முகப்புபாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?
Array

பாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?

-

vote-012

ரோமன் கத்தோலிக்க மதத்தலைவரான போப்பாண்டவர் 16ஆம் பெனடிக்ட், போப்பாண்டவர் பதவியில் இருந்து விலக வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கூக்குரல்கள் தற்பொழுது உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. போப்பாண்டவருக்கு ஆதரவான வாதங்களும், எதிர் வாதங்களும் அமெரிக்க ஊடகங்களிலும், ஐரோப்பிய ஊடகங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. தற்போதைய போப்பாண்டவரான பெனடிக்ட் இதற்கு முன்பு கார்டினலாக இருந்த பொழுது பல கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்களின் பாலியல் வன்முறைகளை மூடி மறைத்தார் என்றும், அதில் ஈடுபட்ட பல கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

_______________________________________

போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் இயற்ப்பெயர் ஜோசப் ராட்சிங்கர். இவர் போப்பாண்டவர் பதவிக்கு வரும் முன்பு கார்டினலாக பணியாற்றி இருக்கிறார். கார்டினலாக இருந்த பொழுது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வாடிகன் அதிகாரியாகவும் (Leader of the Congregation for the Doctrine of the Faith) ராட்சிங்கர் பொறுப்பு வகித்தர். இதன் காரணமாக உலகெங்கிலும் நடக்கும் பல்வேறு பாலியல் அத்துமீறல்கள் குறித்த பிரச்சனைகளை நெறிப்படுத்தும் பொறுப்பும் ராட்சிங்கருக்கு இருந்து வந்துள்ளது. அவ்வாறு இருந்தும் ஒழுக்கம் தவறிய பாதிரியார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமில்லாமல் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள கத்தோலிக்க பாதிரியார்களை மிகவும் ரகசியமாகவே விசாரிக்க வேண்டும் என அனைத்து கத்தோலிக்கத் திருச்சபைகளுக்கும் ராட்சிங்கர் அனுப்பிய ரகசிய உத்தரவும் தற்பொழுது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. தன்னுடைய திருச்சபைக்கு களங்கம் நேராமல் காப்பாற்றவே வாடிகன் முனைந்ததே தவிர குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் வாடிகன் எடுக்கவே இல்லை. இதன் காரணமாக குற்றம் செய்த பாதிரியார்கள் எந்த தண்டனையும் இல்லாமல் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இத்தகைய குற்றங்களை செய்து வந்திருக்கிறார்கள்.

அதுவும் இத்தகைய பாலியல் வன்முறை யார் மீது தொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா ? குழந்தைகளின் மீது. ஆம், பத்து வயது கூட நிரம்பாத சிறுவர்களையும், சிறுமிகளையுமே தங்களுடைய செக்ஸ் வக்கிரத்திற்கு இந்தப் பாதிரியார்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். Pedophiles எனப்படும் குழந்தைகளை பாலியலுக்கு உட்படுத்தும் பாலியல் வல்லூறுக்கள் தான் இந்தக் கத்தோலிக்க கிறுத்துவ பாதிரியார்கள்.

கத்தோலிக்கத் திருச்சபைகள் உலகெங்கிலும் பல்வேறு அனாதை ஆசிரமங்களையும், குழந்தைகளுக்கான காப்பகங்களையும் நடத்தி வருகிறது. இத்தகைய காப்பகங்களிலும், பள்ளிகளிலும் இருக்கும் சிறார்களின் மீது பாலியல் வன்முறைகள் தொடுக்கப்படுவதாக பலக் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. இந்தக் குற்றங்களை போப்பாண்டவர் பதவிக்கு வருவதற்கு முன்பு தற்போதைய போப்பாண்டவர் மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டே தற்பொழுது எழுந்துள்ளது.

வழக்கம் போல போப்பாண்டவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக வாடிகன் கூறியுள்ளது. போப்பாண்டவருக்கு இத்தகையக் குற்றங்கள் நடந்தது தெரியாது என வாடிகன் பிரச்சனையை பூசி மொழுக முனைகிறது. இதை விட வேடிக்கை என்னவென்றால் வாடிகனைச் சேர்ந்த ஒரு உயரதிகாரி போப் மீதான குற்றச்சாட்டினை யூதர்கள் மீதான வெறுப்புடன் (Antisemitism ) ஒப்பிட்டுள்ளதும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதனை பல யூத அமைப்புகள் கண்டித்துள்ளன. பல யூதர்கள் கொல்லப்பட காரணமான யூதர்கள் மீதான வெறுப்பினை (Antisemitism ) தற்போதைய போப் மீதான வெறுப்பாக கட்டமைக்க முனைவது வேடிக்கையானது. வாடிகன் தற்போதையப் பிரச்சனையை எவ்வாறு கையாளுவது என குழம்பிப் போய் உள்ள சூழ்நிலையையே இது வெளிப்படுத்துகிறது.

எப்படி எழுந்தது இந்தக் குற்றச்சாட்டு ?

கத்தோலிக்கத் திருச்சபைகளின் மீதான இந்தக் குற்றச்சாட்டு புதியது அல்ல. பல்வேறு நாடுகளில் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் எழுப்பப் பட்டிருக்கின்றன. தற்போதையக் குற்றச்சாட்டு கடந்த காலங்களில் நடந்த குற்றங்களை ஒட்டியே எழுந்திருக்கிறது. குறிப்பாக அயர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடந்த காலங்களில் நடந்த பாலியல் குற்றங்களே தற்போதைய குற்றச்சாட்டிற்கும் காரணமாக உள்ளது.

அயர்லாந்தில் நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் பல்லாயிரம் குழந்தைகளை பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பல்வேறு விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அது போல அமெரிக்காவிலும் பல்வேறு குற்றாச்சாட்டுகள் கத்தோலிக்க திருச்சபைகள் மீது வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இத்தகைய எந்தப் பாதிரியார்களும் தண்டிக்கப்படவே இல்லை.

ஏன் தண்டனை இல்லை ?
கத்தோலிக்க வாடிகன் தலைமைக்கு இந்தக் குற்றங்கள் தெரியாதா ?

கத்தோலிக்கத் தலைமைக்கு இந்தக் குற்றங்கள் தெரியும். ஏனெனில் திருச்சபைகளில் நடக்கும் ஒவ்வொரு பாலியல் குற்றங்களும் வாடிகனுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நெறிமுறை உள்ளது. ஆனால் இந்தக் குற்றங்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என வாடிகன் அஞ்சியது. இதனால் இந்தக் குற்றங்களை மூடி மறைக்க கத்தோலிக்கத் திருச்சபை முனைந்தது. இத்தகையக் குற்றங்களை மூடி மறைக்க தனி நெறிமுறைகளையே வாடிகன் வகுத்துள்ளது.

1962ல் வாடிகன் ஒரு ரகசிய ஆணையை பிறப்பித்து உள்ளது. இதன் பெயர் Crimen Sollicitationis. இதன் படி கத்தோலிக்க பேராயர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழும் பொழுது அந்தக் குற்றங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குற்றங்கள் குறித்து வெளியில் எதுவும் பேசக் கூடாது என்பதும் ரகசிய உத்தரவாகும். பாலியல் குற்றம் செய்தவர், பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானவர்கள், குற்றத்தைக் கண்ட சாட்சிகள் என அனைவரும் இந்தச் சட்டத்தின் படி பாலியல் குற்றம் குறித்த ரகசியத்தை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு ரகசியத்தை கடைப்பிடிக்காவிட்டால் கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து நீக்கப்படுவார்கள் (excommunication). திருச்சபையில் இருந்து நீக்கப்படுவது என்பது சில இடங்களில் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்றதுதான். இது குறித்த ஒரு பிபிசி ஆவணப்படத்தில் தனது ஐந்து வயது பேரனுக்கு நடந்த பாலியல் வன்முறையை வெளிப்படுத்தியமைக்காக தான் எவ்வாறு திருச்சபையில் இருந்தும், கிராமத்தில் இருந்தும் ஒதுக்கப் பட்டேன் என ஒரு மூதாட்டி விளக்குகிறார்.

பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட சிறார்கள் இந்தக் குற்றத்தைக் குறித்து வெளியில் பேசக்கூடாது என வரையறுத்த கத்தோலிக்கத் திருச்சபை, குற்றம் செய்த பாதிரியார்களுக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை. Pedophile என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். இந்தக் குற்றம் குறித்து வெளியே கூறக்கூடாது என்ற ரகசிய உத்தரவு இருந்ததால் இது போலீசாருக்கோ, உள்ளூர் அரசாங்கத்திற்கோ தெரியப்படுத்தப்படவே இல்லை. கத்தோலிக்கத் திருச்சபையின் இத்தகைய நெறிமுறை குற்றம் செய்தவர்களுக்கே சாதகமாக இருந்தது. காரணம் இத்தகைய குற்றம் செய்த பாதிரியார்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டனர். இதன் காரணமாக ஒரு இடத்தில் குற்றம் செய்த பாதிரியார்கள், வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக குற்றம் இழைத்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குழந்தைகளை பல நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பிரச்சனைக் குறித்து வெளியே கூறக்கூடாது என மிரட்டப்பட்டனர். பலர் பல ஆண்டுகள் இதனை வெளியே கூறவே இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது தான் பலர் தங்கள் மீது சிறு வயதில் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து கூறத் தொடங்கியுள்ளனர். இதில் எரிச்சல் ஊட்டும் வேதனையான உண்மை என்னவென்றால் கத்தோலிக்கத் திருச்சபை இத்தகைய பாலியல் குற்றங்களை ஒரு பாவமாகவும், பாவத்திற்கு மன்னிப்பாக பாவமன்னிப்பையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியுறுத்தி வந்துள்ளது. இதனால் குற்றம் செய்த குற்றாவளிகளான பாதிரியார்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பல சிறார்களை தொடர்ந்து தங்கள் காமவெறிக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

பாலியல் குற்றம் தொடர்பாக அமெரிக்காவில் தேடப்படும் சில பாதிரியார்கள் அமெரிக்காவை விட்டு தப்பி வாடிகனில் அல்லது ரோமில் சுதந்திரமாக திரிவதாக கூட ஒரு தொலைக்காட்சியில் கூறப்பட்டது. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

இந்தக் குற்றங்களை கடந்த காலங்களில் பல ஊடகங்கள் வெளியிட்டு இருந்தாலும் வாடிகனின் போக்கில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. 2006ல் பிபிசி இந்தக் குற்றங்களைச் சார்ந்து ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டு உள்ளது. அந்த ஆவணப் படத்தில் ஒரு பாதிரியார் செய்த குற்றங்கள் குறித்து விவரிக்கப்படுகிறது. குற்றம் செய்த பாதியாரின் பெயர் டார்டிசியோ. முதன் முதலில் 1991ம் ஆண்டு இவர் செய்த பாலியியல் குற்றம் பிரேசிலில் வெளியாகி உள்ளது. ஆனால் இவர் மீது எந்த நடவடிக்கையையும் வாடிகன் எடுக்க வில்லை. மாறாக அவரை வாடிகன் இடமாற்றம் மட்டுமே செய்துள்ளது. இவர் இடம்மாறிய இடங்களில் எல்லாம் இத்தகைய குற்றங்களை தொடர்ச்சியாக செய்துள்ளார். இவர் குற்றம் செய்வதும், இடமாற்றம் செய்யப்படுவதுமாக நிலைமை இருந்துள்ளது. இவ்வாறு சுமார் நான்கு முறை இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இறுதியாக 2005ல் இவர் போலீசாரால் பிடிபட்ட பொழுது தான் இவர் பற்றிய விபரங்கள் வெளியுலகுக்கு தெரிய வந்தது. இந்தப் பாதிரியார் எழுதியுள்ள டைரியில் ஏழு வயது முதல் பத்து வயதிற்குட்பட்ட ஏழை மற்றும் பெற்றோர் இல்லாத அனாதைக் குழந்தைகளையே இவர் தன் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.

பாதிரியார்கள் செய்த குற்றத்திற்கு போப்பாண்டவர் பெனடிக்ட் பொறுப்பாக முடியுமா ?

தற்போதைய போப்பாண்டவர், இந்தப் பதவிக்கு வரும் முன்பு திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வாடிகன் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். இதன் காரணமாக உலகெங்கிலும் நடக்கும் பல்வேறு பாலியல் அத்துமீறல்கள் குறித்தப் பிரச்சனைகளை நெறிப்படுத்தும் பொறுப்பும் ராட்சிங்கருக்கு இருந்து வந்துள்ளது.

இவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தும், குழந்தைகளை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய பாதிரியார்களை நெறிப்படுத்தும், ஒழுங்குப்படுத்தும், தண்டிக்கும் எந்த நடவடிக்கையையும் ராட்சிங்கர் எடுக்கவில்லை. மாறாக 2001ல் ராட்சிங்கர் ஒரு ரகசிய உத்தரவை பிறப்பித்து உள்ளார். அதன் படி பாதிரியார்கள் திருச்சபைகளில் செய்யும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட எல்லா செக்ஸ் குற்றங்களையும் மிகவும் ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்ற உத்தரவை மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். அதாவது 1962ல் இருந்த உத்தரவை மிகவும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதே அவரது ரகசிய உத்தரவு. இவ்வாறு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிமென் (Crimen) எனப்படும் ரகசியத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வலியுறுத்திய ராட்சிங்கர் இத்தகைய குற்றங்களை தடுக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அது மட்டுமில்லாமல் பாலியல் குற்றம் தொடர்பான ஒவ்வொரு குற்றத்தையும் வாடிகனுக்கு அனுப்ப வேண்டும் என்பதும், அவை வாடிகனின் நேரடிப் பார்வைக்கு வர வேண்டும் என்பதும் அவரது ஆணை. ஆனால் வாடிகனுக்கு அனுப்பப்பட்ட எந்தக் குற்றத்தின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போப்பாண்டவர் பெனடிக்ட் தான் கத்தோலிக்கத் திருச்சபைகளில் நடந்த எல்லா குற்றங்களுக்கும் முழு பொறுப்பேற்க வேண்டியவராகிறார்.

போப்பாண்டவர் பெனடிக்ட் மீது இத்தகைய குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பாலியல் அத்துமீறலில் போப்பாண்டவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களைக் கடந்த மாதம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டதை தொடர்ந்தே போப்பாண்டவர் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கி உள்ளன. கார்டினலாக பணியாற்றுவதற்கு முன்பு ஜெர்மனியில் பேராயராக பணியாற்றிய பொழுதும் ராட்சிங்கர் பாலியல் குற்றங்களை மூடிமறைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்தே தற்போதைய போப்பாண்டவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் குறித்து பிபிசி தமிழோசை இணையத்தளம் பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் முன்பு கேட்கும் திறன் அற்ற கிட்டத்தட்ட 200
சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தொடர்பாக தனக்கு என்னென்ன தெரியும் என்பதை உலகுக்கு வெளியிட வேண்டும் என்ற குரல்களை தற்போது போப்பாண்டவர் பெனடிக்ட் எதிர்கொண்டுவருகிறார்.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்த சிறார்களை திட்டமிட்டு தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி உட்படுத்திவந்திருந்தார். இந்த துஷ்பிரயோகம் குறித்து லாரன்ஸ் மர்ஃபிக்கு மேலேயிருந்த திருச்சபை அதிகாரிகள் 1990களின் மையப் பகுதியில் அப்போது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வத்திகான் அதிகாரியாக இருந்த கார்டினல் ராட்ஸிங்கருக்கு இரண்டு முறை கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்படுகிறது.

போப்பாண்டவர் மீதான குற்றச்சாட்டு

பிற்பாடு போப்பாண்டவராக உருவெடுத்தவரான கார்டினல் ராட்ஸிங்கர் அக்கடிதங்களுக்கு பதில் எழுதியிருக்கவில்லை. பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி தனது கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவர் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கவில்லை. போப்பாண்டவர் பெனடிக் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று விமரிசகர்களும், துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தவர்கள் பலரும் கூறுகின்றனர். திருச்சபைக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த விஷயத்தை மூடி மறைக்க நடந்த முயற்சிகளில்
போப்பாண்டவருக்கும் பங்கிருந்தது என்று கூட அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிபிசியில் விடுபட்டுப் போன ஒரு தகவல் – பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி நேரடியாக ராட்சிங்கருக்கே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதே சுமார் 200 காது கேளாத குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபியின் வேண்டுகோள். அதற்கு ராட்சிங்கர் என்ன விடை அளித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்த லாரன்ஸ் மர்ஃபிக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இறுதி காலம் வரை பாதிரியாராக இருந்து லாரன்ஸ் மர்ஃபி 1998ல் இறந்திருக்கிறார். இந்தத் தகவல்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவில் வெளியான குற்றச்சாட்டினை தொடர்ந்து ஜெர்மனியிலும் ராட்சிங்கர் பாலியல் குற்றங்களை மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டும் தற்பொழுது வெளியாகி உள்ளது. பாதிரியார் ஹல்லர்மேன் ஜெர்மனியைச் சேர்ந்தப் பாதிரியார் ஆவார். இந்தப் பாதிரியார் பாலியல் குற்றம் செய்ததான ஒரு பிரச்சனை 1980ல் எழுந்தது. அப்பொழுது அங்கு பேராயராக இருந்தவர் ஜோசப் ராட்சிங்கர். ஒரு 11 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் பாதிரியார் ஹல்லர்மேன். பேராயராக இருந்த ஜோசப் ராட்சிங்கர் இந்தப் பாதிரியாரை முனிச் நகரத்திற்கு இடமாற்றம் செய்திருக்கிறார். ஆனால் பாலியல் குற்றம் குறித்து போலீசாருக்கோ, அரசாங்கத்திற்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இடமாற்றம் செய்யப்பட்ட பாதிரியார் இடம் மாறிய இடத்திலும் தொடர்ந்து பாலியல் வன்முறை செய்துள்ளார். இவ்வாறு இவரது பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றாலும் இவர் மீது கத்தோலிக்கத் திருச்சபை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது மட்டுமல்ல, இவர் தொடர்ந்து குழந்தைகளுடன் பணியாற்றவும் அனுமதித்து இருக்கிறது. இறுதியாக 1986ல் இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு நடந்தும் அவர் பாதிரியார் பொறுப்பில் இருந்து விலக்கப்படவில்லை, கடந்த மாதம் இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியான பிறகே பாதிரியார் பொறுப்பில் இருந்து ஹல்லர்மேன் நீக்கப்பட்டார்.

இவையெல்லாம் போப்பாண்டவர் எத்தகைய பொறுப்புடன் இந்தப் பிரச்சனையை அணுகியிருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?

போப்பாண்டவர் பல்லாயிரக்க்கணக்கான குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பாதிரியார்களின் குற்றங்களை மூடி மறைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் இந்தக் குற்றங்கள் குறித்த தகவல்கள் திருச்சபையை விட்டு வெளியில் செல்லாத வண்ணம் பாதுகாத்து மறைத்துள்ளார். அதற்கான உத்தரவுகளை பிறப்பித்து இந்தக் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற ”மறைமுக” காரணமாக இருந்துள்ளார். Pedophile என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். அந்தக் குற்றத்தை மறைப்பதும், உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றமே ஆகும். அந்த வகையில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை தங்களின் காமப்பசிக்கு இரையாக்கிய பாதிரியார்களை பாதுகாத்த போப்பாண்டவர் மிக மோசமான குற்றம் செய்த ஒரு கிரிமினல் என்ற குற்றச்சாட்டு உலகின் பல்வேறு நாடுகளில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த வாதங்களில் இருக்கும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது. போப்பாண்டவர் பாலியல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு கிரிமினல் குற்றவாளி என்ற வகையில் அவர் போப்பாண்டவர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

போப்பாண்டவரை கைது செய்ய முடியுமா ? அது நடைமுறையில் சாத்தியமா ?

போப்பாண்டவர் கிறுத்துவ மதத்தலைவர் மட்டுமல்ல. வாடிகன் என்ற நாட்டின் தலைவரும் ஆவார். இந் நிலையில் அவரை கைது செய்வது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஆனால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் கற்பழிப்பிற்கு காரணமாக இருந்ததன் மூலம் மனித குலத்திற்கு எதிரான செயல்கள் புரிந்தவர் என்ற வகையில் அவரை கைது செய்ய முடியும் என சில பத்திரிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். போப்பாண்டவர் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அப்பொழுது அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இதற்கான சட்டரீதியிலான முயற்சியில் சில வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இவையெல்லாம் நடைமுறைச் சாத்தியம் அற்றது. என்றாலும், கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறையில் சாத்தியமானதா என்பதைக் கடந்து தார்மீக நோக்கிலே சரியான கோரிக்கையாகவே உள்ளது. எனவே போப்பாண்டவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தொடர்ந்து எழுப்பியாக வேண்டிய சூழ்நிலையே தற்பொழுது உள்ளது.

************

மதங்கள் மக்களை மடையர்களாக்கவும், அடிமைகளாக்கவுமே உருவாக்கப்பட்டதாக தந்தை பெரியார் கூறுகிறார். மதத்தை புனிதத் தன்மை மிக்கதாகவும், மதவாதிகளை புனிதர்களாகவும் சமுதாயத்தில் கட்டமைத்து உள்ளனர். ஆனால் இந்த மதவாதிகளே பல்வேறு கிரிமினல் வேலைகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இது எல்லா மதங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. மதத்தலைவர்கள் செய்த பல்வேறு பாலியல் வன்முறைகள், எல்லா நாடுகளிலும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு வெளிவந்தும் மதத்திற்கு புனித வட்டம் கட்டும் பணி எப்பொழுதும் நிற்பதில்லை. நித்தியானந்தாவின் பாலியல் வீடியோ காட்சிகள் வெளியான பொழுது ஹிந்து மதத்தின் புனிதத்தை அழிக்க முனைவதாக ஹிந்துத்வா கும்பல் அலறியது. ஹிந்து மதத்தின் ஆணிவேராக புனித வட்டம் கட்டப்பட்ட காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகியோரின் கிரிமினல் வேலைகளும், பாலியல் குற்றங்களும் கடந்த காலங்களில் வெளிவந்திருக்கின்றன. ஹிந்து மத சாமியார்கள் தொடங்கி கிறுத்துவ பாதிரியார்கள், போப்பாண்டவர் வரை எல்லோருமே பல்வேறு கிரிமினல் செயல்களை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்களை பாதுகாத்து புனித வட்டம் கட்ட முனைவர்களும் தங்களின் பணிகளை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர். மக்களின் ஞாபக மறதி மட்டுமே வாழையடி வாழையாக தொடர்ந்து மதத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

___________________________________________________

– தமிழ் சசி

தமிழ் சசியின் வலைப்பூ முகவரி: http://www.tamilsasi.com/

(தோழர் தமிழ் சசி எழுதிய இந்தக் கட்டுரையை, அவரது அனுமதியோடு,  நன்றியுடன் வெளியிடுகிறோம்)

vote-012

தொடர்புடைய பதிவுகள்:

 1. போப் என்ற பதவியை தூக்க வேண்டுமென்று முதல் ஓட்டு போடுகிறேன்!
  குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மனநோயாளிகள் அவர்களுக்கு முதலில் தேவை மனநல சிகிச்சை!

  • வால்பையன், குழந்தைகளை பாலியல் வன்முறை செய்பவர்களை அதுவும் அனாதை ஆசிரம் நடத்தி செய்யும் பாதிரியார்களை கிரிமனல்கள் என்றே அணுகவேண்டும். இவர்களது மற்ற நடவடிக்கைகள் எல்லாம் முறையாக நடந்து கொண்டிருக்கும் போது தனது பாதிரியார் எனும் புனித இருப்பைப் பயன்படுத்தி சிறார் மீதான பாலியல் வன்முறை செய்கிறார்கள். எனவே முதலில் இவர்களுக்கு தேவை தண்டனை என்று கருதுகிறோம். சமூகத்தில் நடக்கும் இத்தகைய கொடுமைகளைக்கூட இப்படித்தான் அணுகுவது சரியாக இருக்கும். விதிவிலக்காக ஒரிருவர் வேண்டுமானால் மனநோயாளிகளாக இருக்கலாம். டாக்டர் ருத்ரன் இதைப் பற்றி என்ன கருதுகிறார் எனத் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

   • //குழந்தைகளை பாலியல் வன்முறை செய்பவர்களை அதுவும் அனாதை ஆசிரம் நடத்தி செய்யும் பாதிரியார்களை கிரிமனல்கள் என்றே அணுகவேண்டும். //

    அடிப்படையில் செக்ஸே பிரச்சனை, புறவாழ்வில் செக்ஸ் மறுக்கப்படும் போது எதிர்ப்பு குறைவாக இருக்கும் குழந்தைகளுடன் பிரயோகிக்கிறார்கள்!, இதனால் குழந்தைகளும் மனரீதியாக பாதிக்கப்பட கூடும்!, தற்போது அது கிரிமினல் குற்றமாக இருந்தாலும் பெரும்பாலோர் குற்றம் சுத்த வருவதில்லை என்பது தான் தமிழகத்தில் உண்மை!, மைகேல்ஜாக்சன் மாதிரியான ஆட்களிடம் பணம் நிறைய கிடைக்கும், ஆனால் வெள்லை அங்கியிடம் என்ன கிடைக்கும்!, முதலில் குழந்தைகளை தேற்ற செய்ய வேண்டும், முட்டாள் பெற்றோர்கள் பேரம் பேசி கொண்டிருப்பார்கள்!, இது என் கருத்து மட்டுமே!, டாக்டர் கருத்தை அறியா நானும் ஆவலாக உள்ளேன்!

    • வால்பையன், ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் செக்ஸ் உணர்வை தாயகம் செய்கிறார் என்பதில்தான் புனிதம் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு எதுவும் மறுக்கப்படவில்லை. அவர்களாகவே ஒளிவட்டத்திற்காக மறுக்கிறார்கள். பின்பு அதே ஒளி வட்டத்தை வைத்து மீறவும் செய்கிறார்கள். அதுவும் பெரியவர்களிடம் செய்தால் மாட்டிக் கொள்வோம் என்பதால் குழந்தைகளிடம். எனவே இவர்களை கிரிமினல்களாக நடத்துவதுதான் சரி.

     திருமணத்திற்காக சமூகம் விதித்திருக்கும் வயது, வேலை, வருமானம் போன்றவைகளுக்காக எல்லோரும் இத்தகைய மறுப்பை குறிப்பிட்ட வயது வரை ஏற்கிறோம். அதனால்தான் ஒருபெண்ணை பாலியல் வன்முறை செய்யும் அயோக்கியனை தண்டிக்க வேண்டும் என்பதை மக்கள் ஏற்கிறார்கள்.

     குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பெரும்பாலும் பதிவு செய்யப்டுவதில்லை என்பது உண்மைதான். அத்தகைய குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனை வேண்டும் என்பதும் சரியே.

     அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பாலியல் வன்முறை செய்த பாதிரியார்களைக் காப்பாற்றுவதற்காக கத்தோலிக்க திருச்சலை பெரும் டாலர் பணத்தை நிவாரணமாக வழங்கியிருக்கிறது. இவற்றில் பல நீதிமன்றத்திற்குவெளியே பஞ்சாய்த்து செய்து தீர்க்கப்பட்டிருக்கிறது. வெள்ளை அங்கிகளை வைத்திருக்கும் திருச்சபை பெரும் பன்னாட்டு நிறுவனம் பல பல பில்லியன் டாலருக்கு சொத்தும், வருமானமும் உள்ளது.

   • //பாதிரியார் எனும் புனித இருப்பைப் பயன்படுத்தி சிறார் மீதான பாலியல் வன்முறை செய்கிறார்கள். எ//

    அதிகார பலமே இவர்களை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது.

 2. அட .. போங்க வினவு … இந்த இஸ்லாம் மதக்காரனுங்க .. கிருஸ்துவ மதக்காரனுங்க இந்து மதக்காரனுங்க , இவனுங்களுக்கு எல்லாம் புத்தியே வராது ..செருப்புல சாணி , மனிதக் கழிவு எதை முக்கி ஒன்றை வாயில் திணித்து இன்னொன்றை .. வைத்து உச்சந்தலையில் அடித்தாலும் புத்தி வராது … இங்கு ஹிந்து சம்மந்தமாகவோ , கிறிஸ்துவம் சம்மந்தமாகவோ இஸ்லாம் சம்மந்தமாகவோ .. பதிவுகள் போடும் போது மூச்சு தெறிக்க விவாதிக்கும் இந்த முட்டாள்கள் மற்ற சமூக பிரச்சனைகளுக்கு ஏதேனும் ஒரு பதிவு செய்திருப்பார்களா ?..
  இந்த அறிவு செத்துப் போன அறிவிலிகளுக்கு உணர்த்துவதர்க்காக் நாம் எத்தனை பேரை அம்பலப் படுத்தினாலும் , இவர்களுக்கு உரைக்கப் போவதில்லை .. ஏன் எனில் இவர்களுக்கும் சுயமரியாதைக்கும் வெகு தொலைவு ,, நாம் நமது நேரத்தை விரயம் செய்கிறோமோ என்று தோன்று கிறது .. ஒருவன் இடுப்பெலும்பிலிருந்து படைத்தான் இறைவன் என்கிறான் .. இன்னொருவன் களிமண்ணிலிருந்து படைத்தான் என்கிறான் .. இன்னொருவனோ .. மந்திரம் போட்டுய் படைத்தார் என்கிறான் .. சரி ஏன்டா ஒரு இந்து கடவுளால் கிருச்தவனையும் இஸ்லாமியனையும் படிக்க முடிய வில்லை , அதே போல் இஸ்லாமியக் கடவுளும் , கிறிஸ்தவக் கடவுளும் , மற்ற இரண்டு மத மனிதனை படைக்க முடியவில்லை என்று கேட்டால் ..”பீ” ஜே விடம் பேசு , ராம(ஓப்)’கோ’பாலனிடம் பேசு , பா(பூ)ல் தினகரனிடம் பேசு என்று .. நடைகட்டி விடும் இந்த முட்டாள்களிடம் என்ன எடுத்து சொன்னாலும் இவர்களுக்கு புத்தி வரப் போவதில்லை ..
  சமூக அக்கறை இல்லாத மத வெறியர்களிடம் பேசி பலன் என்ன ?..

 3. எத்தனை கிருஸ்தவ முட்டாள்கள் இதற்கு சோம்பு துள்ளி வருவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் .. எதோ ஒரு எரிமலை அதிகமாய் முகையும் சாம்பலும் கக்குகிறதாம் .. இந்த பாதிரியாக்கள் , இஸ்லாமிய மதபோதகர்கள் ,இந்து மடாதிபதிகள் இவர்களில் யாராவது கடுமையாக தவமோ , இறைவளிபாடோ செய்து அணைக்க வேண்டியது தானே ?.. இல்லை … அந்த எரிமலையில் இந்து சாமியோ , இஸ்லாமிய சாமியோ , கிருஸ்துவ சாமியோ பொய் கொஞ்சம் எச்சில் துப்பி அணைக்கலாமே , எச்சிலில் அணைக்க முடியாது என்றால் .. சிறிது சிறுநீர் கழித்தாவது அணைக்கலாமே ?.. கேட்டால் .. கடவுள் நேரடியாக வந்து எதுவும் செய்ய மாட்டாராம் .. சரி .. வேறு எப்படி தான் செய்வார் என்று தெரிய வில்லை .. அவ்வளவு பெருசா கூட செய்ய வேணாம்பா உங்களது கடவுள் … தப்பு செய்யிற சாமியார் பயல்களுக்கு ஒரு கை கால் விளங்காமல் செய்ய வைக்க வேண்டியது தானே ?..

  • சரி, இந்த எல்லா முட்டாள்களும் உதவாக்கரைகள் என்றே வைத்துக்கொள்வோம்…’ஜெகத் தீ’ யான நீ என்ன கிழித்தாய் இந்த விஷயத்தில்? உன் நாத்திகவாதமும், கம்யுநிசமும் என்ன கிழித்தன ? ‘லொள் லொள்’ என்று நாய் போல் குறைப்பதைத் தவிர, வேறு என்ன செய்கிறீர்கள் நீங்கள் எல்லாம் ?

 4. //ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் செக்ஸ் உணர்வை தாயகம் செய்கிறார் என்பதில்தான் புனிதம் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது.//

  தியாகம் பண்றதா வெளியே தான் சொல்லிகனும், எல்லாம் கை வலிச்சே சாவானுங்க!, இயற்கை உணர்வை அவ்வளவு சீக்கிரமாக அடக்க முடியாது என்பது மதவாதிகளுக்கு இன்னும் புரியாமல் இல்லை, புனிதபிம்பம் கட்டமைக்கப்பட தான் இன்னும் வேடம்!

  குழந்தை பாலியலில் பல வகை இருக்கின்றது, வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது நிச்சயமாக கிரிமினல் குற்றம், சில பெருசுகள் மடியில் உட்கார வைத்து எழும்ப!? விடாமல் செய்வார்கள், இவையெல்லாம் பாலியல் வடிகால்கள் மனரீதியாக அவர்களுக்கு, மன்நல மருத்துவத்தின் ரிப்போர்ட் என்ன தெரியுமா? சில குழந்தைகளூக்கும் அதில் ஆர்வம் உள்ளது, அதனால் மறுமுறை அவர்களே விரும்பி செல்வார்கள்!

  வெள்லை அங்கி என்ன மாதிரி தப்பு பண்ணுச்சுன்னு தெரியல, தப்பு பண்ணவனுக்கு தண்டனை கொடுத்துட்டு மீதி இருக்குறவனை கவுன்சிலிங் அனுப்பி எல்லாத்துக்கும் கல்யாணம் பண்ணி வச்சிரனும், படிக்கிரது பைபிள் வசனம், அதுக்கு என்னாத்துக்கு அடியில பூட்டு, இஸ்லாம் இதில் பரவாயில்லை, ரம்ஜான் மாதத்தில் கூட நொன்பு முடிந்து செக்ஸ் வைத்து கொள்ளலாம்!, நான் கூட சிறி வயதில்(வீட்டின் உத்துதலில்) மாலை போட்டிர்ந்த போது கை அடித்திருக்கிறேன்!, செக்ஸ் என்பது பசி உணர்வு போல தான், கொலை குற்றம் மாதிரி மறைக்கபடுறதால தான் பாலியல் வன்முறைகள் அதிகமாக நடக்குது! இந்த கருத்துக்கு பலரிடம் மாற்று கருத்து இருக்கும்னு நினைக்கிறேன்!

  • இதனால்தான் புராட்டஸ்டண்ட் பாதிரியார்களும், வைணவ ஜீயர்களும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வைத்திருக்கிறார்கள். இதனால் திருமணம் செய்யும் சாமியார்கள் சும்மா இருப்பார்கள் என்று பொருளில்லை. அதுதால் இணைப்பிலுள்ள பரகால ஜீயரின் பொறுக்கித்தனங்களை காட்டுகிறது. கத்தோலிக்கப்பாதிரியார்களும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வெளிநாடுகளில் பேசப்படுகிறதா என்று தெரியவில்லை. அப்படி நிலைமை மாறினாலும் எல்லா வசதிகளும் இருக்கும் இந்த சாமியார்கள் மோசடி செய்யமாட்டார்கள் என்று எந்த உறுதியும் தர இயலாது.

   • தோழர் சொன்னது போல அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு தவறுகள் செய்யவும், தவறுகள் மறைக்கவும் ஏதுவாகிறது, சக மனிதனை தனக்கு கீழே பார்க்கும் எவனும் துணிச்சலாக தவறு செய்வான்! தலைவன் என்ற சொற்பதம் சொல் அனைத்தும் அழிக்கபடவேண்டும், அது பாதரியாராகவும் இருக்கலாம், அரசியல்வாதியாகவும் இருக்கலாம்!

    • புனிதன் என்கிற பட்டமும், வசதிகளும் அதிகாரங்களும்உள்ள இந்த சாமியார்கள் இந்தமாதிரியான காரியங்களில்ஈடுபடுவது ஆச்சரியமான ஒன்று அல்ல, 
     பெனடிக் தண்டிக்கபட வேண்டிய குற்றவாளி
     ஆனால் இது போன்ற குற்றங்கள் தடுக்கசாமியார்களுக்கு கட்டாய உழைப்பை கொடுக்க வேண்டும்தினசரி 8 மணிநேர உடலுழைப்பை கட்டாயமாக்க வேண்டும்,
     //இஸ்லாம் இதில் பரவாயில்லை//
     வால் பெரியவரே உங்கள் கருத்து சரியானதுஇஸ்லாமியர்கள் தகாத பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகநானும் கேள்விபட்டதில்லை,

     //இதனால் திருமணம் செய்யும் சாமியார்கள் சும்மா இருப்பார்கள் என்று பொருளில்லை.// 
     உண்மை !    உண்மை !     உண்மை ! 

  • “இஸ்லாம் இதில் பரவாயில்லை”….how can you say this Mr.வால்பையன், the great prophet himself has married a 6 year old young kid and how can they justify that…as far as i know today we call this type of person as child molester!!!

   Also he married his Daughter In Law (adopted son’s wife), he had crush on that girl and want to marry her but even in Saudi Arabia 1400 years before marrying DIL was prohibited so he came with an innovative solution that Allah has told him adoption is against god’s wish and married her without any opposition from his followers, how can an adoption become crime??? adoption is banned in Islam…

   One fine day Mohammed attacks a Jew’s tribe and kills the king, his son, and his Son In Law and takes captive of the princess and marries her, and the irony is he had first night with that poor girl on same night, can any one explain me how on earth any one can have sex with a poor girl who has lost her entire clan, father, brother and husband in day time and still grieving for their death…

   The beauty of Islam is it gave full freedom to men, you can do what ever you want in the name of Islam, also it gave full freedom for men in sex related issue because it knows very well where a man’s week point is, and women is just a pleasure object that is the reason they even allowed to have four wives at a time…so don’t praise a religion only for it’s full freedom in sex…

  • ஏனுங் ! கோவிச்சுகிட்டிங்ளா
   வயசுல பெரியவரா இருக்கறீங்களேன்னுதான பெரியவரேனு போட்டங்க
   எல்லாம் ஒரு சாலிதாங்ணா
   தப்பா இருந்தா மாத்திகிறங்

  • வால்பையன்

   ஈரோட்டி   ஊர்   முழுவதும்  கல்கி   பகவான்   குரூப்ஸ்   பேனர்   வைத்துள்ளார்களேஇதையெல்லாம்   கண்டித்து   ஒரு கட்டுரை இடுங்களேன்.

   • ஏற்கனவே எழுதிவிட்டேன் தோழரே!

    இந்த பெரியார் கழக மக்கள் என்ன செய்யுறாங்கன்னு தெரியல! , நான் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தை பேசி தடுத்து நிறுத்திட்டேன்! ஒரு சிலர் குழிக்குள் தான் விழுவோம்னு வீம்புக்கு வீணா போறாங்க!, ஞானமரபு, புண்ணாக்கு என்று உதார் விடுபவர்களை பார்த்தால் நாடு உருப்பட வாய்ப்பேயில்லை என்ற வருத்தம் மேலிடுகிறது! அதிலும் முக்கியமாக இன்றைய இளைஞர் நிலை மிகவும் மோசம்! , எதாவது செய்யனும்னு ஆர்வமா தான் இருக்கு!

 5. ஜகத்தீ சொல்வதுபோல மதம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சினிமா சார்ந்த பதிவுகளுக்கும் மறுமொழிகள் அதிகமாக வருவது போல் சமூக பிரச்சனைகளுக்கு வருவது இல்லை 

 6. இந்த சாமியார்களையெல்லாம் இந்திய பெருங்கடல் மையத்துக்கு கொண்டு போய் இவர்கள் அனைவரையும் பெரிய கல்லில் கட்டிபோட்டு கடலில் தள்ளிவிட வேண்டும் .

 7. பத்துக்கட்டளைகள், சொர்க்கம், நரகம் இதெல்லாம் அப்போ யாருக்கு? ஊருக்கு மட்டும் தானா? என்று என் பொதுப்புத்தி கேள்விகேட்கிறது.

  மரணம், சொர்க்கம், நரகம் என்று மனிதனுக்கு பயம் காட்டும் விடை தெரியா கேள்விகளுக்கு பதில் சொல்வது, மந்திர, தந்திர சித்து வேலை……குழந்தைகள், பெண்கள் வக்கிரங்களுக்கு பலி… அப்போ மதம் என்றால் என்ன? பொதுசனமான எனக்கு குழப்பமாக இருக்கிறது.

  • மதம் என்றால் உங்கள் பாதுகாப்பில் நான்கைந்து பெரிய காவாலிப் பயல்களும் .. பல நூறு சின்னக் காவாலிப் பயல்களும் .. உக்கார்ந்து தின்று வயிறும் செல்வமும் வளர்க்க பயன்படும் ஒரு இயந்திரம் ..

   சுருக்கமா சொல்லணும் நா .. ஒரு வர்க்கத்தால்(பார்பாரன்) , மற்றொரு வர்க்கத்தை (உழைக்கும் வர்க்கம் ) எளிதாக சுரண்டுவதற்காக இன்னொரு வர்க்கத்தால்(வியாபார , அரச வர்க்கம்) ஆதரிக்கப் பட்டு வளர்க்கப்பட்ட ஒரு ஜந்து .. தப்பித்து வாருங்கள் .. இல்லையேல் முழுங்கி விடும் ..

 8. பரலோக சாம்ராஜ்யத்தைக்காட்டி நமக்கு ஒழுக்க உபதேசம் செய்பவர்களுக்கு பரலோக நம்பிக்கை இருப்பதில்லை என்பது எத்தனை வலிய உண்மை
  செங்கொடி 

 9. வைணவ ஜீயர்களும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வைத்திருக்கிறார்கள்.

  ———————————————-

  அப்படியல்ல. திருமணமானவர்கள் ஜீயர் ஆக தடையில்லை.சந்நியாசம் பெற்றுக் கொண்டு ஜீயர் ஆக முடியும்.ஜீயர் என்பது மடத்தின் தலைமை பொறுப்பு என்பதும் எனவே அவர்கள் குடும்ப உறவுகளை தொடர முடியாது. அவர்களுக்கு சாவுக்கு பின் குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்ய முடியாது. மடத்து விதிகளின் படி அவை செய்யப்படும்.

  As an institution Church can be criticised and Pope should be questioned. But sexual exploitation of children is an issue that does not begin with priest or end with them. It is an issue that has wider ramifications.Often it is family members and persons known to the children who indulge in this. The church as an institution should do its best and should not sheild the
  guilty and should ensure that those who committ such crimes are punished and are made accountable. If you turn this i.e. sexual exploitation of children by priests as a campagin against christianity then your intentions are different. It is also a question of power and how institutional structures faciltate certain abuses and allow some to perpetuate their crimes and get away with that. Army, penal institutions are also prone to such/similar abuses.There had been Popes, Stalins and PolPots in this world. So before accusing church look at the record of your heroes and the communist parties and governments in human rights violations and cover ups.

 10. மதங்கள் மக்களை மடையர்களாக்கவும், அடிமைகளாக்கவுமே உருவாக்கப்பட்டதாக தந்தை பெரியார் கூறுகிறார்.
  ————————

  பெரியார் உளறியது உங்களுக்கு புனிதமான உண்மை. தி.கதான் அத்தகைய மடையர்களை உருவாக்குகிறது. தன கட்சியில் பெரியார் ஒரு போப் போல் சர்வாத்காரியாக இருந்தவர். தனக்கு மடையர்கள் போதும் என்று சொன்னவர்.

 11. //கத்தோலிக்கப்பாதிரியார்களும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வெளிநாடுகளில் பேசப்படுகிறதா என்று தெரியவில்லை. //
  இது இல்லை. ஏனெனில் இவர்கள் குருத்துவ பட்டம் வாங்கும்போது, அவர்கள் ஆண்மை உள்ளவர்களாகவும், பெண்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதும், அவ்வாறு இல்லாதவர்கள் குருத்துவ பட்டம் பெற முடியாது என்பதும், மேலும் குருத்துவ சடங்கில் தங்கள் சுக (திருமண சந்தோழங்கள் முதலானவை) கடவுளுக்கு காணிக்கையாக்கி விட்டுத்தான் சாமியார்கள் ஆகிறார்கள். இது கத்தோலிக்க திருச்சபையின் சட்டம்.

  மேலும், யார் யாரெல்லாம் சாமியார்கள் ஆகிறார்கள் என்றால், ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர்கள், நிறைய குழந்தையுள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள் ஆகியோர்தான் சாமியார்கள் ஆகின்றனர். ஏன் நான் ஒரு கிருத்துவ பள்ளியில்தான் படித்தேன். என்னோடு படித்தவர்கள் நிறைய பேர் சாமியாருக்கு (14 ஆண்டுகள்) சாமியாருக்கு படிக்க வேண்டும். இவர்களின் இந்த படிப்பு காலத்தில் நல்ல ஆங்கில புலமை, மற்ற மதங்களைப் பற்றிய தத்துவவியல் விசாரணை எல்லாம் உள்ளன என்பது ஒரு நல்ல விடயம். நிறைய கிருத்த்வர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதற்காக இந்த வகுப்பில் சேர்ந்து ஒரு 2 – 3 வருடங்களில் வெளியே வந்து விடுகின்றனர். இதிலும் மலையாள பாதிரியார்களின் டாமினேழன் அதிகம் உண்டு என்றும், ஜாதி மத வேறுபாட்டோடு இருக்கின்றனர் என்பதும் உண்மை. ‘தலித் குருமார்களை ஒடுக்கும் பிஷப் ஒழிக’ என்று இவர்களின் பல பிரசுரங்களை நான் படித்து உள்ளேன். கிருத்துவர்களிலேயே உள்ள தலித், வன்னிய கிருத்துவ ஜாதி வேறுபாடு இவர்களிடமும் உண்டு. விழுப்புரம் பக்கத்தில் நடந்த ஒரு வன்முறை – துப்பாக்கி சூடு வரை போனது நினைவில் இருக்கலாம்.

  கிருத்துவம், இஸ்லாமியம் எதுவுமே இந்து மததிலிருந்து விரட்டப்படும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றவில்லை. மாறாக அதன் கடுமையை கொஞ்சம் குறைக்கின்றன. அவ்வளவுதான். மதங்களை மறுப்பதுதான் இதற்கான ஒரே தீர்வு.

 12. //’லொள் லொள்’ என்று நாய் போல் குறைப்பதைத் தவிர,//

  அவர் சொல்வது உங்களுக்கு லொள் லொள் என்று கேட்டால், உங்க காதில் எதோ பிரச்சனைன்னு அர்த்தம்!, நாத்திகம் ஒன்றும் கிழிக்கவில்லை என்றால் இன்று உங்கள் முன் கணிணி கூட இருக்காது நண்பரே!

 13. கடவுள் மதம் ஆகியவற்றை ஒழிக்கவேண்டும் இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்

 14. மதத்தலைவர்கள், கடவுளின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு அரசாங்கத்தில் பெரும்பதவிகளில் இருப்பவர்களைக் சிறுபான்மையினரின்/பெறும்பான்மையினரின் ஓட்டு வங்கியைக்காட்டியே இந்த மாதிரி சமூகச் சீர்கேடுகளையும் செய்து கொண்டு இருக்கும் மதத்தலைவர்களுக்கு கோவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தண்டனை போன்றதொரு தண்டனை வழங்க வேண்டும்… இந்த மாதிரி வழக்குகள் காவல் நிலையத்திலோ , நீதிமன்றங்களிலோ இருக்கும் போதி சாதியைச் சொல்லி அந்த கிரிமினல்களை தப்பிக்க முயற்சிக்கும் கிரிமினல்களையும் வேரறுக்க வேண்டும்…

 15. ஒருவன் பாவ மன்னிப்பு கேட்பதற்க்காக பாதிரியாரிடம் சென்றான் பாதிரியாரை பனிந்து வணங்கி அய்யா நான் ஐந்து பெண்களின் வாழ்க்கையை கெடுத்து விட்டேன் அய்யோ அதை நினைத்து வருந்துகிறேன் எனக்காக கடவுளிடம் பாவ மன்னிப்பை பெற்று தாருங்கள் என்றார் பாதிரி சொன்னார் மகனே யேசுவின் மூலம் உன் பாவங்களை மன்னித்து விட்டேன் என்றார் ஆனாலும் நீ அதிகமான பாவங்கள் செய்த படியினால் நீ இறந்த பிறகு யேசுவின் தூதர்கள் வந்து உன்னை சொர்கத்துக்கு அழைத்து செல்ல மாட்டார்கள் உனக்கு ஒரு அம்பாசிடர் காரும் சொர்க்கத்துக்கு போகும் வழியும் காண்பிக்கப்படும் அதை பயன்படுத்தி நீ சொர்க்கத்டுக்கு செல்லலாம் மேலும் பாவம் செய்தால் நீ யேசுவிடம் போக உனக்கு மோட்டார் பைக் குடுக்கப்படும் அதற்க்கு மேலும் பாவம் செய்தால் உனக்கு சைக்கிள் தான் குடுக்கப்படும் அதற்க்கு மேலும் பாவம் செய்தால் நீ மன்னிப்பு கெட்டால் யேசு உன்னை மன்னித்து விடுவார் ஆனால் நீ நடந்துதான் சொர்க்கத்துக்கு போக வேண்டும் அதனால் இனி பாவம் செய்யாதே என்று கூறி அனுப்பி விட்டார் பாவ மன்னிப்பு கேட்டவன் இறந்து போனான் அவன் அம்பாசிடர் காரில் சொர்க்கத்தை நோக்கி பயனம் செய்து கொண்டு இருந்தான் ரியர் வியூ மிரரில் சைக்கிளை மிதித்துகொண்டு ஒரு உருவம் பின்னால் விரைந்து வருவது போல தோன்றவே காரை நிருத்தி பார்த்தான், ஆகா, அதுன் நம்ம பாவமன்னிப்பு கேட்ட பாதிரியார், பாதர் நீங்க சைக்கிளிலா அய்யோ என்ன் கொடுமை என்றான் ,பாதிரி சொன்னார் அட சும்மா இரப்பா பிஸப்பே பின்னாடி நடந்துதான வாராறு பிஸப்பே நடந்து போகும்போது பப்பாண்டவர் சொர்க்கதுக்க்ற் போக முடியாது இருந்தாலும் அவருக்கு கவலை இல்லை அவருதான் தங்க சிம்மாசனத்தில் உக்காந்து கொண்டு விலை உயர்ந்த காரில் பயனம் செய்து கொண்டும் இந்த மன்னுலகிலேயே சொர்க்கத்தை அனுபவிப்பதால் செத்த பின் போகும் சொர்க்கத்தை பற்றி அவருக்கு என்ன கவலை இருந்தாலும் அவரை எல்லாம் கைது செய்ய முடியுமா …

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க