நர்சிம்மைக் கண்டித்து வினவு தளத்தில் வெளிவந்த பதிவை பைத்தியக்காரன் என்ற பெயரில் எழுதும் சிவராமன் தான் எழுதியிருக்கிறார் என்றும், அவர் வினவுக்கு எழுதி அனுப்பிய பிரதியை எடிட் செய்து வெளியிட்டிருப்பதாகவும், இதையும் வினவில் வந்துள்ள கட்டுரையையும் வாசகர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறி சுகுணா திவாகர் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
“நண்பனைப் போல எப்படி நடிக்கிறீர்கள் சிவராமன்” என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள பதிவில், வினவு தளத்தையும் விமரிசித்திருக்கிறார். ஆணாதிக்கத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் நடந்த அறமற்ற செயல் குறித்து எழுதுவதற்காகத்தான் இந்தப் பதிவு என்றும் பதிவுக்கான நோக்கத்தை குறிப்பிட்டிருக்கிறார். பச்சைப் பார்ப்பனியத்தைக் கடைப்பிடித்து வரும் ஒருவரிடம் (சிவராமனிடம்) பார்ப்பன எதிர்ப்பு குறித்து பதிவு வாங்கி அதையும் வினவு பெயரில் வெளியிட வெட்கமாக இல்லையா என்றும் கேட்டிருக்கிறார்.
சிவராமன் எழுதிய பதிவு தனக்கு எப்படி எப்படி கிடைத்தது என்பது தேவையில்லை என்றும், தேவையானால் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறவேண்டாம். அதை நாங்களே கூறுகிறோம்.
இந்த விவகாரம் குறித்து எழுத வேண்டும் என்று நாங்கள் எண்ணும் பொழுதே பல வலையுலக நண்பர்களும் தொலைபேசியில் அழைத்து எழுதச்சொல்லி வலியுறுத்தினார்கள். நாங்களும் பலரைத் தொடர்பு கொண்டோம். அவர்களில் தோழர் பைத்தியக்காரனும் ஒருவர். நர்சிம் உள்ளிட்ட நபர்களைப் பற்றி தனக்குத் தெரியும் என்றும் சொல்லப்போனால் நர்சிம் தனது நண்பர் என்றும் அவர் தனக்கு கடனுதவி செய்திருக்கிறார் என்றும் இருந்தபோதிலும், இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டித்தாக வேண்டும் என்பதால், தான் ஒரு பதிவு எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அதை வினவில் வெளியிட்டால் பரவலாகப் போய்ச்சேரும் என்பதால், அதனைக் கோரிப்பெற்றோம். அதை திருத்தங்கள், சேர்க்கைகள் செய்வதற்கு அவர் ஒப்புதல் தந்தார்.
தேவையற்றவை, பொருத்தமற்றவை என்று நாங்கள் கருதியவற்றை எடிட் செய்தோம். அவர் அனுப்பிய பதிவின் அளவு சுமார் 1945 சொற்கள். அதில் அவர் சுகுணா திவாகர் பற்றி எழுதியுள்ள பகுதி உட்பட பலவற்றை எடிட் செய்திருக்கறோம். வேறு சிலர் தந்த தகவல்களையும் சேர்த்திருக்கிறோம். அந்தக் கட்டுரைக்கான தரவுகளைப் பலர் கொடுத்திருந்தாலும் கட்டுரை வினவினுடையதுதான். இவ்வாறு வினவு வெளியிட்டுள்ள கட்டுரையின் அளவு 3456 சொற்கள். எனவே இரண்டும் ஒன்றுதான் என்று கூறுவது உண்மையல்ல.
மேற்கூறிய பதிவை தனது மின் அஞ்சல் முகவரியிலிருந்துதான் சிவராமன் எங்களுக்கு அனுப்பியிருந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு தனது மின் அஞ்சல் முகவரியின் பாஸ் வேர்டை சிவராமன் கொடுத்திருக்கிறார். தற்போது வினவில் இந்தக் கட்டுரை வெளிவந்தவுடன் சிவராமனுக்கு அந்த நண்பர் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறார். வாசகம் இதுதான். “உங்களுடனான நட்பை இத்துடன் முறித்துக் கொள்கிறேன். நரசிம்முக்கு நீங்கள் செய்தது பச்சைத் துரோகம்”.
இப்படியாக சிவராமனின் “துரோகத்தை” இடித்துரைத்த நண்பர், மின் அஞ்சல் பெட்டியிலிருந்து அவர் எழுதி வினவுக்கு அனுப்பியிருந்த கட்டுரையை சுகுணா திவாகருக்கு கொடுத்து, நரசிம்மைக் காப்பாற்றுவதற்காக சுகுணா திவாகரைத் தட்டி விட்டிருக்கிறார். தன்னைப் பற்றி சிவராமன் எழுதியிருப்பதைப் படித்தவுடனே அறம் கொன்ற சீற்றம் அவரை ஆட்கொண்டு விட்டதா, அல்லது நர்சிம்மை எழுதியதால் வந்த கோபமா, அவருடைய உள் விவகாரம் நமக்குத் தெரியாது. மாபெரும் ஊழலைக் கண்டு பிடித்து வினவை அம்பலப்படுத்தி விட்டதைப் போல எழுதியிருக்கிறார் சுகுணா திவாகர்.
அந்த நண்பர், சிவராமனின் கட்டுரையை சுகுணா திவாகருக்கு கொடுத்ததன் நோக்கம் நர்சிம்மை காப்பாற்றுவது. நர்சிம்முக்கு எதிராக எழுதியவர்களை காரெக்டர் அசாசினேசன் செய்வது அதற்கு ஒரு சிறந்த வழி. அந்த வேலையை தான் செய்வதை விட ‘பெண் விடுதலைப் போராளி’யாகிய சுகுணா திவாகர் செய்வது பொருத்தம் என்று கருதி இந்த அடியாள் வேலையை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார். சுகுணா திவாகர் ஒப்படைக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்து விட்டார்.
சந்தன முல்லையைப் பற்றி நர்சிம் எழுதி வெளியிட்டது முதன்மையான பிரச்சினை இல்லை. தன்னைப் பற்றி சிவராமன் எழுதி வெளியிடாத தகவல்தான் (அதாவது வினவால் எடிட் செய்யப்பட்டது) அவருக்கு முக்கியப் பிரச்சினை. அதில் சிவராமன் சுகுணா திவாகரைப் பற்றி கூறியது உண்மையா, பொய்யா என்பது பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை. ஏனென்றால் அது வினவினால் எடிட் செய்யப்பட்டுவிட்டது. வெளியிடப்படாத ஒரு விசயம்,
தனிப்பட்ட முறையில் இரு நபர்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்படுபவை ஆயிரம் இருக்கும். அவை சரியாகவோ தவறாகவோ மிகையாகவோ இருக்கலாம். எழுத்தில் என்ன வெளிவந்தது என்பதுதான் வாசகனைச் சென்று அடைந்திருப்பது. அதுதான் வெளியிடப்பட்ட கருத்து. ஒரு கட்டுரையின் மூலத்தைக் கூட ஒரு எழுத்தாளன் தானே எடிட் செய்துதான் வெளியிடுகிறான். “இதோ பார் எடிட் செய்யப்படாத மூலக்கட்டுரை” என்று எந்த யோக்கியனும் புலனாய்வு செய்து வெளியிடுவதில்லை. அதனை எந்த வாசகனும் மதிப்பதும் இல்லை.
சுகுணா திவாகர் என்ன சொல்ல வருகிறார்? தன்னைப் பற்றி சிவராமன் சொன்னது பொய் என்று கூரை மீது ஏறி எதற்கு கூவுகிறார்? சுகுணா திவாகர் கூறுவது போல சிவராமன் தனிப்பட்ட வாழ்க்கையில் பார்ப்பனியத்தை ‘கைவிடாத’ நபராகவே இருக்கட்டும். அவர் நர்சிம்மை பற்றி சொன்னது உண்மையா இல்லையா? அவர் நர்சிம்மிடம் கடன் வாங்கியிருந்தாலும் நர்சிம் அவருக்கு தனிப்பட்ட நண்பராக இருந்தாலும், நட்பு முறியும் என்று தெரிந்த போதும் அவர் வெளிப்படையாக நர்சிம்மை எதிர்த்து அவருடைய கட்டுரையிலேயே “காறித் துப்புகிறேன்” என்று பின்னூட்டம் போட்டார்.
வினவு கட்டுரை நீ எழுதியதா என்ற கேள்விக்கு “நான் எழுதினாலும் வரிக்கு வரி அப்படித்தான் எழுதுவேன்” என்று தனி பதிவே போட்டார். தன்னோடும் ஜ்யவரோம் சுந்தரோடும் சாதி அடிப்படையிலும் உறவு கொண்டாட நர்சிம் முயல்வதாகவும் வெளிப்படையாக எழுதி நர்சிம்மை அம்பலப் படுத்தியிருக்கிறார் சிவராமன். இவையனைத்தும் வலைப்பூக்களில் காணக் கிடக்கின்றன.
சுகுணா திவாகர் கூறுவதைப் போல சிவராமன் இன்னமும் பார்ப்பானாகவே இருந்தாலும், சாதி அடிப்படையில் நர்சிம்மை ஆதரிக்காமல் சொந்த சாதிக்கு துரோகம் இழைத்திருக்கிறார் என்பதே இச்சம்பவத்தில் நடந்திருக்கிறது.
ஜெயேந்திரனை சங்கரராமன் என்கிற பார்ப்பனர் அம்பலப்படுத்தியபோது, “நாங்கள் ஜெயேந்திரரை ஆதரிப்பவர்கள் இல்லை. இருந்தாலும் சங்கரராமன் பெரிய யோக்கியனா?” என்று ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்தப் பிரச்சாரத்தை நடத்தியவர்கள் ஜெயேந்திரனின் அல்லக்கைகள். ஜெயேந்திரனின் கிரிமினல் வேலைகளை நேரடியாக அம்பலப்படுத்த முடியாத போது, அவரைத் தப்ப வைப்பதற்கான குறுக்கு வழி, குற்றம் சாட்டுபவன் மீது சேறு வாரி இரைப்பதுதான் என்று புரிந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட பிரச்சாரம் அது. அதே வேலையைத்தான் சுகுணா திவாகர் இப்போது செய்கிறார்.
இதுதான் புதிய பார்ப்பனியம்.
சிவராமன் உண்மையிலேயே பார்ப்பனியத்தை எதிர்க்கவில்லை, சொந்த வாழ்க்கையில் எதையும் கடைப்பிடிக்க வில்லை என்ற விமரிசனங்களையெல்லாம், நட்புடன் பழகும்போது அவரிடம் நேரில் சொல்லியிருக்கவேண்டும். கண்டித்திருக்க வேண்டும். தன்னைப் பற்றி சொன்னவுடன் “நீ பத்தினியா?” என்று லாவணி பாடுவது குழாயடிச் சண்டையைக் காட்டிலும் தரம் தாழ்ந்த அணுகுமுறை.
நர்சிம்மின் ஆணாதிக்கத் திமிரையும் வக்கிரத்தையும் எதிர்த்து பல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சொந்த வாழ்க்கையில் எப்படி என்று ஆராய்ச்சி செய்து, யார் யார் நர்சிம்மை விமரிசிக்கலாம் என்று தீர்ப்பு வழங்குவாரா சுகுணா திவாகர்? “லீனாவின் கவிதையை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள், மாறுபடுபவர்களும் இருக்கிறார்கள், வேறுபடுபவர்களும் இருக்கிறார்கள். கருத்துரிமைதான் பிரச்சினை” என்று லீனாவுக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசிய அதே நாக்குதானே பேசுகிறது? அங்கே பேசியவர்கள் எல்லாம் பெண் விடுதலைப் போராளிகளா என்று உரசிப் பார்த்து தான் மேடையேற்றினீர்களா?
சிவராமன் போன்ற நயவஞ்சகர்களிடம் நாங்கள் ஏமாந்துபோவதாக எச்சரித்திருக்கிறார் சுகுணா திவாகர். நன்றி. அந்த ‘நயவஞ்சகரிடம்’ ஏமாந்து நர்சிம்மைப் பற்றி என்ன தவறாக எழுதிவிட்டோம்? ஏன் சுகுணா திவாகர் துடிக்கிறார்? அந்த விசயத்தை அவர் சொல்லட்டும். “நர்சிமிக்கு நீங்கள் செய்தது பச்சைத் துரோகம்” என்று சொல்லித்தான் தோழர் சிவராமனது மடல் அவரது நண்பர் மூலம் சுகுணாவுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. இன்வெஸ்டிகேஷனது நோக்கமே நர்சிம் என்ற பொறுக்கியைக் காப்பாற்றுவது என்ற பிறகு நடிப்பு எதற்கு?
மற்றப்படி ம.க.இ.க என்ற அமைப்பின் தோழர்கள் பின்பற்றும் ஒழுக்க நெறிகளுக்கு சிவராமன் போன்றோரால் நேரக்கூடிய ‘ஆபத்து’ பற்றி ம.க.இ.க தோழர்கள் பார்த்துக் கொள்வார்கள். ம.க.இ.க வினரை பழமைவாதிகள், ஒழுக்கவாதிகள் என்று என்று எள்ளி நகையாடும் கலகக்காரர்கள் அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
இறுதியாக ஒரு விசயம். சுகுணா திவாகரைப் பற்றி சிவராமன் எழுதியது பொய்யே ஆனாலும், அது வினவு தளத்துடன் நடைபெற்ற ஒரு தனிப்பட்ட கடிதப் பரிவர்த்தனை. அதனை வெளியிட்டு வினவு தளத்தை ‘அம்பலப்படுத்தியிருக்கிறார்’ சுகுணா திவாகர் என்கிற ரீ.சிவகுமார். அவர் ஆனந்த விகடனில் வேலை பார்க்கிறார். பல விதமான ஊழல்கள், முறைகேடுகள் பற்றிய செய்திகள் ஆனந்த விகடனுக்கு வந்தாலும், எவற்றை வெளியிடலாம், எவற்றை வெளியிட வேண்டாம் என்பதை ஆனந்த விகடன் ஆசிரியர் குழு முடிவு செய்யும். மக்களுக்குத் தெரிந்தே தீரவேண்டிய பல அநீதிகள் ஆனந்த விகடன் நிர்வாகத்தின் நலன் காரணமாகவோ அல்லது போதிய ஆதாரமல்ல என்ற காரணத்தினாலோ அவ்வாறு தணிக்கை செய்யப்பட்டிருக்கும்.
தன்னைப் பற்றி சிவராமன் எழுதியதை வெளியிட்டிருக்கும் சுகுணா திவாகர், ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்ட அத்தகைய தகவல்களையும் தன்னுடைய தளத்தில் வெளியிடுவாரா? அவருடைய தனிப்பட்ட கவுரவப் பிரச்சினையைக் காட்டிலும் சமூகப் பிரச்சினைகள் பெரிதென்று அவருக்கு தெரியாதா என்ன? அல்லது இது நர்சிம்முக்கு மட்டும் செய்யப்படும் உதவியா?
அவரே பதில் சொன்னாலும் சரி. அல்லது அவரது ‘பத்திரிகை அறம்’ குறித்து ஆனந்த விகடன் நிர்வாகத்திடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
_______________________________________________
தொடர்புடைய பதிவுகள்
- பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்?
- பர்தாவின் ‘நற்குடியும்’, அய்யப்பனின் ஆணாதிக்கமும், பதிவுலகின் யோக்கியதையும்!!
- லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?
- பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!
- லீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni !!
- சுந்தரி அக்காவும், பதிவர்கள் அறியா கோவையும்!
- மொக்கைப் பதிவு உடல் நலத்திற்க்குக் கேடு !
- தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!
- பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!
- வினவு ஓராண்டு நிறைவு: கற்றவையும் கடமையும்!!
- வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !!
- வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!
- சமூகம் – பெண் – கட்டுரைகள்
இணைப்புகள்
விளக்கம் தந்ததற்கு நன்றி. இப்போது இந்த விஷயம் சுகுணா-சிவராமன் என்று திசை மாறுமோ என்று கவலை.
ஆணாதிக்க சாதிய வெறியை எதிர்க்கும்போது கவனம் இப்படி தனிநபர்கள் மீது சிதறுவது வருத்தம்.
டாக்டர் சார் அப்போ நேத்து கேள்வி கேட்ட மணிகண்டனை நெனச்சு பாருங்க. என்னமோ போங்க சார். வினவு அம்பலப்பட தெஹல்கா தேவையில்லை. சுகுணா திவாகரே போதும் போல.
ஜூஜூ மோதல்ல உன் அல்லக்கை நெத்தியடி அம்பலப்பட்டு போயாச்சு அதுக்கு பதில் சொல்லு… அப்புறம் மணிகண்டனுக்கு ்சொன்ன து 100க்கு 100 உண்மை பதிவு வினவு எழுத்து நடையில்தான் எழுதப்பட்டிருக்கிறது.. காரணம் சிவராமன் கொடுத்த விவரங்களை தொகுத்து வினவு மீண்டும் எழுதியிருப்பதால்… இது எல்லா பத்திரிக்கைகளிலும் நடப்பது தானே… என்ன பிரச்சனை இதுல உனக்கு???
ஷாஜஹான், நெத்தியடி மற்றும் ஷேக்தாவூத்..
இப்ப இவ்வளவு காத்து பிரியுதே… 3 நாளா ஆப்ட்ரால் ஒரு கண்டனத்தையாவது பதிவு செஞ்சீங்களாயா ஆணாதிக்கவியாதி புடிச்ச பாசிஸ்டுகளா…. வந்துட்டானுங்க நாயம் சொல்ல
In seeking the truth these are unavoidable. Let it take its ஓவன் course. If exposed, we could discard these two சுகுணா-சிவராமன்…Nothing is lost.
அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?
இங்கு என்ன நடக்கிறது
? ஏன் இந்த ஜாதி வெறி? ஏன் இந்த அசிங்கமான வார்த்தைகள்? பார்தால் படித்தவர் போல தெரியல .
* ஆணாதிக்க பொறுக்கிகளை அம்பலப்படுத்தி விரட்டியப்போம் !
*
* பெண்களை நுகர்பொருளாக்கும் எழுத்து புரோக்கர்களுக்கு பதிலடி கொடுப்போம் !!
*
* தமிழ்மணத்திலிருந்து ஆணாதிக்க பொறுக்கிகளை தூக்கியறியவைப்போம் !!!
ஆக பதிவுலக பொம்பளை பொறுக்கிகளையும் சாதி வெறியர்க்ளையும் , காசுக்கும் பீருக்கும் ஓட்டு போடறவனையும், வினவுக்கு அடையாளம் காட்டியது சிவராமன் என்ற மாவீரன்… அவனை பதிவுலகில் கும்மிக்கொண்டிருக்கிறார்கள்… தோழர்களே சிவராமனுக்கு தோள் கொடுங்கள்… பொம்பளை பொறுக்கி நர்சிமையும், குழைந்தையை கொலை செய்ய சொன்ன சைக்கோ சாளரம் கார்க்கியையும் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்…
இவர்கள் பலருடைய முகத்திறையை கிழிப்பார்களாம்…
அடி..சக்கை…இன்று இவர்களே கிழித்துக்கொண்டார்கள்….
பாவம்…அப்பாவி…மணிகண்டன்…
‘மொத்தத்தில் (தாம் உட்பட…!!) யாரையும் நேர்மையானவர்கள் என நம்புவதற்கு இல்லை’ என்ற உண்மையை தோழர்கள் இன்றாவது தெரிந்து கொண்டார்களே….
ஐயோ நெத்தியடி இன்னாய்யா ஈமெயில மாத்தி போட்ட்டியா… ஆனா விதி பத்தியா? வினவு முகத்திரை கிழியிதுன்னு சொன்ன அதே பின்னூட்டத்துல உன் முகத்திரையும் கீஞ்சுது… அது போக்டும்..்மணிகண்டனுக்கு வினவு சொன்னது உண்மைதானே??? அவர் எழுதிக்கொடுத்த விசயங்கள வச்சு இவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கார்…இதுல உன்பிரச்சனை என்னயா?
சத்தியமாய் இந்த பின்னூட்டம் நான் இப்பதிவுக்கு நெத்தியடி முஹம்மது வின் மெயில் ஐடியில் போட்டதல்ல…. சென்ற பதிவுக்கு ஜாக்பாட் ஜே என்ற பெயரில் அதன் ஐடியில் போட்டது.
அது எப்படி இங்கே வந்தது?
இது வினவின் கைங்கர்யம் மீண்டும் வெட்டவெளிச்சம் ஆகும் இடம்… நான் ஒரு பதிவில் ஒரே பெயரில் அன்றி வேறு பெயரில் மருமொழிபோடகூடாது என்பதுதான் வினவின் டீல்…. அதை பின்பற்றி வருகிறேன்… மறுமொழியை வெளிவராமல் கட்டம் கட்டப்பட்ட என் ஐ பி யை நீங்க கண்டுபிடிப்பது எனக்கு தெரியாதா?
நீண்ட நாள் கழித்து ஜாக்பாட் ஜே என்ற பெயரை அனுமதித்தது நீங்கள் ஏமாந்த நேரத்திலா? அல்லது மப்பிலா? செம ஆப்பு….
நான் (ஒரே ஆள்) அவர்களின் நிர்பந்தத்தால் வேறு வழியின்றி வேறொரு பெயரில் பின்னூட்டம் இடுவதும்…
வேறொரு நபரின் பதிவை தம்முடைய பெயரில் தம் தளத்தில் வெளியிட்டுக்கொள்வதும், அதை கண்டுபிடித்து கேட்டவரை நக்கலிட்டதும், பதிவு போட்டவரை எதிர்ப்பதிவு போட்டு அர்ச்சிப்பதும், தம் ஆட்களை வைத்தே தம்மை பாராட்டிக்கொள்வதும்… மற்றவர்களை திட்டித்தீர்ப்பதும் …
ஆகிய இவை இரண்டும்
ஒன்றா…? …ஒன்றா?.. ஒன்றா?
@@@ ஒன்றா…? …ஒன்றா?.. ஒன்றா?@@@
ஒன்றில்லை ஒன்றில்லை ஒன்றில்லை… நீங்க ஒங்க சொந்த அறிப்ப சொரிஞ்சுக்க பல பேருல புண்ணூட்டம் போடறதும் … சமூக மாற்றத்துக்காக வேறு பெயர்களில் எழுதுவதும் எப்படி ஒன்றாகும்?? ஒன்றாகும்?? ஒன்றாகும்???
@@@வேறொரு நபரின் பதிவை தம்முடைய பெயரில் தம் தளத்தில் வெளியிட்டுக்கொள்வதும், @@@
இதுதான் நெத்தியடியின் டிரேட்மார்க் பிராடுத்தனம் ….. பதிவின் மூலத்தை எழுதிய சிவராமனே இது வினவு பெயரில் வெளிவரவேண்டும் என்று விரும்பியபின் வேறு என்ன செய்ய முடியும்???
வினவு சிவராமனின் தரவுகளை பெற்று மீண்டும் கட்டுரையை முழுசாக எழுதியிருக்கிறது.. அப்புறம் எப்படி அது வேறொருவர் பதிவு ஆகும்
எந்த ஒரு பத்திரிக்கையாளனும் தனக்கு தகவல் வந்த சோர்ஸை சொல் மாட்டான், அது துரோகம். வினவும் சிவராமனை போட்டுக்கொடுக்கவில்லை. போட்டுக் கொடுப்பவன் துரோகி, தோள் கொடுப்பவன்தான் தோழன்
வினவு தோழன்..
செங்கொடியின் தளத்திலே தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கும் நெத்தியடிக்கு யான் செருகிய ஆப்பு — jus for recordx-x-x-x-x-x-x–x-x-x-x–x-x-x-x-x–x-x-x–x-x-x–x-
தனது அரிப்பை சொரிந்து கொள்ள போகும் இடமெல்லாம் சுவரைத்தேடும் இந்த நெத்தியடியை பார்க்க பாவமாய் இருக்கிறது….அது எப்படித்தான் இப்படி புளுக முடிகிறதோ அப்பப்பா..
இவரு இத்தனநாளா திட்டி பின்னூட்டம் போட்டாறாம் அது வரவேயில்லியாம் இன்னிக்கு திட்டி போட்ட மட்டும் உடனே வந்திடுச்சாம்..கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எரும ஏரேப்பிளேன் ஒட்டும்பாங்கனுவாரு பெரியார்தாச அப்துல்ல சேஷாசல சித்தார்த்தன் …அது இதுதான்
@@@முத்துக்குமார் இடுகைக்குப்பின் மொத்தமாய் கட்டம் கட்டப்பட்டுவிட்ட என் ஐ.பி யும், மெயில் ஐ டியும், அதன் பிறகு வந்த எந்த பதிவிலும் பின்னூட்டம் செல்லாது செத்து விடும்.@@@
இன்னிக்கு திட்டும் போது மட்டும் செத்த பின்னூட்டம் உயிர்த்தெழுந்ழுத்சாம்.. இன்னா கிரிஸ்டீனா கன்வர்ட் ஆயிட்டியா???
@@@பெரியார்தாசன் அப்துல்லா ஆகிய வினவின் இடுகையிலும் கூட நான் எத்தனை கருத்துகளை சொல்ல எத்தனித்தேன்… (பாருங்கள் ஒன்று கூட இருக்காது) என்னை சில சகோதரர்கள் ‘ஒதுங்கி இருப்பதாய்’ கூறினர்…என்ன செய்வது… நொந்து போவதைத்தவிர… அவர்களின் போலி @@@
அதே பதிவுல மேலூரு ‘மென்டல்’ ஷாஜூவோட பின்னூட்டத்தையும் காணோம் என்பதை நோட் செய்யுங்கள் யுவர் ஆனார்…..
@@கடைசியில் அவர்களே ஏமாந்த நேரம்.. ஒரு மிட் நைட்டில்… பெப்சி-கோக்கில் ‘ஜாக்பாட் ஜே’ என்ற பெயரில் நுழைந்துவிட்டேன்…கடைசி வரை உண்மைகளை உரத்துக்கூறினேன்… ஏனோ ஆச்சரியப்படும் வகையில் அப்பதிவில் மட்டும் தொடர்ந்து அனுமதித்தனர்@@
இதப்பாத்தியா கொடுமையா தான் எப்பேற்பட்ட பிராடுன்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தத ஆக மொத்தம் இவரு எந்த பேருல வந்தாலும் அங்க போட்டுகிட்டுதான் இருக்காங்க… இவரு சொல்லுற அதே கோக்கு – பெப்புசி பதிவுல மேலூரு மென்டல் ஷாஜஹானும் பேரே மாத்தாம புன்னூட்டம் போட்டதையும் நோட் செய்யுங்கள் யுவர் ஆனர்..
@@@இந்த என் தன்னிலை விளக்கத்தை எல்லாம் வெளியிடாமல் மீண்டும் என் பின்னூட்டத்தை இல்லாமல் ஆக்குவது சரியா? இதுதான் நேர்மையா? இனி ஜாக்பாட் ஜே யும் அனுமதிக்கப்படவில்லை என்றால்… வேறொரு பெயரில்தான் வர வேண்டும்@@@
இன்று நெத்தியடி – ஜாக்பாட் ரெண்டு பேருலயும் இவரு போடும் பின்னூட்டம் வந்திருக்கிறது.. இருப்பினும் இவர் ஓடி வந்து உங்களிடம் இப்போது தன்னிலை விளக்கம் கொடுப்பது எதனால்..இவர் ஜாக்பாட் ஐடியில் நெத்தியடி ஈமெயிலை கொடுத்ததனால வசமாக மாட்டிக்கொண்டார் அதனால்….
ஆக இந்த ஷாஜூ நெத்தியடி கூட்டனி , தன் பக்கம் வீக்காக இருந்த பெரியார்தாசன் பதிவுக்கு வரவில்லை, கோக்பதிவுக்கு வந்தால் என்னமோ கயட்டி புடலாம் என்று வந்து என்னிடம் வாங்கிக்க்கட்டிக்கொண்டு பதிலே சொல்லாமல் ஓடிப்போயினர்.. அங்கேயே நெத்தியடிதான் இது என அம்பலப்படுத்தியதற்கு ஷாஜஹான் காட்டிய சீன் சூப்பர் டூப்பர் காமெடி
இப்போது சுகுணா திவாகர் எழுதியிருப்பதை மறுபடியும் அறைகுறையா படித்து முட்டாள்தனமாக புரிந்து கொண்டு என்னவோ வினவுக்கு கேவலம் நேர்ந்து விட்டது போல புளகாங்கிதம் அடைந்து நானும் விடுரேன் 2 கல் என நெத்தியடி பெயரிலேயே வந்தார்.. அதுவும் வினவு சைட் வீக்காக இருப்பதான தவறான புரிதலால்.. திருப்பி அடிக்கமாட்டான்னு தெரிஞ்சப்புறம் வர்ற வீரம் இது..
ஆனால் வழக்கம் போல இந்த மரமண்டைகளுக்கு புரியாத ஒரு விசயம் உண்டு அதுதான் ”உண்மை”…. முதலில் சுகுணாவின் பதிவில் எடுத்து போடப்பட்டுள்ள பதிவை சிவராமன் அவரும் வினவும் சேர்ந்து எழுதியாக கூறியிருக்கிறார்… வினவும் சிவராமன் கொடுத்த தகவல்கள் அடிப்படையில்தான் தாங்கள் கட்டுரை எழுதியிருக்கிறோம் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டனர்.
இதில் மூக்குடை பட்ட இந்த மரமண்டைகள் அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லாத காரணத்தினால், தங்கள் திட்டம் ஆண்டி கிளைமாக்ஸில் முடிந்து போனதால்… இணையத்தெருக்களில் புலம்பிக்கொண்டு திரிகின்றனர்… அவ்ளோதான் மேட்டரே..
இனி நெத்தியடிக்கு நான் வினவில் எழுதிய மேட்டரை ctrl+v
@@@ ஒன்றா…? …ஒன்றா?.. ஒன்றா?@@@ஒன்றில்லை ஒன்றில்லை ஒன்றில்லை… நீங்க ஒங்க சொந்த அறிப்ப சொரிஞ்சுக்க பல பேருல புண்ணூட்டம் போடறதும் … சமூக மாற்றத்துக்காக வேறு பெயர்களில் எழுதுவதும் எப்படி ஒன்றாகும்?? ஒன்றாகும்?? ஒன்றாகும்???
@@@வேறொரு நபரின் பதிவை தம்முடைய பெயரில் தம் தளத்தில் வெளியிட்டுக்கொள்வதும், @@@இதுதான் நெத்தியடியின் டிரேட்மார்க் பிராடுத்தனம் ….. பதிவின் மூலத்தை எழுதிய சிவராமனே இது வினவு பெயரில் வெளிவரவேண்டும் என்று விரும்பியபின் வேறு என்ன செய்ய முடியும்???வினவு சிவராமனின் தரவுகளை பெற்று மீண்டும் கட்டுரையை முழுசாக எழுதியிருக்கிறது.. அப்புறம் எப்படி அது வேறொருவர் பதிவு ஆகும்எந்த ஒரு பத்திரிக்கையாளனும் தனக்கு தகவல் வந்த சோர்ஸை சொல் மாட்டான், அது துரோகம். வினவும் சிவராமனை போட்டுக்கொடுக்கவில்லை. போட்டுக் கொடுப்பவன் துரோகி, தோள் கொடுப்பவன்தான் தோழன்
வினவு தோழன்..x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
நான் செங்கொடி தளத்தில் பின்னூட்டம் இடாத காரணம் இங்கே மட்டறுத்தல் இல்லாததால் எனக்கு பதில் சொல்லும் சாக்கில் இங்கேயே குந்தியிருந்து இந்த இரண்டு மென்டல் கேசும் உங்கள் தளத்தை நாரடித்துவிடுவார்கள்…நான் இங்கு வரமாட்டேன் என்ற அந்த தைரியத்தில்தான் இப்போது பதிந்த்தனர்… நான் வந்துவிட்டேன் என்ன செய்ய
@@@உப்புத்திண்டவர்கள்…குடித்தே தீரவேண்டும்… குடிக்கிறார்கள்@@@
குடிக்கிறார்கள்…
வர்ட்டா நெத்தியடி
சரியானதொரு எதிர்வினை. சுகுணா பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆகும் கேள்விகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது.
உண்மை இப்படி இருக்க, பலர் எழுத்து நடையை புடம்போட்டு மிகத்துல்லியமாக மோப்பம் பிடித்து கேட்ட மணிகண்டன் அவர்களிடம் நேற்று எதற்கு அவ்வளவு நக்கல்…?
அரைகுறை நெத்தியடி…. மணிகன்டன் பைத்தியகாரனுக்கு எழுதிய பதிலைப்பார்
@@நேற்று நான் வினவில் நேரடியாக கேட்டதுக்கு எழுத்து நடையை வைத்து பதில் சொல்லி இருந்தார்கள். எடிட் செய்ததால் அவர்கள் நடை தான். ஆனால் உங்கள் கிசுகிசு பாணி எழுத்துக்கள் காட்டிக்கொடுத்துவிட்டன.@@
ஆக வினவின் எழுத்துதான் என்பதை மணி ஒத்துக்கொண்டு விட்டார்… எனவே பதிவுலக பொம்ப்ள பொருக்கிகளை காட்டிக்கொடுத்த (கிசு கிசு) காரணத்திற்காக சிவராமனை எல்லோரும் கும்முகிறார்கள்… நீ பொம்பள பொறுக்கியான்னு எனக்கு தெரியாது….
ஒழிக உமது போலி பின்னூட்ட ஜனநாயகம்….
நெத்தயிடி ஜாக்பாட் ஜே அப்படின்னு போலி பின்னூட்டம் போட்டுகிட்டிருந்தியே அத சொல்றியா???
சுகுணா, நடந்த அயோக்கியத்தனத்தை ஆணாதிக்க தடித்தனம் என்ற ஒற்றை சொல்லுடன் கடந்துசெல்வதுதான் வேதனை.
பாஸிட்டிவ் வாக்கை செலுத்திவிட்டேன்.
//
சுகுணா, நடந்த அயோக்கியத்தனத்தை ஆணாதிக்க தடித்தனம் என்ற ஒற்றை சொல்லுடன் கடந்துசெல்வதுதான் வேதனை.
பாஸிட்டிவ் வாக்கை செலுத்திவிட்டேன்.
//
பாவம் சுகுணா அவ்வளுவுதான் அவரால முடியும் 🙂
ஸ் அப்பாடா… இப்ப தான் நிம்மதியே வருது!
சுகுணாவின் பதிவில் போய் சில-பல புண்ணூட்டங்கள போட்டேன்! அது இன்னும் வரல.. வருமா?? வராதா (மட்டுறுத்தப்படுமா) ??
வரும்! ஆனா வராது!!!! 🙂
சுகுணாவின் பதிவிற்கும், இதற்கும் (வினவின் எதிர் வினைக்கும்) பாலபாரதியின் கருத்தை எதிர்பார்க்கிறேன்! 🙂
//விளக்கம் தந்ததற்கு நன்றி. இப்போது இந்த விஷயம் சுகுணா-சிவராமன் என்று திசை மாறுமோ என்று கவலை.
ஆணாதிக்க சாதிய வெறியை எதிர்க்கும்போது கவனம் இப்படி தனிநபர்கள் மீது சிதறுவது வருத்தம்.//
இதுதான் அவர்களின் நோக்கம் சுகுணா நிறைவேற்றிவிட்டார். சுகுணாவின் பரிணாம வளர்ச்சி சரியாகத்தான் செல்கிறது.
//விளக்கம் தந்ததற்கு நன்றி. இப்போது இந்த விஷயம் சுகுணா-சிவராமன் என்று திசை மாறுமோ என்று கவலை.//
டாக்டர் அய்யா, இந்தப் பிரச்சினை அமீபா மாதிரி பல திசைகளில் பரவும். சில நாட்களுக்கு வலையுலகம் அல்லோலகல்லோகப்படும். அதுக்கப்புறம் எல்லோரும் அவனவன் வேலையப் பாக்கப் போயிருவாங்கே!
இது போதும். இது தான் விளக்கம்.
இந்த நாலுமணி நேர கேப்புக்குள்ள என்னென்னவெல்லாம் நடந்துவிட்டது.
எதிரிகளும் எதிரிகளும் கூட அடுத்த புனிதக்கூட்டனிக்கு தயாராகி விட்டார்கள். ஆனால் அதற்குள் வினவு குறி பார்த்து அடித்து விட்டது.
அவிங்களுக்கு எல்லாம் இப்ப சப்புன்னு ஆயிருக்கும்.
அதிலயும் அந்த திருப்பூர் பேமானி இருக்கானே அவனுக்கு தான் கப்பலே கவுந்திருக்கும். அல்லக்கையோட பதிவை படிக்கிறதுக்குள்ள இந்தாளு ஒரு பதிவே போட்டுட்டான்னா பார்த்துக்குங்களேன்.
இந்த நார வாய் நாராயணன் தான் போன மாதம் நமது தோழ்ர்களிடம்
‘நானும் அமைப்பில் தான் தோழர் இருக்கிறேன்’ என்றது.
நீ அமைப்பில் இருக்கும் லடசணம் எல்லாம் எங்களுக்கு அப்பவே தெரியும். நீ அமைப்பில் இருப்பதெல்லாம் இருக்கட்டும் ஒரு அல்லக்கைக்கு அல்லக்கையா இருக்கியே இதுவும் ஒரு பொழைப்பாடா ? த்தூ.. வெக்கமா இல்ல ? கேவலமா இல்ல ?
நல்ல விளக்கம் இதை தான் எதிர்ப்பார்த்தேன் வினவு.ஏன் என்றால் பிரச்சனை திசை திருப்ப பார்த்தார்கள் , அந்த நேரத்தில் உரிய விளக்கம் தேவை நன்றி வினவு
“வினவில் ‘எல்லாரும்’ எழுதலாம்”, “இங்கு ‘அனைவருக்கும்’ வாய்ப்பளிக்கப்படும் என்றதற்கு “உண்மை அர்த்தம்” இதுதானா?
அடுத்து யாரெல்லாம் எழுதுவார்கள்…? …..RV, டோண்டு?
சுகுணா இப்போது செய்து கொண்டிருப்பது பிரச்சினையை ஹைஜாக் செய்யும் வேலை. அதை வினவு மிகச் சரியாக அம்பலப்படுத்தியுள்ளது.
தோழர் அத வினவு மட்டும் செஞ்சா பத்தாது அத்தனை பேரும் செய்யனும். விடாதீங்க அந்த அல்லக்கைய பாத்துடுவோம் ஒரு கை…
தம்பி சுகுணா உனக்கு ஏன் இந்த வேலை பைத்திரக்காரனின் பாத்ரூமுக்குள் போய் எட்டிப் பார்த்து என்ன ஆய் போய் இருக்கிறார். அது மஞ்சளா? சிகப்பா என்று ஆராய்ந்து அதை ஏதோ புலனாய்வுப் போர்வையில் செய்திருக்கிறாயே? கொஞ்சாமவது யோசித்தாயா? வெளியிடப்பாடாத பிரதியை எடுத்து வைத்துக் கொண்டு என்னைப் பற்ரியா? இப்படி எழுதினாய் என்று தாம் தூம் என்று குதிக்க்றாயே? உண்மையில் பார்ப்பனராக இருந்தாலும் சிவராமன் சொந்த சாதிக்கு துரோகம் செய்திருகிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். அதே நேரம் சந்தனமுல்லை வன்னியர் ஆர்க்குட்டில் இருக்கிறார் என்கிறீர்களே? இதென்ன சந்தனமுல்லையைப் பற்றி எழுதியதை பல வீனப்படுத்துக்ற முயர்ச்சியா? அவர் வன்னியர் ஆர்க்குட்டிலேயே இருக்கட்டுமே அதற்காக இப்படியா? எழுதுவது? தவிறவும் இதை ஏதோ மாபெரும் கண்டுபிடிப்பு போலச் செய்திருக்கிறீர்களே? ரியல் ஜர்ணலிசம் என்றால் என்ன வென்று தெரியுமா? அது தமிழில் இருக்கிறதா? அதை உங்களால் செய்ய முடியுமா? அப்படிச் செய்பவராக இருந்தால் ஆனந்தவிகடனால் நிராகரிக்கப்பட்ட ஒரு அதிரடியை அண்டர் கிரவுண்ட் வழியாகவேனும் எடுத்துக் கொடுங்கள் அதுதான் ரியல் என்கவுண்டர்……….ஆமா தம்பி நீங்க என்ன சாதி? ஒரு தவறும் இல்லை உங்கள் சாதியைச் சொல்லுங்கள் சில கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது.
கட்டுரை சிவராமிடமிருந்து பெறப்பட்டது என நீங்களே அறிவித்திருக்கலாம்! இப்பொழுது வினவின் மீதும் நம்பிக்கை இழக்க வேண்டியுள்ளது.
கார்மேக ராஜா நர்சிமுக்கு பதிலாக யார் அந்த பூக்காரிவேறு யாராவது எழுதியிருந்தால் ஆதரித்திருப்பீர்களா???? எழுதியவனல்ல எழுதப்பட்ட விசயம்தான் முக்கியம்… திசை விலகல்களுக்கு வீணாக பலியாகாதீர்… மேலும் வினவு சிவராமன் பதிவை மொத்தமாக திருத்தி எழுதியபின் அது எப்படி சிவராமன் பதிவு ஆகும்???
கார்மேகராஜா…. சுகுணா வேலை பார்க்கிற விகடனில் கூட சில நேரங்களில் எழுதுகிறவர்களின் பெயர்கள் தெரியக்கூடாது என்பதற்காக நமது நிருபர்கள் என்று போடுவார்கள். அல்லது புனைப்பெயரில் எழுதுவார்கள் உங்களுக்குத் தெரியுமா?
சுகுணா இதை வரிக்கு வரி படித்து பதிலளிப்பாரா???
அந்த சந்தேகம் இருக்கட்டும். மைனஸ் ஓட்டு போடும் அறிவாளிகள் படித்து விட்டு தான் ஓட்டு போடுகிறார்களா?
பதிவுகள் எழுதித்தள்ளி, படித்த பிறகும், நர்சிம்மிற்கு ஆதரவு, சுகுணாவிற்க்கு ஆதரவு என்ற போக்கில் எழுதிதள்ளுவார்களா?
தள்ளட்டும்! காழ்ப்புணர்ச்சிகள் ஒவ்வொன்றாக வெளிவரட்டும்.
ஒரு பெண் பதிவரை நர்சிம் பொறுக்கித்தனமாய், அருவருக்கதனமாய் எழுதுவான். அதைக் கண்டிக்கும் நேர்மையில்லை சுகுணாவிற்கு. போகிற போக்கில் மெல்ல சாடுகிறார்.
தன் மீது தூசுபட்டதாய், எகிறி துடிக்கிறார். தெரிந்தே மடைமாற்றி ‘நர்சிம்’ஐ காப்பாற்றுகிற வேலை இது.
சுகுணா இந்த எதிர்வினையை எதிர்பார்த்திருக்க மாட்டார், வினவை திட்ட வெறும் வாயை மென்றவர்களுக்கு இது அவல். வாய் என்ன அட்சைய பாத்திரமா அவலாய் உற்பத்தி செய்ய, அவல் தீர்ந்த பின்னால் வாய் அடங்கும். தோழர்கள் பதிவுலகில் முற்போக்கு யார் பிற்போக்கு யார் என்பதை சிறப்பாக அடையாளம் காட்டியுள்ளனர். இது ஒன்றே மிகப்பெரும் வேலை… நாளையிலிருந்து சுகுணாவோ யுவகிருஷ்ணாவோ முற்போக்கு வேசம் கட்டவியலாது.. செருப்புகள் பிய்ந்து போகும்
‘ஜென்டில்மேன்’ நர்சிம்மும்! ஆதரிக்கும் கண்ணியவான்களும்!
பதிவர் சந்தனமுல்லையை நர்சிம் என்ற பதிவர் தன் எழுத்துக்களால் குதறியிருக்கிறான் என்பதை வினவின் மூலம் ‘பூக்காரி’ படித்து அதிர்ந்தேன். அதைவிட அதிர்ச்சியாக இருக்கிறது. “அது தான் மன்னிப்பு கேட்டுட்டாருல்ல! பிரச்சனையை இத்தோடு முடிச்சுக்கலாம்” என சில நர்சிமை ஆதரிக்கும் ‘கண்ணியவான்கள்’ கிளம்பிவிட்டார்கள்
“பாருங்க! இவ்வளவு நாளும் நர்சிம் ஒரு ஜென்டில்மேன். கோவத்தில இப்படி எழுதிட்டார்” என்கிறார்கள். ஒருவனின் அறத்தன்மை, பண்பு என்பது நெருக்கடியில் தான் வெளிப்படும். ‘ஜென்டில்மேனின்’ பச்சையான ஆணாதிக்க, பார்ப்பனிய குணம் இந்த விசயத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
தொடர்ச்சியாய்… பல பதிவர்கள் நர்சிமை கண்டித்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்கவாதிகள் ‘ஜென்டில்மேன்’ நர்சிம்மை ஆதரித்து எழுதி கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு சுகுணா திவாகரும்.. ‘அரிய உண்மையை’ கண்டுபிடித்ததை போல எகிறுகிறார். இதுவெல்லாம், நர்சிம்மின் பொறுக்கித்தனத்தை வலுவிழக்க செய்யும் வேலை.
நர்சிம், பயித்தியக்காரன், சுகுணா, வினவு இவர்களை எனக்கு தெரியாது. ஆனால் என்ன நடக்கிறது என்று ஓரளவு அறியமுடியரது. இருந்தாலும் சில விசயங்களை ஆராய்ச்சி செய்ததால் வந்த பின்னூட்டம் இது:
வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு. அப்படி செய்திருந்தால் (Note: செய்திருந்தால்) இது முதல் தடவையாக இருக்க முடியாது. கட்டயாம் இது முதல் தடவையாக இருக்க முடியாது. அப்படியிருக்க ஏன் அவ்வாறு பயித்தியக்காரன் இப்பொழுது அதை வெளியில் கொன்டு வர வேண்டும்—அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது– அதாவது தான் எழுதிக்கொடுத்ததை தான் வினவு பதிவாக போடுகிறார் என்று.?
இங்கு கவனிக்க வேண்டியது இவர்களுடைய “Relationship.”
பயித்தியக்காரன்-வினவுக்கு-தொழில் முறை “Relationship.”
பயித்தியக்காரன்-நர்சிம்-நண்பர்கள்! மற்றும் ஒரே ஜாதி என்றும் கேள்விப்பட்டேன்!!
இதில் நடுவில் சுகுணா. சுகுணாவிற்கு கோபம்—வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று. ஒரே ஆறுதல் தன்னைப்பற்றி பயித்தியக்காரன் அசிங்கமாக எழுதியதை வினவு “Edit” செய்துவிட்டார் என்று. இருந்ததாலும் சுகுணா வினவை மன்னிக்க தாயாராக இல்லை. அதனால் வந்த பதிவு தான் சுகுணா எழுதியது.
சுகுனாவிர்ர்க்கு ஒரு கேள்வி? இதை அதாவது, மேற்கூறியவற்றை (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று.) உங்களிடம் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஏன் இவ்வளவு நாட்களாக உங்களிடம் வினவு இப்படித்தான் தந்து எல்லா பதிவையும் போடுகிறார் என்று சொல்லவில்லை? இதை நீங்கள் யோசிக்க வேண்டும், அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது!
இந்த உண்மையை வினவு தான் எடுத்து சொல்ல வேண்டும் : அதாவது, தான் அது மாதிரி பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று மற்றும் சுகுணா சொன்ன மாதிரி “Edit” செய்திகளும் வினவிற்கு அனுப்பப்பட்டதா என்று? அப்படி “Edit” செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றாலும் வினவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி. ஆனால் அவ்வாறு சுகுனாவைபற்றி “Edit” செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றால் வினவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு (நர்சிம் மன்னிப்பு கேட்ட மாதிரி மன்னிப்பு கேட்கலாம்.) பயித்தியக்காரன் தோலை உரிக்கலாம். அப்புறம், நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவர் தோலையும் உரிக்கலாம்.
சுகுணா! நீங்கள் அவசரப் பட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் ஒரு கருவியாக மட்டும் பயன் படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். அவர்கள் “Double-game” or double-cross” செய்து விட்டார்கள்.
என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி. வினவுக்கு திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று). சுகுணா திவாகர் ஒரு கருவி. ஆகா மொத்தம் ஏமாந்தது நீங்கள் தான். வென்றது அவர்கள். உங்களையே நீங்கள் அவசரப்பட்டு அசிங்கபடுத்திக் கொண்டீர்கள் .எதற்கும் எப்பொழுதும் கூட்டு வைக்ககூடாத ஒரே கும்பல் அவாள் தான்.
வாய்மையே வெல்லும் இது பழமொழி!
வருணாஸ்ரமே வெல்லும் இது புது மொழி!!
அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?
“ஒரு பார்ப்பனியவாதியிடம் எழுதி வாங்கி பார்ப்பனியத்தை எதிர்ப்பீர்களா?” என்று கேட்கும் கூழ்முட்டைகளுக்காக..
சிவராமனின் தனிப்பட்ட வாழ்க்கையை வினவு தோழர்கள் கட்டுப்படுத்தவியலாது – அவர் ஒரு ஆதரவாளர்; உடன் வேலை
செய்யும் சக தோழரல்ல. பல்வேறு சொந்த அரசியல் நிலைப்பாடுகள் கொண்டுள்ள ஒருவர் எமது அரசியலின் அத்தனை நிலைப்பாடுகளையும்
அப்படியே ஆதரிக்க வேண்டும் என்பதோ எமது தோழர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடிக்கும் அதே நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தோழர்கள் நிர்பந்திப்பதோ சாத்தியமற்றது. பிரச்சினைகளின் அடிப்படையில் இணைவது தான் சாத்தியம். இங்கே இந்த விவகாரத்தில்
சிவராமன் தனது சொந்த வாழ்க்கையில் பார்ப்பன அடையாளங்களை (அவர் அவ்வாறு கடைபிடித்து தான் வருகிறார் என்பதை அவரே சொல்லாத வரையில் இது சுகுணாவின் யூகம் என்றே நான் கொள்கிறேன் – அதன் அடிப்படையில் நானும் இதை ஒரு வாதத்துக்காகவே உண்மையென்று
வைத்துக் கொண்டே தொடர்கிறேன்) கடைபிடிப்பவராயினும், இந்த பிரச்சினையைப் பொருத்தளவில் நேர்மையாக தனது தனிப்பட்ட
இழப்புகளுக்கும் கூட அஞ்சாமல் (நர்சிமிடம் கொடுக்கல் வாங்கல் இருந்த போதும்) முதன் முதலாக தனது கண்டனங்களை வெளிப்படையாக
பின்னூட்டங்களில் பதிவு செய்துள்ளார். வினவு தோழர்களுக்கும் அவரே முன்வந்து பதிவுக்கான தரவுகளைக் கொடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அவரது செயல்பாட்டினூடாகவே அவரை நாம் எடை போடுகிறோம். அவரது சொந்த வாழ்க்கையின் அழுத்தங்களையும்
தாண்டி இவ்விவகாரத்தில் அவர் ஒரு நேர்மையான நிலைப்பாட்டை எடுக்கிறார் – அவர் எமது தோழர்களுக்கு சில தரவுகளைத் தந்துதவுகிறார்
எங்கள் தோழர்கள் அதைத் தமது பதிவில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சுகுணாவின் – ‘மற்றுமுள்ள கூழ்முட்டைகளின்’ – இதே அளவு கோலை சுகுணாவுக்கு எதிராக இன்னொருவர் கொள்வதானால், அவர் ஜெயேந்திரன்
கைதான சமயத்தில் எழுதிய
கட்டுரையை ம.க.இ.க சிறு வெளியீடாக கொண்டுவந்ததைக் கூட ‘ஒரு குடிகாரனிடமிருந்து எப்படி கட்டுரை எழுதி வாங்கலாம்.. ம.க.இ.க தனது தோழர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கநெறிகளை வலியுறுத்த்திக் கொண்டே ஒரு குடிகார கபோதியிடம் கட்டுரை எழுதி வாங்கியிருக்கிறார்களே.. அதுவும் ஆனந்த விகடன் போன்ற ஒரு பார்ப்பன பத்திரிகையில் வேலை செய்கிறார் இப்போது’ என்று ஒருவர் சொல்லி விட முடியும்..
அன்று உங்களை எப்படி எடை போட்டார்களோ அப்படியே இன்று சிவராமனை எடை போட்டிருக்கிறார்கள் சுகுணா..
நாளை இதே சிவராமன் பொதுவெளியில் தனது செயல்பாடுகளில் ஒருவேளை பார்ப்பனியத்தைக் கடைபிடிப்பாரானால் அவரையும் அம்பலப்படுத்த
எமது தோழர்கள் தயங்க மாட்டார்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை – உங்களுக்கும் சந்தேகமிருக்காது என்றே நம்புகிறேன். எனில்
இப்போதைய உங்கள் பதிவின் நோக்கம் என்ன? அது நர்சிமின் பார்ப்பன சாதி வெறிக்கு எதிராக பரவலாக கிளம்பியிருக்கும் கருத்துக்களை
மடைமாற்றிவிடுவதே. அந்த அம்சத்தில் இப்போது நீங்கள் தான் பார்ப்பனியத்துக்கு வால்பிடிக்கிறீர்கள்.
வழிமொழிகிறேன்.
நன்றி கார்க்கி, இதைவிட எளிமையாகவோ மென்மையாகவோ சுகுணா திவாகருக்கு பதிலுரைக்க இயலாது.
போக வேண்டிய பாதை தூரம். பாதை முழுக்க கல்லும் முள்ளும். ஒரே இடத்தில் நின்று சரி செய்து விட்டு வருகின்றேன் என்று எத்தனை இடுகை இவ்வாறு வரப்போகின்றது??? ஓட்டுப்பட்டைகளை களைப்புறச் செய்யுங்கள்.
வினவு.., தனது தார்மீக நியாயங்களிலிருந்தும்,.விவாத பொருளினின்றும்.., நம்பகத்தன்மையின்றும் விலகி முரட்டு பிடிவாதாதத்துடன் வாதம் செய்வதென்பது… முழுமையான.., உள்நோக்கற்ற ..,நிபந்தனையற்ற என்னைப்போன்ற ஆதரவாளர்களிடத்தில் அவநம்பிக்கையை உருவாக்க நேரிடும் என்பதை மனத்தாங்களுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..
அன்புடனே.,
கும்க்கி.
@@2னது தார்மீக நியாயங்களிலிருந்தும்,.விவாத பொருளினின்றும்.., நம்பகத்தன்மையின்றும் விலகி @@@
இங்க எதுங்க தார்மீக நியாயம்.. ஆணாதிக்க பார்ப்பனிய வக்கிரத்தை கண்டிப்பதா?? இல்லை துணை நிற்பதா???
எது விவாதப்பொருள்.. நார்சிமின் பொறுக்கித்தனமா இல்லை பதிவை யார் எழுதியது என்பதா
எது நன்பகத்தன்மை? தனக்கு இந்த கட்டுரையை எழுத இன்னார் உதவினார் என்று போட்டுக்கொடுப்பதா???? இல்லை விளைவுகளுக்கு பொறுப்பேற்பதா???
கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்…
நக்கீரன் நான் இங்க இருக்கேன்…
பார்த்தேன் முன்னாடியே அங்கே போட்டேன். கலக்குங்க
தாமதத்துக்கு மன்னிக்கவும். நர்சிம் பற்றி நீங்க (எடிட் செய்து வெளியிட்ட) வெளியிட்ட பதிவிற்கும் உங்கள் நிலைப்பாட்டிற்கும் என்னுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆமா. உண்மைத் தமிழன்னு (இவர் உண்மைத்தமிழன்னா மத்தவனெல்லாம் டூப்ளிகேட் தமிழனா?) ஒருத்தர் பதிவுலகத்த குத்தகைக்கு எடுத்திருக்காராமே. இந்த பதிவ எழுதுறதுக்கு முன்னாடி அவர்கிட்ட அனுமதி வாங்கிட்டீங்களா.
நற்குடி மேட்டர்லேயே ஒரு டவுட் வந்தது. ஆனா இப்போ அவரோட அரை டவுசர் வெளியே வந்துடுச்சு. விசாரிச்சுப் பாருங்க உண்மை(!?) தமிழன் ஏதாவது ஷாகாவுல தென்பட்டதா தகவல் கிடைக்கலாம்.
வினவின் உதவியால் பல ஆணாதிக்கவாதிகளுடைய மற்றும் அரை டவுகளுடைய முகமூடிகள் கிழிக்கப்பட்டுள்ளது.
http://bikeel.blogspot.com/2010/06/blog-post.html
சுகுணா ஏன் இந்த தீசல் புத்தி
சரியா ஒருவருசம் ஓவர்சீஸ் கிளையன்ட சைட் இம்ளிமென்டேசன் முடிச்சிட்டு வந்தா இங்க ரத்த ஆறு ஓடுது…. நல்ல வேளையா எல்லா பதிவையும் படிச்சதனாலையும் பதிவர்கள் யாரையுமே எனக்கு தெரியாததாலையும் சுதந்திரமா ஒரு சிந்தனையை தக்க வச்சுக்க முடிஞ்சது….
ஆக இந்த பஞ்சாயத்துல என்னோட 2 பைசாவ நான் போட்டே ஆகனும்
அதாவது பதவுலகில் பெண்கள் எழுதுவதே கஷ்டம் அப்படி எழுதறவங்களுக்கும் சில பேரு டார்சர் கொடுக்கறான்… என்ன செய்யலாம்? பிரச்சன கொடுக்கறவங்கள தட்டிக்கேட்கலாம், இல்ல பொறுத்துகிட்டு சும்மா இருக்கலாம்..
இத்தனநாளா பொறுத்துகிட்டு சும்மா இருந்த சிவராமன் பூக்காரிக்கப்புறம் அவரு பொறுமையை தூக்கி எரிஞ்சிட்டு யாரெல்லாம் பெண் பித்தர்கள், யாரெல்லாம் சாதி பாக்குறவங்கன்னு ஒரு லிஸ்ட் எடுத்து கொடுக்க வேண்டிய எடத்துல கொடுத்திட்டாரு.. நல்ல வேலதான் அது…
சரி இனிமேலாவது இந்த சில்லறைங்க பயந்து கம்முனு இருப்பாங்க பெண்கள் நிம்மதியா எழுத முடியும்ன்னு நென்ச்சா இப்ப நம்ம அண்ணன் சுகுணா திவாகர் சிவராமன அம்பலப்படுத்தறேன்னு பிரச்சனைய அழகா டைவர்ட் பண்ணிட்டாரு.. இப்போ எல்லாரும் சிவராமன கும்கும்முன் கும்முறாங்களா… பூக்காரியின் பீத்த பதிவர் எஸ்கேப்..
ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சுகங்க மக்கா சிவராமன் செஞ்சது தியாகம். பெண்பதிவர்களுக்கு ஒரு சுதந்திர வெளி வேணும்னுதான் அவர் இந்த வேலைய செஞ்சிருக்காரு. இதுக்காக அவர பாராட்டியே ஆகனும்…
அவ்வளவுதாம்பா
இப்படிக்கு
பி.கிள்ளி வளவன் (எல்லோருக்கும்) பிகில்
பி.கு. இதுல வினவ பத்தி ஏதாவது எதிர்பாத்தீங்களா.. சாரிப்பா
ஏற்கனவே கேட்ட கேள்விக்கு பதில் இல்லாததால், மறுபடி கேட்கிறேன்
வாசகன் says:
June 2, 2010 at 9:28 pm
ருத்ரன் ஐயா
குறைந்த பட்சம் இதை தூண்டியதர்காவது ” வெகு குறைந்த ” பட்சம் மனசாட்சியோடு சந்தன முல்லையை என் கண்டிக்க வில்லை ?
மனோ தத்துவ மருத்துவர் நீங்கள், உங்களுக்கு தெரியாதா ஒருவனை எப்படி அடித்தால் அவன் எப்படி வெறி கொண்டு வருவான் என்று ? அப்படித் தானே முல்லை செய்த காரியம் அதை எப்படி நியாயப் படுத்த முடியும்.
ஒரு மனோ தத்துவ மருத்துவர் என்ற முறையில் இதற்க்கு எனக்கு பதில் தேவை . மற்றபடி பதிவுலக அரசியல் அப்புறம்
யார் முதலில் அடித்தார்கள் என்பதுதானே உங்கள் கேள்வி? உங்கள் கேள்வியின்படியே பார்த்தாலும், அடிக்கத்துண்டிய விதத்தில் நடந்து கொண்டதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே. இப்படி ரிஷிmuulam kuடைந்து கொண்டே போகலாம்.
முல்லையை நியாயப்படுத்தவரவில்லை, கிண்டலை தாங்கிக்கொள்ள ம