முகப்புசெம்மொழி மாநாடு – கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை !!
Array

செம்மொழி மாநாடு – கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை !!

-

vote-012கோவையில் நடக்க இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டின் இப்போதைய முக்கியமான செய்திகளில் ஒன்று. துணை முதல்வரும் ஏனைய அமைச்சர்களும் தொடர்ந்து கோவையை பார்வையிட்டு வருகிறார்கள். இது கருணாநிதியின் வாழ்நாள் கனவு என்பது போன்ற ஒரு கருத்து எல்லா அச்சு ஊடகங்களாலும் உமிழப்படுகிறது. கோவை மக்கள் அகலமாக்கப்படும் சாலைகளைப் பற்றியும் புதைந்துபோன வீடுகளைப் பற்றியும் பேசுகிறார்கள். அமைச்சர்கள் கோவைக்கு வரப்போகும் உள்கட்டமைப்பு வசதிகளைப்பற்றி பெருமை பேசுகிறார்கள். பொதுவாக கவனிக்கவேண்டிய செய்தி யாதெனில் ஒருவரும் தமிழைப் பற்றி மறந்தும்கூட பேசுவதில்லை.

தொன்னூற்று மூன்றாம் வருடம் தஞ்சாவூரில் நடந்த எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டின்போது நான் எட்டாம் வகுப்பு மாணவன். அப்போது எனக்கிருந்த அறிவுக்கு மாநாடு என்றால் அதில் என்ன செய்வார்கள் என்பது பற்றி எந்த ஆர்வமும் எழவில்லை. ஊரைச் சுற்றி போடப்பட்ட சாலைகளும் ஒரு மிதவைப்பாலமும் ஒரு ரூபாய்க்கு போடப்பட்ட பொன்னி அரிசி சாதமும் மட்டுமே நான் விவாதிக்கப் போதுமானதாக இருந்தது. இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதே மனோநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. அன்றைய தமிழ் மாநாட்டின்போது ஜெயலலிதாவின் கட் அவுட்டுக்கள் தஞ்சை நகரெங்கும் பயமுறுத்தின இப்போது அதே நிலைதான் நீடிக்கிறது. கருணாநிதி ஸ்டாலினின் மண்டைகளைப் பார்க்காமல் நீங்கள் இங்கு கால் கிலோமீட்டர்கூட பிரயாணம் செய்ய முடியாது, அத்தனை பேனர்கள் வீதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன.

ஈழத்துப் பேரழிவுக்குப் பிறகு மக்கள் அந்த சோகத்திலிருந்து மீளாத தருணத்தில் கருணாநிதியால் இந்த மாநாட்டின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலில்லாமலே உலகத்தமிழ் மாநாடு என்ற அறிவிப்பு வெளியானது.அந்த நிறுவனத்தின் தலைவர் நெபுரு கராஷிமா ஒரு மானம் மரியாதை உள்ள ஒரு ஆள் போலிருக்கிறது அதனால் கருணாநிதியின் ’தேவையை’ அவரால் ஏற்க இயலவில்லை. நீண்டகாலமாக தி.மு.க வின் தலைவராக இருப்பதால் உலகில் சில மானஸ்தர்களும் இருப்பார்கள் என்ற தகவல் அவருக்கு நினைவுக்கு வராமல் போய்விட்டது. நெபுரு கராஷிமாவால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு உலகத்தமிழ் செம்மொழி மாநாடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம்மாநாடு கருணாவின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக திட்டமிடப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இந்த புள்ளியிலிருந்தே கிடைக்கத் துவங்குகின்றன.

அதன் பிறகு சட்டமன்றத்தில் பேராசிரியர் அன்பழகன் உலகத் தமிழ் ஆய்வு மன்றம் செத்துவிட்டது என்று அறிவித்தார். ஈழத்து படுகொலைகளின் சோகம் அகலாத சூழலில் இந்த மாநாடு தேவையா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது கனிமொழி சொன்னார் ‘ மாநாட்டில் நமது ஒற்றுமையை உலகுக்கு காட்டுவதன் மூலம் நாம் ஈழத்தமிழருக்காக இன்னும் அழுத்தமாக குரல் கொடுக்கலாம்‘. ஒன்று மட்டும் உறுதி, இன்றைய ஊடக ஆதரவுச் சூழலில் கருணாநிதி முகச்சவரம் செய்துகொள்வதுகூட ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் என்று கனிமொழியால் கூசாமல் சொல்லிவிட முடியும். சட்டமன்றத் தேர்தலை விரைவாக நடத்தும் எண்ணத்திலிருந்த கருணா இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டின் துவக்கத்தில் இம்மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார். ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க இவ்வளவு குறுகிய காலம் போதாது என்று அறிஞர்கள் கோரியதன் பிறகு மாநாடு ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. முத்தமிழ் செக்யூரிட்டிக்கு ( காவலருங்க) ஆய்வுக்கட்டுரை என்பது ஜெகத்திரட்சகனுடைய சொறிந்துவிடும் வாழ்த்துரையையைப் போல எளிமையானதான தோன்றியதை என்னவென்று சொல்வது?

தமிழை ஒழித்துக்கட்டும் முயற்சி ஏதோ ஜெயலலிதா காலத்தில் துவங்கி கருணாநிதி காலத்தில் நிலை பெற்றதாக பலர் கருதுகிறார்கள், சில தமிழறிஞர்கள் உட்பட. தமிழ் மொழி காமராஜர் அண்ணாதுரை காலம்தொட்டே அரசினால் கைவிடப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் அண்ணாதுரையை அரியாசனத்தில் அமர்த்தியது. தமிழின் வளர்ச்சிக்கு அவர் செய்தது என்ன ? இன்னும் சொல்லப்போனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் மாணவர்ளை காட்டிக்கொடுக்கும் வேலையைத்தான் செய்தார். லட்சக்கணக்கிலான தமிழ் மக்களை மட்டுமே கொண்டிருக்கிற இலங்கையில் பொறியியலும் மருத்துவமும் தமிழில் கற்றுத்தரப்படும்போது இதற்கான முதல் முயற்சிகூட அண்ணா காலத்தில் செய்யப்படாதது ஏன்? 1968ல் அண்ணதுரையால் நடத்தப்பட்ட இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் ஏராளமான சிலைகள் சென்னையில் திறக்கப்பட்டன அலங்கார ஊர்திகள் மாநாட்டில் ஊர்வலம் சென்றன, வேறென்ன நடந்ததென்றால் யாருக்கும் தெரியாது. நாடகத்துறையில் இருந்தவர் என்பதால் அரங்கம் அமைபதைத் தவிர வேறெதையும் அவரும் செய்யவில்லை.

அதன் நீட்சியாக கருணாநிதியும் மொழிக்கு அவர் செய்யப்போகும் சிறப்பு பற்றி ஒரு எழவும் பேசியதாகக் காணோம் எப்போதும் மாநாட்டுப் பூங்காவில் தொடங்கி அரசுக் கழிப்பிடம் கட்டுவது வரையிலான கட்டுமான விவகாரங்களைப் பற்றித்தான் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். மாநாட்டுப் பாடலை கருணாநிதி எழுத ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க கவுதம் மேனன் இயக்கியிருக்கிறார். நல்லவேளையாக நமீதா நடனமாடாத காரணத்தால் தமிழினம் தப்பிப்பிழைத்தது. அண்ணாதுரை காலத்தில் துவங்கிய ஜனரஞ்சகமான மாநாடு எனும் பழக்கம் இப்போது கருணாநிதியின் கதை வசனம் எழுதப்பட்ட படங்களைப் போல சகிக்க முடியாததாக வளர்ந்திருக்கிறது. மொழியைக் காப்பதற்கு ஏதாவது செய்பவர்தானே அதை வளர்ப்பதற்கும் தகுதியுடையவராவார் ? கருணா தமிழைக் காப்பதற்கு என்ன முயற்சியை இதுவரை எடுத்திருக்கிறார்? தமிழில் கலைச்சொற்களை உருவாக்குவது, மற்ற மொழி அறிவியல் புத்தகங்களை தமிழாக்கம் செய்வது ( இவை இப்போதும் சீனா ஜப்பான் நாடுகளில் மின்னல் வேகத்தில் செய்யப்படுகின்றன ) ஆகியவற்றுக்கான முன்முயற்சிகள் மயிரளவுகூட தமிழக அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. தமிழின் தொன்மையில் நான்கில் ஒரு பங்குகூட இல்லாத கன்னட மொழியின் இலக்கியங்கள் மலிவுப்பதிப்பாக கர்நாடக அரசால் மக்களுக்குத் தரப்பட்டன. இங்கு அதுபோன்ற முயற்சிகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா?

தாய்மொழிக் கல்வியை அரசுப் பள்ளிகள் மட்டுமே நடத்த முடியும். பொதுவாகப் பார்க்கையில் அரசுப்பள்ளிகளது தரம் குறைவது என்பது எதேச்சையானது அல்ல. இது பல ஆண்டுகளாக திட்டமிட்ட வகையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் அரசின் கல்விச் செலவினத்தை குறைக்கவும் இன்னொருபுறம் தனியார் வசம் கல்வியை ஒப்படைக்கவுமே அரசு விரும்புகிறது. இப்போது அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணத்தை ஏற்க மறுத்து பள்ளிகளை திறக்க மாட்டோம் என்று அரசை மிரட்டும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சொல்வது என்ன ? நாங்கள் இல்லாவிட்டால் பின்னாளில் தரமான கல்வி பெற்றவர்களே தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்கிறது. ஆயிரக்கணக்கான பள்ளிகளை நடத்தும் அரசுக்கு இதைவிட பெரிய அவமானம் இருக்க முடியுமா ? ஓராண்டுக்கு முன்பு கல்வியாளர் வசந்திதேவியால் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மிக மோசமானதாக இருக்கிறது என்று முடிவு வந்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு பூர்த்தி செய்த அரசுப் பள்ளி மாணாக்கர்கள் எளிமையான வாக்கியங்களை அமைக்கவே அல்லது புரிந்துகொள்ளவோ தெரியாதிருக்கிறார்கள் என்கிறது அவ்வறிக்கை.

பெரும்பாலான கிராமப்புற பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகள். நிர்வாகப்பணியையே செய்யத் திணறும் ஆசிரியரால் எப்படி ஐந்து வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும் ? இப்படியான சூழலில் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கு வரும் மாணவர்கள் அந்தப் பாடச்சுமையை எப்படி எதிர்கொள்வார்கள்? பெரும் சதவிகிதமான மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடிவதற்குள் படிப்பிலிருந்து விலகுகிறார்கள். அரசும் அதையே விரும்புகிறது. ஏழைகள் எல்லோரும் படிக்கத்துவங்கினால் பிற்பாடு அவர்கள் உயர்கல்வி கேட்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகவே அரசுப்பள்ளிகளை தரமில்லாமல் வைத்திருப்பது அரசுக்கு மிக அவசியம். இந்த ஆண்டு +2 தேர்வில் மிக அதிக தேர்ச்சி விழுக்காடு காட்டிய விருதுநகர் மாவட்டத்தில் ஒரு அரசுக் கல்லூரிகூடக் கிடையாது. கேட்டால் சிறிய மாவட்டம் அதனால் அரசுக் கல்லூரி அமைக்க முடியாது என்கிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. ஆனால் அங்கு ஏறத்தாழ இருபது தனியார் கல்லூரிகள் இருக்கின்றன. இப்படி வறிய மக்கள் போகக்கூடிய ஒரே இடமான அரசுக் கல்லூரிகள் இல்லாத பட்சத்தில் ஏழைப் பெற்றோர்கள் எந்த நம்பிக்கையில் பள்ளிக்கு தம் பிள்ளைகளை அனுப்புவார்கள் ?

மற்றொரு வாதம் தமிழ்வழிக் கல்வியை மக்கள் விரும்புவதில்லை என்பது. இது ஏறத்தாழ உண்மையே. ஆயினும் மக்களை அந்த சூழலுக்கு தள்ளியவர்கள்தான் தமிழ்நாட்டை நாற்பதாண்டுகளாக ஆள்கிறார்கள். இவர்கள்தான் ஆளுக்கொருமுறை தமிழ் மாநாட்டை நடத்தினார்கள் மற்றும் நடத்துகிறார்கள். மருத்துவம் மற்றும் பொறியியல் உட்பட எந்த ஒரு உயர்கல்வியும் தமிழில் இல்லாததால் மக்கள் எல்லோரும் இயல்பாகவே ஆங்கிலவழிக் கல்விதான் சிறந்தது என்று முடிவெடுக்கவே செய்வார்கள். ஒருவேளை தமிழ் வழியிலேயே தமது பிள்ளைகளை படிக்கவைக்க விரும்புபவர்களுக்கு இங்கு போதுமான பள்ளிகளும் கிடையாது. ஆக ஏழை மக்களாக இருந்தாலும் சரி தமிழ்வழியில் தம் பிள்ளைகளை படிக்கவைக்க விரும்பும் நடுத்தரவர்க மக்களாக இருந்தாலும் சரி அவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாவது உறுதி. இப்படி சிறுகச்சிறுக மக்கள் தமிழ் வழிக் கல்வி மீது அலட்சியத்தை உருவாக்கிய அரசுதான் இப்போது செம்மொழி மாநாட்டை நடத்துகிறது.

இப்போதும் ஆயிரக்கணக்கிலான ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாட்டில் காலியாக இருக்கின்றன. அதில் மற்ற பாடங்களுக்கு நிரப்பப்படும் அளவுக்கு தமிழாசிரியர்கள் நிரப்பப்படுவதில்லை அல்லது நிரப்பப்படுவதே இல்லை. தமிழை முதன்மைப்பாடமாக இல்லாமல் ஒரு பாடமாக படித்தவர்கள் மட்டுமே தமிழாசிரியர்களாக தற்போது பணியாற்றுகிறார்கள். தமிழ் மொழியை உயர்கல்வியாக படித்த மாணவர்கள் மாநாட்டு அறிவிப்பின்போது மேற்கூறிய காரணத்தைச் சொல்லி தமிழ் மாநாட்டின்போது தற்கொலை செய்துகொள்ளப்போவதாக!! ஒரு போராட்டத்தை அறிவித்தார்கள். அரசும் இதை கண்டுகொள்ளவில்லை, கருணாவின் தமிழுக்கான வாரிசு கனிமொழியும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது ஃபேஷியல் செய்துகொள்ளப் போய்விட்டாரா என்று தெரியவில்லை ஆக தமிழ் வழியில் படிக்கவும் வாய்ப்பு கிடையாது படித்தவனுக்கும் வாய்ப்பு கிடையாது.

இந்தப் பின்புலத்திலிருந்துதான் நாம் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளை அணுகவேண்டும். தமிழ் மொழியை இந்தத் தலைமுறையோடு தலைமுழுக வைக்கும் காரியங்கள் முழுவீச்சில் நடக்கின்றன. பிரந்தியமொழியில் ஒரு வார்த்தைகூட கற்காமல் பட்ட மேற்படிப்புவரை கற்க முடியும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பள்ளிகளில் தமிழ் கட்டாயம் எனும் முந்தைய திமுக அரசின் சட்டம் என்னவானது என்றே தெரியவில்லை. மருத்துவப் பட்ட மேற்படிப்புத் தேர்வை தமிழில் எழுதி படாதபாடுபட்டார் மருத்துவர் ஜெயசேகர், அது எப்படி முடியும் என எள்ளி நகையாடியவர் திமுகவின் அப்போதைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன். இப்போதும் தமிழ் மாநாட்டுப் பணிகள் தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் அறிவிப்புக்களில் பல ஆங்கிலத்தில் இருப்பதாக தினமலரே சொல்கிறது. மாநாடுக்காக துவங்கப்பட்ட வலைதளம் பல மாதங்களாக முன்னேற்றமில்லாமல் இருக்கிறது. இம்மாநாடு ஒரு சதவிகிதம்கூட தமிழுக்காக நடத்தப்படவில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.

எத்தனை சான்றுகளை கொட்டினாலும் இக்கட்டுரை முடியாது. இது கருணாநிதி தனது ஓய்வுக்கு முன்பு சர்வதேச அளவில் நடத்திக்கொள்ள விரும்பும் ஒரு பாராட்டுவிழா முயற்சி. தான் விரும்பியது யாவையும் உடனே கிடைக்கவேண்டும் என்று விரும்பும் பணக்கார இளைஞர்களைப் போல கருணாவும் தன் வாழ்நாள் கனவுகளை தனது ஆட்சிக்குள் அல்லது ஆயுளுக்குள் செய்துகொள்ள விரும்புகிறார். கட்சிக்கு கிடைக்கும் கட்டுமான கமிஷனையும் கோவை வட்டாரத்தில் திமுகவை வலுப்படுத்தும் நோக்கத்தையும் இதில் இணைத்ததில்தான் கருணாநிதியின் சாணக்கியத்தனம் இருக்கிறது. மற்றபடி இது தமிழுக்காக செய்யப்படும் முயற்சி என்றால் அதை திமுககாரன்கூட நம்பமாட்டன். ஆறு மாதத்தில் வீணாகப்போகிற சாலைகளும் ஜுலை மாதத்திலிருந்து கவனிப்பாரில்லாதுபோகும் பூங்காக்களுமே கோவை மக்களுக்கு மிச்சமாகப் போகிறது.

சரி நம் மொழியைக் காக்க என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா ? அது ஒன்றும் அவ்வளவு சிரமமானதில்லை. மொழி எப்போதும் பாமர மக்களால்தான் காப்பாற்றப்படுகிறது. இன்று உலகை ஆள்வதாக சொல்லப்படும் ஆங்கிலம் பேசுவது ஒரு காலத்தில் இங்கிலாந்திலேயே கவுரவக்குறைவாக கருதப்பட்டது. இங்கிலாந்தின் அன்றைய பிரபுக்கள் குடும்பங்களிலும் ஏன் பாராளுமன்றத்திலும்கூட பிரென்சு மொழிதான் பயன்படுத்தப்பட்டது (தேவாலயங்களில் லத்தீன்). நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட்ட பிறகுதான் ஆங்கிலமே அங்கு தலையெடுத்தது. கோடிக்கணக்கிலான மக்களுக்கு அன்றாட உணவையே நிச்சயமற்றதாகிவிட்ட சூழ்நிலையில் நாம் நம் மொழி குறித்துமட்டும் கவலைப்பட்டால் அது ஒரு சதவிகிதம்கூட பலன்தராது. இனத்தைப் பற்றி கவலைப்படாமல் மொழியை மட்டும் நேசிப்பது அயோக்கியத்தனம். மொழியை கண்டுகொள்ளாமல் இனத்தைப் பற்றி கவலைப்படுவதாகச் சொல்வது அவ்வாறானதே.

ஏழ்மை, சுரண்டல், சாதிவெறி மற்றும் மொழிப்புறக்கணிப்பு யாவும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதில் ஒன்றை விடுத்து மற்றொன்றை நம்மால் சரி செய்யவே முடியாது. தமிழ் சினிமாவுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு தரும் இழிநிலைக்கு நாட்டை தள்ளிய கருணாநிதியால்தான் மொழியைக் காப்பாற்ற முடியும் என்று இனியும் சுப.வீரபாண்டியன் வகையறாக்கள் சொன்னால், அழுத்தமாக பதில் சொல்லுங்கள் ‘ என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், ஏனெனில் என் மொழியின் கவுரவம் அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது‘.

______________________________________________
வில்லவன்
புதிய கலாச்சாரம் ஜூலை 2010
______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. இலங்கையில் பொறியியலும் மருத்துவமும் கூட தமிழில் கற்றுத்தரப்படுவதற்கான அரசியல் அடிப்படை வேறு, வில்லவன். மற்றப்படி, கருணாநிதியால் தமிழனும், தமிழும் காப்பாற்றப்படப்போவதில்லை என்பது படித்துப், படித்து வெறுத்துப்போன உண்மைகள். 

  • //இலங்கையில் பொறியியலும் மருத்துவமும் கூட தமிழில் கற்றுத்தரப்படுவதற்கான அரசியல் அடிப்படை வேறு//

   கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்

 2. ///ஏழ்மை, சுரண்டல், சாதிவெறி மற்றும் மொழிப்புறக்கணிப்பு யாவும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதில் ஒன்றை விடுத்து மற்றொன்றை நம்மால் சரி செய்யவே முடியாது./// தமிழை காக்க புறப்பட்ட கருணக்கள் மக்களை ஏழைகாளக்கி அந்த சிரிப்பில் இறைவனை கான முயற்சிக்கீறார்கள் ஒரு பக்க காசு சேல்லாது தலைவா  

 3. மநாடு நடத்துறதுக்கு வட்டிக்கி ஒலக வங்கியிட்ட எவ்வளவு கடன் வங்குனய்ங்கன்னு தெரிய்லையே ஏற்கனவே ஒவ்வோரு வளர்ச்சி திட்டமுன்னு சொல்லி ஒலக வங்கி கிட்ட கடன வாங்கி ஒவ்வோரு தமிழனையும் வட்டி கட்டகூடியே கடன்காரனாக ஆக்கியது பாத்தல போல கையில காசு இல்ல இதுல மாநடு வேற முடியுள்ளவ அள்ளி முடியுவ கொன்ட போட்டுக்கிருவ ஒனக்குத்தான் ஒன்னுமில்லையே அப்புறமேன்ன கோவையை சீவி சீங்காரிக்கிற

 4. அருமை. பிரபல பதிவர் ன்னு சொல்லிக்கிட்டு மாநாட்டுக்கு ஆள் புடிக்கிற ஐந்தாம்படைகள் இதை படிப்பார்களா ?

 5. கருணாநிதி எது செஞ்சாலும் .. உங்களை போன்றோரின்
  ஒப்பாரியை தாங்க முடியலை !!!!!

 6. கருணாநிதி தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் செய்த துரோகத்தை சிறப்பாக அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை. வாழ்த்துக்கள் தோழர்.

 7. போலி சனநாயகத்தை வீழ்த்துவதே தமிழையும் காக்கும் வழி!

 8. மற்ற மொழி அறிவியல் நூல்களை தமிழில் வெளியிடுதல்,மலிவு பதிப்பு நூல்களை வெளியிடுதல் போன்றவை குறைந்த பட்ச அவசியம் இதை கூட செய்யாமல் மாநாடு சிறப்படையாது

 9. விடுங்க ஐயா நாம இருக்கோம்ல தமிழ காபத்த….
  காத்து அங்க வீசுது ஆடுராய்ங்க…..
  நமக்கும் ஒரு காலம் வரும்.

 10. வினவு
  தமிழ் வளர்ச்சிக்காக அவர்கள் குடும்பம் நடத்தும் டி.வி, F.M , பத்திரிக்கையை பற்றியும் எழுதி இருக்கலாம்.

 11. தமிழ்நாட்டின், தமிழினத்தின் மிகப்பெரிய சாபக்கேடு இந்த “கருணாநிதி”. தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் தமிழினத்திற்கும் தொடர்ந்து தீங்கிழைத்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் துரோகம் செய்து வருபவன் கருணாநிதி. தமிழிக்கும் தமிழினத்திற்கும் இவனைவிட்டால் யாருமல்ல என்று நினைப்பவர்களும், பேசுபவர்களும், எழுதுபவர்களும் அடிமுட்டாளாக இருக்க வேண்டும் அல்லது பச்சை அயோக்கியனாக இருக்க வேண்டும்.
  தமிழினமோ அல்லது உலகளில் வேறு எந்தவொரு இனமோ இப்படிப்பட துரோகியை கண்டதில்லை. உலகில் ஒருவனை இழிவுபடுத்த எத்தனையோ வசைச்சொற்கள் உள்ளது. அந்த வசைச்சொற்களைவிட மிகமோசமான வசைச்சொல் “கலைஞர் கருணாநிதி”. ஒருவனை இழிவுபடுத்த வேண்டுமென்றால் அவனை ”கலைஞர் கருணாநிதி” என்று அழைக்கலாம்.

 12. The Cheif Guest of Tamil SEMOZHI CONFERENCE are from north india those who nevr know tamil. But the Ex President of our Nation the great Dr.A.P J Abdul Kalam is not in that cheif guest list.

  Think People Think

 13. தமிழ்நாட்டின், தமிழினத்தின் மிகப்பெரிய சாபக்கேடு இந்த “கருணாநிதி”. தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் தமிழினத்திற்கும் தொடர்ந்து தீங்கிழைத்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் துரோகம் செய்து வருபவன் கருணாநிதி. தமிழிக்கும் தமிழினத்திற்கும் இவனைவிட்டால் யாருமல்ல என்று நினைப்பவர்களும், பேசுபவர்களும், எழுதுபவர்களும் அடிமுட்டாளாக இருக்க வேண்டும் அல்லது பச்சை அயோக்கியனாக இருக்க வேண்டும்.
  தமிழினமோ அல்லது உலகளில் வேறு எந்தவொரு இனமோ இப்படிப்பட துரோகியை கண்டதில்லை. உலகில் ஒருவனை இழிவுபடுத்த எத்தனையோ வசைச்சொற்கள் உள்ளது. அந்த வசைச்சொற்களைவிட மிகமோசமான வசைச்சொல் “கலைஞர் கருணாநிதி”. ஒருவனை இழிவுபடுத்த வேண்டுமென்றால் அவனை ”கலைஞர் கருணாநிதி” என்று அழைக்கலாம்.
  super.

 14. //நல்லவேளையாக நமீதா நடனமாடாத காரணத்தால் தமிழினம் தப்பிப்பிழைத்தது.//
  நல்ல நகைச்சுவை. வாழ்த்துக்கள் வில்லவன். 

 15. “தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மிக மோசமானதாக இருக்கிறது என்று முடிவு வந்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு பூர்த்தி செய்த அரசுப் பள்ளி மாணாக்கர்கள் எளிமையான வாக்கியங்களை அமைக்கவே அல்லது புரிந்துகொள்ளவோ தெரியாதிருக்கிறார்கள் என்கிறது அவ்வறிக்கை.””
  Sorry writing this english..

  True.. there is no good teachers in tamil and teaching method is very old..Ask the govt to make student (cbse or any board) learn tamil atleast upto 5th Std..Ask all Sun and other tv to follow “makkal”
  VS Balajee

 16. நீங்கள் சொல்வதில் -உண்மை இருந்தாலும் -கலைநர் கருணாநீதி-அவர்கள் -தமிழுக்காக-செம்மொழி அந்தஸ்து பெற்றது -போன்றவற்றை செய்து இருக்கீறார்!!!

  -tsekar

  • Dear Sekar, Even Kannada and Telugu are classical languages. They did not conduct any such conferences :). This is just a regular political stunt of our CM :).

   Good Article dear Villavan.

   – Karthik

 17. அது ஒன்றும் அவ்வளவு சிரமமானதில்லை. மொழி எப்போதும் பாமர மக்களால்தான் காப்பாற்றப்படுகிறது

  இதைத் தான் உணர மறுத்து கலைஞருக்கு  மொழியை வளர்க்கின்றேன் என்று ஆயிரம் கோடி ரூபாய் தேவையாய் இருக்கிறது.

 18. தமிழ் என்று சொல்ல டாக்டர் கயவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
  தமிழன் என்று சொல்ல மாரிதததுவர் ராமடமாசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

  தமிழ் மாநாட்டை எதிர்க்க புரட்டுக்க் கிழவிக்கு என்ன அருகதை உள்ளது?
  தமிழனிடம் ஓட்டு கேட்க கோட்டான் விஜயகாண்டுக்கும் , கைப்புள்ள சை.கோ வுக்கும் என்ன இருக்கிறது?

  தமிழ் துரோகிகளுக்கும் சோறு போட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் தமிழுக்கு இழுக்கு ஒன்றும் இல்லை.

  ————————–
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் – 23 -06 -2010)

 19. மகா ராஷ்டிரத்தில் அம்பேத்கார் பெயர் வைப்பத்ற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

  ஆனால் அம்பேத்காரின் படைப்புகள் மலிவான விலையில்

  வெளியிடப்பட்டுள்ளன. பெரியாரின் படைப்புகளை கூட வெளியிடவில்லை

  தமிழக அரசு.

  ஒரு மொழியின் வளர்ச்சி என்பது சம காலத்தில் உள்ள (முன்னேறிய)

  அறிவியலை (தாய் மொழியின் மூலமாக- தமிழ்) கற்றுக் கொள்ள முடியும்

  என்பதே!
  மேலும் சம காலத்தில் தோன்றும் பல்வேறு மொழிகளின்

  இலக்கியத்தையும், நம் சொந்த மொழியின் மூலமாக கற்க முடியும் என்பதே.
  இவைகளைப் பொறுத்த வரையில், தமிழ் மொழி இரண்டையும்

  நிறைவு செய்யும் தன்மை உடையது. இவைகளை செய்வதற்கு இன்று வரை

  எந்த திட்டமும் அரசியிடம் இல்லை. அதனால் தான் “உயர் நீதி மன்றத்தில்

  தமிழ்” என்றவுடன் “சட்டங்கள் தமிழில் இல்லையே! சட்டப் படிப்பு தமிழில்

  இல்லையே! தீர்ப்புகள் தமிழில் இல்லையே !” என்ற அலறலை கேட்க

  முடிகிறது.
  இது உண்மை தான் என்றாலும் இது யாருடைய பிழை? தமிழை

  ‘காக்க’ வந்தவர்கள் இது வரை இவைகளை செய்ய வில்லையே என்றொரு

  குற்ற சாட்டை ஏன் சொல்ல வில்லை? இங்கு தான் இவர்களின் சுய நலம்

  உள்ளது.
  முதலாளித்துவ கட்சியாக இருந்த திமுக, முதலாளிகளின்

  கட்சியாக மாறி விட்டதைப் போல, தனியார் ஆங்கில பள்ளி/கல்லூரி களின்

  ‘கல்வி வள்ளல்’ களாகவும் மாறி உள்ளனர், என்பதிலிருந்து தான் இதை புரிந்து

  கொள்ள முடியும்.
  பார்ப்பனியம் இந்திய அரசு போன்ற எதிரிகள் இருந்தாலும்,

  துரோகத்தின் பட்டியலே நமக்கு நீளமாக உள்ளது.
  1. அரசு பள்ளிகளை மூடல்
  2. அரசு பள்ளிகளை ஓராசிரியர், ஈராசிரியர் என தரம் குறைத்தல்
  3. தனியார் ஆங்கில பள்ளிகளை திறத்தல்
  4. இருக்கும் அரசு பள்ளிகளுக்கு நிதி உதவி மறுப்பு
  5. (எனக்கு தெரிந்த வரையில்) கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஒரு

  அரசு கலை/அறிவியல்/ தொழிற்நுட்பம் கல்லூரியை அரசு புதியதாக

  திறக்கவில்லை.
  6. அதே சமயம், நாளொரு மேனியும், புதியதொரு வண்ணமுமாக

  தனியார் பொறியியல் கல்லூரிகளின் பெருக்கம்.
  7. பொறியியல்/மருத்துவம் பாடத்திட்டங்களில் ஒரு பாடமாக

  ‘வட்டரா’ மொழி பாடம் இல்லாத கொடுமை.

  ’கலைஞர்’ இரண்டு விசயங்களை அடிக்கடி பேசுவார்.

  1. தமிழ் 2.ஈழம்
  சென்னை உயர் நீதி மன்ற்த்தில் ஈழத்திற்கு ஆதரவாக போரடிய

  வழக்கறிஞர்களின் போரட்டத்தை ஒடுக்கியது, ‘உண்ணாவிரதம்’, ‘40 எம்பி

  ராஜினிமா’ போன்றவற்றின் மூலம் ஈழத்திற்கு துரோகம் செய்து விட்டார்.
  ”உயர் நீதி மன்றத்தில் தமிழ்” என்பவர்களை கைது செய்து

  தமிழுக்கும் துரோகம் செய்து விட்டார். இவை இரண்டும் ஓர் உதாரணம்

  மட்டுமே.

  ’கலைஞர்’ அவர்களே! கடைசி காலத்தில் ஈழத்தமிழர், தமிழ் மொழி

  வரலாற்றில் ”துரோகி” என்கின்ற முத்திரை விழ காத்திருக்கிறது. என்ன செய்ய

  போகின்றீர்கள்?

  நாம் புறப்படுவோம் இந்த அரசை சவக் கிடங்கிற்கு அனுப்ப…!

 20. புஷ்பவனம் குப்புசாமி, விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் இவங்கெல்லாம் தமிழ நல்லா உச்சரிக்குற காரணத்துக்காக ‘செம்மொழியான தமிழ் மொழி’ பாடறதுக்கு வாய்ப்பு கொடுக்கல. என்ன செய்ய, காலத்தின் கொடுமை.

  ————————–

  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் – 23 -06 -2010 )

 21. THIRUMAVALAVAN IS AGENT OF EXPATRIATE SR TAMIL” VELLALAHS(GOVI GAMA OF MAHINDARAJAABAKSHE)”,AND WESTERN- FASCIST THERAVADA BUDDHISM OF HENRY OLCULT!.
  The constantly revolted against the British and due to this they were classified as a criminal tribe. The British viewed the polygars as a threat and constantly sought to decommission the polygar society. They were made to stand within a circle as criminals and were publicly humiliated and tortured during the peak rebellion. Forced disappearances was the norm and many were executed without a fair trial.
  The were a people whom the British attempted to totally demilitarize by depriving them of their traditional status in Tamil society through social, economic and penal measures. This was in direct contrast to the social and economic privileging of such castes and classes in the north, during the same period. They were not only disfranchised but were turned into and classified as a delinquent mass – the subject of a disciplinary and penal discourse – relegated to the fringes of the new social pact which was being established in the Tamil South of the Madras Presidency. The obliteration of their traditions and memory was considered essential to complete the process of demilitarization and pacification of the Tamil region. The martial races theory of recruitment and the subsequent martialization of the north further erased their martial legacy and that of the Tamil South from the military ethnography of the subcontinent.

  Thus, towards the latter part of the 19th century, there were large, disgruntled groups with a military past in the Bengal, Bombay and Madras Presidencies. They felt that the vast field of opportunities opened by the expanding Indian army was being unfairly denied to them. This grievance was further exacerbated by views of the British military leadership which relegated them to a non-martial status as races that were not fit to bear arms; in whom fighting qualities had declined.The legacy of these strategies in the north and south of the subcontinent, embodied in the structure of the modern Indian army, is central to the emergence of modern Tamil militarism. The gains of this demartialization were consolidated by favouring and encouraging non-military castes in Tamil society which “contrasted favourably with the Maravar”.
  The more important of these were the Vellalas, Nadars and Adi Dravidas. The culture and values of the “peace loving” (Madras census, 1871) Vellalas who had “no other calling than the cultivation of the soil” eminently suited the aims of demartialization and suppression of the traditional military castes. In this the British were following local precedents which had been based on the principle that the best way to ensure control and security was to “have none there but cultivators”. Thus, under active British patronage the Vellala caste established its dominance, and its culture became representative and hegemonic in Tamil society.

  • I do not understand,what you have written here?.

   But here is discussion for “செம்மொழி மாநாடு – கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை !!”

   Not about தோழர் THIRUMA anna !!!!

   தோழர் திருமா -ஈழத்தை பற்றி உண்மையாக ,உனர்வூபூர்வமாக பாராளுமன்றத்தில் பேசுகிற -ஒரே -தலைவர்

   -TS
   மருதிபட்டி
   அரூர் -வட்டம்

   • ரவுசு, திருமா இன்னிக்கு கருணாவோட பிரதான அல்லக்கை ஆகிப்போனதை மறுக்க முடியுமா? டில்லியில் ஜவுண்டு வுட்ட இதே திருமா கொழும்புல ராஜபக்சே கிட்ட கூழகும்புடு போட்டத மறக்க தமிழன் என்ன சோற்றால் அடைத்த பிண்டமா????????????????????

    • ஈழ தமிழனுக்கு -யார் என்ன நல்லது பண்ணிவிட்டார்கல் ?

     திருமா என்ன கெட்டது செய்துவிட்டார் ?

     திருமா -ராஜபக்சய்வாய் என்ன செய்துவிட முடியும் ?

     திருமா -ஒரு பாராளூமன்ற உருபினர்,

     ராஜபக்சய்வாய் -ஒரு நாட்டின் அதிபர்,

     திருமா -ஸ்ரீலங்காவிற்கு -போய்வந்து -ராஜபக்சைவை -பூகழ் பாடினாரா ?
     திருமா-ராஜபக்சே ,இந்திய அதிகாரிஎடம்–லஞ்சம் வாங்கி-அவர்களுக்கு ஆதரவாக –
     தமிழ் ஈழத்திற்கு – எதிராக இருந்தாரா ?

     ஈழ மக்களின் -வாழ்வு முக்கியம் !!

     இங்கு உள்ள தலித் மக்கள்இன் -அரசியல் அதிகாரமும் முக்கியம் !!

     திருமா-தமிழ் தேசியம் பேசுவதால்,சாதி இந்துகளில் -தமிழ் தேசியம் பேசும் -மற்ற சாதியினர் -திருமா- வோட்டு போட்டார்களா ?
     தமிழ் தேசியம் பேசும் -எந்த தலைவனாவது -திருமாவிற்கு -ஆதரவாக -குரல் கொடுத்தானா ?

     தமிழ்நாட்டில் உள்ளவன் -எவனடா -சாதி மறுத்த -உண்மை தமிழன் ?
     இங்கு உள்ள தலித்தும் தமிழன் தானே ?-அவனை மனிதனாக -உனக்கு -மதிக்க -தேரியவில்லை !!!
     தலித் அரசியால் அதிகாரம் பெறுவது -உங்களுக்கு எங்கு எரிகிறது ?

     த சேகர்
     மருதிபட்டி -அஞ்சல்
     அரூர் -வட்டம்

    • ரவுசு என்னாத்துக்கு இப்ப பல்டி அடிக்குற? ஈழத் தமிழனுக்காவ குரல் குட்தாருன்னு எழுதுன… அவரு கொரலும் குடுக்கல உரலும் கொடுக்கல துரோகி கருணாநிதியோட அல்லக்கையா இருக்காருன்னு எழுதுனா…. அதுக்கு பதில் சொல்லாம இந்தாதுக்கு இப்ப தலித் அதிகாரம் அது இதுன்னு பினாத்தல்..???? திருமா ஈழத்துக்கு செஞ்ச துரோகத்த ஒத்துக்க,  மேல பேசலாம்!

    • திருமா ஈழத்துக்கு என்ன துரோகம் செய்தார்?.

     நயவஞ்சகமாக -புலி தலைவர்களை -கொன்றரா ?

     ஸ்ரீலங்கன் -ராணுவத்துக்கு -ஆயுத உதவி -இந்திய அரசாங்கம் -செய்ததை -ஆதரிதாரா ?

     பாராளூமன்றத்தில் -ஈழத்திற்கு -எதிராக பேசினாரா ?

     ராஜபக்சவேடம் -பணம் வாங்கீனாரா ?

     ஜெயலலிதா ,-போன்று தேர்தல் ஈழ ஆதவாழராக அரசியல் செய்தாரா?
     போர் என்றால் மக்கள் சாவார்கள் -என்ற ஜெயலலிதாவுடன் -வை கோ போல கூட்டனி வைத்தாரா?

     ஐந்து ஆண்டுகளாக -மத்திய அரசில் -அமைச்சர் பதவி -வகித்து விட்டு -ஈழத்தை பற்றி நினைக்காமல்-ராமதாஸ் போல இருந்தாரா ?

     காங்கிரஸ் -உடன் கூட்டனி கணக்கு -போட்டு-ஈழத்தை பற்றி -சிறிது நாள் -விஜயகாந்த் போல பேசாமல் இருந்தாரா ?

     ஈழத்திற்கு-போய்வந்து -ஈழ மக்களின் -உண்மை நிலையை மறைத்து -முகாம் -நன்றாக உள்ளது -என்று காங்கிரஸ் பாராளுமன்ற -உறுபினர் போல் சொன்னாரா ?

     ஈழத்தை பற்றி பேசுவதால் -தோழர் திருமாவிற்கு என்ன கிடைத்தது ?

     ஐந்து -விடுதலை சிறுத்தைகள் -ஊயிர் நீர்தார்கள்

     அடங்கி போன எழுச்சியை -தமிழகத்தில் -உண்ணா விரதம் இறுந்து -எழுச்சி பெற செய்ததில் – விடுதலை சிறுத்தைகள் தேசிய பாது காப்பு சட்டத்தில் -இன்றும் சிறையில்

     ஈழத்தை பற்றி பேசுவதால் -தோழர் திருமாவிற்கு -வேறு சாதிக்காரன் -எவரும் வோட்டு போட போவது இல்லை !!!!

     பின் ஏன் -தோழர் திருமா,ஈழத்தை பற்றி பேசுகீறார் ?

     தமிழ் இன -ஊனர்வால் -சாதி இல்லாத தமிழ் சமூகம் -ஈழத்தில் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில்,தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்ற ஆசையில்

 22. tamilஒன்றும் அவ்வளவு சிரமமானதில்லை. மொழி எப்போதும் பாமர மக்களால்தான் காப்பாற்றப்படுகிறது

 23. மொழியெனும் மென்பொருள்:
  அடித்தால் அலறவும்பசித்தால் கேட்கவும்மூளையிலுதிக்கும் சிந்தனைகளைமற்றவர்க்குச் சொல்லவும்செயல்பட வைக்கவும் செய்வதுமொழியெனும் மென்பொருள்.
  சிந்தனையில் பதிந்துமனித உயிரில் அனிச்சையாய்பதிந்துவிட்ட தாய்மொழி.தமிழொரு மென்பொருள்.
  வள்ளுவர் காலத்திய நெய்தல் கிழத்தியும்கருவாடுதான் காயப்போட்டிருந்தாள்.ஆனால் அவள் பேசியது பைந்தமிழ்.அவளின் பைந்தமிழுக்குப் பொறுப்புவள்ளுவரல்ல; நாலடியுமல்ல.அந்த தமிழென்ற மென்பொருள்தான்.இதுதான் “மொழி ஏன், எதற்கு?”என்பதற்கான பதில்.
  சாதிமதக் கலப்பின்றிபட்டையும் நாமமுமின்றிபாமர மக்களால் பேசப்படிருந்த தமிழ்.விபூதி வாசனயோடு வந்தவடமொழி.அனிச்சைச் செயலான மென்பொருளில்கலந்தது வொரு வைரஸ்.கடவுளென்ற கற்பனை வீடியோகேம்வந்திறங்கிவிட்டது.இதுவரையிலும் நாத்திகர்களும் ஆத்திகர்களும்விளையாடிக்கொண்டிருக்கிறர்கள்.அண்ணாத்துரைக் காலம்வரையிலும்வடமொழி கலந்துஸ்பரிசித்தது பைந்தமிழ்.ஆங்கிலேயர்கள் வந்ததும்டமிங்கிலிஷ் ஆனது.இன்று பைந்தமிழ் பேசினால்அவன் பைத்தியக்காரன்.இதுதான் தமிழ் முடமானதின்வரலாறு.
  நமாய் அதன்மீது எச்சமிடுவதைநிறுத்தினாலொழியதமிழ் என்பது என்றென்றும்செம்மொழிதான்.உழைக்கும் வர்கத்தினர்குரலிருக்கும்வரைதமிழை உச்சரிப்பர்.தமிழை வாழ்த்தயாருக்கும் அருகதை இல்லை.
  -புதிய பாமரன்

  • பிச்சிட்டீங்க. மென்பொருள், வைரஸ் உவமைகள் அருமை. விஷயத்தையும் சரியாக விளக்கிருக்கீங்க.

   • நன்றி தோழரே, எனது கவிதையை நுணுக்கமாக அலசியதற்கு நன்றி.

 24. சபாஷ் வினவு சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட  கட்டுரை . பாராட்டுக்கள்

 25. டாக்டர் கயவர் அவர்களால் நாடாளு மன்றத்தில் தமிழில் பேச அனுமதி வாங்க முடியவில்லை. இவர் தமிழுக்கு சேவை செய்கிறாராம்
  தமிழ் காலங்காலமாக துரோகிகளுக்கும் சேர்த்தே சோறு போடுகிறது, அதனால் தமிழுக்கு இழுக்கு ஒன்றும் இல்லை.

  —————————————–
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் – (23-06-2010)

 26. யாருக்குக் கடிதம் எழுதினாலும் தமிழில் கையெழுத்திடுவேன். இனி தமிழில் இடவேண்டுமா அல்லது செம்மொழியில் இடவேண்டுமா? செம்மொழியில் இடாவிட்டால் என்னைக் கைது செய்து விடுவார்களா… அய்யய்யோ பயமா இருக்கே…

 27. தினமும் செய்திதாள் படித்தால் கொலை, கொள்ளை ..மரத்து விட்டது… அதனால் தான் நாம் மறத்தமிழனோ? வாழ்க..வாழக்..என்று தமிழை கூறுகிறோம் என்று இன்று கோவையில் குவிந்திருக்கும் கோமாளிகளே..உங்களை விடவா..வடிவேல்.. விவேக்..கருணாஸ்..காமெடி.

 28. ‘சூடான தலைப்புகள்’ னு இருக்கறதுக்கு பதிலா வேற எதாவது போடுங்க ப்ளீஸ்.அது அவ்ளோ நல்லால்ல.

 29. “நம் மொழியைக் காக்க என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா ? அது ஒன்றும் அவ்வளவு சிரமமானதில்லை. மொழி எப்போதும் பாமர மக்களால்தான் காப்பாற்றப்படுகிறது” வழிமொழிகிறேன். இது தான் எனது கருத்தும். மன்னர்கள் எப்போதும் அந்நிய மொழிகளையே ஆதரித்து வந்துள்ளார்கள். 

 30. விஜய் விருதுகளில் கவிஞர் கனிமொழி(?)யால் ஆங்கிலம் கலக்காமல் பேச முடியவில்லை. அதுவும் இதே செம்மொழி மாநாட்டைப் பற்றி. இதையும் சான்றாக சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல ஆதங்கப் பதிவு. நன்றி.

 31. […] This post was mentioned on Twitter by vinavu, Nambi B – நம்பி.பா. Nambi B – நம்பி.பா said: வினவு! ‘என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிவதே மேல், ஏனெனில் என் மொழியின் கவுரவம் .. முக்கியமானது‘ http://bit.ly/amz5uS […]

 32. //தமிழ் மொழியை உயர்கல்வியாக படித்த மாணவர்கள் மாநாட்டு அறிவிப்பின்போது மேற்கூறிய காரணத்தைச் சொல்லி தமிழ் மாநாட்டின்போது தற்கொலை செய்துகொள்ளப்போவதாக!! ஒரு போராட்டத்தை அறிவித்தார்கள். அரசும் இதை கண்டுகொள்ளவில்லை, கருணாவின் தமிழுக்கான வாரிசு கனிமொழியும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது ஃபேஷியல் செய்துகொள்ளப் போய்விட்டாரா என்று தெரியவில்லை //

  katturaiyaalarin aanathikka veriyai velip paduthukirathu

 33. //தமிழினத்தின் மிகப்பெரிய சாபக்கேடு இந்த “கருணாநிதி”. தமிழிக்கும் தமிழினத்திற்கும் இவனைவிட்டால் யாருமல்ல என்று நினைப்பவர்களும், பேசுபவர்களும், எழுதுபவர்களும் பச்சை அயோக்கியனாக இருக்க வேண்டும்.
  உலகளில் வேறு எந்தவொரு இனமோ இப்படிப்பட துரோகியை கண்டதில்லை. உலகில் மிகமோசமான சொல் “கலைஞர் கருணாநிதி”.//
  unmayaana vaarthaigal
  //‘ என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், ஏனெனில் என் மொழியின் கவுரவம் அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது‘//
  Reply

 34. கருணாநிதிக்கு “தமிழ் துரோகி ” என்ற பட்டம் வழங்க ஏதேனும் உலகளாவிய அமைப்பை நாம் உந்த வேண்டும்.

 35. என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், ஏனெனில் என் மொழியின் கவுரவம் அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது‘.

 36. தமிழ்… ஆதி பகவானால் அருளப்பட்ட மொழி. சித்தர்களால் சீராட்டப்பட்ட மொழி. சமயக் குறவர்களால் செம்மைப்படுத்தப்பட்ட மொழி.

  இது கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், ஏனெனில் என் மொழியின் கவுரவம் அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது.

 37. தமிழ் என்பது எங்கள் உயிர், மாநாடு நடத்தி அதை நிருபிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை,,

 38. instead of spending 380crs of peoples money for his self-appreciation, this old fox had atleast spent 1/2 of it in Power Generation poor common people like me who voted 4 him, suffering from acute power cuts thrice a day, will be relieved. what can i do otherthan cursing him? he should die rather a KEEVALMANA SAAVU worse than waht MGR had, who was cheating people as if he was doing good

 39. //என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், ஏனெனில் என் மொழியின் கவுரவம் அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது‘//

  நெற்றிப் பொட்டிலறைந்தாற் போல எழுதியிருக்கிறீர்கள் வில்லவன். ஆழமாகவும், செறிவாகவும் தக்க சமயத்தில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். சில அவசியமான தகவல்களை தங்கள் கட்டுரையின் மூலம் அறிய முடிந்தது.

 40. ////தமிழின் தொன்மையில் நான்கில் ஒரு பங்குகூட இல்லாத கன்னட மொழியின் இலக்கியங்கள் மலிவுப்பதிப்பாக கர்நாடக அரசால் மக்களுக்குத் தரப்பட்டன. இங்கு அதுபோன்ற முயற்சிகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா?///////

  ////பள்ளிகளில் தமிழ் கட்டாயம் எனும் முந்தைய திமுக அரசின் சட்டம் என்னவானது என்றே தெரியவில்லை.///////

  /////பிரந்தியமொழியில் ஒரு வார்த்தைகூட கற்காமல் பட்ட மேற்படிப்புவரை கற்க முடியும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். //////

  கர்நாடகத்தில் அரசு கல்லூரியில் பெறியியல்/மருத்துவம் படிக்கவேண்டுமென்றால் அது பகுதி நேரமாக இருந்தாலும், கன்னடர்கள் மட்டுமே படிக்கமுடியும்!!! அல்லது கன்னடத்தை ஒரு பாடமாக படித்தவர்கள் மட்டுமே படிக்கமுடியும்! அப்படி ஒரு விதியை அரசு பொறியியல் பல்கலையான ‘விஷ்வேஷ்வரய்யா’ பல்கலையில் வைத்திருக்கிறது, அம்மாநில அரசு. (வேறு மாநில கோட்டா, மற்ற நாட்டு மாணவர்கள் – இவை அங்கும் உண்டு! அவற்றை பற்றி இங்கு குறிப்பிடவில்லை!)

  ஆனால் தமிழைக்காப்பதாக நாடகமாடும் இங்கு அண்ணா பல்கலையில் நடப்பது என்ன?

  தமிழுக்கு தான் இப்படி ’முன்னுரிமை’ என்றால், கொடுக்கும் தமிங்கில கல்வியாவது சரியாக கொடுக்கப்படுகிறதா?

  தமிழக பல்கலைகளின் துனைவேந்தர்கள் என்போர், திறமையினடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படாமல், கொலைஞரின் சொம்பு தூக்கிகளுக்கும் சொறிந்து விடுபவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

  /////அழுத்தமாக பதில் சொல்லுங்கள் ‘ என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், ஏனெனில் என் மொழியின் கவுரவம் அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது‘.////////

  அருமையாக எழுதியிருக்கீங்க வில்லவன். வாழ்த்துக்கள்.

 41. வில்லவன் கட்டுரை உள்ள நிலைமையை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. ஆயினும் கூடுதலாக ஒரு தகவல் சொல்கிறேன். கடந்த பல வருடங்களாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதற்கான ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியால் ஊதியம் வழங்கப்படுவதால் அதனை சுய நிதியில் நடத்தப்படுவதாகக் கூறுகிறார்கள். அந்த வகுப்புகளுக்கான கட்டிடங்கள் தமிழ் வழிக் கல்விக்காக கட்டப்பட்டதாக இருக்கின்றன. இதுதான் தமிழின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறையா? ஆங்கிலமோகம் பிடித்தவர்களுக்குதான் தனியார்ப் பள்ளிகள் கடைவிரித்து காத்துக் கிடக்கின்றனவே? இதில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் என்ற பெயரில் சில நடுத்தர மேல்நடுத்தர நபர்களின் தலையீடும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் ஆதரவோடும்தான் நடைபெறுகிறது. இதனை தடுத்து நிறுத்தும் ஆர்வமோ துணிவோ கலைஞருக்கு இல்லை என்றுதானே கூறமுடியும்? அல்லது அவருக்கு இதெல்லாம் தெரியவே தெரியாதா? இது குறித்து நான்கு நாட்களுக்கு முன் உயர்கல்வித் துறைக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன் அனால் இது வரையிலும் எந்தப் பதிலும் வரவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது!
  நாத்திகன் கண்ணன்

 42. லட்சக்கணக்கிலான தமிழ் மக்களை மட்டுமே கொண்டிருக்கிற இலங்கையில் பொறியியலும் மருத்துவமும் தமிழில் கற்றுத்தரப்படும்போது இதற்கான முதல் முயற்சிகூட அண்ணா காலத்தில் செய்யப்படாதது ஏன்? in srlianka where? who taught? u reconfirm it ,, it is totally wrong

 43. ##நீண்டகாலமாக தி.மு.க வின் தலைவராக இருப்பதால் உலகில் சில மானஸ்தர்களும் இருப்பார்கள் என்ற தகவல் அவருக்கு நினைவுக்கு வராமல் போய்விட்டது##

  ##ஆய்வுக்கட்டுரை என்பது ஜெகத்திரட்சகனுடைய சொறிந்துவிடும் வாழ்த்துரையையைப் போல எளிமையானதான தோன்றியதை என்னவென்றுசொல்வது##
  ##லட்சக்கணக்கிலான தமிழ் மக்களை மட்டுமே கொண்டிருக்கிற இலங்கையில் பொறியியலும் மருத்துவமும் தமிழில் கற்றுத்தரப்படும்போது இதற்கான முதல் முயற்சிகூட அண்ணா காலத்தில் செய்யப்படாததுஏன்## ##பிரந்தியமொழியில் ஒரு வார்த்தைகூட கற்காமல் பட்ட மேற்படிப்புவரை கற்கமுடியும்ஒரேமாநிலம்தமிழ்நாடுதான்##‘ ##என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், ஏனெனில் என் மொழியின் கவுரவம் அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது## nalla varigal! vaztthukkal thozar villavan!

 44. இலங்கையில் தமிழில் பல்கலைக்கழக படிப்பை தொடர்வதற்கான சந்தர்ப்பம் என்பது இலங்கையின் ஆட்சியாளர்கள் தமிழுக்கு கொடுத்த முறையான அங்கீகாரம் என்கிற தவறான புரிதல் இதை (லட்சக்கணக்கிலான தமிழ் மக்களை மட்டுமே கொண்டிருக்கிற இலங்கையில் பொறியியலும் மருத்துவமும் தமிழில் கற்றுத்தரப்படும்போது …) படிப்பவர்களுக்கு வரக்கூடாது என்கிற ஆதங்கத்தால் இதை பதிகிறேன். காலனித்துவ ஆட்சியில் தமிழர்கள் அமெரிக்க மிஷனரி பாடசாலைகள் மூலம் ஆங்கிலக்கல்வி கற்று அரச சேவைகளில் (இலங்கையின் சுதந்திரத்திற்கு பிறகும்) அவர்களின் ஒப்பீட்டு ரீதியான விகிதாசாரம் அதிகமாக இருந்தது உபரித்தகவல். இலங்கையில் ஆங்கிலேய ஆட்சி முடிந்த பின்னும் ஆட்சிமொழியாய் இருந்தது ஆங்கிலம். சிங்கள மொழிக்கு உத்தியோக பூர்வ மொழி அந்தஸ்தை “சிங்களம் மட்டும்” சட்டம் மூலம் வழங்கவும், இன-மொழி ரீதியாக தமிழர்களைப் பிரித்தாளும் சூட்சிக்கும் அடிப்படையாய் இருந்ததும் இந்த மொழி ரீதியான கல்விக்கொள்கைகள் சார்ந்த அரசியல் (Language Based Segregated Education Policy”) என்றுதான் சொல்லப்படுகிறது. இதன் பிறகு வந்தது தான் பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல், கோட்டா முறை என்பன. பின்னாட்களில் அதில் கூட சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. எவ்வாறாயினும், சிவில் நிர்வாகத்திற்குரிய மொழியாக சிங்களம் இருந்தாலும், கல்வியை அவரவர் சொந்த மொழியில் கற்கலாம் என்பது சிங்கள ஆட்சியாளர்களின் பெருந்தன்மையல்ல. அது மொழி மற்றும் பிரதேச ரீதியாக தமிழர்களின் பல்கலைக்கழக அனுமதிகளுக்கு “ஆப்பு” வைக்கும் கொள்கை.  பல்கலைக்கழகத்தில் ஆங்கிலவழிக்கல்வி ஓர் தெரிவாக இருக்கலாம். ஆரம்ப பாடசாலையில் இருந்து தமிழில் கல்வி கற்றுவிட்டு பிறகு பல்கலைக்கழகம் சென்றவுடன் எத்தனை பேர் ஆங்கிலத்தை கட்டிக்கொண்டு மாரடிக்க ஆசைப்படுவார்கள்? தொடர்கதையாய் தமிழிலேயே பல்கலைக்கழக படிப்பும் தொடர்கிறது. ஆனால் அது தமிழுக்கு இலங்கையில் கொடுக்கப்பட்ட கெளரவம் அல்ல.
  13 வது திருத்தச்சட்டத்தில் இலங்கையில் தமிழுக்கு உத்தியோக பூர்வ மொழி அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டதாக எனக்கு ஞாபகம். கொடுக்கப்பட்டதா? அதைப்பற்றி பேசுவார் யாருமில்லை. 
  எனக்கு புரியாத ஓர் விடயம் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழங்களில் தமிழ் மொழி கல்வி என்ற தெரிவு உண்டு. ஆனால், பெரதெனியா பல்கலைக்கழகத்தில் தமிழில் பொறியியல் படிக்கும் தெரிவு உண்டா? ஈழவன் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். 

 45. நல்ல கட்டுரை தேவையான சமயத்தில் வந்திருக்கிறது கருணாநிதி தன் வர்க்க நலன்களுக்காக மட்டுமே சிந்திப்பவர்,சிந்திப்பார் என்பதை விரிவாக எழுதியிருக்கிறார், மாநாடு முடிந்தவுடன் நடந்த கூத்தையும் அலசி கட்டுரையாக வெளியிட்டால் நலம்,

 46. கலைஞரின் துரோகத்தால் ஈழமே சுடுகாடு
  துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு!…

  உள்ளூர்த் தமிழா… ஊர் ஊராய் ஓடு! உலகத் தமிழா… கோவையில் கூடு!

 47. ******ஏழ்மை, சுரண்டல், சாதிவெறி மற்றும் மொழிப்புறக்கணிப்பு யாவும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதில் ஒன்றை விடுத்து மற்றொன்றை நம்மால் சரி செய்யவே முடியாது. தமிழ் சினிமாவுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு தரும் இழிநிலைக்கு நாட்டை தள்ளிய கருணாநிதியால்தான் மொழியைக் காப்பாற்ற முடியும் என்று இனியும் சுப.வீரபாண்டியன் வகையறாக்கள் சொன்னால், அழுத்தமாக பதில் சொல்லுங்கள் ‘ என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், ஏனெனில் என் மொழியின் கவுரவம் அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது‘.*********

  migach chariyaga sonneergal.tamilaium,tamil naattaium ,tamil makkalaiyum 

  kaappaatra vendumaanaal, intha karuna nithiyin kudumbamum, &co vinarum ozhiya

   vendum.appozhuthuthan ellorum nimmathiyaga iruppargal. ithellam eppozhuthu 

  nadakkumo? antha iraivanukkutha veilchcham.______________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க