முகப்புஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் சென்னையில் ம.க.இ.க பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி !!
Array

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் சென்னையில் ம.க.இ.க பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி !!

-


vote-012மத்திய இந்தியாவில் ஆபரேஷன் கிரீன் ஹண்ட் என்ற பெயரில் மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்! – என்பதை தமிழக மக்களிடையே ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் கடந்த இரு மாதங்களாக பிரச்சாரம் செய்து வந்தன. முதற்கட்டமாக பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்கங்கள் நடைபெற்றன. அடுத்து பேருந்துகள், தொடர் வண்டிகள், தொழிற்சாலைகள், குடியிருப்புகளில் மக்களிடம் நேரடியாக பிரச்சாரம் செய்யப்பட்டன. மக்களுக்கு இந்தப்பிரச்சினை தெரியவில்லை என்றாலும் தெரிந்த பின்னர் உணர்வுப்பூர்வமாக ஆதரித்தனர். நிதி தந்தனர்.

இந்த பிரச்சார இயக்கத்தின் முத்தாய்ப்பாக கடந்த சனிக்கிழமையன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக சென்னை நகரம் முழுவதும் மக்களிடையே பிரச்சாரம் வீச்சாக நடைபெற்றது. பிரபல எழுத்தாளரும் சமூக சேவகியுமான அருந்ததி ராய் எழுதிய ‘இந்தியாவின் இதயத்தின் மீதான போர்’ என்ற கட்டுரையின் தமிழாக்கம் சிறு வெளியீடாய் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டன. கீரீன் ஹண்ட் தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளும் ஒரு நூலாக வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

காட்டு வேட்டையின் அரசியல் விவரங்களை எளிமையாகவும் போர்க்குணத்துடனும் அறிமுகம் செய்யும் துண்டுப் பிரசுரம் இலட்சக் கணக்கில் அச்சிடப்பட்டு மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டன. மேலும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இந்த துண்டுப் பிரசுரம் மொழிமாற்றம் செய்யப்பட்டு மற்ற மொழி மக்களிடத்தில் விநியோகிக்கப்பட்டன. இவையனைத்தும் வினவிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆர் நகர் பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலுமிருந்தும் தோழர்கள், பெண்கள் குழந்தைகள் முதியவர்களை உள்ளிட்டு வந்திருந்தனர். சென்னை நகரம் முழுவதிலுமிருந்தும் அரசியல் ஆர்வலர்களும் பகுதிவாழ் மக்களும் கூட பெருந்திரளாக வந்திருந்தனர். எம்.ஜி.ஆர் நகரின் சந்தைத் தெருவின் கோடியில் போடப்பட்டிருந்த மேடையிலிருந்து முக்கிய சாலையின் சந்திப்பு வரைக்கும் மக்கள் வெள்ளம்தான். தெரு முனையிலிருந்த மதுரை தேவர் ஹோட்டலின் உரிமையாளர் இதைப் பார்த்துவிட்டு இது மதுரை சித்திரைத் திருவிழாதான் என்று ஆச்சரியப்பட்டார். தியாகிகளுக்கு வீரவணக்கம் தெரிவித்து கூட்டம் துவங்கியது. தமிழக பு.ஜ.தொ.மு தலைவர் தோழர் முகுந்தன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

முதலில் பேசிய பெங்களூருவின் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பாலன் கீரின் ஹண்டிற்கு பின்னே உள்ள பல இலட்சம் கோடி பொருளாதாரக் கொள்ளையினை விரிவான ஆதாரங்கள்,புள்ளிவிவரங்களுடன் விளக்கிப் பேசினார். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக எப்படி பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் பறிபோகின்றன என்பதை உணர்ச்சியுடன் விவரித்தார்.

அடுத்து ஆந்திர புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் தோழர் வரவரராவ் ஆங்கிலத்தில் உரையாற்ற அதை தோழர் மருதையன் மொழிபெயர்த்தார். தோழர் வரவரராவ் தனது உரையில் நக்சல்பரி எழுச்சி, குறிப்பாக அந்த எழுச்சி பழங்குடி மக்களின் பகுதியில் பெற்ற வெற்றிகள், பின்னர் மா.லெ அமைப்பினர் அந்த மக்களிடம் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக ஆற்றிவரும் களப்பணியினை வரலாறாக விவரித்தார். மன்மோகன் சிங், ப.சிதம்பரம் முதலான பன்னாட்டு நிறுவன அடியாட்களின் உதவியோடு மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களுக்கெதிரான போர் நடைபெறுவதையும் விளக்கினார். பழங்குடி மக்கள் மாவோயிஸ்ட்டுகளின் தலைமையில் இந்தப் போரை எதிர்த்து போராடி வருவதையும் புரியவைத்தார்.

இறுதியில் பேசிய ம.க.இ.க பொதுச்செயலர் தோழர் மருதையன் இந்தப்போர் என்பது மறுகாலனியாதிக்கத்தின் அங்கமாக நடைபெறுவதையும் இதை அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டுமெனவும் அறைகூவி முடித்தார். அதன் பின்னர் எழுச்சியூட்டும் கலைநிகழ்ச்சி ம.க.இ.க மையக் கலைக்குழுத் தோழர்களால் நடத்தப்பட்டது. காட்டுவேட்டையை கண்முன்னிறுத்தும் இசைச்சித்திரம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மாலை 6 மணிக்கு துவங்கிய பொதுக்கூட்டம் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் இரவு 10.30மணிக்கு முடிவுற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தின் வீடியோப் பதிவு வினவில் வெளியிடப்படும்.

பொதுக்கூட்டம் முடிவுற்றாலும் இந்தப்பிரச்சார இயக்கம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. காட்டு வேட்டை நிறுத்தப்படும் வரை நமது வேலைகளும் ஓயப்போவதில்லை.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  • லக்கி கூட்டத்திற்கு வந்தமைக்கு நன்றி. தொலைபேசியில் அழைத்திருந்தால் சந்தித்திருக்கலாம்.

 1. அருமையான கூட்டம், பிராந்திய கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த நோக்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் எப்படி டில்லியில் அடகு வைக்கப்படுகிறது என்ற தோழர் வரவரராவ் கோடிட்டு காட்டியது, தோழர் மருதையனின் கலைஞரின் இலவசம் யாருக்கு என பட்டியல், மைய்ய கலைக் குழுவின் மலைவாழ மக்களின் சித்திரம் அதற்கு மக்கள் அளித்த கரவொலி அவர்களின் பாடல் அனைத்தும் சிறப்பு. நன்றி

 2. தண்டவா காடுகளில் நிகழும் வன் கொடுமைகளையும் இந்திய ஏகாதிபத்தியதின் வன்முறையையும் கிழித்து தொங்கவிட்டது மருதையன் போன்றவர்களின் உரை.. முக கட்டுப்பாட்டோடும் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு..

  நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள உதவிய கூட்ட ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி

  • ஓட்டக்கூத்தன், நந்தன், வேல் கூட்டத்திற்கு வந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு நன்றி

 3. வெளியிட வேண்டாம்

  //இரவு 11.30மணிக்கு முடிவுற்றது//

  இரவு 10:30க்கு மேல் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என்பதால் கூட்டம் மிகச் சரியாக 10:30க்கு வீரவணக்கம் செலுத்தி முடிவடைந்தது. தகவல் பிழையை திருத்தவும்.

 4. அன்பின் வினவு தோழர்களுக்கு,தலைப்பில் நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘மாபெரும் வெற்றி’ என்ற சொல், நூற்றுக்கு நூறு உண்மை. கூட்டத்துக்கு வந்திருந்தேன். உண்மையிலேயே பிரமித்து விட்டேன். அந்தளவுக்கு கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை. மேடையில் ஒவ்வொருவர் உரை நிகழ்த்தும்போதும், பார்வையாளர்கள் உன்னிப்பாக கவனித்தார்கள். மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல், தோழர்கள் அவர்கள் சென்று வர பாதை அமைத்துத் தந்தார்கள். என்னைக் கவர்ந்த விஷயம், கோட்பாட்டு – கருத்து அடிப்படையில் மாவோயிஸ்ட்டுகள் மீது விமர்சனம் வைக்கும் மகஇக, ஆபரேஷன் க்ரீன் ஹண்ட்டுக்கு எதிராக அரசு கட்டவிழ்த்திருக்கும் பயங்கரவாதத்தை எதிர்த்து அதே மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க விழிப்புணர்வு – ஆதரவு பிரசாரத்தில் இறங்கியிருப்பது. தமிழகத்தில் மாவோயிஸ்ட் அமைப்புக்கு வலுவான அடித்தளம் இல்லை, ஆதரவும் பெரிதாக இல்லை. இந்நிலையில் தமிழக மக்களின் உணர்வுடனும், அவர்களது வாழ்வுடனும் இரண்டற கலந்திருக்கும் மகஇக, தனது அமைப்பு பலத்தைக் கொண்டு ஆபரேஷன் க்ரீன் ஹண்ட்டுக்கு எதிரான பிரசாரத்தில் இறங்கியிருப்பது முக்கியமான – போற்றத்தக்க விஷயம். இதன் மூலம் தமிழ்ழகத்தின் வலுவான ஒரே மா – லெ அமைப்பு மகஇக மட்டுமே என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. கோட்பாட்டு ரீதியான முரணைத் தாண்டி, சக அமைப்புக்கு தோள் கொடுப்பது என்பது இனி வரும் தலைமுறைக்கு முன்னுதாரணமாக அமையும். தோழர் வரவர ராவ் மேடையில் ஏறியதும் அவர் முகத்தில் பூத்த பரவசத்தை நன்றாகவே கவனித்தேன். இந்தளவுக்கு மக்கள் ஆதரவு இருக்கும் என்பதை அவர் துளியும் எதிர்பார்க்கவில்லை. ஒரு போராளிக்கு நிறைவைத் தரும் தருணம் அது. அதை அமைத்துக் கொடுத்த மகஇக, புமாஇமு, புஜதொமு, விவிமு தோழர்களுக்கு நன்றி. தோழமையுடன் பைத்தியக்காரன்

  • பொதுக்கூட்டம் பற்றிய விரிவான கவனத்திற்கும் அக்கறைக்கும் நன்றி தோழர் பைத்தியக்காரன்

 5. சிறப்பான பொதுக்கூட்டம்! வாழ்த்துக்கள் எனதருமை தோழர்களே!
  “பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டும் ஒரு நாற்காலி உடையவில்லை, சண்டையில்லை, கத்தல் அலங்கோலம் இல்லை. என்னனுபவத்தில் இது போன்ற கட்டுக்கோப்பை நான் இதுவரை பார்த்ததே இல்லை.”… பொதுக்கூட்டத்தை பார்க்க நான் அழைத்து வந்த என் நண்பர் வியந்து பொய் சொன்னார். மேலும் கூட்டத்திற்கு இடையில் எங்களை கடந்து சென்ற மருத்துவர் ருத்ரனையும், இயக்குனர் ஜனநாதனையும்,நான் அந்த நண்பருக்கு விளக்க அவர் சொன்னது ” எனக்கு இதெல்லாம் மிக மிக ஆச்சர்யத்தை , யதார்தத்தை மிக அருகில் சென்று புரியவைத்ததாக சொல்லி சொல்லி மகிழ்ந்து போனார்.

 6. சொந்த தேசத்திற்குள்ளேயே ஒடுக்கப்பட்டு ஏதிலிகளாக்கப்படுவதன் வலியை உணர்ந்தவர்கள் நாம். கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாவிடிலும் வினவின் மூலமாக தண்டகாரன்யாவின் பழங்குடி மக்களுக்கு எமது உணர்வு பூர்வமான ஆதரவை தெரிவிக்க விழைகின்றேன். இத்தகைய செயற்பாடுகள் பொதுக்கூட்டங்களுக்கு அப்பாலும் முழு வீச்சுடன் முன்னெடுக்கப்படவேண்டும். சுயநல அரசியலுக்கு இத்தகைய செயல்பாடுகள் பயன்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

 7. நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘மாபெரும் வெற்றி’ என்ற சொல், நூற்றுக்கு நூறு உண்மை. கூட்டத்துக்கு வந்திருந்தேன். உண்மையிலேயே பிரமித்து விட்டேன். அந்தளவுக்கு கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை….
  கட்டுப்பாட்டோடும் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு….
  கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துக்கள் தோழர்களே !

 8. முதலாளிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் வயிற்றில் புளியை கரைத்திறுக்கும் இந்த பொதுக்கூட்டம் உழைக்கும் மக்களுக்கு புது உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த பொதுகூட்டத்திற்க்கு பெரிதும் உழைத்த வொத்துழைப்பு தந்த தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் பொது மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் புரட்ச்சிகர வாழ்த்துக்களும்.

 9. அயல் நாட்டு வாழ்க்கையினால் இதுபோன்ற நிகழ்வுகளை இழக்கிறேன். இருப்பினும் பின்னூட்டங்களிலிருந்து நிகழ்வின் வெற்றியினை புரிந்து கொள்ள முடிகிறது. மிகுந்த மகிழ்ச்சியினையும் ஏற்படுத்துகிறது. தொடர்க இப்பெரும்பணி.
  காணொளிக்கு காத்திருக்கிறேன்.

  • //அயல் நாட்டு வாழ்க்கையினால் இதுபோன்ற நிகழ்வுகளை இழக்கிறேன். //

   இதையே நானும் சொல்ல வந்தேன். இக்கூட்டம் வெற்றிகரமாக நடந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. காணொளியின் மூலம் மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

   நன்றி – சொ.சங்கரபாண்டி

   •  முடிந்த அளவு  நாலு பேரிடமாவது எடுத்து சொல்லி அவர்களோடு கலந்து கொள்ள ஆவல் என்ன செய்ய …… 

 10. தோழர்கள் தமது உழைப்பின் பலனை இப்பொதுக்கூட்டத்தினுடைய சிறப்பின் மூலம் உணர்ந்திருப்பார்கள். சமூகப் புறச்சூழ்நிலையை அன்றாடம் சந்திக்கும் தோழர்கள் அதன் வலியை, வெருப்பை புறக்கணித்து, தமது உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்று புரட்டிசியை நேசிக்கும் தோழர்களுக்கு எமது செவ்வணக்கம்.

 11. மாவோயிஸ்டுகள் நேற்று 72 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்யத் தயார் என்று கிசன் ஜீயின் உதவியாளர் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். அரசு தனது தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளும் எனில் மாவோயிஸ்டுகளும் 72 நாட்களுக்கு தாக்குதல் நடத்துவதில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தோழர் வரவரராவும் என் டி டிவியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

  ஆனால், இது குறித்து NDTVயில் நடந்த விவாதத்தில் பேசிய திரிணாமூல் காங்கிரசு, காங்கிரசு, பிஜேபி மற்றும் இந்திய அரசு அதிகாரிகள் தமது தாக்குதலை நிறுத்துவது குறித்து பேச முடியாது என்றும், மாவோயிஸ்டுகள் போர் நிறுத்தம் அறிவிக்கிறார்கள் என்றால் எந்த கேள்வியும் கேட்க்காமல் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லியுள்ளனர்.

  இதன மூலம், பேச்சுவார்த்தையோ அல்லது போர் நிறுத்தத்தமோ இந்திய அரசின் நோக்கமல்ல என்பது அம்பலமாகியுள்ளது.

  சோமா சௌத்ரி அவர்கள் இந்தப் போரில் பாதிக்கப்படும் சதாரண பழங்குடியினரின் கதி என்னவென்று கேட்டதற்கு எந்த பதிலும் கொடுக்காமல் திசை திருப்பினார்கள் அரசு அதிகாரிகள்.

  இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் ஒரு யுத்தத்தில் ஒரு தரப்பு மட்டும் போரை நிறுத்திக் கொள்வதாக உறுதியளிக்க வேண்டும் என்று கோருவதன் சரியான அர்த்தம் சரணடையுங்கள் என்பதுதான். அரசு இந்த போரை நடத்துவதன் நோக்கமும் அதுதான். பழங்குடியினரை முற்றாக அழித்தொழிப்பது அல்லது அவர்களை சரணடைய வைப்பது இவற்றின் மூலம் அங்குள்ள வளங்களை கைப்பற்றி பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிப்பது ஆகியனவே அரசின் நோக்கமாகும்.

  இந்த நிகழ்வின் மூலம் பேச்சு வார்த்தை, சமாதானம் என்று பிதற்றி வந்த பா. சிதம்பரம், மன்மோகன் சிங் போன்ற பன்னாட்டு கம்பேனிகளின் மாபியா கும்பலின் நோக்கம் என்னவென்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

  மாபியா கும்பலின் தலைவர்களில் ஒருவனான பா சிதம்பரத்தின் பழைய ஆஹிம்சா மூர்த்தி பிதற்றல்
  “Halt the violence! Give me 72 hours”
  http://www.tehelka.com/story_main43.asp?filename=Ne211109coverstory.asp

 12. கூட்டத்துக்கு வந்திருந்தேன். உண்மையில் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்த்திருக்க வில்லைதான். அதை விட முக்கியமாய் மேற்பார்வையாய் உதவி செய்து கொண்டிருந்த தோழர்களின் விருந்தோம்பல் வேறு எந்தக் கூட்டத்திலும் காணப்பெறாததாய் இருந்தது.

  வழக்கறிஞரின் குரல் வளம் என்னை வியப்பிலாழ்த்தியது. சிம்ம கர்ஜனை என்பார்க்ளே அது போல.

  வறட்டு உணர்ச்சி வயப்பட வைக்கும் பேச்சுகளுக்கு நடுவில் மக்களுக்கு தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடனான பேச்சுக்கள் நிறைவைத்தந்தது.

  ஆண்கள், பெண்கள், சில குழந்தைகள் என்ற பெரிய கூட்டத்தில் அனைவரும் காத்த அமைதி மற்றும் ஒழுங்கு உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.

 13. கூட்டம் வெகு சிறப்பாய் நடைபெற்றது.

  ஆனாலும் சிறிய குறை

  தோழர் மருதையனை பார்க்க முடியாத வகையால் கூட்டம் .

 14. பொதுக்கூட்டத்தை மிகச் சிறப்பான முறையில் நடத்தியதற்கு வாழ்த்துகள். பார்வையாளர்கள் அனைவருக்கும் மிகப் பயனுள்ள அனுபவம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

 15. நடந்த முடிந்த கூட்டத்திற்கு வாழ்த்துகள் கலந்து கொண்ட ,ஏற்பாடு செய்த பேசிய அனைவரும் வரலாற்று கடமையை சிறப்பாக ஆற்றியிருக்கிறார்கள்

 16. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! காணொளியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அந்தக் கேலிச்சித்திரங்களையும்.

 17. The meeting was beyond the reality. In chennai far away from the central India with a different language different culture the people can show solidarity means this IS THE WAY IT HAS TO BE . NO OTHER EXAMPLE CAN BE PUT FORWARD. THIS IS THE WAY. THIS IS THE PATH . LET OTHER STATES LEFTIST FOLLOW THIS. NOTHING CAN BEAT THE DISCIPLINE AND PERFECTION. One small request next time pls minimize the length of the foriegn language speech and transalation is some times becomes a bit drowsy and it PUTS A MULTIPLE SPEED BREAKERS …. THIS IF AVOIDED WILL BE TOO GOOD SO THAT THE LOCAL MASSES CAN BE ATTRACTED IS OF MY HUMBLE REQUEST . APART FROM THAT THIS IS “T H E” BEST SHOW OF SOLIDARITY . CONGRATS FOR THE COMRADES WHO WORKED DAY AND NIGHT FOR ORGANISING THE MEETING. IF THIS IS THE WAY … I THINK MA KA I KA CAN HAVE A LACKH AUDIENCE WITHIN A COUPLE OF YEARS. ALSO NOT TO FORGET THE HARD CORE FOUNDING TEAM OF THE PALA. RED GREETINGS. KRIS.

 18. பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், ஏன் பாராளுமன்ற அதிகாரவாதிகளை கெஞ்சிக்கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள், உங்களது கோரிக்கை நிறைவேற?
  இதனை மாற்ற என்னதான் திட்டம் வெச்சிருக்கீங்க?
  நீங்க சொல்றத ப.சி. கேக்கமாட்டான். மன்மோகனும் வாய்ப்பில்லை..பிறகு எதற்கு கண்டனக்கூட்டம்?
  இந்த அரசியல் அமைப்பையே தவறென்று சொல்லும் நீங்கள், இதற்க்கு தீர்வை என்ன செய்யபோகிறீர்கள்?
  மக்களை புரட்சிக்கு கூட்டிட்டுபோக போறீங்களா?
  அப்படின்னா அதா ஓபனா சொல்லுங்க பொதுக்கூட்டத்துல.
  மக்களே வாங்க……
  நாம துப்பாக்கிய தூக்கலாமுன்னு சொல்லுங்க….
  ப.சி., மன்மோகன், போலி கம்யூனிஸ்டுகள், இந்த பாராளுமன்றம், – எல்லாத்தையும் இடிச்சி தரை மட்டமாக்கலாம்னு சொல்லி மக்களை கூப்புடுங்க…….

  • தம்பி, ஏன் இப்படி ஒரு உளரல், யார் யாரிடம் கெஞ்சியது, இது என்ன தமிழினவாதிகள் கூட்டமா ஆளும் வர்கத்தினருக்கு சொம்புதூக்க? நக்சல் போராளிகளைய்யா, ப.சியும் மன்மோகனும் தான் தீவிரவாதின்னு பகிரங்கமா அறிவிச்ச கூட்டமய்யா அது.. செயராமுல வந்த அரிப்ப இங்க ஏன்யா வந்து சொறியற…????

   • ஏதோ கேள்வி கேட்டா, ஏதாவது பதில் சொல்றீங்களே அண்ணே…
    அதுவும் கேள்வி கேட்டவனை திட்டலன்னா உங்களுக்கு பதில் சொன்னமாதிரியே இருக்காது போல…..
    உங்ககிட்ட போயி கேட்டின் பாருங்க…….என்ன சொல்லணும்….

    • தம்பி, நான் விளக்குனதுல என்ன புரியல உங்களுக்கு? ஏதாவுது குறிப்பா கேள்வியிருந்தா கேக்கனும், சும்மா வெட்டிஅரட்டை கூடாது…சரியா????

    • அண்ணே, தம்பி 
     வினவை எத்தனை நாளா புடிக்கிறீங்க ம்ன்னிக்கவும் படிக்கிறீங்க.  அவங்க எழுதுனதிலிருந்து உங்களுக்கு ஒன்னுமே புரியலியா. உங்களுக்கு புரியவரைக்கும் மீண்டும் மீண்டும் படிங்க,படிச்சிக்கிடே இருங்க. இல்லைன்னா ஒரு ஓரமா ஒக்காந்து பாருங்க.

  • அய்யா தும்பி,
   அரசியல் என்றால் என்ன என்று புரியாததால் இப்படி பாமரத்தனமாக கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். இதனை தனியாக சில பக்கங்களில் பாடமாக நடத்திடமுடியாது. புரட்சிகர அமைப்புகளுடன் தொடர்புகொண்டு சிறுக சிறுக கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அல்லது வால்காவிலிருந்து கங்காவரை, ஸ்பார்டகஸ் போன்ற நாவல்களையும், ஆசான் லெனினுடைய அரசும் புரட்சியும் என்ற நூலையும் படியுங்கள். புரிய ஆரம்பிக்கும்.

   • அண்ணே,
    நூல படிக்கிறது, காத்தாடி விடறது இதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்…
    கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க வெண்ணைகளா….
    லெனின் சொன்னது இருக்கட்டும்…நீங்க ஏதாவது வாய தொறந்து சொல்லுங்கண்ணே….

    • Mr. (T)Ambi,
     i think you are too eager to SEARCH for knowledge . i can understand your தாகம் , அறிவு தாகம் . . you pls go and ask all your doubts to the police and paramilitary in disturbed areas (North . east ,Kashmir,Central India etc..)they will T.E.A.C.H you a lot which you will not forget for L.I.F.E. then all your doubts will go . you will become a complete knowledged person. pls try. you should try. go now. take a ticket . i mean two tickets . i think you understand mr.thambi.

    • //பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், ஏன் பாராளுமன்ற அதிகாரவாதிகளை கெஞ்சிக்கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.., தம்பி !பாராளுமன்றத்தில் எங்களுக்கு புலியளவும் மன்னிக்கவும் துளியளவும் நம்பிக்கையில்லை ஆனால் புரட்சியை ஒரு கட்சி மட்டும் செய்யமுடியாதுபுரட்சியை மக்கள்தான் செய்ய வேண்டும் அதற்கு உண்மையான புரட்சிகர கட்சி தலைமை தாங்கும், எனவே மக்களை புரட்சிக்கு அணிதிரட்டும் கடமை புரட்சிகர சக்திகளுக்குள்ளது அதற்காக மக்களிடம் பிரச்சாரம் செய்யவேண்டும் நாங்கள் மக்களிடம்தான் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம் பாராளுமன்றத்தில் நாங்கள் மனு போடவில்லை, எந்த அதிகாரவாதிகளையும் கெஞ்சவில்லை,கூட்டத்தில் யார் அப்படி அதிகாரவாதிகளை கெஞ்சினார்கள் என ஆதாரத்தோடு விளக்குங்கள் தம்பி !
       //உங்களது கோரிக்கை நிறைவேற?//
     அதென்ன உங்கள் கோரிக்கை?  மக்கள்மீது போர் புரியும் இந்த போலி ஜனநாயகவாதிகளை அம்பலபடுத்தக்கூடிய பொதுக்கூட்டம் உங்களுக்கு தனிபட்ட இயக்கத்தின் கோரிக்கையாக தெரிகிறதா?
     சரி காட்டுவேட்டை பற்றிய உங்களுடைய கருத்துதான் என்ன தம்பி !
     //நாம துப்பாக்கிய தூக்கலாமுன்னு சொல்லுங்க….ப.சி., மன்மோகன், போலி கம்யூனிஸ்டுகள், இந்த பாராளுமன்றம், – எல்லாத்தையும் இடிச்சி தரை மட்டமாக்கலாம்னு சொல்லி மக்களை கூப்புடுங்க…….//
     கண்டிப்பா ஆயுதங்கள தூக்கலாம் அதுக்கு முன்னாடி அரசியல் படிக்கனும் சரியா தம்பி !
     ஒரு வேளை அரசியல் பேசாம துப்பாக்கிய தூக்காம எப்படி இந்த அமைப்பை மாத்தலாம்னு ஒரு ஐடியாதான் சொல்லுங்களேன் சரியா இருந்தா உங்க பின்னாடி வருகிறேன்,  
      

    • அட ஏங் நீங் வேற திரிறிங்கஅவெம்பாட்டுக்கு நைட்டு சீமான படம் பாத்தா விடிய காத்தால புருச்சி வந்துரும்னு ஏதாவது ‘கரடி’ வுட போறான்,

 19. பொதுக்கூட்டம் சிறப்பாக இருந்தது. பு.மா.இ.மு.வின் நடனம்,இசைச்சித்திரம்,ம.க.இ.க மையகலைக்குழுவின் பாடல்கள் சிறப்பு. தோழர் மருதையன்,தோழர் வரவரராவ் இருவருடைய உரையும் இந்த ஆளும் வர்கத்தின் செவிப்பறையில் அறைந்தார் போல் இருந்தது…..

 20. மேடை உயரம் மற்றும் வடிவமைப்பு மிகவும் மோசமாக இருந்தது, பேச்சாளர்களுக்கு பின்னால் வெள்ளையான படத்தை போட்டது மிகத்தவறான முடிவு. உயரம் குறைவாக இருந்ததால் பின்னால் மேடையே தெரியவில்லை

  ஆடியோ இந்த முறை நன்றாக இருந்தாலும் போதிய அளவு மைக்குகள் இல்லாது குறை, கோரஸ் பாடும் தோழர்கள் ஒரு மைக்கை சுற்றி நின்று பாடினால் அவர்கள் குரல் எப்படி கேட்கும், ஆளுக்கொன்று அமைத்து கொடுப்பது சரியாக இருக்கும்

  வீடியோ ஸ்கீரனை கட்டிய இடமும் தவறு அவ்வளவு முன்னால் கட்டி யாருக்கு பயன்??? இன்னும் பின்னால் கட்டியிருந்தால் மீதி பார்வையாளர்களுக்கு அதனால் பயனுள்ளதாக இருந்திருக்கும். பெரும்பான்மை பார்வையாளர்களுக்கு மேடை தெரியவேயில்லை

  பார்வையாளர் முகத்தில் அறைந்த அந்த ஒளியும் மிகவும் துன்பத்தை ஏற்படுத்தியது. அதற்கு மாற்று ஏதாவது உண்டா என்பதை பார்க்க வேண்டும்,
  தவிர ஒளி வீடியோ ஸ்கிரீம் மேல் விழுந்து அதையும் கெடுத்து விட்டது

  இவ்வளவு பெரிய கூட்டத்தை நல்ல புகைப்படக்கலைஞரை கொண்டு கையாண்டிருக்கலாம், புகைப்படங்கள் தரம் குறைந்தவையாக உள்ளது
  வீடியோவை பார்த்தால்தான் அதன் பிரச்சனைகள் கண்ணில் படும்

  சிற்ப்புரைகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் இடையே சில நிமிடங்கள் இடைவெளி விட்டது தவறான செயல், கூட்டத்தில் ஒரு பகுதி அந்நேரத்தில் கலைந்து போய்விட்டது

  இன்னும் வேறு சில விமரிசனங்கள் உள்ளது அதை அமைப்பு ரீதியாக தெரிவித்திருக்கின்றேன்

  மற்றபடி……………

  கூட்டத்தின் உள்ளடக்கம் அனைத்துமே வெகு சிறப்பு, அனைவர் உரையும் நன்றாக அமைந்தது, கலைநிகழ்ச்சிகளும் நன்றாக நடந்தன, இவ்வளவு பெரிய கூட்டம் சென்னையில் முதலமைச்சர், சினிமா பிரபலங்களை தவிர ம.க.இ.க வுக்கு மட்டும் தான் கூடியிருக்கின்றது என்பதை உறுதியாக வெளியில் சொல்லமுடியும்.. பல ஆயிரம் பேரென்றாலும் சிறு சலசலப்பில்லாமல் நிகழ்ச்சியை பெரு வெற்றியடைய வைத்த அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  பின்குறிப்பு – வழக்கம்போல ஃபு ல் போதையிலும், போதையில்லாமலும் சில மறைகழன்ட கேசுகள் ( தமிழினஅமைப்பு நோட்டிசை கையில் வைத்திருந்தவர்கள் ) தோழர்களை பின்னாலிருந்து நக்கலிடிந்து சிறித்தபடி இருந்தனர்.. கூப்பிட்டு திட்டியவுடன் டைட்டாக மூடிக்கொண்டனர்

  • //வீடியோ ஸ்கீரனை கட்டிய இடமும் தவறு அவ்வளவு முன்னால் கட்டி யாருக்கு பயன்//அங்கு அமர்ந்திருந்த எம்மை போன்ற தோழர்களுக்கு நல்ல பயனாக இருந்தது.ஒலி அமைப்பு சிறப்பனதாக இருந்தது , என்னை பொறுத்தவரை சிறப்பான ஏற்பாடே மேடையும் அதன் பின்னணில் இருந்த ஓவியமும்தான் மாபெரும் கூட்டத்தை சிக்கனமாகவும் சிறப்பாகவும் செய்வது என்பதை நம் மகஇக தோழர்களிடம்தான் கற்கவேண்டும். குறை என்று பார்த்தால் எதாவது ஒன்று தென்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

 21. #### மேடை உயரம் மற்றும் வடிவமைப்பு மிகவும் மோசமாக இருந்தது, பேச்சாளர்களுக்கு பின்னால் வெள்ளையான படத்தை போட்டது மிகத்தவறான முடிவு. உயரம் குறைவாக இருந்ததால் பின்னால் மேடையே தெரியவில்லை

  ஆடியோ இந்த முறை நன்றாக இருந்தாலும் போதிய அளவு மைக்குகள் இல்லாது குறை, கோரஸ் பாடும் தோழர்கள் ஒரு மைக்கை சுற்றி நின்று பாடினால் அவர்கள் குரல் எப்படி கேட்கும், ஆளுக்கொன்று அமைத்து கொடுப்பது சரியாக இருக்கும்

  வீடியோ ஸ்கீரனை கட்டிய இடமும் தவறு அவ்வளவு முன்னால் கட்டி யாருக்கு பயன்??? இன்னும் பின்னால் கட்டியிருந்தால் மீதி பார்வையாளர்களுக்கு அதனால் பயனுள்ளதாக இருந்திருக்கும். பெரும்பான்மை பார்வையாளர்களுக்கு மேடை தெரியவேயில்லை

  பார்வையாளர் முகத்தில் அறைந்த அந்த ஒளியும் மிகவும் துன்பத்தை ஏற்படுத்தியது. அதற்கு மாற்று ஏதாவது உண்டா என்பதை பார்க்க வேண்டும்,
  தவிர ஒளி வீடியோ ஸ்கிரீம் மேல் விழுந்து அதையும் கெடுத்து விட்டது…..#######
  கேள்விக்குறியின் மேற்கண்ட விமர்சனம் சரியே!
  மேலும் ஒரு வீடியோ ஸ்க்ரீனை இடையில் வைத்திருந்தால் பின்னாலிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் காட்சி வடிவில் பார்த்து கூடுதல் உணர்வை பெற்று இருப்பார்கள். தோழர்கள் மேற்சொன்ன விமர்சனங்களை பருண்மையாக ஆய்வு செய்தல் நல்லது.

 22. அராஜகங்களுக்கு எதிராக தமிழ்மக்கள் கிளர்ந்தெழுவது புதுமையல்ல
  ஆனாலும் இப்படி ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் எதுவித குழப்பமும் இல்லாது மிகவும் வெற்றிகரமாக அதுவும் இந்திய காங்கிரஸ் அரசுக்கெதிராக தமிழகத்தில் நடைபெற்றதை நம்பமுடியாதுள்ளது. முதல்வரும் அவரது பொலிஸ்படையும் எங்கேபோனது?. இந்த எழுச்சியை அடக்கி அரசுக்கு விசுவாசமாக வாலாட்டி இன்னொரு மந்திரிப்பதவி வாங்கமுடியாது போனது ஏன்?… இங்குதான் ஐயம் எழுகிறது. தேர்தல் வருகிறது. கிழட்டுநரி தனதுசுயநல அரசியலுக்கு இத்தகைய செயல்பாடுகளை நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளும். தமிழக மக்களே! விழிப்பாக இருங்கள். ஈழத்தமிழரை அழியவிட்டதுபோல் இந்தியபழங்குடி மக்களையும் அழியவிடாதீர்கள் அரசியல் சாக்கடையை துப்பரவு செய்யுங்கள். போராடி வெல்லுங்கள்.

 23. வினவு,
  நல்ல முயற்சி. பாராட்டுக்கள். கூட்டத்திற்கு வரமுடியவில்லை.
  தேர்தல் வரப்போகிறது என்றால், இது போன்ற கூட்டங்கள் நடத்தி ஆதரவை பெருக்கி தேர்தலில் அறுவடை செய்யலாம். இந்த கூட்டத்தின் மூலம் மக்கள் அடைந்த விழிப்புணர்வை எப்படி அறுவடை செய்யப்போகிறீர்கள்?
  இந்த கூட்டங்கள்,ஆர்ப்பாட்டங்களை கண்டு ஆளும் வர்க்கம் பயந்துவிடப்போவதில்லை. மக்கள் தெருவுக்கு வந்து போராடப்போகிறார்களா? அது நடக்கப்போவதில்லை. இலங்கை தமிழர் விஷயத்தில் இதை பார்த்துவிட்டோம். ஒரு பக்கம் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடந்து கொண்டிருக்க மறுபுறம் பன்னாட்டு கம்பெனிகளுக்கான மனித வேட்டை நடந்து கொண்டேதானிருக்கப்போகிறது. இதை தடுத்து நிறுத்த இதை விடவும் பயன்தரும் வழிகள் வேறு எதுவும் இருக்கிறதா?

 24. புரச்சிகர கூட்டத்திற்கு வந்தது இதுதான் முதல் அனுபவம் .ஐந்து வயது குழந்தைஆய் இருக்கும் பொழுது என் அம்மா நிலவை காட்டி என்னை ஏமாற்றி சொரூற்றிநாள் என் நன்மைக்காக அன்று எனக்கு புரியாத ஐந்து வயது ஐந்து அறிவு அன்று தேசதாயின் அரவணைப்பில் இருக்கம் எங்களை இதை தருகிறேன் இதை விட்டுக்கொடு என்க்களைஎல்லாம் ஏமாற்றும் ஆட்சி யாளர்களே இன்று ஆறடி அறுபது கிலோ எதிர்த்து நிற்கவும் பொருத்து தாங்கவும் விரிய நிலையல் உள்ளோம் விடமாட்டோம் எங்கள் பழங்குடிஇன மக்களை !!!!!

 25. tambi plz change ur name first..u know one thing siru thuli peru vellam we r in progress we r educate our peoples if u dont want to learn go this is not the place i think u wrongly visited here

 26. ஆபரேஷன் க்ரீன்ஹுன்ட்கு ediraga தங்கள் நடத்திய kootam வெற்றி அடைததர்க்கு மிக்க paaraatu
  நன்றிஇடகைய கூடம் இந்தியாவில் வேறு எங்காவது நடந்ததா?nadakka இருக்கிறதா?

  rajan , மும்பை

 27. பொதுக் கூட்டத்திற்கு வர இயல வில்லை. சிறப்பாக நடந்ததாக கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள்.

 28. ம.க.இ.க தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் ஏன் இந்தியாவில் உள்ள அணைத்து புரட்சிகர கட்சிகளை ஒத்த கருத்து உடயா கட்சிகளை ஒன்ருனைந்து போராட கூடாது இதன் மூலம் நம்மால் ஒரு மிக பெரிய புரட்சியை இந்தியாவில் செய்து காட்டு முடியம் naxalbharigal அனனவரையும் ஒன்று படுத்துங்கள் வெற்றி பெறுங்கள் உண்காளது எதிர் கால வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் சே வாழ்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க