் சமமாவார்கள். எப்படியெனில், திருமண உறவில் சுகங்கள் இருவருக்கும் ஒரே அளவுதான் எனினும், நான் ஏற்கனவே சொன்னதுபோல அவ்வுறவால் ஆணைவிட பெண் -தான் பெண்ணாய் இருப்பதால்- ஆணால் ஈடுசெய்யமுடியா நிறைய இயற்கையான சுமைகளை ஆணைவிட அதிகம் சுமக்க வேண்டி உள்ளதால், திருமணம் என்ற (ஒப்)பந்தத்தில் வரதட்சினை தரப்படாவிட்டாலும் அங்கே இயற்கையான அநீதி நிலவுகிறது. அதற்கு ஒரே செயற்கை நீதி மஹர் தான் என இஸ்லாத்தின் நிழலில் கூறுறோம். இதில் என்ன தவறு?

    வட்ட டிராக்கில் ஓட்டப்பந்தயம் ஓடுபவர்கள் தத்தம் ட்ராக்கில் முன் பின்னாக நிற்பது நீதி. உள்வட்டத்தைவிட இயற்கையாக வெளிவட்டம் பெரிது. எனவே பந்தய தூரத்தை சரியாக அளவெடுத்து செயற்கையாக முன்பின் நிற்கவைத்தல் நீதி. அது போலல்லாமல் அங்கு அனைத்து ட்ராகினரையும் ஒரே கோட்டில் இருந்து ஓட ஆரம்பிக்கச்சொல்வது எப்படி நீதி? உங்களுக்கு நீதிபோல தெரிந்தாலும் சிந்தித்தால் அது அநீதி அன்றோ?

    முதலில் சிகப்புக்கண்ணாடியை கழட்டிவிட்டு பாருங்கள், நீதியும் அநீதியும் இரு வெவ்வேறு வண்ணங்களில் தெரியும். எங்கள் பதிலைப்படிக்காமல் வரட்டுவாதம் புரியும் உங்களிடம் மான்கராத்தே காட்டவேண்டியது நிஜமாலுமே நாங்கள் தான். வரவர காமடி செய்வதையே சீரியஸ் ஆக்கிக்கொள்ள வேண்டாம் நண்பரே.

    • சரி நெத்தியடி முஹம்மது. நீங்கள் கூறுவதையே ஒரு பேச்சுக்கு சரியென்றே வைத்துக்கொள்வோம். மஹராக ஒரு குரான் சூராவை ஓதி ஊதி மனமுடித்துக்கொள்ளலாம் என்றாரே முஹம்மது. அதற்கென்ன சொல்கிறீர். இந்த சூரா அப்பெண்ணின் பூரா பாரத்தையும் தாங்கிவிடுமா?

    • கலை… நீங்கள் ஏன் இப்படி கருத்துக்களை செய்கிறீர்கள் கொலை?

     சொல்லப்பட்டது, தன் ஒரே இடுப்புத்துண்டை தவிர்த்து வேறு சொத்தில்லா பரம எழையிடமா அல்லது ஒரு பெரும்பனக்காரரிடமா என்பதை மூடி மறைத்ததை சொல்லவா?
     பணக்காரர்கள் ஒரு பொற்குவியலையேனும் மஹராக கொடுக்கும்படி சொன்னதை இருட்டடிப்பு செய்ததை சொல்லவா?
     இதில் சொல்லப்பட்ட (ஒருவர் எவ்வளவு ஏழையாயினும் மஹர் என்பது அவர் திருமணம் புரிவதற்கு தடையாக இருத்தல் கூடாது & மஹர் எனப்படுவது பணம், பொருள், நிலம், சொத்து இதன்றி ‘கற்ற தகுதி’, ‘கற்பித்தல்’ போன்ற வேறாகவும் அமையும்) போன்ற கருத்துக்கு எதிரான கருத்தை எடுத்துக்கொள்வதை சொல்வதா? எதைச்சொல்ல?

     ஊனமுற்றோர் யாரும் பேருந்தில் ஏறாத நிலையில் காலியாக கிடக்கும் ஊனமுற்றோருக்கான இருக்கையில் ஒருநாள் அமர்ந்து கொண்டால், அதையே தன் தகுதியாக வைத்துக்கொண்டு ஊனமுற்றோருக்கான அரசு இடஒதுக்கீட்டில், ‘அனைத்தும் நல்லாயிருக்கும்’ ஒருவர் விண்ணப்பித்தால்… என்னத்த சொல்ல?  

     ‘இஸ்லாமிய எதிர்ப்பு’ என்ற ஒரே அஜெண்டாவை மட்டுமே வைத்துக்கொண்டு விவாதிக்க வேண்டாம். நல்லது என்று தெரிந்தபின்னும்…. ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை (அது வந்த இடம் பிடிக்காது என்ற பொறாமை காரணமாய்) வளர்த்துக்கொள்ளாவிடினும் எதிர்க்காமலாவது விட்டுவிடும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவும். காரணமின்றி எல்லாத்தையும் எதிர்ப்பவர்களிடம் விவாதிப்பதே முட்டாள்த்தனம். //ஓதி ஊதி //,  //இந்த சூரா அப்பெண்ணின் பூரா பாரத்தையும் // —சபாஷ்…
     கேள்விக்குறி, வஜ்ரா, வால்பையன்… ‘புகழுக்கு’ சரியான போட்டி…. 

   • நண்பர் நெ.முகம்மது,

    மகருக்கு புதுப்புது விளக்கங்கள் அளிக்கிறீர்கள். நீங்கள் அளிக்கும் விளக்கங்கள் இஸ்லாமிய இறையியலின் படியே பொருந்தாமல் போகிறது. நான் மேலே குறிப்பிட்ட ஹதீஸில், அந்தப்பெண் முகம்மதைத்தான் மனமுடிக்கக் கோருகிறாள். முகம்மதிற்கு விருப்பமின்றிப் போகவே வேறொருவர் முன்வருகிறார். அதற்கு முகம்மது மகராக உம்மிடம் என்ன உள்ளது என்று கேட்கிறார், எதுவும் இல்லாமல் போகவே ஒரு இரும்பு மோதிரமாவது கொண்டுவாருங்கள் என்கிறார். அவரோ அதுவும் இல்லை, வேண்டுமானால் என் ஆடையில் பாதியை கிழித்துத் தரவா? என்கிறார். அதன் பின்னர் தான் குரானின் வசனங்கள் கற்றுத்தருவது மகராக்கப்படுகிறது. ஆக பெண்மையின் ஈடு செய்யமுடியாத வாழ்சுமைகளுக்கு நீங்கள் கூறும் செயற்கையான நீதி ஒரு இரும்பு மோதிரத்தினால் கூட சமன் செய்யப்படும் என்றால், மகர் என்பதன் உட்கிடக்கை நீங்கள் குறிப்பிடுவது போன்று ஈடுகட்டலா? இல்லை எதையாவது கொடுத்தாக வேண்டும் எனும் மரபா? இது ஒரு புறமிருக்க, மகரை பெண்களுக்கான உரிமை என விதந்தோதும் நீங்கள், இந்த ஹதீஸில் முகம்மது தன்னை மணக்க வந்த பெண்ணிடம் இன்னொருவரை மணப்பதற்கான சம்மதத்தை கேட்டாரா? குரான் வசனங்களை மகராக பெற்றுக்கொள்ள சம்மதமா என்று கேட்டாரா? எந்த அடிப்படையில் இதை பெண்ணுரிமை என்பீர்கள்?

    தன்னிடம் விவாகரத்து கோரி வந்த ஒரு பெண்ணிடம் நீ பெற்ற மகரை திருப்பிக்கொடுக்க சம்மதமா என்று கேட்டுவிட்டுத்தானே விவாகரத்து செய்கிறார் முகம்மது. என்றால் நீங்கள் கூறும் மணவாழ்வினூடான சுமைகளும், இழப்புகளும் விவாகரத்தின் மூலம் நீங்கி விடுகிறதா? இதில் பொற்குவியலே நீங்கள் மகராக கொடுத்திருந்தாலும் அதை திரும்பக்கேட்டு நிர்ப்பந்திக்கவேண்டாம் என ஆண்களுக்கு அறிவுரை வேறு? ஆதாவது மகரை விவாகரத்தின் பொது திரும்பப் பெறுவதும், வேண்டாமென்பதும் ஆணைச்சார்ந்தது. பெண் விவாகரத்து கேட்டு ஆண் மகரை திரும்பத்தர வேண்டும் என கேட்டால் கொடுத்தால்தான் விவாகரத்து. இல்லையென்றால் இல்லை. இந்த நடப்புகளில் மகர் என்பது மரபாக தெரிகிறதா? இல்லை நீங்கள் கூறும் விளக்கங்கள் போல் பொருளாகிறதா?

    அன்றைய நடப்பாக இருந்த பலதார மணத்தை சீர்திருத்தி அங்கீகரிக்கவில்லையா?அன்றைய நடப்பாக இருந்த அடிமை முறையை சீர்திருத்தி அங்கீகரிக்கவில்லையா?அன்றைய நடப்பாக இருந்த வணக்க முறைகளை சீர்திருத்தி அங்கீகரிக்கவில்லையா?அன்றைய நடப்பாக இருந்த வணிக விதிகளை சீர்திருத்தி அங்கீகரிக்கவில்லையா?அன்றைய நடப்பாக இருந்த போர்ச் சூரையாடல்களை சீர்திருத்தி அங்கீகரிக்கவில்லையா?அதேபோல் மகரையும் அங்கீகரித்திருக்கிறார் சீர்த்திருத்தங்களுடன் அவ்வளவு தான், இதை நீங்கள் உங்கள் கற்பனைகளால் மகர் தான் பெண்களுடன் ஆணை சமமாக்கும் என்றும் பெண்ணுரிமை என்றும் முலாம் பூசுகிறீர்கள்.

    செங்கொடி 

 33. //பெண்வீட்டார் கொடுக்காமல் வாங்குவது புரட்சியாகுமா? பெண்ணையும் கொடுத்து பொன்னையும் கொடுப்பது ஆணாதிக்கத்தின் உச்சவடிவம் என்றால் பெண்ணை கொடுத்து பொன்னை பெறுவது ஆணாதிக்கத்தின் நீச்சவடிவம் என்று வேண்டுமானால் வித்தியாசப்படுத்திக்கொள்ளலாம்.//

  தோழர் செங்கொடி!
  இந்த விசயத்தை ஆணாதிக்கத்தின் நீச வடிவமாக நான் பார்க்கவில்லை, இதையும் ஆணாதிக்கமாக தான் பார்க்கிறேன்! அதிலும் நிலபுரபுத்துவ பாசிசமாக, முகமது காலத்தில் அடிமைகளை விற்கும், வாங்கும் பழக்கம் இருந்தது யாவரும் அறிந்ததே! அதையே தான் மாற்று வடிவில் கொடை என்ற பெயரில் கொடுத்து பெண்னை அடிமையாக அழைத்து செல்கிறான்!
  அப்படி இல்லாமலா மனைவியை எப்படியெல்லாம் அடிக்கலாம் என சொல்லி வைத்திருப்பான் அந்த கூறு கெட்ட குப்பன்!

  • நண்பர் வால்பையன்,

   நான் நீச வடிவம் என்று சம்ஸ்கிருத நீசத்தை குறிப்பிடவில்லை. அது தமிழ் நீச்சம். உச்சம், நீச்சம். ஆணாதிக்கத்தின் இருவேறு வடிவங்கள் எனும் பொருளிலேயே நானும் குறிப்பிட்டிருக்கிறேன்.

   செங்கொடி

 34. அப்படி இல்லாமலா மனைவியை எப்படியெல்லாம் அடிக்கலாம் என சொல்லி வைத்திருப்பான் அந்த கூறு கெட்ட குப்பன்!
  ///// Dear vinavu, valpaiyan is doing two unwanted things here. I am wondering how these happens in moderated discussions. 1. He is hijacking the thread from the core issue that your article discusses which is dowry 2. He is using abusive language against the prophet which is against blogging ethics.
  valpaiyan, you are free to prove what prophet said is wrong and that’s freedom of speech. But that shoudn’t be by abusing someone who is respected by more than one billion people of the world.

 35. @ Streams of பீஸ்

  வரதட்சணை பற்றிய பதிவில், இஸ்லாமியர்களில் ஆண்கள் கொடுக்கிறோம் என்று வந்தது நீங்கள் தான்!
  திருமணத்திற்கு பின் எவ்வாறு அடிமையாக நடத்துகிறீகள் என்பதற்கு சுட்டி கொடுத்தால் ஒரு பில்லியன் பேர் நம்புகிறார்கள் என்கிறீர்கள்! ஒரு பில்லியன் இஸ்லாமியர்களும் பொண்டாட்டிய அடிப்பிங்க, அது மனிதர்கள் அல்ல வேறு எதோ விலங்குன்னு நாங்க கண்டுக்காக போகனுமா!?

  கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுமய்யா!
  குப்பனாயிருந்தாலும், சுப்பனாயிருந்தாலும் இங்கே விமர்சனம் பண்ணுவோம்!

 36. //He is using abusive language against the prophet which is against blogging ethics.//

  உங்கள் குரான் படி இறுதிநாளில் என்னை தானே எண்ணைய் சட்டியில் போட்டு வறுப்பாங்க! அப்போ சட்டியை பத்த வைக்க குனிபவனை பார்த்து கொள்கிறேன் நான்! நீங்கள் கவலைபட வேண்டாம்!
  எனக்கும் அல்லாவுக்கும் இருக்குற டீலிங்கே! வேற!

  பத்தவைப்பது அல்லாவாக இருந்தாலும் என் கொள்கை படி அதே தண்டணை தான்!

  🙂

 37. Valpayyan,
  I did say that in Islam the dower is given from groom side and no dowry is demanded from bride. I still say the same. I myself have practiced it two months ago. So nothing new in it. Dowry is prohibited in Islam and no religion has done it before or after.
  Also, I am sticking on to the crux of the discussion which is dowry. I neither tried to go away from it nor did I abuse anyone like you did. And I would continue to debate on the topic as long as there is a decorum and decency in the language used.
  In the link you have given there is nothing which says that one billion Muslims are beating their wives. Did it say that one billion Muslims are beating their wives? Don’t spread hoax news. If you just send a video from you tube that can’t be taken as Islamic verdict. The talk is given in Arabic and neither you nor I know it. Any one can upload a video in you tube and also give an English subtitle associated. You know it well. And if you don’t know, I never thought that a blogger like you will be so naïve like this. 
  Also, I did not say that you will be boiled in oil. And I also don’t care about your dealing with Allah. That’s immaterial to the discussion topic here. Don’t hijack the thread with your hasty conclusions. 

  • //is prohibited in Islam and no religion has done it before or after.//

   நினப்பு தான் பொழப்பை கெடுத்துச்சாமா!
   உலகில் இந்து, கிறிஸ்டீன்,இஸ்லாம் மட்டும் மதமல்ல!
   நிறைய இருக்கு! மேலும் மதமற்ற பல பழங்குடி இனங்கள் எந்த தட்சணையும் வாங்காமல் திருமணம் செய்யும்!
   அஸ்ஸாமில் ஒரு மலைவாசி கிராமத்தில் சுயம்வரம் போல் காலம் காலமக திருமணம் நடக்குது! அங்கே வரதட்சணையும் இல்லை! மஹர் கொடையும் அல்ல! உனக்கு பிடிச்சிருக்கா!? எனக்கும் பிடிச்சிருக்கு அம்புட்டு தான்! மேலும் மஹர் கொடையை போல் ஆண் கொடுத்து திருமணம் செய்யும் முறை கிஸ்லாத்துக்கு முன்னாடியே பல குழுக்களில் உண்டு! உங்களுக்கு இஸ்லாத்தை தவிர வேற ஒன்னும் தெரியாட்டி சும்மா இருக்க வேண்டியது தானே!

   //The talk is given in Arabic and neither you nor I know it. //

   உங்கள் தற்போதைய தூதர் பி,ஜே அதற்கு விளக்கம் அளிக்கலாம், கேட்டுகிட்டு வாங்க!

   //Don’t hijack the thread with your hasty conclusions. //

   வரதட்சணையினால் இங்கே ஒரு பெண் திருமணம் ஆகாமாலோ, அல்லது தற்கொலை செய்து கொள்வதோ அல்லது கொலை செய்யப்படுவதோ நடக்கும் போது, ஏன் பின்னாளில் இஸ்லாம் ஆண்கள் மஹர் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்ய மாட்டார்கள்! அதையும் தானே விவாதத்துக்கு உள்ளாக்கனும்!

   நாங்கள் வரதட்சணை என்பதே தப்புன்னு சொல்றோம், நீங்கள் ஆண்கள் கொடுத்து கொண்டிருக்கிறோம்னு நியாயப்படுத்துறிங்க! அப்ப ஆண்கள் கொடுத்தால் பெண்னை என்னவேணும்னாலும் செய்யலாம்! எத்தனை வேணும்னாலும் கடலாம்னு அர்த்தம் ஆகுதே!

   உங்களுக்கு பதில் சொல்ல முடியலைனா விட்றுங்க! நான் ஹைஜாக் பண்றதா கதையை மாத்தாதிங்க!

 38. //ஆதம்(அலை) அவர்கள் காலத்திளிருந்தே இந்த வழிகேடு ஆரம்பமாகிவிட்டது. ஏனென்றால் மனிதன் தவறிளைப்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.//

  மனிதன் தவறிளைப்பவனாக தவறாக படைத்த கடவுளை என்ன செய்யலாம்! முதல் தண்டனை கடவுளுக்கு தானே கொடுக்கனும்!

  //ஆண் பெண் இரு பாலரில் படைப்பிலேயே பலகீனமானவள் பெண். என்னதான் முற்போக்குவாதம் பேசினாலும் ஆண்வர்கத்தால் பெண் எந்த வகையிலாவது காலாகாலமாக பாதிப்புகுள்ளாகத்தான் செய்கிறாள்.//

  அய்யா! பெண் பலகீனமானது ஆதி படைப்பிலேயே அல்ல! பரிணாம வளர்ச்சியில் தான்! அவள் செய்யும் வேலைகேற்ப அவளது உடல்வாகு அமைந்தது! அதற்கு முன் ஆணும், பெண்ணும் வேட்டையாடி தான் சாப்பிடனும்! விலங்குகளுக்குள் சமூக அமைப்பு வந்த பிறகு தான் ஆண் வேட்டையாட, பெண் வீட்டை காத்தாள்! உங்களுக்கு தான் பரிணாவளர்ச்சி என்றால் எனவென்றே தெரியாதே!

  //இதை கருத்தில் கொண்டுதான் பெண்களே நீங்கள் திருமணத்திற்கு முன்பே உங்கள் மணக்கொடையை பெற்றுகொள்ளுங்கள். அது திருமணத்திற்கு பின்பும் ஒருவேளை மண முறிவு ஏற்பட்டாலும் உங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று இஸ்லாம் வழியுறுத்துகிறது.//

  அப்படியே அடிச்சாலும் வாங்கிகோங்கன்னு வழியுறுத்துதே! சமிபகாலமாக ப்ளாக்கில் இஸ்லாம் பெண் ஆணுடன் பேசியதற்காக, விருப்பபட்ட உடை அணிந்ததற்காக தண்டிக்கப்பட்டால்னு கட்டுரைகள் ஓடுதே! அதையெல்லாம் படிக்கிறதே இல்லையா!?

  //பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்க வழிகண்டால் பெண்கள் உரிமைபற்றி போலியாக வாதாடுபவர்கள் ஏன் மிரட்சியடைகிறார்கள்.//

  நாங்கள் போலின்னு வச்சுகுவோம்! உங்கள் ஐ.எஸ்.ஓ முத்திரையை கொஞ்சம் காட்டுங்கள்!

  //தங்களிடம் இதுபோல் எந்த தீர்வும் இல்லை என்பதாலா? பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் இவர்கள் யார் என்று.//

  பெண்களை என்னைகைய்யா இஸ்லாத்தில் சுதந்திரமாக கருத்து சொல்ல சொல்லியிருக்கிறீர்கள்! பர்தா பத்தி பேசலாம்னுனா கூட்டமா போய் பிரச்சனை பண்றிங்க! அவுங்க பக்க நியாயமும் என்னான்னு கேட்பது தானே சமதர்மம்! நீ அடிமைன்னு சொல்லால சொல்லிட்டு ஏன் இப்படி ஜல்லி அடிக்கிறிங்க!

  //இதுபோல் எந்த தீர்வும் இறைவனால் மட்டுமே வழங்க முடியும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.//

  சரி , இந்த கட்டுரைக்கு ஒரு தீர்வை உங்கள் இறைவனை வந்து சொல்ல சொல்லுங்கள்!

 39. //முன்பு ஒரு தோழர் கூறியதுபோல் மான் கராத்தே காட்டிவிடுவது தான் சிறந்தது என நினைக்கிறேன்.//

  ஹாஹாஹா!
  நாம ஒன்னு சொன்னா அவுங்க வேற ஒன்னு சொல்றாங்கன்னு டென்ஷன் ஆயிட்டிங்களா தோழரே!

 40. முஸ்லீம்கள் ஷே(ர்)க்கானவர்கள். பார்ப்பனீயத்திடம் சரனடைந்த இஸ்லாம் என்றால் ஒத்துக்கொள்ள மறுத்தார்கள். தாங்கள் தனித்துவமானவர்கள் என்றார்கள். ஆனால் அரபியிலோ இஸ்லாத்திலோ இல்லாத வரதட்சனை முறை இந்திய முஸ்லீம்களிடம் உள்ளது. இப்பொழுதாவது பார்ப்பனீயத்திடம் அல்லது இந்துமத்திடம் அல்லது எந்த கன்றாவியிடமோ சரணடைந்த இஸ்லாம் என்பதனை ஒத்துக்கொள்கிறீர்களா?