முகப்புநாளை - நாட்டைக் காக்கும் நக்சல்பாரிகளின் பொதுக்கூட்டம்! வந்து பாருங்க!!
Array

நாளை – நாட்டைக் காக்கும் நக்சல்பாரிகளின் பொதுக்கூட்டம்! வந்து பாருங்க!!

-

vote-012

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!

சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

பிப்.20 சனிக்கிழமை மாலை 6 மணி
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் (அசோக் பில்லர் அருகில்), சென்னை.

தலைமை: அ. முகுந்தன்
தலைவர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு

உரையாற்றுவோர்:

தோழர் எஸ். பாலன்
உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.

தோழர் மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு

தோழர் வரவரராவ்
புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரப் பிரதேசம்.

ம.க.இ.க மையக் கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி

__________________________________________

சென்னை வாழ் பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் வருக!

விவரங்களுக்கு: வினவு – 97100 82506

__________________________________________

காடு மலைகளின் அடிமடி ஆழத்தில்,
தங்கம்-வைரம்-பாக்சைட்-
செம்பு-இரும்பு-குவார்ட்சைட்டு
நிலக்கரி-பளிங்கு-சுண்ணாம்பு
கனிவளம்-நீர் வளம்-காட்டுவளம் !

எல்லா வளமும் அள்ளி எடுக்குது
டாட்டா, பிர்லா, மிட்டல், ஜிண்டால்
தரகு முதலாளிக் கும்பல்களும்
போஸ்கோ, லபார்க், வேதாந்தா
அன்னிய முதலாளிகளும் !

ஒரு டன் இரும்பு
உலகச் சந்தையில் 10,000 ரூபாய் !
முதலாளிகளுக்கு
அரசு விற்பதோ 27 ரூபாய் !

சின்னஞ் சிறிய ஜார்கண்ட் மாநிலம்
உலகச் சந்தையில் ஏலம் போகுது !
பத்து, நூறு, ஆயிரம் அல்ல,
லட்சம் ஏக்கர் பறிபோகுது !
கார்ப்பரேட் கம்பெனிகள் கொத்தி எடுக்குது !

இந்தியாவின் மானம் காக்க மண் காக்க
போராடும் உழைக்கும் மக்களை,
நக்சல்பாரி புரட்சியாளர்களை
அடக்கி ஒடுக்கவே ‘காட்டுவேட்டை’ !

பழங்குடிக்கெதிராய் ‘காட்டுவேட்டை’
மீனவர்க்கெதிராய் ‘காட்டுவேட்டை’
வேட்டைகள் தொடர அனுமதியோம் !

கிழித்தெறிவோம் ! கிழித்தெறிவோம் !
பன்னாட்டு கம்பெனிகள்,
தரகு முதலாளிகளுடன் போடப்பட்டுள்ள
தேசத்துரோக ஒப்பந்தங்களை
கிழித்தெறிவோம் ! கிழித்தெறிவோம் !

உண்மை என்ன, உண்மை என்ன ?
மண்ணைப்பறிக்கும்
மறுகாலனியத்திற்கு எதிராய்
மாபெரும் போரை மக்கள் நடத்துகிறார்கள் !

மக்களை அடக்கி ஒடுக்கி
மண்ணை விற்குது இந்திய அரசு !
இதுவே ரகசியம் ! இதுவே ரகசியம் !
‘சிதம்பர’ ரகசியம் ! ‘சிதம்பர’ ரகசியம் !

ஒரு லட்சம் இராணுவத்தை
சட்டீஸ்கர்-ஒரிசா-ஜார்கண்டிலும்
தண்டகாரண்யா காடுகளிலும் குவித்து வைத்து
இந்த மண்ணின் பூர்வக் குடிகள் மீதே
இந்திய அரசு போரை நடத்துது !

பழங்குடிகளுக்குத் துணை நிற்போம் !
மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில்
நக்சல்பாரிகள் தலைமையில்
அணிவகுப்போம் ! அணிவகுப்போம் !

பகத்சிங் பெயரால், திப்புவின் பெயரால்
மீண்டும் ஒரு சுதந்திரப் போரை
உடனே தொடங்குவோம் ! உடனே தொடங்குவோம் !

நேற்று வரை ‘சல்வாஜீடும்’
இன்று முதல் ‘காட்டுவேட்டை’
700 கிராமங்கள் எரிப்பு,
3 லட்சம் பழங்குடி மக்கள் விரட்டியடிப்பு,
50,000 மக்கள் முகாம் சிறைகளில்.

இனியும் பொறுக்கப் போகிறோ‌மா ?
சும்மா இருக்கப் போகிறோ‌மா ?

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. யாரும் பேச மறுக்கும் இம்முக்கிய பிரச்சனையை ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்து போராடி வருவதற்கு வாழ்த்துக்கள்! ஈழமக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழினவாதிகள், சொந்த நாட்டு மக்கள் இப்படி தன் மண்ணிலிருத்தே விரட்டப்பட்டு அகதிகளாக்கப்படுவதற்கு என்ன செய்யப் போகிறார்கள்?

  2. ம்…

    பழங்குடியின மக்கள் மீதான போரை தமிழ்நாட்டுத் ”தமிழினவாதிகள்” யாரும் ஆதரித்தது கிடையாது… எதிர்த்தே வந்துள்ளனர்.. 

    ஆனால். தமிழீழத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்த போது இந்த சத்தீஷ்கர் மக்கள் வேடிக்கை பார்ப்பார்களாம்..

    ஆனா அவங்க மீது போர் தொடுத்தா நம்மை போராடச் சொல்வார்களாம்… போராடக் கூறுவது தவறில்லை.. போராடித்தான் ஆக வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை…

    ஆனா, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பேசுகின்ற ம.க.இ.க. ஈழத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்காவது சிறு சலசலப்பையாவது ஏற்படுத்தியிருக்கிறதா..?

    தமிழ்நாட்டுத் ”தமிழினவாதிகள்” தான் இந்தியத்தை ஏற்கவில்லை… 

    நீங்க ஏத்துக்கிறீங்க இல்ல..  உங்களால் ஏன் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் ஈழத்திற்கு ஆதரவான குரல்களை எழுப்ப முடியவில்லை…?

    ம.க.இ.க. மாதிரி சூடு சொரணையெ இல்லாத ”தமிழர்கள்“ இங்கு ஏராளம் என்பதைத் தான் நாங்க பார்க்கிறோம்..

    சதீஷ்..

    என்ன செய்வது?

    உங்களை வாட்டும் ”இந்தியத் தேசியம்” அப்படியானதன்றோ…!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க