முகப்புஉமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி! கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை!
Array

உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி! கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை!

-

நேர்மையானவர் என்ற அங்கீகாரத்தையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது உத்தமர் கருணாநிதி அரசு. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி அவர் மீது ஏவப்பட்ட விசாரணை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டதால் ஆத்திரம் தலைக்கேறிப் போய், தலித் கிறித்தவரான உமாசங்கர், தலித் இந்து என்று போலிச்சான்றிதழ் கொடுத்து பதவிக்கு வந்துவிட்டாரெனக்கூறி அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறார் கருணாநிதி.

1995 இல் (ஜெ ஆட்சியில்) மதுரை மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக்கொண்டு வந்தபோதுதான் உமாசங்கர் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜெயலலிதா ஆட்சியின் ஊழலைச் சொல்லி, 1996 இல் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி, ஊழல் கண்காணிப்புத் துறையின் கூடுதல் ஆணையராக உமாசங்கரை நியமித்தார். ஜெ, அவரது அமைச்சர்கள்  மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழல்களை உமாசங்கர் வெளிக்கொணர்ந்த போதிலும், செல்வாக்குள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தது கருணாநிதி அரசு. வெறுப்புற்ற உமாசங்கர், தன்னை இப்பதவியிலிருந்து விடுவிக்குமாறு கோரியவுடனே, அவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

மே 2006 இல் எல்காட் என்ற அரசு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டதும், அதுவரை மைக்ரோசாப்ட் மென்பொருட்களைச் சார்ந்திருந்த அரசுத்துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து பில்கேட்ஸை வெளியேற்றி விட்டு, 2007 ஆம் ஆண்டு முதல் ‘லினக்ஸ்’ என்ற ஓபன் சோர்ஸ் (இலவச) மென்பொருளை அறிமுகப் படுத்தினார் உமாசங்கர்.

“மைக்ரோசாப்ட் ஆத்திரம் கொண்டால் நம் நாட்டின்  மென்பொருள் துறையே தேங்கிவிடும் என்று கருதுவது அபத்தமானது…  மைக்ரோசாப்ட் இல்லாமல் இந்தியா வாழ முடியும். முன்னேறவும் முடியும். இந்தியா என்ற மிகப்பெரிய சந்தையை இழப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குத்தான் பேரிழப்பு. மைக்ரோசாப்டிலிருந்து வெளியேறியதன் விளைவாக  தமிழ்நாடு ஆண்டுக்கு 200 முதல் 500 கோடி வரை மிச்சமாக்க முடியும்” என டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகைக்கு அப்போது அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் உமாசங்கர். மைக்ரோசாப்டின் உயர் அதிகாரி ஒருவர் தமது மென்பொருள் தொகுப்பை 7000 ரூபாய்க்குத் தருவதாக பேரம் பேசினாரென்றும், ஓபன் சோர்ஸில் செலவே இல்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய மென்பொருளுக்கு நாங்கள் எதற்காக 7000 ரூபாய் செலவழிக்கவேண்டும் என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பியதாகவும் அப்பேட்டியில் கூறுகிறார் உமாசங்கர்.

எல்காட்டின் பொறுப்புக்கு உமாசங்கர் வருவதற்கு சில ஆண்டுகள் முன்னர், தியாகராச -செட்டியார் என்பவருக்குச் சொந்தமான ‘நியூ எரா டெக்னாலஜீஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து எல்காட் நிறுவனம், ‘எல்நெட்’ என்றொரு கூட்டுப்பங்கு நிறுவனத்தை உருவாக்கியிருந்தது. 24% பங்குகள் தியாகராச செட்டியாரிடமும், 26% பங்குகள் எல்காட்டிடமும், மீதமுள்ள 50% பங்குகள் பொதுமக்களிடமும் இருந்த இந்நிறுவனம், 2004 ஆம் ஆண்டில், ‘இ.டி.எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்’ என்ற கட்டுமான நிறுவனத்தைத் தனது துணை நிறுவனமாக உருவாக்கியிருந்தது. சென்னையில் 18 இலட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.700 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (கட்டிடம்) ஒன்றை இந்நிறுவனம் உருவாக்கியிருந்தது. தமிழக அரசின் 26% பங்குகளையும் பொதுமக்களின் 50% பங்குகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனமும், அதன் 700 கோடி சொத்தும், 24% பங்குளை மட்டுமே வைத்திருந்த தியாகராச செட்டியாருக்கு மர்மமான முறையில் கைமாறியிருப்பதை உமாசங்கர் கண்டுபிடித்தார். “2008, ஜூலை 8 ஆம் தேதியன்று தரமணியில் உள்ள எல்நெட் நிறுவனத்தில் இவை தொடர்பான ஆவணங்களை நானே நேரடியாகத் தேடிக்கொண்டிருந்த போது, என்னுடைய பதவி பறிக்கப்பட்ட தகவல் வந்து சேர்ந்தது” என்று தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் உமாசங்கர்.

அடுத்து, சன் டிவி – கருணாநிதி மோதலின் தொடர்ச்சியாக, அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனின் நிர்வாக இயக்குநர் பதவியில் அக்டோபர் 2008 இல் நியமிக்கப்பட்டார் உமாசங்கர். அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை மிரட்டியதுடன், ரவுடிகளை வைத்து வயர்களையும் அறுத்தெறிந்தனர் மாறன் சகோதரர்கள். இவர்களுக்குத் துணை நின்றவர் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி. இது குறித்து பல புகார்கள் கொடுத்தும் போலீசு நடவடிக்கை எடுக்காததால், இவர்களைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்கவேண்டும் என்றும், சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்றும் உமாசங்கர் அரசுக்கு சிபாரிசு செய்திருக்கிறார். உடனே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏவப்படுகிறது. அந்த ஒழுங்கு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் இடைக்காலத்தடை விதித்ததனால், 2009, சனவரி 23 ஆம் தேதியன்று சிறுசேமிப்புத்துறைக்குத் தூக்கியடிக்கப்பட்டார் உமாசங்கர். இவற்றின் தொடர்ச்சியாக இப்போது வந்திருப்பதுதான் ஊழல் வழக்கும் தற்காலிகப் பணிநீக்கமும்.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் விதிமுறைகள்
குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் ஊழல் தடுப்புச் சட்டத்துக்கும் விரோதமாக, திட்டமிட்டே வடிவமைக்கப்பட்டிருப்பதை அம்பலமாக்கியிருக்கிறார் உமாசங்கர்.

“ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் போன்றோர் மீது ஊழல் குற்றத்துக்காக யாரேனும் வழக்கு தொடரவேண்டுமானால், அதற்கு அரசின் முன் அனுமதி தேவை” என்று கூறும் இவ்விதிமுறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையே கேள்விக்குள்ளாக்குவதோடு, ஊழல் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் பயன்படுகிறது என்கிறார் உமாசங்கர். அனுமதி அளிக்கும் அதிகாரம் முதல்வர் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய குழுவிடம் இருப்பதால், நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கும், ஊழல் அதிகாரிகளைத் தப்பவைப்பதற்கும் இது பயன்படுத்தப் படுகிறது என்பதையும் ஆதாரங்களுடன் திரைகிழித்திருக்கிறார் உமாசங்கர்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் கூடுதல் இயக்குநராக 1996 முதல் தான் பணியாற்றிய காலத்தில், கல் குவாரி ஊழல் (1000 கோடி ரூபாய்), சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேசன் தனியார்மயமாக்கல் ஊழல் (200 கோடி ரூபாய்), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஊழல் (சென்னையின் மையப்பகுதியில் அமைந்த 300 வீடுகள்) போன்ற பல ஊழல் வழக்குகளில் அதிகாரிகள் மீது வழக்கே தொடர முடியாததற்குக் காரணம் முதல்வர் தலைமையிலான குழுவின் அனுமதி கிடைக்காததுதான். அதுமட்டுமல்ல, பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, மேற்படி முதல்வர் குழுவின் அனுமதி கிடைக்காததால் தண்டனையிலிருந்து தப்பிவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாலதி என்பவர்தான் தற்போது ஊழல் தடுப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்ற கேலிக்கூத்தையும் போட்டுடைத்திருக்கிறார் உமாசங்கர்.

அவருடைய அனுபவத்தைப் படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்த போதிலும் எல்லா அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், எத்தனை முறை பந்தாடப்பட்டும் தளராத அவரது மன உறுதியும் வியக்கத்தக்கவை. அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது. அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சும் இந்தக் காலத்தில், அதிகாரவர்க்கக் கோட்டையையும் ஆட்டமுடியும் என்று காட்டியிருக்கிறார் உமாசங்கர். அவ்வகையில் அவரது அனுபவம் ஒரு நேர்மறை எடுத்துக்காட்டு. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகி மக்களுக்குத் தொண்டாற்றப் போவதாகக் கூறுவோரின் மடமையையும், ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கத்தை, மக்கள் தொண்டாற்றும்படி மாற்றியமைத்துவிட முடியும் என்று கூறுவோரின் கயமையையும் புரிந்து கொள்வதற்கு, உமாசங்கரின் அனுபவம் ஒரு எதிர்மறை எடுத்துக்காட்டு.

___________________________________________________________

– தொரட்டி, புதிய ஜனநாயகம், ஆகஸ்ட்டு – 2010
___________________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

 1. உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி! கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை!…

  அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், தளராத மன உறுதியும் வியக்கத்தக்கவை. அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது….

 2. ///ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகி மக்களுக்குத் தொண்டாற்றப் போவதாகக் கூறுவோரின் மடமையையும், ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கத்தை, மக்கள் தொண்டாற்றும்படி மாற்றியமைத்துவிட முடியும் என்று கூறுவோரின் கயமையையும் /// so what do you propose ? that even this small percentage of ‘good and honest’ aspirants for IAS should abandon their ambitions and let the field open for the dishonest only ? kayamai ? that is your opinion of the well meaning people who may be naive but not dishonest. what alternative system do you propose and how practicable will that be ? and when ?

  • and India follows the British system of civil service. Birtish civil service is much more efficient and honest. It works till date. hence the fault is not with this system of civil service or democratic model but with we Indians who became corrupt after 1947 due to many reasons and policies (cheifly economic polices which bakrupted our economy and model). so trying to blame the model is hypocritical. this model works well in much of W.Europe, Canada, etc. so ?

 3. உமாசங்கர் ஒரு சாமானியர்களின் சண்டியர் திருவாரூர் மாவட்டத்தில் இவர் ஆட்சியராக இருந்த போது
  சாமானியனாக இருந்து அடக்குமுறைக்கு ஆளானவன் நான்.விவசாயிகள் அறுவடை செய்தவுடன் அந்த கதிரை சாலையில் பரப்பி அதன் மீது வாகனங்கள் செல்லும் போது நெல்மணிகள் உதிரும் பிறகு அதை வைக்கோல் தனியாக நெல் தனியாக எடுப்பது வழக்கம் இது போக்குவரத்ர்க்கு இடையுறாக இருக்கத்தான் செய்யும் ஒரு உயரிய அதிகரி விவசாயிகளுக்கு தீர்வை ஏற்படுத்தி தராமல் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய அறிவாளி இன்று மாட்டிகொண்டு முழிப்பது அந்த விவசாயிகளின் வயிட்ற்று எரிச்சல்தான் காரணம் இது போல் இவர் சுய விளம்பரத்திற்காக செய்த பல செயல்கள் சாமானியனை பதித்ததை என்னால் பட்டியல் இடமுடியும்

  • இது உங்கள் சுயநலம். இப்படி நெற் பயிரை ரோடுகளில் பரப்புவதால் எத்தனை அக்சிடேண்டுகள் எத்தனை உயிரிழப்புகள். இந்த விசயத்தில் உமா சங்கர் செய்தது சரியே. சுய நல பேதைகளாக இருக்கதிர்கள் பொது நலத்தையும் பற்றி சிந்தியுங்கள்

   • ///வைக்கோல் தனியாக நெல் தனியாக எடுப்பது வழக்கம் இது போக்குவரத்ர்க்கு இடையுறாக இருக்கத்தான் செய்யும்///
    ayya nalla manitha…
    intha maathiri roadila kanna pinnannu vaikkolpora pottu athanaala vandi oottamudiyaththa naan paathrukken… padaatha avasthayum pattrukken… umma jailthaan podanum … uma shankar sariyathan seithrukkaaru… neeru panrathu romba thappu… appadi seiyarathu kadanju edutha suya nalam… ethavathu kuzhanthai vandila irunthu athukku pirachana endraal enna aavathu… konjamaavathu munyosana irukkayya umakku….?

   • வருங்காலத்தில் வாகனங்களையும் கணினிகளையும் தின்று மனிதன் உயிர் வாழலாம் என்று நினைத்துகொண்டிருக்கும் உமக்கும் உமாசங்கருக்கும் விவசாயிகள் சுயநலவாதிகளாக தெரிகிறார்கள்

 4. நேர்மையானவர் என்ற அங்கீகாரத்தையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது உத்தமர் கருணாநிதி அரசு

  அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது…. So We should supported to Mr.UmaSankar.

 5. //அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சும் இந்தக் காலத்தில், அதிகாரவர்க்கக் கோட்டையையும் ஆட்டமுடியும் என்று காட்டியிருக்கிறார் உமாசங்கர். அவ்வகையில் அவரது அனுபவம் ஒரு நேர்மறை எடுத்துக்காட்டு. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகி மக்களுக்குத் தொண்டாற்றப் போவதாகக் கூறுவோரின் மடமையையும், ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கத்தை, மக்கள் தொண்டாற்றும்படி மாற்றியமைத்துவிட முடியும் என்று கூறுவோரின் கயமையையும் புரிந்து கொள்வதற்கு, உமாசங்கரின் அனுபவம் ஒரு எதிர்மறை எடுத்துக்காட்டு.//

  நல்ல வரிகள். கண்முன்னால் ஒரு நேர்மையான அரசு அதிகாரி கடமையைச் செய்யமுடியாமல் விழிபிதுங்கி நிற்கும் போது, தண்டனைக்கு ஆளாகி இருக்கும்போது, பிரிட்டிஷ் வெண்டைக்காய் சிஸ்டம் என்றெல்லாம் காமெடி செய்கின்றார், அதியமான். மேலும் வழக்கம் போல, மேற்கத்திய நாடுகளில் இது நன்றாக செயல்படுவதாகச் சொல்கின்றார் – இந்த அதிகாரவர்க்கம், இந்தியா முதலான அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ நாடுகளில் சுரண்டல் அமைப்பாகவே இருக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புதிய ஜனநாயகப் புரட்சியில் உண்மையான ஜனநாயகம், மக்கள் கைகளில் அதிகாரம் என்று ஏற்படும்போதுதான் நாடு உருப்படும்.

 6. அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், எத்தனை முறை பந்தாடப்பட்டும் தளராத அவரது மன உறுதியும் வியக்கத்தக்கவை.

 7. I have a doubt. If tamilnadu people want uncorrputed governement why did they defeat Kamarajar??? and choose Anna as CM.
  Kamarajar is known for uncourppted government and he knows the impoertance of education….
  Its in his period the importance for agriculture and education is known to us…..
  But still why people went behind Annadurai/Kalaingar who were very godd in Tamil tongue but nothing when it comes to management????

  • இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடிய எம் மக்களின் 500 பேரை கொன்ற நடுவண் காங்கிரேசு அரசை எதிர்த்து போட்ட வோட்டுக்கள்

 8. நல்லதொரு அருமையான கட்டுரை.

  நேர்மையான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதன் மூலமோ அல்லது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் அதிகாரிகளை ‍நியமிப்பதன் மூலமோ ஊழலை ஒழிக்க முடியும் – நல்ல அரசை உருவாக்க முடியும் என்ற அரசு பற்றிய மூடக்கருத்தை தோலுரிக்கும் கட்டுரை.

 9. உமா சங்கர் போன்ற நல்ல அதிகாரிகள் தான் நமக்கு வேண்டும்.

  எங்கள் மாவட்டதில் இருந்தவரை நல்ல ஆட்சியாளராகதன இருந்தார்

  • இப்பவும் அவர் நல்லவராத்தான் இருக்கார். அதனாலதான் அவருக்கு இந்த சோதனை.

 10. in this week’s issue of junior vikatan in an interview with sivakami ias their reporter has made fun of his honesty that is the brahmin mentality he boldly black listed a brahmin construction giant CCCL.that is the reason.they cant tolerate a dalit officer gaining respect from people he is the first to introduce e- governance in a district in india.as i already said he will come up with flying colours with his very own intelligence exposing the corrupt system.KALANGAAMAL KALAKKUNGA BOSS.

 11. நாலு அண்ணன் தம்பிகளுடன் பிறந்த இந்த தியாகராஜன் செட்டியார். மிகப் பெரிய ஆள். இவர் பல நிதி நிறுவனங்களில் கோடிக் கணக்கில் பணம் வாங்கி ஏப்பம் விட்டவர், இன்றைய OMR ல் 1990 ஆண்டு புட்னானி என்பவருடன் சேர்ந்து வீடு கட்டுகிறேன் என்று இந்தியன் வங்கியின் உப நிறுவனம் மற்றும் LIC கடன் பெற்று திருப்பி செலுத்தாதவர். இவரை தேடிய போது இவர் லாலுவுடன் இருந்தார் (அப்போது ராப்ரி ஆட்சி பீகாரில்). அம்மா ஆட்சி வந்தவுடன் எங்கிருந்தோ வந்தார். தன் மனைவியை இணை மேலாண் இயக்குநராக கொண்டு தாங்கள் குறிப்பிட்டுள்ள நிறுவனத்தை துவக்கினார். பலகோடிகள் கடன் தரவேண்டியவர் புதிய நிறுவனத்தை துவக்குகிறார். அதற்கு அப்போதைய முதல்வர் அம்மா குத்துவிளக்கு ஏற்றுகிறார். இச் செய்தி அன்றை Economic Times செய்தி தாளில் வருகிறது.

  இவர் மட்டுமல்ல இவரது குடும்பமே கடன் பெற்று விட்டு திருப்ப செலுத்த தெரியாத குடும்பம். இவரது அண்ணன் மதுரையில்உள்ள ருக்குமினி மில்ஸ் (இவரும் பங்குதாரர்) கடன் பெற்றதை திருப்பி செலுத்த வில்லை. வங்கி அச் சொத்தை ஏலம் விட்டும் ஈடாக வில்லை. இன்னொரு தம்பி பெங்களூரில் கடன் வாங்கி விட்டு காணவில்லை

  இது அவர்களுக்கு வாடிக்கை நமக்கு…………………

 12. //அவருடைய அனுபவத்தைப் படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்த போதிலும் எல்லா அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், எத்தனை முறை பந்தாடப்பட்டும் தளராத அவரது மன உறுதியும் வியக்கத்தக்கவை. //

  So sad… there is no different between U and Karunanithi.
  both are blaming the caste…. both are safe guarding the person by caste…..
  If he belowings to ஒடுக்கப்பட்ட சமூகத்தில் means he not have courage? do u mean in that way… Greate instult to the whole ஒடுக்கப்பட்ட community…
  shame shame….

  I can recollect the Shankar’s Muthalvan dialong, “Dai where is the caste coming here….”

  the same question to Mr Vinavu… try to go in good perception…. else U will be came comedy Piese in Blog…. like Sarunivethitha….

  do u know anything about ELCOT – his share in the Venders of ELCOT!
  Aiyo! Aiyo!
  Innuma intha janaga unnaium Umma sharkaraiym Numbuthu….

 13. அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது.

 14. IAS officers are hardwork nd they re passed all the knowledge nd others analytical mind .but politicans not educated……they re not vivulaysing mind this way followed our cheif minister….UMA SHANKAR IS GREAT……i supported for u sir……

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க