Tuesday, May 30, 2023
முகப்புநீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா?
Array

நீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா?

-

vote-012சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆறு வழக்குரைஞர்கள் 9.6.10 முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருந்து போராடி வருகின்றனர். இளம் வழக்குரைஞர்களின் முன்முயற்சியினால் உந்தித் தள்ளப்பட்டிருக்கம் இப்போராட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின்(ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) வழக்குரைஞர்கள் முக்கியப் பாத்திரம் ஆற்றி வருகின்றனர்.

செம்மொழி மாநாடு என்ற நல்ல காரியம் நடக்கும்போது, அபசகுனமாக இப்படிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த திமுக அரசு, முடிந்த வரை இப்பிரச்சினையை இருட்டடிப்பு செய்யும் பொருட்டு புறக்கணித்து. அதிகாரபூர்வ வழக்குரைஞர் சங்கங்களும் இதனைப் புறக்கணித்தன.

மதுரையில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் அதாரிட்டியான தென்மாநில முதல்வர் அழகிரி, இப்பிரச்சினையை 15 நாளில் முடித்துத் தருவதாகவும், போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படியும் நேற்று வழக்குரைஞர்களிடம் கூறியிருக்கிறார். தன் பேச்சைத் தட்டுவதற்கு மதுரையில் ஆள் கிடையாது என்ற நம்பிக்கையில் பழரசத்தை எடுத்துக் கொண்டு உண்ணாவிரதப் பந்தலை நோக்கி காரில் கிளம்பியும் விட்டார். ஆனால் வக்கீல்கள் மசிவதாக இல்லை. “அண்ணன் 15 நாளில் முடிப்பதற்கு இது ரியல் எஸ்டேட் பிரச்சினை இல்லை. இதற்கு பதில் சொல்லும் அதிகாரம் கொண்டவர்கள் பதில் சொல்லவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்” என்று முடிவெடுத்து விட்டனர்.

வேலை மெனக்கெட்டு கிளம்பி வந்த அண்ணன் பந்தலுக்கு வந்து ஒரு வாழ்த்துரை வழங்கிவிட்டுப் போயிருக்கலாம். ஆங்கிலம் தெரியாத அண்ணன் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச முடியவில்லை. நீதிமன்றத்தில் தமிழ் என்ற கோரிக்கை கிட்டத்தட்ட அண்ணனின் பிரச்சினையுடன் நேரடியாகத் தொடர்புள்ளதுதான். அதற்காகவாவது வாழ்த்திவிட்டுப்  போயிருக்கலாம். ஆனால், அண்ணன் தலையிட்டால் பிரச்சினை செட்டில் ஆகவேண்டுமே. அதனால்தான் திரும்பிப் போய்விட்டார்.

இன்றைக்கு ஜெ களத்தில் குதித்துவிட்டார். செம்மொழி மாநாடு எனும் பிரம்மாண்ட கேளிக்கையை வைத்து கருணாநிதி ஆதாயம் அடைவதை விரும்பாத ஜெயலலிதா, வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரித்து இவர் ஏதோ தமிழுக்கு ஆட்சி மொழி தகுதியை எதிர்காலத்தில் வாங்கித் தருவது போல காட்டிக் கொண்டிருக்கிறார். இத்தனை காலமும் கருணாநிதியின் நிழலில் இளைப்பாறி தமிழின் உணர்ச்சியை மட்டும் விற்பனை செய்து வந்த வைகோவும் நிச்சயமாய் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கிறார்.

கோவை மாநாட்டில் இந்த வழக்கறிஞர் போராட்டம் ஒரு கரும்புள்ளியாய் விழுந்துவிடக்கூடாது என்று துடிக்கும் கருணாநிதி வழக்கம் போல ஜெயலலிதாவின் அறிக்கைக்கு லாவணியாக ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதிலிருந்து உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வராமல் இருப்பதற்கு தி.மு.க அரசு என்னென்ன முயற்சிகளை கிடப்பில் போட்டது என்ற உண்மை நமக்கு கிடைக்கிறது. சொந்த செலவில் சூன்யம்.

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழும் இருக்கவேண்டுமென்பது தி.மு.கவின் திட்டவட்டமான கொள்கையாம். இதற்காக பலமுறை கழக பொது குழுக்களிலும், செயற்குழுவிலும் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்களாம். நீதிமன்றங்களிலும் தமிழ் இடம்பெற வேண்டுமென்று வாதாடி வந்திருக்கிறார்களாம். இந்த ‘வீர’ வரலாற்றின் தொகுப்பை சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் அறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறாராம்.

தமிழுக்காக கழகம் போராடியிருக்கும் அந்த ‘வீர’ வரலாற்றின் காலம் தி.மு.க ஆட்சியைப் கைப்பற்றியதிலிருந்தோ, இல்லை கருணாநிதி பொதுவாழ்க்கைக்கு வந்ததிலிருந்தோ தொடங்கியிருக்குமென்று நீங்கள் நினைத்தால் தவறு. அது வெறும் 21ஆம் நூற்றாண்டுச் சமாச்சாரம்தான்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் தமிழ்மன்றம் சார்பாக 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு ரிட் மனு தமிழுக்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அரசியலைமைப்புச் சட்டம், பிரிவு 348(2)இன் கீழ் தலையிட முடியாது என்று தீர்ப்பளிக்கின்றனர். அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு இதை கிடப்பில் போட்டது என்று சரியாகவே சொல்லும் கருணாநிதி அவர் ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தார்?

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் வேண்டுமென்று 6.12.2006 அன்று சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கருணாநிதி அரசால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பிறகு இந்த தீர்மானத்திற்கு கவர்னரின் பரிந்துரையையும், சென்னை உயர்நீதிமன்றத்தின் கொள்கை ரீதியிலான ஒப்புதலையும் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்களாம். ஏற்கனவே அரசியலைமைப்புச் சட்டத்தின் கீழ் இதைச் செய்யமுடியாது என்று கைவிரித்த நீதிபதிகள் இப்போது எந்த கொள்கையளவில் இதை ஆதரித்தார்கள் என்பது மேலிடத்து இரகசியமா இல்லை நடைமுறைக்கு வராத வெத்து வேட்டு என்ற மெத்தனமா தெரியவில்லை.

தி.மு.க அரசுக்கு கடிதம் மூலம் பதில் அளித்த மத்திய அரசு “தமிழக அரசின் முன் மொழிவுகள் உச்சநீதிமன்றத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் வட்டார மொழியை அறிமுகம் செய்வது தற்போதைக்கு இயலாத ஒன்று என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கருதுவதாகவும்” தெரிவித்துள்ளது.

2006க்குப் பின் 2 ஆண்டுகள் திமுக அமைச்சர் வெங்கடபதி மத்திய சட்டத்துறை இணை அமைச்சராக இருந்திருக்கிறார். அவர் என்ன செய்தார்? பீகார், உ.பி முதலான மாநிலங்களில் மட்டும் இந்தி நீதிமன்ற மொழியாக இருப்பதெப்படி என்ற கேள்வியை அவர் எழுப்பினாரா? தமிழக சட்ட மேலவைக்கு 4 நாளில் மத்திய அரசின் ஒப்புதல் பெற முடிந்த ராஜதந்திரி கருணாநிதி, அந்த ராஜதந்திரத்தை உயர்நீதி மன்றத்தில் தமிழைக் கொண்டுவருவதற்கு காட்டாதது ஏன்? மாவட்ட நீதிமன்றம் வரையில் அனுமதிக்கப்படும் தமிழ் மாநில நீதிமன்றமான உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படாத்து ஏன்? மாவட்டம் எல்லாம் சேர்ந்த்துதானே மாநிலம்? பொது அறிவுக்குப் புரியும் இந்தக் கேள்விகள் கூட திமுக அரசின் மண்டையில் உரைக்காத்து ஏன்?

தமிழ் மற்றும் மற்றைய தேசிய மொழிகளை சூத்திர பாஷை என்று எக்காளமிட்டு அடிமைப்படுத்திய பார்ப்பனியத்தின் அன்றைய வரலாற்றுக்கும், உச்சநீதிமன்றத்தின் இன்றைய வரலாற்றுக்கும் என்ன வேறுபாடு? ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான் முதலான நாடுகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் தாய்மொழி பேசும் மக்களைக் கொண்ட நாட்டில் அந்த மொழிகளை வெறும் வட்டார மொழி என்றும், சாத்தியமில்லை என்றும் கருதுவது வெறும் மேட்டிமைத்தனம் மட்டுமல்ல அது பார்ப்பனிய இந்திய தேசியத்தின் அடக்குமுறையும் ஆகும்.

இதெல்லாம் தெரியாத அளவுக்கு கருணாநிதி ஒன்றும் மக்கு இல்லை. எல்லாம் அறிந்தவர். வாரிசுகளுக்காக வளமான அமைச்சர் பதவிகளை கூசாமல் நேரில் சென்று கேட்டுப் பெற்றவர் தமிழுக்காக வெறும் கடித விளையாட்டுக்களை நடத்தியதையே சாதனையாக அறிவிக்க வேண்டுமென்றால் தமிழன் இளித்தவாயன் என்பதன்றி வேறென்ன? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாத்தியமில்லை என்று மத்திய அரசும் கழண்டு கொள்ள, விட்டது தொல்லை என்று கருணாநிதியும் விட்டுவிட்டார்.

சுவரே இல்லாத வீட்டுக்க்கு கூரையை தங்கத்தில் வேயலாமா, வெள்ளியில் வேயலாமா என்ற கதையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை கொண்டு வருவதற்கான உள்கட்டுமான பணிகளுக்காக தமிழக அரசு ஒதுக்க விரும்பியது 32 கோடியா, 22 கோடியா என்று ஜெயலலிதாவுடன் அறிக்கைப் போர் நடத்துகின்றார் கருணாநிதி. தமிழை கொண்டுவரமுடியாது என்று ஆனபிறகு அதற்கு எத்தனை கோடி ஒதுக்கித்தான் என்ன பயன்?

பிரச்சினை நடக்கும் நிகழ்காலத்தில் நீங்கள் சண்டையே போடவில்லை என்றால் 65இல் தமிழுக்காக பாளையங்கோட்டை தனிமைச்சிறையில் பல்லி, கரப்புகளுடன் அவதிப்பட்டேன் என்று இறந்த காலத்திற்கு பயணிக்கிறார் கருணாநிதி. சிறையை விடுங்கள், பல்லி, கரப்பு, கொசுக்களுடன்தான் இன்றும் பெரும்பான்மையான மக்கள் வீடுகளில் சாதாரணமாக வாழ்கிறார்கள். பாம்புக்கடிக்கும், நாய்க்கடிக்கும் மருந்தின்றி அரசு மருத்துவமனைகளில் அவதிப்படுகிறார்கள். ஆனால் அதையெல்லாம் தியாகமாக சித்தரிப்பதற்கு அவர்களெல்லாம் கோபாலபுரத்தில் பிறக்கவில்லை, என்ன செய்வது?

உயர்நீதிமன்றத்தில் கூட தமிழை கொண்டுவருவதற்கு இயலவில்லை எனும் போது 500 கோடி ரூபாய்களை இறைத்து செம்மொழி மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? கடந்த ஏழு, எட்டுமாதங்களாக முழு அரசு எந்திரமும் இந்த மாநாட்டுப் பணிக்காக மும்முரமாக பணியாற்றி வருகிறது.

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் ஏற்வில்லை. மேட்டூரில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. போலி மருந்து பிரச்சினை முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்காக அளிக்கப்படும் தடையற்ற மின்சாரத்தினால் தமிழகம் மின்தட்டுப்பாட்டினால் தத்தளிக்கிறது. விலைவாசி உயர்வு விஷம் போல ஏறிவருகிறது.

இதையெல்லாம் ஏறெடுத்துப் பார்க்காத அமைச்சர்களும் அதிகாரிகளும் கோவை மாநாட்டின் சிலைகளும், அலங்கார ஊர்திகளும், அரங்கங்களும் சரியாக இருக்கிறதா என்று அணு அணுவாக சோதிப்பது ஆபாசமாக இல்லையா? யாரை ஏமாற்ற இந்த நாடகம்? இன்னும் எத்தனை நாள் தொடரும் இந்த கேலிக்கூத்து?

இது போக சில படித்த மேதாவிகள் அவர்களது வாழ்வுக்கு எந்த வகையிலும் தேவைப்படாத தமிழை நீதிமன்றங்களில் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என்று நமக்கு வகுப்பு எடுப்பார்கள். அவர்களெல்லாம் நீதிமன்றங்களுக்கு வரும் மக்களைக் கொஞ்சம் சந்தித்து பார்த்தால் உண்மை அறியலாம்.

நீதிமன்றங்களில் தமிழ் என்பது மிகவும் அடிப்படையான ஜனநாயக கோரிக்கை. பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமை. ஆங்கிலம் கோலோச்சும் நீதிமன்ற நடைமுறைகளைப் பற்றி ஏதும் அறியமால் அதிகம் அல்லல்படும் அந்த மக்களுக்கு தமிழ் என்பது அங்கே வெறும் மொழியாக அல்ல அவர்களது சிவில் உரிமையாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் வந்துவிடுவதாலேயே அவர்களுக்கு நீதி கிடைத்துவிடுவதில்லை என்றாலும் தங்களுக்கு மறுக்கப்பட்ட நீதியின் யோக்கியதையையாவது புரிந்து கொள்ளலாம் அல்லவா?

வக்கீல்கள், போலீசுக்காரர்கள், நீதிபதிகள் சேர்ந்து சட்ட மொழியில் மக்களை ஏமாற்றும் நடைமுறைகளை தமிழ் வந்தால் அத்தனை எளிதாக செய்ய முடியாது. தங்களது பிரச்சினையின் நியாயத்தை புரிந்து கொள்ளும் மக்கள் அதையே சட்டமொழியாக தமிழ் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளினூடாகவும் புரிந்து கொள்வார்கள். தமிழ் நீதிமன்ற மொழி என்பது பெரும்பான்மை மக்கள் ஜனநாயக உரிமையாகும். அதை மறுப்பது பாசிசமே அன்றி வேறல்ல.

மதுரை வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்! தமிழுக்காக வேடம்போடும் கபட வேடதாரிகளின் பொய்முகத்தை தோலுரிப்போம்!!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. /தமிழ் வந்துவிடுவதாலேயே அவர்களுக்கு நீதி கிடைத்துவிடுவதில்லை என்றாலும் தங்களுக்கு மறுக்கப்பட்ட நீதியின் யோக்கியதையையாவது புரிந்து கொள்ளலாம் அல்லவா?//
    மிகச் சரி.
    வழக்குரைஞர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்.

  2. We people in Tamil Nadu always approach any problem even if it is affecting all of us through our caste and political affliation.We even though come to the street and rise our voice for a common cause we would like to see that it creates discomfiture to the people whom we polticaly oppose.

  3. மதுரை வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்! தமிழுக்காக வேடம்போடும் கபட வேடதாரிகளின் பொய்முகத்தை தோலுரிப்போம்!! 

  4. மாநாட்டின் பெயரால், ஒதுக்கப்பட்ட நகரமான கோவைக்கு, சில கட்டமைப்பு வசதிகள் கிடைத்து வருகிறது! அது பொறுக்க வில்லையா உமக்கு!

      • கோர்ட்டில் தமிழ் வராததால், கோவைக்கு கட்டமைப்பு வசதி வரக்-
        க்குடாதா ?

      • கோர்ட்டில் தமிழ் வராதது ஒரு வாரத்திற்கு முன்பு , யாருக்கும்
        தெரியாதா?

        • மாநாடு முடிஞ்சதும் பாருங்க. அடுத்த நாளே அல்லாரும் பாய சுருட்டி
          வீட்டுக்கு போய் உண்ணும் விரதம் இருக்க போறாங்கோ.

        • ரம்மி நான் கேட்ட கேள்வி ஏன் கோர்டுல தமிழ் வருவது உமக்கு பொறுக்கலை??? அதுக்கு பதில் சொல்லுங்க…  

    • கட்டமைப்பின் தரம் நிரந்தரமா என்று கோவை மக்கள் யோசித்துக் கொண்டிருக்கிரார்கள். மழை காலம் முடிந்த பிறகே கட்டமைப்பு தரம் பற்றி பார்க்கலாம்.

      • குழந்தை விடுங்கள் பார்க்கலாம், எல்லா கெட்டதிலும் ஏதேனும் நன்மை இருக்கும்

      • அரசாங்க காரியங்கள் அனைத்தும் தரம் அற்றவையோ? திட்டங்கள் (இலவசம் உள்பட ) எல்லாம் விழலுக்கு இறைத்த நீரோ?

        • இப்போ அதுல உங்களுக்கு என்ன சந்தேகம் இவெங்க என்னோம நல்லது பண்ணிட்ட மாதிரி இல்ல சொல்லறிங்க எதாவது ஒன்னு நல்லது நு காமிங்க பார்போம் அவங்களக்கு லாபம் இல்லாம ஒன்னும் பண்ண மாட்டேன்க சரியாய் rammy

        • இலவசமாக யாரும் தருவதில்லை, இலவசமாக
          கருணாநிதி தந்தாள் அவருடைய பணம் குறைய வேண்டும்
          ஆனால் அப்படினடப்பது இல்லை ஆகவே இலவசமாக
          இன்று கிடைபதிற்கு நாளை பல் மடங்காக விலை குடுக்க
          வேண்டும்

  5. Vinavu, Who told you that this is for Tamil? This is for kazhaga kanmanigal in Kovai district to flourish and get MK to be showered by speeches ! “THE WORLD RENOWNED GREATEST TAMIL SCHOLAR “PRATIBHA PATIL “is going to participate in this maanadu and TELL WE TAMILIANS about the greatness of Tamil ! And all our newspapers and channels will make headlines of her speech. This is the agenda of this neither, MK nor J are really bothered about Tamil at all.This phenomenon was started by MGR who started conducting world tamil maanadu to outsmart MK who taunted him as malayalee ;Thats all.In no where in GLOBE such things are enacted. Only the tax paid by the common man is put into such useless things and this can happen only in India and especially in a SYCOPANT state like TN,..

  6. […] This post was mentioned on Twitter by வினவு, raj mohan. raj mohan said: RT @vinavu: நீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா? https://www.vinavu.com/2010/06/16/tamil-lawyer-strike/ RT Pls. […]

  7. மதுரை வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்! தமிழுக்காக வேடம்போடும் கபட வேடதாரிகளின் பொய்முகத்தை தோலுரிப்போம்!!
    தோழமையுடன் மோகன்,

  8. வழக்குரைசர்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்,மு க முதல்முறை முதல்வர் ஆனவுடன் இதையெல்லாம் செய்திருக்கவேண்டும்.ஆனால் செய்யவில்லை இப்போது நடிக்கிறார்.கடைசிவரை ஏமாற்றுவதை நிறுத்தமாட்டார்.நாம் போராடுவதைத்தவிர வேறுவழில்லை.

  9. இப்போராட்டத்தை ஆதரிக்கிறேன். ஆரம்ப பள்ளி முதல் உயர் நிலை கல்வி வரை தமிழ் பயிற்று மொழியாக விளங்க வேண்டும். “தமிழ், தமிழ் ” என்று பேசி தமிழுக்கு துரோகம் இழைத்தவர்களை புரிந்து கொள்வோம் .

  10. செம்மொழி மாநாடு தேவைதான். ஆனால் அதை கையில் எடுத்திருக்கும் கருங்காலியின் எண்ணமும், நோக்கமும், சமயமும் அதன் அரசியலை நமக்கு உணர்த்துகிறது. நீதிமன்ற மொழியாக தமிழை நுழையவிடாமல் தடுக்கும் பார்ப்பன ஆதிக்கமும், அதை எதிர்த்து செயல்படுத்தப் போராடாத தமிழக அரசியல்வாதிகளும் எதிரியும் துரோகியும் என்ற வரிசையில். பொதுவாக தமிழின் செம்மொழித்தன்மை குறித்து நிறையவே ஆய்வுகள் செய்ய வேண்டியது இருக்கின்றது. செம்மொழித்தன்மை என்பது அதன் தொன்மை ஒருபுறம் இருக்கட்டும்; அதன் இலக்கியச் செழுமையும், அது கூறும் இயக்கவியல் சிந்தனைகளும் இன்றைய நாளைய சமூகத்திற்கு கொண்டுசெல்லப்படவேண்டும். அதனை உலகிற்கும் ஓங்கி உரைக்கவேண்டும். சம்ற்கிருத ஆதிக்க நாட்டில் செம்மொழியாம் நம் தாய்மொழியின் செம்மையை ஓங்கிப் பிடிப்பது இனப்போராட்டத்தின் ஒரு அங்கம். ஆனால் கருணாநிதி போன்ற தமிழ்த்துரோகிகளின், குரோதிகளின் அடையாளம் கிழிக்கப்பட வேண்டும்; முச்சந்தியில் நிறுத்தப்படவேண்டும். இந்த நாட்டை விட்டே துரத்தப்படவேண்டும்.  ஆனால் இந்தக் கருங்காலிகள் கையில் எடுத்திருப்பதனாலேயே செம்மொழியாம் தமிழுக்கு மாநாடு ஒரு கேடா என்று பார்ப்பனத்திமிறை வினவு வெளிக்காட்டவேண்டியது என்ன? நன்றி.

    • வாங்கண்ணே .. நீங்கள் மட்டும் தான் பாக்கி .. நீங்களும் சொல்லிட்டிங்களா ?.. அது சரி … பார்ப்பனியம் இந்த இடத்தில் எங்கே இருந்து வருது முரசு ?.. கொஞ்சம் வினவின் கட்டுரையில் இருந்து எடுத்து கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். உருப்படியா காரணம் சொல்லத் தெரியலைனா பார்ப்பனியம்னு உளர ஆரம்பிக்கிறது.

      சரி .. தமிழுக்கு மாநாடு நடத்தி என்ன கிடைக்கப் போகுது ?.. உடன்பிறப்புகளுக்கு பல கோடிகள் கட்சிக்கு சில கோடிகள் கலைஞருக்கு சில நூறு கோடிகள். எவன் வீட்டு சொத்தை எடுத்து எவனுக்கு கொடுப்பது ?.. கொஞ்சம் விலாவாரியாக எடுத்துக் கூறுங்கள் ஐயா ?..

      அப்புறம் தமிழை உயர் நீதி மன்றத்தில் ஏற்றுவதால் என்ன கிடைக்கும் என்று கேட்காதீரும் ..

      • சமற்கிருத பார்ப்பானுக்கு இந்தப் பொச்சரிப்பு வரத்தான் செய்யும். அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை. தோழரே, சமூக இயக்கவியல் பற்றி ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறப்பாடல் கூறும் சிந்தனை எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழுக்கு எம் செந்தமிழுக்கு ஆயிரம் மேடைகள், ஆய்வரங்கங்கள் தேவை. அதை நடத்தும் கருணாநிதியின் அரசியலை நீங்கள் விமர்சிப்பதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை. எங்கும் தமிழ் எதிலும் தமிழே நமது கொள்கை. தமிழுக்கு ஒரு கேடா? என நீங்கள் தலைப்பு சூட்டுவதிலேயே உங்களது பார்ப்பன காழ்ப்புணர்ச்சி தெளிவாகிறது. நாளை உயர் நீதிமன்றத்திலும் தமிழேறும். அதற்கான வழக்குரைஞர்களின் போராட்டம் வெல்லட்டும். ஆனால் கருணாநிதியின் அரசியலை விமர்சித்து தலைப்பு வைக்காமல் தமிழுக்கு இது கேடா, அது கேடா என முதலைக்கண்ணீர் விடுவது ஏன்? தமிழுக்கு செம்மொழி மாநாடு தேவையே. இதுவே நமது நிலைப்பாடு. ஆடு நனையுதேன்னு நரி அழவேண்டியது இல்லை. நன்றி.

  11. Go to karnataka and see how they respect their language….Kannada is must right from school..Japanese learn all the professional courses (MBBS,Engineering etc etc) in their own languages. They translate all the professional courses in foreign languages into Japanese language and it is available in no time to students. It is possible there. They are also only hman beings. When they can do, WE CAN DEFINITELY DO. We need determination.
    The generation now and tomorrow should know about our mother tongue”TAMIZH”. They should read ,write and talk with others in tamil fluently.
    Two days back one family had come to the hospital with heart problem. They are from a well to do family. They started talking in English about the problem. I listened to them and started conversing in Tamizh. They were shocked. But when they spoke, they spoke in beautiful Thamizh. Why we have come to a stage where we feel ashamed to talk in Thamizh?
    I sign only in Tamizh. I am comfortable in that. I am happy about that. This should be taught right from the schools. We should also have a knowledge about other languages. But, THAMIZH, THAMIZH,THAMIZH… it is the love to my language

  12. தமிழீழ போராட்டத்தில் ஆதாயம் அடைந்தவர்கள்
    உயர் நீதிமன்ற

    போராட்டடம் குறித்து வாய் மூடி மௌனிக்கும் மர்மம் என்ன
    சீமான்,நெடுமாறன்,திருமா,தா.பாண்டியன்,இன்னும் இது போன்ற பிளைப்புவாதிகளையும் அம்பலப்படுத்த வேண்டும்

    • சீமான் , த்ரிசா மன்னிக்கவும் திருமா, தா.பாண்டியன் , பழ. நெடுமாறன் போன்ற அம்மணக்கட்டைகளை எத்தனை தடவை அவுத்துப் பார்க்க முடியும் .?..

  13. வழக்கறிஞர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழை விற்று ஒரு 40 வருட காலம் அரசசுகம் அனுபவித்த தமிழ் வியாபாரி கருணாநிதி தன் இறுதி தருவாயிலாவது நல்லது செய்து விட்டு போவாரா ? மாட்டார். தனது மகனுக்கு பதவி வாங்குவதற்காக முடியாத வயதில் தன்னைதானே பொட்டலம் கட்டிக் கொண்டு வெட்கம் இல்லாமல் டில்லி போய் பதவி வியாபாரம் முடித்தவர் – ஈழத் தமிழர்களுக்கு மட்டும் இழவு கடுதாசியோடு நிறுத்திக் கொண்டார். இதில் மட்டும் தமிழுக்கு செய்தால் அவருக்கு என்ன லாபம் ? ஆத்துல போனாலும் செட்டி ஆதாயத்தோடுதான் போவான் மாதிரி, ஆதாயம் இல்லாமல் ஒரு கல்லையும் நகர்த்த மாட்டார்,
    மூத்தமிழ் அறிஞர்.

    கழக கண்மணிகள் (உ.தா. லக்கி) போன்றோர் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

    //
    தமிழ் வந்துவிடுவதாலேயே அவர்களுக்கு நீதி கிடைத்துவிடுவதில்லை என்றாலும் தங்களுக்கு மறுக்கப்பட்ட நீதியின் யோக்கியதையையாவது புரிந்து கொள்ளலாம் அல்லவா?
    //
    தமிழ் வந்துவிடுவதாலேயே அவர்களுக்கு நீதி கிடைத்துவிடுவதில்லை என்றாலும் தங்களுக்கு மறுக்கப்பட்ட நீதியின் யோக்கியதையையாவது புரிந்து கொள்ளலாம் அல்லவா?//

    மிகவும் ரசித்த ஆனால் உண்மையான வரிகள்.

  14. தோழமைக்கு வணக்கங்கள்……..
    “ஹலோ” என்ற வார்த்தைக்கு தமிழில் எப்படி அழைப்பது? இன்று ” ஹலோ” என்ற வார்த்தை எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. தமிழ் வலு இழந்து வருகின்றது.இந்த மாநாட்டுக்கு ஏ. ரர். ரஹ்மான் இசைத்து உள்ள பாடலை கேட்டிர்களா ? தமிழ் எங்கே உள்ளது அய்யா? மேற்கத்திய இசை தான் தூக்கலாக உள்ளது.
    தமிழர்களின் பாரம்பரிய நடன, இசை கலைகள் எங்கே? அவற்ற்றை விரிவாக படம் எடுத்து இருக்கலாமே? மகாராஷ்ட்ராவில் கலைங்கர்கள் எத்தனை அழகாக மதிக்கப்படுகின்றார்கள் என்று ” அனந்த விகடனில்” திரு. இளையராஜா சென்ற வாரம் கூறியுள்ளார். நம் கலைகள் ஏன் மதிப்பு இழந்து வருகின்றன? நாம் ஏன் மேற்கத்திய நாகரிகத்திற்கு அவுத்து போட்டு ஓடுகிறோம்? தொலைக்காட்சயில் சினிமா, சினிமா, சினிமா. இந்த தலை முறை எப்படி விழிக்கும்? எப்படி சிந்திக்கும் திறன் வளரும்? உணவு வகைகள் முதற் கொண்டு எல்லா இடத்திலும் ஆங்கிலேய மோகம்? தஞ்சை பெரிய கோவில் பற்றி எத்தனை நபர்களுக்கு தெரியும்? அதை எப்படி கட்டி முடிக்க முடிந்தது என் முன்னோர்களால்? ராஜா ராஜா சோழா!!! உனக்கு என் நன்றிகள்… நம்மிடம் என்ன இல்லை? நம் தமிழ் கலாச்சாரம் எல்லோரிடமும் சென்று அடைய வேண்டும் என்று என்றும் விரும்பும் நண்பன்

      • ஹலோ என்பது எம்மொழியும் இல்லை. அது வெறும் சப்தமே. தொலைபேசி கண்டுபிடித்த மகிழ்ச்சியில் கிரஹாம் பெல் சொன்னது அது என்கிறார்கள்.

  15. முதல்வர் தன வாழ்க்கையில் மறக்க முடியாத பதிவுகளை விரைவாக செய்ய விரும்புகின்றார். பாவம் கண்டுக்க வேண்டாம். ஈழத்தில் தமிழன் சாகின்றான். வழக்கறிஞ்சர்கள் உண்ணா விரதம், முதல்வரோ படு குசி.

  16. First of all all proptaganists of Tamil here claim to owe allegiance to EVR who condemned Tamil as a barbaric language and here they are shedding crocodile tears for Tamil.What a dual game they play.Did anyone of them condemn in no uncertain terms what EVR said about Tamil or Tirukkural?Please do not try to fool people

    • Sundar,
      Periyar described Tamil as barbaric, when it was used by some people to propagate slavery and superstition. Try to understand the rationale behind his condemnation and it never contradicts the present demand of Tamil should be practised in courts. In fact Periyar would support this cause, given his tremendous contribution of standing back with oppressed classes throughout his life spanning several decades, had he been alive today. Concealing the context actually you are trying trying to fool others, but I hope no one will buy your words as they know Periyar and the intention of you like people.

  17. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் தெரியாத நீதிபதிகள் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் அப்படிப்பட்டவர் தலைமை நீதிபதியாக இருக்கும் நிலைதான் உள்ளது. அப்போது தமிழில் எப்படி வழக்காடுவது, எப்படி அவருக்கு அல்லது அவர்களுக்கு புரிய வைப்பது.டப்பிங் படம் அல்லது சப்-டைட்டில் போட்ட சினிமா அல்ல நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகள்.

    வழக்கறிஞர்களின் கல்வி ஆங்கிலத்தில் இருக்கிறது,தீர்ப்புகள் ஆங்கிலத்தில்,வழக்குத் தொடுப்பது ஆங்கிலத்தில், வாதிடுவதும் ஆங்கிலத்தில் – இதை எப்படி மாற்றுவது. என்பதற்கான தீர்வுகளை சொல்லுங்கள். இரு மொழியும் இருக்கலாம் என்கிறீர்களா இல்லை தமிழ் மட்டும் இருக்க வேண்டும் என்கிறீர்களா.

    உமா மேடம் போன்றவர்கள் தங்கள் அலுவலக வேலைகளை 100% தமிழில்தான் செய்கிறார்களா இல்லை 100% ஆங்கிலமா.மருத்துவர் ருத்ரன் நோயாளிகளிடம் தமிழில் பேசினாலும் தொழில்ரீதியாக ஆங்கிலம் மூலம்தானே கல்வி கற்றார்.அவர் தரும் சிகிச்சையில் பரிந்துரை செய்யப்படும் மருந்துகளின் பெயர்கள் ஆங்கிலத்தில், அதைப் பற்றிய விபரங்கள் ஆங்கிலத்தில் என்று எல்லாம் ஆங்கிலத்தில்தானே இருக்கிறது. அதையெல்லாம் தமிழ்படுத்தவேண்டும் என்று ஏன் போராடுவதில்லை.

    • செருப்பால அடிப்பேன் – இதுவும் தமிழ்தான்யா லபக்குதாசு… உனக்கு என்ன நீதிபதியாக காசு குடுக்குறாரு? காசு வாங்குறது கட்சிக்காரன்கிட்ட அவனுக்கு தெரிஞ்ச மொழியில பேசுய்யான்னா என்ன வக்கனை…இல்ல கோர்டுல இங்கிலீசுலதான் பேசுவேன்னா அப்போ இனிமே இங்கிலீஸ் தெரியாதவங்க கிட்ட கேசாடமாட்டேன்னு உங்க பார்ல தீர்மானம் போடுங்க பாப்போம்…

      வந்துட்டானுங்க நியாய மணிய ஆட்டிகினு .. சொல்லுறது ஒரு முட்டாள்தனமான உதாரணம் இதுல டாக்டரு,  உமா கால நக்கலையின்ன இந்த நாயிங்களுக்கு தூக்கமே வராது… த்தூ

        • ரம்மி, உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. செருப்பு,
          மசுரு நாயி இப்படி தனி தமிழ் பேசுறவங்க கிட்ட இருந்து
          விலகி இருங்க. ரொம்ப கிண்டாதீங்க அப்பரம்
          இன்னும் நாரபோவுது. தள்ளி இருங்க. உணர்ச்சி
          வச படாதீங்க.

        • உங்களால பதிவுக்கு சம்பந்தமா ஒரு மறுமொழிகூட எழுதமுடியாதா ரம்மி? 

        • முட்டாஊ அண்ணே, மேலே அந்த லபக்குதாசு பதிவுக்கு சம்பந்தமே இல்லாம டாக்டரையும் அவரு சம்சாரத்தையும் பத்தி எழுதுனா செருப்பால அடிக்காம என்ன செய்ய சொல்றீங்க.. இப்ப நீங்க இல்லயா எவ்ளோ பெரிய்ய்ய ஜென்டில்மேன்.. உங்களமாதிரி வராதுன்ணே… அப்புறம் நேத்தே கேட்டேனே உங்க பிளாக் அட்சர நேக்கு குடுக்கப்பிடாதா?????

        • பண்ண பழகடா பச்சை படுகொலை கொலை வாளினை எடடா இது எல்லாம் தமிழ் தான் இந்த தமிழும் தப்பா ரம்மி நீங்க ஒரு தடவ இல்ல ரெண்டு முறை பதிவ படிங்க  

  18. தமிழுக்காக பாளையங்கோட்டை தனிமைச்சிறையில் பல்லி, கரப்புகளுடன் அவதிப்பட்டேன் என்று இறந்த காலத்திற்கு பயணிக்கிறார் கருணாநிதி. சிறையை விடுங்கள், பல்லி, கரப்பு, கொசுக்களுடன்தான் இன்றும் பெரும்பான்மையான மக்கள் வீடுகளில் சாதாரணமாக வாழ்கிறார்கள். பாம்புக்கடிக்கும், நாய்க்கடிக்கும் மருந்தின்றி அரசு மருத்துவமனைகளில் அவதிப்படுகிறார்கள். ஆனால் அதையெல்லாம் தியாகமாக சித்தரிப்பதற்கு அவர்களெல்லாம் கோபாலபுரத்தில் பிறக்கவில்லை, என்ன செய்வது?

    உயர்நீதிமன்றத்தில் கூட தமிழை கொண்டுவருவதற்கு இயலவில்லை எனும் போது 500 கோடி ரூபாய்களை இறைத்து செம்மொழி மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? ஆம் accept

  19. கேள்விக்குறி அவர்களே, என்னை செருப்பால் அடித்தால் தமிழ் வளர்ச்சியடையுமா :).தமிழில் சட்டத்துறை நூல்கள் இல்லை,ஆங்கில தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை,கலைச்சொற்கள் இல்லை. முடிந்தால் கம்பெனி சட்டத்தில் உள்ள சட்டசொற்களுக்கு பொருத்தமான கலைச்சொற்கள் தமிழில் உள்ளதா என்று கேட்டுப் பாருங்கள். பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படாத போது எப்படி ஐயா/அம்மா வழக்கு மனுவை தமிழில் எழுதுவது, வாதிடுவது. உச்சநீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பு ஒன்றை எடுத்து தமிழில் மொழிபெயர்த்து வினவில் வெளியிடுங்கள். ஒரு பழைய தீர்ப்பு உதாரணமாக
    http://www.indiankanoon.org/doc/1810324/ இதை மொழிபெயர்க்க எத்தனை நேரம் ஆகிறது என்பதையும் எண்ணிக் கொள்ளுங்கள். இது புரிந்து கொள்ள கடினமான தீர்ப்பல்ல,படிக்க எளிதான தீர்ப்பு. கீழே உள்ள பத்தியை புரிந்து கொண்டு மொழிபெயர்த்துப் பாருங்கள்

    It, therefore, becomes necessary for us now to address ourselves on this moot question. As noted earlier the main charge framed against all these accused is under Section 304 Part II, IPC. So far as accused Nos. 2, 3, 4 and 15 are concerned they are also charged with offences under Sections 326, 324, IPc and 429 IPC read with Section 35 IPC while accused 5 to 9 are charged substantially with these offences also. We shall first deal with the charges framed against the concerned accused under the main provisions of Section 304 Part II, IPC. A look at Section 304 Part II shows that the concerned accused can be charged under that, provision for an offence of culpable homicide not amounting to murder and when being so charged if it is alleged that the act of the concerned accused is done with the knowledge that it is likely to cause death . but without any intention to cause death or to cause such bodily injury as is likely to cause death the charged offences would fall under Section 304 Part II. However, before any charge under Section 304 Part II can be framed, the material on record must at least prima facie show that the accused is guilty of culpable homicide and the act allegedly committed by him must amount to culpable homicide/However, if the material relief – upon for framing such a charge against the concerned accused falls short of even prima facie indicating that the accused appeared to be guilty of an offence of culpable homicide Section 304 Part I or Part II would get out of the picture. In this connection we have to keep in view Section 299 of the Indian Penal Code which defines culpable homicide. It lays down that, ‘Whoever causes death by doing an act with the intention of causing death, or with the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such act to cause death, commits the offence of culpable homicide’. Consequently the material relied upon by the prosecution for framing a charge under Section 304 Part II must at least prima facie indicate that the accused had done an act which had caused death with at least such a knowledge that he was by such act likely to cause death. The entire material which the prosecution relied upon before the Trail Court for framing the charge and to which we have made a detailed reference earlier, in our view, cannot support such a charge unless it indicates prima facie that on that fateful night when the plant was run at Bhopal it was run by the concerned accused with the knowledge that such running of the plant was likely to cause deaths of human beings. It cannot be disputed that mere act of running a plant as per the permission granted by the authorities would not be a criminal act. Even assuming that it was a defective plant and it was dealing with a very toxic and hazardous substance like MIC the mere act of storing such a material by the accused in that No. 610 could not even prima facie suggest that the concerned accused thereby had knowledge that they were likely to cause death of human beings. In fairness to prosecution it was not suggested and could not be suggested that the accused had an intention to kill any human being while operating the plant. Similarly on the aforesaid material placed on record it could not be even prima facie suggested by the prosecution that any of the accused had a knowledge that by operating the plant on that fateful night whereat such dangerous and highly volatile substance like MIC was stored they had the knowledge that by this very act itself they were likely to cause death of any human being. Consequently in our view taking entire material as aforesaid on its face value and assuming it to represent correct factual position in connection with the operation of the plant at Bhopal on that fateful night it could not be said that the said material even prima facie called for framing of a charge against the concerned accused under Section 304 Part II. IPC on the spacious plea that the said act of the accused amounted to culpable homicide only because the operation of the plant on that night ultimately resulted in deaths of number of human beings and cattle. It is also pertinent to note that when the complaint was originally filed suo motu by the police authorities at Bhopal and the criminal case was registered at the police station Hanumanganj, Bhopal as case No. 1104/84 it was registered under Section 304A of the IPC. We will come to that provision a little later. Suffice it to say at this stage that on the entire material produced by the prosecution in support of the charge it could not be said even prima facie that it made the accused liable to face the charge under Section 304 Part II. In this connection we may refer to a decision of the Calcutta High Court to which our attention was drawn by learned senior counsel Shri Rajendra Singh for the appellants. In the case of Adam Ali Talugdar and Ors. v. Kind-Emperor a Division Bench of the Calcutta High Court made the following pertinent observations while interpreting Section 304 Part II read with Section 34 IPC:

    • உம்மை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னால் தமிழ் வளராது ஆனால் உங்களிடம் இருந்து பொறுப்பான பதில் வரும் என்று தெரிகிறது. இதை முதலிலேயே செய்திருக்கலாம்….  நீங்கள் முன்வைத்திருக்கும் வாதம் மிக வேடிக்கையானது…. நாம் ஆங்கில வழி தொழில்நுட்ப சிக்கல் மிகுந்த கணிணியையே தமிழ்படுத்தி இப்போது பயன்படுத்திவருகிறோம்… இதற்க்காக இலவசமாக உழைப்பை ஆயிரக்கணக்காணோர் இன்னும் செலுத்தி வருகின்றனர்… அதைப்போலத்தான் இதுவும்.. ஒரு பிரச்சனையே இல்லை. 

      அப்புறம் மிக முக்கியமான ஒன்று  – நீதிமன்றத்தில் தமிழ் வராத காரணம் வெறும் மொழிபெயர்ப்பு பிர்ச்சனை என்று நீங்கள் வாதிட்டால் அப்புறம் வக்கீல் வண்டுமுருகன் கூட உங்களை வென்றுவிடுவார் .. உசார் உசார்

      மக்களே மேலே லபக்குதாஸ் கூறியிருப்பதை பாருங்கள்… இந்த தீர்ப்பில் ஒரு வெங்காயமும் இல்லை… 2000 வார்த்தையை ஆங்கிலத்தில் போட்டு ஏதோ ரொம்ப சிரமான ஒரு காரியத்தை செய்வதை போல் சீன் போடுகிறார்… பிரச்சனை என்னவென்றால் புரியாத ஒன்றை எழுதினால்தான் இவர்களுக்கு பிழைப்பு ஓடும்… கட்சிக்காரணுக்கு புரிந்து விட்டால் கேள்வி கேட்பானே????

    • அதுக்குதான் தமிழ் வேண்டும் வக்கீல் லபக்தாஸ். அது ஓகே நீங்க வெறும் தாஸ் சா இல்ல லார்ட் லபக்தாஸ் சா ….

    • பீகார்ல மட்டும் எப்படி ஹிந்தியில மொழி பெயர்ப்பு செய்யுராங்க ராசா?

    • நண்பா வக்கீல் லபக்தாஸ் வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு இந்திய என்ற நாடு கிடையாது. தமிழுக்கு வரலாறு என்னால் ஐயாயிரம் வருடத்திற்கு சொல்ல முடியும். வரலாற்றை ஒழுங்காக படி.

  20. “பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படாத போது எப்படி ஐயா/அம்மா வழக்கு மனுவை தமிழில் எழுதுவது, வாதிடுவது”

    மாவட்ட, முன்சீப் நீதிமன்றங்கள் அனைத்திலும், தமிழில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. தமிழில் வழக்குகள் நடத்தப்படுகின்றன. நான் ஆங்கிலத்தில் வாதிட்டாலும், எனது எழுத்துபூர்வமான வாதங்களை தமிழிலேயே தாக்கல் செய்கிறேன். சுயநலம்தான் காரணம்….ஏனெனில், தமிழில் படிக்கும் நீதிபதிக்கு உடனடியாக மனதில் பதியும் என்பதால். தமிழில் எப்படி வாதம் புரிய முடியும் என்று சந்தேகம் இருந்தால், மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் தமிழ் வாதத்தினை அனுப்பி வைக்க இயலும். 

  21. இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இனம்,தேசியம் என்பதையெல்லாம் விடுத்தது.பாதிக்கப்பட்ட இருவர் நீதி வேண்டி விண்ணப்பிக்கும் போது முறையான நீதி நமக்கு கிடைத்துவிட்டது, வக்கீல் முறையாகத்தான் வாதாடினார் என நம்பவேண்டும் எனில் அந்த வழக்காடுமன்றம் அவரவர் தாய்மொழியிலேயே இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் இந்த ஒரு விசயத்திற்காக தமிழை மட்டுமல்ல அணைத்து இந்திய மொழிகளையும் பொதுவாக வைக்கலாம்.சொந்த நாட்டில் தாய்மொழியில் பேசி வாதாட உரிமை இல்லை???

  22. நோக்கம் சரியானது….ஆனால் போராடும் நேரம் சரியானதா..?செம்மொழி மாநாட்டிற்கு கரும்புள்ளி குத்த வேண்டும் என்று அரசியல் நோக்கம் இருப்பீன்
    அது தவறானது

    •  இன்றைய சூழலில் செம்மொழி மாநாடே தமிழுக்கு ஓர் கரும்புள்ளி தான். வேறெந்த நேரத்தில் போராடினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் நண்பரே?

  23. ஒரு இனத்தின் வாழ்வும் தாழ்வும் அவ்வினம் பேசும் மொழியின் நிலையை பொறுத்தே இருக்கும்.மொழி வளர்ந்தால் இனம் வளரும்.மொழி சிதைந்தால் இனம் அழியும்.எனவே ஆட்சிமொழி சட்டமொழி நிர்வாகமொழி பயிற்றுமொழி என அனைத்து துறைகளிலும் தமிழை கொண்டு வரவேண்டும்.தமிழில் போதிய கலைச்சொற்கள் இல்லை தமிழால் முடியாது என்பதெல்லாம் தன்னல கும்பலின் கள்ளப்பரப்புரை. 70 களில் இருந்தே யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மருத்துவமும் பொறியியலும் தமிழில் கற்பிக்கப்படுகிறதே.ஈழத்தில் இது சாத்தியமாகும்போது தமிழகத்தில் முடியாதா.ஒரு மனிதன் எத்தனைதான் மெத்த படித்த மேதாவி பலமொழி கவிஞன் ஆனாலும் அவனது எண்ணவோட்டம் தாய்மொழியில்தான் இருக்கும்.எனவே அவனுக்கு அறிவமுதம் ஊட்டுவது தாய்மொழியே.அந்த தாய்மொழிக்கு ஆற்றல் இல்லை என பழித்துரைப்பவர்கள் எப்படியான நன்றி கெட்டவர்கள்.சதிக்கும்பலின் தடைகளை தகர்த்து தமிழை ஆட்சிக்கட்டில் ஏற்றுவோம்.இந்த சமயத்தில் வினவுக்கு ஒரு வேண்டுகோள்.தங்கள் பதிவுகளில் ஆங்கில மற்றும் வடமொழிச்சொற்கள் தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன.தவிர்க்க வேண்டுகிறேன்.

    • “ஒரு மனிதன் எத்தனைதான் மெத்த படித்த மேதாவி பலமொழி கவிஞன் ஆனாலும் அவனது எண்ணவோட்டம் தாய்மொழியில்தான் இருக்கும்.எனவே அவனுக்கு அறிவமுதம் ஊட்டுவது தாய்மொழியே”

      அருமையான வாக்கியங்கள் நண்பரே

  24. …………..///////////இன்றைக்கு ஜெ களத்தில் குதித்துவிட்டார். செம்மொழி மாநாடு எனும் பிரம்மாண்ட கேளிக்கையை வைத்து கருணாநிதி ஆதாயம் அடைவதை விரும்பாத ஜெயலலிதா, வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரித்து இவர் ஏதோ தமிழுக்கு ஆட்சி மொழி தகுதியை எதிர்காலத்தில் வாங்கித் தருவது போல காட்டிக் கொண்டிருக்கிறார்………//////////

    ……………////////////தமிழ் மற்றும் மற்றைய தேசிய மொழிகளை சூத்திர பாஷை என்று எக்காளமிட்டு அடிமைப்படுத்திய பார்ப்பனியத்தின் அன்றைய வரலாற்றுக்கும், உச்சநீதிமன்றத்தின் இன்றைய வரலாற்றுக்கும் என்ன வேறுபாடு? ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான் முதலான நாடுகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் தாய்மொழி பேசும் மக்களைக் கொண்ட நாட்டில் அந்த மொழிகளை வெறும் வட்டார மொழி என்றும், சாத்தியமில்லை என்றும் கருதுவது வெறும் மேட்டிமைத்தனம் மட்டுமல்ல அது பார்ப்பனிய இந்திய தேசியத்தின் அடக்குமுறையும் ஆகும்./////////////////………

    ……………./////////////

    பிரச்சினை நடக்கும் நிகழ்காலத்தில் நீங்கள் சண்டையே போடவில்லை என்றால் 65இல் தமிழுக்காக பாளையங்கோட்டை தனிமைச்சிறையில் பல்லி, கரப்புகளுடன் அவதிப்பட்டேன் என்று இறந்த காலத்திற்கு பயணிக்கிறார் கருணாநிதி. சிறையை விடுங்கள், பல்லி, கரப்பு, கொசுக்களுடன்தான் இன்றும் பெரும்பான்மையான மக்கள் வீடுகளில் சாதாரணமாக வாழ்கிறார்கள். பாம்புக்கடிக்கும், நாய்க்கடிக்கும் மருந்தின்றி அரசு மருத்துவமனைகளில் அவதிப்படுகிறார்கள். ஆனால் அதையெல்லாம் தியாகமாக சித்தரிப்பதற்கு அவர்களெல்லாம் கோபாலபுரத்தில் பிறக்கவில்லை, என்ன செய்வது?
    உயர்நீதிமன்றத்தில் கூட தமிழை கொண்டுவருவதற்கு இயலவில்லை எனும் போது 500 கோடி ரூபாய்களை இறைத்து செம்மொழி மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? கடந்த ஏழு, எட்டுமாதங்களாக முழு அரசு எந்திரமும் இந்த மாநாட்டுப் பணிக்காக மும்முரமாக பணியாற்றி வருகிறது.
    அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் ஏற்வில்லை. மேட்டூரில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. போலி மருந்து பிரச்சினை முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்காக அளிக்கப்படும் தடையற்ற மின்சாரத்தினால் தமிழகம் மின்தட்டுப்பாட்டினால் தத்தளிக்கிறது. விலைவாசி உயர்வு விஷம் போல ஏறிவருகிறது.
    இதையெல்லாம் ஏறெடுத்துப் பார்க்காத அமைச்சர்களும் அதிகாரிகளும் கோவை மாநாட்டின் சிலைகளும், அலங்கார ஊர்திகளும், அரங்கங்களும் சரியாக இருக்கிறதா என்று அணு அணுவாக சோதிப்பது ஆபாசமாக இல்லையா? யாரை ஏமாற்ற இந்த நாடகம்? இன்னும் எத்தனை நாள் தொடரும் இந்த கேலிக்கூத்து?
    இது போக சில படித்த மேதாவிகள் அவர்களது வாழ்வுக்கு எந்த வகையிலும் தேவைப்படாத தமிழை நீதிமன்றங்களில் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என்று நமக்கு வகுப்பு எடுப்பார்கள். அவர்களெல்லாம் நீதிமன்றங்களுக்கு வரும் மக்களைக் கொஞ்சம் சந்தித்து பார்த்தால் உண்மை அறியலாம்////////////………………

    ஐயா. ரம்மி, மோட்டோஒ, வக்கீல் லபக்தாஸ் … கேள்விக்கு சரியாய் பதில் சொல்லுங்க. இது உங்களுக்குத்தான்…

    இன்னொரு முறை படிங்க..

  25. இந்த மாநாடு எல்லாம் த்ற்பெருமைக்காகவும், தனக்குத் தானே விருது வழங்கிக் கொள்ள மட்டுமே. மத்த்படி தமிழை வளர்க்கிறேன் என்பதெல்லாம் மக்கள் கண்களில் மண் தூவும் கட்டுக் கதை. அவிங்க எப்புடி இந்த போராட்டத்துக்கு நீதி பேசுவாங்க? விருது விழா நடத்தவே நேரம் பத்தல.

  26. மிக நல்ல பதிவு வினவு. மேலும் இன்று வாசித்த செய்தியொன்று -//தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சுமார் முப்பது வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தை துவங்கினர். ஆனால் தனது ஆடம்பர திருவிழாவான செம்மொழி மாநாடு நடக்கும் போது கோவையிலேயே தமிழுக்காக போராட்டம் நடத்துவதை விருப்பாத கருணாநிதி தனது கைப்பாவைகளான போலீசாருக்கு உடனடியாக போராட்டத்தைக் கலைத்து விடுமாறு கட்டளையிட்டார். ஆனால் கோவை நீதிமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடப்பதால் காவலர்கள் உள்ளே நுழைவதில் சிக்கல் ஏற்பட திமுக வழக்கறிர்களை ஏவிய போலீசார் அவர்களை விட்டு உண்ணாவிரதம் இருந்தவர்களைத் தாக்கி நீதி மன்றத்திற்கு வெளியே இழுத்துத் தள்ளினர்.இழுத்து வெளியே தள்ளப்பட்ட வழக்கறிஞர்களை பொலீசார் பிடித்து சிறையிலடைத்தனர். இதுதான் செம்மொழி நாயகனின் தமிழ் பற்று//.

  27. இந்த விவாதத்தில் தமிழுக்கு எதிரான கருத்துத் தெரிவித்தவர்கள் விஷயத்தை திசைத் திருப்புகிறார்களே அன்றி, யாரும் ஏன் ஒருவருக்கு தன் சொந்த நாட்டில் தனக்கு தெரிந்த தன் தாய் மொழியில் நீதிமன்ற விவாதத்தைக் கேட்க அனுமதி இல்லை என்று சொல்லவில்லை.

    கடவுளிடம் பேச சமஸ்கிருதம், நீதிபதியிடம் பேச ஆங்கிலம், மத்திய அரசு அலுவலகங்களில் பேச இந்தி என்றால் இந்த மாநிலத்து எதற்கு தமிழ்நாடு என்ற பெயர்?

    வெட்கங்கெட்டவர்களுக்கு தமிழினத்தலைவர் எதற்கு?

    இந்த 500 கோடி ருபாயில் எத்தனையோ நீதிமன்ற புத்தகங்களை மொழி பெயர்க்கலாம். ஆங்கிலம் தெரிந்து முன்னுக்கு வந்து விட்டால், இனி தமிழ் தங்கள் பொருளாதாரத்துக்கு தேவை இல்லை என்று நினைப்போர், அடி மட்டத்தில் உ