Wednesday, November 29, 2023
முகப்புபதிலிப் போர் தொடுப்பதற்கான பகிரங்க முயற்சி !! எம்.ஜி.தேவசகாயம், IAS (Retd.)
Array

பதிலிப் போர் தொடுப்பதற்கான பகிரங்க முயற்சி !! எம்.ஜி.தேவசகாயம், IAS (Retd.)

-

vote-012மத்திய இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகளின் மீது போர் என்ற பெயரில் பழங்குடி மக்களை அழித்து மலைக் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவாக்கும் திட்டத்தின் அடிப்படையில் மன்மோகன் சிங் – ப.சிதம்பரம் கூட்டணி செயல்படுகிறது. ப.சிதம்பரம் இந்தப் போரில் வெகு ஆர்வமாக இருப்பதன் பின்னணியும், பழங்குடி மக்களை ஆதரிக்கும் அறிவுத் துறையினரைக் கூட நக்சலைட்டுகள் என்று சித்தரிக்கும் போக்கையும் ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுட்டிக்காட்டுகிறார். மாவோயிஸ்ட்டுகளை ஏற்காதவர்கள் சொல்லும் உண்மையாவது இந்தப் பிரச்சினையின் மையத்தை புரிந்து கொள்ள உதவுமா?

-வினவு

___________________________________________________

தண்டேவாடாவில் மத்திய ரிசர்வ் காவல் துறையின் 76 வீரர்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டது, மத்திய அரசு தானாக அறிவித்துக் கொண்ட “ஆதிவாசிகள் பயங்கரவாதத்திற்கு” எதிரான போரில் மத்திய உள்துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பகுதி ஆதிக்கத்திற்காக ஆயுதத் தீர்வுக்கு பதில் மனிதாபிமான நிர்வாக போக்கு ஏற்படும் மனநிலை ஏற்படாத வரையில், இந்த நிகழ்வு ஒரு உள்நாட்டு யுத்தமாக மாறும் என்பதே நிதர்சனம்.

இதற்கு பதில் நமக்கு கிடைப்பதெல்லாம், கடுமையான பிரகடனங்கள்தான்.  இந்த நிகழ்ச்சியில் எங்கோ “மோசமான தவறு” நடந்துவிட்டது என்று கூறும் மத்திய உள்துறை அமைச்சா திரு சிதம்பரம், இந்த நிகழ்வு குறித்து விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளார்.  ஆனால் உண்மையிலேயே என்ன தவறு நடந்து விட்டது என்று அறிவதற்கு முன்பே, மாவோயிஸ்டுகளுக்கு எதிராக வான் வழி தாக்குதலை பயன்படுத்த வேண்டும் என்கிறார். “தற்போது விமானத்தையோ, விமானப்படையையோ பயன்படுத்த கட்டளை இல்லை.  இந்த அதிகாரத்தை தேவைப்பட்டால், நாங்கள் மறுபரிசீலிக்க உள்ளோம்” – என்கிறார்.

ஆனால் “எங்களது ஆயுதங்களும், பயிற்சியும் எல்லைக்கு அப்பாலுள்ள எதிரிகளை முற்றாக அழிக்க மட்டுமே பயன்பட உள்ளதேயொழிய, சொந்த மக்களுக்கு எதிராக இல்லை” என்கிறார் விமானப்படை தலைமை தளபதி.  அவர் மேலும் கூறும் போது, நக்சல்பாரிகளுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனமாகாது என்கிறார். மத்திய இராணுவ அமைச்சரோ இராணுவத்தை நேரடியாக பயன்படுத்தும் எண்ணமே இல்லை என்கிறார்.

இவ்வாறு கீழே தள்ளப்பட்டுள்ள திரு சிதம்பரம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வருகிறார்.  ஆனால் அது எதிர்பார்த்தபடியே பிரதம மந்திரியால் நிராகரிக்கப்படுகிறது. “தேசத்தின் பாதுகாப்பு சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாகும், அவர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர்.  “தற்போது ஏற்பட்டுள்ள சூழலை அவர் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்” என்கிறார்கள் அவர்கள்.  இவர்களது அணியைச் சார்ந்தவரும், பீகார் முதலமைச்சருமான திரு நிதிஷ்குமார் இன்னும் குறிப்பாக கூறுகிறார்.  “சிதம்பரம் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும், பேச்சை குறைக்க வேண்டும்.  மேலும், அவரது குரலையும், கடுமையையும் குறைத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

ஆனால் மாவோயிஸ்ட்டுகள் தங்களது ஆயுதத்தால் புரட்சிகர வெற்றிக்கு முயற்சிப்பார்களேயானால், தான் தனது யோசனையற்ற வார்த்தை ஜாலங்களால் அவர்களது ஆயுதங்களை மிஞ்சமுடியும் என்கிறார் சிதம்பரம். அவர் கடந்த ஏப்ரல் 4 – லால்காருக்கு பயணம் செய்தபோது, புத்துணர்ச்சியூட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எல்லோரும் நம்பினர்.  ஆனால் அவர் பொறுப்பை மாநில அரசின் மீது சுமத்திவிட்டு நழுவிவிட்டார். நற்செய்தியாக அவர் கூறுவது, மாவோயிஸ்ட்டுகள் “கானகத்தில் மறைந்து கொண்டுள்ள கோழைகள் என்றும் அவர்களை அழித்தொழிக்க மூன்றாண்டு கால அவகாசத்தையும்” அவர் அறிவித்தார்.

அவர் அப்படி கூறிய 48 மணி நேரத்தில் பழிவாங்கும் முகமாக இராணுவவீரர்கள் 76 பேரை மாவோயிஸ்ட்டுகள் கொன்றொழித்தனர்.  ஆடிப்போன சிதம்பரம் தான் கூறிய வார்த்தைகளால்தான் இந்த இழப்பு ஏற்பட்டதென்பது உணர்ந்து, மாவோயிஸ்ட்டுகள் இந்த நிகழ்வு மூலம் “காட்டுமிராண்டிகள்” என்று காட்டிவிட்டனர் என்றார்.

இந்த படுகொலைகள் முறையான பயிற்சி, தயாரிப்பின்றி இருந்ததால் நடந்திருக்கலாம் என்று நல்ல எண்ணத்துடன் கூறிய இராணுவ முதன்மை தளபதி திரு வி.கே.சிங்கைக் கூட சிதம்பரம் விட்டுவைக்கவில்லை. அதைச் சொல்வதற்கு ஒருவர் சிறந்த போர் வீரராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.  இருப்பினும், அவர் இளம் வயதில் சிறந்த வீரராக இருந்தவர்.  கானகப் போரில் அடிப்படை அறிவு இருக்கும் எவரும் இதைக் கூறலாம்.

இந்தியாவின் நவீன தாராள ஊடகங்களின் கதாநாயகனான அமைதியான, நிதானமான, ஆற்றல் உள்ள இவர், நக்சல்பாரிகள், மாவோயிஸ்ட்டுகள் என்று வரும் போது மட்டும் இவ்வாறு கொதித்துப் போவதேன்?  பட்டவர்த்தனமாக பேசும் அறிவாளிகளையும், கொள்கையாளர்களையும், நக்சல்பாரி தீவிரவாதிகள் என்று ஏன் முத்திரை குத்த வேண்டும்?  இந்த நாட்டில் யாரெல்லாம் எளியவர்களைப்பற்றி பேசுகிறார்களோ, மனித உரிமைப் பிரச்சனைகளை முன்னெடுத்து வைக்கிறார்களோ, அவர்களையெல்லாம், ஏன் நக்சல் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள் என்று சமூக ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதற்கு பதில், “பச்சை வேட்டை இயக்கம்” (ஆபரேசன் கிரீன் ஹன்ட்) என்ற போரில் ஆதிவாசிகள் உள்ள பகுதியிலிருந்து போராளிகளை வெளியேற்றவும், மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் அந்தப் பகுதிக்குள் நுழைந்திடாமல் தடுக்கவும், இறுதியாக அந்த பகுதி “முன்னேற்றத்திற்காக” என்று அதை சிவில் முனைவர்களிடம் ஒப்படைப்பதற்கான திட்டம் அரசிடம் உள்ளது. ஒரு கானகப் போர் புரட்சிகர கொரில்லாக்களை எதிர்த்து துணை இராணுவம் நடத்தும் எதிர்புரட்சி நடவடிக்கைக்கு மாறாக, பகுதியை கைப்பற்றவோ, நிலை நிறுத்தவோ செய்யவேண்டுமென்பது அரசின் திட்டமல்ல.

பின் யாருக்காக இந்த திட்டம் வகுக்கப்பட்டது? சுரங்கத் துறையில் ஈடுபட்டுள்ள சர்வதேச கம்பெனிகள் தங்களது தொழில் வளத்தைப் பெருக்கி கைப்பற்றப்பட்ட பகுதிகளில் தங்களது அதிகாரத்தை நிறுவுவதற்காகத்தான். லண்டனை மையமாகக் கொண்டு இயங்கிவரும் உலகின் மிகப்பெரிய சர்வதேச கம்பெனி “வேதாந்தா ரிசோர்ஸ்” ஐ பற்றிய விவரங்களை இது விஷயத்தில் சிறிது ஆய்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் மொத்த அலுமினியத் தாது உற்பத்தியின் 1.3 மில்லியன் டன்னில் வேதாந்தாவின் பங்கு, 85,000 டன்னாகும். இந்த கம்பெனியின் 5,00,000 டன் உருக்கும் திறன் உள்ள ஆலை ஒரிசாவின் ஜார்ஜிமூடாவில் உற்பத்தியை துவக்க உள்ளது. அங்கு இந்த கம்பெனி 1.6 மில்லியன் டன் உருக்கும் திறன் உள்ளதாக விரிவடையும். இது லால்கரில் உள்ள 5 மில்லியன் டன் அலுமினியம் பதப்படுத்தும் தொழிலுடன், 3750 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் பிரிவும் துணை நிற்கும். இதனது துணை நிறுவனமான பால்கோவின் உற்பத்தி திறன்  1மில்லியனாக உயர்த்தப்படும்.

லன்ஜிகார்கில் மட்டும் வேதாந்தா கம்பெனிக்கு 75 மில்லியன் டன் அளவுள்ள பாக்சைட் படிமங்களை உரிமம் கொண்டாடும் அதிகாரம் பெற்றதுடன் அதே அளவுக்கு சமமான படிமங்களை சொந்தம் கொள்ளும் பகுதியையும் கொடுக்க அரசு உறுதியளித்துள்ளது.  50 ஆண்டுகள் வரை பாக்சைட் படிமங்கள் கிடைக்கும் பகுதியில் 5 மில்லியன் டன் உருக்கும் ஆலை நியாயமானதே.  இந்தியாவின் மொத்த அலுமினிய இருப்பு 3.3 மில்லியன் டன்னில் வேதாந்தாவின் அலுமினியத் தொழில் நடக்கும் ஒரிசாவில் மட்டும் 1.7 மில்லியன் டன் உருக்காலை தொழில் உள்ளது. உலகின் மிகப்பரிய உருக்காலை ஒன்றை ஜார்குடாவில் உருவாக்க இந்த பகுதியிலுள்ள படிமங்களை விடுவிக்கும் உரிமை தனக்கு உள்ளதாக வேதாந்தா கூறிவருகிறது.

இந்த வேகத்தில் வேதாந்தா செயல்படுமேயானால் 2013ல் அனைத்து படிமங்களும் தரைக்கு மேலே கொண்டுவரப்பட்டுவிடும். இந்த படிம இருப்புகள் அனைத்தும் ஆதிவாசிகள் வசிக்கும் பகுதியில்தான் உள்ளது.  இந்த நிலங்களையெல்லாம் மீட்டெடுக்கும் முழுப்பொறுப்பை சிரமேற்கொண்டு அதற்காக ஒரு யுத்தமே பிரகடனப் படுத்தியிருக்கும் சிதம்பரம் இந்த நிலங்களை மீட்டு வேதாந்தாவிடம் சேர்ப்பாரா என்பதை பொறுத்துள்ளது.

சிதம்பரத்திற்கு வேதாந்தாவுடன் உள்ள நெருக்கமான உறவே தற்போதைய “ஆதிவாசிகள் பயங்கரவாத”த்திற்கெதிரான போரின் நோக்கத்தைப் பற்றிய திட்ட முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.  2003ல் மும்பை ஸ்டெர்லைட் கம்பெனி சுங்கவரி உள்ளிட்ட வரி ஏய்ப்பு புகாரின் மீது, மும்பை உயர்நீதிமன்றத்தின் முன் நின்றபோது, சிதம்பரம் அந்த கம்பெனிக்காக வாதாடியவராவார்.  சிறிது காலத்தில் வேதாந்தா குருப் கம்பெனிகளில் ஒரு இயக்குனராகவும் ஆனார். 2004ம் ஆண்டு மே திங்கள் 22ம் நாள் மத்திய நிதியமைச்சர் ஆன பின்னரே அந்த இயக்குனர் பதவியை துறந்தார் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.

திட்டமிடப்பட்ட நவ-தாராளமய ஊடகங்களின் “முழுப்போர்” பிரகடன வெளியீடுகளைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளை ஆளுமைக்குள் கொண்டுவர, இந்த யுத்தம் திரும்ப தொடங்கப்பட்டுள்ளது. இந்த முறை நக்சல்களை எதிர்த்து போராட சிறப்பு பயிற்சி பெற்ற பிரிவு இந்த போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விளைவு? ஆதிவாசிகள் தங்களது பல்லாண்டுகள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இருப்பிடங்களை விட்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர்.  இங்கு கேள்வி என்னவென்றால் இந்த அப்பட்டமான மேல்மட்ட நலன் பற்றிய பல்வேறு முரணான விவரங்கள் வெளிவரும் நிலையில், உள்துறை எந்த தர்மநியாய அதிகாரத்தின் அடிப்படையில் “இந்த மாற்றாள் போரை” நடத்த முடியும்?

________________________________________________

–  எம்.ஜி.தேவசகாயம், இ.ஆ.ப (ஓய்வு)

(நன்றி-தி நியு இண்டியன் எக்ஸ்பிரஸ்- ஆங்கில நாளிதழில் ஏப்ரல் 15ம் தேதி வெளியான Blatant effort to wage a proxy war என்ற கட்டுரை)

– தமிழில்: சித்திரகுப்தன்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. அட ஆத்தோட போனாலும் செட்டி ஆதாயத்தோடுதான் போvaaன்னு– பழமொழிக்கு அர்த்தம் இதுதானா?
  –வாகை–

 2. Nadars emerged, in the words of historian Hugald Grafe, as ‘‘one of the earliest groups who rose from social lowliness to occupy places formerly reserved for Brahmins.’’ 

  M G Devasahayam
  An infantry officer in the army (he participated in the Indo-Pak War of 1965), M G Devasahayam joined the IAS (Haryana Cadre). In 1985, he took voluntary retirement from the IAS and has since been in NGO work and, for a while, in politics. As Member of the High Power Committee on Agricultural Policies and Programmes that went into the issue of ‘‘transforming Agriculture into an Industry’’, he wrote the theme chapter. He also became closely associated with Mother Teresa and Jayaprakash Narayan (JP). He helped the Missionaries of Charity to set up the ‘Home for the abandoned and dying destitutes’ (Shanti-Dan) at the heart of Chandigarh and a sanctuary for lepers in the City’s outskirts. During the Emergency, when JP was jailed at Chandigarh, Devasahayam was the District Magistrate cum IG Prisons of the Union Territory and thus JP’s custodian. The relationship developed then continued until JP’s death. http://www.kuttyjapan.com/nadar/nadar-what-they-do.asp

 3. நல்ல பதிவு…
  எழுதியதில் எல்லாம் சரி….
  ஆனால், அந்த தாக்குதலில் உயிர் இழந்த அந்த 76 CRPF போலிசார்-களை தாக்கியது அல்லது முன்பு நடந்த அணைத்து தாக்குதலும் சரியானவையா???
  மக்கள் போராடுவது என்பது சரியே…
  ஆயுதமா? இல்லை அகிம்சையா?? என்பது வேறு…

  ஆனால், பாதிக்கப்படபோவது யார் என்பது முக்கியம் அல்லவா?
  Chidabaram போன்று உள்ள முதலாளிகள் (Businessmen-cum-Minister) மேல் இருந்து கட்டளை-யிட்ட பின் சம்பளம் வாங்கும் அந்த போலீசார்கள் என்ன செய்வார்கள்…
  அந்த போலிஸார்களின் பலிதான் மக்கள் போரட்டத்தின் இலக்கா ???….
  அதனால் சாதிப்பது என்ன???
  விளக்கவும்…

  • இதை சிந்தித்து விளக்க வேண்டியது ,, ப.சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் தான் .. நாம் நமது சாமானை (பொருட்களை ) மூடிக் கொண்டு (பாதுகாத்துக் கொண்டு ) இது சரியா தவறா நு இங்க பட்டி மன்றம் போடுற நேரத்துல ஒட்டு மொத்த இந்தியாவையும் அமேரிக்கா , ஜப்பான் , இங்கிலாந்துக்கு வித்துட்டு போய்டுவான் அந்த திருட்டு நாய் .. மாவோயிஸ்ட்டுகள் எந்த ஒரு சுய நலமும் இல்லாமல் தன உயிரை பணயம் வைத்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் .. உங்களுக்கு அகிம்சை வழி கேட்கிறதா ?.. சந்தோசம் … உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை காலி செய்யச் சொல்லி துப்பாக்கி காட்டும் போது உண்ணாவிரதம் இருங்கள் மாசி .. சீ ஆர் பீ எப் படையினர் தங்கள் மனைவி குழந்தைகளுடன் கொஞ்சி குலாவிக் கொண்டிருக்கும் போது மாவோயிஸ்ட்டுகள் போய் சுட்டுக் கொள்ள வில்லை . மாறாக மாவோயிச்ட்டுக்களை அளித்து ., அக்கிராம மக்களை மிரட்டி அவர்களிடம் இருக்கும் நிலத்தை அபகரிக்க சென்ற துணை ராணுவ வீரர்களிடம் உண்ணாவிரதம் இருந்தா சாதிக்க முடியும் .. உங்கள் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைக்க ஒருவன் வரும்போது .. கையில் துப்பாக்கி ஏந்தி நீங்கள் உண்ணாவிரதம் இருங்கள் .. உண்ணாவிரதம் இருந்து நாட்டை ஏமாற்றிய காங்கிரஸ் நாய்களில் இருந்து கருணாநிதி வரை எல்லாரும் ஏமாற்றியது போதும் ..

   • நான் கொஞ்சம் புதுசுங்க…
    எனது பார்வையில் தவறு உள்ளது…
    புரிந்து கொண்டேன்…
    தற்காப்புக்கு போர் புரியவது சரியே…

    நான் ஆயுதும் ஏந்துவதை பற்றி சொல்லுவில்லை…இறுதி இலக்கு (Final Destination)
    என்ன நடக்கிறது என்றால் இப்போது?

    Government  taking the steps to give the poor people’s land to Big Giant Companies. 
    Affected people fighting for the land against Government.
    Government get suppress the agitations.
    Agitation again become more strengthen by Maoist.
    Government sent CRPF against Maoist.
    CRPF attacked Peoples & Maoist.
    Maoist attacked CRPF.
    CRPF in search of the Maoist violently
    People get skip away from their land to avoid the police tortures..

    After, Government drama continues…

    Government have easily described the situation as COUNTRY’s greatest evil as Moaist and get support from the other unknown peoples, all political party, international support. Even though peoples are believing or not. They are continuing their job in great manner. And Maoist Supporter’s supporting their things to get aware of it to get the support from the people.

    But, finally who is winning the situation is the matter…
    I think they are in top in the rank…But, whatever it is.. finally…
    The suffered people should get their rights…
    Am thinking that It can’t be achieved without the strong support from the own suffered people and also other people…

    நன்றி
    மாசீ…

    • புரிந்து கொண்டமைக்கு நன்றி மாசி ..

     இன்றைய நிலைமை இவ்வாறு இருப்பினும் .. மக்களிடம் நம்மைப் போன்றவர்கள் எடுத்து செல்லும் கருத்துக்கள் தான் அரசாங்கத்தை கதி கலங்க வைக்க வேண்டும் .. அதற்காகத் தான் ம.க.இ.க. போன்ற அமைப்புக்கள் இயங்குகின்றன .. மக்களின் ஒருமித்த கருத்துக்கள் அர்ரசாங்கத்தை ஒரு நிமிடம் திகைக்க செய்யும் என்பது உறுதி .. அருந்ததி ராய் போன்றவர்களின் வெளிப்படையான எதிர்ப்புக்கு பின்னர் தான் .. பசுமை வேட்டை என்பது மீடியாக்கள் உருவாகிய பீடிகை என்று .. உதறல் எடுத்து ப. சிதம்பரம் கூறினான் .. எவ்வளவு நாள் துரோகி காந்தியின் போலி முகமான அகிம்சையை சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது .. அகிம்சையை போதிக்கும் அரசாங்கத்திடம் .. போலீஸ் எதற்கு ?.. அவர்கள் கையில் துப்பாக்கி எதற்கு ..?.. அரச பதவியில் உள்ளவன் உன்னை அடித்தால் நீ பொத்திக் கொண்டு இரு .. இது தான் அகிம்சையின் இலக்கணம் .. நீங்கள் சொன்ன அகிம்சை வழியில் பல வருடங்கள் உண்ணாவிரதம் இருந்து அரசாங்கத்தால் கட்டாய உணவு ஊட்டப்பட்ட பெண் “சானு சர்மிளா ” என்பவர் .. (உங்கள் மகாத்மாவை போன்ற போலி உண்ணாவிரதம் அல்ல ) . இன்றுவரை இந்திய அரசாங்கம் ஏதேனும் அவரது கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறதா ?.. http://www.iaws.org/assam-tribune-report-on-the-re-arrest-of-the-iron-lady-of-manipur.html

 4. By any standards we are being ruled by a group of men who have in normal standards “Failed to Make it”
  Most of School drop outs who are ineffectual takes to the profession of constables and become Inspectors or SPs.
  Most of those guys who reach graduation and ineffectual takes the law degree and they become Hon’ble Judges .
  Some ineffectual become Govt officials
  Most of those ineffectual guys who don’t make any become MPs and MLAs and become law makers.
  Clever among the rest of ineffectuals become traders and businessmen.
  The Law makers are CRIME Hungry
  They criminalize most of “civil wrong”and prescribe jail.
  eg. NI 138- Cheque bouncing is jailable.
  Non filing of IT returns is jailable.Non return of debt is jailable.
  Demanding Dowry is jailable.Any conduct by likely to cause danger to mental health (I repeat) “likely to cause danger to mental health” of wife is jailable.
  Delayed payment of statutory dues is jailable. and the list is endless better read IPC.
  The police is Arrest Hungry
  They first arrest you and then start investigating allegations of offence.
  They have discretionary powers to arrest just by filing an FIR.
  The Judges are Jail Hungry.
  For them freedom has no meaning.
  The mete out punishment on allegations by refusing bail.
  They think giving bail to an accused is great favor.
  They happily adjourn bail matters for days and months and either enjoy pleasure or extort favour or money
  Only the businessman or trader enjoy the fruits of the system.
  They treat their employees as slaves make huge money and they have perfected the art of Bribing and manipulate the society!!
  Intellectuals, common man, critics etc who undergo the torture are silent spectators.
  It is the poor man who has nothing more to loose take up law into hands and he either become a Goonda or a Maoist!!
  In Afghan there is a statutory Govt. andTalibans are illegal outfits.
  In India we have legal elected Taliban Governance!
  WE CALL IT DEMOCRACY!!!
  So encounters, Custodial killings and police or Govt induced murders are simply social service.
  In TN out of 1542 murders in 2009 543 murders reletes to adultery by women!!
  When the Courts take 15 years to grant Divorce is it is not normal for husbands whose wife is adulterous before his eyes to take the law in his own hands?

 5. அலுமினியத்தை மட்டும் தான் கடதுகிரார்களா ?
  ஒரு சிலையைவெளி நாட்டுக்கு கடத்தி கொண்டு போனால் ஒரே கூப்பாடு போடும் இந்த நாட்டில் இதை போல் எவளவு மூல பொருட்கள் கடத்தபடுகிரது…
  300  வருடமா வெளையன் கடதினத்தை விட 60 வருடமா காந்திய வாதிகள் கடத்தியது மிக அதிகம் ….
  கோதுமை ,பாசுமதிஅரிசி ,பருத்தி ,தேயிலை ,ரப்பர் ,ஆடு ,கோழி ,முட்டை ,தோல் இன்னும் பல உலோக பொருட்களும் பிசினஸ் என்ற போர்வையில் கடத்தபடுகிரது .
  சிலையை கடத்துபவன் திருடன் மூல பொருட்களை கடத்துபவன் பிசினஸ் மேன்.என்ன சமூகம் இது .
  1) நம் நாட்டில் எதனை குழந்தைகள் செருப்பு இல்லாமல் பள்ளிக்கு செல்கிறார்கள் இவர்களுக்கு தோல் ஏற்றுமதியை நிறுத்தி இவர்களுக்கு நல்ல காலணிகள் கிடைக்க செய்ய வேண்டும் .
  2) நாம் உடுத்தும் அணைத்து ஆடைகளும் வெறும் சக்கைதான் .உயர்தரமான ஆடைகள்(பருத்தி ) ஏற்றுமதியை தடை செய்து .நாம் மேலை நாட்டினரை விட உயர்தரமான ஆடைகளை அணிய வேண்டும் .
  3)ஒரு ரூபாய் அரிசிக்கு அடித்து கொண்டு நாறாமல் உயர்தரமான பாசுமதி ஏற்றுமதியை தடை செய்து ,நாம் அனைவரும் உயர்தரமான அரிசியினால் செயப்பட்ட உணவை உட்கொள்ளவேண்டும் .
  4)தகவல் தொழில் நுட்ப்ப தகவல்களை பெரும்பாலான IT துறையினர் டாலர் என்ற போர்வையில் ஏற்றுமதி செய்கிறார்கள் .நமுடைய சிந்தனைகளை நம் நாட்டு வளங்களை முன்னேற்ற மட்டுமே பயன் படுத்த வேண்டும் .
  ஒவ்வரு துறையிலுள்ள உழைக்கும் மக்கள் நக்சல் சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் .
  வாழ்க நக்சல் இயக்கம் …. 

 6. ஆதிவாசிகள் பேராசை அற்ற அப்பாவிகள். கோடிகளில் நிலத்தை விற்று சொகுசாக வாழ தெரியாமல் அல்லல் படுகிறார்கள். வெள்ளையனே வெளியேறு இயக்க மறு பதிப்பாக தேவையின்றி போராடி சாகிறார்கள். உங்கள் முதல்வர் செய்தது போல இலவச தொலைகாட்சி பெட்டி( கவலையை மறக்க ), ஒரு ரூபாய் அரிசி, கடன் தள்ளுபடி செய்து உழைத்து பிழைக்கும் சித்தாந்தத்தில் இருந்து இவர்களை மாற்றினால், நிலமும் எளிதாய் கையகப்படும். எங்கள் உயிரும் பாதுகாக்கப்படும் என C R P F அதிகாரி சமீபத்தில் ஒரு பேட்டியில் புலம்பியுள்ளார்.

 7. மேலே இட்ட சுட்டியில் ஊடகத்தின் corporate தன்மையும், அருந்ததி ராய் அவர்களின் நிதானமான தீர்கமான பதிலும் ஒருங்கே
  வெளிப்படுகின்றது

 8. Again Vinavu You are doing a great job and I too came across this article in IE,..The credentials of our Home Minister are highly doubtful . This begins the way he conducted himself during counting which declared him defeated and eventually he was declared WON !. There is a MYTH spread by MEDIA he is very efficient in every portfolio he handles WHICH IS NOT TRUE!.When he was the finance mininster he reduced the PF interest from 12% to 8%,.He suggested investing the PF money in stock market which would have ruined millions of families ! HE IS TOTALLY INEFFICIENT AND UNFIT TO REMAIN AS EVEN AS A MINISTER WITH NO PORTFOLIO! A good driver cannot be a good cook ; Neither he is a good driver nor a good cook,..

  Vinavu there is one more article which appeared on IE by GS VASU the Hyderabad Editor of IE regarding the human side of the naxal problem,.Pl get it translated and post it for reaching masses,..

 9. பஞ்சாப் ரவி,  ஜி எஸ் வாசு வின் கட்டுரை வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் தேதி ?

 10. மாவோவாதிகள், நக்சல்களை கொலைகாரர்கள் போலும், இரக்கமில்லா வன்முறையாளர்கள் போலும் தங்களில் பதியனிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சில கேள்விகளை தயாரித்து தந்திருக்கிறது இந்தக் கட்டுரை. சிந்திப்பவர்கள் உண்டா?

  செங்கொடி 

 11. ஆப்பிரிக்க‌ வ‌ள‌ங்க‌ளை,
  ஐரோப்பிய‌ர்க‌ள், இப்ப‌டித்தான்
  அதை ஆள்ப‌வ‌ர்க‌ளுட‌ன்,
  பேர‌ம் பேசி `க‌வ‌னித்து` விட்டு,
  நாடு முழுவ‌தையும் கொள்ளை
  அடித்து, ம‌க்களை புழுக்க‌ளாக்கினார்க‌ள்.
  இப்போது, இந்தியாவை
  ஆள்ப‌வ‌ர்க‌ளும், வேதாந்தா,
  மான்சொன‌ட்டாக்க‌ளிட‌ம்,
  சோர‌ம் போய், அவ‌ர்க‌ள் மட்டும்
  குபேர‌ர்க‌ளாக‌, ம‌ற்ற‌ ம‌க்க‌ள்
  எல்லாம் கோவ‌ணான்டிக‌ளாக‌வும்
  எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் மாவோஸ்டாக‌வும்
  ஆக்க‌ப்ப்டுவார்க‌ள்.

 12. இலக்கிய சிந்தனை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி நல்ல சிறுகதைகளுக்கு மாதம் தோறும் பரிசுகள் வழங்கிக்கொண்டிருந்த இந்த ப.சிதம்பரம் இன்று இந்தியாவையே ஒரு சரக்காக்கி அந்நியனுக்கு பரிசாகத் தரத் துடிக்கிறார்.அதில் அவருக்குப் பெரும் பங்கு இருக்கிறது.ஒருவேளை தண்டேவாடா காடுகளில் பூதமாகி காவல்காக்கும் வாய்ப்பு அவரது ஆன்மாவுக்கு ஆதிவாசி மக்களால் அல்லது இந்திய ராணுவத்தால் தரப்படலாம்!அதனால் கார்த்தி மகிழ்ச்சியடையலாம்.தேசப் பற்றாளர்களுக்கு என்னவோ வருத்தம் தான்!

 13. தோழர் பஞ்சாப் ரவி தெரிவித்தபடி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆந்திரா ஆசிரியர் திரு வாசுவின் “இந்தியாவின் மோசமான அச்சுறுத்தல்” என்ற கட்டுரை மிக அருமை அதன் மொழிபெயர்ப்பு விரைவில் இந்த தளத்தில் வரும் 

 14. மேற்குறிப்பிட்ட அனைத்தும் சரியானவை, பழங்குடியின மக்கள் ஆயுதம் மட்டும் ஏந்தவில்லை என்றால், இந்த அரசு இந்தியாவையே கூறுபோட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கு வித்து தின்னு இருப்பானுங்க, அந்த மக்களுக்கு நாம் ஆதரவு தான் கொடுக்கணும் தவறா விமர்சிக்க கூடாது.

 15. If these maoist declare that any one working as Labour for Vedanta will be KILLED and if they start killing them, obviously Vendanta cannot start/run those extraction. Is it not? For how many such civilian labourers/family the Govt can give protection? and how long? I feel its much easier rather than fighting againt Police/Army. don’t say we cannot kill innocent labourers, I dont agree. If someone is ready to work for this type of ‘scandal’, nothing wrong in killing FEW OF them.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க