Sunday, June 4, 2023
முகப்புகொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட் !!
Array

கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட் !!

-

அறியப்படாத மேற்கு தமிழகத்தின் ஆதிக்க சாதிவெறி!

vote-012சாதிக்கலவரம், சாதிப் பிரச்சினை என்றாலே நம் எல்லோரின் நினைவுக்கு வருவது தென் மாவட்டங்கள்தான். சாதிவெறியர்கள் என்றாலே அது தேவர் சாதிவெறி என்றுதான் நினைவுக்கு வருகிறதே தவிர ஏனைய ஆதிக்க சாதிகள் குறித்த பார்வை பெரும்பாலும் மக்களிடத்தில் எடுத்துச் செல்லப்படவில்லை என்றே தோன்றுகிறது.

முக்கியமாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருக்கும் ஆதிக்க சாதிவெறியர்களின் கொடுமைகள் அதிகம் பேசப்படுவதில்லை. அப்படித்தான்  கொங்கு பகுதிககளில் நடக்கும் சாதிக்கொடுமை சந்திக்கு வருவதே இல்லை. கொங்குப் பகுதிகளில் அதிகம் வசிக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் வன்னியர்களை கவுண்டர் என்று இன்றளவும் அழைப்பதில்லை.

ஆனால் வன்னியர்கள் அதிகம் வாழும் கொங்கு மண்டலத்தின் வடபகுதியில் கவுண்டர் என்றால் அது வன்னியரையும் குறிக்கிறது. “கவுண்டர்ன்னா வெள்ளாளக்கவுண்டரா?” என்று கேள்வி கேட்டால் அவர்கள் முகம் கோணலாகி இல்லை படையாச்சி என்று செருமுவதை பல இடங்களில் கேட்க முடியும். என்னதான்  பணக்காரனாயிருந்தாலும் வன்னியர்கள்,  கொங்கு வேளாளக் கவுண்டருக்கு முன் ‘கீழ்சாதி’தான். வேளாளக் கவுண்டர்கள் “பள்ளி பசங்க” என்று வன்னியர்களை திட்டுவது சாதரணமான ஒன்று.

ஒரு தலித் “என்னா கவுண்டரு” என்று கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஒரு வேளாளக் கவுண்டர் “ஓ படையாச்சியா? பள்ளியா?” என்று கேள்வி கேட்க முடியும்.  தலித் அல்லாத சாதிக்காரர்கள் என்ன கவுண்டரே என்றால் வன்னிய சாதிக்காரர்களுக்கு ஒரே பெருமைதான். பார்ப்பன இந்து மதம் என்பதே வலம்புரி ஜான் சொன்னதைப்போல தனக்கு மேல் கால்களையும் தனக்கு கீழ் தோள்களையும் எப்போதையும் தேடும்.

ஆதிக்க சாதி என்பதே அடித்து வீழ்த்தப்பட வேண்டியதுதான் அதில் முற்போக்கு இருக்க முடியுமா? இதோ நாங்கள் இருக்கிறோம் என்கிறது வன்னியர் சங்கம். ராமதாஸ் ஒரு முறை சொன்னார் “வன்னிய சங்கம் மட்டும் சாதி வெறியற்றது. நாங்கள் எங்களுக்காக மட்டுமா போராடினோம்? மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வண்ணார், நாவிதர், மருத்துவர் எல்லா சாதிகளையும் நாங்கள்தானே கொண்டு வந்தோம்”.

வன்னியர் சாதி ஆதிக்க சாதியா என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை.  ஒரு முறை என்னுடைய தென் மாவட்டத்து நண்பர் சொன்னார் “வன்னியர் சாதியெல்லாம் ஒடுக்கப்படுற சாதிதான” அவருடன் 3 மணி நேரத்துக்கு மேல் வன்னிய சாதிவெறியினை விளக்க வேண்டியிருந்தது. சாதி ஆதிக்கத்துக்கு தேவர் என்றோ,  நாடார் என்றோ, வன்னியர் என்றோ எதுவும் தெரியாது. தன் கோரப்பற்களால் உழைக்கும் மக்களை கடிப்பது மட்டும்தான் தெரியும். வன்னியர் சாதி ஆதிக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள நாமும் இப்போது அந்தக் கிராமத்துக்குள் நுழைவோம்.

கொளத்தூர் வட்டாரத்தில் கோலேச்சும் வன்னிய சாதிவெறி!

கொங்கு மண்டலத்தின் வடபகுதியில் உள்ள சேலம் மாவட்ட எல்லையையும் ஈரோடு மாவட்ட எல்லையையும் கொணடதுதான் கொளத்தூர். கொங்கு வெள்ளாள கவுண்டர்களும், வன்னியர்களும் பெரும்பான்மையாக வாழும் பகுதி.

கொளத்தூர் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டவுடனே பலருக்கும் தோன்றும் நினைவு “அட நம்ம வீரப்பன் ஊரு தான”. அது உங்கள் நினைவாயிருக்கலாம். ஆனால் “நம்ம” என்ற வார்த்தை இங்கு வன்னியர்கள் மட்டும்தான் உபயோகிப்பார்கள். கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பெரிய டிஜிட்டல் போர்டு இருக்கிறது பாருங்கள். அதில் வீரப்பன் படத்தைப் போட்டு “10 லட்சம் மானமுள்ள வீர வன்னியர்களே சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்” என்ற வாசகம் உங்கள் கண்ணுக்கு புலப்படுகின்றதா?

இங்கு மட்டுமல்ல  சேலம் மாவட்டம் முழுக்க வீர வன்னியன் வீரப்பகவுண்டரு படத்தோடுதான், அய்யாவின் படமும் சின்ன அய்யாவின் படமும் இருக்கின்றது. வீரப்பனை தமிழனென்றும், தமிழக விடுதலையை சாதிக்க வந்த போராளி என்றும் கற்பனையில் இன்பம் தேடும் தமிழ்தேசக் குஞ்சுகள் ஒரு எட்டு கொளத்தூர் சென்று பார்க்கவும்.

கொளத்தூரைச் சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றன. தனிக்குவளை முறை அவ்வப்போது ஒழிக்கப்பட்டதாக சொல்வார்கள். வெளியூர்க்காரன் யார் வந்தாலும் அங்கு டிஸ்போசபிள் டம்ளர் தான். எந்த ஊரில் இறங்கினாலும் புதிய நபர்  எந்தப்பக்கம் செல்கிறாரோ அது அவரின் ஜாதியாக இருக்கலாம். நீங்கள் தவறாக தலித் குடியிருப்புக்குள் சென்று விட்டு பேருந்து நிறுத்தத்தில் வந்து முகவரி விசாரித்தால் கிடைக்கும் மரியாதை அமோகமாக இருக்கும்.

இக்கிராமத்தில் ஒரு தாழ்த்தப்ப்ட்ட மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவராக பணி புரிந்தார். அவர் ஊசி போடும் போது வன்னியர்களின் மீது கை படுவதால் பறையன் கை படையாச்சி மீது படுவதா என்று” அங்கு வேலை செய்த பெண்ணை வைத்து மருத்துவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவரை விரட்டியடித்தார்கள் வன்னிய வெறியர்கள். இதைப்போல பல நிகழ்ச்சிக்கு பேர் வாய்ந்ததுதான் கொளத்தூர் கிராமங்கள்.

நான் ஒருமுறை  கொளத்தூரை ஒட்டிய கிராமங்களில் ஒன்றிற்கு சென்ற போது என் நண்பர் என்னை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன்  மேற்கு பக்கம் வரச் சொன்னார். நான் இதை மறந்துபோக நிறுத்தத்தில் இறங்கி அவரின் பேரைச் சொல்லி “இந்த வேலை செய்கிறார் எந்தப்பக்கம் போக வேண்டும்” என்றேன். வந்த பதிலே “தெரியாது இடத்தைக் காலி பண்ணு” என்றதுதான்.

கருங்கலூர் துப்பாக்கி சூடின் பின்னணி!

இதோ இது தான் கருங்கலூர். இங்குதான் கடந்த 16-ம் தேதி  துப்பாக்கி சூடு நடைபெற்றது. பா.ம.கவின் கோ.க.மணி இது குறித்து சட்டசபையில் கூட பேசினார்.  பத்திரிக்கைகளில் கூட துப்பாக்கி சூடு ஏன் நடந்தது என்பது பற்றி விரிவாக போடவில்லை. கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி சூடு, இரு சமூகத்துக்குள்ளே மோதல் இவை தான் செய்தியாக வந்தன.

ஆனால் உண்மை என்ன என்பதை அறிய காலம் அதிகம் பிடித்து விட்டது. காரணம் கடந்த 15.04.10 முதல் 24.04.10 வரை மேட்டூர் – கோவிந்தப்பாடி-க்கு பேருந்து மாலை 5 மணிக்கு மேல் இயக்கப்படவில்லை. நேற்று(25.04.10) அன்று இயக்கப்பட்டதாக சொன்னாலும் பாதுகாப்புடனே சென்றது. 24-ம் தேதி வரை கொளத்தூர் – கோவிந்தப்பாடி வரையிலான கிராமங்களில் போலீசுப்படைகள் குவிக்கப்படிருந்தன. 25ம் தேதிதான் கருங்கலூர் தவிர மற்ற கிராமங்களில் போலீசுப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. தாக்குதல் நடந்த கருங்கலூரில் தற்போது போலீசு குறைக்கப்பட்டிருக்கின்றது.

வன்னிய சாதி வெறியர்களைப் பொறுத்தவரை”பறையனுங்க வேணாமுன்னு தான நாங்க இருக்கோம், எதுக்கும் அவுனுங்கள கூப்புடறதுல்ல, தள்ளி வச்சிருக்கோம் , சும்மா மரியாத கொடு , மரியாத கொடுன்னு தேவையில்லாம பிரச்சினை பண்றாங்க. பெரியவங்க முன்னாடி கால் மேல கால் போட்டுகிட்டு இருக்கானுங்க, பெரியவங்க முன்னாடி சிகரெட்டு குடிக்கறாங்க புகைய வுடுறானுங்க” இது தான் அவர்கள் குற்றச்சாட்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து போகக்கூடாது, குடைபிடித்து போகக்கூடாது, வன்னியர் வந்தால் மரியாதை தரவேண்டும், சைக்கிளில் செல்லக்கூடாது என எல்லா கொடுமைகளும் நடந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் வன்னிய நாட்டமைகள்தான் வருவார்கள். தீர்ப்பு சொல்வார்கள். பின்னர் இப்பகுதி இளைஞர்கள் தங்களை அப்போது உருவாகிக்கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகளில் இணைத்து சாதி ஆதிக்கத்தை எதிர்த்து வந்தனர்.

அடிவாங்கிக்கொண்டே இருந்த அவ்விளைஞர்கள் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் என்று பேசவும் ஆரம்பித்தார்கள். முன்பெல்லாம் சாதாரணமாக 19 வயது வன்னிய பெரியவருக்கு மரியாதை தராத 60 வயது பறைய சின்னக்குழந்தைக்கு அடி விழும். இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை. நாம் அடித்தால் அவர்களும் அடிப்பார்கள் என்ற எண்ணம் வன்னிய வெறியர்களின் மத்தியில் வேர்விட்டவுடனே, இவர்களை எப்படியாவது ஒழித்துக்கட்டவேண்டுமென்று ஒவ்வொரு வருடம் திருவிழாவின் போதும் முயற்சி நடக்கும். சில முறை அப்படிப்பட்ட நிகழ்வுகள்  அரங்கேறி இருக்கின்றன. இந்த ஆண்டு அந்த ஆதிக்க சாதிவெறி அப்பட்டமாக வெடித்துவிட்டது.

இந்தப்பறையர்கள் தான் நாம் என்ன சொன்னலும் கேட்பதில்லையே அவர்களுக்கு ஏன் நாம் வேலை தர வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சமூகப்புறக்கணிப்பு  விரிக்கப்பட்டது. எப்போதும் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவதற்கு அனுமதியில்லை, அவர்களுக்கு முடி வெட்டுவதற்கு இங்கு எந்த சலூனும் திறக்கப்படவில்லை. தலித்துக்கள் முடி வெட்ட வேண்டுமானால் கொளத்தூருக்குத்தான் வரவேண்டும். அதுவும் இல்லை எனில் சேரிகளிலேயே முடி வெட்ட தாழ்த்தப்பட்டவரிலேயே ஒருவர் இருக்கிறார். இது அனைத்து கொளத்தூர் கிராமங்களிலும் தொடர்ந்தாலும் கருங்கலூருக்கு சீக்கிரம் திருவிழா வந்து விட்டதால் சீக்கிரமே தாக்குதலும் நடந்து விட்டது.

கருங்கலூர் வன்னிய நாட்டமைகள்  தீர்ப்பு சொன்னார்கள் ” நமக்கு அடங்காத பறையனுங்க இனிமே கோயில் விழாவுக்கு மேளம் அடிக்க கூடாது ,சக்கிலிங்கள வச்சு மேளம் அடிச்சுக்கலாம் “.  திருவிழாவின் முதல் நாள் முடிவில் ஆதி திராவிடர்கள் சிலர் மேளம் அடித்த அருந்ததியர்களிடம் “ஏன் நீங்கள் மேளம் அடித்தீர்கள்?” என்று தகராறு செய்ய, அது வாய்ச்சண்டையில் முடிந்திருக்கிறது.

சில அருந்ததியர்கள் வன்னியர்களிடம் ” நீங்க அடிக்க சொன்னீங்க, அவங்க சண்டைக்கு வராங்க ” என்று சொன்னவுடன் தாக்குவதற்காகவே காத்திருந்த வன்னிய வெறியர்கள் 15ம் தேதி காலை 8 மணியளவில் பா.ம.க கவுன்சிலர் மாரப்பன் தலைமையிலான 200 பேர் கொண்ட கும்பல்  கருங்கலூர் ஆதி திராவிட குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளை அடித்து நொறுக்குகிறது. 7 பேருக்கு பலத்தக்காயம். அடித்து முடித்த கும்பல் ஆதிதிராவிட குடியிருப்பிற்குள் யாரும் நுழையாதவாறு முற்றுகையிடுகிறது. ஆளும் கட்சி போன் பண்ணுனா உடனே வரும் 108 ஆம்புலன்ஸ் ஊருக்கு வெளியே நான்கு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தது.

வன்னியர்களின் தயவில்லாததால் மருத்துவம் பறையர்களுக்கு கிடைக்கவில்லை. தகவல்  கொளத்தூர் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு தெரிய வர வேறு வழியின்றி அவர்கள் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை உடைத்தும் தாக்குதல் சம்பவத்தை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் கொளத்தூர் போலீசு தனது ஜீப்பில் போய் காயமடைந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்தது. உள்ளூர் வி.சி.யினர் பிரச்சினையை அதிகப்படுத்துவார்கள் என்றெண்ணிய காவல் துறை 16ம் தேதி காலை  கருங்கலூருக்கு வந்தது கவுன்சிலர் மாரப்பன் உட்பட மூவரை கைது செய்ய வந்தது. வஜ்ரா வாகனக்கள் அணிவகுத்து வரிசையாய் நின்றன.

வெறியூட்டப்பட்ட வன்னிய மக்கள் மாதேஸ்வரன் மலைப்பாதையை மறித்து மறியலில் இட்டுபட்டு சாலையில் இருந்த ஒரு லோடு ஜல்லி கற்களையும் போலீசுப் படை மீது வீசித் தாக்குதல் நடத்தியது. ஓடிய காவலர்கள்  துரத்தி துரத்தி மண்டையுடைக்கப்பட்டனர்.

பின்னர் துப்பாக்கிசூடு 9 ரவுண்ட் என்று சொல்லப்படுகின்றது. அதில் காயமடைந்த சின்ன துரை மட்டும் அரசு மருத்துவ மனையில் இருக்க, இன்னும் சிலர் வெளியூரில் ரகசியமாய் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பா.ம.க தலைவர் ஜீ.கே.மணி “சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம்  துப்பாக்கி சூடென்று” அரசை குற்றம் சாட்டினார்.

எது சின்ன பிரச்சினை? தாழ்த்தப்பட்ட மக்களின் வீடு புகுந்து அடிப்பது சின்ன பிரச்சினையா? அவர்களுக்கு (கொளத்துர் தவிர) கொளத்தூர் கிராமங்களில் கோயிலிலே நுழைய அனுமதி இல்லை, தீ மிதிக்கவோ, கரகம் எடுக்கவோ அனுமதி இல்லை, கருங்கலூர் – கோவிந்தப்பாடி வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி வெட்ட சலூன் கடைகள் மறுப்புத் தெரிவிக்கின்றன. இதெல்லாம் சிறிய பிரச்சினைதானே ‘சத்திரியர்களுக்கு’?

ஆதிதிராவிடர்கள் மீது தாக்குதலும் தொடுத்துவிட்டு புது புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள் பா.ம.கவினர். “சக்கிலிங்கள பறையனுங்க வூடு பூந்து அடிச்சுட்டனுங்க, பாவம் சக்கிலி பொம்பளங்க  சிலமண்டையெல்லாம் உடஞ்சு போச்சு, நாங்க ஏண்டா இப்படி பண்ணுறீங்கன்னு சும்மா அவங்க ஊட்டுல போய் ரெண்டு அறை விட்டோம் அவ்வளவுதான், இதை என்னவே பெரிய பிரச்சினையாக்கிட்டாங்க இந்தப்பசங்க ”

ஆதி திராவிடர்களுக்கும் அருந்ததியர்களுக்கும் இடையில் மோதல் ஏதும் நடக்கவில்லை,  அப்படி நடந்தாலும் உன்னை யார் நாட்டாமையாக்கியது? சில ஆண்டுகளாக நடக்காத தாக்குதல் ஏன் இம்முறை நடந்தது?

கருங்கலூர் வன்னிய சாதிவெறியை எதிர்க்கும் தலித் இளைஞர்கள்!

இப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதி திராவிட இளைஞர்கள் அதிகமாவும் அருந்ததியர்கள் சிலரும் இருக்கின்றனர். அருந்ததியர்களைப் பொறுத்தவரை போதிய அளவுக்கு விழிப்புணர்வு இல்லாதிருப்பதாக கூறப்படுகின்றது. பறையர்கள் வன்னியர்களின் மேலாதிக்கத்தை தொடர்ந்து எதிர்த்து வருவது  அவர்களின் கோபத்தை கிளறிக்கொண்டிருந்தாலும் அருந்ததியர்களும்  ஆதிதிராவிடர்களோடு சேர்ந்து எதிர்க்க ஆரம்பித்ததுதான் இத்தாக்குதலுக்கு காரணம்.

சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அருந்ததிய இளைஞன் ஒருவர் அந்தியூரை சேர்ந்த வன்னிய பென்ணை காதலித்து கூட்டிக்கொண்டு வர, அந்தியூர் பா.ம.க மூலமாக கவுன்சிலர் மாரப்பனுக்கு தகவல் வர,அதற்குள் பயந்து போன இளைஞனின் தந்தை மாரியப்பன் “பையன் தெரியாம கூட்டிட்டு வந்துட்டான் பொன்ணை கூட்டிட்டு போயிடுங்க” என்றிருக்கிறார். அதற்குள் இளைஞனும் அப்பெண்ணும் காவேரிபுரம் விடுதலை சிறுத்தைகளிடம் தஞ்சம் புகுந்து விட்டனர்.

காவேரிபுரம், வி.சிக்களின் செல்வாக்கான பகுதி என்பதால் பா.ம.க  வன்னிய வெறியர்கள்  மாரியப்பனின் வீட்டை அடித்து நொறுக்கி அவரின் மனைவி மற்று இரு உறவினர்களை பலமாக தாக்கியிருக்கின்றனர். பின்னர் அவரின் ஆடு, மாடு, டி.வி.எஸ் வண்டியை திருடிக்கொண்டு போயிருக்கின்றனர். இதை ஒளிந்திருந்து பார்த்த மாரியப்பன் வி.சிக்களிடம் சொன்னவுடன், அவர்கள் அடுத்த நாள் ஈரோடு சாலையில் 3 மணி நேரம் மறியல் செய்கிறார்கள். வேறு வழியின்றி மாரப்பன் உள்ளிட்ட சிலர் மீதி பி.சி.ஆர் வழக்கு போடப்படுகின்றது. ஆனால் மாரப்பனோ கைது செய்யப்படாமல் சட்டத்தில் ஓட்டைகளை வைத்து போலீசின் உதவியால் எப்படியோ முன்ஜாமீன் பெற்று விட்டு தப்பிக்கிறார்.

“வன்னிய பொண்ணை சக்கிலி தொட்டுட்டான் என்பதுதான்  பிரச்சினை, அதுவும் பொண்ணை மீட்க முடியாதிருப்பது வன்னியர்களுக்கு மாபெரும் அவமானம், இன்னும் அவர்கள் ஏதோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டிருப்பது மிகக் கேவலம்”. அதற்கு சின்ன பரிகாரம் பறையர்களின் மீதான தாக்குதல். நாங்க சொல்றதக் கேட்டுக் கொண்டு இருந்தால் ஏன் இந்தப்பிரச்சினை? என்கிறார்கள் வன்னிய சாதி வெறியர்கள்.

இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விசயம் இருக்கிறது. இது கூட எதேச்சையாக பேருந்தில் ஒருவர் பேசியதைக் கேட்டதுதான் “டி.எஸ்.பி தாழ்த்தப்பட்ட சாதிதான , அவரு போன முறை அந்தப் பையன் வன்னிய பொண்ணை கூட்டிக்கிட்டு வந்தப்போ பாதுகாப்பு கொடுத்தார், டி.எஸ்.பி நம்மாளுங்க கையை பிடிச்சு ஜீப்புல ஏத்துறத பார்த்தவுடனே நம்மாளுங்க செம டென்சன் ஆயிட்டாங்க, போலீசுக்கு செம அடி”.

இப்போது வன்னியர் சங்கத்தினர் கொளத்தூர் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களூக்கு மீண்டும் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.  பிரச்சினை எனில் வழக்குக்கான நிதியை நாம் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்றும் அது  வன்னியசாதிக்கு கடைமை என்றும் சாதிவெறி பரப்பி வருகின்றனர்.

உழைக்கும் மக்களின் பிரச்சினையைத் திசைதிருப்பும் வன்னிய சாதிவெறி!

வீரப்பன் தேடுதல் வேட்டையில் அப்பாவி மக்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். சோளகர் தொட்டி என்ற நூல்  சித்திரவதைகளின் சில பக்கங்கள்தான். வீரப்பனின் கூட்டாளி என்று சந்தேகித்து தினமும் பலரை இழுத்து வரும் அதிரடிப்படை அவர்களை தினமும் உதைத்துக் கொண்டே  இருக்கும். அப்படி அடிபட்டவனில் ஒருத்தன் கூட வன்னியன் இல்லையா, அந்த சித்திரவதை முகாம்கள்  அருகில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்குமா வன்னியர் சங்கம்?

கொளத்தூர் கிராமங்களில் விவசாயம் அறவே இல்லை, விவசாயம் செத்துப்போய் விட்டதே, நம் வாழ்வினை பறித்து விட்டார்களே என்ற கோபம் அரசாங்கத்துக்கெதிராக எப்போதும் வருவதில்லை. பி.டிபருத்தியை பயிரிட்டு நாசாமாய்ப்போன வன்னியனை எப்போதும் வன்னியர் சங்கம் முகர்ந்து பார்ப்பதில்லை. ஆனால் பறையன் கால்மேல் கால் போட்டால் கோபம் வரும். மக்களைத் தின்னும் ஆளும் வர்க்கத்துக்கெதிராக எப்போதும் தூக்கப்படாத அரிவாள், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமையைக் கேட்கும் போது சீறிப்பாய்ந்து வருகிறது.

“வடமாவட்டம் முழுவதும் வன்னியர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்து, எங்களுக்கு உள் ஒதுக்கீடு கொடு” என்ற போர்வையில் வன்னிய வெறி பரப்பும் பா.ம.கவினர், இந்த தனியார்மய தாராளமய உலகமய சூழலில் இட ஒதுக்கீடு செல்லாக்காசுதான் என்பதைப் பற்றி பேச மறுக்கின்றனர். கல்லூரிகளில் படிக்க லட்சக்கணக்கில்  செலவு, தனியார்மயத்தின் விளைவால் மூடப்பட்ட ஆலைகளால் துரத்தப் படும் தொழிலாளர்கள்  இது எதைப்பற்றியும் பா.ம.க மற்றும் எந்த சாதிச்சங்கமும் பேசுவதில்லை. ஏன் பேசுவதில்லை என்பதல்ல, அவர்கள் பேச மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

மேட்டூரில் CPM பொரட்சி கட்சியின் சி.ஐ.டி.யூ தான் மிகப்பெரிய தொழிற் சங்கம். ஏற்கனவே தோலர் சீரங்கன்  சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். மாவட்டச்செயலாளரும் இந்த மேட்டூர் தான். இந்தப் பிரச்சினையைப்பற்றி அவர்களுக்கு பேசவே நேரம் இல்லை. மேடை போட்டு எவ்வளவு அழகாக செயாவுக்கு சேலை துவைக்கிறோம் என்று சொல்லவே அவர்களுக்கு  நேரம் சரியாக இருக்கிறது. தனிக்குவளை முறைக்கெதிராக போராடப்போன அந்த சி.பி.எம் தோலர்களையும் காணவில்லை. ஏற்கனவே கொளத்தூர் கிராமங்களில் தீண்டாமை இருப்பதாக  சவடால் விட்ட தோலர்கள் தற்போது தங்களின் வாய்களை இருக்க மூடிக்கொண்டார்கள்.

வன்னிய சாதி வெறியர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்க ஜீ.கே. மணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். முதல் கட்டமாக அமைதிகமிட்டி அமைக்கப்பட்டு 21-ம்தேதி திருவிழா தொடங்கப்பட்டு முடிந்தும் விட்டது. வருகின்ற வாரத்தில் அரசு மூலமாக வழக்குகள் பைசல் செய்யப்படும் என்று தெரிகிறது. இது பற்றி திருமாவளவன் ஏதும் அறிக்கைகூடவிடவில்லை.

ஆளும் வர்க்கங்களிடம் சரணடைந்த விடுதலைச் சிறுத்தைகள்!

இந்த ஆதிக்கத்துக்கெதிராக போராடும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் என்ற ஆளும் வர்க்கங்களிடம் சரண்டைந்த கட்சியில் இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். சுமார் 4 அண்டுகளுக்கு முன்  வன்னியர் தலித் பிரச்சினை தீவிரமாக இருந்த போது தேர்தலும் வந்தது. ஜி.கே மணி மேட்டூர் தொகுதியில் வேட்பாளராக நின்றார். அவருக்கு வி.சிக்கள் ஓட்டு சேகரித்தனர். பெரும்பான்மை தலித் மக்கள்  பா.ம.கவிற்குத்தான் வாக்களித்தனர். “சாதிவெறி எல்லை மீறிபோன இங்கு பா.ம.கவோடு எங்களால் எப்படி இணைந்து வேலை செய்ய முடியும்? இதோ இப்போது கைகுலுக்கிக்கொண்டால் சாதி பிரச்சினை ஒழிந்து விடுமா?” என்று யாரும் கேட்கவில்லை.

சட்டசபையில் சின்ன பிரச்சினை என்று ஜி.கே மணி பேசும் போது  வி.சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்ன செய்து கொண்டிருந்தார்?  வன்னியர்கள் மீதான துப்பாக்கிச்சூடு என்று இதை மாநில பிரச்சினையாக்கினார் ஜி.கே.மணி. அப்போது திருமா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சியினருக்கு தெரிகிறதா என்பதும் புரியவில்லை.

சாதி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்கள் வி.சிக்களால் தொடர்ச்சியாக நடத்தப்படுவதில்லை. அவர்களுக்கு திருமாவளவன் புகழ் பாடவே நேரம் சரியாக இருக்கும். வி.சி கட்சிக்கு இப்போதைய  வேலையே கட்டப்பஞ்சாயத்துதான். உழைக்கும் மக்களிடமிருந்து அவர்கள் வெகுதூரம் விலகிப்போய்விட்டார்கள். ஆதிக்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக போராடும் தருணங்களிலே ஒரு தேர்தல் வரும். தேர்தலில் எதை எதிர்த்துப் போராடுகிறார்களோ அதற்காக ஓட்டு கேட்கும் அவலமும் நடைபெறும். இந்த இலட்சணத்தில் விடுதலை எப்படி?

இப்படி பாதிக்கப்படும் இளைஞர்கள் போராடினால் அவை கட்சியின் துரோகத்தால் முற்று பெறாமலே போய்விடுகிறது. சாதிவெறியை ஒழிப்பதோ, சாதியை ஒழிப்பதோ அவ்வப்போது எடுக்கப்படும் தாக்குதலுக்கான எதிர் போராட்டத்தால் மட்டும் முடியாது. அது தொடர்ச்சியாக முனைப்புடன் அரசியல், பண்பாட்டு, கலாச்சார வடிவங்களில் ஊன்றி இருக்க வேண்டும். அதன்படி வி.சி இயக்கம் மூலம் சாதி ஒழியும் என்பது பகற்கனவே.

ஆனால் தாழ்த்தப்பட்ட இந்த இளைஞ்ர்கள் திருமாவைபோல கருணாநிதி வீட்டிற்கும், ஜெயா தோட்டத்திற்கும் சென்று  பொறுக்கித் தின்னவில்லை. பாதிப்பு இருக்கும் வரை எதிர்தாக்குதலும் இருக்கும் என்பதுதான் நியதி . அவ்வகையில் அவர்களின் ஆதிக்கத்துக்கெதிரான போரில் பிற உழைக்கும் மக்களும், புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் அவர்களோடு களமிறங்க வேண்டியது அவசியம்.

______________________________________________________

– சேலம் மாவட்டத்திலிருந்து வினவு நிருபர்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. // ///சுமார் 4 அண்டுகளுக்கு முன்  வன்னியர் தலித் பிரச்சினை தீவிரமாக இருந்த போது தேர்தலும் வந்தது. ஜி.கே மணி மேட்டூர் தொகுதியில் வேட்பாளராக நின்றார். அவருக்கு வி.சிக்கள் ஓட்டு சேகரித்தனர். பெரும்பான்மை தலித் மக்கள்  பா.ம.கவிற்குத்தான் வாக்களித்தனர். “சாதிவெறி எல்லை மீறிபோன இங்கு பா.ம.கவோடு எங்களால் எப்படி இணைந்து வேலை செய்ய முடியும்? இதோ இப்போது கைகுலுக்கிக்கொண்டால் சாதி பிரச்சினை ஒழிந்து விடுமா?” என்று யாரும் கேட்கவில்லை/// //
  4 ஆண்டுகளுக்கு முன்பு கோ.க.மணி மேட்டூரில் போட்டியிட்ட போது, விடுதலை சிறுத்தைகள் பா.ம.க.வுக்கு எதிரணியில் அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்தனர். 
  அப்புறம் எப்படி வி.சிக்கள் பா.ம.க.வுக்காக வாக்கு சேகரித்திருக்க முடியும்?  பா.ம.க.வையும் திட்டவேண்டும், வி.சிக்களையும் திட்டவேண்டும் என்பதற்காக கட்டுக்கதைகளை அள்ளிவிடாதீர்.
  கொளத்தூரில் வன்னியரின் நிலையும், தலித்துகளின் நிலையும் ஒன்றுதான்.  காலம் காலமாக நிலவிவரும் சாதி வேறுபாடுதான் இருவரையும் பிரிக்கிறது.  கல்வி, பொருளாதார நிலைகளில் மிகமிகமிக பின் தங்கியிருக்கும் வன்னியர்களின் அறியாமையால் சில பிரச்சினைகள் எழலாம். அது தவறுதான். அதற்காக வார்த்தைக்கு வார்த்தை ‘வன்னிய சாதிவெறி’ என்பது வன்னியர்களுக்கு எதிரான உங்களின் காழ்ப்புணர்ச்சியைதான் காட்டுகிறது.

  • அருள்,

   கடந்த தேர்தலில் வேண்டுமானால் நீங்கள் சொன்னது போல இருந்தாலும் பா.ம.கவும், வி.சிக்களும் ஒரே கூட்டணியில் இருக்கவில்லையா என்ன?

   வன்னியரும், தலித்துக்களும் வர்க்கமென்ற நிலையில் ஒன்றுபட்டாலும் சாதி ரீதியில் சமமாக இல்லையே? இதை காலம் காலமாக நிலவி வரும் சாதி வேறுபாடு என்று ஏதோ இரு குழுக்கள் பிரிந்திருப்பது போல சொல்கிறீர்கள். இல்லை.வன்னிய சாதி, தலித் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதுதான் காலம் காலமாக நிலவிவரும் அந்த வேறுபாடு.

   அதை ஒத்துக் கொண்டு வன்னிய சாதி வெறியை கண்டிக்காமல் சமப்படுத்தி பேசுவது கூட சாதி ஆதிக்கத்திற்கு உதவி செய்வதுதான்.

   • வன்னியரின் நிலையும், தலித்துகளின் நிலையும் ஒன்றுதான்… ///////
    அருள், இதை உங்களால் விளக்க முடியுமா?

    • முதல்ல நீங்க யாரு என்னன்னு சொல்லிட்டுத்தானே கேக்கணும்ணே?

    • இந்த பதிலை தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன். அதையே சொல்லிவிட்டீர்கள். நான் யாருன்னு சொல்லிவிட்டால் நீங்கள் சொல்லுவீர்கள் என்று என்ன உத்திரவாதம் அய்யா?
     அதனால் நீங்கள்
     முதலில் சொல்லுங்கள் நான் பின்னர் சொல்லுகிறேன்.
     தங்களுக்கு தைரியம் போதவில்லை என்று நெனைக்குறேன்.

      • ஜாதி இல்லன்னு சொல்ரநன்பர்களே !நீஙகல் கலப்பு திருமனதில் பிரந்தவரா ? கட்டாயமக இருக மாட்டிர்கல் ! உஙல் மனைவியும் உன் ஜதியில்ல தான் இருபார் !

    • முட்டாஊ அண்ணே, சாதி பத்தி கேக்குறானே இவனையெல்லாம் செருப்பால அடிக்கவேணாமான்னு பக்கத்துல பேசிகிறாங்க.. சூதானமா இருங்க!!!

    • அசிங்க குறி அண்ணே வணக்கம். வந்துடீயலா. இங்க என் பக்கத்துலயும் பேசிக்குறாங்க உங்கள எல்லாம் விளக்குமாறால அடிகொனுமுன்னு. சும்மா சும்மா சாதி ஆதிக்க வெரின்னுட்டு உங்க கம்முனி வெறித்தனத்த காட்டுறேல்ன்னு

   • //சுமார் 4 அண்டுகளுக்கு முன் வன்னியர் தலித் பிரச்சினை தீவிரமாக இருந்த போது தேர்தலும் வந்தது. ஜி.கே மணி மேட்டூர் தொகுதியில் வேட்பாளராக நின்றார். அவருக்கு வி.சிக்கள் ஓட்டு சேகரித்தனர். பெரும்பான்மை தலித் மக்கள் பா.ம.கவிற்குத்தான் வாக்களித்தனர்.//

    தவறான தகவலை கொடுத்து இருக்குறீங்க அதை ஒத்துக்கோங்க. கூட்டணி பற்றி பிறகு பேசலாம் 2006-ல் எப்படி விசிகவினர் ஜி.கே மணிக்கு ஓட்டு கேட்டனர்?

    எந்த தரவின் அடிப்படையில் இந்த கருத்து?

  • தோழர் மா.சே நீண்ட நாட்களாக விவாதங்களில் உங்களைக் காண முடியவில்லை. மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பங்கெடுங்கள்.

   • தோழரே, அலுவலகத்தில் பின்னூட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் முன்போல விவாதங்களில் பங்கெடுக்க முடியவில்லை, மற்றபடி
    வினவை தினமும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

 2. இந்தச்செய்தி மிகவும் வருத்தமாகவும் தமிழர்களுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்துவதுமாய் உள்ளது. இந்த லட்சணத்தில் பார்ப்பான் பார்பனீயம் என்று சிலர் உளறிக்கொண்டுள்ளனர். தமிழகத்தின் தலையெழுத்து.

 3. வினவு நிருபரின் இப்பதிவுக்கு, தமிழ் வலைபதிவுலகில் வன்னிய டோண்டுகளாக வலம் வரும் குழலி தமிழ்சசி ஆகியோரின் எதிர்வினை என்னவென்று அறிய அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம்

  • பிச்சைமணி,

   நாங்கள் அறிந்தவரை குழலியை வன்னிய டோண்டு என்று சொல்லலாம். தமிழ்சசியை அப்படி சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லையே? நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்கள்?

   • பாமாக பற்றிய அவரது இடிபோன்ற மவுனத்தை வைத்து சொல்கிறேன்

   • வினவு , தங்களையும் ஒரு கம்முனி டோண்டு என்று கூட சொல்லலாமா?

    • ஆதிக்கம் செய்து அடிமைப்படுத்துவதை டோண்டு என்றால் ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைக்கு போராடுவது கம்யூனிசம் என்று சொல்ல்லாம். எப்படியோ மூட்டு அண்ணன் வெட்டி ஆபிசர் வேலையை விடுத்து இப்படி எப்பாவாச்சும் உருப்படியா ஒன்று இரண்டு எடுத்து விட தூண்டுகிறார்.

   • சற்று தாமதமாக பதில் சொல்வதற்கு மன்னிக்கவும். ஆதிக்கம் செய்து அடிமைபடுதுவதை நான் கம்முனிசம் என்று சொல்லுவேன். என்னை பொறுத்தவை டோண்டு என்றால் அந்த டோண்டு ராகவனை தான் குறிக்கிறது. உங்கள் நினைப்பு செயல் சொல் நடத்தை எல்லாம் ஒரு தனி மனித காழ்ப்பைதான் உமிழ்கிறது. இதில் இருந்தே தெரிகிறது உங்கள் ஆதிக்க உணர்வு. அதுதான் உங்கள் எல்லோருடைய கம்முனிசம். நல்ல ஆபீசர் வேலை தான் பார்குறேல் போங்கோ.

    • டோண்டுங்குற உங்க குருநாதர் பார்ப்பனியத்தின் பதிவுலக குறியீடு, வெறும் தனிநபரல்ல. அதனால் சாதி ஆதிக்கத்தின் அடையாளமாக அவரைச் சொல்வது அவருக்கே பிடித்தமானது எனும்போது மூட்டு அண்ணனுக்கு ஏன் வேர்க்கிறது? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்?

   • அவருக்கு பிடித்தமானதை அவர் தைரியமாக சொல்லுகிறார். அவருடைய தைரியத்தை தான் நீங்கள் ஆதிக்க வெறி என்று சப்பை கட்டுகிறீர்கள். தங்கள்
    நெஞ்சு ஏன் பதைபதைகிறது? அதை ஏன் உங்களால் சொல்ல
    முடியவில்லை.

    • முட்டாஊ அண்ணே….வினவுக்கு பிடித்தமானதை வினவு தைரியாமாக சொல்லும் போது மட்டும் இந்த முட்டாஊ என்ன மயித்துக்கு மணியாட்டிகினு ஆதிக்கம், அடிமை, தப்புன்னு கருத்து சொல்ல வறான்னு..நான் கேக்கல பக்கத்துல இருக்குற கோவாலு கேக்குறான்

    • அசிங்க குறி அண்ணே . உங்களுக்கு பிடித்ததை நீங்கள் ஆட்டுகின்றேல். அவாளுக்கு பிடித்ததை அவாள் ஆட்டுகிறாள்.

    • தோழர் வினவு ஒரு கோரிக்கை தோழர் கேள்விக்குறியை(அருமையான பெயர்) இழிவுபடுத்துவது போலஅசிங்ககுறி, குறி என்றெல்லாம் ஆபாசமாக எழுதுவதை தாங்கள் அனுமதிக்ககூடாது

    • நன்பர் மரண அடி; வினவுதளத்தின் ஸ்பெஸலிட்டியை எடுக்க சொன்ன எப்புடி பின்னூட்டங்களை மட்டறுக்காமல் வெளியிடுவதற்கு ஒரு தில்லு வேனும் அது வினவுட்ட இருக்கு இதுக்கே பயந்த எப்புடி புரட்சி என்பது மாலை நேர பொழுதுபோக்கு அல்ல மிஸ்டர் மரண அடி

    • ஐதர் நான் பின்னூடத்த நீக்கனும்னு சொல்லவில்லை ஒரு தோழரை ஆபாசமாக எழுதுவதைதான் நீக்க சொன்னேன், அப்பறம் புரட்சி மாலை நேர பொழுது போக்கு இல்லை என்பது எனக்கும் தெரியும் , பயப்படுற ஆள் நான் இல்ல கண்ணு நம்ம பேரு மட்டும் மரண அடி இல்ல நம்ம அடியும் மரண அடிதான் ஐதர் நண்பா.

    • ஹைதர் , மரண அடி.. நீங்க அண்ணன் முட்டாஊ வ பத்தி பீல் பண்ணாதீங்க… அவரும் நானும் இப்பிடி ஒருத்தர ஒருத்தர் திட்டிகிட்டு எங்க மென்டல் டிப்ரசன கொரச்சுகிறோம்.. இதுக்கு போய் புரட்சி அது இதுன்னு …

    • ///கண்ணு நம்ம பேரு மட்டும் மரண அடி இல்ல நம்ம அடியும் மரண அடிதான் ஐதர் நண்பா/// அண்ணே மரணஅடி களறி தெரியும அதுல பல ஸ்டெப்பு இருக்கு அடிவரிசை. புடிவரிசை.குத்துவரிசை.பூட்டுவரிசை இப்புடி நம்ம இளையாங்குடி உசேன் கனி உஸ்தாத் அந்த நாட்டுக்கலையை சிறப்ப கத்துக்கொடுத்தார் பிராக்டிகல் பாத்து ரோம்ப நாளச்சு நம்ம அடியும் மரண அடியுன்னு சொன்னிங்களே நீங்கதான் எனக்கு சரியான ஆளு போட்டு பாப்பமா.

 4. தமிழகத்தில் நிலவும் சாதிய அடக்குமுறைகளும், சாதிய மோதல்களும் முழுமையாக ஒழிந்தால் மட்டுமே தமிழன் மானத்தோடு நிம்மதியாக வாழமுடியும். இதற்கான பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

  தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பிற சமுதாயத்தினர் நிம்மதியாக வாழமுடியாமல் ஊரை காலிசெய்த நிகழ்வுகளையும்…, ஒருசில தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேற்று சாதி பெண்களுக்கு எதிராக திட்டமிட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடும் நிகழ்வுகளையும்… வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஒருசில தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வி.சி.போன்ற இயக்கத்தினருக்கும் பணம் காய்க்கும் மரமாக இருப்பதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • சீ.பிரபாகரன்
   //தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பிற சமுதாயத்தினர் நிம்மதியாக வாழமுடியாமல் ஊரை காலிசெய்த நிகழ்வுகளையும்…, ஒருசில தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேற்று சாதி பெண்களுக்கு எதிராக திட்டமிட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடும் நிகழ்வுகளையும்… வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஒருசில தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வி.சி.போன்ற இயக்கத்தினருக்கும் பணம் காய்க்கும் மரமாக இருப்பதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.//

   பிரபாகரன் நீங்கள் எந்த இடத்தில் நடந்தது என்று சொல்லமுடியுமா?
   சாதி வெறியை சாந்த்தமாக வெளிப்படுத்துகிறீர்கள்.
   சொல்லக்கூசும் சோகக்கதைகள் நிறைந்ததுதான் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை.அவர்களின் நிலைக்கு எல்லாம் சாதிக்காரர்களும்தான் காரணம்.

   • நான் வன்னியர் சமூதாயத்தைச் சேர்ந்தவன். நீங்கள் சொல்வதுபோல் சாதிவெறி எனக்கு இல்லை. தாழ்த்தப்பட்வர்களுக்கு எதிராக நிகழ்ந்த சொல்லக்கூசும் சோகக்கதைகளை நான் அறிவேன். தாழ்த்தப்பட்ட சமூதாயம் தனக்கான அரசியல் அதிகாரங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற சிந்தனையோடு அவர்களோடு இணைந்து களப்பணியாற்றியவன் நான். அதற்காக சாதியின் பெயரால் யார் தவறுசெய்தாலும் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது. தாழ்த்தப்பட்டவர்களால் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளான பிறசமூகத்தினர் கடலூர் மாவட்டத்தில் ஏராளம். குறிப்பாக கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் செறிவாக வாழ்கிறார்கள். இப்பகுதியைச் சுற்றியுள்ள கொங்கராயனூர், எழுமேடு, அகரம், மேல்பட்டாம்பாக்கம் நகரம், வாழப்பட்டு போன்ற பகுதிகளில் வாழ்ந்த பிற சமூதாயத்தைச்சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் தாக்குதலுக்கு ஆளாகி பலர் ஊரை காலிசெய்துவிட்டனர். வன்கொடுமைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்கள் தமிழ்நாட்டில் உண்டு. கடலூர், விழுப்புரம் மாட்டத்தில் வசூல்வேட்டைக்கும், சொந்த விருப்புக்கும், கொடுக்கல் வாங்கல் பிரச்சனைக்கும், அரசியல் காரணங்களுக்காகவும் இந்தச்சட்டம் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து போராடிவரும் தோழர். கல்யாணி மீதே இந்தச்சட்டம் பயன்படுத்தப்பட்டது என்பதை தாங்கள் அறிந்துகொள்ளவேண்டும். இதுதொடர்பான ஆரோக்கியமான விவாதங்கள் தமிழ்நாட்டில் நடைபெறவேண்டும் என விரும்புகிறேன்.

    • குற்றம் யார் செய்தாலும் குற்றம்தான்.  நானும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவன் தான். 

     சீ.பிரபாகரன் – நீங்கள் கூறுவது உண்மை என்று நான் சாட்சி கூறுகிறேன்.

    • சீ.பிரபாகரன்//
     நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அது கண்டிக்க வேண்டியதுதான். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் செய்யும் தவறுகளை உளவியல்ரிதியில் பார்க்கவேண்டியது. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய நிகழ்வுகளை வைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக வைப்பது சரி இல்லை தோழர்.

    • தோழர் நந்தன் அவர்களுக்கு வணக்கம். ஒரு சில நிகழ்வுகளை வைத்துக்கொண்டு ஒரு சமூதாயத்தையே நான் குற்றம் சொல்லவில்லை. அதுபோல் ஒருசில வன்னியர்கள் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த வன்னியர்களும் சாதிவெறியர்களாக சித்தரிக்கப்படுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் நிலை குறித்த போதுமான அறிவோ தெளிவோ இல்லாத சமூகமாகத்தான் பெரும்பான்மையான வன்னியர்கள் வாழ்ந்துவருகிறார்கள். மாரியாத்தாளுக்கு கூழ் ஊற்றுவது, ஐயனாருக்கு கெடாவெட்டுவது, திரௌபதிக்கு நெருப்பு மிதிப்பது, முருகனுக்கு காவடி எடுப்பது அல்லது குடி, கூத்தியா, வீராப்பு, வீம்புக்கு கத்திமுழுங்குவது, ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு கொடி பிடிப்பது, அரைஅடி வாய்க்கால் வரப்புக்காக அண்ணன் தம்பியை பகைத்துக்கொள்வது போன்ற வட்டத்தைத்தாண்டி வன்னியர்கள் வெளிவரவில்லை என்பதே உண்மையான நிலை. இப்படிப்பட்டச் சூழலில் தாழ்த்ப்பட்டவர்கள் வன்னியர்களை எதிராயாக நினைப்பதும் வன்னியர்கள் தாழ்த்தப்பட்டவர்களை எதிராயாக நினைப்பதும் தமிழின எதிரிகளுக்கு மட்டுமே நன்மை பயப்பதாக இருக்கும்.

 5. வன்னியனும் கருப்பு – நம்ம பறையனும் கருப்பு!
  சிரிச்ச மட்டும் பல்லுல தெரியும் வெளுப்பு!
  படிப்புல பாப்பான் பெரிய பருப்பு நம்ம ஆளுக்கு வருவது வெறுப்பு!
  சாதின்னு வந்தா வன்னியன் கவுண்டனாம், ஆதிதிராவிடன் அடிமையாம்!
  கஞ்சிக்கில்லாதவன்னாலும் கருமம் சாதிக்கு இருக்கு செருக்கு!
  நீ அதை கவுரம் பாக்காம அடிச்சு நொறுக்கு!

 6. அருள் அவர்களே,வன்னியரின் நிலையும், தலித்துகளின் நிலையும் ஒன்றுதான சற்று விளக்குகளே .

 7. கொளத்தூர் பகுதியில் பா.ம.க. தலைவர் கோ.க. மணி மீது போடப்பட்ட ஒரு பொய் வழக்கினை காரணமாக வைத்து கோயில் விழாவில் மேளம் வாசிக்க ஆதிதிராவிடர்களை அழைக்கவேண்டாம் என்று முடிவுசெய்த வன்னியர்கள் அருந்ததியினரை அழைத்தனர்.

  மேளம் வாசிப்பது ஒரு தொழில் என்று எடுத்துக்கொண்டால், அதனை எங்குவேண்டுமானாலும் செய்வதற்கு அருந்ததியினருக்கு உரிமை இல்லையா?

  ஆனால், மேளம் வாசித்த அருந்ததியினரை ஆதிதிராவிடர்கள் மிரட்டியுள்ளனர்.  அருந்ததியினருக்காக வன்னியர்கள் பேசப்போய் கலவரம் ஏற்பட்டுள்ளது.

  வன்னியர்கள் சண்டையிட்டது தவறுதான்.  ஆனால், அருந்ததியினருக்கு எதிராக ஆதிதிராவிடர்கள் நடந்துக்கொண்டது மட்டும் நியாயமா?

  வன்னியர்கள் ஆதிதிராவிடர்களுக்கு எதிராக நடப்பது சாதி வெறிதான். அப்படியானால், அருந்ததியினருக்கு எதிராக ஆதிதிராவிடர்கள் நடந்துகொண்டதற்கு என்ன பெயர்?

  வன்னியர்களை பார்ப்பனர்களுக்கு இணையாக பேசுவது எல்லாம் ரொம்ப ஓவர்.

  • திருவிழா, சுடுகாட்டு ஊர்வலத்திற்கு மேளம் அடிப்பது, கருமாதி வேலை, செத்த மாட்டை புதைப்பது, நகரசுத்தி வேலைகள், எல்லாம் வெறும் ‘தொழிலா’?
   ஆதிக்கசாதித் திமிரை எதிர்க்கும் பறையருக்கு எதிராக அருந்ததியினரைப் பயன்படுத்துவது கூட பார்ப்பனியத்தின் நரித்தந்திரம்தான். அவ்வகையில் வன்னிய ஆதிக்க சாதியும் பார்ப்பனியத்தின் பிடியில்தான் இருக்கிறது.

   • அப்படி என்றால் அருந்ததியினரை மிரட்டிய தலித்களை நீங்கள் முதலில் கண்டிக்க வேண்டும், ஆதிக்கத்தை எதிர்கிறேன் பேர்வழி என்று தன்னைவிட இளைத்தவனிடம் கோபத்தை காட்டகூடாது.

    • அப்படி என்றால் அருந்ததியினரை மிரட்டிய தலித்களை நீங்கள் முதலில் கண்டிக்க வேண்டும், ஆதிக்கத்தை எதிர்கிறேன் பேர்வழி என்று தன்னைவிட இளைத்தவனிடம் கோபத்தை காட்டகூடாது.//

     கண்ணா அன்பு உன் சுயசாதி வெறியை இப்படி அப்பட்டமாக
     சொல்லக்கூடாது. நீ எதுக்குடா என்னை அடிச்ச என்றுக்கேட்டால்,
     அவனை நீ ஏன் அடிச்ச என்று பதில் சொல்லுது பருப்பு.
     இது பருப்பு இல்லை,பண்ணையார்,ஜெமிந்தான் என்ற
     அதிகார நினைப்பு

    • அங்கு நடந்த பிரச்ச்சினை ஆதிக்க சாதிக்கான மோதல் அல்ல, ஏன் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்பதுதான் அங்கு யாரும் தாக்கப்படவோ இல்லை என்பதுதான் உண்மை. இதுவரை அருந்ததியர்களை தாக்கியதாக வழக்கோ ஆதிதிராவிடர்கள் மீது போடப்படவில்லை.

 8. ///அருள் அவர்களே,வன்னியரின் நிலையும், தலித்துகளின் நிலையும் ஒன்றுதான சற்று விளக்குகளே///
  Kanisays:
  ‘நான் உயர்ந்த சாதி, நீ தாழ்ந்த சாதி’ என்கிற வீண் சாதிப்பெருமையை தவிர – கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை போன்ற எல்லாவற்றிலும் வன்னியரின் நிலையும், தலித் மக்களின் நிலையும் ஒன்றுதான்.

  உண்மையில், தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கிய பகுதிகள் என்பவை எல்லாம் – வன்னியர்களும் பறையர் பிரிவினரும் அதிக அளவில் வாழும் பகுதிகள்தான்.

  இந்த அவலத்தை எதிர்த்து போராடுவதே இன்றைய தேவை

  • நீங்கள் சொல்வது பாதி உண்மை அருள். ஏழை வன்னியர்களில் ஒரு சிறுபான்மையினர் பா.ம.க, அரசு வேலை, ஊரக தொழில்கள் என்று செட்டிலாகிவிட்டு தனது சுயசாதி ஏழைகளை சுரண்டுவதற்காக வன்னிய சாதி வெறியின் காவலர்களாக உலா வருகிறார்கள். இந்தக் கூட்டத்தை அப்புறப்படுத்தினால்தான, அடுத்து தீண்டாமைக்கெதிரான ஜனநாயகத்தை கொண்டு வரமுடியும். அதன் பிறகுதான் தலித்துகளும், வன்னியர்களும் ஏழைகள் என்ற முறையில் ஒன்று சேர்ந்து போராட வழிபிறக்கும்.

 9. மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!! – “பசும்பொன் முத்துராமலிங்கம் படம் பொறித்த மஞ்சள் கொடிகளும், தேவர் வாழ்க! தேவர் படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா! பனமரத்துக்கே வவ்வாலா! தேவருக்கே சவாலா! என்கிற முழக்கங்களும் இம்முறை அகமுடையார் சாதியினரை விடவும் வெகு அதிகமாகவே வெளித்தெரிந்தன.”- இப்படிதான் கலைஞ்சர் “செஞ்சி ராமசந்திரனையும்,எல்.கணேசனையும் கையாண்டார்!,தற்போது டாக்டர் ராமதாசையும்,திருமாவளவனையும்!.

  இந்தியாவும்,இலங்கையும் ஒரே பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தின் கீழ் இருந்தபோதே தற்போதைய “நாடுகளாக!” உருப்பெற்றன!.தற்போதைய பல பிரச்சனைகள்,”அந்த நிர்வாகத்திலிருந்து” விடுதலைப்? பெற்ற போது அமைந்த தோற்றுவாயாகவே உள்ளன.
  இந்தியாவின் “காங்கிரஸ் அரசாங்கமும்”,இலங்கை “சிங்கள அரசாங்கமும்”,இலங்கைத் “தமிழ்த்? தலைமைகளும்” இந்த காலனித்துவ நிர்வாகத்திலிருந்து உதித்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஆகும்!.முப்பது ஆண்டுகளுக்கு முன்பு “இவர்களிடையே இணக்கப்பாடு ஏற்ப்படாமையினாலேயே” இலங்கைப் பிரச்சனை வெடித்தது.
  இந்திராகாந்தி ஒரு தெற்காசிய சுதேசி?(போலி) போல்,இலங்கைத் தமிழ்த் தலைமைகளை கையாண்டார்.இது இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார நிர்பந்தமே தவிர,காங்கிரஸ் வெளிப்பாடு அல்ல.காங்கிரஸ் நிர்வாகம் என்பது,தற்போதைய “இலங்கை தமிழ்த்? தேசிய கூட்டமைப்பு” போன்றதே!.இதில் எங்குமே “மக்கள் சக்தி” தொழில் மயப்பட்டதாக தெரியவில்லை.இடையில் விடுதலைப் புலிகள் என்றும்,இயக்கங்கள் என்றும்,சோசியலிச? தமிழீழம் என்றும் ஆயுத போராட்டம் நடத்தி ஓய்ந்த பிறகு பலர் தற்போது “போஸ்ட்மார்ட்டம்” செய்கிறார்கள்.இதில் பல இணைய தளங்களில்,”லண்டன் ஈராஸ்” ரவி சுந்தரலிங்கம்,தேசம்நெட் ஜெயபாலன்,இனியொரு சபாநாவலன்,போன்றவர்கள் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் “யாழ்ப்பாணம்” என்ற சொல்லுக்கு சில விளக்கங்கள் தேவை.முல்லைதீவு,வன்னி,போன்ற அழகான தமிழ்ச் சொல்லான இது காலனிய ஆதிக்கத்திற்கு முன்பு,ஒரு சகோதரத்துவ “வேரின்” பிரதிபலிப்பாக இருந்தது.காலனித்துவ ஆதிக்க காலத்தில் “உள் முரண்பாடுகளின்” ஊற்றுக்கண்ணாக மறுவியது!.இதில் சபாநாவலன் என்பவர்,புலம்பெயர் இலங்கைத்தமிழர்களை,தொழிலாளர்களாக நிலை நிறுத்துவதற்கு,அவர்கள்,”ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் கடுமையாக உழைக்கிறார்கள் என்கிறார்.அவர்கள் தாங்கள் தஞ்சம் அடைந்த நாடுகளில்,ஒழுங்காக வரி கட்டி பதினாறு மணிநேரம் உழைக்க வில்லை,பிடிபட்டால் பல ஆயிரம் டாலர்கள் அபராதம் கட்டக்கூடிய “ரிஸ்க்” எடுத்து “பிளாக்கில்தான்” வரிகட்டாமல்,டாய்லட் கழுவுவது,உணவு விடுதிகளில் சமைப்பது,மூளை தொழிலாளிகளாக,போன்ற வேலைகளை செய்கிறார்கள்.இதை விட நல்ல வேலை,இந்திய – இலங்கை சம்பளத்தில்,தாய் நாடுகளில் வேலை கொடுத்தால் செய்யமாட்டார்கள்.இப்படி சேர்த்த பணத்தில்,”ரிஸ்க்” எடுத்து,மெர்சிடஸ் பென்ஸ்,பி.எம்.டபிள்யூ. கார்களை வாங்கி ஓட்டுவதற்கும்,ஈவிரக்கமில்லாமல் கொலை செய்து,தங்கள் அகதி அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள இயக்கங்களுக்கு பணம் கொடுக்கவுமே செலவழிப்பதை போதையாக கொண்டுள்ளனர்(எல்லாம் “எக்சேஞ்ச் ரேட்” செய்த புண்ணியம்).இங்கிருந்தே,இலங்கைத் தமிழர் பிரச்சனையின் பிரத்தியேக கனவான,”சக மனிதனை அடித்து சாப்பிடும் “CANNIBALISM” கருக் கொள்கிறது!.
  இதை பல்வேறு வல்லரசு சக்திகள்,புரிந்தோ புரியாமலோ,சரியாக கையாண்டே,விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டியுள்ளனர்.
  இதைப் படிப்பவர்கள் தமிழர்களாக இல்லாத பட்சத்தில் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.தமிழர்களாக இருந்தால்,இத்தகைய “CANNIBALISM” சத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முன்னேற்ப்பாடு செய்து கொள்வது நல்லது!.
  இந்த “CANNIBALISM” சத்தின்,மூலம் என்ன?,தற்போது அது எங்கே மையம் கொண்டுள்ளது?.
  நிச்சயமாக அது ஐரோப்பாவில்தான்!,மையம் கொண்டுள்ள இடம் “ஆப்கானிஸ்தான்”!.
  இது அமெரிக்க வெளிவிவகார கொள்கையாக உருண்டு திரண்டு,ப.சிதம்பரம்,இலங்கைத்தமிழ் உருத்திர குமார்(ஹார்வர்ட)போன்றவர்கள் மண்டையில் “கல்வி அறிவாகி” இயல்பான இயங்கியலாக,இந்த இயங்கியல் சக்கரத்தில்,சட்டிஸ்கர்,வன்னி மக்கள் ப