Friday, June 2, 2023
முகப்புசென்னைவாழ் பதிவர்களே, வாசகர்களே...!!
Array

சென்னைவாழ் பதிவர்களே, வாசகர்களே…!!

-

சொந்த மண்ணில் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் இராணுவ நடவடிக்கை அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஒரு வீச்சான விவாதத்தைக் கிளப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால், மயான அமைதிக்கு இடையில், தனது பலத்தைத் திரட்டிக்கொண்டிருக்கிறது.

– ஷோமா சவுத்ரி, எழுத்தாளர்

உண்மையில், அரசு ஏன் இந்தப் படைகளை ஆதிவாசிகள் மேல் ஏவுகிறது? கனிவளம் நிறைந்த அந்தக் காடுகளைக் காலிசெய்து கொழுத்த தொழிலதிபர்களிடம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே.  அதற்காகத்தான் இந்த ஆயுதப் படைகள் அங்கே ஏராளமாய் குவிக்கப்படுகின்றன.

ஹிமான்சு குமார்,  காந்தியவாதி

இதுவரை அம் மக்களுக்கு (பழங்குடியினர்)  புறக்கணிப்பையும், வன்முறையையும் தவிர வெறெதையும் வழங்காத அரசாங்கம், இப்போது அவர்களிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் அவர்களது பூமியையும் பிடுங்க விரும்புகின்றது. பழங்குடி மக்கள் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இதுதான்.

– அருந்ததி ராய், சமூக ஆர்வலர்

‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’   காடுகளை வேட்டையாடுவது, அவற்றுக்குக் காவலிருக்கும் பழங்குடிகளை வேட்டையாடுவது, அதற்குத் தடையாக இருக்கும் நக்சல்பாரிகளை வேட்டையாடுவது என்ற மூன்று நோக்கங்களையும் உள்ளடக்கியது. இதுவரை ஒரு இலட்சம் பழங்குடி மக்கள் சட்டிஸ்காரிலிருந்து ஆந்திரத்துக்கு விரட்டப்பட்டிருக்கிறார்கள். ஈழத்தின் தமிழின அழிப்புப் போரில்
இலங்கை இராணுவம் கையாண்ட அதே உத்திகளை பழங்குடி மக்களுக்கு எதிராக கையாண்டு வருகிறது மத்திய அரசு. ஆம் நண்பர்களே, மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்பு போர்

இன்று மாலை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் (அசோக் பில்லர் அருகில்) நடக்கவிருக்கும் எமது கூட்டத்திற்கு கண்டிப்பாக வாருங்கள்! போராடும் மக்களுக்கு துணையாய் நில்லுங்கள்!!

தலைமை: அ. முகுந்தன்
தலைவர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு

உரையாற்றுவோர்:

தோழர் எஸ். பாலன்
உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.

தோழர் மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு

தோழர் வரவரராவ்
புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரப் பிரதேசம்.

ம.க.இ.க மையக் கலைக்குழுவின்  புரட்சிகர கலைநிகழ்ச்சி

விவரங்களுக்கு: வினவு – 97100 82506,

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. வினவு தளத்தில் வெளியிடப்படும் கூட்டம் தொடர்பான எல்லா நிகழ்வுகளுக்கும் வந்துகொண்டிருக்கிறேன். இந்நிகழ்வுக்கும் நிச்சயம் வர முயற்சிக்கிறேன் தோழர்!

    தகவலுக்கு நன்றி!

  2. போராடும் மக்களை மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி… ஈழத்தில் நடந்தது போல… இனப்படுகொலை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் பரந்துபட்ட அளவில் போராட்டங்கள் எழுந்திருக்க வேண்டும். எழவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடக்கின்றன. இந்திய அரசுக்கு இந்த அமைதியான நிலை தான் வேண்டும்.

    இந்த ‘அமைதி நிலையை’ தமிழக்கத்தில் உடைக்க மக்கள் கலை இலக்கியமும், அதன் தோழமை அமைப்புகளும் முன்கை எடுத்து தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தை கடந்த மாதத்திலிருந்து துவங்கின.

    காட்டு வேட்டையை அம்பலப்படுத்திய புதிய ஜனநாயகம் ஜனவரி, பிப்ரவரி இதழ்கள், துண்டறிக்கைகள், எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய ‘இந்தியாவின் இதயத்தின் மீதான போர்” எல்லாவற்றையும் மக்களிடத்தில் கொண்டு போன பொழுது… துவக்கத்தில் என் மனதில் ஒரு தயக்கம் இருந்தது. மத்திய இந்தியாவில் பழங்குடி மக்கள் மீதான தாக்குதலை தமிழக மக்கள் எப்படி எடுத்து கொள்வார்கள்? எப்படிப்பட்ட ஆதரவு இருக்கும்? என்ற கேள்வி இருந்தது.

    மெட்ரோ ரயில்களில், பேருந்துகளில், வீடு வீடாக பிரச்சாரம் துவங்கியதும் மக்களிடம் கிடைத்த ஆதரவு இருக்கிறதே! வாய்ப்பே இல்லை. பெரியவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என சகலரிடத்திலும் அப்படி ஒரு ஆதரவு. புத்தகங்கள் விறு விறு விற்பனையாயின. தன்னால் இயன்ற அளவு நன்கொடை தந்தார்கள். இது நாள் வரைக்கும் மற்ற இயக்கங்களுக்கு கிடைத்த ஆதரவை விட… அருமையான ஆதரவு கிடைத்தது.

    “மலையையே வித்திட்டாங்களா! அடப்பாவிகளா!” என வாய்விட்டு வியந்தார்கள்.

    “உங்கள் பணி யாரும் செய்யாத சிறப்பான பணி. தொடர்ந்து செய்யுங்கள்” என பாராட்டினார்கள்.

    மக்களியிடையே நடந்த பிரச்சாரங்களில் அரசுக்கு ஆதரவாக பேசிய யாராவது ஒருவரையும்…பொதுமக்களே பேசி… வாய் மூட வைத்தார்கள்.

    இப்படி பொதுப்பிரச்சனைகளுக்கு போராடுகிற அமைப்புகளில் இணைய பலரும் தானாய் முன்வந்து தன் செல்பேசி எண்ணை தந்தார்கள். முகவரி தந்தார்கள். இன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு நிச்சயம் வருகை தருவதாக சொன்னார்கள்.

    மக்கள் கலை இலக்கிய கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் போராட்டத்தை துவக்கி வைத்திருக்கின்றன. இனி மக்கள் போராட்டங்கள் அலை அலையாய் எழும் பொழுது தான் இந்த காட்டு வேட்டையை நிறுத்த முடியும்.
    http://socratesjr2007.blogspot.com/2010/02/1.html

  3. மக்கள் மீதான‌ அரச பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக‌ சென்னையில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம் அனைவரும் வாருங்கள்.

    http://vrinternationalists.wordpress.com/2010/02/20/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E2%80%8C-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/

  4. யுவகிருஷ்ணா, அப்துல்லா, அசோக், ஒட்டக்கூத்தன், அனானிமஸ் …………. கூட்டத்திற்கு வருவதற்கு நன்றிகள்!

  5. வர முயலுகிறேன். ஆனால் இந்த மாதிரி அசோக நகரில் பொதுக் கூட்டம் நடந்தினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா.

    ஆளும் சர்க்கார் பிரதிநிதிகளை உரிய முறையிலி சந்தித்து அல்லது மக்கள் அவையில் விவாதித்து பிரச்சனயை தேர்ப்பதுதான் சரியானான் முறை ஆகும்.

    • குப்பன் யாஹூ இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தால் மத்திய இந்தியாவில் என்ன பிரச்சினை என்பதை விரிவாக அறிந்திருக்கலாம். அங்கே மக்கள் மீது அரசால் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து மாவோயிஸ்ட்டுகள் தலைமையில் மக்கள் போராடுகிறார்கள். அந்தப் போராட்டத்தின் நியாயத்தை நாட்டின் மற்ற இடங்களில் கொண்டு சேர்க்கவே இந்தக் கூட்டம்.

    • குப்பன் யாஹூ, ஒரு வேளை நீங்கள் கூட்டத்திற்கு வரவில்லையெனில் பொதுக்கூட்ட உரைகளை வினவு விரைவில் வெளியிடும் என நம்புகிறேன், அப்போது உங்களுக்கு இந்த ””முறையான”’ எனும் பிரமைகள் தகர்ந்து போகும் என நினைக்கிறேன்.. வந்திருந்திருந்தால் இன்னமும் நீங்கள் அப்படிக்கருதுகிறீர்களா என்பதை எழுதுங்கள்

    • //ஆளும் சர்க்கார் பிரதிநிதிகளை உரிய முறையிலி சந்தித்து அல்லது மக்கள் அவையில் விவாதித்து பிரச்சனயை தேர்ப்பதுதான் சரியானான் முறை ஆகும்.//

      பினாயக் சென், ஹிமான்சு குமார் இவ்வாறு முறையாக அரசிடம் முறையிட்டதன் விளைவு பினாயக் சென்னுக்கு சிறைவாசம், ஹிமான்சு குமாரின் ஆசிரமும் மொத்தமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டதுடன் அல்லாமல் அவரது உதவியாளர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

      தனக்கான முறைப்படி அரசு நடந்து வரும் போது புரட்சியாளர்களும் தமக்கான முறைப்படி மக்கள் மன்றத்திடம்தான் பேச வேண்டியுள்ளது.

  6. வாழ்த்துக்கள்!!
    வரவேண்டும் என்று மிகவும் விரும்பினேன். இம்முறை இயலவில்லை.

  7. கூட்டம் மாபெறும் வெற்றி, ஆயிரக்கணக்கில் கலந்து கொண்ட தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். 

    உரைகள் கூட்ட அளவை கணக்கில் கொண்டு விரிவாகவும், அதே நேரத்தில் தொய்வில்லாமலும் அமைந்தது சிறப்பு. உரையாற்றிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

    இத்தனை ஆயிரம் பேர் திரண்டாலும் சிறு சலசலப்புக்கூட இல்லாமல் பாட்டாளி வர்க்க ஒழுங்கை கடைப்பிடித்து இந்த கூட்டத்தை முழு வெற்றிபெறச்செய்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் 

    சென்னையில் பெருந்திரளான இப்படியொரு கூட்டம் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக நடந்த்து நிச்சயம் ஆளும் வர்க்கத்தினருக்கு அஜீரணம் தரப்போவது உறுதி. 

  8. இன்னும் ஏன் படங்களோடு கஊட்டம் பற்றி வெளியிடவில்லை. மிகப்பெரிய வெற்றி எல்லாருக்கும் தெரிய வேண்டாமா?

  9. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3578:2010-02-15-05-38-28&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

    ஈழப் பிரச்சினையில் தம்மை தாக்கி அடித்த திமுக ரவுடிகளுடன் பெதிக பொங்கல் விழா என்ற பெயரில் நிதி வாங்கி கூடி குலாவி கொண்டாடியதை சந்தர்ப்பவாதம் என்று இடித்துரைத்து எழுதியது புதிய ஜனநாயகம். அம்பலமானது பொருக்காத விடுதலை ராசேந்திரனார் பொய்யையும், அவதூறையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கட்டுரை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை அவரை போன்ற பாரம்பரியம் கொண்டவர்களுக்கு ஒரு பெருத்த அவமானமான கட்டுரை என்ற நிலையில். அந்தக் கட்டுரையில் உள்ள பொய்களை அம்பலப்படுத்தி கீற்று தளத்தில் அவரது கட்டுரைக்கு எழுதிய பின்னூட்டத்தை இங்கும் பதிகிறேன். கீற்றுத் தளத்தின் ஜனநாயகம் குறித்து எமக்கு அனுபவம் உண்டு என்பதால் இந்த பாதுகாப்பு பின்னூட்டம்.

    எமது பின்னூட்டம்:

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3578:2010-02-15-05-38-28&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

    // இவர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தை சந்திக்காத ‘தேச பக்தர்கள்’ தேசவிரோத சட்டங்கள் இவர்களை

    நெருங்காது. அடக்குமுறை சட்டங்கள் இவர் களிடம் வாலை சுருட்டிக் கொள்ளும்! அடக்குமுறை சட்டங்களே

    பாயாத புரட்சியாளர்கள்! பெரியார் திராவிடர் கழகத்தினர் தான் அந்த அடக்கு முறை களை சந்திக்கிறார்கள். //

    இதுவே ஒரு ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். பெரியார் சிலை உடைத்த பொழுதுகூட பெரியார் திகவின்

    தலைமை அற வழியில்தான் போராட வேண்டும் என்று தனது அணிகளை கெஞ்சிக் கேட்டுக் கொண்டது

    (திமுகவினர் பெரியார் சிலை உடைத்த பொழுது தலைமறைவாகி பிறகு பொங்கல் அன்று சரண்டைந்தார்களே

    அது போல). ஆனால், ம க இ கதான் ஆர் எஸ் எஸ் காலிகளை நேரடியாக தனது தலைமையின்

    அனுமதியுடனே சந்தித்து சண்டையிட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தையும் சந்தித்தது.

    அரசு அடக்குமுறைகள் கடந்த சில ஆண்டுகளில் ம க இக பெதிக இருவரில் யார் மீது அதிகம் பாய்ந்துள்ளது

    என்றும், ரத்தம் சிந்தி போராடியவர்கள் யார் என்றும் பட்டியல் போடுவது பெதிக கட்டுரையாளரை எழுதியதைப்

    போலவே சிறுபிள்ளைத்தனமான முயற்சியாகிவிடும். தேசிய பாதுகாப்புச் சட்டம் இந்த கால கட்டத்தில் ம க இக தோழர்களை பல முறை முத்தமிட்டுச் சென்றுள்ளது.

    // விடுதலைப் புலிகளை கிண்டல் கேலி செய்து கொண்டு பிரபாகரனை//

    விடுதலைப் புலிகளை ம க இக கிண்டல் கேலி செய்ததாகக் கூறுகிறார். விடுதலைப் புலிகளை

    கை கழுவி துரோகம் செய்த பாரம்பரியம் விடுதலை ராசேந்திரனுக்கு உண்டு. ராஜீவ் பழி வாங்கப்பட்ட பிறகு

    அதனை சரி என்று ஆதரித்து பெரியார் திடலில் கூட்டம் நடத்த ம க இக, திகவிடம் அனுமதி கேட்டது.

    அன்றைக்கு அடக்குமுறை உச்சத்தில் இருந்த காலத்தில் ராஜீவ் கொலையை ஆதரித்து களத்தில் இருந்து

    அடக்குமுறையை சந்தித்தவர்கள் ம க இ கவினர்தான். ஆனால், அரங்குகை தர மறுத்து துரோகம் செய்தது

    திக. அன்றைய திகவில் வாய் மூடி மௌனமாக இருந்து இதனை ஆதரித்த பெருந்தகை நமது விடுதலை ராசேந்திரனார் அவர்கள்தான்.

    //தமிழ்நாட்டில் ஒரே ‘அக்மார்க்’ புரட்சி யாளர்கள் தாங்கள் மட்டுமே என்பதை பறை யடித்து, //

    இதை எமக்கு அவர் கொடுத்த சான்றிதழாக கருதுகிறோம். இவ்வாறு அவரால் நெஞ்சு நிமிர்த்தி பெருமையுடன்

    சொல்ல இயலாத வெட்கம் அவரது வார்த்தைகளை பிடுங்கி தின்பதை எம்மால் உண்ர முடிகிறது.

    //சில நாட்கள் கழித்து மீண்டும் வந்து சந்தித்தனர்.‘புரட்சி’யின் அக ‘புறச்’ சூழல்களை அலசி ஆராய்ந்துவிட்டு,

    “இந்த‘புரட்சி’ வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டோம்; இந்துத்து வாதிகள் ஏதாவது நடக்கும் என்று

    எதிர்பார்த்து தயாராக வந்திருப்பார்கள்; அதை நாம் அலட்சியப்படுத்திட முடியாது அல்லவா?எனவே வேண்டாம்

    என்று முடிவெடுத்து விட்டதாகக் கூறினார்கள். //

    திமுக ரவுடிகளிடம் பெதிக தனது கொள்கைகளை அடகு வைத்து சோரம் போனதை ம க இக

    அம்பலப்படுத்திவிட்டதே என்ற பதட்டத்தில், வாய்க்கு வந்ததை உளறி, பொய்களை அவதூறுகளை இட்டுக்

    கட்டி எழுதுகிறார் கட்டுரையாளர். அன்றைக்கு மோடியை எதிர்த்து ஆர்பாட்டம் செய்து சிறை சென்றனர் ம க

    இகவினர். மேலும், ஆர் எஸ் எஸ் கருங்காலிகளாலேயே தமிழகத்தில் முதல் எதிரிகளாக அறிவிக்கப்பட்டு சில

    பல நேரடி தாக்குதல்களை, மோதல்களை நடத்தியுள்ளவர்கள் நாங்களே. பெதிக அப்படி என்னவிதமான

    மோதல்களை நடத்தியுள்ளது என்பதை வரலாற்றில் தேடிக் கொண்டிருக்கிறோம். சங்கராச்சியார் வழக்கில்

    நீதிமன்ற வளாகத்திலேயா அடி வாங்கியது முதல் ஓசூரில் நடந்து வரும் தொடர் மோதல்கள் வரை ஆர் எஸ்

    எஸ் உடன் எமது மோதல்கள் அனைத்தையுமே மறைத்து வெட்கமின்றி புளுகுகிறார் கட்டுரையாளர்.

    //தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் இடம் பெற்றிருந்தது. ‘அக்மார்க்’புரட்சியாளர்கள்

    இஸ்லாமியர்களோடு இணைந்து நிற்க முடியாது. //

    ஆம், மதச் சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் விட்டு விலகி நிற்பதே என்பது எமது கொள்கை.

    எனவே, மத அடிப்படையிலான செயல் திட்டங்களை முன் வைக்கும் அமைப்புகளுடன் இணைந்து போராட

    முடியாது. இதன் பொருள் இஸ்லாமிய மக்கள் ஒடுக்கப்படும் போது அவர்களுடன் இணைந்து நிற்க முடியாது

    என்பது அல்ல. பெதிக அப்படி எதுவும் சிறப்பாக இந்து மத வெறியை அம்பலப்படுத்தி, ஏகாதிபத்திய தாக்குதல்களை அம்பலப்படுத்தி இஸ்லாமியருடன்

    இணைந்து போராடியுள்ளதா என்று கோவை முதல் நெல்லை வரை தேடிக் கொண்டிருக்கிறோம். அப்படியெதுவும் பெரிதாகக் கண்ணுக்குப் புலப்படவில்லை.

    //தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை தாங்கள் ஆதரிக்க வும் இல்லை; எதிர்க்கவும்

    இல்லை என்று இவர்கள் கூறு கிறார்கள். இட ஒதுக்கீடு கொள்கை புரட் சிக்கு பாதகமான அம்சங்களை

    உள்ளடக்கி புரட்சியைத் தடுக் கிறது என்கிறார் கள்.//

    இதற்கு பல முறை பதிலளித்தாகிவிட்டது. எதற்கும் இவர்கள் பதில் கொடுத்தது இல்லை. இவர்களை

    அம்பலப்படுத்திய இடங்கள் எல்லாவற்றிலும் இந்த அவதூறையும் சேர்த்து சொல்வார்கள். வேறு வழி?

    //குற்றக்கூண்டில்நிறுத்தப்பட்டுள்ள கட்சிகள்,இயக்கங்களைச் சார்ந்தவர் தரும் நிதியை ஏற்க மாட்டோம் என்று

    அறிவிப்பு ஏதுமில்லை;//

    ஆம், ஏன் அவ்வாறு நாங்கள் அறிவிக்க வேண்டும். சதாரண மக்கள் அதிமுகவில் அணி திரண்டுள்ளதாலேயே

    அவர்கள் நமது எதிரிகள் என்று நாங்கள் சொல்லவில்லயே? விசயம் எளிமையானது. பெதிகவை ஒரு திமுக

    ரவுடி அடித்திருக்கிறான். அடி வாங்கிய சில மாதங்களில் அவனிடம் துட்டு வாங்கிக் கொண்டு அவனிடம்

    இளித்துக் கொண்டு அலைகிறீர்களே என்று கேட்டால் பதிலுக்கு திமுகவின் சதாரண தொண்டனிடம் துட்டு

    வாங்காதே என்று சொல்கிறார்கள் எம்மைப் பார்த்து. மேலும், பெதிகவைச் சேர்ந்தவரை வெட்டிக் கொன்ற

    கொலைகாரன் ஒருவனுடன் சேர்ந்து அன்று அவர்கள் பொங்கள் கொண்டாடிய கேவலமும் அரங்கேறியுள்ளது.

    இதெல்லாம் சத்தியமாக ம க இகவுக்கு செய்ய வராத துரோங்கள்தான்.

    //அன்று தி.மு.க. அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும், புதிய சட்டத்தை, 2006 ஆம் ஆண்டு கொண்டு

    வந்தபோது என்ன எழுதினார்கள்?//

    இன்னொரு பொய். அன்று புதிய ஜனநாயகம் தெளிவாக அரை பக்கத்தில் எழுதியிருந்தது என்னவென்றால்,

    திமுக அரசு அரைக் கிணறு தாண்டுகிறது என்று கூறி இந்தச் சட்டம் சரியாக நடைமுறைக்கு வர என்ன

    செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. கட்டுரை வார்த்தைகளை பிய்த்துப் போட்டு செய்யும் தனது புதிய

    பித்தலாட்டத்தை பெதிக இங்கும் செய்துள்ளது.(ஏற்கனவே விபிசிங் பற்றிய கட்டுரைக்கான எதிர்வினையில்

    இவ்வாறு கட்சி திட்டத்தை பிய்த்துப் போட்டு அவதூறு செய்து மாட்டிக் கொண்டது பெதிக),

    //என்று புதிய ஜனநாயகம் முடிவெடுத்து விட்டால் அதை சந்திக்க தயாராகவே இருக்கிறோம் என்பதை மட்டும்

    சொல்லி வைக்கிறோம்! //

    இவர்களது பதற்றம் இவர்களது தயாரின்மையையே காட்டுகிறது. எங்கே இவர்களின் அமைப்பில் இருக்கும்

    நல்ல அணிகள் வெளியேறிவிடுவார்களோ என்ற பதட்டத்தில் எழுதப்பட்ட அவதூறு கட்டுரை இவர்களை

    இன்னும் இன்னும் அம்பலப்படுத்துவதை என்றுதான் உணர்வார்களோ?

    _____________

    அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று வழக்கை ஒட்டி ம க இ க என்ன எழுதியது?
    http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1355:2008-05-12-06-34-

    50&catid=35:2006&Itemid=27

    // அரசியல் சட்டத்தின் பிரிவு 25(1) அரசுக்கு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தீண்டாமை மத

    உரிமையல்ல என்பதை நிலைநிறுத்தும் வண்ணம் அரசியல் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

    இல்லையேல், தற்போது தி.மு.க. அரசு கொண்டு வரவிருக்கும் சட்டமும் பல்வேறு வழக்குகளால்

    முடக்கப்படும் சாத்தியம் உள்ளது.//

    //தகுதியுள்ள அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தில் பெண்களுக்கும் அர்ச்சகராகும்

    உரிமை வழங்கப்பட வேண்டும். மேலும், அரசு வேலை வாய்ப்பில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு முறை

    அர்ச்சகர் நியமனத்திலும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.//

    //பெரும்பான்மை மக்களின் மத உரிமை மற்றும் வழிபாட்டு உரிமையை நிலைநிறுத்தும் விதத்தில்

    தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் தமிழில்தான் வழிபாடு என்பதைச் சட்டப்படி நிலைநிறுத்த வேண்டும்.

    சமஸ்கிருதமயமாக்கப்பட்ட கோயில்கள், கடவுளர்கள், ஊர்களின் பெயர்களை அவற்றின் முந்தைய தமிழ்ப்

    பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.//

    // ஏற்கெனவே சாதி அடிப்படையில் நியமனம் பெற்றுள்ள பார்ப்பன அர்ச்சகர்கள் “தகுதி’ பெற்றவர்களாக

    அப்படியே நீடித்திருக்க, புதிதாக வரும் பார்ப்பனரல்லாதாருக்கு மட்டுமே “தகுதிக்கான பயிற்சி’ என்பது

    நெறியற்றது. புதிய தமிழ் வழிபாட்டு முறையில் அனைவரும் பயிற்றுவிக்கப்பட்டு, அதில் தேர்வு

    செய்யப்படுவோர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும்.//

    //ஆகம விதி, மரபு என்ற பெயரில், அர்ச்சகர் பயிற்சி மற்றும் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பார்ப்பன

    மடங்களும், ஆதீனங்களும் கொண்டிருக்கும் சிறப்புரிமை ரத்து செய்யப்பட வேண்டும். பார்ப்பனரல்லாதார்

    பெண்கள் தமிழ்மொழி ஆகிய மூன்றின் மீதும் திணிக்கப்பட்டிருக்கும் பார்ப்பனிய ஒடுக்குமுறை

    ஒருங்கிணைந்த முறையில் முறியடிக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்.//

    //1993இல் எமது அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்ட சிறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தில் சூத்திரர்,

    பஞ்சமர் என்று இழிவுபடுத்தப்பட்டோருடன் பெண்களும் அவர்கள் எழுப்பிய தமிழ் முழக்கங்களும்

    இணைந்துதான் அரங்கநாதன் கருவறைக்குள் நுழைந்தனவென்பதையும், தம் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனிய

    சாதி முறைக்கு எதிராகப் போராடிய பெரியார், அம்பேத்கர் படங்களையும் எமது தோழர்கள் கருவறைக்குள்

    ஏந்திச் சென்றார்கள் என்பதையும் இங்கே நினைவு கூர்கிறோம். இக்கோரிக்கைகளுக்காகப் போராட தமிழ்

    மக்களை அறைகூவி அழைக்கிறோம்.//

    ம.க.இ.க., தமிழ்நாடு.

    விசயம் இப்படியிருக்க விடுதலை ராசேந்திரன் நெஞ்சு கூசாமல் பொய் சொல்கிறார். என்ன செய்ய?

    சந்தர்ப்பவாதம் அம்பலமாகிவிட்டதே? சோரம் போனது தெரிந்து விட்டதே? அடித்து கிளப்பு புழுதியை

    அடுத்தவன் மீது நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற தந்திரத்தை ராசேந்திரன் பயன்படுத்துகிறார்.

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் நினைவுக்கு வருகிறது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க