காந்தி, நேரு, அண்ணா வரிசையில் சேர விரும்பி, கனவு கண்டு இப்போது சேர்ந்ததாக எண்ணும் கருணாநிதி சமீபகாலமாக என்ன செய்கிறார்? காலையில் வண்டியை அரசினர் தோட்டத்திற்கு விடுகிறார். 500 கோடியில் கட்டப்படும் புதிய சட்டப் பேரவையை காரிலிருந்தபடியே பார்க்க, அதிகாரிகள் வரைபடத்தின் மூலம் கர்ம சிரத்தையாக விளக்க, கலைஞரின் வரலாற்றுச் சாதனையை நிறைவேற்ற உயரத்தில் நூற்றுக்கணக்கான வட மாநிலத் தொழிலாளிகள் தமிழினித்தின் தனிப்பெருமை கட்டிடத்தை புயல் வேகத்தில் கட்டுகின்றனர்.
அப்புறம் வண்டி கோட்டூர்புரத்தில் கட்டப்படும் அண்ணா நூலகத்திற்கு செல்கிறது. அங்கும் அதே அதே. பிறகு தலைமைச் செயலகத்தில் செம்மொழி மாநாட்டிற்கு வருபவர்களுக்கு என்ன தீனி போடுவது என்று அதிகாரிகள், அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வு. குடிமைப்பணி இப்படி முடிய வீடு செல்லும் தலைவர் அப்புறம் இருமனைவிமார்களின் வாரிசுப் பிரச்சினைகள் பற்றி பேசும் குடும்பப்பணி, பஞ்சாயத்துக்கள். இடையில் ஜெயாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அறிக்கை, கேள்விபதில்களை ரெடிமேடான வங்கியிலிருந்து எடுத்துக் கொடுக்கும் உதவியாளர்கள் மூலம் சரிபார்த்து விட்டு, கலைஞர் டி.வியின் அடுத்த வார மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு வந்த தீம்களை ஒகே செய்து முடித்தால் வருகிறது மாலை.
வள்ளுவர் கோட்டத்திலோ, ஜவஹர்லால் உள்ளரங்கு விளையாட்டு மைதானத்திலோ நடத்தபடும் பிரம்மாண்டமான ஜால்ராபிஷேகம். கோட்டத்தில் கவிதை மழை என்றால் மைதானத்தில் குத்தாட்ட மழை. கன்னத்தில் கை வைத்து முழுவதையும் இரசித்து உருகி மருகி தோய்ந்து நனைந்து இதற்குமேல் வார்த்தைகள் தேவைப்படுவோர் வைரமுத்துவிடம்தான் கேட்க வேண்டும். நடனம், நாடகம், நகைச்சுவை, சொற்பொழிவு எல்லாம் அந்தத் தங்கத் தலைவனை தமிழின் எல்லா வார்த்தை மற்றம் கலைகளைக் கொண்டு பாராட்டி, சீராட்டி, தாலாட்டித் தள்ள தலைவர் அடையும் மோன நிலை இருக்கிறதே அதோடு ஒப்பிடத்தகுந்தது இந்த உலகில் ஜெயமோகன் அடையும் படைப்பு மோன நிலை மட்டும்தான்.
ஜெயலலிதா கட்டவுட்டில் தன்னைக் கண்டு புளகாங்கிசத்திற்கு புதுமை படைத்திட்டதைப் போல கருணாநிதி வார்த்தைகளில் தன்னைக் கண்டு புல்லரிப்பிசத்திற்கு இலக்கணம் படைக்கிறார். இந்த இரண்டு இசங்களும் சேர்ந்தால் அது நார்சிசம். தன்னையே மோகமுறுதல். தலைவரின்றி வேறுயாருக்கும் கிட்டாத இந்த மோகம்தான் தள்ளாத வயதிலும் அந்த தங்கத் தலைவனை குடும்பத்திற்காக ஓயாது ஓடி ஓடி உழைக்க வைக்கிறது.
அதிலும் திரைப்பட ரசிகர்கள் விசிலடித்து, தமது மனைவிகளின் தாலியறுத்து பிளாக்கில் வாங்கி ஆராதிக்கும் நட்சத்திரங்களே தலைவனது முன்னால் நாணிக்கோணி வாழ்த்தும் போது அடையும் பரவசம் வார்த்தைகளில் பிடிபடாது. பெண் பெயரில் ஒரு ஆண் சும்மா கலாய்ப்பதற்காக சாருவை கண்டேன், வாசித்தேன், விழுந்தேன் என்று விட்டு விளையாடினால் சாருநிவேதிதாவிற்கு மூன்று நாள் தூக்கம் கெடும் போது கருணாநிதிக்கு அழைத்து வரப்படும் ஐஸ் கட்டிகள் அதுவும் பிரிட்ஜில் வைக்கப்படும் கோடம்பாக்கத்து கட்டிகள் என்றால் என்னவெல்லாம் கெடும்?
விலைவாசி உயர்வா, முல்லைப்பெரியாறு பிரச்சினையா, ரயில் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பா எல்லாம் பஞ்செனப் பறந்து போகும். கண்ணில் அந்த அலங்கார மனிதர்களைக் கண்டு, கேட்டு, இரவில் படுக்கும் போது அடையும் பிரம்மநிலையை யாரும் கனவில் கூட புரிந்து கொள்ள முடியாது. கட்டாயப் பாராட்டா, வெறுப்புப் பாராட்டா, பயந்து பாராட்டா, ஆளும் கட்சிக்கு ஜே போடும் சீசனல் பாராட்டா, எதுவாக இருந்தால் என்ன? பாராட்டுக்கு உருகும் அந்தப் ‘பச்சைப்பிள்ளை’க்கு எந்த பேதமும் இல்லை.
பாராட்டு தலைவனுக்கு என்றால் அதை வைத்து தலைவனது குடும்பம் பணமாக்குவதற்கு கலைஞர் டி.வி. ஒரே கல்லில் இரண்டு ஸ்டாராபெர்ரி. சூப்பர் ஸ்டார், உலக ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், இளையத தளபதி ஸ்டார், என எல்லா ஸ்டார்களும், ஸ்டார்ரினிகளும் வந்தால்தான் டி.விக்கு ஸ்பான்சர். ஸ்டார்களை வரவழைக்க என்ன செய்தார்கள்? பையனூர் அருகே 115 ஏக்கர் நிலத்தை சினிமாத் தொழிலாளிகளுக்கு என்று கலைஞர் தனது சட்டைப்பையிலிருந்த சொந்த சொத்திலிருந்து கொஞ்சம் கிள்ளிக் கொடுக்க முடிந்தது மேட்டர். இப்போ ஒரு கல்லில் மூணு ஸ்டாரபெரி. பாராட்டு, பணம், ஏழைப் பங்காளன்.
எல்லாம் கூடிப் பேசி திரைக்கதை எழுதி, செட்போட்டு, ரிகர்சல் பார்த்து மூகூர்த்த நாளும் வந்தது. திட்டமிட்டபடி ஐஸ் நிகழ்வு நல்லபடியாக செல்லும்போது அஜித் மட்டும்,” எங்கள மிரட்டுராங்கையா” என்று வரலாற்றில் இடம்பெற்று விட்ட வார்த்தையைப் பேச, ரஜினி ஆவேசமாய் எழுந்து கைதட்ட விழுந்தது கரும்புள்ளி.
தானைத் தலைவன் அப்செட்டாகி தொழிலாளிகளுக்கு கட்டிக்கொடுப்பதாக இருந்த வீட்டுத் திட்டத்தையும், முதலாளிகளுக்காக கட்டவிருந்த பிரம்மாண்டமான ஸ்டூடியோவைக் குறித்தும் தனது பேச்சில் டெலிட்டோ, எடிட்டோ செய்து விட்டதாக பெப்சி சங்கம் குமுற அப்புறம் ஜாகுவார் தங்கத்தின் பேட்டி, வீடு தாக்கப்படுதல், வி.சிறுத்தை ஆதரிப்பு, ரெட் கார்டு, நடிகர் சங்கம் – பெப்சி மோதல், தயாரப்பாளர் சங்கம் பஞ்சாயத்து எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போதைக்கு அஜித் வருத்தம் தெரிவிக்க வேண்டும், ரஜினிக்கு கண்டனம் என்ற வகையில் முடித்திருப்பதாக சொல்கிறார்கள்.
ஆனால் அஜித்தின் அடுத்த படம் அண்ணன் அழகிரியின் பையனது தயாரிப்பு என்பதால் அல்டிமேட் போங்கடா வெண்ணைகளா என்று போல்டாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதற்கு மேல் அந்தக் கரும்புள்ளியை அழிக்க சூப்பரும், அல்டிமேட்டும் கோபாலபுரத்திற்கு மலையேறி சாமியைக் குளிர்வித்திருக்கிறார்கள். தலைவரும் சூப்பரின் மகள் நிச்சயதார்த்ததிற்கு சென்று வாழ்த்தியிருக்கிறார்.
இத்தோடு இதை உண்மைத் தமிழன் முடித்திருந்தால் நாம் இந்த இடுகையை எழுதியிருக்க வேண்டியதில்லை.
இதற்குமேல் அல்டிமேட்டும், சூப்பரும் மாபெரும் கலகக்காரர்களாக, அவர் காட்டியதையும் அதற்கு கிடைத்த ஆதரவும்தான் நீங்கள் இதை வாசிக்க வேண்டிய தண்டனைக்கு ஆளாகியிருக்கிறீர்கள்.
இந்த உலகிலேயே பெரும் வித்தியாசமான அவலமான தொழிற்சங்கமென்றால் அது பெப்சி சங்கம்தான். பெரும் சினிமா முதலாளிகளின் சுரண்டல் கொடுமைக்கு எதிராக நிமாய் கோஷ் போன்ற மூதாதைகள் கம்பீரமாக ஆரம்பித்த அந்த சங்கம் இன்று அதே முதலாளிகளின் கைப்பாவையாய் பலவீனமாகிவிட்டது. ஒரு ஆட்டோ தொழிற்சங்க கிளைக்கு இருக்கும் குறைந்த பட்ச வர்க்க உணர்வு கூட இங்கு குறைந்து வருகிறது.
நிலையான வேலை, ஒழுங்கான வேலை நேரம் இல்லை. சங்கங்களில் சேர்ந்தால்தான் சினிமா வாய்ப்பு. அதற்கு கட்டணம். நடனம் போன்ற சங்கங்கங்களில் கட்டணமும் அதிகம். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு பெப்சி படைப்பாளிகள் பிரச்சினை வந்த போது இந்த சினிமா தொழிலாளர்களை அணிதிரட்டி பொதுக்கூட்டமெல்லாம் நடத்தினோம். துணை நடிகர்கள், லேட்மேன் போன்ற சாதாரண மக்களின் துன்பமும் அந்த துன்பத்தை உணர்ந்து அணிதிரளவிடாத சினிமா கலாச்சாரமும் அவர்களை என்றும் விடுவிக்கப் போவதில்லை.
வி.சி குகநாதன் இன்று பெப்சியின் தலைவராக இருக்கிறார். இவருக்கும் தொழிலாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பது அந்த முருகனுக்குத்தான் தெரியும். தி.மு.க ஆதரவினால் குகநாதன் ஏதோ கொஞ்சம் ஏக்கர் நிலங்களை கலைஞரின் சட்டைப்பையிலிருந்து தொழிலாளிகளுக்கு தானம் பெற்றார். இது உண்மையிலேயே தொழிலாளிகளுக்கு போகிறதா என்றால் அதிலும் தி.மு.க தொழிலாளிகள், கமிஷன் கொடுக்கும் தொழிலாளிகள் என்று ஏகப்பட்ட வில்லங்கங்கள் உள்ளன. சரி சில தி.மு.க ஆதரவு தொழிலாளிகளுக்கு கூட அந்த இடம் கிடைத்துவிட்டு போகட்டுமே. அடுத்து அம்மா வந்தால் அ.தி.மு.க தொழிலாளிகளுக்கு வாங்கிக்கொடுத்தால் போயிற்று. ஜவகர்லால் விளையாட்டரங்கமும், ஜெயா டி.வியும் ஓடவா போகிறது?
கலைஞரின் தானத்திற்கு நன்றி தெரிவிக்கும் ஐஸ் நிகழ்ச்சிக்கு, ஏதோ நம்ம நடிப்பிற்கு லைட் பிடித்து, டூப்பாக உயிரைக் கொடுத்து நடித்து பாடுபடும் தொழிலாளிகளை மனதில் நினைத்தாவது தலையைக் காட்டிவிட்டு, கொஞ்சம் வார்த்தைகளை பாராட்டாக கொட்டி விட்டு வந்திருக்கலாம். தொப்புளில் ஆம்லெட் போடுவது, டூயட்டிற்காக உலக அதிசயங்களை கேவலப்படுத்துவது, சண்டைக்காக காய்கனி வண்டிகளை உடைப்பது போன்ற லூசுத்தனங்களை ஒப்பிடும்போது இது ஒன்றும் அவ்வளவு இழிவானவையல்ல.
ஏற்கனவே ஈழத்திற்காக தமிழ் சினிமா நடிகர்கள் நடத்திய ஆறு மணி நேர உண்ணாவிரதத்தில் ஈழமும் ஈழத்தமிழ் மக்களும் என்னபாடு பட்டார்கள் என்பதை வினவில் எழுதியிருக்கிறோம். அந்த உலக மகா ஃபிராடு நிகழ்ச்சியைக் கூட நம்ம அல்டிமேட்டால் தாங்கமுடியவில்லை. மேடைக்கு போனவர் “சினிமா இன்டஸ்ட்ரியை சினிமா இன்டஸ்ட்ரியாக இருக்க விடுங்கள்” என்று முழங்கிவிட்டுத்தான் சென்றார். அய்யா அல்டிமேட் கூறியபடிதான் அந்த சினிமா மேக்கப் நிகழ்ச்சி படு செட்டப்பாக சீனைப் போட்டிருந்தது. சினிமா ஈழத்திற்காகப் போராடுகிறது என்று அகமதாபாத் ஐ.ஐ.எம்மில் படித்த முட்டாள் கூட நம்ப மாட்டானே? இது எல்லாருக்கும் தெரிந்ததுதானே?
அல்டிமேட் கூறுவிரும்புவது என்னவென்றால் நைட் ஒரு ஃபுல்லை போட்டுவிட்டு காலையில் லேட்டாக எழுந்து அல்லக்கைகளோடு ஷூட்டிங்கிற்கு போய் கையையும், காலையையும் சோம்பல் முறிப்பது போல நடித்துவிட்டு அதில் களைத்துப் போய் சொகுசு கேரவானில் ஓய்வு எடுத்துக் கொண்டு இப்படி ஒரு முப்பதோ, அறுபதோ நாட்களைக் கழித்தால் ஐயாவுக்கு ஊதியமாய் ஐந்தோ இல்லை பத்தோ கோடிகள் வரும். அந்தக் கோடியும் சினிமா ஓப்பனிங்கில் ஏலமிடப்பட்ட காட்சிகள் மூலம் ரசிகர்கள் அடகுவைத்து அழும் ரத்தப்பணம்தான். இதுதான் சினிமா இன்டஸ்ட்ரி இருக்க விரும்பும் இலட்சணம்.
“ஒரு லைட்மேன் வாங்கும் 250 அல்லது 350 ரூபாய் சம்பளத்தை நடிகனான எனக்கும் கொடுங்கள், இயக்குநருக்கும் கொடுங்கள், நாமெல்லாம் ஒரு இன்டஸ்டரியாக இருப்போம்” என்று சொன்னால் கூட ஒரு அர்த்தம் இருக்கிறது. இவரு கோடி கோடியாக வாங்குவாராம். அந்த கோல்மால்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் மேல் ஒரு தூசிகூட விழக்கூடாதாம். இதுதான் அல்டிமெட்டின் தன்மானக் கர்ஜனையின் பின்னணி.
நட்சத்திரப் பதவி, அதை முதலாளிகள் உருவாக்கும் விதம், இரசிகர்கள் கொடுக்கும் அங்கீகாரம், ஊடகங்களில் பில்டப்புக்கள் எல்லாம் இருந்தால்தான் கோடி சம்பளமும், சொர்க்க வாழ்வும் கிடைக்கும். அப்படிக் கிடைப்பதால் ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுவதும் செய்யவேண்டும். எல்லா ஊழலும் ஒன்றோடு ஒன்று கலந்ததுதான். இதில் நான்மட்டும் யோக்கியம் என்று காட்டுவது அம்மணாண்டிகளின் ஊரில் கோவணம் கட்டியவனின் கதைதான்.
ஒப்பனிங் காட்சிகள் ஏலம் கிடையாது, பிளாக் டிக்கெட் கிடையாது, திரையரங்கின் வழக்கமான கட்டணம்தான் என்று நேர்மையாக இருந்திருந்தால் சூப்பர் ஸ்டார் எப்படி மில்லியனராக மிளிர்ந்திருக்க முடியும்? இந்தப் பகல் கொள்ளைக்கு முதலாளிகள், அரசு, அதிகாரிகள், போலீசு, பத்திரிகைகள் எல்லாருடைய ஆதரவை வைத்துத்தானே ஜமாய்க்கிறீர்கள்? அது உண்மையெனில் நீங்கள் கருணாநிதி காலில் விழுந்து நாக்கால் நக்கினால் கூட தப்பில்லையே முண்டங்களா?
ஆபாசத்தையும், அண்டப் புளுகையும் வைத்து இரசிகனை உணர்ச்சியால் திறமையாக சுரண்டுவதினால்தானே நீங்கள் நட்சத்திரங்கள்? பதிலுக்கு அந்த இரசிகர்கள் ‘அண்ணன் வருங்கால முதலமைச்சரானால் நாமளும் பொறுக்கித் தின்னலாமே’ என்றுதானே உங்களுக்கு தோரணம் கட்டுகிறார்கள்? நடிகன் – இரசிகன் உறவே இப்படி ஊழல்மயமாக இருக்கும் போது வெள்ளித்திரையில் போடும் டூபாக்கூர் ஹீரோ வேடத்தை வெளியில் காட்டுவதை சகிக்க முடியவில்லை.
அஜித் உண்ணாவிரத்த்திற்கு வரவில்லை என்ற செய்தியினால் ஏகன் படத்திற்கு ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அல்டிமேட் என்ன செய்திருக்கவேண்டும்? வெளிநாடு ரைட்ஸை என்ன ரேட்டுக்கு விற்றீர்களோ அதன் நட்டத்தை நான் தருகிறேன் என்று அப்போதே தன்மானஸ்தனாக காட்டியிருக்கலாமே? அதே போல குசேலன் படம் பெங்களூருவில் வெளியிட எதிர்ப்பு வந்த போது ரஜினியும் தயாரிப்பாளரிடம் கர்நாடகா ரைட்சுக்குரிய பணத்தை திருப்பியிருக்கலாமே? ஆனால் இரண்டு ஸ்டார்களும் என்ன செய்தார்கள்?
அஜித் கருப்பு சட்டையைப் போட்டுவிட்டு உண்ணாவிரத்த்தில் போஸ் கொடுத்தார். ரஜினி ஒகேனக்கல் பிரச்சினைக்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஏன்? தனது ஊதியம், வர்த்தகத்திற்கு பிரச்சினை என்றால் இவர்கள் அவுத்துப்போட்டு ஆடவும் செய்வார்கள். விட்டால் ஊர் ஊராக ஓடவும் செய்வார்கள்.
இத்தகைய மோசடிப் பேர்வழிகளைப் போய் தன்மானத்திற்காக குரல் கொடுத்த சிங்கங்கள் என்று புகழ்ந்தால் சுண்டெலிகள் கூட தற்கொலை செய்து கொள்ளும். எனில் ரஜனி மற்றும் அஜித்தின் தன்மான பின்னணியில் இருப்பது என்ன? பச்சையான சுயநலம். தனது நட்சத்திர அந்தஸ்தை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும் திமிர். பொது நலன், அரசியல் போன்ற விசயங்களில் எங்களை இழுக்காதீர்கள் என்று ஒதுங்கிக் கொள்ளும் தந்திரம். இவர்களைப் போல சுயநலவெறியர்களாக இருந்திருந்தால் சார்லி சாப்ளின் என்ற அந்த மகத்தான கலைஞனின் இறுதி வாழ்க்கை பிரச்சினையில்லாமல் இருந்திருக்கும். ஆனால் மக்களுக்காகவும் நீதிக்காகவும் அந்தக் கலைஞன் தனது நட்சத்திர தகுதியை கைவிட்டான்.
இந்த விடயத்தை பலரும் கலைஞருக்கு ஜால்ரா போட மறுத்த விசயமாக மட்டும் பார்ப்பதில் பலனில்லை. கருணாநிதியை எதிர்ப்பது வேறு. அதற்காக இரண்டு அல்பைகளை தூக்கி வைத்துக் கொண்டாடுவது வேறு. ரஜினியை வைத்து முதலாளிகள் சம்பாதித்தது போல அந்த முதலாளிகளை வைத்து ரஜினியும் சம்பாதிக்கிறார். அதற்கு மாஸ் நடிகன் என்ற பம்மாத்து தேவைப்படுகிறது. ஆனால் ரஜினியின் மாஸ் பேஸ் என்ன என்பதை அவரது புகழ்பெற்ற பாபா படம் வரும்போது ரஜினி தலைமை ரசிகர் மன்றம் இருக்கும் திருச்சியிலேயே நேருக்கு நேர் சந்தித்து விரட்டியிருக்கிறோம்.
தமிழ்சினிமா உருவாக்கியிருக்கும் இரசனைதான் தமிழ்மக்களின் எல்லாப் பார்வைகளிலும் ஊடுருவியிருக்கிறது. அரசியல், சமூகப் பிரச்சினைகளின் பால் உள்ள அக்கறையற்ற நிலைக்கும் கூட இதுவே அடிப்படைக் காரணம். இந்த பலவீனத்தை வைத்தே தமிழ் சினிமாவின் பிரபலத்தை எல்லா அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றனர். இன்று கட்சிக் கூட்டங்கள் கூட குத்தாட்ட நடன கேளிக்கைகளாக மாறிவருகின்றன. இப்படி சினிமா என்பது நம்மை மேலும் மேலும் சமூகத்திடமிருந்து அன்னியப்படுத்துகிறது.
விலைவாசி உயர்வு, முல்லைப் பெரியாறு, பழங்குடி மக்களின் துயரம், வன்னி முகாம் அவலம் என்ற கண்ணை அறுக்கும் யதார்த்தத்தில் அஜித்தின் தன்மானப் பிரச்சினைதான் நமது பேசுபொருளாக என்றால், நம்மை அந்த பழனி பிக்கினி முருகனால் கூட காப்பாற்ற முடியாது.
தொடர்புடைய பதிவுகள்
யோவ் … இருயா.. பாராட்ட வார்த்தை தேடறேன், கெடைக்க மாட்டுது ……..
superappu….
“அஜித்,ரஜினி”- இன்றைய தேதியில் திரை கதாநாயகர்களான இவர்கள்தான் பொதுசமூகத்தில் சூப்பர் ஹீரோவாகவும், தைரியம் உள்ளவர்களாகவும் மேட்டுக்குடி கருதியல்வாதிகளால் கட்டமைக்கப்பட்டு உள்ளனர். முதல்வரின்பாராட்டு விழாவில் அஜித் பேசியது துநிச்சல்தனமாகவும்,எழுந்து நின்று கைதட்டிய ரஜினியின் செயல் குமுறலின் வெளிப்பாடாகவும் காட்சிபடுதபடுகிறது. சுயனலதிர்க்காக பேசுவது என்பது எப்படி துணிச்சலான செயலாகும்? மற்றொரு புறம் “கலைஞன் என்பவனை எந்த விதத்திலும் கட்டுபடுத்த கூடாது ஒ ரு விசயத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும்,தெரிவிக்காமல் போவதும் அவர்கள் சொந்த விருப்பம் கலைஞர்கள் சுதந்திரமானவர்கள்” என்ற கருத்தை மேட்டுக்குடி அறிவுஜீவிகள் பரப்புகின்றனர்.
சரி அப்படியென்றால் இங்கு யார் கலைஞர்கள்?எது துணிச்சல்? வெள்ளை ஏகாதிபத்தியதிற்கு எதிராகபொம்மலாட்டமும், நாடகமும் போட்டார்களே தெருக்கூத்து கலைஞர்கள் அவர்கள் கலைஞர்கள். பாசிச வெறிபிடித்து மனித உயிர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து வந்த ஹிட்லருக்கு எதிராக அவனை நையாண்டி செய்து தொடர்ந்து படம் எடுத்து வந்தாரே சார்லி சாப்ளின் அவர் கலைஞர். பகுத்தறிவு பேசியவர்களை துரத்தி துரத்தி அடித்தும்,வழக்கும் போட்டு வந்தபோதும் மனம் தளராமல் மேடை நாடகங்கள் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்தானே எம்.ஆர்.ராதா-அவன் கலைஞன்.ஒரு ஒடுக்குமுறைக்கு எதிராக தங்கள் தளத்தில் இருந்து பொது சமூக வளர்ச்சியில் அக்கறைகொண்டு படைப்புகளை கொண்டு வந்தார்களே அந்த மாபெரும் கலைஞர்கள் செயல்கள் தான் “துணிச்சல்”. பணி பிரதேசங்களில் அங்கங்களை காட்டி சுற்றி சுற்றி வரும் நடிகைகளை தடவி ரசித்து பாட்டுக்கு வாய் அசைபவன் கலைஞன் அல்ல. சுயநலத்திற்காக பேச தொடங்குவது துணிச்சல் அல்ல. “மக்களின் எண்ணங்களை உணர்ந்து ஆக்கபூர்வமான வளர்ச்சியை நோக்கி வளர்த்தெடுத்து செல்பவனே நல்ல கலைஞன்” .சீன கம்யூனிஸ்ட் மாவோ “மக்களை மேம்படுத்தும் கலையை கொண்டுவருபவனே சிறந்த கலைஞன்” என்பார்.
இங்கு மேடையில் முழக்கமிட்ட இந்த பேடிகள் என்ன மேம்பட்ட சிந்தனைகளை மக்களிடம் கொண்டுவந்து விட்டார்கள்? “வாயில் சுருட்டை வைத்துகொண்டு வூதிகொண்டு அங்கும் இங்கும் நடந்து போவதுதான் நடிப்பா?இந்த சீரழிவுகளை தவிர இவர்கள் மக்களிடம் திணித்து வேறென்ன? நாம் இங்கு முதல்வரை பாராட்டவோ,அவர் மேடையில் எதிர்ப்பு காட்டி விட்டாரே என்றோ இந்த திரை கபடவேடதாரிகளை சாடவில்லை. அவசியம் இல்லாமல் துதிபாடும் பாராட்டு விழாக்களை தொடர்ந்து நாம் எதிர்த்தே வந்துள்ளோம். கடமையை செய்யவே இங்கு பாராட்டு விழா அவசியம் ஆகிவிட்டது கொடுமை கொடுமை இவைகுறித்து வேறொரு தருணத்தில் பேசுவோம் இங்கு இது பிரச்சனை இல்லை “மக்களால் ஆதரவு பெற்ற ஒருவன் போது மேடையில் மக்களுக்கு எதிர்கா பேசலாமா?அப்படி பட்ட கருத்துக்களை வைத்து இருக்கலாமா?” என்பதுதான். “ஈழ தமிழர்,காவிரி விசயத்தில் எல்லாம் கட்டாயபடுத்தி மிரட்டி கூபிடுகிறார்கள்” என்கிறான். தாயின் மரணத்திற்கு வூர் கூப்பிட்டு தான் வரவேண்டுமா? அப்படியென்றால் அவன் மகனா? ” மக்களை அறிந்து,புரிந்து,கற்று கொண்டவர்களாக கலைஞர்கள்,எழுத்தாளர்கள் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருப்பது போர்களமில்லாத போர்வீரர்கள் போன்ற தன்மைக்கு ஒப்பாகும்.”என்கிறர் உழைக்கும் மக்களுக்காகவே வாழ்நாள் முழுக்க உழைத்த மாவோ.தொடர்ந்து “கலை இலக்கிய வூழியர்கள் எல்லாம் பொது இலட்சியத்திற்காக உழைபவர்களாக இருக்கவேண்டும் இவர்கள் படைப்புகள்,இலக்கியங்கள்,கலைகள் பொதுமக்கள் எண்ணங்களில் ஒரு புதிய அனுபவத்தை ,புரட்சிகர சிந்தனைகளை ஏற்படுத்துவதை இருக்கவேண்டும்” என்பார்.
ஆம் கலை என்பது கலைக்காக அல்ல-அது மக்களுக்காக! தனக்கு பிடித்த கலை,நடிப்பு,பாடல் வேண்டும் என்றால் அதை தன் வீட்டிற்குள்ளேயே நடத்தி சந்தோசபட்டுக்கொள்ளட்டும். அதை வீதிக்கு கொண்டுவந்தால் மக்கள்டியம் கொண்டுவந்தால் சரியானதாக இருக்கவேண்டும் அது மக்களை வளர்த்தெடுக்க வேண்டியதாக இருக்கவேண்டும். மக்களை சிதைக்கிற எந்த கலையையும்,கலைஞனையும் மக்களை மேம்படுத்த வேண்டும்என்ற கொள்கை உடையோர் எற்றோகொள்ளமாட்டார்கள் அவர்களை அம்பலபடுதவும் தயங்கமாட்டார்கள். “உன் கலையை வெளிக்கொண்டு வர எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு அது சரியில்லாத பட்சத்தில் அதை மறுக்கவும் மக்களுக்கு உரிமை உண்டு”. அவ்வகையில் அஜித்தின் பேசும்,ரஜினியின் கைதட்டலும் அவர்களின் உள்ளத்தை படம்பிடித்து காட்டுவதாக உள்ளது. அவர்களின் எண்ணங்களின் அடையாளமாக இருந்தது. மக்களை மேம்படுத்தா எண்ணங்கள் வைத்திருக்கும் அவர்கள் கூறும் ஒரு கருத்தை மக்களை மேம்படுத்தவேண்டும் என்று எண்ணம் உள்ளோர் எப்படி ஏற்று கொள்ள முடியும்?எதிர்ப்பு காட்டாமல் இருக்க முடியும்? கொத்துகொத்தாக ஈழத்தில் மனித உயிர்கள் கொள்ளப்படும் போது தமிழனாக வேண்டாம் மனிதனாக நாம் குரல்குடுக்க வேண்டாமா? அதை தடுக்க ஒரு எதிர்ப்பு குரல் குடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்? இதற்க்கு மற்றொருவர் கூப்பிட்டுதான் வரவேண்டுமா? ரோம் நகர் பற்றி எறியும் போது பிடில் வாசிக்கும் நீரோ மன்னனாக இருப்பவன் பெயர் கலைஞனா? பசிக்கு அழுதுகொண்டு பிஞ்சுகள் இருக்கும்போது பீட்சா சாபிடுபவன் மனிதனா? கேவலம் வெங்காயம் வெட்டும் போது அழும் நீ சக மனிதன் கொல்லபடும் போது அழ மறுக்கிறாயே!? காலில் அடிபட்டால் உடனே கலங்கும் கண்களை போலதான் சகமனிதன் துயரப்படும்போது துடிக்கவேண்டும் அவனே உண்மையான கலைஞன்,எழுத்தாளன்,மனிதன்.
இங்கு மனிதனாகவே இல்லாத ரஜினி,அஜித் போன்றவர்களிடம் எப்படி கலைஞனை எதிர்பார்க்க முடியும்!? கோவை குண்டு வெடிப்பு நடந்த போது “நல்ல வேலை ஆண்டவர் அத்வானியை காப்பாற்றி விட்டார்” என்றவன் தானே ரஜினி ஆம் அவன் மொழியில் உயிர்கள் என்றால் மேட்டுக்குடியினர் தான் அப்பாவி போது ஜனங்கள் அல்ல அதனால் தான் இறந்து போன அப்பாவி மக்களை பற்றி மருந்துக்கும் கவலைப்படவில்லை. அன்றே கவலைபடாத அவன் இந்திரா கவலைப்பட போகிறான்.? “பாசகார மேடை” இவர்களை மக்கள் முன் அம்பலபடுதுவதாக இருந்தது அதை புரிந்துகொண்ட நாம் அவர்களின் மக்கள் விரோத கருத்துக்களை சாடுகிறோம் இதில் என்ன தவறு? நாளைக்கே மக்களை செழுமைபடுதும் கருத்துக்களை கூறினால் இவர்களை ஆதரிக்க எள்ளளவும் நம் தயங்கமாட்டோம்.நம்மை பொறுத்த வரை இங்கு மக்களின் மேம்பாடு,அடிமைத்தனங்களில் இருந்து அவர்களின் விடுதலை தான் முக்யமே ஒழிய எந்த தனிமனிதர்களையும் தாக்குவது அல்ல. இந்த உணர்வில் இருந்து தான் எண் கருத்துக்களை நான் பகிர்ந்தேன் “ஈழத்தில் எந்த தெலுங்கர்கள்,கன்னடர்கள்,ஹிந்திகாரகள்,சீனாகாரகளை குறி வைத்து சிங்கள அரசு தாக்கவில்லை-தமிழ் மொழி பேசும் தமிழர்களை அடையாளம் கண்டு தான் கொன்று குவித்தனர்”. “காவிரி விசயத்தில் கர்நாடகாவில் இருந்து தமிழ் மொழி பேசுவோரை அடையாளம் கண்டு குறி வைத்து கொன்று குவித்தனர்-தெளுங்கர்கலையோ,ஹிந்திகாரர்கலையோ அல்ல” ஒரு மொழி பேசும் மக்கள் அம்மொழியினால் அடையாளபடுதப்பட்டு அழிதொழிக்கபடும் போது,அம்மொழியை அடையாளபடுத்தி தானே தற்காப்பிற்கும் அணிதிரட்ட முடியும்? தமிழர்களை குறி வைத்து தாக்கும் போது “தமிழர்களே ஒன்று சேருங்கள்,தமிழ் மீட்கும் தற்காப்பு போருக்கு வாருங்கள்”என்று தானே அணிதிரட்ட முடியும்?!இது எப்படி இன வெறியாகும்? இதற்க்கு போடப்படும் “தமிழன்” என்ற உணர்வு உங்களுக்கு எப்படி கேவலமான அடையாளமாக மாறும்? கொல்பவனிடம் பொய் “மனிதன்” என்று சொல்லுங்கள் அவன் திருந்திய பிறகு நாங்களும் ஒத்து கொள்கிறோம் நாங்கள் மனிதர்கள் என்று. வந்தேறிகளுக்கு எங்கள் வரலாறு தெரியாது.( அஜித்,ரஜினி)தமிழனின் வலியை தமிழனாக உணர்ந்துபார் புரியும் உணராத வரை நீ தெலுங்கன் தான்,கன்னடன் தான்,வடநாட்டான் தான்.
எண் மண் மீது, எண் மக்கள் மீது,எண் இனத்தின் மீது,உலகம் முழுக்க சுரண்டல்வாதிகளால் சுரண்டப்படும் பாமர ஜனங்கள் மீது பற்றுகொள்பது தவறா? எண் கொள்கைக்கு எதிராக ஒருவர்பேசும்போது அக்கொள்கையில் உயிர்ப்பான பற்றுகொண்டவன் என்ற அடிப்படையில் எண் நியாயத்தை பதிலாக கூறினேன். எண் வார்த்தைகள் கடுமையாக இருந்த காரணம் எண் கொள்கை மீதான உயிர்ப்பான பற்றுதனாலேவே ஒழிய எந்தவித உள்நோக்கமும் இல்லை. எண் இனத்திற்கு எதிராக எண் தந்தையோ,தாயோ உல் உணர்வோடு,உல் நோக்கத்தோடு தொடர்ந்து பேசி வந்தால் அவர்களை வெட்டிக்கொள்ளவும் நான் தயங்கமாட்டேன்.
இன்றைய தேதியில் ஒரு அரசியல் பாதுகாப்பு இன்றி முதல்வர் முன்னிலையில் இப்படி பேசுவதுக்கு துணிச்சல் தேவை படுகிறது. அந்த தூநிச்சளுக்கு தான் இதை ஜாதி ஈன ப்ரேச்சனையாக மற்ற பார்க்கிறார்கள். “ஈழ தமிழர்,காவிரி விசயத்தில் எல்லாம் கட்டாயபடுத்தி மிரட்டி கூபிடுகிறார்கள்” தமிழகத்தில் உள்ள அனைவரும் வீதிக்கு வந்து போரடவா செய்தார்கள் இல்லையே. நடிகர்களும் தனி மனிதர்கள் தான். தனி மனிதனுக்கு இருக்கும் அத்தனை உரிமையும் அவனுக்கு இருக்கிறது. அவனை மக்கள் ப்ரேச்சனைக்கு போராட எதிர் பார்க்க வேண்டாம். அதை அரசியல்வாதிகள் செய்யட்டும். அவர்கள் அதை ஒழுங்கா செய்ய வில்லை என்றல் அவர்களை கேள்வி கேளுங்கள். உங்களுக்கு நடிகர்களின் படைப்பு பிடிக்க விலை என்றால் அவர்கள் படைப்புகளை பார்கதிர்கள். முதலில் ஒரு நடிகனை நடிகனாக மற்றும் பார்க்க கற்று கொள்ளுங்கள். இவ்வளவு வருட கலை வாழ்வில் பொது வாழ்கையில் சில கழைனர்கள் ஈடுபட்டு உள்ளார்கள். அது அவர்கள் தனி பட்ட விருப்பம் எல்லோரும் ஈடு படவில்லையே…
” மக்களை அறிந்து,புரிந்து,கற்று கொண்டவர்களாக கலைஞர்கள்,எழுத்தாளர்கள் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருப்பது போர்களமில்லாத போர்வீரர்கள் போன்ற தன்மைக்கு ஒப்பாகும்.”என்கிறர் உழைக்கும் மக்களுக்காகவே வாழ்நாள் முழுக்க உழைத்த மாவோ அவர் கூறியது
கலைஞர்கள் தங்கள் கலையில் வெளிபடுத்த தான். வீதிக்கு வந்து கலைஞர்ககலை போராட சொல்லி இல்லை. ஒருவர் கருத்தை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றி கூற வேண்டாம்.. கலைஞர்கள் அவர்கள் வேலையை ஒழுங்கா செய்தாலே போதும்.
போங்கய்யா… போங்க. வேற வேலை வெட்டிய பாருங்க. இது ரெண்டு தல யோட பாடு. முட்டிகிடட்டும். மோதிகிடட்டும். வேற ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்க. மண்டைல ஏதும் தோணலன்னா கம்னு கிடங்க.
ஈழத்தமிழர் போராட்டத்தின் பொழுதே, அஜீத்தின் ரியாக்சன் அபத்தமாய் இருந்தது. நீங்கள் சொல்கிறபடி தான்… எவன் எக்கேடு கெட்டே போகட்டும்! எனக்கு கோடிக்கணக்கில் கொட்டினால் மகிழ்ச்சி என்ற மனப்பான்மை தான் காரணம்.
அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கிற விலைவாசி உயர்வு, தனியார் மயத்தை ஊக்குவிக்கிற மம்தாவின் பட்ஜெட், முல்லை பெரியாறு விசயம் எல்லாம் பேசுபொருளாக இருக்க வேண்டும். மாறாக… அஜீத், ரஜினி, கலைஞர் டிவி… என விவாதம் போய்க்கொண்டிருக்கிறது.
அய்யா, உங்களுக்கு இப்போ என்ன வேணும்? எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.கே.தி பாகவதர் வாழாத சொகுசையா பெரிசா அஜித், ரஜினி வாழ்ந்துட்டாங்க ? பட a மொதாலாளிக்க l பண்ணுற அரசியல், அட்டூழியங்களுக்கு என்ன பன்னமுடுயும். அங்கனையே ஒற்றுமை இல்லையே? நடிகர் சங்க தலைவர் கட்சி நடத்தவே லாயக் இல்ல, சங்கத்தை நடத்திட போறாரா?
அது எப்படி ஒருவனை தலைவனாக ஏற்று கொள்ளமுடிகிறது, எனக்கு விளங்கவேயில்லை! அதுவும் இந்த அரசியல், சினிமா தொந்தரவு ரொம்ப ஓவர்!
//அய்யா அல்டிமேட் கூறியபடிதான் அந்த சினிமா மேக்கப் நிகழ்ச்சி படு செட்டப்பாக சீனைப் போட்டிருந்தது.//
அய்யர் அல்டிமேட் கூறியபடிதான் அந்த சினிமா மேக்கப் நிகழ்ச்சி படு செட்டப்பாக சீனைப் போட்டிருந்தது. 🙂
நிறைவாக இருக்கிறது.
அரசியல்ல சினிமா !!!
குள்ள நரிகளையும் கிழட்டு நரியையும் ரசிக கண்மணிகளுக்கும் கழக கண்மணிகளுக்கும் தெளிவாக அடையலாம் காட்டி உள்ளீர்கள்.சிறப்பான கட்டுரை
எல்லாவற்றையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். சொல்ல எதுவுமில்லை. ஒரேயொரு பொருட்குற்றம் இருக்கிறது. இதையாவது சொல்லிட்டு போகிறேன்.
//ஒரே கல்லில் இரண்டு ஸ்டாராபெர்ரி.//
ஸ்ராபெர்ரி மரத்தில் வருதில்லை. செடியில் வருகிறது. அதனை அடிக்க கல் தேவையில்லை. அப்படி அடித்தாலும் ஜாம் ஆகிவிடும்.
கலைஞரும், கலைஞரின் வாரிசுகளும் ஸ்ராபெர்ரியையே கல்லால் அடிக்கும் மகா மெகா புத்திசாலிகள் என்று தாங்கள் கூறவருவதாக நினைக்கிறேன்.
அதே, அதே, அந்த கடைசி இரண்டு வரிகளைத்தான் நானும் சொல்ல நினைத்தேன். நீங்க சொல்லிட்டீங்க.
// பதிலுக்கு அந்த இரசிகர்கள் ‘அண்ணன் வருங்கால முதலமைச்சரானால் நாமளும் பொறுக்கித் தின்னலாமே’ என்றுதானே உங்களுக்கு தோரணம் கட்டுகிறார்கள்?//
//இந்தப் பகல் கொள்ளைக்கு முதலாளிகள், அரசு, அதிகாரிகள், போலீசு, பத்திரிகைகள் எல்லாருடைய ஆதரவை வைத்துத்தானே ஜமாய்க்கிறீர்கள்? அது உண்மையெனில் நீங்கள் கருணாநிதி காலில் விழுந்து நாக்கால் நக்கினால் கூட தப்பில்லையே முண்டங்களா?//
சாட்டையடி!
SUPER
வினவு நல்ல பதிவு. ஒன்றுமே இல்லாத இந்த விசியத்தை தமிழ்நாடே பேசிக்கொண்டு இருப்பதும்,இதற்கும் இனத்தின் சாயம் பூசி,முதலாளிதுவத்தின் சுரண்டலை மறைக்க நினைக்கும் தமிழ்,திராவிட இயக்கங்களுக்கு சவுக்கடி.
டியர் சார், அருமையான பதிவு. It’s really sad that there exists such a publicity for this stuff.. And shows, how a single battery can blow off a huge explosions.. Butterfly effect?. சரி, இப்ப Jaguar தங்கம் என்ன பண்ண போறாரு?. Why our so-called tamil producers announce – we will not use non-tamilian actresses?. Actresses who know, pure grammer tamil only can act in tamil films?.
Ayyo.. That’s more dangerous.. All tamil actresses have to go தானை தலைவர் only.. And these actresses will take 1 பாராட்டு விழா. போதுமட சாமி….
சினிமாவில் 1000 பேரை அடித்து உதைத்து துவம்சம் செய்யும் ரஜினியும்,அஜித்தும் நிஜ வாழ்கையில் அரசியல் ரவுடிகளை பார்த்ததும், காமெடி நடிகர் வடிவேலுக்கு சமமாக காமெடி செய்து வடிவேலையே சீரியஸ் நடிகராக மாற்றி விட்டனர். என்ன கொடுமை சரவணன் சார்.
பிழைக்க வந்தவன் என்னை பணம் சம்பாதிக்க விடுங்கள் என்டு சொல்லி ஓடுகிறான். மானங்கெட்டதுகள் அவனை ஆண்மகன், தைரியசால், வீரன் என்கிறதுகள்.
யோசிக்க வைத்தது. ஆனால் ஒரு கோடி வாங்கினாலும் , நாளைக்கே வாங்காமல் வீட்ல சும்மா இருந்தாலும் விழாவிள் பங்கு பெறுவது அவரவர் விருப்பம். இதன் மூலம் சமூகப் பிரச்சினை எல்லாம் அவங்க தீர்க்க ஒன்னும் போறதில்லே . அது அவங்களுக்கே நல்லா தெரியும். அதனால்தான் இந்த ரியாகஷாந .
குப்பையை இன்பமாகக் கிளரமுடியுமா? போஸ்ட்மார்டத்தை புன்னகையோடு செய்ய முடியுமா? செய்ய வைக்கிறது கட்டுரை. ரசனையான கட்டுரை.
திரை உலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும்: அஜீத் பிரச்சனை: கலைஞர் விளக்கம் (பேரன் தயாநிதி அழகிரியின் படத்தயாரிப்பில் அஜித் நடிப்பதால்)
“இனிமேல் எவர் ஒருவரும் கலை உலகில் சிறுகலகமும் விளைவித்திட முடியாது என்று திரைஉலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும்” என முதல் அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.
இது குறித்து முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீராத பிரச்சினையாக திரையுலகில் இருந்து வரும் பல பிரச்சினைகளுக்கு அடித்தளமாக இருப்பவை அசூயை ஏமாற்றம் அகந்தை எனும் தீமைகளாகும். திரையுலகத்தினர் பொதுவாக கலைஞர்கள், தொழிலாளர்கள் என்மீது என்தலைமையில் உள்ள அரசின் மீது நம்பிக்கை கொண்டு நன்றி காட்டும் உணர்வுடன் விழாக்கள் நடத்துவதுண்டு. அரசு அவையில் நான் அமராமல் இருந்த காலத்திலே கூட என் கலைவாழ்வுக்கு பொன்விழா பவளவிழா என்று விழாக்கள் எடுத்து எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள். (எனக்கு விழா நடத்தாட்டி என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமே)
கலை உலகத்தில் ஒரு காலும், அரசியலில் ஒரு காலும் என்று என் இரண்டு கால்களையுமே சறுக்கல் வராமல் அழுத்தமாக பதியவைத்து, அதே வேளையில் கலையுலகில் நலிந்தோர்க்கு நலநிதி வழங்கியும் அரசு பொறுப்பேற்றிருந்த காலங்களில் கலையுலகத்தினரின் கஷ்டநஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியே இல்லாத நிலைமையை உருவாக்கியும் படப்பிடிப்பு கட்டண சலுகை போன்று பல்வேறு விதமாக நன்மைகளை அவர்கள் மகிழத்தக்க வண்ணம் வழங்கியும் திரைப்படத்துறையினர் நல வாரியம்” அமைத்தும் அவர்களில் ஒருவனாக நான் விளங்கிக்கொண்டிருப்பதால் தான் பெற்ற குழந்தைகளில் ஒன்றுக்கு விழா நடத்துவது போலவும் தன்னை காத்திடும் கரங்களுக்கு கணையாழி அணிவிப்பது போலவும் நான் எங்கிருந்தாலும் அதாவது அரசுப்பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு கலைஞன் என்ற முறையில் இரண்டையும் ஒன்றாகக்கருதி கலையுலக நண்பர்கள் எனக்கு எத்தனையோ விழாக்களை எடுத்துள்ளனர். (இது அடிக்கடி நடத்தாட்டி எனக்கு தூக்கமே வராது)
இப்போது எனக்கு கலையுலகத்தினர் எடுத்து நன்றி தெரிவிக்கும்விழா கூட என்னை விளம்பரப்படுத்துவதற்காகவோ அல்லது யாரும் தங்களை விளம்பரப்படுத்தி கொள்வதற்காகவோ எடுக்கப்பட்ட விழா அல்ல. (கலைஞருக்கே விளம்பரமா, சூரியனுக்கே ஒளியா) “நன்றி மறப்பது நன்றன்று” எனும் வள்ளுவரின் குறள் மொழிப்படி நடந்து கொள்வதற்காக நமது கலைஞர்கள், திரையுலகத் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய விழா தான்!
“எல்லா முதல் அமைச்சர்களுக்கும் இப்படித்தான் விழா எடுப்பார்கள்” என்று வக்கணையோடு சொல்லி எரிச்சலை தணித்துக்கொள்வோர் சிலர் உண்டு. அந்த வக்கணையாக இல்லாமல் இந்த விழா எல்லா முதல் அமைச்சர்களுக்கும் எடுக்கின்ற விழா வரிசையிலே ஒன்றல்ல அதாவது பத்தோடு பதினொன்று அல்ல! திரையுலகத்தினருக்கு குறிப்பாக கலைப்பணியாற்றும் நண்பர்களுக்கு தோழர்களுக்கு அவர்தம் குடும்பங்கள் குறைவின்றி வாழ்வதற்கு அவர்கள் விடுத்த கோரிக்கையையேற்று 90 ஏக்கர் அரசு நிலத்தை முறைப்படி அவர்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் காட்டிய நன்றிப்பெருக்கு அந்த விழா!
சென்னை மாநகரத்தில் ஒரு பகுதியில் 90 ஏக்கர் நிலம் வழங்குவது என்பது எவ்வளவு பெரிய காரியம் ( ஸ்பெக்ட்ரம் ஊழலை விடவா பெரியது) என்பதை உணர்ந்து மகிழ்ந்து உணர்ச்சியுள்ளவர்கள் அதனைக்காட்டி கொள்ள எடுத்த விழாதான் அந்த நன்றி தெரிவிக்கும் விழா.
அழகான குழந்தையை மேலும் அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பும் தாய் அதன் கன்னத்தில் ஒரு சிறிய கருப்புப்பொட்டு வைத்து அனுப்புவதை பார்க்கிறோமே அதைப்போன்றதொரு பொட்டு அந்த விழாவில் வைக்கப்பட்டதை பெரிதுபடுத்தி அந்தப்பொட்டின் வண்ணத்தை முகம் முழுதும் பூசிக்கொள்ளும் புரியாத குழந்தையைப்போல ஒரு நிகழ்ச்சி அமைந்து விட்டது உண்மைதான்.
அகில இந்தியப்புகழ் வாய்ந்த கலைஞர் பெருந்தகை அமிதாப்பச்சன் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலைஞானி கமலஹாசன் இவர்கள் எல்லாம் வாழ்த்துரைத்து அள்ளித்தெளித்த அன்பு மலர்களுக்கிடையே அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து அது மாசற்ற மலர் எனினும் அந்த மன்றத்தில் எனக்கு நடத்திய விழாவிற்கு எதிராக விழுந்த மலரோ என்ற ஐயப்பாட்டை எழுப்பி ( அதுக்குத்தான் அடுத்த நாள் கூட்டி மிரட்டுனேன்) அதைத்தொடர்ந்து எழுந்த கையொலிகள், பேச்சொலிகள் இவற்றையெல்லாம் “இதுதான் சமயம்” என்று சிலர் எனக்கு நடந்த விழாவினை திசை திருப்ப முயன்று “இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள் அவைகள் அதனைப் பூதாகரமாக உருவாக்கிட முனைந்தபோது அதனை மேடையேற விடாமல் ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைத்திடும் முயற்சியாக அஜித் என்னை சந்தித்து விளக்கமளித்தார். “நான் குறிப்பிட்டது இந்த விழா பற்றியல்ல இதற்கு முன்பு நடைபெற்ற சில நிகழ்வுகளில் கலையுலகில் ஏற்பட்ட கசப்பு பற்றி தான் குறிப்பிட்டதாக” அவர் விளக்கம் அளித்ததும் இதனை பெரிதுபடுத்தக்கூடாது என்று பெருந்தன்மை பூண்டு ரஜினி போன்றவர்கள் அமைதி காத்ததும் திரையுலக தொழிலாளர்களும், கலைஞர்களும் அதற்கு ஒத்துழைப்பு நல்கியதும் பெரிதாக வெடிக்கப் போகிறது என்று எதிர்பார்த்த வாணம் புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று! கலாம் விளையும் கலையுலகத்தில் அதற்கு இந்த விழாவை ஒரு காரணம் ஆக்கலாம் என்று கருதியோர்தாம் கண்ட கனவு கலைந்ததே என்று கை பிசைந்து நிற்கின்றனர்.
உடன்பிறப்பே, இந்த கடிதத்தின் நோக்கத்தையும் இதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களையும்(வழக்கம் போலவே முட்டாளாக புரிந்து கொள்வாய்) விழாவிலே கலந்து கொண்டோர் மாத்திரமல்ல; விழாவினை முன்நின்று நடத்திய ராமநாராயணன், குகநாதன், தம்பிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோரும், அவர்களோடு உடனிருந்து உழைத்தவர்களும் உணர்ந்து இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலாம் விளைவித்திடவும் முடியாது என்று கட்டுப்பாடு காப்பார்களேயானால் அது அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக எனக்கு அமையும் என்பதை அவர்களே அறிவார்கள்!
இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
நக்கீரனில் வந்த செய்தி. அடைப்புக்குறியிலிருப்பது நம்ம செய்தி!
தமிழில்
வேதனை
என்ற
வரத்தை இருக்குமென்றால்
அது அஜித்.தமிழன்
முகத்தில்
குத்தியும்
அந்த
வேதனையை
உணர
மறுக்கும்
ரசிகனை உண்டாக்கி
விட்டானே.
ரஜினி, அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்தது: பெப்சி தலைவர் அறிவிப்பு
திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார்.(ஒரு படத்திற்கு எத்தனை கோடின்னு ஏன் வெளிப்படையாக அறிவிக்கமாட்டேங்குறீங்க) இதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார்.(கோமாளி எப்ப என்ன பண்ணுவான்னு அவனுக்கே தெரியாது) இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
ரஜினி, அஜீத்தை பெப்சி, திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டித்தன. திரைப்பட கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (அழகிரி படத்துல அஜித் நடிக்கிறதால இதுக்கு மேல வீராப்பு காட்ட முடியல)
இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் கலை உலகில் யாரும் கலகம் விளை வித்திட முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டார். (பேரன் தயாநிதி அழகிரி உத்திரவின்படி)
முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று திரைப்பட சங்கத்தினர் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதாகவும் போராட்டங்கள் அனைத்தும் கைவிடப்படுவதாகவும் பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் இன்று அறிவித்தார்.(இதுக்குமேல ஜால்ராவுக்கு வேலையில்லையே என்ன செய்ய)
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம்.(அடிமைகள் ஆண்டான் சொன்னா கேட்டுத்தானே ஆகணும்) திரையுலகினரை விமர்சித்தவர்களை கண்டித்து இன்று வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம்.(ஏன் அம்மணப் போராட்டம் நடத்தவில்லை) அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது. கலை உலகில் உள்ளவர்களுக்குள் உரசல் வரலாம். ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்கு வதை ஏற்க மாட்டோம். (பின்ன பொழைப்ப எப்புடி ஓட்டுறது)
கலைஞர் வேண்டுகோள்படி கலை உலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம். எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பும் அகன்று விட்டது. ஒரே குடும்பமாக செயல் படுவோம் என்றார்.(தொடர்ந்து ஒரே குடும்பமாக தொழிலாளிகளையும், இரசிகர்களையும் கொள்ளையடிப்போம்)
நக்கீரனில் வந்த செய்தி. அடைப்புக்குறியில் நம்ம செய்தி!
ரியலு நல்லா அடிச்சு ஆடுறீங்க… கூடிய சீக்கிரம் உங்க படைப்பையும் வினவுல பாத்தா சந்தோசந்தான 🙂
நல்ல பதிவு வினவு..!!!
supper….wonderful
நடிப்பை மிக இலகுவாக புறந்தள்ளி நடிகனை ரசித்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் பரிதாபநிலை.
ரசிகனால் பணக்காரனின் மகளை காதலிக்க முடியாது நடிகனால் முடியும் போலீஸ் டேசனில் புகுந்து அடித்து துவைக்க முடியாது நடிகனால் முடியும் ஒரு மணி நேரத்தில் பணக்காரனாக முடியும் சிவத்த தோல் பெண்ணை காதலிக்க முடியும் ஆடிப்பாட முடியும் அரசியல் வாதியை பழிவாங்க முடியும். உயர்சாதியை பண்ணையாரரை ஜமீனை எதிர்த்து வெல்ல முடியும். என்னும் எத்தனையோ ரசிகனால் முடியாத விசயங்கள் நடிகனால் முடிகின்றது. பரிதாபத்துக்குரிய மக்களின் ஒடுக்கப்படும் மக்களின் நியாயமான உணர்வுகளுக்குள் நடிகன் சிம்மாசனமிட்டு இருக்கின்றான். பின்னர் நடிகன் மக்களுக்கு தலைவன் ஆகின்றான். மக்களை கட்டுப்படுத்தும் சக்தியாகின்றான்.
நையாண்டி, நக்கலுடன் கட்டுரை அருமை. இன்றைய இளைஞர்கள் திரைப் படத்திற்கான குறுந்தகடு வெளியிடும் தினத்தில் கேசட் விற்பனை கடை முன்னால் நடிகனின் பெரிய flex banner வைத்து அதற்கு பாலபிசேகம் நடத்துவதை காலை வேலைக்கு போகும் போது பார்க்கையில் இவர்களெல்லாம் எதார்த்த உலகிற்கு எப்போது வருவார்கள். நாட்டை பங்கு போட்டு தின்று கொண்டிருக்கும் அரசியலை என்று புரிந்து கொண்டு உழைக்கும் மக்கள் நலன் காக்க அணி திரளுவார்கள் என் எண்ணிக்கொள்வேன். நான் இந்த மறுமொழி எழுதிக்கொண்டிருக்கையில் சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்குதாரர்களாக உள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டது, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள அவசியமின்றி அவர்களாகவே சாகும் நிலைக்குத் தள்ளும் மத்திய நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்டு அதை தரகு முதலாளிகள் டி வி பொட்டியில் அலசியும் முடித்தாயிற்று. / துடிப்புள்ள தமிழக இளைஞர்களே கனவுலகில் இல்லாது நனவுலகிற்கு வாருங்கள்
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்ததான் தெரியும் என்பார்கள் … சும்மா இது மாதிரி எழுதுவது எளிது … நீங்க வேறு மாநிலத்தில் போய் சம்பாதித்தால் உடனே அவர்களுக்கு கோடி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை … தனி மனித விருப்பம் என்பது அவரவர் விருப்பம் … உங்கள்ளுக்கு விருப்பம் இருந்தால் வருங்காலத்தில் ரஜினி , அஜித் படங்களை பாருங்கள் … இல்லாவிட்டால்… போங்கய்யா… போங்க. வேற வேலை வெட்டிய பாருங்க. வேற ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்க. மண்டைல ஏதும் தோணலன்னா கம்னு கிடங்க.
டே நாரா பையலே
ஓஹோ..
அத்துடன் நிறுத்தியிருந்தால் நீங்களும் இப்படியொரு பதிவை எழுதியிருக்க மாட்டீர்களாக்கும்..! ம்.. உங்களுக்கு பதிவெழுதும் சிரமத்தைக் கொடுத்தமைக்கு மன்னிக்கணும் வினவு அண்ணே..!
சில சமயங்களில் வாழ்க்கையே முரண்பட்டுப் போய் நின்று அந்த முரண்களுக்குள்ளேயே சிக்கி வாழ வேண்டிய நிலைமை பல சாதாரண மனிதர்களுக்கு ஏற்பட்டுவிடும். சிக்கியது சிக்கியதுதான். தப்பிக்க முடியாத நிலைமைதான்..
உதாரணம் நான்.. உடன்பிறந்தவர்களெல்லாம் அமைதியாக அவரவர் வேலைகளைப் பார்க்க நான் மட்டும் அரசியல், ஆன்மிகம், சமூகம், அனுபவம், புடலங்காய் என்று இத்யாதி வகைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். இப்போது சினிமா துறையிலேயே ஒருவனாக நானும் இருப்பதால் உங்கள் அளவுக்கு கோபத்தையும், தார்மீகத்தையும், நடத்தையையும் நான் சார்ந்த துறையில் என்னால் பார்க்க இயலவில்லை.
என்னுடைய பதிவில் நான் பெரிதாக எழுதியிருந்தது ஆள்பவர்களுக்கு எதிராக மாற்றுக் கருத்து சொன்னால் அவர்களின் நிலைமை என்னவாகும் என்பதை மையமாக வைத்துதான் எழுதியிருந்தேன். தாங்கள் வழக்கம்போல திருகுதாளம் செய்து என் தலையைத் திருகிவிட்டீர்கள்.
ரஜினி அப்படியொரு சமரச நோக்கில் பேசப்பட்ட பேட்டியை வெளிப்படுத்தியிருக்க வேண்டாமே என்பதுதான் எனது கருத்தும்.. அன்றைக்கு சினிமா உலகத்தில் பலரது கருத்தும் அதுதான். ஆனால் பணத்தை போட்டிருக்கும் முதலாளிகள் ரஜினியை நம்பியே அவ்வளவு தொகையை முதலீடு செய்திருந்ததால் தொழிலாளியாக அவர் செய்தது சரிதான்.. ஆனால் பொதுப்படையாக நமக்குத் தவறாகத் தெரிகிறது..
இப்படியே ஒவ்வொரு துறையிலும் இருக்கும் மற்றவர்களையும் ஏன் வர மறுக்கிறீர்கள்..? ஏன் கருத்துச் சொல்ல மறுக்கிறீர்கள்? என்று நாம் கேட்டுக் கொண்டேயிருக்க முடியுமா..? அவர்களுக்கு அரசியலில் விருப்பம் இருந்தால்தான் அவர்கள் சொல்வார்கள்..!
ஈழப்பிரச்சினையும், காவிரி பிரச்சினையும் அரசியல் பிரச்சினையா என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொல்வார்கள். மனிதர்கள்தான் பல வித முகங்களாச்சே.. எனக்கு இது அரசியல்.. மற்றவர்களுக்கு..?
முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தன்றுகூட சினிமா தியேட்டரில் கியூ நின்றிருந்தது. அவர்களைப் போய் வலுக்கட்டாயமாக வாங்கடா என்று அழைக்க முடியுமா..? அவர்கள் சொல்வது அது அரசியல். எனக்குத் தேவையில்லை என்பதுதான்.
அது மனம் மற்றும் அவர்களது வளர்ந்த சூழல் சார்ந்தது.. அதை நம்மால் ஒரே நாளிலோ அல்லது சில மாதங்களிலோ மாற்றிவிட முடியாது. அவர்களுக்கே ஏதேனும் அனுபவம் கிடைத்தால் மட்டும்தான் அரசியல் மீது ஆர்வம் கொள்வார்கள். வருவார்கள். இதுதான் இன்றைக்கு நாட்டின் நிலைமை.
என்னைவிட உங்களுக்கே நன்கு தெரியும். ஒவ்வொரு குடும்பங்களிலும் குழந்தைகளுக்கும், பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கும் எதைப் பற்றி மட்டும் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று..! நம் வளர்ப்பே அப்படியிருக்கும்போது வளர்ந்த பின்பு இதில் ஆர்வம் கொண்டு மனமுவந்து ஓடோடி வந்து கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
உலகம் முழுவதிலும் இருக்கின்ற கணினி பொறியாளர்களில் 40 சதவிகிதம் பேர்தான் இந்த வலைப்பதிவுகளிலும், தனி வலைமனைகளிலும் அரசியல் பற்றிப் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள்.. மற்றவர்கள்..! ம்ஹும்.. அரசியல் என்றாலே ஆர்வம் இல்லை என்று சொல்லி ஒதுங்கிவிடுகிறார்கள்..
இந்தக் கூட்டத்தின் ஒரு பிரதிதான் நடிகர் அஜீத். அவருடைய திரைப்படங்களை ஓட்ட வைப்பது தமிழர்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் எங்களுக்கு அஜீத் தேவையில்லை என்று அந்த சினிமா ரசிகன் முடிவு செய்தால் அவர் கார் ரேஸுக்கே போய்விடுவார். அது அவருடைய சினிமா ரசிகர்களின் கைகளில்தான் இருக்கிறது. ஈழப் பிரச்சினையினாலும், காவிரி பிரச்சினையினாலும்தான் சினிமா ரசிகன் படம் பார்க்க தியேட்டருக்கு வருகிறான் என்பதை நாம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் ஒழிய.. அவர்களுக்கு அதன் மீது தார்மீகமான பிடிப்பு நிச்சயம் வரவே வராது.. அவர்களது மனதை மாற்ற நாம் ஒன்றும் மந்திரவாதியோ, மகானோ, இறைவனோ அல்ல..
ரஜினியைப் பொறுத்தமட்டில் சிக்கல்கள் அரசியல்வியாதிகளால்தான் உருவாகியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டுதான் உள்ளார். ஆனால் வெளிப்படுத்த முடியவில்லை. காரணம் சினிமா பீல்டு. அவரும் நிலைக்க வேண்டும் என்கிறார். நீங்கள் அதைத் தொலைத்துவிட்டு தெருவுக்கு வரச் சொல்கிறீர்கள். இதில் முடிவெடு்கக வேண்டியது அவர்தான். அவரது வாழ்க்கையை தியாகம் செய்யுமாறு நாம் கோரலாம். கட்டாயப்படுத்த முடியாது.
அப்படிப் பார்த்தால் கலைஞரின் குடும்பத்து பேரன்கள் அனைவரும் தத்தமது தொழிலையும், குடும்பத்தையும்வி்ட்டுவிட்டு கொடி பிடித்து இறங்கத்தான் வேண்டும். வருவார்களா..? முடியுமா..?
ஏன் நம் வீட்டுப் பக்கத்து வீட்டுக்காரனே நமது எழுத்தைப் படித்துவிட்டு ஒரு வார்த்தை சொல்ல மறுக்கிறான். சிரிப்போடு நிறுத்திக் கொள்கிறார்கள். பின் எப்படி இவர்களையெல்லாம் போய் பொதுநலச் சேவை செய்ய வாருங்கள் என்று அழைப்பது..?
பொதுநலச் சேவைகளுக்கும், தன்னலமற்றத் தொண்டுகளைச் செய்வதற்குமான தூண்டுதலும், ஊக்கமும், ஆக்கமும் அவர்களுடைய மனதுக்குள், டி.என்.ஏ.வுக்கும், மூளைக்குள் இருந்தாக வேண்டும். இல்லாத பட்சத்தில் நீங்களும், நானும் மாறி மாறி கூப்பாடு போட்டாலும் அது வெளியே வராது.
காரணம் இயற்கையோ அல்லது முருகனோ படைத்த படைப்பே அப்படித்தான்..!
எல்லோரும் டாட்.காம் நடத்துகிறார்கள். எழுதுகிறார்கள். ஆனால் வினவு போல் எழுதுவது வினவு மட்டும்தானே..!
முருகனை அடிக்கடி வம்புக்கு இழுத்து அவனது பெயரை இத்தளத்தில் பார்க்க வைப்பதற்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!
வீட்டு முகவரியை வெளிப்படுத்தினால் பஞ்சாமிர்தம் வாங்கி அனுப்புகிறேன்..!
வாழ்க வளமுடன்..!
உண்மைத் தமிழண்ணே,
நீங்கதான் இந்தக் கட்டுரையின் வி.ஐ.பி. ஏன்னா இதை எழுதரதுக்கு தூண்டுகோல இருந்தது நீங்க. அதற்கும், இந்த மறுமொழிக்கும் நன்றி.
ஆள்பவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தால் என்ன நடக்குமென்பதை விளக்குவதற்காகவே உங்கள் கட்டுரையை எழுதியதாகச் சொல்கிறீர்கள். இங்கே ஆள்பவர்கள் என்பதை சற்று பெரிய பொருளில் விரித்துப் பார்த்தால் அங்கே அஜித்தும், ரஜினியும் கூட இருக்கிறார்கள். எனவே இந்தப் பிரச்சினை ஆள்பவர்களுக்குள்ளே நடக்கிற சுயநல மோதல் என்பதே சரி. தலயும், சூப்பரும் ஏதோ அன்றாடங்காய்ச்சிகளின் ஊதியத்தை பெற்றுக் கொண்டு வாழவில்லை. குசேலனில் தயாரிப்பாளர் மட்டும் பெரும் முதலீடு செய்யவில்லை. ரஜினியும் அதற்கு பெரும் தொகை வாங்கியதன் மூலம் அவரும் அதன் வெற்றிக்கு கடமைப்பட்டவராக இருக்கிறார். அந்தவகையில் அவரும் அந்தப் படத்தில் மறைமுகமாக முதலீடு செய்திருக்கிறார். எனவே கர்நாடகா எதிர்ப்பு என்பது தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் அது பிரச்சினை. தனது ஊதியத்தை தக்கவைக்க வேண்டுமானால் அவர் மன்னிப்பு கேட்டுத்தான் ஆகவேண்டும். அஜித்தும் இப்படித்தான் ஏகன் பட ரீலீசில் நடந்து கொண்டார். இவர்களை ஏதோ தொழிலாளிகள் ரேஞ்சுக்கு நீங்கள் கருதுவது சரியா?
அடுத்து ரசிகர்களின் சமூக அக்கறையை நிரூபித்தால்தான் நடிகர்களின் சமூக அக்கறை வெளிப்படும் என்கிறீர்கள். ரசிகர்கள் படம் பார்க்கிறார்கள், பணம் கொடுக்கிறார்கள், டி.வி பார்க்கிறார்கள் என்பதெல்லாம் அவர்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணிகள் அல்ல. தங்கள் வாழ்வாதாரங்களுக்கு அவர்கள் கடுமையாகப் போராடத்தான் செய்கிறார்கள். ரஜினி போல நாமும் பில்லியனராகிவிடலாம் என்றெல்லாம் அவர்கள் மனப்பால் கொண்டிருக்கவில்லை. அடுத்து நட்சத்திர மோகம் என்பது சினிமா முதலாளிகள், ஊடக முதலாகள், அரசியல்வாதிகள், விளம்பரங்களுக்காக நிறுவன முதலாளிகள் எல்லாரும் சேர்ந்துதான் உருவாக்குகிறார்கள். ஆனந்த விகடன், குமுதத்தை படிப்பவர் விரும்பாவிட்டாலும் அவர் ரஜினி மகளின் நிச்சயதார்த்த செய்தியை படித்துத்தான் ஆகவேண்டும். டி.வியிலும் இதே. இதனால் நட்சத்திர மோகம் என்பது மக்களிடம் திட்டமிட்டே திண்க்கப்படுகிறது. அதற்கு மக்களை மட்டும் குறை சொல்வது இந்த திணிப்புக்கு ஆதரவாகத்தான் போய்முடியும்.
மக்களை சமூக அக்கறை உள்ளவர்களாக மாற்ற முடியாது அது அவர்களது பிறப்பினாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்று நீங்கள் சொல்வது உண்மைக்கு மாறானது. ஈராக்கில் அமெரிக்கா குண்டு போடுவதினால்தான் ஈராக் போராகள் தற்கொலையின் மூலம் தமதுநாட்டிற்காக போராடுகிறார்கள். இந்த உணர்வை அவர்களது புற சூழ்நிலை தீர்மானிக்கிறது. பிறப்பு அல்ல. அதோ போல ஒரு அமெரிக்கன் தற்கொலைப் போராளியாக மாறி தனதுநாட்டிற்காக சாகத் தயாராக மாட்டான். ஏனென்றால் அவன் ஒரு ஆக்கிரமிப்பு நாட்டின் அணியைச்சேர்ந்தவன். இதுவும் புறச்சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது.
தண்டகாரண்யாவின் மாவோயிஸ்ட்டுகளின் தலைமையில் பழங்குடி மக்கள் இந்திய அரசை எதிர்த்து போராடுகிறார்கள். இது அவர்களது வாழ்வை பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்ற போராட்ட உணர்ச்சியிலிருந்து வருகிறது. இதுவும் பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதிதல்லை. அந்த வகையில் பெருமான்மை உழைக்கும் மக்கள் போராட்டத்திற்கு தயாராகத்தான் தகுதி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை சென்று அணிதிரட்டுவதற்கு சரியான கட்சி இருக்குமானால் அவர்கள் ஆதரிப்பார்கள்.
ஆனால் இத்தகைய மக்களின் போராட்ட வாழ்க்கைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல், ஸ்வீட் ஸ்டாலில் இருந்து கொண்டு பட்டினியைப் பற்றி பேசுவதை தமிழ் சினிமா செய்து வருகிறது. காரணம் அது வெறும் கலையல்ல. பல நூறு கோடி ரூபாய் புரளும் பெரும் தொழில். இந்த தொழிலில் பெரும் நடிகர்களும் முதலாளிகள்தான். இவர்களைப் போய் போராளிகளாகச்சித்தரிப்பதன் மூலம் நாம் மக்களுக்கு பெரும் அநீதியைச் செய்கிறோம். மக்களிடம் இந்த முதலாளி நடிகர்களை அவர்களின் சுயநலத்தை, பொதுநலனில்பால் இருக்கும் அலட்சயத்தை அம்பலப்படுத்துவதன் மூலம்தான் சினிமா மாயையில் கட்டுண்டு இருக்கும் மக்களை நாம் மெல்ல மெல்ல மீட்க முடியும். அதில் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதற்கான நடைமுறையில் இருக்கிறோம். உங்களையும் அழைக்கிறோம்.
[[[ஆள்பவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தால் என்ன நடக்குமென்பதை விளக்குவதற்காகவே உங்கள் கட்டுரையை எழுதியதாகச் சொல்கிறீர்கள். இங்கே ஆள்பவர்கள் என்பதை சற்று பெரிய பொருளில் விரித்துப் பார்த்தால் அங்கே அஜித்தும், ரஜினியும் கூட இருக்கிறார்கள். எனவே இந்தப் பிரச்சினை ஆள்பவர்களுக்குள்ளே நடக்கிற சுயநல மோதல் என்பதே சரி.]]]
இந்த இடத்தில் உங்களிடமிருந்து நிச்சயம் வேறுபடுகிறேன் வினவு. அஜீத் பேசியதன் சாரத்தின் உட்புகுந்தால் இந்தப் பதிவின் போக்கே மாறிவிடும். அஜீத்தின் பேச்சை ஏன் சர்வாதிகார பேச்சின்கீழ் நடத்தப்படும் ஒரு ஆட்சிக்கு எதிரான குரலாக எடுக்கக் கூடாது. அதன் பின் வருபவற்றையும் அவர்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவருக்குத் துணையாக ரஜினியைத் தவிர வேறு யாருமில்லை என்பதும், பேரனின் அடுத்தப் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற ஒன்று மட்டுமே இப்போதுவரையில் அவரைக் காப்பாற்றிவருகிறது என்பதையும் நினைக்க வேண்டும்.
சினிமா தொழிலும், நடிகர்களுமே முதலாளிகள், அரசியலையும், அரசியல்வியாதிகளையும் ஒத்தவர்கள்தான் என்று நீங்கள் சொன்னால் நான் அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. நான் அவர்களை வெறும் நடிகர்களாகத்தான் பார்க்கிறேன்..
[[[தலயும், சூப்பரும் ஏதோ அன்றாடங்காய்ச்சிகளின் ஊதியத்தை பெற்றுக் கொண்டு வாழவில்லை. குசேலனில் தயாரிப்பாளர் மட்டும் பெரும் முதலீடு செய்யவில்லை. ரஜினியும் அதற்கு பெரும் தொகை வாங்கியதன் மூலம் அவரும் அதன் வெற்றிக்கு கடமைப்பட்டவராக இருக்கிறார். அந்தவகையில் அவரும் அந்தப் படத்தில் மறைமுகமாக முதலீடு செய்திருக்கிறார். எனவே கர்நாடகா எதிர்ப்பு என்பது தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் அது பிரச்சினை. தனது ஊதியத்தை தக்கவைக்க வேண்டுமானால் அவர் மன்னிப்பு கேட்டுத்தான் ஆகவேண்டும். அஜித்தும் இப்படித்தான் ஏகன் பட ரீலீசில் நடந்து கொண்டார். இவர்களை ஏதோ தொழிலாளிகள் ரேஞ்சுக்கு நீங்கள் கருதுவது சரியா?]]]
குசேலன் படத்தின் தோல்வியினால் ரஜினிக்கும் பாதிப்பு ஏற்பட்டது மறுக்க முடியாதது. (தோல்வி ஏன் என்பது பற்றி நாம் இங்கே பேச வேண்டாம்) அது ஒரு தொழிலாக மட்டுமே பாருங்கள்.. ஏன் அதை அரசியலுக்குள் இழுக்குறீர்கள். சினிமாவைவிட மிக அதிகமாக வரியை அரசுக்குத் தரும் திருப்பூர் பின்னலாடை தொழிலிலும் இதுபோன்ற நஷ்டங்கள், சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருவருமே நினைப்பது எப்பாடுபட்டாவது நஷ்டத்தைத் தவிர்கக வேண்டும் என்பதுதான். அது அடுத்து வருகின்றவர்களையும் பாதித்து தொழிலுக்கு மோசம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்பதற்காகத்தான்.. நீங்கள் ஏன் கர்நாடகாவிற்கு ஏற்றுமதியாகும் பல்வேறு தொழில்களையும், அத்தொழில் செய்யும் தொழிலதிபர்களையும் எதுவும் சொல்ல மறுக்கிறீர்கள்.. ஒரே விஷயம்.. அவர்கள் மீது மக்களுக்கும், இளைய சமுதாயத்தினருக்கும் இருக்கும் மயக்கம். இது உங்களது கண்களை உறுத்துகிறது. இதற்கான சரியான பதிலை எனது முந்தைய பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்கிறேன். அது அப்படித்தான். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமா நிலைமை மாறி வருகிறது.
[[[அடுத்து ரசிகர்களின் சமூக அக்கறையை நிரூபித்தால்தான் நடிகர்களின் சமூக அக்கறை வெளிப்படும் என்கிறீர்கள். ரசிகர்கள் படம் பார்க்கிறார்கள், பணம் கொடுக்கிறார்கள், டி.வி பார்க்கிறார்கள் என்பதெல்லாம் அவர்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணிகள் அல்ல. தங்கள் வாழ்வாதாரங்களுக்கு அவர்கள் கடுமையாகப் போராடத்தான் செய்கிறார்கள். ரஜினி போல நாமும் பில்லியனராகிவிடலாம் என்றெல்லாம் அவர்கள் மனப்பால் கொண்டிருக்கவில்லை.]]]
சினிமா ரசிகர்கள் அரசியலை மையமாக வைத்து உழன்று வருபவர்களாக இருந்தால் ரஜினியும், அஜீத்தும் இன்றைக்கு இருக்குமிடம் தெரியாமல் போயிருப்பார்கள். ரசிகர்களோ தங்களுக்கான பொழுதுபோக்கு, களைப்பிடம், கலை ரசனை இவற்றை வைத்துத்தான் தனக்கான சினிமா தலைவனை தேர்ந்தெடுக்கிறான். அது ஒரு காலம் வரையில்தான். அப்புறம் தன் வாழ்க்கையைப் பார்க்கப் போய்விடுவான்.. ஆனால் சினிமா தலைவனின் சொந்த வாழ்க்கை, அரசியல் கருத்துக்களை வைத்து அவன் அந்தத் தலைவனின் சினிமாவை பார்ப்பதில்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சமீபத்தில் சரத்குமார் நடித்து வெளியான ஜக்குபாய் திரைப்படம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு தியேட்டரில்கூட ஹவுஸ்புல் ஆகவில்லை என்பதை தங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்..
[[[அடுத்து நட்சத்திர மோகம் என்பது சினிமா முதலாளிகள், ஊடக முதலாகள், அரசியல்வாதிகள், விளம்பரங்களுக்காக நிறுவன முதலாளிகள் எல்லாரும் சேர்ந்துதான் உருவாக்குகிறார்கள். ஆனந்த விகடன், குமுதத்தை படிப்பவர் விரும்பாவிட்டாலும் அவர் ரஜினி மகளின் நிச்சயதார்த்த செய்தியை படித்துத்தான் ஆகவேண்டும். டி.வியிலும் இதே. இதனால் நட்சத்திர மோகம் என்பது மக்களிடம் திட்டமிட்டே திண்க்கப்படுகிறது. அதற்கு மக்களை மட்டும் குறை சொல்வது இந்த திணிப்புக்கு ஆதரவாகத்தான் போய்முடியும்.]]]
உண்மைதான். இதற்கு யார் காரணம்..? சாதாரண ரசிகனா..? அனைத்து பத்திரிகைகளின் முதலாளிகளும் ஒன்று சேர்ந்து இனிமேல் சினிமா பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டால் என்ன நஷ்டமாகப் போகிறது..? ஆனால் செய்வார்களா..? அப்படிச் செய்தால் சினிமாத் தொழிலும் சாதாரண தொழில்களில் ஒன்று என்றாகி ஓரங்கட்டப்பட்டுவிடும். ஆனால் பத்திரிகைகளுக்குள்ளேயே பணம் சம்பாதிக்க போட்டியும், பொறாமையும்கூடி ஆள் மாத்தி ஆள் சினிமாக்காரர்களுக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள்.. இந்த இடத்தில் முதலாளிகள்தான் மாற வேண்டும்.
[[[மக்களை சமூக அக்கறை உள்ளவர்களாக மாற்ற முடியாது அது அவர்களது பிறப்பினாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்று நீங்கள் சொல்வது உண்மைக்கு மாறானது. ஈராக்கில் அமெரிக்கா குண்டு போடுவதினால்தான் ஈராக் போராகள் தற்கொலையின் மூலம் தமது நாட்டிற்காக போராடுகிறார்கள். இந்த உணர்வை அவர்களது புற சூழ்நிலை தீர்மானிக்கிறது. பிறப்பு அல்ல. அதோ போல ஒரு அமெரிக்கன் தற்கொலைப் போராளியாக மாறி தனது நாட்டிற்காக சாகத் தயாராக மாட்டான். ஏனென்றால் அவன் ஒரு ஆக்கிரமிப்பு நாட்டின் அணியைச் சேர்ந்தவன். இதுவும் புறச்சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது.]]]
இல்லை.. சதாம் உசேன் வீழ்ந்த பிறகு அவரை எதிர்த்தவர்களும் இருக்கத்தானே செய்தார்கள். சதாம் உசேனின் மகன்களை ஒரு ஈராக்கியர்தானே காட்டிக் கொடுத்தார். எதிர்ப்பாளர்களும் அங்கே இருக்கத்தானே செய்தார்கள்.. இப்போதும் அவரவர் வேலையைப் பார்க்கும் பொதுமக்களும் ஈராக்கில் இருக்கத்தானே செய்கிறார்கள். சிலர் மட்டும்தானே உங்களைப் போன்று போராளிகளாக மாறி குண்டு வைக்கிறார்கள். எல்லா நாட்டிலும் இது போன்றவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள் வினவு. இலங்கையில்கூட கொழும்புவாழ் தமிழர்களில் சிலரும், யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலானோரும் போர் என்பதற்கு ஆதரவை அமைதியாக தங்களது வீடுகளில் இருந்துதானே வெளிப்படுத்தினார்கள். நாம் இங்கே அவர்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். அங்கே யாழ்ப்பாணத்திலும் சினிமா தியேட்டரிலும் கூட்டம் கூடிக் கொண்டுதான் உள்ளது.. அத்தனை ஈழத்து மக்களுமா ஈழப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.. சொல்லுங்கள்..?
[[[தண்டகாரண்யாவின் மாவோயிஸ்ட்டுகளின் தலைமையில் பழங்குடி மக்கள் இந்திய அரசை எதிர்த்து போராடுகிறார்கள். இது அவர்களது வாழ்வை பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்ற போராட்ட உணர்ச்சியிலிருந்து வருகிறது. இதுவும் பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதிதல்லை. அந்த வகையில் பெருமான்மை உழைக்கும் மக்கள் போராட்டத்திற்கு தயாராகத்தான் தகுதி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை சென்று அணிதிரட்டுவதற்கு சரியான கட்சி இருக்குமானால் அவர்கள் ஆதரிப்பார்கள்.]]]
இங்கே அப்படியொரு கட்சி இருந்தாலும் போராடு என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. போராடு என்றால் அது எதற்கு.. அதுதான் நான் விரும்புவதெல்லாம் கேட்காமலேயே கிடைக்கிறதே.. பின்பு எதற்கு போராட்டம்..? நான் எதற்கு கட்சியில் சேர வேண்டும். நான் எதற்கு அரசியலைப் பற்றித் தெரி்ந்து கொள்ள வேண்டும்..? இப்படித்தான் தமிழகத்து மக்களின் மனநிலை இருக்கிறது.. எப்படி மாற்றுவது..? அவரவர் அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புகிறார்கள். அடுத்தவர்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு உதவும் பொதுவாழ்க்கையில் ஈடுபட விரும்புவர்கள் தமிழ்நாட்டில் மிக மிகக் குறைவு.. நாமும் நமது பிள்ளைகளை அப்படி வளர்த்திருக்கவில்லை என்பதும் உண்மை.
[[[ஆனால் இத்தகைய மக்களின் போராட்ட வாழ்க்கைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல், ஸ்வீட் ஸ்டாலில் இருந்து கொண்டு பட்டினியைப் பற்றி பேசுவதை தமிழ் சினிமா செய்து வருகிறது. காரணம் அது வெறும் கலையல்ல. பல நூறு கோடி ரூபாய் புரளும் பெரும் தொழில். இந்த தொழிலில் பெரும் நடிகர்களும் முதலாளிகள்தான். இவர்களைப் போய் போராளிகளாகச் சித்தரிப்பதன் மூலம் நாம் மக்களுக்கு பெரும் அநீதியைச் செய்கிறோம். மக்களிடம் இந்த முதலாளி நடிகர்களை அவர்களின் சுயநலத்தை, பொதுநலனில்பால் இருக்கும் அலட்சயத்தை அம்பலப்படுத்துவதன் மூலம்தான் சினிமா மாயையில் கட்டுண்டு இருக்கும் மக்களை நாம் மெல்ல மெல்ல மீட்க முடியும். அதில் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதற்கான நடைமுறையில் இருக்கிறோம். உங்களையும் அழைக்கிறோம்.]]]
அழைப்புக்கு மிக்க நன்றி. ஆனால் என்னால் வெளியில் வர முடியுமா என்றுதான் தெரியவில்லை. சினிமா ஒரு கவர்ச்சி என்பது வெளியில் இருப்பவர்களுக்குத்தான். உள்ளே இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு இது தொழிலகம். இங்கே உழைத்தால் எங்களுக்குச் சோறு. வேறு பிழைப்பு இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. எங்களது முழு கவனமும் இதில் மூழ்கிப் போய்விட்டது. மீள்வது மிகக் கடினம் வினவு.
பலரையும், சிலரையும் தூக்கி வைத்துக் கொண்டாடுவது மீடியாக்கள்தான். ஏனெனில் அவர்களுக்குத்தான் அதனால் லாபம். கண்டுகொள்ளாமல் போனால் அவர்களும் ஒதுங்கித்தான் போவார்கள். இழுத்துப் பிடித்து பார்க்க வைக்கின்ற முதலாளிகளைத் திட்டுங்கள். இங்கே கலைஞரும் அப்படியொரு முதலாளியாக இருந்ததினால்தான் அஜீத்தின் பேச்சை நான் முழு மனதோடு வரவேற்கிறேன்..!
கலைஞர் டிவியின் விளம்பர வருவாய்க்காக யார் யாரெல்லாம் நிகழ்ச்சிக்கு வந்தால் தங்களுக்கு பணம் கூடுதலாகக் கிடைக்கும் என்று அந்தத் தொலைக்காட்சி பட்டியல் போட்டுக் கொடுத்ததால்தான் மிரட்டி அழைத்தார்கள். இதில் எங்கே பாராட்டும் நோக்கம் இருக்கிறது..? இதே வேளையில் மைக் மோகனை இதுபோல் அழைத்திருக்கலாமே..? ஏன் கூப்பிடவில்லை. அவருக்கு இப்போது மார்க்கெட் இல்லை. அவ்வளவுதான்.. எல்லாம் பணம்.. பணம்.. பணம்.. அவ்வளவுதான்.. பாராட்டெல்லாம் இல்லவே இல்லை.
என்னால் முடிந்ததை, எனக்குத் தோன்றியதை உண்மையாக எழுதிவிட்டேன்.
நன்றி வினவு..!
உண்மையண்ணே, கலைஞரை கிழிச்சிட்டுதானே தலை’யையும் கிழிச்சிருக்குறோம். இரண்டில் ஒரு தரப்பை மட்டும் விமரிசித்து விட்டு மற்றொரு தரப்பை உயர்த்துவது இறுதியில் இரண்டு தரப்புக்கும்மே உதவியாகத்தான் முடியும். உங்கள் நிலையையும் புரிந்து கொள்கிறோம். அதைப்பத்தி பேசலாம்ணு போன் போட்டால் ஸ்விட்ச் ஆப் ன்னு வருது. ஆன் பண்ணும்போது ஒரு மிஸ்டு கோல் போடுங்க. பேசுவோம். மத்தபடி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து விவாதிப்போம்
உண்மதமிழன் நீங்கள் எழுதிய பின்னூட்டத்தை படித்தால் சுத்தி சுத்தி என்னதான் சொல்ல வர்றீங்கனு பார்த்தால் கருத்து சுதந்திரம்! ரொம்பநாள் கழிச்சு கருத்து சுதந்திரத்த காப்பாத்த ஆர்விக்கு அப்புறம் உண்மதமிழன் வந்திருக்கீங்க.
//என்னைவிட உங்களுக்கே நன்கு தெரியும். ஒவ்வொரு குடும்பங்களிலும் குழந்தைகளுக்கும், பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கும் எதைப் பற்றி மட்டும் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று..! நம் வளர்ப்பே அப்படியிருக்கும்போது வளர்ந்த பின்பு இதில் ஆர்வம் கொண்டு மனமுவந்து ஓடோடி வந்து கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
சரி வளர்ப்பே அப்டி இருக்குதே இதுதான் நம்