Sunday, September 24, 2023
முகப்புஇந்தியாவை எதிர்நோக்கும் அபாயம் ?
Array

இந்தியாவை எதிர்நோக்கும் அபாயம் ?

-

இந்தியாவின் மோசமான அச்சுறுத்தல்!

-ஜி எஸ்.வாசு (ஆசிரியர் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்-ஆந்திரா)

________________________________________________________

vote-012“தென் அமெரிக்காவை புரட்டிப் போட்ட சந்தை பொருளாதார அடிப்படை வாதத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளாவிட்டால் தற்போதைய பொருளாதார கொள்கையே நமது சீரழிவிற்கும் காரணமாக இருக்கும்”

கடந்த மாத மத்தியில் சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடாவில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்படும் விவாதங்கள் வேடிக்கையாக இருக்கிறது.  மத்திய ரிசர்வ் காவல் படையினர் மாவோயிஸ்ட்டுகள் விரித்த வலையில் வீழ்ந்தனரா? நாம் இராணுவத்தை பயன்படுத்துவதா? ஆளில்லா விமானத்தை பயன்படுத்தலாமா? இத்தகைய ஒரே மாதிரியான கேள்விகள்தான் கேட்கப்படுகிறதேயொழிய, ஏன் இது நிகழ்ந்தது என்பதை விவாதிக்க ஆளில்லை.

இதை நான் மட்டும் வேடிக்கையாக பார்க்கவில்லை.சத்தீஸ்கர் நிகழ்வையொட்டி நான் நக்சல் இயக்கத்தினரை எதிர்கொள்வதில் அனுபவம் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை சந்தித்தேன்.  அவரும் என் போல் இந்த விவாதங்களை ஒரு வேடிக்கையாகத்தான் பார்க்கிறார்.  மேலும், அவர் என்னிடம் இன்னொரு கேள்வியை முன்வைத்தார். “ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சர்வதேச நிறுவனங்களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் கட்டாய இடப்பெயர்ச்சிக்கு ஆளாக்கப்படும் போது என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?  அவர்கள் எதிர்தாக்குதலில் ஈடுபடுவது இயல்புதானே?”.  அறியாதது போல், அவரிடம் நான் ஒரு வினாவை முன் வைத்தேன். “நக்ஸலிசத்தை வேரறுக்க புதுடில்லியில் திட்டமிடும் கூட்டங்களில் இது குறித்து விவாதிக்கப்பட்டதா?” – “இல்லை” என்றார் அவர்.  அத்தகைய விவாதங்களில் எப்போதுமே எத்தனை படைப்பிரிவை அனுப்புவது, எங்கே, எத்தகைய நவீன ஆயுதங்களை பயன்படுத்துவது, என்பது மட்டுமே விவாதிக்கப்படும்.

உண்மை நிலை நன்கு தெரிந்திருந்தும், இது தான் இன்றைய போக்கு. “வசந்த கால இடி” (ஸ்பிரிங் தண்டர்) என்ற நக்சலுக்கு எதிரான அதிரடி தாக்குதல் தொடங்கி தற்போது நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலத்தில் “மோதல்” (என்கவுன்டர்) என்ற பெயரில் “மாவோயிஸ்ட்டுகள்” என்று சந்தேகப்படுபவர்கள் 10 ஆயிரத்திற்கு மேல் கொல்லப்பட்டதும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, அவர்களுக்கு அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதை தவிர்த்து, அந்த இயக்கம் ஒரு மாநிலத்தின் ஒரு மாவட்டத்திலிருந்து 15 மாநிலங்களின் 200 மாவட்டங்களுக்கு பரவுவதற்குத்தான் உதவியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு மாவோயிஸ்ட்டுகள்தான் காரணம் என்று நான் கூற முடியாது. இன்று விவாதிக்கப்படும் மாவோயிஸ்ட்டுகள் உருவாவதற்கு இந்திய அரசும், அதனது பொருளாதார கொள்கையும்தான் முழுக்காரணம்.

சமீபத்திய எனது ஆந்திர பிரதேச சுற்றுப்பயணத்தில், ஒரு ஆயிரம் பேரை வலுக்கட்டாயமாக இடப்பெயர்ச்சி செய்து உருவாக்கப்பட்ட “சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு” சென்றிருந்தேன்.  தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்த அவர்களது நிலங்களை ஏக்கருக்கு 18 ஆயிரம் முதல் ரு 60 ஆயிரம் வரை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது.  அந்த பொருளாதார மண்டல கட்டுமான பணிகள் துவங்கப்பட்ட போது எந்த நிலத்தை உழுது பயிரிட்டு வாழ்ந்து வந்த அந்த மக்களே, அந்த நிலத்தில் நாளொன்றுக்கு ரூ 100 க்கு தினக்கூலியாக செங்கல் சுமப்பவர்களாகவும், கூலி வேலை பார்ப்பவர்களாகவும் மாறிப்போயிருந்ததை பார்க்க முடிந்தது.  அந்த மண்டலத்தின் ஒரு பிரிவை திறந்து வைக்க அந்த மாநிலத்தின் முதலமைச்சர் வந்த போது அந்த பகுதிக்குள் அந்த மக்களால் இடையூறு வரும் என, அவர்கள் வராமலிருக்க காவல் துறையினர் தடுப்பு சுவரே எழுப்பியிருந்தனர்.  இது எனக்கு இந்திய-பாகிஸ்தான் எல்லையைத்தான் நினைவூட்டியது.

மற்றொரு மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை வேறு ஒரு நிறுவனத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ 50 லட்சம் வரை விலைபேசி ஒதுக்கியுள்ளது என்பதுதான் கொடுமை.  இத்தகைய தரகர்கள் பகுதியில் உள்ள பாக்சைட் போன்ற இயற்கை கனிமங்களை தனியார் நிறுவனம் தோண்டி எடுக்க அனுமதியில்லாததால், அரசு நிறுவனமே அந்த மூலப் போருட்களை தோண்டி எடுத்து அந்த வெளிநாட்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. இது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகைள “மாக்கிவில்லியன்” (தனியாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கை) பாணியில் மீறுவதும், அந்த சாசனம் மக்கள் சுரண்டப்படுவதிலிருந்து காக்க அளித்திருக்கும் பாதுகாப்பையும் மீறுவதாகும்.

இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை சார்ந்து கோடிக் கணக்கில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் நலனில் அதிகார வர்க்கத்தினர் அதிக அக்கரை காட்டி வருகின்றனர்.  பதவி ஏற்கும் காலத்தில் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு உண்மையாகவும், அச்சமின்றி, விருப்பு வெறுப்பின்றி, சாதக பாதகமின்றி செயலாற்றுவேன் என்று உறுதிமொழியேற்று பதவிக்கு வந்தவர்களுக்கு அந்த உறுதிமொழிகைள தற்போது யார் நினைவூட்டுவது?  நாளை இத்தகைய திட்டங்களால் (சிறப்பு பொருளாதார மண்டலங்கள்) பாதிக்கப்பட்டு மாவோயிஸடுகளாக மாறிப் போவதற்கு யாரை குற்றம் சொல்வது?

இது இத்தோடு நின்றுவிடவில்லை. இன்று கிராமப்புற சுகாதார மையங்கள் முற்றாக செயல்படவில்லை.  நகர்புறங்களிலுள்ள அரசு மருத்துவ மனைகள் மூடப்படும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆந்திராவில் இத்தகைய பொருளாதார மண்டலங்கள் உள்ள பகுதிகளில், ஆதிவாசிகள் தீராத வியாதிகளால், வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகளால் நூற்றுக்கணக்கில் மடிந்து வருகின்றனர். இவர்களுக்காக யார் கவலைப்படுகிறார்கள்?  நமது “மக்கள் சுகாதாரத் திட்டம்” முற்றாக பெரிய தனியார் மருத்துவமனைகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

சத்தீஸ்கர்- ஆந்திராவில் சிறப்பு மண்டல பகுதிகளில் ஆதிவாசிப் பெண்கள் பாதுகாப்பு படையினரால் பாலியல் பலாத்காரம், கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை பற்றி சிறிதும் கவலைப்படாத நாம், டெல்லியிலோ, மும்பையிலோ, ஒரு நடுத்தர வர்க்கப் பெண்மணி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதை நமது பத்திரிக்கைகளில் முதல் பக்க செய்தியாக வெளியிடுகிறோம்.  நான் பின்னர் நடந்ததை கண்டிக்கவில்லை என்று அர்த்தம் அல்ல, ஆதிவாசிகள் மத்தியில் நடப்பதை வெளியிடாதது நமது வர்க்க பாகுபாட்டை காட்டுகிறது என்கிறேன்.  அப்படியென்றால் ஆதிவாசிப்பெண்கள் கற்பழிக்கப்படுவதை நாம் ஏற்றுக் கொள்கிறோமா அல்லது பொறுத்துக்கொள்கிறோமா என்பதே கேள்வி.

இதே நிலைதான் கல்வித்துறையிலும். அரசு நடத்தி வந்த தங்கிப் பயிலும் கல்வி நிறுவனங்களிலிருந்து பல சிறந்த கல்விமான்கள் உருவாகி வந்தது பழங்கதையாகி விட்டது. சுகாதாரத்திட்டம் போல், கல்வியும் லாப நோக்கமுள்ள பெரும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டது. அந்த கல்வி சாலைகளில் சேர முடியாதவர்கள் கல்வி கற்கவே தகுதியற்றவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. உலகமயமாதல் கொள்கையால் பலதுறைகள் அழிந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

கடன் தொல்லையிலிருந்து மீள முடியாத விவசாயிகள், நெசவாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  நகர்ப்புறங்களில் தங்கம் உள்ளிட்ட, பெட்ரோல், உணவுப்பொருள், பால், காய்கறி, காலணி போன்ற பொருள்கைள விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்களால் உள்நாட்டு தொழில்கள் நசிந்து விட்டது.  இன்று, அத்தகைய பெரும் முதலாளிகள் தாங்கள் இவ்வாறு ஈட்டும் பெரும் பணத்தை கோடி கோடியாக “இந்தியன் பிரிமியர் லீக்” ( ஐ பி எல்) (கிரிக்கெட் போட்டிகள்) போன்ற ஆடம்பர நிகழ்ச்சிகளில் முதலீடு செய்துவிடுகின்றனர். ஒரு காலத்தில் அரசியல்வாதி-வியாபாரிகள் கூட்டை ஏற்காமல் இருந்தோம்.  ஆனால் தற்போது பெருமுதலாளிகளான வியாபாரிகள் சட்ட சபைக்கும், மக்கள் சபைக்கும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்து கொள்கை முடிவுகளை தீர்மானிக்கின்றனர்.

“லால்கர், ஒரிஸ்ஸா அல்லது சத்தீஸ்கர் ஆகிய இடங்களெல்லாம் மாவோயிஸ்ட்டுகள் இயக்கம் வலுவடைவதற்கு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்காக ஆதிவாசிகைள இடம் பெயர்ந்து செல்ல வைக்கும் – அரசின் இத்தகைய கொள்கையே காரணம்” என்கிறார் புரட்சிகர எழுத்தாளர் தோழர் வரவரராவ். தென் அமெரிக்க நாடுகளை புரட்டிப் போட்ட உலகமய, சந்தைப் பொருளாதார அடிப்படைவாதத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளாவிடில், தற்போதைய பொருளாதாரக் கொள்கையே நமது சீரழிவிற்கு காரணமாக இருக்கும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மாவோயிஸ்ட்டுகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, அவர்கள் வலியுறுத்தியதெல்லாம் இரண்டே இரண்டு முக்கிய பிரச்சனைகள்தான்.

அ) நிலச்சீர்திருத்தத்தை உடன் அமுல்படுத்துங்கள்
ஆ) ஆதிவாசிகளையும், அவர்களது நிலங்கள் மீது அவர்களுக்கு உள்ள உரிமையை பாதுகாக்கும் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்பதுதான்.

இதில் விநோதம் என்னவென்றால், இந்திய அரசியல் சாசனத்தில் நம்பிக்கை வைக்காத ஒருபிரிவினர் (மாவோயிஸ்ட்) அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடத்திவரும் மற்றொரு பிரிவினருக்கு (ஆட்சியாளர்கள்) என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதே.

உண்மை என்னவென்றால், நகர்ப்புறங்களில் பிரகாசிக்கும் வெளிச்சமே உண்மையான இந்தியா இல்லை என்பதுதான்.  அது கனிந்து கொண்டிருக்கும் ஒரு எரிமலையின் வெளிச்சமே. நமது உள்துறை அமைச்சர் நக்சல் பகுதிகளில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படுவது பற்றி பேசிவருகிறாரேயொழிய அதற்கான மூலகாரணத்தை உணர மறுக்கிறார்.

“லஞ்சம் நமது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என நமது துணை ஜனாதிபதி நம்ப, மாவோயிஸ்ட்டுகள்தான் பெரும் அச்சுறுத்தல் என நமது பிரதமர் நம்பிவரும் நிலையில், ஒரு கட்டத்தில் பண வீக்கம், ஏற்றத் தாழ்வான வருமான பங்கீடுமுறை, லஞ்சம் நாட்டின் ஸ்திரத்தன்மையை உலுக்குவதோடு, அரசின் அதிகாரத்திலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக போகிறது. நான் சந்தித்த அந்த உயர் காவல்துறை அதிகாரி மிகவும் நாசுக்காக ஒன்றை கூறினார்.  “எவ்வளவு பாதுகாப்பு படையினரை குவித்து, எவ்வளவு நக்சல்பாரி போராளிகைள கொன்று குறித்தாலும் “மன்மோகனமிசம்” (உலகமய, தாராளமய கொள்கைகள்) இருக்கும் வரை மாவோயிசமும் இருக்கும்”.

தற்போது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் “மன்மோகனமிசமா” “மாவோயிசமா” என்பதைப்பற்றி நாட்டின் அறிவுசார் சான்றோர்கள் ஆழமாக விவாதிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

___________________________________________________

நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் – 21 ஏப்ரல் 2010

தமிழில்:  சித்திரகுப்தன்

வாசகர்களுக்கு:

நாம் வாழும் இந்தியாவில்

— ஒரு கிலோ அரிசி ரூ 40

— சிம் கார்டு இலவசம்

— பிட்ஸா, ஆம்புலன்ஸ்-காவல்துறையைக்காட்டிலும் விரைவாக வீட்டிற்கு வருகிறது.

— கார் லோன் வட்டி 5 சதம், கல்விக்கடன் வட்டி 12 சதம்

— சட்டசபை கட்டிடம் ஒரு ஆண்டில் கட்டி முடிக்கப்படுகிறது.  ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கான பாலங்கள் கட்ட பல ஆண்டுகள் ஆகிறது. – – – இது இன்றைய இந்தியா!

_______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. >> கார் லோன் வட்டி 5 சதம், கல்விக்கடன் வட்டி 12 சதம்

    கார் லோன் சுலபமாக கிடைக்கும். கல்வி லோன் ??? அது தனிக் கதை. ஏழைகளுக்கு எட்டாத கனி. பணக்காரர்களுக்கே கொடுக்கப்படும் கடன்.

    • வினவு அவர்களே,

      இது குழந்தை சொன்னது:

      /////கார் லோன் வட்டி 5 சதம், கல்விக்கடன் வட்டி 12 சதம்

      கார் லோன் சுலபமாக கிடைக்கும். கல்வி லோன் ??? அது தனிக் கதை. ஏழைகளுக்கு எட்டாத கனி. பணக்காரர்களுக்கே கொடுக்கப்படும் கடன்.////

      இது மிகவும் அநியாயம். அக்கிரமம்.அப்புறம் எப்படி ஏழை முன்னுக்கு வருவான். ஏன் எல்லா விசயத்திலும் அமெரிக்காவை காப்பி அடிக்கற Dr. Man Mohan Singh அமெரிக்காவின் கல்வி கடன் Policies -ஐயும் காப்பி அடிக்கலாமே?

      நான் மேற்கோள் (please see my references ) காட்டி இறுக்கும் Web Site–க்கு சென்று அதை தமிழில் மொழி பெயர்த்து உங்களது M.P.- இடம் கொடுத்து பார்லிமெண்டில் பேச சொல்லுங்கள். ஆதாரத்திற்கு இந்த Web-link -இல் உள்ளதை Print செய்து காட்டவும். நீங்கள் இது மாதிரி எழுதோவதொடு இதையும் செய்தால் நமது ஏழைகள் தொழிலாளிகள் அவர்களது குடும்பங்கள் உங்களை வாழ்த்துவார்கள். தயவு செய்து அதை செய்யுங்கள்— நமது ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும்….செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

      இனிமேல் நான் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். தமிழில் கூகிளில் Type அடிப்பதற்குள் எனக்கு மூச்சு முட்டுகிறது. மேலும் சில வார்த்தைகளுக்கு சரியான் தமிழாக்கம் எனக்கு தெரியவில்லை. ஆகவே மன்னிக்கவும் .

      Let us take the example of family of four (husband, wife, and two children) living in the United States. Assume the husband and wife works for federal minimum wages – No one can pay less than this wages–yes that is the minimum wage -ஒரு முதலாளி – can pay– He cannot pay less than that. Assume husband works for 40 hours/week and wife works for 20 hours/week–to take care of her children.This amounts to 60 hours a week ; and at the rate of 7.50 dollars/hour; they could make approximately 24000 dollars/year. இது நமது அங்காடித் தெரு மாதிரி ஒரு அடிமட்ட தொழிலாளியின் குடும்பத்தின் வருட வருமானம். எவ்வளவு? 24000 dollars/year.

      Now, his son goes to College. The approximate expenses would be around 20000/ year to study in college. This includes studying and LIVING expenses for the student who lives away from parents. He has to take an apartment for rent, by the way. The expenses include his transportation expenses for his car. Yes, they count that as the student need to have car as a necessity; and NOT as a luxury, and they provide allowances for that. All these expenses are covered by Grants and Loans, and Work Study. How?

      Grants: You don’t have to return the money to Government or the University.

      Pell Grants. One can get up to a maximum of $5500 every year in the United States. No need to return. அமாம்! இந்த maximum மானியம் 5500 dollars ஒவ்வொரு வருடமும் உண்டு. It can be more in Canada, I suppose.

      We have several grants, and one important grant is the University grant..

      The university grant amount is typically divided between poor students, refugees, etc and it can vary. But one gets approximately 2000 to 3000 dollars/year for every year. No need to return this money also. It is free.

      Loans (subsidized and unsubsidized): You have to return the money to the government. Paying back is easy; very very easy.

      subsidized Loans: No interest until the student completes his degree with a grace period of 9 months after completing his degree. The government pays his interest for free for just studying and being a productive citizen.

      Unsubsidized Loans:

      There is interest. But you don’t have to pay back ANYTHING when you are in college. It is added up. You have to pay back after completing the degree with a grace period of 9 months after completing the degree.

      For all these loans, The interest rate is variable. but there is cap in interest rate. That CAN NOT go more than 8.33% at any point of time. THIS IS LAW. But the government allows you to consolidate and fix the interest rate. Now, one can fix or lock the interest rate for 4.25% —fixed for life. Interest rate cannot go up or cannot go down once you lock it.

      Then there is Perkins Loans: Interest is always fixed and it is 5%.

      Work Study: you are guaranteed work at the University for the federal minimum wage, say approximately 7.50 dollars/hour. This part time employment one can make up to 3500 dollars/year.

      According to Federal Student Aid, one, however poor they are they will get the maximum support to study at the expense of Tax Payers like us. It is fine as that’s how, we immigrants studied, and settled in the United States.

      Now, it is our turn to return the favor to poor citizens, poor immigrants and ALL refugees.

      ஆகவே 24000 டாலர்ஸ் சம்பாதிற்க்கும் ஒரு தொழிலாளிக்கு அவனுடைய மகன் கல்லூரி படிப்பை அரசாங்கம் எடுத்துக்கொள்ளுகிறது. மேலும் இந்த அடிமட்ட தொழிலாளியின் குடும்பத்தின் வருட வருமானத்தில் வாழும் வாழ்க்கை இந்தியாவில் வாழும் 96 விழுக்காடு மக்களின் வாழ்க்கைத் தரத்தை விட மிக மிக அதிகம். கனடா அமெரிக்காவை விட மனிதாபமான நாடு. அவர்களுக்கு அங்கே ஏழைகளுக்கும் அகதிகளுக்கும் அமெரிக்காவை விட சலுகைகள் அதிகமாகத்தான் இருக்கும்.

      அதனால் வினவு அவர்களே இது மாதிரி கொள்கைகளை இந்தியாவில் கொண்டு வாருங்கள். அப்பொழுது தான் நமது தொழிலாளிகள் முன்னேற முடியும்.

      அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி

      References:

      https://www.dl.ed.gov/borrower/BorrowerWelcomePage.jsp

      http://studentaid.ed.gov/PORTALSWebApp/students/english/PellGrants.jsp

      http://www.fafsa4caster.ed.gov/F4CApp/index/index.jsf

      http://studentaid.ed.gov/students/publications/student_guide/2008-2009/english/typesofFSA_fws.htm

      http://www.ibrinfo.org/can.vp.html

      http://www.studentloanborrowerassistance.org/bankruptcy/

      http://www.salliemae.com/NR/rdonlyres/2D4E01F6-FB74-4C13-BA38-65BD001C68B7/0/FINALGCR1808_information_for_completing_IBR_worksheet2.pdf

      http://www.ibrinfo.org/

      http://studentaid.ed.gov/students/attachments/siteresources/IBRQ&A_template_123109_FINAL.pdf

      http://studentaid.ed.gov/students/attachments/siteresources/PSLF_QAs_final_02%2012%2010.pdf

      ___________________________________

      பின் குறிப்பு:

      வினவு அவர்களே. எலோருக்கும் ஆட்டையாம்பட்டி அம்பி மாதிரி வாய்ப்புகள் கிடைக்காது. எனவே இது மாதிரி கடன வசதி கொள்கைகளை இந்தியாவில் கொண்டாருங்கள். அப்போ எருமைநாயக்கன் பட்டியில் இருந்தும் ஒருவன் முன்னுக்கு வருவான். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.

      இவ்வளவு நேரம் எடுத்து கஷ்டப்பட்டு இந்த பின்னூட்டத்தை எழுதிய ஒரே காரணம் நமது ஏழைகள் தொழிலாளிகள் அவர்களது குடும்பங்கள் முன்னுக்கு வர வேண்டும் என்ற ஒரே காரணம் தான். இதற்க்கு ஒரு Catalyst – தேவை. அது நீங்கள் தான். நீங்கள்

      அதை செய்வீர்களா?

      செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த மறு மொழியை முடிக்கிறேன்….

      நன்றி!

      அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி

      • மிஸ்டர் ஆட்டையாம்பட்டி , கடன் வாங்கி கக்கூஸ் போறதுக்கு பாராளுமன்றத்துல பேசறது எங்க வேலை இல்லை .. சி.பி.ஐ. , சி.பி.எம்., காரனுங்க கிட்ட சொன்னிங்கன்னா பாராளுமன்றத்துல குரல் எழுப்பி முக்கால்வாசி நேரம் வெளிநடப்பு செய்து , கல்விக்கு வட்டியில்லாத கடன் வாங்கித் தருவாங்க ., என்ன உங்க ரெண்டு கிட்னிய மட்டும் டாட்டா காரனுக்கும் அம்பானிக்கும் எழுதி கொடுதிருவானுங்க ..

        • Dear mmarx2mao:
          நீங்க என்ன சொல்ல வரீங்க என்று எனக்கு புரியவில்லை.
          //பாராளுமன்றத்துல பேசறது எங்க வேலை இல்லை//
          அப்புறம்….
          ///சி.பி.ஐ. , சி.பி.எம்.,……………அப்புறம்…என்ன உங்க ரெண்டு கிட்னிய மட்டும் டாட்டா காரனுக்கும் அம்பானிக்கும் எழுதி கொடுதிருவானுங்க ..///
          தயவு செய்து சொலவதை பளிச்சுனு சொல்லுங்கள்..

        • சலுகைகள் கொடுத்து மக்களை அடிமைப் படுத்தியே வைத்திருப்பது , புரட்சிகர இயக்கங்களின் வழக்கங்களுக்கு ஒவ்வாத வாதம் . அது சி.பி.ஐ.,சி.பி.எம். போன்ற ஓட்டுப் பொறுக்கிகள் கையில் எடுக்கும் சீர்திருத்த நிலைப் போக்கு . மக்களை அடிமை சமூகமாய் மாற்ற மட்டுமே நீங்கள் சொல்லும் ஐடியாவால் சாதிக்க முடியுமே ஒழிய மக்களின் விடுதலை அல்ல .

  2. //“மாக்கிவில்லியன்”// என்றால் சாணக்கியத்தனம் என்று கூறலாம்.

    of or relating to the alleged political principles of Niccolò Machiavelli (1469-1527), Florentine statesman and political philosopher; cunning, amoral, and opportunist

    கட்டுரையிலும் அந்த அர்த்தத்தில்தான் சொல்லப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்,

    கட்டுரை வெகு அருமை. பல விசயங்களை நடுத்தர வர்க்கத்தின் மண்டைக்கு உறைக்கும் வகையில் சொல்கிறது.

  3. ஊட்டியில் இருக்கும் பூர்வகுடி மக்கள், மரம் வெட்டுகிறார்கள், வேட்டையாடுகிறார்கள் என்று பொய் குற்றம் சாட்டி இடபெயர செய்யப்படுகிறார்கள், விரைவில் தமிழகத்திலும் ஆயுதம் ஏந்த வேண்டியிருக்கும்,

    நான் என்.சி.சி மாணவனாக்கும்!

  4. //ஊட்டியில் இருக்கும் பூர்வகுடி மக்கள், மரம் வெட்டுகிறார்கள், வேட்டையாடுகிறார்கள் என்று பொய் குற்றம் சாட்டி இடபெயர செய்யப்படுகிறார்கள், விரைவில் தமிழகத்திலும் ஆயுதம் ஏந்த வேண்டியிருக்கும்,//

    தண்ணி போட்டுவிட்டு மல்லாந்து கிடக்கவா காடு , மிருகங்கள் வாழத்தானே காடு , 

    • //தண்ணி போட்டுவிட்டு மல்லாந்து கிடக்கவா காடு , மிருகங்கள் வாழத்தானே காடு , //

      பிறக்கும் போதே நாட்டில் பிறந்த ஈசுதமிழ் புண்ணியவானே! அவர்கள் காட்ட்லேயே பிறந்த காட்டிலேயே வளர்ந்தவர்கள், ரிசார்ட் கட்டுறேன் என்று இருக்கும் உயிரினத்தை அழிப்பது போல் அவர்கள் விலங்கினத்திற்கு எந்த தொந்தரவும் செய்ததில்லை, பதிவை படியுங்கள், பூர்வகுடி மக்களின் இடத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பதால் தான் மாவோயிஸ்டுகளின் தாங்குதலே ஆரம்பம்!

  5. சுரண்டலும் ஒடுக்குமுறையும் உள்ளவரை போராட்டம் நிற்காது .

  6. விஷயமே தெரியாத மவோயிஸ்டுகலை சப்போர்ட் செய்கிறவர்களுக்கு 10 வருடம் கடும் காவல் தண்டனையாம்.கருத்து சுதந்திரம் கழுத்தை நெரித்து கொல்லபட்டாகிவிட்டது

  7. மாவோயிசத்தின் எதிரிகளாக அப்பாவி போலீசுக்காரன் உயிரை விடும் முறையை மாற்றலாமா ? அவனுக்கும் குடும்பம் பள்ளிசெல்லும் குழந்தை பொம்பை விளையாடும் குட்டி இருக்காதா ? இதில் நான் கடுமையாக வேறுபடுகிறேன்.

    • ரவி, இந்திய போலீசுக்கு வழங்கும் இந்த நியாயத்தை ஈழத்தில் விடுதலைப்புலிகளால் ‘கொல்லப்பட்ட’  இலங்கை போலீசு மற்றும் இராணுவத்திற்கும் வழங்குவீர்களா????

    • //மாவோயிசத்தின் எதிரிகளாக அப்பாவி போலீசுக்காரன் உயிரை விடும் முறையை மாற்றலாமா ? அவனுக்கும் குடும்பம் பள்ளிசெல்லும் குழந்தை பொம்பை விளையாடும் குட்டி இருக்காதா ? இதில் நான் கடுமையாக வேறுபடுகிறேன்.//

      ‘அப்பாவி’ போலீசுக்காரர்களால் விரட்டியத்து அகதிகளாக்கப்பட்ட, கொல்லப்பட்டவர்களுக்கும் கூட இதே போல குழந்தைகள், குட்டிகள், பொம்மை என்று அழகான, ரசிக்கத்தக்க வாழ்க்கை இருந்திருக்கும் அல்லவா?

      • ///////‘அப்பாவி’ போலீசுக்காரர்களால் விரட்டியத்து அகதிகளாக்கப்பட்ட, கொல்லப்பட்டவர்களுக்கும் கூட இதே போல குழந்தைகள், குட்டிகள், பொம்மை என்று அழகான, ரசிக்கத்தக்க வாழ்க்கை இருந்திருக்கும் அல்லவா?////////////////

        இதில் நான் வேறுபடுகிறேன்!
        அரசு வேலையில் இருந்துகொண்டு குறைந்த பட்ச நடுத்தர வர்க்க வாழ்வை வாழும் போலீஸ்காரர்களுடைய வாழ்க்கையை போலவா ஆதிவாசி/பழங்குடி மக்களின் வாழ்வு உள்ளது? அரசு வேலைகளில் இருக்கும் கீழ் மட்ட அதிகாரிகளின் வாழ்கையை விட மிகவும் மோசமான நிலையிலேயே அவர்களது வாழ்வு உள்ளது, இப்போது அதற்கும் வேட்டு வைக்கதான் பாதுகாப்பு படைகள் காட்டுக்குள் சென்றிருக்கின்றன!

        அது சரி, மாவோயிஸ்டுகளாவது, அவர்களை தேடி காட்டுக்குள் ஆயுத மேந்தி வந்த படையினரை தாக்கினார்கள். ஆனால் அரச படைகளும், சால்வா ஜூடும் கூலிகளும் ஆயுதமற்ற அப்பாவி பழங்குடிகளை அவர்களுடைய வீட்டிற்க்கே போய் தாக்கி கொன்று குவித்துள்ளார்களே?

        யார் வீட்டுக்கு யார் போனது/வந்தது ரவி?

    • எல்லோர்க்கும் எல்லாமும் தான் இருக்கிறது. நீங்கள் பஞ்சுமெத்தையில் பொம்மையுடன் விளையாடும் குட்டிக்காக கவலைப்படுகிறீர்கள். நாங்கள் முற்கள் சூழ படுத்துறங்கும் குட்டிக்காகவும் கவலைப்படுகிறோம். ஏன் இக்குட்டிகள் முற்களோடு விளையாடிக்கொண்டிருக்கின்றன என அப்பாவி போலீஸ்காரன் நினைக்காதவரையில் மோதல்கள் தவிர்க்கமுடியாத்து

    • யோசிக்க வேன்டிய விஷ்யம். போலிஸ்காரர்களை மூன்று விதமாக பிரிக்க்லாம்,
      1. தேச பக்தி கொண்டவர்கள், 2 மாத சம்பளத்தை நம்பி இருக்கும் ஏழைகள், 3.கட்டளைக்கு கீழ் பணிபவர்கள். இதில் யாராக இருந்தாலும் மத்திய அமைச்சார் மாவிக்களை ஒழிக்க வேண்டும் என்று கூறியவுடன், விரும்பியோ கட்டளைக்கடிப் பணிந்தோ மரணமடைகின்றனர். நிச்சய்மாக் நம்மால் போலீஸ்காரர்களின் மரணத்தை கொண்டாட முடியாத அதே வேளையில், அவர்களின் நடவடிக்கைகும் துணைபோக முடியாது. ராணுவ‌த்தில் ஒரு பிரிவிருக்கிற‌து ‘பீஸ்டிபிகேஷ்ன்’. கிட்ட‌த்ட்ட‌ வெறிய‌ர்க‌ளாக‌ மாற்றுவ‌து .. போர், கொலை ச்ய்வதென்றால் சாதரண மனித மந்தால் முயடியாது.. அரசின் ஆதரவுடன் , செய்திகள் வடிகட்டபட்டு மூளை சலவை செய்யபடும் போலீஸ்காரர்களை இந்த விடயத்தில் திட்டுவதை விட அதை பெருமையாக செய்யும் அரசை தான் திட்ட வேண்டியுள்ளது..மீண்டும், யாருடைய மரணமும் கொண்டாபட வேண்டியதில்லை தான்..

    • என்ன ரவி …………இந்திய அரசாங்கம் அடக்கு முறைகளை ஏவி விடுகிறது ……………..
      போலிஸ் ராணுவம் இந்தியா அரசாங்கத்தின் வால்…….போலிஸ் குடும்பத்தை மட்டும் வைத்து இப்படி ஒரு நிலைப்பாடு எடுப்பது தவறாக தெரிகிறது ரவி

    • அப்படி என்றால் அதற்கு போலீஸ் தான் மாவோயிஸட் எதிர்ப்பு போரில் பங்கேற்க மாட்டோம் என வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் செய்வார்களா. அவர்கள் அப்படி செயாத பட்சத்தில் அநீதிக்கு துணை போன காரணத்தால் இதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

  8. தலைவரே டாஸ்மாக்கே விட்டுடிங்களே சரக்கு விலை கம்மி மருந்து விலை அதிகம் நீங்க என்ன சொன்னாலும் எங்களுக்கு புத்தி வராது இருந்த தானே வர

  9. இது போன்ற ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டுகிறேன். கட்டுரை மிக அருமை. நன்றி.

  10. அப்புறம் இந்த மாவ்யஸ்ட் ஆட்களை கொஞ்சம் மானாட மயிலாடா அப்புறம் டீலா நோ டீலா இது போலா அறிவை (பகுத்தறிவை) வளர்க்கும் நிகழ்சிகளை பார்க்க சொல்லுங்க ஐயோ ஐயோ

  11. //மாவோயிசத்தின் எதிரிகளாக அப்பாவி போலீசுக்காரன் உயிரை விடும் முறையை மாற்றலாமா ? அவனுக்கும் குடும்பம் பள்ளிசெல்லும் குழந்தை பொம்பை விளையாடும் குட்டி இருக்காதா ? இதில் நான் கடுமையாக வேறுபடுகிறேன்.
    //

    இந்த கோரிக்கையை நியாயமாக பா. சிதம்பரத்திடம் கேட்டிருக்க வேண்டும். அப்பாவி போலீசுக்காரர்கள் அங்கு என்ன புல் புடுங்கவா சென்றார்கள்? பல்வேறு முரட்டு ஆயுதங்களுடன் மூன்று லட்சம் பழங்குடியினரும், நூற்றுக்கணக்கிலான படுகொலைகளும், பாலியல் வன்புணர்வுகளும் ‘அப்பாவி’ போலீசுக்காரர்களால்தான் அங்கு நிகழ்ந்துள்ளது. ஏழைகளுடன், ஏழைகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது பா.சிதம்பரம் உள்ளிட்ட மேட்டுக்குடி கனவான்களான முதலாளிகள். அவர்கள் அதற்கு சொல்லும் நியாயம், இங்கு நகரத்தில் இருந்து எழுதிக் கொண்டிருக்கும் நமது நுகர்வு தேவை.

    செந்தழல் ரவி இப்படி ஒரு நுகர்வு கனெக்சன் இருப்பதை கவனித்தார் எனில் தனது நுகர்வை வரையறைக்கு உட்படுத்தி ஏகாதிபத்திய – தரகு நிறுவன பொருட்களை புறக்கணிப்பதை தனது வாழ்வில் கடைபிடிப்பதன் மூலம் ‘அப்பாவி’ போலீசுக்காரன் உயிர் விடுவதை தடுக்கும் முயற்சியில் உதவலாம் என்பதை உணர்வார்.

    அருந்ததிராயின் வார்த்தைகளில் இது போன்ற கண்டனங்கள் வெற்று வார்த்தைகள். உங்களது மனிதாபிமான அடிப்படையிலான கண்டனங்களை இவ்வாறு குறிப்பிடுவதற்கு எனக்கு வருத்தம்தான் எனினும் சொல்வது எனது கடமை.

    அருந்ததி ராயிடம் இதே கேள்வி கேட்க்கப்பட்ட போது சொன்னவை:

    1)
    Well, this is a odd way to frame before and after Dantewada happened because actually you know this cycle of violence has been building on and on. This is not the first time that a large number of security personnel have been killed by the Maoists. I have been written about it and the other attacks that took place between the years 2005-2007. The way I look at is often you know people make it sound that oh on this side of people, who are celebrating the killing of CRPF jawans and that side of the people who are asking for the Maoists to be wiped out. This is not the case. I think that you got to look at the every depth as a terrible tragedy. In a system, in a war that’s been pushed on the people and that unfortunately is becoming a war of the rich against the poor. In which rich put forward the poorest of the poor to fight the poor. CRPF are terrible victims but they are not just victims of the Maoists. They are victims of a system of structural violence that is taking place, that sort to be drowned in this empty condemnation industry that goes on which is entirely meaningless because most of the time people who condemn them have really no sympathy for them. They are just using them as pawns.

    2)
    Reacting angrily to questions why she did not condemn Maoists for the April 6 massacre of 76 CRPF jawans in Dantewada in Chhattisgarh, she said the “condemnation industry is a hollow and cynical industry where people do not care about the people killed.”

    Claiming that most people were living under an “undeclared emergency,” Ms. Roy said: “I feel that every single death, whether that of a police or Maoist or an Adivasi, is a terrible tragedy. The system of violence imposed on us in the structural process is increasingly becoming a war between the rich and the poor. I condemn the system of militarisation of people that sets the poor against the poor.”

    Ms. Roy said ‘violence of resistance’ could not be condemned when hundreds of Central forces cordon off tribal villages — killing and raping people with impunity.

  12. பெருந்தலைவர் காமராஜர் தான் ஒவ்வொரு முறையும் நினைவுக்கு வருகிறார்.

    அதிகாரிகள் கோப்பில் கொண்டு வரும் புள்ளிவிபரங்களுக்குப் பின்னால் அவர் கேட்கும் ஒரே கேள்வி இதனால் மக்களுக்கு நன்மையா தீமையா?

    அதிக புத்திசாலித்தனம் என்பது இது போன்ற உலகளாவிய பார்வை என்ற நோக்கத்தில் அடகு வைப்பதில் தான் முடிந்து கொண்டுருக்கிறது.  ஒவ்வொரு முறையும் மாவோயிஸ்ட் தொடங்கி உள்ளூர் பிரச்சனை வரைக்கும் கலந்து கட்டி மிரட்டலும் அச்சறுத்தலையும் விடும் அமைச்சர் பெருமகனார் ஏன்? எதனால்? என்று கேள்வியே கேட்க விரும்பாத தொனி தான் வெளியே தெரிகிறது.

    பொருளாதார மயமாக்கலை முழுவதும் விட்டு வெளியே வந்து இந்தியா தனியாக நின்றுவிட முடியாது என்று வாதம் இருந்தாலும் உள்ளூர் மக்கள் வாழ்வாதாரம் குறித்து ஏன் சிந்திக்க மாட்டேன் என்கிறார்கள் என்பது ஆச்சரியத்தின் தொடக்கம்.  அதுவே சம்மந்தப்பட்ட மாமன், மகன், மனைவி என்று எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் காமதேனுவாக இருக்கிறது.  

    மின்சார பற்றாக்குறைக்கு எத்தனை அறிக்கைகள்?  எத்தனை குற்றச்சாட்டுகள்.  ஆனால் இன்னமும் பன்னாட்டு நிறுவனங்கள் வந்து உள்ளே தொழிற்சாலைகள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று படிக்கும் போது பற்றாக்குறையில் இருக்கும் இருட்டு உலகத்தில் இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து வெளிச்சம் வரும் என்று ஆச்சரியமாக இருக்கிறது.  அவர்களும் வெளிச்சமாய்த் தான் இருக்கிறார்கள்.

    புலம்பலோ எரிச்சலோ அல்லது நெகடிவ் பார்வையோ கடந்த இருபது வருட அமைதி இப்போது வாழ்ந்து கொண்டுருப்பவர்களை அல்லோகல்லப்படுத்திக்கொண்டுருப்பது போல் அடுத்த இருபது வருடம் கடந்து நிற்கும் பாவாத்மாக்கள் இது போன்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தால் கிலோ அரசி இருநூறு ரூபாய்க்கு மேலே வாங்கி உயிர் வளர்த்து எப்போது போல செய்திகளை படித்துக்கொண்டு கடந்து போய்விடுவார்கள்.

    இந்தியா ஒளிர்கிறது அல்ல.  ஒழிக்கிறார்கள்.

  13. நான் கேள்வி ஒன்றை எழுப்பிவிட்டேன் என்று அதற்கு இணையான பதில் கேள்வி ஒன்றை எழுப்புவதைவிட கேள்விக்குறியார் தீர்வை சொல்ல முயலலாம்.

    தகவல் தொழில்நுட்பம் வல்லரசுகளுக்கு சார்பாக, உதவியாக இருக்கும் இக்காலத்தில் (எ.கா சாட்டிலைட் உளவு விமானம் ) ஒரு கெரில்ல வகையான போராட்டம் குறுகிய வெற்றியடையும் கால அளவு அல்லது அது தரும் அச்சுறுத்தலின் அளவீடு விரைவில் முடிந்துபோகலாம்.

    அதனால் ஏற்படும் இழப்புகளும் விளைவுகளும் அப்படியான தூய போராட்டத்தை கைக்கொண்டவர்களுக்குத்தான் அதிகமாக இருக்கும். ஒரு அரசு இன்னொன்று. ஒரு முதலாளி இல்லையேல் இன்னொருவன்.

    ஆகவே வன்முறையற்ற அல்லது இழப்புகளற்ற புதிய அறிவார்ந்த போர்முறைகளை கட்டமைத்து செயல்படுத்திடவேண்டும், அதன் மூலம் எது நோக்கமோ அதனை அடைந்திட வேண்டும் என்பதே எனது ஆசை. 

    ஏதோ சின்னப்பையன் தவறாக சொல்லியிருந்தால் மன்னிச்சுருங்க.

    • ஏதோ பொழப்ப பாப்போம், காட்டு வேட்டையும் வேணாம், காட்டு போர் பயிற்சிப் பள்ளியும் வேணாம் கொல்லவும் வேணாம் சாவவும் வேணாம் என்று இருக்க ஆசைப்படும் போலிசுக் கரனை இந்த அரசாங்கம் விடல. கல்தா குடுக்குது. யாருக்குத்தான் வன்முறை மேலயும் சாவு கொலை மேலயும் ஆசை இருக்கும்? ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிஷ்டம் இருக்கு கழுத மேக்க.. இதுதான் இன்றைய எதார்த்தம். இன்றைக்கும் அங்கே அதிவாசி மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்… ஆசைப்பட்டு அல்ல. இழப்புகளற்ற புதிய அறிவார்ந்த போர்முறைகளை நமக்குள்தான் நடத்திக் கொள்ள முடியும். சரியான கருத்துக்கு வருவதற்காக. எதிரியுடன் அல்ல. சிந்தியுங்கள் நண்பரே.

    • //ஏதோ சின்னப்பையன் தவறாக சொல்லியிருந்தால் மன்னிச்சுருங்க.//

      உங்க கருத்துக்கள்,எதிர்பார்ப்புகளை சொல்லிருக்கீங்க. அத நாங்க மறுத்து தர்க்கம் செய்யிறோம். நோக்கத்தில் பெரிய வேறுபாடு இல்லை எனும் போது, இதுல என்ன சின்னப்பையன், பெரிய பையன். கூல் ரவி…. 🙂

    • எப்படி காந்தி மாதிரி ஊமையா … உண்ணாவிரதம் இருந்து வாங்க சொல்லலாமா ?..

  14. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் “மன்மோகனமிசமே” [மறுகாலனியக்கமே] என்று தெளிவுபடுத்தும் நல்ல கட்டுரை.
    நாட்டின் ‘அறிவுசார் சான்றோர்கள்’ ஆழமாக விவாதிக்க வேண்டிய தருணம் வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது என்றே நினைக்கிறேன். இது பட்டறிவுக் காலம். அறிந்தாக வேண்டிய காலமும் அறிவிக்க வேண்டிய காலமும் கூட. அப்போதுதான் அவர்கள் ‘அறிவுசார் சான்றோர்கள்’ ஆவார்கள்.

  15. நல்ல மொழிபெயர்ப்பு …… இதை போன்ற ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் விடயம் ஆழமாய் இருக்கும் பட்சத்தில் வினவு வெளியிட்டால் நன்றாய் இருக்கும் என்றே நினைக்கிறேன்

  16. //நாம் வாழும் இந்தியாவில்

    – ஒரு கிலோ அரிசி ரூ 40

    – சிம் கார்டு இலவசம்

    – பிட்ஸா, ஆம்புலன்ஸ்-காவல்துறையைக்காட்டிலும் விரைவாக வீட்டிற்கு வருகிறது.

    – கார் லோன் வட்டி 5 சதம், கல்விக்கடன் வட்டி 12 சதம்

    – சட்டசபை கட்டிடம் ஒரு ஆண்டில் கட்டி முடிக்கப்படுகிறது. ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கான பாலங்கள் கட்ட பல ஆண்டுகள் ஆகிறது. – – – இது இன்றைய இந்தியா!//
    நெத்தி அடி

  17. நிலம் ,நீர் ,காற்று இந்த மூன்றும் மனிதன் வாழ்வதற்கு முக்கியம்மான வாழ்வாதாரம் .இன்றைய உழைக்கும் மக்கள் பரிதாபமான நிலையை அடைந்திருகிறார்கள். முதலாளித்துவம் நிலத்தை கூறு போட்டு முழுங்கிவிட்டது .தண்ணீரையும் பாட்டில்களிலும் ,டப்பாக்களிலும் அடைத்து விற்பனை செய்கிறது .இன்னும் நூறாண்டுகளில் வளிமண்டலத்தில் உள்ள காற்றையும் மாசுபடுத்தி ஆக்சிஜனை டப்பாகளில் அடைத்து விற்பனை செய்வான் .மேட்டுக்குடியினர் அதை மூக்கில் பொத்திக்கொண்டு ஆட்டிகிட்டு வளம் வருவார்கள் .உழைக்கும் வர்க்கத்தால் எதையும் வாங்கமுடியாத நிலை உருவாகும் .விதியே என்று சாகுவான் .
    இன்றைய தொழிலாளி தூய்மையான நிலத்தில் உறங்குவதில்லை சாக்கடை ஓரங்களிலும் ,பிளாட்பாரங்களிலும் ,கொசு கடியிலும் உறங்கி உடலை வீனாக்கிகொல்கிறான் ,தண்ணீரும் விற்பனைக்கு வந்துவிட்டதால் தூய்மையான தண்ணீரையும் குடிபதிலை,வேலை செயும் இடங்களிலும் தூய்மையான காற்றை சுவாசிபதிலை ,சிமெண்ட் மூட்டை தூக்கும் தொழிலாளிக்கும் ,ரோடு போடும் தொழிலாளிக்கும் ,கழிவு நீர் வாய்கால்களை சுத்தம் செயும் தொழிலாளிக்கும் ,இன்னும் பிற தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிக்கும் தூய்மையான காற்று கிடைபதில்லை .தன் உடலை வருத்தி முதலாளியோட உடலை மெருகேற்ற வைக்கிறான் .
    மன்மோகன்சிங் தொழிலாளர்களுடைய ரத்தத்தை உறிஞ்சி இந்தியா ஒளிருது ஒளிருதுன்னு ஜிகுனாவேளை காமிக்குறான் .
    மனித சமூகத்துக்கு எது தேவையோ அதை நிவர்த்தி செய்ய கம்யூனிஸ்ட் களால் மட்டுமே முடியும் .
    முதலாளித்துவம் கொள்ளும்! communisam வெல்லும் ! 

  18. // கம்யூனிஸ்ட் களால் மட்டுமே முடியும் //
    ரஷ்ய சீன ஆகிய நாடுகளில் மக்கள் சமத்துவம் அடைந்து விட்டார்கள்!.
     மே வங்கம் , கேரளம் சமத்துவம் சமூக நீதி பெற்று மக்கள் கவலையே இல்லாமல் மகிழ்ச்சியாக உள்ளனர்.!
      
    //மனித சமூகத்துக்கு எது தேவையோ அதை நிவர்த்தி செய்ய கம்யூனிஸ்ட் களால் மட்டுமே முடியும்// !!!

    தோற்று போன கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை உலகமே ஏற்கவில்லை . இன்று அமெரிக்க தன் ஆயுத ஏற்றுமதி, அணு ஏற்றுமதி , சந்தை கலாச்சார ஏற்றுமதி , குடும்ப ஒழிப்பு சட்டங்கள் ஏற்றுமதி ,பொருளாதார பயங்கர வாதம், ஆகிய ஆயுதங்களை கொண்டு இந்திய, சீனா போன்ற அமைதியான நாடுகளை மேலாண்மை செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள போலி கம்யூனிஸ்ட் கட்சியினர் கடவுள் மறுப்பு, ஆணாதிக்கம், பெண்ணுரிமை , தொழிலாளி முதலாளி வர்க்க போராட்டம் என பார்பன வாதம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.  உண்மையில் இவர்கள் அமரிக்க கொள்கைகளுக்கு உரம் போட்டு வளர்கின்றனர் .
    கம்யூனிஸ்ட் கொள்கைகள் மக்களை அரசாங்கம் என்கிற பெயரில் அடிமை ஆக்கும்  .

  19. அவர்களின் வரலாறு புரட்சிகளின் வரலாறாயிருக்கிறது
    அவர்களின் வரலாறு தோழர்களின் வரலாறாயிருக்கிறது
    அவர்களின் வரலாறு பூர்ஷ்வாக்களின் வரலாறாயிருக்கிறது
    இவற்றை தாண்டி அவர்களின் இருப்பில் அர்த்தங்கள் ஏதுமில்லை
    அவர்கள் புரட்சி வரும் என்று நம்பினார்கள் அல்லது நம்ப வைக்கப் பட்டார்கள்
    அவர்கள் தினந்தோறும் வினவையும்,புதிய ஜனநாயகத்தையும் புதிய கலாச்சாரத்தையும் சிரத்தையோடு வாசிக்கிறார்கள்
    புரட்சி வரும் செயதியையும் நாளையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
    இந்த நம்பிக்கை தான் அவர்களை மேலும் மேலும் துடிப்புடன் இயங்க வைக்கிறது.
    எல்லா புரட்சிக்கும் போராட்டத்துக்கும் துரோகிகள் இருப்பார்கள்
    அதிர்ஷ்டவசமாக அவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்ற மருதையன் இருக்கிறார்.
    ஆனால் புரட்சி நீண்ட நாளைக்கு நீடிக்கக் கூடாது அவ்வாறு நீடித்தால் கடைசியில் வினவும் மருதையனும் மட்டுமே மீதமிருப்பார்கள்
    .
    ..
    மற்ற அனைவரும் எங்கே? அவர்கள் பூர்ஷ்வாக்களின் பட்டியலில்

    • சிகாகோவில் தொழிலாளர்கள் போராடவில்லையென்றால்…….
      மூலதனம் படைக்கப்படவில்லையென்றால்………
      ஒரு புரட்சி நடந்திருக்கவில்லையென்றால்……..
      மருதையன்கள் இன்று இல்லையென்றால்……..
      வரலாறு எப்படியிருந்திருக்கும்…………….?

      ஆண்டைகளைத் தவிர, மற்ற அனைவரும் அடிமைகளின் பட்டியலில்.

    • //////புரட்சி வரும் செயதியையும் நாளையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்./////////

      புரட்சிக்காக இங்கு யார் காத்திருக்கிறார்கள்? போலி கயூனிஸ்டுகள் வேண்டுமானால் காத்திருக்கலாம், புரட்சிக்கான தருணத்திற்காக…

      புரட்சிகர அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் புரட்சிக்காக வேலை செய்கிறார்கள்!

      புரட்சி – சமூக மாற்றம் – இதை நம்புகிறோமா? நம்பவைக்கப்பட்டுள்ளோமா? என்பதா பிரச்சனை??
      சமூகம் மாறுமா? மாறாதா? மாறுவதாக இருந்தால், அதற்கு அடிப்படை தேவை என்ன என்பது தான் பிரச்சனை!

      இப்போ உங்களுக்கு என்ன தான் பிரச்சனை எழில்?

    • இன்னாபா ?.. ஜோசியம் பாப்பியா நீ ?.. இன்னொன்னு சொல்ல மறந்துட்டியே ?..
      புரட்சி ஆரம்பித்தால் நீ உன் குடும்பத்துடன் அமெரிக்க மூத்திரம் குடிக்க அமெரிக்காவுக்கு தான் பறக்க வேண்டியது இருக்கும் ..

  20. இளைத்தவன் என்றால் ஏய்ப்பதும்
    எதிர்ப்பவன் என்றால் மாய்ப்பதும்
    ஊரே உழைக்க ……………..
    ஒருவன் வாழ்க்கை மட்டும் சிறப்பதேன்..???
    வியர்வை விழுங்கும் முதலைகள் 
    இந்த உலகின் முதலாளிகள் …..
    உழைப்பவர் வாழ்க்கை தழைப்பதில்லை ……..
    முதலைகள் கொழுப்பதேன் …
    முதலைகள் கொழுப்பதேன்… 
    இதை உணர மக்கள் மறுப்பதேன்…………

  21. ஏன் எப்பொழுதுமே எந்த ஒரு நல்ல விவாதத்தையும் ஜாதி மதம் இப்படி பேசி காலி பண்ணுகிறீர்கள். ஆணுக்கு பெண் தேவை. பெண்ணுக்கு ஆண் தேவை. பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த “தேவை” இல்லாமல் இருப்பது கடினம். இந்த “தேவை” க்கு பணம் கொடுத்தால் என்ன அர்த்தம்?

    அதற்க்கு வேறு ஒரு பெயரும் உண்டு. இந்த கருமத்திற்கு வர “தட்சணை” என்ற பெரும் உண்டு!

    அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி

  22. அருமையான பதிவு தோழர் வினவு. அடிக்கடி இது போல மொழிமாற்று கட்டுரைகள் வெளியிடவும்

  23. /ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மாவோயிஸ்ட்டுகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, அவர்கள் வலியுறுத்தியதெல்லாம் இரண்டே இரண்டு முக்கிய பிரச்சனைகள்தான்.

    அ) நிலச்சீர்திருத்தத்தை உடன் அமுல்படுத்துங்கள்
    ஆ) ஆதிவாசிகளையும், அவர்களது நிலங்கள் மீது அவர்களுக்கு உள்ள உரிமையை பாதுகாக்கும் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்பதுதான்.

    இதில் விநோதம் என்னவென்றால், இந்திய அரசியல் சாசனத்தில் நம்பிக்கை வைக்காத ஒருபிரிவினர் (மாவோயிஸ்ட்) அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடத்திவரும் மற்றொரு பிரிவினருக்கு (ஆட்சியாளர்கள்) என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதே.“லஞ்சம் நமது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என நமது துணை ஜனாதிபதி நம்ப, மாவோயிஸ்ட்டுகள்தான் பெரும் அச்சுறுத்தல் என நமது பிரதமர் நம்பிவரும் நிலையில், ஒரு கட்டத்தில் பண வீக்கம், ஏற்றத் தாழ்வான வருமான பங்கீடுமுறை, லஞ்சம் நாட்டின் ஸ்திரத்தன்மையை உலுக்குவதோடு, அரசின் அதிகாரத்திலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக போகிறது. /– இதிலிருந்து என்ன தெரிகிறது,”இவரும் ரெட்டி,அவரும் ரெட்டி அல்லது இவரும் நாயுடு,அவரும் நாயுடு!”.”முட்டையிலிருந்து கோழி வந்ததா?,கோழியிலிருந்து முட்டை வந்ததா?”.ஆட்சி அதிகாரத்தினால் மாவோயிஸ்டுகள் தோன்றினார்களா? அல்லது மாவோயிஸ்டுகளால் ஆட்சி அதிகாரம் இருக்கிறதா?!”.

  24. இந்திய தேசியம் பேசும் தினமணியில் இன்று இப்படி ஒரு செய்தி! ” சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்:​ பாளை.​ வீரர் பலி”
    என் கேள்விகள்;
    ௧. இது தமிழுணர்வாளர்களை நக்ஸல்களுக்கு எதிராக திருப்பும் செயல்திட்டமா?
    ௨. இதுவே எதிர்மறையாக ஆகியிருந்தால் இப்படி போடுவார்களா? – “சத்தீஸ்கரில் இந்திய காவலர் தாக்குதல்:​ நக்ஸல்​ வீரர் பலி”

    • தமிழுணர்வாளர்கள் மூளை ஏற்கனவே மழுங்கி தான் இருக்கிறது .. இனி இவர்கள் சொல்லி அதிகமாக மழுங்கி விடும் நண்பரே ..

  25. ///அருமையான பதிவு தோழர் வினவு. அடிக்கடி இது போல மொழிமாற்று கட்டுரைகள் வெளியிடவும்///

    அதிஷா. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும். நீ இந்த கட்டுரையை டாப் டு பாட்டம் படிச்சியா இல்லையா ?

  26. இந்த பதிவிலே என்னுடைய மனைவியை எல்லாம் இழுத்து ஆபாசமாக பேசியதை பற்றி எனக்கு வருத்தமில்லை. அது உங்கள் முதிர்ச்சி.

    என்னுடைய ஸ்டேண்ட் என்ன என்பதை விட, என்ன நடக்கும் என்று பார்க்கலாமா ? 

    ஆதிக்கவெறியோடு வரும் கொலைவெறிப்படையின் நூறு பேரை நீங்கள் கொல்கிறீர்கள். அப்புறம் ஐநூறு வருவான். ஆயிரம் வருவான். நீங்கள் ஆயிரம் உயிரை இழக்கும்போது அவன் ஐந்தாயிரமாக வருவான். உங்களிடம் இழக்க கடைசியில் உயிர் இருக்காது. அவனுடைய நோக்கமும் இழப்புகளோடு நிறைவேறியிருக்கும். அதுதானே ஈழத்தில் நடந்தேறியது ?

    உங்கள் உயிர் விலைமதிப்பில்லாதது. அதனை இழக்காமல் வேறு போராட்ட முறைகளை கண்டுபிடியுங்கள் என்கிறேன்..ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் ?

    • செந்தழல் ரவி,

      //இந்த பதிவிலே என்னுடைய மனைவியை எல்லாம் இழுத்து ஆபாசமாக பேசியதை பற்றி எனக்கு வருத்தமில்லை. அது உங்கள் முதிர்ச்சி.//

      யார் பேசினார்கள் என்று தெரியவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் அது மிகத் தவறானது கண்டிக்கத்தக்கது. தோழர்கள் அவ்வாறு பேசியிருக்க மாட்டார்கள்.

      //உங்கள் உயிர் விலைமதிப்பில்லாதது. அதனை இழக்காமல் வேறு போராட்ட முறைகளை கண்டுபிடியுங்கள் என்கிறேன்..ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் ?//

      நண்பரே, இதற்கான வாய்ப்புகள் உள்ள இடமல்ல தண்டகாரன்யா பகுதி. அங்கு உயிருடன் இருப்பதற்கே துப்பாக்கி தேவைப்படுகிறது. ஆயுதம் எது என்பதை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். இதைத்தான் ஈழத்தில் புலிகளின் நிலையுடன் ஒப்பிட்டு ஒரு தோழர் சொல்லியிருந்தார். இதே தண்டகாரன்யா முதலான இன்றைய யுத்த பகுதிகளில் அமைதி வழியில் மக்களை திரட்டி போராடி கூலி உயர்வு, தெண்டு இலைக்கான விலை உயர்வை பெற்றுள்ளனர் பழங்குடியின மக்கள்.

      லால்கர், நந்திகிராம் முதல் தண்டகாரன்யா வரை இந்த பகுதிகள் அனைத்திலும் ஆயுதமில்லா போராட்டங்களாகத்தான் மக்களின் போராட்டங்கள் ஆரம்பித்தன. அருந்ததிராயின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான அனைத்து கதவுகளும் முகத்தில் அறைந்து இந்த அரசால் மூடப்பட்டது. மேலும் கூடுதலாக கொலைகாரப் படைகள் ஏவிவிடப்பட்டன. இதன் விளைவே இன்றைய யுத்தம்.

      • சரியாக சொன்னீர்கள் பூச்சாண்டி!

        ///இதன் விளைவே இன்றைய யுத்தம்./////

        இந்த் எழவெடுத்த யுத்தத்தையும் அரசு தான் ஆரபித்ததே தவிர, பழங்குடி மக்களோ, மாவோயிஸ்டுகளோ ஆரம்பிக்கவில்லை!