19 வயது ஆஷா, சைனி (saini) எனும் சாதியைச் சேர்ந்தவர். இந்த சாதியை விட படிக்கட்டில் கீழே இருக்கும் ஜாதவ் சாதியைச் சேர்ந்தவர் யோகேஷ். பெற்றோரை இழந்த இந்த 21 வயது இளைஞர் தனது அக்கா வீட்டில் தங்கி ஒரு பழைய மாருதி காரை வைத்து வாடகை ஓட்டியாக காலத்தை கழித்து வந்தார். டெல்லியின் புறநகர் ஒன்றில் வசிக்கும் இருவரும் பழகி பின்னர் காதலித்து வந்தனர். இது அரசல் புரசலாக ஆஷா வீட்டில் தெரிய வந்ததும் வழக்கம் போல பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.
ஆஷா வீட்டினர் அவளைக் கண்டித்ததோடு, யோகேஷையும் அவனது அக்கா வீட்டிற்கு சென்று எச்சரித்திருக்கின்றனர். சாதி வெறியோடு, ஒரு வாடகை கார் ஓட்டுனரோடு காதலா என்ற வர்க்க வெறுப்பும் சேர்ந்து அந்த பெண் வீட்டினரது நடவடிக்கைகளை தீர்மானித்திருக்கிறது. ஆனாலும் ஆதிக்க சாதியின் கௌரவத்திற்கு அந்த இளையோரின் காதல் கட்டுப்படவில்லை.
அவர்கள் தொடர்ந்து சந்திப்பதும், தொலை பேசியில் உரையாடுவதும் தொடர்கிறது. இடையில் ஆஷாவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கின்றனர். இருந்தும் ஆஷா தனது காதலை துறக்கத் தயாரில்லை. இனி அவளை பணிய வைப்பது எப்படி?
கடந்த ஞாயிறு இரவு யோகேஷைத் தொடர்பு கொண்ட ஆஷாவின் தாய் அவனை நேரில் வருமாறும், பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளலாமென்றும் கூறுகிறார். இரவு சாப்பாட்டை முழுவதும் சாப்பிடாமல் ஆஷா தங்கியிருந்த அவளது தாய்மாமன் ஓம் பிரகாஷ் வீட்டிற்கு அவன் செல்கிறான். அங்கே ஆஷாவின் உறவினரான ஆண்கள் இருந்திருக்கின்றனர்.
காதலர்கள் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்படுகின்றனர். அலறல் சத்தம் கேட்டு அருகாமை வீட்டிலிருந்தோர் விசாரிக்க ” இது எங்கள் குடும்ப விவகாரம், யாரும் தலையிட வேண்டாம்” என்ற பதில் வந்திருக்கிறது.
விடிந்து பார்த்தால் வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு யோகேஷின் கார் வெளியே அனாதையாக நின்றிருக்கிறது. பின்னர் போலீஸ் வந்து கதவை உடைத்து பார்த்தால் காதலர்களின் பிணங்கள்!
____________________________________________
இதே டெல்லியில் பிசினஸ் ஸ்டாண்டர்ட் தினசரியில் வேலை பார்த்து வந்த பத்திரிகையாளரான நிருபமா மே மாத ஆரம்பத்தில் இதே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டதை உங்களில் சிலர் படித்திருக்கலாம்.
பார்ப்பன சாதியைச் சேர்ந்த நிருபமா ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவள். தந்தை வங்கி மேலாளர். சகோதரர்கள் இருவர் வருமான வரித்துறை அதிகாரியாகவும், முனைவர் ஆய்வு படிப்பு படிப்பவராவும் இருக்கிறார்கள். டெல்லியைச் சேர்ந்த பிரபலமான ஊடக கல்லூரியில் படித்த நிருபமா தனது வகுப்புத் தோழனான ரஞ்சனை காதலிக்கிறாள். ரஞ்சன் பீகாரைச் சேர்ந்தவர், கேஷ்த்தியா சாதியைச் சேர்ந்தவர். இந்த சாதியும் ஆதிக்க சாதிதான் என்றாலும் பார்ப்பனர்களை விட கீழ்தான் என்பதை விளக்கத் தேவையில்லை.
விடுமுறைக்காக பெற்றோர் வீடு வந்த நிருபமா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக போலீசுக்கு தகவல் வருகிறது. பின்னர் சவப்பரிசோதனை அறிக்கையின் படி அவள் தலையணையால் மூச்சுத்திணற கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கூடவே அவள் மூன்று மாத கர்ப்பிணி என்ற விசயமும் தெரிய வருகிறது. ஒருவேளை அவள் கர்ப்பமில்லாமல் இருந்திருந்தால் இந்தக் கொலை கொஞ்சம் தள்ளிப் போயிருக்கலாம்.
பார்ப்பனப் பெண்ணின் வயிற்றில் தரமற்ற சாதியின் கரு உருவாயிருப்பதை அந்த பார்ப்பன வெறியர்கள் விரும்பவில்லை. கொல்லப்படுவதற்கு முன்னர் அவள் தனது காதலனுடன் தொலைபேசியில் அழுது அரற்றியிருக்கிறாள். செய்வதறியாத ரஞ்சனும் கதறி அழுதிருக்கிறான். பின்னர் சகோதரர்களும் அவர்களது நண்பர்களும் நிருபமாவை கொன்றிருக்கலாம். தற்போது நிருபமாவின் தாயார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
___________________________________________
வட இந்தியாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே சாதியின் ‘கௌரவத்திற்காக’ இப்படி இளம் காதலர்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். இந்தி பேசும் மாநிலங்களில் இந்த சாதிவெறிக் கௌரவத்தின் வீச்சு அதிகம். ஆண்டு தோறும் ஹானர் கில்லிங் எனப்படும் இந்த கௌரவக் கொலைகள் அதிகரித்தே வருகின்றன. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லை.
வேலை வாய்ப்பும், நகரமயமாக்கமும், படிப்பும் எல்லாம் சேர்ந்து ஆணும், பெண்ணும் பழகுவதற்கு நிறைய வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறது. அவ்வகையில் பார்ப்பன இந்து மதம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை இந்த புதிய தலைமுறையினர் காதலின் மூலம் மீறுகின்றனர். அந்த மீறலின் அளவுக்கேற்ப காதலர்கள் தண்டிக்கப்படுகின்றனர்.
முக்கியமாக பெண் ‘உயர்ந்த’ சாதியாகவும், ஆண் ‘தாழ்ந்த’ சாதியாகவும் இருந்தால் இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கண்டிப்பாக வன்முறையை மேற்கொள்கின்றன. பண்டைய இனக்குழுக்களின் கௌரவமாக பெண்ணைக் கருதுவதும், அவளது இரத்தத்தில் வேற்று இனம் கலந்து விடக்கூடாது என்ற ஆதிகாலக் காட்டுமிராண்டித்தனமும் இன்றும் தொடர்கிறது.
நிருபமா பேஸ்புக்கில் தனது அரசியல் கருத்துக்களையும், தனிப்பட்ட விசயங்களையும் பகிர்ந்து வந்தாள். ஊடக படிப்பு படிக்கும் போதே வேலைக்கு தெரிவு செய்யப்பட்டாள். குடும்பத்திலும் படித்தவர்கள்தான் இருக்கிறார்கள். அதில் ஒரு சகோதரர் உயிரியில் தொடர்பான முனைவர் ஆய்வு செய்து வந்தார். எனினும் இந்த படிப்பும், நவீன தொழில்நுட்பங்களும் என்ன மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது?
இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள இந்த ஆதிக்கசாதியினரின் அணிவகுப்பில்தான் பாரதிய ஜனதா தனது வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிறது. காதலர் தினத்திற்கு இந்துமதவெறியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், காதலித்த ‘குற்றத்திற்காக’ காதலர்கள் கொலை செய்யப்படுவதும் வேறு வேறல்ல.
நிருபமா கொலை செய்யப்பட்டாலும் அவளது தந்தை வங்கி மேலாளராக பணியாற்றுபவர், தொலைக்காட்சி நேர்காணலில் சாதி மாறி காதலிப்பது தவறு என்று பச்சையாக பேசுகிறார். இத்தகைய பார்ப்பன ‘மேல்சாதி’ வெறியர்கள்தான் அதிகார வலைப்பின்னலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால் அன்றாட அரசியல் நடவடிக்கைகளில் இவர்கள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை எப்படி நடத்துவார்கள்?
இளைய சமூகம் இணையம், செல்பேசி, ஷாப்பிங்மால் என்பதை மட்டும் நாகரிகத்தின் அளவுகோலாக வைத்து சாரமற்ற ஜடங்களாக உலாவருகிறது. அதனாலேயே காதலிப்பதில் இருக்கும் கவர்ச்சி அதற்கு தடையாக இருக்கும் பார்ப்பனிய சாதியமைப்பின் இழிவை எதிர்ப்பதில் இருப்பதில்லை. நிருபமாவிற்கும், ஆஷாவுக்கும் அத்தகைய பார்வை கொண்ட நட்பு வட்டம் இருந்திருந்தால் இந்தப் பாதக கொலைகளை தடுத்தி நிறுத்தியிருக்கலாம். ஆனால் இல்லையே?
பதிவுலகில் சாதியை வலிந்து எழுதுவதாக வினவின் மேல் சினம் கொள்ளும் கனவான்களின் கவனத்திற்கு இந்த செய்திகளை காணிக்கையாக்குகிறோம்.
தொடர்புடைய பதிவுகள்
- வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள்!
- தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!
- என்று மடியும் இந்த அடிமையின் மோகம் ?
- பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்?
- கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட் !!
- சனிக்கிழமை கவிதைகள் – 9
- காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா, அரிவாளா?
- தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?
- தலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை!!
- சுந்தரி அக்காவும், பதிவர்கள் அறியா கோவையும்!
- மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!
- தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!
- இந்து மதம் கேட்ட நரபலி !
- புவனேசுவரி: முக்குலத்தோரின் புதிய வீராங்கனை !!
- ஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்!
- பர்தாவின் ‘நற்குடியும்’, அய்யப்பனின் ஆணாதிக்கமும், பதிவுலகின் யோக்கியதையும்!!
- பஞ்சாப் : தாழ்த்தப்பட்டோரின் கலகம்!!
- பண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம் !
- சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !
- சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!
- பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!
- பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!
- தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!
- ஆனந்த விகடனின் சாதி வெறி !
- கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி
- அமெரிக்காவில் ஒரு அம்பியின் சாதிவெறி !
- சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி
பின்னூட்டங்களின் எண்ணிக்கைகளை கூட்டிவிடும் வகையில் அமைந்துள்ள கட்டுரை. இந்த மாதிரியான கொடுமை எல்லா உயர் ஜாதிகளிலும் இருக்கு வினவு. உங்களுக்கு ஏன் பார்பனன் என்ற சொல் மட்டும் விரல் நுனியில் சுலபமாக வருகிறது? என்ன காரணம்.? எதோ கோளாறு இருக்குன்னு நெனைக்குறேன்.
பார்பனன் என்பது சாதியில்ல, அய்யர் ,அய்யங்கார் என்பதே சாதி, பார்பனியம் வர்ணாசிரம அடுக்கை குறிக்கவும் பயன்படும் சொல், அதில் மேல் படிக்கட்டில் அமர்ந்திருப்பது குடுமிகள், படிப்படியாக கீழே ஒவ்வொரு சாதியாக வருகிறது, எவரொருவர் தான் இந்த சாதி என கூறி கொள்கிறாரோ, அவர் அந்த பார்பனீய படிக்கட்டில் அமர்ந்திருக்கிறார் என அர்த்தம் ஆகிறது, ஆக அவரும் பார்பனன் தான்!, பார்பனீயம் பிறப்பால் வருவதல்ல!, திமிரால் வருவது!
வால்பையா, பொதுவாக ஜாதீயம் என்று கூற கற்றுக்கொள்ளுங்கள்.
பார்ப்பான் என்றால் அது ஒரு ஜாதியை தான் குறிக்கும். புது விளக்கம் தருவது உங்கள் குறிப்பிட்ட ஜாதி விரோதபோக்கை தான் குறிக்கின்றது. என்றுதான் திருந்தபோகின்றீகளோ. நடத்துங்க.
பார்பான் என்றால் குறிப்பிட்ட சாதியை எப்படி குறிக்கும், அய்யர், அய்யங்கார் என்பதெல்லாம் என்ன? நீங்களே ஒரு விளக்கம் கொடுத்துகிட்டா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும், திருந்துவது பற்றி நீங்க சொல்வது உங்களுக்கே கேலிகூத்தா தெரியல!
நாங்க ஜாதியம்னு சொல்ல மாட்டோம்… ஏன் சொல்லனும்???? நீங்க ”பார்ப்பனியம்”ங்கற வார்த்தைக்கு பழக கற்றுக்கொள்ளுங்கள் .
பழக்கத மாத்தமுடியாது அண்ணே. ஜாதி அப்படிங்கற வார்த்தை அப்படி ஒரு பெரிய கடக்கால் போட்டு ஒக்கதுகுனுகீது. வேணுமுன்னா vote போட்டு majority வசிக்கலாம்அண்ணே.
திட்டுவதற்கு “பார்பனீயம்” வார்த்தை நல்லாருக்கா? ஜாதீயம் நல்லாருக்கா? உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். நான் சொல்லுறது ரொம்ப பழசு, நீங்க உடுறது புதுசு.
அண்ணே ஓட்டெடுப்பு நடத்துனா உங்களுக்கு டெப்பாசிட் கூட கிடைக்காது… எதுக்கு சவடால்..???
அண்ணே கீஈஈஈழே உங்களுக்காக பர்ப்பனியம்னா என்னன்னு வியாக்கியானம் கொடுத்திருக்கேன்,, அங்க வாங்கண்ணே…
‘அவ்வை ஜாதி இரண்டொழிய வேறில்லை’ என்றாரே! ஒரு வேளை பார்ப்பானுக்கு பயந்து பம்மிவிட்டாரோ?! பார்பனீயம் திமிரால் வருவது என வால்பையன் வக்காலத்து வாங்கி, தானும் ஒரு பார்ப்பான் தான் என சாதிப்பார். பிறகு ‘குடுமி’ யை பிடித்துக்கொண்டு மீசையை முறுக்கி சர்ச்சையை தொடருங்கள்! அவர் தாடியை சொறிந்துகொண்டு யோசிக்கட்டும்!! வாழ்த்துக்கள்!!!
///பார்பனியம் வர்ணாசிரம அடுக்கை குறிக்கவும் பயன்படும் சொல், அவர் அவர் அந்த பார்பனீய படிக்கட்டில் அமர்ந்திருக்கிறார் என அர்த்தம்///
நல்ல உதாரணம். முதல் தடவையாக இது மாதிர் சாதாரன் மனிதனுக்கு புரியும் படியான நல்ல உதாரணம். இது உங்களுடய சொந்த சரக்கா?
அப்படி என்றால் Great! Good example.
அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி !?
//நல்ல உதாரணம். முதல் தடவையாக இது மாதிர் சாதாரன் மனிதனுக்கு புரியும் படியான நல்ல உதாரணம். இது உங்களுடய சொந்த சரக்கா?//
கல்வியறிவு குறைவு என்பதால், எதையும் தெளிவாக புரியும் வரை நோண்டி கொண்டிருப்பது என் வழக்கம், இதை எனக்கு விளக்கியது கல்வெட்டு!
எதையும் பொதுமை படுத்த முடியாது. எனது பிராமன நண்பர்கள் மற்ற ஜாதி ஆண் பெண்களுடன் திருமணம் (பெற்றோர் சம்மதம் உடன்) நடந்தது.
காதல் படம் ஒரு உண்மை கதை ..
பல மக்கள் பார்ப்பனியம் என்ற தலைப்பில் காலம் ஓட்டிகொண்டு இருகிறர்கள்.
தாங்கள் சொல்லும் ஆதிக்க சாதி நண்பருடன் பேசி கொண்டிருந்தேன். அவர் ஒரு கருத்தை சொன்னார். சாதி மாறி திருமணம் செய்யும் போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மிகவும் அறிவாளிகளாக இருப்பதாக கூறினார். அவர் மொழியில் ( cross breed children). குறிப்பாக ஆதிக்க சாதியில்
In India, it’s a common problemhe among all the caste. What is the purpose of this heading?. I think you are mentally sick.
பிரச்சனையை கண்டு கோபமடைந்தால் மெண்டலி சிக்கா! தக்காளி சோத்துக்கு உப்பு போட்டு சாப்பிடுற பழக்கம் இருக்கா, இல்லையா, அடிபட்டு கிடப்பவனை பார்த்தும் பாராமலும் செல்லும் குடுமி வகையறா பேச்சு தான் இப்படி இருக்கும்!
______ வால்பையா, நீ எத்தனை அடிபட்டு கிடந்தவர்களை காப்பாற்றி இருக்கிறாய்?
யார் மன நோயாளி
கொடுமை கொடுமை!
ஒரு மசுத்துக்கும் ஆகதா சாதியை கட்டிகிட்டு ஏன் தான் இப்படி அழுவுறானுங்களோ!
ஒரு மசுத்துக்கும் ஆகாத சாதிய ஏன் திட்டி உன் நேரத்த வீணாக்கற.
இடுகை போடா விட்டாலும் வினவை யாரும் மறக்க மாட்டாங்க. ரெண்டு நாளைக்கு ஒரு இடுகை போடணுங்கிற நிர்ப்பந்தத்துல, எதையாவது போட்டா வினவோட நம்பகத்தன்மை கேள்விக்குறியாயிடும்.
இதில் எந்த செய்தியாவது பொய் அல்லது நம்பகம் இல்லையா ?????? என்ன நண்பரே
வினவு ஆழத்தில் பார்பனீயம் உள்ளது என்று சொல்கிறார்கள் ….அதற்க்கு சரியான தகல்வல்களை வைக்கிறார்கள் ……இதில் என்ன நம்பகத்தன்மை குறையும்
உண்மை வினவு . பார்பனீயம் ஒழிக்கப்படவேண்டும்
//பதிவுலகில் சாதியை வலிந்து எழுதுவதாக வினவின் மேல் சினம் கொள்ளும் கனவான்களின் கவனத்திற்கு இந்த செய்திகளை காணிக்கையாக்குகிறோம்.//
வழிமொழிகிறேன்
நிருபமா பற்றி என்னுடைய பதிவு http://vennirairavugal.blogspot.com/2010/05/blog-post_04.html
//நிருபமா கொலை செய்யப்பட்டாலும் அவளது தந்தை வங்கி மேலாளராக பணியாற்றுபவர், தொலைக்காட்சி நேர்காணலில் சாதி மாறி காதலிப்பது தவறு என்று பச்சையாக பேசுகிறார். இத்தகைய பார்ப்பன மேல்சாதி வெறியர்கள்தான் அதிகார வலைப்பின்னலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால் அன்றாட அரசியல் நடவடிக்கைகளில் இவர்கள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை எப்படி நடத்துவார்கள்?//
மிகவும் சரி
படித்தால் சாதி போய்விடும். என்பவர்கள் இந்த ‘படித்த’ மேதைகளை பற்றி என்ன சொல்ல வருகிறார்கள்? இட ஒதுக்கீடு கொடுத்தல் இந்திய இரண்டாக போய்விடும் என்று போராடிய மேட்டுக்குடி கும்பலின் கருத்தென்ன? இவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். இதன் பொருள் சம்மதமே! இவர்களை பேச வைக்க வேண்டும். இவர்களின் பேச்சிலிருந்து தான் சாதியின் ஆன்மாவை புரிந்து கொள்ள முடியும். பொதுவாக தமிழகத்திலும் இது போன்ற சாதி மாறிய காதல் திருமணங்கள் நடை பெறுகின்றன. குழந்தை பிறந்த பின்னோ அல்லது ஒருசில வருடங்கள் கழித்தோ இணைந்து விடுவது சத்தியமாக தமிழகத்தில் உள்ளது. இதற்கு காரணம் பெரியார் சிந்தனை தான் .
வினவும் இது போன்ற செய்திகளுடன் பார்பனீயம்,பாஜக,சாதி வெறி என்று கலந்து எத்தனை நாள்தான் எழுதுவார்.ம.க.இ.க இதையெல்லாம் அவுட் சோர்ஸ் செய்யக்கூடாதா.
சாதி,மதம் ,இனம், வர்க்கம் கடந்து காதலித்து மாண்ட அனைவருக்கும் எனது அஞ்சலி சாதி என்பது ஒருவிதமனநோய்,வர்க்கம்தான் அடிப்படை என்றாலும் இதுவும்கூட உண்மை.சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக உள்ளேன்.இது தலைமை அலுவலகம் மற்றும் தமிழ்நாடு,கேரளா,மகாராஷ்டிரா,ஆந்த்ராவில் கிளைகள் உள்ளது.நான் வேலை விசயமாக அடிக்கடி செல்வதுண்டு.பார்பனர்கள், இடைசாதியினர்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர்கள்,கிறிஸ்துவர்கள்,முஸ்லிம்கள் உட்பட அனைவரும் உள்ளார்கள் .சாதி மற்றும் உட்சாதி உட்பட கேட்ப்பார்கள்,சாதியை தெரிந்துகொள்ளாமல் இருக்கமுடியாது (பெண்கள் உட்பட ),சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பிரச்சனைதான்.அவர்களுக்கு கடவுள் மறுப்பு ,நாத்திகன் என்பதெல்லாம் தெரியாது.சாதியை சொல்லவில்லை என்றால் அவர்களே தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று முடிவுக்குவந்துவிடுவார்கள்,எப்பொழும் சாதிபார்த்துதான் பழுகுவார்கள், வேற்று சாதியினரோடு பேச மறுப்பார்கள் , ஒத்துழைப்பு கொடுக்கமாட்டார்கள் ,வேற்று சாதியினரோடு கள்ள உறவுகொல்வார்கள் திருமணம் மட்டும் சொந்த சாதியில் தான் செய்வார்கள்,இன்று காதல், கலப்பு திருமணம் என்பதே கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லலாம்.இப்படி அறிதினுமரிதாகாக நடக்கும் காதலை, காதலர்களை கொல்லும் கொடியவர்களுக்கு மரணதண்டனை விதிக்ககோரி போராடவேண்டும்.சொந்த சாதியில் திருமணம், நட்பு, உறவு ,கொடுக்கல் வாங்கல் உட்பட அனைத்து பழக்க, வழக்க, பண்பாடு ,கலாச்சார, நடைமுறைகளை மாற்றவேண்டும் அல்லது தடை செய்யவேண்டம .ஒரு புதிய உலகிற்குள் செல்லவேண்டும் என்பதே எனது நமது லட்சியம்,
கௌரவக் கொலைகள் அனைத்து சாதியிலும், மதத்திலும் தான் நடக்கிறது! இதற்கு பார்ப்பனனைத் திட்டுவதென்?
இங்க யாரு பார்பானை திட்டியது? கொடுத்திருக்கும் உதாரணங்களில் கூட பார்ப்பனர் தவிர வேறு ஒரு ஆதிக்க சாதி (சைனி) குறிப்பிட்டிருக்கே???
அப்படியா….”ரத்தம் குடிக்கும் பார்பனீயம் மற்றும் சைனீயம்” – அப்படின்னு தலைப்பை மாத்துங்க கேள்விகுறி அண்ணே.
என்னன்னே என்னையபோய் அண்ணன்னு சொல்லிகிட்டு… அமாம் புதுசா பிளாக் ஓப்பன் பண்ணியிருக்கீங்க.. அட்ரசு குடுக்கப்பிடாதா??? பார்பனியம்மின்னா அது சாதி இல்லேன்னே பௌத்தம், சமணம் மாதிரி அது ஒரு தத்துவம்!
பார்ப்பனியத்தை பின்பற்றுபவன் பெயர் என்ன? இந்நாட்டில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் பார்ப்பனீயம் தான் காரணமா? பார்ப்பனீய ஆணாதிக்கம் , பார்ப்பன கௌரவக் கொலைகள்,…..பார்த்து ! பழக்க தோஷத்தில், பார்ப்பன கம்யுனிஸ்ட், பார்ப்பன தி.க என்று எழுதி விடப் போகிறது! பார்ப்பன வினவு என்று விரைவில் பட்டம் கிடைக்க வாழ்த்துக்கள்!
சபாஷ், சரியான கேள்வி.
பார்பனீயம் ஒழிக
இங்கே விவாதிப்பவர்கள் வசதிக்காக
பார்ப்பானியம் என்றால் என்ன?
உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, பண்பாடு, கல்வி, அறிவு, சிந்தனை, பாராம்பரியம், பரம்பரை, குலம், இனம், மொழி, மதம், நிறம்… இன்னபிற இப்படி எந்தவொரு காரணிக்கொண்டும் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது, பேசுவது, எழுதுவது, நடைமுறையில் கடைபிடிப்பது, பிரச்சாரம் செய்வது, கலையின் ஊடாக பதிவு செய்வது, இன்னபிற செயல்களின் வழியாக சமூகத்தில் ஏற்ற, தாழ்வுகளை உண்டு பண்ணுவதும் அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்!
நன்றி பாரி.அரசு
அதாவது அண்ணே, இந்த பதிவின்படி, இப்போ உங்க செயலும், வாழ்வும் ஏன்? சுவாசமும் கூட பார்ப்பானியம்!. ஆனால் என் பாஷையில் நீங்கள் ஒரு பார்த்தீனியம்!! ( விளைநிலத்தில் ஊடுருவும் நச்சுப்பயிர் ) காண்க முன்னூட்டம் 1.1.1.6 All the best!!
தோழர் கே.கே (கேள்வி குறி) கொஞ்சம் சொந்த கருத்த எழுதறீங்களா ? இன்னும் எத்தன நாளைக்கு தான் இப்படி ஜல்லி அடிக்கப் போறீங்க ? நீங்களும் தான் லீனா மணிமேகலையை ……….என்று இழித்துரைத்தீர்கள் எனவே உங்களிடம் இருப்பதும் பார்ப்பனீய மனோபாவமே நியோ பிராமநிசம் தான்
ஏம்பா எழில் உனக்கு அரசியல் சமூக அறிவு இல்லையின்னு இன்னும் எத்தன் வாட்டி தான் நான் நிருபிக்கறது.. வெறுத்துபோச்சு 🙁 இப்போ நீங்க தமிழ் தேசியம் பேசுறீங்களே அது என்ன நீங்களா தென்னைமரத்துக்கு கீழ ஊசி முனையில தவம் செஞ்சு கண்டுபுடிச்சு பேட்டன்ட் வாங்கின கருத்தா… மத்தவங்க சொன்னா அது உங்களுக்கு ஏற்கத்தக்க வகையில இருந்தா அதை பின்பற்றவோ பிரச்சாரம் செய்வதோ உங்கள் உரிமை…. இனிமேல் இது போன்ற எல்கேஜி கேள்வி கேட்டு என்னை படுத்தாதீங்க…
அடுத்த்து லீனாவை……….என்று நான் கூறியதாக நீங்கள் சொல்வது …
பச்சைப்பொய் ! இதை உங்களால் நிரூபிக்க முடியுமா??? முடியாவிட்டால் பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள். நீருபித்தால் நான் கேட்கிறேன்!
எனது பின்னோட்டம் நீக்கப் பட்டுள்ளது உங்கள் மின்னஞ்சல் முகவரியை தாருங்கள் கே கே
“பார்பனியம்” – கண்டுபிடிச்சது பாரி.அரசு வா? சரிதான் விவாதிக்க வேண்டியதுதான். copyright வாங்கிருக்கார?
தமிழருக்கு தொல்காப்பியம் போல,
இஸ்லாமியருக்கு குரான் போல, பகுத்தறிவாளருக்கு பாரி அரசின் பதிவு.
இன்று முதல் பாரி அரசுக்கு “பார்ப்பானீயம் தெளிந்தார்” என்ற பட்டம் கொடுக்க பரிந்துரைக்கவும்.
///பதிவுலகில் சாதியை வலிந்து எழுதுவதாக வினவின் மேல் சினம் கொள்ளும் கனவான்களின் கவனத்திற்கு இந்த செய்திகளை காணிக்கையாக்குகிறோம்.///
நச்…
‘பார்ப்பானியம் என்றால் என்ன?
உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, பண்பாடு, கல்வி, அறிவு, சிந்தனை, பாராம்பரியம், பரம்பரை, குலம், இனம், மொழி, மதம், நிறம்… இன்னபிற இப்படி எந்தவொரு காரணிக்கொண்டும் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது, பேசுவது, எழுதுவது, நடைமுறையில் கடைபிடிப்பது, பிரச்சாரம் செய்வது, கலையின் ஊடாக பதிவு செய்வது, இன்னபிற செயல்களின் வழியாக சமூகத்தில் ஏற்ற, தாழ்வுகளை உண்டு பண்ணுவதும் அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்! ‘
அப்படியானால் அமெரிக்காவிலும் பார்பனியம் இருக்குதா.ஷியா,சன்னி முஸ்லீம்கள், அகமதியா முஸ்லீம்களை விலக்குகிறார்கள் அதுவும் பார்பனியமா.தலித் கிறித்துவர்கள் என்கிறார்களே அதுவும் பார்பனியமா. நிற வெறியும் பார்பனியமா,ஆணாதிக்கமும் பார்பனியமா.
அட மேதாவிகளா உலகத்தில் அப்படிப்பார்த்தால் கிட்டதட்ட எல்லா நாடுகளிலும் எதோ ஒரு வகையில் பார்பனியம் இருக்கிறது.அப்படியானால் அதற்கும் பார்பனருக்கு என்ன தொடர்பு. சிங்களவன உயர்ந்தவன் எனு நினைப்பதும்,தன்னுடைய மதம் தவிர பிற மதங்களை பின்பற்றுபவர்கள் கீழானவர்கள்/பாவிகள் என்பதும் பார்பனியம்.முதலாளித்துவமும் ஏற்றதாழ்வுகளை உண்டாக்குகிறது.அதுவும் பார்பனியம். யாரப்பா அந்த பாரி அரசு என்கிற அதி புத்திசாலி, பார்பனியம் உலகெங்கும் உள்ளது என்று கண்டுபிடித்த அறிவாளி.அப்படியானால் அதற்கும் பார்பனர் மட்டும் காரணம் இல்லைஎன்று நான் சொல்கிறேன், சரிதானா.
அன்பே சிவம் பட வசனம் போல் எனக்கு நீர பார்ப்பான்! உமக்கு நான் பார்ப்பான்!
என்ன ஆராய்ச்சி பார்பனீயத்தை காப்பற்ற. இப்படி குட்டைய குழப்பியே பொழப்பு நடக்குது போல. பார்ப்பனீயம் என்பது ஒரு ஹிந்து மத தத்துவம்(நாசிசம், பாசிசம் போன்ற ஒன்று) அதனால் தான் சாதியவாதிகளை அவ்வாறு குறிப்பிடுகிறோம். இதை கேள்விக்குறி ஏற்கெனவே ஒரு உலக கண்நோட்டத்தில் சொல்லியாச்சு. அதற்கு பிறகும் சும்மா அமெரிக்க அப்ரிகான்னு எதுக்கு பெனாத்தல். சரி அதையும் பார்பனீயம் என்று குறிப்பிட வேண்டும் என்று நீங்க பிரியப்பட்டால் go ahead feel free , எல்லா கன்றாவியும் ஒன்று தான். தன்மைகள் வேண்டுமானால் மாறலாம். மேலும் அதற்கு யாரும் இன்னும் கோப்பிரைட் வாங்கவில்லை.
மேலே பென் சொல்லியிருப்தற்கு மேல் இன்னும் சந்தேகம் இருந்தால் எழுதவும்… விவாதிக்கலாம்!!!
உங்களின் விளக்கம் புரிகிறது. நன்றி!
“இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது”
தோழர்,
அப்ப்டியென்றால் அமெரிக்காவில் இருக்கும் நிறவெறிக் கூட பார்ப்பனீயமா?
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைக் கடிதம்
ந.க.எண் 266873 / 74 / இ 2 நாள் ; 09 -02 -75 மேற்கண்ட தமிழக அரசு ஆணையின் படி பிள்ளைகளை பள்ளிகளில் சாதிப்பெயர் குறிப்பிடாமல் சேர்ப்போம். சாதி ஒழிய குரல் கொடுக்கும் அனைவரும் இதை செய்ய வேண்டும். குருசாமிமயில்வாகனன்.
சாதி எதிர்ப்பாளர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கும் காலமிது!
ஒன்று சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் தன் சாதியில் இத்தனை பேர்
எனக் கூறி கல்வி வேலை வாய்ப்பில் முன்னுரிமை கோரலாம்..
இரண்டு அரசியல் கட்சிகள் கூட்டணிக்கட்சியிடம் அதிக சீட்டுகள்
கேட்கலாம்…
[…] This post was mentioned on Twitter by வினவு, ravi srinivas. ravi srinivas said: https://www.vinavu.com/2010/06/15/delhi-honour-killing/ டெம்பிளேட் கவிதைகள் போல் (வினவின்) டெம்பிளேட் இடுகைகள் 🙂 […]
நீரே ஏதாவது வியாக்யானம் பண்ணிகிட்டு பார்ப்பனீயம் என்பது சரியல்ல… ஆஸ்திரேலியாவில நம்மாள அடிக்கிறான் வெள்ளக் காரன்… பிரிட்டன் டியூப் டிரையினில் சென்ற என் நண்பரை சில வெள்ளக்காரச் சீமான்கள் சீமாட்டிகள் சற்று வெறுப்பு கலந்து பார்த்ததாகச் சொன்னார்.. லண்டன் ஈத்ரூ விமான நிலயத்தில் வெள்ளையனுக்கும் நமக்கும் தனிதனி வழி இருக்குதாமே… நம்ம ஊர் தனிக் குவளை போல.. என்னத்தன பண்ண..
அவர்கள் ஆரியர்கள் ! வெள்ளை பார்ப்பனர்கள்! அரபு பார்ப்பனர்கள்! நீக்ரோ பார்ப்பனர்கள்!
ஆதிக்க சக்தியின் மறு பெயர் பார்பணீயம்
NAAN MARUKKIRENE
இத்தகைய செயல் வருந்ததக்கது
/பதிவுலகில் சாதியை வலிந்து எழுதுவதாக வினவின் மேல் சினம் கொள்ளும் கனவான்களின் கவனத்திற்கு இந்த செய்திகளை காணிக்கையாக்குகிறோம்.//
வழிமொழிகிறேன்
இதே “கௌரவ கொலைகள் பற்றிய எனது பதிவு”
நீதிமன்றத்தை மிரட்டும் சாதி பஞ்சாயத்துகள் – http://www.natramizhan.wordpress.com
பார்ப்பனனுக்குப் பரிந்து கொண்டு கருத்துரையிடும் தோழர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்த நினைப்பவர்களே. நிச்சயம் தான் என்ற எண்ணம் மேலோங்கி நிற்பவர்க்ள் என்பதுதான் உண்மை. பெரியார் உட்பட அனைவரும் பார்ப்பனீயத்தை எதிர்க்க முக்கிய காரணம் அங்குதான் ஆளுமையும், அதிகாரமும் நிறைந்திருக்கிறது. பர்ப்பனீய எண்ணம் கொண்ட எவனும் மற்ற மக்களை மனிதனாகக் கூட நினைத்துப் பார்க்காத மடையர்கள். தான் தான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற எண்ணம் மிக்க முட்டாள் மாக்கள் நிறைந்த இடம்தான் அந்தப் பார்ப்பனீயம். இன்றும் கூட ஆடுதுறையில் இருக்கும் ஒரு மடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் பார்ப்பனர்கள் அங்கு அன்னதானம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் உண்ண ஒரு இடம் மற்றவர்கள் உண்ண ஒரு இடம் என அமைத்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவனுங்கல்லாம் என்ன பெரிய மசு……….?
சபாஸ் புலவன் புலிகேசி. நச் கருத்துக்ள்
இது எந்த பெரியார் தாசன் ? அப்துல்லா வா ?
வருத்தமான செய்திகள்!!! “இந்தக் காலத்தில் யார் ஜாதி எல்லாம் பார்க்கின்றார்கள்” என்று சொல்லும் அடி முட்டாள்களை என்ன செய்வது?
” தண்ட சோறுண்ணும் பார்ப்பான் ” என்று நமக்கு சொல்லி தந்தவன் பாரதி.
தன்னுடைய சாதியை தாழ்த்தும் துணிவு தான் சாதியை ஒழிக்க விரும்புபவர்களின் முதல் கடமையாக இருந்க்க வேண்டும்.இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் சாதியை ஒழிக்க வேண்டும் என்றவர் அம்பேத்கார் .
இந்தியவில் உள்ள அத்தனை
ஜாதியும் ஒழிக!! ஒழிக!!! ஒழிக!!!!!!!!!
தனி மடல்
“இத்தகைய பார்ப்பன மேல்சாதி வெறியர்கள்தான் ” – மேல்சாதி என இனி குறிப்பிட மாட்டோம் என ஏற்கனவே கூறியிருந்தீர்கள். திருத்துங்கள்.
பார்ப்பன சாதிவெறி கலாச்சாரத்தை ப்ளாக்கில் எழுதி வெளிப்படுத்தி வரும் வினவுக்கு வாழ்த்துக்கள் !தொடரட்டும்