Wednesday, June 7, 2023
முகப்புசுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் !
Array

சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் !

-

vote-012சென்னைக் கேளம்பாக்கம் அருகிலுள்ள தையூர் எஸ்.எம்.கே. போம்ரா கல்லூரி மாணவி அனித்ரா விடுதியறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இம்மாணவியை சக மாணவர் ஒருவருடன் பேசியதற்காக அபராதம் விதித்தும் மிக இழிவான வசைமொழிகளால் திட்டியும் தற்கொலைக்குத் தூண்டியது கல்லூரி நிர்வாகமே. மாணவர்களின் புகாரை அடுத்து கல்லூரி சேர்மன் தலைமறைவாகியிருக்கிறார். இதற்கு மேல் அனித்ராவின் மரணத்தைக் குறித்து விரிவாக எழுத நான் புலனாய்வுப் பத்திரிகையாளனும் இல்லை, சம்பவம் நடந்த தமிழகத்திலும் வசிக்கவில்லை. இது குறித்த எனது சிந்தனைகளை மட்டும் இப்பதிவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மாணவர்களும் மாணவிகளும் பேசிக் கொள்ளக் கூடாது என்கிற தலிபானியச் சட்டம் இந்த ஒரு கல்லூரியில் மட்டும் இருப்பதில்லை. சுயநிதி இருபாலர் கல்லூரிகள் அனைத்திலும் இது எழுதப்படாத விதியாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொடூரத்தின் உச்சமாக அனித்ரா படித்த கல்லூரி சிசி டிவி கேமெராக்களை நிறுவி மாணவர்களைக் கண்காணித்திருக்கிறது. எதற்காக இப்படி ஒரு விதி என்று கேட்டால் “பெற்றவர்கள் பிள்ளைகளைப் படிக்கத்தான் அனுப்புகிறார்கள். அவர்களுடைய கல்வி சிறப்பாக அமைய நாங்கள் சில விஷயங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம்தான்” என்று பெற்றோர்கள் மீது மிகுந்த அக்கறையுள்ளது போலப் பேசுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

புரையோடிப் போன சாதியக் கண்ணோட்டம் இன்னமும் பெரும்பாலான பெற்றோர்களிடம் இருக்கிறது. இதைக் கொண்டே இவர்களது கல்லூரிகளைப் பெற்றோரிடையெ சந்தைப் படுத்துவதுதான் சுயநிதி இருபாலர் கல்லூரிகளின் நோக்கம். இந்தக் கல்லூரியில் சேர்ந்தாலே உங்கள் மகன் அல்லது மகள் அதிக மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றுவிடுவார்கள் என்பதான மாயையையும் இவர்கள் உருவாக்கத் தவறுவதில்லை. இது ஒன்றும் இவர்கள் உழைத்து உருவாக்குகிற நற்பெயர் அல்ல.

தத்தமது கல்லூரிகளில் நூறு சதவிகிதத் தேர்ச்சியைக் காட்டுவதற்காக தேர்வில் தோல்வியடையும் சாத்தியமுள்ள மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் செய்கிற அக்கிரமமும் இது போன்ற பல சுயநிதிக் கல்லூரிகளில் நடைபெறுகிறது. தோல்வியடைய வாய்ப்பில்லாத அல்லது தோல்வியடையும் சாத்தியம் குறைவாக உள்ள மாணவர்களை மட்டும் தேர்வெழுத அனுமதிப்பதன் வாயிலாக நூறு விழுக்காடுகளோ அல்லது இவர்கள் எதிர்பார்க்கிற தேர்ச்சி விழுக்காடுகளோ எவ்வித முயற்சியுமில்லாமல் தானாகவே வந்துவிடும். இதனால் ஆசிரியர்கள் செய்கிற முயற்சிகளை நான் குறை சொல்லுகிறேன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஆசிரியர்கள் அளிக்கிற மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் நிர்வாகம் செய்கிற இழிவான செயல் இது.

சுயநிதிக் கல்லூரிகள் பலவற்றிலும் ஒரு அம்சம் தவாறாமல் இடம்பெற்றிருக்கும். வாராந்திரத் தேர்வுகள். மாணவர் சேர்க்கையின் போது மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் சிரமப் படாமல் இருப்பதற்காக ஒரு பயிற்சிக்காக நடத்தப்படும் தேர்வுகளே இவை என்று சொல்லப்பட்டாலும், இத்தேர்வுகளுக்கான அசல் நோக்கம் என்பது வேறு. மாணவர்களில் தேர்ச்சியடையக் கூடிய மாணவன் யார் தோல்வியடையும் சாத்தியமுள்ள மாணவன் யார் என்பதைக் கண்டறியவே இந்த வாராந்திரத் தேர்வுகள்.

பல்கலைக்கழகத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகளைப் (ஹால் டிக்கெட்) பிணையாக வைத்துக் கொண்டு பணம் பறிக்கிற கயமையையும் பல சுயநிதிக் கல்லூரிகள் செய்து வருகின்றன. ப்ரேக்கேஜ் கட்டணம் என்று ஒரு வசூலிப்பார்கள். ஆய்வகங்களைப் பயன்படுத்துகிற வேதியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவு மாணவர்களிடம் இக்கட்டணத்தை வசூலிப்பதிலாவது ஓரளவு நியாயம் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆய்வகங்களை எட்டிக் கூடப் பார்க்காத வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் மாணவர்களிடமும் இதே கட்டணத்தை அடாவடியாக வசூலித்தது நான் படித்த கல்லூரி (பொன்னையா ராமஜெயம் கல்லூரி. இப்போது PRIST (நிகர்நிலை) பல்கலைக் கழகமாக இருந்து தனது நிகர்நிலைத் தகுதிப்பாட்டை இழந்திருக்கிறது).

இவையல்லாமல் மாணவர் சேர்க்கையின் போதே பெற்றோர்களிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகிறார்கள். என் மகனோ மகளோ அரசியல் செயல்பாடுகல் எதிலும் பங்கெடுக்க மாட்டார்கள், கல்லூரியைக் குறித்து ஊடகங்களுக்கு எவ்விதத் தகவல்களையும் கொடுக்க மாட்டார்கள் என்பவை உள்ளிட்ட கூறுகளைக் கொண்ட ஒப்பந்தம் அது. இது போன்ற ஒப்பந்தங்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்து தெரியாவில்லை. ஆனால் உளவியல் ரீதியாக மாணவர்களை, நம் பெற்றோரின் குடுமியை அவர்கள் கையில் கொடுத்திருக்கிறோம் என்ற அச்சுறுத்தலிலேயே வைத்திருக்கும் ஏற்பாடுதான் இது.

சுயநிதிக் கல்லூரிகள் எதிலும் மாணவர் தலைவர்களுக்கான தேர்தல்கள் எதுவும் நடைபெறுவதில்லை. எப்படித் தனியார் தொழிற்சாலைகள் தொழிற் சங்கம் அமைப்பதை எதிர்க்கின்றனவோ அவ்வாறே சுயநிதிக் கல்லூரிகளும் மாணவர் பேரவை அமைப்பதை அனுமதிப்பதில்லை. பேருக்கு ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண்கள் வாங்கக் கூடிய மாணவர்களாகப் பார்த்து வகுப்புத் தலைவராகவும் துணைத் தலைவராகவும் நியமனம் செய்து கல்லூரி மாணவர் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொள்வார்கள். நானும் அப்படி ஒரு செமஸ்டருக்குத் தலைவனாக இருந்து தொலைத்திருக்கிறேன். அந்தப் பதவியிலிருப்பவர்கள் நிர்வாகத்திற்குக் கங்காணிகளாக இருக்க வேண்டும் என்பது வாய்மொழியாகக் கூடச் சொல்லப் படாத விதி. படித்த காலத்தில் பாவம் புண்ணியம் என்பன போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருந்ததால் சக மாணவர்கள் எவரையும் நான் காட்டிக் கொடுத்ததில்லை.

என்ன விதிமீறல் நடக்கும் எதைக் கொண்டு அபராதம் விதிக்கலாம் என்று காத்திருந்து அபராதம் விதிப்பார்களோ என்ற அச்சத்துடனேயே மாணவர்கள் இருக்க வேண்டியிருக்கும். கல்லூரி விதிகளை ஒரு புத்தகமாக அச்சடித்துத் தருவார்கள். அதில் இருப்பவை அனைத்தும் எல்லா கல்லூரிகளிலும் பின்பற்றப் படுகிற பொதுவான மற்றும் பார்வைக்கு நியாயமாகப் படுகிற விதிகள்தான். ஆனால் அபராதம் போடுவது, பெற்றோரை வரவழைப்பது போன்ற விஷயங்கள் பெரும்பாலான சமயங்களில் அந்தப் புத்தகத்தில் சொல்லப் படாத ஒரு செயலுக்காகவே நடைபெறும். இந்த புத்தகத்தில் இல்லாத சட்ட விதிகளைக் காட்டித்தான் மாணவர்களின் நியாயமான தேவைகள் அல்லது விருப்பங்கள் கூட மறுக்கப்படும். உதாரணமாக நான் படித்த கல்லூரியில் நடந்த இரு சம்பவங்களையும் அதை எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக எப்படி முறியடித்தோம் என்பதைக் குறித்து சொல்லுகிறேன்.

மூண்றாம் ஆண்டு இறுதியில் கடைசி வகுப்பு நாளில் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக என் நண்பன் தனது கேமெராவை எடுத்து வந்திருந்தான். வகுப்பறையில் நுழைந்து அடாவடியாகக் கேமெராவைப் பறித்துச் சென்றார் நிர்வாகப் பணியாளர் ஒருவர். கேமெரா எடுத்து வரக் கூடாது என்பது கல்லூரி விதிகளில் இருப்பதாகச் சொல்லிவிட்டு கேமெராவுடன் வகுப்பிலிருந்து வெளியேறிவிட்டார். ஹால் டிக்கெட் கைக்கு வராத நிலையிலும் அத்தனை மாணவர்களும் ஒற்றுமையாகக் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டோம். கல்லூரி விதிகளடங்கிய நூலில் கேமெரா கருவி குறித்த எந்த விதியும் இல்லாததைச் சுட்டிக்காட்டிய பிறகு எங்கள் தரப்பு நியாயத்தை முதல்வர் ஏற்றுக் கொண்டு கேமெரா திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்தார். முதல்வர் அறையிலேயே கொடுக்க முற்பட்ட அந்த சிப்பந்தியிடம் எங்கே இருந்து பறிமுதல் செய்தீர்களோ அங்கேயே வந்து கொடுங்கள் என்று கூறிவிட்டு வகுப்பிற்கு வந்துவிட்டோம். எங்கள் நிபந்தனை நிறைவேறியது.

சக மாணவன் ஒருவனின் தந்தை மறைந்த போது துக்கம் கேட்பதற்காகவும் உதவி செய்யவும் வகுப்பு மாணவர்கள் அனைவரும் செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டோம். வருகைப் பதிவு குறைந்து விடக் கூடாதே என்பதற்காகவே அவர்களிடம் அனுமதி கோரினோம். சூழ்நிலையின் தீவிரத்தை உணராமல் அனுமதி மறுத்தது நிர்வாகம். மாணவர்கள் அத்தனை பேரும் ஒரு நாள் வருகைப் பதிவைக் குறித்து கவலைப் படாமல் அந்த மாணவனுக்கு உதவி செய்யச் சென்றோம். மறுநாள் “எந்த சினிமாவுக்குப் போனிங்க” என்ற துறைத் தலைவரின் கேலியையும் எதிர்கொள்ள நேர்ந்த்து. மனிதாபிமானமுள்ள மற்ற பேராசிரியர்கள் அவர்களது வகுப்புகளுக்கு வருகைப் பதிவளித்தனர். இவை ஏதோ நான் தலைமை ஏற்று நடத்தியவை என்ற பெருமைக்காகச் சொல்லவில்லை. சுயநிதிக் கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் நியாயமான தேவைகளுக்குக் கூட எத்தனை போராட வேண்டியிருக்கும் என்பதை விளக்கவே இவற்றைச் சொன்னேன்.

பிள்ளைகளைச் சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கப் போகும் பெற்றோர்கள் முதலில் அடகு வைப்பது தங்களினதும், பிள்ளைகளினதுமான சுயமரியாதையைத்தான். ரிட்டையர்மெண்ட்டில் வரப் போகிற பிராவிடண்ட் ஃபண்டு போல கல்வியையும் ஒரு முதலீடாகப் பார்க்கத் தொடங்கிய அல்லது பிரச்சாரம் செய்யத் தொடங்கிய காரணத்தால் தான் சுயமரியாதையை சில ஆண்டுகளுக்குத் தள்ளிவைத்தால் தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் பெற்றோரும் மாணவர்களும். தயை கூர்ந்து பெற்றோர்களோ, மாணவப் பருவத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு சுயமரியாதையோடும் சமத்துவத்தோடும் வாழ்வதற்கான சுதந்திரத்தையாவது விட்டு வையுங்கள்.

_______________________________________________

விஜய் கோபால்சாமி

நண்பர் விஜய் கோபால்சாமி இரண்டு ஆண்டுகளாய் பதிவு எழுதி வருகிறார் இவரது வலைப்பூக்கள் http://vijaygopalswamihyd.blogspot.com மற்றும் http://vijaygopalswami.wordpress.com

________________________________________________

[பின்னூட்டமிடும் நண்பர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் படித்தவர்களாய் இருந்தால் உங்கள் கல்லூரிகளில் இருந்த இருக்கிற இது போன்ற தலிபானிய விதிகளைக் குறித்துத் தெரிவியுங்கள். நன்றி]

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. நான் படித்த கிருத்துவ கல்லூரியில் அனைத்து மதத்தை சேர்ந்த மாணவர்களும் கட்டாயம் அசெம்ப்ளி யில் பங்கேற்க வேண்டும் என்ற கிருத்துவ தாலிபானியம் இருந்த்தது.

  2. நன்றி,வினவு க்கு என்னக்கு தெறித்த கல்லுரி இல் கல்வி புரவலர் தனுடயா ஆச்ரியர்கல்லை(femaleTeachers and staffss) தனது காம இசை
    க்களுக்கு பயன்படுத்துகிறார்

  3. விஜய் கூறியது போலவே எனக்கும் அனுபவம் உண்டு.நான் படித்தது ஒரு தனியார் பொறியல் கல்லூரியில்.பள்ளியில் தமிழ் வழியில் படித்துவிட்டு திடும் என ஆங்கில வழிக்கு சென்றதால், தன்னம்பிக்கை இல்லாமல் ஆரம்பத்தில் அறிஎர்ஸ் வைத்துவிட்டேன்.அதன் பின் என்னை நான்காவது மற்றும் ஐந்தாவது செமஸ்டர் எழுத கல்லூரி என்னை அனுமதிக்க வில்லை.அதன் பிறகு எப்படியோ முட்டி மோதி இறுதி ஆண்டில் அனைத்து பாடங்களையும் பாஸ் செய்து முதல் நிலையில் தேறினேன்.இன்று ஒரு நல்ல வேலையிலும் இருக்கிறேன்.எனக்கு தெரிந்து பல கல்லூரிகளில் இதையேதான் செய்கிறர்கள்.

  4. இங்கு சொல்லப்பட்டவை உண்மையிலயே கம்மி தான். சில கல்லூரிகளில் mp3 கேட்டால் கூட பிளேரை உடைத்து விடுவார்கள். . . .

    • கல்லூரியில் எம் பி த்ரீ க்கு என்னப்பா வேலை…? சுதந்திரம் வேண்டும்… அதற்காக இப்படியா….?

  5. தனியார் கல்லூரிகளில் படித்து வரும் (பொறியியல்), மாணவர்களின் கல்விதரம் கேள்விக்குறியாகவே இருக்கிறது ( குறிப்பாக கணினி தவிர்த்த பிரிவுகள்).

    தரமான பொறியியலாளர்களை உருவாக்குவதை விட்டுவிட்டு வருடம் தோறும் ஆட்டு மந்தை போன்றதொரு கூட்டத்தை வெளியேற்றுகிறார்கள்.

    டார்வின் கூற்று இங்கு சரியாக பொருந்தும் .. தரமானதே தப்பி பிழைக்கும்.. திறமையான பொறியியலாளர்களே சரியான வேலை வாய்ப்பை பெறுகிறார்கள்.
    IIT
    போன்ற கல்வி தரம் அணைத்து கல்லூரிகளிலும் இருக்க வேண்டும்.. AICTE காரர்கள் ஆய்வு செய்ய வருகையில், அவர்கள் பிரியாணி தின்று கவரை வாங்கி கொண்டு போவதால் தரமற்ற ஆய்வு மற்றும் கொடுமையான( தவறான) பயிற்றுவித்தல் முறைகளினால் பல ஆயிரக்கணக்கான தரமற்ற பொறியிலாளர்கள் தமிழகத்தில் உருவாகிறார்கள் .

    பொறியியல் படிக்கலாம் தவறில்லை …. ஆனால் சரியான முறையில் எத்தனை ஆயிரம் பேர் கற்று தேர்கிறார்கள் என்று பார்த்தல் மிக மிக சொற்பமே ..

    இதற்கெல்லாம் காரணம் தகுதி அற்ற கல்லூரிகள் மற்றும் லஞ்சம் வாங்கும் ஐச்டே காரர்கள் தான் .

    ஏதோ சொல்லனும்னு தோணிச்சி .. பின்னூட்டம் இட்டு விட்டேன்..
    தவறு இருப்பின் மன்னிக்கவும்
    AICTE : All India Council for Technical Education

  6. […] This post was mentioned on Twitter by mercylivi, Prakash Venkatesan. Prakash Venkatesan said: https://www.vinavu.com/2010/06/14/self-finance-colleges/ முக்கியமான கட்டுரை.சுயநிதி கல்லூரிகளை விட ஜெயில் பள்ளிகள் சமூகத்துக்கு ஆபத்தானவை […]

  7. இவ்வளவு சிரமம் இருந்தால், ஏன் சுயநிதிக் கல்லூரிகளில் சேர வேண்டும்? அரசாங்கக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாமே! சட்டக் கல்லூரிகளில் மாணவர்களின் சுதந்திரத்திற்கு ஈடு இணை ஏது?படிக்கும் காலத்தில் சுயமரியாதையை விட ஒழுக்கம் மிக அவசியம்! இருபாலர் பேசிக் கொள்வதை விட, வாழ்க்கையில் படித்து முன்னேறுவது முக்கியம்!

  8. அன்பு தோழர் விஜய் கோபால்சாமி !

    அனித்ராவின் இழப்பை முன் வைத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகள் முக்கியமானவை .
    சென்ற மாதம் எனது தளத்தில் இந்த துயர சம்பவம் குறித்து பகிர்ந்திருந்தேன் (இணைப்பை அளித்தமைக்கு நன்றிகள் )

    எனது பதிவை தொடர்ந்து கீழ்காணும் மூன்று கருத்துக்களை வலியுறுத்தி PMO,MHRD,UGC,AICTE அமைப்புகளுக்கு மின்னஞ்சல்கள் என்று அனுப்பியிருந்தேன் .

    1. மாணவர்கள் தங்களுக்கிடையே எந்த சூழலிலும் பேசிக் கொள்ளக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்க இருபாலர் கல்லூரிகளுக்கு அதிகாரம் இருக்கின்றதா? கட்டுபாடுகளை மீறும் மாணவர்களுக்கு அபராதங்கள் விதிப்பதும் சஸ்பென்சன் போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதும் முறையான ஒன்று தானா ?

    2. மாணவர்களை கண்காணிக்க காமராக்கள் பொருத்துவதென்பது இந்திய அரசியலமைப்பு சட்டங்களின் அடிப்படையில் சரியான ஒன்று தானா ?

    3. மனத் தளர்ச்சி கொள்ளும் மாணவர்கள் தங்களின் உடலுக்கோ உயிருக்கோ ஊறு விளைவித்துக் கொள்ளும் செயற்பாடுகள் உயர் கல்வி நிறுவனங்கள் தொட்டு தொடர் நிகழ்வாகி வருகிறதே , இதற்க்கு தங்கள் அமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தாம் என்னென்ன ?

    பதில் வந்ததா என்று கேட்கிறீர்களா தோழர் ?

    வந்தால் தான் இந்தியா உருப்பட்டு விடுமே !

    நீங்கள் பெற்றோருக்கு விடுத்திருக்கும் வேண்டுகோள் அனைத்து பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய ஒன்று !
    ” கொஞ்ச நாள் தானே அட்ஜஸ்ட் பண்ணிட்டு போப்பா ” என்று சொல்லாத பெற்றோர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் … கல்லூரி காலத்தில் அட்ஜஸ்ட் பண்ணிட்டு அட்ஜஸ்ட் பண்ணிட்டுவாழ்ந்து பழக ஆரம்பிக்கும் மாணவனிடமிருந்து புரட்சியாவது புடலங்காவாவது ….

    கொடும் பாலை தான் ; எனினும் மிச்சமிருக்கிறது சிறு நம்பிக்கைகள் .

    வருகிறேன் தோழர் !

  9. சுதந்திரம், சமத்துவம் போன்றவைகளை முளையிலேயே கிள்ளிவிட்டால் வருங்காலத்தில் தொழிற் சங்கம் தேவையில்லையே என்பதற்கே இந்த ‘விதி முறைகள்’ . தேர்தல் ஜனநாயகத்தை பற்றி வாய் கிழிய பேசுபவர்கள் “மாணவர் சங்க தேர்தல் ” சுய நிதி கல்லூரிகளில் ஏன் நடை பெறவில்லை என்பதை பற்றி பேசினால் சிறப்பாக இருக்கும்?

    • சரியான கேள்வி அசோக்! நல்ல பதிவு விஜய்கோபால்சாமி. நியோ உங்க பதிவை வாசித்தேன் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்…. ஆமாம் ஹைதர் அலி எங்க போனாரு? நானும் ஒரு வாரமா தேடிட்டிருக்கேன்… 

  10. நான் இதைவிட மிக மிக மோசமாக அனுபவப்பட்டு, கல்லூரியில் சேர்ந்த மூன்றாம் மாதமே வெளியே வந்துவிட்டேன்…

    அந்த கல்லூரியில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் அதிகம். எனது வகுப்பில் பத்து மாணவர்கள் மட்டுமே தமிழ் மாணவர்கள். அதிக கட்டணத்திற்காக அடுத்த மாநில மாணவர்களை மார்கெட்டிங் செய்து இங்கு பிடித்துக்கொண்டு வருகிறார்கள்…

    கேவலமாக இருக்கிறது….

  11. இந்தக் கட்டுரையை மிகுந்த தயக்கத்துடனேயே வினவு தோழர்களுக்கு அனுப்பி வைத்தேன். அதைத் தொடர்ந்து வந்த நாட்களில் பதிவுலகில் நிலவிய கலவரமான சூழலையும் வினவின் மீதான விமர்சனங்களையும் எண்ணி என் கட்டுரையை வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிடலாமா என்றும் அவ்வப்போது தோண்றும். ஆனாலும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிற இந்த நேரத்தில் வினவு வழியாக ஒரு சில பெற்றோர்களையாவது சென்று சேர்வதை ஏன் தடுக்க வேண்டும் என்று கருதியதால் அந்தக் கோரிக்கையை வைக்கவில்லை.

    அவ்வளவு சிரமப்பட்டு ஏன் சுயநிதிக் கல்லூரியில் சேரவேண்டும் என்று நண்பர் ராம்மி கேட்கிறார். விருப்பங்களோ தேர்வுகளோ எதுவாயினும் சுயமாகச் தேர்ந்தெடுக்கிற வாய்ப்பில்லாமல் போனவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் பெற்றோர்களுக்குக் கோரிக்கை வைத்துப் பதிவை முடித்திருக்கிறேன்.

    ஆணும் பெண்ணும் பேசிக்கிறதுல அப்படி என்னதான் தப்பு இருக்கு ராம்மி? இந்தக் காலத்து மாணவர்கள் பல பேருக்கு பெற்றோரில் ஒருவரோ, அல்லது இருவருமோ வேலைக்குச் செல்வது மிக இயல்பான ஒன்று. பணியிடத்தில் உடன் வேலைபார்க்கும் எதிர்பாலின ஊழியர்களுடன் உரையாடுவதோ தேநீர் அருந்துவதோ தவறில்லை எனும் போது கல்வி கற்கிற இடத்தில் மட்டும் ஒரு மாணவனும் மாணவியும் உரையாடுவதில் என்ன தவறு வந்துவிடப் போகிறது.

    இன்னொரு விஷயம், அந்தக் கல்லூரியில் படிக்கிற காலத்தில் எல்லா ஆசிரியர்களிடமும் பொதுவான ஒரு அம்சத்தைக் கவனித்திருக்கிறேன். “கவர்மெண்ட் காலேஜ்ல படிச்சா பார்டர்ல தான் பாசாகலாம், அதுவும் சந்தேகம் தான்” என்று ஒருவர் தவறாமல் அத்தனை ஆசிரியர்களும் மந்திரம் ஓதுவது போல ஓதுவார்கள். ஆசிரியர்களைப் பணியில் சேர்க்கும் போதே இத்தகைய மூளைச் சலவையைச் செய்து முடித்துவிடுகிறார்கள்.

    இதுக்கு முழு முதல் காரணம் அரசுக் கல்லூரிகளில் படிக்கிற மாணவர்களின் போராட்டச் சிந்தனை. அதை மழுங்கடிக்கிற விதமாத்தான் தனியார் கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு நாள் தவறாமல் வேப்பிலை அடிக்கிறார்கள். சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த பெரும்பாலாண போராட்டங்களைக் கையிலெடுக்கிறவர்கள் அரசுக் கல்லூரி மாணவர்கள் தான். எதிர்த்துக் கேள்வி கேட்பதையே குற்றமாகக் கருதுகிற ஒரு தலைமுறை கடந்த பத்து ஆண்டுகளுக்குள் உருவாகியே விட்டது. நானும் அந்தத் தலைமுறை என்று அவமானப் பட்டாலும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

    மற்றபடி வாழ்த்து தெரிவித்த, விமர்சித்த அனைவருக்கும் நன்றிகள். கால நெருக்கடி காரணமாக விரிவான பதிலூட்டம் எழுத இயலவில்லை. சில மணிநேரங்களுக்குள் மீண்டும் ஒரு விரிவான பதிலூட்டத்தை எழுதுகிறேன். நன்றி.

    • @@@வினவின் மீதான விமர்சனங்களையும் எண்ணி என் கட்டுரையை வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிடலாமா என்றும் அவ்வப்போது தோண்றும்@@@  நீங்கள் வினவில் வெளியிட தயங்கும் அளவுக்கு வினவு மீது என்ன விமர்சனம் வந்தது என்று தெரிந்து கொள்ளலாமா???

    • கல்லூரிக்குச் செல்வதே படிக்க அல்ல! போராட்டம் நடத்த பழகதானோ?காதல் பழகத்தானோ? இந்த கால இளைஞர்கள் புத்திசாலிகள் மட்டுமல்ல! சுயநல வாதிகள்!எப்படியாவது,அடிமைப்பட்டாவது முன்னேற வேண்டும் என்று விரும்புவர்கள்! நீவீர் என்னதான் தூண்டில் போட்டாலும், அவர்கள் போராட மாட்டார்கள்!

      • ராமி, உங்க கருத்துப்படி  மாணவர்கள் போராடுவது சரியா தவறா???

        • படிக்கும் போது போராட்டம் தேவை இல்லை! தயவு செய்து , மாணவர்களை விட்டு விடுங்கள்! இல்லையெனில் அனைத்து மாணவர்களும் சட்டக் கல்லுஉரி மாணவர்கள் ஆக்க வேண்டாம்!

        • போராடும் இவ்வுலகில் போராடாமல் இருப்பதல்லவா தகுதிக்குறைவு?, மக்களைப்பற்றிய அக்கறையின்றி எதைப்பற்றி படிக்கிறாய்? உன் வாழ்வுக்கு, என் வாழ்வுக்கும் மக்களின் வாழ்வுக்கும் துளியும் பயன் படாத இப்படிப்பை தகுதியாய் நிர்ணயித்திருக்கும் இச்சமூகத்தை எதிர்க்காமலிருப்பதல்லவா தகுதிக்குறைவு.

          அரசுப்பள்ளிகள் மூடப்படுகின்றன, தனியார் பள்ளிகள் நன்கொடை போதவில்லை என்று பள்ளிகளை இழுத்து மூடுகின்றன.அரசுக்கல்லூரிகள் புதைகுழிக்கு தயராயிருக்கின்றன, பொறியியலெனில் லட்சங்கள், மருத்துவத்திற்கோ கோடிகள் எங்கும் பணம் தான் எதிலும் பணம்தான். பத்தாவதிலும் பனிரெண்டாவதிலும் முதல் பாடம் எடுத்தவன் தானா இன்று கல்விக்கட்டணங்களை குறைக்கக்கோரும் களத்தில் நிற்கிறான்?அது நிர்ணயிப்பதல்ல, சமுகத்தின் மீதான அக்கறை தான் போராடத் துண்டுகிறது

          படிக்கும் மாணவனுக்கு எதற்கு அரசியல்? படிக்கும் மாணவனுக்கு அல்லாமல் வேறு யாருக்கு? உன் தாயின் தாலி கல்லூரி தாளாளரின் பற்களில் மின்னும் வேளையில் உன்னையன்றி யார் போராடுவார்கள்? இன்ஸ்டால்மெண்ட் கட்டணத்தை கட்ட முடியாமல் நீ வேதனையுறுவதை, வெளியில் நிற்க வைத்து அவமானப்படுவதை உன்னையன்றி யார் அறிவார்? உனக்கு உன்னைத்தவிர யார் போராட முடியும்

          http://kalagam.wordpress.com/2010/05/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D/

        • தயவு செய்து மாணவர்களை விட்டுவிடுங்கள் கலகம் அவர்கலி ! தவறான பாதையை காட்ட வேண்டாம்!

        • ராமி,,
          நான் விட்டுவிடுகிறேன். ஆனால் பாதிக்கப்படும் மாணவன் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்? சரி அவர்களுக்கு பதில் நீங்கள் போராட வருகிறீர்களா? பாதிக்கப்படுபவன் பேசித்தானாக வேண்டும் தன் உரிமைகளை பெறுவதற்கு . அமைதியாய் அடிமையாய் இருக்கச்சொல்கிறீர்கள். தான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் அடைய நினைக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. ஆனால் படிப்பதற்கு பணமின்றி போராடும் மாணவர்களை விட்டு விடுங்கள் அவர்கள் தங்கள் வாழ்வை தீர்மானிக்கட்டும், போராடி கல்வி கடைச்ச்ரக்காக்கி விற்பதை நிறுத்துவார்கள் .மாணவர்கள் உங்களுக்கும் சேர்த்துதானே போராடுகிறார்கள் உங்கள் வம்சாவளிகள் எல்லாம் படிக்க பணமில்லாமல் கஷ்டபடமாட்டார்களா? அவர்கள் அதனால் பயன் பெறுகீறார்கள்.

      • ஆகா .. என்ன ஒரு முதலாளித்துவ புத்தி உங்கள் பதிவுகளில் திரு / திருமதி / செல்வி ரம்மி அவர்களே ..

        சுய நிதி கல்லூரியில் இப்படி செய்கிறார்கள் என்றால் அரசு கல்லூரிக்கு போக வேண்டியது தானே என்று எக்காளமிடும் உங்களிடம் நான் கேட்க விரும்புவது .. சுய நிதி கல்லூரிகளை எல்லாம் அரசாங்கம் எடுத்துக் கொண்டால் நல்லது தானே?.. செய்யலாமா ?.. அதற்கான போராட்டத்தில் இறங்க தயாரா ?..
        தோழர் கலகம் சொன்னது போல் உன் தாயின் தாலி கல்லூரி நிர்வாகியின் பற்களில் மின்னும் போது அங்கு எல்லாவற்றையும் அடகு வைத்துவிட்ட பிறகு சுயமரியாதையையும் அடகு வைத்து போராடாமல் அடங்கி இருக்க எல்லா மாணவர்களும் உங்களைப் போல் பார்ப்பன மலம் தின்று அதையே மூளைக்கு பதிலாக வைத்திருப்பவர்கள் அல்ல ..

  12. வெளியிட வேண்டாம் என்று சொல்ல நினைத்தது வினவுக்கு சங்கடத்தை ஏற்படுத்த விரும்பாததால். நல்ல வேளையாக சுட்டிக் காட்டினீர்கள். இல்லையெனில் பலராலும் தவறாகவே புரிந்து கொள்ளப் பட்டிருக்கும்.

    • அதனால்தான் கேட்டிருந்தேன், புரிந்துகொண்டதற்கு நன்றி விஜய்

  13. சில கல்லூரிகளில் மாணவர்களை அடிக்கவும் செய்கிறார்கள், பேராசிரியர்கள். முதல் வருட மற்றும் பலகீனமான மாணவர்களிடமே இந்த கைவரிசையை காட்ட முயல்கின்றனர். இந்த பேராசிரியர்கள் 45, 50 வயது உடையவர்கள். ஒரு ஆசிரியருக்குரிய தகுதி கொஞ்சமும் இவர்களிடம் இருப்பதில்லை. உள்ளடி அரசியல் செய்வது இவர்களுக்கு பொழுது போக்கு. பெரும்பாலும் இவர்கள் வேறு வருவாய் ஈட்டும் தொழிலை செய்து வருகிறார்கள். கல்லூரி வேலை நேரம் குறைவாக இருப்பது இவர்களுக்கு மிகப்பெரிய வசதி. பணி நிரந்தரம் தரும் மிதர்ப்பும், ஆறாவது ஊதியக்குழு தந்திருக்கும் சுகமும் இவர்கள் இறுமாப்பை அதிகரிக்க செய்திருக்கின்றன. பத்திரிகை படிப்பதே புதிய சம்பள உயர்வையும், படிகளையும் எதிர்பார்த்து தான். சமூகப் பார்வை கிஞ்சித்தும் இருப்பதில்லை. பொதுவாக கல்லூரி வளாகம் அல்லது யூனிவர்சிட்டி வளாகம் என்பது கிணற்று சுவர். புதிதாக எதையும் படிப்பதும் இல்லை. அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புவதுமில்லை. சொன்னதை திரும்ப சொல்பவர்களே அதிகம். UGC செலவில் Refresher Course என்ற ஒன்றிற்கு போய் வருகிறார்கள். காபி, வடை சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் உப்பி வருகிறார்களே, தவிர, அந்த புதிய தரிசனத்தை கொஞ்சமும் காட்ட மறுக்கிறார்கள். இவர்களே மாணவர்கள் செய்யும் சிறு தவறுக்கு அதிக பட்ச தண்டனையை வழங்குகிறார்கள். படிக்கும் பழக்கம் உடையவர்கள் இளம் ஆசிரியர்கள் மற்றும் சில மூத்த பேராசிரியர்கள் மட்டுமே.

  14. வாழ்த்துக்கள் தோழர்
    இனிவரும் காலங்களில் இன்னும் மோசமாக இருக்கும்

  15. எனது தம்பியின் நண்பனொருவன் சென்னைக்கு அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கின்றான். கல்லுரி விடுதியில் தங்கி உள்ளான். விடுதியில் எப்பொழுதும் குடிநீர் வைத்து இருப்பார்கள். அன்று வைக்க வில்லை ஏன் வைக்கவில்லை என்று கேட்டதற்கு அவனுக்கு அபராதம் ரூ.3000. அதையும் ஊரில் வசிக்கும் அவனது பெற்றோர் வந்து கட்டி விட்டு சென்றனர். அதுமட்டுமல்ல இனி இது போன்ற போராட்டங்களில் ! ஈடுபடமாட்டேன் என முத்திரைத் தாளில் எழுதி வாங்கிக் கொண்டார்கள். இவர் வங்கியில் கடன் வாங்கி படிக்கும் மாணவன்.

    இராம்மி அவர்களே நீங்களே சொல்லுங்கள் இது போன்ற நிகழ்வுகள் நேரும் போது என்ன செய்வது? அப்படியே எல்லாத்தையும் சகித்துக் கொண்டு வாழபழகி விடலாமா?

  16. இங்கெ பலர் சொல்லியிருப்ப்அது மிக பயமாக இருக்கிறது. பால்இயல் வன்முறை போன்றவ.எதர்க்கெடுத்த்ஆலும் விடியோ காமிரவை உபயோகிக்கும் இந்த இளம் தலைமுறை இந்த மாதிரி அவலங்கள வெளிப்படுத்த்உவதில்லாஇ ஏனோ?பெயைல்யாக வெளிப்படுத்த்உவதில் ஒன்றும் சிரமம் இல்லையே?

  17. தங்களின் இந்த கட்டுரை எங்களின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தங்களுக்கு எதாவது ஆட்சோபனை இருப்பின் எங்களுக்கு தெரிவிக்கவும்..

  18. அன்பின் நறுமுகை தளத்தினருக்கு,

    கட்டுரையை நீங்கள் மறுவெளியீடு செய்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி. ஆட்சேபனைகளுக்கு இடமே இல்லை. மிக்க நன்றி.

  19. வி.எஸ்.வி.என் பாலிடெக்னிக் என்று ஒரு பாலிடெக்னிக் விருதுநகரில் இருக்கிறது. அதே ஊரில் காமராஜர் பொறியியல் கல்லூரி இருக்கிறது . இந்த இரண்டு பயிலகங்களும் அங்கு பெரும்பான்மை ஜாதியினரான நாடார் இனத்தினரால் நடத்தப் படுகிறது . இங்கு ஒரு கொடுங்கோன்மை என்னவெனில் மாணவிகளிடம் மாணவர்கள் பேசக் கூடாது. மாணவிகள் இருக்கும் திசையில் ஒரு இரண்டு நிமிடத்திற்கு மேல் பார்த்தால் கூட கூப்பிட்டு விசாரணை நடக்கும். மாணவிகள் சரியாக வகுப்பு ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன் தான் வகுப்பறைக்குள் வர வேண்டும். அதன் பின் இடைவேளை , உணவு இடைவேளை போன்ற நேரங்களில் மாணவியர் யாரும் வகுப்பறையில் இருக்கக் கூடாது . இவர்களுக்கு என்றே ஒரு பெரிய ஹால் இருக்கும் . வகுப்பறையை விட்டு வெளியேறி சென்றால் அங்கு தான் இருப்பார்கள் . இதன் காரணமாக அவர்கள் கூறுவது நாங்கள் கலாச்சாரத்தை பாதுகாக்கிறோம் என்று. ஆனால் உண்மை என்ன என்றால் அதிகமாக நாடார்கள் இருக்கும் அந்த ஊரில் அந்த ஜாதிக்காரனின் மகளோ மகனோ இன்னோரு ஜாதிக் காரனின் மக்ளோடு காதலித்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த ஊரில் இருந்த பெரும் பணக்காரர்கள் அக்காலத்தில் இந்த கல்லூரிகளை ஆரம்பித்த போது போட்ட சட்டங்கள் தான் இன்றும் .
    இங்கு படித்து வெளி வரும் மாணவர்களில் பார் சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலைக்காக வரும் போது .சிறையில் இருந்து மீண்டு வந்த ஒரு உணர்வுடன் இருக்கும் அதே வேலையில் உட்டன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் எப்படி பழகுவது என்று கூட தெரியாமல் குழம்பிக் கிடக்கும் நிலை அவர்களுக்கு ஏர்படுகிறது . மற்ற கல்லூரிகளில் படித்து விட்டு வரும் மற்றவர்களுக்கும் இவரகளுக்கும் நிறைய வித்தியாசங்கள், முரண்பாடுகள் வருகின்றன .
    மாணவ மாணவியரை பிரிவு படுத்தாமல் நட்ப்போடு பழக விட்டால் உருவாகும் சமுதாயம் ஆணாதிக்கத் திமிர் , பெண்ணடிமைத்தனம் போன்றவை இல்லாமல் இருக்கும் என்பது உறுதி .

    பின் குறிப்பு :

    அந்த கல்லூரியில் தான் நான் படித்தேன் .

  20. கல்விக் கொள்ளையன் ஜே.பி.ஆர். கல்லூரியான சத்தியபாமா பொறியியல் கல்லூரியில் நடக்கும் இன்னொரு கொடுமை இது ..

    அடுத்த செமஸ்ட்டருக்கான ஃபீசைக் கட்டினால தான் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும் . நம்மால் முடியவே இல்லை என்று கடைசியில் போய் கூறினால் பரீட்ச்சை ஆரம்பித்து ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ஹால் டிக்கெட் கொடுத்தனுப்புவார்கள். அடுத்த செமஸ்டரில் மதிப்பெண் பட்டியல் வந்த பிறகு இண்டெர்னெட்டில் வெளியிடப்படும் மதிப்பெண் பட்டியலில் உங்கள் பெயர் இருக்காது. நீங்கள் ஃபீஸ் கட்டிய பிறகு தான் உங்கள் தேர்ச்சி பற்றி கூறுவார்கள்.

  21. இலங்கை அகதி என்பதால் உயர் கல்வி மறுக்கப்படும் சோகம்!–http://inioru.com/?p=14116
    –இலங்கை அகதிகள் என்பதால் அல்ல,”தமிழ்நாட்டிலேயே” குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எவ்வளவோ உரிமைகள் மறுக்கப்பட்டு,கல்லூரி வாசல்களில் துரத்தி அடிக்கப்படுகிறார்கள்!(சந்தனக்கடத்தல் வீரப்பனின் அப்பாவி மகள்கள் இதற்கு உதாரணம்)!.
    நெடுமாறன்,திருமாவளவன்,சீமான் போன்றோர்கள்…முதலில் தமிழகத்தை சேர்ந்த பிள்ளைகளின் எதிகாலத்தில் கவனம் செலுத்தவேண்டும்.”இந்திய எதிர்ப்புணர்வு” என்பதற்கு முதலில் ஒட்டு மொத்த இலங்கையரிடமிருந்து(பிரபாகன் – பிரேமதாஸா,குமரன் பத்மநாதன் – மகிந்த ராஜ பக்ஷே) சரியான விளக்கங்கள் பெறப்படவேண்டும்!.”வன்னி மக்கள்” போன்று இலங்கை மக்களுக்கு, அமைதியான நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை! ஆனால்,அது “தமிழ் நாடு” என்ற இந்தியாவின் ஒரு சாதாரண மாநிலத்தை “அவமானப்படுத்தி(எதிபாரத வகையில், இலங்கையரின் இன்னும் புரிந்து கொள்ளப்படாத “உள்ளக காழ்ப்புணர்வால்”) பெறப்படும் வெற்றியாக,பழிவாங்கும் படலமாக(இந்திய “ரா” என்று கருதி) அமைந்து விடக்கூடாது!.

  22. This is nothing but Brahminism. Most of this colleges are run by Brahmins. That is why this atrocities. Government should not allow Brahmins to run colleges

Leave a Reply to நற்றமிழன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க