முகப்புநீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!
Array

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!

-


vote-012அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை – நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவையும் உடனே தூக்கில் போடச்சொல்லி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திலிருந்து அத்வானி, ஜோஷி முதலான சங்கப்பரிவாரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு – தன்னுடைய தங்கையை காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞனையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக் கொன்ற தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு உச்சநீதி மன்றத்தில் தூக்கு தண்டனை ரத்து. இத்தீர்ப்புகளுக்கிடையில் இழையோடும் ஒற்றுமை, இந்நாட்டின் நீதித்துறை, அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பொதுக்கருத்து ஆகியவையனைத்தையும் ஆளுகின்ற பொது உளவியலை, பளிச்சென்று காட்டுகிறது.

மும்பைத் தாக்குதல் வழக்கில், கசாபுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. “தானே முன்வந்து முஜாகிதீன் படையில் இணைந்து பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டது, சதித் திட்டம் தீட்டியது, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தது, அப்பாவிகளைக் கொலை செய்தது ஆகிய குற்றங்களை கசாப் இழைத்திருப்பதாகவும், அவன் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதால், தூக்கு தண்டனை விதிப்பதாகவும்” அத்தீர்ப்பு கூறுகிறது.

அஜ்மல் கசாப் செய்த கொலைகளுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் மறுக்க முடியாத வீடியோ ஆதாரங்கள் இருப்பதைப் போலவே, கசாப் போன்ற கருவிகள் உருவாகக் காரணமாக இருக்கும் புறவயமான அரசியல் சூழ்நிலைகளுக்கும் மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 80-களில் பாகிஸ்தானில் அமெரிக்கா உருவாக்கிய இசுலாமியத் தீவிரவாதம், அதே காலகட்டத்தில் இந்தியாவில் தலைவிரித்தாடிய பார்ப்பன பாசிசம், இந்திய அரசு காஷ்மீரில் நடத்தும் இராணுவ ஒடுக்குமுறை, தன்னுடைய சொந்த நோக்கங்களுக்காக இளைஞர்களை இசுலாமியத் தீவிரவாதத்துக்கு ஆட்படுத்தி இந்தியாவின் மீது ஏவிவிடும் பாகிஸ்தான் உளவுத்துறையின் நடவடிக்கைகள் – என்ற இந்த அரசியல் பின்புலத்தில் அகப்பட்டுக்கொண்ட பாகிஸ்தானின் ஏதோ ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் – அஜ்மல் கசாப். அவன் இசுலாமியத் தீவிரவாதத்தின் கையில் அகப்பட்ட இன்னொரு கருவி.

எந்தக் குற்றங்களுக்காக கசாப்பைத் தூக்குமேடைக்கு அனுப்பவேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறதோ, அந்தக் குற்றத்தின் மூலவர்களான பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கும், தாஜ் பாலஸ் மீதான தாக்குதலைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்த இந்தியத் தரகு முதலாளிகளும் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானையும் உள்ளடக்கிய தெற்காசிய சுதந்திர வர்த்தக வலையம்தான் இந்திய ஆளும் வர்க்கங்களின் கனவு என்பதால், பாகிஸ்தான் அரசு மனம் திருந்திவிடும் என்று மன்மோகன் சிங் நம்புகிறார். கசாப் மனம் திருந்த வாய்ப்பே இல்லை என்று மரணதண்டனை விதிக்கிறது நீதிமன்றம்.

கசாபுக்குத் தூக்கு என்று தீர்ப்பு வந்தவுடனேயே, “அப்சல் குருவையும் உடனே தூக்கிலிடு” என்று பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியது. இந்து தேசவெறிப் பொதுக்கருத்தை அரவணைத்துக் கொள்வதற்காக, உடனே அதனை வழிமொழிந்தார், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த திக்விஜய் சிங். மன்மோகன் சிங்கோ ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று வழுக்கினார். அப்சல் குரு வழக்கில் சட்டம் தன் கடமையை எப்படிச் செய்தது?

ஆகஸ்டு, 2005-இல் அப்சல் குருவின் மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதி மன்றம், போலீசு சமர்ப்பித்த அப்சல் குருவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாகவே ஏற்க முடியாது என்பதையும், குற்றவாளிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டது. எனினும், “மரண தண்டனை விதிக்கப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும்” என்று கூறி அப்சல் குருவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

எந்த வாக்குமூலத்தை டெல்லி உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் நிராகரித்தனவோ, (பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில்தான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தோம் என்று அப்சல் குரு ஒப்புக் கொண்டதாக போலீசு தாக்கல் செய்த வாக்குமூலம்) அதையே அசைக்கமுடியாத ஆதாரமாகக் காட்டி, 5 இலட்சம் துருப்புகளை எல்லையில் கொண்டு போ நிறுத்தி, டிசம்பர் 2001-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போர் ஆயத்தங்களைச் செய்தது பாரதிய ஜனதா அரசு. நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்ற பெயரில் சங்கப்பரிவாரம் நடத்திய இந்தக் கபட நாடகத்தில், நாடாளுமன்றத்துக்குக் காவல் நின்ற பாதுகாப்புப் படையினர் பலர் கொல்லப்பட்டது மட்டுமின்றி, உறைபனிக் குளிரில் நோக்கமின்றி நிறுத்தப்பட்ட பல இராணுவச் சிப்பாய்கள் மன அழுத்தத்தால் தற்கொலையும் செய்து கொண்டனர். நூறு கோடி மக்களை ஏமாற்றி, துணைக்கண்டத்தையே ஒரு அணு ஆயுதப்போரின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்திய ‘நாடாளுமன்றத் தாக்குதல்’ என்ற மோசடி நாடகத்தை அம்பலப்படுத்துவதற்கு காங்கிரசு முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான ஓட்டுக்கட்சிகள் யாரும் இன்று வரை தயாராக இல்லை. இதனை அம்பலப்படுத்தக்கூடிய ஒரே நேரடி சாட்சியை ஒழித்துக் கட்டுவதற்காக, “அப்சல் குருவை உடனே தூக்கிலிட வேண்டும்” என்று இந்து தேசத்தின் ‘மனச்சாட்சி’யின் பெயரால் மிரட்டு கிறது, பாரதிய ஜனதா.

பாபர் மசூதியை இடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அத்வானி, ஜோஷி, வினய் கட்யார் போன்ற சதிகாரர்கள் அனைவரையும் விடுவித்து, 2003-இல் பைசாபாத் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தற்போது ஆமோதித்திருக்கிறது அலகாபாத் உயர்நீதி மன்றம். 1992 முதலே மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகள் திட்டமிட்டே ஒரு நீதிமன்றத்திலிருந்து இன்னொரு நீதிமன்றத்துக்குப் பந்தாடப்பட்டன. வழக்கை விசாரிக்கும் புலனாவுத் துறைகள் மாற்றப்பட்டன. அத்வானி வகையறாவை தப்ப வைக்கும் நோக்கத்துடன், தொழில்நுட்பத் தவறுகள் திட்டமிட்டே இழைக்கப்பட்டன.

இந்த 17 ஆண்டுகளில் டில்லியிலும் உ.பி.யிலும் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., காங்., ஐ.முன்னணி, முலாயம், மாயாவதி ஆகிய அனைவரும் அத்வானி உள்ளிட்ட சங்கப்பரிவாரத் தலைவர்களை விடுவிப்பதற்கு உதவியிருக்கின்றனர். இவை அனைத்தின் இறுதி விளைவுதான் தற்போதைய தீர்ப்பு.

பாபர் மசூதி இடிப்பு என்பது, மும்பை தாஜ் பேலஸ் மீதான தாக்குதலைப் போல இரகசியச் சதித்திட்டம் தீட்டி, திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.  வரலாற்றுப் புரட்டுகளையும் பொய்களையும் அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன பாசிசக் கும்பல் நாடு முழுவதும் திட்டமிட்டே அரங்கேற்றிய ஒரு அரசியல் சதியின் இறுதிக் காட்சிதான் பாபர் மசூதி இடிப்பு. அது இறுதிக் காட்சியும் அல்ல என்பதை அதனைத் தொடர்ந்து வந்த மும்பை, குஜராத் படுகொலைகள் நிரூபித்தன. ரைஷ்டாக் தீவைப்பில் தொடங்கி, ஆக்கிரமிப்புகள், யூதப் படுகொலைகள் போன்ற பல சதிகளுக்கும் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருந்தது ஹிட்லரின் நாஜிசம். அந்த அரசியலை விட்டுவிட்டு, யூதப் படுகொலையை மட்டும் சதித்திட்டமாக யாரும் சித்தரிப்பதில்லை. ஆனால், இந்து தேசியம் எனும் பாசிச கிரிமினல் அரசியலைச் சட்டபூர்வமானதாக அங்கீகரித்துக்கொண்டு, மசூதி இடிப்பை மட்டும் தனியொரு சதித் திட்டமாகக் காட்டும் பித்தலாட்டம்தான் அயோத்தி வழக்கு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. ஓட்டுக்கட்சிகள், ஊடகங்கள், அதிகார வர்க்கம், நீதித்துறை போன்ற இந்திய ஜனநாயகத்தின் எல்லாத் தூண்களாலும் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் இந்தப் பித்தலாட்டம், அதன் தர்க்க ரீதியான முடிவை எட்டியிருக்கிறது.

1983 வரை உள்ளூரிலேயே விலைபோகாமலிருந்த ஒரு பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கி, ரத யாத்திரை நடத்தி நாடு முழுவதையும் ரத்தக் களறியாக்கி, பின்னர் 1992-இல் மசூதியை இடிப்பை முன் நின்று நடத்திய அத்வானி உள்ளிட்ட படுகொலை நாயகர்கள் சதி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்து மதவெறியின் காலாட்படையாக செயல்பட்ட ஊர்பேர் தெரியாத சில ‘அஜ்மல் கசாப்’கள்தான், மசூதி இடிப்புக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றவாளிகளாக தற்போது வழக்கில் எஞ்சியிருக்கின்றனர். மசூதி இடிப்பில், அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் நேரடிப் பாத்திரம் பற்றியும், உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் மறைமுகப் பாத்திரம் பற்றியும் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட லிபரான் கமிசன் அறிக்கை ஆதாரங்களுடன் விவரித்த போதிலும், அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாகச் செயல்பட்ட அஞ்சு குப்தா சாட்சியமளித்த போதிலும், காங்கிரசு அரசு அசைந்து கொடுக்கவில்லை. அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தற்போதைய தீர்ப்பின் மீதும் மேற்கூறிய உண்மைகள் எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை. ஏனென்றால், இந்திய ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் இந்த ‘பேலூர் தூண்களுக்கு’ அடியில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு இடைவெளி இருக்கிறது. அதனுள் ஒரு காகிதத்தைப் போல நுழைந்து வெளியே வருகிறது இந்து மனச்சாட்சி.

தன்னுடைய தங்கையைக் காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞன் பிரபு, அவனது தந்தை மற்றும் வீட்டிலிருந்த இரு குழந்தைகளை வெட்டிக் கொலை செய்த தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் (டிசம்பர் 2009), “தவறானதாக இருந்தபோதிலும், இயல்பான சாதி உணர்வுக்குத்தான் தீபக் பலியாகியிருக்கிறான் எனும்போது, அவனைத் தூக்கிலிடுவது நியாயம் ஆகாது. சாதி, மத மறுப்பு திருமணம் போன்ற சமூகப் பிரச்சினைகள் தொடர்பான குற்றங்கள் இழைக்கப்படும்போது, அவை எவ்வளவுதான் நியாயமற்றவையாக இருந்தபோதிலும், குற்றவாளியின் உளவியலைக் கணக்கில் கொள்ளவேண்டியிருக்கிறது” என்று கூறியிருக்கிறது.

சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவின் மரணதண்டனையை நியாயப்படுத்த, பாதிக்கப்பட்ட தேசத்தின் மனோநிலையைத் துணைக்கழைத்த உச்சநீதிமன்றம், பார்ப்பன சாதி வெறியனைக் காப்பாற்ற விழையும்போது, குற்றவாளியின் மனோநிலையைப் பரிசீலிக்கச் சொல்கிறது. இதே அளவுகோலின் படி அஜ்மல் கசாபின் உளவியலைப் பரிசீலித்தால், குஜராத் முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவதைக் கண்டு இசுலாமியத் தீவிரவாதத்துக்கு பலியான அந்த இளைஞனின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்யவேண்டியிருக்கும். எனினும் நீதிமன்றம் அப்படிச் சிந்திக்கவில்லை. சிந்திப்பதில்லை.

வெவ்வேறு வழக்குகள்.. வெவ்வேறு நீதிமன்றங்கள்… ஆனாலும் அவற்றின் தீர்ப்புகளை ஆளுகின்ற உளவியல், ஆதிக்க சாதி இந்து மனத்திலிருந்தே பிறக்கிறது. இந்திய அரசியல் சட்டம், இந்தியக் குற்றவியில் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம்… எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன – காகிதத்தில்.

இந்திய நீதித்துறையின் இதயத்தை இந்து மனச்சாட்சி தான் வழி நடத்துகிறது.

**********************************************************************************

புதிய ஜனநாயகம் ஜூன் 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. நாட்ல நடக்குற எல்லாத்துக்கும், பார்ப்பானை குற்றம் சொல்லுங்க. இந்த முட்டாத்தனமா எழுதுறத நிறுத்துங்க வினவு..

  2. உண்மை வினவு …………..இந்திய சட்டம் மனுதர்மம் ஒத்து செல்கிறது ..ஹிந்து மடத்திற்கு ஆதரவாய் கோடி பிடிக்கிறது ……..அந்த பிரபு என்னும் ஒருவர் கொல்லப்பட்டார் ….ஆனால்
    எல்லாருக்கும் உள்ள ஜாதி உணர்வே காரணம் என்று சட்டம் போட்டது மனுதர்மத்தை ஒத்து இருக்கிறது ………என்றே நினைக்கிறேன் ……… ஏன் என்றால் கொலை செய்தவன் பார்பனன் ……….இதை நான் என் பதிவில் இதற்க்கு முன்பை எழுதி உள்ளேன் http://vennirairavugal.blogspot.com/2010/03/blog-post_13.html ……. உண்மையில் மனுதர்மத்தில் தான் பார்பனன் கொலை செய்தால் குறைந்த தண்டனை ………………..

  3. இருக்கலாம்… இது இந்து மக்கள் பெரும்பான்மை வாழ்கிற நாடா இருப்பதால் இந்து வெறி ஏற்றத்தான் எற்றுவார்கள் நீங்கள் அதை குறையுங்கள்… அதற்காக கசாபை மன்னிக்கவே முடியாது… அதில் எந்த லாஜிக்கும் இல்லை,,, உடனே அவன் ஸ்டார் ஓட்டலில்தான் தாக்குதல் நடத்தினான் என்ற சப்பைக் கட்டு.. அவன் கூட்டாளிகள் அதிகாலை மும்பை பிளாட்பாரத்தில் போட்ட வெறியாட்டத்தில் எத்தனை சாதாரண உழைக்கும் மக்கள் பலியானார்கள் என்பதை கணக்கில் கொள்க.. குறைந்த பட்சம் கூட்டிக் கழித்துப் பாருங்கள்..உங்கள் கணக்கு சரியாக வரும்…

    • கசாபை மன்னிக்கவேண்டாம். முதலில் தூக்கில் போடு அத்வானி & கோ வகையறா நாய்களை.

      • வேற வழியில்ல நீர் ஆட்சியைப் பிடித்து ( ஒரு 1000 ஆண்டுகளில்) எல்லாரையிம் ஒரு கை பாரும்

  4. கோவை குண்டு வெடிப்பில் சம்பந்த பட்டவர்கள் இன்னும் உயிரோடு இருகிரர்களே ?
    இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருபவர்கள் இல்லையா ?
    எல்லாவற்றுக்கும் பார்ப்பான் என்று சொல்லி முட்டாள் தனமாக எழுதுவதை நிறுத்துங்கள்
    கசாப் , அப்சல்குரு போன்ற மனித உயிர்களின் மகத்துவம் தெரியாத தீவிரவாத, மிருகங்களுக்கு துணை போவது போன்று எழுதுவதை நிறுத்துங்கள்.
    நாட்டில் நூற்றுகணக்கான பொது பிரச்சனய்களுக்கு தீர்வை யோசித்து அதை பற்றி எழுதுங்கள் . இது போன்ற தவறான நபர்களுக்கு துணை போகாதீர்கள் .

    • அதே கோவை குண்டு வெடிப்புக்கு முன்னால் நடந்த கலவரத்தில் பலரை உயிரோடு எரித்து கொன்றவர்களும் இன்னும் உயிரோடுதான் இருகிறார்கள்.நடக்கும் உன்மையை யாராவது சுட்டி காட்டினால் உங்கள்கு அது தவறாக படுகிறதா?பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி அண்மையில் மாட்டியவர் யார் என்று உங்களுக்கு மறந்து விட்டது போல? எதற்கு எடுத்தாலும் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுகிறார்கள் என்ற புளித்து போன வாதத்தை நிறுத்துங்கள் சார்.

  5. தர்மம் செத்து ரொம்ப நாள் ஆச்சு .. என்னுடன் வேலை பார்த்த ஒரு அரக்கனின் யாபகம் வருகின்றது.. தன்னுடைய குழந்தையை கிணற்றில் தூக்கி எறிந்த கயவன் இப்பொழுது விடுதலை அடைந்து தன் மனைவியின் பெற்றோரே தன் குழந்தையை கொன்றார்கள் என்று வெளியே வந்து பெரிய சாமியார் ஆட்டம் தன்னை அடையாள படுத்தி கொண்டுரிகிறான் ..

  6. இந்திய வெறுப்பும்,இந்து வெறுப்பும் உங்களை வழி நடத்துகிறது. இந்தியாவில் இந்து என்பதற்காக சட்டம் என்ன சலுகை தருகிறது.இந்துக் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை தரப்பட்டு பலர் தூக்கில் போடப்பட்டுள்ளனரே.நளினிக்கு இந்து என்பதற்காக சலுகை தந்தார்களா இல்லை வீரப்பன் இந்து என்பதற்காக சும்மா விட்டுவிட்டார்களா. சிறையில் இருக்கும் இந்துக்களுக்கு என்ன சிறப்பு உணவா தருகிறார்கள்.இல்லை நீதிமன்றம் இந்து என்பதால் விடுதலை என்று சொல்லியுள்ளதா.
    கசாப் ஒரு கொலைக்கும்பலின் உறுப்பினன்.அவர்கள் அன்னிய நாட்டு சக்திகளின் உதவியுடன் செய்ததை மன்னிக்கவா முடியும்.குஜராத்தில் நடந்ததற்காக கசாப் செய்ததை ஏன் நியாயப்படுத்துகிறீர்கள். நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீர்களா.

  7. இது மாதிரி ஒரு மடத்தனமான தீர்ப்பு அறிவு சுத்தமா இல்லாதவன் கூட எழுத முடியாது. இந்தியாவில் மட்டும் தான் இது மாதிரி தீர்ப்பு கிடைக்கும். இதில் இவனுங்க எல்லாம் மெத்தப் படித்த மேதாவிகள். இதில் எக்கச்சக்க பணம் விளையாடி இருக்கு என்று வேற கேள்வி. நிறைய பேர்கள் அது மாதிரி எழுதிகிறார்கள்.

    இதில் குறை கூறப்படவேண்டியது இந்தியா மட்டுமே. அமெரிக்கா ஒரு வியாபாரி என்பது உலகரின்தது. Also there is a saying in English: There is no such thing as bad publicity in the advertisement world. That holds good for this too. இந்த “publicity” மேலும் இந்தியாவிற்கு அமெரிக்காவின் மற்றும் உலகத்தின் உள்ள மற்ற பகுதிகளில் உள்ள bad and corrupted corporates -ஐ இந்தியாவிற்கு வர வழி வகுக்கும்

    இந்தியாவிற்கு அமெரிக்கா வருவதற்கு காரணம் நமது அறிவு மூளை காரணம் அல்ல. எந்த தப்பு பண்ணினாலும் எந்த ஊழல பண்ணினாலும் நமக்கு சிவப்பு கம்பளம் தான் என்று எல்லோருக்கும் தெரியும். சும்மா நம்மளுக்கு மூளை அறிவு என்று நினைக்க வேண்டாம். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு கேள்வி? இந்த ஊழல Bhpoal case-இல நமது Justice Dinakaranum கிடையாது. ஏன்னா அவரைத் தவிர வேற எந்த நீதி அரசரும் இது வரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படவில்லை. அதாவது எந்த நீதி அரசரும் ஊழல செய்ய வில்லை!!!! நிறுத்தப் பட்ட மற்றொருவரும் விடுவிக்கப் பட்டார். அப்ப இந்த ஊழலை பண்ணியது யார்?

    மேலும் இந்தியாவின் நீதிமண்ற ஊழலை கீழே கண்ட சுட்டியில் காண்க.

    http://www.combatcorruptionindia.org/resources/judiciary.pdf

    இந்த சுட்டியில் கண்ட கோடானு கோடி ஊழலை பண்ணிய நமது நீதி அரசர்கள் யார்? யார்? கடந்த 50 வருடங்களில் இவ்வளவு கொள்ளை அடித்த மெத்தப் படித்த மேதாவிகள் யார்? யார்?? Justice Dinakaranum மட்டுமே இப்ப குற்றவாளிக் கூண்டில். அப்பா மீதி நாராப் பசங்க எல்லாம்?

    Escapeeeeeeeeeeeeeeee….

    இது தாண்டா இந்தியா!!!

    அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

  8. ஜாதிவெறி பிடிச்ச கம்யூனிஸ்டு நாய்களா…

    கசாப்பு, அத்துவானிக்கெல்லாம் தூக்குல போடுறதுக்கு முன்னாடி ஒங்களையெல்லாம் ஓப்பன்ல விருத்தசேதனம் செய்யணும்டா…

    தீவிரவாதிக்கு இப்படி ஊ%^விடுறியே நீயெல்லாம் எதுக்கு மனுசனா வாழனும் ?

  9. இந்தியாவில் அனைத்துவிதமான ஒடுக்குமுறைகள் உள்ளன. மதம், சாதி ,பாலினம், நிறம் , தேசியம் ,மொழி ,வர்க்கவேற்றுமை இவற்றை நாம்புரிந்துகொண்டால் இந்தக்கட்டுரையின் உண்மையை உணரலாம் முற்று முழுமையான உண்மை, வாழ்த்துக்கள் ,பாராட்டுகள், வினவு

  10. நாளை (11/06/2010) சென்னையில் வெளியிடப்பட உள்ள பெரியாரின் குடியரசு கட்டுரைகள் 27 தொகுதிகளையும், பெரியார் நடத்திய Revolt இதழ் தொகுப்பொன்றையும் இணையத்தில் இறக்கம் செய்து PDF இல் வாசிக்கலாம்.

    கிடைக்கும் முகவரி: http://periyardk.org/minnool/KudiArasu.zip

  11. ஷிவானி பட்னாகர் என்கிற கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த ரவிகாந்த் சர்மா என்கிற பார்ப்பன் அய்.பி.எஸ் அதிகாரிக்கு தண்டனை வழங்கிய சாஸ்திரி என்கிற பார்ப்பன நீதிபதி உதிர்த்த முத்துக்கள். “ “R K Sharma has an excellent service record as a police officer and extreme penalty is not needed in this case and He has been an asset to the country”.

    பாப்பான் கொலை செய்தாலும் அவன் தேசத்தின் சொத்தாம்.

  12. எங்கேய்யா போனீங்க நெத்தியடியும் ஷாஜகானும்… மரியாதையா வந்து இந்த பதிவுக்கு வினவ திட்டிட்டு போங்க .. இல்லேனா முசுலீமுக்கு சப்போட்டா வற பதிவுக்கு வினவ திட்டமாட்டீங்கன்ற பிழைப்புவாத முத்திரையை உங்க மேல கிழ சைடுலெல்லாம் குத்திரபோறாங்க… வாங்க சார் வாங்க சார் வாங்க சார்…………………..

  13. பிரபு என்பவர் செய்தது படுகொலை,அது ஆத்திரத்தில் செய்யப்பட்டது.பொதுமக்களை, கண்ணில் படுபவரைகளை அவர் சுட்டுத்தள்ளவில்லை.அல்ல.யாரும் அவருக்கு பயிற்சி கொடுத்து இன்னொரு நாட்டில் நுழைந்து கொல்ல பயிற்சியும் தரவில்லை,ஆயுதங்கள் கொடுத்து வழிக்காட்டவும் இல்லை.ஆகவே கசாப் செய்ததையும் பிரபு செய்ததையும் ஒப்பிடவே முடியாது.பிரபு என்பவருக்கு தரப்பட்ட தூக்கு தண்டனை 25 ஆண்டுகள் பிணையில் வெளிவர முடியாத சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.மேலுமுறையீடு செய்யப்பட்டால் அது தூக்குதண்டனையாக மாற்றப்படலாம்.கசாப்பிற்கு வக்கீலாக வினவு நீதிமன்றத்தில் வாதிடப்போகிறாரா இல்லை மருதையன் அவர் தரப்பு வக்கீலாக ஆஜராகப் போகிறாரா.கசாப்பிற்கு கூட உங்களுடைய வாதம் சிரிப்பினை வரவழைக்கும்.

  14. இந்து மனசாட்சி என்று சொல்வது மொட்டையாக இருக்கின்றது; பார்ப்பனர் மனசாட்சி என்று சரியாக அடையாளம் காட்டுங்கள். நன்றி.

  15. முட்டாள் தனமான கட்டுரை…கசாபு,அப்சல் குரு இருவரும் தீவிரவாதிகள் அவர்களை தூக்கில் இட வீண்டும் என்று சொன்னால் தான் அவன் இந்தியன் …அவன் எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும்…..

  16. இதில் எங்கய்ய பார்ப்பனர் மனசாட்சி வந்தது…எந்த கட்டுரை எழுதினாலும் உன் எண்ணம் இந்து எதிர்ர்ப்புலே இருக்kuம்…உனக்கு ஹிந்து, இந்தியா பிடிக்கலீன பாகிஸ்தான் போ …உன் நண்பர்கள் கசாபு,அப்சல் குரு இருவருக்கும் உயர் பதவி தருவார்கள் அனால் உன் நிலைமை….

  17. ஜெய் …
    பாகிஸ்தானுக்கு துப்பு கொடுத்தாதா எந்த முஸ்லிம் அதிகாரியோ தனி நபரோ அர்ரெஸ்ட் ஆகவில்லை ,இந்யும் அது போல் செய மாட்டார்கள் .அது போல் தோரகம் செய்வதெல்லாம் இந்து அதிகாரிகள்தான் .
    பாகிஸ்தான் என்பது சீனா ,லங்கா மாத்ரி ஒரு பக்கத்துக்கு நாடு . இலங்கைளிர்ந்து வந்து குண்டு வைத்து ராஜீவ் இ கொன்றார்கள் அதுக்காக நீங்க விடுதலை புலிகளை இந்து தீவிரவாதிகள் என்று நீங்கள் சொல்வீர்களா ? அது போல பாகிஸ்தானியும் ஏன் நீங்க மத கண்நோததுடன் பார்கிறார்கள் ?
    அதையும் பக்கத்துக்கு வீட்டு சனியன் என்று பாருங்கள் .

  18. நீங்கள் தான் எல்லா பதிவுகளிலும் மத உணர்வை காட்டி உள்ளீர்கள் . கசாப் முஸ்லிம் என்பதற்காக அவன் செய்தது நியமா ? சும்மா வீட்டுல தூங்கிகிட்டு இருந்தவனையா ஜெயில் ல போட்டாங்க
    எல்லா கமெண்ட் யும் உங்கள் கருதுக்கு எதிரா இருக்குறத பாத்துட்டு வது CORRECT UR SELF AND UR POST ITS NOT UR PERSONAL DAIRY

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க