Sunday, September 25, 2022
முகப்பு முடித்துக் கொள்ளலாம். முடிவு நியாயமாக இருந்தால்...!!
Array

முடித்துக் கொள்ளலாம். முடிவு நியாயமாக இருந்தால்…!!

-

vote-012முடித்துக் கொள்ளலாம்தான் – முடிவு நியாயமானதாக இருந்தால். தவறிழைத்தவர் உண்மையிலேயே மனம் வருந்தியிருந்தால்.

ஆனால் முல்லையின் துணைவர் முகில் எழுதிய பதிவை முன்வைத்து முடித்துக் கொள்ள சிலர் துடிக்கிறார்கள்.

முகிலின் கடிதம் வெளிப்படுத்தும் வேதனையையும் சங்கடத்தையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். குறிப்பாக வினவு எழுதியுள்ள பதிவில், நர்சிம்மின் எழுத்தை “வன்புணர்ச்சி” என்ற சொல்லால் குறித்திருப்பதை “கொச்சைப்படுத்தியிருப்பதாக” அவர் குறிப்பிட்டிருக்கிறார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண்ணோ அவரது குடும்பத்தினரோ அதை வெளியில் கூறுவதற்குக் கூசும் துயரத்தின் வெளிப்பாடே அவரது கூற்று என்றே நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

இந்தப் புரிதல் எங்களுக்கு இருந்ததனால்தான் எமது பதிவை வலையேற்றுவதற்கு முன் அதனை முல்லைக்கு அனுப்பி, அவரது ஒப்புதல் பெற்று அதன் பின்னரே பிரசுரித்தோம். பிரச்சினையை மிகைப்படுத்திக் கூறி பரபரப்பு உண்டாக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல “ரேப்” என்ற அந்தச் சொல்.

பண்டிட் குயின் திரைப்படத்தில் வரும் கொடூரமான அந்தக் காட்சியைப் போன்ற ஒன்றை மனத்திரையில் ஒடவிட்டு, அது ஒரு பெண்ணுக்குத் தோற்றுவிக்கும் துன்பத்தை எண்ணி, ரசித்து எழுதப்பட்டதுதான் நர்சிம்மின் புனைவு. பணத்திமிர், பார்ப்பன சாதித்திமிர் போன்றவையெல்லாம் வினவின் புனைவுகள் அல்ல. நாங்கள் சாதி பிளவை உறுவாக்கவும் இல்லை அது நர்சிம்மின் எழுத்துக்குள் புழுத்து நெளிகின்றது, அவருக்கு கிடைக்கும் ஆதரவில் தனித்து தெரிகின்றது.

சந்தனமுல்லை என்ற பதிவருடன் வினவு கொண்டிருக்கும் நட்புக்காகவோ, அல்லது நர்சிம் என்பவர் மீதான பகைமைக்காகவோ எங்கள் பதிவு எழுதப்படவில்லை என்பதை முகில் புரிந்து கொள்வார் என்றே நம்புகிறோம். இந்த விவகாரம் எழும்புவதற்கு முன் நர்சிம் என்பவர் யார் என்றே எங்களுக்குத் தெரியாது என்பதே உண்மை.

நடுவீதியில் ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறையில் யாரேனும் ஒரு கயவன் ஈடுபடும்போது, நேர்மையான எந்த மனிதனும் என்ன செய்வானோ, செய்ய வேண்டுமோ அதைத்தான் நாங்கள் செய்தோம். அந்தப் பெண்ணின் பெயர் சந்தன முல்லை, அவரது கணவர் முகில் என்பதெல்லாம் அப்புறம் தெரியவரும் விவரங்கள். அவ்வளவுதான். நண்பர் முகில் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம்.

முகில் எழுதிய பதிவுக்கு பின்னூட்டமிட்டிருக்கும் பலர், “ஒரு பெண்ணின் நலனில் கணவனைத் தவிர வேறு யார் அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கமுடியும்?” என்ற பாணியில் எழுதியிருக்கிறார்கள். புரியாமல் எழுதியிருந்தால் இது அசட்டுத்தனம். புரிந்து எழுதியதாகவே தெரிவதால் இது விசமத்தனம்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட பெண்களும் சரி, அவளது குடும்பத்தினரும் சரி அதனை வெளியில் சொல்வதற்கே தயங்குகின்றனர். குடும்பத்தின் கவுரவம் மற்றும் பெண்ணின் எதிர்காலம் கருதி மறைக்கவும் விரும்புகின்றனர். இந்தச் சந்தில் ஒளிந்து கொண்டுதான் பல ஆணாதிக்கப் பெருச்சாளிகள் அடிபடாமல் தப்புகின்றன. மறப்பதற்கோ, மன்னிப்பதற்கோ நண்பர் முகில் தனது சொந்தக் காரணங்களையும் அளவுகோல்களையும் வைத்திருக்கலாம். அவற்றில் முகிலும் முல்லையும் ஒன்றுபடலாம் அல்லது வேறுபடலாம். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் அவர்களுக்கிடையில் ஒத்த கருத்து வரவேண்டும் என்பதே நம்முடைய விருப்பம்.

ஆனால், அந்த அளவில் மட்டுமே இது அவர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை. மற்றப்படி “திரௌபதியை துச்சாதனன் துகிலுரிந்தான். பிறகு திரௌபதியிடமோ தருமனிடமோ மன்னிப்பு கேட்டு விட்டான். அவையோரே கலைந்து செல்லுங்கள். மகாபாரதம் முடிந்தது” என்று பஞ்சாயத்து செய்ய முனைபவர்கள் துச்சாதனனை விடக் கொடிய அயோக்கியர்கள். இப்போது நடந்து கொண்டிருப்பது அதுதான்.

“வினவு என்ன பதிவுலகின் நாட்டாமையா?” என்று குமுறுபவர்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது இதைத்தான்: இந்த பாரதக் கதையை வினவு தொடங்கி வைக்கவில்லை. அதே நேரத்தில், “இது பாஞ்சாலியின் பாடு அல்லது தருமனின் பாடு.. நமக்கென்ன” என்று அவையில் நெடுமரமாய் சமைந்திருக்கவும் எங்களால் முடியாது. அவமானப் படுத்தப்பட்டிருப்பது சபையோராகிய நாம் அனைவரும்தான்.

ஏனென்றால் இந்தப் பிரச்சினையில் அநாகரிகங்களின் அத்தனை வகைகளையும் பார்த்து விட்டோம். தொடங்கி வைத்த நர்சிம், அதற்கு விசிலடித்து கைதட்டி பின்னூட்டமிட்டவர்கள், பின்னர் டிவிட்டரில் முல்லையைப் பற்றி அவதூறு செய்தவர்கள், ஒரு பக்கம் முல்லையிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டே இன்னொரு பக்கம் வினவின் பதிவுக்கு மைனஸ் ஓட்டு போட்டவர்கள் வரிசையில் கடைசியாக பைத்தியக்காரனையும் வினவையும் தாக்குவது போலக் காட்டிக் கொண்டு நர்சிம்முக்கு முட்டுக் கொடுக்க தனது புலனாய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தார் சுகுணா திவாகர். அதுதான் ஆபாசத்தின் உச்சம். அநாகரிகத்தின் எல்லை. ஐந்தாம்படை வேலைக்கு இலக்கணம்.

இந்த இடத்தில் தோழர் ரயாகரனை ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தம். அவருடன் கடுமையான கருத்துப் போராட்டத்தை வினவு ஏற்கெனவே நடத்தியிருக்கிறது என்ற போதிலும், ஆணாதிக்க எதிர்ப்பு என்ற நியாயத்துக்காக தானே முன்வந்து அவர் தோழமைக் கரம் நீட்டியிருக்கிறார். இதற்குப் பெயர்தான் தோழமை உறவு. தனது தனிப்பட்ட வன்மத்தைத் தீர்த்துக் கொள்ள எதிரிகளுக்கு ஐந்தாம்படை வேலை பார்ப்பவர்கள் நட்பு பற்றியோ, தோழமை பற்றியோ பேசும் அருகதை அற்றவர்கள்.

இன்று, “பூக்காரிகளுக்கும் சுய மரியாதை உண்டு என்ற முல்லையின் பதிவுக்கு தமிழ்மணத்தில் மைனஸ் ஓட்டு குத்தித் தள்ளுகிறார்கள் சில ஐந்தாம்படைப் பேர்வழிகள். இவர்கள் சிறுபான்மை என்றாலும் இதுவும் பதிவுலக நாகரிகத்தின் இலட்சணம்தான்.

நர்சிம்மை முல்லை கேலி செய்தார். நர்சிம் எதிர் வினையாற்றினார் என்று இன்னமும் சிலர் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச்சு அசலாக இதுதான் மகாபாரதக் கதை. “இந்திரப்பிரஸ்தத்தின் அரன்மணையில் துரியோதனனைக் கேலி செய்து திரௌபதி சிரித்தாள்; பதிலுக்குப் பழிவாங்க துரியோதனன் அவளைத் துகிலுரிந்தான்” என்ற துவாபர யுகத்தின் நியாயம் இந்தக் கலியுகத்துக்கும் பொருந்தும் என்றால், வேறு வழியில்லை – யுத்தம்தான் முடிவு.

கலியுகம் பிறந்து விட்டது உண்மையானால், பெண்ணுரிமை, சமத்துவம் போன்ற சொற்களிலாவது பதிவுலகத்துக்கு நம்பிக்கை இருக்குமானால், நாம் நாகரிகமான தீர்வுகளைப் பற்றி யோசிக்கலாம்.

“முல்லையையோ முகிலையோ நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்க தயார்” என்று கூறியிருக்கிறார் நர்சிம். நல்லது. சந்திக்கட்டும். ஆனால் ஒரு இனிய மாலை நேரத்தில் சரவணபவனிலோ அல்லது எதாவது ஒரு காபி ஹவுஸிலோ சந்தித்து டிபனுக்கும் காப்பிக்கும் இடையிலான இடைவெளியில் நாசூக்காக “சாரி” சொல்லி முடித்துக் கொள்ளும் பிரச்சினை அல்ல இது.

முல்லையையும் முகிலையும் நம்மையும் நர்சிம் சந்திக்கும் இடம் பதிவர் சந்திப்பாக இருக்க வேண்டும். பெண் பதிவர்கள் உள்ளிட்ட எல்லாப் பதிவர்களின் முன்னிலையில், இந்த விவாதத்தில் பங்கு பெற்ற எல்லா பதிவர்கள் மற்றும் வாசகர்கள் முன்னிலையில், உண்மைத் தமிழர் உள்ளிட்ட எல்லாத் தமிழர்களின் முன்னிலையில், நர்சிம், கார்க்கி முதலானோரும் தங்களது மன்னிப்பை வெளியிடட்டும். கள்ள உறவு கதை கட்டிப் பரப்பிய பெருமக்களும் தங்கள் முகத்தை அங்கே காட்டட்டும். முகத்தை வெளிக்காட்டும் தேவை இல்லாததால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

இது வினவின் நாட்டாமைத்தனம் அல்ல, நாகரிகமாக பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு ஆலோசனை மட்டுமே. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை உண்மைத்தமிழனே முன்நின்று செய்யட்டும். நாங்கள் ஓரமாக நின்று கொள்கிறோம்.

எழுத்தில் கம்பீரமாக உலவும் ஆணாதிக்கவாதிகள் தமது முகத்தைக் காட்டுவதற்கு வெட்கப்படத் தேவையில்லையே! என்றைக்கு வைத்துக் கொள்ளலாம், எங்கு வைத்துக் கொள்ளலாம் சொல்லுங்கள்.

சும்மா வெக்கப்படாதீங்க சார்! வாங்க!

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இணைப்புகள்

நர்சிமின் பூக்காரி பதிவு

  • ஏனோ
   நன்றி கூற தோன்றுகிருகிறது. நீங்கள் பார்பனரா?பிரசாதம் ரொம்ப நன்னா இருக்கு போங்கோ!

 1. இன்னமுமா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டு இருக்கு கைப்புள்ள-
  நன்றி வடிவேலு
  ,

  • நல்ல பதில்! முதல் பதிவை பார்த்திருந்தால் உங்கள் இந்த பதிவுக்கு வினவு சார்பாக இன்னுமொரு சவாஸு!!

 2.  நாகரிகமாக பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு ஆலோசனை மட்டுமே
  //

  ????

  வினவுவிடம் எதிர் பார்க்ககூடாது..??

  உங்க பிண்ணுட்ட படைகளிடம் சொல்லுங்கள் நாகரிகமாக பின்னுட்ட

  நரிகள் நாட்டாமைக்கு 

 3. […] This post was mentioned on Twitter by antonyanbarasu, Santhappan Sambandam and ravi srinivas, ஆயில்யன். ஆயில்யன் said: முடித்துக்கொள்ளலாம் முடிவு நியாயமாக இருந்தால் https://www.vinavu.com/2010/06/04/mullai-justice/ #வினவு […]

 4. ஆணாதிக்கத்தை அகற்ற நமக்கு பாதிக்கப்பட்ட முல்லை, முகில் தேவை இல்லை. உண்மையில் அந்த பெண்மைக்கு மரியாதை தரவேண்டும் என்பதில் மாற்று கருது இல்லைஎனில், சற்றே விலகி இருப்போம். எந்த பதிவர் சந்திப்பும் சினிமா ஆக வேண்டாம் என்பது என் எண்ணம்.
  இது அவர்கள் பிரச்சனை.. அவர்கள் உணர்வுகள் . 
  பதிவுலகத்தில் ஆணாதிக்கம் அகற்றுவது பற்றி சந்திப்பில் பேசுவோம் 

 5. இதுக்கு மேல இந்த விஷயத்தை வைத்து அரசியல் நடத்தும் பதிவுகளில் மைனஸ் ஓட்டு ஒன்றே தீர்வு ! என்னுடைய மைனஸ் ஓட்டு இந்தப் பதிவுக்கு !

  பதிவுலகத்தை சாதி வாரியாக,கும்பல் வாரியாக பிரித்த பெருமை வினவையே சாரும் ! வரலாற்றி நீங்கா இடம் ஐயா !

  • அய்யா நான் நியாயமான கேள்விகள்னு சொன்னது நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு அல்ல..திரு. ராம் கேட்ட கேள்விகளுக்கு..இதிலும் அரசியலா..முடியல சாமி..

 6. //பதிவுலகத்தை சாதி வாரியாக,கும்பல் வாரியாக பிரித்த பெருமை வினவையே சாரும் ! வரலாற்றி நீங்கா இடம் ஐயா !//

  வாங்க கபிலன் இத்தன நாள் எங்க இருந்தீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்?

  வினவுதான் சாதியக் கண்டுபிடிச்சதுன்னு கூப்பாடு போடுகிற உங்களது யோக்கியதைக்கு அசுரன் தளக் கட்டுரையில் வந்த பதில் இங்கு இடுகிறேன்.

  //
  சாதி குறித்து வினவுதான் பேசுகிறது என்று கதறும் ஜாக்கி சேகர், உ.த. போன்ற நல்லவர்கள் நடைமுறையில் இது போல சாதி சங்கங்களுடன் ஒட்டி உறவாடி, சாதியத்தை நடைமுறையில் கொள்ளும் நபர்களுடன் விமர்சனமின்றி பழகி வருகிறவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அங்கு விமர்சனமின்றி சாதியத்தை ஆதரிக்கும்(மௌனமாக இருப்பதன் மூலம்) ஆதரிக்கும் இவர்கள். இங்கு சாதியை வினவுதான் கிளப்புகிறது என்று சீன் போடுகிறார்கள். இன்று வினவு சாதி பேசிவிட்டதாக கதறும் பழமை பேசி முதலான இவர்கள் இதே தமிழ்மணத்தில் நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டு பார்ப்பனசாதியை தூக்கிப் பிடித்துக் கொண்டு திரியும் டோண்டுவை என்றாவாது இப்படி சொல்லியிருப்பார்களா?
  //

  உ.த. ஜாக்கி லிஸ்டில் உங்க பேரையும் சேத்துக் கோங்க. சாதிப் பிரிவினை குறித்து ரொம்ப அக்கறையெனில் சாதி வெறிய எதிர்த்து அல்லவா கபிலன் செயல்பட்டிருக்க வேண்டும்? அப்படி எதுவும் செய்துள்ளாரா? குறைந்த பட்சம் டோண்டு என்ற பாப்பன வெறியனை எதிர்த்து?

  அவர் ரொம்ப கஸ்டம் பட வேண்டாம் டோண்டு ஒரு சாதி வெறிபிடித்த மிருகம் என்பதை இங்கு பதிவு செய்து விட்டு இடத்தை காலி செய்தால் கூட போது,

  • பிரச்சினையை திசை திருப்பாமல் விஷயத்துக்கு வாங்க அசுரன். இதுல எந்த கும்பலிலும் நான் இல்லை. பிடித்திருக்கும் இடுகையை யார் எழுதினாலும் வாசித்து விமர்சித்து கமெண்ட் இடும் சாதாரண வாசகன்.

   இது இருவருக்கும் நடந்திருக்கும் பிரச்சினை. எதனால, எப்படி என்கிற உண்மை சம்பந்தப்பட்ட இருவருக்கு மட்டும் தான் தெரிந்திருக்கும்.

   இந்த விஷயத்துல சாதி என்கிற மேட்டர் நுழைத்தது யார் ?

   முல்லை என்ன சாதி ? நர்சிம் என்ன சாதி ? என்று ஊருக்கு அறிவித்த சமுதாயத் தொண்டர் யார் ? இதில் சாதி கொண்டு வர அவசியம் என்ன ?

   • //இந்த விஷயத்துல சாதி என்கிற மேட்டர் நுழைத்தது யார் ?//

    இந்த பதிவு முல்லையின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது எனில் சமந்தப்பட்ட இருவரில் ஒருவரான முல்லை இதில் சாதி உள்ளது என்கிறார்

    மேலும், இன்று சாதி பேசும் நீங்கள் இது நாள் வரை சாதிக்கு எதிராக என்ன செய்தீர்கள் என்று கேட்பது எனது சனநாயக கடமை. பதில் சொல்லுங்க

    • மனசாட்சியோட பேசுங்க அசுரன். சம்பந்தப்பட்டவரில் ஒருவர் சாதி உள்ளது என்கிறார்..அப்ப மற்றொருவர்….? ஒருதரப்பு வாதத்தைக் கேட்டு தீர்ப்பு எழுதுறதுதான் நியாயம்ங்களா ? வினவில் வரும் விஷயம் எல்லாம் நல்லா ஆராய்ந்த பிறகு தான் வெளிவரும் என்கின்ற என் நம்பிக்கையை காலி பண்ணிடுவீங்க போல…

     “மேலும், இன்று சாதி பேசும் நீங்கள் இது நாள் வரை சாதிக்கு எதிராக என்ன செய்தீர்கள் என்று கேட்பது எனது சனநாயக கடமை. பதில் சொல்லுங்க”
     என் சாதிக்காக கொடி பிடிக்கவில்லை, மற்றவனை இகழவில்லை, யாரையும் புண்படுத்தவில்லை. என்னுடைய சாதிக்காக எதுவும் செய்யாமல் இருப்பதே நான் சாதிக்காக செய்யும் மிகப் பெரிய நல்லது.
     இன்னொரு சின்ன மேட்டர் அசுரன்…
     அமெரிக்க ஜனாதிபதியைப் பற்றி பேசணும்னா….நான் ஜனாதிபதியா இருக்கணும்னு அவசியம் இல்லைங்க…..

   • //முல்லை என்ன சாதி ? நர்சிம் என்ன சாதி ? என்று ஊருக்கு அறிவித்த சமுதாயத் தொண்டர் யார் ? இதில் சாதி கொண்டு வர அவசியம் என்ன ?//

    இதே போல சாதி அறிவிக்கும் டோண்டு போன்றோரை நிங்கள் எதிர்பதில்லேயே ஏன் ?

    அவர்களெல்லாம் சமுதாய தொண்டர்களா? அப்போதெல்லாம் வாழவிருந்துவிட்டு இப்பொது குதிக்கும் உங்களது உள்நோக்கம் என்ன?

    • கேட்ட கேள்விகளை திசை திருப்புவதில் இருக்கும் ஆர்வத்தை கொஞ்சம் பதில் சொல்வதிலும் காட்டுங்கள் அசுரன். டோண்டுவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாதவர்கள் மட்டுமே திசை திருப்பும் வேலையில் ஈடுபடுவர் என்பது அனைவரும் அறிந்ததே.

     அடுத்தவன் தப்பு பண்றான் அதனால தான் நானும் தப்பு பண்றேன் என்று சொல்வது சின்னப் புள்ளத் தனமா இருக்குங்க.

     என்னுடைய உள்நோக்கம், வெளிநோக்கம், சைடு நோக்கம் எல்லாம் ஓண்ணும் இல்ல. ரெண்டு பேரை சண்டை மூட்டி விட்டு, வேடிக்கைப் பார்த்து எஞ்சாய் பண்ணாதீங்க. அந்த ரெண்டு பேரின் தனிப்பட்ட பிரச்சினை, இப்போ குழுக்களாக, சாதிகளாக பெருசா ஊதி வளர்த்து விட்டது யாருங்க ?

    • அமெரிக்க ஜனாதிபதியை பற்றி பேசுவதற்கு மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாதுதான். ஆனால் நேர்மை மற்றும் விமர்சனங்களை முன்வைப்பதற்கு இது அவசியம். ஒழுக்கவாதம் என்று இதனை விமர்சிப்பதற்கு முன் இவற்றில் பரிச்சயம் இருக்க வேண்டுமானால் அந்த அனுபவம் மாத்திரமே அவசியமாகிறது என்ற உண்மை தங்களுக்கு உரைக்க வேண்டுமால்லாவா

   • அமெரிக்க ஜனாதிபதியைப் பற்றி பேசணும்னா….நான் ஜனாதிபதியா இருக்கணும்னு அவசியம் இல்லைங்க…..

    …..ஆனால் கபிலன், தாழ்த்தப்பட்டவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்களாகவோ அல்லது அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளக் கூடிய மனதோ இருக்கவேண்டும்

    • //டோண்டுவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாதவர்கள் மட்டுமே திசை திருப்பும் வேலையில் ஈடுபடுவர் என்பது அனைவரும் அறிந்ததே.//

     கபிலனுக்கு நான் சொல்ல வருகின்ற் விசயங்கள் புரியவில்லையா அல்லது எனது எழுத்துக்கள் குழப்பகரமாக உள்ளதா என்று தெரியவில்லை. ஆயினும் தொகுப்பாக அவரது கேள்விகளுக்கு என்னால் இயன்ற அளவு எளிமையாக எதிர்வினை புரிகிறேன்.

     அவரது கேள்வி நர்சிம் பிரச்சினையில் எங்கு சாதி வந்தது என்பது.

     எனது பதில், அவரது ‘புணைவில்’ ‘பூக்காரியின் பிறப்பு அப்படி, நம்மோட வளர்ப்பு அப்படி’ என்ற பிரயோகம் இருந்ததுடன் அல்லாமல், ஏற்கனவே இது போல சாதி பார்த்து அனுகுவதற்கும் உதாரணங்கள் இருந்தன(ஒரு பெண்ணைப் பற்றிய பிரச்சினையில்) மேலும் அவரது தந்தை பார்ப்பன சங்க முக்கிய பிரமூகர் என்பது கூடுதல் தகவல், இவைதான் அந்த ‘புணைவில்’ உள்ள கருத்துக்கள் குறித்த எமது முன் முடிவுகளுக்கான அடிப்படை.

     மேலும், சாதி குறித்து பொதுவாக சாமியாடுபவர்களின் நடுநிலையை குத்திக் காட்டியே டோண்டு பிரச்சினையை எடுக்கிறேன். எப்பொழுதெல்லாம் சாதியத்தின் நுண்ணிய ஒடுக்குமுறைகளை (உதா: நர்சிம் பிரச்சினை) அம்பலப்படுத்துகிறோமோ அப்போதெல்லாம் சாதியைப் பேசி பிரிவினை செய்கிறாய் என்று பேசுபவர்கள் என்றைக்குமே சாதியை வெளிப்படையாகப் பேசி ஆதரிக்கும் டோண்டு போன்றோரை கண்டுகொள்வதில்லை. இந்த இரட்டை நிலையை இப்போதுதான் நான் கேள்வி கேட்க முடியும்.

     அசுரன்

    • கஷ்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, துயரை நீக்கும் செயல்களை செய்ய வேண்டும். அது தாழ்த்தப்பட்டோராக இருந்தாலும் சரி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முன்னேறிய வகுப்பினரா இருந்தாலும் சரி என்பது என் கருத்து.

     சாதிகளுக்கு நடுவே பகைத் தீயை மூட்டி, அதில் குளிர் காய நினைப்பது புரட்சியா என்பதை இதைப் படிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்.

  • அசுரன் சார்,

   வணக்கம்; அவரை விமர்சிப்பவர்களுக்கு பல முறை நான் ஆதரவு கொடுத்து இருக்கிறேன். எதிர்வரும் காலத்தில், தேவைப்படின் இடுகையும் இடுவேன். புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். இணையத்தில் மற்றவரது தளங்களுக்குச் செல்ல கால அவகாசம் கிடைப்பதில்லை. மற்றபடி, மெளனம் என்பது ஆதரவு ஆகிவிடாது. விளிம்புநிலை மக்களுக்கான உங்களது தொண்டை மதிக்கிறேன். அதே வேளையில், சூழ்நிலையைப் பொறுத்துத் தேவையில்லாத திணிப்புகளை ஏற்க மறுக்கிறேன். அவ்வளவுதான்.
   நன்றி!

   • //வணக்கம்; அவரை விமர்சிப்பவர்களுக்கு பல முறை நான் ஆதரவு கொடுத்து இருக்கிறேன். எதிர்வரும் காலத்தில், தேவைப்படின் இடுகையும் இடுவேன். புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். //

    புரிந்து கொள்கிறேன் பழமைபேசி… சாதிக்கு எதிரான செயல்பாடுகளில் உங்களது எழுத்துக்களும் இருந்தால் அது எனக்கு மகிழ்ச்சியே

 7. மற்றபடி ‘பூக்காரி’யில் சாதி எங்கு ஒழிந்திருந்தது என்பதை பலமுறை பலரும் எழுதியாகிவிட்டது. மீண்டும் அதை பிரேத பரிசோதனை பன்னுவதற்கு கபிலன் தயார் என்றால் நானும் தயார் என்ன கபிலன் வற்றீங்களா?

   • அவ பொறப்பு அப்படி…………. நம்ம வளப்பு அப்படின்னா என்ன அர்த்தம் கபிலன்

    எனக்கு உண்மையாவே தெரியாதுங்க, சொல்லித்தாங்க அதுல சாதி இல்லன்னு

    • ஆணதிக்கத்திமிர் பார்ப்பனீய கொழுப்போடு வெளிப்பட்டிருக்கிறாது அதை மறுக்க முடியுமா??

    • //அவ பொறப்பு அப்படி…………. நம்ம வளப்பு அப்படின்னா என்ன அர்த்தம் கபிலன் //
     கபிலன் இந்தக் கருத்துக்கு ‘மட்டும்’ பதில் சொல்லாமல் செலக்டிவாக பதில் சொல்லுவதேன்?

     இதுதான் சாதியை உள்ளிழுத்ததற்கு காரணமாக பூக்காரி பதிவு எழுத்துக்கள்

    • “//அவ பொறப்பு அப்படி…………. நம்ம வளப்பு அப்படின்னா என்ன அர்த்தம் கபிலன் //
     கபிலன் இந்தக் கருத்துக்கு ‘மட்டும்’ பதில் சொல்லாமல் செலக்டிவாக பதில் சொல்லுவதேன்? ”

     ஒருவரை திட்டினதற்கு விளக்கத்தை கேட்டிருக்கிறீர்கள். அதற்கு பதில் சொல்வது சம்பந்தப்பட்டவரை புண்படுத்தும் என்பதால் தான் அந்த கேள்வியைத் தவிர்த்தேனே தவிர செலக்டிவாக சொல்லல.

     பொதுவாகவே, ஒரு சிறுவன் வெளி இடங்களில் உணவருந்தப் போகிறான். எனக்கு தயிர் பிடிக்காது, கீரை பிடிக்காது என்ன ஒவ்வொன்றாய் சொல்கிறான். அப்போ அவனை சுற்றி இருக்கவங்க என்ன சொல்வாங்க அசுரன் ? புள்ளைய எப்படி வளர்த்து வச்சிருக்கா பாரு ? அப்படின்னு தானே சொல்வாங்க……குடிச்சிட்டு கலாட்டா பண்ற வாலிபர்களை, அவன் வளர்ப்பு சரி இல்லை…அதான் இப்படி அலையுது என்று சொல்வது சமூகத்தில் ஒரு சாதாரண் சொல்லாடல். இதில் சாதி இல்லை.

     “அவ பொறப்பு அப்படி..”…இது நர்சிம்மின் அசிங்கமான தாக்குதல். இதற்கு விளக்கம்,உதாரணம் தேவையில்லை. இதிலும் சாதி இல்லை.

     என் மனசாட்சிப்படி,கேவலமும், அசிங்கமும் தான் தெரியுதே தவிர,சாதி தெரியவில்லை.

   • கப் பிலன்,
    ”அவ பொறப்பு அப்புடி” ன்னு அந்த பொறுக்கி சொன்னதை விட்டுட்டீங்களே. ”அவ பொறப்பு அப்புடி, என் வளர்ப்பு வேற மாப்ளே” இரண்டையும் சேர்த்து படிச்சுப்பாருங்க மாப்ளே

 8. //இதுக்கு மேல இந்த விஷயத்தை வைத்து அரசியல் நடத்தும் பதிவுகளில் மைனஸ் ஓட்டு ஒன்றே தீர்வு ! என்னுடைய மைனஸ் ஓட்டு இந்தப் பதிவுக்கு !//

  இதுக்கு மேலே என்றால் எதுக்கு மேலா? உங்களது அந்த புனிதமான வரையறை என்ன?

  முல்லை முதலான பெண்கள் முல்லையின் பதிவில் வேறு ஒரு ‘இதுக்கு மேலே’ என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்.

  அதாவது, ‘இதுக்கு மேலே’ பதிவுலகின் ஆணாதிக்க வக்கிரத்தை பொறுத்துக் கொள்வதற்கு பதில் கபிலன் போன்ற ரிஜெண்டு பார்டிகளின் மன அமைதியை குலைப்பதே சரி என்கிறார்கள்.

  எனக்கென்னவோ ரெண்டாவது ‘இதுக்கு மேலே’ ஓகே என்று படுகிறது.

  உங்களுக்கு எப்படி கபிலன்? எதுக்கும் உங்க வீட்டு பெண்களிடமும் கருத்து கேளுங்களேன்? (நீங்கதான் நல்லவராயிற்றே?)

  • செய்த தவறுக்கு பதிவுலகமே சேர்ந்து திட்டியாச்சு. அவர் எவ்வளவு மோசமா எழுதினாரோ…அதை விட மோசமா பல பேரிடம் திட்டு வாங்கியாச்சு. மன்னிப்பும் கேட்டுட்டார். அதைத் தான் இதுக்கும் மேல ந்னு சொன்னேங்க.

   லீனா மணிமேகலையை பற்றி வினவு எழுதியதையும் எங்கள் வீட்டுப் பெண்களிடம் கருத்துக் கேட்கிறேன் அசுரன்.

   மார்க்ஸ் பற்றி விமர்சனம் செய்தால், அதை எதிர்கொண்டு கருத்து வாதத்தில் தானே இறங்கி இருக்க வேண்டும். அந்தப் பெண்ணைப் பச்சையாக பேசுகிறீர்களே..
   அது ஆணாதிக்கம் இல்லீங்களா அசுரன் ?

   • ஏனுங்க கபிலன்,

    முதலில் லீனாவையும் முல்லையையும் இவ்விசயத்தில் பொறுத்திப்பார்ப்பதே தவறு. இருவரும் பெண் என்பதால் ஒன்றாகிவிடாது கருத்துக்கள். இன்னொன்று யார் பச்சையாக பேசியது? லீனாவுக்கு பச்சையாக தவிர எப்படியும் பேசத்தெரியாது அதற்கு வினவு பச்சையாக அல்ல சிவப்பாகத்தான் பேசியது. ஷோபாவுல இருந்து நீங்க வரைக்கும் பேசுறாங்க பேசுறாங்கன்னு சொல்லுறீயளே என்னத்த பேசுனாங்களோ தெரியல? நீங்க தான் அப்புடி சொன்னாக இப்புடி சொன்னாக இன்னு சொல்லுறீங்க.

    இதுக்கு பேர் மன்னாப்பு நீங்க சொல்லுறீங்க? நர்சிமை ரொம்ப கேவலமா கெட்ட வார்த்தையெல்லாம் போட்டு கட்டுரை எழுதுறேன் அப்புறம் மன்னாப்பு கேட்டுடுறேன். கபிலன் முதலில் லீனாவின் கவிதையை கொடுத்துவிடு அப்புறம் வினவின் கட்டுரையும் கொடுக்கலாம்.

    அது உண்மையான மன்னிப்பா? நீங்க சொல்லுங்க கபிலன் உங்களுக்கு அப்புடி நடந்து நர்சிம் மாரி ஒரு மொள்ளமாரி இப்படி ஒரு மன்னாப்பு கேட்டா சும்மா உட்டுடுவீகளா? முல்லையின் தளத்தில் ஒரு லூசு எழுதுகிறது “மன்னிப்பு கேக்குறவன் மனுசன் மன்னிக்கத்தெரிஞ்சவன் பெரிய மனுசனாம்”

    மொதல்ல நீயெல்லாம் மனுசனான்னுதான கேக்கத்தோணுது, கபிலன் நீங்களும் அப்ப்டித்தான கேப்பீங்க

    கலகம்

   • //லீனா மணிமேகலையை பற்றி வினவு எழுதியதையும் எங்கள் வீட்டுப் பெண்களிடம் கருத்துக் கேட்கிறேன் அசுரன். //

    கேளுங்களேன் தாராளமாக மறக்காமல் லீனாவின் அந்த ரெண்டு
    கவிதை என்ற கண்றாவியையும் எடுத்து செல்லுங்கள்.

    பிறகு உங்க வீட்டு பெண்கள் என்ன சொல்கிறார்கள் என்று சொல்லுங்கள்

   • //மார்க்ஸ் பற்றி விமர்சனம் செய்தால்,//

    இது kapilanutaiya முதல் பொய். அநதக் கவிதை உழைக்கும் மக்கள், போராடுபவர்கள், புரட்சிக்காரர்கள் என அனைத்து எளியவர்களையும் செக்ஸ் வெறிபிடித்தவர்கள் என்று சொல்லியது

    கபிலன் கவிதை என்ற கண்றாவியை படிக்கமலேயே தீர்ப்பு சொல்ல வந்தவிட்டார் என்று நினைக்கேறேன்.

    இன்னொரு பொய்:
    // அதை எதிர்கொண்டு கருத்து வாதத்தில் தானே இறங்கி இருக்க வேண்டும். அந்தப் பெண்ணைப் பச்சையாக பேசுகிறீர்களே..
    அது ஆணாதிக்கம் இல்லீங்களா அசுரன் ?//

    விமர்சனத்திற்கு விமர்சனம்; அவதுஉருக்கு அவதுஉறு இதுவே எமது நடைமுறை. வினாவில் இதற்கு முன்பும் பலர் மார்க்ஸ் முதல் புரட்சி வரை பலத்தை விமர்சனம் செய்துள்ளனர்.

    இதெல்லாம் கபிலனுக்கு தெரியாமல் இல்லை. இருந்தாலும் இன்னொரு எதிர்கால பதிவிலும் வந்து இதே கருத்துக்களை அவர் சொல்லுவார் பாருங்களேன். அவரோட பிரச்சினையே வேற

    • பல ஊர்களிலும் லீனாவின் கவிதைக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் பண்ணாங்களே…அது மார்க்ஸ்க்காக இல்லீங்களா….கவிதையை இருமுறை படிச்சேங்க.

     நர்சிம்மின் இடுகை மோசமானது, கேவலமானது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அது மட்டும் கேவலமானது…ஆனால் அதையே நீங்க திட்டினா…அது கேவலம் இல்லை…அது அவதூறுக்கு அவதூறாம்…நல்லா சொல்லுறீங்கய்யா டீடெய்லு….இதைப் பற்றி பேசினால், மையக் கருத்து திசை மாறும்.

     இந்த மேட்டரை இதோடு க்ளோஸ் பண்ணுங்க. சம்பந்தப்பட்டவர்கள் சட்ட ரீதியாகவோ, பேச்சு வார்த்தைரீதியாகவோ, அல்லது அவர்களின் எதாவது ஒரு விருப்பப்படி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளட்டும்.

     அடுத்தவங்க புண்ணில் சொறிந்து விளையாடி, அரசியல் இன்பம் காணுதல் அநாகரிகம்!

     அப்புறம் ஒரு சில்லரை மேட்டர். அழகியில் டைப் பண்ணி வினவில் காப்பி பண்ணி போட்டால் மட்டும்…சரியா அலைன் ஆகமாட்டேங்குது…ஹெல்ப் ப்ளீஸ்…

    • //.கவிதையை இருமுறை படிச்சேங்க.//

     கவிதைய சரியாகப் படிக்கவும். இரு கவிதைகள் உள்ளன. தேவைப்படின் வினவு கட்டுரையில் இரண்டு கவுஜைகளும் கிடைக்கின்றன.

   • ////லீனா மணிமேகலையை பற்றி வினவு எழுதியதையும் எங்கள் வீட்டுப் பெண்களிடம் கருத்துக் கேட்கிறேன் அசுரன். ////

    வணக்கம் தோழர் கபிலன்

    உங்கள் வீட்டு பெண்களிடம் இன்னொன்றும் நீங்கள் கேட்க வேண்டும். அதாவது பெண்ணோடு பெண் புணருதலில் விருப்பமா? அல்லது ஆணோடும் பெண்ணோடும் இணைந்து இருபால் புணர்ச்சிகளில் ஈடுபட விருப்பமா? அல்லது ஒரே நேரத்தில் 3 ஆண்களுடன் இணைந்த அனுபவித்த புணர்ச்சி ஒரு பெண்ணுடன் இணைந்தால் கிடைக்குமா என்று கேளுங்கள் தோழரே!

    உங்கள் வீட்டு பெண்கள் என்ன சொல்வார்கள்?

    என்ன வினவு தோழர்களை விட மோசமாக பேசுகிறோம் என்று சிந்திக்கிறீர்களா?

    கொஞ்சம் ஆதாரத்தையும் பார்த்துவிட்டு சிந்தியுங்கள் தோழரே!

    http://www.shobasakthi.com/shobasakthi/?p=85

    ///// jeyasri
    April 1st, 2007 at 18:09

    மேற்கு நாடுகளில் பாலியல் தொழிலாளர்களின் பிரத்தியேக இடங்களில் போய் எவ்வளவு காசு என்றுதான் கேட்கிறது வழமை.
    ஆனால் வாடிக்கையாளர்கள் தெருக்களில் சந்தித்து பாலியல் தொழிலாளி என்று சரியாக நிச்சயிக்க முடியாத நிலையில் நீங்கள் வேலை செய்பவரா? என்றுதான் கேட்கிறார்கள். நீங்கள் புறொஸ்ரிரியூட்டா என்று கேட்பதில்லை. சிலவருடங்களுக்குமுன் ஒரு பாலியல் தொழிலாளியின் கணவரை பேட்டிகாண தொலைக்காட்சிபோனது. உங்கள் மனைவி விபச்சாரம் செய்வது குறித்து உங்க்கள் கருத்தென்ன என்று கேட்டபோது அவர் அது என் மனைவியின் தொழில் , எனக்கு என் மனைவி வேலைக்குப் போய்விட்டு வருபவர் என்ற நினைப்பைத்தவிர வேறு மாதிரி உணார்வதில்லை என்று பதில் சொன்னார். அழகு நிலையங்களில் மசாஜ் நிலையங்களில் நடைபெறுவதுபோல் தான் இதுவும். ஆண்குறியை உள் நுளைப்பதுக்கு இப்போது எந்த முக்கியத்துவமும் இல்லை. இருவர் கைகள் முட்டுப்படுவதுபோல்தான் இதுவும். குறியாயிருந்தாலென்ன, மூக்காயிருந்தாலென்ன எல்லாம் ஒன்றுதான்.

    ***

    jeyasri
    April 9th, 2007 at 21:19

    முகுந்தன், மேலே உள்ள கட்டுரையில் ஒரு வரி வருமே! லெஸ்பியன் களிடையில் எப்படி பாலியல் இன்பம் சாத்தியமாகிறது என்று மூளையைப்போட்டு பிசைபவர்களை எனக்குத்தெரியும் என்று , வாய்வழிப்புணர்ச்சி, ஆசனவாய்ப்புணர்ச்சி, இப்படி ஆயிரத்தெட்டு புணர்ச்சிவகைகள் இருக்கு. முன்னர் ஒரு பத்திரிகையில் ஒரு லெஸ்பியன் பெண் ஒரு பேட்டி கொடுத்திருந்தார், ஒரே நேரத்தில் மூன்று ஆண்கள் இயங்கியும் ஒரு பெண்ணுக்கு கொடுக்கமுடியாத திருப்தியையும் சந்தோசத்தையும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் சேரும்போது அடைய முடியும் என்று. ஒருவருடைய உணர்வுகளை இன்னொருவருக்கு விளங்க வைக்கிறது கஸ்ரம்தான்./////////

    யார் இந்த ஜெயசிறீ என்று யோசிக்கிறீர்களா? லீனாவுடனும் சோபாசக்தி மற்றும் வேறு பல ஆண்களுடனும் செக்ஸ் தொடர்பில் இருப்பவர். இதன் மூலம் லீனா பெண் பாலியல் புணர்ச்சி தொடர்பில் இருப்பவர் என்பதை உணர முடிகிறதா?

    • பின்னூட்டத்தில் தன் உணர்ச்சிகளை குறித்து குமுறும் ஜெயசிறி யார் என்று தெரிகிறதா? ராஜன்குறையின் மனைவியான மோனிகா ராஜன்குறை. லீனா சர்ச்சையில் சமீபத்தில் பெண்ணியம் குறித்து அழகாக ஊடகத்திற்கு செய்தி கொடுத்திருந்தார். அதற்கான ஆதாரம்

     http://thoomai.wordpress.com/2010/04/26/1291/

    • நர்சிம்-மின் ஆபாசமான ‘புனைவுக்கும்’ தமிழச்சி இங்கு குறிப்பிடும் ஜெயஸ்ரீ போன்றவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இதுபோன்ற தொடர்பில்லாத பேச்சுகளை வினவு அனுமதிப்பது விவாதத்தை திசை திருப்பவே உதவும்.
     நர்சிம்-மின் ’புனைவு’ மற்றும் அதை ஆதரிப்பவர்களைப் பற்றிய விமரிசனங்கள் எந்தக் குவிப்புமின்றி, ப்ளாட்டிங் காகிதத்தில் பரவும் மை போல இன்னும் தெளிவற்றுப்போவதற்கே இத்தகைய பின்னூட்டங்கள் துணைசெய்யும்.

    • யம்மா என் பொண்டாட்டிகிட்ட இத பத்தி கருத்து கேட்டேன். அவ என்ன சொல்லறன்ன நீயெல்லாம் பெண்ணுரிம்மை பேச தகுதியில்லாதவள் அப்படிங்கற.
     தூ நீயும் உன் speculationum. மேல நீ கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் தரவும் இல்லை என்றால் பொத்திக்கொண்டு இருக்கவும்.
     நீ சிவரமன்னெல்லாம் ரூம் போட்டு யோசிபிங்க போலருக்கு. மத்தபடி சுதந்திரம் அப்படின்னா ஒரு பொண்ணோ ஆணோ நடு ரோட்டுல நின்னு விபசாரம் பண்ணினா கூட அவள்/அவன் சம்மதம் இல்லாமல் அவர்களை தொடகூடாது என்பதுதான். வினவு உங்களின் ஒரு சில கருதுக்களுடுன் மட்டுமே உடன்படுகிறேன். இந்த விஷயத்தில் நான் நரசிம்மை வன்மையாக கண்டித்தாலும் பல ஆதரமட்ற்ற குற்றச்சாட்டுக்களை பலரும் பல பேர் மீது விசுகிறரர்கள். எனக்கு என்னவோ குமுதத்தின் லைட்ஸ் ஆன் சுனில் படிப்பது போலத்தான் இருக்கிறது.

    • நீங்கள் கேட்கிற அந்த மூன்று கேள்விகளையும் எங்கள் வீட்டில் கேட்கிறேன். இதுல என்ன இருக்கு. நீங்கள் பேசியதில் எதுவுமே எனக்கு மோசமாக தெரியவில்லை. ஆனால் நீங்க சொல்ல வந்து கருத்து எனக்கு புரியலைங்க.

     ஒரு பெண் ஒரு கருத்தை எடுத்து வைக்கிறார். ஒரு கருத்தை கதை, கவிதை,கட்டுரை,பாட்டு,நகைச்சுவை,நையாண்டி என பல்வேறு வகையாக எடுத்து வைக்கலாம். செக்ஸ் மூலமாக ஒரு கருத்தை எடுத்து வைக்கிறார். அந்த கருத்து சரியா..இல்லையா, அவர் நல்லவரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால்,அதற்கு எப்படி பதிலளித்தார் வினவு என்பது தான் நான் கேட்ட கேள்வி. அது ஆணாதிக்கம் இல்லையா ?

     “லீனா பெண் பாலியல் புணர்ச்சி தொடர்பில் இருப்பவர் என்பதை உணர முடிகிறதா?”
     சரி. இது உண்மையாகவே இருந்தால் கூட, அது அவங்க சொந்த விஷயம். யாரையும் பாதிக்காமல், அவங்க யார் கூட எப்படி வேண்டும்னாலும் இருக்கட்டும் . அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை ? ஆக, அப்படிப்பட்ட பெண்கள் எதாவது கருத்து சொன்னா, பச்சை பச்சையா பேசணுமா ? அப்போ அப்படிப்பட்ட பெண்கள் எல்லாம் உங்க கண்களுக்கு பெண்களா தெரியாதா ?

     நான் கேட்டதற்கும், நீங்கள் சொல்வதற்கு என்ன சம்பந்தம் என்று விளங்க வில்லை.

   • ///மார்க்ஸ் பற்றி விமர்சனம் செய்தால், அதை எதிர்கொண்டு கருத்து வாதத்தில் தானே இறங்கி இருக்க வேண்டும். அந்தப் பெண்ணைப் பச்சையாக பேசுகிறீர்களே..
    அது ஆணாதிக்கம் இல்லீங்களா அசுரன் ?///

    ராமேஸ்வரம் படப்பிடிப்பின் போது சோபாசக்திக்கும் லீனாவுக்கும் நடந்த செய்திகளை தொழிலாளர்
    தோழர்கள் கூறியபோது வினவு தோழர்களோ அல்லது பெ.தி.க.வில் இருந்த சில தோழர்களோ ஒன்றும் சொல்லவில்லை. படப்பிடிப்பில் என்னென்ன கூத்துக்கள் நடந்ததென்று தோழர்களுக்கும் தெரியும். ஆனால் சோபா சக்தியும் லீனாவும் தொழிலாளியை அடித்தபிறகே அடிவாங்கிய தொழிலாளரான தீபக் அவர்களுக்கு ஆதரவாக வினவு கேள்வி எழுப்பியது.

    • தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் ஏமாற்றுவதை கண்டித்து வந்த வினவின் கருத்தை ஆதரிக்கிறேன்! அதில் மாற்றுக் கருத்து இல்லை.

    • /ஒரு பெண் ஒரு கருத்தை எடுத்து வைக்கிறார். ஒரு கருத்தை கதை, கவிதை,கட்டுரை,பாட்டு,நகைச்சுவை,நையாண்டி என பல்வேறு வகையாக எடுத்து வைக்கலாம். செக்ஸ் மூலமாக ஒரு கருத்தை எடுத்து வைக்கிறார். அந்த கருத்து சரியா..இல்லையா, அவர் நல்லவரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால்,அதற்கு எப்படி பதிலளித்தார் வினவு என்பது தான் நான் கேட்ட கேள்வி. அது ஆணாதிக்கம் இல்லையா ? ///

     லீனா சொல்லிய அந்தக் ‘கருத்து’ போராடுபவர்கள், உழைப்பவர்கள், புரட்சிக்காரர்கள், கம்யூனிஸ்டுகள், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், சே வரை அனைத்து ஆண்டுகளும் யோனி தேடி அழையும் வெறி பிடித்த ஆண்குறிகளே ..

     இதற்கு வினவின் கேள்வி, இத்தகைய கருத்துக்கு
     வருவதற்கு லீனா எத்தனை (அத்தகைய) ஆண்குறிகளை
     பார்த்த பிறகு வந்தார் என்பதே ஆகும்.

     சரிதானே? கேள்விக்குப் பொருத்தமான எதிர்வினை

     லீனாவின் நோக்கம் நேர்மையானது எனில், வெகு
     எளிமையாக பெண்கள் மீது பாயும் கம்யுனிஸ்டு, புரட்சிக்கார ஆண்குறிகளை அம்பலப்படுத்திவிட்டுச் செல்ல
     வேண்டியதுதானே?

     எங்களை அவர் வேசி என்று சொல்லலாம் எனில்,
     எங்களைப் போன்ற எத்தனை வேசிகளை நீ பார்த்தாய்
     என்றுதான் நாங்கள் திருப்பிக் கேட்போம்?
     அப்படி கேட்டதற்கே அய்யோ என்னை
     அவமானப்படுத்திவிட்டான் என்று கதறுபவர்கள், எங்களை
     அவர் வேசி என்றுள்ளாரே அதற்கு ஏன் எந்த கருத்தும் சொல்ல
     மறுக்கிறீர்கள்?

    • “இதற்கு வினவின் கேள்வி, இத்தகைய கருத்துக்கு
     வருவதற்கு லீனா எத்தனை (அத்தகைய) ஆண்குறிகளை
     பார்த்த பிறகு வந்தார் என்பதே ஆகும்.”
     சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய தலைவரையோ, புரட்சியாளர்களையோ, மாற்றுக்கருத்துடையவர்கள் பலரும் பலவாறு விமர்சித்து தங்கள் கருத்தை கூறுவது இயல்பான ஒன்று. அப்பொழுது கூட, தனி ஒருவரை மட்டுமே விமர்சிப்பர். வினவின் கட்டுரை அப்படி அல்ல, லீனா, அவரின் கணவர், நண்பர் என பிரச்சினைகளுக்கு சம்பந்தமே இல்லாதவர்களை இழுத்து காரி உமிழ்வது நல்லாவா இருக்கு.
     இது எப்படி இருக்கு தெரியுமாங்க…வண்டியில போயிட்டே இருக்கோம்…டக்குன்னு ஒரு பைக் காரர் தவறான ரூட்ல வந்து நம்மல இடிச்சிட்டு நிக்காம போயிடுறார்….அதற்கு நாம அவரை…தெ..பை….ந்னு திட்டுறதுக்கு சமம். அவனை தானே திட்டணும்…அவங்களுக்கு நெருங்கியவர்களை எதற்குத் திட்டணும்?
     “அவர் வேசி என்றுள்ளாரே அதற்கு ஏன் எந்த கருத்தும் சொல்ல
     மறுக்கிறீர்கள்? ”
     அசுரன் இதுல கருத்து சொல்ல என்ன இருக்குங்க. யாரோ ஒருவர் விருப்பப்பட்டு வேசியாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை ?

  • வினாவை பார்த்து மஊன்றவது நபர் உனக்கு உரிமை இல்லை என்று உரிமையுடன் பேசும் கபிலன். தானே ஒரு மூன்றாவது நபர் என்பதை வசதியாக மறந்துவிட்டு நரசிம்மை போதிமான அளவு தண்டித்து விட்டோம் என்கிறார்

   ஐய்யா உங்களுக்கு ஒரு சிறு விளக்கம் கொடுக்கக் வேண்டிய வரலாற்று கடமை எனது தலையில் பெரும் பாரமாக இந்த இடத்தில் சுமத்தப்பட்டு விட்டது.

   பாதிக்கப்பட முல்லை மற்றும் பிற பெண்கள் உறுதியுடன் நின்று கேட்ப்பது தண்டனையை அல்ல, அதைவிட முக்கியமாக நிவாரணம் மற்றும் நிரந்தர தீர்வு.

   மூன்றவது நபரான உங்களுக்கு இது புரிய வாய்பில்லை. வேண்டுமானால் பெண்கள் எழுப்பியுள்ள ‘இதுக்கு மேலே’ என்ற அங்கலாய்ப்புக்கு பதில் சொல்ல முயறசி செய்து பாருங்கள் உங்களுக்கு உங்களது அங்கலாய்ப்பின் அபத்தம் புரியும்

 9. //பதிவுலகத்தை சாதி வாரியாக,கும்பல் வாரியாக பிரித்த பெருமை வினவையே சாரும் ! வரலாற்றி நீங்கா இடம் ஐயா !//

  ஒத்துமையா இருந்து மொக்கை போட்ட இழவுக்கு கும்பல் கும்ப்லா இருந்து பெண்ணுரிமையாயாவது பாதுகாக்க முடிகிறதே என்ற என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி. அதது அதது அவரவர் சொந்த நலனின் அக்கறையிலிருந்து பார்க்கும் போது கிடைக்கும் மனவுணர்வு.

  கபிலன் போன்ற ரொம்ப நல்லவர்களுக்கு ப்ளாக்கில் எழுதி மொக்கை போடும் மகிழ்ச்சி போச்சு – (அடடா வட போச்சே)

  முல்லையின் பதிவில் குமுறியுள்ள பெண் பதிவர்களுக்கும், பிற ஜனநாயகவாதிகளுக்கு பதிவுலகு ஆக்கப்பூர்வமான ஒரு நிலையை நோக்கிச் செல்ல இந்த ரண சிகிச்சை உதவியுள்ளதே என்று மகிழ்ச்சி.

  வடை போனதெற்க்கெல்லாம் மைனஸ் குத்து குத்துவது கபிலனுக்கு சரி எனில் பூக்காரிக்காக நாங்கள் இந்த ஆட்டம் ஆடுவது சரி என்றே சொல்வேன்.

  • மன்னிக்கவும். யாருடைய குமுறலையும் நான் தப்பாகச் சொல்லலைங்க. எல்லாம் குமுறியாச்சு. முடிச்சிப்போம்.

   மொக்கை என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது. உங்களுக்கு மொக்கையாக தெரியும் ஒன்று மற்றொருவருக்கு நல்ல பதிவாகப் தெரியும்.

   இந்த மாதிரி பகையை வளர்க்கும், சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும், பதிவுலக அரசியலில் ஈடுபடும் பதிவுகளை விட, மொக்கைப் பதிவுகள் எவ்வளவோ மேல் !

   • //மொக்கை என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது. உங்களுக்கு மொக்கையாக தெரியும் ஒன்று மற்றொருவருக்கு நல்ல பதிவாகப் தெரியும்.///

    உங்களுக்கு வினவு பதிவு சாதி பதிவா தெரியுது எங்களுக்கு சாதி எதிர்ப்பு பதிவா தெரியுது. அதை நாங்க விளக்கி சொல்லிருக்கோம் நிங்கலோ மொட்டையா தீர்ப்பு எழுதிருககீங்க

    சரி என்னோட பின்னூட்டத்தில் உள்ள மத்த விசயங்களுக்கும் உங்க மேலான கருத்துக்களை பதிவு செஞ்சிட்டு போங்க

 10. போதும் ப்ளீஸ் வினவு… இந்த thread கண்டிப்பாக சம்பந்தபட்டவர்களுக்கு வருத்தத்தை தான் தரும். ஒரு புன்னை மீண்டும் மீண்டும் சொரிந்து பார்ப்பது நல்லது அல்ல… ப்ளீஸ் Stop adding comments regarding this…. A humble request

 11. //கபிலன்
  says: June 4, 2010 at 5:17 pm
  இதுக்கு மேல இந்த விஷயத்தை வைத்து அரசியல் நடத்தும் பதிவுகளில் மைனஸ் ஓட்டு ஒன்றே தீர்வு ! என்னுடைய மைனஸ் ஓட்டு இந்தப் பதிவுக்கு !

  பதிவுலகத்தை சாதி வாரியாக,கும்பல் வாரியாக பிரித்த பெருமை வினவையே சாரும் ! வரலாற்றி நீங்கா இடம் ஐயா ! //

  கபிலனுடன் உடன்படுகிறேன்.

 12. எப்படியோ பதிவுலக தாதா ஆகிட்டீங்கண்ணா! மேட்டர தொடர்ந்து, லைவ்வா நடத்தி கொண்டு போகிறிங்க! வாழ்க வினவானிசம்!

 13. //ஆனால் வினவு தளத்தின் மீது சாதி வெறி எதிர்ப்பு, ஓட்டுக்கட்சி எதிர்ப்பு, ஆபிரகாமிய மத எதிர்ப்பு, பெண் அடிமைத்தன எதிர்ப்பு, சமூக பிரச்சினைகள் ஆகியவற்றின் காரணமாக ஏதோ எரிச்சலில் இருந்தவர்கள் தங்கள் கோபத்தை இப்போது எதாவது ஒரு வழியில் காட்டுகிறார்கள்.//

  ரிபீட்டு

 14. வினவை வழி மொழிகிறேன்….

  உண்மை தமிழன் அண்ணாச்சி இந்த விசயத்தில் ஊமை தமிழானாக இல்லாமல் பொது சபையில் விவாதித்து நர்சிம் மன்னிப்பை அவராலேயே கேட்கப்பட வேண்டும் அதுதான் நியாயமான முறை…

  நன்றி

  • வினவின் தளத்தில் எத்தனையோ நல்ல கட்டுரைகள் வந்திருக்கு…அதையெல்லாம் பாராட்டி கமெண்ட் பண்ணியிருக்கேன். எனக்கு உடன்பாடில்லாத பல கட்டுரைகள் வந்திருக்கு அதை விமர்சிச்சிருக்கேன்.

   மன்னிக்கணும் கணேஷ்.இதுல எதை நீங்க நல்லவைன்னு சொல்றீங்கன்னு புரியல ? இதுல முன்முடிவுன்னு என்ன இருக்கு ? பதிவுலகின் உறவுகளை சாதியின் பெயரைச் சொல்லி கிழிக்காமல் இருங்கன்னு தான் சொல்றேன் !

   • //இதுல முன்முடிவுன்னு என்ன இருக்கு ? பதிவுலகின் உறவுகளை சாதியின் பெயரைச் சொல்லி கிழிக்காமல் இருங்கன்னு தான் சொல்றேன் !//

    பதிவுலகில் சாதி இல்லை என்று கபிலன் சொல்ல வருகிறாரா? போலி டோண்டு என்ற ஒரு கேரக்டர் உருவான வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள் கபிலன் இங்கு நிபந்தனையற்ற உறவுகள் எதுவும் கிடையாது. சாதியம் அற்ற சொல்லாடல்களுக்கோ பஞ்சமே கிடையாது. அவற்றையும் எதிர்த்து குரல் கொடுங்கள் கபிலன்.

    • அவருடைய பதிவுகளை நான் அவ்வளவாக படித்ததில்லை…அப்படியே இருந்தாலும், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற சொல்வழக்கு பதிவுலகிற்கு பொருந்தாது அசுரன்.

     பிரச்சினைக்குத் தீர்வுகளைக் காண வழி வகுப்பதே புரட்சியின் நோக்கம். பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்வதால் எப்படிங்க தீர்வு கிடைக்கும்?

 15. //இதுக்கு மேல இந்த விஷயத்தை வைத்து அரசியல் நடத்தும் பதிவுகளில் மைனஸ் ஓட்டு ஒன்றே தீர்வு ! என்னுடைய மைனஸ் ஓட்டு இந்தப் பதிவுக்கு !//

  கபிலன் அய்யா உன்னைப்போல் ஒருவன் பதிவினிலேயே உங்களது அரை டவுசர் வெளியில் தெரிந்துவிட்டதய்யா. இதை நீங்கள் மைனஸ் ஓட்டு குத்தி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

  இந்த வார ஷாகாவில் என்ன ஸ்பெஷல் ஆணாதிக்க குருமாவா?

  • ஹா ஹா…கருப்பன்…ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து. என் கருத்து உங்களுக்கு பிடிக்க வேண்டும் அவசியமில்லை. ட்ரவுசர் கிழிஞ்சது யாருக்குன்னு இன்னொரு தடவை படிச்சிட்டு வாங்க ஐயா…இந்த கிலுகிலுப்பையை நம்ம கிட்ட காட்டாதீங்க : )

  • தமிழில் கூறும், தோழர் அவர்களே !! விளக்கம் தர வினயமாய் காத்துக்கொண்டு இருக்கிறேன்.நன்றி ! வணக்கம் !!

 16. முதலில் மன்னிப்பு ,அது மனம் சொல்லவேண்டும் வாய் வார்த்தையால் அல்ல அடுத்து மறப்போம் ,எல்லோருக்கும் பொருந்தும்
  பதிவுலகம் ,பதிவர்கள் மறுமொழி எழதும் நாங்கள் எல்லோரும் இருந்து
  பின் மறந்து விருந்து என கொண்டடுஊம்

  சொலுங்கள் எடத்கை வரத்தயார் . நட்புடன்

 17. மருத்துவர் ருத்ரனுக்கே மனோதத்துவம் சொல்லித் தருவார்கள் இங்கே…

  சரி செய்திக்கு வருவோம்…

  சாதி வெறியை தூண்டியது வினவு தோழர்களா?

  உ.தமிழன் எழுதுகிறார்: வினவு கொள்கைகளை கொண்டு வருவதற்காக இணையத்திற்குள் நுழைந்திருக்கின்றனர். ஜாதிவெறியை நமக்குள் திணிக்க முயல்கின்றனர் என்கிறார். 2007 இல்
  பெரியார் கட்டுரைகளை இணையத்தில் பதிவு செய்யும் போது “ஆட்டம் தாங்க முடியல… டோண்டு கிட்ட சொல்றேன் என்று பின்னூட்டமிட்டார். ஏதோ விளையாட்டுத்தனமாக பேசுகிறார் என்று நினைத்திருந்தேன். என்னிடம் இருந்தது கொள்கை வெறி. அதை ஒழித்துக்கட்டத்தானே தமிழ்மணத்தில் இருந்து நீக்கச் சொல்லி இந்த மேதாவி பதிவு போட்டார். அன்று பெரியார் கொள்கையின் மீது இன்று கம்யூனிஸ்ட் தோழர்கள் மீதா?

  கொள்கைவாதிகள் என்பவர்கள் யார்? பொறுக்கித் தின்பவர்களா? ரெளடிசம் செய்பவர்களா? மக்களுக்காக பேசுபவர்களா? உலக வரலாறுகளை புரட்டி பாருங்கள். எந்த வரலாறிலும் மானிடத்திற்காக கடவுள் புரட்சி செய்யவில்லை. மானிடன் தான் சமூகத்தை மேம்படுத்தி இருக்கிறான். எந்த மனிதன் அவன்? கொள்கைவாதிகள் தானே?

 18. கொள்கைவாதிகள் என்பவர்கள் யார்?
  புரட்சி செய்பவர்கள் தான் கொள்கைவாதிகள்.

  புரட்சி என்பது என்ன?

  hat does the “Revolt” Revolt Against?

  1. The Revolt revolts against the tyranny of authority in all the spheres
  of life.

  [புரட்சி, உயிர்கள் வாழும் எல்லா திசைகளிளெல்லாம் உள்ள, ஏதேச்சதிக்காரத்துவத்தை எதிர்த்து புரட்சி செய்கிறது.]

  2. It revolts against scriptural suppression of Reason and sacredotal
  exploitation of ignorance.

  [புரட்சி, கற்பிதங்கள் மூலம் பகுத்தறிவினை முடக்குவதையும், அறியாமையை மேன்மேலும் களங்கப்படுத்துவதையும் எதிர்த்து புரட்சி செய்கிறது..]

  3. It revolts against the baseless assertion of superiority by birth or
  sex, by caste, creed or colour.

  [புரட்சி, பிறப்பு, பாலினம், சாதி மற்றும் நிறம் ஆகியவற்றினால் ´உயர்ந்தது´ என எவ்வித முகாந்திரமுமில்லாமல் வரையறுப்பதை எதிர்த்து புரட்சி செய்கிறது.]

  4. It revolts against the inferiority complex of the Non-Brahmin as
  much against the assumption of superiority of the Brahmin.

  [புரட்சி, பார்ப்பனரல்லாத மக்களின் தாழ்வு மனப்பான்மையையும்,
  பார்ப்பனர்களை உயர்வாகக் கருதப்படுவதையும் ஓரே அளவில் எதிர்த்து புரட்சி செய்கிறது.]

  5. It revolts against the bended knee and the upraised hand.

  [புரட்சி, யாசித்து மண்டியிடுதலையும், ஆணவத்தில் பிச்சையிடுதலையும் எதிர்த்து புரட்சி செய்கிறது.]

  [புரட்சி, தன்மானமிழந்து இரஞ்சுதலையும், ஆணவத்தில் இரத்தலையும் எதிர்த்து புரட்சி செய்கிறது.]

  6. It revolts against Imperialism, earthly as well as heavenly, human as
  well as divine, British as well as Brahmin’s.

  [புரட்சி, மண்ணிலும் விண்ணிலும், மனிதத்திலும் தெய்வீகத்திலும், அந்நியர்களிடமும் பார்ப்பனர்களிடமும் உள்ள ஏகபோக முதலாளித்துவத்தை எதிர்த்து புரட்சி செய்கிறது.]

  7. It revolts against both, Heaven and Hell.

  [புரட்சி, சொர்க்கம், நரகம் இரண்டையும் எதிர்த்து புரட்சி செய்கிறது.]

  8. It revolts against the supercession of Man by God as well as by
  Machine.

  [புரட்சி, மனிதனைக் கடவுளுக்கும், இயந்திரத்திற்கு மாற்றாக மிகைப்படுத்துவதை எதிர்த்து புரட்சி செய்கிறது.]

  9. It revolts against the exaltation of the duty to God above that to
  man.

  [புரட்சி, மானுடத்தைக் காக்கும் கடமைகளை ஆற்றாமல், தன்னிலை மறந்து கடவுளுக்கு சேவகம் செய்வதை எதிர்த்து புரட்சி செய்கிறது.]

  10. It revolts against miracle mongering and Mantra-muttering.

  புரட்சி, தந்திர, மாய வித்தைகளை விற்பனைப் பொருளாக்குவதையும், மந்திரங்கள் ஓதுவதையும் எதிர்த்து புரட்சி செய்கிறது.

  11. It revolts against the doctrine of fatalism and the faith in praise and
  prayer.

  [புரட்சி, விதி சார்ந்த தத்துவங்களையும், புகழ்ச்சியின் மீதுள்ள விசுவாசத்தையும் பிராத்தனைகளையும் எதிர்த்து புரட்சி செய்கிறது.]

  12. It revolts against economic slavery and enthronement of Mammon.

  [புரட்சி, பொருளாதார அடிமைத்தனத்தையும், பொருட் செல்வத்தின் மீதான அதீத பேராசையையும் எதிர்த்து புரட்சி செய்கிறது..]

  13. It revolts against poor physique and worship of physical Force.

  [புரட்சி, பலவீனமான உடற்கட்டையும், அடிதடி வன்முறையை வழிபடுதலையும் எதிர்த்து புரட்சி செய்கிறது..]

  [புரட்சி, நலிந்தவர்களின் மீதான அடக்குமுறைகளை ஊக்குவிப்பதை எதிர்த்து புரட்சி செய்கிறது..]

  14. It revolts against the toleration of man’s unchastity and intoleration
  of woman’s.

  [புரட்சி, சமூகத்தால் மறுக்கப்பட்ட பாலியல் நடத்தைகளை ஆண்கள் பின்பற்றும் போது சகித்துக்கொள்வதையும், பெண்கள்பால் காட்டும் சகிப்பின்மையையும் எதிர்த்து புரட்சி செய்கிறது..]

  15. It revolts against early marriage, enforced widowhood and seclusion.
  of woman behind the purdha.

  [புரட்சி, குழந்தைத் திருமணத்தையும், திணிக்கப்பட்ட விதவை வாழ்வையும், முக்காடு ஆடைகளினுள் பெண்களை ஒடுக்குவதையும் எதிர்த்து புரட்சி செய்கிறது.]

  16. It revolts against the worship of images and performance of
  ceremonial.

  [புரட்சி, உருவ வழிபாடுகளையும், சமய ஊர்வலங்களையும் எதிர்த்து புரட்சி செய்கிறது..]

  17. It revolts against the conception of divine creation and vicarious
  salvation.

  [தெய்வீகக் படைப்புகள் பற்றிய கருத்துக் களையும், பாவங்கள், சாத்தான்களிடமிருந்து மீட்டல் போன்ற அனாவசிய செய்கைகளையும் எதிர்த்து புரட்சி செய்கிறது…]

  18. It revolts against the hypocrisy of present-day religion and the
  immorality of conventional ethics.

  [இன்றைய சமயங்களின் போலித்தன்மையையும், வெளிவேடத்தையும்,
  சாகாவரம் பெற்றுவிட்ட தேவையற்ற ஒழுங்குகளையும், சடங்குகளையும் எதிர்த்து புரட்சி செய்கிறது.]

  19. It revolts against political corruption as well as against social
  injustice.

  [அரசியல் ஊழல்களையும், சமுதாய அநீதிகளையும் ஒரு சேர
  எதிர்த்து புரட்சி செய்கிறது..]

  20. It revolts against the opposition of orthodoxy to the progress of
  man.

  [மானுட முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் போலி ஆச்சாரத்தினை
  எதிர்த்து புரட்சி செய்கிறது.]

  • பொதுவா தன்னைத் தவிர மற்றது அனைத்தையும் எதிர்ப்பது தான் புரட்சியோ?

   • இங்கு தன்னை என்று நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ‘ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை’ என்று புரிந்துகொள்ளுங்கள். வினவின் அரசியல் ஒடுக்கப்பட்ட மக்கலுக்கானது.அதற்கு எதிரான அனைத்தையும் எதிர்ப்பது என்பதுதாணே நியாயமானது. அதுதாணே உண்மையான புரட்சியும் கூட.    

   • இங்கு ‘தன்னை’ என்ற இடத்தில் ‘ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை’ என்று குறிப்பிட்டுக் கொள்ளுங்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதுதான் வினவின் அரசியல். அதுதானே நியாயமும் கூட ரம்மி. அதுதாணே உண்மையான புரட்சியாக இருக்கும்.
      

 19. //ஆனால் ஒரு இனிய மாலை நேரத்தில் சரவணபவனிலோ அல்லது எதாவது ஒரு காபி ஹவுஸிலோ சந்தித்து டிபனுக்கும் காப்பிக்கும் இடையிலான இடைவெளியில் நாசூக்காக “சாரி” சொல்லி முடித்துக் கொள்ளும் பிரச்சினை அல்ல இது//

  ஆனால் இதைதான் முன் வைப்பார்கள் பதிவுலகின் குத்தகைதாரர்கள். ஏனென்றால் போலி டோண்டுவை போலல்லாது இம்முறை குற்றவாளியின் தோளை சுற்றி மூன்றாம் நம்பர் நூல் இருக்கிறது.

  • கருப்பா சவ்வாசு ! அப்பிடி போடு !! ஈவேரா நாய்கன் சொன்னாபுல அறுத்துருவோம் நூலை. பகுத்தறிவு பாசறையில் பாம்பை அடிக்கசொன்னாரா ?, ஜாக்கிரதை!! அபூர்வ பாம்பு எனில் சிறைவாசம் நிச்சியம்.!! நேசமொடு வரமாட்டான் தாசானுதாசன் ஆமென் !!

 20. //இந்த வினவுத் தோழர்களின் அட்வைஸின்படியோ அல்லது இவர்களது மேலாதிக்கத்திலோ, இவர்களது மேலான வழிகாட்டுதல்படியோ நடக்க வேண்டிய அளவுக்கு வலையுலகம் ஒன்றும் சீரழிந்து கிடக்கவில்லை. இங்கே இருப்பவர்களும் முட்டாள்களில்லை..!
  //
  அண்ணாச்சி எழுதியுள்ளார்.

  முல்லை என்ன சொல்லியுள்ளார்?

  //இனி நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நானோ, முகிலோ மட்டும் முடிவு செய்வது நியாயமாக இருக்காதோ என்று தோன்றுகிறது. தோழர்களும், நண்பர்களும் கூறட்டும்!//

  அதான் முல்லை தனது தளத்தில் அடையலாம் காட்டியுள்ள தோழன் வினவு எழுதியுள்ளது.

  அண்ணாச்சி எழுதியுள்ளார்.
  //
  பதிவர் சந்தனமுல்லை எந்த மாதிரியான தீர்வு வேண்டும் என்று அவரே கேட்டுக் கொண்டால் அவருடைய விருப்பத்தை நர்சிமிடம் தெரிவித்து பிரச்சினையைத் தீர்க்க வைப்பதில் நானும் ஆர்வத்தில் இருக்கிறேன்.. வலையுலகத்தில் உள்ள பலரும் இதில் ஆர்வத்துடன் இருக்கிறோம்.. இனி சந்தனமுல்லைதான் இது பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும்..!//

  முல்லை வெளிப்படையா சொல்லியுள்ளது

  @@
  நர்சிம் மற்றும் கார்க்கி செய்த குற்றத்தை, தவறை என்னால் மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.

  இனி யாரும் பெண் பதிவர்களை கிண்டலடிக்க இந்த ஒரு வழியை எடுக்க மாட்டார்கள் என்பது இதற்கு கிடைத்த வெற்றி. அதற்கு வினவுக்கும் மற்ற தோழர்களுக்கும் நன்றி! வினவின் அந்த இடுகை ஒரு கல்வெட்டாக இருக்கட்டும்.

  இதையெல்லாம் மீறியும் பாலியல் ரீதியாக வருங்காலத்தில் ஏதேனும் ஒரு பெண் பதிவரை யாரேனும் காயப்படுத்தினால், அப்போது கண்டிப்பாக வினவு தோழர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்பேன்.

  @@@

  ரொம்ப சிம்பிள் இனிமே பதிவுலகில் ஆணாதிக்க வக்கிரம் நடைபெறாத அளவு பதிவுலகம் இந்தப் பிரச்சினையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதே முல்லை சொல்லியுள்ளது. இது கஊட உ.த. வுக்கு புரியவில்லைய? இந்த சின்ன உத்திவரவதம் கஊட கொடுக்கு இயல்த்த பதிவுலகம் குறித்துதான் உ.த. அவ்வளவு பில்டப்பு

 21. வினவு தோழர்களே

  நாம் இணையத்தில் பதிவு செய்யும் ஆதாரங்களை சேகரித்துக் கொள்ளுங்கள். அவை அழிக்கப்பட்டுவிடலாம்.

  • நல்ல பதில்! முதல் பதிவை பார்த்திருந்தால் உங்கள் இந்த பதிவுக்கு வினவு சார்பாக இன்னுமொரு சவாஸு!! – 3

 22. வினவு சாதியை தூண்டுகின்றார் பதிவுலகத்தை சாதியால் பிரிக்கின்றார் என்பதைப்போல அருவருப்பான கருத்து வெறெதுவும் இருக்க முடியாது. இங்கே ஐ டியில் வேல பாக்கிறவரா இருந்தாலும் அமெரிக்காவில் வேலபாக்கிறவரா இருந்தாலும் எவ்வளவுதான் படிச்சிருந்தாலும் தொழிலதிபரா இருந்தாலும் எப்படி இருந்தாலும் அதற்குள் சாதி எப்படி நிரந்தரமாக இருக்கின்றது ஆணாதிக்கம் எப்படி நிரந்தரமாக இருக்கின்றது என்பதற்கே பூக்காரி கதை சாட்சியமாக இருக்கின்றது. மிக நாகரீகமான பதிவரிடம் இருந்து எப்படி பூக்காரி வந்தது என்றால் அதுதான் ஒளிந்திருக்கும் சாதியம் ஆணாதிக்கம். நாகரீகத்தால் சமூக அந்தஸ்த்து உயர்வால் அறிவு முதிர்ச்சியால் நாகரிகத்தை ஆடையாக அணியமுடியுமே தவிர ஆடைக்குள் இருப்பது சதி வெறிபிடித்ததும் ஆணாதிக்க வக்கிரம் நிறைந்ததுமான ஒரு ஒரு மிருகம் என்பதையே இங்கு குறிப்பிடப்படுகின்றது. கதை ஒருவர் எழுதினார் அதற்கு பலர் வக்காலத்துவாங்கினார்கள். சுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகவும் இப்போதும் 17 மில்லியன் மக்களை தீண்டத்தகாதவர்களாக உள்ளனர். நாய் பூனையை தீண்ட முடியும் இவர்களை தீண்ட முடியாது. வடநாட்டில் தலித் பெண்கள் ஆண்கள் சுத்தியிருக்க அம்மணமாக்கி தண்டனை கொடுக்கும் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆங்காங்கே வாயில் மலம் திணிக்கும் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றது. இன்னும் தேவதாசிகள் நடைமுறை முற்றாக ஒழிபடவில்லை. இதற்கெல்லாம் காரணம் இந்த நாகரீக வேடத்துள் ஒளிந்திருக்கும் சாதி மிருகம் ஆணாதிக்க மிருகம். அடிவயிற்றில் மலத்தை வைத்துக்கொண்டு துப்பரவுத்தொழிலாளியை அருவெருப்பாகப் பார்த்து தீண்ட மறுக்கும் அறிவிலித்தனம். இங்கே நாலு பதிவு எழுதினாக்கா நாலு பதிவர் சந்திப்பு நடத்தினாக்கா அல்லது நாலு சாதியச் சேர்ந்தவன் நண்பரானால் மட்டும் சாதி ஆணாதிக்க மிருகம் ஒளிந்துவிடப்போவதில்லை. சாதியத்தோடுதான் எல்லாம் இருக்கின்றது. பதிவுலகம் உட்பட எல்லாம் இருக்கின்றது. அது ஆன்மாவாக இருக்கின்றது. இதைத்தான் பூக்காரியும் அதற்கு வக்காலத்தும் அம்பலப்படுத்துகின்றது. மன்னிப்பு கேட்டால் இது ஒன்றும் ஒழிந்துவிடப்போவதில்லை ஆனால் தவறு ஒத்துக்கொள்ளப்படும் அவ்வளவுதான். செய்வது பிழை என்று தெரிந்தும் தான் அனைத்தும் நடக்கின்றது. உழைப்பை அனுபவிக்கலாம் உழைப்பால் வரும் பொருட்களை திங்கலாம் அனுபவிக்கலம் ஆனால் உழைப்பாளியை தொடமுடியாது தொட்டால் தீட்டு. அறிவுக்குப் புறம்பான இவைகள் பிழை என்று தெரிந்தும் ஒவ்வொருவரும் வைத்திருக்கின்றனர்.

  எழுத்துலகில் நாகரீக அறிவார்ந்த சமூகத்தில் சாதியம் எப்படி உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதை பூக்காரி அம்பலப்படுத்தியது. அதை வினவு சுட்டிக்காட்டியது. இந்த இரண்டையும் மைமாகவைத்து நடந்த விவாதத்தில் சாதியம் ஆணாதிக்கவக்கிரம் குறித்து ஒவ்வொருவரும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்கள். பெருச்சாளிகளுக்கு கோட்டு சூட்டுபோட்டால்போல் அவைகள் மாறிவிடப்போவதில்லை என்பது அம்பலமானது.

  பூக்காரியில் குறிப்பிடப்பட்ட சாதியமும் ஆணாதிக்க வக்கிரமும் இரண்டு நபர் சம்மந்தப்பட்டதில்லை ஒரு தேசத்தின் பிரச்சனை. ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் பிரச்சனை. சந்தன முல்லையிடம் நர்சிம் மன்னிப்புக் கேட்பதால் அவை தீர்ந்துவிடப்போவதும் இல்லை. சாதிய ஆணாதிக்க மிருகத்தை விவாதங்களின் ஊடாக புரிந்துகொள்வோம்.

  • பூங்கோதை said…
   http://sandanamullai.blogspot.com/2010/06/blog-post_04.html?showComment=1275690283015#c7158629521697629785

   நடுநிலைமை மக்களுக்கெல்லாம் மிக பெரிய பிரச்சினை, வினவு வந்ததுதான். வினவுல எந்த விஷயத்துக்கு சாதி சாயம் பூசல, அது அரசியல், அதுக்காக முக்கியமான் பிரச்சினையை விட்டுட்டு அதையே புடிச்சி தொங்கினா? நீங்க வேணும்னா, வினவும் போலி சாதீயமும்னு போன மாசமோ போன வாரமோ அடுத்த வாரமோ பதிவு போடுங்க (OUTSIDE POOKKARI ISSUE), எல்லாரும் வந்து கருத்து சொல்றோம். பதிவுலகில நிறைய பேர் சமத்துவவாதிங்கதான். But don’t drag that into this issue. Just by discrediting the medium, the subject matter cannot be discredited.
   பிரச்சினையை பெருசாக்கனும்னா வினவு( any other choice, இட்லிவடை?) மாதிரி நாலு பேர் வந்துட்டு போற இடத்தில போட்டுதான் ஆகணும். போஸ்டர் ஒட்டியே ஆகனும், ஆனா குப்பத்தொட்டி மட்டும்தான் இருக்கு, அதுல ஒட்டினா என்ன பெரிய தப்பு.
   In fact, வினவுல வந்தது ரொம்ப நல்லது. அதுல இருந்துதான் பிரச்சினை பெரிசு ஆச்சு. அதுனாலதான் மக்களுக்கு கோபம். பிரச்சினை பெருசாக கூடாதுன்னு , ரொம்ப decent நடுநிலை bloggersலாம் ரொம்ப பாடுபடுறாங்க. ஏன் பெரிசாக கூடாது, வினவுல வரலனா நிறைய பேருக்கு, சாக்கடை எங்க இருக்கும்னு தெரியாமயே போயிருக்கும்.
   நம்ம ஹீரோ பதிவுல சொன்ன பன்ச்-டயலாக் -“அவ கூட இருக்கற , ரெண்டு மூனு சில்வண்டகளை கவனிச்சேன், இருக்கு அவளுகளுக்கும் ஒரு நாளு” க்கு ஏற்ப, நமக்கு இன்னும் சிறு இலக்கியங்கள் கிடைச்சிருக்கும். மாபெரும் எழுத்தாளர் விடை பெற்று இருக்க மாட்டார்.

   பூக்காரியை pdf ல போட்ட வினவுக்கு நன்றி..
   அவரு பதிவ எடுத்துட்டாறாம் அவங்க இன்னும் எடுக்கலையாம். இதுதான் தளபதிகளின் சீஃப் propaganda. பதிவை எடுத்தது சந்தனமுல்லைக்காகவா? நீங்க எடுக்கலைன்னா பாதிக்க பட போறது சந்தனமுல்லையா என்ன? எப்படிங்க அது? ஆஹா- உலகத்திலயே புத்திசாலிங்க இவங்க மட்டும்தான்.

 23. எனது மறு மொழிகள் நீக்கப் படுகின்றன.நான் பின்னூட்டமிடுவது தவறு என்றால் சொல்லி விடவும் உங்களது ஜனநாயகப் பண்புகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

 24. @ Perundevi

  ///// நர்சிம்-மின் ஆபாசமான ‘புனைவுக்கும்’ தமிழச்சி இங்கு குறிப்பிடும் ஜெயஸ்ரீ போன்றவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இதுபோன்ற தொடர்பில்லாத பேச்சுகளை வினவு அனுமதிப்பது விவாதத்தை திசை திருப்பவே உதவும்.
  நர்சிம்-மின் ’புனைவு’ மற்றும் அதை ஆதரிப்பவர்களைப் பற்றிய விமரிசனங்கள் எந்தக் குவிப்புமின்றி, ப்ளாட்டிங் காகிதத்தில் பரவும் மை போல இன்னும் தெளிவற்றுப்போவதற்கே இத்தகைய பின்னூட்டங்கள் துணைசெய்யும்./////

  உங்களுடைய கருத்துக்களை சொல்ல உங்களுக்கு எவ்வளவு உரிமையுண்டோ அதே உரிமை எமக்கும் இருக்கிறது.

  நர்சிம் பிரச்சனைக்கும் ஜெயசிறிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்கள். சுகுணா திவாகரும், சோபா சக்தியும் நர்சிம் பிரச்சினையை வேறு திசைக்கு திருப்பாதவரை நர்சிம் பிரச்சினையாகத்தான் போய் போய்க்கொண்டிருந்தது.

  உண்மை தமிழன் குழலி போன்ற சில பதிவர்களும் வினவு தோழர்கள் மீது விம ர்சனம் வைத்திருக்கின்றனர். அது வேறு கோணம். இவர்களோ நர்சிம் – சந்தனமுல்லை பிரச்சைனையோடு லீனா பிரச்சினையாக மாற்றி இருக்கின்றனர். லீனாவுடன் அயோக்கியத்தனமாக நடந்து கொண்டாயே
  அவர் பெண்ணில்லையா? என்ற பொருளிள் கருத்துக்களை திசைமாற்றி இருக்கின்றனர். இங்கே தோழர் அசுரனும் அதற்கான பதில்களைதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். படித்துப்பாருங்கள்.

  வினவு தோழர்கள் லீனாவிடம் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள்? லீனா மற்றும் லீனாவுக்கு ஆதரவாக கருத்து சுதந்திரம் கூட்டத்தில் பேசிய பெண்கள் எப்படிப்பட்ட யோக்கியவான்கள் இப்படிப்பட்ட பெண்களை நுக ர்வுப் பொருளாக உபயோகித்துக் கொண்டிருக்கும் சிற்றிலக்கிய ஆண்களைக் குறித்தும் விரிவாக வினவில் கட்டுரை வரும். தற்போது ஜெயசிறி ஒரு முன்னோட்டம் மட்டும்.

  எந்த சம்பவத்தையும் நீர்த்துப்போகச் செய்யவோ வேறு திசைக்கு கொண்டு செல்லும் ஆளோ இல்லை நான். உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். வினவின் நடத்தை இன்று பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டிருக்கும் நிலையை உருவாக்கியது சோபா சக்தியின் எழுத்தும் சுகுணாவின் எழுத்தும் தான். ஆக மீண்டும் லீனா சங்கதிக்கே வரவேண்டிய சூழல். இந்த ஜெயசிறி அந்த கூட்டத்தில் வினவுக்கு எதிராக பேசிய போலி பெண்ணியவாதி தான்.

  விரைவில் விரிவான கட்டுரை வரும்.

 25. ஒரு கூரிய பிரச்சனையில் தேவையான அளவு விவாதமும் கண்டனமும் கொடுக்கப்பட்டுள்ளது, முடிவென்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தீர்வும் வரும் காலங்களில் அவர் சுதந்திரமாகவும் தனது கருத்துக்களை தெரிவிக்க நம்பிக்கை தருவதாகவும் இருக்க வேண்டும். பிரச்சனைகளின் முடிவென்பதுநாம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வாய்ப்பை வழங்குவதாக இருக்க வேண்டும், தாமதப்பட்ட நீதி கூட தண்டனைதான் என்பதை உணர வேண்டும், தனிப்பட்ட மனிதரின் சுதந்திரம் தான் சமுதாய சுதந்திரம்.

 26. சட்டம் எல்லாம் எதுவும் செய்யாது என ஏகடியம் பேசியவர்கள், நீங்கள் தலையிட்ட பின்தான் அடங்கினார்கள்… பதிவுலகம் உங்களுக்கு கடன் பட்டு இருக்கிறது

 27. மீண்டும் மீண்டும் இங்கு சாதி எங்கு வந்தது என கேட்கிறார் கபிலன். பொறுக்கி நர்சிம்மின் பூக்காரி பதிவில்,” அவ பொறப்பு அப்படியிருக்கும்”, “நம்ம வளர்ப்பு வேற மாப்ளே” போன்ற இரு வாக்கியங்களை பலர் குறிப்பிட்டும் இவர் திருமப திரும்ப கேட்பது சம்பந்தப்பட்டவரை காப்பற்றத் தான் போலும். தன்னுடைய சாதிக்காக நான் எதுவும் செய்வதில்லை என நடிக்கும் கனவான்களின் கண்களுக்கு இது தெரியாமல் போனதில் வியப்பில்லைதான். ஆனாலும் நாம் திசைதிருப்புவதாக தட்டை திருப்பிப் போடுகிறார். டோண்டுவின் பதிவுகளை விட வினவின் பதிவுகள்தான் சாதியைப் பிரிவினயை ஏற்படுத்தும் பகையை வளர்க்கும் என்பது, நான் மேல்சாதிக்காரன் எதைவேண்டுமானாலும் எழுதுவேன் என்ற ஆதிக்க சாதித்திமிரே தவிர வேறென்ன.!

 28. பதிவுலக நாட்டாமைகள் உ.த. மற்றும் குழலி கவனத்திற்கு

  MAHA said…
  http://sandanamullai.blogspot.com/2010/06/blog-post_04.html?showComment=1275679700830#c3808816694790505681

  முல்லை உங்க‌ள் தைரிய‌த்தை நினைத்து பெருமித‌ப்ப‌டுகிறேன். எங்க‌ள் ( பிர‌ச்ச‌னை தெரிந்தும் மௌன‌மாயிருந்த‌ அனைத்து பெண் ப‌திவ‌ர்க‌ள்) கையாலாகாத‌ நிலைக்கு கார‌ண‌ம் ப‌ய‌ம் தான் என்ப‌தை ப‌கிர‌ங்க‌மாக‌ ஒப்புக் கொள்கிறேன். உங்க‌ள் தைரிய‌ம் எங்க‌ளுக்கு இல்லை.

 29. எந்த வரலாற்றிலும் மானிடத்திற்காக கடவுள் புரட்சி செய்யவில்லை. மானிடன் தான் சமூகத்தை மேம்படுத்தி இருக்கிறான். எந்த மனிதன் அவன்? கொள்கைவாதிகள் தானே?

 30. http://tamilarangam.blogspot.com/2010/06/blog-post.html
  வினவுவை எதிர்ப்பவர்கள் யார்? அவர்களின் அரசியல் என்ன?வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவுவின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டையே எதிர்க்கின்றனர்.

 31. குடும்பத் தலைவர் (உ.த) நியாயமான முடிவை எடுக்கத் தவறியதால் அவரின் மிதிப்பிற்குரிய் திருவாளர் (அ)யோக்கியர் ஒரு சரியான, நியாயமான முடிவை கூறியிருக்கிறார். குடும்பத்தலைவர் செயலில் இறங்குவார் என எதிர்ப்பார்ப்போமாக.
  கௌரவம் பாக்காம போங்க சார்!

 32. அன்புள்ள வினவு, என்ன இந்த தினவு? எடிட் செய்து எல்லா மேட்டரையும் முடிச்சுடலாம் என்று கனவு? ஏன் இந்த ஆணவு? என் மருத்துவர் கூறிய மருந்து திணை மாவு. எவனோ என்னை வாங்க போகிறான் காவு !! காப்பாற்ற நீ கூவு !! இது அலை இல்லா தீவு !!

 33. உண்மை , பேசி எல்லார் முன்னிலையிலும் மனிப்பு கேட்க வேண்டும்

  ஒரு பெண் எப்பொழுதுமே தன் மீது கொடுமை இழைக்கபட்டால் வெளியே சொல்ல மாட்டாள் , நம் சமூகம் இன்னும் அவ்வளவு முன்னேற வில்லை என்றே நினைக்கிறேன் . அப்படி இருக்கும் பட்சத்தில் பெண்களாய் முன்வராமல் ஆதாரம் கொடு என்று சொல்வது தவறு என்றே நினைக்கிறேன் . எனக்கு தெரிந்து இது தான் சுழல் என்னும் பட்சத்தில் தோழர்கள் ஆதாரம் வெளியே சொல்ல முடியாத நிலையில் அந்த இடங்களை மட்டும் தவிர்த்து இருக்கலாம் என்றே நினைக்கிறேன் ,
  இரண்டாவது தோழர்கள் மக்கள் பணிக்காய் நிற்பவர்கள் கலைஞர் ஜெயா மற்றும் பெரும் புள்ளிகளை எதிர்பவர்கள் சித்தாந்த ரீதியாய் , வேறு எந்த ஒரு பதிவர் மீதோ தனிப்பட்ட வெறுப்பு அவர்களுக்கு இருக்காது………….!!!! அதனால் அவர்கள் சொல்லும் விடயங்கள் சரி தான் , ஆனால் ஆதாரம் என்று கேட்டு மைய்ய பிரச்சனையை திசை திருப்பும் நோக்கோடு இருக்கும் கயவர்கள் திசை திருப்ப பார்கிறார்களே அது சிறிது அளவேனும் குறைந்து இருக்கும்

 34. இதில் சம்பந்தபட்ட யாரையும் எனக்குத் தெரியாது. நீங்கள் சொன்ன விஜியின் நையான்டியைப் படித்தேன். சந்தனமுல்லையின் பின்னூட்டங்களையும் படித்தேன். நர்சிமின் இடுகையையும் படித்தேன். விஜியின் நையான்டி (It is a satire); ஆனால் நரசிம்மிண் எழுத்து அப்படிப்பட்டது அல்ல.

  Cho – எழுதாத நையான்டி எழுத்தா? அதற்கு யாரும் இது மாதிர் ஆபாசமாக அவரையும் அவரது குடும்பத்தையும் எழுதவில்லை. ஒரு நையான்டியை sportive-ஆக எடுத்துக்கமுடியாதவர்கள் பதிவு எழுதவே தகுதி இல்லை. இதில் எனக்குப் புலப்பட்டது ஜாதித் திமிர் மற்றும் அகங்காரம் மட்டுமே. பெண்கள் வாயை அடைக்க ஆண்கள் உபயோப்படுத்தும் வார்த்தைகள்.

  Analyze the root cause -என்று சொல்பவர்களுக்கு இங்கு root-உம் இல்லை cause-உம் இல்லை இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

 35. ஆட்டையாம்பட்டி அம்பி

  இதில் சம்பந்தபட்ட யாரையும் எனக்குத் தெரியாது. நீங்கள் சொன்ன விஜியின் நையான்டியைப் படித்தேன். சந்தனமுல்லையின் பின்னூட்டங்களையும் படித்தேன். நர்சிமின் இடுகையையும் படித்தேன். விஜியின் நையான்டி (It is a satire); ஆனால் நரசிம்மிண் எழுத்து அப்படிப்பட்டது அல்ல.

  Cho எழுதாத நையான்டி எழுத்தா? அதற்கு யாரும் இது மாதிர் ஆபாசமாக அவரையும் அவரது குடும்பத்தையும் எழுதவில்லை. ஒரு நையான்டியை sportive-ஆக எடுத்துக்கமுடியாதவர்கள் பதிவு எழுதவே தகுதி இல்லை. இதில் எனக்குப் புலப்பட்டது ஜாதித் திமிர் மற்றும் அகங்காரம் மட்டுமே. பெண்கள் வாயை அடைக்க ஆண்கள் உபயோப்படுத்தும் வார்த்தைகள்.

  Analyze the root cause -என்று சொல்பவர்களுக்கு இங்கு root-உம் இல்லை cause-உம் இல்லை இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

  • குரங்கு ஆப்பசைத்த கதை தெரியுமோ? இது கொஞ்சம் புதுசு கண்ணா புதுசு…

   ஒரு காட்டுல ஒருத்தம் மரம் வெட்டிகிட்டு இருந்தானாம், அன்னிக்கே வேலைய முடிக்க முடியலை, மிச்சத்த நாளைக்கு வந்து செஞ்சுக்கலாம்ன்னு ரெண்டா பிளந்த மரத்துல ஒரு ஆப்பை சொருகி வெச்சுட்டு போணானாம்.
   அந்த வழியா போன குரங்கு குடும்பம் ஒன்னு இந்த ஆப்ப பாத்தா சும்மா இருக்குமா? மொத்த குடும்பமும் அந்த ஆப்ப ஆட்டி ஆட்டி விளையாண்டுச்சாம்! என்ன செஞ்சுச்சாம்?
   விளையாண்டுச்சாம்….

   முதல்ல ஒரு குரங்கு மாட்ட, அத காப்பாத்துறேன்னு போயி அடுத்தது மாட்டி…

   அப்புறம் என்ன மொத்த குடும்பத்தோட வாலும் மரத்துல மாட்டிக்கிச்சாம்!

   இதுல என்ன பியூட்டி?
   அந்த மரவெட்டியின் குடும்பத்துல ஒன்றிரண்டு பேர் குரங்கு கறிய ருசிச்சு சாப்புடுவாங்கன்னு கேள்வி……….

   இது தான் ஆப்பசைச்ச குரங்கு.. ஆப்பசைச்ச குரங்கு ன்னு ஊரெல்லாம் ஒரே பேச்சாம்!

 36. http://vrinternationalists.wordpress.com/2010/06/06/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/#comment-840
  அண்ணன் உண்மைத்தமிழன் சென்ஷிக்கு எழுதியிருக்கும் மறுமொழியில் ஒரு பகுதி
  ////இதனால் கேள்விக்குள்ளாக்கப்படுவது சந்தனமுல்லைக்கு சங்கடமாக இருக்கும் என்பதால் அவரிடமும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு பின்பு பதிவிடு என்றேன்..!

  நீ இந்தப் பதிவுக்காக பதிவர் சந்தனமுல்லையிடம் அனுமதி பெற்றாயா என்பது எனக்குத் தெரியவில்லை..!

  இப்போது இதனால் சந்தனமுல்லைக்குத்தான் சங்கடங்கள் விளையப் போகின்றன..!////

  ஒருபக்கம் ஆதாரத்தை கொடுத்தால் முல்லைக்கு சங்கடம் என்கிறார்… இன்னோரு பக்கம் சிவராமனிடம் ஆதாரம் கேட்கிறார்.. அப்போ அந்த பெண்களுக்கு சங்கடம் வராதா..?

  இந்த உண்மைத்தமிழன நல்லவரா? கெட்டவரா?

 37. வினவு எதிர்ப்பு ஆணாதிக்க அரசியல், சந்தனமுல்லையையும், லீனாவையும் ஒன்றாகக் காட்ட முனைந்தது. சந்தனமுல்லை விவகாரத்துக்குள், லீனாவைக் கூவினர். இப்படி அனைவரும் ஆணாதிக்க பரிவட்டத்தைக் கட்டிக்கொண்டு, வினவு எதிர்ப்பு சின்டிகேட்டை போட்டுக்கொண்டு, எல்லா சமூக ஒடுக்கும் பிரிவுகளும் களத்தில் குய்யோ முறையோவென கும்மியடித்தன. 
  http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7147:2010-06-07-05-15-22&catid=322:௨௦௧௦

 38. //தனது தனிப்பட்ட வன்மத்தைத் தீர்த்துக் கொள்ள எதிரிகளுக்கு ஐந்தாம்படை வேலை பார்ப்பவர்கள் நட்பு பற்றியோ, தோழமை பற்றியோ பேசும் அருகதை அற்றவர்கள்.//

  உரையாடல் நேர்மை, விவாத நேர்மை/அறம் ஆகியனவற்றைப் பற்றி, அனைத்தையும் புலனாய்வு செய்யும் சுகுணாதிவாகர் அறியாதிருக்க வாய்ப்பில்லை. மேற்காணும் வினவின் விமர்சனத்திற்கு தமது சீரிய பதிலை அவர் தெரிவிக்க வேண்டியது அன்னாரது செயல்பாட்டு அறத்திற்கு அவசியமானதாகும்.

  வினவு முன்வைத்திருக்கும் ஆலோசனையை வரவேற்கிறேன். முழுமையாக வழிமொழிகிறேன். உண்மையில் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் மனதிற்கு, இந்த ஆலோசனையை ஏற்பதில் கெளரவப் பிரச்சினை எழ வாய்ப்பில்லை. ஒரு வகையில் சொன்னால், வினவின்ஆலோசனையை ஏற்பது, நிராகரிப்பது என்ற எதிர்வினைதான், மனப்பூர்வமான மன்னிப்பு கோரும் நர்சிம்-மின் மனதில் நிலவும் உண்மை உணர்ச்சியை அளவிடும் அளவுகோலாக இருக்கும்.

 39. @தமிழச்சி

  உங்கள் பின்னூட்டங்களின் அவசியத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. ஜெயசிறீயின் பாலியல் தொடர்புகள், லீனா பெண் பாலியல் புணர்ச்சி தொடர்பில் இருப்பவர், சோபா சக்தியின் பாலியல் தொடர்புகள் ஆகியவற்றை தெரிவிப்பதன் மூலம் (அவை உண்மையாகவே இருக்கலாம்) தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அவ்வாறு உறவுகள் வைத்திருப்பதை கொண்டாடுவதும், அதுவே சரியென கலகக்காரர்கள் பெண் விடுதலைக்கு தீர்வு சொல்வதும் எதிர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள். ஆனால், அவர்களது அரசியல்ரீதியிலான கருத்துக்களை எதிர்த்துப் போராடுவதற்கு அவர்களது பாலியல் உறவுகளை குறித்துப் பேசுவது, அதனை முதன்மைப்படுத்துவது சரியான வழிமுறையாகப் படவில்லை. மேலும் ஒருபால் புணர்ச்சி குற்றம் என்பது போன்ற உங்கள் சித்தரிப்புகளும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையல்ல. ஒருபால் புணர்ச்சி இயற்கையானதுமல்ல, அதே வேளையில் குற்றமுமல்ல என்பதாக உலகளாவிய அளவில் கருத்துக்கள் மாறி வருகின்றன.

  எனவே, சோபா சக்தி ஏகபத்தினி விரதனாக இருந்தாலும் சரி, லீனா மணிமேகலை கற்புக்கரசியாக இருந்தாலும் சரி, அவர்களது கருத்துக்களின் அபத்தங்களை அம்பலப்படுத்துவதுதான் சரியான வழிமுறையேயன்றி, அவர்களது பாலியல் ஒழுக்கங்களை மட்டும் முதன்மைப்படுத்துவது, அரசியல் விவாதத்தை முனை மழுங்கச் செய்வதும், அவர்கள் மகிழ்ச்சியோடு தமது பின்நவீனத்துவ வேடத்தை ஆவேசமாக அணிந்து கொண்டு கலகக்காரர்களாக அலட்டுவதற்கு மட்டுமே வழிவகுப்பதுமாகும் எனக் கருதுகிறேன்.

  • போராட்டம்,

   தெளிவான பார்வையை முன்வைக்கிறீர்கள். உங்களைப் போன்ற இன்னும் சில தோழர்களின் விவாத முறைகளில் உள்ள நிதானத்தை ஒட்டுமொத்த வினவு ஊடகத்தின் மொழியாக வளர்த்தெடுக்க நாம் முயல வேண்டும்.

 40. தமிழச்சி லீனா, சோபா சக்தி, இப்போது நர்ஸிம் ஆகியோரின் வர்க்க நலனை சுட்டிக் காட்டத்தான் அவர்களுடைய தனிப்பட்ட தகவல்களைச் சொல்கிறார் என்று நினைக்கின்றேன்.

 41. தவறுகளை திருத்தி கொள்பவனே மனிதன்.  அந்த விதத்தில் வினவு சரியான வழிகாட்டியை முன் வைத்துள்ளது.   அனைவரும் ஏற்க வேண்டுமென்பதில் மற்றவர்களை போன்று எனக்கும் அவா. 

 42. வக்கிரத்தின் இன்னும் ஒரு அவதாரம் தான் இந்த நரசிம் !!! ஒரு பெண்ணை வேசி என்று பழிதூற்றி விட்டால் அவள் பின் வாயே பேசமாட்டாள் என்கின்ற தீமிரில் அரங்கேரியுள்ளது நரசிமின் இந்த அவதூறுகள். பல அடக்குமுறைகளை எதிர்த்து, போராடி, வளரிந்து உள்ளது இந்த பெண் இனம், இந்த ஓநாயின் வார்த்தை எம்மாத்திரம். இவன் காறி உமிழ்ந்து கொண்டது, மல்லாக்கு படுத்துக்கொண்டு என்பதை மறந்துவிட்டான் போலும்.
  நரசிம், நீ இந்நாள் வரை மறைத்து வைத்து இருந்த உன் இன்னொரு வேசி முகத்தை “பூக்காரி” என்று நீ எழுதிய அசிங்கத்தின் முலம் உன்னை பற்றி 
  அறியாதவர்கள் கூட, அறிய செய்ததற்கு நன்றி.
  சுரணை உள்ள அனைவரும் அதை புரிந்து கொள்வார்கள், உன்னக்கு வால் பிடிக்கும் சிலரது சில்லறை தனத்தை நீயே உண்ணர்ந்து இருப்பாய். 
  வினவு இங்கு பரிந்து உள்ள வழிமுறை, என்னை பொறுத்தவரை, உன்னக்கு ரொம்ப சலுகை தருவது போல உள்ளது.
  உன் மன்னிப்பு யாருக்கு வென்னும், சிந்தனை முறையே கேவலமான வகையில் இயங்குபவனுக்கு மன்னிப்பு கேட்பது என்பது வெறும் ஒப்புகுச்சப்பான் தான். 
  உன்னக்கு சரியான பாடம் நீ இனி எழுதவே கூடாது, இப்போது ஒதுங்கி உள்ளது போல மொத்தமாக ஓடி விடு…..நீ உதிரம் சிந்தி காப்பி அடித்து மக்களுக்கு அள்ளித உயர்ந்த கருத்துகளே போதுமானது. திரும்பி பார்க்காமல் ஓடு, இது தான் பலருக்கும் பாடம் புகட்டும்….

 43. @ போராட்டம்
  @ rudhran
  @ selvanayaki
  @ ஆதவன்

  தோழர் போராட்டத்தின் கேள்வி நியாயமானதே.

  தோழர் ஆதவன் கூறியதுபோல் வர்க்க நலன் மட்டும் காரணமல்ல….
  வக்கீர குணங்களையும் தான் சுட்டிக்காட்டுகிறோம்….

  சற்று விரிவாக பேசியிருக்கலாம். நேரமின்மையால் ‘சுருக்கமாக’ கூறியது பல்வேறு அர்த்தங்களை கொடுத்திருக்கிறது.

  வினவுத் தோழர்கள் லீனா கவிதை குறித்த விமர்சனத்தை விவாதத்திற்குட்படுத்தியபோது அவை புனைவாகவும் கருத்து சுதந்திரத்தை அடக்க முயலும் மூர்க்கமாகவும் சிலரால் பார்க்கப்பட்டது. பலரால் கவிதை அருவருப்பாக பார்க்கப்பட்டது.

  வினவு லீனாவின் நடத்தையின் வெளிப்பாடு என்றது. அதை லீனாவின் கூட்டம் எதிர்த்தது. பெண் எழுத்துச் சுதந்திரம் மீது எதிர்கொள்ளும் அடக்குமுறையாக பிரச்சாரம் செய்தது. சிற்றிலக்கிய வட்டத்தில் இலக்கியவாதிகள் பலருக்கு பின்நவீனத்துவ கூட்டணியின் பாலீயல் சுதந்திரம் குறித்த சங்கதிகள் தெரிந்திருந்தாலும் அதை பொதுதளத்தில் கொண்டுவர தயங்கின. தனிப்பட்ட ஒருவருடைய நடத்தைகளை பொது வெளியில் விவாதத்திற்கு கொண்டு வருவது நியாயமற்றது என நினைத்திருக்கலாம்.

  நாம் இலக்கியத்தை தவீர்த்து அதன் உள்அரசியலை அம்பலப்படுத்த முயல்கிறோம். வினவு குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் கிசுகிசு என்று சிலரால் பேசப்பட்டது போல் நம் கருத்தும் இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் மெளனக்கெட்டு ஆதாரங்களுடன் பேச வேண்டியதாய் இருக்கிறது. அதன் விளைவுதான் ஜெயசிறியின் (மோனிகா ராஜன்குறை) புணர்ச்சி குறித்த பின்னூட்டம்.

  கூட்டாக பல ஆண்கள் பெண்களுடன் இணைந்து புணர்ச்சியில் ஈடுபடுவது, போதைப் பொருட்களை பெண்களுக்கு கொடுத்து தங்கள் காரியத்திற்கு சாதித்துக் கொள்வது வரை இவர்களைப் போன்ற எதற்கும் துணிந்த பெண்களை ‘டக்ளஸ் குருப்’, ‘கருணா குருப்’பைச் சேர்ந்த புலியெதிர்ப்பு அரசியல் செய்யும் ஆண்கள் பயன்படுத்திக் கொள்வதையும் அம்பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம்.

  இப்பெண்கள் தங்கள் சுயமோகித்தனங்களை மறைத்துக் கொண்டு பெண்ணியம், அடக்கு முறை, ஒடுக்கு முறை என்று உல்டா விட்டுக் கொண்டிருக்கிறார்கள். லீனாவுக்கு ஆதரவாக நடந்த கருத்து சுதந்திரக் கூட்டத்தில் கூட ஜெயசிறி (மோனிகா ராஜன்குறை) வினவு தோழர்களை எதிர்த்து திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார். எத்தனை பேர்களுக்கு தெரியும் இப்பெண்களின் உள்கூத்துக்கள்?

  ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்ட வேண்டும். 2008 இல் நடந்தது.

  இந்த இணைப்பில் ராஜன் குறையின் மனைவி மோனிகா குறித்த செய்தியை பாருங்கள்.
  http://tamizachi.com/index.php?page=date&date=2008-08-16

  http://www.udaru.com/korean/portal.php (இதில் இருந்த கட்டுரைகள் நாம் அம்பலப்படுத்தியதும் நீக்கப்பட்டது
  http://hostinfo.cafe24.com/overTraffic/503.html

  யோசித்துப்பாருங்கள் தோழர்களே பெண்கள் எதற்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்று…..

  இதைத்தானே வினவுத் தோழர்கள் கேட்டார்கள்?

  • தோழர் தமிழச்சி / போராட்டம் / ருத்ரன் / செல்வநாயகி

   பெண்ணுரிமை என்று பின்னவீனத்துவ இலக்கிய வட்டாரத்தில் இருக்கும் சில பெண்கள் நம்புவதையும், அதையொட்டி அவர்கள் பெண்ணுரிமையை
   சாதித்துக் கொடுக்கும் என்று நம்பிக் கொண்டு செய்யும் சில ‘காரியங்களையும்’, அவர்களுடய சக பின்னவீனத்துவ இலக்கியவாதிகள் சிலர்
   இந்த மேட்டுக்குடிப் ‘பேதைகளை’ (தெரிந்தே, வேண்டுமென்றே பேதைகளாக இருப்பதால் ஒற்றை மேற்குறி) எப்படி மிஸ்யூஸ் செய்கிறார்கள் என்பது பற்றிய அம்பலப்படுத்தல்கள் தேவை என்றே கருதுகிறேன்.

   அது இந்தக் கட்டுரையின் பின்னூட்டத்தில் இல்லாவிட்டாலும் கூட. வேறு தனிப் பதிவாக இட வேண்டும்.

   பெண்ணை மெய்யாக அடிமைப்படுத்துவது எது? அரைக்குக் கீழான விடுதலையே பெண்விடுதலை என்று கூவும் ஆண்கள் ஆபத்தானவர்கள்.
   இன்று சமூகத்தில் பெண்கள் திரும்பும் திசையெல்லாம் ஒடுக்குமுறைகளைச் சந்தித்துக் கொண்டிருக்க, இவர்களோ பாலியல் சுதந்திரமே
   மொத்தமாக சுதந்திரத்தைக் கொடுத்துவிடும் என்று சொல்லித் திரிகிறார்கள். இப்படிச் ஜொள்ளிக் கொண்டிருக்கும் ஆண்கள் எதுக்கு
   காசு குடுக்கனும்? ‘எல்லாத்தையும்’ காசு குடுக்காமலேயே சாதித்துக் கொள்ளலாமே என்று சிந்திப்பவர்களாக நடைமுறையில் இருக்கிறார்கள்
   என்பது பற்றிய அம்பலப்படுத்தல்கள் அவசியம்.

   இந்த போலி பெண்ணுரிமைவாத அல்பவாதிகளை அம்பலப்படுத்துவதிலேயே உண்மையான பெண்ணுரிமைக் கோரிக்கைக்கான வெற்றி
   அடங்கியுள்ளது என்பது எனது கருத்து.

 44. @ Kaargi
  @ போராட்டம்
  @ rudhran
  @ selvanayaki
  @ ஆதவன்

  ////போலி பெண்ணுரிமைவாத அல்பவாதிகளை அம்பலப்படுத்துவதிலேயே உண்மையான பெண்ணுரிமைக் கோரிக்கைக்கான வெற்றி
  அடங்கியுள்ளது///

  இதுவே எனது சிந்தனையும் கூட. ஆனால் பெண்கள் இவைப்போன்ற அரசியல் பிரச்சினைகள் குறித்து பேசவோ, எழுதவோ தயங்குகிறார்கள். முல்லை பிரச்சினைகளுக்கே என்ன ரியாக்க்ஷன் வெளிப்பட்டது என்று கவனித்தீர்களா?

  நாம் தனியாகவே 2008-இல் போலி பெண்ணீயவாதிகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். ஜெயசிறி விவகாரத்தை போல் புலியெதிர்ப்பு கூட்டம் நடத்திய “பெண்கள் சந்திப்பு”க்கு கனடா சென்றுவிட்டு பிரான்சுக்கு வந்து இலக்கிய புடுங்கிகளுடன் கூத்தடித்த மாலதி மைத்ரீக்கு பெரியார் கண்ட பெண்ணியவாதி என்று பட்டம் கட்டி நேர்கானலும் http://www.shobasakthi.com/shobasakthi/?p=181 செய்து பேட்டி எடுத்த செய்தியின் உள்அரசியலையும் அம்பலப்படுத்தியபோது (அதாவது மாலதிமைத்ரீயின் பயணச்செலவுக்கான பொறுப்புகள் குறித்து) அதை ‘தேசம் நெற்’ என்ற தளம் மறுபிரசுரம் செய்தது. அக்கட்டுரை விவாதமானது. அதனால் சோபாசக்தி குருப் ஆதாரமற்ற செய்திகளை மறுபிரசுரம் செய்யும் தேசம் நெற்க்கு கண்டனம் தெரிவித்து 74 பேர் கையெப்பமிட்ட லூசுத்தனமான அறிக்கை வெளியிட்டது.

  காண்க: http://www.shobasakthi.com/shobasakthi/?p=188

  இந்த கூட்டம் இன்று லீனாவுக்காக எழுத்து கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறது. ‘ஹெலன் டெமூத்’க்கு சக்களத்தி பட்டம் கட்டிய சோபாசக்தி எமக்கும் ‘சக்களத்தி’ பட்டம் கொடுத்தார்(ன்).

  இன்று பெண்ணுரிமை பேசும் யோக்கியதை வினவுக்கு இருக்கிறதா என்கிறார்(ன்).

  லீனா குறித்து நான் எழுதியிருந்த சில கட்டுரைகளை நையாண்டி செய்த சோபாசக்தியை “இழுத்து வச்சி அறுத்துறுவேன்” என்று எச்சரித்தபோது “பரவாயில்லைங்க திரும்ப ஒட்ட வச்சிப்பேன்” என்ற ஆண்திமீர் வார்த்தைகள் தான் வெளிப்பட்டது.

  ஒட்ட வைத்துக் கொள்ள ‘யோனிக் கொழுப்பு களிம்புகள்’ சப்ளை செய்யும் பெண்களின் எழுத்தும், கருத்தும் தான் பெண்ணியச் சிந்தனைகள் போலும். கொள்கைகளுக்காக செயல்படும் எம்மைப் போன்ற பெண்களை கேவலப்படுத்துவதும், தன் தேவைகளுக்கு உபயோகித்து கொள்ளும் பெண்களுக்கு பெரியார் கண்ட பெண்கள் என்று பட்டங்கட்டுவதும் நகைப்புக்குரியதாக இருக்கிறது.

  இவர்களைப் போல ஆணாதிக்க வக்கீர உணர்வாளர்களிடம் தொடர்ந்து எம் போராட்டங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது தோழர்களே…

  முடிவுதான் என்ன?

 45. @ தமிழச்சி, Kaargi

  //கூட்டாக பல ஆண்கள் பெண்களுடன் இணைந்து புணர்ச்சியில் ஈடுபடுவது, போதைப் பொருட்களை பெண்களுக்கு கொடுத்து தங்கள் காரியத்திற்கு சாதித்துக் கொள்வது வரை இவர்களைப் போன்ற எதற்கும் துணிந்த பெண்களை ‘டக்ளஸ் குருப்’, ‘கருணா குருப்’பைச் சேர்ந்த புலியெதிர்ப்பு அரசியல் செய்யும் ஆண்கள் பயன்படுத்திக் கொள்வதையும் அம்பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம்.

  இப்பெண்கள் தங்கள் சுயமோகித்தனங்களை மறைத்துக் கொண்டு பெண்ணியம், அடக்கு முறை, ஒடுக்கு முறை என்று உல்டா விட்டுக் கொண்டிருக்கிறார்கள். லீனாவுக்கு ஆதரவாக நடந்த கருத்து சுதந்திரக் கூட்டத்தில் கூட ஜெயசிறி (மோனிகா ராஜன்குறை) வினவு தோழர்களை எதிர்த்து திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார். எத்தனை பேர்களுக்கு தெரியும் இப்பெண்களின் உள்கூத்துக்கள்? //

  மதிப்பிற்குரிய தமிழச்சி

  எனது பின்னூட்டத்தை சற்று நிதானமாகப் பரிசீலிக்க வேண்டுகிறேன். பின்நவீனத்துவ வேடமணியும் குட்டி முதலாளித்துவ அற்பர்களின்(ஆணோ, பெண்ணோ) பாலியல் ஒழுக்கங்களை மட்டும் முதன்மைப்படுத்துவது அவர்களை அம்பலப்படுத்தப் பயன்படுவதில்லை. மாறாக, நமது ‘கட்டுப்பெட்டித்தனத்தை’ வெளிப்படுத்துவதாக அவர்கள் ஆட்டம் போடத் துவங்கி விடுகிறார்கள். வேறு வகையில் சொன்னால், அவர்கள் ‘கலகக்காரர்கள்’ என நம் வாயாலேயே அங்கீகரிப்பதாகத் தான் சித்தரிக்கிறார்கள். அதனால் கிடைக்கும் ‘கலகக்கார பப்ளிசிட்டியை’ ஆர்வத்தோடு வரவேற்கிறார்கள்.

  எனவே தான், அவர்களது அரசியல் கருத்துக்களின் அபத்தங்களை அம்பலப்படுத்துவது அவசியமாகிறது. வாய்ப்பிருப்பின், “வக்கீல் வண்டுமுருகனும், COCKtail தேவதைகளும்!” கட்டுரையை படித்துப் பாருங்கள். இதுவரை சோபா சக்தி இக்கட்டுரைக்கு எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.

  அதே வேளையில், தாங்களும், தோழர் கார்க்கியும் எனது பின்னூட்டத்தின் இன்னொரு முக்கியமான அம்சத்தை கவனிக்காமல் விட்டு விடுகிறீர்கள் எனக் கருதுகிறேன்.

  //அவ்வாறு உறவுகள் வைத்திருப்பதை கொண்டாடுவதும், அதுவே சரியென கலகக்காரர்கள் பெண் விடுதலைக்கு தீர்வு சொல்வதும் எதிர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்.//

  இதனையும் குறிப்பிட்டுதான் எழுதியிருக்கிறேன். ஆனால். லீனாவின் கருத்துரிமை என்ற போர்வையில் அவர்கள் ‘போராடும்’ பொழுது, அங்கே நாம் அவர்களது பாலியல் செயற்பாடுகளை (கவனிக்கவும், முறைகேடுகளுக்கும், செயற்பாடுகளுக்கும் ஒரு நுண்ணிய இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. பெண்கள் பின்நவீனத்துவவாதிகளால் misuse செய்யப்படுகிறார்கள் என்ற வாதம் பலவீனமானதாகும். அங்கே ஒரு பரஸ்பர misuse, exploitation நடக்கிறது. யாரும் அங்கே ஒண்ணும் தெரியாத பாப்பாக்களல்ல) முதன்மைப்படுத்தும் பொழுது, அது எதிரிகளுக்கு பாதிப்பை விட சாதகத்தையே உண்டு செய்கிறது.

  கூடுதலாக, லீனா விசயத்தில் மட்டுமல்ல, பல சமயங்களில், பல விசயங்களில், தாங்கள் மையமான அரசியல் விசயங்களில் நின்று விவாதிப்பதற்கு பதிலாக, அரசியல் முக்கியத்துவமற்ற, ignore செய்ய வேண்டிய அற்ப விசயங்களை பிரதானமாக்குகிறீர்கள் எனக் கருதுகிறேன். உதாரணமாக, பெண் ஏன் இப்படியானாள்? பதிவில் மீனா கந்தசாமியை நீங்கள் அவசியமின்றி எழுத்துப்பூர்வமாக HARASS செய்தது. அவர் தனது நண்பர்களுக்கு மட்டும் என வைத்திருந்த ஒரு FACEBOOK STATUS MESSAGE-ஐ ஒரு மாபெரும் அரசியல் பிரச்சினை போல நீங்கள் சித்தரிக்க முயன்றிருந்த