அறுசுவைகளில் இனிப்பை மட்டும் ருசியாக கொண்டாடும் குஷிப் பேர்வழிகளைத் தவிர்த்து அனைவரையும் அங்காடித் தெரு ஏதோ ஒருவிதமாய் பாதித்திருப்பதில் வெற்றியடைந்திருக்கிறது.
தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு பேரங்காடியில் குவிக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான பொருட்களோடு பொருளாக ஆனால் சாயம் போய் வாடிப்போயிருக்கும் உயிருள்ள மனிதர்களை, சிப்பந்திகளை காட்டுவதற்கு ஒரு தமிழ் சினிமா இயக்குநர் துணிந்திருப்பது ஆச்சரியமானது. அதனால் பாராட்டுக்குரியது. ஆனால் பாராட்டியவர்களும், படத்தின் சோகத்தை அருந்தியவர்களும் இந்த நவீன கலை ஊடகத்தின் பிரதியினால் ஒரு பொதுவான மனிதாபிமானம் என்பதைத் தாண்டி ஒரு அழுத்தமான பாதிப்பை அடைந்திருப்பார்களா என்பதில் நிறைய ஐயமிருக்கிறது.
ஏழ்மையை பார்த்து மட்டுமே உணரும் எவரிடமும் ஏற்படும் மனிதாபிமானம் எத்தகையது? குறிப்பாகச் சொன்னால் ஏழ்மையை சுலபமாக புரிந்து கொள்ளமுடியுமா?
விபத்து, தற்கொலை, இரத்தம், எதிர்பாராத அடிகள், துன்பங்கள் என்பதைக் காட்டித்தான் ஏழ்மையைக் காட்ட முடியுமென்று வசந்த பாலன் நினைத்திருப்பது பா வரிசைப் படங்களிலிருந்து தமிழ் சினிமா மரபு கொண்டிருக்கும் உத்திதான். நல்லதங்காள் கதையைக் கேட்டு வளர்ந்த நாடுதானே இது? ஆனால் இன்று நல்லதங்காள் என்ற சோகத்தின் அரசி கதையில் அல்ல, அன்றாடம் நாளிதழில் அடிபடும் ஒரு செய்தித் துணுக்காக மாறிவிட்டாள். நமக்கும் நல்லதங்காள் உத்தி இன்று போதுமானதல்ல.
_________________________________________
கண் முன்னே கொடுரமாக அடிபட்டுத்தான் ஒரு எளியவனின் துன்பத்தை உணர முடியுமென்றால் நாம் எந்தக் காலத்திலும் உழைக்கும் வர்க்கத்தின் அவலத்தை புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஏழ்மையின் வாழ்வில் இத்தகைய திடுக்கிடும் திருப்பங்களை விட மெல்லக் கொல்லும் ‘அமைதியான’ வாழ்க்கைதான் கண்முன் காணும் உண்மை. அந்த உண்மையை ஊடுறுவிப் பார்ப்பது எப்படி? ஒரு விபத்தில் செத்துத்தான் ஒரு ஏழை தனது அவலத்தை புரியவைக்க முடியுமென்றால் சாகாத ஏழைகளின் கதி?
கே.கே நகர் விபத்து, லிங்கத்தின் தந்தை விபத்து, இரக்கமற்ற முதலாளி அண்ணாச்சி, கொடுரமான கங்காணி அண்ணாச்சி, இதயத்தை உலுக்கும் அந்த காதல் பெண்ணின் தற்கொலை, அவள் காதலனது மனமுடைந்த அவலம், கனியின் தங்கை நாகம்மையின் சித்தரிப்பு, நின்ற கால் வியாதியால் சாகும் தொழிலாளி, மந்தைகளைப் போல அடைந்து வாழும் சிப்பந்திகள் என்று படம் முழுவதும் வரும் சோகங்கள், அவை கற்பனையல்ல உண்மை என்றாலும் படத்தில் அதிர்ச்சியை மிகையாக ஏற்படுத்த வேண்டுமென்பதாக மாறிவிட்டன. இவை அளவாக பயன்பட்டால் இயக்குநர் தான் காட்டவிரும்பும் கதை உணர்ச்சியை உணர்த்த முடியாது என்று நினைத்திருப்பரானால் அது அவரது பலவீனம். இயல்பாக செய்திருந்தால் அது அவரது அறியாமை.
அழகான, சுத்தமான, நவீனமான வாழ்க்கையில் முங்கித் திளைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தை இப்படிக் காட்டித்தான் அழவைக்க முடியுமென்றால் அந்த அழுகையின் காலம் சிலமணித்துளிகள் மட்டும்தான். சாரமாகச் சொன்னால் ஏழைகளின் அவலத்திற்கு காரணமான வாழ்க்கையை வாழக்கூடியவர்களில் நானும் ஒருவன் என்ற எண்ணத்தை ஆழமாக உணர்த்த வைப்பதுதான் கடினமென்றாலும், தேவையானது. அது அங்காடித் தெருவில் இல்லை.
ஒரு மலக்குழிக்குள் இறங்கும் தொழிலாளியின் நிலையைப் புரிந்து கொள்ள காமராவும் கூட இறங்குவது தவறென்று சொல்லவில்லை. ஆனால் சாக்கடைகளின் வாழ்க்கையை அறியாத ‘சுத்தமான’ சாக்கடைகளை அது மட்டுமே சுத்தப்படுத்திவிடாது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஜி – 8 குழும நாடுகளது அதிபர்களின் கூட்டத்திற்கு மேலைநாடுகளின் தன்னவார்வக்குழுக்கள் MAKE POVERTY HISTORY வறுமையை வரலாற்றாக்கு என்ற முழக்கத்துடன் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளை நடத்தின. மேற்கத்திய நாடுகளின் பிரபலமான எல்லாப் பாடகர்களும் அதில் பங்கேற்றனர். இவர்களது கோரிக்கை வறுமையில் இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் கடன்களை மேலைநாடுகள் இரத்து செய்யவேண்டுமென்பதுதான். ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையே ஏகாதிபத்தியங்களின் உற்பத்தியென்பதை மறுக்கும் இந்த அபத்தத்தை விட்டுவிட்டு பார்த்தால் ஒரு காட்சி மட்டும் இப்போது நினைவுக்கு வருகிறது.
இசை நிகழ்ச்சிகளின் இடையில் அவ்வப்போது ஆப்பிரிக்க நாடுகளின் வறுமை புள்ளவிவரங்களையும், சில ஆவணப்படங்கள் போன்ற காட்சித் துணுக்குகளையும் காட்டினார்கள். ஒரு ஆப்பிரிக்க குடிசையில் தாயும் சிறு குழந்தைகளும். குழந்தைகள் அம்மாவிடம் பசிக்கிறது என்று அடிக்கடி பலவீனமான குரலில் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அம்மாவும் சமையல் தயாராகிறது என்று அடுப்பையும், பாத்திரத்தையும் காட்டியவாறு இருக்கிறாள். பாத்திரத்திலிருந்து சமையலின் புகை பரவுகிறது. அதைப் பார்த்தவாறே குழந்தைகள் பின்னர் ஏக்கத்தில் தூங்கிப் போகிறார்கள். உண்மையில் அந்தப் பாத்திரத்திலிருந்த நீரில் ஏதோ சில மரக்குச்சிகள் மட்டுமே இருந்தன. ஏதோ ஒன்று சமைப்பதாக குழந்தைகளை போக்குகாட்டி தூங்கவைக்கும் அந்தப்பெண்ணுக்கு இது தினசரி வாடிக்கை. எந்தக்குறுக்கீடோ, தயாரிப்போ, திட்டமோ இன்றி எடுக்கப்பட்ட இது போன்ற பல காட்சிகளைக் காட்டினார்கள்.
ஆப்பிரிக்க குழந்தைகளின் எலும்புக்கூடு தோற்றம், வயிறு வீங்கிய உடம்பு, ஈ மொய்க்கும் உதடுகள், அப்புறம் எத்தனை இலட்சம் பேர் இறந்தார்கள் என்ற காட்சிகளும், செய்திகளும், புள்ளிவிவரங்களும் உணர்த்தத் தவறிய ஒரு வேதனையை அப்போது நான் உணர்ந்தேன். நான் இலக்கியவாதி இல்லையென்பதால் அந்த உணர்ச்சியையும், காட்சியையும் இங்கே அப்படி பதிவு செய்திருப்பேனா என்பது சந்தேகம் என்றாலும் யாரும் அந்த தாயின் வேதனையைப் புரிந்து கொள்ளலாம்.
நேரிட்டு பார்க்கும் யதார்த்தம் மட்டுமே உண்மையல்ல. யதார்த்தம் பற்றி பழக்கடுத்தப்பட்ட பார்வை வழியாகவே நாம் பார்க்கிறோம். அதுவே தன்னளவில் உண்மையை வழங்கிவிடாது. விக்கிபீடியாவிலோ, இல்லை பல புள்ளிவிவரங்களிலோ இருக்கும் செய்திகளையும், கணக்குகளையும் பலர் உண்மைகளாக நம்புகிறார்கள். அந்த செய்தியை அதனோடு தொடர்புள்ள ஏனைய சமூக வாழ்வின் இயக்கத்தை அல்லது வரலாற்றின் உணர்ச்சியில் பொருத்தித்தான் புரிந்து கொள்ள முடியும். அல்லது உண்மையைக் கண்டுபிடிக்கமுடியும்.
___________________________________________________
வசந்த பாலன் அங்காடித் தெருவை எடுப்பதற்காக நிறைய முயற்சிகள் செய்து விவரங்கள் சேகரித்திருக்கிறார். இதையெல்லாம் உள்ளொளியில் கண்டு கொள்ளலாம் என்ற ஜெயமோகன்களது மேதைத்தனம் அவரிடமில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் இயக்குநர் சேகரித்த விவரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, முரண்பட்டு, வேறு ஒரு உண்மையை, யதார்த்த்த்தை, புதிய கண்டுபிடிப்பை உணரும், கலையும் தத்துவமும் இணைந்து சாத்தியமாக்கும் கதையை அவரால் எழுதமுடியவில்லை. அதுதான் மிகையான சோகக்காட்சிகள் மூலம் காட்டிவிடலாம் என்று போயிருக்குமோ?
முதலாளி அண்ணாச்சியின் சித்தரிப்பு ஒரு எடுத்துக்காட்டு. தீவிர கடவுள் பக்தர், எச்சக்கையை ஆட்டினால் இங்கேயே ஆள் கிடைக்குமென்ற திமிரான எக்காளம், விளம்பரத்திற்காக சினேகாவை முந்தானையை விரித்து ஆடச் சொல்வது, பொய்ப் புகார் மூலம் கடைச் சிப்பந்தியான லிங்கத்தை போலீசு மூலம் அடிக்க வைப்பது, வியாபார நலனுக்காக எப்போதும் இரக்கமின்றி பேசுவது எல்லாம் முதலாளி அண்ணாச்சியைப் பற்றிய உண்மையான சித்தரிப்புகள் என்றாலும், அண்ணாச்சிகள் என்று பார்த்தாலும், நவீன முதலாளிகள் என்று போனாலும் அவையே முழு உண்மையல்ல.
அம்பானியோ, டி.வி.எஸ், ஹூண்டாய் முதலாளிகளெல்லாம் அண்ணாச்சிகள் போல கடுஞ்சொல் பேசி சாட்டையைச் சுழட்டும் நம்பியார் டைப் வில்லன்களல்ல. ஒரு வேளை வசந்த பாலன் அவர்களைப் பற்றி படமெடுக்க விவரங்கள் சேகரித்திருந்தால் அவரால் மணிரத்தினத்தின் குரு போலவோ அல்லது அதற்கு கம்மியாகவோதான் எடுத்திருக்க முடியும். ஆனால் இந்த நாகரீக முதலாளிகள்தான் அநாகரீக அண்ணாச்சி முதலாளிகளை விட தொழிலாளிகளை மட்டுமல்ல முழு சமூகத்தையும் இழிவாகவும், சுரண்டியும் நடத்தி வருகிறார்கள். சோப்பு, சீப்பு, பாத்திரம், துணி விற்பதற்காக சிநேகவை பளிச்சென்று சிவப்பு கலர் சேலையில் குத்தாட்டம் போடச்சொல்லும் அண்ணாச்சியை விட, கிங்ஃபிஷரின் காலண்டருக்காக ஏதோ ஒரு தீவில் பிகினி, முக்கால் நிர்வாணப் பெண்களைக் கூட இருந்து படமெடுக்கும் விஜய் மல்லையாக்கள்தான் ஆபத்தானவர்கள்.
படத்தின் கதையில் நாயகர்களான கடைச் சிப்பந்திகளது வில்லன்களாகத்தான் அண்ணாச்சி வருகிறார். ஆனால் முதலாளிகளான அண்ணாச்சிகளது ஆளுமையை அப்படி வில்லன் பார்வை இல்லாமலே கூட சாரத்தைச் சரியாகச் சித்தத்திருப்பதன் மூலம் அந்த நோக்கத்தை இன்னும் பரந்த அளவில் செய்திருக்க முடியும். ஏனெனில் அண்ணாச்சிகளின் உருவாக்கம் என்பது அவர்களது தனிப்பட்ட பண்புநலன்களால் மட்டும் உருவாகிவிடுவதில்லை. பல்வேறு சமூகக்காரணிகளின் பின்புலத்தில்தான் அவர்கள் ‘அப்படி’ இயங்குகிறார்கள்.
____________________________________________________
ஏதோ ஒரு தீபாவளி நாளில் கடைத்தெருவுக்கு சென்ற போது எல்லா கடைகளும் பூட்டியிருந்தன. திறந்திருந்த ஒரு அண்ணாச்சி கடையில் தீபாவளிக்கு ஊருக்கு போகவில்லையா என்று கேட்டேன். “பொழப்புக்காக மஞ்சப்பையை எடுத்துட்டு என்னைக்கு வந்தமோ அன்னையிலிருந்து தீபாவளியாவது, பொங்கலாவது” சலிப்புடன் சொன்னார்.
அண்ணாச்சியாக நடித்திருக்கும் பழ.கருப்பையாவின் செட்டியார் சாதிதான் தமிழகத்தின் மரபார்ந்த வணிக சாதி. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உழைப்பே இல்லாத சுரண்டல் வட்டிக்கடையின் மூலம் சொத்து சேர்த்து பர்மாத் தேக்கில் அரண்மனை வீடுகள் கட்டி இன்று ப.சிதம்பரமாகவும், எம்.ஏ.எம். சிதம்பரமாகவும், ஸ்பிக் முத்தையாவாகும், அரசுவேலை, தொழில் என்று நடுத்தரவர்க்கமாகவும் இருக்கும் செட்டியார்களுக்கும், புதிய வணிக வர்க்கமாக தலையெடுத்திருக்கும் நாடார்களுக்கும் பாரிய வேறுபாடு உண்டு.
பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பில் கடைநிலையில் இருந்த நாடார் மக்கள் பொதுவான சீர்திருத்தத்தின் மெதுவான முன்னேற்ற வளர்ச்சியில் மாறியவர்கள். சுயசாதி முன்னேற்றம், கூட்டுதவியின் மூலம் சற்று நிறுவன மயமான சாதியும் கூட. எனினும் பெரும்பாலான நாடார் மக்கள் செட்டியார்களைப் போல முழுதாக வாழ்க்கையின் பங்கைப் பெற்றவர்களல்ல. சிலர் முதலாளிகளாகவும், பெரும் வியாபாரிகளாகவும் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் சிறு கடைகளை வைத்து அதற்குமேல் முன்னேற முடியாத நிலைமையில்தான் காலம் தள்ளுகிறார்கள்.
இந்த சிறு கடை அண்ணாச்சிகளின் வாழ்க்கை அங்காடித்தெரு காட்டும் உக்கிரத்தை விட அவலமானது. அதே போல இந்தக்கடைகளில் பயிற்சிக்காகவும், எதிர்கால பிழைப்புக்காகவும் வரும் இளைஞர்களின் நிலையும் அப்படித்தான். சரவணா ஸ்டோர் அண்ணாச்சியைப் போலவோ இல்லை இன்னும் அதிகமாகவோ இந்த சிறு கடை வியாபாரிகள் தனது பணியாட்களை நடத்துவார்கள். “அப்படித்தான் நானும் கஷ்டப்பட்டு இளமையைத் தொலைத்து, தொழிலைக் கற்று கடைவைத்தேன்” என்று அவர்களால் அதை நியாயப்படுத்தவும் முடியும்.
இன்று இந்த சிறு கடை அண்ணாச்சிகளது வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிட்டது என்றாலும் எல்லாவகை அண்ணாச்சி முதலாளிகளும், வியாபாரிகளும் இப்படி கடினமாக நடந்து கொள்வதை இப்படித்தான் பேசுகிறார்கள். அது ஜனநாயகமற்ற நிலவுடைமைச் சமூகத்தின் அழிவிலிருந்து பொருளாதார ரீதியாக மாறும் சிரமத்தில் வேர் கொண்டிருக்கிறது. வேறு வகையில் சொன்னால் ஒரு குறைந்தபட்ச வாழ்க்கையை நேர்மையோடு அமைத்துக் கொள்வதற்கே இவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கிறது என்றால் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகளில், தொழிலில் ஜனநாயக உணர்வுகள் இருப்பதற்கு அடிப்படை இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
குறிப்பிட்ட காரணங்களினால் பெரும் கைகளாக உருவெடுத்திருக்கும் சரவணா ஸ்டோர், சரவண பவன் போன்ற சென்னையின் பணக்கார நாடார்களோ, அது போல இதயம் நல்லெண்ணெய் போன்ற பணக்கார விருதுநகர் நாடார்களோ, தினத்தந்தி குழும நாடார்களோ ஆரம்பத்தில் இப்படி இருந்தது உண்மையென்றாலும் அவர்களது ஆளுமையில் நிலவுடமை ஆதிக்கத்தின் சாதகங்களை பயன்படுத்திக் கொள்ளும் பொருளாதார நலன் சேர்ந்திருக்கிறது.
அவர்களது உழைப்பு, அதற்கு சமூகம் அளித்த வாய்ப்பு, அதைப் பயன்படுத்தி நிதி ஆதாரம் பெறுதல், ஆளும் வர்க்கங்களுடன் சமரசம் செய்து முன்னேறுதல் மூலம் பணக்காரர்களான இந்த நாடார்கள் தமது நிலையை தங்களது ‘உழைத்து முன்னேறிய’ கதையாக மட்டும் கருதிக் கொள்கிறார்கள். பணம் பெருகப் பெருக இந்தக் கருத்து முன்னிலும் உறுதியாக மாறுகிறது. அதே நேரம் தனது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கிக் கொள்ள இந்த சுய முன்னேற்ற கொசுவத்தி இமேஜ் காரணமாக சுயசாதியின் ஏழைகளை நயவஞ்சகமாக சுரண்டுவதற்கும் பயன்படுகிறது.
________________________________________________
சுயசாதி ஏழைகளை வைத்து தொழில் நடத்தும் முதலாளிகளைப் பற்றி தோழர் கார்க்கி அவரது அங்காடிப் பட விமரிசனத்தில் எழுதியிருக்கிறார். அதைப் படியுங்கள். அங்காடித் தெருவில் வசந்த பாலன் காட்டத் தவறிய முக்கியமான விசயம் இந்த சுயசாதி ஏழைகள் சாதிப்பற்று காரணமாக தமது முதலாளிகளை சுயமரியாதை இன்றி ஏற்கவும் செய்கிறார்கள் என்ற உண்மைதான். அதனால்தான் பொதுவில் சாதிக்காரர்கள் மட்டுமோ அல்லது பெரும்பான்மையாகவோ இருக்கும் தொழில்களில் தொழிற்சங்கம் கட்டுவது கடினம். தொழிலாளி வர்க்க உணர்வை சாதிக்காரணம் சொல்லி அழிப்பது முதலாளிகளுக்கு வசதியென்றால், அதற்கு பலியாகியிருக்கும் தொழிலாளிகளைப் பொறுத்தவரை அது விமரிசக்கப்பட வேண்டியது.
தேவர் சாதி நா.சேதுராமன் நடத்தும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மக்களிடம் கொள்ளையடிப்பதற்கு பெயர் பெற்றது. எல்லா சாதி மக்களும் வந்தாலும் அங்கே வேலை பார்க்கும் பெரும்பாலான சுயசாதி ஊழியர்கள் என்ன பிரச்சினை வந்தாலும் நிர்வாகத்தை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பதை ஒரு சொந்த அனுபவத்தோடு ஒரு நண்பர் சொன்னார். அந்த வகையில் இந்த சுயசாதி பற்று சரவணா ஸ்டோர் ஊழியர்களிடமும் இருக்கிறது என்பதை வசந்த பாலன் காட்டியிருக்க வேண்டும். அவர்களது அவலத்தின் முக்கிய அஸ்திவாரமே இங்கேதான் இருக்கிறது. நெல்லையில் நாடார்களாக பார்த்து அதுவும் குடும்பப் பொறுப்புகள் அதிகமிருக்கின்ற இளைஞர்களை பொறுக்கி வரும் விடயத்தைப் போல இதுவும் முக்கியமான ஒன்று.
சரவணா ஸ்டோரில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்காமல் அடிமைகளாக வாழும் துயரத்தின் வலிமை இந்த சுயசாதிப் பற்றில்தான் பொதிந்திருக்கிறது. அதே போல அந்தக் கடை அண்ணாச்சியின் எடுபிடிகளது இரக்கமற்ற நடைமுறைகளும் இந்த சுயசாதி பலத்தை வைத்தே ஆடுகிறது. அங்காடித் தெரு இதை விரிவாக பேசியிருந்தால் படம் இன்னும் கொஞ்சம் ஆழமாக பயணித்திருக்கும். வில்லனைப் போல இடம் பெற்றிருக்கும் அண்ணாச்சியின் சித்திரிப்பு, ஊழியர்களின் சாதிப்பற்றை விமரிசித்திருந்தால் மட்டுமே முழுமையடைந்திருக்கும்.
இது சரவணா ஸ்டோரோடு முடியவில்லை, இந்தியா முழுமைக்கும் உள்ள பிரச்சினை. தங்களது சொத்து மரபுரிமையால் கிடைத்ததாக எண்ணும் நிலவுடைமைப் பண்ணையாரும், உழைப்பினால் பெற்றதாக கருதும் முதலாளிகளும் பல விசயங்களில் வேறுபட்டிருக்கிறார்கள். பண்ணையாரின் ஆதிக்கத்தை பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பும், முதலாளிகளின் ஆதிக்கத்தை முதலாளித்துவத்தின் ‘ஜனநாயக’மும் நியாயப்படுத்துகின்றன. மக்களும் அவற்றை இயற்கையான நீதியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
சில அறிவாளிகள் கருதுவது போல மேற்கத்திய கல்விமுறை, மேலாண்மைப் படிப்புகள் மூலம் முதலாளிகள் ஜனநாயக உணர்வு பெறுவதில்லை. அவர்களுக்கு அதை கற்றுக் கொடுப்பது தொழிலாளிகள்தான். அதனால்தான் தொழிலாளிகளின் எழுச்சியைப் பார்த்து பீதியடைந்த முதலாளித்துவ வர்க்கம் தனது வரலாற்றுப்பாத்திரத்தை கழுவிவிட்டு பிற்போக்கான நிலவுடைமை வர்க்கங்களையும் ஆதரிப்பது என்ற நிலையை எடுத்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் அம்பானியின் சொந்த மாநிலத்தின் வணிக சாதி மக்கள் கணிசமான அளவில் பங்குதாரர்களாக இருப்பது தற்செயலான ஒன்றல்ல.
___________________________________________
அங்காடித் தெருவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். சில மேதைகள் படம் பார்த்த எழுச்சியில் கம்யூனிஸ்டுகள் சரவணா ஸ்டோரில் ஏன் சங்கம் கட்டவில்லை என்று அதிகார தோரணையில் கவலைப்படுகிறார்கள். கஷ்டப்படும் மக்களுக்காக கம்யூனிஸ்டுகள் மட்டும்தான் சங்கம் கட்டவேண்டும் என்பதில்லை. அங்காடித் தெருவுக்காக மனிதாபிமானத்தை சிரமப்பட்டு நினைவு கூறுபவர்களும் அதைச் செய்யலாம்.
சரவணா ஸ்டோரில் தொழிற்சங்கம் கட்ட முடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று சாதிப்பற்றும், சொந்த வாழ்க்கைக்கையின் சிரமங்களும் ஏற்படுத்தும் அடிமைத்தனம். இரண்டு இத்தகைய கடுமுழைப்பு வேலை செய்யும் தொழிலாளிகள், பொழுது போக்கு என்பதற்கே வாய்ப்பற்ற நிலையில் தொழிற்சங்கம் என்ற பணிக்கு சமூக நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கும் யதார்த்தம்.
ஆனால் சரவணா ஸ்டோரில் சங்கம் கட்ட முயன்று தோல்வியடைந்ததாக வைத்துக் கூட இதைவிட ஒரு நல்ல படம் எடுத்திருக்க முடியும். இதனால் நாங்கள் சினிமாவை ‘கட்சிப் பிரச்சாரத்திற்காக’ விமரிசிப்பதாக எண்ணும் நண்பர்கள் இங்கே சங்கம் கட்ட முயன்று தோற்றதைத்தான் படமெடுக்கமுடியும் என்ற வாக்கியத்தையும் நினைத்து விட்டு பேசவும்.
தலித்துக்கள், ஏழைகள் போன்ற ஒடுக்கப்படும் பிரிவினர் அவர்களது அடிமைத்தனத்தை மூடியிருக்கும் உலகத்தில் இருந்து கொண்டு மட்டும் விடுதலையை உணர முடியாது. அது அவர்களது உலகிற்கு வெளியிலிருந்தே வருகிறது. கிராமத்தில் இருக்கும் வரையிலும் தீண்டாமையை காலம் காலமாக இருக்கும் ஒரு பழக்கம் என்று சகித்துக் கொள்ளும் ஒரு தலித் அவனது வாழ்க்கைத் தேவைக்காக கிராமத்தை விட்டு வெளியேறலாம் என்ற ஒரு அரசியல் சூழல் உருவாகி நகரத்துக்கு சென்று அங்கே சமத்துவத்தை கண்டு, அனுபவித்து பின்னர்தான் தனது கிராமத்துக்கு திரும்பும் போது அந்த தீண்டாமையை எதிர்க்க வேண்டுமென்ற உணர்வைப் பெறுகிறான்.
அடுப்படியில் அடைபட்டிருக்கும் பெண்கள் கூட ஆண்கள் நிறைந்திருக்கும் சமூகவெளியில் புழங்கும்போதுதான் தமது சமூக அடிமைத்தனத்தை உதறவேண்டுமென்ற விருப்பத்தை அடையமுடியும். இங்கே வலியுறுத்துவது அடிமைகளின் உலகிலோ, இல்லை அடிமைகளின் மூளைகளிலோ அவர்களது விடுதலைக்கான அவா பிறக்க முடியாது. அது வெளியிலிருந்தே வருகிறது.
அங்காடித் தெரு அந்த ‘வெளிப் பார்வையை’க் கொண்டிருக்கவில்லை. மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளின் மூலம் ஊழியர்களின் சோகத்தை காட்டியிருப்பதற்குப் பதில் இந்த வெளியுலகோடு அவர்களை பிணைக்கும் வகையில் யோசித்திருந்தால் ‘அமைதியான’ முறையிலேயே அந்த அவலத்தை வியப்பூட்டும் வண்ணம் பார்வையாளர்களுக்கு நெஞ்சில் அறைந்து சொல்லியிருக்கலாம்.
_____________________________________________
எல்லா வகை ‘கருத்துச் சுதந்திரமும்’ உள்ள சென்னை மாநகரில் வாழும் அந்த கடை ஊழியர்கள் தனித்த பாலைவனத்தில் வாழ்வது போல வாழ்கிறார்கள். இது ஒருவகையில் உண்மையென்றாலும் மற்றொரு வகையில் உண்மையல்ல. பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்த்துக் கேட்கும் வல்லமைக்கு சான்றுகள் பெருகி வரும் காலத்தில் ஒரு சூபர்வைசர் மானாவாரியாக அடிப்பதும், கண்ட இடத்தில் கை வைத்தும் பெண் ஊழியர்களை அவமானப்படுத்துவது எப்படிச் சாத்தியம்? இவை சரவணா ஸ்டோரில் நடந்திருக்கலாம். அதையொத்த பல நிறுவனங்களில் அப்படித்தான் நடக்கிறது. நடக்க வாய்ப்பும் இருக்கிறது. ஆயினும் சமூக யதார்த்தம் என்று வரும்போது இதை நாம் இப்படியே சொல்வது சரியா?
பாலியல் வன்முறைகள் எவ்வளவு நடக்கிறது என்பதை விட அதை எதிர்த்து அவ்வப்போது பெண்கள் காட்டும் எதிர்ப்பும் வளருகிறது என்பதே முக்கியம். சரவணா ஸ்டோரில் எல்லா சூபர்வைசர்களும் அப்படி விகாரத்துடன் நடப்பவர்களாக இருக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதை எப்போதும் பொறுமையாக ஏற்குமளவு அந்தப் பெண்கள் அனைவரும் அடிமைகளாக இருக்க முடியாது.
படத்தில் இந்த எதிர்ப்பு பாதிக்கப்பட்ட கனியின் காதலன் என்ற முறையில் லிங்கத்திடம் இருந்தே வருகிறது. காதலித்த குற்றத்திற்காக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்வதாக இருக்கட்டும், இல்லை பெண் ஊழியர்கள் பாலியல் வக்கிரத்துடன் தண்டிக்கப்படும் சமயங்களாக இருக்கட்டும், இதை எல்லோ ஊழியர்களும் அடிமை போல ஒரு முணுமுணுப்புக் கூட இன்றி பேசா மடந்தைகளாக ஏற்றுக் கொள்வதாகவே படத்தில் வருகிறார்கள். சூபர்வைசரின் தலையில் ஒரு மூட்டையைப் போட்டு அவமானப்படுத்தும் காட்சியும், அதன் பிறகு வரும் பாடலும் இந்த பிரச்சினையை ஒரு காமடி போலத்தான் சித்தரிக்கிறது. பாலியல் கொடுமைகளை எதிர்ப்பதற்கு நகைச்சுவையை கையிலெடுத்திருக்கும் இயக்குநரின் உத்தியை ஏற்க்க முடியவில்லை. முதலாளித்துவத்தின் கொடுமைகளை நகைச்சுவையின் மூலம் காட்டிய சார்லிசாப்ளினின் படங்களில் அவை இறுதியில் வெறும் காமடியாக மட்டும் உணரமுடியாத வண்ணம் அழுத்தமான சோகத்தை உணர வைக்கிறது.
அந்தப் பேரங்கடியில் அண்ணாச்சியின் கருங்காலிகளாக வேலை பார்ப்பவர்கள் ரவுடி போல இருப்பது பிரச்சினையல்ல. இதை ஏற்றுக் கொண்டு வேறு வழியின்றி வாழ வேண்டிய நிலையில் இருந்தாலும் ஊழியர்களின் ‘அமைதி’தான் முக்கியமானது. இடித்துரைக்கப்பட வேண்டியது. தன் காதலியின் மீது கைவைத்தான் என்று சூபர்வைசரை பந்தாடும் லிங்கம், கூடவே அமைதியான அடிமைகளாக இருக்கும் தனது சக ஊழியர்களையும், தன்னையும் வார்த்தைகளால் சுட்டிருக்க வேண்டும். தென்மாவட்டங்களின் உழைக்கும் வர்க்கப் பின்னணியிலிருந்து வந்திருக்கும் அந்த பெண்களையும் உள்ளிட்ட இளைஞர்கள் இதையெல்லாம் கண்டும் காணாமல் பாராமுகமாக போய்விடக்கூடியவர்கள் இல்லை. அவர்களுக்கு தேவை ஒரு நெருப்பு. அதை படத்திலாவது இயக்குநர் பற்ற வைத்திருக்கலாம்.
_____________________________________________________
கடை ஊழியர்களை நாயக நாயகியாக்கியிருப்பதற்குப் பதில் ஒரு சூபர்வைசரை மையமாக்கி அங்காடி தெருவின் கதையைக் காட்டியிருந்தால் சரவணா ஸ்டோரின் எல்லாவகைப் பரிமாணங்களையும் ஒரு இழையில் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. பேஜ் 3 படத்தின் இயக்குநர் மது பண்டார்கர் முதலில் அந்தப் படத்தை மேட்டுக்குடியினரது வாகன ஓட்டுநர்களின் பார்வையில் சொல்ல நினைத்து பின்னர் மாற்றிக் கொண்டாராம். அதை ஏன் என்று அவர் விளக்கவில்லை. ஆனால் பேஜ் 3 உலகத்தின் போலித்தனத்தை அந்த உலகில் வாழக்கூடிய ஒரு பெண் பத்திரிகையாளரின் தடுமாற்றங்களிலிருந்து புரிந்து கொள்வதைப் போல ஏழை ஒட்டுநர்களின் பார்வையில் நிச்சயம் வாய்ப்பில்லை.
சூபர்வைசர்கள் சிப்பந்திகளாகவோ இல்லை அண்ணாச்சியின் உறவினர்களாகவோ இருந்து வந்திருக்கலாம். அவர்களுக்கு கீழ்மட்டத்தின் இயக்கமும், முதலாளியின் இயக்கமும், கடையின் வெற்றிக்கான பின்னணியும் தெரியும். நேர்மையானவராகவும், மனிதாபிமானியாகவும் ஆரம்பிக்கும் ஒரு சூபர்வைசர் பின்னர் அமைப்பின் இயங்குதளத்தில் மெல்ல மெல்ல பக்காவான சூபர்வைசராக மாறுகிறார். அதில் நிலை கொள்ள முடியாமல் தோல்வியடையும் ஒருவரது பார்வையில் இந்தப்படம் சொல்லப்பட்டிருந்தால் அது நாமறியாத அந்தப் பேரங்காடியின் முழுமையை உணர்த்தியிருக்கலாம்.
_________________________________________________
ஏழைகளும், நடுத்தர மக்களும் சரவணா ஸ்டோரை ஏன் விரும்புகிறார்கள் என்பதும், அதற்கு அண்ணாச்சி என்ன செய்தார் என்பதையும் அங்காடித் தெரு மருந்துக்கு கூட காட்டவில்லை. மற்ற கடைகளை விட மலிவு என்ற முறையில் மக்களிடம் இருக்கும் அங்கீகாரத்தை கேள்விக்குள்ளாக்காமால் என்ன சோகத்தை ஏற்படுத்த முடியும்? விலை குறைவு, அதிக விற்பனை என்ற சூத்திரத்தை அமல்படுத்தக் கூடிய எல்லா நிறுவனக் கட்டுமானங்களின் மூலம் உலகமெங்கும் ஆதிக்கம் செய்யும் வால்மார்ட்டைப் பற்றி கேள்விப்பட்டிராத ஒரு அண்ணாச்சி தனது கடையில் அதை அனுபவத்தின் மூலம் செய்து காட்டியிருக்கிறார்.
சரவணா ஸ்டோரில் பொருள் வாங்கினால் அதிகம் உழைக்காது என்று பேசும் மேல்தட்டினர் அதிகம் ‘உழைக்கக்’ கூடிய பெரிய நிறுவனங்களின் உடைகளை உயர் விலை கொடுத்து வாங்கினாலும் அவர்கள் அந்த உடைகளை கிழிந்து போகுமளவுக்கு பயன்படுத்தப் போவதில்லை. ஒரு ஆடையை அணிந்த பிறகு பல சுற்று முடிந்த பிறகே அதை மீண்டும் அணிய முடியும் என்ற நிலையில் அவை பழைய துணிகளாக வெளியேறுகிறது. அதுவே பத்து ரூபாய் ரெடிமேடாக தி.நகரின் பாதையோர வியாபாரிகளால் விற்கப்படுகிறது.
சரவணா ஸ்டோரின் விலை மலிவுக்கு என்ன காரணம்? வால்மார்ட்டின் மலிவுக்கான வலியை சீனத் தொழிலாளிகள் சுமப்பது போல ரங்கநாதன் தெருவின் மலிவுக்காக பல சிறு முதலாளிகளும், அவர்களது தொழிலாளிகளும் சுமக்கிறார்கள். எவர்சில்வர் பாத்திரங்களை தயாரிப்பவர்கள், பிளாஸ்டிக் பொருள் சிறு முதலாளிகள், தங்க நகை ஆசாரிகள், பட்டு நெய்யும் நெசவாளிகள் எல்லாரும் சரவணா ஸ்டோருக்காக கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள். அற்ப கூலிக்காக பீஸ் ரேட்டில் நெஞ்செலும்பை இழைத்து பாத்திரங்களை பளபளவைக்கும் அந்த தொழிலாளிதான் படோபடமான அங்காடித் தெருவின் அடிப்படை. சரவணா ஸ்டோர் போன்று பெரிய ஆர்டர்கள் வரும் போது அதை ஏற்கும் சிறு முதலாளிகளும் தமது மார்ஜினை தக்கவைப்பதற்கு தொழிலாளிகளை மேலும் சுரண்ட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஏக ஏழைகளுக்கு கிடைக்கும் மலிவுக்கு இன்னொரு ஏழையே தியாகம் செய்கிறான்.
சரவணா ஸ்டோருக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதே அங்கிருக்கும் ஊழியர்களின் மையமான வேலையாக இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர்கள் ‘விற்பனை’ செய்வதற்கான நேரமும், தேவையும் அங்கில்லை. தீபாவளி சமயத்தில் கடை வாசலில் நிற்கும் செல்வரத்தினம் அண்ணாச்சி மக்களை வேறு கடைகளுக்கு போகச்சொல்லி கும்பிட்டவாறே வேண்டுகோள் விடுப்பாராம். பண்டிகைக் காலங்களில் தி.நகரின் மக்கள் கடைகள் அனைத்தும் மக்களை பன்றிக்கூட்டத்தைப் போல நடத்துவார்கள் என்பதை வேலை செய்த தோழர்கள் கூறக் கூட்டிருக்கிறேன். விலை மலிவு என்ற உண்மையில் விற்பவரும், வாங்குபவரும் தங்களது நாகரிகத்தைப் பற்றி கவலைப்படாத யதார்த்தம் சிப்பந்திகளிடம் என்ன உளவியலை ஏற்படுத்தியிருக்கும் என்பது ஒரு சுவராசியமான கேள்வி. கேரள ஓட்டல் தொழிலாளிகளின் நடத்தையில் அலட்சியத்தைக் கண்டுபிடித்த ஜெயமோகன், மனமொப்பி எழுதக்கூடிய வசனங்களுக்கு இந்த சீனில்தான் அதிகம் வாய்ப்பு.
_______________________________________________
கடை சிப்பந்திகளது மின்னல்வேக பணிகள் இடையறாது நடந்து கொண்டிருக்கும் போது அவர்கள் ஒரு வகை மனித ரோபாக்கள் போலத்தான் இருப்பார்கள். சரவணா ஸ்டோரின் இந்த உடல்மொழி படத்தில் இல்லை. இந்த மனித எந்திர அடிமை வாழ்க்கையை சென்னையின் சேரிகளைச் சேர்ந்த ஒரு உதிரிப்பாட்டாளி ஏற்கமாட்டான். வேறுவழியின்றி அவன் ஏற்றாலும் பல்வேறு வகைகளில் முதலாளிகளுக்கு தொந்தரவு கொடுப்பான். எனவேதான் தென்மாவட்டங்ளிலிருந்து வெள்ளேந்தியாக வரும் ஏழைகள் இதற்குத் தேவைப்படுகிறார்கள். அவ்வகையில் சரவணா ஸ்டோர் மலிவாக விற்க வேண்டுமென்றால் இப்படித்தான் மலிவாக தொழிலாளிகளை நடத்த முடியும். இது பற்றிய கேள்வியை படம் எழுப்பவில்லை.
நாயகி கனியின் கல்லூரி மாணவி போன்ற பாவனைகளை எக்காலத்திலும் அந்தக் கடையில் பார்க்க முடியாது. சமீபத்திய ஆண்டுகளாகத்தான் அங்கே அதிகம் பெண் ஊழியர்களைப் பார்க்கிறேன். முன்னர் அவர்களது எண்ணிக்கை வெகு சொற்பம். ஏழை ஆண்களை விட பெண்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுவது சுலபம் என்பது தமிழகத்தில் சமீப காலமாக நடக்கும் புதிய போக்கு. அந்தக் கோணத்தையும் வசந்த பாலன் உணர்ந்திருக்கவில்லை.
கனியை சற்று அழகாக காட்டவேண்டுமென்பதற்காக மற்ற பெண்களை வேண்டுமென்றே கருப்பைக் கூட்டிக் காண்பித்திருப்பது நல்ல இரசனையல்ல. சொல்லப் போனால் நாயகியே அப்படி கருப்பாக இருந்திருந்தால் பிரச்சினையல்ல. சிப்பந்திகளின் அவலத்தை கருப்பான நாயகியின் மூலம் உணர்த்துவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றால் நாம் எந்த அவலத்தை பற்றி முதலில் கவலைப்படவேண்டும்?
கடுமுழைப்பில் இருக்கும் இத்தகைய தொழிலாளிகளின் வாழ்வில் சினிமா, கிரிக்கெட் போன்றவைதான் முக்கியமென்றாலும் அது விரும்பிய பொழுதுபோக்கா, இல்லை எளிதில் கிடைக்கும் பொழுதுபோக்கா என்பது பரிசீலனைக்குரியது. விளம்பரத்திற்காக சிநேகா அக்கா வருவதை திருவிழா போல சிப்பந்திகள் கொண்டாடுவது பிரச்சினையல்ல, பொய்யுமல்ல. ஆனால் விளம்பரமே தேவைப்படாத அந்தக் கடைக்கு பல இலட்சம் செலவழித்து விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமும், அந்த செலவின் சிறிய பங்கு கூட தொழிலாளிகளின் வாழ்வை நன்கு மேம்படுத்தியிருக்கும் என்பது ஒரு வசனமாகவோ, காட்சியாகவோ வந்திருக்கவேண்டும்.
இந்த விமரிசனத்தில் கூறப்பட்டிருக்கும் எல்லா விசயங்களையும் ஒரு சினிமாவாக எடுக்க முடியுமா, எடுத்தால் அது சினிமாவாக இருக்குமா என்று சிலருக்குத் தோன்றலாம். சினிமா நவீன கலை, இலக்கியங்களின் முன்னேறிய வடிவம். இரண்டு மணி நேரத்தில் இரண்டாம் உலகப் போரையே காட்ட முடியுமென்றால் அதோடு ஒப்பிடும்போது சரவணா ஸடோரின் களமும், காலமும் குறுகியதுதான். அதைக் கண்டுபிடிக்கும் கலையை இயக்குநர் அறிந்திருக்கவில்லை என்பதே பிரச்சினை. அவர் வெறும் விவரங்களின் சேர்க்கையில் ஒரு காதல் கதையை எழுதியிருக்கிறார். மற்றபடி படத்தில் எந்தத் தேவையுமின்றி வரும் ஊர்க்காட்சிகளும், பாடல்களும் நிறைய அடிகளைச் சாப்பிட்டிருக்கின்றன.
தமிழக ஓட்டுக்கட்சிகள், அதிகாரவர்க்கத்திற்கு சென்னையின் தி.நகர் என்பது எப்போதும் அள்ளிக்கொடுக்கக் கூடிய ஒரு அமுதசுரபி. அதனால் மட்டும்தான் அந்த குறுகிய தெருவில் எல்லா வகை விதிகளையும் மீறி சரவணா ஸ்டோர் போன்ற கடைகள் பிரம்மாண்டமாக எழுந்திருக்கின்றன. தி.மு.கவின் தில்லை நகர் தளபதி ஜே. அன்பழகனைப் போன்றவர்கள் யாரேனும் படத்தில் ஒரு பாத்திரமாக வந்திருக்க வேண்டும். கடைச் சிப்பந்களின் அடிமைத்தனத்தை காப்ப்பாற்றுவதில் அரசே முக்கிய பங்கு வகிக்கிறது.
______________________________________________
இதற்கு மேல் படத்தில் வசனம் எழுதியிருக்கும் ஜெயமோகனைப் பற்றி குறிப்பிட வேண்டுமென்ற அவசியம் இல்லை என்றாலும் பக்தர்களின் நலனுக்காக சில சாம்பிள்கள். கொத்தனார் வேலை பார்க்கும் தொழிலாளி தனது மகனை பி.இ படிக்க வைக்கப் போவதாக பேசுவது அபத்தத்திலும் அபத்தம். அவரால் தனது மகனுக்கு கலைக் கல்லூரி படிப்பை அதுவும் அரசு கல்லூரியில் மட்டுமே அதிகபட்சம் தரமுடியும். ஆனாலும் நாயகர்களை குறுகிய காலத்தில் வென்று காட்டும் சூப்பர்மேன்களாக கருதும் மனநிலையிலிருந்து ஜெயமோகனும் மாறவில்லை. ஏழைகள் எவரும் நடுத்தர வர்க்கத்தைப் போல கனவுலகில் வாழ்வதில்லை. விருப்பங்கள் இருந்தாலும் அவர்கள் யதார்த்தத்தின் எல்லையை மீறாமல்தான் சிந்திப்பார்கள், பேசுவார்கள்.
மாடிப்படியில் தண்ணீர் குடித்ததைப் போட்டுக் கொடுத்த சக ஊழியனை கோபத்தில் அடிக்கும் லிங்கம், வீட்டில் தான் ஒரு துரும்பு கூட எடுக்காமல் இருக்கும் வண்ணம் தந்தை பாராட்டி வளர்த்திருக்கிறார், இப்போது அவரில்லாத குடும்பத்தின் கஷ்டத்திற்காக இந்த அடிமைத்தனத்தை சகிப்பதாகவும் பேசுவான். இது சூபர்வைசரிடம் அடிபட்ட சோகத்தை அதிகப்படுத்துவதற்காக காட்டப்படும் மிகையான பொய். விவசாயிகள், கிராமப்புறத்தினர் போன்ற உழைக்கும் வர்க்க பின்னணியிலிருந்து வரும் இளைஞர்கள் இயல்பாகவே தமது வீட்டில் பல வேலைகளைச் செய்வார்கள். அதில் கூச்சமெல்லாம் பார்க்க மாட்டார்கள். வீட்டிற்கு வெள்ளையடிப்பதோ, சமயத்தில் சமைப்பதோ, மூட்டைகள் தூக்குவதோ சாதாரணம்.
வறுமையென்றாலும் விசாலமான கிராமப் புறத்தில் வாழும் அவனுக்கு நகர்ப்புறத்து அடைசல் வாழ்க்கையில் ஒன்றுவதுதான் கடினமாக இருக்கும். மற்றபடி பட்டினி, இருப்பதை வைத்து வாழும் பண்பு, அதை நினைத்து எப்போதும் எரிச்சலடையாமல் இருப்பது என்பன போன்ற அவர்களது உளவியலை ஜெயமோகன் அறிந்திருக்கவில்லை. கிராமப்புற ஏழைகள் உழைப்புக்கும், வசதிகள் இல்லாத வாழ்க்கைக்கும் அஞ்சுபவர்களல்ல. ஏதோ அவர்களெல்லாம் வாழ்ந்து கெட்டவர்கள் போல ஜெயமோகன் கருதுகிறார். அல்லது எல்லா ஏழைகளும் விடுதலை பெற ஒரே வழி அவர்களெல்லாம் முதலாளிகளாவாது என்பதே இப்படி சுய புலம்பல் வசனங்களாக வருகிறது.
அதே போல கனி தனது சொந்த வாழ்க்கைத் துயரங்களை அழது கொண்டு கூறுவதும் யதார்த்தமல்ல. உழைக்கும் பெண்கள் யாரும் தமது துயரங்களை வரவிருக்கும் பொற்கால வாழ்க்கையின் கசப்பு நினைவுகளாக கருதுவதில்லை. அது அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் யதார்த்தம். சரியாகச் சொன்னால் ஒரு சோகமான புன்னகையோடு, கொஞ்சம் கிண்டலாக கனி சொல்லியிருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும். இதிலும் ஜெயமோகனது வாழ்ந்து கெட்டவர்கள் என்ற நடுத்தர வர்க்கத்தின் உளவியலே வேலை செய்கிறது. ஏழைகளைப் பற்றிய பார்வை இயக்குநருக்கே சரியாக இல்லாத போது வசனகர்த்தாவிடம் அதை எதிர்பார்ப்பது அதிகமோ?
“யானை இருக்கிற காட்டில்தான் எறும்பும் இருக்கும்” என்ற பொருளற்ற, காலத்தின் உணர்வற்ற, கவித்துவமான வசனமெல்லாம் நம்மை ஈர்க்கவில்லை. ஆனால் கனியின் தங்கை நாகம்மை பெரிய மனிசியாக மாறிய பின் வரும் காட்சியில் தனது தங்கை லிங்கத்தை யாரென்று அடிக்கடி கேட்டதாக கனி கூறும் போது “நீ என்ன சொன்னாய்” என்று லிங்கம் கேட்பான். ஒரு அழகான மௌனம், புன்னகைக்குப் பிறகு, சிரிச்சேன் என்று கனி கூறுவதுதான் நம்மைக் கவர்ந்த ஒரே இடம். ஆக ஜெயமோகன் எழுதாமல் அமைதியாக அடங்கும் இடம்தான் பிடித்திருக்கிறது என்றாலும் இந்தக் காட்சியின் அழகு அதை சிறப்பாக படமாக்கியிருக்கும் இயக்குநரின் பங்கின்றி மிளிர்ந்திருக்காது என்பதும் உண்மை.
“தன் வீட்டில் சொத்தில்லை, உனது வீட்டில் டவுரி கொடுக்குமளவு வசதியில்லை” என்பதாலேயே இரு குடும்பங்களின் நன்மைக்காக காதல் பற்றி தயக்கம் அடைந்ததாக லிங்கம் பேசுவது யதார்த்தமாக இருந்தாலும் பொருத்தமாக இல்லை. ஏழைகள் ஆண்டைகளைப் பற்றி கேலிதான் பேசுவார்களே தவிர அந்த இடத்தில் தங்களை பொருத்திப் பிரச்சினைகளை பேசமாட்டார்கள். அப்படிப் பேசினாலும் அது விதியை நொந்து கொள்ளும் சுய எள்ளலாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது.
ஏழைகள் வாழ்வில் என்னதான் பிரச்சினை இருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிச் செல்லும் ஒரு எளிமையான அழகான கனவு அவர்களிடம் உழைப்பு என்ற வர்க்கப் பண்பாய் வெளிப்படுகிறது. அதுதான் அவர்களைத் திரட்டி அந்த ஏழைமையை விரட்ட முடியுமென்ற நடைமுறை நம்பிக்கையை கம்யூனிஸ்ட்டுகளிடம் தோற்றுவித்திருக்கிறது. ஏழ்மையின் அந்த ‘அழகை’ இயக்குநரும், வசனம் எழுதியவரும் புரிந்து கொள்ளவில்லை.
_____________________________________________
இறுதியாக இந்த விமரிசனங்கள் இருந்தாலும் அங்காடித் தெருவை அனைவரும் பார்க்க வேண்டிய படமென்றே கருதுகிறோம். குறைந்த பட்சம் தமிழக வாழ்க்கையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் சரவணா ஸ்டோர் என்ற பேரங்காடியின் பின்னே இருக்கும் உழைப்பாளிகளது வாழ்வை காட்ட முனைந்திருப்பது நிச்சயம் வரவேற்க்கப்படவேண்டும். இந்த விமரிசனம் கூட அத்தகைய முயற்சியில் ஒன்றுதான்.
தொடர்புடைய பதிவுகள்
dai, yaruda nee. un pakkatha padika nichathu kuttama? padatha vimarsanam pannuvenu paartha un suya vimarsam eluthiyiruka. venada விட்டரு. . vaalikuthu
நீங்க ஊருக்கு புதுசா?
எப்பா வினவு நீ அடங்கவே மாட்டிய எல்லாத்தையும் குத்தம் சொல்லுறதுதான் உன் வேலையா … பக்கம் பக்கம் எழுதுறத முதல நிப்பாட்டு
படம் ஒரு மிகைபடு ஊடகம். யதார்த்தம் உன் தேவை எனில் வாழ்கையை பார். உன் பிழைப்பை பார். விமரிசனம் தனிநபர் உரிமை. அதையும் ரசி. அதையும் விமர்சிப்பது வேலையற்றது. அதாவது இப்பொழுது நான் செய்வதை போன்ற சித்திரவதை.
ஆப்பிரிக்க குழந்தைகளின் எலும்புக்கூடு தோற்றம், வயிறு வீங்கிய உடம்பு, ஈ மொய்க்கும் உதடுகள், அப்புறம் எத்தனை இலட்சம் பேர் இறந்தார்கள் என்ற காட்சிகளும், செய்திகளும், புள்ளிவிவரங்களும் உணர்த்தத் தவறிய ஒரு வேதனையை அப்போது நான் உணர்ந்தேன். நான் இலக்கியவாதி இல்லையென்பதால் அந்த உணர்ச்சியையும், காட்சியையும் இங்கே அப்படி பதிவு செய்திருப்பேனா என்பது சந்தேகம் என்றாலும் யாரும் அந்த தாயின் வேதனையைப் புரிந்து கொள்ளலாம்.
நேரிட்டு பார்க்கும் யதார்த்தம் மட்டுமே உண்மையல்ல. யதார்த்தம் பற்றி பழக்கடுத்தப்பட்ட பார்வை வழியாகவே நாம் பார்க்கிறோம். அதுவே தன்னளவில் உண்மையை வழங்கிவிடாது. விக்கிபீடியாவிலோ, இல்லை பல புள்ளிவிவரங்களிலோ இருக்கும் செய்திகளையும், கணக்குகளையும் பலர் உண்மைகளாக நம்புகிறார்கள். அந்த செய்தியை அதனோடு தொடர்புள்ள ஏனைய சமூக வாழ்வின் இயக்கத்தை அல்லது வரலாற்றின் உணர்ச்சியில் பொருத்தித்தான் புரிந்து கொள்ள முடியும். அல்லது உண்மையைக் கண்டுபிடிக்கமுடியும்.
// புரியவில்லை. அல்லது இதற்கும் விமர்சனத்திற்கும் என்ன தொடர்பு எனப் புரியவில்லை. விளக்க முடியுமா
முதல் பத்தி ஏழ்மையின் உக்கிரத்தை காண்பிப்பதற்கு மிகையான சோகங்களோ, பிணங்களோ தேவையில்லை என்பதற்காக. இரண்டாவது பத்தி வாழ்க்கையின் யதார்த்தமான விவரங்களிலிருந்து வாழ்வின் இயக்கத்தை நடத்தும் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக.
இரண்டாவது பகுதியில் அண்ணாச்சிகளை நல்லவர்களாக காட்டி கூட படமெடுக்க முடியும் என்றும் அதன்பிறகு அப்படி எடுத்தால் குரு படம்தான் கிடைக்கும் என்பதும் விமர்சனம் ஆ அல்லது முன்முடிவா. முன் முடிவு என்றால் அதனை வந்தடைந்த விதம் பற்றி விவரிக்க வேண்டும் அல்லவா. அண்ணாச்சியை விட ஆபத்தான் மல்லையாக்கள் பற்றிய அரசியல் கடைசிவரை விவரிக்கப்படவே இல்லை.
மணி, நீங்களாகவே சில முன்முடிவுகளை எடுத்துவிட்டு எழுதுகிறீர்கள். அண்ணாச்சிகளை நல்லவர்களாக காட்டி படமெடுக்க முடியும் என்று எழுதவில்லை. அவரை மிகையான வில்லனாக காட்டி அடைந்த நோக்கத்தை அவரைப் பற்றிய முழுமையிலேயே காட்ட முடியும் என்பதுதான் விசயம். தரகு முதலாளிகள் எவரும் அண்ணாச்சி போல கடும் வார்த்தை பேசக்கூடியவர்கள் இல்லை என்பதாலும் அவர்களின் சுரண்டல் வெளியே தெரியக்கூடியதாக இல்லை என்பதாலும் அது குரு படமாக வருமென்று எழுதினோம். இது கூட புரியலைனா எப்புடி?
//அவரை மிகையான வில்லனாக காட்டி அடைந்த நோக்கத்தை அவரைப் பற்றிய முழுமையிலேயே காட்ட முடியும் என்பதுதான் விசயம்//
இங்க என்னா அண்ணாச்சிங்களை பத்தி ஆவணப்படமா எடுத்துட்டு இருக்காங்க? அப்படி அண்ணாச்சிங்களை பத்தி ஒழுங்க எழுதினா வினவுல என்ன விமர்சனம் வருமுன்னு எங்களுக்கு தெரியாதா? ஏன் அண்ணாச்சிங்க சின்ன வயசுல பட்ட கஷ்டங்களை அவங்க கிட்ட வேலை செய்தவர்களும் பட வேண்டும் என்று விதி இருக்கா என்ன? இங்கெல்லாம் பார்பீனியம் apply ஆவாதா என்ன? குறை சொல்லி எழுதணுமுன்னு எல்லாத்தையும் குறை சொல்லிட்டே இருந்தா வாழ்க்கை முழுசும் ஒரு மன நோயாளியாக தான் வாழ முடியும்..
//இன்று இந்த சிறு கடை அண்ணாச்சிகளது வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிட்டது என்றாலும் எல்லாவகை அண்ணாச்சி முதலாளிகளும், வியாபாரிகளும் இப்படி கடினமாக நடந்து கொள்வதை இப்படித்தான் பேசுகிறார்கள். அது ஜனநாயகமற்ற நிலவுடைமைச் சமூகத்தின் அழிவிலிருந்து பொருளாதார ரீதியாக மாறும் சிரமத்தில் வேர் கொண்டிருக்கிறது. வேறு வகையில் சொன்னால் ஒரு குறைந்தபட்ச வாழ்க்கையை நேர்மையோடு அமைத்துக் கொள்வதற்கே இவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கிறது என்றால் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகளில், தொழிலில் ஜனநாயக உணர்வுகள் இருப்பதற்கு அடிப்படை இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.//
சுத்தமாக புரியவில்லை. முடிந்தால் விளக்கவும். அப்புறம் எதற்காக இந்த மூன்றாம் பகுதியில் செட்டியார் பற்றிய விமர்சனம் வந்த்து. கட்டுரையுடன் ஒட்டவில்லையே.
அண்ணாச்சிகள் கடுமையாக நடந்து கொள்வதற்கு காரணம் அவர்கள் நிலவுடமைப் பின்னணியிலிருந்து முன்னேறி வந்தவர்கள் என்பதே. சாதாரண அண்ணாச்சிகள் அதை பிழைப்பதற்கு நிபந்தனையாக கருதும் போது, பெரிய அண்ணாச்சிகள் அதை வைத்து சுயசாதி ஏழைகளை சுரண்டுவதற்கும் காரணமாக அமைகிறது. இது கட்டுரையின் வேறு இடத்தில் வருகிறது. செட்டியார்கள், நடார்களைப் போல சமீபத்தில் முன்னேறியவர்கள் இல்லை எனப்தற்காக ஒப்பீடு.
உணர்வு பூர்வமான் விமர்சனத்தை வைத்த வினவிற்கு வாழ்த்துக்கள். திரைவிலகும்போது பல வருடங்களுக்கு பின்பு இப்போதுதான் வந்துள்ளது. இதனை நாம் அடிக்கடி செய்யவேண்டும். ஒரு தனி தொடராகவே, மக்களுக்கான சினிமா (போதம்கின் போன்று) சிடி கிடைக்கும் இடம் அல்லது தரவிறக்கம் செய்யும் தகவலோடு இடம் பெற வேண்டும். அப்போதுதான் சினிமா ஒரு அபினி போல மக்களை சிந்திக்கத்திராணியற்ற கூட்டங்களாக மாற்றுவதை எதிர்த்து ஒரு ஆக்கப்பூர்வமான போர் தொடுக்க முடியும்.
//இதனால் நாங்கள் சினிமாவை ‘கட்சிப் பிரச்சாரத்திற்காக’ விமரிசிப்பதாக எண்ணும் நண்பர்கள் இங்கே சங்கம் கட்ட முயன்று தோற்றதைத்தான் படமெடுக்கமுடியும் என்ற வாக்கியத்தையும் நினைத்து விட்டு பேசவும்.//அதனால்தான் தொழிலாளிகளின் எழுச்சியைப் பார்த்து பீதியடைந்த முதலாளித்துவ வர்க்கம் தனது வரலாற்றுப்பாத்திரத்தை கழுவிவிட்டு பிற்போக்கான நிலவுடைமை வர்க்கங்களையும் ஆதரிப்பது என்ற நிலையை எடுத்திருக்கிறது//சரிதானா
சரிதானா என்று கேட்பதற்கு முன்னர் இது தவறு என்பதை நீங்கள்தானே விளக்க வேண்டும்?
//தலித்துக்கள், ஏழைகள் போன்ற ஒடுக்கப்படும் பிரிவினர் அவர்களது அடிமைத்தனத்தை மூடியிருக்கும் உலகத்தில் இருந்து கொண்டு மட்டும் விடுதலையை உணர முடியாது. அது அவர்களது உலகிற்கு வெளியிலிருந்தே வருகிறது. கிராமத்தில் இருக்கும் வரையிலும் தீண்டாமையை காலம் காலமாக இருக்கும் ஒரு பழக்கம் என்று சகித்துக் கொள்ளும் ஒரு தலித் அவனது வாழ்க்கைத் தேவைக்காக கிராமத்தை விட்டு வெளியேறலாம் என்ற ஒரு அரசியல் சூழல் உருவாகி நகரத்துக்கு சென்று அங்கே சமத்துவத்தை கண்டு, அனுபவித்து பின்னர்தான் தனது கிராமத்துக்கு திரும்பும் போது அந்த தீண்டாமையை எதிர்க்க வேண்டுமென்ற உணர்வைப் பெறுகிறான்.
அடுப்படியில் அடைபட்டிருக்கும் பெண்கள் கூட ஆண்கள் நிறைந்திருக்கும் சமூகவெளியில் புழங்கும்போதுதான் தமது சமூக அடிமைத்தனத்தை உதறவேண்டுமென்ற விருப்பத்தை அடையமுடியும். இங்கே வலியுறுத்துவது அடிமைகளின் உலகிலோ, இல்லை அடிமைகளின் மூளைகளிலோ அவர்களது விடுதலைக்கான அவா பிறக்க முடியாது. அது வெளியிலிருந்தே வருகிறது.//
சரியான அரசியல் பார்வை எனக்கருதுகிறீர்களா.
//சரியான அரசியல் பார்வை எனக்கருதுகிறீர்களா.//
இதில் எதைத் தவறு என்று கருதுகிறீர்கள்?
ஒடுக்கப்பட்ட பிரிவினர் கிராமத்தை விட்டு வெளியேறி ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கத் துவங்குகிறார்கள். எனும் வாக்கியத்தின் பின்
நிறைய செய்திகள் பொதிந்து இருக்கிறது. முதலில் அவர்கள் தமது பொருளாதாரத்துக்கு கிராமப்புற ஆதிக்க சாதி பண்ணையார்களை சார்ந்திருக்க
வேண்டும் எனும் கட்டிலிருந்து விடுபடுகிறார்கள்
அப்படியானால் நகர்புறத்தில் உள்ளூர் முதலாளிகள் எல்லோரும் ஆதிக்க சாதியில்லையா என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் –
திருப்பூர் கவுண்டருக்கும் ஆலாந்துரை கவுண்டருக்கும் /ஓசூர் நாயுடுவுக்கும் ராயக்கோட்டை நாயுடுவுக்கும் / சிவகாசி நாடாருக்கும் வள்ளியூர்
நாடாருக்கும் – நோக்கங்கள் வேறு வேறு. இங்கே பொருளாதார ஒடுக்குமுறை பிரதானம் என்றால் அங்கே அதோடு சேர்ந்து பிரதான பாத்திரம்
வகிப்பது சமூக ஒடுக்குமுறை.
அது தான் காண்டிராக்ட் தொழிலாளியாகவே இருந்தாலும் கூட கிராமப்புற கொடூரமான சமூக ஒடுக்குறையை விட நகர்புற பொருளாதார
ஒடுக்குமுறை குறைவானதாக தெரிகிறது.
இது தவறென்பதை நீங்கள் விளக்கவில்லையே மணி?
எல்லா வகை ‘கருத்துச் சுதந்திரமும்’ …. என்ற பத்தியில் எழுதப்பட்ட விசயங்கள் கற்பனையானவை எனத் தோன்றுகிறது. எதார்த்தம் என்னவாக இருக்கிறதோ அது மிகையாக படத்தில் இருக்கிறது. மாறாக தென் மாவட்ட இளைஞர்கள் பற்றிய கட்டுரையாளரின் அகமதிப்பீடு கற்பனையான உலகத்தில் இருந்தே தோன்றுவதாக படுகின்றது. வாழ்நிலைதான் மனிதனின் உணர்வுகளில் ஆதிக்கம் செலுத்தும் என நம்புதவதால் இதனை சொல்கிறேன்.
சார்லி சாப்ளினோடு ஒப்பிடுவது சரியான்ன்னு தெரியல. மற்றபடி மூட்டையை நழுவ விட்டு அவனை வதைப்பது என்பது பழிவாங்குதல்தான் அதனை எப்படி நகைச்சுவையாக ரசிக்க முடிந்த்து என்பதுதான் புரியவில்லை. அதற்கு பாட்டு என்பது சினிமா த்தனம் என்றால் கூட ஒத்துக் கொள்ளலாம். இப்படி பிரச்சினை வராமல் அடிப்பது என்பது தொழிலாளிகள் காலம் காலமாக செய்துவரும் எதிர்ப்பு நடவடிக்கைதானே.
சக ஊழியர்களை லிங்கம் திட்டியிருந்தால் அதில் விஜயகாந்த் படமோ அல்லது அர்ஜூன் படமோதான் ரிசல்டாக கிடைத்திருக்கும் எனக் கருதுகிறேன்.
//மற்றபடி மூட்டையை நழுவ விட்டு அவனை வதைப்பது என்பது பழிவாங்குதல்தான் அதனை எப்படி நகைச்சுவையாக ரசிக்க முடிந்த்து //
நீங்கள் படத்தைப் பார்த்தீர்களா? அந்தக் காட்சி நகைச்சுவை போலத்தான் காட்டப்பட்டது.
//இப்படி பிரச்சினை வராமல் அடிப்பது என்பது தொழிலாளிகள் காலம் காலமாக செய்துவரும் எதிர்ப்பு நடவடிக்கைதானே.//
அது மட்டும் தான் எதிர்ப்பு நடவடிக்கையா? இல்லை அல்லவா… ஆனால் படத்தில் எதிர்ப்பு நடவடிக்கை என்பது இப்படி சில தனி நபர்களின்
கலகத்தோடு சுருங்கி விட்டிருக்கிறது என்பதை கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார் என்றே நான் நினைக்கிறேன். மொத்தமாக எல்லோரும்
காட்டுத்தனமாக அடக்கி ஒடுக்கப்படும் போது, அவர்களில் ஒருவரின் எதிர்ப்பு ஒரு நெறுப்புப் பொறிபோல பரவுவதைப் போல படத்தில்
காட்டியிருக்க்லாம் அல்லவா?
விஜயகாந்த் படத்திலோ, அர்ஜூன் படத்திலோ அவர்களும் பேசா மடந்தைகளாக இருக்கும் மக்களைப் பற்றி பேசமாட்டார்கள். மாறாக அவர்கள் செய்ய முடியாத வீரத்தை வில்லன்களை விமரிசித்து ஒழிப்பார்கள். அங்காடித் தெருவிலும் கதாநாயகன்தான் அப்படி வீரத்துடன் வெடிக்கிறான். எனில் உங்கள் அளவுகோல்படி இதுவும் விஜயகாந்த் டைப் படம்தானே?
விளம்பரமும் கிரிக்கெட்டும் பற்றிய கருத்துக்கள் கூட பொதுத்தளத்தில் விமர்சிக்கப்பட வேண்டியவை. இந்தப்படம் இதனையும் விமர்சிக்க வேண்டும் என்பதற்கான படத்தின் கதையோட்டத்தில் அவசியமும், பொருத்துவதற்கான பரிந்துரைக்கப்படும் இடமும் தெரியவில்லை.
சரவணா ஸ்டோரையும் இரண்டாம் உலகப்போரையும் ஒப்பிடுவது என்பதன் மூலம் விளிம்புநிலை அரசியலை பேச முன்வரும் மனிதர்கள் வைத்திருந்த கண்ணிக்குள் கட்டுரையாளர் வகையாக சிக்கிக் கொண்டது போல தோன்றுகிறது.
திநகர் மற்றும் அன்பழகன் பற்றி சொன்னதற்கும் கட்டுரையின் மையமான விமர்சனத்திற்கும் என்ன தொடர்பு எனப் புரியவில்லை.
பதட்டமில்லாமல் கொஞ்சம் நிதானமாக பேசினீர்கள் என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைப்புரிந்து கொள்ள முடியும். இங்கே உங்களது கேள்விகள் எதற்காக என்று புரியவில்லை.
சும்மா குறை சொல்லிகிட்டே இருக்கியா விளம்பரத்துக்கு விமர்சனம் எழுத்து மொக்கை எழுத்தாளரே தயவு செய்து நீர் ஒரு நல்ல படம் எடுக்க வேண்டியது தானே இந்த படதே தரவவே அந்த இயக்குனர் எப்படி கஷ்டப்பட்டு இருபாரு, தயாரிப்பாளர் இருக்கனும். போய்ய வெட்டி பேச்சு வீராசாமி
இந்த படத்திற்கென்று இல்லை எல்லாப் படங்களுக்காகவும் எல்லா இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ‘கஷடப்படத்தான்’ செய்கிறார்கள். அதுக்கென்ன செய்யுறது வீராச்சாமி? ஆனாலும் இந்த உலகில் கஷ்டப்படும் மக்களில் சினிமாத்துறையினர் மட்டும்தான் உங்களுக்குத் தெரிகிறார்கள். வினவுல மற்ற கஷ்டங்களைப் பத்தி பேசும்போது கொஞ்சம் வந்து பார்த்தால் அதுவும் புரியும்.
இந்த அளவாவது ஒரு தமிழ் படம் வந்தததுக்கு சந்தொசப்பட வேண்டும். அதை விட்டு விட்டு குறை சொல்ல ஒரு விமர்சனம்? ஏன் இதற்கு முன்னாடி இதை பற்றி பிளாக் கில் எழுத வேண்டியது தாணே, ஒரு இயக்குனர் புதிதாக ஒரு கதைகளம் பற்றி யோசித்து படம் எடுத்தால் எங்கிருந்துதான் வருகிறீர்களோ .
‘இந்த அளவுக்காவது’ கருணாநிதி டி.வி கொடுக்கிறார், ஜெயலலிதா வெயிலுக்காக மோர் குடுக்கிறார், சோனியா அரிசி கொடுக்கிறார், மன்மோகன் சிங் மருந்து கொடுக்கிறார் என்பதற்காக விமரிசனம் செய்யாமல் இருப்பீர்களா? உடனே மக்களை பிச்சைக்காரர்கள் என்று இகழ்வீர்களே? படம் வருவதற்கு முன்னால் எப்படி விமரிசனம் எழுதுவது சுரேஷ்? ஒரு வேளை இத்தகைய மக்களின், தொழிலாளிகளைப் பற்றி எழுதச் சொல்கிறீர்களா? அதற்கு தினசரி வினவு வந்து படித்திருந்தால் தெரியும், சினிமாவுக்கு மட்டும் வருவதை கொஞ்சம் மாற்றுங்கள்.
சினிமாவுக்கு மட்டும் நான் வரவில்லை, உங்களுடைய பிளாக்கினை தொடர்ந்து படித்து வருகிரேன், இதுவரை பின்னுட்டம் இட்டதில்லை , உங்களுக்கு இதை பற்றி முன்பே தெரியும் என்றால் பதிவு செய்திருக்கலாம் அல்லவா , குறை சொல்வது எளிது , படம் எடுப்பது கடினம் , உங்களை போன்றவர்கள் விமர்சம்ன் என்ற பெயரில் இஷ்டத்திற்கு எழிதினால் ஒரு படைப்பாளிக்கு எப்படி இருக்கும் , உங்கள் கருத்தினை நான் மறுத்தவுடன் உங்களுக்கு கோபம் வருகிறது அல்லவா , உங்கள் போல் மறுமொழி கூ ற வசந்தபாலன் இங்கு இல்லை என்பதால் எப்படி வேண்டுமானாலும் எழுதுவீர்களா ?
ஏம்பா சுரேசு, முதல்ல இந்த கட்டுரை வசந்தபாலனை எந்த இடத்தில் விமர்சித்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட முடியுமா?
முதல்ல உன் பேரில் கமென்ட் எழுது,
சுரேசு, எம் பேரு கேட்டாசிரியன், அததான் மாடர்னா கேள்விக்குறின்னு போட்டிருக்கேன்!!!. போதுமா இல்ல எங்க அப்பன், பாட்டன் பூட்டன் பேரெல்லாம் எழுதினாதான் நீ பதில் சொல்லுவியா?????
முதல்லையே அத செய்ய வேண்டியது தானே, இந்த படத்தை எடுத்தது வசந்தபாலனா இல்லை உங்க அப்பன் , பாட்டன் , பூட்டனா ?
சுரேஷ், கேள்விக்குறி,
விவாதத்தை கருத்து ரீதியாகவே பேசலாமே?
இல்ல சுரேசு படத்த எடுத்தது உங்க ஆயா! ”’வசந்தபாலனை எந்த இடத்தில் விமர்சித்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட முடியுமான்னு?
”’ ஒரு கேள்விதான கேட்டேன், அதுக்கு பதில் சொல்ல வக்கில்ல ஆனா சம்பந்தமில்லாம உளர மட்டும் முடியுதாக்கும்????
அட கோட்டான் , படமே வசந்தபாலன் எடுத்ததுனா இந்த பிளாக்கிலே நி யார பத்தி சுட்டி காட்டுதுன்னு கேள்வி கேக்குற , நீ நோண்டி நோண்டி கேக்குறத பாத்தா நீதான் வினவுன்னு நினைக்கிறேன் .உனக்கு வக்குஇருந்தா வேற வேலையே பாரு, உளறத பத்தி நீ பேசாத, உன் ஆயாகிட்ட பேசு .
சுரேஷ், நீங்க சொல்வது ரொம்ப சரி., இந்த வினவு இருக்காரே.. அவர் ஒரு ஆளா இல்ல நிறைய பேரன்னு எனக்கு ஒரு சந்தேகம்.. இவர் வினவுன்கர பேர்ல ரொம்ப நல்ல விதமா அறிவாளி மாதிரி பேசுவார்.. அப்புறம் வேற பேர்கள்ல அவருக்கு சப்போர்ட் பண்றதுக்கு சில பேர் இருபங்க.. அவங்க தான் இப்படி மாற்று கருத்து சொல்றவங்கள கேவலமா பேசி திசை திருபுவானுங்க.. வினவு உண்மையிலே ஆரோகியமான விவாதத்துல விருப்பம் இருந்தா இந்த வெட்டி பேச்சு கருக்களை எல்லாம் அழிக்கணும்.. செய்ய maatat
திருந்த முடியாத திருத்தல் வாதி வினவு … மக்களின் வுணர்வை புரிந்து நடக்க கற்றுக்கொள்
வாய்யா கோலிவுட்டுக்கு சொம்பு தூக்கும் ஜால்ரா கம்மீனிஸ்டு.. வசந்தபாலனுக்கு பாராட்டு சொம்பு தூக்கி கால நக்கரதுல காட்டுற முனைப்ப சரவணா ஸ்டோர்சுக்கு மின்னால மறியல் செஞ்சு காட்டலாமே…. அப்ப உன் சினிமாக்காரன் எவன் வருவான்னு பாக்கலாம்…
வாய்யா வினவவுக்கு சொம்பு தூக்கும் ஜால்ரா குறி .. வினாவுக்கு தூக்கி கால நக்கரதுல காட்டுற முனைப்ப சரவணா ஸ்டோர்சுக்கு மின்னால மறியல் செஞ்சு காட்டலாமே….
முட்டாஊ அண்ணே, ஏற்கனவே ரிலையன்சு, கொக்கோ கோலா கம்பெனியெல்லாம் மறியல் செஞ்சு கைதாகி வந்த ஆளுங்க நாங்க.. உங்கள மாதிரி வெட்டிபய இல்லீங்… உங்க — வாய கொஞ்சம் மூடுங்.
இங்க பார்ரா, மறியல் செய்ஞ்சி கைதாயிட பெரிய புரட்சி வாதின்னு
நெனைப்பு வந்துரிசிடா. சிரிப்பா வருதுப்பா….
இந்த கதை புதுசெல்லாம் இல்லம்மா,,, 80களின் படங்களில் எப்போதும் முதலாளி-பண்ணையார்தான் வில்லனாக இருப்பார்கள். தொழிலாளி, விவசாயிகளை அடிமையாக நடத்துவார்கள். இதே அழுகாச்சி, சோகம் பாலியல் தெந்திரவு எல்லாம உண்டு. பேரங்காடி என்ற களம் வேணா புதுசுன்னு செல்ல்லாம்.
ஜெயமோகனை விமர்சிக்க கிளம்பிய கட்டுரையாளர் ஏழைகளின் மனநிலை பற்றிய தமது அகவயமான பார்வையும் வெளிப்படுத்தி உள்ளார். எதார்த்தமாக சமூகத்தில் முன்னேற வேண்டாம் என நினைக்கும் ஏழைகளை மாத்திரமே பார்க்க கிடைத்த அவரது சூழலுக்காக வருந்துகிறேன்.
அப்புறம் கிராம்ப்புற ஏழை நடுத்தர இளைஞர்கள் எல்லோரும் வீட்டுக்கு பொறுப்பானவர்கள் மாதிரி புரிந்து கொள்வது கூட அகவயமான பார்வைதான். கொஞ்சம் படித்து மார்க் வந்தாலே தரையில் நடக்க விரும்பாத அத்தகைய இளைஞர்களை பார்க்க நேராத அவரது நிலைக்கும் வருந்துகிறேன்.
ஏழையான கனி தனது சுயபுலம்பலை காதலனிடம் கூட சொல்ல மாட்டாள் என்பதுதான் கற்பனையாக உள்ளது.
யானை இருக்கிற காட்டில்தான் எறும்பும் இருக்கிறது என்ற கவித்துவமான வசனம் உங்களை ஈர்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நடநுத்தரவர்க்கம் அனைவரும் விரும்பி ரசித்த கதையோடு ஒன்றிய வரி அதுதான். அதுதான் உண்மையில் விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
மற்றபடி சிரித்தேன் என்ற ரொமாண்டிக் எல்லாம் உங்களுக்கு எப்படி பிடித்த்து என்றுதான் தெரியவில்லை. லிங்கத்தின் கூற்றை நான் பலமுறை பல இளைஞர்களின் வாயிலிருந்து கேட்டிருக்கிறேன். அது நடைமுறையில் நடக்க கூடியதுதான்.
வயிற்றுக்கில்லாத போது ஏழைகள் கார், பங்களா என்று திட்டமிடுவது எதார்த்தமில்லை என்பது போல தினக்கூலியால் மட்டும் வாழும் ஒரு கொத்தனார், தனது மகனை பி.இ படிக்க வைப்பதாக பேசுவதும் எப்படி எதார்த்தமாகும்? இல்லை பி.இ படிப்பு அவ்வளவு மலிவு என்று உங்களுக்கு தெரிந்த விசயத்தை மக்களுக்கும் விளக்கினீர்கள் என்றால் புண்ணியமாகப் போகும்.
கிராமப்புறத்தில் கொஞ்சம் சொத்துப் பத்து வைத்திருக்கும் வீடுகளில் நீங்கள் சொல்வது இருக்கலாம். அன்றாடம் தந்தை கொண்டு வரும் கூலியில் மட்டும் அரை வயிறு சாப்பிடும் இளைஞர்கள்அப்படி விட்டேத்திகளாக இருப்பதற்கு கையில் காசு வேண்டுமே? கிராமங்களிலும் வர்க்கம் இருக்கிறது.
கனி தனது சொந்த வாழ்க்கை சோகத்தை இப்படி அழுது கொண்டு சொல்லியிருப்பதாகக் காட்டியிருப்பது உழைக்கும் பெண்களைப் பற்றிய நடுத்தவர்க்கம் காட்டும் ஐயோ பாவம் மனநிலை. அவள் எப்படி சொல்லியிருக்க கூடுமென்பதுதான் கட்டுரையில் இருக்கிறது. அப்படி சொல்லக்கூடாது என்று எழுதியிருப்பதாக பொய்யாக குற்றம் சாட்டுகிறீர்கள்.
சிரித்தேன், வசனத்தின் சிறப்பு அளவாக உணர்ச்சிகளை அடக்கமாக காட்டியிருப்பதில். அதில் என்ன ரொமாண்டிக் வெங்காயம்?
//வயிற்றுக்கில்லாத போது ஏழைகள் கார், பங்களா என்று திட்டமிடுவது எதார்த்தமில்லை என்பது போல தினக்கூலியால் மட்டும் வாழும் ஒரு கொத்தனார், தனது மகனை பி.இ படிக்க வைப்பதாக பேசுவதும் எப்படி எதார்த்தமாகும்? இல்லை பி.இ படிப்பு அவ்வளவு மலிவு என்று உங்களுக்கு தெரிந்த விசயத்தை மக்களுக்கும் விளக்கினீர்கள் என்றால் புண்ணியமாகப் போகும்
//
எத்தனை கூலி வேலை செய்யரவங்க தன் பிள்ளைகளை பி.இ படிக்க வச்சிருங்கனு தெரியுமா?எத்தனை பேர் படிக்க வைக்க ஆசை இருக்கங்கனு உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.நீங்கள் எப்படி சண்டை போடலாம்னுதானு யோசிப்பிங்க.
“சிரிச்சேன்” என சொல்லும் அந்தக் காட்சி, வெகு இயல்பு. இதை எப்படி மணி உங்களால ரசிக்க முடியவில்லை.
நொந்தகுமரா.. சிரிச்சேன் என்று சொல்லும் போது மணி சார் நொந்து பொய் பார்திருப்பார். அதனால் அவரால் ரசிக்க முறியவில்லை. பாவம் விடுங்கள். நீங்கள் நொந்து போகவேண்டாம்.
நான் விமர்சிக்க வேண்டியதாக கருதுவது அதன் நுண் அரசியலை.
1. மனிதம் என்பது பொதுவான சொல்லாடல் அல்ல, அது சமூகம், உற்பத்தி முறை, காலம், வர்க்கம் சார்ந்த்து என்பதை மையமான விமரசனத்திற்கான பேசு பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. கே.கே.நகர் விபத்து என்பது லாரி மோதியதால் நிகழ்ந்த சம்பவம் அல்ல• அதற்கு முன்னரே உலகமயம் அவர்களை கிராமத்தில் இருந்து விரட்டியதை அன்றைய புக பதிவுசெய்த்து. அப்படிப்பட்ட விசய்த்தை தனது காதலின் தற்செயலாக நடந்த விபத்தாக சித்தரித்து அதனையே இரண்டாம்பட்சமாக்கி அப்பிரச்சினையில் ஊனம் ஒரு பிரச்சினையல்ல காதலுக்கு என்ற செய்தியை முரசறிவித்த நுண் அரசியல் விமர்சிக்கப்பட வேண