அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு தேநீர்க் கடை. தொண்டையை நனைக்கவும், பேசியும் ஊதியும் உலர்த்தவும் விரும்பும் நண்பர்கள் கேண்டீனை விட்டு அங்கு செல்வது வழக்கம். அன்று தேநீர்க்கடையில் சில நண்பர்கள் வேலை நிலைமைகள், ஊதியக் குழு, வருமானவரி என்ற அவர்களின் உலகப் பிரச்சினைகளை அலசிக்கொண்டிருந்தனர். ”அம்மாவப் பொட்டியால அடிச்சிட்டு மேலப் போயிட்டான்..யா சிதம்பரம், நல்லவேள அவனை நிதியமைச்சராக்குல, உள்துறை அமைச்சருன்னு உக்கார வச்சுட்டாங்க, நாம பொழச்சோம் ..” என்ற அவர்கள் பேச்சின் இடையில் ஒரு சந்து கிடைத்தது, நானும் சற்று உள் நுழைந்தேன்.
என்னங்க அப்படி சொல்லிட்டீங்க.. என்று நான் ஆரம்பிப்பதற்குள், ”அதுக்கில்லீங்க, பிரணாப் முகர்ஜி பெங்கால்காரன்; காங்கிரஸ்காரனா இருந்தாலும், பெங்கால் ரத்தமில்ல, அவங்கள்ளாம் ஒரு டைப்பு, ஏதாச்சும் நாலு நல்லது செய்யிலன்னாலும் கெடுக்க மாட்டாங்கள்ள”, என்று தன் அபிப்ராயத்தைச் சொன்னார் நண்பர். அபிப்பிராயங்களுக்கு எல்லாம் அடிப்படை தேவையா என்ன? சிறு மாற்றமும், அதைத் தொடர்ந்து வழக்கமான ஒரு எதிர்பார்ப்பும் போதாது? பேச விரும்பும் விசயத்தில் இருந்து விலக வேண்டாம் என்று ஒரு புன்னகையில் அந்த அபிப்பிராயத்தைப் புதைத்தேன். “ நான் அதுக்கு சொல்ல வரலீங்க, சிதம்பரம் என்ன சாதாரண ஆளா, இல்ல, உள்துறைன்னா என்ன சும்மாவா?…” எனக் கேட்டு முடிப்பதற்குள் “நரி வலம் போனா என்ன, இடம் போனா என்னங்க, நம்பள விழுந்து புடுங்காம இருந்தா சரி” என்றார் நண்பர். மற்றவர்களும் புன்னகைத்தனர். தொடர்ந்து.. ”போனாலும் போனான், நல்லா செருப்படி பட்டான். நம்மளாலதான் அடிக்க முடியல, சர்தார்ஜீல்ல.. சந்தோசமா இருந்தீச்சு” என்றார் அவர்.
நாங்கள் எல்லோரும் நகைக்க, சிறு மௌனத்திற்குப் பின் விசயத்துக்கு வரலாம் என்று, ”சரி, இந்த காட்டு வேட்டை பற்றி என்ன நினைக்கிறீங்க”, என்று கேட்டேன். அது என்னது காட்டுவேடை என்றார் ஒருவர். மற்றவர்களுக்கும் பிடிபடவில்லை என்று அவர்கள் முகம் காட்டியது. சற்று புரியும்படி சொல்லுவோமே என்று நினைத்து, அதாங்க, ”ஆப்பரேஷன் க்ரீன் ஹண்ட்” என்றேன். ஒருவருக்குப் பொரிதட்டிவிட்டது. பக்கத்தில் இருந்த சுடக்குடிக்கி நண்பர், ”என்ன, சினிமாவா, இல்ல டிஸ்கவரி சானல்ல வர்ர விசயமா?” என்றார். விசயம் விட்டு விசயம் தாவுவதும், ஜாலியாகப் பேசுவதும் இத்தகையவர்களிடம் சகஜம்தான். ஆனாலும் நல்ல நண்பர்கள், இந்த நாட்டின் பரந்துபட்ட படித்தவர்கள்.
”இல்லைங்க, நம்ப அரசாங்கத்துல புதுசா டிஸ்கவர் பண்ணியிருக்காங்க. அதுக்குப் பொருத்தமான டைரக்டர் தேவையா இருந்துச்சு. அதுக்காகத்தான் சிதம்பரத்தை அங்க போட்டிருக்காங்க” என்று நகைச்சுவையாகச் சொன்னேன். ஆனால், அவர்களுக்குப் புரியவில்லை. ஏண்டா இந்த ஆளு வர்த்தகம், நிதியை எல்லாம் விட்டுட்டு உள்துறைக்குப் போனார்ன்னு எனக்கும்கூடத்தான் ஆரம்பத்தில் புரியவில்லை. பின்னர்தான், கலைஞரின் ஆத்ம நண்பர், பாராளுமன்றத்திலேயே குரளோவியம் தீட்டியவர், அதன் எஜமானர்களான வேதாந்தா, டாடாக்களின் காதில் “இதனை இதனால் இவன்முடிப்பன் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற தந்திரோபாயத்தை கிசுகிசுத்திருக்க மாட்டாரா? அவர்கள் அதைப் புரிந்துகொண்டு சிங்கு சோனியாக்களுக்கு ஆணையிட்டிருக்க மாட்டார்களா? அக்கணமே அந்த அமைச்சர் பதவிக்கான தேர்தலே முடிந்திருக்காதா என்றெல்லாம் ரிஷிமூலம் தொட்டு புரிய ஆரம்பிப்பதுபோல் இருந்தது.
”எல்லாம் காரணம் கருதித்தாங்க அவர அங்க உக்கார வச்சிருக்காங்க; ஏதோ ஒதுக்கி வச்சிடல…. ஆதிவாசி மக்களை மிருகத்தனமாகவும், ஜனநாயக வாதிகளை இண்டலெக்சுவலாகவும், மீடியா மழுமட்டைகளை பாமர லாஜிக்கிலும் சந்திக்கப் பொருத்தமான ஆள் அந்த நாற்காலிக்குத் தேவையாய் இருந்தது.. அவர்தான் அந்த சிதம்பரம், அதுதான் அந்த காட்டு வேட்டைங்கிற ஆப்பரேஷன் க்ரீன் ஹண்ட்” என்ற விசயத்தை சொன்னேன். அப்போது, அதுபற்றி சற்று புரிந்து வைத்திருந்த நண்பர், “அது நக்சலைட்டு தீவிரவாதிகளை ஒழிக்கிறதுக்குன்னுல்ல சொல்றாங்க. நீங்க என்ன வித்தியாசமா சொல்றீங்க” என்று கேட்டார்.
அவர்கள் அகராதியில், அல்லது அவர்களுக்குக் கற்பிக்கப்பட்ட அகராதியில், நக்சலைட், தீவிரவாதி என்ற சொற்களுக்குத் தனித்தனியே பொருள் ஏதும் கிடையாது. அது, அந்த சொற்களைத் தாங்கியவர்கள், தாங்கியவர்களாய் சொல்லப்படுபவர்கள் மீது எழுதப்பட்ட தீர்ப்பு மாதிரி. தீர்ப்பை விமர்சிப்பதும், எதிர்ப்பதும் கண்டெம்ட் ஆஃப் கோர்ட் இல்லையா, அதைக் கற்பனையும் செய்யலாமா? அவர்களிடம் என்ன சொல்வது.. “ஆமாங்க அப்படித்தான் சொல்லிக்கிறாங்க. ஆனால் அது அவங்க மாதிரியே, அவங்க பேசுற அரை உண்மை, பொய்யை விட அபாயகரமானது” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில், ”அப்ப நக்சலைட் எல்லாம் நல்லவங்கன்னு சொல்றீங்களா?” என்று மறித்தார் நண்பர். இந்த ஆப்ஜெக்டிவ் டைப் கேள்வியை எல்லாம் ஈசியாக டிக் அடித்துவிடலாம். ஆனால், அது சப்ஜெக்டிவாக அவர்களுக்குள் பதிந்து இருக்கும் ஒரு கருத்தை அசைக்க வேண்டுமே, சொல்லுவது அவர்கள் சிந்தைக்குத் தடையின்றிப் போய்ச் சேரவேண்டுமே. “ஆமாம். நல்லவங்க தான்.. இருந்தாலும் நீங்க உடனே ஒரு கருத்துக்கு வரவேண்டியதில்லை, நடப்புகளை நிதானமாக ஆலோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தா நல்லது” என்று மேலே சொல்லத் தொடர்ந்தேன்.
சரி, அவர்களிடம் எதைச் சொல்ல, எப்படிச் சொல்ல?
பசுமையாய் அடர்ந்து நிற்கும் காடுகளான அந்த கற்பக தருக்களை வேரறுத்து;
தாம் உள்ளளவும் தம் உயிர்களின் மூச்சாய், உயிர் நீராய், வளம்பலவாய் வாரி வழங்கிவரும்
மக்களின் உண்மையான அந்த காமதேனுவின் மடியறுத்துப் பால் குடிக்க
வெறிகொண்டு அலைகிறார்கள் நவயுக மைதாஸ்களான
பல பன்னாட்டு, இன்னாட்டு தொழில் முதலைகள்.
அவர்கள் தொடுவதெல்லாம் பணமாக வேண்டும், அதற்காக மனிதம் பிணமாக வேண்டும்.
ஆமாம், அய்யா சொன்னா சரிதான். அதுதான் வளர்ச்சி.
சீன நாகம் தோற்க வேண்டும், சிங்கநாதம் கேட்கவேண்டும். மூலதனத்தை ஈர்த்தாக வேண்டும். அன்னியச் செலாவணியை மலையாய்க் குவித்தாக வேண்டும்.
அதற்குப் பத்து சதவீத வளர்ச்சியை நாம் எட்டிப் பிடித்தாகவேண்டும்.
எனவே, அப்பசுவின் மடியை அறுத்தாக வேண்டும். இந்தா பிடி அரிவாளை
என்று தூக்கிக் கொடுக்கிறார்கள், பி.ஜே.பி., காங்கிரஸ் என பேதமில்லாது
எல்லா ‘அரசியல்’ கட்சிகளும்..
ஐந்தாண்டுகளாய் இந்த அமைதிப்படை – சல்வா ஜுடூம் (peace march) – என்ன ஆமைவேகத்தில் நடைபோடுகிறது? வெறும் 700 ஆதிவாசி கிராமங்களைத்தான் சுட்டுப் பொசுக்கி சுடுகாடாக்கி இருக்கிறார்கள்.
வளர்ச்சியின் வேகம் போதாது. விழுந்து பிடுங்க வேண்டாமா .. இதோ, வேட்டை நாய்கள், கருநாகங்கள் என இந்திய இராணுவத்திற்கு உரிய பெயர் சூட்டி இறக்கிவிட்டிருக்கிறார்கள், காட்டு வேட்டைக்கு. இயற்கை அன்னையின் மடியில் தவழும் குழந்தைகளையும், அவள் கருவையும் சேர்த்து அறுத்தெரிவதற்கு.
அவள் மடியறுக்கத் துணிந்தவர்களின் ஏவல் நாய்கள்,
அந்த முதிய அன்னையின் மார்பகங்களை அறுத்து ஊன் குடித்தார்கள்.
வளர்ச்சிப் பார்வை கொண்டவர்களின் அடியாட்கள்,
பார்வை மங்கிய எழுபது வயது முதியவரை அவர் படுக்கையிலேயே குத்திக் கிடத்தினார்கள்.
அந்த மரங்களை விட்டகல மறுத்த மரவர்களை மரத்தில் கட்டி வைத்து சுட்டு,
பின் தலையை வெட்டி வீழ்த்தினார்கள். அவர்தம் இறுதி விருப்பத்தை நிறைவேற்றினார்கள்.
அவரை, அவர் மனைவியை, மக்களை, பேரன் பேத்திகள் என்று தொடரும் விழுதுகளை
வீட்டிலேயே வைத்து என்கவுண்டர் செய்து சாதனை படைத்தார்கள்.
அம்மா என்ற ஒரே முழக்கத்தை மட்டுமே எழுப்பத் தெரிந்திருந்த அந்த சிசுவின் நாவை அறுத்தார்கள், அதன் எதிர்காலத் தீண்டுதலைக் கண்டு அஞ்சியோ என்னவோ
துப்பாக்கியின் அடிக்கட்டையால் அதன் பற்களை இடித்து உடைத்தார்கள்,
பிஞ்சு விரல்களை வெட்டி எரிந்தார்கள்.
தன் துண்டு நிலத்தை உழுதுகொண்டிருந்த அறுபது வயது முதியவரை,
கோவணத்துக்கும் உனக்கு அருகதையில்லை, நிலமொரு கேடா என
நிர்வாணமாக்கி வெட்டிக் கொன்றார்கள்.
ஆநிரையையும் அடித்து மேய்த்தறியாத அந்த முதியவரை அடித்து இழுத்துவந்து
கை கால்களைக் கட்டி கிராமத்து நடுவே ஒரு மரத்திலிருந்து தலைகீழாய்த் தொங்கவிட்டனர்.
அவர் தலைக்கடியில் எரியூட்டப்பட்ட எண்ணைக் கொப்பரையில்
ஒரு முக்கு முக்கி எடுத்தனர். பின் அவர்மேல் தண்ணீர் ஊற்றித் தூர எரிந்து சென்றனர்.
இன்று அவர் உடலில் புழுவாய் புழுத்து நெளிந்து அவரைத் தின்பவர்களும் அவர்கள்தான். இக்கொடுமையை மறுக்க முடியாத அந்த தன் கையறு நிலையை நொந்துகொண்டு
வெந்து வெதும்பி நிற்கிறது அந்த மரம், ஒரு சாட்சியாக.
இவ்வளவுதானா, சிறை, சித்திரவதை, கற்பழிப்புகள், தானியங்களையும், ஆடு, கோழிகளையும் அவர்களின் பண்ட பாத்திரங்களையும், பத்தம்பது ரூபாய் சொத்துக்களையும் திருடிச் செல்வது எனப் பாதுகாப்புப் படையினரின் வீரசாகசங்கள் ஏராளம்.
இதில் எதைச் சொல்ல, எப்படிச் சொல்ல? ஏதேதோ சொன்னேன்.
”என்னங்க, இவ்வளவு கொடுமையா இருக்குது, இதெல்லாம் நெசமான்னே பயமா இருக்குதேங்க.
இதை ஏன் எந்த பத்திரிகைக் காரனும், டி.வி. யும் கவர் பண்ணல?”
“இலங்கையில தான் தமிழர்களுக்கு எதிரா இப்படி அட்டூழியங்கள் நடந்துக்கிட்டு இருந்துச்சு..
அதப்பத்தி நிறைய வந்துச்சு, இப்ப இங்கயுமா?”
என்ற கேள்விகளுக்கும் சிறு மௌனத்துக்கும் இடையில் இடைவேளை முடிந்தது.
அலுவல் அகம் நோக்கி கால்கள் நடந்தன.
பரவலாய் இந்த விசயம் தெரிந்திருக்கவில்லை என்பது உண்மைதான். உண்மை மீளா உறக்கத்தில் இருப்பதற்காக பரந்துபட்ட மக்களை ஜனநாயக ஊடகங்கள் ஜாலியாய்த் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பதும் உண்மைதான். அவர்கள் அவர்களது வேலையைச் செய்கிறார்கள்… நாம்?
எதார்த்தம் நெருப்பாய் சுட்டெரிக்க, அந்தக் காடு மலைகளையும் அதன் மக்களையும் காக்க இந்த நிலம் அதிராதோ, உறக்கம் கலையாதோ என மனம் ஏங்குகியது.
……………………………………………………………………………………………………………………………………….
எரி எண்ணையில் அமிழ்த்தப்பட்ட உண்மைகள்:
செப்டம்பர்- அக்டோபர், 2009ல் தண்டிவாடாவில் நிகழ்த்தப்பட்ட காட்டு வேட்டை அல்லது பச்சைப் படுகொலை நடவடிக்கை பற்றிய உண்மை அறியும் குழுவின் அறிக்கை- ஷர்மிளா புர்கயச்தா, ஆஷிஷ் குப்தா, ஹிமான்ஷு குமார் ஆகியோரால் உண்மையறியும் குழுவின் சார்பாகக் கையொப்பம் இடப்பட்டது – அக்.21, 2009.
[பி.யு.சி.எல்; பி.யு.டி.ஆர், வன்வாசி சேத்னா ஆஸ்ரம்; மனித உரிமை சட்டக் குழு; ஆக்ஷன் எய்ட்; மன்னா அதிகார்; மற்றும் மாவட்ட ஆதிவாசிகள் ஒருமைப்பாட்டு சங்கம் ஆகிய அமைப்புகள் அக்டோபர் 10 – 12 தேதிகளில் பல தடைகளையும் குறுக்கீடுகளையும் கடந்து தண்டிவாடா சென்று சேகரித்த தகவல்களின் சுருக்கம்].
செப்டம்பர் 17ம் நாள்
கசன்பள்ளி கிராமத்தில் பாதுகாப்புப் படை நடத்திய கொலைவெறியாட்டம்
நடக்கக்கூட முடியாத துகி முயீ என்ற 70 வயது மூதாட்டி மார்பகங்கள் அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இரத்தவெள்ளத்தில் கிடந்தாள்.
அதுபோலவே கண்பார்வை மங்கிய கவாசி கங்கா என்ற 70 வயது முதியவர் அவரது படுக்கையிலேயே குத்திக் கொல்லப்பட்டுக் கிடந்தார்.
வீட்டு வேலையாக வெளியே சென்று திரும்பிய மாத்வி தேவா என்ற 25 வயது இளைஞர் மரத்தில் கட்டப்பட்டு மும்முறை சுடப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்டார் என்கிறார் அவருடன் கிராமம் திரும்பிய அவரது பாட்டனார். அவரது உடலைத் தேடி அலைந்த குடும்பத்தாரிடம் அவரது உடல் சிண்டகுஃபா காவல் நிலைய காம்பவுண்ட் சுவர் அருகே புதைக்கப்பட்டதாக அவ்வேலையை மேற்பார்வையிடப் பணிக்கப்பட்ட படேல் என்பவர் இரண்டு தினங்களுக்குப் பிறகு தெரிவித்திருக்கிறார்.
தனது துண்டு நிலத்தை உழுதுகொண்டிருந்த மாத்வி ஜோகா என்ற 60 வயது முதியவரைப் பிடித்து இழுத்து வந்து ஆடையை உருவி நிர்வாணமாக்கி வெட்டிக் கொன்றிருக்கிறார்கள் பாதுகாப்புப் படையினர்.
மாத்வி ஹத்மா [35 வயது] மற்றும் மத்கம் சுல்லா ஆகியோர் சுல்லாவின் மனைவியின் கண்முன்னாலேயே கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டனர்.
அன்று காலை மாடுமேய்த்துக் கொண்டிருந்த ஆந்தர்பராவை சேர்ந்த முசகி தேவா என்ற 60 வயது முதியவரைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து அடித்து கிராமத்துக்குள் இழுத்துச் சென்றனர். கைகாலைக் கட்டி ஒரு மரத்திலிருந்து அவரைத் தலைகீழாகத் தொங்கவிட்டனர். அவரது தலைக்குக்கீழ் ஒரு எண்ணைக் கொப்பரை எரியூட்டப்பட்டது. கொதிக்கும் எண்ணைக்குள் அவரை ஒரு முக்கு முக்கி எடுத்தனர் பாதுகாப்புப் படையினர். பின்னர் அவர்மீது தண்ணீர் உற்றினர். பிறகு அவிழ்த்துப் போட்டுவிட்டு சென்றனர். அவரது இரணம் இன்று புழுபுழுத்து நெளிகிறது. மருத்துவ வசதியின்றி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.
கிராமத்தின் அனைத்து வீடுகளும், அடித்து உடைக்கப்பட்டு தீயிடப்பட்டன. பாதுகாப்புப் படை வருவது அறிந்து ஒட்டுத் துணியோடு ஓடமுடிந்தவர்கள் உயிர்தப்பினர். காடுகளில் கூடாரமிட்டும், உறவினர்களின் அடைக்கலம் புகுந்தும் காலம் தள்ளுகின்றனர். பாதுகாப்புப் படையினரின் செயல்களால் கிராமமே பீதியில் உறைந்து கிடக்கிறது.
அக்டோபர் 1 ம் நாள்
கோம்பட் கிராமத்தில் பாதுகாப்புப் படை நடத்திய கொலைவெறியாட்டம்
மாத்வி பாஜார், அவரது மனைவி மாத்வி சுபி, அவர்களது மணமான மூத்தமகள் கர்தம் கன்னி மற்றும் இளைய மகள் மாத்வி முட்டி ஆகியோர் அவர்களது வீட்டுக்குள்ளேயே குத்திக் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டில் தங்கியிருந்த மந்தர்பதார் கிராமத்தை சேர்ந்த முச்சகி ஹண்டாவும் மத்கம் தேவாவும் அதுபோலவே குத்திக் கொல்லப்பட்டிருந்தனர்.
மாத்வி பாஜாரின் இரண்டே வயதான பேரப் பிள்ளையையும் பாதுகாப்புப் படை விட்டுவைக்கவில்லை. அக்குழந்தையை அடித்து, அதன் நான்கு விரல்களை அறுத்து, கதறும் குழந்தையில் பல்லை உடைத்து, நாக்கையும் அறுத்திருக்கிறது இத்தேசப் பாதுகாப்புப் படை. [அதன் தாய் வெட்டிக் கொலை செய்யப்படும்போது அவள் அணைத்திருந்த குழந்தையின் விரல்கள் துண்டிக்கப்பட்டதாக வேறொரு செய்தி கூறுகிறது]
சோயம் சுபாவும் அவரது மனைவி சோயம் ஜோகியும் அவர்களது வீட்டுக்குள்ளேயே குத்திக் கொல்லப்பட்டிருந்தனர்.
மாத்வி என்கா என்பவரது வீட்டில் புகுந்து அவரைக் கத்தியால் குத்தி வெளியே தள்ளி கிராமம் நெடுகத் தறதறவென இழுத்துச் சென்றனர். இறுதியில் அவரை சுட்டு வீழ்த்திவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறினர் பாதுகாப்புப் படையினர்.
கோம்பட் கிராமத்தில் பாதுகாப்புப் படையுடன் நடந்த ”சண்டையில்” ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. கொல்லப்பட்டவர்களை மாவோயிஸ்டுகள் இழுத்துச் சென்றுவிட்டனர் என்கிறார் தண்டிவாடா காவல் கண்காணிப்பாளர்.
சிண்டகுஃபா கிராமத்தில் பாதுகாப்புப் படை நுழைவதைப் பார்த்த தோமர் முட்டா தன் வீட்டு மக்களைக் காக்க விரைந்தோடும்போது சுடப்பட்டு பின்னர் வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். அக்கிராமத்தில் 10 போர் கொலை செய்யப்பட்டதை மட்டுமே உண்மையறியும் குழுவால் உறுதி செய்ய முடிந்தது. ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. கோப்ராக்களும் போலீசாரும் இரண்டு அணியாய் அன்று செயலில் இறங்கியதை எஸ்.பி. உறுதி செய்கிறார். எத்தனை கிராமங்களில் எத்தனை கொலைகள் விழுந்தது என அறிய முடியவில்லை.
முகுட்டோங்க் மற்றும் ஜினிடொங்க் கிராமங்களில் இருந்து 18 முதல் 32 வயது வரையான பத்து இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் அடித்து இழுத்துச் சென்றனர். அக்டோபர் 1 ம் தேதி இழுத்துச் சென்ற இவர்களில் எட்டு பேர் மீது 3ம் தேதி இ.கு.சட்ட்த்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது கோண்டா காவல் நிலையம். இருவரைப் பற்றிய விவரமில்லை. அவர்களைத் தேடிச்சென்ற அவர்களது உறவுக்காரப் பெண்கள் கோண்டா காவல் நிலையத்தில் கொடுமைப்படுத்தப்பட்டு வெற்றுத் தாளில் கைநாட்டு பதித்துக்கொண்டு விரட்டப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பெண்கள் விசாரிக்கச் சென்றபோது அவர்கள் கேவலமாக ஏசப்பட்டு, அவர்கள் இருவரையும் கண்காணாத இட்த்துக்கு அனுப்பிவிட்டோம் இனி ஒருமுறை தேடிக்கொண்டு வரக்கூடாது என மிரட்டி அனுப்பிவிட்டனர்.
செப்டம்பர் 17 அன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலின்போது, கிராமத்தாரைக் கொலை செய்வதிலும், அதைத் தொடர்ந்து அவர்கள் வீடுகளை தாக்கி அழிப்பதிலும் தீயிடுவதிலும் ஈடுபட்டனர். அக்டோபர் 1 அன்று நட்ததிய தாக்குதலின்போது விசயம் சற்று வித்தியாசமாக இருந்தது. அவர்கள் கிராமத்தார் வீடுகளில் புகுந்து தானியங்கள், பருப்புகள், பணம், பண்டபாத்திரங்கள் எல்லாவற்றையும் அள்ளிச் சென்றதோடு, கால்நடைகளையும் ஓட்டிச் சென்றனர். சூரையாடலுக்குப் பிறகு ஆங்காங்கே வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தினர். மக்கள் 300 ரூபாயிலிருந்து 10000 ரூபாய் வரையிலான தொகையைப் பாதுகாப்புப் படையிடம் திருட்டு கொடுத்திருந்தனர்.
அடித்து சித்திரவதை செய்து விசாரிப்பது, பின்னர் காலில் சுட்டு ஓடவிடுவது; நாள் முழுவதும் அடித்து சித்திரவதை செய்வது, ஆங்காங்கே கத்தியால் குத்துவது பின் விடுவிப்பது போன்ற பயங்கர ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படை கையாள்கிறது.
பாதுகாப்புப் படை மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின்போது கூலிப்படைகளான சல்வா ஜுடூம், எஸ்.பி.ஓ வைச் சேர்ந்த ஆட்கள் உடன் வந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். சல்வா ஜுடூம் தலைவன் பொட்டு ராஜா, பாண்டேகுடா கிராமத்தை சேர்ந்த பாண்டே சோமா, அசர்குடா கிராமத்தை சேர்ந்த கங்கா, தங்கள் கோம்பட் கிராமத்தை சேர்ந்த மாத்வி புச்சா ஆகிய எஸ்.பி.ஓ கூலிப்படை ஆட்களை மக்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்.
தொடர்புடைய பதிவுகள்
- மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!
- இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி.
- லண்டனில் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் : ஈழப் போராட்டத்தின் புதிய திசை
- திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி
- இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்
- தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!
- போரை நிறுத்து !!
- பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்!
- பினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்!!
- இங்கே கடல், நிலம், மலை….மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் !!
- மீனவர்களை சுனாமியாக அழிக்கவரும் மேலாண்மைச் சட்டம் !!
- குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல்
- கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல்
- தண்ணி வந்தது தஞ்சாவூரு….பாடல்
- மெரினா – விட்டுவிடாதே வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!!
- கச்சத்தீவு: அனாதைகளாய் தமிழக மீனவர்கள்!-சிறப்புக் கட்டுரை!
- ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்!
- குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!
ஐயோ… We seem to be the major danger facing ourselves. The outcome of the civilization achieved so far has come to making ourselves extinct very soon. How can we do this to children and senile and still exist as a species in this world – there is blood everywhere in what we eat and breathe – all these for a future where humanity will seize to exist.
//சீன நாகம் தோற்க வேண்டும், //
என்னது சீனா தோற்க வேண்டுமா? ஆபரேசன் கிரீன் ஹண்ட் வெற்றியடைந்தால் அந்தப் பகுதிகளிலிருந்து எடுக்கப்படும் சிறந்த இரும்பு எல்லாம் சீனாவுக்குத்தான் செல்லும். அதாவது இந்த காட்டு வேட்டைக்குப் பின்னால் சீனாவின் வெற்றியும் அடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் நோண்டியெடுக்கப்பட்டவற்றுள் மிகப் பெரும்பகுதி சீனாவுக்குத்தான் செல்கிறது. இந்த தேசத் துரோகத்தைப் பற்றியெல்லாம் தேச பக்தர்கள் பேசமாட்டார்கள். ஏனேனில், சீனாவுக்கு இரும்பு விற்ற காசு துருப்பிடிக்காது.
//இதை ஏன் எந்த பத்திரிகைக் காரனும், டி.வி. யும் கவர் பண்ணல?”//
இந்திய ஊடகத் துறையிலும் அன்னிய மூலதனம் அனுமதிக்கப்பட்ட பல நாட்களாகிவிட்டன அமைச்சரே, தூணும் அவர்களே, துரும்பும் அவர்களே.. சகலத்திலும் அவர்களே இருந்து அரசாளும் அதிஉயர் ஜனநாயகத்தில் வாழ்கிறோமய்யா நாம்.
எனவே, ஊடகங்கள் என்ற நாய்கள்(டைம்ஸ் நௌ கோஸ்வாமி போல) யாரைப் பார்த்து குரைக்க வேண்டுமோ அவர்களைப் பார்த்து சரியாகக் குரைக்கும்.
அசுரன்
No. Wrong. Indian ores are shipped to various nations and destinations like s.Korea, etc. and China secretly supplies arms, etc to Indian Maoisits via Nepal and other borders to destabilise India. China considers India as a dangerous competitor in economic and political spheres. and the chinese establishment is too complex and diverse and is not a coherent democratic set up like India. Hence, the official China denies such allegations, while elements of Chinese regime continue to support Indian Maoists and N.E.Isuregents covertly for many many years. and this has nothing to do with idealogy or Maoism. It is pure power politics and an old game. Pakistan too has a similar program.
//No. Wrong. Indian ores are shipped to various nations and destinations like s.Korea, etc. and China secretly supplies arms, etc to Indian Maoisits via Nepal and other borders to destabilise India. China considers India as a dangerous competitor in economic and political spheres. and the chinese establishment is too complex and diverse and is not a coherent democratic set up like India. Hence, the official China denies such allegations, while elements of Chinese regime continue to support Indian Maoists and N.E.Isuregents covertly for many many years. and this has nothing to do with idealogy or Maoism. It is pure power politics and an old game. Pakistan too has a similar program.//
செய்திகள் வழங்கியது அதியமான் அண்டு கோவின் சீக்ரெட்டு ஏஜெண்டு 0000000. (கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்னு பூஜ்ஜியம்)
//No. Wrong. Indian ores are shipped to various nations and destinations like s.Korea, etc. and China secretly supplies arms, etc to Indian Maoisits via Nepal and other borders to destabilise India. China considers India as a dangerous competitor in economic and political spheres. and the chinese establishment is too complex and diverse and is not a coherent democratic set up like India. Hence, the official China denies such allegations, while elements of Chinese regime continue to support Indian Maoists and N.E.Isuregents covertly for many many years. and this has nothing to do with idealogy or Maoism. It is pure power politics and an old game. Pakistan too has a similar program.//
சொந்த நாட்டு மக்களை சாவடிக்க பன்னாட்டு கம்பேனிகளிடம் துட்டு வாங்கினால் அது பிரச்சினையில்லையாம். அது பற்றி பேச மாட்டேன் என்கிறாரே இந்த நல்லவர்?
இது நான் சொன்னது:
//சிறந்த இரும்பு எல்லாம் சீனாவுக்குத்தான் செல்லும். அதாவது இந்த காட்டு வேட்டைக்குப் பின்னால் சீனாவின் வெற்றியும் அடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் நோண்டியெடுக்கப்பட்டவற்றுள் மிகப் பெரும்பகுதி சீனாவுக்குத்தான் செல்கிறது.//
திருவாளர் அதியமான் சொன்னது:
//No. Wrong. Indian ores are shipped to various nations and destinations like s.Korea, etc. //
இது நான் சொன்னதுக்கு ஆதாரம்:
http://www.hinduonnet.com/fline/fl2311/stories/20060616002104300.htm
//
“India is China’s second largest supplier of iron ore and exported 68.5 million tonnes to that country in 2005-06. Many of those shipments contained the famous high-quality ore (65%+ Fe content) from Bellary. As the country looks to increase annual domestic steel production from the current 38 million tonnes to 100 million tonnes by 2020, many worry that the best iron ore will have already been spent.
Unscrupulous trade
With the cost of production at Rs.100 a tonne, the region’s mine owners made a total profit estimated at Rs.3,100 crores last year. Yet government royalties have remained shockingly low, rising from Rs.24 to just Rs.27 a tonne in October 2004, well after the China boom had begun. According to the DMG, Karnataka collected Rs.80 crores in royalties in 2004-05, less than 2 per cent of what the ore was worth in the market.
”
//
யாரு ராங்கா பேசுறாங்கன்னு ஜனங்களே நீங்களே முடிவு பன்னிக்கோங்க
ஆகவே நீங்கள் இன்னும் சீன முன்னேற கூடாது எண்டு ஒரு கொள்கை உள்ள சராசரி இந்தியன். இந்தியன் என்பதை விட்டு மனிதனாக யோசிங்கோ. மேலும் ஊடகம் என்பது என்றுமே ஒரே மாதிரி தன. ஈழ பிரச்னை என்றாலும் சீன பிரச்னை என்றலும்.
//இதை ஏன் எந்த பத்திரிகைக் காரனும், டி.வி. யும் கவர் பண்ணல?”//
இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?
வெட்கமும் இல்லாமல் வேதனையும் இல்லாமல் வெட்டியாய் விவாதம் செய்வோரைத் தவிர்க்கலாமே. நாளை நம் குரல் ஓங்கும்போது அவர்களின் ஜால்ரா தான் இன்னும் சத்தமாக இருக்கும்.
மருத்துவர் அய்யா,
’நம் குரல்’ என்று யாரின் குரலை சொல்றீங்க ? மாவோயிஸ்டுகளின் குரலையும் சேர்த்தா ? அவர்கள் குரல் ஓங்கினால் என்ன ஆகும் ? நியாயம் கிடைக்குமா ?
கடந்த காலங்களில் மாவோ செய்த விசியங்களை ஏற்கிறீர்களா ? மாவோவின் பெயரை கொண்டவர்களின் வழிமுறைகளை ஆதரிக்கிறீர்களா ? மனித உரிமைகளை யார் என்ன
காரணத்திற்க்கா மீறினாலும், பாரபட்சமில்லாமல் கண்டிக்க வேண்டாமா ? அல்லது
சித்தாந்தாத்தின் பெயரால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ? உங்கள் நிலைபாடு என்ன ?
இந்திய அரசு பயங்கரவாதம் கொடூரமானது. உடனே நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் மாவோயிஸ்டுகளின் வினைகள், எதிர்வினைகளை கடந்த 40 ஆண்டுகளாக ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. பழங்குடிகளின் நிலங்களை ’பிடுங்குவது’ சமீப காலங்களில் தான். அதற்க்கு முன் மாவோயிஸ்டுகளின்
செயல்களுக்கு வேறு காரணங்கள் சொன்னார்கள்.
ஈழபோரில் ராஜபக்ஷே அரசின் கொடூர தாக்குதல்களை மட்டும் கண்டனம் செய்த
புலி முகவர்களை போல் இருக்கிறது இங்கு. புலிகள் செய்த ஃபாசிச கொடூரங்களை
பலர் நியாயப்படுத்தினர் / மறுத்தனர். அதே பாணி தான் இங்கும். மாவோயிஸ்டுகளின்
ஃபாசிசத்தை நியாயப்படுத்த முனைகின்றனர். இரு இடங்களிலும் அப்பாவி மக்கள் தான் நடுவில் சிக்கி பலியாகின்றனர்..
இதற்க்கு முந்தைய கட்டுரையில் காந்தியவாதி ஒருவரின் கருத்துகளை பிரசுரம் சொய்திருந்தார்கள். சரியான கருத்துக்கள் தாம். ஆனால் காந்தி, காந்தியவாதிகள், காந்திய முறைகள் : இவற்றை கடுமையாக விமர்சிக்கும் மார்க்சிஸ்டுகள், காந்திய முறைகளை பற்றி, காந்தி தேசம் இது என்றெல்லாம் இப்ப சொலவது சந்தர்பவாதம் தான். தேவைபடும் இடங்களில் காந்தியவாத குரல்களை உபயோகிப்பது, ஆனால் காந்திய வழி ஒரு ஏமாற்று வேலை என்றும் சொல்வது. முரண் தொகையா அல்லது
சந்தர்பவாதமா ?
அதியமான் அய்யர் சும்மா போகும்போது யாராவது அடித்தால் அடித்தவனை பார்த்து, சும்மா சிரிச்சிக்கே போயிடுவாரு, திருப்பி தாக்கமாட்டாரு அவ்வளவு நல்லவரு
மாவோயிஸ்டுகளை பல்லாயிரக்கணக்கான தலித்துகளும், பழங்குடி மக்களும் ஆதரிக்கிறார்கள். அந்த மக்கள் தங்கள் வாழ்வின் விடுதலைப் பெருமூச்சாக மாவோயிஸ்டுகளைக் கருதுகிறார்கள். உங்களைப்போல நகர்ப்புறத்து வசதிகளை சுதந்திரமாக அனுபவிக்கும் அறிவு ஜீவிகளுக்கு சட்டீஸ்கார் பற்றியோ, ஜார்க்கண்ட, பீகார்பற்றியோ என்ன தெரியும்? ரன்பீர் சேனாவின் இரத்தவெறிக் கொட்டத்தை வேரறுத்த்து நக்சல்கள்தான் அதியமான், உங்கள் இந்திய அரசு ஒன்றும் புடுங்க வில்லை. மேலாக ஆதிக்க சாதி வெறி குண்டர்படைகளுக்கு மறைமுக ஆதரவைத்தான் அரசும், காங்., பா.ஜ.க கட்சிகள் வழங்கின. மக்களின் ஆதரவு இன்றி நக்சல்கள் நீடித்திருக்க முடியாது.
புலிகளும், மாவோயிஸ்டுகளும் ஒன்று என்று நீங்கள் சொல்வது அடிமுட்டாள்தனம். உங்களுக்கு புலிகளைப் பற்றியும் தெரியவில்லை, மாவோயிஸ்டுகளைப்பற்றியும் தெரியவில்லை. காந்தியவாதிகள் இந்தியஅரசின் அட்டூழியத்தை அம்பலப்படுத்துகிறார்கள். காந்தியமுறையில் ஆதிவாசி மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை என்பதை குற்ற உணர்வுடன் ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களே ஒத்துக்கொண்ட விசயத்த மற்றவர்களிடம் சொல்வதில் என்ன சந்தர்ப்பவாதம்?
/////மாவோயிஸ்டுகளை பல்லாயிரக்கணக்கான தலித்துகளும், பழங்குடி மக்களும் ஆதரிக்கிறார்கள். அந்த மக்கள் தங்கள் வாழ்வின் விடுதலைப் பெருமூச்சாக மாவோயிஸ்டுகளைக் கருதுகிறார்கள்.////
அப்படினீன்னு நீங்களே சொல்லிக்குங்க. நாங்க அப்படி நினைக்கவில்லை. ஆந்திராவில்,
PWG முற்றாக அழிக்கப்பட்டதிற்க்கு மக்களின் ‘காட்டிக்கொடுத்தலும்’ ஒரு முக்கிய காரணம். ‘போராளிகளின்’ ஃபாசிச வன்முறை போக்கை பொறுக்க முடியாத மக்களின் எண்ணிக்கை தான் அதிகம். நேற்று பிகாரில் நடந்த படுகொலைகளில் 11 அப்பாவி கிராம மக்கள் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளுக்கு மக்கள் ஆதாரவு எத்தனை சதம் என்பதை இது போன்ற நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நிருபிக்கின்றன.
அதென்ன ‘உங்கள் இந்திய அரசு’ ; இந்த அரசு அனைவருக்கும் பொதுதான். உங்களையும் சேர்த்திதான். அதன் பல சேவைகளை நான் அனைவரும் தாராளமாக அனுபவிக்கிறோம்.
////புலிகளும், மாவோயிஸ்டுகளும் ஒன்று என்று நீங்கள் சொல்வது அடிமுட்டாள்தனம். உங்களுக்கு புலிகளைப் பற்றியும் தெரியவில்லை, மாவோயிஸ்டுகளைப்பற்றியும் தெரியவில்லை.////
புலிகளும், மாவோயிஸ்டுகளும் ஒன்று என்று சொல்லவில்லை. வழிமுறைகளில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. முக்கியமாக யாருக்காக போராடுகிறார்கள் என்கிறார்களோ அவர்களுக்கு மிக அதிக துன்பம் அளிக்கும் செயல்களை செய்ய தயாங்காதவர்கள். சித்தாந்த ரீதியாக புலிகள் வலதுசாரிகள் தான். அதை பற்றி ஒப்பிடவில்லை. அடிமுட்டாள்தனம் எதுவென்று நீங்களே சொல்லிக்கொள்ள வேண்டாமே. ஈழ மக்களின் எத்தனை சதம், உண்மையில் புலிகளையும், புலிகளில் செய்ல் முறைகளையும் மனதாராக ஆதரித்தனர் ? இங்கு பழங்குடியினர் மற்றும் ஏழை கிராம மக்களில் எத்தனை சதம் உண்மையில் மாவோயிஸ்டுகளை மனதாரா ஆதரிக்கின்றனர் ? இரு பகுதிகளிலும் எத்தனை சதம் பயத்தினால், அமைதியாக இருக்கின்றனர் ? சாலவ ஜடூம் மிக கொடுரமான செய்லகளை செய்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதில் இருப்பவர்களும் பழங்குடியுனர் தான். அரசு மிரட்டி அவர்களை அதில் சேர்க்கவில்லை. முடியவும் முடியாது. 2005இல் தான் சால்வா ஜுடும் உருவாக்கப்பட்டது. அதற்க்கு முன்பும் பல பத்தாண்டுகளாக மாவோயிஸ்டுகளின் வெறியாட்டம் நடந்தது. பல ஆயிரம் பேர்களை கொன்றனர். 70களி, 80களி, இந்த தனியார்மயம், தாரளமயம் இல்லை. அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தாம். அன்றும் மக்கள் யுத்தம் என்ற பெயரில் ‘போர்’ ; எதோ ஒரு சாக்கு வேண்டும் அவர்களுக்கு. இன்று நில அபகரிப்பு. அன்று வறுமை மற்றும் ஏற்ற தாழ்வு. ஆனால் அவைகளை அகற்ற மாவோயிஸம் பயன்படாது என்பதை வரலாறு தெளிவாக நிருபித்தும், வறட்டு வாதம் தொடர்கிறது.
மருத்துவர் பாலகோபால் போன்றவர்கள் அரசின் பயங்கரவாதத்தை எதிர்தால் வரவேற்போம். ஆனால் ஃபாசிசத்தை வேறு பெயரில் ஆதரிப்பவர்கள், இதை எதிர்பதை தான் சந்தர்ப்பவாதம் என்கிறோம்.
காந்தியவாதிகள் மாவோயிசம், கம்யூனிசம் மற்றும் ஆயுத போராட்ட வன்முறைகளை பற்றி பல நூறு நூல்கள் எழுதியுள்ளன. அதை ஏற்று, இங்கு மறுபிரசாரம் செய்வீர்களா ?
this post describes on one side of the issue. the other side is conveniently ignored.
today’s news :
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8521269.stm
Maoist attack kills 11 in Bihar village
ஊடகங்களில் அன்னிய மூலதனம் அனுமதிக்கப்பட்ட பிறகு அவை பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி ஊதுகுழலாகவே மாறிவிட்டன அதியமான்.
இந்திய ஆயுதப் படையினர் கொன்றொழிக்கும் பல பத்து கிராமத்தவர்கள் பற்றி இதுவரை எந்த ஊடகங்களிலும் செய்தியில்லை. எனினும், அவ்வப் போது மாவோயிஸ்டுகள் மக்களைக் கொன்றதாக மட்டும் சில செய்திகள் வருகின்றன.
அங்கு பிணங்களுக்கா பஞ்சம். அது ஒருபக்கம் இருக்கட்டும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல இதே பீஹாரில் 17 பேர் மாவோயிஸ்டுகலால் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது. பிறகு அந்த செய்தியும் பொய் என்பதை அரசே ஒத்துக் கொண்டது. இது புதிது அல்ல.
அதியமான் காட்டு வேட்டை பதிவுகளில் இது போல இழவுகள் விழுந்தால் மட்டுமே திருவாய் மலர்வதாக சபதம் செய்து கொண்டுள்ளது போலத் தெரிகிறது. இல்லையெனில், கம்யுனிஸ பூதம் குறித்து பிரச்சாரம் செய்வதற்கு தார்மீக அடிப்படையில்லாதொழிந்து விடுமே? அதியமானின் பிரச்சாரத்திற்கு அரசாங்கம் அடிக்கடி மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட பிணங்களை காட்சிப் படுத்த வேண்டும் போல இருக்கிறது.
வெகு எச்சரிக்கையாக மவோயிஸ்டு, அரசு மோதல் குறித்து மட்டுமே அதியமான் பேசுவதை கவனித்தீர்களா? இதில் வேறு எதுவுமே பேசுவதற்கு விசயம் இல்லாதது போல பேசும் அவரது பாசாங்கு மிக அவலட்சணமானது.
அசுரன்
20ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் ம.க.இ.க கூட்டத்தின் போஸ்டர்களை
பார்த்தேன். அதில் சிவப்பு மசியில் அச்சிடப்பட்ட போஸ்டரில், ’நக்சல்களின் கீழ் அணி திரள்வோம்’ என்று பெரிய எழுத்தில், முதல் வரியில் காணப்பட்டது. அதுதான் ம.க.இ.கா வின் நிலைபாடா ? நக்சல்களையும் கண்டித்து எழுதப்பட்டிருந்த டெகல்கா கட்டுரையை மொழிமாற்றம் செய்து இங்கு பிரசரித்திருந்தீர்கள். அப்ப உண்மையான நிலைபாடு என்ன ?
நக்சல்களின் தலைமையில் நீங்கள் செயல்பட்டு, புரட்சி அரசை எதிர்காலத்தில் இந்தியாவில் அமைத்தால், மாற்று கருத்தாளர்களை, ‘எதிரிகளை’ எப்படி அடக்குவீர்கள் ? In a democratic way, or in the usual brute fasicist ways of ‘revolution’ ? இது போன்ற பொதுக்கூட்டங்களை நடத்தும் சுதந்திரங்களை, உங்கள் ஆட்சியில், உங்கள் ‘எதிரிகளுக்கு’ அளிப்பீர்களா ? கண்டிப்பாக அனுமதிக்கமாடீர்கள். அனைவரையும், கூண்டோடு வதை முகாம்களுக்கு அனுப்பியிருப்பீர்கள். அதை தவிர்க்கவே முடியாத
வரலாற்று கட்டாயம் இருக்கும்…
அதியமான் நினைப்பதை நாம் தடுக்கவா முடியும்
அதியமான் தெகல்கா கட்டுரையை முழுமையாக படித்து விட்டு பின்னூட்டம் இடவும். அந்தக் கட்டுரையில் நக்சல்கள் மக்கள் ஆதரவுடன் நீடித்திருப்பதற்கு என்ன காரணம் என்பதையே விளக்கியிருக்கிறார்கள். ஷோமா சவுத்ரி நக்சலை ஆதரிக்கவில்லை என்றாலும் அதன் இருப்பு நியாயத்தை நடைமுறையிலிருந்து விளக்குகிறார். பழங்குடி மக்களை ஏறிட்டும் பார்க்காத அரசு இப்போது நக்சல்களை அடக்குவதற்கு மட்டும் வந்திருப்பது அந்த மக்களின் நக்சல் ஆதரவை அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார்.
நக்சல்கள் புரட்சி செய்து ஆட்சி அமைத்தால் யாரெல்லாம் எதிரிகள் என்று நீங்கள் கருதுவது போல இல்லை. அதை மக்கள் முடிவு செய்வர். எடுத்துக்காட்டாக வேதாந்த நிறுவனத்தை இப்போது எதிரியாக கருதுவது அங்கு வாழும் மக்கள்தான். சும்மா எதற்கெடுத்தாலும் வதைமுகாம் என்று அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று புலம்பாதீர்கள்.
///நக்சல்கள் புரட்சி செய்து ஆட்சி அமைத்தால் யாரெல்லாம் எதிரிகள் என்று நீங்கள் கருதுவது போல இல்லை. /// tell it to the birds comrade. This is an atrocious lie and false. We know what the Maosists will do if and when they capture power. The term people is totally false. The politburea of Maosists or a Leader will decide all matters in a totalatarian manner, as it happened in USSR and China.
பெரும்பான்மை மக்கள் வறுமையில் உழலும்போது நக்சல்கள் ஆட்சிக்கு வந்தால் blog ல் எழுதமுடியாதே என நினைக்கும் கண்ணியமான்கள் எதிரிகளே
அதியமான்,
நக்சல்கள் ஆட்சி அமைத்தால் என்னவாகும் என்பது இருக்கட்டும். உங்களது காட்டு வேட்டை மன்னர்களின் ஆட்சியில் மனித உரிமை எந்த லட்சணத்தில் உள்ளது என்பது குறித்து உங்களிடமிருந்து எந்த வொரு தார்மீக ஆவேசமும் வெளிப்படவில்லையே ஏன்?
இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். இதற்கு என்ன மாற்று என்று விவாதியுங்கள்.
அசுரன்
// says:
February 19, 2010 at 10:48 am
அதியமான்,
நக்சல்கள் ஆட்சி அமைத்தால் என்னவாகும் என்பது இருக்கட்டும். உங்களது காட்டு வேட்டை மன்னர்களின் ஆட்சியில் மனித உரிமை எந்த லட்சணத்தில் உள்ளது என்பது குறித்து உங்களிடமிருந்து எந்த வொரு தார்மீக ஆவேசமும் வெளிப்படவில்லையே ஏன்?
இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். இதற்கு என்ன மாற்று என்று விவாதியுங்கள். //
அதியமானின் பதில்களைக் கவனியுங்கள். அவரது முதலாளித்துவ செலக்டிவ் அம்னிசிய வியாதி தெரியவரும். கட்டுரை சம்பந்தமாக கேட்டிருந்த எந்தக் கேள்விக்கும் அவரிடமிருந்து பதில் இல்லை. மாறாக, பொதுவாக முதலாளித்துவம், சுதந்திரச் சந்தை, வேலைவாய்ப்பு போன்ற பழைய பல்வலிகளையே நோண்டிக் கொண்டிருக்கிறார். அதுதான் அவருக்கும் வசதி. நடைமுறைப் பிரச்சினைக்கு பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை இல்லையா?
கட்டுரைக்கு சம்பந்த்மில்லாத விசியங்களை நீர் மட்டும் பேசலாமா என்ன ?
சில பின்னூட்டங்களில் உள் விவாதங்கள் தான் இங்கு. அவையும் விவாதத்தின் ஒரு பகுதிதான். மாவோயிஸம் என்ன சாதிக்க முயல்கிறது என்ற broad spectrum இன் கீழ் இவை விவாதிக்கப்பட வேண்டியவை தான்.
மாவோயிஸ்டுகளில் வெறிசெய்ல்களை பற்றியும் இங்கு உங்களை போன்றவர்களுக்கு செலக்டிவ் அம்னீசியா இருக்கிறதே. மேலும் அரசு பயங்கரவாதம் என்ற சொல்லை நான் உபயோகப்படுத்துகிறேன். கட்டுரையில் பல விசியங்களை ஏற்கிறேன் என்று பொருள். ஆனால் மாவோயிஸ்டு பயங்கரவாதம் என்ற சொல்லை நீங்க பயன்படுத்த மாட்டீங்க. அவர்கள் ’போராளிகள்’.
ஆஹா. அருமை. அதியமான் நினைப்பது (புரட்சி அரசு) மட்டும் நடந்து விட்டால்…அது இருக்கட்டும். ஏதோ மாற்று கருத்துக்களை எல்லாம் இந்த ஜனநாயக அரசு சுதந்திரமாக அனுமதிப்பது போல மாயையை உருவாக்குகிறார் அதியமான். அரசுக்கு எதிராக பிரசாரம் செய்யும் போதெல்லாம் எத்தனை எத்தனை வழக்குகள், சிறை, தண்டனை, தடியடி, மண்டை உடைப்பு, வலி,அவமானங்கள்..இதையெல்லாம் இந்த நீதிமானுக்கு யாராவது சொன்னால் தேவலை.
அரசு பயங்கரவாதத்தை மைய்யமாக பூசெண்டால் அடித்துவிட்டு, மாவோயிஸ்ட்களின் ‘வன்முறை வெறியாட்டத்தை’ வெறி கொண்டு தாக்கும் சுதந்திரம் அதியமானுக்கு இருப்பதை போலவே, மாவோயிஸ்ட்கள் அப்பாவி(!) பொதுமக்கள் யாரையும் கொல்வதில்லை என்று நம்பும் சுதந்திரமும் எமக்குண்டு.
கருணாநிதி காங்கிரஸ் போல் இரும்புக்கரம் கொண்டு அடக்கலாம். எல்லாம் இவங்கள் செய்தால் ஜனநாயகம் நக்க்சல் என்றல் பயங்கரவாதம். எதனை காலம் தன இப்படி எமாற்றுவீர்
/////….அவர்களது நீண்டகால குறிக்கோள், ஆயுதப்போராட்டத்தின் மூலம் மக்களுக்கான அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதே. இவ்விசயத்தில், அவர்கள் இந்திய அரசின் இறையாண்மையை அச்சுறுத்துகிறார்கள். 2004ல் ஆந்திர அரசுக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையே நடந்து முறிந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த கே. பாலகோபால் உள்ளிட்ட பலரும், இவ்விசயத்தில் அவர்களை எதிர்த்துப் போராட அரசு தன்னளவில் உரிமை பெற்றிருப்பதாகவே கருதுகிறார்கள். “மாவோயிஸ்டுகளே அதிகாரத்துக்கு வந்துவிட்டால், அவர்களும் இவ்வாறான சாவால்களை சகித்துக்கொள்ள மாட்டார்கள்” என்கிறார் பாலகோபால். நக்சலைட்டு தலைவர்கள், இந்திய அரசு செயல்பட முடியாத வகையில் “விடுதலைப் பிரதேசங்களை” உருவாக்குவது பற்றியும் பாலகோபால் விமர்சனக் கண்ணோட்டம் கொண்டிருந்தார். “தாங்கள் மக்களின் பிரதிநிதிகளே என்று அவர்கள் உரிமை கொண்டாடும்போது, மக்களைப் பாதிக்கும்படியான ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை – தனது செயல்கள் மூலமாகவோ அல்லது அதனால் தருவித்துக்கொள்ளும் விளைவுகள் மூலமாகவோ- அவர்கள் முன்னெடுக்க முடியுமா? ஒருக்கால், அடையப்பட முடியாத எதிர்காலக் கற்பனா உலகத்திற்காக தற்போதைய சடீஷ்கர் ஆதிவாசித் தலைமுறை தம்மைத் தியாகம் செய்துகொள்ள விரும்புகிறதா?” என்று கேள்வி எழுப்புகிறார் பாலகோபால்.////
இது டெகல்கா பதிவிலிருந்து.
காலஞ்சென்ற மருத்துவர் பாலகோபால் அவர்கள் மிகவும் மதிக்கப்பட்ட மனித உரிமை
ஆர்வலர். மாவோயிஸ்டுகள் பற்றிய அவரின் கருத்துகள் மிகவும் சரியானவை. அப்ப,
நக்கஸல்களைன் தலைமையில் அணிதிரள்வோம் என்று சொல்பவர்கள் என்ன செய்ய போகிறார்கள் ?
நமது நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங் சொல்கிறார் “நாட்டைக் காப்பாற்றச்வேண்டும்”, சோனியா சொல்கிறார் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்று- அத்வானி-சிதம்பரம்-இன்னும் பலர் சொல்கின்றனர் நாட்டை காப்பாற்ற வேண்டுமென்று – யாரது செயல்கள் பயங்கரவாதம் – யாரிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் – நாட்டின் காடுகள், வளங்கள் எப்படி அரசியல் வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது – என்பதற்க பெங்களுர் வழக்கறிஞர் தோழர் பாலன் மதுரை மனித உரிமை பாதுகாப்பு மைய ஆண்டு விழாவின் போது பேசிய சுமார் ஒரு மணி 20 நிமிட பேச்சை கேட்டால் தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் அரசு எடுக்கும் foresh hunt பற்றி மிக எளிமையாக புரிய முடியும். இன்னும் எனக்கு CD கிடைக்கவில்லை கிடைத்தவுடன் தட்டச்சு செய்து pdf கோப்பாக வினவு தளத்திற்கு அனுப்புவேன். அனைவரும் அறிய வேண்டிய அற்புதமான உரைவீச்சு அது
இரண்டாயிரம் வருட தனி சொத்துடைமை தோற்று போய் விட்டது(அவர்கள் கற்பித்த அன்பு ,பாசம் நேசம் மனிதாபிமானம் ) ,அதை இன்னமும் வன்முறையால் வைத்திருக்க முடியும் என்றால் அதை முறிக்க வன்முறை தவிர வேறு வழி இல்லை என்பதே உண்மை.
பொருளாதார மேதைகள் எல்லாம் ஒன்று கூடி மனிதாபிமான முறையில் தீர்க்கலாம்!?!!!!. அமெரிக்க ,ஐரோபிய பொருளாதார் மேதாவிகளை ,சிறந்த ஜனநாயக வாதிகளை அழைத்தாவது புத்தி மதி கேட்ட்கலாம் .அமெரிக்காவிலும் ,ஆபிரிக்காவிலும் ,ஆஸ்திரேலியாவிலும் எப்படி பழங்குடி மக்களை அவர்களது வாழ்வை உயர்த்தினார்கள் என்று லெக்சர் அடிப்பிக்கலாம்.
இதெல்லாம் தெரியாத மாவோஜிச்டுக்கள் பைத்தியங்கள் ! பிழைக்க தெரியாதவர்கள் !!!
///இரண்டாயிரம் வருட தனி சொத்துடைமை தோற்று போய் விட்டது(அவர்கள் கற்பித்த அன்பு ,பாசம் நேசம் மனிதாபிமானம் ) ,அதை இன்னமும் வன்முறையால் வைத்திருக்க முடியும் என்றால் அதை முறிக்க வன்முறை தவிர வேறு வழி இல்லை என்பதே உண்மை////
இல்லை யோகன், உண்மையல்ல. இன்னும் சொல்லப்போனால், தனி சொத்துடைமை,
மற்றும் சொத்துரிமை (Right to property as a fundamental right) இந்தியாவில் அடிப்படை உரிமைகளாக ஏற்க்கப்ட்டாதால் உருவான விகாரங்கள் தாம் இன்று பழங்குடியினரின் நிலங்களை சுலபமாக அரசால் அபகரிக்க முடிகிறது. சொத்துரிமை, மே.அய்ரோப்பிய நாடுகள் போல இங்கும் பலமாக, அடிப்படை உரிமையாக இருந்திருந்தால், தனியார் நிலங்களை இப்படி சுலபமாக அபகரிக்க முடியாது. சுதந்திரத்திற்க்கு பின், நில சீர்திருத்தம் மற்றும் நாட்டுடைமையாக்கபடும் செயல்களுக்கு இந்த சொத்துரிமை தடையாக இருப்பதாக நேரு போன்ற தலைவர்கள் கருதி, (முக்கியமாக நீதிமன்றங்கள் அவர்களின் கொள்கைகளை அமலாக்க தடையாக இருப்பதாக கருதி), இந்த உரிமையை
முடிந்த வரையில் சட்ட ரீதியாக நசுக்கிவிட்டனர். 9th schedule of the constitution என்று நினைக்கிறேன்.
கனிம வளங்களை முன்னேறிய நாடுகளுலும் வெட்டி எடுக்க நிலங்களை வாங்கி செயல்படுகின்றனர் தாம். தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு முன் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்க்காக விவசாயிகளிடம் நிலம் கையகப்பட்டது. இன்று ஒரிஸாவில் நடக்கும் முறையில் அல்ல. ஜெர்மனியில் சுரங்கள் எப்படி உருவாக்கப்பட்டன ? படுகின்றன ?
அங்கு இன்று இருக்கும் அமைப்புதான் உண்மையான ஜனனாயக பாணி முதலாளித்துவம். இந்தியாவை சொல்ல முடியாது / கூடாது.
////அமெரிக்காவிலும் ,ஆபிரிக்காவிலும் ,ஆஸ்திரேலியாவிலும் எப்படி பழங்குடி மக்களை அவர்களது வாழ்வை உயர்த்தினார்கள் என்று லெக்சர் அடிப்பிக்கலாம்.//////
ஆம். நூற்றாண்டுகளுக்கு முன் காலனிய ஆதிக்க முறையில், ஃபாசிச வடிவ முதலாளித்துவம் அம்மக்களை அழித்தது. அதை யாரும் இன்று ஏற்க்கவில்லை. இன்று
அந்நாடுகளில் அது போன்ற கொடூரங்கள் இல்லை. இருக்கவும் முடியாது.
சரி, வேறு ஒரு விசியம். அனைத்து பிரச்சனைகளுக்கும், ஏற்ற தாழ்வுகளுக்கும் ஒரே தீர்வாக நீங்கள் கருதும் செம்புரட்சிக்கு பின், அனைத்து நிலங்களும் அரசுடைமையாக்கப்படும். பெரு விவசாயிகள் முதல் சிறு / குறு விவசாயிகள், பழங்குடியினர் என்று பலரும் அதை கடுமையாக எதிர்த்து, தம் நிலங்களை அளிக்க மறுப்பர். அதை அடக்க, இன்று நடப்பதை விட மிக மிக மிக கடுமையான, கொடூரமான ஃபாசி முறைகளை புரட்சி அரசு கையாள வேண்டியிருக்கும். பல லச்சம் பேர்களை கொன்றழித்து அல்லது சிறையில் அடைக்க வேண்டியிருக்கும். அதுதான் 30களில் சோவிய்த் ரஸ்ஸியாவிலும், பின்பு சீனாவிலும் நடந்தது. அதை தவிர்க்கவே முடியாது. கம்யூனிச சித்தாந்தந்தின் தன்மை அது. அதை நீங்கள் நியாயப்படுத்துவீர்கள். ஆனால் இங்கு மட்டும்…..
//பல லச்சம் பேர்களை கொன்றழித்து அல்லது சிறையில் அடைக்க வேண்டியிருக்கும்.//
உலகிலேயே அதிகமான பேரை சிறையில் வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. அது கம்யூனிச நாடாக அதியமானின் அகராதியில் விரைவில் பதியப்படும் அபாயம் இருப்பதை எப் பி ஐ க்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன்.
அப்படியா ? நிருபியுங்களேன். மேலும் அமெரிக்க சிறையில் யார் இருக்கிறார்கள், என்ன குற்றங்களுக்காக என்ற விவரங்கள் வெளிப்படையாக உள்ளன. பல பிரச்சனைகள் அந்நாட்டில் இருந்தாலும், அடிப்படை உரிமைகள் மிக மிக அதிகம் உள்ள நாடு அது. ஆஃப்கனிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்ட அல் கொய்தா இயக்கத்தவர்களை,
அமெரிக்க சிறைகளில் அடைக்க சட்டப்படி வழியில்லானல், கவுத்தமானா என்ற கூபா பகுதி சிறையில் அடைத்திருந்தனர். (அதில நடந்த மீறல்கள் பற்றி பெரும் சர்ச்சைகள், வேறு விசியம்). ஆனால் அமெரிக்க மண்ணில் யாரையும் சுலபமாக சிறையில் அடைக்க முடியாது. நீதிதுறை மற்றும் சமுக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமையாளர்களில் குரல்கள் மிக வலிமையானது. அதெல்லாம் உங்களை போன்றவர்களுக்கு புரியாது.
இன்று மிக அதிகமான அப்பாவி மக்களை சிறைகளிலும், வதைமுகாம்களிலும் அடைத்து வைத்திருக்கும் நாடு சீனா தான். முக்கியமாக ரகசிய முகாம்கள் மிக அதிகம். அந்த பகுதிகளில் பத்திர்க்கையாளர்கள், ஆர்வலர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த முகாம்களில் இருந்து மீண்டவர்கள் பல ஆயிரம் பேர்கள், பல வருடங்களில் ஆவணப்படுத்திய ஆதரங்கள் ஏராளம். A major part of China still lies hidden behind the infamous bamboo curtain. Slave labour and jail labour are continiously exploited
In govt and PLA run factories. Asuran, you don’t know what you are talking about.
http://www.worldfreeinternet.net/news/nws194.htm
the world’s most incarcerated country, a nation that is now holding an estimated 2 million of its citizens behind bars. That statistical milestone – 1.24 million men and women in state prisons, 623,000 in county jails, 140,000 in federal penitentiaries – is expected to be reached sometime today (02/15/2000), according to a study by the Justice Policy Institute, a Washington think tank that supports alternatives to imprisonment.
http://en.wikipedia.org/wiki/Incarceration_in_the_United_States
According to the U.S. Bureau of Justice Statistics (BJS): “In 2008, over 7.3 million people were on probation, in jail or prison, or on parole at yearend — 3.2% of all U.S. adult residents or 1 in every 31 adults.”[
//. பல லச்சம் பேர்களை கொன்றழித்து அல்லது சிறையில் அடைக்க வேண்டியிருக்கும். //
முதலாளித்துவத்தின் வெற்றி என்று அதியமான் பட்டியலிடும் அத்தனையும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா தலைமையில் உலக ஏகாதிபத்தியங்கள் நடத்திய பல்வேறு யுத்தங்களில் பல கோடிக்கணக்கானவர்களை கொன்றொழித்து அடைந்தவையே. லாவோஸ், கம்போடியா, லத்தீன் அமெரிக்க நாடுகள். லிபியா, பாலஸ்தீனம், ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், வியட்நாம், சமீபத்தில் இலங்கை. இப்படி எண்ணிலடங்கா யுத்தங்களை இடைவிடாமல் நடத்தி பல கோடிக்கணக்கான உயிர்கள் காவு வாங்கப்படுவது ஒரு பக்கம் என்றால் உணவுக்கும் வழியின்றி, உழைத்த உழைப்புக்கும் மரியாதையின்றி விவசாயிகள் முதல் தறி நெசவு செய்பவர்கள் வரை லட்சக்கணக்கில் தற்’கொலை’ செய்யப்படுகிறார்கள். இவையும் அதியமான் கண்ணுக்குத் தெரியாது. பஞ்சம் பசியில் உலகில் ப்ல கோடிக்கணக்கான பேர் த்விக்கிறார்கள் இதுவும் அவருக்குத் தெரியாது. அவ்ரது அன்பு திருப்பூரிலேயே கொத்தடிமைகளாக கதறும் தொழிலாளர்களின் மனித உரிமை அவருக்கு உணரவே உணராது. அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்பதைத்தான் அருந்ததி ராய் வெகு அருமையாகச் சொல்லியுள்ளார்.
“மக்கள் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கப்படும் போது, அதை எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் வேறு என்ன ‘உருப்படியான‘ வேலையை அவர்கள் தெரிவு செய்ய முடியும்? அவ்வாறு தெரிவு செய்வதற்குத்தான் மக்களுக்கு வேறு என்ன வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன, தற்கொலை செய்து கொள்வதைத் தவிர? கடன் சுழலில் சிக்கிய பல விவசாயிகள் அதைத்தானே தெரிவு செய்தார்கள்?
(நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படும் ஏழை மக்கள், எதிர்த்துப் போராடவேண்டும் என்று சிந்திப்பதற்குப் பதிலாக, தற்கொலை செய்து மடிந்து விடுவார்களேயானால் அதுதான், இந்தியாவின் ஆளும் நிறுவனங்களுக்கும், ஊடகங்களில் உள்ள அதன் பிரதிநிதிகளுக்கும் பிடித்தமானதாக இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மட்டும்தானா அப்படித் தோன்றுகிறது?)”
//// முதலாளித்துவத்தின் வெற்றி என்று அதியமான் பட்டியலிடும் அத்தனையும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா தலைமையில் உலக ஏகாதிபத்தியங்கள் நடத்திய பல்வேறு யுத்தங்களில் பல கோடிக்கணக்கானவர்களை கொன்றொழித்து அடைந்தவையே. லாவோஸ், கம்போடியா, லத்தீன் அமெரிக்க நாடுகள். லிபியா, பாலஸ்தீனம், ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், வியட்நாம், சமீபத்தில் இலங்கை. இப்படி எண்ணிலடங்கா யுத்தங்களை இடைவிடாமல் நடத்தி பல கோடிக்கணக்கான உயிர்கள் காவு வாங்கப்படுவது ஒரு பக்கம் என்றால் உணவுக்கும் வழியின்றி, உழைத்த உழைப்புக்கும் மரியாதையின்றி விவசாயிகள் முதல் தறி நெசவு செய்பவர்கள் வரை லட்சக்கணக்கில் தற்’கொலை’ செய்யப்படுகிறார்கள். இவையும் அதியமான் கண்ணுக்குத் தெரியாது. பஞ்சம் பசியில் உலகில் ப்ல கோடிக்கணக்கான பேர் த்விக்கிறார்கள் இதுவும் அவருக்குத் தெரியாது. அவ்ரது அன்பு திருப்பூரிலேயே கொத்தடிமைகளாக கதறும் தொழிலாளர்களின் மனித உரிமை அவருக்கு உணரவே உணராது. அவர்////
ஆதரமில்லாத மேலோட்டமான பிதற்றல் இது. இரண்டாம் உலகபோருக்கு பின் நிகழ்ந்த முன்னேற்றங்கள் பெரும்பாலும் சுதந்திர சந்தை பொருளாதார முறையில் உருவானவை. All the wars of US after WW2 are for idealogy (or to be precise to stop the spread of
Communist idealogy) and not for grabbing lands or people, like in the colonial period. While there can be
no justification for US actions, it is too simplistic and shallow brand all growth under this banner.
தென் கொரியா, ஜப்பான், தைவான், சிங்கபூர், மலேயா, ஹாங்காங் போன்ற நாடுகளில்
கடந்த 60 வருடங்களில் வறுமை வெகுவாக குறைக்கப்பட்ட வரலாறு பற்றி ஏன் இதுவரை பேச மறுக்கிறீர்கள் ? பல முறை எழுதியுள்ளேன். German miracle after 1945,
Miracle of Chile after 1973 : இவை பற்றி பல சுட்டிகள், தரவுகள், நூல்கள். மொத்த தென் அமெரிக்காவில் அரசியல், பொருளாதார கொள்கைகள் மற்றும் பாதைகள் கடந்த 35 ஆண்டுகளில் எப்படி மாறின என்பது பற்றி தரவுகள் ; உருகுவே நாட்டில் தேர்தலில் வென்று ஜனாதிபதியான முன்னால் மார்கிஸ்ட் போராளியின் பேட்டி மற்றும் கருத்துகள் : இவை பல முறை இங்கும், எனது மனையிலும் பதிவு செய்துள்ளேன்.
Asuran, I am beginning to not to take you seriously anymore. And those wars in middle east and elsewhere are all part of cold war where USSR and China played a major counterpart, which you
Conveniently ignore.
திருப்பூரில் யாரும் கொத்தடிமைகள் கிடையாது. முதலில் அங்கு இத்தனை வேலை வாய்ப்புகளை உருவாக்க மாற்று வழி சொல்ல உம்மை போன்றவர்களால் முடியாது.
All pointers indicate reduction of poverty after 1991. Read the latest issue of EPW, a respected left wing economic journal. Try this fully first : http://www.epw.org.in/epw/uploads/articles/14445.pdf
அதியமான் நீங்க தயவு செஞ்சு நேரம் இருந்தா இந்த புத்தகத்தை படிக்கவும் “The open veins of Latin America – Eduardo Galeano”.
//ஆதரமில்லாத மேலோட்டமான பிதற்றல் இது//
இதையேதான் இவரது கம்யூனிச பூச்சாண்டி பிதற்றல்களுக்கு நாம் சொன்னோம். இவரைப் போல ஆதாரமில்லாமல் அடைமொழி பேசவில்லை. ஆதரத்துடனே கட்டுரைகள் எழுதியுள்ளோம். அதற்குப் பிறகுதான் இவரது கருத்துக்களை பிதற்றல் என்று உதாசினப்படுத்தினோம்.
//அப்பாவி மக்களை சிறைகளிலும், வதைமுகாம்களிலும் அடைத்து வைத்திருக்கும் நாடு சீனா தான். //
என்ன போச்சி? அதுவும் அதியமானின் அன்பு முதலாளித்துவ நாடுதானே? அமெரிக்காதான் உலகிலேயே ரகசியமாகச் சிறைச் சாலையில் அதிகம் பேரை அடைத்து வைத்துள்ள நாடு.
ரஸ்யா சென்று வந்த என் எஸ் கலைவானர், பெரியாரின் கருத்துக்கள அதியமானின் பூச்சாண்டிகளை விரட்ட சமர்ப்பனம்.
//ஆனால் அமெரிக்க மண்ணில் யாரையும் சுலபமாக சிறையில் அடைக்க முடியாது. நீதிதுறை மற்றும் சமுக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமையாளர்களில் குரல்கள் மிக வலிமையானது.//
அமெரிக்க நீதித் துறை, அமெரிக்க ஜனநாயகம், அமெரிக்க பேச்சு சுதந்திரம் பற்றி பல அம்பலப்படுத்தல்கள் உள்ளன. அவை இங்கு தேவையில்லை. அமெரிக்கா ஜனநாயகத்தின் இயங்கு விசைகளில் ஒன்று நிறவெறி. அதுவும் இப்போது தேவையில்லை. இதோ இன்று அமெரிக்க ஜனநாயகம் குறித்து பேசும் அதியமான் வேறொரு இடத்தில் அமெரிக்க ஜனநாயகத்தின் கேவலங்களை பட்டியலிட்டால் அது உண்மையான முதலாளித்துவ-சுதந்திர சந்தை நாடு அல்ல என்று ஜல்லியடிப்பார். இவ்வாறு தான் ஆதரிக்கும் ஒரு அமைப்பின் தவறுகளுக்கு பொறுப்பேற்காத அவரது இரட்டை நிலை குறித்தும் ஏற்கனவே சொல்லியுள்ளேன்.
அசுரன்,
சோவியத் ரஸ்ஸியாவில் நடந்த நிகழுவுகளை பற்றி சமீப காலங்களில் தோண்டி எடுக்கப்ப்ட்ட விபரங்கள் (ஆர்கைவ்ஸ் இல் இருந்து) மிக ஏராளம். அவை பூச்சாண்டிகளா என்று ஆராய்ந்து பாரும்.
ஜப்பான் போன்ற நாடுகளின் அசுர வளர்சி பற்றி பொய் தகவல்கள் என்ன இருக்கிறதாம் ? ஒப்பீடே சரியில்லை. அன்று சோவிய ரஸ்ஸியா ஒரு மூடியா தேசம். பல இடங்களுக்கு வெளியாட்க்கள் அனுமதி இல்லை. Periyar and many others were carefully sent on a conducted tour which avoided many regions and people. Lots of false propaganda. Anyway there are millions of people in Russian and Ukraine who know the truth about their history. No historian (of any idealogy, including Marxist historians) anywhere in this world denies the atrocities in USSR by Stalin and In china by mao and others. Only a tiny bunch of deniers like you persist. It is ok. You are free to belive or disbelve anything.
Your sweeping statements about the reasons for prosperity and growth in many developed nations after WW2 are not true or based on facts. That is all. And first try that EPW link about post reforms Indian poverty reduction rate.
சரி, இருக்கட்டும். அண்ணிய செலவாணி பற்றி, இன்ஃபோஸிஸ் பற்றி, balance of payments crisis and IMF பற்றி எமது கடைசி பின்னூட்டத்திற்க்கு இதுவரை பதில் சொல்ல முடியவில்லை. முடியாதுதான்.
கிரின் ஹண்ட் பற்றி ஏன் எமது அறச்சீற்றத்தை இதுவரை வெளிபடுத்தவில்லை என்று கேட்க்கும் நீர், முதலில் நான் எழுப்பிய பல வினாக்களுக்கு பதில் சொல்ல முயல்க.
மாவோவின் கொடூரங்களை, ஸ்டாலினிய படுகொலைகளை பற்றி அறிவுலகம் சொல்வதை முற்றாக அவதூறுகள் என்று மறுக்கும் உம்மிடம் ஏன் நாங்கள் இது பற்றி பேச வேண்டும் ?
//இந்தியாவில் அடிப்படை உரிமைகளாக ஏற்க்கப்ட்டாதால் உருவான விகாரங்கள் தாம் இன்று பழங்குடியினரின் நிலங்களை சுலபமாக அரசால் அபகரிக்க முடிகிறது.//
அதியமானுக்கு எல்லாமே அரைகுறைதான். பழங்குடியின மக்களுக்கு அவர்களின் வாழ்விடங்களின் மீது பரிபூரன உரிமை இந்திய அரசியல் சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது. அதைனை யாரும் பறிக்க முடியாது. தற்போது நடந்து வரும் யுத்தமும், இதற்குக் காரணமான மிகவும் நல்லவர்களான பன்னாட்டு கம்பேனிகளுடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அரசியல் சட்டப்படி சட்டவிரோதமானவை.
//அங்கு இன்று இருக்கும் அமைப்புதான் உண்மையான ஜனனாயக பாணி முதலாளித்துவம். இந்தியாவை சொல்ல முடியாது / கூடாது.//
சரி ராசா இத எப்படி உண்மையான ஜனநாயகமா மாத்தப் போறீங்க? காட்டு வேட்டை நடத்தியா? இந்தளவுக்கு பேசுகிற அதியமானிடமிருந்து அல்லவா காட்டு வேட்டை முதல் இந்தியாவின் இல்லாத ஜனநாயகம் பற்றிய தார்மீக ஆவேசம் வரை வெளிப்பட்டிருக்க வேண்டும்?
மாறாக, எங்கப்பனுக்கு மீசை கிடையாது என்பது போல கிசு கிசு பாணியில் அல்லவா இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று எழுதிவிட்டுச் செல்கிறார்?
சில அம்மாமார்கள் எம்புள்ள ரொம்ப வேகமா ஓடுவான், நல்லா ஆடுவான் என்னா அவன் இருக்குறதுலேயே கேவலாமான பொறுக்கி என்று பெருமையாக பேசுவார்கள். அது போலத்தான் அதியமான் இந்திய தரகு முதலாளித்துவ பொறுக்கி ஜனநாயகத்தை பெருமையாகப் பேசுகிறார். இவர்தான் நக்சல் ஆட்சி பற்றி பீதி கிளப்புகிறார். மாவோயிஸ்டுகள் மீது விமர்சனம் இருக்கின்ற போதும் கூட அவற்றை பேசுவதற்கு முதல் தகுதியே இந்திய அரசுடன் ஒருவர் பேணும் உறவிலிருந்துதான் தெரியவருகிறது. அதியமானின் உறவு தாய் தனது பிள்ளை மேல் வைத்திருக்கும் முட்டாள்தனமான பாசம் போன்ற உறவு ஆகும்
Mind your words Asuran.
( நண்பர் அருள் எழிலன், நான் திமிராக, பொறுப்பில்லாமல் இங்கு பின்னூட்டமிடுவதாக சொல்லியிருந்தீர்களே, இந்த அசுரன் போன்றவர்கள் இப்படி பேசும் போது, நாகரிக்கமாக எப்படி பதில் சொல்றது என்று விளக்குங்களேன் ? உங்க தோழர்கள் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அது திமிராக உங்களுக்கு தெரியாது. அப்படிதானே ?)
////பொறுக்கி என்று பெருமையாக பேசுவார்கள். அது போலத்தான் அதியமான் இந்திய தரகு முதலாளித்துவ பொறுக்கி ஜனநாயகத்தை பெருமையாகப் பேசுகிறார்///
’இந்தியா ஒரு அரை முதலாளித்துவம், அரை ஜனனாயகம்’ என்று சொல்லியிருக்கிறேன். இங்கு உள்ள அமைப்பு உண்மையான ஜனனாயகமோ அல்லது சந்தை பொருளாதார (முதலாளித்துவம் என்ற சொல் கெட்ட வார்தையாக ஆக்கப்பட்டிருபதால், இந்த சொல்லாடல் தான் இனி சரியானதாகும்) அமைப்போ கிடையாது. மே.அய்ரோப்பாவிலும் இருப்பது capitalism based on liberal democracy. ஆனால்
எத்தனை வேற்றுமைகள். இவை பற்றி திருப்ப திரும்ப நான் எழுதியும், இப்படி நான்
‘பெருமை’ பேசுவதாக கூறும் அசுரனிடம் இனி என்ன விவாதிக்க இருக்கிறது ?