முகப்புவிலைவாசி உலகத்தரமானது! பட்டினி நிரந்தரமானது!!
Array

விலைவாசி உலகத்தரமானது! பட்டினி நிரந்தரமானது!!

-


vote-012அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்குச் சந்தைக்கு வரும் ஏழை-எளிய மக்கள் விலைவாசியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தும் கொதித்துப் போயும் கிடக்கிறார்கள். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, பால், காய்கறிகள் முதலிய இன்றியமையாப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக எகிறிக் கொண்டே போகிறது. சந்தையில் கிலோ 13 ரூபாயாக இருந்த அரிசி 28 ரூபாயாக, அதாவது இரண்டு மடங்குக்கு மேலாகி விட்டது. 8 ரூபாயாக இருந்த கோதுமை 15 ரூபாயாகி விட்டது. 17 ரூபாயாக இருந்த சர்க்கரை 47 ரூபாயாகிக் கசக்கிறது.

கடந்த 11 ஆண்டுகளிலேயே மிக அதிக அளவாக 2009 டிசம்பர் கணக்குப்படி உணவுப் பொருட்களின் பணவீக்கம் 19.75 சதவீதத்தை எட்டிய பிறகு, எதிர்க்கட்சிகளும் செய்தி ஊடகங்களும் புலம்பத் தொடங்கின. நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் நடத்தும் வழக்கமான பம்மாத்துக்களால் மக்கள் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.

நாட்டின் பொருளாதாரத்தை நாலுகால் பாச்சலில் முன்னேற்ற விரும்பி ஆட்சியாளர்கள் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் ஏதோ எதிர்பாராத காரணங்களால் தற்செயலாகவோ, தானாகவோ பணவீக்கம், விலைவாசி உயர்வு என்ற நெருக்கடிக்குள் பொருளாதாரத்தைச் சிக்க வைத்து விட்டன என்பதாகச் செய்தி ஊடகங்கள் புலம்புகின்றன. அதேசமயம், மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் கும்பலின் தலைமையிலான பொருளாதாரப் புலிகள் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையைச் சரி செய்து விடுவார்கள் என்று செயற்கையான நம்பிக்கையூட்டப்படுகின்றன.

தற்போது நிலவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பணவீக்கம் – விலைவாசி உயர்வு என்ற நெருக்கடி எதிர்பாராத காரணங்களால் தானாகவோ, தற்செயலாகவோ ஏற்பட்டுவிட்ட பிரச்சினை அல்ல. பொருட்களின் விலையைக் கேட்டவுடன் தெருமுனையில் உள்ள சில்லரை விற்பனையாளர் வேண்டுமென்றே திடீரென்று அதிக விலை வைத்து விற்கிறார் என்று பாமர மக்கள் கருதுவதைப் போன்று இது நடக்கவில்லை. உண்மையில் விலைவாசி உயர்வு என்பது தமது ஆட்சியையோ, தாம் கட்டியமைக்கத் திட்டமிட்டுள்ள பொருளாதாரத்தையோ, தாம் அக்கறைப்படும் மக்கள் பிரிவினரின் நலத்தையோ பாதிக்கும் ஒரு பிரச்சினையாகக் கருதி ஆட்சியாளர்கள் அஞ்சிவிடவில்லை. குட்டையில் நீந்திக் களிக்கும் எருமை மாடுகளை, சாக்கடையில் படுத்துப் புரளும் பன்றிகளைப் போலத்தான் மன்மோகன் – மாண்டேக் சிங் கும்பலுக்கு விலைவாசிஉயர்வு என்பது ஒரு பிரச்சினையே இல்லை. விலைவாசி உயர்வு என்பது தமது எஜமானர்களுக்கும் தமக்கும் ஆதாயம் தரத்தக்கதாகவே இவர்கள் கருதுகிறார்கள்.

எனவேதான், உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் பரிதவிக்கையில் கூட 30 இலட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கு மன்மோகன் சிங் அரசு அனுமதித்திருக்கிறது. இந்த ஏற்றுமதிக்கான சலுகையாக பல கோடி ரூபாய்களை மத்திய அரசு பெருமுதலாளிகளுக்கு மானியமாக வழங்கியிருக்கிறது. அதேசமயம், விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காக என்று சொல்லிக் கொண்டு, அதைவிடக் கூடுதலான விலையில் சர்க்கரை இறக்குமதிக்கும் ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு தனிநபரும் 50,000 டன் வரை உணவு தானியத்தை இருப்பு வைத்துக் கொள்ள அனுமதி அளித்திருப்பதன் மூலம், உணவுப் பொருட்களைப் பதுக்கி வைப்பதற்கும், சந்தையில் விலையை ஏற்றுவதற்கும் சட்டப்படி அனுமதி அளித்துள்ளது. அம்பானி, பிர்லா போன்ற முதலாளிகள் சில்லரை விற்பனையில் நுழைந்த பிறகு இந்த சலுகையின் மூலம் கொள்ளை இலாபமடிப்பதற்குச் சட்டபூர்வ அனுமதி அளித்துள்ளது.

அம்பானி, பிர்லா போன்ற தரகு முதலாளிகள் பெருமளவு சில்லரை வணிகத்தில் நுழைந்து ஏகபோக ஆதிக்கத்தை நிறுவத் தொடங்கிய பிறகு, உணவு தானியங்கள், பருப்பு வகைகளில் மட்டுமல்லாது, சமையல் எண்ணெய், சர்க்கரை, காய்கறி-பழம் ஆகியவற்றிலும் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்வது, புறநகர்ப் பகுதிகளில் குளிர்பதன வசதிகளுடன் பிரம்மாண்டக் கிடங்குகளில் சேமித்து வைத்து ஏகபோகமாக்கிக் கொள்ளையடிக்கின்றனர்.

இதைத் தடுக்காத அரசு, விவசாய உற்பத்தியாளர்கள் பல ஆண்டுகளாகக் கோரியும் உணவுப் பொருட்கள் சேமிப்புக் கிடங்குகளை அமைத்துக் கொடுக்க மறுத்தே வருகிறது. ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் 70,000 டன்கள் உணவு தானியங்கள் வீணாகிப் போகின்றன. சென்னை கோயம்பேடு மையக் காய்கறி-பழச்சந்தையில் மட்டும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன்கள் அழுகி நாறிக் குப்பையில் கொட்டப்படுகின்றன. சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஏகபோக தரகு முதலாளிகள் மட்டுமல்ல, விவசாய விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டு வந்து குவிக்கும் சரக்கு உந்து, (லாரி) ஏகபோக முதலாளிகள், தரகு பெரு வணிகர்கள் ஆகியோரின் பகற்கொள்ளைக்குப் பிறகு, எல்லாச் சுமையும் நுகர்வோர்களாகிய ஏழை-எளிய மக்கள் மீதுதான் சுமத்தப்படுகிறது.

“இனி அரசு ஆதரவுகள், மானியங்கள், நியாயவிலை விற்பனைகள் என்று எதுவும் இருக்கக் கூடாது; சந்தைகளே எல்லாவற்றையும் தீர்மானிக்க வேண்டும், சந்தைக்கான தொழில் போட்டி, உற்பத்தி, விநியோகம்தான் ஆட்சி நடத்தவேண்டும்; இதுதான் இந்த நாட்டின் தொழிலையும், உற்பத்தி-விற்பனையையும் உலகத் தரத்துக்கு உயர்த்துவதற்கான பாதை” என்று மன்மோகன் – மாண்டேக் சிங் ஆகிய ஆளும் கும்பல் மட்டுமல்ல, எல்லா எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக நம்புகின்றன. மொத்தத்தில், அமெரிக்காவின் வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் முழு மூச்சில் புகுந்துவிட்டால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என்பதுதான் இவர்களின் எண்ணம்!

மத்தியிலோ, மாநிலங்களிலோ எங்கு, எந்தக் கட்சி  ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் கொள்கையைத்தான் கடைப்பிடிக்கின்றன. குறிப்பாக, காங்கிரசு மற்றும் பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் இந்தக் கொள்கையை உறுதியுடன், இன்னும் சொல்வதானால் “வெறி”யுடன் அமல்படுத்துகிறார்கள். இந்தப் பாதையிலிருந்து தாங்கள் விலகிப் போவிடமாட்டோம் என்று இவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதியளிக்கிறார்கள். அவர்களது சிந்தனை, செயல், அறிவிப்பு எல்லாவற்றிலும் இதுதான் வெளிப்படுகிறது.

இப்படிச் செய்வதற்காக ஆட்சியாளர்கள் ஒருபோதும் கூச்சப்படுவதோ, தயங்குவதோ கிடையாது. தங்களுக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வருபவர்கள் என்ன எண்ணுவார்களோ என்று அஞ்சுவதும் கிடையாது. ஏனென்றால், ஆட்சியாளர்கள் எப்போதும் எண்ணுவதும் பேசுவதும் உலகச் சந்தையில் போட்டி, உலகத் தரத்துக்கு தொழில் – உற்பத்தி! உலகத்தரம், உலகச் சந்தையில் போட்டி எனும்போது, உலகிலுள்ள பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க, தென்அமெரிக்க ஏழை நாடுகளை மனதில் கொள்வதில்லை.

மிகமிக முன்னேறிய, பணக்கார நாடுகளாகச் சொல்லப்படும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைத்தான்! இதன் பொருள் என்ன? தொழிலும் உற்பத்தியிலும் மட்டுமல்ல, சந்தையிலும் நுகர்விலும் கூட உலகத் தரத்தை எட்டவேண்டும் என்பதுதான்! இதெல்லாம் உலகத் தரம் என்கிறபோது, சந்தையிலும் நுகர்விலும் மட்டும் இந்தியத் தரம் என்பதை ஆட்சியாளர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இந்த நாட்டின் மக்கள் தொகை 100 கோடி என்றால், அவர்களில் 10 கோடிப் பேரையாவது உலகத் தரம், உலகச் சந்தை பொருட்களைப் பாவிப்பதற்கான நுகர்வாளர்களாக்கு என்பது மட்டும்தான் ஆட்சியாளர்களின் குறிக்கோளாக உள்ளது.

எனவேதான், கடந்த சில ஆண்டுகளில் மட்டும், 10 கோடி “இந்திய மக்களின்” வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, அவர்களின் வாங்கும் சக்தியைப் பன்மடங்கு அதிகரிக்கும் நடவடிக்கையில் இந்திய ஆட்சியாளர்கள் முக்கியக் கவனம் செலுத்தினர். ஏற்கெனவே கூட்டுப் பங்கு நிறுவனங்களின் பணியாளர்களின் ஊதியம் சராசரி இந்தியரின் வருமானத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகம். அரசு மற்றும் அரசுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விலைவாசி-வீட்டு வாடகை போன்ற சந்தை விலையேற்றத்துக்கு ஈடாக அவ்வப்போது கிரமமாக ஊதியம் உயர்த்தப்பட்டு வந்தது. இது போதாதென்று, இப்போது அரசு மற்றும் அரசுத் துறை தொழில்-வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்களது ஊதியம் பன்மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது.

ஆகக் கூட்டிப்பாருங்கள். கூட்டுப்பங்கு நிறுவன அதிகாரிகள், பணியாளர்கள்; அரசு மற்றும் அரசுத்துறை தொழில்-வர்த்தக நிறுவன அதிகாரிகள், “ஊழியர்கள்”; ஏற்கெனவே கொழுத்துப் போயுள்ள தரகு முதலாளிகள் – தரகு வர்த்தகர்கள், கிராமப்புற முதலாளிய விவசாய உற்பத்தியாளர்கள், மற்றும் ஏற்றுமதி-இறக்குமதிக்கான உற்பத்தி வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள முதலாளிகள், அவர்களின் பணியாளர்கள்; பல்வேறு சேவைத்துறை முதலாளிகள், பணியாளர்கள்; தொழில்முறை அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கிரிமினல் குற்றக் கும்பல்கள் இவர்கள் அனைவருமாக, இவர்களின் குடும்பத்தோடு ஒரு 10 கோடிப் பேராவது உலகத்தர வாழ்க்கையும், வாங்கும் வசதியும் படைத்தவர்களாக இந்த நாட்டில் இருக்கிறார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு இந்தப் பிரிவினரைப் பாதிப்பதே இல்லை. அம்பானி, பிர்லாக்களின் “சூப்பர் மார்க்கெட்”களில் என்ன விலை வைத்தாலும், உலகத் தரத்திற்கு டப்பாக்களில், பெட்டிகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனப் பொருட்களையே பாவிக்கிறார்கள்.

இந்த 10 கோடி இந்திய மேட்டுக்குடியினருக்கான சந்தையைப் பற்றி மட்டுமே மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் கும்பல் அக்கறைப்படுகிறது. எனவேதான், அது மிகவும் திமிரோடு பேசுகிறது. விலைவாசி உயர்வு என்பது “தவிர்க்கமுடியாதது”; “நிச்சயமான ஒன்று” என்று நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசுத் தலைவர் ஆற்றிய உரையில் பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தியிருக்கிறது. இந்தியச் சந்தையை உலகச் சந்தையுடன் இணைப்பது, சந்தையே அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து நுகர்பொருட்களின் விலையைத் தீர்மானிப்பது என்றான பிறகு, விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது, எதிர்பார்க்க வேண்டியதுதான்.

10 கோடி இந்திய மேட்டுக் குடியினரின் வருவாயைப் பெருக்கி, வாங்கும் சக்தியை உயர்த்திய மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் கும்பல் மீதி விவசாயிகள், தனியார்துறைத் தொழிலாளர்கள், அமைப்புசாரா உழைப்பாளர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினரை உள்ளடக்கிய 90 கோடி இந்திய மக்களுக்கு என்ன செய்தது? இவர்களின் மலிவான உழைப்புச் சக்தியை மட்டுமல்ல, இம்மக்களடங்கிய பரந்து விரிந்த சந்தையிலும் கொள்ளையிடுவதற்கான சகல வசதிகளையும் ஏகாதிபத்திய ஏகபோக பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்திய ஏகபோகத் தரகு முதலாளிகளுக்கும் செய்து கொடுத்துள்ளது.

2008 ஆம் ஆண்டு 30 கோடி ரூபாய் இலாபம் ஈட்டிய 33 சர்க்கரை உற்பத்தி முதலாளிகள் 2009-ஆம் ஆண்டு மட்டும் 900 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியிருக்கின்றனர்; அவர்களின் இலாபம் 2,900 சதவீதம்அதிகரித்திருக்கிறது. 2007 மற்றும் 2008 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நமது நாட்டிலிருந்து சர்க்கரையை ஏற்றுமதி செய்யச் சொல்லி டன்னுக்கு 2350 ரூபாய் மத்திய மற்றும் மராட்டிய அரசுகள் மானியமாக வழங்கின. 2008 டிசம்பரில் ஏற்றுமதிக்குத் தடைவிதித்த மத்திய அரசு, அதன்பிறகு சர்க்கரை பற்றாக்குறை ஏற்பட்டபோது சர்க்கரை இறக்குமதி செய்யச் சொல்லி பல ஆயிரம் கோடி ரூபாய் இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி தள்ளுபடி செய்தது. ஆக, இரண்டு வகையிலும் மத்திய வேளாண் மற்றும் உணவு அமைச்சர் சரத்பவார் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்க்கரை ஆலை கும்பல் ஆதாயம் அடைந்து கொள்ளையடித்தது.

மிகை உற்பத்தியின் போது அரசே கிடங்குகளில் சேமித்து வைப்பது, பற்றாக்குறையின் போது சேமிப்பை விடுவித்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்ற “பொது நலப் பொறுப்பு” எதையும் அரசு மேற்கொள்ள வேண்டியதில்லை; எல்லாம் தனியார் கவனித்துக் கொள்வார்கள் என்பதுதான் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை. இந்தக் கொள்கை வருவதற்கு முன்பிருந்தே தனியார்-பெரு வர்த்தக முதலாளிகள் மிகை உற்பத்தியின்போது பதுக்கி வைப்பதையும், பற்றாக்குறையின் போது பன்மடங்கு விலைவைத்து விற்பதையும் செய்து வந்தார்கள். முன்பு சட்டவிரோதமாகக் கருதப்பட்ட இந்த நடவடிக்கைகளை இப்பொழுது அரசே துணை செய்து ஊக்குவிக்கிறது.

சந்தையில் “நிலவும்” போட்டியே விலைவாசியைக் கட்டுப்படுத்திவிடும் என்ற முதலாளிய பொருளாதாரவாதிகளின் வாதத்தை இத்தகைய நடவடிக்கைகளும் ஏகபோக நிலையும் பொப்பித்து விடுகின்றன. இவ்வளவு விலைவாசி உயர்வுக்கு மத்தியில் கூட பெட்ரோலிய பொருட்களின் விலையை அரசு அவ்வப்போது உயர்த்தியதோடு, இனி சந்தைப் பெருமுதலாளிகளே தீர்மானித்துக் கொள்வதற்கு விட்டு விடுவது; அரசு கட்டுப்பாட்டில் இருந்து உரவிலையையும் விற்பனையாளர்களே தீர்மானிப்பது என்றும் முடிவு செய்து விட்டது. அதற்கு முன்பாக அரசே விலையையும் உயர்த்திவிட்டது. அரசு நிறுவனங்கள் உட்பட ஒருசில நிறுவனங்கள் ஏகபோக நிலையில் உள்ள இந்தத் தொழில்களில் வரைமுறையற்ற கொள்ளைக்குத்தான் இது வழிவகுக்கும்.

உலக சராசரிக்கும் குறைவாக இந்தியாவில் விளைபொருட்கள் கிடைக்கும் நிலையை மாற்றி, உலகச் சந்தையின் நிலைக்கு விலைவாசியை ஏற்றி விடுவது என்பது தான் ஆட்சியாளர்களின் நோக்கமாக உள்ளது. கடும் எதிர்ப்பின்றி அதை எப்படிச் சாதிப்பது என்பதற்குத்தான் பல்வேறு நாடகமாடுகிறார்கள். இதுதவிர, தொழில் துறையும், சேவைத்துறையும் மட்டுமல்ல, பங்குச் சந்தையிலும் நிதி ஆதிக்கத்துக்கு வசதி செய்து கொடுத்துள்ள இந்திய அரசு, சமீப ஆண்டுகளில் விவசாய விளைபொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களிலும் ஊகவணிகம், முன்பேர வணிகம், ஆன்-லைன் வணிகம் ஆகியவற்றிலும் சூதாட்டம் மற்றும் நிதி ஆதிக்கம் செலுத்துவதற்கும் எல்லாவசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.

ஆகவே, விலைவாசி உயர்வு என்பது பல்வேறு வகையிலும் அரசே ஊக்குவித்து வரும் திட்டமிட்ட சமூகவிரோதச் செயலாகும். ஆனால், அதுபற்றித் தாமும் கவலைப்படுவதாக அனைத்துக் கட்சி ஆட்சியாளர்களும் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை!

–          புதிய ஜனநாயகம், மார்ச் – 2010

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. //இந்தியாவை எப்பவோ முதலாளிகள் கிட்ட அடமானம் வச்சிட்டாங்க!// இல்ல வால்பையன் வித்துட்டாங்க இதற்கு சமீப உதராணம் காட்டுவேட்டை

 2. சரிதான்.. இங்கே விலைவாசிப் பிரச்சனை விவசாயிகள் தற்கொலை போன்ற விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ”அங்க” மட்டும்.(அதான் ரசிய சீன வியட்நாம் வட கொரியாவத்தான் சொல்றேன்) என்ன வாழுதாம்…. சோவியத்தில கம்யூனிச ஆட்சியின் கீழ் ரொட்டிக்கு க்யூ நின்றதையும் சீனத்தில் மாணவர் போராட்டம் பீரங்கி கொண்டு நசுக்கப் பட்டதையும் நினைக்க வேண்டியிருக்கிறது. இதிலியும் பிரச்சனை அதிலையும் பிரச்சனை… அத ஒத்துக் கொள்வதில் உங்களுக்குப் பிரச்சனை.. அதெல்லாம் இல்ல இங்க மட்டும்தர்ன் பிரச்சன.. “”அங்க”” பிரச்சனையெல்லாம் ஏகாதிபத்யம் சிஅய் ஏ சதி இத்தியாதி இத்தியாதின்னு ஆரம்பிச்சுடுவிங்க… நா சொல்றேன்.. இங்க நல்லா எல்லாரையும் திட்டவாவது முடியுதே….
  நாகராஜ்

  • நாகராஜ், நீங்க வாழறது இந்தியாவுலயா இல்ல கொரியாவுலயா இல்ல தியானமென் சதுக்கத்துலயா, ஏன் இப்படி இந்தியாவுல பட்டினியப்பத்தி பேசுனா வைக்கோ மாதிரி சம்பந்தமே இல்லாம என்னன்னவோ பேசுறீங்க 
   @@@இதிலியும் பிரச்சன, அதிலையும் பிரச்சன@@@  என்னா சொல்ல வற்றீங்க. உங்களுக்கு இந்த பிரச்சனையில ஒரு கருத்துமே இல்லயா???
   மக்கள் பட்டியில சாவறதுல உங்களுக்கு உடன்பாடா? அதப்பத்தி பேசுங்க

   • //இந்தியாாவுல பட்டினியப்பத்தி பேசுனா///
    நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியும் ஆனா புரியாத மாதிரி நடிக்கிறது வைக்கோத்தனமா அல்ல வேறத்தனமான்னு இத படிக்கிற மக்கள் முடிவு பண்ணுவார்கள்.. உமக்கும் தெரியும்… வெளிப்படையா சொல்றேன்… நீங்க ஆட்சிக்கு வந்தா (?) (உங்க சிந்தாந்தம்) இத விட மோசமா இந்தியா இருக்குமோன்னு ரசியா சீன சம்பவங்கள் “”நடைமுறை உரைகல்லா “”திகழுது.. அதான் நான் சொல்ல வர்றது…

    • நாகராஜ், @@@ நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியும் ஆனா புரியாத மாதிரி நடிக்கிறது @@@ நீங்க தான் பாஸ் நழுவுறீங்க, இப்ப நடக்குறத பத்தி பேசுனா நீங்க எதுக்கு ஜோசியம் சொல்றீங்க, இந்த பிரச்சனைய பத்தி பேசாம எதுக்கு நழுவுறீங்க? எதுக்கு சம்பந்தமே இல்லாம 30, 40, 50, 60 வருசத்துக்கு முன்னால போறீங்க???

     இல்லேன்னா அட்லீஸ்ட் இன்னிக்கு இந்தியாவுல் நடக்குற பட்டினி சாவுக்கும் சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்கும்,வியட்நாமுக்கும்,  கொரியாவுக்கும் என்னா சம்பந்தம் அப்பிடின்னாவது சொல்லுங்க????

 3. ஜனத்தொகை பெருக்கத்திற்க்கு ஈடாக உணவு உற்பத்தி பெருகவில்லை. அதற்கு பல காரணிகள். அரசின் வெட்டிசெலவுகள் மிக அதிகம் தான். வருமானம் பத்தாதால், பற்றாக்குறை பட்ஜெட்டுகள். அவை பணவீக்கத்தை மிக அதிகப்படுத்தும். எதில் பற்றாகுறை உள்ளதோ அந்த பொருட்கள் / பண்டங்கள் மிக அதிகம் விலை ஏறும். உணவு பொருட்க்கள் (முக்கியமாக பருப்பு மற்றும் எண்ணை வகைகள்) விலை ஏற்றம் மிக மிக அதிகம். ஆனால் தாராளமயமாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், இதைவிட மோசமான நிலை இருந்திருக்கும்.

  உணவு விலை ஏற்றம் பற்றி ஒரு நல்ல சுட்டி :

  Soya dal, a great solution to the food crisis
  http://www.swaminomics.org/articles/20100117.htm

  ஏழ்மை பற்றி ஒரு சமீபத்திய கட்டுரை. (மிகவும் மதிக்கப்படும் Economic and Political Weekly என்னும் இடதுசாரி பொருளாதார பத்திர்க்கையில் இருந்து இது) : (இது ’தரகு’ முதலாளிகள் பற்றிய உங்கள் ’புலம்பல்களை’ மறுக்கிறது) :

  Shining for the poor too ?
  http://epw.in/epw/uploads/articles/14445.pdf

  மேலும் சில முக்கிய சுட்டிகள் :

  Delayed economic reform killed 14.5 million children
  http://www.swaminomics.org/articles/20091115.htm

  Understanding the Nature and Causes of Food Inflation
  http://epw.in/epw/uploads/articles/14482.pdf

  • என்ன அதியமான் சார் திடீர்னு உள்ள வந்து காமெடி பண்றாரு. ஜனதொகைக்கு ஏத்த மாதிரி உற்பத்தி வளர்லன்னு. உற்பத்தி வளர்லன்னு இல்ல.வளரக்கூடாது என்க்ரதுக்காக. வால் மர்ட்ஸ் வரணும்கரதுக்காக. இத வெளிப்படையா பார்த்தாலே தெரியும். அவங்க சொல்றதெல்லாம் ஒன்னுதான் நாங்க செயிறது தான் நல்லது. அப்பிடியே நம்பு. யாராச்சு எதாச்சு கேட்டா ரஷ்யா சீனா மாதிரியா மோசமா போச்சு என்று எதிர் கேள்வி கேட்டு தப்பிச்சிக்கோ

  • //மிகவும் மதிக்கப்படும் Economic and Political Weekly என்னும் இடதுசாரி பொருளாதார பத்திர்க்கையில் இருந்து இது//
   I am not a left lean magazine. I am a normal capitalist magazine.

  • //அரசின் வெட்டிசெலவுகள் மிக அதிகம் தான். வருமானம் பத்தாதால், பற்றாக்குறை பட்ஜெட்டுகள். அவை பணவீக்கத்தை மிக அதிகப்படுத்தும். //

   அரசின் பற்றக்குறை பட்ஜெட்டின் ஊற்று மூலம் எது அதியமான்?

   • அசுரன்,
    Deficit financing என்பது கீயின்ஸ் என்ற பொருளாதார நிபுணரின் தியரி. அதை ஓட்டி
    சுமார் 55 ஆண்டுகளாக நம் பட்ஜெட்டில் பற்றாகுறைகள். (ஆனால் கீயின்ஸ் சொன்ன விகிதம் மிக மிக குறைவு, நம் 10 % of GDP deficit financing (incl all state gov and off book deficts)அய் அவர் சொல்லவில்லை.) இதை பற்றி 1960இல் மூதறிஞர் ராஜாஜி எழுதிய
    முக்கிய கட்டுரை :
    http://athiyaman.blogspot.com/2007/08/deficit-financing-rajaji-in-swarajya.html
    அவர் பேச்சை யார் கேட்டா. இன்றும் இது தொடர்கிறது. பலன்களை அனுபவிக்கிறோம்.
    இதில் ஏகாதிபத்திய சதி எதுவுமில்லை. முட்டாளதனத்திற்க்கு நாம் தான் பொறுப்பு.
    ஜெர்மனி இரண்டு உலக போர்களின் முடிவிலும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள், massive deficits and resulting hyper inflation அய் அனுவதித்து கொடுமையான துனபமடைந்தவர்கள். கடுமையான வரலாற்று பாடம் கற்று கொண்டனர். கடந்த 60 ஆண்டுகளாக மிக மிக குறைந்த பற்றாக்குறை பட்ஜெட்டுகள், மற்றும் பணவீக்கம். இதுவே அவர்களின் பாலபாடம். அய்ரோப்பியாவில் இன்றும் பொருளாதாரத்தில் பலம் பொருந்திய நாடு ஜெர்மனிதான்.

 4. //தாராளமயமாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், இதைவிட மோசமான நிலை இருந்திருக்கும்.//

  இங்கே உற்பத்தியாவதை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, மீண்டும் அதிக விலைக்கு இறக்குமதி செய்வது தான் தாரளமயமாக்குதலா!?

  அதான் சர்கரை உதாரணத்தை பதிவுலயே சொல்லியிருக்காரே!

  • வால் பையன்,

   தாரளமயமாகல் என்று நான் சொன்னது, தொழில் துறையில் நடந்த தாரளமயமாக்கல் பற்றி. (பார்க்கவும் : தாரளமயமாக்கல் என்றால் என்ன ? http://nellikkani.blogspot.com/2008/01/blog-post_9749.html ). விவசாயத் துறையில் அப்படி ஒன்றும் இதுவரை நடக்கவில்லை. ஓ.கே.

   சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சர்கரை ஆலைகள் அனைத்தும் மிக நலிவடைந்த நிலையில் இருந்தன. அரசு துறை கூட்டுறவு ஆலைகள் அனைத்தும் ஏறக்குறைய திவால். சர்கரை உற்பத்தில் உலகெங்கும் மிக மிக அதிகம். இந்தியாவில் பல கோடி டன்கள் இருப்பு. விவசாயிகளுக்கு கரும்புக்கு விலை கிடைக்கவில்லை. விற்றபின் பணமும் உடனே அளிக்க முடியாத நிலை. ஒரு காலத்தில் சிறப்பாக செயல்பட்ட
   சக்தி நிறுவனமே தள்ளாடியது. பெரும் கடன் சுமை, திவால் நிலை. அன்று சர்கரை விலை 10 ரூபாய் அளவில் பல வருடங்கள் இருந்தது. விவசாயிகள் பலரும் கரும்பு உற்பத்தியை குறைத்தனர். கூலிக்கும் ஆள் கிடைக்காது நிலை. இந்த 2 வருட காலமாக தான் சர்கரை ஆலைகளுக்கு எதோ நல்ல காலம். பிழைத்து எழ வாய்பு. அனைத்து சர்கரை ஆலைகளின் கடந்த 20 ஆண்டுகால பேலன்ஸ் ஷீட்டுகளை பாருங்கள். லாப / நஸ்டம் எவ்வளவு என்று புரியும்.

   இது ஒரு cyclic industry. சில ஆண்டுகள் நல்ல வருமானம், பிறகு சில ஆண்டுகள் கடும் சிரமம். மில்களை காப்பாற்ற ஏற்றுமதிக்கு அனுமதிக்க கோரிக்கை. அப்பதான் விவசாய்களுக்கும் கரும்பு விலை ஓரளவாவுது கிடைக்கும். ஏற்றுமதி ஒரு அளவிற்க்கு மேல் போனால், உள்நாட்டில் விலை ஏறி மக்களுக்கு கஸ்டம். இரண்டையும் balance செய்வது மிகவும் கடினமான காரியம். மிக முக்கியமாக நேர்மையாக செய்ய வேண்டிய விசியம். இரு தரப்பிலிருந்தும் pressure points and lobbies உருவாகும்.

   பருத்தியில் இதை விட imabalances அதிகம். ஏற்றுமதி தடுக்கப்பட்டால், விவசாயிகளுக்கு விலை கிடைக்காது. ஏற்றுமதி அதிகம் அனுமதிக்கப்பட்டால், இந்திய மில்களில் நூல் விலை ஏறி, ஜவுளி துறை பாதிக்கும். Again pressure points and lobbies from both sides. Balance செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு. ஊழலுக்கு வழி. உலகெங்கும் விவசாய துறையில் இதே கதைதான். மான்யம் அளிக்க நிதி வேண்டும். மான்யம் ஒழுங்காக, நேர்மையாக அளிக்கபட system வேண்டும். மேலும் பல சிக்கல்கள்.

   இதைவிட முக்கியமாக பருவ மழையை நம்பிய விவசாயம் இங்கு. Erratic monsoons play havoc.

   சரி, இருக்கட்டும். நீங்க ஒரு online commodity trading operator and consultant. (தோழர்கள் இதையும் கடுமையாக குறை சொல்கிறார்கள்). Exim trade, hedging of risks, forward trading,
   Demand and supply which determines prices, பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் தாரளமயமாக்கலை இங்கு ‘எதிர்க்கிறீர்கள்’ !! தாரளமயமாக்கல் இல்லையென்றால், 20 வருடங்களுக்கு முன் இருந்த கட்டுபாடுகள் இன்றும் தொடர்ந்திருந்தால், உங்களுக்கு இந்த வாய்ப்பு உருவாகியிருக்காது.

   நான் அளித்த சுட்டிகளை முழுமையாக படிக்கவும். முக்கியமாக EPWவில் இருந்த எடுக்கப்பட்ட அந்த கடைசி சுட்டி..

   • //நீங்க ஒரு online commodity trading operator and consultant. //

    நகைக்கடை வைத்திருக்கும் நிறுவனத்திற்கு தேவைக்கு எப்பொழுது வாங்க, உபரியை விற்க ஆலோசனை வழங்குவதோடு தற்பொழுது நிறுத்தி கொள்கிறேன்!

    என்னுடய ”நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்” பதிவிலேயே நான் ட்ரேடிங் செய்வதை நிறுத்திவிட்டேன் என்று எழுதியிருந்தேன்!,

    புள்ளகுட்டிங்க இருக்கு, பொழுப்பு நடத்தனும், அதே நேரம் நம்மால யாரும் நஷ்டமடையக்கூடாது என்பது முதல் எண்ணம்!

    ******

    அதே நேரம், தாரளமயமாக்கல் கொள்கையால் தான் பொருளாதாரம் சீரடந்தது என்னும் ரிக்கார்டை என்னால் ஏற்று கொள்ளமுடியாது!
    சர்க்கரை ஆலை நஷ்டக்கணக்குக்கு வேறு காரனங்கள் நிச்சயம் இருக்கும்! மேலும் தற்போது தேவை அதிகம் இருக்கும் போது ஏற்றுமதி செய்து விட்டு , அன்று நஷ்டமடைந்தேன் என்று சப்பை கட்டு கட்டுவது நியாயமல்ல!

    பிச்சை போடுவது தப்பில்லை, முதலில் வீட்டில் எல்லாரும் சாப்பிட்டாச்சான்னு பார்க்கனும்!
    நாங்கள் முதலாளிகளுக்கு பிச்சை போடுபவர்களாக்கும்!(என் முதலாளி மன்னிக்க)

    • /////அதே நேரம், தாரளமயமாக்கல் கொள்கையால் தான் பொருளாதாரம் சீரடந்தது என்னும் ரிக்கார்டை என்னால் ஏற்று கொள்ளமுடியாது!////

     தகுந்த ஆதாரங்களோடு இதை நிறுபியுங்களேன்.

    • வால்பையன்,

     முடிந்தால் என்னை எனது மின் மடலில் தொடர்பு கொள்ளுங்களேன் – kaargi.pages@gmail.com.

     அதியமான்,

     நீங்கள் ஆறாண்டுகளுக்கு முன்னால் சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து கூட்டுறவு ஆலைகள் அனைத்தும் ஏறக்குறைய திவால் என்கிறீர்கள் –

     நான் ஒரு பார்முலா தருகிறேன். அந்த பார்முலாவை அனேகமாக சர்க்கரை என்றில்லாமல் ஏறக்குறைய எல்லாவற்றுக்கும் பொருத்திவிடலாம் –

     95லிருந்து முதல் ஒரு ஐந்தாண்டுகளுக்கு சகல துறைகளும் ஒரு பாரிய அடியை வாங்கியிருக்கும்,

     பஞ்சாலை, சர்க்கரை ஆலை, டை காஸ்ட்டிங், வாகன உதிரிபாக உற்பத்தி, தொழிற் பேட்டைகளில் நோவொர்க், தங்க நகை உற்பத்தி, விவசாயம்

     அடுத்த கட்டமாக இரண்டாயிரத்துக்குப் பின் பொதுவாக எல்லாத் தொழில்களிலும் ஒரு சுறுசுறுப்பு ஏற்பட்டிருக்கும்.

     ஆனால், தொழில் நன்றாக நடந்த காலத்திற்கும் – தொழில் நலிவடைந்த காலத்திற்கும் – மீண்டும் இப்போது உற்பத்தி நடந்து கொண்டிருக்கும்
     காலத்துக்கும் என்ன வித்தியாசம்?

     சுயேச்சைத் தன்மை.

     மறுகாலனிய பொருளாதார கொள்கைகள் முதலில் நிலவிவந்த தொழில் அமைப்பை ஒரு குலுக்குக் குலுக்கி அதனை கிட்டத்தட்ட மரணத்
     தருவாய்க்குக் கொண்டு வந்து – பின்னர் அதனை தனக்குத் தேவையானபடிக்கு மறுவார்ப்பு செய்து கொண்டுள்ளது.

     உதாரணமாக, எனக்குத் தெரிந்து சிட்கோ போன்ற சிறு தொழில் பேட்டைகள் / ப்ரிக்கால், எல்.எம்.டபில்யு, ரூட்ஸ், டெக்ஸ்மோ போன்ற
     கம்பெனிகள் தற்போது பன்னாட்டுக் கம்பெனிகளிலிடம் கமிசனுக்கு வேலையெடுத்து செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு டெக்ஸ்மோ
     நேரடியாக ஆர்டர் எடுத்து பஞ்சாலை இயந்திரங்களை உற்பத்தி செய்தனர் – தற்போது வேறு ஒரு கம்பெனிக்கு ஏஜெண்டு போல
     செயல்படுகின்றனர்.

     பஞ்சு மில்கள் சீன பேல்கள் வந்த போது முதலில் தடுமாறியது. நிரந்தரத் தொழிலாளர்களையெல்லாம் செட்டில் செய்து விரட்டியடித்தனர்.
     மில்கள் மூடப்பட்டது – தற்போது?

     எனக்குத் தெரிந்து எனது உறவினர் ஒருவர் வேலைபார்த்த மில்லின் முதலாளி, ஒரே பெரிய மில்லை மூடிவிட்டு சின்னச் சின்னதாக யூனிட்டுகள்
     போட்டுவிட்டிருக்கிறார் – எல்லோரும் சி.எல். அதே போல இப்போது சுயேச்சைத் தன்மையில்லை – கமிசனுக்கு வேலை ஆர்டர் எடுத்து
     செய்கின்றனர்.

     இப்படி வேலைசெய்வதில் சிக்கல் என்னவென்றால், கடும் போட்டி – குறைந்த நேரத்தில் குறைந்த கூலியில் வேலையை முடித்துத் தர வேண்டும்.
     விளைவு – சுமங்கலி திட்டம். தெந்தமிழ் நாட்டில் இருந்து சின்னச் சின்ன பிள்ளைகளை கொத்தடிமைகள் போல கூட்டிவந்து ஆஸ்பெஸ்ட்டாஸ்
     ஷெட்டுகளுக்குக் கீழே அடைத்து வைத்து வேலை வாங்குகிறார்கள்

     உங்களைக் கேட்டால் நீங்கள் இதை முன்னேற்றம் என்பீர்கள் – நிறைய பேருக்கு வேலை கிடைக்கிறது – பேருந்து நிறுத்தங்கள் எல்லாம்
     “வேலைக்கு ஆள் தேவை – படித்தாலும் சரி படித்திருக்கா விட்டாலும் சரி” எனும் A4 சைஸ் போஸ்டர்கள் மின்னுகிறதே என்று சந்தோசப்
     படுவீர்கள்.

     நாங்கள் இந்த வேலையின் தரம் என்ன வென்று பார்க்கிறோம் – இந்த உற்பத்தியின் சார்புத்தன்மையை விமர்சிக்கிறோம். இந்தியா
     மறுபடியும் காலனிய காலத்துக்குப் போகிறது என்று கவலைப்படுகிறோம். தேசத்தின் தன்னிறைவும், சுயசார்பும் பறிபோய்விட்டதே என்று
     அஞ்சுகிறோம்.

     நீங்கள் முன்னேற்றம் என்கிறீர்கள் – விடுதலை வேண்டாம் சவுக்கடி போதும் என்கிறீர்கள்.

     நாங்கள் இந்த உழைப்பின் பலனெல்லாம் வேறு ஏதோ ஒரு நாட்டுக்குப் போய்ச் சேருகிறதே என்கிறோம்.

     நமக்குள் ஒரு சுமூகமான உரையாடல் நிகழும் வாய்ப்புக் குறைவுதான் 🙂 ஆனால் இந்த உரையாடல் உங்களைக் குறித்தல்ல; பொதுவாசகர்களைக் குறித்தே என்பதால் – மேலும் உரையாடுவோம்.

     நன்றி

    • கார்கி,
     /// நமக்குள் ஒரு சுமூகமான உரையாடல் நிகழும் வாய்ப்புக் குறைவுதான்///
     ஏன் முடியாது ? We can agree to disagree in a gentlemanly manner !! விவாதம் என்பதே அதுதானே. சரி, நான் அளித்த சுட்டிகளை படிக்க முயலவும். முக்கியமாக வறுமை பற்றி அந்த EPW சுட்டி.
     நானும் நூல் மில்களை பற்றி அறிவேன். 90களில் நூல் வியாபாரம் சில ஆண்டுகள் செய்திருக்கிறேன். கோவை மில்களின் வரலாறு பற்றி தெரியும். 1997 ஆசிய பொருளாதார மந்தத்தில் கோவை அதிகம் பாதிக்கப்பட்டது. உங்கள் பார்வை மிகவும் மேலோட்டமானது. பொதுப்படையானது.
      //// நீங்கள் முன்னேற்றம் என்கிறீர்கள் – விடுதலை வேண்டாம் சவுக்கடி போதும் என்கிறீர்கள்.
     நாங்கள் இந்த உழைப்பின் பலனெல்லாம் வேறு ஏதோ ஒரு நாட்டுக்குப் போய்ச் சேருகிறதே என்கிறோம்.
     ////

     இல்லை. இரண்டுமே தவறான புரிந்தல்கள். உண்மை அல்ல. 40 ஆண்டுகளுக்கு முன்பை விட நாம் இப்போது அதிக சுதந்திரமாக இருக்கிறோம். அன்று அய்.எம்.எஃப் மற்றும் அமெரிக்காவின் தயவு மிக மிக தேவை பட்டது. இன்று அவர்கள் நம்மை மதிக்கும் அளவிற்க்கு மாற்றம்.

    • // இரண்டுமே தவறான புரிந்தல்கள். உண்மை அல்ல. 40 ஆண்டுகளுக்கு முன்பை விட நாம் இப்போது அதிக சுதந்திரமாக இருக்கிறோம்//

     இந்த அம்சத்தை மறுத்து நிறைய சொல்லலாம்.. ஒரு சில விசயங்கள் மட்டும்

     1) சர்வதேச அளவில் இதுவரையில் தனக்கு இருந்த அயலுறவு கொள்கையை (அணிசாரா) கைவிட்டு ஈரான், ஈராக் விசயத்தில் அமெரிக்க ஆதரவு
     நிலை எடுத்தது.

     2) உலகவங்கியின் பல்வேறு நிர்பந்தங்களுக்கு பணிந்து போவது.

     3) பட்ஜெட்டின் அம்சங்களை பன்னாட்டு முதலாளிகள் மற்றும் உள்நாட்டு பெருமுதலாளிகளின் குழுமங்கள் தீமானிப்பது.

     4) பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை அமெரிக்காவால் தீர்மானிக்கப்படுவது.

     சிதம்பரம் பார்டிஸிபேட்டரி நோட் அறிமுகப்படுத்தப்படும் என்றவுடன் சர்வதேச நிதி மூலதன கும்பல் பங்குச் சந்தையிலிருந்து தமது முதலீட்டை
     சில மணி நேரத்தில் சட்டென்று உறிஞ்சியெடுத்து ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்கள் நினைவிருக்கிறதா? அப்போது சிதம்பரத்தின்
     எதிர்வினை என்னவாக இருந்தது என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள் – இந்தியா அமெரிக்காவின் ஒரு காலனி நாடாக மாற்றப்பட்டு அனேகமாக
     அது நிறைவுறும் நிலையில் இருக்கிறது அதியமான்.

     நீங்கள் ஒரு சிறு தொழில் அதிபர் தானே? நீங்கள் உங்கள் சொந்த எதார்த்தத்தில் நிச்சயமாக ஏதாவது ஒரு தருணத்தில் உணர்ந்திருப்பீர்கள்..
     ஆனால் ஒப்புக்கொள்வதில் உங்களுக்கு மனத்தடைகள் இருக்கும் – என்ன இருந்தாலும் இத்தனை நாட்கள் சுதந்திரச் சந்தையை பற்றி
     நிறைய தற்காத்து விவாதித்து விட்டீர்கள் அல்லவா.. அது இருக்கத் தான் செய்யும்.

     போகட்டும்..

     நீங்கள் ஜான் பெர்க்கின்ஸின் “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” மற்றும் “A game as old as an Empire” படித்திருக்கிறீர்கள்
     தானே?

    • கார்கி,
     உலக வங்கி வேறு. அய்.எம்.எஃப் வேறு. அய்.எம்.எஃப் தான் பலம் வாய்தது மற்றும் முக்கியமானது. அன்னிய செலவாணி பற்றாகுறையை சமாளிக்க SDRs (Special Drawing Rights) கடனாக அளிக்கும். 90கள் வரை நாம் அய்.எஃப்.அய் நம்பியே இருந்தோம். கடுமையான சிக்கல்கள். ரூபாயின் மதிப்பு அபாயகரமான முறையில் வீழ்ந்து கொண்டிருந்தது. (officially Indian rupess was not fully convertible and but real effective exchange rate (REER) was falling drastically year over year, endangering our economy and security). இன்று அய்.எம்.எஃப் இடம் கடன் வாங்க தேவையே இல்லை. மிகவும் மதிக்க்படுகிறோம். அவர்களின் உபரி தங்கத்தை வாங்கும் அளவிற்க்கு அன்னிய செலவாணி இருப்பு. (1991இல் நம் தங்கத்தை அடமானம் வைத்து SDR பெற்ற மிக மிக அபாயகரமாண நிலை). இதை பற்றி நான் எழுதிய சுட்டி : (இதை பல தடவை இங்கு அளித்திருக்கிறேன்) : http://nellikkani.blogspot.com/2008/05/1991.html
     ஈரான் விவகாரத்தில் அமெரிக்க சார்பு நிலை எடுபது என்பதை விட, சந்தர்ப்பவாதம் என்று சொல்லாம். நம் எண்ணை இறக்குமதி சவுதி மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம். ஈரானை விட அவர்களே முக்கியம். ராஜ தந்திரம் எனபடும் சந்தர்ப்பவாதம்..
     அணு ஒப்பந்தம் மிக எளிமையானது. அணு குண்டு வேண்டுமா அல்லது அணு மின் வேண்டுமா. இரண்டில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். டெக்நாலஜி மற்றும் யூரேனிய தாது விற்கிறவர்கள் அவர்கள். (Nucleat supplier group). விற்பவன் கண்டிசன் போடுகிறான். ஏற்பதும், மறுப்பது நம் இஸ்டம். அணு ஆயுத பரவலை தடுப்பதே அவர்கள் நோக்கம். நாம் அவர்களின் நிபந்தனைகளை ஏற்க மறுத்து, தொடர்ந்திருக்கலாம். எதிர்காலத்தில் மினசார பற்றாக்குறை கடுமையாக வரப்போகிறது. அன்று கஸ்டப்படுவோம். அவ்வளவுதான். The choice was ours and we chose the wise option.
     60களில் நம் நிலைமை கொடுமையாக இருந்தது. அமெரிக்க உணவு தான்யத்தை நம்பியே வாழும் நிலை. We lived from ship to mouth. மேலும் மிக கடுமையான அன்னிய செலவாணி பற்றாக்குறை. லைசென்ஸ் ராஜ் உச்சத்தில் இருந்து சீரழிந்தோம். அன்று அமெரிக்காவை மிக நம்ப வேண்டிய கட்டாயம். இன்று இல்லை. அன்று அவர்கள் நம்மை இகழ்சியாக பார்த்தார்கள். (இன்றைய சூடான் அல்லது மத்திய ஆப்பிரக்காவை நாம் பார்பது போல). இன்று ஓரளவு மதிக்கிறார்கள். இத்தனைக்கும் அன்று நம் ஜனத்தொகை 50 கோடிகள் தாம். அதையே சமாளிக்க முடியாத சூழல். கடும் வறுமை, பஞ்சம், வேலை இல்லாத்திண்டாட்டம், ஆண்டிற்க்கு 20 % விலைவாசி உயர்வு. இன்று ஜனத்தொகை சுமார் 110 கோடிகள். ஆனாலும் வறுமை விகுதம் வெகுவாக குறைக்க முடிந்தது..
     ஜான் பெர்க்கின்ஸின் “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” மற்றும் “A game as old as an Empire” : இது விதிவிலக்குகளை பற்றி பேசுகிறது. ஊழல் மிகுந்த மூன்றாம் உலக நாடுகளில் சில துறைகளில் நுழையும் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்களை பற்றி. ஆனால் அனைத்து நிறுவனங்களும், அனைத்து நாடுகளிலும் இப்படி செய்ய முடியாது. தேவையும் இல்லை. மே.அய்ரோப்பா அல்லது ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் அவை முதலீடு செய்ய இப்படி குற்றங்களை செய்ய முடியாது / தேவையும் இல்லை.
     இந்த பாகுபடுத்தல் முக்கியம்.
     சரி, இதெல்லாம் இருக்கட்டும் : தாரளமயமாக்ல் பற்றிய எமது சுட்டி மற்றும் இதர சுட்டிகளை அளித்திருந்தேன். அவை பற்றி ?

   • அதியமான் அவர்களே எனக்கு உங்களை போல பொருளாதாரம்
    பற்றி அவுலவுவாக தெரியாது ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது நீங்கள்
    முதலாளி துவத்தால் கடுமையாக லாபம் அடைந்துளிர்கள் என்பது உங்களது வளைபூ மற்றும் பின்னுஒட்டதை பார்த்தாலே தெரிகிறது
    கண்டிப்பாக நீங்கள் ஒரு முதலாளிதான் எனவே நீங்கள் உங்களது வர்க்க நலன் சார்ந்து மட்டுமே எழுதுகிறீர்கள் உங்களுக்கு மக்கள் படும் அவஸ்தைகள் பற்றி தெரியாது நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு பணம் கட்ட எவளவு கஷ்டபடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாது சோவித் ருசியா தெரிந்த உங்களுக்கு அங்கு வாழ்ந்த மக்களின் நிலை பற்றி தெரியவில்லேய் ஏன் சோவியத்தில் 1952 முதல் 1987 வரை விலை வாசி ஏறவில்லையே ஏன் அங்குல தொழிற்சாலைகளின் நஷ்டத்தை பற்றி எழுதும் நீங்கள் மக்கள் எவளவு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்பதை அறிவீர்களா

  • கார்கி, அதியமான் The discussion between u guys were very healthy and inforamtive. Thanks for that. அதியமான் நாம் இன்றைய சூழழை வைத்து மட்டும் பொருளாதரத்தை எடை போட கூடாது என்பதே என் கருத்து. இன்று உணவு உற்பத்தி பெருகி உள்ளது என்றே வைத்து கொண்டாலும் விவசாயத்தில் தற்சார்பு என்ற நிலை மாறி பன்னாட்டு நிறுவங்களை நம்பி இருக்க வேண்டியுள்ளது. அதே போல் இன்று வருமானம் அதிகமாக ஈடும் தகவல் தொழில்நுட்ப துறை என்பது நிரந்தரமானது அல்ல. எனக்கு தெரிந்த வரை Many projects care taken by the Indian IT companies has been slowly acquired by China and eastern Europe.இதே நிலை தொடருமானால் வேலை இல்ல திண்டாட்டம் மீண்டும் உயரும். நம் தற்சார்பு என்னும் நிலை போகும் பொது நாம் ஒரு காலனி தான். நமது உற்பத்தி துறையிலும் 60 % வெளி நாட்டு நிறுவனங்கள் தான் நிறைந்துள்ளன. இப்படி Domestic infrastructure என்பது இல்லாமல் எப்படி நம் நாடு மதிக்கப்படும்.
   /////அதே நேரம், தாரளமயமாக்கல் கொள்கையால் தான் பொருளாதாரம் சீரடந்தது என்னும் ரிக்கார்டை என்னால் ஏற்று கொள்ளமுடியாது!////

   /தகுந்த ஆதாரங்களோடு இதை நிறுபியுங்களேன்./ http://www.ft.com/cms/s/0/e654efe2-0a7a-11df-ab4a-00144feabdc0,dwp_uuid=4c17109c-9c81-11da-8762-0000779e2340.html

   நீங்க அடிக்கடி சொல்றீங்க இல்லையா Industrial growth nu, ப்ளீஸ் check that graph of தி proportionate development between pre reform and post reform. This globalisation has made the top brass people to look rich and beautiful. இந்த உலகமயமாக்கல் உங்களை போல் உள்ள சிறு முதலாளிகளையும் விட்டு வைக்காது. இதை நீங்கள் ஒரு நாள் கண்டிப்பாக புரிந்து கொள்வீர்கள்.

 5. மக்கள் நலனுக்காக அரசாங்கம் என்பது போய், அரசாங்கத்தின் (முதலாளிகளின்) நலனுக்காக மக்கள் என்ற நிலை காணப்படுவதே இதற்கு காரணம். அரசர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், சர்வாதிகாரிகள், இன்றைய ஆட்சியாளர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் மந்திரம் ஒன்றுதான். மக்களை கொள்ளை அடிக்கும் விதம் மற்றும் அளவுகள் மட்டுமே மாறுபடுகின்றன.

 6. மன்னிக்கவும் தோழர்களே, பதிவுக்கு சம்பந்தமில்லாதது ஆனாலும் எனது ஆவலை அடக்க இயலவில்லை. சாமியார் நித்யானந்தாவின் காம லீலைகள் இன்று சன் டிவி செய்திகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. சாமியார்களின் ஆன்மீக நேயர்களின் சிந்தனைக்கு மீண்டும் ஒரு ஆதாரம்.

  • தோழரே பூச்சாண்டி, நித்தியாவின் பி.ஆ.ஓ பாரு நிபேதிதா என்ன செய்யப்போராரு., மேட்டர் மின்னாலயே தெரிஞ்சு பழய பதிவெல்லாம் தூக்கிட்டாரோ??????? எனக்கு தெரிஞ்சு இன்னும் மாட்டாத ஒரே ஆண்மீகவாதி அண்ணன் அதியமான்தான் 🙂

   • @@@இன்னும் மாட்டாத@@@ இத தப்பா புரிஞ்சுக்காதிங்க.. அண்ணன் நேர்மையானவருதான்

   • ///////ஒரே ஆண்மீகவாதி அண்ணன் அதியமான்தான்///////
    ஒருத்தர் உமக்கு எதிரா கருத்துச் சொன்னா அவரப் பத்தி இப்படியா எழுதறது… உண்மையில் உம்மைக் காட்டிலும் பாசிச வாதி யாரும் கிடையாது… இப்பவே இந்த துள்ளு துள்ளினா.. உமக்கு அதிகாரம் கொடுத்து, பீரங்கி, துப்பாக்கி கொடுத்தா ஒரு நாற்பது கோடி பேர காலி பண்ணிடுவீர் போலருக்கு….

    • நாகராஜ்….. முடிந்தால் நான் முன்வைத்துள்ள வாதங்களுக்கு பதில் சொல்லுங்கள், எதற்காக இடையில் இது போன்ற காமெடி டிராக்குகளை ஓட்டிக்கொண்டிருக்கிறீர்????? 

     அதியாமானை ஆன்மீகவாதி என்று சொன்னதில் என்ன தவறு, அவர் ஒரு ஜோசியக்காரர் என்று உமக்கு தெரியுமா???? எதுவுமே தெரியாத காலிடப்பாவா நீர்?????

 7. //2008 ஆம் ஆண்டு 30 கோடி ரூபாய் இலாபம் ஈட்டிய 33 சர்க்கரை உற்பத்தி முதலாளிகள் 2009-ஆம் ஆண்டு மட்டும் 900 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியிருக்கின்றனர்; அவர்களின் இலாபம் 2,900 சதவீதம்அதிகரித்திருக்கிறது.//
  இதெல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியல.

 8. 1820 1 பணக்காரனுக்கு 3 ஏழைகளே உலகில் இருந்தனர்.
  1870 1 பணக்காரனுக்கு 5 ஏழைகளே உலகில் இருந்தனர்.
  1913 1 பணக்காரனுக்கு 11 ஏழைகளே உலகில் இருந்தனர்.
  1950 1 பணக்காரனுக்கு 35 ஏழைகளே உலகில் இருந்தனர்.
  1970 1 பணக்காரனுக்கு 40 ஏழைகளே உலகில் இருந்தனர்.
  1973 1 பணக்காரனுக்கு 44 ஏழைகளே உலகில் இருந்தனர்.
  1990 1 பணக்காரனுக்கு 60 ஏழைகளே உலகில் இருந்தனர்.
  1992 1 பணக்காரனுக்கு 72 ஏழைகளே உலகில் இருந்தனர்.
  1997 1 பணக்காரனுக்கு 727 ஏழைகளே உலகில் இருந்தனர்.
  2001 1 பணக்காரனுக்கு 845 ஏழைகளே உலகில் இருந்தனர்.

  இது WMP என்ற வலதுசாரி பத்திரிகையில் இருந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க