Friday, June 9, 2023
முகப்புபெரியார்தாசன் மதம் மாறியது, சத்தியமா அவுருக்கே தெரியாதாம்பா !! - ஒலிப்பதிவு !
Array

பெரியார்தாசன் மதம் மாறியது, சத்தியமா அவுருக்கே தெரியாதாம்பா !! – ஒலிப்பதிவு !

-

vote-012பெரியார்தாசன் இசுலாத்திற்கு மதம் மாறியது அவரது சொந்த விடயமென்றாலும், தமிழகம் அறிந்த நாத்திக, பார்ப்பனிய எதிர்ப்பு பிரச்சாரகர் என்பதனால் “ஏன் மாறினீர்கள்” என்று கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. பதில் சொல்வது அவரது கடமை.

சமீப ஆண்டுகளில் சேதுக்கால்வாய் விவகாரம், சங்கராச்சாரி கைது, தில்லை போராட்டம் போன்றவை தொடர்பான ம.க.இ.கவின் கூட்டங்களில் அவர் உரையாற்றியிருக்கிறார்.

2002லிருந்து அவர் குர்ஆனை ஆய்வு செய்ததாக இப்போது கூறுகிறார். ஆனால் இது தொடர்பாக ம.க.இ.க தோழர்களிடம் அவர் ஏதும் உரையாடியதில்லை. பெரியார்தாசன் குறித்து வேறு விதமான விமரிசனங்கள் சிலருக்கு இருந்தாலும் யாரும் அவரது மத எதிர்ப்பு பார்வை மீது ஐயம் கொண்டதில்லை. எனவே அவரது இந்த முடிவு பலருக்கும் விடை தெரியா புதிர்தான்.

தோழர் சாகித் இந்தப் பிரச்சினைக்காக அவரது சொந்த முயற்சியில் பெரியார் தாசன் என்ற அப்துல்லாவிடம் மதம் மாறிய காரணம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். பெரியார்தாசனிடம் சாகித் எழுப்பும் கேள்விகளுக்கு அப்துல்லா அளிக்கும் பதில்கள் எப்படியிருக்கின்றன என்பதறிய ஒலிப்பதிவை கேளுங்கள்.

–          வினவு

_______________________________________________________

“மக்காவுடைய மண்ணை எடுத்து

சொர்க்கத்தோட தண்ணியை ஊத்தி

சேர்த்து சேர்த்து செய்ததிந்த பொம்மை

அது பொம்மை இல்ல பொம்மை இல்லை

மனிதன் என்பது உண்மை.”

களிமண்ணை நீர்கொண்டு பக்குவப்படுத்தி அழகான பொம்மையை செய்து பககுவமா சுட்டு உயிர்கொடுக்கப்பட்டவன் இந்த மனிதன் என்று குர்ஆன் கூறுகிறது. அதுபோல ஏதோ ஒரு காரணத்தால் அப்துல்லாவாக மாறிய பெரியார்தாசன், கேள்விமேல் கேள்விகளால் உருக்குலைந்து விடாமலிருக்க இசுலாமிய அமைப்புகள் இனி யாராக இருந்தாலும் முன் கூட்டியே கேள்விகளை அனுப்பினால்தான் பெரியார்தாசனின் பேட்டிகளுக்கு அனுமதிக்கப்படும் என்று ஒப்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறிய அடுத்த நாளே எஸ்.எம்.எஸ்.களும் இ.மெயில்களும் என்னை துளைத்துவிட்டன. வீடியோவும் பலரால் அனுப்பப்பட்டது. பார்த்ததும் அதிர்ச்சிதான். இசுலாமியராக மாறியதற்கான வலுவான காரணங்களை முன்வைப்பார் என்று எதிர்பார்த்ததில் இசுலாமியர்களின் வழமையான “இறைவன் இருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன், மரணத்திற்குப்பின் வாழ்க்கை உண்டுண்ணு நம்புகிறேன், கடவுள் என்று ஒருவன் இல்லை என்றால், இல்லை என்று சொன்னாலும் இருக்கு என்று சொன்னாலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை, கடவுள் இருந்துவிட்டால் நம்பிக்கை கொள்ளதாவன் நரகத்திற்கு போகனுமே” போன்ற சொத்தை வாதங்களை அந்த வீடியோவில் கூறுகிறார்.

ஆனாலும் “2002லிருந்து குர்ஆனை ஆய்வு செய்தேன், நபியின் வாழ்க்கையை படித்தேன், அதனால் இசுலாத்திற்கு வந்தேன்” என்றும் சொல்வதால் அவர் அப்துல்லாவாக (அல்லாஹ்வின் அடிமையாக) மாறியதற்கான நமது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள பேட்டி எடுக்க வேண்டும் என ஆவல் ஏற்பட்டது.

ஏதோ ஒரு வெளிநாட்டிலுள்ள ஒருவராக இருந்திருந்தாலும், பலரால் அறியப்படாத, பலருக்கு நாத்திகத்தை பிரச்சாரம் செய்யாத ஒரு நபராக இருந்திருந்தாலும் வழமையான ஒன்றாக கருதி சும்மா இருந்துவிடலாம். ஆனால் தர்க்கவியல் படித்தும், பிரச்சாரம் செய்தும் பல ஆயிரக்கணக்கானோரை நாத்திக வழிக்கு கொண்டு வந்த பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதற்கு வலுவான காரணம் ஏதும் இல்லாமலிருக்க முடியாது. புத்தமதத்திற்கு இவர் வி.என்.சித்தார்தாவாக மாறியதும், புத்தருடைய “தம்மம்” என்ற நூலைப்பற்றி டாக்டர் அம்பேத்தார் எழுதிய “புத்தரும் அவருடைய தம்மமும்” என்ற நூலை மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். புத்தரின் அந்தநூல் சுமார் 2500ஆண்டுகளுக்கு முன்பே இயற்றட்டப்பட்ட சிறந்த நூலாகும். அப்படிப்பட்ட அவர் தலைவிதி தத்துவத்தை போதிக்கும் மதங்களில் ஒன்றான இசுலாத்திற்கு சென்றது ஏன்?

நான் பிரபலமில்லாத ஒருவன் என்பதால் “நாளைவிடியும்” பத்திரிகைக்காக அவரிடம் பேட்டியெடுக்க அப்பத்திரிக்கையின் ஆசிரியர் அனுமதியுடன் முயற்சி செய்தேன். அது போல பெரியார்தாசனுக்கு இப்பொழுதுள்ள நெருங்கிய வட்டாரங்கள் மூலம் (எஸ்.எம்.எஸ்.ஆல் துளைத்தவர்கள்தான்) பேட்டி எடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முயற்சித்தேன்.

தற்சமயம் பெரியார்தாசனின் பிரச்சார திட்டங்களை ஒழுங்கமைப்பவர் என்று சென்னை பூந்தமல்லிக்கு அருகில் நூம்பல் என்ற இடத்தில் உள்ள காசிபுல் ஹுதா என்ற அரபிக்கல்லூரியின் பேராசிரியர் திரு ஜலீல் என்பவரின் தொலைபேசி எண் கிடைத்தது. அவர் “கேள்வி என்ன? எந்த நோக்கத்திற்காக கேட்கப்படுகிறது என்று முன்கூட்டியே சொன்னால்தான் பேட்டிக்கான நேரம் ஒதுக்கப்படும்” என்று கறாராக கூறிவிட்டார். “முன்கூட்டியே கேள்வியைச் சொன்னால், நீங்கள் பதில் என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து நாங்கள் பதில் பெறுவதாகத்தானே இருக்கும்” என்று கேட்டபோதும் “அப்படியல்ல, இருந்தாலும் அதற்கு மாற்றும் இல்லை என்று கூறிவிட்டார்.

2002-லிருந்து 8 வருடமாக குர்ஆனை ஆய்வு செய்தவருக்கு முன்கூட்டியே என்ன கேள்வி என்று தெரியவேண்டும் எனக் கூறுவது நமக்கு சந்தேகத்தை உருவாக்கியது எனினும் பரவாயில்லை கேள்வியை முன்கூட்டியே கொடுப்பதனால் மட்டும் இவர் அறிவு பூர்வமாக பதில் கூற முடியாது என்பதால் கேள்விகளை தொலைபேசி மூலமாக சொல்லிவிட்டோம். ஆனாலும் இரண்டு நாளாக பதில் ஏதும் கிடைக்காததால் மீண்டும் திரு.ஜலீலை தொடர்புகொண்டதில் பெரியார்தாசன் மறுத்து விட்டதாகவும் மேலும் பெரியார்தாசன் புத்தமதத்திற்கு போனது, மற்றும் குர்ஆன்களை ஆய்வு செய்து அடுக்கி வைத்துள்ளது, போன்றவர்களை எல்லாம் குறிப்பிட்டு, “அவர் அறிவாளிதான் ஆனாலும் விவாதங்களை தவிர்க்க விரும்புகிறார்” என்பதுபோல் பதில் கூறினார். (அதற்கும் என்னிடம் தொலைபேசி உரையாடலின் பதிவு உள்ளது).

இவரிடம் தொடர்பு கொள்வதற்கு முன்தினம் பலமுறை தொலைபேசியில் முயற்சி செய்தும் ஜலீல் அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை என்பதால் பெரியார்தாசனிடமே நேரடியாக தொலைபேசியில் பேசினேன். அது என்னவென்று இந்த ஆடியோவைக் கேளுங்கள். அவரிடம் நான் கேட்க விரும்பிய கேள்விகளும் இத்துடன் உள்ளது. படித்துக் கொள்ளுங்கள்.

பெரியார்தாசனிடம் உரையாடிய மறுநாள் கோவை குர்ஆன் அறக்கட்டளையின் சார்பாக குர்ஆனின் புதிய பதிப்பு வெளியீட்டு விழா நடந்தது. அதில் என்னுடைய முதல் கேள்விக்கு பதில் சொல்லியுள்ளார்.

“சிலபேர் நம்மிடம் மனிதனை களிமண்ணால் படைத்ததாக குர்ஆன் சொல்கிறதே என்று கேட்கின்றனர். களிமண்ணில் படைத்ததாக குர்ஆன் சொல்லவில்லை. களிமண்ணை சுட்டு படைத்ததாகவும் கேட்கின்றனர். குர்ஆனில் எங்கேயும் சுட்டதாக வரவில்லை. களிமண்ணின் சாரத்திலிருந்து படைத்தான் என்றுதான் குர்ஆன் கூறுகிறது” என்று உரையாற்றியுள்ளார். இப்பேச்சின் ஆடியோ இன்னும் வெளிவரவில்லை.வந்ததும் வாசகர்களுக்கு வழங்கப்படும். அவர் சொன்னது சரிதானா என்பதை கேள்விகளில் உள்ள குர்ஆன் சான்றுகளுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

இருந்தாலும் இவரின் இந்த மதமாற்றத்திற்கு ஏதேனும் வலுவான காரணமில்லாமல் இருக்க முடியாது. ராகுல் சாங்கிருத்தியன் போல் தன்னையும் கருதிக்கொண்டு, புத்தமதத்திற்கு சென்று புத்தமதத்தை நன்கு அறிந்துகொண்டு புத்தரின் நூலை இவர் மொழிபெயர்த்தது போல இசுலாத்திற்கு சென்று இசுலாத்தை நன்கு தெரிந்து கொண்டு இசுலாத்தைப்பற்றிய தமது ஆய்வை எழுதலாம் என்று சென்றிருப்பாரோ?

ஆய்வு செய்தே இசுலாத்தை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லும் இவர் “நான் புதுசு எனக்கு தெரியாது மௌலவிகளிடம் கேளுங்கள்” என்றெல்லாம் முரண்பாடாக கூறுகிறார். எனவே நாத்திகத்தை வீழ்த்திவிட்டது இசுலாம் என்று இசுலாமியர்கள் பெருமை கொள்வதற்கு ஏதுமில்லை என்பதற்கு அவரது உரையாடலே சான்றாக உள்ளது.

______________________________________________________

அவரிடம் கேட்க முயற்சிக்கப்பட்ட கேள்விகள்:

பெரியார் தாசனாக இருந்து ஆப்துல்லாவாக மாறியுள்ள தாங்கள் 2002-லிருந்து குர்ஆனை ஆய்வு செய்து இசுலாமிய மதமே  சரியான மதம் என்று முழுவதுமாக நம்புவதாக கூறியுள்ளீர்கள். குர்ஆன் கூறும் சில வசனங்களுக்கான எமது கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா?

  1. அல்லா மனிதனை களிமண்ணிலிருந்து படைக்கப் போவதாக வானவர்களிடம் (மலக்குகளிடம்)அறிவிப்புச் செய்துவிட்டு, உரமான களிமண்ணால் உருவத்தைச் செய்து, அதனை தட்டினால் சத்தம் வரும் பக்குவத்திற்கு சுட்டு, அதன் பிறகு தன்னிடமிருந்து உயிரை அதற்குக் கொடுத்தான் என்று குர்ஆன் கூறுகிறது.

அ)   களிமண்ணிலிருந்து படைக்க இருப்பதை அறிவித்த வசனம் 38;71

ஆ)  களிமண்ணிலிருந்துதான் முதல் மனிதனைப் படைத்தான் என்பதற்கான வசனங்கள்  6;2,  22;5,  23;12,  30;20,  32;7, 33;11,  38;76

இ)   ஈரக் களிமண்ணிலிருந்துதான் முதல் மனிதனைப் படைத்தான் என்பதற்கான வசனம்   37;11

ஈ)   அதனை சுட்டால்தான் ஈரமற்று, தட்டினால் ஓசைவரும். அதனால் சுட்டதற்குறிய ஆதாரத்திற்குறிய வசனங்கள்  15;26,  15;28,  15;33

ஊ)  அதன் பிறகே உயிர் கொடுத்தான் என்பதற்குறிய வசனங்கள்  15;29,  38;72

அறிவியலின் பரிணாமக் கொள்கை இதற்கு எதிராக உள்ளது என்பதை நாம் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம். எனவே மனிதனை படைத்துள்ளது தொடர்பாக குர்ஆன் கூறுவது பற்றி தங்களின் கருத்து என்ன?

  1. ஆதமும், ஆதமுடைய விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட ஹவ்வாளும், சொர்க்கத்தில் தடுக்கப்பட்ட கனியை உண்டு பாவம் செய்ததினால்தான் அவர்களது பாலுறவு உறுப்புகள் வெளிப்படுத்தப்பட்டு இலை தழைகளைக் கொண்டு மூடிக்கொண்டனர்.

இதற்கான குர்ஆன் வசனங்கள்  20; 118 மற்றும் 121,  70;20, 22, 27

அதே குர்ஆன் ஆதமுடைய ஆன்மா அமைதியற்று அலைந்ததாகவும், அந்த ஆன்மா சாந்தியடையவே ஹவ்வாள் என்ற பெண்ணை படைத்ததாகவும் கூறுகிறது.

இதற்கான குர்ஆன் வசனங்கள் 7;189, 30;21

ஆனால் பாவக் கனியை உண்டபிறகே பிறப்புறுப்புகளை வெளிப்படுத்தியதாக குர்ஆன் கூறுகிறது. அப்படி என்றால் ஆதமுடைய ஆன்மா எந்த வகையில் அமைதியற்று இருந்தது? பாவம் செய்வதற்கு முன் ஹவ்வாள் எதற்காகப் படைக்கப்பட்டார்?

  1. பரிணாமம் என்பதை இசுலாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக ஓட்டகச் சிவிங்கியினுடைய கழுத்து நீளமாக இருப்பது பரிணாம வளர்சியின் மாற்றத்தால் அல்ல. அது கழுத்து நீளமாகவே படைக்கப்பட்டது. அதனால் அதன் குட்டிகளும் கழுத்து நீளமானதாக பிறக்கின்றன என்பதே இசுலாமியக் கோட்பாடு.

ஆனால் ஆதம் 60 முழம் உயரத்தில் படைக்கப்பட்டதாகவும், உலகம் அழித்த பிறகு மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படும்போது எல்லோரும் ஒரே அளவுடையவர்களாக 60 முழம் உயர மனிதர்களாக இருப்பார்கள் என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.

இதற்கான நபிமொழி. புகாரி 3326, 3327

அப்படியானால் ஓட்டகச் சிவிங்கியினுடைய நீளமான கழுத்து போல் ஆதமுடைய மக்களான நீங்கள் 60 முழமாக இல்லாமல் 6 ஆடியாக பிறப்பதன் காரணம் ஏன்ன?

  1. கருவில் குழந்தையாக உருவமைத்த பிறகே அக்குழந்தை ஆணா? பெண்ணா? என்று தீர்மானித்து, அதற்கான சொத்து சுகம் எவ்வளவு? நன்மை செய்தவனாக இறந்துபோவானா? தீமை செய்தவனாக இறந்துபோவானா? என்று தலைவிதிகளை எல்லாம் லவ்ஹூல் மஹ்ஃபூல் பலகையில் எழுதிவிட்ட பிறகே அக்குழந்தைக்கு உயிர் கொடுக்கப்படுவதாக குர்ஆன் கூறுகிறது.

இதற்குச் சான்றான குர்ஆன் வசனம் 32;9 மற்றும் நபிமொழி புகாரி; 3208

அப்படியானால் விந்தணுவுக்கும் அண்ட அணுவுக்கும் உயிர் இருக்கிறதா? இல்லையா?

  1. “குடிபானங்களில் ஈ விழுந்துவிட்டால் அதனை நன்றாக உள்ளே முழுகச் செய்து பிறகு குடியுங்கள். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் விஷமும், மறு இறக்கையில் இதற்கான முறிவும் உள்ளது” என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.

இதற்கானச் சான்று; நபிமொழி புகாரி 3320

இதுபற்றிய தங்களின் கருத்து என்ன?

_________________________________________________

தோழர் சாகித் – பேராசிரியர் ஜலீல் உரையாடல்:

தோழர் சாகித் – பேராசிரியர் ஜலீல் உரையாடல்:

தோழர் சாகித் – அப்துல்லா (பெரியார்தாசன்) உரையாடல்:

தோழர் சாகித் – அப்துல்லா (பெரியார்தாசன்) உரையாடல்:

____________________________________________

–   சாகித்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. அப்துல்லாஹ் போல் மிக பெரிய தாசன்கள் தான் இந்த பூமியில் வாழ தகுதியானவர்கள். பெரியார்தசன் பெரிய தாசந்தான்யா. எம்புட்டு கைமாறிச்சு. மொழி படிக்கயில்ல என்பது ஆறுதல். தெரிந்ததும் தெளிவீர்.

    • இங்கே விவாதம் செய்ய வரும் இசுலாமிய நண்பர்கள் கவனத்திற்கு!
      இந்த பதிவை நான் வாசித்த வரையிலும், குரானையும், இசுலாமையும் விமரிசனம் செய்வது மையமான இலக்காக இல்லை மாறாக, பெரியார்தாசன் என்ற ஊரறிந்த நாத்திகவாதி இசுலாமியறாய் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பின்னர், இசுலாமிய ஆதரவு ஊடகங்கள் பெரியார்தாசனே மாறிவிட்டார், இசுலாமே சிறந்தது என்று புரிந்து கொண்டார் என்றெல்லாம் எழுதியதால் அவர் உண்மையிலேயே புரிந்து கொண்டாரா இல்லையா என்பதை அறியும் ஒரு முயற்சியே இந்த உரையாடல்… முடிவில் அவர் நேர்மையாக தனக்கு இன்னமும் எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டதால்.. அவர் மதமாறிய காரணம் இசுலாம் சிறந்தது என்று புரிந்துகொண்டதனால் அல்ல என்பது உறுதியாகிவிட்டது. வேறு காரணங்களைப்பற்றி நமக்கு அக்கறையில்லை, அது அவர் சொந்த விசயம்..
      தயவு செய்து வழக்கம் போல இசுலாத்துக்கு எதிரான பதிவு என கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க வேண்டாம் என கோருகிறேன்
      நன்றி

      • தோழர் அவர்களே,
        இஸ்லாம் மார்க்கம் என்பது சிறந்ததே, இஸ்லாமிய மார்க்கம் உலக மக்களுக்காகவே இறைவனால் உருவக்கபட்டது. உங்களுக்கு குர்ஆன் வசனம் சம்பந்தமாக எந்த சந்தேகங்கள் இருக்கிறது நீங்கள் உலமா PJ அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

    • இந்தக்க கேள்விகள் பெரியார்தாசனிடம் கேட்கப்படுவதில் இன்னுமொரு நியாயமும் உண்டு… இதே போன்ற பார்ப்பனிய கட்டுக்கதைகளை நார்நாராய் கிழித்து தொங்கப்போட்டவர் அவர்… தர்ர்க்க ரீதியாக ஒரு விசயத்தை நிராகரித்த பெரியார்தாசன் தர்க்க ரீதியாக நிரூபிக்கவும் வேண்டும் என்று கேட்பது சரிதானே நண்பர்களே????

      • இறைவன் நாடினால் விரைவில் உங்களுக்கு பதில் அளிப்பார்.

    • தோழர் செங்கொடியின் இந்த பின்னூட்டம் முதலில் இருப்பது தான் சரியானது https://www.vinavu.com/2010/04/19/periyardasan-islam/#comment-21135

      தோழர் சாகித் ஒரு அருமையான பணியை செய்திருக்கிறார்.அவர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார், இவர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார் என்று அவ்வப்போது செய்திகள் சுற்றுக்கு வரும் அப்போதெல்லாம் இவர்கள் புளகமடைந்து கொள்வார்கள். எங்கள் மதம் அறிவியல் மதம் என்பதும் அவ்வளவு பெரிய ஆளே மதம் மாறிவிட்டார் நீயென்ன? என்பதும் இவர்களின் வழக்கமான உத்தி. நெருக்கிப்பிடித்துப்பார்த்தால் அறிவியலைப் போலவே பெரியார் தாசனும் பல்லிளித்துவிட்டார். இஸ்லாத்தை புரிந்து அவர் மாறவில்லை என்பது அவர் பேச்சிலேயே வெளிப்படுகிறது. இதில் அவர் முரண்பாடாகவே இருக்கிறார்.

      ஏனென்றால் சவுதியில் ஏன் இஸ்லாத்திற்கு மாறினேன் என்று அவர் பேசிய பேச்சில் கம்யூனிசத்தை விமர்சித்திருந்தார், அதாவது உலகிற்கு கம்யூனிசம் பயன்படாது இஸ்லாம்தான் பயன்படும் எனும் பொருளில். அந்த அளவிற்கு இஸ்லாமிய கொள்கைகளை ஆய்வுசெய்து சிறந்தது என்றுகண்டு மாறியவருக்கு இப்போது அதெல்லாம் எனக்கு தெரியாது உலமாக்களிடம் கேளுங்கள் என்கிறாரென்றால்; சவுதி உரையில் அவர் சொன்னது முழுக்க பொய். அல்லது இன்று சொல்வது பொய். இரண்டில் ஒன்று தான் மெய்யாக இருக்கமுடியும். பெரியார்தாசன் நான் தயாரில்லை என்று கூறிவிட்டார். இங்கு பின்னூட்டமிடுபவர்கள் எது பொய் எது மெய் என்று விளக்குவார்களா?செங்கொடி

      • தோழர் செங்கொடி அவர்களே அப்துல்லாஹ் அவர்கள் இப்பொழுதுதான் இஸ்லாத்திற்கு வந்திருக்கிறார் இன்ஷா அல்லா விரைவில் உங்களுக்கு அவர் பதில் அளிப்பார் அதை ஏற்று கொள்ளும் பக்குவத்தை இறைவன் உங்களுக்கு தர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

    • வாங்க…..வாங்க….வாங்க……
      இஸ்லாமுக்கு வாங்க…….4000 சவுதி ரியல் அள்ளிட்டு போங்க…. வாங்க…..வாங்க…..

      இது சவுதி,ரியாத் சிட்டி சென்டரில் நடக்கும் ஒரு ஆள் பிடிக்கும் விளையாட்டு…. பெரியார்தாசனுக்கு என்ன பணக்கஷ்டமோ…பாவம்…அமுக்கிட்டானுங்க… ….அவரும் இப்போ பே பே பே ன்னு முழிக்கிறார்…

      • நீங்கள் கூறுவதற்கு ஏதேனும் அல்லது யாரேனும் ஆதாரமாக இருகிறர்கள சகோதரர் கைப்புள்ள.. ஆதாரத்துடன் கூறினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.. இல்லையேல் ஒரு தனி மனிதனை பற்றி தவறான கருத்துகளை பரப்பிய குற்றத்திற்கு ஆளாவீர்கள்..தனி மனித சுதந்திரத்தை பேண விரும்பும் ம.க.இ.க சகோதரர்கள் கவனிக்கவும்.. 

      • 1980களில் மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாத்துக்குள் நுழைந்தபொழுதும் இதே கருத்தை – சங்பரிவார் பரப்பி தோல்விக்கண்டது..அதே வழிமுறைகளை ம.க.இ.க தோழர்களும் கடைபிடிப்பது சரியா?

        அவர்கள் காசுக்க்காக மதம் மாறியிருந்தால் – மீனாட்சிபுரம் ..25 வருடங்களுக்கு பிறகும் ரஹமத் நகராக நிலைத்திருக்குமா.?

        (இந்த பின்னூட்டத்தை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்)

        • ”1980களில் மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாத்துக்குள் நுழைந்தபொழுதும் இதே கருத்தை – சங்பரிவார் பரப்பி தோல்விக்கண்டது..அதே வழிமுறைகளை ம.க.இ.க தோழர்களும் கடைபிடிப்பது சரியா?”
          இங்கு பின்னூட்டமிடுபவர்களெல்லாம் மகஇக தோழர்களா? 

      • கைப்புள்ள என்பது ஊரை ஏமாற்றும் வடிவேலுவின் கேரக்டர் பெயர்
        இங்கேயும் அது உண்மையாக்க பட்டுள்ளது
        நீர் சொல்ற மாதிரி காசுக்காக ஆள் பிடித்து மதம் மாற்றியாக வேண்டிய கேவலமான நிலையில் இஸ்லாம் இல்லை

  2. சகோதரர் வினவு,
    இஸ்லாத்தின் மிது உங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வை தான் உங்களின் இந்தப் பதிவு வெளிப்படுத்துகிறது.

    உண்மையிலேயே உங்களுக்கு இஸ்லாத்தைக் குறித்து விளக்கம் தெரிய வேண்டும் எனில், இஸ்லாத்தை நன்றாக கற்றறிந்த அளிம்களிடம் கேட்க வேண்டும்.

    ௮ ஆண்டுகளாக குரானை ஆய்வு செய்த உடன் எல்லாக் கேள்விகளுக்கும் ஒருவர் பதில் குறி விட வேண்டும் என்ற கட்டாயமில்லை. இஸ்லாத்திற்கு மாற ஆயிரம் காரணங்கள் வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நிருபிக்கப்படாத டார்வின் கொள்கையைத் துக்கித் தலையில் வைத்து ஆடுபவர்கள், உண்மையிலேயே தங்கள் கொள்கையில் உறுதியானவர்களாக இருந்தால், திறந்த விவாதத்திற்குத் தயாராக வேண்டும். அந்தத் துணிச்சல் உங்களுக்கு உள்ளதா? உங்களைப் போன்றவர்களை மேடையில் நேருக்கு நேர் சந்திக்க தமிழ்நாடு தௌஹித் ஜமாஅத் எப்போதும் தயாராகவே உள்ளது. உங்களுக்குத் துணிச்சல் இருந்தால் தொஹித் ஜமாத்துடன் நேருக்கு நேர் மேடையில் விவாதம் புரிய முன் வாருங்கள்.

    இல்லையேல், நிங்கள் குருவதைஎல்லாம் வேத்துவேட்டுகலகத் தான் மக்கள் எடுத்துக் கொள்வர்.

    • //திறந்த விவாதத்திற்குத் தயாராக வேண்டும். அந்தத் துணிச்சல் உங்களுக்கு உள்ளதா?//

      இங்க மூடிய விவாதமா நடக்கிறது? இங்கேயே விவாதம் செய்ய வேண்டியதுதானே? சும்மா உதார் வுடக் கூடாது

      • நேரடி விவாதத்திற்கு வந்தால் தான் உங்களின் உளரல்கள் மக்கள் மத்தியில் கட்ட முடியும் ????

    • இஸ்லாத்தில் அனைவருக்கும் அமைதி என்று கூருகிரீர்ர்களே எனக்கு ஒரு டவுட். இதை கேட்டால் இஸ்லாம் பற்றி முழுமை யாக புரியவில்லை மன்னகட்டி என்று சமாளிக்க வேண்டாம். நான் கடுவுளை நம்பாதவன். உங்கள் குரானில் இருபதுக்கும் அதிகமான இடங்களில் அல்லாவை கடுவுளாக ஏற்காதவர்களை கொள்ள வேண்டும் குத்த வேண்டும் நெருப்பால் துன்புறுத்த வேண்டும் அவர்களின் குடும்பங்களி விரட்டி அடிக்க வேண்டும் என்று உள்ளது. இப்படி இருக்கும் போது அமைத்து யாருக்கு இஸ்லாமியர்களுக்க இல்லை அதை நம்பதவர்களுக்கா !
      Torment to Non-believers:
      SURA 4.56: (As for) those who disbelieve in Our communications, We shall make them enter fire;
      so oft as their skins are thoroughly burned, We will change them for other skins, that they may taste the chastisement; surely Allah is Mighty, Wise.
      Allah causes you to disbelieve and then he punishes you for that
      2.7 Allah has set a seal upon their hearts and upon their hearing and there is a covering over their eyes, and there is a great punishment for them.
      No friends with parents / siblings if not believers
      9.23: O you who believe! do not take your fathers and your brothers for guardians if they love unbelief more than belief; and whoever of you takes them for a guardian, these it is that are the unjust.
      Friends with Jews, Christians…
      5.51: O you who believe! do not take the Jews and the Christians for friends; they are friends of each other; and whoever amongst you takes them for a friend, then surely he is one of them; surely Allah does not guide the unjust people.
      Gruesome Amputations
      Said he (Pharaoh): You believe in him before I give you permission; most surely he is the chief of you who taught you the magic, so you shall know: certainly I will cut off your hands and your feet on opposite sides, and certainly I will crucify you all. (External link: Dhimmi Watch)
      Fight non-believers
      9.123: O you who believe! fight those of the unbelievers who are near to you and let them find in you hardness; and know that Allah is with those who guard (against evil).
      Kill non-believers
      4.89 : They desire that you should disbelieve as they have disbelieved, so that you might be (all) alike; therefore take not from among them friends until they fly (their homes) in Allah’s way; but if they turn back, then seize them and kill them wherever you find them, and take not from among them a friend or a helper.
      Killing Idolaters
      9.5: So when the sacred months have passed away, then slay the idolaters wherever you find them, and take them captives and besiege them and lie in wait for them in every ambush, then if they repent and keep up prayer and pay the poor-rate, leave their way free to them; surely Allah is Forgiving, Merciful.
      Islam Acceptable:
      3.85: And whoever desires a religion other than Islam, it shall not be accepted from him, and in the hereafter he shall be one of the losers.
      No friends from outsiders
      3.118: O you who believe! do not take for intimate friends from among others than your own people; they do not fall short of inflicting loss upon you; they love what distresses you; vehement hatred has already appeared from out of their mouths, and what their breasts conceal is greater still; indeed, We have made the communications clear to you, if you will understand.
      No friends with non believers
      3.28: Let not the believers take the unbelievers for friends rather than believers; and whoever does this, he shall have nothing of (the guardianship of) Allah, but you should guard yourselves against them, guarding carefully; and Allah makes you cautious of (retribution from) Himself; and to Allah is the eventual coming.
      Believers make superior friends
      4.144: O you who believe! do not take the unbelievers for friends rather than the believers; do you desire that you should give to Allah a manifest proof against yourselves?
      God a plotter
      8.30: And when those who disbelieved devised plans against you that they might confine you or slay you or drive you away; and they devised plans and Allah too had arranged a plan; and Allah is the best of planners.
      Anti Jewish verses
      5.82: Certainly you will find the most violent of people in enmity for those who believe (to be) the Jews and those who are polytheists, and you will certainly find the nearest in friendship to those who believe (to be) those who say: We are Christians; this is because there are priests and monks among them and because they do not behave proudly.
      Idolaters are unclean just because they are idolater
      9.28: O you who believe! the idolaters are nothing but unclean, so they shall not approach the Sacred Mosque after this year; and if you fear poverty then Allah will enrich you out of His grace if He please; surely Allah is Knowing Wise.
      Forcing non-believers to pay tax
      9.29: Fight those who do not believe in Allah, nor in the latter day, nor do they prohibit what Allah and His Apostle have prohibited, nor follow the religion of truth, out of those who have been given the Book, until they pay the tax in acknowledgment of superiority and they are in a state of subjection.
      The Torment of Hell for infidels (Jews, atheists, and unbelieving infidels)
      43: Surely the tree of the Zaqqum,
      [Sinners, eat Zaqqum to intensify the torment of the Khati’un
      (Koran Sura 69:36-37); it tastes like Like molten brass…]
      44: Is the food of the sinful
      45: Like dregs of oil; it shall boil in (their) bellies,
      46: Like the boiling of hot water.
      47: Seize him, then drag him down into the middle of the hell;
      48: Then pour above his head of the torment of the boiling water:
      49: Taste; you forsooth are the mighty, the honorable:
      50: Surely this is what you disputed about.
      51: Surely those who guard (against evil) are in a secure place,
      52: In gardens and springs;
      53: They shall wear of fine and thick silk, (sitting) face to face;
      54: Thus (shall it be), and We will wed them with Houris pure, beautiful ones.
      55: They shall call therein for every fruit in security;
      56: They shall not taste therein death except the first death,
      and He will save them from the punishment of the hell,
      57: A grace from your Lord; this is the great achievement.
      58: So have We made it easy in your tongue that they may be mindful.
      2.62, 5.69 : All except Muslims / Jews/Christians / Sabeans will go to hell
      Surely those who believe, and those who are Jews, and the Christians, and the Sabians, whoever believes in Allah and the Last day and does good, they shall have their reward from their Lord, and there is no fear for them, nor shall they grieve.
      Smite the neck and cut fingertips of unbelievers
      8.12: When your Lord revealed to the angels: I am with you, therefore make firm those who believe. I will cast terror into the hearts of those who disbelieve. Therefore strike off their heads and strike off every fingertip of them.
      Smite the neck of unbelievers
      47.4: So when you meet in battle those who disbelieve, then smite the necks until when you have overcome them, then make (them) prisoners, and afterwards either set them free as a favor or let them ransom (themselves) until the war terminates. That (shall be so); and if Allah had pleased He would certainly have exacted what is due from them, but that He may try some of you by means of others; and (as for) those who are slain in the way of Allah, He will by no means allow their deeds to perish.
      Severe Punishment for atheists
      10.4: To Him is your return, of all (of you); the promise of Allah (made) in truth; surely He begins the creation in the first instance, then He reproduces it, that He may with justice recompense those who believe and do good; and (as for) those who disbelieve, they shall have a drink of hot water and painful punishment because they disbelieved.
      5.10: And (as for) those who disbelieve and reject our communications, these are the companions of the name.
      5.86: And (as for) those who disbelieve and reject Our communications, these are the companions of the flame.
      Severe Punishment for non-believers
      22.19: These are two adversaries who dispute about their Lord; then (as to) those who disbelieve, for them are cut out garments of fire, boiling water shall be poured over their heads.

      22.20: With it shall be melted what is in their bellies and (their) skins as well.

      22.21: And for them are whips of iron.

      22.22: Whenever they will desire to go forth from it, from grief, they shall be turned back into it, and taste the chastisement of burning.
      Severe Punishment for non-believers
      72.23 : (It is) only a delivering (of communications) from Allah and His messages; and whoever disobeys Allah and His Apostle surely he shall have the fire of hell to abide therein for a long time.
      98.6 : Surely those who disbelieve from among the followers of the Book and the polytheists shall be in the fire of hell, abiding therein; they are the worst of men.
      Punishing non-believers of Hereafter
      17.10 : And that (as for) those who do not believe in the hereafter, We have prepared for them a painful chastisement.
      Punishing for rejecting faith
      3.91 : Surely, those who disbelieve and die while they are unbelievers, the earth full of gold shall not be accepted from one of them, though he should offer to ransom himself with it, these it is who shall have a painful chastisement, and they shall have no helpers.
      Unbelievers go to hell
      4.140 : And indeed He has revealed to you in the Book that when you hear Allah’s communications disbelieved in and mocked at do not sit with them until they enter into some other discourse; surely then you would be like them; surely Allah will gather together the hypocrites and the unbelievers all in hell.
      7.36 : And (as for) those who reject Our communications and turn away from them haughtily — these are the inmates of the fire they shall abide in it.
      Partial Believers go to hell too
      4.150 : Surely those who disbelieve in Allah and His apostles and (those who) desire to make a distinction between Allah and His apostles and say: We believe in some and disbelieve in others, and desire to take a course between (this and) that.

      4.151 : These it is that are truly unbelievers, and We have prepared for the unbelievers a disgraceful chastisement.

      4.152 : And those who believe in Allah and His apostles and do not make a distinction between any of them — Allah will grant them their rewards; and Allah is Forgiving, Merciful.
      Sadistic punishments
      56.41 : And those of the left hand, how wretched are those of the left hand!

      56.42 : In hot wind and boiling water,

      56.43 : And the shade of black smoke,

      56.44 : Neither cool nor honorable.
      Punishment for apostates
      16.106 : He who disbelieves in Allah after his having believed, not he who is compelled while his heart is at rest on account of faith, but he who opens (his) breast to disbelief — on these is the wrath of Allah, and they shall have a grievous chastisement.

      3.86 : How shall Allah guide a people who disbelieved after their believing and (after) they had borne witness that the Apostle was true and clear arguments had come to them; and Allah does not guide the unjust people.

      3.87 : (As for) these, their reward is that upon them is the curse of Allah and the angels and of men, all together.

      3.88 : Abiding in it; their chastisement shall not be lightened nor shall they be respited.

      3.89 : Except those who repent after that and amend, then surely Allah is Forgiving, Merciful.

      3.90 : Surely, those who disbelieve after their believing, then increase in unbelief, their repentance shall not be accepted, and these are they that go astray.
      Allah will commit genocide
      17.16-17: When we decide to destroy a population, we send a definite order to them who have the good things in life and yet transgress; so that Allah’s word is proved true against them: then we destroy them utterly. How many generations have we destroyed after Noah? And enough is thy Lord to note and see the Sins of his servants.
      Allah boasts about His as genocide
      21.11: How many were the populations we utterly destroyed because of their inequities, setting up in their place other peoples.
      Allah instructs Islamics to heap up a mountain (of corpses) of non believers
      8.37: In order that Allah may separate the impure from the pure, Put All the impure ones (Non-Muslim — atheists, Jews), one on top of the another in a Heap and cast them into Hell. They will be the ones to have lost.

  3. அன்பான முஸ்லிம் நண்பர்களுக்கு!!!!!!! தயவுசெய்து இப் பிரச்சனையை அல்லாவிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் நடப்பதை பாருங்கள்.அப்படி இல்லைன்னு பதிவேத்த வந்திங்கன்ன நீங்க அல்லவை நம்ப இல்லைன்னு அர்த்தம்.

  4. குரங்கில் இருண்டு மனிதன் வந்தான் என்று சொன்னால் நம்புகிறிர்கள் அப்படி என்றால் இப்போ எத்தனை குரங்கு மனிதனாகி விட்டது என்று சொல்ல முடியுமா உங்களால்.அறிவியல் என்பது மாறக்குடியது இன்று சரி என்பார்கள் நாளை அதை மறுப்பார்கள்.இயற்கை அழிவு என்றால் என்ன.உங்களால் இயற்கைக்கு எதிராக ஏதாவது பண்ண முடிந்ததா.உலகம் மட்டும் அண்டம் எப்படி படைக்க பட்டு இருக்கிறது என்று நீங்கள் பார்க்க வில்லையா.மனிதன் ஏன் பிறக்கிறான் பிறகு ஏன் மரணிக்கிறான் பிறகு அவனுடையது என்ன என்பதை சிந்திக்க மாட்டிர்களா.நீங்கள் உங்கள் வாதத்தில் உண்மையாளர்கள் என்றால் நேரடி விவாதத்திற்கு வாருங்கள் இல்லை என்றால் அமைதியாக இருங்கள்.எவ்வளவோ பணம் சம்பாரிதலும் ஒரு நாள் அனைவரும் மரணிக்க கூடியவர்-களே.ஏன்னா தான் பணம் இருந்தாலும் மரணத்தை தடூக்க முடியாது.மரணம் வருவதற்கு முன் உன்னை திருத்திகொல்.இறைவன் ஒருவனே மட்டும் வணங்கு.

    • காலித்…. உங்களுக்குப் புரியவைக்க முயற்சிக்கிறேன்… கொஞ்சம் ஒத்துழையுங்கள்… பரிணாம வளர்ச்சி என்பது ஒரு நேர்கோட்டைப் போன்றது அல்ல. பல கிளைகள் கொண்டது.

      பலகிளைகள் கொண்ட ஒரு மரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறு கிளைகள், அவற்றிலிருந்து பிரியும் ஆயிரக்கணக்கான தண்டுகள், அவற்றின் முனையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான இலைகள் இவற்றை உருவகப் படுத்திக் கொள்ளுங்கள்.

      இப்போது இம்மரத்தைக் காட்டி முனையில் இருக்கும் இலை எது என்று எப்படி சொல்வீர்கள்? அந்த பல்லாயிரம் இலைகளுமே அம்மரத்தின் எல்லைக் கோடுகள்தானே?

      இப்போது பரிணாம வளர்ச்சி. பரிணாம வளர்ச்சியில் அமினோஅமிலங்கள் ஓரணு உயிராகி, அவை பல அணு உயிராகி, இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களாக ஆனது கிளைகள் பரவிய காலம். அவற்றிலிருந்து செடிகளும், பறவைகளும், விலங்குகளும் உருவானது சிறு கிளைகளும், தண்டுகளும் உருவான காலம். அதிலிருந்து பாலூட்டிகள் உருவானது இலை பிரிந்த காலம்.

      மனிதனும் குரங்கினமும் ஒரு சிறு கிளையிலிருந்து பிரிந்த இரு வெறு தண்டுகளின் முனையில் இருக்கும் இலைகள். இருவருக்கும் மூதாதையர் ஒருவரே. ஆனால் இப்போதைய குரங்கும் இப்போதைய மனிதனும் அவரவர் வந்த பாதையில் வெவ்வேறு மாதிரியாக பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டனர். இனிமேல் குரங்கிலிருந்து ஒரு உயிரினமும், மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து வேறு ஒரு உயிரினமும் தோன்றுவர். இந்த இலை நுனிகளிலிருந்து வேறு தனிக் கிளைகள் தோன்றும்.

      இது பல இலட்சம் ஆண்டுகளாகத் தொடரும் மாற்றம். மானுட வாழ்வில் நேரடியாக உணர முடியாது. உதாரணமாக, காது மடல்கள் – அவை தேவையில்லை என்பதால் – சில லட்சம் ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியின் விளைவாகத் தேய்ந்து விடும். அதற்காக நாளை பிறக்கும் குழந்தைக்குக் காது இருந்தால் அறிவியல் சறுக்கி விட்டதாக எண்ணக் கூடாது.

      உயிரியல் படித்துப் பாருங்களேன். ரொம்ப சுவாரசியமாக இருக்கும்.

      • Then tell me Mr. Vittan at present 2010 any new species araived from existing one or any species trying to change their life style??????????????????????tell me at least one with proof…..

        • ஃபாஹ்த்… சுருக்கமாக சொன்னால், காலப் பெருவெளியில் கடந்த காலத்தை மட்டுமே பார்க்க முடியும். அதை வைத்து எதிர்காலத்தை கணிக்கலாமே தவிர, உடனடியான இறந்தகாலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அவ்வப்போதே உடைக்க முடியாது. உயிரியல் ஆராய்ச்சியில் இதுவே முழுமையான உண்மை.

          உங்களுக்காக ஒரு உதாரணம். எயிட்ஸ் எப்படி எப்போது வந்தது என்பதில் ஒரு சில கேள்விகள் பாக்கி இருக்கின்றன. உண்மையாகவே கடந்த 35-40 ஆண்டுகளில் தான் அந்த நோய் தலை தூக்கியிருக்கிறது என்பது தெளிவாகிவிட்டால் அதுவும் ஒரு புது வகையான உயிராதாரமாகவோ அல்லது ஏற்கனவே இருந்த ஒரு உயிராதாரத்தின் ஜெனெடிக் மாறுபாட்டின் வடிவமாகத்தான் இருக்க வேண்டும். பன்றிக் காய்ச்சல் போன்ற இதுவரை அதிகம் அறியப் படாத நோய் வகைகளும், ஒன்று இது காலம் கண்டறியப் படாத உயிராதாரமாகவோ அல்லது மியூடேட் ஆன புது வகை உயிராதாகமாகவோ இருக்கலாம்.

          அவற்றைப் புதிய உயிரினங்கள் என்று வைத்துக் கொண்டு, மாறும் உயிரினங்களுக்கு உதாரணம் தருவது இன்னும் சுலபம். ஆப்பிரிக்க மனிதர்களுக்கும், பனி துருவங்களில் வாழும் மனிதர்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள் இதை விளக்கும். பல இலட்சம் ஆண்டுகளாக ஒரே வகை வாழ்க்கை முறையைப் பின் பற்றியதாலும் வேறு இனங்களுடன் கலந்து இனப்பெருக்கம் செய்யாததாலும் இவ்வகைப் பழங்குடி மக்களின் ஜெனெடிக் தகவல்கள் வழிவழியாக அழியாமல் பரம்பரை சொத்து போல கைமாறி வந்திருக்கின்றன.
          மனிதர்களுக்கு உள்ளேயே குளிரைத் தாங்கிக் கொள்ளும் படியான தோல் அமைப்பு ஒரு வகையினருக்கும், கால்சியம் அதிகமான உடல் அமைப்பு (எலும்பு, பற்கள் உறுதியாக) ஒரு வகையினருக்கும் இருப்பது அவர்களது இடம் பொருள் சூழலுக்கு ஏற்ப மாறியிருப்பதைக் காண முடியும். உடலில் உள்ள ரோமத்தின் அடர்த்தி, உயரம், எல்லாமே இடத்துக்கு இடம் மாறுவதிலும் பரிணாம வளர்ச்சியின் ஆதாரம் ஒளிந்திருக்கிறது. இவர்களுக்குள் இனப்பெருக்கம் நடப்பது மூலம் உருவாகுவது ஒரு புதுவகை உயிரினம் என்று கருதலாம். உதாரணமாக கறுப்பர் – வெள்ளையர், சீனர் – மாயன் பழங்குடியினர் கலப்பில் பிறப்பது மனிதர்கள்தான் ஆனாலும் அவர்கள் புதுவகை இனத்தவர்கள். பாமரேனியனுக்கும் அல்சேஷனுக்கும் புது நாய்க்குட்டி பிறப்பது போல.

          நீங்களும் நானுமே கூட பல இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனிலிருந்து எவ்வளவோ வேறு பட்டிருக்கிறோம். முதுகெலும்பு நிமிர்ந்ததிலிருந்து, நகக் கூர்மையும் விரல் நீளமும் குறைந்ததிலிருந்து, கோரைப் பல் வரிசை மாற்றம் வரை பல வேறுபாடுகள். இந்த மாற்றங்கள் நான் முன்பே சொன்னது போல பரம்பரைக்குப் பரம்பரை மிக மிகச் சிறிய அளவிலேயே நடக்கும். இதை அவதானிக்க பல கால இடைவெளியில் கிடக்கும் ஆதாரங்களை ஒப்பிடுவதன் மூலமே முடியும்.

          ஒரு குறிப்பிட்ட பழப் புழுவிடம் பரிணம மாற்றங்கள் வெகு வேகமாக நடப்பதை சோதனை மூலம் நிரூபித்து இருக்கிறார்கள். அடுத்தடுத்து இனப்பெருக்கம் செய்விக்கப் பட்டு கிட்டத்தட்ட 27 தலைமுறை இந்த வகைப் புழுக்களை ஒரே நேரம் உற்பத்தி செய்து ஒப்பிட்டு இருக்கிறார்கள். அந்த 27ஆவது தலைமுறை புழுவை முதல் தலைமுறைப் புழுவுடன் சேர வைத்த போது உடலில் சுரக்கும் திரவங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாமல் இறப்பதையும் பார்த்திருக்கிறார்கள். உடல் அமைப்பும் சுரக்கும் திரவங்களும் அந்தப் புழு வகையில் சில பரம்பரைகளுக்குள்ளேயே அவ்வளவு வேறுபடுகின்றன.

          ஒருவேளை நீங்கள் கால இயந்திரம் கண்டுபிடித்துப் பின் நோக்கி சென்று கிளியோபாட்ராவுடன் உறவு வைத்துக் கொண்டால் அவரோ நீங்களோ உடனடியாக இறக்கலாம். (இதை சும்மாதான் சொல்கிறேன்)

      • நண்பர் வித்தகன் அவர்களே,அறிவியல் என்பது மனிதன் தன் சிந்தனைக்கு உற்பட்டு கூறுவது. எப்போ வேண்டோமனாலும் மாறுபட்டு கூறுவான் உத்தரனதுகு பூமி முதலில் தட்டை என்றும் பிறகு உருண்டை என்றும் பிறகு கோல வடிவு என்றும்.அறிவியல் பரிணாம வளர்ச்சி என்பது தொடரனும் ஆனால் முடிய கூடாது.குரங்கு மனிதனாக வேண்டும் இல்லை என்றல் மனிதன் வேர் ஒரு புதிதான படைப்பாக மாற வேண்டும்.நீங்கள் சொல்லும் உதாரணம் மரத்தின் கிளைகள் பின் இலைகள்…..இந்த இலை நுனிகளிலிருந்து வேறு தனிக் கிளைகள் தோன்றும்…என்று நீங்கள் சொல்கிறிர்கள் அப்படியானால் இப்பொழுதும் அது தொடர வேண்டும்.தொடர்கின்றதா?.இஸ்லாம் இதற்கு எல்லாம் தெளிவாக விளக்கம் தருகின்றது நீங்கள் சொல்லும் அறிவியல் சான்றுடன் மேலும் விவரங்களுக்கு http://www.tamilislam.com/science/index.htm குரான் படித்துப் பாருங்களேன். ரொம்ப சுவாரசியமாக தெளிவாக இருக்கும்.சிந்திக்ககூடிய மக்களுக்கு குரான் நேர்வழி காட்டியாக இருக்கிறது…. உங்களுடன் விவாதம் பண்ண வரவில்லை மாறாக சத்தியம் எது என்று நண்பர் புரிந்து கொள்ள வென்றும் என்பதே என்னுடைய விருப்பம்.

        • நண்பர் அல்லாவின் சேவகரே! அறிவியலின் சிறப்பே அது empirical evidence ஐ அடிப்படையாகக் கொண்டு இருப்பதுதான். நீங்கள் எந்த அறிவியல் கருத்தையும் ஆதாரத்துடன் மறுக்கலாம். புவியீர்ப்பு விசை உண்டென நியூட்டன் சொன்னால் போய்யா டுபுக்கு என்று சொல்லலாம். மேலே தூக்கி எறியும் பந்து ஒரு தடவை கீழே விழாமல் மேலேயே தங்கி விட்டால் நியூட்டனை செல்லமாக புண்ணாக்குத் தலையா என்றே அழைக்கலாம். யாரும் உங்கள் தலையை எடுத்து விட மாட்டார்கள். ஆனால் அப்படி நிகழாத வரை நியூட்டன் சொன்னதுதான் சரி. அவர் கருத்து பலவித சோதனைகளின் மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அவர் இல்லையேல் விமானம் இல்லை, செயற்கைக் கோள் இல்லை, பூமியை சந்திரனும், கோள்கள் சூரியனையும் சுற்றுவதற்கு விளக்கமும் இல்லை. அறிவியலின் அழகே எந்த ஒரு தத்துவமும் நிரூபிக்கப் படும் வரை தவறு. நிரூபிக்கப் பட்டாலோ, அடுத்த கட்டத்துக்கு மனித இனத்தைக் கொண்டு செல்லும் அஸ்திவாரமாகிவிடும்.

          மதப் புத்தகங்களில் சொல்லியிருப்பது அப்படி இல்லை. அந்தப் புத்தகங்களில் இருப்பதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. கேட்டால் உயிரை விடவேண்டியதுதான்.

          பரிணாம வளர்ச்சித் தத்துவம் ஒரு காலத்தில் அறிஞர்களாலும், பின்னர் சாமானியர்களாலும், இப்போது மதவாதிகளாலும் கேள்வி கேட்கப் பட்டது/ படுகிறது. ஆனால் இன்று வரை நமக்குக் கிடைக்கும் ஆதாரங்கள் – fossils, DNA mapping, culturan anthopological studies – எல்லாமே பரிணாம வளார்ச்சிக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன. சர்க்கரை நோய்க்கும், இரத்த அழுத்ததிற்கும், மூட்டு வலிக்கும் சாப்பிடும் மருந்துகள் இவை பரம்பரை நோய்கள் என்பதைப் புரிந்து கொண்டதால்தான் குணப்படுத்தும் வீரியம் கொண்டவையாகத் தயாரிக்கப் படுகின்றன. வீட்டில் வைக்கும் கொசு மருந்தில் மாறும் வீரியமும், மாறுபட்ட கலாச்சார மக்களின் இட மாற்றத்திற்கும், சுற்றுச் சூழல் மாசு படும் போது வெவ்வேறு உயிரினங்கள் எப்படி சமாளிக்கும் அல்லது அழியும் என்பதை புரிந்து கொள்வதற்கும், கருவில் இருக்கும் சிசுவின் எதிர்கால நோய்கஆளிப் பிறக்கும் முன்னே தடுக்கவும் பரிணாம வளர்ச்சியின் புரிதல் பேருதவி செய்கிறது.

          ஆனால் மதப் புத்தகங்களில் சொல்லியிருப்பவை எதுவுமே நிரூபிக்கப் படாமல் கண்மூடித்தனமாக நம்பப் படுகின்றன. அண்ணன் யாரு தெரியுமில்ல என்ற உதார்தான் கேட்குமே தவிர அண்ணன் சொன்னது எந்த வகையில் உண்மை என் யாரும் கேள்வி கேட்பதே இல்லை. அண்ணனுக்கு எல்லாம் தெரியும் என்பதோடு விவாதம் முடிந்து விடுகிறது. உங்களுக்கு இத்தளத்தில் என் கருத்துக்களுடன் பரிச்சயம் இருந்தால் நான் இஸ்லாத்தை மட்டுமின்றி எல்லா மதங்களையும் குறிக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

          பரிணாம வளர்ச்சித் தத்துவம் ஆதாரங்களில்ருந்து உருவான அறிவியல் உண்மை. பதிலை எழுதி விட்டு அதன் பின் பொருத்தப் பட்ட விளக்கம் அல்ல.
          அறிவியல் அறிவு இல்லாதது ஒரு குறையாகக் கருதப் படும் வரை பெரும்பான்மைச் சமூகம் அதனால் மறைமுகமாகப் பயன் பெறுமே (மருந்துகள், தொலை தொடர்பு சாதனங்கள்) தவிர, எதற்கு யாரிடம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று புரியாமல் தடுமாறத்தான் செய்யும். கல்வி ஒன்றுதான் இந்த இருண்ட வாழ்விலிருந்து வெளி வர ஒரே வழி.

        • நண்பர் வித்தகன் அவர்கள் ——நியூட்டன் இல்லையேல் விமானம் இல்லை, செயற்கைக் கோள் இல்லை, பூமியை சந்திரனும், கோள்கள் சூரியனையும் சுற்றுவதற்கு விளக்கமும் இல்லை. அறிவியலின் அழகே எந்த ஒரு தத்துவமும் நிரூபிக்கப் படும் வரை தவறு—நியூட்டன் இருகிரதைதான் கண்டு பிடிது சொன்னாரே தவிர அவர் ஒன்றும் உருவாக வில்லை.அந்த சிந்தனையை கொடுத்தது யார். ஏன் மனிதன் இறக்கிறான் அதன் பிறகு அவனுடையது என்ன,ஏன் உங்கள் அறிவியலால் மரணத்தை தடுக்க முடிய வில்லை,ஏன் மரணித்தவரை உயிர் கொடுத்து எழுப்ப பட முடிய வில்லை.சாதாரண மழையை கூட கணித்து சொல்லு முடிய வில்லை.எப்போ வானிலை அறிக்கை சொன்னாலும் ஒரு உறுதி இல்லை.நாளை என்ன நாடாகும் என்று உங்கள் அறிவியலால் சொல்ல முடியுமா.முடிந்த பிறகுதான் உங்களால் உகிக்க முடியுமே தவிர இயற்கை என்று நீங்கள் சொல்லும் அந்த அழிவை உங்களால் தடுக்க முடியாது.அறிவியல் என்பது மனிதனும் சிந்தனை அறிவை பொருத்தது,இன்று ஒனேனு சொல்லுவான் நாளை அது மாறு படும்.உனக்குள்ளே பல அத்தார்சிகள் இருக்கிறது அதை முதலில் சிந்தித்து பார்.இஸ்லாம் சிந்திக்க வேண்டாம் என்று ஒரு போதும் சொல்ல வில்லை.சிந்திக்க கூடிய மக்களுக்கு இஸ்லாம் நேர் வழி காட்டுகிறது.இறைவன் குரானில் கூறுகிறான் நீங்கள் சிந்திக்க மாடிர்களா உங்கள் இதயங்கள் என்ன பூட்ட போடபட்டுள்ளது என்று.அதனாலே முதலில் இஸ்லாத்தை பற்றி தெரிந்து பிறகு பேச கேட்டுகொள்கிறேன்.

        • //இறைவன் குரானில் கூறுகிறான் நீங்கள் சிந்திக்க மாடிர்களா உங்கள் இதயங்கள் என்ன பூட்ட போடபட்டுள்ளது என்று//
          குர்ரன்ல கொஞ்சம் திருத்தும் பண்ணுங்க, உங்கள் “மூளை “பூட்டா போட்டுள்ளது என்று .இதயத்த வட்சு தான் சிந்திகிரீங்களா?

        • நண்பர் 30/03/௧௯௮௫ அவர்களுக்கு, அரபிக் மொழி-இல் க்ஹல்ப் என்றால் இரண்டை குறிக்கும் மூளை, அறிவு சிந்தித்து அறியகூடிய இடம் என்று.

        • செர்வரே, ஏமய்யா பொய் சொல்கிறீர் மூளைக்கு கீழ்காணும் அரபிச் சொற்களே உள்ளன.
          1. دماغ2. مخ3. فهم4. ذكاء5. شخص شديد الذكاءஇத்யம்
          1. قلب2. لب3. محور4. فؤاد5. عواطف6. ذاكرة7. شخصية المرء8. ضمير وجدان

        • நண்பர் அல்லாவின் சேவகருக்கு…

          நியூட்டன் மட்டுமல்ல யாரும் எதையும் உருவாக்கவில்லை. எனக்கு அது தெரியும். இருப்பதைப் புரிந்து கொள்வதில் தெளிவு இல்லையெனின் வாழ்க்கை இருளடிக்கும். அறிவியல் தான் அதற்கு ஒரே வழி.

          மரணம் என்பதைத் தடுப்பது பிறப்பைத் தடுக்க முடியாத வரை இயலாத காரியம். இவ்வுலகின் பிரிக்க முடியாத அங்கம் பிறப்பும் இறப்பும். அதைத் தடுத்து எதுவும் சாதிக்கப் போவது இல்லை. வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் பிறர்க்கு இடம் ஏது? மரணத்திற்குப் பின் எதுவும் இல்லை. அதைப் பற்றி யார் சொல்லியதும் உண்மையும் இல்லை.

          உங்களுக்குத் தெரிந்தது மத போதகம். எனக்குத் தெரிந்தது அறிவியல். நமக்குல் பொதுவில் சேரும் புள்ளி எதுவும் இருக்க வாய்ப்பில்லை. உயிரியல், இயற்பியல், வேதியியலில் அடிப்படை அளவில் உங்களுக்கு சந்தேககங்கள் இருப்பின் என்னால் முடிந்த அளவு தீர்த்து வைக்க ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு பதிலுக்கு எந்த மதத்தின் போதகமும் வேண்டாம். மற்றபடி என் அன்பும் நல் வாழ்த்துக்களும் உங்களுக்கு.

        • ——மரணம் என்பதைத் தடுப்பது பிறப்பைத் தடுக்க முடியாத வரை இயலாத காரியம். இவ்வுலகின் பிரிக்க முடியாத அங்கம் பிறப்பும் இறப்பும். அதைத் தடுத்து எதுவும் சாதிக்கப் போவது இல்லை. வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் பிறர்க்கு இடம் ஏது?—-மக்கள் தொகை அதிகமானதால் தான் புது புது கண்டு பிடிப்புகளை கண்டு பிடிக்கிறான்.உத்தரனதுகு நெல் பயிர்கள் முன்னாடி எல்லாம் பயிரிட்டு அறுவடை செய்ய 6 மாதங்கள் ஆகும் இப்போ 60 நாள்களில்.மக்கள் தொகை அதிகமானதால் கடல் நீரை குடி நீர் ஆக்குகிறான் மேலும் நிறைய சொல்லலாம் நண்பா.அறிவியல் என்பது மனிதன் சிந்தனைக்கு உற்பட்டு சொல்லகுடியது.நீங்கள் இயற்கை அழிஉகள் என்று சொல்கிர்களே அதுதான் என்ன.பூமி எப்படி படைக்க பட்டது,வானங்கள் எப்படி முகடோகளாக உயர்த்த பட்டது,மலைகள் எப்படி பூமி-இல் நட்டபட்டுள்ளது. நர்ச்சதிரங்கள் மேலும் பல பல விசயங்களை அறிவியலின் மூலம் இப்போ நீங்கள் சொல்வதை விட மிக தெளிவாக 1450 வருடத்துக்கு முன்பு இஸ்லாம் கூறி இருகிறதே அது அந்த காலத்தில் எப்படி சாத்தியம் என்று கொஞ்சம் சிந்திக்க மாட்டிர்களா நண்பர்களே…..இஸ்லாம் சொல்லும் விசயங்களை சிந்தித்து பாருங்கள் உங்கள் அறிவியலின் துணையோடு….http://www.tamilislam.com/science/index.htm

        • பிரதர் Servant of Allah:
          “ஏன் உங்கள் அறிவியலால் மரணத்தை தடுக்க முடிய வில்லை,ஏன் மரணித்தவரை உயிர் கொடுத்து எழுப்ப பட முடிய வில்லை.சாதாரண மழையை கூட கணித்து சொல்லு முடிய வில்லை.எப்போ வானிலை அறிக்கை சொன்னாலும் ஒரு உறுதி இல்லை.நாளை என்ன நாடாகும் என்று உங்கள் அறிவியலால் சொல்ல முடியுமா.”

          தவறிருந்தால் மன்னிக்கவும், அறிவியலின் வளர்ச்சியால் இறப்பு விகிதம்  குறைந்துள்ளது எனக்கு தெரிந்த சிறு உதாரணம் அம்மை, polio, நிலவில் தண்ணீர் கண்டுள்ளோம்,  டைனோசோர் இனம் அழிந்தது போல் விண்கல்லால் மனித இனம் அழியும் வாய்ப்பு குறைவு, அணுக்கருவி கொண்டு விண்கற்களை அளிக்கும் தொழில் நுட்பம் வளருகிறது. நிச்சயம் பாதகங்களும் ஏற்படுகின்றன. ex: global warming etc. நிச்சயம் கடவுள் மனிதனின் கையாலகாத தனத்துக்கு பழி போட, மனிதனால் உருவாக்கப்பட்ட கருவி. எந்த மத நூலும் மழை பூகம்பம் எல்லாம் எப்போது வரும் என்று சொல்லவில்லை. அவை அனைத்தும் பூடகமாக எழுதப்பட்டவை, எப்படி வேண்டுமானாலும் திருப்பலாம். like poet nastordam. World says he predicted everything in his poems. (some where said at 1990 world war 3 will come) தர்க ரீதியாக அறிவியல் மட்டுமே நிரூபிக்கிறது.  all the equipments that man creates today do have some life span, beyond they they do not work or even before that they fail due to some defect in manufacturing. does that meant the creater man is GOD? No, same is the case for all living things, ( trees, tortoise live longer than humans, do they worship god? just because the one who worship/trust god live longer than an atheist?)

        • //வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் பிறர்க்கு இடம் ஏது? மரணத்திற்குப் பின் எதுவும் இல்லை. அதைப் பற்றி யார் சொல்லியதும் உண்மையும் இல்லை.//

          இல்லை. மரணத்திற்கு பிறகு எதுவும் இல்லை என்பதும் கற்பனையே. மரணத்திற்கு பிறகு சொர்க்கம்/நரகம் என்னும் கற்பனை போல.

          அதற்காக, மரணத்திற்கு பிறகு சொர்க்கம்/நரகம் என்னும் கருத்தை ஏற்றுக் கொள்வது அவரவர் விருப்பம் என்றாலும், ‘அது தான் உண்மை’ என்று பிதற்றுவதும், வலிந்து திணிப்பதும் தான் பிரச்சினையே…

          //உங்களுக்குத் தெரிந்தது மத போதகம். எனக்குத் தெரிந்தது அறிவியல். நமக்குல் பொதுவில் சேரும் புள்ளி எதுவும் இருக்க வாய்ப்பில்லை.//

          :))

          சரி! உலகம் உருண்டை என்பதையாவது நம்புகிறாரா, அல்லாவின் சேவகன்?

          //பூமி எப்படி படைக்க பட்டது,வானங்கள் எப்படி முகடோகளாக உயர்த்த பட்டது,மலைகள் எப்படி பூமி-இல் நட்டபட்டுள்ளது. நர்ச்சதிரங்கள் மேலும் பல பல விசயங்களை அறிவியலின் மூலம் இப்போ நீங்கள் சொல்வதை விட மிக தெளிவாக 1450 வருடத்துக்கு முன்பு இஸ்லாம் கூறி இருகிறதே அது அந்த காலத்தில் எப்படி சாத்தியம் என்று கொஞ்சம் சிந்திக்க மாட்டிர்களா நண்பர்களே…..//

          இதை பத்தியெல்லாம் குரானில் என்ன சொல்லியிருக்கிறது என்று தெரியாது. ஆனால், “தெளிவாக” என்று நீங்கள் சொல்வது தான் உதைக்கிறது.

          //இப்போ 120 கோடி மக்கள் என்றால் 10 வருடத்துக்கு முன்னாள் 90 கோடி…இப்படியே போக போக கடைசி-இல் ஒரு ஜோடிலே வந்து நிற்கும்.அதுனலேதன் இஸ்லாம் சொல்கிறது நாம் எல்லாரும் ஒரு தாய்,ஒரு தகப்பனுக்கு பிறந்து பெருகியவர்கள் என்று.//

          அப்போ அந்த ‘ஒரு’ தாய், தகப்பனுக்கு பிறந்தவர்கள் தங்களுக்குள் புணர்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாமா?

      • அருமையான பதில் வித்தகன். இன்னொரு விஷயம் நமக்கு மேல் ஒருவர் என்றால். பிறகு அவருக்கு மேல் யார் என்ற கேள்வியும் எழும். எதற்கு என்ன பதில் சொல்வார்கள் உலமாக்கள்.

        • 30/03/1985 லீனா மணிமேகலைக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் இவ்வளவு நீ முசுலீம்களை கேவலப்படுத்தியும் யாரும் ஒன்ன திட்டல இதுல இவர கொன்றுவாங்காளம்
          //முஸ்லீம் என்று அலறி ஆணுறை அணிந்தாய்கீழே இழுத்துஉப்பை சுவைக்க சொன்னேன்///

        • உனக்கும் மணிமேகலைக்கும் ஒரு ஒற்றும இருக்கு அவ பெண்ணியம் என்று சொல்லி பெண்களை கேவலப்படுத்திக்கிட்டு திரிற நீ ம.க.இ.க காரனை கேவலப்படுத்திக்கிட்டு திரியற