Sunday, September 24, 2023
முகப்புசெம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!!
Array

செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!!

-

vote-012“தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய
கருணாநிதி ஸ்ரீமச்சாசனம்
ஊர்வச சிரோபபிஷசேகரி…”

இச்செப்பேடு
செப்புவது யாதெனில்,

“காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!”
என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே
பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு
விடாது கடிதமெழுதியதோடு,

அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து
காலை உணவுக்கும், மதிய உணவுக்கும்
இடைப்பட்ட மணித்துளியில்
அன்ன ஆகாரம் உண்ண மறுத்து,

ஈழத்தமிழர் செத்த பின்பு
போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன்
கருணாநிதிச் சோழனின்
மற்ற கைங்கர்யங்களாவன:

சோழநாடு சோறுடைத்ததைப்
பின்னுக்குத் தள்ளி
ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்!
பகை முடித்தார்!

வண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு,
மனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி,
மகப்பேறு உதவித்தொகை…
எனக் குடிதானம் ஏராளம்.
மக்களைத் தானாக வாழவிடாமல்
தடுத்தாண்ட சிறப்பிவைகள்.
மற்றபடி,
இடைத்தேர்தல் எதிர்ப்பட்டால்
வாக்காள பெருங்குடிக்கு
பொன்முடிப்பு தாராளம்!

காணியுடையோராய் இருந்த
தொல்குடிகள் நீக்கி,
காடு, மலை, நதியென
அந்நியப் பன்னாட்டுக் கம்பெனி
வேண்டுவன தட்டாமல் வழங்கும்
தகைமையில் விஞ்சுவாரின்றி
கருணையும், நிதியும் ஒன்றாய் ஆனார்!

யாதும் ஊரே; யாவரும் கேளிர்
ஹூண்டாயும், ஃபோர்டும் நம் உடன்பிறப்பே,
எனப் பன்னாட்டு உறவில் புது எல்லை கண்டான்!
அண்ணலும் ‘நோக்கியா’ அவளும் ‘நோக்கியா’
என கம்பநாட்டாழ்வரையே கற்பனையில் விஞ்சி
திருப்பெரம்புதூரில் தென்கொரியாவையே கொண்டான்!

அறக்கொடைகள் அம்மட்டோ!

வேளாண்வகை ஏரிகள் மாற்றி
பெப்சி, கோக்குக்கு சதுர்வேதி மங்களங்கள்!

திருவண்ணாமலை வேடியப்பன் மலையை எடுத்து
‘ஜிண்டால்’ கம்பெனிக்கு தேவதானம்!

சிறுவணிகத்தை மடைமாற்றி
ரிலையன்சு டாட்டாவுக்கு இறையிலி.

பாலியல் கொலைகாரன் காஞ்சி சங்கரனுக்கு
சட்டமும் போலீசும் பிரம்மதேயம்…
அண்டி நிற்கும் வீரமணிக்கும்
அவ்வப்போது அறச்சாலாபோகம்!

இத்தனை ஆட்சிக்குப் பிறகும்
எஞ்சியிருக்கும் தமிழ்க்குடிக்கு
தனது வீட்டையே தானம் கொடுத்தார்!
இன்னும் கொடுப்பதற்காய்
தமிழ்நாட்டையே எடுத்துக் கொண்டார்!

சாதனைகள் சொல்ல
செப்பேடு போதாது…!

காவிரிக்கு குறுக்கேதான்
கல்லணை அமைத்தான் கரிகாலன்..
காவிர, முல்லைப்பெரியாறு இரண்டிலுமே
நீதிமன்றத்திலேயே அணையைக்கட்டி
பிரச்சினை நிரம்பி வழியாமல்
பார்த்துக் கொண்டவர் கருணாநிதி!

பாடிச் சொரிந்த புலவர்க்கு மட்டும்
மதுவை ஊற்றிக் கொடுத்தனர்
பழைய வேந்தர்கள்,
வாடிக்கிடக்கும் தமிழரையே
டாஸ்மாக்கால் ஈரப்படுத்தி
‘குடி’மகன்களை பாடவைத்துத்
தமிழ் வளர்த்தவர் தானைத் தலைவர்!

ஊனாடும்
ரோமாபுரி அடிமைப் பெண்களை
அந்தப்புரத்தில் ஆடவைத்து
தான்மட்டும் கண்டுகளித்தனர்
பழைய மன்னர்கள்

‘மானாட மயிலாட’ என
மற்றவரையும் பார்க்க வைக்கும்
தமிழினத் தலைவரின் பரந்த உள்ளத்தை
கலைஞர் தொலைக்காட்சி பறைசாற்றும்!
மழலையர் உதடுகளில் ஆங்கிலம் வளர்த்து
பெயர்ப்பலகையில் மட்டும் தமிழ் வளர்க்கும்
தந்திரம் முன்
பராந்தகச் சோழனே பயந்து போவான்!

‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ எனப் புலம்பி
ஊரறிய அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் போட்டுவிட்டு
சத்தம் போடாமல் உச்சநீதிமன்றத்தில்
பார்ப்பன மனுநீதிக்கு பங்கம் வராமல் பாதுகாக்க
அந்த முள்ளை எடுத்தே வேலிகட்டும்
இரண்டகத் திறமையில்
பார்ப்பன குலமே மயக்கமுறும்!

இயற்றமிழ் அழகிரி
இசைத்தமிழ் கனிமொழி
நாடகத்தமிழ் தளபதி
என முத்தமிழையும் வளர்த்து
தமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்க
முயலும் திறமை முடியுமோ யாராலும்?

பிறப்பொக்கும் இவர் பேரன், பேத்தி
வாரிசு வரைக்கும்
மதுரை தினகரன் அலுவலகத்தில்
கொலையான ஊழியர்கள்
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகள்!
இருப்பினும் வாழும் வள்ளுவர்…

திருவள்ளுவர் அதிகாரங்களுக்கு மட்டுமல்ல,
அழகிரியின் அதிகாரத்திற்கும்
உரையெழுதும் திறமுடையார்!

இலக்கியக் கவர்ச்சிக்கு கண்ணகி
அரசியல் கவர்ச்சிக்கு குஷ்பு
அகமும், புறமும், மணிமேகலை,
சிலப்பதிகாரம், குண்டலகேசியுடன்
‘சின்னத்தம்பி படத்தையும்’ சேர்த்து
தமிழ்ப்பெருமை உருவாக்க தயங்காதார்!

வழிபாட்டுக் கருவறையில்
தமிழன் நுழைய முடியவில்லை..
வழக்காடு மன்றத்தில்
தமிழ் நுழைய முடியவில்லை..
என்னடா இது வீண் இரைச்சல்
என்று சாலையைப் பார்த்தால்…

கூஜாக்கள் குலுங்க…
ஜால்ராக்கள் சிணுங்க…
கோடம்பாக்கத்து காக்கைகள்
குறிபார்த்துக் கரைய…
பல்கலை நரிகள் பாசாங்கு முழங்க…
கரைவேட்டி முதலைகள்
மத்தளம் கொட்ட
வயிற்றெரிச்சலோடு
கொடநாட்டு மதயானை பிளிற…
களைகட்டுகிறது கருணாநிதிச் சோழரின்
கோவையலங்காரம்…

பேச்சு மறுக்கப்பட்ட
கோவை சிறுதொழில் உதடுகளில்
அறுந்து கிடக்கும்
ஓசையற்ற கைத்தறியில்
இறந்து கிடக்குது நம் தாய்மொழி…

தமிழகத்தை உய்ப்பிக்க
உழைக்கும் மக்களிடமிருந்து
உருவாக வேண்டும் ஒரு செம்மொழி…

______________________________________________
– துரை. சண்முகம்
______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. //இன்னும் கொடுப்பதற்காய்
    தமிழ்நாட்டையே எடுத்துக் கொண்டார்!//

    🙂 ஆரம்பித்து 🙁 ஆக்கிய வரிகள்!

    • அட அட அடா,  அடுத்த பாராட்டு விழாவிற்கு பாட்டு ரெடி. ஏ.ஆர். ரகுமானைக் கூப்பிட்டு மியூசிக் போடச்சொல்லுங்க சீக்கிரம். இந்த பாட்டுக்கு தமிழினத்தின் தலைமகள் நமீதா மேடையில் நடனமாடுவார்.

      வாழ்க தமிழினம், வாழ்க தமிழ். 

  2. இன்றைய தமிழக நிலையை எடுத்து இயம்பிருக்கும் பாடல். இது போன்ற பாடல்களை வைரமுத்துவால் எழுத முடியுமா என்ன! இத்தனை ‘புகழை’ அளித்த வருக்கும் அளிக்கப்பட்டவருக்கும் ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிரேன்’. ‘தலைவர்’ புளகாங்கிதம் அடைந்திருப்பார் என்றே நம்புகிறேன்.

  3. […] This post was mentioned on Twitter by வினவு, vishnu boopathy. vishnu boopathy said: RT its all TRUE and true only @vinavu: செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!! http://bit.ly/ahKb7T […]

  4. அருமையான கவிதை. ஒவ்வொரு சொல்லிலும் உள்ள அரசியல் சிறப்பாக வெளிப்படுகிறது.

    கோபாலபுரத்து கோமானின் கண்மணிகள் எப்படி வினையாற்றப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

  5. //இலக்கியக் கவர்ச்சிக்கு கண்ணகி
    அரசியல் கவர்ச்சிக்கு குஷ்பு
    அகமும், புறமும், மணிமேகலை,
    சிலப்பதிகாரம், குண்டலகேசியுடன்
    ‘சின்னத்தம்பி படத்தையும்’ சேர்த்து
    தமிழ்ப்பெருமை உருவாக்க தயங்காதார்!//

    Ithai ithai than edhir parthen super …. anna nantri vinavu.

    Innum ithu pola niraya kavaithai thokuthu oru book podunga please

  6. உணர்சியூட்டும் கவிதை உண்மையான கவிதை ஆனாலும்…..

    ஈழத்தமிழர் செத்த பின்பு
    போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன்
    கருணாநிதிச் சோழனை மீண்டும் சிம்மாசனம் ஏற்றி
    அழகுபார்க்கும் தமிழகத் தமிழரைப்பற்றியும் ஒரு கவிபாட முடியுமா.

  7. “நியூ அமெரிக்கன் செஞ்சுரி” என்ற அமெரிக்க வெளியிறவுக் கொள்கை,ஜார்ஜ் புஷ் – சீனியர்-ஜூனியர் காலத்தில்,உருவாகிய போது,”ட்ராட்கியிஸம்” என்ற சொல அதில் உள்ளது.இதை தப்பும்,தவறுமாக ஈராக்கிலும்,ஆப்கானிலும் நடைமுறப்ப்டுத்தியது அமெரிக்க உளவு நிறுவனமான,”சி.ஐ.ஏ”.இதைதான், “குமரன் பத்மநாதனின் விடுதலைப்புலிகள்!”இலங்கைத்தமிழரின்,இயல்பான “யு.என்.பி” ஆதரவு தளத்தை “குமரன் பத்மநாதனின் விடுதலைப்புலிகள்!” பிரதிபலிக்கிறார் போலுள்ளது.”ட்ராட்கியிஸவதிகளான” ஜே.வி.பி. யை இலங்கைத் தமிழர்கள் (இடதுசாரிகள்?) உட்பட ஆதரித்ததாக வரலாறு கிடையாது!.பிரபாகரனை பிரேமதாசாவுடன் சேர்த்தவர்களும் இவர்களே.பிரேமதாசாதான் ஜே.வி.பி. யை அழித்தார்!.யு.என்.பி. யுடன் சேர்ந்து,பிரபாகரனை பேச்சு வார்த்தைக்கு உட்ப்படுத்தி,பலவீனப்படுத்தி,முள்ளியவய்க்காலில் அழித்ததும் இவர்களே(புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள்).தற்போது கே.பி. யின் செம்மொழி? ஆதரவு அறிக்கை இதையே காட்டுகிறது.பனிப்போரின் இந்த கொள்கைக்கு எதிரானதுதான்,”ரா” வின் நடவடிக்கை.ஜே.வி.பி.யில் மீது 1970… போருக்கும்,முள்ளியவாய்க்கால் போருக்கும்,”ரா” வை குறைகூறினால்,அரசியல் நியாயம் உள்ளது ஆனால் “இந்திய எதிர்ப்புணர்வு” என்ற போர்வையில்,இலங்கைத்தமிழர்களின் பிரத்தியேக,”தமிழக எதிர்ப்புணர்வாக” மாற்றுவதுதான் வேதனை!

  8. இதே கோவையில், ஓரிரு வருடங்கள் முன் அ.இ.செங்கொடி மாநாடு நடந்ததாக ஞாபகம்!
    சதா பணியாற்றும் அரசியலாருக்கும், அதிகாரங்களுக்கும், இலவச தமிழர்களுக்கும், வயிற்றெரிச்சல் கும்பலுக்கும், இது போன்ற சுகமான சொறிவுகள் தேவை!
    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! சகஜமப்பா!
    ஊர்வலம், மாநாடு,பொதுக்கூட்டம்,…இவையெல்லாம் பலம் காட்டவே! எந்த கட்சியும் விதிவிலக்கல்ல!
    செங்கொடிகள் உள்பட!

  9. thamizhaga tamizhargal endrum, ini oru pothum ilanagai tamizhanukku udhava maattaargal! ungal nadavadikkaigal , “than vinai thannai sudum, than appam than veettai sudum” – pattinathaar paadal varigal ninaivu kollavum!

  10. ///யாதும் ஊரே; யாவரும் கேளிர்
    ஹூண்டாயும், ஃபோர்டும் நம் உடன்பிறப்பே,
    எனப் பன்னாட்டு உறவில் புது எல்லை கண்டான்!
    அண்ணலும் ‘நோக்கியா’ அவளும் ‘நோக்கியா’
    என கம்பநாட்டாழ்வரையே கற்பனையில் விஞ்சி
    திருப்பெரம்புதூரில் தென்கொரியாவையே கொண்டான்!
    //// இதில் என்ன குற்றம் கண்டீர் ? அல்லது வட கொரியா போல தமிழகத்தை மாற்றியிருந்தால் தான் உங்களுக்கு திருப்த்தியாக இருந்திருக்குமோ ? இந்த அளவு வளர்ச்சி, வேலை வாய்ப்பு சாத்தியமானது, தாரளமயமாக்கலின் விளைவாகத்தான். இல்லாதிருந்தால், இதற்க்கும் வழியில்லாமல், 1980இல் வெளியான ’வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் வேலைக்காக அலையும் இளைஞர்களின் நிலை இன்றும் தொடர்ந்திருக்கும்.

    மற்றபடி கவிதை நல்லா இருக்கு.

    • சொற்ப விலையில் நிலம்,  மானியங்கள், IFST அளித்தது, செம்பரம்பாக்கம் தண்ணீரை ஓசியில் ஊறிஞ்சியது, 6 மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறை தொழிலாளியை விரட்டுவது இதற்காக கொரியாவை  அல்ல கருணாநிதியை பாராட்டலாம்

  11. உலகத்தமிழ் மாநாடு நடத்த முடியாமல் போனதும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். ://www.amudhavan.blogspot.comஅவருடைய மூளை எப்படி சூட்சுமமாக செயல்படுகிறது என்பதை அதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

  12. ஆகா ஆகா என் ஐயப்படுகளை நீக்கும் ஆழமான விளக்கங்கள் அறிவார்ந்த சொற்கள் என் அரசியல் அறியாமை நீங்கிவிட்டன எங்கே இதை எழுதிய புலவன் அவரை வரச்சொல்லுங்கள் மனதார பாராட்ட வேண்டும்

  13. தி.மு.க.வினரல்லாத ஒட்டுமொத்த தமிழக கட்சி சாராத பொது மக்களின் எண்ண ஓட்டம் இப்படி கவிதையாக கடல் மடை திறந்தது போல் கொட்டியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. குறைகளையும், பகல் வேஷ ஏமாற்று வேலைகளையும் சுட்டிக் காட்டுவது ஒவ்வொருவரின் கடமை. எனினும் பிறர் மனம் வருந்தும்படியான கடுமையான சொற்களை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

      • நண்பர் அம்பிகாபதி, இந்தக் கவிதையில் நாட்டு நடப்புக்களைத்தானே கவிஞர் எழுதியிருக்கிறார்? எதுவும் இட்டுக்கட்டி எழுதவில்லையே, நீங்கள் குறிப்பாக என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பது புரியவில்லை.

  14. ‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ எனப் புலம்பி
    ஊரறிய அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் போட்டுவிட்டு
    சத்தம் போடாமல் உச்சநீதிமன்றத்தில்
    பார்ப்பன மனுநீதிக்கு பங்கம் வராமல் பாதுகாக்க
    அந்த முள்ளை எடுத்தே வேலிகட்டும்
    இரண்டகத் திறமையில்
    பார்ப்பன குலமே மயக்கமுறும் பிறப்பொக்கும் இவர் பேரன், பேத்தி
    வாரிசு வரைக்கும்
    மதுரை தினகரன் அலுவலகத்தில்
    கொலையான ஊழியர்கள்
    சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகள்!
    இருப்பினும் வாழும் வள்ளுவர்… அருமை அருமை !

  15. ”;இயற்றமிழ் அழகிரிஇசைத்தமிழ் கனிமொழிநாடகத்தமிழ் தளபதிஎன முத்தமிழையும் வளர்த்துதமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்கமுயலும் திறமை முடியுமோ யாராலும்;;
    unmaileye ithu 100%unmai.ithai maatravo marukkavo yaarukkum dairiyam illai.
    unmaileye intha semmozhi manadil ungaludiya intha kavithaiyai vasikka sollavendum.

  16. பாதிக்கப்பட்டவர்களை சிரிக்க, அழ, சிந்திக்க வைக்கும் கவிதை. 

  17. நித்தியானந்தா செய்திகளை மக்கள் மறக்கடிக்கவே செம்மொழி மாநாடு பிரபலமானதா?
    ரஞ்சிதா எங்கே? நித்தி எவ்வளவு பணம் கொடுத்தார்?
    ஏன் எனில் ஒரு அறிவாளி சொன்னார் செம்மொழி மாநாடு செலவை நித்தி ஏற்று கொண்டதாக ! உண்மையா ?

  18. What a beautiful poem. It’s well written with full of hypocritic thoughts. My hats off to your unremarkable work. Please keep writng.
    I live in Canada and on off I read poems.

    Thanks

    Anton

  19. அருமை. கருணாநிதிக்கு மட்டும் இல்லை . இந்த தி மு க பரதேசிகள் கூட திருந்த போவதில்லை.

  20. ஆழமான கருத்துக்களை கொண்ட கவிதை.நன்றி வினவு, கவிஞர்.சிந்திக்க வைப்பதோடு வோட்டு போட்டு தெரிவு செய்யும் எம்மை செருப்பால் அறைகிறது.

  21. ///கூஜாக்கள் குலுங்க…
    ஜால்ராக்கள் சிணுங்க…
    கோடம்பாக்கத்து காக்கைகள்
    குறிபார்த்துக் கரைய…
    பல்கலை நரிகள் பாசாங்கு முழங்க…
    கரைவேட்டி முதலைகள்
    மத்தளம் கொட்ட
    வயிற்றெரிச்சலோடு
    கொடநாட்டு மதயானை பிளிற…
    களைகட்டுகிறது கருணாநிதிச் சோழரின்
    கோவையலங்காரம்…////

    அருமை………அருமை ……………

  22. Enathu thozhi italyilirunthu valithala mukavariyai anuppivathal. muthal variyile kandupidithuvitten ithu thurai shanmugathin kavithaientu. veruyaral ippadi ezhuthirukka mudium oru pala background ullavarallamal.

  23. கலைஞரை குறை கூறுபவர்கள்(பார்ப்பனர்கள்,ஜாதிவெறியர்கள்,ஜெயலலிதாவின் அடிமைகள்) ஒன்று புரிந்து கொள்ளவேண்டும் கலைஞரின் உதவியை நாடாமல் நீங்கள் ஜெயலலிதா,வைகோ போன்றவர்களின் புகழை பாடினால் நாங்கள் பொறாமைபடமாட்டோம்

  24. “தினம் தமிழனுக்கு சாராயத்தை ஊத்தி கொடுத்து அவனை கொல்கின்ற உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா ??? இலங்கையில் நமது ரத்தங்களை இத்தாலி நாட்டு காரியோடு சேர்ந்து கொன்று ஒழித்து, இன்று அவர்களை நடுத்தெருவில் பிச்சை காரர்களின் நிலைமையை விட மோசமாக ஆக்கிய துரோகியே உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா ? பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய-மாநில அரசில் பங்கு பெற்று நாட்டையே உறிஞ்சி உப்புகிராயே, உனக்கு செம்மொழி மாநாடு என்ன கேடா ? ஊருக்கு ஊர் பொண்டாட்டிகளையும் பல வைப்பாட்டிகளையும் வைத்து அவர்களின் மூலம் காமத்தில் பிறந்த விஷ ஜந்துகள் நாட்டை கொள்ளை அடிப்பதை ரசிக்கும் கொம்பேறி மூக்கனே, உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா ? காலை குஷ்பு, மதியம் ஷைலா, மாலை நமீதா என்று இந்த 86 வயதிலும் காமத்தை அடக்க முடியாது அலைகிறாயே, உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா ? நீ எப்போது பாடையிலே போரையோ, அப்போதுதான் தமிழ் என்ற பூ மலரும். நீ குழிக்குள் போகும் பொது இந்த சுத்திர பூக்கள் வாசமிட்டு மலரும்” (a comment made by an anonymous reader, appeared in Dinamani’s web-page )

  25. உண்மையை நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்… பாராட்டுக்கள்…

    கொடுமைகளையும் கூத்தாட்டங்களையும் பார்த்துப் பார்த்து….நம் கையாலாகாத்தனத்தை நினைத்து நினைத்து நமக்கே நம் மீது வெறுப்பு வருகின்றது….
    http://naanummanithan.blogspot.com/2010/06/oil-spill-hidden-danger-on-earth.html

  26. //பேச்சு மறுக்கப்பட்டகோவை சிறுதொழில் உதடுகளில்அறுந்து கிடக்கும்ஓசையற்ற கைத்தறியில்இறந்து கிடக்குது நம் தாய்மொழி…தமிழகத்தை உய்ப்பிக்கஉழைக்கும் மக்களிடமிருந்துஉருவாக வேண்டும் ஒரு செம்மொழி// அருமையான வரிகள் சில கவிஞர்களின் எழுத்து வரிகள் சமுதாய மாற்றத்தை எதிர்பார்த்து நிற்கின்றன சமீபத்தில் நான் படித்த காசி ஆனந்தன் நறுக்குகள் என்ற புத்தகம் தேர்தல் பாதையின் மெசடியை ஒரு சிறு நறுக்கு மூலம் எளிமையாக இப்படி விளக்குகிறார்.                                     மாலை வளையல் மூக்குத்தி பொன்னான எதுவுமே இல்லை எங்கள் குடிசையில் அவன் சொல்கிறான் இருக்கிறதாம் எங்களிடம் பொன்னான வாக்குகள் 

  27. உள்ளக் கொதிப்பை அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறார் கவிஞர். அற்புதம். ஆயிரம் வானவெடிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் உண்மையின் அமைதியான இரைச்சலுக்கு கலைஞரின் காதுகள் தப்பி விட முடியாது.

  28. ஆயிரம் பவுர்ணமி
    கண்டீரோ தமிழ் காதலரே
    நல்லவேளை பவுர்ணமிக்கு உடலில்லை

    சேரனென்னெ சோழனென்ன பாண்டியனென்ன
    இஸ்கூல் பீஸ் கட்ட வழியில்லை
    மொத்தமாய் தமிழ்த் தாயின் மடி
    லீசுக்கு ஆயிரம் ஆண்டுகள்

  29. நதிக்கரை நாகாரீகம் – ஆனாலும் திராவிடம் :

    வெள்ளையன் ஓடம் விட்ட நதி
    பச்சையப்பன் நீராடிய நதி
    கட்டாந்தரையை கண்டிராத நதி
    வற்றாத ஜீவ நதி.

    துணி வெளுக்கும் படித்துரைகள்;
    படகுத்துரை மண்டபங்கள்;
    பஞ்சகாலம் வந்தபோதும்
    சஞ்சலமின்றி ஓடும் நதி!

    ***

    ஆற்றின் அமைதியும்,
    இருளும் நிலவும்,
    சூரியனும் சூனியமும்
    அழகுச் சித்திரம்தான் – ஆனாலும்
    கண்களை மூடிக்கொண்டுதான்
    காணவேண்டும்!
    ____

    எங்களின் பிறப்பிடம், வசிப்பிடம்
    வாய்ததெல்லாம் இங்கேதான்.
    அதனால் – இது ஆறறங்கரை நாகாரீகம்:
    ஆனாலும் திராவிடப் பாரம்பாரியம்!
    தெளிவாய்த்தான் கூறுகிறோம்;
    உங்களின் குழப்பதிற்கு
    நாங்கள் எப்படி பொறுப்பாவோம்?

    ***

    அமேசான் வாசிகள் போல்
    ஆற்றங்கரைக் குடில்கள்.
    எட்டுக்கு எட்டில் கீற்றோலைத் தட்டி.
    கரையை சாதித்துவிட்டால்
    குந்திக்கொள்ளத் தரை!
    நேரான கோடுபோட்ட தெரு –
    ஒரு ஆள் போக, ஒரு ஆள் வர.
    பதினாறடிச் சறுக்கலில்
    மலைக் கிராமம்போல.
    ஆனால் ஊரில்லை, பேரில்லை,
    முகவரியுமில்லை!
    தெருவுக்கும் பெயரிடவில்லை,
    தெருவிளக்குமில்லை – அதனால்
    மின்சாரமுமில்லை!!!

    ***

    ஒன்றுபோலத்தான் குடில்கள் – ஆனால்
    கூரைகள்?
    வியந்துபோவீர்கள்:
    அத்தனையும் சித்திரங்கள்;
    கண்ணைப் பறிக்கும் வண்ணமயம்.
    வர்ண ஜாலம் வீசும்;
    வர்ண வாசமும் வீசும்!

    ***

    அதோ…
    அந்தப் படகுதுறைக்குப் பக்கதில்
    எமது குடில்.
    வியப்பாயிருந்தால் வந்து பாருங்கள்
    கண்ணைப் பறிக்கும் வண்ணக் கூரையை…!

    ***

    இதோ…
    செல்வியின் சிரிப்பு,
    கண்களில் தெறிக்கும் குறும்பு.
    கன்னத்துக்குக் கன்னம் எட்டடி.
    நெற்றிக்கும் கழுத்துக்கும் எட்டடி.
    கனச்சிதமாய் கூரையில்
    கவிழ்ந்து கிடக்கிறார்.

    “அறுபைத்தைந்தின் அகவையை எட்டும்
    தங்கத் தாரகயே வா…’ – கட்சிக் கலரில்.
    …ழ்த்த வயதில்லை – வணங்குகிறோம்”
    எனும் எச்சம் தென்னங்கீற்றில்
    சுருண்டு கிடக்கிறது!
    அந்தக் குறும்புச்சிரிப்பு
    உடம்பின் வருணணைக்கா
    என்பது புரிந்தபாடில்லை.
    மயிலை மாங்கொல்லையில்
    கருவாடாயக் காய்ந்து கிடந்ததை
    முந்தின மாதம் மீன்பாடி வண்டியில்
    எங்க நைனா தள்ளிக்கொண்டு வந்தார்!

    ***

    இந்த வாசல் தட்டியைப் பாருங்கள்…
    மதுரைக்கார அழகிரி!
    ஊருக்குப் புதுமுகம்.
    அண்ணா சாலையில்
    ஆளுயரத் தட்டியில்
    அனாதையைய் நின்றிருந்தார்.
    இதோ… இப்போது இங்கே!
    முட்டிவரை வெட்டிவிட்டதால்
    நாலடி உயர வாசலில்
    கச்சிதமாய் நிற்கிறார்.
    போகும்போதும் வரும்போதும்
    கைகூப்பி வணக்கம் போடுவார்!

    ***

    அந்த முனுசாமி வீட்டிலேதான்
    வைகோ இருக்கிறார்.
    ஐயகோ, கலங்கிய கண்கள்.
    வைகோ கைகாட்டிய இடத்தில்
    நட்சத்திர வடிவில்
    முத்துக்குமார் படம்.
    அதற்குக் கீழே
    ஈழப் படுகொலைப் படங்கள்.
    “ரத்த ஆறு ஓடும்” என்று
    ‘ராவா’கப் பேசினவர் – அந்தோ…
    சித்தம் கலங்குகின்றார்;
    சிந்தையும் கலங்கினாரே…!

    ***

    கஜா வீட்டுக்கு வாருங்கள் -அங்கே
    விஜயகாந்த் இளிக்கிறார்.
    கருப்பு எம்ஜியாராம் – ஆனால்
    கண்கள் ‘செவ செவ’ என்று இருக்கும்.
    கருப்பு எம்ஜியாருக்குப் பக்கதில்
    பொறுப்பான பொண்டாட்டி.
    அவருக்குப் பக்கதில்
    ஆசை மச்சான்.
    அதற்கும் பக்கத்தில்?
    ரெண்டு காலிக்கட்டங்கள் – வாரிசுகளுக்கு!

    கேப்டனின் ஆக்ரோஷம்
    துல்லியமாகத் தொ¢கிறது…
    இந்த முறைக்கு பழுக்கப்போவது
    எந்தத் தொண்டனின் கன்னமோ…?

    ***

    முந்தானாள் வரையிலே
    மங்காத்தா கூரையிலே
    மருத்துவர் ‘மாங்காய்’ ராமதாசி இருந்தார்.
    கூடவே அன்பு ‘மனி’ மகனும்.
    அருமைத் தங்கையும்கூட இருந்தார்கள்.
    ஆனால்… ஏனோ தொ¢யவில்லை –
    ‘வீட்டுக்கு விளங்கலை’யென்று
    மங்காத்தா தூக்கிப் போட்டாள் தெருவிலே.
    இப்ப்போது அவள் கூரையில் ¡¢த்தீஷ்!
    ராமனாதபுரத்துச் சொந்தம்
    ராசி பார்த்து
    ரயிலேறி கொண்டுவந்தது!

    ***
    ஆனால் ஐயா,
    சிவாஜி இருந்திருந்தால் செத்திருப்பான் –
    இந்த நடிப்புக்கு!
    ஒரே முகம் – ஒரெயொரு முகந்தான்.
    அதிலே மகிழ்ச்சியும் இருக்கும்,
    சோகமும் ததும்பும்.
    சூழ்ச்சியென்பது இருக்காதைய்யா.
    இந்தச்சிக்கலான முகம்
    இங்கிருந்து மூன்றாவது குடிசை!
    யாரெனக் கேட்பீரேல்…
    அவர்தான் அண்ணன் திருமா.

    எப்படி ஐயா, எப்படி முடியும்?
    ஆண்டாண்டு காலத்துக்கும்
    இந்த ஆண்டையின் நடிப்பை
    மறக்க முடியுமா?
    மறுக்கத்தான் முடியுமா?

    ***

    முக்கால்வாசிக் கூரைகளிளும்
    ஓய்வெடுக்கும் முதியவர், கலைஞ்சர்.
    இவர் –
    ஏழயின் சிரிப்பில்
    இரைவனைக் கண்டுவிட்டால் –
    திண்ணை காலியாகக் காத்திருக்கும்
    சென்னைத் தளபதி
    பதினாறு புள்ளி 00000.25 அடி பாய்வார்!

    ***

    கூட்டிக் கழித்தால்
    தமிழகத்து எதிர்காலங்கள்
    தொங்கிக் கொண்டிருக்கின்றன –
    எங்கள் கூரைகளில்!
    எப்படியென்று கேட்கிறீர்களா?
    கர்ம வீரர்களாகவும், கலைஞ்சர்களாகவும்,
    புரட்சித் தலைவர் / தலைவிகளாகவும்,
    தளபதி / இளைய தளபதிகளாகவும்,
    கேப்டன் களாகவும், எம்டன் களாகவும்,
    சிறுத்தைகளாகவும், பன்றிகளாகவும்,
    கருப்பு நிலாக்களாகவும்,
    சூ¡¢யன் களாகவும், நட்ச்சத்திரங்களாகவும்,
    அமாவாசைகளாகவும்,
    விடிவெள்ளிகளாகவும், வெட்டுக் கத்திகளாகவும்,
    வெங்காயங்களாகவும்,
    மொத்ததில்…,

    மொத்ததில்…
    ஆ¡¢யர்களாகவும், திராவிடர்காளாகவும்!

    ***

    அடடா…
    அது அவர்கள் நாகா£கம்!
    அவர்களுக்கு அவர்களாகவே
    போர்த்திக் கொண்ட
    நாமகரணத் துண்டுகள்!
    புரியாமல் தவிக்கும் பிண்டமே…
    இதுதாண்டா அரசியல் நாகாரீகம்…!
    ஆனாலும் எங்களுக்கு
    ஆற்றங்கரை நாகாரீகம்.
    ஆனாலும் நாங்கள் ஆரீயர்களல்ல…
    திக்கற்றுப் போன திராவிடர்கள்தான்!

    ***
    இன்னொரு நாகரீகம் …
    சினிமா நாகரீகம் தெரியுமா உங்களுக்கு?
    பம்பாயில் இருக்கும் இதே கிளை நதியின்
    கரைகளில் வசிக்கும் நாய்கலைப் பற்றியது.
    இந்திய சே நாய்களைப் பற்றிய
    இங்கிலீசுப் படம் –
    அள்ளிக் கொண்டுவந்தது ஆஸ்கார்களை…!
    மேட்டுக்குடி மகிழ்ந்தது.
    நடுத்தரம் சிலிர்த்தது.
    வறுமைக் கோட்டில் இருந்தவர்களும்
    கொண்ண்ண்டாடி விட்டார்கள்.
    கொண்டுவந்துவிட்டான் ஒரு இந்தியன்.
    அதுவும் ஒரு தமிழன் – டமிளிலேயே பேசினவன்.
    கவுரவத்தை வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டான் –
    இந்தியக் கவுரவத்தை
    சந்தியில் அல்லது சந்தையில் விற்ற பிறகு!

    ***

    ஆரிய மாயையும்
    திராவிட சூழ்ச்சியும்
    உங்கள் நீரோட்டத்தின்
    ஊற்றகிப் போனது.
    அதன் ஜனனாயக ஒழுக்குத்தான்
    இந்தக் கருப்புச் சாக்கடை.
    இந்தச் சாக்கடையின் விளிம்பில்
    சிக்கிக்கொண்டுவிட்ட நாங்கள் –
    இதோ…
    இந்தக் கரைச்சறுக்கலை
    இறுகப் பிடிது மேலேறிவிட்டாலோ…

    எங்களின் நொ¢சல்
    உங்களை நசுக்கிவிடும்.
    எங்களின் வியர்வை நாற்றத்தில்
    உங்களின் மூச்சுத் திணறும்.
    எங்களின் வயிற்றில்
    சோற்றுக்காய் சுரந்த அமிலம்
    உங்களை சுட்டொழித்துவிடும்.
    இந்தக் கருப்புச் சாக்கடையில்
    ரத்த வீச்சம் வீசும்!

    – புதிய பாமரன்.
    yenathu kavithaiyai pinnoottam seithullen. Tamil font SaiIndira from http://www.azhagi.com.
    Pinnoottam seithapiragu font maari vidukirathu. uthavi seyyavum. Vinavu udavum yenru yethirpaarkkiren.

    • உங்களின் ஆதங்கமே எங்களுக்கும். என்ன செய்வது எங்களுக்கு அரசியலும் சுத்துமாத்தும் கைவருவதில்லை.

  30. எங்களது தானைத்தலைவர் இடைத்தேர்தல்களுக்கு பொன்முடியை அனுப்பித்தான் வெற்றிபெறுவார். நான் அமைச்சர் பொன்முடி அவர்களை சொல்லுகிறேன். தமிழ் மொழி இப்படியாவது தனது புகழை உலகம் முழுவதும் பவரவட்டும் என்ற பரந்த மனம் நம் தலைவருக்கு. நன்றி.

  31. இது போன்ற தீ பறக்கும் எழுச்சி எண்ணங்களை மக்கள் அறிய செய்யுங்கள் , வலைப்பதிவு படித்த செயல்படாத முட்டாள்களை மட்டுமே சேரும். உங்கள் எண்ணங்கள் பாமர மக்களை சென்றடைய தேர்தல் களம் சிறந்த இடம். களம் காணுங்கள் …. தமிழின துரோகிகளை ஓட ஓட விரட்டுவோம்.

     தமிழனுக்கு செருப்பால் அடித்தாலும் சொரணை இல்லாமல் போய்விட்டதே!. மக்கள் சிந்தித்தால் போதும். இவர்கள் சிந்திக்க விடாமல் முட்டாளாகவே வைத்திருக்கிறார்கள் .

    வேதனையுடன் ….

  32. பட்ட பகல் திருடர்களை
    பட்டாடைகள் மறைக்குது

    கால நிலையை மறந்து – சிலது
    கம்பையும் கொம்பையும்
    நீட்டுது
    புலியின் கடுன் கோபம் தெரிந்தும்
    வாலைப்பிடித்து ஆட்டுது
    வாழ்வின் கணக்கு புரியாமல் -ஒன்று
    காசைத் திருடி பூட்டுது -ஆனால்
    காதோரம் நரைத்த முடி
    கதை முடிவை காட்டுது ….

    வித விதமான பொய்களை கூறி
    உருட்ட்டும் உலகமடா -தம்பி
    திருந்தி நடந்து கொள்ளடா -இதயம்
    திருந்த மருந்து சொல்லடா

    இது கொள்ளை அடிப்பதில்
    வல்லமை காட்டும்
    திருட்டு உலகமடா -தம்பி
    திருந்தி நடந்து கொள்ளடா -இதயம்
    திருந்த மருந்து சொல்லடா …. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  33. அருமை ,அருமை .எப்போதும் போல நல்ல கவிதை !
    தோழர் துரை ஷண்முகத்திற்கு என் வாழ்த்துக்கள் !

  34. தக்க சமயத்தில் எழுதப்பட்டுள்ள கூர்மையான கவிதை. நன்றி. வேடிக்கை பார்க்கும் மானமிழந்து நிற்கும் நமது ‘தமிழ்க்குடியையும்’ சற்று கவனித்திருக்கலாம்.

  35. அட அட அடா, அடுத்த பாராட்டு விழாவிற்கு பாட்டு ரெடி. ஏ.ஆர். ரகுமானைக் கூப்பிட்டு மியூசிக் போடச்சொல்லுங்க சீக்கிரம். இந்த பாட்டுக்கு தமிழினத்தின் தலைமகள் நமீதா மேடையில் நடனமாடுவார்.

    பட்ட பகல் திருடர்களை
    பட்டாடைகள் மறைக்குது

    கால நிலையை மறந்து – சிலது
    கம்பையும் கொம்பையும்
    நீட்டுது
    புலியின் கடுன் கோபம் தெரிந்தும்
    வாலைப்பிடித்து ஆட்டுது
    வாழ்வின் கணக்கு புரியாமல் -ஒன்று
    காசைத் திருடி பூட்டுது -ஆனால்
    காதோரம் நரைத்த முடி
    கதை முடிவை காட்டுது ….

    வித விதமான பொய்களை கூறி
    உருட்ட்டும் உலகமடா -தம்பி
    திருந்தி நடந்து கொள்ளடா -இதயம்
    திருந்த மருந்து சொல்லடா

    இது கொள்ளை அடிப்பதில்
    வல்லமை காட்டும்
    திருட்டு உலகமடா -தம்பி
    திருந்தி நடந்து கொள்ளடா -இதயம்
    திருந்த மருந்து சொல்லடா …. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  36. யதார்த்தத்தை உணர்த்திய சிறப்பான கவிதை – பாராட்டுக்கள் – ஒவ்வொரு பஞ்சாலையும் ஒரு கோடி, பனியன் என்ற பெயரில் சிறிய பெரிய நிறுவனங்கள் தலைக்கு பல லட்சங்கள், என செம்மொழி மாநாட்டு நன்கொடை வசூலையும் இரண்டு வரிகள் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பு சேர்த்திருக்கும் .-
    சி்த்திரகுப்தன்

  37. Very well naratted poem, It is true reflection current situation in TamilNadu. All are become big Jalras for karunanidhi. Tamilnadu is going backward.

    Dr. Karikaalan, Calcutta

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க