முகப்புதில்லு துர யாரு? நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு !!
Array

தில்லு துர யாரு? நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு !!

-


பெரியதாய் பார்க்க படத்தை சொடுக்கவும்

vote-012இந்து மதத்திற்கு பெரிய ‘களங்கம்’ ஏற்பட்டு விட்டது.

புனிதமான இந்து மதத்தைக் களங்கப்படுத்தி விட்ட நித்தியானந்தா, தான் குற்றமற்றவர் என நிரூபித்த பின்னரே வெளியில் நடமாட வேண்டும் என்று இந்துப் பாசிஸ்டுகளும், தமிழ் பெண்களையும் தமிழ் கலாசாரத்தையும் இழிவு படுத்திவிட்டார் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சிலரும் கொதித்துப் போய் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆஸ்ரமங்கள் மீது தாக்குதல், சாமியாரின் படங்களை செருப்பால் அடித்து எரித்தல், உருவபொம்மை எரிப்பு என்று நமது மரபார்ந்த போராட்டங்கள் மீடியாவின் காட்சிப்படுத்தலோடு தடபுடலாக இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக இலவசமாகக் கிடைத்த வீடீயோ க்ளிப்பிங்ஸ்சை வைத்து தனது ரேட்டிங்கையும் உயர்த்திக் கோடிகளைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது சன் தொலைக்காட்சி. தி.மு.க தலைவர்களின் மைனர் கால லீலைகளை படம் பிடித்திருந்தால் பல ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் வண்ணம் ஃபுட்டேஜ் கிடைத்திருக்கும். என்ன இருந்தாலும் தன்னையே படம் பிடிக்கும் அளவுக்கு அவர்கள் முட்டாள்களில்லை.

நித்தியை கார்ப்பரேட் தீர்க்கதரிசியாக உருவாக்கிய குமுதமோ நித்தியின் ஆபாச வீடியோவை தன் இணையத்தில் கூச்சமில்லாமல் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டுகிறது. “ஏண்டா நாயே, நீதான்டா அந்த நாய்க்கு ஐந்து வருடமா பூஜை போட்டு கொண்டாடினாய்” என்று வாசகர்கள் செருப்பைக் கொண்டு அடிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் குமுதம் கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போட்டு கல்லாக்கட்டுகிறது

நித்தியின் ஆபாசத்தை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்ட நக்கீரன் இணையமோ அந்த வீடியோவின் சில பகுதிகளை மட்டும் டிரெய்லர் மாதிரி போட்டு வாசகன் நித்தி மோனத்தில் ஆட்படும் வேளையில் எடிட் செய்யப்படாத முழு வீடியோவையும் காண சந்தா கொடுங்கள் என்று சுயமைதுனம் செய்வதோடு நைசாக பாக்கெட்டில் கைவைக்கிறது. ஆபாசப் படத்தை விற்றால் அது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது சட்டம். நக்கீரன் செய்து கொண்டிருக்கிற இந்த விற்பனைத் தந்திரம் என்பது சட்ட பூர்வ நீலப்பட விற்பனையல்லாமல் வேறென்ன?  முன்பு பிராபகரன் படத்தை மாஃபிங் செய்து ஆபாசமாக கல்லாக் கட்டியவர்கள் இன்று நித்தியின் கைங்கரியத்தில் இரண்டாவது பதிப்பு போட்டெல்லாம் பிக்பாக்கெட் அடிக்கிறார்கள்.

ஈழப் போரின் போது கொல்லப்பட்ட ஈழ மக்களுக்கு, தாங்கள் இழைத்த துரோகத்தை மறைத்து, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கிறது என்றெல்லாம் ஈழ மக்களின் துயரத்தை மறைத்தும் கொலைகார இந்தியாவுக்கு காவடி தூக்கியும் எழுதிவந்தார்கள். கடந்த சில வாரங்களாக வித விதமான ஆபாச சாமியார்களின் உல்லாச ஆசிரமங்கள், கருவறைக் களியாட்டங்கள், மோசடிகள், என்று ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் இதழ்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

கருவறையில் செக்ஸ் லீலை செய்த தேவநாதனுக்கு முன்னரும் பின்னருமாக வண்டி வண்டியாக எழுதிக் குவிக்கின்றன. வாசகர்களும் பழக்கப்பட்டுப் போன தங்களின் வக்கிர ரசனைகளுக்குத் தீனி போடுகிறது என்பதற்காக இவைகளைப் படித்துக் கொண்டே ஊர் ஊராக ஆஸ்ரமங்களுக்கு அலைகிறார்கள். கவர்ச்சி நடிகைகளின் இடத்தை சாமியார்கள் பிடித்துக் கொண்டதால் இனி இவை அடிக்கடி வாசகர்களுக்காக படைக்கப்படும்.

________________________________________

யார் இந்தச் சாமியார்கள்?

பெரியவா….. சின்னவா….எல்லோரது போதனைகளையும் போட்டு வெகு மக்களிடம் காசு பார்க்க முடியாத சூழலில் ஆனந்த விகடனால் இறக்குமதி செய்யப்பட்டவர்தான் சுவாமி சுகபோதானந்தா. “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்ற தொடரைத் துவங்கி சுகபோதானந்தாவை பிரபலமாக்கியது ஆ.வி. இதே சுகபோதானந்தா பின்னர் குமுதம் இதழிலும் எழுதினார். பின்னர்தான் ஆ.வி சத்குருவைக் கொண்டு வந்தது. ஆனந்த விகடனின் இந்த போட்டியை எதிர்கொள்ள குமுதம் நித்தியானந்தாவைக் களத்தில் இறக்கியது.

இன்றைய தேதியில் சத்குரு நக்கீரன், ஆனந்த விகடன், விஜய் தொலைக்காட்சி என எல்லா இதழ்களிலும், காட்சி ஊடகங்களிலும் எழுந்தருள்கிறார். கூடவே விஜய் தொலைக்காட்சி பிரபலங்களைக் கொண்டு சத்குருவை வைத்து நேர்காணல் செய்து வெளியிட்டதும் இங்கே நினைவுக்கு வருகிறது. ஆக இந்தச் சாமியார்களை உருவாக்கியது ஊடகங்கள்தான்.

சுவாமி சுகபோதானந்தா, சத்குரு ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா இவர்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வந்தார்கள்.. திடீரென ஒரு நாளில் வானத்தில் இருந்து குதித்தா வந்தார்கள்?  ஒரு நள்ளிரவிலோ ஒரு ஆதிகாலையிலோ இவர்கள் பிரபலமாகிவிடுவதில்லை. எங்கெல்லாம் மதமும் மதவாதிகளும் கடைவிரிக்கிறார்களோ எங்கெல்லாம் மக்களின் பிரச்சனைகள் அதிகரித்துச் செல்கிறதோ அங்கெல்லாம் காலம் தோறும் புதிது புதிதாக இந்த ஆபாச்ச் சாமியார்கள் உருவாகிவருகிறார்கள். இந்த சாமியார்களின் தேவை ஆளும் வர்க்கங்களின் அடிப்படைத் தேவை. எப்படி என்பதில்தான் இந்த காவியுடை காமப் பிசாசுகளின் உண்மை முகம் ஒளிந்திருக்கிறது.

ஒரு காலத்தில் ஆகமவிதி, மனுதர்மம், மதம், வேதம் என்று வருண தர்மத்தின் அடிப்படையின் பார்ப்பன மதம் பரப்பி வந்தார்கள். பழமையை விட்டுக் கொடுக்காமல் ஆகம விதிகளை கறாராகக் கடை பிடித்து பார்ப்பன வெறியை மக்கள் மீது திணித்து வந்த சங்கரமடம் மாதிரியான மடங்கள் ஒரு வகை. இந்த பார்ப்பன சாமியார்களோ கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தார்கள். கட்டுப்பாடு என்றால் செக்ஸில் அல்ல செக்ஸ் விதிமுறைகளில். அதாவது இவர்கள் மனுதர்மப்படி பார்ப்பன பெண்களுடன் மட்டுமே உறவு வைத்துக் கொள்வார்கள். சூத்திரப் பெண்களைத் தொட்டால் தீட்டு அல்லவா?

இந்த பார்ப்பன அதிகார பீடங்களின் அடுத்த வடிவம்தான் கார்ப்பரேட் சாமியார்கள்.  மறுகாலனியாதிக்கம் அறிமுகமான தொண்ணூறுகளை ஒட்டிய காலப்பகுதியில் இவர்கள் அறிமுகமானார்கள். கார்ப்பரேட் சாமியார்கள்தான் நவீனமானவர்கள் அல்லவா? அவர்கள் பார்ப்பனர்களுடனும் உறவு வைப்பார்கள் சூத்திர பெண்களுடனும் உறவு வைப்பார்கள். அந்த விஷயத்தில் அவர்கள் தீண்டாமையைக் கடை பிடிப்பதில்லை.ஆனால் கருவைறையில் செக்ஸ் வைத்தாலும் சரி மடத்துக்குள்ளேயே கொலை செய்தாலும் சரி பார்ப்பனச் சாமியார்களாக இருந்தால் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட முடியும், அதுவே சூத்திர பிரேமானந்தாவாக இருந்தாலோ ஏனைய சூத்திர மோசடிச் சாமியார்களாகவோ இருந்தால் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட்டு இந்து மதம் காப்பாற்றப்படும். இவர்களை தண்டிப்பதன் மூலம் ஜெயேந்திரன் செய்த பாவத்தை கழுவிக் கொள்கிறது, மனுதர்மம், ஆகமவிதியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் இந்திய அரசியல் சாசனம்.

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ப அடுத்த தலைமுறையை தயார் படுத்த வேண்டிய அவசியம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு இருந்தது. ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், ஊடக முதலாளிகள், கருப்புப் பண முதலைகள் என எல்லோருமாகச் சேர்ந்து புதிய கல்விக் கொள்கையை உருவாக்கினார்கள். அவர்களே புதிய சாமியார்களையும் உருவாக்கினார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியால் உருவான புதிய தலைமுறையைக் குறிவைத்து சாமியார்களை உருவாக்கியது ஊடகங்களே.

சாமிப்படங்களைக் காட்டுவதை விட இந்துமதத்தின் கருமக் கோட்பாடுகளை கொஞ்சம் மென்மையாக ஆடல் பாடலோடு போதித்து வந்தார்கள். இவர்களில் டான்ஸ் சாமியார் சிவசங்கரபாபாவும், யாகவா முனிவரும் லைம் லைட்டுக்கு வந்தது இப்படித்தான். இன்னொரு பக்கம் பங்காரு அடிகளார் என்னும் பெயரில் செவ்வாடை வழிபாட்டைத் துவங்கி மேல்மருவத்தூரையே தன் வசப்படுத்தினார். இன்று மலைமுழுங்கி மகாதேவன் மாதிரி தோற்றம் அளிக்கும் பங்காருவின் சக்தி பீடம் மிகப்பெரிய நிறுவனம்.

தனது பிறந்த நாளின் போது 100 கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்திருக்கிறார் பங்காரு. அப்படி என்றால் எத்தனையாயிரம் கோடிகள் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கிறார் இந்த செவ்வாடைச் சாமியார்? பார்ப்பன மடங்களுக்குச் சென்று வழிபாடு செய்ய முடியவில்லையே என்று தயங்கி நின்ற திராவிட இயக்கத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தி.மு.கவினர் இன்று பங்காரு அடிகாளாரின் பக்தர்களாக உருமாறியிருக்கிறார்கள். ( அமைச்சர் துரைமுருகன் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியதும், காஞ்சி மடங்களுக்குச் சென்று வருவதும் எல்லோருக்கும் தெரிந்த கதை)

சாய்பாபா என்னும் பன்றித்தலையன் பாபாவின் மோசடிகளை சில வருடங்களுக்கு முன்னர் வெளிக் கொண்டு அம்மணமாக்கும் முயற்ச்சியை வெளிக்கொண்டு வந்தது பி.பி.சி மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள். ஆனால் இந்தியாவின் உயரிய ஆளும் வர்க்கங்கள் வரம் வேண்டும் இடமாக இருக்கும் புட்டபர்த்தி ஒரு மர்மமான பிரதேசம் என்று பல ஊடகங்கள் எழுதியும் இந்திய ஆட்சியாளர்கள் அதைப் பாதுகாத்து வருகிறார்கள். சாய்பாபா ஒரு ஓரினச் சேர்க்கைப் ப்ரியன் என்பதையும் கட்டாயமாக பல இளைஞர்களை கரெக்ட் செய்து சிஷ்யப் பிள்ளைகளாக வைத்திருப்பதையும் அமபலப்படுத்திய வெளிநாட்டு ஊடகங்களும் உண்டு.

__________________________________

ரௌடி அரசியலின் காவி முகம்?

வேதாந்தியை உங்களுக்கு நினைவிருக்கும். சேதுக் கால்வாய் தொடர்பாக கருணாநிதி, ராமன் குறித்துத் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த வேதாந்தி கருணாநிதியின் தலையைக் கொண்டு வருவோருக்கு பரிசு என்று அறிவித்தான். அந்த காவி உடை மிருகத்தை நீங்கள் ராமனின் காவலனாக நினைக்கக் கூடும், ஆனால் அதுதான் இல்லை. இந்திய முதலாளிகளின் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கும் திருட்டு வங்கியாக பணக்காரர்களுக்கு செயல்பட்டான் வேதாந்தி.

வேதாந்தி மட்டுமல்ல எவனெல்லாம் ஏழைகளுக்குச் சேவை செய்கிறோம் என்று அறக்கட்டளை நிறுவி சாமியார் போர்வையில் போதுச் சேவைக்கு வருகிறானோ அவன் எல்லாமே இம்மாதிரியான கருப்புப் பண பாதுகாப்புப் பெட்டகமாக இருக்கிறான். சேவை அமைப்புகள், அறக்கட்டளைகள் என்றால் அரசு வரி விலக்கு அளிக்கிறது. கோடி கோடியாக பகதர்களிடம் இருந்து கொள்ளையடிக்கிறார்கள். ஆஸ்ரமம் என்ற பெயரில் பெரிய நவீன பாலியல் விடுதிகளைக் கட்டுகிறார்கள். ஒரு மோசடிச் சாமியார் மோசடி நிறுவனமாக மாறுவது இந்தியப் பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது.

நித்தியின் உல்லாச வீடியோ குறித்துப் பேசுகிற ஊடகங்கள் என்றாவது நித்தியின் ஆஸ்ரமங்கள் குறித்தோ கோடிகளை ஈட்டி, மேல் மட்டத் தொடர்புகளை வளர்த்துக் கொண்ட விதம் பற்றியோ எழுதியிருக்குமா? தான் அடிக்கிற கொள்ளையில் கொஞ்சம் பணத்தை பிச்சைக்காசாக மக்களுக்கு இவர்கள் கொட்டி விடுவதால் சமூகச் சாமியார்களாகவும் உருவாகிவிடுகிறார்கள். தொண்ணூறுகளில் ரௌடி அரசியல் கூட்டு பற்றி ஆராய அமைக்கப்பட்ட வோரா கமிட்டி ரௌடி – அரசியல்வாதி – போலீஸ் கூட்டின் ஒரு அங்கமாக சாமியார்களைச் சுட்டிக்காட்டியிருந்தது. ஆமாம் பெரும் பண முதலைகளின் கூட்டு இல்லாமல் எந்த ஆஸ்ரமங்களும் செயல்படவே முடியாது. இப்படி பலப் பல கோடி ரூபாய்களைக் கொண்டு கொட்டி வைக்க சங்கரமடமும் பயன்படுகிறது, நித்தியானந்தா மடமும் பயன்படுகிறது…

__________________________________________

ரஞ்சிதாவுடன் காதலா?

ஒரு நண்பர் சொன்னான். அவர் ரஞ்சிதாவைக் கொண்டாடுகிறார். ரஞ்சிதாவும் அவருக்கு அன்புடன் பணிவிடை செய்கிறார். அதாவது அவர் சொல்ல வருவது ரஞ்சிதாவும் சாமியாரும் ஒருவரை ஒருவர் காதலித்திருக்கிறார்கள் என்பதுதான். ஆமாம் ஏன் காதல் வராது? புகழ் போதையில் மூழ்கி கோடிகளைச் சம்பாதித்து அதில் சில லட்சங்களைக் ரஞ்சிதாவுக்குக் கொட்டி அவரை கொண்டாடவும் செய்கிற நித்தியின் காதல் ரஞ்சிதாவோடு முடிந்து போகிற ஒன்றா என்ன? இது மாதிரி எத்தனை ரஞ்சிதாக்களை பெங்களூர் ஆஸ்ரமத்தில் கொண்டாடியிருப்பார்? நித்தியாவின் ஆசிரமத்தில் முன்னாள் நீலப்பட நாயகிகளைக் கண்டிருப்பதாக நித்தியாவின் சீடர் சாருவே தெரிவித்திருக்கிறார்.

ரஞ்சிதா சினிமா, சீரியல்களில் நடித்து தனியாக சீரியல் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட அதற்கு நித்தியா பைனான்சும் செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. பெரும் பணக்காரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், முதலாளிகள் சம்பந்தப்படும் மேட்டுக்குடி விபச்சாரத்தில் ரஞ்சிதா போன்றுதான் பணிவிடை செய்யவேண்டும். ஏனெனில் இதற்கு சன்மானமாக பல இலட்சங்கள் தரப்படுகின்றது. அனுபவ் தேக்குமர நடேசனுக்கு இரவுப் பணிவிடை செய்யும் பெண்கள் குடும்பப் பெண் போல நடந்து கொள்ள வேண்டுமென்பது நிபந்தனையாம். இதெல்லாம் மேட்டுக்குடி விபச்சாரத்தில் சகஜம்.

இங்கே ரஞ்சிதாவை ஒரு பெண்ணாக மட்டும் பார்த்து பரிதாப்படுபவர்கள் மேற்கண்ட விசயத்தை பார்க்கத் தவறுகிறார்கள். ரஞ்சிதா இடத்தில் ஒரு சாதரணப் பெண் இருந்திருந்தால் இந்தப் பரிதாபம் வந்திருக்காம என்பது ஐயமே. மேன்மக்களின் சோகம்தானே கீழே பரவும் நியதியைக் கொண்டிருக்கிறது.

முன்பு குஷ்பு கற்பு பற்றி கருத்துச் சொன்னார் என்பதற்காக சுஹாசினி, ரேவதி எல்லாம் குஷ்புவுக்காக வரிந்து கட்டி வந்தார்கள். ரஞ்சிதாவோ, குஷ்புவோ, சுஹாசினியோ இவர்களுக்கெல்லாம் என்னதான் பிரச்சனை? காலையில் எழும்பி ஒரு டீயும் ஒரு பன்னும் வாங்கி தின்று விட்டு கிடைக்கிற கூலியில் கத்தரிக்காய் வாங்கி சுண்டக் குழம்பு வைத்தா  தினம் தோறும் தின்று கொண்டிருக்கிறார்கள்? அல்லது அண்ணாசாலை சாந்தி தியேட்டர் சப்வேயில் தன் வயிற்றுக்காக தன்னை விற்று அதையே பிழைப்பாக்கிக் கொண்ட பாலியல் தொழிலாளியின் கற்பு பற்றி இவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

இது கொழுப்பெடுத்த பணக்கார நாய்களின் அரிப்பு. வீக் எண்ட் பார்டிக்குப் போவது, கற்பு பற்றி தங்களின் வர்க்க சொறிக்குத் தோதாக கருத்துச் சொல்வது என்று போகிறதே தவிர, உழைக்கும் மக்களின் காதல் ஒழுக்கத்தை காதல் மரபை முதலாளித்துவ ஒழுக்கங்களில் மூழ்கித்திழைக்கும் இந்த பிழைப்புவாத கும்பலின் உணர்வுகளோடு ஒப்பிட முடியாது. தனது காதலியை சைக்கிள் வைத்து மிதித்துச் சென்று ஒரு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து அமர்ந்து பேசுவதற்குக் கூட ஒரு இடமில்லாமல் சந்தடி மிகுந்த பேருந்து ஓரத்தில் நின்ற படி பேசிப் பிரிகிறார்களோ அந்த காதலுணர்வை விட இது எவ்வகையில் சிறந்ததாக இருக்க முடியும்?

______________________________

சாமியார்களின் மோசடி செக்சில் மட்டுமா?

சில சாமியார்கள் அரசியல் புரோக்கர்களாக செயல்படுகிறார்கள். சிலர் கூலிப்படைகளை வைத்து தொழில் செய்கிறார்கள். கருப்புப் பண வங்கிகளாக சிலரும், போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில் என எல்லா கேடு கெட்ட தொழிலையும் காவி உடையில் செய்கிறார்கள். உழைக்காமல் முதலீடே இல்லாமல் வருவாய் ஈட்டும் ஒரு கருவியாக இந்து மதமும் ஏனைய மதங்களும் இவர்களுக்குப் பயன்படுகிறது. அடுத்தவன் நிலத்தை அபரித்து, மக்கள் நம்பும்படி மாஜிக் மாய்மாலங்கள் செய்து, கோடிகளைக் குவித்து, மாமா வேலை பார்க்கிற வரை இவர்கள் யாருக்கும் குற்றவாளிகளாகத் தெரிவதும் இல்லை,  இந்தச் சாமியார்களின் ஆஸ்ரம சாம்ராஜ்யங்கள் யார் கண்ணையும் உறுத்துவதும் இல்லை.

ஆஸ்ரமம் வளர வளர புற்றீசல் போல பக்தர்கள் படையெடுக்கிறார்கள். அவன் கொடுக்கிற போதை வஸ்துவை உண்டு மோனத்தில் ஆழ்ந்து அந்த மோனத்தையே முக்தி நிலை என்றும் நம்புகிறார்கள். ஆயிரம் பேரிடம் அவன் நடத்துகிற காமக் களியாட்டங்களுக்குப் பின்னர் ஏதோ ஒரு பெண் அட சாமியார் என்று போனோமே சுத்த கேடிப்பயலா இருக்கானே என்று சொன்ன பிறகு இந்து மதத்துக்கே கேடு, தமிழ் கலாசாரத்திற்கே தீங்கு என்று கதறுகிறார்கள்.

தேவநாதனின் கருவறை லீலைகள் பல ஆண்டுகாலம் தொடர்ந்த ஒன்று. ஜெயேந்திரனின் காமக் களியாட்டங்களுக்கு இரு தாசாப்த கால வரலாறு உண்டு. இருந்தும் ஏன் இப்படி மக்கள் ஏமாறுகிறார்கள்? எப்படி ஜெயேந்திரனால் மீண்டும் லோக குருவாக வலம் வர முடிகிறது என்றால் ஜெ, கருணாநிதி ஆட்சி என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் அரசியல் கூட்டு இவர்களுக்கு இருக்கிறது.

ஜெயேந்திரனின் வழக்கில் எல்லா சாட்சிகளும் வரிசையாக பல்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். கருவறை லீலை செய்த தேவநாதனுக்கு 94 நாட்களில் ஜாமீன் கிடைத்தது எப்படி?  கேட்டால் பொலீஸ் தரப்பு வாதம் வீக்காக இருந்தது என்கிறார்கள். தேவநாதன் சரணடைந்து 94 நாட்கள் ஆகியும் அவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை என்பதால் அவனை ஜாமீனில் விட்டது காஞ்சிபுரம் நீதிமன்றம்.

ஆனால் அவனது ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் மீதான குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்ய இருந்த நேரத்தில் தேவநாதன் வழக்கை விசாரித்த இரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பின்னர் அதைக் காரணம் காட்டியே அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. கருணாநிதி தலைமையிலான இன்றைய தமிழக அரசு ஜெயேந்திரன் வழக்கு, தேவநாதன் வழக்கு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வழக்கு என சூத்திர மக்களுக்கான எல்லா நீதி போராட்டங்களிலும் தவறான வாதங்களையும் பார்ப்பனர்களுடன் கரிசனமான போக்கையுமே கொண்டிருக்கிறது.

பாதிக்கப்படும் பெண்களும் தாங்கள் சாமியாரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டோம் என்பதை சொல்ல முன்வருவதில்லை. ஏனென்றால் ஏமாறுகிற பெண்களில் சிலருக்கு கருவறை சாமியாரின் கதகதப்பு தேவையாக இருக்கிறது. அப்பாவி பகதர்களிடமும் சாமியார் தூண்டிலை வைக்கும் போது பிரச்சனையாகிவிடுகிறது. ஆனால் ரஞ்சிதாவின் விஷயத்தில் நடந்ததோ முற்றிலும் வேறு.

நித்தியானந்தா ஆஸ்ரமத்தின் உள்குத்து வேலைகளில் பாதிக்கப்பட்ட ஒருவர் முழு நீள படத்தை எடுத்து அதில் ஒரு பகுதியை மட்டும் இப்போது வெளியிட்டிருக்கிறார். இந்த இலவச திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை நாம் விரைவில் காணலாம். பெங்களூருவின் சொத்து ஒன்றை வாங்கும் பிரச்சினையில் தோல்வியுற்ற ஒரு அரசியல் புள்ளி சாமியாரின் சீடர்களை ஏற்பாடு செய்து இதை வெளியிட்டிருக்கிறார் என்று வரும் செய்திகளைப் பார்க்கும் போது இந்த இரகசியங்கள் இன்னும் வரும்போலத் தோன்றுகிறது.

___________________________________

எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வனின் கரிசனமும் நமது கேள்வியும்….

” எனக்கு அக்காட்சியைப் பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது. பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அவனும் சாதாரண மனிதன்தானே. சின்னப்பையனான அவன் அவனோடு விரும்பி உறவு கொள்ளும் பெண்ணோடு இருக்கும் கணத்தைப் படம் பிடித்து ஊருக்கே காட்டுவது நாகரிகமாக எனக்குப்படவில்லை.காஞ்சி சாமிகள் ,பிரேமானந்த சாமிகள் போல பெண்களிடமிருந்து அவன் வல்லந்தம் செய்ததாக புகார் வராமல்- அவர்கள் இருவரும் காதலால் ஒருமித்தது போன்ற ஒரு வீடியோ காட்சியைக் காட்டும் போது அய்யோ பாவம் அவன் என்கிற உணர்வுதான் முதலில் எனக்கு ஏற்பட்டது.” என்று எழுதி தனது கரிசனத்தோடு கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்களின் சங்கத் தலைவர் ச.தமிழ் செல்வன்.

மிகப்பெரிய கோடீஸ்வரச்சாமியாரிடம் தமிழ் செல்வன் காட்டும் கரிசனம் ஒரு பக்கம் இருந்தாலும், கட்சிக்காக முழு நேரமும் உழைத்து தொழிற்சங்க தோழர்களின் நன்மதிப்பைப் பெற்று போலி மார்க்ஸ்சிஸ்ட் அரசியலில் நேர்மையாக இருந்த தோழர் வரதராஜன் கொலையில் கட்சித் தலைமையும் பிரகாஷ் காரத்தும் காட்ட மறுத்த கருணையை தமிழ்செல்வன் ஏன் கண்டிக்கவில்லை?  வரதராஜன் ஒரு பெண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார் என்று நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை ஆதரிக்கும் தமிழ்செல்வன் நித்தியானந்தா என்ற பொறுக்கியின் உணர்வுக்கு கண்ணீர் வடிக்கிறார். என்னே மனிதநேயம்?

வரதராஜனின் மரணம் என்பது தற்கொலை அல்ல கொலைதான் என்பதும் ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்ட தீர்ப்பை ஒரு பொய்யான நீரூபிக்கப்படாத குற்றச்சாட்டின் பேரில் வரதராஜன் மீது சுமத்தி அவரை போரூர் ஏரி நோக்கித் துரத்திய இரக்கமில்லாத தன் தலைமை குறித்தோ, அல்லது மோசடிப் பேர்வழியான பிரணாய் விஜயனை ஆதரித்து நிற்கிற இதே பிரகாஷ்காரத் அந்த பொருளாதார மோசடிகள் எதுவும் செய்யாத அப்பாவியான வரதராஜன் மீது நடவடிக்கை எடுத்ததோ தமிழ்ச் செல்வனுக்கு பிரச்சினை இல்லை.

__________________________________________

சாரு: வாங்குற காசுக்கு மேல கூவுராண்டா கொய்யால……..

எதிர்பார்த்ததைப் போலவே சாரு நித்தியானந்தாவை அலட்டிக் கொள்ளாமல் உதறுவது போல காட்டிக்கொண்டு காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நித்யா பல நூறு மேதைகளுக்கு நிகரான ஒரு மேதையாம். பல புற்று நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறாராம். பல இலட்சம் பக்தர்களுக்காக நித்தியா மட்டுமே சிந்தித்தாராம். இவ்வவளவு வல்லமை கொண்டவர் தனது சக்தியை காமத்திற்கு கொடுத்து விட்டார் என்று பேசுகிறார் சாரு. அடுத்து தான் ஏமாற்றப்பட்டதாகவும், தன்னை நம்பி பல ஆயிரம்பேர் ஏமாந்து விட்டதாகவும் இதனால் சுய இரக்கம் தோன்றியிருப்பதாகவும் கூறுகிறார்.

அடிக்கடி நடிகையின் பின்புறத்தை நித்யா நக்குவதாக கூறிக்கொண்டு திட்டுவது போல காட்டிக்கொண்டு மேற்கண்ட மகத்துவங்களை பட்டியலிடுகிறார். பல இலட்சம் பக்தர்கள் மத்தியில் நித்யா மட்டும் சிந்திக்கும் சுமையை எடுத்துக் கொண்டால் இத்தகைய ரிலாக்சேஷன்கள் தவறில்லையே. ஒரு படைப்பை படைப்பாளியிடமிருந்து பிரித்து பார்க்க வேண்டும் என்று கூறும் சாரு நித்யாவின் காம லீலைகளை அவரு குண்டலனி யோகத்திலிருந்து பிரித்துத்தானே பார்க்க வேண்டும்?

ஊரே காறித்துப்புவதுதான் சாருவின் பிரச்சினை. புற்று நோயாளிகளை நித்யா குணப்படுத்தினார் என்று கூறும் சாருவை இந்திய மருத்துவச் சட்டப்படி கைதே செய்யலாம். ஊருப்பட்ட வியாதிகளுக்காக மக்கள் மருத்தவமனைகளுக்கு அலைந்து கொண்டிருக்கும் போது இந்த லேகியக்காரனை இப்படிச் சொல்லித்தானே பலரும் கொண்டாடினார்கள்? மற்றவர்கள் கூட இப்போது திருந்திவிட்டாலும் சாரு தனது விசுவாசத்தை விடுவதாக இல்லை.

தன்னை நம்பி பல்லாயிரம்பேர் நித்யாவிடம் ஏமாந்து விட்டதாக சாரு கூறுவது உண்மையானால் அதற்கு என்ன தண்டனை?

___________________________________

முதலில் வறுமையைப் பரிசளிப்போம்… சலிப்பைப் போக்க சிட்டுக்குருவி லேகியமும் உண்டு…..

நாடெங்கிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகக் கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களை நோக்கி வறுமை காரணமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். விண்ணை முட்டும் விலைவாசி, ஏழைகளின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்க இடியென இறங்கி இருக்கிறது பட்ஜெட் அறிவிப்புகள். இந்திய தொழில் கூட்டமைப்பின் சிந்தனையில் உருவான பட்ஜெட்டில் அத்தியாவசியப் பண்டங்களின் விலை எக்குதப்பாய் எகிறிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் என்றால், நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. நாடு முன்னேற வேண்டுமென்றால் மக்கள் இதை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மன்மோகன்.

கருணாநிதியோ கலகமில்லாமல் பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும் என்கிறார். மக்களை வைத்து கபடியாடிக் கொண்டிருக்கும் இந்த புரோக்கர்களுக்கு மத்தியில் ஒரு முருங்கைக்காயின் விலை ஐந்து ரூபாயாகி விட்டது. ஒரு கிலோ வெங்காயம் 36 ரூபாய். இன்னும் சில நாட்களில் லாரி வாடகை 20% அதிகரிக்கும் என்று தெரிகிறது. அப்படி அதிகரிக்கிற அடுத்த நிமிடமே அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்னும் பல மடங்கும் உயரும் சூழல் உருவாக்கியிருக்கிறது. மத்திய அரசு பட்ஜெட் என்னும் பெயரில் மக்கள் மீது வீசியுள்ள இந்த குண்டை அடுத்து மாநில அரசு என்ன குண்டை வீசப் போகிறதோ என்ற கவலை மத்திய தர வர்க்கத்தை உசுப்பி வருகிறது.

மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள். போதிய வருவாய் இல்லாமலும் வேலையிழப்பாலும் வறுமையை நோக்கி நகருகிற பெரும் மக்கள் கூட்டத்திற்கு போதை ஏற்றவும் பிரச்சனைகளில் இருந்து அவர்களை விடுவித்து போதையில் ஆழ்த்துவதற்காகவும் ஆளும் வர்க்க ஊடகங்களும், ஆட்சியாளர்களும் உருவாக்கும் சிட்டுக்குருவி லேகியம்தான் இந்த செக்ஸ் விவகாரங்கள்.

உலக மக்களின் எதிர்ப்பை மீறி ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்கா அமெரிக்க மக்களின் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பி தடையில்லாமல் ஆயுத விற்பனையைத் தொடர கிளப்பிவிட்டதுதான் கிளிண்டன் மோனிகா லெவின்ஸ்கி விவாகாரம். மக்கள் மோனிகாவின் கனவுகளில் ஆழ்ந்திருக்க கொடூரமான போரை நடத்தி லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா. இதோ விஷம் போல் ஏறும் விலைவாசி என்னும் கசப்புகளில் இருந்து மக்களைத் திசை திருப்ப, எங்கும் உருவாகி வரும் மக்கள் எதிர்ப்புணர்வுகளை மழுங்கடிக்க ஆளும் வர்க்கங்களாலும் அவர்களின் ஊடகங்களாலும் பயன்படுத்தப்படும் செக்ஸ் ஸ்கேண்டல் யுத்திதான் இந்த போலிச்சாமியார்களின் காம லீலைகள்.

__________________________________

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

யதார்த்த வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம். போர், நிலங்கள் பறிப்பு, கனிமவளக் கொள்ளை, அடிப்படை சுகாதார வசதியின்மை, உணவு, உடை, உறைவிடத்தேவைகள் மறுக்கப்பட்ட நிலையை நாம் காண்கிறோம். நமது நாடு, நமது நகரம், நமது அரசு என்கிறார்கள். ஆனால் இது டாட்டா, பிர்லாக்களின், அம்பானிகளின் நாடாகவும் அவர்களின் அரசாகவுமே இருக்கிறது. நமக்கான அரசமைக்க நாம் போராட வேண்டும். உழைக்கும் மக்களுக்கான உண்மையான லேகியம் என்பது போராட்டமே………. ஆமாம் போராடுவது ஒன்றுதான் மகிழ்ச்சி……விடுதலை…….ஆமாம் அதுவே முழுமையான மனித விடுதலை…….

___________________________________

–          இராவணன்.

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. நல்ல வேளை…சாரு website’ல பூந்த வைரஸ் கூகுள்ல பூராம இருந்திச்சு…
  😀

  ” நித்யானந்தர் யார்? ” என்று என்னிடம் கேட்டார் ஒரு நண்பர். அவரிடம் நான் சொன்னேன்:
  அவர் ஒரு ஆன்மீக குரு அல்ல;
  அவர் ஒரு ஞானி அல்ல;
  அவர் ஒரு மகான் அல்ல;
  அவர்
  கடவுள்! — சாரு

  இன்னும் நெறையா காமெடி இருக்கு…

  one

  two

  three

  four

  five

  six

  seven

  • இது மட்டுமா காமெடி.
   பட்டர்ஃப்ளை எஃபெக்ட் மாதிரி
   நமக்கே தெரியாத பல எஃபெக்ட்லாம் இருக்கு.
   ரஞ்சிதா புண்ணியத்துல பல பக்தர்கள் பக்தைகள் எஸ்கேப்.
   நித்தியானந்தா புண்ணியத்துல
   வரதராசன் மேட்டர்லேர்ந்து சிபிஎம் எஸ்கேப்;
   பெட்ரோல் விலை உயர்வுலேர்ந்து கருணாநிதி எஸ்கேப். ஆஸ்ரமத்துலேர்ந்து
   பணத்தோட எவ்வளவு பேர் எஸ்கேப்னு தெரியல.
   என்னென்னவோ எதிர்பாராத விளைவுகள்!
   பெரியவாளை கைது பண்ணதுனாலதான்
   சுனாமி வந்ததுன்னு அப்போ பேசிக்கிட்டாங்க.
   நித்தி மேல கை வெச்சதுனால
   என்ன வருமோன்னு பயந்துகிட்டே இருந்தேன.
   ஜெயமோகன் கீ போர்டுலேர்ந்து எழுத்தா கொட்டுது.

  • @DK. அவர் எழுதியதை படித்து பார்த்ததில் முழுக்க இது ஒரு விளம்பரம் என்றே தெரிகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி. இதெல்லாம் ஒரு வேலை?.

 2. //////////////////////////நமக்கான அரசமைக்க நாம் போராட வேண்டும். உழைக்கும் மக்களுக்கான உண்மையான லேகியம் என்பது போராட்டமே………. ஆமாம் போராடுவது ஒன்றுதான் மகிழ்ச்சி……விடுதலை…….ஆமாம் அதுவே முழுமையான மனித விடுதலை////////////////

  நமக்கான அரசு என்பது என்ன ? அது எப்படி இருக்கும் ?

  • “திராவிட நாடு என்பது என்ன? அது எங்கே இருக்கு?” என்று கேக்கிற மாதிரியில்ல கேக்குறீங்க…

  • செந்தழல் ரவி முதலில் போராட வாருங்கள். அதன் பிறகு நமக்கான அரசு பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 3. நித்யாவுக்கும் போரட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? pretty deviating….
  ////////////////////////////நமக்கான அரசமைக்க நாம் போராட வேண்டும். உழைக்கும் மக்களுக்கான உண்மையான லேகியம் என்பது போராட்டமே………. ஆமாம் போராடுவது ஒன்றுதான் மகிழ்ச்சி……விடுதலை…….ஆமாம் அதுவே முழுமையான மனித விடுதலை////////////////நமக்கான அரசு என்பது என்ன ? அது எப்படி இருக்கும் ? // எனக்கும் இதே கேள்வி தான்…முடிந்தால் விளக்கவும். நன்றி.

  • வாழ்கையில் உன்னக்கு என்ன வேண்டும் என்று தெரியாத?நமக்கான அரசு என்றல் உன்னுடிய என்னுடிய தேவைகளை செய்யும் அரசு தான். 

 4. இந்த விசயத்தில் சாரு’ மிகப் பெரிய தப்பு செய்ததாகத் தோன்றுகிறது.

  சாரு இத்தனை நாட்கள் அந்த சாமியாரைப் புகழ்ந்து எழுதியது கூட எனக்கு தப்பாகத் தெரியவில்லை.நாம் நம்பும் ஒருவர் நம்மோடு பலரையும் ஏமாற்றும் போது, அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?அவருக்கு யாராவது மெயிலில் எனக்கு உடல் உபாதைகள்,மன நிம்மதி இல்லை என்று சொல்லி,இவரும் அதற்கு அந்த சாமியாரைப் போய் பாருங்கள்,உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார் என்று மெயிலிலே சொல்லியிருந்தாவது பரவாயில்லை.ஆனால் பெரும்பாலனவர்கள் படிக்கும்,தன்னுடைய வலைத் தளத்தில் அவரைக் கடவுளின் அவதாரம் என்று தொடந்து சொல்லி வந்ததுதான் தவறு.அதையும் கூட பெரிய தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை.சாமியாரைப் பற்றி விசயம் வெளியானவுடன் “சாமியார் த‌ப்பான‌வ‌ர் என்று தெரியாம‌ல் ‘திரும்ப‌வும்’ ஏமாந்துவிட்டேன்.எத்த‌னையோ ப‌க்த‌ கோடிகள் ஏமாந்ததுபோல்,நானும் அந்த‌ சாமியாரை ந‌ம்பி ஏமாந்துவிட்டேன்.எவ்வ‌ளவே உல‌க‌ விச‌ய‌ங்க‌ளெல்லாம் தெரிந்த‌ எனக்கு,ஒண்ணாம் வகுப்பிலேயே சொல்லிக் கொடுக்க‌ப்ப‌டும் ‘க‌ண்ணால் காண்ப‌தும் பொய்;காதால் கேட்ப‌தும் பொய்;தீர‌ விசாரிப்ப‌தே மெய்’ என்கின்ற பால‌பாட‌ம் கூட‌ தெரியாம‌ல் இருந்து விட்டேன் என்பதை நினைக்கையில் என் மேல் எனக்கே கோபம் வருகிறது.இனிமேல்,இது போன்ற த‌வ‌றை செய்ய‌ மாட்டேன் என்று என் வாச‌க‌ர்க‌ளுக்கு ‘திரும்ப‌வும்’ உறுதிய‌ளிக்கிறேன் என்று சொல்லி இருந்தாலாவ‌து ப‌ர‌வாயில்லை.அவ‌ர் மாட்டிக் கொண்டார் என்ற‌வுட‌ன் ‘இந்த‌ ச‌ந்தேகம் எனக்கு முன்பே இருந்த‌து’ என்று அந்‌தர் ப‌ல்டி அடிப்ப‌தை என்ன‌ சொல்வ‌தென்று தெரிய‌வில்லை.

  என்னைப் பொறுத்த‌வ‌ரைக்கும் சாரு செய்ததிலே மிக‌ப் பெரிய‌ த‌வறு என்னவென்றால் ‘இந்த‌ விச‌ய‌த்தைப் ப‌ற்றி அவ‌ருக்கு முன்பே ச‌ந்தேக‌ம் இருந்த‌து’ என்று இப்போது சொல்லியிருக்கின்றார்.அதைப் ப‌ற்றி முன்பே வ‌லைத் த‌ளத்தில் ப‌திவிட‌ வேண்டிய‌துதானே என்று கேட்டால் ‘ப‌ண ப‌ல‌ம்,அதிகார‌ ப‌ல‌ம்’ பொருந்திய‌ சாமியாரை இந்த‌ ஏழை எழுத்தாளன் எப்படி எதிர்த்து,என்னுடைய‌ வ‌லைத் த‌ளத்தில் க‌ருத்திடுவ‌து என்பார்.ஆனால் குறைந்த‌ப‌ட்ச‌ம்,தன்னையே ந‌ம்பி வாழ்ந்து கொண்டிருக்கும்,தான் தெய்வ‌மாக‌ ம‌திக்கும் த‌ன் ம‌னைவியிட‌மாவ‌து அவ‌ருக்கு சாமியாரைப் ப‌ற்றி தெரிந்த‌தைச் சொல்லி,தன் ம‌னைவி சாமியார் ஆசிர‌ம‌த்திற்கு செல்வ‌தைத் தடுத்திருக்க‌லாமே.முந்தா நாள் கூட‌ தன் ம‌னைவி ஆசிர‌ம‌த்திற்கு சென்றதை இவ‌ரே ஒப்புக் கொண்டிருக்கிறாரே.த‌ன் ம‌னைவியின் ந‌ல‌ன் க‌ருதி,தன் ம‌னைவியிட‌ம் கூட,த‌னக்கு தெரிந்த‌ உண்மைக‌ளை சொல்லாத‌தை என்ன‌வென்று சொல்வ‌து?எது அவ‌ரை சொல்ல‌ விடாம‌ல் த‌டுத்த‌து?

 5. இந்த கட்டுரையை படித்து 10 பேராவது உழைப்பின் மகத்துவத்தை உணர்ந்தால் தமிழனாய் சந்தோசம் கொள்வேன்.

 6. ///தனது காதலியை சைக்கிள் வைத்து மிதித்துச் சென்று ஒரு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து அமர்ந்து பேசுவதற்குக் கூட ஒரு இடமில்லாமல் சந்தடி மிகுந்த பேருந்து ஓரத்தில் நின்ற படி பேசிப் பிரிகிறார்களோ அந்த காதலுணர்வை விட இது எவ்வகையில் சிறந்ததாக இருக்க முடியும் ///

  மிகவும் அருமை

 7. //தனது காதலியை சைக்கிள் வைத்து மிதித்துச் சென்று ஒரு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து அமர்ந்து பேசுவதற்குக் கூட ஒரு இடமில்லாமல் சந்தடி மிகுந்த பேருந்து ஓரத்தில் நின்ற படி பேசிப் பிரிகிறார்களோ அந்த காதலுணர்வை விட இது எவ்வகையில் சிறந்ததாக இருக்க முடியும்// மிகவும் அருமை

 8. //நித்தியின் உல்லாச வீடியோ குறித்துப் பேசுகிற ஊடகங்கள் என்றாவது நித்தியின் ஆஸ்ரமங்கள் குறித்தோ கோடிகளை ஈட்டி, மேல் மட்டத் தொடர்புகளை வளர்த்துக் கொண்ட விதம் பற்றியோ எழுதியிருக்குமா?//
  ஹும்!

  //ஆபாசப் படத்தை விற்றால் அது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது சட்டம். நக்கீரன் செய்து கொண்டிருக்கிற இந்த விற்பனைத் தந்திரம் என்பது சட்ட பூர்வ நீலப்பட விற்பனையல்லாமல் வேறென்ன? // காறித்துப்ப வேண்டும் போலிருக்கிறது.

 9. ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு எழுதாளன இப்படி எல்லாம் சொல்லக்கூடாது நானிருக்கிறேன் சாருவிற்காக,
  நித்யா கன்னி பூஜையும் சாருவும்.

 10. கொழுப்பெடுத்த பணக்கார நாய்களின் அரிப்பு. வீக் எண்ட் பார்டிக்குப் போவது, கற்பு பற்றி தங்களின் வர்க்க சொறிக்குத் தோதாக கருத்துச் சொல்வது என்று போகிறதே தவிர, உழைக்கும் மக்களின் காதல் ஒழுக்கத்தை காதல் மரபை முதலாளித்துவ ஒழுக்கங்களில் மூழ்கித்திழைக்கும் இந்த பிழைப்புவாத கும்பலின் உணர்வுகளோடு ஒப்பிட முடியாது. தனது காதலியை சைக்கிள் வைத்து மிதித்துச் சென்று ஒரு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து அமர்ந்து பேசுவதற்குக் கூட ஒரு இடமில்லாமல் சந்தடி மிகுந்த பேருந்து ஓரத்தில் நின்ற படி பேசிப் பிரிகிறார்களோ அந்த காதலுணர்வை விட இது எவ்வகையில் சிறந்ததாக இருக்க முடியும்? ………. அருமை

 11. தனது காதலியை சைக்கிள் வைத்து மிதித்துச் சென்று ஒரு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து அமர்ந்து பேசுவதற்குக் கூட ஒரு இடமில்லாமல் சந்தடி மிகுந்த பேருந்து ஓரத்தில் நின்ற படி பேசிப் பிரிகிறார்களோ அந்த காதலுணர்வை விட இது எவ்வகையில் சிறந்ததாக இருக்க முடியும்?////

  கிளாப்ஸ்

 12. இந்த கார்ட்டூன் மட்டரகமாக இருக்கிறது. கிண்டலடிப்பது சரி. ஆனால் குச்சியில் காண்டம் வைப்பது டூ மச்.

  • குச்சியில் அவனவன் கோமனதுணியை கட்டிக்கொண்டு வருவது என்ன த்ரீ மச்சா??உங்களை சொல்லி தப்பில்லை , கைகளில் இருக்கும் கம்புகளில் இந்த கழிசடை “சாமிகள் ” கட்டி வைத்திருப்பது அந்த நாதாரிகளின் கோவணங்கள் என்றாவது தெரியுமா உங்களுக்கு ??

  • நீங்க சொல்றதும் சரிதான்…..! குச்சியில் காண்டம் மட்டும் வச்சி வரைஞ்சது தப்புதான்…! கூடவே கோவணம்,ஜட்டி,பிரா,ப்ளூ பிலிம் சிடி,செலவுக்கு பணம்….இன்னும் இன்னும்…..நிறைய கேவலங்களை வரைஞ்சிருக்கணும்…….நீங்க கோவப்படறதப் பார்த்தா…. அவா குச்சிய ர்ர்ர்ர்ரொம்ம்ம்ம்ப்ப்ப்…ப புனிதமா நெனச்சுப்புட்டேள் போலருக்கு…….

  • அந்த கார்ட்டூனில், கதவிற்கு வெளியே இருப்பவர்கள் இதுநாள் வரை செய்ததைவிட, அந்த குச்சியிலிருக்கும் காண்டம் வரைந்திருப்பது எவ்வளவோ மேல்.

  • குச்சியில்தான் காண்டம் வைக்க முடியும் ,அவன் குச்சியை வெளியில் தெரியுறமாதிரி ஏன் வைக்கிறான்.

 13. நான் புரிந்து கொண்டவரை நக்கீரன் இதழுக்கத்தான் சந்த sezutha சொல்லுகிறார்கள். மற்றபடி தமிழ் செல்வனுடன் என் கருத்தும் ஒத்து போகிறது.

 14. சன் டிவி யின் கலாநிதி மாறனின் யோக்கியதை என்ன ?அவனின் மன்மத லீலைகளை படம் பிடித்து போடுவான அவன் ?

  • அதுக்கு ஏன் சார் நீங்க கவலை படுரிங்க அதுக்குத்தான் ஜெயா டிவி இருக்கே …..

 15. இந்த பரபரப்பில், சன் டிவி பண்ண அநியாயத்தை எல்லோரும் மறந்து விட்டோம். முதல் குற்றவாளி சன் டிவி தான். கிட்ட தட்ட ஒரு நீல படத்தை, நம்ம வீட்டுக்குள் ஓட்டிவிட்டனர். வயசுக்கு வந்த பொம்பள பசங்க இருக்க வீட்டுல, எல்லோரும் கூசி போனார்கள்.பக்கத்துக்கு வீட்ல கேபிள் கட் பண்ண சொல்லிட்டாங்க.
  சன் டிவி இப்போ ஒரு படி மேல ஏறி இருக்கு..

  முதல் இடம், பரங்கி மலை ஜோதி, ரெண்டாவது இடம் சன் டிவி. இவர்கள் என்ன யோக்கியமா…

 16. வினவு, அப்படியே குச்சியில குத்தியிருக்கிற காண்டம் என்னா பிராண்டுன்னு கேட்டு ஒரு பதிவ போட்டுடுங்க. புண்ணியமாப் போகும். அந்த பிராண்டு ராசியாவது நமக்கு ஒட்டுதான்னு பார்க்கலாம்.

 17. கார்ட்டூனின் தீம் அருமை.. வரைந்த ஓவியருக்கு வாழ்த்துக்கள்..

  வினவு, இங்கே நீங்கள் வெளியிடும் கார்ட்டூன்கள் ஏதாவது சாப்ட்வேரில் வரையப்படுகிறதா அல்லது கைய்யால் வரைந்து ஸ்கேன் செய்கிறீர்களா?

  சாப்ட்வேர் என்றால் அது என்னவென்று சொல்லுங்களேன்.

  பதிவு வழக்கம் போல் சூப்பர்..!

  • கார்க்கி, இந்தப்படம் எமது நண்பரால் வரையப்பட்டது. அவர் தந்த தகவலின் படி அவுட் லைட் கையால் வரைந்து ஸ்கேன் செய்து ஃபோட்டோஷாப்பில் கலர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 18. உங்கள் கட்டுரையில் இருக்கும் நியாயத்தை விட உங்கள் எழுத்துநடை மிகவும் அற்புதம்.    

  • நன்றி பிரகாஷ், நடையை விட நியாயம் குறைவாக இருப்பதாக அர்த்தம் இல்லையயே?

   • அப்படி இல்லை. இதுவரை நான் பார்த்ததிலேயே உங்களது வலைத்தளம் தான் என்னை மிகவும் கவர்ந்தது, கருத்துகள் வேறுபடலாம் , ஆனால் உங்களது கட்டுரை படிப்பதற்கு   அருமையாக உள்ளது .   

 19. (சுரேகாவின் இந்த கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது ) http://surekaa.blogspot.com/
  இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது?
  இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான், நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள்.
  என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா, ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான்!
  இந்த விஷயத்தில், நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன்.
  ஒரு மனிதன், வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல, (HR Trainer) போல, கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும்,- வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தளத்தினர் – அதை ரசிக்கிறார்கள். ‘ அட! ஆமா! நாம இப்படித்தான் இருக்கோம்! – நம்பளை மாத்திக்கணும் என்று நினைக்கிறார்கள்’. சிலவற்றை மாற்றிக்கொள்ளவும் செய்கிறார்கள். அன்று கேட்ட சொற்பொழிவிற்கான கட்டணத்தையும் செலுத்தியிருக்கிறார்கள். அந்த விஷயத்தை கடைபிடித்து வாழ்வை நிதானமாக வாழாமல், சொன்ன ஆளை பூஜிக்க ஆரம்பிக்கும்போதுதான் , சும்மாக்கிடந்த ராஜசேகரனை, பரமஹம்ஸ நித்யானந்தாவாக்குகிறது உலகம்!
  மேலும், சொற்பொழிவைக்கேட்டுவிட்டு, அன்று இரவே , மனைவியிடமோ, வேறு பெண்ணிடமோ காமம் பெற்றுக்கொண்டோ, குறைந்தபட்சம் மது ,சிகரெட் ஆகியவற்றில் சுகம் தேடும் பக்தனாகத்தான் பெரும்பாலோர் இருக்கிறார்கள். ஆனால் மேடையில் காவி உடை அணிந்துகொண்டு அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு , அந்த பக்தனுக்கு வாழ்க்கை நெறிகளைச்சொன்ன குற்றத்துக்காக புனிதன் பட்டம் கட்டிக்கொண்டு தன் சுய ஆசைகளை எல்லாம் திருட்டுத்தனமாக செய்யவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானதில் அவரது தவறைவிட நம் ஆட்டுமந்தை சமூகத்தின் தவறுதான் அதிகமாக இருக்கிறது.
  இந்த வயதில், வாழ்வியல் அனுபவங்கள் ஏதுமின்றி ஒருவன் கூறும் எல்லா அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்ளும் இந்தச்சமூகம், அவனை தூக்கிவைத்துக் கொண்டாடுவதும்..ஸ்வாமியை நேரிலேயே பாத்துவிட்டேன், ஸ்வாமி கை என்மேல் பட்டுவிட்டது! ஸ்வாமி என்னைப்பார்த்து சிரித்தார் என்று உருவ….உடல் வழிபாட்டை ஆரம்பித்து , அவனை , சராசரி மனிதர்கள் செய்யும் எந்தச்செயலையும் செய்யவிடாமல் பார்த்துக்கொள்கிறது. பின்னர் என்ன? பூஜைகள்தான்..ஆராதனைகள்தான்! அதில் அவனுக்கு ஏற்படும் போதை , தன்னையே கடவுளாக எண்ணவைத்துவிடுகிறது. அந்த எண்ணம் வலுப்பெற்று, தலை அரித்தால் கூட பொறுத்துக்கொண்டிருந்துவிட்டு, உள்ளறைக்குள் போய் சொறிந்துகொள்ளும் அவலம் அவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. பின்னர் ஆசிரமம் , கிளைகள், நன்கொடை , படாடோபம் என்று வரும்போது சுகம் தேடும் மனம் விழித்துக்கொள்வதில் , தவறிருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.
  ஒரு வாழ்வியல் பயிற்சியாளனை தெய்வமாகப்பார்த்துவிட்டு , அவன் அதைச்செய்தான் இதைச்செய்தான் என்று கூறுவதில் துளியும் நியாயம் இல்லை!
  அவர் செய்த ஒரே தவறு! அந்த ரூமில் கேமரா இருப்பதை முழுமையாக ஆராயாமல் செயலில் ஈடுபட்டதுதான் ! 🙂
  மற்றதெல்லாம் நம்ம தப்பு பாஸு! இனிமயாவது சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்குவோம். சொன்ன ஆளை வேண்டவும் வேண்டாம்! நோண்டவும் வேண்டாம்!  

 20. //சாய்பாபா என்னும் பன்றித்தலையன் பாபாவின்…//

  நோ…அவர் ஹிப்பி தலையன் என்று நீங்கள் கொடுத்த டைட்டில் தான் நல்லா இருக்கு…

  //சாரு: வாங்குற காசுக்கு மேல கூவுராண்டா கொய்யால//

  நிறைய சினிமா பார்ப்பீங்க போல இருக்கு.

  //பல இலட்சம் பக்தர்களுக்காக நித்தியா மட்டுமே சிந்தித்தாராம்.//

  அவருக்காக சிந்திக்கல போல இருக்கு. சிந்திச்சிருந்தாதான் அடுத்தவன் படம் எடுக்கிறத கண்டுபிடிச்சிருப்பாரே…

 21. //எதிரே ஒரு காரில் எங்கள் எதிரே நித்யானந்தர் சென்று கொண்டிருந்தார். உடனே எனக்குத் தெரிந்தவர்கள் மூலம் விசாரிக்கிறேன். அவர் அப்போது வேறு எங்கோ கர்னாடகாவில் தங்கி இருக்கிறார்.

  நித்யானந்தரின் இணைய தள முகவரி: http://www.dhyanapeetam.org/
  தொடர்பு முகவரி: http://www.dhyanapeetam.org/web/Contact.asp//
  இப்படி அவரோட ஏஜெண்ட் போல பதிவுக்கு பதிவு அவர் புகழ்பாடிவிட்டு, நித்தியானந்தர் செய்தது தவறு என்றதும் நான் ஏமாந்துவிட்டேன். தவறான ஒரு ஆளை பற்றி எழுதிவிட்டேன் என்ற சொல்லாமல், அங்கு இருந்தவங்க சிலர் நீலபட நடிகையாம், இவரு இஸ்லாமிய வழியை பின்பற்றுகிறவராம் அதனால் ஒதுங்கி இருந்தாராம். என்று சொல்லிய சப்பைகட்டுக்கு உங்களிடமிருந்து இன்னும் காட்டமான பதிவை எதிர்பார்த்திருந்தேன் வினவு.

  • நகைச்சுவை சக்கரவர்த்தி குசும்பனிடம் இவ்வ்வளவு ஆவேசத்தையும் கோபத்தையும் பார்ப்பதில் மகிழ்ச்சி. குசும்பன் எதிர்பார்க்கும் காட்டத்தை எதிர்காலத்தில் எழுதுகிறோம்.

   • அய்யா நீங்க கிண்டலுக்கு சொல்றீங்களா இல்லை சீரியஸா சொல்றீங்கலான்னு தெரியவில்லை இருந்தாலும் நான் சொல்லிவிடுகிறேன், நேற்று மாலை வரை நித்தியாணந்தாவை வைத்து ட்விட்டர், Buzzல் கிண்டல்தான் செய்துக்கொண்டு இருந்தேன், இவர் பதிவை பார்க்கும் வரை. அதன் பிறகு சத்தியமாக சொல்கிறேன் எதுக்கும் இவ்வளோ கோவம் வந்தது இல்லை. அங்கிருந்தவங்க எல்லாம் மந்திரிச்சுவிட்ட ஆட்டு மந்தை போல் நித்தியானந்தர் சொல்வது அனைத்தையும் நம்பிக்கிட்டு இருந்தாங்களாம். இவரு மட்டும் இத்தனை மாதம் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தார்? நாலு கெட்டவார்த்தை போட்டு திட்டிவிட்டால் சரி ஆகிடுமா? பிரச்சினை என்றதும் இஸ்லாமிய போர்வைக்குள் நுழைந்துவிட்டால் யாரும் அடிக்கமாட்டாங்க என்று தைரியமா? நித்தியானந்தருக்கு தெரிஞ்சோ தெரியாமலோ அளவுக்கு மீறி விளம்பரம் கொடுத்தார் அதுபற்றி சின்ன வருத்தம் கூட இல்லை.

    • குசும்பன், கிண்டலுக்கு சொல்லவில்லை. உண்மையிலேயே உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன். உங்களைப் போன்றவர்களின் கோபம் மற்றவர்களுக்கும் வரவேண்டும். வரவழையுங்கள். நன்றி.

 22. //குச்சியில் காண்டம் வைப்பது டூ மச்.
  //

  :)))))))))))))))))))))))))))))) lol :))))))))))))))))))
  lol…:)))))))) still laughing …oh, boy, oh boy,…::))))))) can’t control குச்சியில் காண்டம் வைப்பது டூ மச்……..:)))))))))))))))) lol ah ah ah

  • ////குச்சியில் காண்டம் வைப்பது டூ மச்.
   //

   🙂 ))))))))))))))))))))))))))))) lol 🙂 )))))))))))))))))
   lol…:)))))))) still laughing …oh, boy, oh boy,…::))))))) can’t control குச்சியில் காண்டம் வைப்பது டூ மச்……..:)))))))))))))))) lol ah ah ah//

   Sema comedy

 23. ”””’நித்தியை கார்ப்பரேட் தீர்க்கதரிசியாக உருவாக்கிய குமுதமோ நித்தியின் ஆபாச வீடியோவை தன் இணையத்தில் கூச்சமில்லாமல் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டுகிறது. “ஏண்டா நாயே, நீதான்டா அந்த நாய்க்கு ஐந்து வருடமா பூஜை போட்டு கொண்டாடினாய்” என்று வாசகர்கள் செருப்பைக் கொண்டு அடிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் குமுதம் கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போட்டு கல்லாக்கட்டுகிறது””””

  சாட்டையடி உரைக்காது.

  மனிதனாக இருந்தால் அசா பாசங்கள் எல்லாம் இருக்கும் .இதற்க்கு அப்பார் பட்ட மனிதனே உலகில் கிடையாது….அவன் எந்த மதத்தை சார்ந்தவானலும் …..மனிதற்கள் முட்டாளாக இருந்தால்

  சந்தர்பவாதிகள் பயன்படுத்தான் செய்வார்கள் .இதில் எந்த சாமியாரக இருந்தாலும் குறை மக்கள் மேல் தான்…….

 24. ஆதி சங்கரன் முதல் எல்லா ஆனந்தர் வரையில் இந்த வேலைதான். சௌந்தரிய லகரி முதல் நக்கீரன் வரையில் இதே தொடர் கதைதான். ஒரு லாபம் கருதிதான் எல்லோரும் இந்த புள்ளியில் இணைகிறார்கள். அந்த புள்ளி வியாபாரம், மூலதனம், லாப வேட்டை. காட்டு வேட்டை குறித்து பேசாத, தடித்த தோலுடைய இந்த பன்றிகள் (நக்கீரன் & சன் டி வி) இப்போ நல்லாவே தனக்கு வேண்டியதை திங்குது. வேலன்

 25. இது இது….
  பின்னிட்டீங்க…

  ஏம்பா இப்படி எழுதனும்.. மத்தவங்களும் எழுதியிருகீங்களே…
  இப்படி, அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா! …

 26. உங்களின் இந்த கார்ட்டூனை நான் எனது பதிவில் வெளியிட்டு உள்ளேன்.
  உங்களின் பெயரோடு.

  ஆட்சேபனை இருப்பின் பின்னூட்டம் வழியாக சொல்லுங்கள் எடுத்து விடுகிறேன்.

  கோரிக்கை:
  ————-

  இந்த சாமியார்களுக்கு அல்லக்கையாக இருக்கும் எழுத்து வியாதிகள். அப்புறம் அந்த அல்லக்கைகளுக்கு சொம்பு தூக்கும் பதிவு வியாதிகளையும் சேர்த்து ஒரு கான்செப்டில் கார்ர்டூன் போட முடியுமா?

  தகவல்:
  1 .விசிறி சாமியாரின் எழுத்துவியாதி பக்தர்
  2 .கர கர சங்கராவின் எழுத்துவியாதி பக்தர்
  3 .அல்டிமேட்டாக மொத்த பொந்து மதத்துக்கு சொம்பு தூக்கும் எழுத்துவியாதி பக்தர்
  4 .கருணைக்கடல் நிதியாவிற்கு இருக்கும் எழுத்துவியாதி பக்தர்
  5.வருங்காலத்தில் மாட்டினால் என்ன ஆகும் என்று சிந்தித்து உசாராக இருக்கும் மற்ற சாமியார்கள் வர்களின் பக்தர்கள்..

 27. கட்டுரை தெளிவுபட இருக்கிறது. நன்றி.

  ஒரு சந்தேகம்
  மீனகம் என்ற இனையத்தில் எழுதும் இராவணனா இந்த இராவணன்.?

  • மனிதன், மீனகம் இணையத்தில் எழுதும் இராவணன் வேறு, வினவில் எழுதும் இராவணன் வேறு. மீனக இராவணணை யாரென்றே தெரியாது.

 28. அரசியல் வாதிக்கும் பத்திரிகைகளுக்கும் விதியாசம் இல்லை அவர்கள் ஒரு விததில் நடிக்கிறார்கள் பத்திரிகைகாரகள் ஒருவிதத்தில் நடிகிறார்கள் எல்லாம் பண்துக்காக பத்திரிகை காரங்கழுக்கு செய்தி கிடைத்தால் நன்மை தீமை எல்லாம் யொசிக்கமட்டார் கள் ……….பணம் ….பணம்…..இதுதான்……அவர்களை பொறுதவரை செய்திவேண்டும்..

 29. சாரு நா……

  ஆய்வாளர்கள் அல்லும் பகலும் ஆய்வு செய்து இன்னும் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை.குண்டி நக்கி சாருக்கு , இந்த சாமியார்கள் தீ நுண்ம (வைரஸ்) நோய்களையும், புற்று நோயும் ஒழிந்தானாம். புடுங்கி சாரு , அந்துமணி இடம் சென்று சரக்குகளை பெற்று கொண்டு, மாந்த உறுப்புகளை உறுபபுகளாகவே உச்சரித்து எழுதி தள்ளு. முடிந்தால் ஆசிரமம் சென்று , நீல பட நாயகிகளிடம் கொஞ்சு…… கசந்து விட்டால், நான் இரண்டு மாதங்களாக கவனித்து அதனால் விலகி வந்தேன் என அள்ளி விடு.

 30. “சாரு..போன்ற எழுத்து விபசாரிகளைநாம் தான் ஒதுக்க வேண்டும்.
  என்ன கொடுமை என்றால் இன்னும்,இவருக்காக ஒரு மொக்கை கூட்டம்துணை போவது”
  “சாரு: வாங்குற காசுக்கு மேல கூவுராண்டா கொய்யால”

  :-))))))))))

 31. கட்டுரை பல இடங்களில் அருமை என்று சொல்ல வைக்கிறது. வெகு முக்கியமாய் கட்டுரை முன் வைக்கும் விஷயங்கள் பல இடங்களில் நியாயமானவையாய் இருக்கின்றது.

  ஆனால் அதீத கோபமோ அல்லது வெறுப்போ கட்டுரையின் வேறு சில இடங்களில் வார்த்தைகளை அலைபாய வைத்து விடுகின்றது.

  //சாய்பாபா ஒரு ஓரினச் சேர்க்கைப் ப்ரியன் என்பதையும் கட்டாயமாக பல இளைஞர்களை கரெக்ட் செய்து சிஷ்யப் பிள்ளைகளாக வைத்திருப்பதையும் அமபலப்படுத்திய வெளிநாட்டு ஊடகங்களும் உண்டு.//

  சாய்பாபா மீது வண்டி வண்டியாய் வசைகளையோ, குற்றங்களையோ அள்ளி வீசலாம்தான். அது ஊரை ஏமாற்றி சொத்து சேர்ப்பது, மூட நம்பிக்கைகளை விதைப்பது கல்கி ஆசிரமம் போல போதை வகையறாக்களை கொடுத்து ஆட்களை மயக்குவது என்று பட்டியல் நீளலாம். ஆனால் மேற்சொன்ன வரிகள் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஓரினச் சேர்க்கை தவறு என்று இதன் மூலம் சொல்ல வருகிறீர்களோ? அது கலாச்சாரக் காவலர்கள் செய்யும் வேலையாயிற்றே.

  //நித்தியாவின் ஆசிரமத்தில் முன்னாள் நீலப்பட நாயகிகளைக் கண்டிருப்பதாக நித்தியாவின் சீடர் சாருவே தெரிவித்திருக்கிறார்.//

  🙂 இதில் மட்டும் சாருவின் வார்த்தைகளை எடுத்திருந்திருக்கத் தேவையில்லை. சாருவின் நீலப்பட நாயகிகள் என்ற பதமானது அப்பட்டமான பிறழ்ந்த மன நிலை. காமத்தைக் கொண்டாடும் ஒரு எழுத்தாளர், பெண்ணுடலின் மீதான மயக்கத்தை தனது எழுத்துக்களில் தொடர்ந்து எழுதி வரும் ஒருவரும், அந்த எழுத்து விற்பனையாவதிலும் தவறில்லை என்று கருத்தும் ஒருவர் தொழிலுக்காக மற்றும் காசுக்காக அதே செயல்களைச் செய்த பெண்களை நீலப்பட நடிகைகள் என்ற இரட்டை வார்த்தை பதத்திற்குள் சுருக்கியதன் பிண்ணனியானது அப்பட்டமான பொதுப்புத்தி பாமரத் தனத்தின் வெளிப்பாடு மட்டுமே.

  இதை இன்னொரு வகையில் பார்த்தால் சரி ஒரு காலத்தில் நீலப்பட நடிகைகள்தான். இப்போது மார்க்கெட் போன பின்பு குற்ற உணர்வின் பொருட்டோ, வேறு என்ன காரணத்திற்காகவோ ஆசிரமம் சென்று வந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்ளுங்கள். இதில் என்ன பிரச்சினை. அவர்கள் சமுதாயத்தில் நடமாடத் தகுதியே இல்லாதவர்களா என்ன? நடிகைகளை பொது சொத்தாய் பார்க்கும் உளவியல் வக்கிரம் பிடித்த பொது ஜன மனதின் அடுத்த கட்ட வடிமாய் ச்சீ ச்சீ அவங்க எல்லாம் நீலப்பட நடிகைகள் என்ற இயல்பைச் சேர்க்கலாம். இதை பொது மனிதன் சொல்வதை கூட அவனது மெச்சூரிட்டி குறைவாய் பார்க்கலாம். ஆனால் சாரு போன்ற காமத்தைக் கொண்டாடும் எழுத்தாளன், முக்கியமாய் இப்படி எழுதுவதை வைத்து நான் எவ்வளவு நேர்மையாய் இருக்கிறேன் என்று ஆதாயம் தேடும் ஒரு எழுத்தாளன் சொல்லக் கூடாது.

  //காலையில் எழும்பி ஒரு டீயும் ஒரு பன்னும் வாங்கி தின்று விட்டு கிடைக்கிற கூலியில் கத்தரிக்காய் வாங்கி சுண்டக் குழம்பு வைத்தா தினம் தோறும் தின்று கொண்டிருக்கிறார்கள்? அல்லது அண்ணாசாலை சாந்தி தியேட்டர் சப்வேயில் தன் வயிற்றுக்காக தன்னை விற்று அதையே பிழைப்பாக்கிக் கொண்ட பாலியல் தொழிலாளியின் கற்பு பற்றி இவர்கள் என்ன நினைக்கிறார்கள்?//

  //இது கொழுப்பெடுத்த பணக்கார நாய்களின் அரிப்பு. வீக் எண்ட் பார்டிக்குப் போவது, கற்பு பற்றி தங்களின் வர்க்க சொறிக்குத் தோதாக கருத்துச் சொல்வது என்று போகிறதே தவிர//

  🙂

  //தனது காதலியை சைக்கிள் வைத்து மிதித்துச் சென்று ஒரு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து அமர்ந்து பேசுவதற்குக் கூட ஒரு இடமில்லாமல் சந்தடி மிகுந்த பேருந்து ஓரத்தில் நின்ற படி பேசிப் பிரிகிறார்களோ அந்த காதலுணர்வை விட இது எவ்வகையில் சிறந்ததாக இருக்க முடியும்?//

  🙂 Filmy or Cinematic ன்னு சொல்லலாமா? ஏன் Poetric னு கூட தான் சொல்லலாம். இது Individual perspective. ஆளைப் பொறுத்து மாறக்கூடியது. ஆனால் தனி மனிதர்களுக்கான காதல், ஒழுக்கம், மிக முக்கியமாய் பெண்ணியம் ஆகியவை குறித்தான கருத்தாகத்தில் வினவு தளம் இன்னும் சில தூரங்களை கடக்க வேண்டியிருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன். ஏழைகளின் காதலும், ஒழுக்கமும் மட்டுமே சிறந்தது. நடுத்தர, மேல் நடுத்தர, உயர் தர மக்களின் காதலானது போலித்தனமானது அல்லது வரையறை செய்யப்பட்ட முதலாளித்துவ மரபுகளில் இருந்துக் கொண்டு போலித்தனத்தை சுமந்து திரிபவை என்ற எண்ணம் ஆழமாய் உங்களது மனதில் பதிந்திருக்கிறது. சாதி, பணம், பால் நிலை, இருப்பிடம் என்று எந்த அடிப்படையிலும் பகுக்கப்பட்ட ஒரு கூட்டத்தை ஒரு பெரும் பொது கருத்தாக்கத்திற்குள் முழுதுமாய் அடைத்து விட முடியாது. நீங்கள் சொன்ன சைக்கிள் + க்டலை மிட்டாய் மனிதர்களிலும் வெள்ளைத் தோலின் மீதான ஆசை, பெண்ணை கவர்ச்சிப் பொருளாய் பார்க்கும் தன்மை, துரோகம், பெண்டாளுதல் என்று பல விதமான மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

  இதை இந்த இடத்தில் நான் சொல்ல காரணம் இருக்கின்றது. பெண்ணியத்தைப் பற்றி பேசும் பலர் மீது இயல்பாகவே உங்களுக்கு வெறுப்பு இருக்கின்றது. அது அவர்கள் வர்க்கப்பிரச்சினையை பற்றி அதிகம் கவலைப்படாதவர்களாக இருப்பதோ அல்லது அவர்கள் முன் வைக்கும் பெண்ணியம் Western Feminism சார்ந்ததாக இருப்பதோ அல்லது வேறு ஏதெனுமா என்று தெரிய வில்லை. சில சமயங்களில் கருத்தளவில் அவர்கள் சொல்வது உங்களுக்கு நியாயமானதாய் இருந்தாலும், அதை அவர்கள் சொல்ல தகுதியற்றவர்கள் என்று தீர்ப்பும் எழுதி விடுகின்றீர்கள். பிரச்சினையே இங்குதான் ஆரம்பிக்கின்றது. ரேவதியோ, சுஹாசினியோ பேசிய விஷயங்கள் சரி என்று சொல்லலாம் அல்லது தவறு என்று சொல்லலாம். ஆனால் நீங்கள் இரண்டைப் பற்றியுமே பேசாமல் இவங்க யோக்கியதை இவ்ளோதான் என்று நபர்களின் ஒழுக்கத்தை முடிவு செய்தே பேசுவதால் ஏற்படும் பிரச்சினை. இதை இதற்கு மேலும் இங்கு பேசுவது கட்டுரையை ஹைஜாக் செய்தது போல் ஆகி விடும். இதைப் பற்றி பேச சமயம் வாய்க்காமலா போகும்.

  இதைத் தவிர கட்டுரை முழுதாய் எனக்கு ஏற்புடையதாய் இருந்தது. சொல்லப்போனால் குசும்பன் சொன்னது போல சாருவை இன்னு கொஞ்சம் வாங்கியிருந்தால் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். இன்னமும் அந்த ஆள் யாரோ நித்தியானந்தர் செய்ததற்கு என்று என்னை எதற்கு எல்லரும் பரிதாபமாகவும், கோபமாகவும் பார்க்கிறார்கள் என்று ஒன்று தெரியாதது போல் பேசுவது கோபத்தை வரவழைக்கிறது. இந்த கருமத்தைக் கூட புரிஞ்சுக்க முடியலைன்னா நீ எல்லாம் என்ன புடுங்கி எழுத்தாளனா இருந்துடப் போற என்று கோபமாய் கேட்கத் தோன்றுகிறதுதான்.

  கட்டுரையில் எனக்குப் பிடித்த பகுதியே தமிழ்செல்வன் அவர்களுக்கான உங்களது கேள்விகள்தான்.

 32. இனிமேலும் இங்கு யாரும் திருந்தப்போவதில்லை. கொஞ்சம் நாள் திட்டிவிட்டு வேறு சாமியாரிடம் போய்விடும் இந்தக் கூட்டம். இது காலகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்துக்களின் தர்மம், மதத்தைக் களங்கப்படுத்திவிட்டான் என்று ஒரு கூட்டம்.  இந்துமத புராணத்தில் கடவுள் முதல் பக்தர்கள் வரை களவியில் கரைகண்டவர்கள் தானே. 
  கொஞ்சம் வித்யாசமாக சிந்திப்பது போல காட்டிக்கொள்ளும் இன்னும் சில கூட்டம். “அப்படி என்ன தவறு செய்துவிட்டான். ஒரு இளம்சாமியார் ஒரு பெண்ணுடன் இருப்பது தவறா?”“ஒருவனுடைய அந்தரங்கத்தைக் கேலிப்பொருளாக்கும் ஊடகம்.”இதற்கெல்லாம் மேலெயொருவர் “நித்யா செய்தது எல்லாம் சரிதான், ஆனால் அறையில் கேமெரா இருக்கிறதா என்று அவர் பார்த்திருக்க வேண்டும்”. 
  ஒருவேளை நித்யானந்தா பதிவு ஆரம்பித்து இருந்தால், இப்போது இவனை திட்டும் பலர் ஓடிபோய் பின்னூட்டம் போட்டு விபூதி வாங்கி வாயில் போட்டுக்கொண்டிருப்பார்கள். இந்து பாசிஸ்ட்டுகள் மட்டுமல்ல. 87 வயதிலும் திரிஷா, தமன்னா டான்ஸ் பார்த்துரசிக்கும் தன்னுடைய தலைவரை விமர்சிக்காத திராவிட கண்மணிகள், இவனை விமர்சிக்க கிளம்பிட்டாங்க. பர்தாவை முற்போக்காக சொல்லி மல்லுகட்டும் ஒரு பதிவர், இவனைப் பற்றி குற்றச்சாட்டு சொல்கிறார்.

  நீயாநானாவில் பேச்சாற்றல் உதாரணத்திற்கு பெரியாருடன், இந்த சில்லரை பயலையும் சேர்த்து சொன்னவர் தான் சாரு. பக்திப்பரவசத்தில் உருகி, பதிவர்களுக்கு நித்யாவின் ஊசிப்போன ஆன்மீக வடைகளை வினியோகித்து வந்து, இப்போது ஏமாற்றிவிட்டார் என்று ஒப்புக்கு சொன்னால் எப்படி. அப்படி என்னய்யா அவன் செய்துட்டான். பின்னவீனத்துவத்தில் சொல்லாத விடயத்தையா அந்த சாமியார் செய்தான்.

 33. “உலக மக்களின் எதிர்ப்பை மீறி ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்கா அமெரிக்க மக்களின் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பி தடையில்லாமல் ஆயுத விற்பனையைத் தொடர கிளப்பிவிட்டதுதான் கிளிண்டன் மோனிகா லெவின்ஸ்கி விவாகாரம். மக்கள் மோனிகாவின் கனவுகளில் ஆழ்ந்திருக்க கொடூரமான போரை நடத்தி லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா. இதோ விஷம் போல் ஏறும் விலைவாசி என்னும் கசப்புகளில் இருந்து மக்களைத் திசை திருப்ப, எங்கும் உருவாகி வரும் மக்கள் எதிர்ப்புணர்வுகளை மழுங்கடிக்க ஆளும் வர்க்கங்களாலும் அவர்களின் ஊடகங்களாலும் பயன்படுத்தப்படும் செக்ஸ் ஸ்கேண்டல் யுத்திதான் இந்த போலிச்சாமியார்களின் காம லீலைகள்.”

  கிளிண்டன் அதிபராக இருந்த காலகட்டத்தில் ஈராக் போர் நடைபெறவில்லை அதனால் நீங்கள் கூறிய எடுத்துகாட்டு தவறு. நிதயானந்தா பற்றி கூறிய கருத்தகளை ஆதரிக்கிறேன் ஆனால் நீங்கள் மேல்தட்டு மக்கள் மீது வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை ஏற்க முடியவில்லை. எதையும் ஆதாரத்துடன் எழுதுமாறு கேட்டு கொளுகிறேன்

 34. இந்தச் சம்வத்தில் ஊடகங்கள் நடந்து கொள்ளும் விதத்தில் உடன்பாடில்லை. அவைகள் சாமியாரை விட மோசமான வேலையையே செய்துகொண்டிருக்கின்றது.
  உடற்சேர்க்கையை மையமாக வைத்து நடக்கும் இந்த பிரளயம் குறித்து அருவருப்பாக இருக்கின்றது. அறியாமையின் நிலை குறித்தும் தெரிந்தே மல்லுக்கட்டும் சமூகம் குறித்தும் கவலையாக இருக்கின்றது.
  உடற்சேர்க்கை என்பது காலாகாலம் கடவுளோடு சம்மந்தப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது. பாலான புத்தகங்கள் டி வி டி க்கள் இல்லாத காலத்தில் புராணக்கதைகளில் கடவுள்கள் புணர்ந்ததை பிரசங்கம் செய்தும் படித்தும் சிற்றின்பம் கண்டுவந்துள்ளனர். கிருஸ்ணலீலைகள் சிவபெருமானும் தேவியும் யானை வடிவமெடுத்து புணர்ந்து விநாயகரை பெற்றெடுத்தது. சிவனும் விஸ்ணுவும் ஏடாகூடமாகி வெளிவந்த விந்தை கையில் பிடித்து செய்த கையப்பன் பின்னர் ஐயப்பனாக மறியது. இந்திரன் ஆயிரம் பெண்களை வாழை இலையில் அம்மணமாக இருத்தி புணராமலே தொடுகை மூலம் சுகப்படுத்தி பரிசோதனை செய்தது என்று ஆயிரம் ஆயிரம் புராணக்கதைகளை முன்வைக்க முடியும். கடவுள் சிலைகளும் உருவப்படங்களும் பருத்த முலைகளுடன் கவர்ச்சியானவையும் சிவப்பானவையுமாக உருவானதன் அடிப்படையே காமம் தான். உருவங்களை பார்த்து சூடேற்றுவதும் புராணங்களை படித்து சூடேற்றுவதும் மடங்களிலும் மடப்பள்ளிகளிலும் தேவதாசிகளை பரதநாட்டியம் ஆடவிட்டு சூடேற்றுவதும் பின்னர் புணர்வதும் வரலாறாக இருக்கின்றது. உடற்சேர்கை ஆபாசம் விபச்சாரம் அனைத்தினது பிறப்பிடமும் வளர்ப்பிடமும் கடவுள் புராணம் வளிபாடு என்பனவற்றுக்குள்ளகவே இருக்கின்றது. இங்கே புனிதமும் இதற்குள்ளகவே இருக்கின்றது என்பது தான் அறியாமை. உடற்சேற்கை மறுப்பும் ஒழுக்கமும் இதற்குள்ளகவே தேடப்படுகின்றது. துறவிகள் மதத்தலைவர்கள் ஒழுக்கமுடன் இருக்கவேண்டும் என்ற விதியையும் இதற்குள்ளாகத்தான் ஏற்படுத்தப்படுகின்றது. வள்ளலார் கூட யோனியை புண் என்று வர்ணித்துள்ளார். அவ்வளவு இறுக்கமான நிலை ஆபாசக் கடலுக்குள் புனிதத்தேடலில் இருந்துள்ளது. இந்த நிலையில் திடீர் என்று நித்தியானந்த ரஞ்சிதா பண்ணிவிட்டார்கள் ,எல்லாம் போச்சு, நடக்கக் கூடாதது நடந்து விட்டது என்று ஊடகங்கள் பில்டப் பண்ணுவதை தான் தாங்க முடியவில்லை. மேசமான உடற்சேர்க்கையை உருவாக்கியதும் இந்தக் காவிக் கூட்டம் தான் அதை மையமாக வைத்து நல்லது கெட்டதை தீர்மானிக்கும் கேவலத்தை தந்ததும் இந்த காவிக் கூட்டம் தான். இதற்குள்ளாகவே ஊடகங்கள் உழல்வதை நினைக்க அருவெருப்பாக இருக்கின்றது. சன் டிவி முதல் எல்லா கண்றாவியும் குண்டிகளை சூம் பண்ணியும் மார்புகளை சூம் பண்ணியும் விதவிதமாக ஆட்டி குலுக்கி நாள் முழுக்க சூடேற்றும் வேலையை செய்துகொண்டிருக்கின்றது (புராணங்கள் போல்) பின்னர் உடற்சேர்க்கையை படம்பிடித்து கலாச்சாரத்தை காப்பாற்றுகின்றது? கோவாலு மீசையை முறுக்கிகொண்டு கலாச்சாரத்தை காப்பாற்ற புறப்பட்டுவிட்டார்?
  நித்தியானந்தவுக்கு சூடும் சுதியும் கூடியபோது உடற்ச்சேர்க்கையில் ஈடுபட்டார். அம்புட்டுதான். திருந்தவேண்டியது நித்தியானந்த இல்லை சனங்களும் அதை மேய்கும் ஊடகங்களும் தான்.

 35. //////இது கொழுப்பெடுத்த பணக்கார நாய்களின் அரிப்பு. வீக் எண்ட் பார்டிக்குப் போவது, கற்பு பற்றி தங்களின் வர்க்க சொறிக்குத் தோதாக கருத்துச் சொல்வது என்று போகிறதே தவிர//
  //தனது காதலியை சைக்கிள் வைத்து மிதித்துச் சென்று ஒரு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து அமர்ந்து பேசுவதற்குக் கூட ஒரு இடமில்லாமல் சந்தடி மிகுந்த பேருந்து ஓரத்தில் நின்ற படி பேசிப் பிரிகிறார்களோ அந்த காதலுணர்வை விட இது எவ்வகையில் சிறந்ததாக இருக்க முடியும்?//
  இதெல்லாம் பொதுப்படுத்தல்கள். காதல் என்பது தனிமனித உணர்வு. இது வர்கம் சார்ந்து மாறுபடும் என்பதெல்லாம் உளரல். இன்றைய திருப்பூரில் தொழிலாளர் வர்கத்தினரின் ‘காதல்களை’ பற்றி விசாரித்து பாருங்களேன். Free sex and cheating எந்த அளவு அவர்களிடம் உள்ளது என்று அங்கு உள்ள தோழர்களுடம் கேளுங்களேன்.
  உடனே இவை முதலாளித்துவ ஊடக சதிகளினால் ஏற்பட்ட விளைவுகள் என்று கதைக்க வேண்டாம். நான் பல கைத்தறி நெசவாளிகள் மற்றும் கிராமபுற இளைஞர்களுடன் பழகியிருக்கிறேன். அவர்களிடம் இருக்கும் பாலியில் ’சுதந்திரம்’, படித்த, நகர்புற, நடுத்தர வர்கத்திற்க்கு இல்லை என்று (ஏக்கத்துடன்) எண்ணுமளவிற்க்கு லீலைகள். ஹூம்..

  • அத சொல்ல நீ யாரு ? இங்கு நான் பதில் சொல்ல கூடாது என்று நீ சொல்ல உனக்கு உரிமையோ தகுதியோ இல்லை. ஃபாசிச மனோபாவம் உனக்கு. வினவு வேண்டுமானால் என் பின்னூட்டத்தை நீக்கலாம் அல்லது தடை செய்யலாம்.

   • டென்சன் ஆவதிங்க சார்மென்மையா, இனிமையா விவாதிக்கோனும்,

 36. சாரு இப்படி ஒன்றுமே நடக்காதது போல காட்டிக் கொள்வதை பார்த்தால் (மை நேம் இஸ் கான் க்கு விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறார்) ‘தான் மிகவும் வெளிப்படையானவன், விமர்சனத்தை நேரிடையாக சந்திப்பவன்’ என்றெல்லாம் இத்தனை நாள் உதார் விட்டுக் கொண்டிருந்தார் என்று தான் கருத தோன்றுகிறது. புதுவை சிவா சொன்னது போல சாருவை ஒதுக்கலாம் தான். ஆனா இவ்வளவு நாள் நித்யாவை கடவுள் அப்படீன்னு சிலாகிச்சு எழுதி, தான் நினைக்கிறது தான் ரைட்டு அப்படீன்ற மாதிரி பேசிட்டு இப்போ தான் அடிக்கிற பல்டியும் நியாயம் தான்னு சொல்ற அவருடைய சந்தர்பவாத குணாதிசியத்தை வெளிச்சம் போட்டு காட்டுறது இப்போதைக்கு மிக அவசியம். இல்லேன்னா இவர் உளறலை படிச்சிட்டு இன்னும் கூட ஒரு கூட்டம் இவர் போல வருமான்னு கள்ளை குடிச்ச குரங்காட்டம் இவர் பின்னாடி தான் சுத்தும்.

 37. சாருவை அறிவேன். அவர் மீது பல விமர்சனங்கள் எல்லாம் சரிதான். ஆனால் இந்த சாமியார் விசியத்தில் உண்மையில் ஏமார்ந்து விட்டார் என்றே கருதுகிறேன். அவரின் வலைமனையில் வைரஸ் புகுந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. வேண்டுமென்றே அழிக்க நினைத்திருந்தால், நித்யானந்தா பற்றிய பதிவுகளை மட்டும் அழித்திருக்க முடியும். பல நூறு இதர பதிவுகளையும் அழிக்க வேண்டியதில்லை. பெரிய இழப்புதான் அவருக்கு அது