privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

-

மாநிலத் தலைநகரங்களில், மாநகரங்களில், மக்கள் கூடுமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன. உற்றாரைப் பலிகொடுத்த உறவினரின் சோகம் பத்திரிகைகளில் படிமங்களாக, குண்டுவெடித்த இடங்களை வழக்கமாக பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்களின் பயணமாக, வெடித்த இடத்தில் பதட்டமாக இருக்கும் வாழ்க்கை வெடிக்காத இடங்களில் சகஜமாக, அடுத்த பரபரப்புச் செய்திகள் வரும்வரை குண்டு வெடிப்பை தொலைக்காட்சிப் பெட்டிகளில் மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் அலைவரிசைகள், விளம்பர இடைவெளிகளில் மகிழ்ச்சியாக, மொத்தத்தில் நாடு வழமையாகவே இயங்குகிறது. முன்புபோல நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வலிமையினை இப்போது அடிக்கடி வெடிக்கும் குண்டுகள் இழந்துவிட்டன. பொழுதுபோக்குகளில் மையம் கொள்ளும் இன்றைய நுகர்வுக் கலாச்சார வாழ்க்கை சமூக நிகழ்வுகளை ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பதற்குத் திறமையாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. குண்டுகள் வெடிப்பதற்குப் பிந்தைய விளைவுகளின்பால் அனுதாபமோ, வெடிப்பதற்கு முந்தைய அரசியலின்பால் கவனமோ அற்றுப்போய்விட்டதனால் இப்போது குண்டுகள் மலிவாக வெடிக்கின்றன. எனினும் குண்டுகள் வெடிப்பதற்குக் காரணம்தான் என்ன?

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் அனாதைப் பிணங்களை சடங்குக்காக அறுத்து நீதிமன்றத்திற்காகப் பதிவு செய்து யாரும் கோருபவர் இல்லாமல் எரிக்கப்படுவது போல குண்டு வெடிப்பின் அலசல்கள் அரசியல் அரங்கிலும், ஊடகவெளியிலும் உயிரின்றி பேசப்படுகின்றன. அண்ணாசாலையில் தொழிலாளி ஊர்வலம் சென்றால் அதைப் போக்குவரத்திற்கு இடையூறு என்று இந்து பேப்பருக்கு வாசகர் கடிதம் எழுதும் நடுத்தரவர்க்க அறிவாளிகள் போல குண்டுவெடிப்பைத் தடுப்பதற்கு பலரும் ஆலோசனைகளை இலவசமாக வழங்குகின்றனர். போலீசின் அலட்சியம், உளவுத்துறையின் குறைபாடு, பலவீனமான மத்திய அரசு, குண்டு வைப்பவர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை எடுக்காதது, பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் சதிகளை முறியடிக்காதது என்று நீளும் இந்தப்பட்டியல் ஆத்திச்சூடி அறஞ்செய விரும்பு போல மக்களிடம் மனப்பாடமாய் இறக்கப்பட்டிருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தையை தூக்கத்தில் எழுப்பி தீவிரவாதத்திற்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் கூட அழகாய் ஒப்புவிக்கும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் குண்டு வெடிப்பு நிகழ்கிறுது என்றாலும் இது தேசத்திற்கெதிரான போர் என்று முழங்கும் அத்வானி பொடா போன்ற கடுமையான சட்டங்களை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்கிறார். புரட்சித் தலைவியும் அதனை வழிமொழிகிறார். ஈழத்தமிழர்களை ஆயுள்தண்டனை கைதிகளாக முகாம்களில் அடைத்து கண்காணிப்பது போல வங்கதேச அகதிகளை கண்காணிக்கவேண்டும் என்று தலையங்கம் எழுதுகிறது தினமணி. நாடாளுமன்றத் தாக்குதலுக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி அப்சல்குருவை இன்னும் தூக்கில் போடாதது தீவிரவாதிகளுக்கு குளிர் விடச்செய்திருக்கிறது என்கிறார் ஒரு தலைவர். உதட்டளவிலோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ, உள்ளத்தில் இருக்கும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பினாலோ பேசப்படும் இந்த போதனைகளால் குண்டுகள் அழிந்துவிடுமா?

குண்டுகள் இந்த வெற்றுப்பேச்சினை சட்டை செய்வதில்லை. ஓரிடத்தில் குண்டுவெடிப்பது ஏதோ தீபாவளி பட்டாசு வெடிப்பது போல, ஹாலிவுட் படத்தில் நிகழ்வது போல அவ்வளவு சுலபமில்லை. அதிரடிக்காட்சிகளை நொறுக்குத்தீனியாக மனதில் பதியவைத்திருக்கும் திரைப்பட-தொலைக்காட்சி உணர்ச்சி, உண்மைக்கும் கற்பனைக்குமான வேறுபாட்டை, நிஜத்தின் வலியை உணர்த்துவதில்லை. உண்மையில் குண்டு வைப்பதற்கு இரும்பு மனம் கொண்ட நபர்கள், அதுவும் உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சலுடன், பிடிபட்டால் போலீசின் சித்திரவதைக்கும், நீதிமன்றத்தின் மரணதண்டனைக்கும் பயப்படாத நெஞ்சுரத்துடன் வேண்டும். இந்த மன உறுதியை வைத்து இவர்கள் வாழ்க்கை முழுவதும் கொள்கைக்காக களமிறங்குபவர்கள் என்று பொருளல்ல. இது குறிப்பிட்ட சமூகக் காரணத்தால் கணநேரத்தில் வந்துபோகும் சாகச உணர்வு. குறிப்பிட்ட நடவடிக்கையின் காலம் வரைக்கும் மனதில் இருக்கும் தற்கால உறுதியால் நினைத்ததை முடிக்கும் வல்லமையினை இவர்கள் பெறுகிறார்கள். அதே சமயம் இவற்றை தனிநபராக இருந்து மட்டும் செய்ய முடியாது. இரகசியமாய் பணம் திரட்டுவது, பொருட்களை சேகரிப்பது, தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வது, ஆயுதங்களை சோதித்தறிவது, இரகசிய இடங்களை உருவாக்குவது, எல்லாவற்றுக்கும் உதவி செய்யும் ஆதரவாளர்களை அணிசேர்ப்பது வரை பல தயாரிப்புகள் வேண்டும். இலட்சியத்தின்பால் இருக்கும் உறுதியுடன் கூடவே அப்பாவி மக்களை கொல்லுவது குறித்த இரக்கமின்மையும் கணிசமாக வேண்டும். ஆனாலும் சங்கபரிவாரங்களால் அடுத்த பிரதமராக முன்னிறுத்தப்படும் அத்வானி இரும்புக் கரம் கொண்டு குண்டுகளை அடக்கமுடியுமென வன்மையாக எடுத்துரைக்கிறார். அதன்படி குண்டுகளை அடக்க முடியுமா?
அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே பொடா சட்டமும், அதில் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்படுவதும், வங்கதேச ஏழை அகதிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விரட்டப்படுதும், இசுலாமிய அமைப்புகள் பல தடைசெய்யப்பட்டதும் என ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் எத்தனையோ செய்து பார்த்தும் குண்டுகள் மறையவில்லையே! சொல்லப்போனால் இந்த இரும்புக்கர நடவடிக்கைகள் குண்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. எனில் இந்த சட்டதிட்டங்களை தகர்த்தெறியும் வலிமையினை குண்டுகள் எங்கிருந்து பெற்றன?

குண்டுகள் அந்த வலிமையினை வரலாற்றின் அநீதியிலிருந்து பெற்றுக்கொண்டன. குண்டுகளினுள் பொதியப்பட்டிருக்கும் வேதிப்பொருட்களின் வீரியத்தினைவிட சமகால வரலாற்றின் வீரியம் அதிகமானது. குண்டுகள் தன்னளவில் இயல்பாக வெடித்துவிடுவதில்லை. கூர்ந்து நோக்கினால் அவை வரலாற்றின் விளைபொருட்கள்! 1992 பம்பாய் கலவரத்திற்கு பிந்தையதுதான் 1993 பம்பாய் குண்டுவெடிப்பு! 2002 குஜராத் கலவரத்திற்கு பிந்தையதுதான் 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு! 1996 கோவை கலவரத்திற்கு பிந்தையதுதான் 1999 கோவை குண்டுவெடிப்பு! இந்த சங்கிலித் தொடர் நிகழ்வின் தீர்மானிக்கும் கண்ணியாக கலவரங்கள் இருக்கின்றது. இருதரப்பார் அடித்துக்கொள்வதுதான் கலவரம் என்பதன் இலக்கணமாக இருக்கும்போது அவற்றைக் கலவரங்கள் என அழைப்பது பொருத்தமற்றது. சரியாகச் சொல்வதானால் அவை இந்துமதவெறியர்களால் தொடுக்கப்பட்ட போர்! இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை! இவற்றின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டால் குண்டுகளின் தோற்றுவாயை அறிந்து கொள்ள இயலுமா?

நிச்சயம் முடியும். 91 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத்தில் ஆரம்பித்த அத்வானியின் இரத யாத்திரை வட இந்தியா முழுவதும் இசுலாமிய மக்களை காவு வாங்கியபடிதான் இரத்த யாத்திரையாக சென்றது. அதன் உச்சம் பம்பாய் கலவரமாக வெடித்தது. சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே தனது சாம்னா பத்திரிகையின் மூலம் இசுலாமிய மக்களை அடித்து விரட்டுமாறு கட்சிக் குண்டர்களுக்கு ஆணையிட்டார். போலீசு உதவியுடன் இசுலாமிய குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டன. இந்த உண்மைகளை எடுத்துக்கூறி குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை இன்றைக்கு குப்பைத்தொட்டியி்ல் தூங்குகிறது. ஒரு வேளை நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களைக் கொன்ற சிவசேனா வெறியர்களை தண்டித்திருந்தால் பின்னர் பம்பாயில் குண்டுகள் வெடிக்காமலே போயிருக்கலாம். ஆனால் ஒருவேளை என்ற சொல்லை வரலாற்றை பரீசீலிப்பதற்கு பயன்படுத்தலாமே ஒழிய வரலாற்றை மாற்றிப்போட்டு கற்பனை செய்வதற்கு இடம் கிடையாது. இன்று பம்பாய் குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். அவர்களில் பல அப்பாவிகள் நிரபராதியாக பல வருடங்களாக சிறையில் கழித்தார்கள். எனினும் பம்பாய் கலவரக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பதோடு வழக்கே நடைபெறவில்லை. கலவரங்களுக்கு சலுகை! குண்டுகளுக்கு தண்டனை! எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?

2002 குஜராத்தில் நடந்த இனக்கலவரம் நாடே அறியும். 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். நரோடா பாட்டியாவின் சவக்கிடங்கு, கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து தாயும், சேயும் கறுவறுக்கப்பட்ட காட்சி, பெஸ்ட் பேக்கரியின் 17பேரை உயிரோடு எரித்த சம்பவம், இரத்தக் கவிச்சி அடிக்கும் வெறியுடன் இந்து மதவெறியர்கள் சம்பவங்களை குதூகலத்துடன் தெகல்காவின் கேமராவில் வருணித்த ஆதாரம், முடிவில்லா குஜராத்தின் இனப்படுகொலைப் படிமங்கள் உணர்ச்சியுள்ள எவருக்கும் நெஞ்சை விட்டு அகன்றிருக்காது. ஆனால் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்காக, செய்யாத குற்றத்திற்காக பல அப்பாவி முசுலீம்கள் சிறையில் வாடும்போது இனப்படுகொலை செய்த இந்து மதவெறிக் குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். குண்டுகள் செய்யும் இரகசிய ஏற்பாடுகளெல்லாம் இந்து மதவெறியர்களுக்கு தேவையில்லை. குஜராத்தில் அவர்கள் நடத்திய நரவேட்டைக்கான துப்பாக்கிகள், குண்டுகள், ஆயுதங்கள், எல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து வண்டி வண்டியாக இறங்கின. குண்டுகளின் ஏற்பாடுகளை சதிகள் எனப்பார்க்கும் பொதுப்புத்தி இந்துமதவெறியர்களின் ஏற்பாடுகளை கலவரங்களில் நடக்கும் வழக்கமான ஒன்றாகப் பார்க்கின்றது. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?

கோவையில் காவலர் செல்வராசு கொலைசெய்யப்பட்டதை அடுத்து நடந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்ட முசுலீம் மக்கள் கொலைசெய்யப்பட்டு பல கோடி மதிப்பிலான இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கோவை சங்கபரிவார ரவுடிகளை கைது செய்து தண்டிக்க முடியாத இந்த சமூக அமைப்பு கோவை குண்டுவெடிப்பின் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து தண்டித்திருக்கிறது. அதிலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பல வருடங்களை சிறையில் கழித்து விட்டு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். குற்றமின்றி தண்டனையை மட்டும் அனுபவித்துவிட்டு மனைவியையும், குழந்தைகளையும் நிர்க்கதியில் தவிக்கவிட்டு வாழ்வைத் தொலைத்திருக்கும் இந்த சாதரண மனிதர்களுக்கு இந்த சமூக அமைப்பின் மேல் எத்தனை பெரிய கோபம் இருக்கும்? இவர்கள் எவரும் படித்து வசதியாக வாழும் நடுத்தரவர்க்கத்தினரோ, இசுலாமிய மதத்தின் பால் ஆழ்ந்தபிடிப்போ, வெறியோ, இந்துக்களின் மீது விரோதமோ கொண்டவர்கள் அல்லர். இவர்களின் நெஞ்சில் வஞ்சினத்தை ஏற்றுவதற்கு ஐ.எஸ்.ஐ தேவையில்லை. அது உண்மையுமில்லை. இரக்கமற்று தனிமைப்படுத்தும் சமூகத்தின் காரணத்தால் இந்த இளைஞர்களின் அவலம் குண்டுகளாக பரிமாணம் கொள்கின்றன. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?

இந்து மதவெறியர்கள் இந்தியாவில் நடத்தியிருக்கும் கலவரங்களில் பதிவு செய்திருக்கும் கொலைக்கணக்கும், பொருள் இழப்பும் அளவில் குண்டுகளை விட பலநூறு மடங்கு அதிகம்தான். ஆனால் அவை பொதுவில் தீவிரவாதிகள் செய்த குற்றமென்று மதிப்பிடப்படுவதில்லை. பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு சிறு கும்பலான சங்கபரிவாரம் செய்யும் அநீதிக்கான அங்கீகாரம் பெரும்பான்மையின் மவுனத்தில் இருக்கிறது. குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் எல்லா இந்துக்களும் பங்கேற்கவில்லை என்றாலும் நேரடி மவுன சாட்சியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த மவுனம் அநீதியை மறுக்கவில்லை. அதுவே அநீதியின் அங்கமாக மாறிவிடுகிறது. இதன் விளைவால் உண்மையான தீவிரவாதிகளான இந்துமதவெறியர்கள் பொது அங்கீகாரத்துடன் எல்லாக் கட்சிகளைப்போல ஒரு கட்சியாக இயங்குகிறார்கள். சமூகநீதி, திராவிடம் பேசும் எல்லா கட்சிகளும் இந்து மதவெறியர்களுடன் தேர்தல் கூட்டணி வைப்பது முதல் அரசில் பங்கேற்பது வரை முரணின்றி செய்கின்றன. இந்தியாவின் பொதுவாழ்வில் இந்து மதவெறியர்கள் அதிகாரத்துடன் ஆணவமாக நடந்து கொள்வதற்கு இத்தனை சலுகைகள் இருக்கும்போது குண்டுகளுக்கான முயற்சிகள் எங்கோ இரகசியமாக நடந்து கொண்டுதானே இருக்கும்?

குண்டுகள் உருவாதற்கான நிலைமைகளை உருவாக்கிவிட்டு குண்டுகள் மட்டும் வேண்டாம் என்று நினைப்பதி்ல் பயனொன்றும் இல்லை. இந்திய அரசியல் அரங்கில் இந்துமதவெறிச் சக்திகள் கறுவருக்கப்படாதவரை குண்டுகளையும் கருவறுக்க முடியாது. மதசார்பாற்ற அரசியல் அதன் உண்மையான பொருளில் அமலுக்கு வராதவரை குண்டுகள் வந்து கொண்டே இருக்கும். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் போராட்டத்தில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வெல்லும்வரை குண்டுகள் தோல்வி அடையப்போவதில்லை. ஆகையால் குண்டுகளை நாம் நியாயப்படுத்துகிறோமா?

குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி. அதாவது இந்துமதவெறியர்களின் கோரப்பிடியிலிருந்து இசுலாமிய மக்களை பாதுகாப்பதில் குண்டுகள் தோல்வியடைவதோடு உண்மையில் பாதுகாப்பின்மையைத்தான் அதிகப்படுத்தியிருக்கின்றன. குண்டுகளின் முக்கியமான விளைவுகளே இந்துமதவெறியை வலுப்படுத்துவதும், இசுலாமிய மக்களை தனிமைப்படுத்துவதும்தான். தற்போதைய குண்டுவெடிப்புகளில் கூட இந்துமதவெறியர்கள் எவரும் சாகவில்லை என்பதோடு அப்பாவி உழைக்கும் மக்கள்தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். எதிர்கால குண்டுவெடிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மாநகரங்களில் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கும், கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசு உழைக்கும் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை. இப்படி குண்டுகள் வெடித்தால் நிச்சயமாக கொல்லப்பட இருக்கின்ற உழைக்கும் மக்கள்தான் உண்மையில் பார்ப்பன இந்துமதவெறியால் ஏற்கனவே அடிமைகளாக நடத்தப்படுவர்களாகவும், வர்க்க ரீதியில் இந்துமதவெறியர்களை வீழ்த்துவதற்கான சக்தியாகவும் இருக்கின்றனர். குண்டுகள் இந்த மக்களைத்தான் இந்துமதவெறியர்களின் கைகளில் எளிதாக மாற்றித் தருகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் வாழ்க்கைப் போராட்டத்தால் கவலையில் உழன்று கொண்டிருக்கும் அப்பாவி மக்களை இரக்கமின்றி கொல்லும் குண்டுகளில் பாசிச மனமும் கலந்திருக்கிறது. மறுபுறம் தமது எதிர்வரிசையில் எல்லாப் பிரிவு மக்களையும் ஒன்று சேர்க்கும் வேலையையும் குண்டுகள் அடி முட்டாள்தனமாக செய்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க குண்டுகளால் இசுலாமிய மக்களுக்கு என்ன பாதிப்பு?

ஒவ்வொரு குண்டுவெடிப்பின்போதும் எண்ணிறந்த பாதிப்புகளை இசுலாமிய மக்கள்தான் எதிர்கொள்கின்றனர். குண்டுகளின் அரசியலுக்கு கடுகளவும் தொடர்பில்லாத அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் இருப்பதும், இசுலாமிய மக்கள் அனைவரையும் பொதுச்சமூகம் தீவிரவாதிகளாக பார்ப்பதும், இதன் தொடர் விளைவாக இசுலாமிய மக்களுக்கு வீடு வாடகைக்கு இல்லை, கல்வி இல்லை, வேலை இல்லை மொத்தத்தில் மதிப்பு இல்லை என்ற நிலைமை உருவாக்கப்படுகிறது. இதையே இந்துமதவெறியர்கள் பிரச்சாரத்தின் மூலம் செய்வதை குண்டுகள் தமது வெடிப்பின் மூலம் செய்கின்றன. யாரை எதிர்த்து உருவனதோ அவர்களுடன் எதிர்மறையில் ஒன்றுபடுவதுதான் குண்டுகளின் தர்க்கரீதியான முடிவு. வெடிமருந்தின் மேல் அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கும் குண்டுகள் வெகுஜன அரசியல் நடவடிக்களுக்காக பொறுமையுடன் ஈடுபடுவதில்லை. பொறுமையிழந்து அவசர அவசரமாக வெடிக்கும் குண்டுகள் நீண்டகால நோக்கில் இசுலாமிய மக்களைத்தான் காவு கேட்கின்றன. குண்டுகளுக்கும் இசுலாமிய மதத்திற்கும் என்ன தொடர்பு?

குண்டுகளின் தோற்றுவாயை சமூக நிலைமைகளே தோற்றுவிக்கின்றன என்ற போதிலும் குண்டுவைப்பவர்களின் மன உறுதிக்கு இசுலமிய மதப்பற்றும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குண்டுகள் தாம் இசுலாமிய மதத்தைப் பாதுகாக்கும் புனிதப்போரில் ஈடுபட்டிருப்பதாக நம்புகின்றன. இதை பல இசுலாமிய சமுதாயப் பெரியோர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் குண்டுகள் தாம்தான் உண்மையான இசுலாமியர்கள் என்று கற்பித்துக் கொள்கின்றன. ஆனால் உலக வரலாறு நெடுகிலும் இந்தக் கற்பிதம் பொய்யென்றே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இசுலாமிய மதம் ஒரு தீர்வாக அமைய முடியாது. கூடவே உலகில் இசுலாமிய மதத்தை உண்மையாக பின்பற்றும் நாடு எதுவும் கிடையாது, அப்படி இருக்கவும் முடியாது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை. இசுலாமிய நாடாக அறிவித்துக்கொண்ட பாக்கிஸ்தானில் சன்னி, ஷியா பிரிவுகளிடையே மசூதியில் குண்டு வைத்துக் கொல்லும் அளவுக்கு பிளவு இருப்பதும், ஷரியத்தின் சட்டதிட்டங்களை கறாராக பின்பற்றும் வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் விசுவாசிகளாக இருப்பதும், ஏழை இசுலாமிய மக்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்த பணஉதவி செய்யும் அரபு ஷேக்குகள் தனிப்பட்ட வாழ்வில் களிவெறியாட்ட பொறுக்கிகளாக இருப்பதும் இந்த உண்மைகளை எடுத்தியம்பும். ஆனால் குண்டுகள் இந்த யதார்த்த்த்தை மறுப்பதுடன் கற்பனையான மத உலகை சித்தரித்துக்கொண்டு வாழ முயல்கின்றன. எனில் குண்டுகளின் எதிர்காலம் என்ன?

எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது. சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும். இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை குண்டுகளையும் இரத்து செய்ய முடியாது.
ஆகவே நம்முன் இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று அடுத்த குண்டு எங்கு எப்போது வெடிக்கும் என்று திகிலுடன் வாழ்வது. அல்லது குண்டுகளைத் தோற்றுவிக்கும் சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது. இதைத்தாண்டி குண்டுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.

________________________________

  1. சங்பரிவாரை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. மதங்களுக்கு மதம் பிடித்திருக்கும் வரை குண்டு கலாச்சாரமும் திகிலுடன் வாழ்வதும் தொடரத்தான் போகின்றது.

    வேதனையுடன்,
    நித்தில்

  2. அனைத்துப்பக்கங்களையும் அலசியுள்ளீர்கள்.ஆனால் தீவிரவாதம் என்ற அகன்ற பார்வையில் தீவிரவாதத்தின் எல்லை இந்திய வட்டத்துக்கும் மேலே இன்னும் நீள்கிறது.

  3. //எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது. சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும். இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை குண்டுகளையும் இரத்து செய்ய முடியாது.//

    எத்தனை வருஷங்களுக்கு இந்த காரணத்தை சொல்லி மக்களை பலியிடுவார்கள்.

    இந்த பாரதத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றது , பிரச்சனை எல்லாருக்கும் தான் வருகிறது. சும்மா நடந்ததையே நினைத்து நினைத்து யாரும் இப்படி அப்பாவி மக்களை பழிவாங்கிகொண்டிருக்கவில்லை.

  4. The strength of this essay is its in-depth observation of the problem and a clear verdict on what the solution could be. Great Job Vinavu….
    I would like to remind Nithil that this world has seen Hitlers and Mussolinis bite the dust. End is not far for the Sangh.
    I request Madam Kundhavai to re visit the pages of history to understand the Bombay, Kovai and Gujarat Riots. This essay, nor you, me or anyone here advocates the BOMB…we all don’t want it but neither can we defuse it because the Fuse is in the hands of the Sangh. Unless the Sangh Parivar perishes, they’ll keep lighting the fuse and the blasts will follow.

  5. “நாடாளுமன்றத் தாக்குதலுக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி அப்சல்குருவை இன்னும் தூக்கில் போடாதது”

    who is Innocent? Apsal is innocent aa.. What a Joke?

  6. //எத்தனை வருஷங்களுக்கு இந்த காரணத்தை சொல்லி மக்களை பலியிடுவார்கள்.//

    இந்த கேள்வியை யாரிடம் யார் கேட்க்க வேண்டும்?

    சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. உபி, ஒரிஸ்ஸா, கர்நாடகா என்று புதிய குஜராத்துக்கள் எங்கும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. முஸ்லீம் மக்களின் பொருளாதாரம் திட்டமிட்டு முடக்கப்பட்டு வருகின்றன பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில். பசுவை புனிதம் என்று சொல்லிக் கொண்டே பசுவை ஐரொப்பாவிற்கு ஏற்றுமதி செய்த வாஜ்பேயியின் கொட்டை தாங்கிகள் – இஸ்லாமியரும், தாழ்த்தப்பட்டவரும் தமது வயிற்றுக்கு மலிவான பசு மாமிசத்தை பயன்படுத்துவதை கொலைக் குற்றமாக மாற்றிவிட்டனர். பசு மாமிசத்தின் விலை ஆட்டு மாமிசத்திற்க்கு இணையான ஆடம்பர பொருளாகி விட்டது இங்கெல்லாம். இது ஒரு சின்ன எடுத்துக்காட்டுதான். இது போல பல்வேறு வழிகளில் இஸ்லாமியர் மத்தியில் பீதி தொடர்ந்து விதைக்கப்படுகிறது. சிறு சிறு மோதல்கள் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றன, தொடர்ந்து. இந்த மோதல்களில் எல்லாமே இஸ்லாமியரின் கை ஓங்கி இருக்கும் படி பார்த்துக் கொள்ளப்படுகிறது. அடிப்பட்டு வரும் பார்ப்பன பயங்கரவாதிகளின் அடியாள்படை கூட்டம் இந்த தோல்விகளை முன் வைத்து பிரச்சாரம் செய்து வெகு மக்களிடம் பொதுக் கருத்துக்களை உருவாக்குகிறார்கள். இது பிறிதொரு நாள் விரிவாக அறுவடை செய்யப்படுகிறது.

    சமூகத்தை நீண்ட காலமாக தொடார்ந்து பிரிவினக்க்குள்ளாக்குவது, பிறகு தாக்குவது என்ற வடிவம்தான் குஜராத்தில் மிக வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. குஜராத் இஸ்லாமியர் மீதான தாக்குதலை ‘அவர்களுக்கு கொடுத்த அடி சரிதான், இது வரை நாம்தான்(இந்து) அடி வாங்கி வந்தோம், மோடிபாய் வந்த பிறகுதான் அவர்கள் அடிவாங்கு கின்றனர்’ என்று குஜராத்திகள் நியாயப்படுத்தியதன் பரிணாம வளர்ச்சி வரலாறு இதுதான்.

    குந்தவை குந்தவைத்துக் கொண்டு இங்கு பிதற்றும் அந்த வரலாற்று சம்பவம் இதோ இன்று வரை நடந்து வரும் விசயம். இதே ‘குந்த’வைத்த பதிவர், வரலாற்றில் என்றுமே நடந்தேயிராத சமப்வங்கள், அல்லது நடந்து முடிந்து ஆயிரம் வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்ட சம்பவங்கள் அடிப்படையில் மக்களை பிரித்து ரத்தம் குடிக்கும் பார்ப்பன பயங்கரவாத அமைப்புகளிடம் போய் இந்த அறிவுரையைச் சொல்லட்டும். குந்தவையின் குடும்பத்தை தேசத்திற்காக நாம் கொன்று விடுவோம் இன்று, சரியாக பத்து வருடம் கழித்து குந்தவை புலம்பிக் கொண்டிருந்தால் அவருக்கு பயங்கரவாதிகளின் ஆதரவாளன் என்றும் பட்டம் கொடுத்து கௌரவிப்போம்.

    இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது இன்று உலகமேலாதிக்க நோக்கத்தை கொண்ட முற்று முதலான மக்கள் விரோத கண்ணோட்டம் கொண்டதாக நிற்கின்றது என்பதும், அது ஒடுக்கப்பட வேண்டும் என்பதும் மறுக்க இயலா உண்மைகள் எனும் போது அதனை செய்வதற்க்கான வழியாக இருப்பது இந்தியாவை பொறுத்த வரை பார்ப்பன் பயங்கரவாதிகளின் வாலை ஒட்ட நறுக்கி ‘குந்தவை’ப்பதுதான்.

    உலகின் மிகப் பெரிய முஸ்லீம் ஜனத் தொகை கொண்ட நாடு இந்தியா. அந்த சமூதாயம் மொத்தத்தையும் தொடர் பீதியில் வைத்திருப்பது, இந்த இரண்டு பயங்கரவாதிகளின் பிசினஸுக்கும் தேவை என்பதால்தான் இருவரும் மாற்றி மாற்றி குண்டு வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். மக்கள் விரோத சக்திகளை மக்களின் ஆதரவின்றி பிடிக்க முடியாது. மக்களையே குற்றாவாளிகளாக மாற்றி கண்காணிப்பதும் தண்டிப்பதும் என்பது உண்மையில் இந்த இரண்டு பயஙக்ரவாதிகளின் மூலம் ஆளும் கும்பல் தனது ஒடுக்குமுறை தீவிரமாக்க நியாயப்படுத்துகிறது என்பதை தவிர வேறோன்றுமில்லை.

    குந்தவை கட்டுரையை முழுவதும் படிக்காமலேயே கடைசி பேராவை மட்டும் படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறார் போல இருக்கிறது. எதற்க்கும் அவர கொஞ்சம் எழுந்து நின்று வாசிக்கட்டும்.

    //இந்த பாரதத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றது , பிரச்சனை எல்லாருக்கும் தான் வருகிறது. சும்மா நடந்ததையே நினைத்து நினைத்து யாரும் இப்படி அப்பாவி மக்களை பழிவாங்கிகொண்டிருக்கவில்லை.//

    குந்தவை அப்படியே – குஜராத், மும்பை, கோவை, பாபர் மசுதிக்கு இணையானஅ ந்த பிற பிரச்சினைகள் குறித்து ஒரு சின்ன லிஸ்ட் கொடுத்தால் எமது அறிவை விசாலப்படுத்திக் கொளள வசதியாக இருக்கும்.

    அசுரன்

  7. This is a general phenomenon i observe in the blogs. Blogger’s get into personal tussle at the drop at the hat. Just because one has a different opinion doesn’t make them enemies. People are always kept puzzled in misconceptions, they feel secure with their ideas, they resist if you try to change their perception but it is a long and hard process to change them but THEY WILL CHANGE.

    One may win the battle with powerful words but will lose the war. This may be applied as a strategy to weaken a proven enemy otherwise the powerful statements / backbiting / name abuses / only personifies ones intellectual ability and satisfies revolutionary ego but will never help win over people.

    I am not arguing for POLITICAL CORRECTNESS but for POLITICAL SANITY

  8. ஆனந்த,

    இங்கே குந்தவை குறிப்பிட்டுள்ள வரிகள் அவரது சொந்த கருத்து மட்டுமல்ல. ஒருவேளை இதே கருத்தை தனிப்பட்ட முறையில் சொல்லுமிடத்து விளக்குவதில் அர்த்தமுள்ளது. மாறாக இங்கு செய்யப்பட்டுள்ளது பிரச்சாரம். இதனை அந்த பிரச்சாரத்தின் வர்க்க இயல்பின் அடிப்படையில்தான் நாம் முரன்பட முடியும். அதை தாங்கி வரும் தனிநபரின் அடிபப்டையில் ஆய்வு செய்து கொண்டிருப்பது முடியாது – பெரும்பாலான நேரங்களில் தவறாகவே இருக்கிறது. ஏனெனில் பிரச்சாரம் அது செய்யப்பட்ட அடுத்த நிமிடத்தில் படித்தவர்களின் மண்டையில் உட்கார்ந்து விடுகிறது. அதற்க்கும் சேர்த்துதான் நாம் எதிர்வினை புரிய வேண்டியுள்ளது. அது தவிர்க்க இயலாமல் எதிர் பிரச்சாரம்தான். எதிரி வர்க்கத்தின் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தாமல் எதிர்பிரச்சரம் செய்ய இருப்பது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை அந்த தனிப்பட்ட நபருக்கு போதுமானதாக இருக்கலாம். ஆனால் அந்த வரிகள் உள் நுழைந்த மண்டைகளுக்கான பிரச்சாரம் என்பது அந்த வரிகளின் அரசியலை அம்பலப்பத்துவதில்தான் உள்ளது.குறிப்பாக குந்தவையின் அலட்சியல் பொதிந்த அந்த கருத்தின்(“சும்மா நடந்ததையே நினைத்து நினைத்து யாரும் இப்படி அப்பாவி மக்களை “) அல்பத்தனத்தை அம்பலப்படுத்தாத பதில் நமது திருப்திக்கு வேண்டுமானால் சேவை செய்யுமே ஒழிய அதன் உண்மையான இலக்கை சென்றடையாது.

    குந்தவையின் வரிகள் அவர் ஒரு proven enemy என்றே என்க்கு புரிதல் தருகிறது. வெகு அலட்சியமாக “சும்மா நடந்ததையே நினைத்து நினைத்து யாரும் இப்படி அப்பாவி மக்களை ” என்று சொல்லும் ஒரு எதிர்வினைக்கு அதன அலட்சியத்தை குத்திக் காட்டிதான் பதில் அளிக்க முடியும் என்று நம்புகிறேன். அந்த அலட்சியத்தின் வர்க்க இயல்பு வெறுமே குண்டு வெடிப்பினால் எழும் கோபமல்ல. அது பார்ப்ப்னியத்தில் ஊறித்திளைத்த திமிர்த்தனத்தின் வெளிப்பாடு. அது ஒரு வர்க்க இயல்பு.

    அரசியலில் நான் நம்புவது வர்க்கம்தான். சானிட்டி, கரெக்டனெஸ் இதிலெல்லாம் நம்பிக்கையில்லை.

    தங்களது அக்கறையான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள். எதிர் கருத்தை தாங்கி வரும் சரியான நபரோ அல்ல்து அந்த கருத்தை படித்த பிற சரியான நபர்களோ ஓடி விடக் கூடாது என்ற உங்களது நியாயமான அக்கறை மிகச் சரி. ஆனால் சிந்தனையிலும் கூட முரன்பாட்டியங்களின்(டையலெக்டிக்ஸ்) வெற்றியில் எனக்கு அதீத நம்பிக்கை உள்ளது. ஒருவேளை கருத்துக்களின் கூர்மையான விமர்சனம் ஆட்களை ஓடிப் போக வைத்தாலும் அது அவர்களின் மண்டையில் செய்யும் நீண்ட நாள் வேலையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவை ஒரு நாள் அறுவடை செய்யப்பட்டே தீரும். காய்கறி முற்றினால் சந்தைக்கே வந்தே தீரும்.

    தங்களது கருத்துக்களுக்கும், அக்கறையான விமர்சனத்திற்க்கு மிக்க நன்றிகள்,
    அசுரன்

  9. நல்ல பதிவு வினவு,

    நன்றிகள் அசுரன்.

    // குண்டுகள் உருவாதற்கான நிலைமைகளை உருவாக்கிவிட்டு குண்டுகள் மட்டும் வேண்டாம் என்று நினைப்பதி்ல் பயனொன்றும் இல்லை //

    “For every action, there is an equal and opposite reaction.” -Newton

    I’m not supporting bomb blast, you should not miss understand me, strongly against that about the bomb blast, so sad many people were died and many injured, really they are not human being. Many days I’m also thinking same of point of you, really you are very good analyzing, excellent post. I read your post in Asuran blog, there he gave your url. hats off you to such analyze.

    Who has forced terrorist to do such situation?

    Thanks
    –Mastan

  10. சங்க பரிவாரங்கள் இல்லாமல் இருந்தாலும் இங்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் தன் கோரச் செயல்களை செய்திருக்கும்.உலகில் மிக அதிகமான எண்ணிக்கையில் முஸ்லீம்களைக் கொண்ட இந்தோனேஷியாவில், இஸ்லாமிய நாடு என அறிவித்துக் கொண்ட பாகிஸ்தானில், இன்னும் பல நாடுகளில் குண்டு வெடிப்புகளையும், இன்ன பிற மக்கள் விரோத செயல்களிலும் ஈடுபடும் இத்தீவிரவாதிகள் இந்தியாவிலும் அதை செய்திருப்பார்கள்.
    எனவே பெரிய சவால் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதம், இந்திய விரோதசக்திகள்தான்.சங்க பரிவாரங்களால் ஏற்படும் பிரச்சினைகள் இரண்டாம் பட்சம்தான்.
    வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அல் கொய்தா,LeT போன்றவைதான் முதன்மையான எதிரிகள், இந்திய விரோத சக்திகள்.அவற்றை ஒழிக்காமல் குண்டு வெடிப்புகளை தவிர்ப்பது கடினம்.எனவே தலிபான்கள் உட்பட அனைத்து இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள், துணை போகும் இயக்கங்கள் ஒழிக்கப்பட்டால்தான் முழுமையான தீர்வு பிறக்கும்.

  11. அசுரன் & கோ அறிய வேண்டியது ஒன்று உண்டு.பாமியன் புத்தர் சிலைகளை இடிதத்தற்காக
    பெளத்தர்கள் இஸ்லாமியர்களை இலங்கையில்,தாய்லாந்தில் கொல்லவில்லை.அவர்கள் வழிபாட்டுத் தலங்களை அழிக்கவில்லை.ஆனால் பாப்ரி மசூதி இடிக்கப்பட்டதற்கு இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் எத்தனை அப்பாவிகளின் உயிர்களை பறித்தார்கள்.

  12. // பாப்ரி மசூதி இடிக்கப்பட்டதற்கு இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் எத்தனை அப்பாவிகளின் உயிர்களை பறித்தார்கள்.//

    periyar critic,

    பொய்களை சொல்லுவதற்க்கு உனக்கு தேவைப்பட்ட முகமூடி ‘பெரியார் கிரிடிக்’. இங்கு வெடிக்கும் குண்டுக்ள் பாபர் மசுதி இடிக்கப்பட்டதற்க்கு என்பதைவிட அதனை முன்னிட்டு பாபர் மசுதி இடிப்புக்கு முன்னும் பின்னும் செய்யப்பட்ட இஸ்லாமியர் மீதான் கோடூர தாக்குதல்கள்தான் வெடிகுண்டுகளுக்கான சமூக தளத்தை உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பாக மும்பை இஸ்லாமியர் மீதான் இனப் படுகொலைதான் அச்சாரம் இட்டது. இதனை வினவுவின் இந்த கட்டுரை தெளிவாக எடுத்தியம்புகின்ற போதிலும் கட்டுரையை படித்து எதிர்வினையாற்றும் நோக்கமற்ற So and Soக்கள் இப்படி பொய்களை நம்பி பிரச்சாரம் செய்கிறார்கள். பரிதாபம்தான்.

    அல் கொய்தா போன்றவை முதன்மை எதிரி என்பதில் எல்லாம் சந்தேகம் இல்லை. அவற்றை எதிர் கொள்வதற்கான வழிமுறை குறித்துதான் வினவுவின் கட்டுரை வினவுகிறது. அது குறித்து கருத்துச் சொல்லலாமே? மூன்று ஐந்தாண்டுகள் மோடி என்ற பன்றி ஆட்சி செய்த குஜராத்தில்தான் இஸ்லாமிய பயங்கரவாதம் தானே சொந்த காலில் நிற்கும் அளவு மிக வலுவானதாக தொழில்நுட்ப ரீதியில் இந்தியாவின் எந்த பகுதியை விடவும் மிக முன்னேறீயதாக இருப்பது ஒன்றும் தற்செயலான நிகழ்வு அல்ல.

    பார்ப்பன பயங்கரவாதிகளையும், இஸ்லாம் பயங்கரவாதத்தையும் வேறு படுத்தி பார்ப்பதன் மூலம் இவர்கள் பார்ப்பன் பயஙக்ரவாதத்தை புனிதப்படுத்த முயல்கிறார்கள். அவ்வளவுதான் விசயம். உண்மையில் சர்வதேச கண்ணோட்டம் கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதம் இந்தியாவில் தனக்கான வெடி மருந்துகளை பார்ப்பன பயஙக்ரவாதிகளீன் செயல்கள் மூலமே பெற்றுக் கொள்கிறது. இதே போல உலகளவில் ஏகாதிபத்தியங்களின் அநீதியான ஒடுக்குமுறைகளே இஸ்லாமிய பயங்க்ரவாதத்திற்க்கு ஆள் சப்ளை செய்கிறது. இதனை சமீபத்திய பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. அதாவது, சர்வதேச அளவில் இஸ்லாமிய பயஙக்ரவாதிகளின் சித்தாந்த தலைமைகளின் நோக்கம் உலகம் முழுவதும் ஆன் இஸ்லாமிய ஆட்சி என்ற போதிலும் அவர்களுக்கு ஆட்கள் கிடைப்பது என்னவோ ஏகாதிபத்தியங்களின் மீதான் வெறுப்பினால்தான் என்று இந்த ஆய்வுகள் சொல்லுகின்றன.இந்தியாவிலும் கூட பார்ப்பன பயங்கரவாதியும், இஸ்லாம் பயங்கரவாதியும் ஒருத்தனை ஒருத்தன் காரணம் காட்டி இருவரும் மக்களை நாசம் செய்கிறார்கள். இதற்க்கு மிகச் சிறந்த எ-கா ஈராக். ஈராக் ஒடுக்குமுறை, பாகிஸ்தான் ஆளும் வர்க்கங்களின் சுயமரியாதையற்ற அமெரிக்க அடிவருடித்தனம், பாலஸ்தீனம், லிபியா உள்ளிட்ட இந்த பகுதிகளில் ஏகாதிபத்தியங்களீன் அட்டுழியங்களையும், இந்தியாவில் பார்ப்பன பயங்கரவாதிகள் அரசின் துனையுடன், ஆதரவுடன் நடத்தியுள்ள பல்வேறு கோடூர தாக்குதல்களையும் மறந்துவிடு என்பதுதான் பெரியர் கிரிடிக் போன்றவர்கள் நம்மிடம் வைக்கும் கோரிக்கை. அவரக்ளுக்கு தேவை எனும் போது ஆயிரம் வருட பழைய வரலாற்றை அப்படியே புதிது போல பேசுபவர்கள், இப்பொழுது இது வரை எதுவொன்றும் நடந்தேயிராத மாதிரி இஸ்லாம் பயஙக்ரவாதம் அப்படியே இன்றூதான் புதிதாக பூத்து அட்டுழியம் செய்வது மாதிரி பேசுகிறார்கள். ஆளும் வர்க்கஙகளே இந்த அத்தனை முரன்பாடுகளின் மூல ஊற்றுகளாக இருக்கின்றன. இந்தியாவில் அது பார்ப்ப்னியம் எனில் சர்வதேச அளவில் அது ஏகதிபத்தியம், அந்தந்த நாடுகளில் அவை ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறையைப் பொறுத்து வடிவம் பெறுகின்றன. ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறயை எதிர்த்து சரியான அரசியல் வடிவத்தை முன் வைக்கும் அமைப்பு இல்லாத பொழுது வெகு இயல்பாகவே அங்கு மதங்கள் அந்த இடத்தை பிடித்துக் கொள்கின்றன. வரலாறூ நெடுகிலும் இவற்றூக்கு உதாரணங்களைக் கொடுக்க இயலும். இந்தியாவீன் முதல் சுதந்திர போரில் இருந்து, லத்தீன் அமெரிக்காவின் விடுதலை இறையியல், சர்வாதிகாரிகளூக்கு, ஏகாதிபத்தியங்களூக்கு எதிரான புத்த துறவிகளீன் போராட்டம் வரை. கிருத்தவமும், இஸ்லாமும் கூட தமது பிறப்பை அழுகி நாறிக் கொண்டிருந்த அடிமை சமுதாயத்திற்கேதிரான போராட்டத்தில்தான் கொண்டிருந்தன.

    இஸ்லாமிய பயஙகரவாதிகளை ஒழிப்பதுதான்(இந்தியாவில் ஒழிப்பதுதான் நம்மால் முடியும்) நோக்கமா அப்படியெனில் அவர்களை குறைந்தது இந்தியாவில் ஒழிப்பதற்க்கு நாம் பார்ப்பன பயஙக்வாதிகளை ஒழிக்க வேண்டியுள்ளது. இல்லையெனில் குண்டுக்ள் இன்னும் இன்னும் நுணூக்கமான வடிவங்களீல் வெடித்துக் கொண்டேதான் இருக்கும்.

    அசுரன்

  13. அசுரன்
    சங்க பரிவாரங்களால் பிரச்சினை இல்லை என்று நான் கூறவில்லை.அவர்களை விட இஸ்லாமிய தீவிரவாதம் அதிக ஆபத்தானது,சர்வதேச தொடர்புடையது, இந்தியாவின்
    எதிரிகளுக்கு துணை போவது என்பதால் அதைத்தான் முதன்மையான தீயசக்தியாக
    கருதுகிறேன்.இங்கு சங்கபரிவாரங்கள் இல்லை என்றாலும் கூட அந்த ஆபத்து இல்லாமல் போயிருக்காது.ஆனால் இடதுசாரிகள் தங்கள் உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக
    சங்க பரிவாரங்களை அதிகமாக விமர்சனமும் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து அடக்கி
    வாசிக்கவும் செய்கிறார்கள்.பாஜக வலுவாக இருப்பதுடன், கூட்டணி மூலம் ஆட்சியையும்
    பிடிக்க வாய்ப்புண்டு.அது இடதுசாரிகளுக்கு விருப்பமான ஒன்றல்ல.

  14. அருமையான பதிவு தோழர் வினவு
    அருமையான துணைபதிவு தோழர் அசுரன்.

    இது குறித்து நான் ஒரு பதிவிட எண்ணியிருந்தேன், உங்கள் பதிவை கண்டதும் இதையே என்னுடையை வலைப்பூவிலும் பதித்துவிட்டேன் உங்கள் அனுமதியின்றியே. தவறெனகருதினால் அழித்துவிடுகிறேன்.

    பொதுவாக, இஸ்லாமிய தீவிரவாதம் என்பவர்கள் பார்பனர்களின் பன்னெடுங்கால படுகொலைகளை மறைத்துவிடுகின்றனர். தற்கால சங்பரிவார தீவிரவாதத்தை பேசுவோர் அதை எதிர்கொள்ள சரியான வழியை ஆதாரங்களுடன் எடுத்துச்சொன்னாலும் மத வழியை விட்டு வரமாட்டேன் என அடம் பிடிக்கிறார்கள். இது தான் சங்பரிவார குரங்குகளுக்கு வாய்ப்புகளை வலிந்து வழங்குகிறது.

    செவ்வணக்கத்துடன்

    செங்கொடி

  15. மிக நல்ல பதிவு. அருமையான அலசல்.

    //வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அல் கொய்தா,LeT போன்றவைதான் முதன்மையான எதிரிகள், இந்திய விரோத சக்திகள்.அவற்றை ஒழிக்காமல் குண்டு வெடிப்புகளை தவிர்ப்பது கடினம்.எனவே தலிபான்கள் உட்பட அனைத்து இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள், துணை போகும் இயக்கங்கள் ஒழிக்கப்பட்டால்தான் முழுமையான தீர்வு பிறக்கும்.//

    அல் கைதா தானாக பிறந்து விடவில்லை. ஓசாமாவுக்கு பயிற்சி அளித்தது அமெரிக்கா. பின்னர்
    அமெரிக்காவின் முதலாளித்துவதால் அது பாலஸ்தீன், ஆப்கனிஸ்தான், இராக் போன்ற நாடுகளில் அப்பாவி மக்களை கொன்று குவித்த போது தற்போதைய இஸ்லாமிய
    பயங்கரவாதம் உருவானது. இப்பொழுது உலக வல்லரசுகள் இதையே காரணம் காட்டி எண்ணை மற்றும்
    பிற இயற்கை வழங்களை கொள்ளை அடிப்பதில் குறியாய் இருக்கின்றன. உலக மக்களிடம் வெறுப்பையும், பயத்தையும் உருவாக்கி அதன் மூலம் தனது மேலாதிக்கததை
    நிலை நாட்டுகின்றன வல்லரசுகள். இதையேதான் இங்கு பார்ப்பன பயங்கர வாதிகளும் செய்கின்றனர்.
    அங்கு ஓசாமா செய்வதை இங்கு இஸ்லாமிய பயங்கர வாதிகள் செய்கின்றனர்.
    பயங்கர வாதத்தை உருவாக்குபவர்களை ஒலித்தால்தான் பயங்கரவாதமும் மறையும். இந்தியாவில் பெரும்பான்மையான இஸுலாமிய பயங்கர வாதம் ஒரு பார்ப்பன பயங்கர வாதத்தின் தொடர்ச்சி.

    -பகத்

  16. periyar critic,

    //சங்க பரிவாரங்கள் இல்லாமல் இருந்தாலும் இங்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் தன் கோரச் செயல்களை செய்திருக்கும்.//

    Do you mean that if the peoples are killed by RSS then it is not a problem at all?

    Next, you say as follows:

    //சங்க பரிவாரங்களால் பிரச்சினை இல்லை என்று நான் கூறவில்லை.அவர்களை விட இஸ்லாமிய தீவிரவாதம் அதிக ஆபத்தானது,சர்வதேச தொடர்புடையது, இந்தியாவின் எதிரிகளுக்கு துணை போவது என்பதால் அதைத்தான் முதன்மையான தீயசக்தியாக கருதுகிறேன்.//

    Do you mean that you don’t care about Indians (especially common people, because they are the target of the bomb blasts) or it is a secondary point?

    Do you want to say that International problem has the first priority after that only Indians?

    நந்தன்

  17. This is a politically correct post.As long as you blame and condemn RSS/BJP dont bother about facts or anything else. You can link anything and everything with USA,
    brahminism,RSS/BJP and just condemn them. That would make a politically correct, left certified blog post.

  18. ravi srinivas,

    //This is a politically correct post.As long as you blame and condemn RSS/BJP dont bother about facts or anything else.//

    Why can’t you bring out the so called “those facts or anything else”?

    Nandhan

  19. //Why can’t you bring out the so called “those facts or anything else”?//

    Ravi has never done that.. You cannot force somebody to do something they’ve never been habitual of. And most importantly he is politically incorrect and He is proud of being politically incorrect. Proclaiming oneself as incorrect forfeits their sane duty to put forward facts as justification and when he stamps us as Correct(politically), obviously it become our duty to put forward facts to justify our stands. May be I am logically (as well) correct…

    Asuran

  20. உண்மையைப் பற்றி அசுரன் பேசுவது என்பது மனிதாபிமானம் குறித்து போல்பாட் பேசுவது போல்.மதிமாறன் பதிவில் பாரதி குறித்த பொய்யை பின்னூட்டமாக இட்ட அசுரன் முதலில் தன் வலைப்பதிவில் எழுதியிருப்பது அத்தனையும் உண்மை என்று சொல்வாரா.லைசென்கோ
    விவகாரம் குறித்து புளுகிய ஒன்றே போதும் அவர் எப்படிப்பட்ட புளுகர் என்பதற்கு.

  21. விரிவான அலசல் கட்டுரை
    பாராட்டத்தகுந்தது எனினும்,
    ஒரு சில அடிப்படைகளுக்கு முரணாக எழுதியுள்ளீர்கள்.

    குண்டுவெடிப்புகள் நிகழ்வதற்கு சங்பரிவாரமே காரணம் என்று கூறுவதைவிட சங்பரிவாரங்கள்தான் இந்தக் குண்டுகளை வைத்தது என்பதே சரி.

    சங்பரிவாரிகளையும் அவர்கள் தொடுக்கும் முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல்களையும் பார்த்து எதிர்வினையாக ஒரு முஸ்லிம் குண்டு வைக்கிறான் என்று கூறினால் அது முற்றிலும் தவறு.

    அப்படி வைக்கும் குண்டால் சங்பரிவாரங்கள் அழியப்போவதுமில்லை. முஸ்லிம்கள் உயரப்போவதுமில்லை என்பதை இஸ்லாத்தின் மீதும் முஸ்லிமக்ள் மீது பற்றுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்தே வைத்துள்ளான்.

    வெடிக்கும் குண்டுகள் அனைத்தும் சங்பரிவார தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு முஸ்லிம்கள் பெயரால் வெடிக்க வைக்கப்படுகின்றன.

    காந்தியைக் கொலை செய்த கோட்சே முஸ்லிம் பெயரில்தான் செய்தான்.
    நந்தித்தில் வெடித்த குண்டுகளிளின் அருகில் தொப்பியும் போலி தாடிகளும் கிடந்தன.
    தென்காசியிலும் அவ்வாறே.

    இந்த ரீதியில் யாரும் சிந்திப்பதும் இல்லை. அரசு விசாரரிப்பதும் இல்லை.
    ஏனெனில் அரசிலும் அரசாங்கத்திலும் உயர்மட்ட அதிகாரிகளாய் இருப்பது அந்தப் பரிவாரங்கள் தானே!

    பத்திரிகைகளும் இதற்கு பெரிதும் துணை செய்கின்றன.

    பரிவாரங்களுக்கு (அவர்கள் காங்கிரஸில் இருந்தாலும், பி.ஜே.பி.யில் இருநதாலும்) பிரச்சினைகள் எழும் போது குண்டுவெடிப்புகளால் அதனை உறங்கச் செய்யும் சதிகள்தான் பாராளுமன்ற தாக்குதல் உட்பட இன்று வரை நிகழ்ந்து வரும் எல்லா குண்டுவெடிப்புகளிலும் உறங்கிக் கிடக்கும் உண்மை

  22. ravi srinivas,

    //உண்மையைப் பற்றி அசுரன் பேசுவது என்பது மனிதாபிமானம் குறித்து போல்பாட் பேசுவது போல்.மதிமாறன் பதிவில் பாரதி குறித்த பொய்யை பின்னூட்டமாக இட்ட அசுரன் முதலில் தன் வலைப்பதிவில் எழுதியிருப்பது அத்தனையும் உண்மை என்று சொல்வாரா.லைசென்கோ விவகாரம் குறித்து புளுகிய ஒன்றே போதும் அவர் எப்படிப்பட்ட புளுகர் என்பதற்கு.//

    One year before (on 4th April 2007) asuran has clearly mentioned that “லைசென்கோ விசயத்தில் கூட லைசென்கோவை முன் வைத்து இயக்கவியலின் மீது ஒட்டு மொத்த பலி சுமத்தியதைத்தான் அம்பலப்படுத்தினேனே அன்றி லைசென்கோ 100% சரியானவர் என்று சர்டிபிகேட் கொடுக்கவில்லை நான். ஏனேனில் எனக்கு அந்தளவு உயிரியல் தெரியாது.” Link is http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_04.html

    That article is meant for you. The article asuran clearly mentioned that
    //ஏதாவது ஒரு எ-காவாவது அவர் கொடுக்க வேண்டும். அவ்வளவு பெரிய பதிவில் ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கக் கூடவா வக்கில்லை. ஏன் இத்தனை நாள் இங்கே எழுதியவர் ஒரேயொரு அம்சத்திலாவது எமது தரப்பு புளுகுனி பாண்டியர் குருப் என்று நிரூபித்திருக்கலாமே?//

    Do you think that if you tell something (ie, lie) repeatedly then it will become truth?

    நந்தன்

  23. நண்பர் வினவு,
    இந்த மண்ணின் குற்றங்கள் கால மாற்றத்தினால் ஆனது என எளிதில் தள்ளி விட முடியாது.

    அதே சமயத்தில்,
    ஹிந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுவதும், கொலை செய்யப்பட்டதும் மறந்துவிடலாமா?

    // அனேக அனேக அற்புதமான நல் நூல்களும் சிந்தனையையும் ஈன்ற இந்த சமயம் சீரழிக்கப்படுவதை நீங்கள் வரவேற்கிரீர்கள?//

    இஸ்லாமிய சமூகம் எந்த விதமான தவறும் செய்ய்யவேஇல்லய?

  24. top10shares, மேல் ஜூலை 30th, 2008 இல் 14:56 சொன்னார்:
    நல்ல அலசல், ஆனால் நடுநிலையான அலசல் இல்லை….

    nadu nilayaaka orutharam neenkal alasalame?

  25. ஆளும் வர்க்கஙகளே இந்த அத்தனை முரன்பாடுகளின் மூல ஊற்றுகளாக இருக்கின்றன. இந்தியாவில் அது பார்ப்ப்னியம் எனில் சர்வதேச அளவில் அது ஏகதிபத்தியம், அந்தந்த நாடுகளில் அவை ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறையைப் பொறுத்து வடிவம் பெறுகின்றன.

    Short and sweet. ithatku meal terrorism patri valankapaduththa mudyathu. if you didnt understand yet only question you can ask yourself. WHY ONE BECOME AS TERRORIST?
    nobody in this world never born as terrorist.

  26. நண்பர் வினவு,
    இந்த மண்ணின் குற்றங்கள் கால மாற்றத்தினால் ஆனது என எளிதில் தள்ளி விட முடியாது.

    அதே சமயத்தில்,
    ஹிந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுவதும், கொலை செய்யப்பட்டதும் மறந்துவிடலாமா?

    // அனேக அனேக அற்புதமான நல் நூல்களும் சிந்தனையையும் ஈன்ற இந்த சமயம் சீரழிக்கப்படுவதை நீங்கள் வரவேற்கிரீர்கள?//

    இஸ்லாமிய சமூகம் எந்த விதமான தவறும் செய்ய்யவேஇல்லய?
    you must be very loosu. go and read the artical onemore time.

  27. i would say that CPI ML (SOC) is a stooge of Musilim Terrorists .this confirmation which i came into being because it has supported muslim terror in Tamil nadu since it has started it magazine Puthiya Jananayagam , Puthiya Kalacharam . which i can proove it by means of asking the viewers to read about Puthiya Jananayagam ‘s 1994 Edition (i’m not sure about month ) in whch it supported in a whole heartedley the brutal murder of advocate Raj Gopal of Hindu munnai in madurai . he was murdered in home itself by islamic terrorists. but no rataliation to this murder had never taken place .

    not only that but also only one person who was witness to that murder kalidas was very brutaly murdered by muslim terrorists in the street of madurai just 2 year before when he has to give evidence in court against muslim terrorists but no rataliation to this murder had never taken place

    so these so called revolutionaries supported all these atrocities commited by muslim hoodlums.
    not only that nearly 100 Voulnteers of Hindu Munnani were brutally murdered by Muslim terrorists in Tamil nadu

    if any one say that PALA is secular movement they ‘re living in a fools paradise .PALA and it’s sister organization are merely agents of muslim terrorists.

    puthiyavan

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க