Sunday, June 4, 2023
முகப்புகுமுதம் 'மாமா'வுக்கு ம.க.இ.க கண்டனம்! ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!!
Array

குமுதம் ‘மாமா’வுக்கு ம.க.இ.க கண்டனம்! ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!!

-


நித்தியானந்தனை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்ததில் குமுதத்திற்கு மிக முக்கியமான பங்குண்டு. பல ஆண்டுகளாக இந்த பொறுக்கியின் ஆன்மீக பீலாக்களை விதவிதமான போஸ்களில் அச்சடித்து நடுத்தர வர்க்கத்திடம் கொண்டு சென்ற குமுதம் பத்திரிகை இன்று என்ன சொல்கிறது?

தனது குற்றம் குறித்து கடுகளவும் கவலைப்படாத குமுதம் கூரூப் பத்திரிகைகள் இன்று கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தனைக் கும்முகின்றன. இந்த அயோக்கியத்தனத்தையும், நித்தியானந்தன் என்ற அயோக்கியனை அறிமுகம் செய்து வளர்த்ததைக் கண்டித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பெண்கள் விடுதலைமுன்னணியின் சென்னைக் கிளைத் தோழர்கள் குமுதம் அலுவலகம் முன்பு 6.2.2010 சனிக்கிழமையன்று காலையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதியிலிருந்து அபிராமி திரையங்கு அருகிலிருக்கும் குமுதம் அலுவலகத்தை நோக்கி முழக்க அட்டைகளுடன் ஊர்வலாமய் விண்ணதிர முழக்கங்களுடன் வந்தார்கள். இந்த தீடீர் ஆர்ப்பாட்டத்தை எதிர்பார்த்து போலீசார் தயாராக குமுதம் அலுவலக வாசலில் குழுமியிருந்தனர்.

போலீசின் தடையையும் மீறி சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மக்கள் நித்தியானந்தனையும், அதற்கு ஒத்தூதிய குமுதத்தையும் கண்டிப்பதை ஆதரித்தனர். சாலைப் போக்குவரத்து ஒரு மணிநேரத்திற்கு முடங்கினாலும் மக்கள் அதை இடைஞ்சலாகப் பார்க்காமல் விசயத்தை கேட்டறிந்து உவகை கொண்டனர்.

இறுதியில் போலீசின் தள்ளுமுள்ளுவிற்குப்பிறகு ஏ.சி, டி.சி அதிகாரிகளோடு காரசாரமான விவாதத்திற்குப் பிறகு தோழர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். நித்தியானந்தாவை உருவாக்கியும் இப்போது அம்பலப்பட்ட பிறகு கிசுகிசு மூலமும் காசுபார்க்க்கும் இந்த ஊடக விபச்சாரிகளை மக்களிடம் அடையாளம் காட்டிய இந்த நிகழ்வில் எழுப்பட்ட முழக்கங்கள்:

  • மன்னிப்புக் கேள்! மன்னிப்புக் கேள்!
    நித்யானந்தனை வளர்த்துவிட்ட
    குமுதமே மன்னிப்புக்கேள்!
  • தடைசெய்! தடைசெய்!
    தமிழக அரசே தடைசெய்!
    சாமியார்களின் பிரச்சாரத்தை
    தடைசெய்! தடைசெய்!
  • கைதுசெய்! கைதுசெய்!
    நித்யானந்தனைக் கைதுசெய்!
    பறிமுதல்செய்! பறிமுதல்செய்!
    அவன் சொத்துக்களை பறிமுதல்செய்!
  • விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
    சாய்பாபா, பிரேமானந்தா,
    சங்கராச்சாரி, தேவநாதன்,
    கல்கி, நித்தியானந்தா
    கழிசடைகளை விரட்டியடிப்போம்!
  • அடித்து விரட்டுவோம்! அடித்து விரட்டுவோம்!
    காவியுடைக்க கிரிமினல்களை
    நாட்டைவிட்டே அடித்து விரட்டுவோம்!

______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தமிழகம் முழுவதும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்களால் கொண்டு செல்லப்பட்ட சுவரோட்டிகளைக் கீழே பார்க்கலாம்.

  1. சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கலாமே.

    மேலும் பத்திரிக்கை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் நீங்கள் போராட வேண்டும்.

    இந்தா காலையில் கைது மாலையில்  விடுதலை எல்லாம் அன்றோடு மறந்து பொய் விடும்.

  2. அஹா ..இப்படியல்லவோ நம் எதிர்ப்பை காட்டவேண்டும். குமுதம் மற்றும் அநேக பல இதழ்களை மக்கள் முற்றிலும் புறக்கணிக்கும் காலம் வரட்டும்..
    உண்மையில் குமுதம் இது போன்ற எதிர் வினைகளை எதிர்பார்த்திருக்காது.இது ஆரம்தான் இதே பொது உணர்வு மேலும் வளர வழி செய்வோம்.

  3. இது போன்ற போராட்டங்கள் அவசியம் நடத்தப்படவேண்டும். தரகெட்ட ஊடகங்களை மக்களுக்கு அடையாளம் காட்டவேண்டும்.

    ஆனால், போராட்டங்களில் குழந்தைகளையும் சிறுவர்களையும் பயன்படுத்துவதை வன்மையாக நான் கண்டிக்கிறேன். அனாவசியமாக குழந்தைகளை ஏன் ஆபத்துக்குள்ளாக்குகிறீர்கள். இதை போராட்டம் செய்பவர்கள் கவனித்தில் கொள்ளவேண்டும்.

    • வாழ்த்துக்கள். குழந்தைகளை பெற்றோர் விட்டு வர முடியாவிட்டாலும், அவர்களை போராட்டம் நடக்கும் இடத்திற்கு ஏன் கொண்டு வரவேண்டும். வேறு ஏற்பாடுகள் செய்ய முடியாதா?

      • குழந்தைகள் அவசியம் வரத்தான் வேண்டும்..குழந்தைகள் எனத் தனியாகப்பார்க்கத் தேவை இல்லை..எல்லாப் போராட்டங்களோடும், முழக்கங்களோடும்தான் புரட்சிகரக் குடும்பக் குழந்தைகள் வளரும்..கோவிலுக்கு செல்லும் பழைமைவாதிகள் சின்னஞ்சிறுசுகளின் மனதில் பக்தி போதையை இப்படித்தானே வளர்க்கின்றனர்? அதற்கு மாற்றான கலாச்சாரத்தை நாமும் இப்படித்தான் வளர்த்தெடுக்க வேண்டும்..இதுதான் சரியான வழி.

    • இவர்கள் குழந்தைகளை தப்பான இடத்துக்கு அழைத்துசென்றால் தான் தவறு இப்படி போராட்டத்துக்கு அழைத்து சென்றால் தவறில்லை டிவியில் வரும் நீகழ்ச்சிழை பாருங்கள்…
      சின்ன வீடா வரட்டுமா…… பெரிய வீடா வரட்டுமா……
      என்ற பாட்டுக்கு குட்டை பாவாடை போட்டு நடனம் ஆடுவது. அதை அணுமதிப்பது தான் தவறு………

  4. மதத்தை சொல்லி ஏமாற்றும் நித்யானந்தா!
    புரட்சியை சொல்லி ஏமாற்றும் வினவானந்தா!

  5. //பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதியிலிருந்து அபிராமி திரையங்கு அருகிலிருக்கும் குமுதம் அலுவலகத்தை நோக்கி முழக்க அட்டைகளுடன் ஊர்வலாமய் விண்ணதிர முழக்கங்களுடன் வந்தார்கள்.//
    இது என்ன கல்லூரி விடுதியா ம.க.இ.க. அலுவலகமா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன் 

    • பூண்டு சார், எல்லா அரசியல் கட்சிகளும் அரசினர் விருந்தினர் மாளிகை முன்னாலேந்து ஊர்வலம் ஆரம்பிக்கிறாங்க. உண்ணாவிரதம் இருக்கறாங்க. அதுக்காக அரசினர் விருந்தினர் மாளிகை அந்தக் கட்சிகளுக்கு அலுவலகம் ஆகிருச்சா என்ன? வினவைப் புறக்கணிங்கன்னு தனிப் பதிவெல்லாம் போட்டீங்க. உங்களாலயே அதப் பின்பற்ற முடியலியா? :))

  6. சூப்பர்….

    குமுதம் பத்திரிகையை எதிர்த்து சென்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டும்…….

    மக்கள் விழித்து விட்டார்கள்……

  7. ////சாய்பாபா, பிரேமானந்தா,
    சங்கராச்சாரி, தேவநாதன்,
    கல்கி, நித்தியானந்தா
    கழிசடைகளை விரட்டியடிப்போம்! //// செக்ஸ் வன்முறைக்குப் பேர்போன பாதிரிகள், முல்லாக்கள் பெயர் ஒன்றையும் காணோமே? புரட்சி லிமிடட் சர்வீஸா?

    • “புரட்சி” – லிமிடெட் சர்வீசா? நல்ல கேள்வி! இந்திய கழிசடைகள் என்று கூட்டி, கழித்து கணக்கு பார்த்தால் இந்த (ஆ) சாமிகள் தானேய்யா முதல் இடம் வகிக்கிறார்கள்! பாதிரிகளும், முல்லாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இவர்களை எல்லாம் – சாமிகள் சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு அல்லவா இந்த நாதாரிகளின் லீலைகள் உள்ளது!

    • த்தோடா, இந்து தேசத்துல அவாதான் மெஜாரிட்டி, மைனாரிட்டி அம்பலப்படும் போது உங்களையும் கூப்பிடுறோம்

  8. சன் டி வி வாசலில் கூவ தைரியம் இருக்கிறதா? தினகரன் வாசலில் செய்வதுதானே? அல்லது நக்கீரன் வாசலில் ?

  9. //லெனின்2004 ஆம் ஆண்டு காந்தப் படுக்கைமோசடியில் சேலம் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது.//

    காந்தப் படுக்கை மோசடி குற்றம் செய்தவர்கள் அதை தயாரித்த நிறுவனமும் ,விற்பனை செய்தநிருவனமும்தான் ,வேலை வாய்ப்பு இல்லாத கிராமத்து இளைஞர்களை மூளை சலவை செய்து
    M.L.M. முறையில் விற்க வைத்தார்கள் அவ்வாறு லெனின் செய்திருக்கலாம் .குமுதம் ரிப்போர்ட்டரும்,தினமலரும் லெனின் மீது இவ்வாறு காந்தப் படுக்கை மோசடி குற்றம் சாட்டிஉள்ளது.
    இவ்விரு பத்திரிக்கைகளும் நித்தியானந்தரின் தொடர் ,மற்றும் பொன்மொழிகளை நேற்று வரை வெளியிட்டு வந்தவை.சந்தடி சாக்கில் லெனின் பெரிய குற்றவாளி போல சித்தரிக்க முயல்கின்றன
    .இதனை கண்டறிந்து இரு பத்திரிக்கைகளின் உள்நோக்கத்தை நீங்கள் அம்பலப்படுத்தவும் .

  10. அப்பாடா நல்லள காரியம்.அனால் இதே போல் எல்லா மடத்தையும் /மதத்தையும் அதன் சாமியார்களையும் அரசு visaarikkaVENdum. குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் அவசியமாகும்.சிஸ்டர்.Amen – Autobiography of a Nun, by Sister Jesme, alleges sexual abuse and corruption in Kerala’s Catholic சர்ச் படித்தால் இன்னும் வேதனையாக இருக்கும் போல.

  11. முட்டாள்தனமான, தேவையில்லாத போராட்டம். நித்யானந்தரின் கட்டுரைகளை தான் குமுதம் வெளிட்டது. ( இத்தனை நடந்த பிறகும், சென்ற வாரம் கூட அவரின் கட்டுரை தொடர்ந்தது). அக்கட்டுரைகளில் ஆட்சேபனைக்குரிய விசியங்கள் ( மதவாதம், பார்பானிய ஆதரவு, மூடநம்பிக்கைகளை பரப்புதல், வெறுப்பை, துவேசத்தை பரப்புதல் போன்ற) ஏதாவது இருந்தால், அவற்றை எடுத்துகாட்டி, விரிவாக, தர்க்க ரீதியாக மறுப்பதே ‘பகுத்தறிவு’ ; (இத்தனை நாட்களில் யாரும் அதை செய்யவில்லை அல்லது செய்ய முடியவில்லை).
    ’ஓதி உணர்ந்தும், பிற்ர்க்கு உரைத்தும், தான் அடங்கா பேதையின் பேதை இல்’ என்ற குறள், நித்யானந்தருக்கும், இன்னும் பல போலிகளுக்கும் பொருந்தும். மிக பிரமாதமான கருத்துக்களை கொண்ட கட்டுரைகள், நூல்களை எழுதிவிட்டு, தம் சொந்த வாழ்வில் அவற்றை கடைபிடிக்காமல், போலியாக வாழ்ந்த / வாழும் மனிதர்கள் பலர்.
    பலரையும் போலவே குமுதமும் ஏமார்ந்திருக்கலாம். அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் நீங்க தான் தமிழர்களின் உண்மையான representative ஆ என்ன ? பெரும்பலான மக்கள் பெருச அலட்டிக்கவில்லை. நித்யானந்தரின் பக்தர்களுக்குத் தான் அதிர்ச்சி, வருத்தம் எல்லாம்.
    ////சாலைப் போக்குவரத்து ஒரு மணிநேரத்திற்கு முடங்கினாலும் மக்கள் அதை இடைஞ்சலாகப் பார்க்காமல் விசயத்தை கேட்டறிந்து உவகை கொண்டனர்.///
    நல்ல கதை. பெரும்பாலானவர்கள் இப்படி கருதியிருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. பலரும் அவசர வேலையாக, சென்று கொண்டிருப்பார்கள். (கல்விசாலை, மருத்துவமனை மற்றும் பல அவசர வேலைகள்). எத்தனை சதம் உண்மையில் உங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை மனப்பூர்வமாக ஏற்று கொண்டிருப்ப்பார்கள் ?
    கம்யூனிசத்தை ஆதரித்து, பல கட்டுரைகளை பல பத்திர்க்கைகள் அன்றைய ரஸ்ஸியாவிலும், சீனாவிலும் வெளி வந்தன. பிறகு செம்புரட்சிக்கு பிறகு பல பத்தாண்டுகளில், அதே கம்யூனிஸ்டுகளில் இருந்து தோன்றிய ‘திரிபுவாதிகள்’ நாட்டை சீரழித்தனர். (அவர்கள் மட்டும் அதற்க்கு காரணமல்ல என்பது எங்கள் கோணம்). அதற்காக அவர்களின் கட்டுரைகளை தாங்கி வந்த பத்திரிக்கைகள் ‘மன்னிப்பு’ கேட்க வேண்டும் என்று பிறகு போராட்டம் நடத்தினால் எப்படி கேனத்தனமாக இருக்குமோ அப்படி இருக்கிறது இது.
    காவியுடை அணிந்தவர்களில், பாதிரிகளில் பல போலிகள், கிரிமினல்கள் உள்ளன தாம். ஆனால் அவர்கள் அனைவரும் போலிகள், கிரிமினல்கள் என்று கருத முடியாது. கம்யூனிஸ்டுகள் என்று தங்களை கருதுபவர்களில் பல போலிகள், கிரிமினல்கள் உள்ள்னர். (உங்க வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், சி.பி.அய் / சி.பி.எம் போலிகள்). அதற்காக கம்யூனிஸ்டுகள் அனைவரும் போலிகள், கிரிமினல்கள் என்று கருதினால் எத்தனை முட்டாளதனமாக இருக்கும் ? அதே இதிலும்.
    சில ஆண்டுகளுக்கு முன் ராமசுப்பிரமணியம் என்ற கவிஞரின் வீட்டை முற்றுகை இட்டு, அவர் எழுதிய ‘ஆட்சேபனைக்குரிய’ கவிதைக்காக, அவரை மிரட்டி மன்னிப்பு கடிதம் பெற்றீர்கள். இன்றும் கிட்டதட்ட அதே பாணி பாசிச முறை போராட்டம். ஆள் பலம் இருப்பதால் எப்படி வேண்டுமானாலும் போரடலாம் என்பது பாசிசம்.
    குமுதம் செய்தது குற்றம் என்றால் வழக்கு தொடரலாம். போலிஸில் புகார் அளிக்கலாம். ஆனால் அது சட்டப்படி குற்றமல்ல என்பதால் அவை நிக்காது.
    இத்தனைக்கும், நான் நித்யானந்தரின் கட்டுரைகளை முழுசா படித்ததில்லை. எப்பவாது பார்த்திருக்கிறேன். அவரின் நூல்களை வாங்கி படிக்க வேண்டும் என்று இப்ப தோன்றுகிறது. என்னதான் சொல்லியிருக்கிறார் அவர் என்ற அறிய ஆவல்.

    • //ஆட்சேபனைக்குரிய விசியங்கள் ( மதவாதம், பார்பானிய ஆதரவு, மூடநம்பிக்கைகளை பரப்புதல், வெறுப்பை, துவேசத்தை பரப்புதல் போன்ற) ஏதாவது இருந்தால், அவற்றை எடுத்துகாட்டி, விரிவாக, தர்க்க ரீதியாக மறுப்பதே ‘பகுத்தறிவு’//

      அப்படியென்றால் நன்னெறி கதைகள் பாணியில் நல்ல கருத்துக்களை சொல்லிவிட்டு, ஆன்மிகத்தின் பேரில் ரூ.3000 ஆயிரம் கோடி சொத்துக்களோடு பெண்களோடு கூத்தடிப்பவனை எதிர்ப்பதற்கு ஏழாவது அறிவு வேண்டுமா என்ன?!

      //பலரையும் போலவே குமுதமும் ஏமார்ந்திருக்கலாம். அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் நீங்க தான் தமிழர்களின் உண்மையான representative ஆ என்ன ? பெரும்பலான மக்கள் பெருச அலட்டிக்கவில்லை//

      பல ஸ்கூப் செய்திகளை தோண்டித்துருவி வெளியிடும் குமுதத்துக்கு நித்தியானந்தனின் லீலைகள் தெரியாமல் இருக்கும் என்பது காமெடி சார்! மன்னிப்பு கேட்பதற்கும் பரந்த மனமும் தகுதியும் வேண்டும். அது குமுதத்திடம் இல்லை.

      அப்புறம். போராட்டம் நடத்திய தோழர்களை தமிழர்களின் பிரநிதியா என கேட்டுவிட்டு, பொதுமக்கள் இந்த விஷயத்தை பெருசா எடுத்துக்கலை என்று சொல்லும் நீங்கள் எப்போது சார், பொதுமக்களின் பிரதிநிதி ஆனீர்கள்?

      // //சாலைப் போக்குவரத்து ஒரு மணிநேரத்திற்கு முடங்கினாலும் மக்கள் அதை இடைஞ்சலாகப் பார்க்காமல் விசயத்தை கேட்டறிந்து உவகை கொண்டனர்.//
      நல்ல கதை. பெரும்பாலானவர்கள் இப்படி கருதியிருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. பலரும் அவசர வேலையாக, சென்று கொண்டிருப்பார்கள். (கல்விசாலை, மருத்துவமனை மற்றும் பல அவசர வேலைகள்). எத்தனை சதம் உண்மையில் உங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை மனப்பூர்வமாக ஏற்று கொண்டிருப்ப்பார்கள் ?//

      தோழர்களின் போராட்டம் ஒன்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் கண்துடைப்பு போராட்டம் அல்ல. ஊடகம் என்ற பெயரில் மட்டரகமான வேலைகளைச் செய்துவரும் வரும் முதலாளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் அது. நீங்கள் நினைக்கும் அளவுக்கு மக்கள் எல்லா சந்தர்ப்பத்திலும் யார் எப்படி போனா எனக்கென்ன என்று நினைக்கிறவர்கள் கிடையாது. சும்மா எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதிக்கொண்டிருக்காதீர்கள்…

      • ////அப்படியென்றால் நன்னெறி கதைகள் பாணியில் நல்ல கருத்துக்களை சொல்லிவிட்டு, ஆன்மிகத்தின் பேரில் ரூ.3000 ஆயிரம் கோடி சொத்துக்களோடு பெண்களோடு கூத்தடிப்பவனை எதிர்ப்பதற்கு ஏழாவது அறிவு வேண்டுமா என்ன?!////
        அப்படி ஏமாற்றுபனை நீங்க எதிர்பதை ஆட்சேபிக்கவில்லையே. இங்கு விவாதம் குமுததிற்க்கு எதிரான ஆர்பாட்டதை பற்றி தான். குமுதத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் ஏதாவது ஆட்சேபகரமான விசியங்கள் இருந்தால், அதை மறுக்கலாம்.
        ////பல ஸ்கூப் செய்திகளை தோண்டித்துருவி வெளியிடும் குமுதத்துக்கு நித்தியானந்தனின் லீலைகள் தெரியாமல் இருக்கும் என்பது காமெடி சார்! மன்னிப்பு கேட்பதற்கும் பரந்த மனமும் தகுதியும் வேண்டும். அது குமுதத்திடம் இல்லை.///
        இந்த விசியம், நித்யானந்தரின் சீடரே வீடியோ எடுத்து வெளியிடும் வரை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (சாரு உள்பட). மேலும், குமுதம் அக்கட்டுரைகளை வெளியிட்டதற்க்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் ? அப்படி என்ன அக்கட்டுரைகளில் உள்ளன ?
        Leon Trotsky ரஸ்ஸிய புரட்சியின் போது ஒரு முக்கிய தலைவர். லெனினின் சகா. அக்காலங்களில் டிராட்ஸ்கியின் கட்டுரைகள், ஆக்கங்கள், அதிகாரபூர்வ ரஸ்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி ஏடுகளில் வெளியிடப்பட்டன. பின்னர், ஸ்டாலின் காலத்தில், ட்ராட்ஸ்கி ஒரு ‘துரோகி’, ’திரிபுவாதி’ ஆனார். அல்லது அப்படி முத்திரை குத்தப்பட்டு விரட்டப்பட்டார். பின்பு 1942இல் மெக்ஸிகோவில், ஸ்டாலினி ஆட்களால் கொல்லப்பட்டார். லெனின் காலத்தில் டிராட்ஸ்கியின் ஆக்கங்களை வெளியிட்டதற்க்காக அந்த ஏடுகள் மன்னிபு கேட்க வேண்டும் என்று கோரிக்கை பின்னர் எழுந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ? அதே தான் இங்கு ஒப்பிடலாம்.

        • மாபெரும் சிந்தனாவாதியையும் இத்துப்போன குமுதத்தையும் ஒப்பிடுகிற உங்களிடம், என்னத்த பேசி என்ன சார் ஆகப்போவுது!

        • அந்த மாபெரும் சிந்தனாவாதியை நாட்டை விட்டு விரட்டி பின்பு, கொலையாளிகளை ஏவி கொன்னீக.. அதை விட கொடுமையானது வேறு என்ன இருக்க முடியும் ?
          அவரை குமுதத்தோடு ஒப்பிடவில்லை. ப்ராவதாவில் ஆரம்ப காலங்களில் ட்ராட்ஸ்கியின் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. பிறகு அவர் ஒரு ‘துரோகி’ ஆனதும், வெளியடப் படவில்லை. And he was denounced. அதை தான் இங்கு ஒப்பிட்டேன். முன்னர் அவரின் ஆக்கங்கள் வெளியடப்பட்டது. அதற்க்கு அந்த ஏடுகள் மன்னிப்பு கேட்டக வேண்டுமா என்ன ?

        • டிராட்ஸ்கி திரிபுவாதியாகிய திரிந்த காலங்களில் திரிபுவாக எழுதிய கட்டுரைகளை கம்யூனிஸ்டு கட்சி ஏடுகள் வெளியிட்டனவா என்ன!

        • Of course not. அவ்வேடுகளுக்கு என்ன பைத்தியமா ? பிறகு அதன் ஆசிரிய குழு மொத்தமாக சைபீரிய வதை முகாம்களுக்கு அனுப்படுவர் என்பதை அறியாதவர்களா ?
          நான் சொன்னது, அவர் ’திரிபுவாதியாக’ ’மாறிய’ பிறகு, அதுவரை வெளியிடப்பட்ட கட்டுரைகளுக்காக அவ்வேடுகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முட்டாள்தனமான கோரிக்கைகள் ஏதாவது எழுந்ததா என்ன ? இங்கு, இனி குமுதம் நித்யானந்தரின் கட்டுரைகளை வெளியிடாது. அவரின் நூல்கள் மறுபதிப்பு வருவதும் சந்தேகம் தான்.
          பல தசமங்களாக ஒருவர் பெரும் போராளியாக, மதிக்கப்பட்ட தலைவராக கருதப்பட்டவர், ஒரு கால கட்டத்தில் ‘திரிபுவாதி’ என்று ஒரு ’தலைவரால்’ முத்திரை குத்தப்பட்டு நாடு கடத்தப்படுவது பைத்தியாகரத்தனமாக தெரியவில்லை ? இதுதான் ‘விஞ்ஞானபூர்வமான’ மார்க்சிய முறையோ ? Nothing can be further from scientific methods. இருண்ட கால கத்தோலிக்க திருச்சபைகளால் வேட்டையாடபட்ட விஞ்ஞானிகளை ஒப்பிடலாம். Totally irrational and fascistic methods to suppress dissent or contrary opinions or debates.

    • //பலரையும் போலவே குமுதமும் ஏமார்ந்திருக்கலாம். அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.//

      தரமில்லாத கட்டுரை எழுதுவான். அத படிக்கறவன் என்ன இழிச்ச வாயா?
      காசு கொடுத்து வாங்கிட்டு, மன்னிப்பு வேற இலவசமா வேணுமா?

      • ////தரமில்லாத கட்டுரை எழுதுவான். அத படிக்கறவன் என்ன இழிச்ச வாயா? காசு கொடுத்து வாங்கிட்டு, மன்னிப்பு வேற இலவசமா வேணுமா?////
        அவை தரமில்லாத கட்டுரைகள் என்று நிருபியுங்களேன். அதுசரி, தரம் என்பதற்க்கு அளவுகோல்கள் என்ன ? யார் நிர்ணயம் செய்வது ? வினவு தள கட்டுரைகள் தரமில்லாதவை என்று திருப்பி சொன்னால் ? எதையும் ஆதாரத்துடன், தர்க பூர்வமாக சொல்ல வேண்டும். சும்மா one liner abuses பிரயோஜனமில்லை. சரி, போகட்டும். காசு கொடுத்து வாங்காதீங்க.
        குமதத்தை படிக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யலாம். அது உங்கள் உரிமை.

    • ஒன்றுமில்லை அதியமான் அவரு புத்தகத்திலே, பெரியார் சொன்ன வெங்காயந்தான்.   அட இப்படி எழுதுறதுக்கு பதிலா, நீங்களும் ஆள சேர்த்து மகஇக ஆபிஸ் வாங்க. இல்ல கேஸ் போடுங்க.  முட்டாதனமா ஏன் எழுதுறீங்க

    • The first very two articles written by valamburi jhon and what ever told by valamburi I was noting it and I was appriciated by him for my good tamil writing with out mistake. Later verified by Nithy and send to Kumudam office. More over Kumudam chettiar had some illness and he came for cure and later turned out to be big hawala mosadi group thro MAM

  12. //// பல ஆண்டுகளாக இந்த பொறுக்கியின் ஆன்மீக பீலாக்களை விதவிதமான போஸ்களில் அச்சடித்து நடுத்தர வர்க்கத்திடம் கொண்டு சென்ற குமுதம் பத்திரிகை இன்று என்ன சொல்கிறது?///
    ஆன்மீக பீலாக்கள் என்பது உங்கள் கருத்து. ஆனால் வாழ்க்கைக்கு தேவையான உருப்படியான விசியங்கள் அவை என்று பலரும் கருதுகின்றனர். படித்து பயன் அடைகின்றனர்.
    ஜக்கி வாசுதேவ் தொடர்ந்து எழுதுகிறார். என்ன தவறு அதில் ? முடிந்தால் இந்த ‘ஆன்மீக பிலாக்களை’ தர்க்க ரீதியாக, ஆதாரத்துடன் மறுங்களேன்.

  13. #####ஆன்மீக பீலாக்கள் என்பது உங்கள் கருத்து. ஆனால் வாழ்க்கைக்கு தேவையான உருப்படியான விசியங்கள் அவை என்று பலரும் கருதுகின்றனர். படித்து பயன் அடைகின்றனர்#####

    அதியமான், நீங்கள் சொல்வது உண்மை என்றால் நித்தியானந்தனின் கருத்துக்கள் சரியே என அவனின் அப்பாவி பக்தர்களும், அடிப்பொடிகளும், இல்லையெனில் உதாரணத்திற்கு தாங்களே முன் வந்து போஸ்டர், நோட்டீஸ், மீடியா பேட்டி,டிஜிட்டல் பானர், போன்றவைகளின் மூலம் இன்றே உடனடியாக பிரச்சாரம் செய்யுங்களேன் அதன் நேரடி “விளைவை” அதன் “அற்புதங்களை” உணர்ந்து மகிழலாமே!

    மேலும் நித்தியானந்தன் தான் தவறு அவனின் கருத்துக்கள் சரியென்றால், அவனுக்காக வாதாட ஜக்கி,கல்கி,சாய்பாபா,ஜெயேந்திரன், என யாரும் சீனில் இல்லையே?உங்களைத்தவிர!

  14. இந்தயுகம் கோபியர்கள் லீலைகள் புரியும் மதூரா பாவம்
    அதில் கலியுக கண்ணனின் காமலீலைகள் குற்றம் இல்லை.
    சூள்நிலைகளுக்கு ஏற்ப வேதத்தை மாற்றி அமைக்கும் வேதாந்திகளுக்கு இது பாபம் அல்ல…
    காமம் தலைக்கு ஏறும் போது சூள்நிலையும் அதற்கு தகுந்தார் போல் மாறும் என்று அறியவிலலை போலும்
    இந்த மாயையே வென்ற இந்த இந்த கலியுக மாயக் கள்ளன்,,,,சாரி-கண்ணன்.

  15. தோழர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்

    இப்படி நாலு பத்திரிக்கை முன்பு போராட்டம் நடத்தினா இனிமே சாமியார் கிமீயார்னு எவனையும் பெரிசா போட்டோ போட்டு கல்லா கட்ட மாட்டானுக

    • நண்பர் அதியமான் அவர்களே நீங்கள் குறிப்பிட்ட
      »»»”நித்யானந்தர் விவகாரம் குறித்து இதுவரை எழுதபட்ட பதிவுகளிலிலேயே மிக சூப்பரனாது இது தான்”»»»

      இந்த பதிவில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது நண்பர் சா,நி,க்கு (அது தான் சாரு நிவேதிதா) வக்காலத்து வாங்க வந்து அவரையே மாட்டி விட்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறியவில்லையா?
      »»»நித்யானந்தரோடு சண்டையிடவேண்டியவர்கள் அவரது சீடர்களே தவிர, ஹிந்துக்களோ அல்லது பொதுமக்களோ அல்ல. ஒரு குடும்பத்தில் ஒருவர் சோரம்போவது எப்படி அந்தக் குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினையோ, அதேபோலத்தான் ஒரு சாமியார் தான் பரப்பிய கொள்கைகளுக்கு எதிராக சோரம்போவது அவரைப் பின்பற்றுபவர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அவருக்குப் பணம் கொடுத்தவர்கள், அவரது காலைக் கழுவிக் குடித்தவர்களுக்கு மட்டுமே நித்யானந்தரைத் தண்டிக்கவோ மன்னிக்கவோ உரிமை உணடு. காமன் மேன்களோ அரசோ இதில் தலையிடுவது நியாயமே இல்லை. »»»

      என்று கூறுகிறார், மனுஷ்யபுத்திரன், இதன் மூலம் சா,நி, போன்றவர்கள் காமியார்களுக்கு ஏஜென்டாக இருந்து பிசினெஸ் சீ ஆங்கிலத்திலேயே வருகிறது , தரகனாக இருந்து ஆள்பிடித் தொழிலைச் செய்தால் அதனால் பாதிக்கப்பட்டவர்களே காமியாரை தண்டிக்கவோ மன்னிக்கவோ உரிமை உண்டாம்?, அதாவது ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் தாதாவிடம் ஏமாந்தவர்கள் மட்டுமே அது குறித்து பேச வேண்டுமாம். சா,நி, போன்ற புரோக்கர்களை ஒன்றும் சொல்லக்கூடாதாம்!, இதைக் குப்பனும் சுப்பனும் ஏன் அரசுக்கூட(குமுதம் அரசு அல்ல) தலையிடக்கூடாதாம்??

      என்று அவசரம் அவசரமாக தனது நன்பருக்குக் கேடயத்தைப் பிடிக்கிறார், நமது கவிஞர்,
      »»»ஒருவர் பிரம்மச்சரியத்தைப் போதிப்பதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதும் வேறு வேறு பிரச்சினைகள். மாபெரும் புரட்சிகளே தோல்வியடைந்துவிட்ட உலகத்தில் ஒரு இளைஞனின் பிரம்மச்சரியம் தோல்வியடைவது அவ்வளவு பெரிய பிரச்சினையா? போதனை என்பது ஒரு கருத்து. நித்யானந்தரின் தியானத்தைக்கூட எப்படி ஒருவர் எல்லா சந்தர்ப்பத்திலும் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாதோ அதேபோல பிரம்மச்சரியத்தையும் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாது.»»»

      என்றும் கூறும் கவிஞர்
      இந்த ஐயப்பாட்டை தமது நண்பருக்கு ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாமே?? ஏன் சொல்லவில்லை?? இலாபத்தை ஏன் கெடுப்பானேன் என்று இருந்து விட்டாரோ?
      பாரதிக்கு பின் அறிவார்ந்த முற்போக்கு சிந்தனைக் கொண்ட எழுத்தாளர் அப்பாவியாக இருந்தாக இப்போது கூறுகிறாரோ??
      »»»நித்யானந்தரின் படத்தைச் செருப்பால் அடிக்கும் காட்சிகளைத் திரும்பத் திரும்பக் காட்டிக்கொண்டிருந்தார்கள். இந்தியர்களுக்கு ஒருவன் தலைவனாகவோ கடவுளாகவோ இருப்பதைப் போன்ற ஆபத்தான காரியம் இந்த உலகிலேயே வேறு எதுவும் இருக்க முடியாது»»»

      இது சா,நி,க்குச் சொன்னதுதான் , நேற்றுவரை நீங்கள் தான் உலக சிந்தனைவாதி என்று புகழப்பட்ட தமது நண்பருக்கு ஏற்பட்ட நிலையினை எண்ணி கவிஞர் மனுஷ்யபுத்திரன் உண்மையிலேயே வருத்தப்படுகிறார் உங்களைப் போலவே நண்பர் அதியமான் அவர்களே……

      கடைசியாக கவிஞர் இப்படி முடிக்கிறார்,
      »»»தலைமறைவாக இருக்கும் நித்யானந்தர் பொழுதுபோகாததால் ‘பிரம்மச்சரியம் என்றால் என்ன?’ என்று விளக்கி தமிழ் இணையதளம் ஒன்றில் எழுதப்பட்ட நீண்ட கட்டுரையை ஆர்வமுடன் வாசித்து வருவதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தான் கைது செய்யப்படுவதற்குள் அதை வாசித்து முடிக்கவேண்டுமே என்று இரவு பகலாகத் தூங்காமல் இருக்கிறாராம். நித்யானந்தருக்குத்தான் சோதனை மேல் எத்தனை சோதனை»»»

      ஓகோ அதனால் தான் சா,நி, யின் இணையதளம் புதிய பொழிவுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதா?
      ………………….
      நான் தான் கடவுள் என்று கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவனை “அங்கே பார்த்தேன்” மாய தரிசனம் தந்தார்” “புற்று நோயைக் குணப்படுத்தினார் ” என்று தமது இணையதளத்தில் எழுதிய தனது நண்பரைப் பற்றி இதுவரைக்கும் ஏதாவது சொல்லயிருப்பாரா ஹமித்?(மனுஷ்யபுத்திரன்) இன்னும் அதனையெல்லாம் சா,நி, உண்மையென்றே சொல்வதைக் குறித்து என்ன சொல்லுகிறார் ஹமித்? , ஆயிரம் ரிஷிகளுக்கு ஈடாகாதா நித்யானந்தர் பற்றி இப்போதும் ” மகான் தனது அறிவையெல்லாம் நடிகையின் குண்டியை நக்கப் பயன் படுத்தி விட்டார் என்று ரொம்பத்தான் வருத்தப்படுகிறார்,
      அதியமான் அவர்களே கவிஞரிடம் கேட்டு இந்த அடியேனின் சிறு ஐயத்தைப் போக்க முடியுமா?
      சா,நி சாமியாரின் மீது இவ்வளவு வருத்தம் கொள்வதற்கு காரணம்
      “சாமி நடிகையின் குண்டியை நக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தி விட்டார் ” என்பதா?? ————————–புதியவன் —

      • புதியவன்,
        மிக மிக கிண்டலுடன் எழுதப்பட்ட பதிவு அது. அதையும் இத்தனை சீரியசா எடுத்துகிறீர்களே !! மேலும் அவர் சா.நி பற்றி மறைமுகமாக கூட குறிப்பிட வில்லை. உங்க interpretation அப்படி. இன்னும் சொல்லப்போனால் பிரம்ச்சார்யம் பற்றிய ’நீண்ட’ கட்டுரை எழுதியவர் வேறு ஒரு பிரபல எழுத்தாளர். கிண்டலை புரிந்து கொள்ள முடியவில்லை உங்களால். மேலும் சில் முத்துகள் அக்கட்டுரையில். ( நக்கீரன் செய்த புரட்சி பற்றி). கொஞ்சம் சிரிங்கப்பா.. : ))))

  16. ஸ்ரீ அதியமானந்த குருக்களே !
    ஏன் இந்த விபரீதம்.? நித்தியானந்தா சிறந்த பிரமச்சாரியாக கருதப்படுபவர் ,ஒரு பிரம்மச்சாரி செய்யும் செயலா நாம் வீடியோவில் பார்ப்பது.அது தானே கேள்வி .அவனின் பித்தலாட்டம் வெளியாகி விட்டது அவ்வளவே.

    ” நாம் பெருமையாக கிலாகித்து வரும் இதிகாச புராணம் ,சாஸ்திரம்,வேதம்,உபநிஷதம் ,வேதாந்தம் ,சமய கிரந்தங்கள் ,காவிய நாடகங்கள் ,நீதி உபதேசங்கள் ,சரித்திரம்,கலை ,கலாச்சார நூல்கள் – முதலான பழம் பெருமை மூட்டைகளில் 75 சதவீதம் மடத்தனமான பெத்தல்களும்,உதவாக்கரை பிதற்றல்களும் தான் நிறைந்திருக்கின்றன .” – ராகுல சங்கிருத்தியாயன்

    • யோகன்,
      நான் இந்த பதிவில் எழுதிய அனைத்து பின்னூட்டங்களையும் முழுசா படிக்காமல், அரைவேக்காட்டுதனமாக, கேனத்தனமாக இப்படி எழுதினால் எப்படி ? நித்யானந்தரை கண்டிக்க / தண்டிக்க கூடாது என்று எங்கும் நான் சொல்லவில்லை. அவரை நியாயப்படுதவும் இல்லை. குமுதம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறேன். குமதத்தில் பிரசரிக்கப்பட்ட கட்டுரைகளில் அப்ப்டி என்ன ‘வேண்டாத’ அல்லது மூடத்தனமான விசியங்கள் இருந்தன் என்று இதுவரை யாரும் இங்கு ஆதாரத்துடன் எழுதவில்லை. சும்மா வெற்று one liner abuses.
      ////” நாம் பெருமையாக கிலாகித்து வரும் இதிகாச புராணம் ,சாஸ்திரம்,வேதம்,உபநிஷதம் ,வேதாந்தம் ,சமய கிரந்தங்கள் ,காவிய நாடகங்கள் ,நீதி உபதேசங்கள் ,சரித்திரம்,கலை ,கலாச்சார நூல்கள் – முதலான பழம் பெருமை மூட்டைகளில் 75 சதவீதம் மடத்தனமான பெத்தல்களும்,உதவாக்கரை பிதற்றல்களும் தான் நிறைந்திருக்கின்றன .” – ராகுல சங்கிருத்தியாயன்//////
      இருக்கலாம். அந்த மிச்சம் இருக்கும் 25 % சதவீதத்தை பற்றி தான் கட்டுரைகள். அவற்றை எடுத்து பயனடையவதில் என்ன தவறு ? முதலில் மரியாதையா எழுத கற்றுக் கொள்ளுங்கள்.

  17. அறிவை திறக்கும் விவாதம். வாழ்த்துக்கள் வினவு. அன்பு அதியமான் பாதிக்கப்பட்டோர் அனைவரும் பொதுமக்களே. எனது அலுவலகத்தில் இந்த சாமியாரின் பேரில் நடக்கும் பிரச்சாரங்கள் எனது மனதை நீண்ட நாட்களாகவே பாதித்து இருக்கின்றன. ஹீலிங் என்ற பெயரில் எனது மேலாளர் தனக்கு தெரிந்தவர்களை எல்லாம் சேரச்சொல்லி, அதற்க்கு டெமோ வேற கொடுப்பார். கூட்டங்களின் டிக்கெட் விப்பார். நிச்சயம் அவர் எந்த வகையிலும் ஆதாயம் அடைவதில்லை. மாறாக அவர் அந்த அளவுக்கு மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறார். ஒரு ஆரோக்கியமான சமூகம் பற்றி இவர்கள் அக்கறை கொள்வது கிடையாது. அவர் குழந்தைகள் உட்பட. என்ன சாதிக்க இவர்கள் இப்படி அலைகிறார்கள்? அவரது அன்றாட அலுவலக நடவடிக்கைகளுக்கு தேவையான எந்த அறிவும் அவரிடம் இல்லை. சினிமா பாடல்களை சொல்லி ஆன்மிக போதனை செய்வதை ராஜசேகர் (நித்தியா) பேச்சில் காண முடியும். இவர்களை மக்களிடம் அம்ம்பலபடுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த போராட்டத்தை பார்க்கிறேன். சில ஐ டி இளைஞர்களுக்கு இந்த சாமியார் தான் சாமியே. ஆயிரம் ருபாய் கொடுத்து இவரின் கூட்டங்களுக்கு போகும் இளைஞர்கள் அந்த ரூபாவை வேறு நல்ல காரியங்களுக்கு பயன் படுத்தலாம்.

    ஒரு சம்பவம். கடந்த ஜனவரி மாதம் இந்த சாமியாரின் கூடம் பச்சையப்பன் கல்லூரியில் நடந்தது. எதிரே புத்தக கண்காட்சி. சரிபாதி கூட்டம் இரண்டிலும் இருந்தது. அது இலவச நிகழ்ச்சி. அடுத்த ஒரு மாதத்தில் போரூரில் கட்டண நிகழ்ச்சி. என்ன ஒரு தந்திரம் பாருங்கள். ஒரு சிறந்த மார்க்கெட்டிங் உத்தியாக படவில்லை. இவர்களை போன்றவர்களை எதிர்க்க இந்த போராட்டம் ஒரு நல்ல வாய்ப்பு. ஏன் சன்,நக்கீரன் எல்லாம் பெரிய புடுங்கிகளா….(மன்னிக்க) நிச்சயம் ஒரு நாள் வரும் சார். இவங்க கொட்டமெல்லாம் அடங்கும். அவர் ஆன்மிகம் என்ற பெயரில் அத்துமீறுகிறார். இவர்கள் ஊடகம் வியாபாரம் என்ற பெயரில் aththumeerugirargal. anbudan mathi yugi.

  18. ஐயா. அதியமான் அவர்களே,

    ”’////ஜக்கி வாசுதேவ் தொடர்ந்து எழுதுகிறார். என்ன தவறு அதில் ? முடிந்தால் இந்த ‘ஆன்மீக பிலாக்களை’ தர்க்க ரீதியாக, ஆதாரத்துடன் மறுங்களேன்;”’///// முடிந்தால் தாங்கள் இவரையும் விட்டுப்போன அமிர்தனந்தமை உள்ளிட்டு இன்னும் சிலரையும் பற்றி (ஆன்மீக பிலாக்களை)’ தர்க்க ரீதியாக, ஆதாரத்துடன் மறுங்களேன்…………

  19. TA-Kumudham Exclusive Videos of Nithyananda Scandal with Actress watch on Kumudham.com அப்படின்னு போட்டு ஊர்ல இருக்குற எல்லாருக்கும் மெசேஜ் அனுப்புது இந்த குமுதம் பத்திரிகை !

    ஒய்யால சாமியார வச்சி பிட்டு படம் காட்டி கல்லா கட்றான் !

  20. நண்பர் அதியமான் அவர்களே

    உண்மைதான் அவர்(மனுஷ்யபுத்திரன்) கிண்டலாகத்தான் எழுதியுள்ளார், ஆனால் சிரிக்க முடியவில்லை, உங்களுக்காக முயற்சி செய்தும் முடியவில்லை.மன்னிக்கவும், ஏனெனில் தனது இணையதளத்தில் ராஜசேகரின் புகைப்படத்தை வெளியிட்டு அவர் சிறந்த ஞானி இந்த உலகத்தில் அவரைப் போன்ற ஞானி இதுவரை யாரும் இருந்ததில்லை, அவரை அங்கே பார்த்தேன் , அதை செய்தார் இதை நிகழ்த்தினர் என்று சா,நி, எழுதிய போது (http://www.charuonline.com/Sep2009/KadavulaiKanden.html
    1 of 7 10/2/2009 4:36 AM)ஏன் இப்படி கிண்டலாக எதுவும் எழுதவில்லை?? சரி இப்போதுதாவது அவர் செய்த கிண்டலில் ராஜசேகரின் தொழில் தரகர் சா,நியைப் பற்றி ஏன் சேர்க்கவில்லை?
    ராஜசேகர் போன்ற நபர்களை அடையாளப்படுத்தும் போது அதனைப் பாராட்டாமல் வெளிப்படுத்தியவர்களை குறைக்கூறும் குணத்தை என்னவென்பது? சன்டிவி மற்றும் நக்கீரனை வேறு ஒரு சமயத்தில் இழுத்துப் போட்டு மிதியுங்கள், அதற்கென்ன வாய்ப்பாயில்லை,???
    —-புதியவன்

  21. சாமிகளை அம்பலப்படுத்தி விரட்டினால் போதாது அவர்களுக்கு துணை போகும் ஆசாமிகளை [பத்திரிகைகலை]அம்பலப்படுத்த வேண்டும் என்பதை ம க இ க நிருபித்துள்ளது ……

  22. //எனது அலுவலகத்தில் இந்த சாமியாரின் பேரில் நடக்கும் பிரச்சாரங்கள் எனது மனதை நீண்ட நாட்களாகவே பாதித்து இருக்கின்றன. ஹீலிங் என்ற பெயரில் எனது மேலாளர் தனக்கு தெரிந்தவர்களை எல்லாம் சேரச்சொல்லி, அதற்க்கு டெமோ வேற கொடுப்பார். கூட்டங்களின் டிக்கெட் விப்பார். நிச்சயம் அவர் எந்த வகையிலும் ஆதாயம் அடைவதில்லை. மாறாக அவர் அந்த அளவுக்கு மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறார்./ அதியமான், குமுதத்திற்கு இப்படி மனிதர்களை மெண்டல் ஆக்கியதில் பங்கு இல்லை என்று சொல்ல முடியுமா ?. பத்திரிக்கைகளில் வரும் இந்தமாதிரி செய்திகளுக்கு (விளம்பரதாரர் பகுதி என்று வரும் தாது விருத்தி செய்திகள் அல்ல) பின்னால் மக்களுக்கு இந்த ஆசாமிகளின் மீது நம்பிக்கை கூடுகிறது. சரி. நீங்கள் வழக்கம் போல ஸ்டாலின் டிராஸ்கி என்று பதுங்கிக் கொள்ளுங்கள். ஸ்டாலின் சிறைகளுக்கு ஏன் மேற்கத்திய பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை என்று நீங்கள் கேட்ட கேள்வியால், ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சியில் உங்களிடம் விவாதிப்பதில் இருந்து ஒதுங்கி விட்டேன். தூங்குபவர்களை எழுப்பி விடலாம். தூங்குபவர்களாக பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது.