Wednesday, September 27, 2023
முகப்புபட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியக் குழந்தைகள்: நாட்டிற்கே அவமானம்!
Array

பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியக் குழந்தைகள்: நாட்டிற்கே அவமானம்!

-

  • உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியின்றி வாழும் ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 19.5 கோடி.
    இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 6.1 கோடி குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியின்றி உள்ளனர்.
  • உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் உயரத்துக்கு ஏற்ற எடையின்றி வாழும் ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 7.1 கோடி.
    இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 2.5 கோடி குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடையின்றி உள்ளனர்.
  • உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் வயதுக்கு ஏற்ற எடையின்றி வாழும் ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 12.9 கோடி.
    இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 5.4 கோடி குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடையின்றி உள்ளனர்.

ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த பல ஏழை நாடுகளை விட, “வல்லரசு” இந்தியா பட்டினி இந்தியாவாக இருக்கிறது என்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஒருபுறம்,  நிரம்பி வழியும் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகள்; இன்னொருபுறமோ, பல கோடி இந்தியக் குழந்தைகள் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள அவலக் காட்சி.  ஏழைக் குழந்தைகளின் பட்டினியைப் போக்கப் பயன்படாத இந்த உணவு தானியக் கையிருப்பு யாருக்குப் பயன்படப் போகிறது?  அதோ, உணவு தானியங்களை ஏற்றுமதி செய்து அமெரிக்க டாலரைச் சம்பாதிக்கும் “பசியோடு” காத்துக் கிடக்கிறார்கள் முதலாளிகள்; மன்மோகன் சிங்கின் கண்ணசைவிற்காக!

புதிய ஜனநாயகம் – மே 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. மக்கள் இசை பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது நன்பரே.கஞ்சி தொட்டி ஏதற்கு உணவு கிடங்கையே நெருக்கு

  2. //ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த பல ஏழை நாடுகளை விட, “வல்லரசு” இந்தியா பட்டினி இந்தியாவாக இருக்கிறது என்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.//
    இங்கு பணக்காரர்கள் சுரண்டல் வர்க்கம் அதிகம் வினவு அதற்க்கேட்ட்றார் போல் பட்டினி அதிகமாய் உள்ளது ..குழந்தைகள் பட்டின்யோடு இருப்பது வேதனையாய் இருக்கிறது ……

  3. கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கவெர்ன்மெண்டு
    நாட்டக் கொண்டு போயி வித்துப்புட்டு என்னடா பார்லிமெண்டு

    வோட்டு எதுக்கு, — எதுக்கு (மறந்துவிட்டது)

    ஓடுங்கடா நாட்ட விட்டு…

    முன்பு போல ம.க.இ.க. பாடல்கள் இணைப்பு கொடுப்ப்தில்லையே? இந்த பதிவுக்கு பொருத்தமான உணர்வூட்டும் பாடலை இணைப்பாகக் கொடுக்கலாம்.

    • ஆமாம் பூச்சாண்டி அவர்களே நானும் இதை அமோதிக்கிறேன்

  4. வறுமைக்கும் ,சாவுக்கும் பலியாகும் மக்கள் ,போராட வரவில்லை என்பது துயரமனானது .புரட்சி ஒன்றுதான் தீர்வு,வறுமையை ஒழிக்கும்

  5. >> நிரம்பி வழியும் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகள்;
    >>இன்னொருபுறமோ, பல கோடி இந்தியக் குழந்தைகள் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள அவலக் காட்சி.

    எலிகள் தின்னும் உணவு இருந்தால் கூட சில ஆயிரம் குழந்தைகள் பிழைக்கும்.

  6. ”வறுமைக்கும் ,சாவுக்கும் பலியாகும் மக்கள் ,போராட வரவில்லை என்பது துயரமனானது.”
    வறுமைக்கும் சாவுக்கும் பலியாகும் மக்கள் அதற்கான காரணத்தை அறியக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. மக்கள் புரட்சியைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதே நிதர்சனம். 
    ஆனால், இன்னும் நாம் தீவிரமாகச் செயல்படாமல் இருக்கிறோமோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
    இன்னும் நாம் தீவிரமாகச் செயல்படாமல் இருக்கிறோமே என நினைக்கும்போது குற்ற உணர்வு கொல்கிறது.

  7. இந்தியாவெங்கும் உள்ல 1000 அரசியல்வாதிகள் போதும் 100 கோடி மக்கள் தொகையை அழித்துவிடுவார்கள்!, மனித உருவில் நடமாடும் அரக்கர்கள்!

  8. உலகத்தில் வளர்ச்சியின்றி வாழும் குழந்தைகள், உயரத்துக்கு ஏற்ற எடையின்றி வாழும் குழந்தைகள், வயதுக்கு ஏற்ற எடையின்றி வாழும் குழந்தைகள்…..இதுலெல்லாம் நான்தா பர்ஸ்ட்…….இந்தியா!!!

    மேலும் நோயுடன் வாழும் குழந்தைகள், ஊனமுடன் வாழும் குழந்தைகள். பிச்சை எடுக்கும் குழந்தைகள்—இதிலேய்ம் நான்தா பர்ஸ்ட்….இந்தியா!!!

  9. இந்த கொடுமைக்கு எல்லாம் முதலாளித்துவம் தான் காரணம் .இந்த நவீன மன்னர்களை (அரசியல்வாதிகள் )எல்லாம் ஒலித்துகட்டவேண்டும் .இந்த நாட்டில் கிடைக்கும் அரியவகை உயர் தரமான உணவு வகைகளை குழந்தைகள் மற்றும் வயதில் முதிர்ந்தவரும் மட்டுமே உண்ணவேண்டும் .இந்த ஏற்றுமதி திருடர்களை முதலில் விரட்டியடிக்கவேண்டும் .முதல்லில் நாட்டுபற்றை வளர்க்கவேண்டும் .கிரிக்கெட்டில் இந்தியா தோர்தால் ஆங்கில மீடியாக்கள் வரிந்து கட்டிக்கொண்டு திட்டி தீர்த்து நாட்டுபற்றை வெளிபடுதுகின்றன .இந்த குழந்தைகள் பட்டினியாக வாடுவது யாருக்கும் தெரியவில்லையா ?அப்புறம் என்ன நாட்டுபாற்று புண்ணாக்கு பற்று.. அனைவரையும் திருடர்களாக மாற்றி வருகிறது இந்த முதலாளித்துவம் 

  10. // இந்தியா பட்டினி இந்தியாவாக இருக்கிறது//
    இது ஐநா மற்றும் மேலை நாடுகளினால்உள்நோக்கத்துடன் செய்யப்படும் பொய் பிரச்சாரம் . உள்நாட்டில் இது போன்ற புரளிகளை கிளப்பி விட்டு மேலை நாட்டு சத்து உணவு என பிரான்ஸ் பிஸ்கட்டுகளை இறக்குமதி செய்யும் வேலை
    —————————————————————-
     சமூக நலத்துறையின் கீழ், தற்போது 50 ஆயிரத்து 433 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், இரண்டு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள 11 லட்சத்து 21 ஆயிரத்து 574 குழந்தைகள் படித்து வருகின்றன. இந்த மையங்களில், குழந்தைகளுக்கு படிக்கின்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கு ஊட்டச்சத்தும் வழங்கப்பட்டு வருகிறது. 
    http://www.dhinamalar.info/fpnnewsdetail.asp?news_id=௬௬௬௦

    The allocation for the ICDS has been hiked from Rs 13,000 crore in the Tenth Plan to Rs 51,400 crore for the Eleventh Plan period. But implementation of the ICDS has been appalling and malnutrition in the age group 0-6 years declined only one per cent in the last eight years……………
    Professor Amartya Sen, said  “we were appalled to hear of the proposed displacement of cooked meals by pre-packagedfoods and biscuits in the ICDS  programme… any change of course, especially under pressurefrom commercial interests, would be a serious regressive step against the best interests ofchildren.”
    http://www.righttofoodindia.org/data/renuka_pushes_for_pre-cooked_meal_plan%20panel_says_no_open_to_misuse_ritu_sarin08.படப்

  11. // இந்தியா பட்டினி இந்தியாவாக இருக்கிறது என்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன//

    இது ஐநா மற்றும் மேலை நாடுகளினால்உள்நோக்கத்துடன்  செய்யப்படும் பொய் பிரச்சாரம் . உள்நாட்டில் இது போன்ற புரளிகளை  கிளப்பி விட்டு மேலை நாட்டு  சத்து  உணவு என பிரான்ஸ் பிஸ்கட்டுகளை இறக்குமதி செய்யும் வேலை

    The allocation for the ICDS has been hiked from Rs 13,000 crore in the Tenth Plan to Rs 51,400 crore for the Eleventh Plan period. But implementation of the ICDS has been appalling and malnutrition in the age group 0-6 years declined only one per cent in the last eight years.
    …………………………
    Professor Amartya Sen, said last month “we were appalled to hear of the proposed displacement of cooked meals by pre-packaged foods and biscuits in the ICDS programme… any change of course, especially under pressure from commercial interests, would be a serious regressive step against the best interests of children.”http://www.righttofoodindia.org/data/renuka_pushes_for_pre-cooked_meal_plan%20panel_says_no_open_to_misuse_ritu_sarin08.pdf
    ————————
    உண்மை நிலை::
    . சமூக நலத்துறையின் கீழ், தற்போது 50 ஆயிரத்து 433 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், இரண்டு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள 11 லட்சத்து 21 ஆயிரத்து 574 குழந்தைகள் படித்து வருகின்றன. இந்த மையங்களில், குழந்தைகளுக்கு படிக்கின்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கு ஊட்டச்சத்தும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் ஓரளவு வசதிகள் இருக்கின்றன
    http://www.dhinamalar.info/fpnnewsdetail.asp?news_id=6660

  12. […] This post was mentioned on Twitter by mercylivi. mercylivi said: பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியக் குழந்தைகள்: நாட்டிற்கே அவமானம்! https://www.vinavu.com/2010/05/12/hunger-deaths-children/ […]

  13. தாய் பாலுக்கு ஏங்கும் குழந்தையும், கல்ல்விக்கு ஏங்கும் மாணவனும், வேலைக்கு ஏங்கும் இளைஞனும் உள்ள நாடு சுதந்திர நாடு இல்லை. என்றான் மாவீரன் பகத்சிங். அதைப்போல போல இந்த நாடு இன்னும் சுதந்திரம் அடையவில்லை, இன்னும் நாம் அடிமைகளாக தான் வாழ்கின்றோம், நாட்டில் உள்ள அரசியல் வாதிகள்(வியாதிகள்) அனைவரையும் ஒழித்து கட்டி விடுதலை அடைந்தால்தான் இது போன்ற பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும். இது வேக்ககேடான நிகழ்வு நாட்டை 6 வது வல்லரசாக ஆக்குவோம் என்றவர்களின் மூஞ்சில் காரி துப்புவோம்.

  14. யார், பட்டினியில் மாண்டாலும் எந்த அரசுக்கும் கவலையில்லை, மக்களுக்கு விழிப்புணர்ச்சி வராமல் பாதுகாப்பதில் நாளிதழ்கள் கவனம் செலுத்துகின்றன. மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியில் அரசு வெற்றியீட்டுகிறது. ஏழைகளுக்கினி யாருமில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க