Tuesday, May 30, 2023
முகப்புஜெயேந்திரன் - நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!
Array

ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!

-


vote-012( ஜெயேந்திரர் அறைக்குள் நித்யானந்தா திடீரென  ஓடி வர, சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஜெயேந்திரர் வெடுக்கென நிறுத்திவிட்டு ஐயோ நானில்ல நானில்ல சின்னவன்தான் அவள என்னமோ பண்ணான் என்று பதறுகிறார். “அய்யோ நான்தான் ஸ்வாமி, நித்யானந்தா… காப்பாத்துங்க” என்று கத்துவதைப் பார்த்தபிறகு தெம்பாக நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜெயேந்திரர்.)

ஜெயேந்திரன்: வாடா, வா, நான் வேற எந்தப் பக்கத்துலேந்து அருவா வருமோன்னு பயந்துண்டு இருக்கேன். நீ என்னடான்னா இப்படி ஓடி வர்ற! அது சரி டி.வி, பத்திரிக்கைலாம் நார்ற மாதிரி என்னடா இப்படி பண்ணிட்டே! அபிஷ்டு.

நித்யானந்தா: பெரியவா மன்னிக்கணும், அன்னிக்கு தீர்த்தம் கொஞ்சம் ஓவரா போயிடுச்சு, ஏதோ புத்தி கெட்டுட்டேன் பெருசு பண்ணாதிங்க, காப்பாத்தி வுடுங்க!

ஜெயேந்திரன்: தத்தி, இப்படியா பண்ணுவா! கதவத்திற காத்துவரட்டும்னு ஏதோ புத்திசாலித்தனமா கிறுக்கிண்டு கெடக்குறியேன்னு பாத்தேன், கடைசில கதவத் திறந்தா ரஞ்சிதால்ல வந்துட்டா ஹீ..ஹீ.. என் சமத்தல்லாம் பாத்தும் இப்படியா பப்ளிக் பாக்குற மாதிரி பண்றது! கிரகச்சாரம்! சரி சரி வுடு! ஆனானப்பட்ட விஸ்வாமித்திரனே அப்சரஸ்களை பாத்து அப்செட் ஆகுறப்ப,நீ ரஞ்சிதாவைப் பாத்தோன்னேயே இன்ஜின் ஜாம்  ஆயிட்டே!

நித்யானந்தா: என்ன சாமி லோக்கலா பேசுறீங்க?

ஜெயேந்திரன்: பின்னே ஜகத்குருன்னா சான்ஸ்கிரீட்ல குழஞ்சு கான்கிரீட்ல புரளுவேன்னு பாத்தியா! பர்னசாலை குடிசைல ரிஷிபத்தினிகளோடும் விளையாண்டவா நாம், பைவ் ஸ்டார் ஓட்டல்ல பிஷி செட்யூல் நடிகையோடும் புரண்டவா நாம்! இதெல்லாம் ஒரு மேட்டரா போடா அசடு!

நித்யானந்தா: நல்லவேளை நான் கூட நடந்ததுக்கு வருத்தமோன்னு நெனச்சேன், இனிமே ஜாக்கிரதையா இருக்குறேன் ஸ்வாமி.

ஜெயேந்திரன்: என்ன ஜாக்கிரதையோ! என்ன யோக்யதையோ! என்னயே எடுத்தக்கோ! எவிடன்ஸ் இல்லாம காமா சோமான்னு பண்ணேனேனோ, என்னல்லாம் பாத்து என்னத்தக் கத்துண்டியோ மண்டு… மண்டு! என்ன தப்பு வேணாலும் பண்ணின்டு மூஞ்சை நமோ நாராயணான்னு வச்சிக்கத் தெரியாம என்ன சாமியார்டா நீ! என்னக் கூடத்தான் பேப்பர்ல எழுதுனா, டி.வி.ல காட்டுனா. அனுராதா ரமணன் சொன்னா, அவா சொன்னா, இவா சொன்னான்னு வந்துச்சே ஒழிய எவிடன்ஸ் கிளிப்பிங்ஸ் எதனாச்சும் வந்துச்சா? காரியத்துல நீட்னஸ் வேணும், சம்போகம் பண்றவாள்ளாம் சங்கராச்சாரி ஆக முடியாது! அதுக்கெல்லாம் ஷ்பெஷல் பொஷிஷன் வேணுண்டா அம்பி!

நித்யானந்தா: உண்மைதான் ஸ்வாமி, உங்கள கன்சல்ட் பண்ணாம கோடம்பாக்கத்து பக்கம் தல வச்சது தப்புதான்! இந்த விசயத்துல நீங்கதான் காப்பாத்தணும், உங்களதான் தெய்வமா நம்பி வந்துருக்கேன்.. பயமா இருக்கு!

ஜெயேந்திரன்: இதுக்கெல்லாம் பயப்படறதிலிருந்தே தெரியறது நீ ஒரு அப்ரன்டீசுன்னு, தோ பக்கத்துல இருக்குற சின்னவன் பண்ணாததையோ நீ பண்ணிட்ட! பல பொம்மனாட்டி வாழ்க்கையை பாழடிச்சிட்டு எதுவுமே நடக்காதது மாதிரி தேமேன்னு உட்கார்ந்திருக்கான் பாரு! இல்ல என்னப் போல வர்ற பொம்மணாட்டியை எல்லாம் கையை புடிச்சு இழுத்தியா! இதுக்கெல்லாம் பயந்தா காஷாயம் கட்ட முடியாதுடா அம்பி! என்ன நம்பி வந்துட்டீல கவலையை விடு.. ஏன் கெடந்து பயப்படற? வேண்ணா தோ வீடியோ பாத்துக்கோ, ரிலாக்ஸ் பண்ணிக்கோ.. தாகசாந்திக்கு பாரின் தூத்தம் இருக்கு, எடுத்துக்கோ வேற ஏதாவது ‘புஷ்பம்’ வேணும்னா கேளு நம்ப தேவநாதன் இப்ப வெளிலதான் இருக்கான், ப்ரீயா சப்ளை பண்றேன் வச்சுக்கோ… எக்காரணம் கொண்டும் தப்பு பண்ணறதுக்கு மட்டும் நம்பள மாதிரி சாமியார்லாம் பயப்படக் கூடாது! புரியர்தா? .. ரிலாக்ஸ்டா அம்பி.. ரிலாக்ஸ்.

நித்யானந்தா: நீங்க என்னமோ சாதாரணமா சொல்லிட்டீங்க, நக்கீரன்ல படமா போடுறான், சன் நியூஸ்ல பிட்டு படமாவே காட்டுறான்.. திரும்ப தொழில் பண்ண முடியுமோன்னு பயமா இருக்கு ஸ்வாமி!

ஜெயேந்திரன்: என்னமோ நக்கீரன்ல போட்டானாம், சன்னுல காட்டுனானாம்! படம் போட்டு காசு பார்க்க புவனேஸ்வரி, பிலிம் காட்டி கல்லா கட்ட ரஞ்சிதான்னு போவியா! கிடந்து பேத்துற.. என்னக் காட்டாத படமா.. இந்த மானம், வெட்கம், சூடு, சுரணையல்லாம் லோகத்துல இந்த மனுஷாளுக்குத்தான். நம்பள மாதிரி ஆளுக்கெல்லாம் “சுக்கில புத்தி சுகமோ பவ”டா! மொதல்ல அசமஞ்மாட்டம் உளறி கொட்றத நிறுத்து! என்னப்பாரு ஸ்டேசன்ல வச்சு கேட்டப்ப கூட வாயத் திறந்தேனோ! ஹீ…ஹீ..ன்னு சிரிச்சிண்டே மழுப்பினேன். சட்டம், இ.பி.கோல்லாம் சாதாரண லாட்ஜ் போட்டு பண்றவாளுக்குத்தான், நம்பள மாதிரி மடத்த போட்டு பண்றவாளுக்கு சட்டம் மல ஜலத்துக்கு சமன்டா! வெளிக்கி போக வாழை இலையே நறுக்கிக் கொடுத்தாண்டா போலீசு.. போவியா..!

நித்தியானந்தா: இல்ல ஸ்வாமி தொடர்ந்து நக்கீரன்ல…

ஜெயேந்திரன்: போட அசடு! சும்மா நக்கீரன், நக்கீரன்ட்டு, அவனும் நம்பள வச்சி நாலு காசு பாக்க வேணாமா! யார் அவுத்துப்போட்டாலும் அவனுக்கு காசு! என்ன வச்சிக் கூடத்தான் ஒரு ரெண்டு மாசம் சம்பாதிச்சான். கொறஞ்சா போயிட்டேன். இவ்ளோ எழுதுறானே, என்னைக்காவது அவன் நம்பள தூக்குல போடு, மடத்தை புடுங்குன்னு சொல்லிருக்கானா, படத்தை பிரண்ட்ல போடுன்னுதானே சொல்றான்.. என்ன இருந்தாலும் அவன் நம்ப ஆளுடா.. (கண்ணடித்து சைகை காட்டுகிறார்!)

நித்தியானந்தா: எவ்ளோ பத்திரிக்கைக்கு நாம விளம்பரம் கொடுத்திருப்போம், நம்ம எழுதுறத வச்சு சம்பாதிச்சிருப்பான் பிரச்சனைன்னு வந்தோன்ன யோக்கியனா நடிக்கிறாங்களே! என்ன உலகம் ஸ்வாமி இது!

ஜெயேந்திரன்: அட போடா, சதா இதையே பேத்திண்டு! குமுதம் நீ எழுதுற போஸ் போட்டு குந்தவச்சு  சம்பாதிச்சன், நக்கீரனும் சன்னும் உன்ன படுக்க வச்சு சம்பாதிக்கறன்னு போவியா! என் கவலைல்லாம் கஷ்டப்பட்டு காரியம் பண்ணி கேஸ் ஆடறவா நாம, கடையப் போட்டு சி.டி. விக்கிறவா அவாளா! இந்த டிஸ்ட்டிரிப்பியூட் ரைட்ஸையாவது நமக்கு தர்றதில்லையோ, ஏமாத்திடறாளே! இந்து தர்மத்தோட ரைட்ஸை யாருக்கும் விட்டுத்தர முடியாதுன்னு நம்ப ராமகோபாலனை வச்சி என்ன பண்றேன் பாரு நீ!

நித்தியானந்தா: நம்ம சாரு கூட…

ஜெயேந்திரன்: யாருடா அவ? பாக்க நன்னா இருப்பாளா? வட நாட்டவளா?

நித்தியானந்தா: இல்ல சாமி சாரு நிவேதிதா, எழுத்தாளர், நம்ம மடத்தோட தீவிர விசுவாசி, அவர் புண்ணியத்துல தான் நம்ம குமுதம் மேட்டர்லேருந்து மிட்நைட் குவாட்டர் வரைக்கும் தடையில்லாம் போயிகிட்டிருந்தது… இப்ப அவர் பப்ளிக்கா என்ன திட்டி எழுதறார், ஆஸ்ரமத்துக்கு இதனால இமேஜ் போயிடுமோன்னு பயமா இருக்கு

ஜெயேந்திரன்: அடப்போடா இப்படி உலகம் தெரியாதவனா இருக்கியே? இவால்லாம் நம்மால பொழைக்கறவாடா… நாளைக்கே கரன்சி கடாட்சத்துக்காக மறுபடியும் பாராட்டி எழுதப்போறா.. இப்ப என்ன திட்டி எழுதாதவாளா?  அதனால என்ன காஞ்சி மடம் என்ன கொலாப்ஸா ஆயிடுத்து.. இந்த மாதிரி பப்ளிசிடில்லாம் நமக்கு அசெட்றா அம்பி.  இப்படியெல்லாம் நேஷ்னல் லெவல்ல நாலு பெரிய மனுஷா பார்வைக்கு போனாதானேடா நம்ம பொழைப்பும் ஓடும், ஏறுனது சன்னோட டீ.ஆர்.பி மட்டுமில்ல, ஞாபகம் வச்சுக்கோ.

நித்யானந்தா: இதெல்லாம் ஒரு பக்கம்னா, இந்து மக்கள் கட்சின்னு இன்னொரு குரூப் வேற கௌம்பிட்டான் ஸ்வாமி! என்னால இந்து மதத்துக்கே தீராத அவமானம்னு படத்தை போட்டு எரிக்கிறான், மடத்தப்போட்டு உடைக்கிறான்! பேசி ஆஃப் பண்ண ஏதாவது ரூட் இருந்தா சொல்லுங்களேன்.

ஜெயேந்திரன்: (ஹி..ஹி..ஹி.. பலமாக சிரித்துவிட்டு பக்கத்தில் முந்திரிப்பருப்பை அமுக்கும் சின்னவனைப் பார்த்து)ஏய்.. கேட்டியோ…என்னாலயும், உன்னாலயும் அவமானப்படுத்த முடியாத ஹிந்து மதத்தை இவன் பண்ணிட்டானாம்.. ரொம்ப ஆசைதான் இவனுக்கு…

நித்தியானந்தா: ஸ்வாமி என் நிலைமை புரியாம சிரிக்கிறீங்க!

ஜெயேந்திரன்: போடா தத்தி! கட்சின்னா நாலு கல்லு உடத்தான் செய்வான்! அப்பப்போ காசை விட்டெறிஞ்சின்னா, அவா ஏண்டா கல்ல விட்டெறியறா! நோக்கு சரியா டீல் பண்ணத் தெரியல, காட்டுறத காட்டுனா படியுறான். இப்ப ஊரே நாறுச்சு என்ன ஏதும் பண்ணாளோ!

நித்யானந்தா: எங்கிட்ட காட்டறதுக்கு பூணூல் இல்லியா ஸ்வாமி!

ஜெயேந்திரன்: இப்ப தெரியறதா, தல இருக்கறச்சே வால் ஆடப்படாது!  (சின்னவன் உள்ளே சென்றதை உறுதி செய்து பார்த்தபடி) பேசாம சின்னவன் இல்லாத நேரமா ரஞ்சிதாவை இங்க தள்ளிட்டு வர்றதை வுட்டுட்டு, தானே ராஜா, தானே மந்திரின்னா இப்படித்தான். என்ன, பத்து பொம்பளயக் கெடுத்துருப்பியா… அதுக்குள்ள பரமஹம்சர்ன்னு பட்டம் வச்சிட்டா எப்படி? பட்டம் வச்சவன்லாம் பெரியவாளா ஆக முடியாது! படுக்கை விரிச்சவன்லாம் ஜெயேந்திரன் ஆக முடியாது! மண்டு, மண்டு!

நித்யானந்தா: தப்புதான் ஸ்வாமி! நீங்க வேற வதக்காதீங்க, பேரு கெட்டதைக் கூட வேற ரூட்ல சரி கட்டலாம்.. இந்து மதத்தையே கெடுத்துட்டேன்னு கோர்ட்டு, கேசுன்னு போயி பேலன்ஸ் போயிடுமோன்னு பயமா இருக்கு! தவிர போலிச்சாமியார்னு பேரு வந்துருச்சே! தொழில்ல கேரண்டியும், செக்யூரிட்டியும் இல்லாம வெளிநாட்டுக்காரங்க எப்படி முதல் போடுவாங்க இனிமே.. அத நெனச்சாதான் உத்திராட்சை உறுத்துது.

ஜெயேந்திரன்: ஏண்டா கெடந்து புலம்புற.. நிலம சீராகுற வரைக்கும் ரூட்ட காஞ்சிபுரத்துக்கு மாத்தி வுடு, அந்த ஒரு லோடு சந்தனக் கட்டய நம்ம மடத்துக்கு எக்ஸ்போர்ட் பண்ணு! கஞ்சா பொட்டலத்த விபூதிப் பொட்டல ஸ்டைல்ல நம்மகிட்ட எக்ஸ்சேஞ்ச் பண்ணு! இங்கே எவன் வர்றான் பாக்குறன்..

அத வுட்டுட்டு இந்து மதம் போலிச்சாமியார்னு இல்லாதது, பொல்லாதத நெனச்சு ஏன் புலம்புற.. மொதல்ல வாய மூடுறா அபிஷ்டு! எதுடா போலி? கேட்டுக்கோ பொம்மணாட்டியோட சரசமாடுறது, பரமாத்மா, ஜீவாத்மா ஒன்னு சேர தேகாத்மாக்கள சாந்தி பண்றது, லட்சம் மர்டர், பத்தாயிரம் ரேப், ஆயிரம் கனவு சீன், ஜாதிக்கேத்த நீதி இதாண்டா ஒரிஜினல் ஹிந்து மதம்! நான் சொல்றேண்டா.. ஹிந்து மதத்துக்கு என்ன விட அத்தாரிட்டி யார்ரா? அவா சொல்றா.. இவா சொல்றானுட்டு கிடந்து பேத்துற.. ஆதி சங்கரர் சௌந்தர்ய லகரி படிச்சிருக்க்கியோ… அந்த அம்பாளையே அவர் த்ரீ டைமன்ஷன்ல பாத்தார்! அவர் வர்ணிச்சுக் காட்டுனார், நாம வாழ்ந்து காட்டுறோம். இந்திரன் அகலிகையோட ஆம்படையான் வேஷத்துலேயே போய் அவளைக் கெடுத்தான் அதனால என்ன அவன் இமேஜ் கொறஞ்சா போனான்.

நம்ம ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பண்ணாத ஆலிங்கனமா.. உருவாத புடவையா? ஏன் அரியும், அரணும் சேர்ந்து அரிகரசுதன் அய்யப்பன்னு ஒரு புரொடக்ட்டே இருக்கு.. எக்ஸ்ட்ரீம்லி ஹிந்துமதமே ஒரு செக்ஸ்ட்ரீம்லிடா! நம்ப படைப்புக் கடவுள் ப்ரம்மா… ரெடிமேடா சரஸ்வதியை படைச்சு அவளை தானே பெண்டாண்டுட்டன்! இன்னும் எவ்ளவோ இருக்கு!… இதாண்டா ஒரிஜினல் ஹிந்துமதம்… ஹிந்து மதத்தின் இந்தத் தர்மங்களை கட்டிப்புடிச்சு காப்பாத்தறவன்தான் ஒரிஜினல் ஹிந்து சாமியார்! இத வுட்டுட்டு ஒழுக்கமா இருக்கணும், நேர்மையா இருக்கணும்னு, எவனாவது சொன்னா அவன்தாண்டா டூப்பு! அவன்தாண்டா போலிச்சாமியார்! புரியறதா…

தசரதனுக்கு பொம்மனாட்டி அறுபதினாயிரம், மகாபாரதத்துல அஞ்சு பேருக்கு ஒருத்தி.. போறுமா? இன்னும் வண்ட வண்டையா சொல்லலாம், தொண்டை காயறது, டேய் ஜலம் கொண்டாடா! அசமஞ்சம் இப்பவாவது புரியறதா.. இதான் ஹிந்துமதம், இதான் ஹிந்து தர்மம்… இத ஒழுங்கா கடைபிடிக்கிறவாதான் ஒரிஜினல் சாமியார்.. இதாண்டா மேட்டரே! சும்மா கேனத்தனமா உளறாம ஆக வேண்டியதப் பாரு!

நித்தியானந்தா: நல்லவேளை ஸ்வாமி நான் கூட பாதை மாறி போயிட்டோமோன்னு நெனச்சுகிட்டிருந்தேன். உங்களப் பாத்து சம்பாஷணை செஞ்சோன்னதான் மனசே தெளிவாச்சு.. என்ன இருந்தாலும்..

ஜெயேந்திரன்: இன்னும் ஏண்டா இழுக்குற… ஏன் பயந்து சாகுற.. நீ என்ன என்னை மாதிரி என்ன, அப்ளே டூ மர்டரா? இல்ல அட்டம்ப்ட் டூ ரேப்பா? எதுவுமில்ல.. அவளும் ஒரு கேசு.. நீயும் ஒரு கேசு… அவளா வந்தா…. நீயா போன.. சட்டப்படி யார் என்னடா பண்ண முடியும்? அதிகபட்சம் ரோட்ல கத்றவாளுக்காக ஒரு 420 போடுவா… கோர்ட்டுல கத்றவாளுக்காக பிராத்தல் கேஸ் ஐபிசி 371,372 போடுவா.. மத்தபடி நம்பள யாராவது அடிக்க வந்தா அவாள தூக்கி உள்ள போடுவா.. நீ வேண்ணா கோர்ட்டுக்கு போயிப்பாரு, நம்மள பாத்து ஜட்ஜே அவா கன்னத்துல போடுவா.. போடா டேய்! போடா!நாம் பாக்காத கேஸா… சங்கரா! சங்கரா!

நித்யானந்தா: ஸ்வாமி செக்சன்லாம் அத்துப்படியா பேசறத பாத்தா.. விட்டா நீங்களே வெளுத்து வாங்கிடுவீங்க போல இருக்கே…

ஜெயேந்திரன்: பீனல் கோடெல்லாம்… இந்த பூணுல் கோடுக்கு அடக்கம்டா அம்பி.. இந்த மாதிரி சப்ப மேட்டருக்கெல்லாம் நான் எதுக்குடா? பிராத்தல் கேசுக்குன்னே பேமஸ் நம்ப சுப்பிரமணிய சாமி.. அவனிருக்கான் பயப்படாதே! சிதம்பரம் கோயில்ல சரக்கடிச்சிட்டு சாமிக்கே பேக்போஸ் கொடுத்துண்டு குஜால் பண்ற தீட்சிதாளுக்கெல்லாம் அவன்தான் கேசாடறான்.. கேஸ் ரொம்ப சிக்கலாச்சுன்னா, நம்ம துக்ளக் சோ இருக்கானோல்யோ, அண்டர்கிரவுண்ட் டெண்டரெல்லாம் அவன் பார்ப்பான்.. நீ பயப்படவே தேவையில்ல.. கருணாநிதி காலையே சுத்திண்டு நம்ம எஸ்.வி.சேகர். இருக்கன். அவன விட்டு காத கடிச்சா போதும்.. ஒரு அறிக்கைக்கு மேல தாண்டிடாம பாத்துக்கலாம்.. பேசாம நா சிக்னல் கொடுக்கற வரைக்கும் அடக்கிண்டிரு.. அதுக்குள்ள வேற எவனாவது மாட்டுவன் உன் கேஸை மறந்துடுவா..

பொய்யில்லடா.. என்ன எடுத்துக்கோ கத கந்தலாகியும் இன்னும் பந்தல் போட்டு ஆசிர்வாதம் பண்ண கூப்புடுறா, பாதாறவிந்த்த்த சேவிக்கிறா… இதுல ஜோக் என்னான்னா, பசங்களுக்கு ஒழுக்கம், காண்டக்ட் சர்ட்டிபிகேட் கொடுக்க என்ன கூப்புடுறா.. ஒண்ணு தெளிவா புரிஞ்சுக்கோ.. நாம எவ்வளவு பேரு குடியக் கெடுத்தாலும் பயப்படறதுக்கு இங்க என்ன நக்சலைட் ஆட்சியா நடக்கறது.. எல்லாம் நாம சுவிட்சைத் தட்டுனா கண்ணடிக்கிற ட்யூப்லைட் ஆட்சிதான் .. பேசாம கட்டின பசுமாதிரி சைலன்டா இரு! பிளே எ வெயிடிங்க கேம், கம் பேக்.. கீப் கோயிங்!

நித்யானந்தா: என்னமோ நெனச்சிட்டு வந்தேன் பெரியவா, பெரியவாதான், பெரியவா அனுக்கிரஹம் என்னைக்கும் வேணும்…

ஜெயேந்திரன்: ஹி… ஹி… உன் வயசுடா என் சர்வீசு, மொதல்லயே வந்திருந்தா டிரெயினிங் பக்காவா இருந்திருக்கும்… சரி போகட்டும்,  அந்த ரூம்ல வேற ட்ரஸ், விக்கெல்லாம் இருக்கு..  காஞ்சி தேவநாதன் மாதிரி மேக் அப்லாம் மாத்திண்டு பாத்துடா பின்பக்கமா எஸ்கேப் ஆயிடு…. இனிமேலாவது சமத்தா இரு!!

(நித்யானந்தா கிளம்ப, பகவானே! இந்த ஹிந்து தர்மத்தைக் காப்பாத்த நேக்கு நீதான் சக்தி கொடுக்கணும்… முணுமுணுத்துக் கொண்டே சிரமப்பட்டு குச்சியை ஊனி தன் உடலைத் தூக்கி எழுந்தபடியே.. டேய், சின்னவனே.. நக்கீரன் ஆன்லைன்லேருந்து அந்த நித்யான்ந்தன் ஃபுல் வீடியோவ டவுன்லோட் செஞ்சியே அத போடுறா … என உள்ளுக்குள் போனார் ஜெயேந்திரர்.)

ஸ்பாட்ரிப்போர்ட்– வினவுக்காக – துரை.சண்முகம்.—

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. எல்லாமே பிரமாதம் // இங்க என்ன நக்சலைட் ஆட்சியா நடக்கறது.. எல்லாம் நாம சுவிட்சைத் தட்டுனா கண்ணடிக்கிற ட்யூப்லைட் ஆட்சிதான் .. பேசாம கட்டின பசுமாதிரி சைலன்டா இரு! பிளே எ வெயிடிங்க கேம், கம் பேக்.. கீப் கோயிங் // ஒருவேளை இதுவே நிஜமாக இருக்குமோ? 

 2. இவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை, ஒரு முறை அல்ல ஒரு லட்சம் முறை கூட சொல்லலாம் ஆணிமிகம் என்பதே பொய்தான். பகுத்தறிவு மட்டுமே உண்மை. அது எப்படி ஒருவர் எல்லா சுகங்களையும் துறந்துவிட்டு வாழ முடியம். எந்த ஒரு உயிராலும் செய்ய முடியாத ஒன்றை சொல்லி ஒருவர் ஏமாற்றி பணம் சம்பாதிக்க முடியும் என்றால் கரணம் முதல் தவறு அதை நம்பி ஏமாறும் மக்களிடமே இருக்கிறது. என்ன செய்வது காலம் காலமாக ரத்தத்தில் ஏற்றப்பட்ட ஒரு வழக்கமாயிற்றே. இதை தண்டி வர சுயமாக சிந்திக்க தெரிந்த பகுதரிவளர்களால் மட்டுமே முடியும்.

 3. மனிதனால் எதையும் செய்ய முடியும் என்பது தவறு – மனிதனால் மனிதனாக மட்டும் இருக்க முடியாது –

  அன்பன்

 4. அருமை… பல நாட்கள் கழித்து ஒரு அருமையான கட்டுரை…

  இது உண்மை… மக்கள் மாறாத வரைக்கும், சாமியார் எண்ணிக்கை குறைய போவதில்லை…..

 5. படிக்க படிக்க சிரிப்பாணியா வந்து வயித்த வலிக்கிது மக்கா……..

 6. அருமை. ”இந்து” மதமே ”விந்து” ஆச்சாரமானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் தோழர்.
  கட்டுரையின் ஹை லைட்.
  “நாம எவ்வளவு பேரு குடியக் கெடுத்தாலும் பயப்படறதுக்கு இங்க என்ன நக்சலைட் ஆட்சியா நடக்கறது.. எல்லாம் நாம சுவிட்சைத் தட்டுனா கண்ணடிக்கிற ட்யூப்லைட் ஆட்சிதான்” 

 7. சான்சே இல்ல! அற்புதமான பதிவு.
  தோழர்.துரைசண்முகத்திற்குபுரட்சிகரவாழ்த்துக்கள்! கொடுத்த காசுக்கு மேல கூவுற ங்கோயல கும்பல இன்னும் காணோம்! வாங்கடா வந்து உங்க இந்து தருமத்த விளக்குங்க!

 8. ரொம்ப நன்னா சொன்னீங்க…இதெல்லாம் ஒரு மூணு மாசத்துகுதான்..அப்புறம் நக்கீரனுக்கும், சன் டிவிக்கும், நித்யனந்துக்கும் வேற வேற வியாபாரம் இருக்கோன்னா…

  • Dai panni. Nithyanandan and Jayendrana mathiri porukigala ambalapaduthanaduku madatha enda inge ilukara. Nee Hindu madhata thooki niruthanumna Cho Ramaswamy iyer kitta poi assistanta sernduko….. Ange thaaan Hindu Mahaaa Samudiram irukudu… Nalla poruki thinnu

   • உனக்கு என்ன பிரச்சினை. சும்மா கத்துற. போய் நல்ல டாக்டரை பாரு. ஹிந்து நமக்குள்ள தான் ottrumai illai. Pope melaiyum case podrukkanuga. Ungallla oruthanukku thegirium irundal yezhudi parungal. Nam yellarum, namadu ammavukke kevalam varuvadhai perumaiyaga nenaipavargal. Yellam nam vandha vazhi nammai valartha vazhi.

 9. நக்கலும் கேலியும் கொண்டு ஹிந்து தர்மத்தின் ‘பெரிய-வால்களை’ துவைத்து விட்டிர்கள் தோழருக்கு வாழ்த்துக்கள் .

  • இருக்காதா பின்ன . பெரியவா தான் இந்த விசயத்துல லோகதுகே குரு வாச்சே.

   • நீங்கள் தான் விளக்கு பிடிதீர்களோ. தமிழன் ஒருவனுக்கு தான் இதுபோல் ஒரு பொழுது போக்கு. உலகம் மாறும் அனால் தமிழன் ஓர்நாளும் மாறமாட்டான். நம் வளர்ந்த விதம்

    • பெரியவா பத்தி சொல்ல விளக்கு பிடிக்கணும்னு அவசியம் இல்ல. ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அத்தனை நாள் ஏடுகளிலும் avana pathi yaarum vaayal sirika villai.

 10. சட்டம், இ.பி.கோல்லாம் சாதாரண லாட்ஜ் போட்டு பண்றவாளுக்குத்தான், நம்பள மாதிரி மடத்த போட்டு பண்றவாளுக்கு சட்டம் மல ஜலத்துக்கு சமன்டா! வெளிக்கி போக வாழை இலையே நறுக்கிக் கொடுத்தாண்டா போலீசு.. போவியா..!

 11. தமிழன் ஒருவனால் மட்டும் தான் இதுமாதிரி எழுத முடியும். நமது மதத்தையும் நமது குடும்பத்தையும், ஏன் நமது தாயாரை கூட தரக்குறைவாக பேசமுடியும். இது ஒரு எடுத்து காற்று. வெட்கம கேற்ற தமிழன். இவர்களை போல் மனிதர்கள் இருக்கும் வரை இந்து மதம் மதிக்க படவே மாட்டாது. மிருகங்கள் இவர்கள்.

  • நீ தாண்டா சிவனோட தூதரு.உங்களுக்கெல்லாம் சூடு சொரணை எதுவுமே கெடையாதாடா.

   • முதலில் இந்த வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்று உனது பெற்றோரை கேட்டு வா. மரியாதை தெரியாத மடையனே.

 12. இது புதுசு கண்ணா புது
  //எனக்கு பத்து லட்சமோ, இருபது லட்சமோ நித்யானந்தாவிடமிருந்து கிடைத்திருப்பதாக உத்தமத் தமிழ் எழுத்தாளன் எழுதியிருக்கிறார் என்று என் நண்பரிடம் குறிப்பிட்டேன். அதற்கு ஏன் இப்படி சீப்பான ஆளா இருக்கிறான் அவன்? நினைப்பதைக் கூட லட்சத்தில் நினைக்கிறான். விலை போவதாக இருந்தால் பிச்சைக்கார காசு 20 லட்சத்துக்கா விலை போவான் ஒருத்தன்? பத்து கோடி இருபது கோடி என்று நினைக்கக் கூடாதா?

  அந்த நண்பருக்கு நான் சொன்ன பதில்: இவனுக்கு நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால் உங்களுக்காக மாமா வேலையும் செய்வான். ப்ளோ ஜாபும் செய்வான். //

  அவர் ஒரு லட்ச ருபாய் கொடுத்தா மாமம வேலை செய்வாருன்னா, நீங்க பத்து லட்ச ருபாய் வாங்கிட்டு உங்க பொண்டட்டியை ஆசிரமத்துக்கு அனுப்பிச்சிட்டீங்களே, இதுல எது கேவலம்

 13. அண்ணா! நல்லா சொல்லிட்டேள் போங்கோ! சிரிச்சி சிரிச்சி வயிறெல்லாம் புண்ணாயிட்டது. ஏன்னா நேக்கு ஒரு சந்தேகம். இப்பல்லாம் ஞானகுரு டோண்டு ஐயங்கார் அவரா கேள்வி கேட்டு அவரா பதில் சொல்றத நிறுத்திண்டா பாத்தேளா! காரணம் காஞ்சிபுரம் பெரியவா, சின்னாவா, தேவநாதன் தொடங்கி இன்னிக்கு நித்யானந்தா! இந்த பட்டியல் தொடரும் அப்டிங்கறதால அவர் கேள்வி பதில முடிச்சிண்டாருன்னு நெனக்கிறேன்.

 14.  கடந்த சில நாட்களாகவே நித்தியானந்தர் விவகாரம் பரப்பரப்பாக பேசப்படுகிறது. இது உண்மைதான் இதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
  நாம் எல்லோரும் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.
  நித்தியானந்தா இந்த தவறை பல வ்ருடங்களாகவே செய்துவருகிறார், இந்த விவகாரம் ஏன் இவ்வளவு நாள் வராமல் இப்போது தான் வந்த்த்து என்ற உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும்!
  இதற்கு நாம் சில விஷயங்களை பார்க்க வேண்டும், ஆன்மீகவாதிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி அவர்களுடைய வருமானத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் தான் மக்களை ஏமாற்றி வருகிறார்கள், ஆன்மீகவாதி செய்யும் தப்புகள் எளிதில் வெளிவருதில்லை, பக்தி என்ற பெயரில் பிறரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் (அதே போல் அவருக்கு தேவைபடுபவர்களும்) செய்யும் தப்பு (நன்றாக படியுங்கள்) மிரட்டலால் மட்டுமே வெளி வருவதில்லை. இந்த விசயத்தை சற்று கூர்ந்து கவனித்தால்,
    ஆன்மிகவாதிகள் தங்கள் வருமானத்தை பெற எவ்வித சிரத்தையும் தேவையில்லை, ஆனால் அரசியல்வாதிகள் சிலர் தங்களுடைய சொத்துக்களை விற்று கூட வருகிறார்கள் (பின் இழந்த சொத்தை விட 10 மடங்கு தேற்றிவிடுவது அது வேறு) இப்போது இது என்ன வென்றால் சில வருடங்களுக்கு (ஆன்மீகவாதி) முன் ஒருவர் கிருஷ்ணா நதிக்காக தமிழகத்திற்கு (அரசியல்வாதிகளுக்கு நன்கொடை) கொடுத்தார், அதேபோல் பல ஆன்மீகவாதிகளும் பல் வேறு திட்ட்த்திற்கு என்று கொடுத்து வருகிறார்கள்  இந்த நிந்தியானந்தாவிடம் கேட்ட்திற்கு கொடுக்காமலோ அல்லது அலட்சியமாக இருந்த்திற்காகவோ கொடுத்த தண்டனை தான் இந்த விவகாரம். ஏன் என்றால் ஆன்மிகவாதிகள் செய்யும் தவறுகளை அரசியல் வாதிகளுக்கு தெரியாமல் செய்ய முடியாது. அதானால் நித்தியானந்தா பகடையாக போய்விட்டார், அதேபோல் இவ்வளவு குறுகிய காலத்தில் மாட்டிக் கொள்ள வாய்ப்பில்லை. 65 வருடங்கள் கழித்து நம் மக்கள் ஏமாந்து இருபார்கள் – சங்கராச்சிராயார் போல் ஆகவே அதற்கு பயன்படுத்த பட்ட கருவி தான் ரஞ்சிதா அல்லது வேறு ஒருவர். ஒன்று ரஞ்சிதா மூலமாக இந்த காமிராவை அவருடைய இட்த்தில் வைத்து அல்லது ஆசிரம நிர்வாகி மூலமாக. 
  இதற்கு அவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும் அவரை நார அடித்து விட்டார்கள், (அவரிடம் வாங்க முடியாத தொகையை இவர்கள் இந்த நிகழ்ச்சியை போட்ட விளம்பரம் மூலமும் திரும்ப திரும்ப அவர்கள் அந்த காட்சியையே போட்டு அந்த கட்சிகள் அவர்கள் மீது திசை திருப்பாமல் இருக்கவும் அதே சமயத்தில் தங்கள் கட்சி டிவியை நல்ல பெயர் எடுக்கவும்!.  எப்படியோ இந்த நித்தியானந்தா மாட்டி கொண்டார் வேறு விசயம் ஆனால் இந்த திரைக்கு பின்னால் நடந்த்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறியும் இப்படி கேவலமானவற்றில் இருந்து எப்போது விடுபடபோகிறோம்?? ஆன்மீகவாதிகளும் சரி அரசியல் வாதிகளும் சரி மக்களை ஏமாற்றாமல் இருக்க என்ன செய்ய போகிறோம்???????????? 

  இப்படிக்கு உங்களில் ஒருவன்

   

   

 15. ” டேய், சின்னவனே.. நக்கீரன் ஆன்லைன்லேருந்து அந்த நித்யான்ந்தன் ஃபுல் வீடியோவ டவுன்லோட் செஞ்சியே அத போடுறா ”

  யோவ் ஊத்த வாயா வீடியோ முழுக்க நக்கீரன் லேகோ வருதுஎதுவும் சரியா தெரிய மாட்டுது 
  கொஞ்ச பொறு அப்பு ஆளை அனுப்பி இருக்கான் இப்ப அந்த டி.வி.டி 5.1 ன்னே வந்துடுத்தாம். 

 16. உங்கள் வலைதள பதிவுகளை பெரிவாளிடம் பிரிண்ட் பண்ணி கொடுத்தாச்சு.

 17. ரொம்ப நன்னா இருந்துது. ஆனா ரொம்ப ஓவரா இருக்கு இந்த மாதிரி யாரும் பேச மாட்டார்கள், அதுவும் ஜெயேந்திரர் அவர்களை போய் இந்த மாதிரி பேச வைத்துருக்க வேண்டாம், அனால் தேவநாதன் மற்றும் வேறு சில பேர்களை பற்றி பேசியது சரிதான். இதற்கு நான் சம்மதிக்கிறேன், மேலும் இந்த மாதிரி போலி சாமியார்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டு தான் இருகிறார்கள். இவர்களை யார் தோல் உரித்து காட்டுவார்கள். இன்னமும் நமது ஜனங்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். முதலில் நமது மக்கள் சாமியார்களை மறந்து, தாய், தந்தையரை மற்றும் சுற்றத்தார்களையும் மதிக்க கற்று கொள்ள வேண்டும்.

 18. நேற்று அருந்ததி ராய், மற்றும் மனித உரிமைகள்  ஆர்வலர்கள்  தந்த பேட்டி பற்றி செய்திகள் தெரிவிக்கவும் …. 

 19. நித்யானந்தன் கைது‍‍: வெளிவராத சில மர்ம உரையாடல்கள்

  நித்யானந்தன்: ஏ நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன். எல்லாரும் பார்த்துக்குங்க நானும் பெரிய்ய ரவுடிதான்(சாமியார் தான்).
  வேதனாதன்: நீங்க வாங்க பாஸ், இவிங்க எப்பவுமே இப்பிடித்தான், அடிச்சிக்கிட்டு இருப்பாய்ங்க.பயந்தா தொழில் பண்ண முடியுமா.
  ரஞ்சிதா: ஐ யாம் பாவம்! என்று அழுது கொண்டே கருணாநிதியிடம், கலாநிதி மாறனை பற்றி முறையிடுகிறார்.பாருங்க மைலார்ட் கடுப்பேத்ரான்.
  கருணாநிதி, கலாநிதி மாறனை நோக்கி: என்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு. பிச்சுப்புடுவேன் பிச்சி, ராஸ்க்கல்.
  க‌லாநிதி மாறன்: தாத்தா போங்க தாத்தா, சும்மா கப்பித்தனமா பேசிக்கிட்டு, போய் பேரன் பேத்திகளுக்கு m.l.a.,m.p.சீட்டு வாங்க பாருங்க.
  கருணாநிதி (டென்சனாகிறார்): ஐ யாம் ஸ்பீக்கிங், நோ கிராஸ் ஸ்பீக்கிங்.
  க‌லாநிதி மாறன்(எஸ்ஸாகிறார்) : ஆரம்பிச்சிட்டாருய்யா ஆரம்பிச்சிட்டாரு…
  *********
  குமுதம்: இவிங்கிட்ட ஓப்பனிங்கெல்லாம் நல்லாத்தானே இருந்துச்சு. பினிஸிங் சரியில்லையே…
  ********
  சாருநிவேதிதா: வடை போச்சே! சே!
  *******
  மிஸ்டர் பொதுஜனம்: அய்யோ சாவடிக்கிறாய்ங்களே….
  ********
  (இவற்றையெல்லாம் மேலிருந்து பார்த்து செத்து போன சங்கரன் பாடுகிறார்… ஐ யாம் சிங்கிங் இன் த ரெயின்…
  ஐ யாம் ஸ்வய்ங் இன் த ரெயின்……)
  பின்குறிப்பு:இவை யெல்லாம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டவை….

 20. “போடப்போட புவனேஸ்வரி, காட்டக் காட்ட ரஞ்சிதான்னு போவியா! “. தயவு செய்து இந்த வரிகளை நீக்க வேண்டுகிறேன்.

  • இவர்கள்தாம்,பெண்ணியம்,சமத்துவம் பேசுகிறார்களாம். பச்சையான ஆணாதிக்க கருத்துக்கள் இவை. ஆணவமும், திமிரும் தெறிக்கும் சொற்கள் இவை. படு கேவலமாக இருக்கிறது.

   • காட்டுதல், போடுதல் போன்ற தமிழ் சொற்களுக்கு, சமூகத்தில் நிலவம் மட்டறகமான அர்த்தங்கள்தாம் உங்களுக்கு தோன்றுகிறது என்றால் ஆபரேசன் செய்ய வேண்டியது உங்கள் மூளையைத்தான். 

    • Neither did the learned doctor comment about the intentions of Vinavu, does that mean your comments are BS and you are a lunatic? If you have an opinion on Vinavu’s approach in Women’s Emancipation, then don’t try such cheap shots to make your point. It won’t work!

    • ////காட்டுதல், போடுதல் போன்ற தமிழ் சொற்களுக்கு, சமூகத்தில் நிலவம் மட்டறகமான அர்த்தங்கள்தாம் உங்களுக்கு தோன்றுகிறது என்றால் ஆபரேசன் செய்ய வேண்டியது உங்கள் மூளையைத்தான்.///
     only these kind of words from you make you cheap. and if Vinavu can use such words to descirbe two women, then what is wrong if i suspect about his credentials of equality and feminism. and this is not the first time. in Leena Manimekalai article too similar views were there. Kelvikuri, you are the one who is a cheap and indecent user of words. so there.

    •  /////காட்டுதல், போடுதல் போன்ற தமிழ் சொற்களுக்கு, சமூகத்தில் நிலவம் மட்டறகமான அர்த்தங்கள்தாம் உங்களுக்கு தோன்றுகிறது என்றால் ஆபரேசன் செய்ய வேண்டியது உங்கள் மூளையைத்தான்.
     ////
     கேள்விக்குறி, சமூகத்தில் நிலவும் மட்டறகமான அர்தங்கள் இல்லாமல், இச்சொற்கள் வேறு என்ன ‘சூட்சமமான’ மார்க்ஸிய அர்த்தங்களை செல்கின்றன. விளக்குக. நீர் பெரிய மொழியல் அறிஞர் பாருங்க. தாந்தீரிக குறியீடுகள் இவை அல்லது dialectical materialism, etc ?

    • அதியமான்
     1) ” நக்கீரன்ல போட்டானாம், சன்னுல காட்டுனானாம்” என்ற வாக்கியத்துக்கு பின்னாலேயே வருவதினால் அது உங்கள் உள்ளக்கிடட்கையில் இருக்கும் வக்கிரமான சொற்கள் அல்ல

     2) ஒரு வேளை உங்கள் கருத்துப்படியே அது வக்கிர அர்த்தம் பொதிந்த ஒன்று என்று ஒரு வாத்தஃதுக்கு வைத்துக்கொண்டாலும் , சங்கராச்சாரி ஜெயேந்திரன் என்ற ஒரு கேடுகெட்ட பொம்பள பொறுக்கி வாயிலிருந்து நல்லது வருவதைப்போல எழுது முடியாது.

     3) வினவோட பெண்விடுதலை சிந்தனைகளை மட்டம்தட்டுவதற்கு முன்னால் பெண் விடுதலையட்டைய உங்கள் திட்டம் என்ன, அது வினவு திட்டதலிருந்து ஏன் மாறு பட்டது என்பதை எழுதினால் நீங்க ஒரு ஒட்ட பிளாஸ்டிக் பக்கிட்டு இல்ல சரக்குள்ள மனுசன்னு புரிஞ்சுக்க முடியும்

     O.K.

  • ஜெயேந்திரனின் “லவ்’கீக வாதங்களுக்கு மொழிவடிவம் கொடுத்தவன் என்ற வகையில் எனது கருத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உரையாடல் தொடர்ச்சியில் ““நக்கீரன் போடுவதும், சன் டி.வி. காட்டுவதும்’’ பாதிப்பாய் இருப்பதாய் நித்யானந்தா புலம்புவதற்கு, ஜெயேந்திரனின் ஆணவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், ’’எதுவாயிருந்தாலும் பொம்பளைக்குத்தான்’ என்ற அவாளது ஆணாதிக்கச் சிறுமையை வெளிப்படுத்தவும் இயல்பான அவாளின் எகத்தாளத்தை அறியத்தரும் வகையிலேயே ’’போடப்போட.. காட்டக்காட்ட…’’ என்ற வார்த்தைத்தொடர் வர நேர்ந்தது. அதற்குப் பின்வரும் வாக்கியத் தொடரை இணைத்துப் பார்த்தால் இவ்வாறு புரிந்து கொள்வதற்கான வாய்ப்பையே வழங்குகிறது. இதுவே எழுதியதன் நோக்கமும்.. மற்றபடி பெண்களை மதிப்பது என்ற பொதுவான அளவுகோலின்படி புவனேஸ்வரி, ரஞ்சிதா போன்ற கழிசடை வர்க்கப் பேர்வழிகளுக்கு எந்தக் கருணையும் காட்ட முடியாது. இருப்பினும் கொச்சை மொழித் தொடருக்கு சமூக நிலைமையின் காரணமாக எப்போதும் இரட்டைத்தாழ்ப்பாள் உண்டு. தவறியும் கூட இந்த விஷயத்தில் இரட்டைத் தாழ்ப்பாள் எடுத்துக் கொண்ட விசயத்திற்கு எதிர்நிலையாக போய்விடும் என்ற நோக்கத்துடனும் அதுவும் ஜெயேந்திரன் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் எச்சரிக்கையுடனும் கருத்துரைத்த மறுமொழியாளர்களின் அக்கறைக்கு நன்றி.

   — துரை. சண்முகம்.

 21. கார்ட்டூன் சின்னவரை பம்முகிறமாத்ரி காட்டுகிறது. அவர் நல்லவர் என்று சொல்கிறதோ?

 22. படிக்க நல்ல இருக்கு …கொஞ்சம் கிறிஸ்டியன்ஸ் பற்றி ஈழுடுங்களேன்
  குழந்டடைகளை homosexll ஈடுபதும் ப்பட்டிரி களை பற்றி தைரியம்
  ஈருண்டல் ஏழுதி காட்டு .

 23. “நாம எவ்வளவு பேரு குடியக் கெடுத்தாலும் பயப்படறதுக்கு இங்க என்ன நக்சலைட் ஆட்சியா நடக்கறது.. எல்லாம் நாம சுவிட்சைத் தட்டுனா கண்ணடிக்கிற ட்யூப்லைட் ஆட்சிதான்” – This is the biggest joke in the entire writeup. chk this :- http://www.deccanherald.com/content/52385/we-were-sexually-exploited-comrades.html.

  Maoists my left foot!!!!! Red, Blue, Green, Black & saffron identities have only ruined humanity. Anyway good piece of writing after a long time in vinavu (after satyam writeupl!!!)
  keep rocking!! – garibaldi

 24. அடடா அருமை! பின்னிட்டீங்க போங்க…!
  இவ்வளவு திறமையை எங்கத்தான் ஒளிச்சு வச்சிருந்தீங்கன்னே தெரியலே..

  • ஹெல்லோ வசந்தவாசல்! இத்த எழுதுறதுக்கு திறமை தேவையே இல்லைங்க. இந்த மாதிரி பிட் நியூஸ் கிடைச்ச போதும். எவன் வேணுமுனாலும் எழுதலாம். இந்த வினவு பய எழுதுறது ஒன்னும் அதிசயம் இல்லை. 

   இந்த மாதிரி கட்டுரைய இவ்வளோ பேரு அஹா ஒஹோ ன்னு எத்தன பேரு பாராடுரங்கன்னு பாக்குறீயா. அது கொஞ்சம் பேருங்கதான். {obscured} கம்யூனிஸ்ட் டாக்ஸ்.  இந்த மாதிரி கட்டுரை எழுதுறது நம்ம ஜனநாயக நாட்டுல மட்டும் தான் முடியும். நம்ம சொத்தையே தின்னுகுட்டு நமக்கே துரோகம் செய்யுற தேச துரோகிகள். புல்லுருவிகள். வரிசையா நிக்க வச்சி மூஞ்சில காரி துப்பனும். 

   • அண்ணன் முட்டா ஊ, என்ன காலேலயே பின்னால பத்திகிச்சு போல??? பயர் சர்வீசுக்கு போன் பண்ணவா????

    • முட்டாஊ அண்ணே, பத்திகிட்டது உங்களுக்குத்தானே சுடுதா இல்லயான்னு நீங்கதேன் சொல்லோனும்

    • என்னோட பின்னூடத்த முழுசா போடலையே நீங்க. அதுதான் உங்கள சுட்டுடுசூன்னு நினைக்குறேன். 

   • என்னது ஒன்னோட சொத்த தின்னுட்டு துரோகம் பன்னுறமா.முட்டா புன்ன்னன்ன்ன்னகை அண்ணா.எங்க மூஞ்சியில காறி துப்புறது இருக்கட்டும்.உன்னோட மூஞ்சில நீயே துப்பிக்க.

    • புலி சாரு, நீ என்ன அடுத்த அடிவருடி யா? என்னோட பின்னூட்டத்த
     முழுசா போடா தைரியம் இல்லை இதுல இவரு வேற வந்துட்டாரு .
     நாட்ட கெடுக்குற நாயிகள். 

 25. ‘இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி’ – நித்யானந்தாவுக்கு சிவசேனா புகழாரம்!!

  சென்னை:
  இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி நித்யானந்தாவை பாதுகாக்க வேண்டும் என்று பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரிவு கூறியுள்ளது.

  பிரம்மச்சாரி என்று கூறியும், பிரம்மச்சரியம் காத்தால்தான், உடலை கருவியாக வைத்து நினைத்ததை அடைய முடியும் என்றும் போதனை செய்து ஆன்மீக உலகில் வலம் வந்த நித்யானந்தா, மறுபக்கம் நடிகை ரஞ்சிதாவுடன் காவி உடையில் காம லீலை நடத்தியது முழுமையாக அம்பலத்துக்கு வந்துவிட்டது.

  அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது பக்தர்களில் பெரும்பாலானோர் நித்யானந்தாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

  இந்த நிலையில் சில இந்து அமைப்புகள் நித்யானந்தாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன. அதில் சிவசேனாவும் ஒன்று.

  இந்த அமைப்பின் சார்பில் சென்னை முழுக்க நேற்றும் இன்றும் நித்யானந்தாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

  நித்யானந்தா சாமியார் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்றும், இந்து மதத்தை வளர்க்கவும், இந்து இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் அயராது பாடுபட்ட இளம் ஞானி நித்யானந்தாவை களங்கப்படுத்துவதா? என்று அந்த போஸ்டர்களில் கேள்வி எழுப்பியுள்ளனர் சிவசேனா கட்சியினர்.

  பாரதிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பும் இது போன்ற போஸ்டர்களை சென்னையில் ஒட்டியுள்ளது.

  நித்யானந்த சாமியார் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று வெளிப்படையாகவே இந்த அமைப்பு வக்காலத்து வாங்கியுள்ளது.

  போஸ்டர்களில் 9025971867, 9941760340, 9840124044, 9941918645, 9840185002 ஆகிய 5 செல்பேசி எண்களை வேறு கொடுத்துள்ளனர்.

  http://thatstamil.oneindia.in/news/2010/03/07/shiv-sena-backs-nithyananda.html

 26. சந்தடி சாக்கில் ஏன் அய்யா ஹிந்து மதத்தை பழிக்கிறீர்? மத நம்பிக்கை, இறை நம்பிக்கை இருக்கும் போதே அவனவன் செய்யும் அட்டூழியம் தாங்க முடியவில்லை. இதில் மதமே இல்லை, தெய்வமே இல்லை என்றாகி விட்டால் உலகம் காட்டு மிராண்டிகளின் கூட்டம் ஆகிவிடும் சாமி!

  • சரியாய் சொல்லி இருக்கிறீர்கள். அனால் தமிழனுக்கு idhupol sonnal புரியாது. உலகத்திலேயே தமிழன் ஒருவனுக்கு தான் தன் தாயை உலகம் பரிகசித்தால் அவனுக்கும் சந்தோசம். மானம் ketta manidhargal.