முகப்புஉடல்தானம் = அப்போலோவின் இலாபம் ?
Array

உடல்தானம் = அப்போலோவின் இலாபம் ?

-

அமெரிக்காவைச் சேர்ந்த 65 வயதான ரொனல்ட் லெம்மருக்கு ஏற்கனவே பைபாஸ் அறுவைச் சிகிச்சையும், பேஸ்மேக்கரும் வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் இதய மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் எம்.ஆர். கிரிநாத் மற்றும் டாக்டர் பால் ரமேஷ் ஆகியோர் கூறியதாவது: “இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 100 இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. அதில் சென்னை மற்றும் தில்லியில் 40 முதல் 45 அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. சாலை விபத்தில் இறந்த 36 வயதுடைய நபரின் இதயம் தானமாகப் பெறப்பட்டு ரொனால்ட் லெம்மருக்கு பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக உடல் தானம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.”

தமிழக இதயத்தை பெற்றுக் கொண்ட அமெரிக்க தொழிலதிபர் ரொனால்ட் லெம்மர் கூறுகையில், அமெரிக்காவில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று மருத்தவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சென்னையில் அப்பல்லோவை அணுகினேன். பதிவு செய்த மூன்று மாதங்களில் அதிர்ஷ்டவசமாக எனக்கு இதய தானம் கிடைத்தது என்றார்.

அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது: “50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவில் (சுமார் 25 இலட்சம் இந்தியரூபாய்) இந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. நாட்டில் இதய நோய்ப் பிரச்சினை காரணமாக நாளொன்றுக்கு 5,000 பேர் இறக்கின்றனர். அப்பல்லோ மருத்துவமனை மூலம் 5,629 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நிமிடம் ஒன்றுக்கு ஒரு சாலை விபத்து ஏற்படுகிறது. இதில் 50 சதவீதம் பேர் இறந்து விடுகின்றனர். உடல் உறுப்புகளை தானம் அளிப்பது தொடர்பாக விழிப்புணர்வு அவசியமாகும்.”

கூட்டி கழித்துப் பார்த்தால் இந்த செய்தியிலிருந்து என்ன தோன்றுகிறது?

இந்தியாவில் நிமிடத்திற்கு ஒரு சாலை விபத்து எற்படுவது குறித்து பிரதாப் ரெட்டிக்கு கவலையில்லை. அந்த விபத்துக்களில் சாகும் நபர்களின் உறுப்புக்களை தானம் செய்யும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுவது குறித்தே அவரது கவலை. அதிலும் தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது என்று அப்பல்லோ மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் சாலை மேம்பாடு, லாரி டிரைவர்களுக்கு சுமையில்லாத வேலை முறை ஆகியன நடந்தால் சாலை விபத்துக்கள் குறையும். சாலை விபத்துக்கள் குறைந்தால் தானமாக வரும் உறுப்புக்களின் எண்ணிக்கையும் குறையும். அவை குறைந்தால் அப்பல்லோவுக்கு வருமானம் குறையும். அமெரிக்காவில் இதய மாற்று சிகிச்சைக்கு இரண்டாண்டு காத்திருக்கும் அமெரிக்கர்களுக்கு இந்தியாவில் மூன்றே மாதங்களில் இதயம் கிடைக்கும் வாய்ப்பு குறையும்.

என்றாலும் இந்தியாவில் சாலை விபத்துக்கள் குறையப் போவதில்லை. அப்பல்லோவின் வருமானமும் குறையப் போவதில்லை. அமெரிக்காவிடம் நமது நாடு மட்டுமல்ல நமது உடலும், உயிரும் கூட அடமானமாக உள்ளது என்பதற்கு இதை விட எடுப்பான சான்று வேறு வேண்டுமா?

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. உடல்தானம் = அப்பல்லோவின் இலாபம் ?…

  சாலை விபத்து மரணங்கள் குறித்து பிரதாப் சி ரெட்டிக்கு கவலையில்லை. சாகும் நபர்களின் உறுப்புக்களை தானம் செய்யும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுவது குறித்தே அவரது கவலை….

 2. பணத்தை ஒன்றையே குறியாக கொண்ட கேடுகெட்ட பெரும்பாலான மருத்துவர்களில், பிரதாப் ரெட்டி போன்ற மருத்துவ பண்பாடே இல்லாமல் சுரண்டும் ஒரு பிணந்தின்னி ஓணாய்.

 3. வினவு, இது போன்ற விசயங்களை மேலும் விவரங்களுடன் விரிவாக எழுதவும். வெறும் 3 பாராவில் முடிக்கின்ற ஒன்றா இது?

 4. […] This post was mentioned on Twitter by சங்கமம், ஏழர. ஏழர said: @vinavu 3 பாராவுக்கெல்லாம் எதுக்கு தனிப்பதிவு? உடல்தான வியாபாரம் பற்றி விரிவாக எழுதுங்க http://bit.ly/dmKpJQ #vinavu […]

 5. இந்தியர்களின் உடல் தானம் இந்தியர்களுக்கே பயன் பட வேண்டும். அதைப் போன்ற ஒரு சட்டன் கொண்டு வர வேண்டும்.

 6. A law should be passed by which all these transplantation should be done in Goverment
  hospitals only and the beneficiaries should only be the poor who take treatment in these hospitals.For others who want to take this kind of treatment in private hospitals only the parts of their relatives who happened to die in such road accident can be tranplanted.

 7. உறுப்புகள் மிக மலிவாய்க் கிடைப்பதால் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் ’மருத்துவச் சுற்றுலா’வுக்கு மிகச் சிறந்த இடமாக இந்தியா திகழ்கிறது. இது குறித்து பல இடங்களில் சுற்றுலாத் துறை இயக்குநர் இறையன்பு ஐஏஎஸ்சும், நமது மருத்துவத் துறை பெருமக்களும் பெருமிதம் பொங்கக் குறிப்பிடுவதை நாம் காண முடியும்.

  சில்லறைக் கடனுக்காக கிட்னியை விற்பவன் …..அதனை சுற்றுலாத் தொழிலாக்கி காசு பார்க்கும் மருத்துவத் தரகுக் கூட்டம்……. கொடுத்தவனை நேரில் கூட பார்க்காமல் இங்கிருக்கும் மருத்துவத் தொழில்நுட்ப மேதைகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தொழும் பணக்கார வர்க்கம்….. இதனைப் புளகாங்கிதமாய் பிரசுரித்து (உரிய அன்பளிப்புடன் தான்) மகிழும் ஊடகம்…. சர்வம் சுப மங்களம்………

 8. மருத்துவம் தனியார்மயம் ஆனால் இதுதான் கதி. மனிதநேயம் என்பது வாய்சவடால்

 9. இந்த பிரதாப் ரெட்டி போன்ற பண வெறி ஓநாய்களுக்கு… கறி கடை, கோழி கடை வைத்திருப்பவர்கள் மிக மிக உயர்வானவர்கள்… ஆனால் கறி கடைகாரர்களை பாவம் செய்பவர்கள் என சொல்லும் கூட்டம்… அப்பல்லோவில் சிகிச்சை எடுப்பதை பெருமையாக கொள்ளும்…

  ஆனால் பிரதாப் ரெட்டியெல்லாம் உயந்த மனிதராக திரியும் கேடு கெட்ட நாடு…

 10. தோழர் ஏழரயின் கருத்தை ஆமோதிக்கிறேன்… விரிவான அலசல் வேண்டும். இல்லையெனில் எதையெடுத்தாலும் கோணலாகப் பார்க்கிறோம் என்ற தவறான எண்ணம் படியும்… நேற்று உடல்தானம் செய்து அதைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருந்த நண்பர் ஒருவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கையில் எனக்கு இது பற்றிய சிந்தனையே வந்தது….

  தனியார் மருத்துவமனைகளின் ரத்தவங்கிகளில் ரத்தம் இலவசமாய்க் கிடைப்ப்தில்லை… எனில் ஊரெங்கும் நடத்தப்படும் ரத்ததான முகாம்களில் சேகரிக்கப் படும் ரத்தம் எங்கே போகிறது?!

  • Blood that is donated has to be stored in a refrigerated state, which costs money. That is why you don’t get blood for free at private hospitals. Why do expect them to provide it for free?

   • ஒரு யூனிட் இரத்தம் சேமிக்க இரண்டாயிரத்து ஐனூறு ரூபாயா செலவு ஆகும் ?..

    • Bossu, not only for storage, the blood undergoes other tests.
     2500 சரியான விலைன்னு சொல்ல வரல – ஆனா இதுக்கெல்லாம் செலவாகும்னு சொல்லறேன்.
     அதே நேரம் பண்ண வேண்டிய எல்லா testம் பண்றாங்களான்னு தெரியாது…

   • //Why do expect them to provide it for free?//

    அப்புறம் இன்னா மசு…..க்கு எங்க கிட்ட இருந்து ரத்தம், தானம்ன்ற பேர்ல ஓசியில வாங்கிகிட்டு போறீங்க? ரத்தம் ஸ்டோர் பண்றது கஸ்டம், அத எங்க உடம்புல உற்பத்தி பண்றது ரொம்ப ஈஸி.

    கிரகம், சிங்கப்பூர் அம்’பேரிக்காய் ன்னு இங்க கமெண்ட் போட்டா, மண்டையில மசாலா கூடவா இருக்காது?

 11. இந்த கட்டுரையிலிருந்து மருத்துவத்தின் கோரம் மட்டும் இல்லாமல், கல்வி, விவசாயம் இதெல்லாம் இன்று முதலாளித்துவதின் கோரப்பிடியில் நம் நாடு கவ்வப்பட்டுருகிறது.
  எனவே, இதெல்லாம் ம்க்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டும்… ஆனால், தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம் எனும் கொள்கையின் அடிப்படையில் மறுகாலணியாதிக்கம் நம் நாட்டை கழுத்தை நெறித்துக்கொண்டிருந்தது……..
  இதற்கு மாற்று நக்ஸல்பாரிகள் பாதையில் அணித்திரள்வது தான் ஒரே தீர்வு!!!

 12. What rubbish! You don’t seem to have even a basic understanding of the need for organ donation. The issue of accidents and casualties is a completely different one. Typical Vinavu, trying to link two completely unrelated issues in an attempt to paint corporates as evil. Laughable, really!

  Do you know that here in Singapore organ donation is mandated by law, except for Muslims? This means when someone dies, naturally or otherwise, the state owns your organs! Do you know why they do it? To save lives. Which is what Apollo is trying to do. You are unable to see that. All you can see is that they are making money, which somehow seems to be a bad thing. Why do you expect Apollo to treat you free of cost? You don’t want to pay for anything. Pathetic mentality!

  • Why Apollo didn’t give the organ to at least a Rich Indian ?. Because American paid more than a Rich Indian does ?. Or a marketing strategy of Apollo ?

  • அட … சிங்கப்பூர்ல போய் கலட்டுரவரா நீங்க … சொன்னாங்க சொன்னாங்க .. சிங்கப்பூரான் வந்த பிறகு தான் சிங்கப்பூருக்கே புது ஒளி கிடைச்சிருக்குனு ..
   பின்ன சும்மாவா ?.. அறிவு ஒளி இப்படி பட்டொளி வேசி … மன்னிக்கவும் .. வீசி ப்றக்கும் போது சிங்கப்பபூருக்கே ஒளி கிடைக்காதா ?..
   அறிவிலிகளே .. இங்கே அப்பல்லோ என்ற ஒரு தனியார் மருத்துவ மனையில் அந்த மருத்துவமனையின் லாபத்திற்காக மனித உடல் உறுப்புகள் பயன் படப் போகிறன. பயனாளி ஒரு கோடீஸ்வரனாக இருக்கும் பட்ச்சத்தில் கிடைக்கும் அந்த உடல் உறுப்பு தானம் ஒரு சாதாரண விவசாய கூலிக்கோ … ஒரு தொழிலாளிக்கோ கிடைக்குமா ?.. சிங்கப்பூரில் பெரிய மருத்துவமனைகள் எல்லாம் அரசுடமை
   ஆக்கப் பட்டவை தாம் . அவற்றில் மாற்று அறுவை செய்ய சிஙகப்பூர் குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு .. அங்கு வேலை செய்யப் போகிறவனுக்கு கூட கிடையாது .. அங்கேயே உள்ள குடி மக்களுக்கு மட்டுமே அந்த உடல் உறுப்பு தானம் கிடைக்கும். ஆனால் இங்கே … கல்வியும் மருத்துவமும் தனியார் கையில் .. இலாபம் ஒன்றே நோக்காக கொண்டு செயல்படுகிறார்கள். உடனே பெரிய அறிவாளி போல அதில் என்ன தவறு என்று கேட்க்காதே .. காறி துப்பி விடுவேன் .. கட்டுரையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு பேசு . அப்பல்லோவுக்கு வுடல் தானம் செய்தால் யாருக்கு பலன் ?..அரசாங்கம் தூங்கிக் கொண்டு இருக்கிறது … மக்கள் மீது கவலை கிடையாது,.தனியார் கொள்ளை அடிக்க அரசு பொத்திக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது. இவை தாம் இங்கு சொல்ல வந்த கருத்துக்கள் ..
   அதில் உனக்கு எதாவது விமர்சனம் உண்டா ?/

   • Mr Saniyan Sakadai

    Perhaps you should take your head out of your ass and read at what I wrote, instead of wildly hurling abuses. Grow up, man!

    I wasn’t comparing the state of health care in India and Singapore. I was merely pointing out that organ donation and harvesting are not evil practices, as Vinavu and you seem to imply.

    Moreover, Vinavu makes the patently absurd claim that Apollo is not bothered about road accidents but is only interested in making money out of the dead. That’s what I was refuting. But I guess it flew over your head and you’ve resorted to childish name-calling.

    “உடனே பெரிய அறிவாளி போல அதில் என்ன தவறு என்று கேட்க்காதே .. காறி துப்பி விடுவேன் .. கட்டுரையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு பேசு”

    You’ve shown your true colors.

    I ask again: Why do you expect Apollo to treat you free of cost? It’s a typical entitlement mentality born from socialist brainwashing.

    • சிங்கபூரன்

     Organ donation and treating victims of accidents are definitely related issues, how can you treat them differently, when a large part of organ donation racquet is profitting from organs harvested from accident victims. When healthcare and medical tourism is becoming corporations they vehemently follow the law of supply and demand, the demand in this case is very high and increasing and in order to fulfill their business customer needs and maintain relationship and stay ahead of competition there is a very high danger of corporates resorting to such measures, which is what the article covers. Sadly there is no regulations in India for monitoring such activities, and in most cases even the state keeps silence considering the revenue earned by the tourism industry. It is the common man getting affected not those who can afford to pay. The pitiable state of affairs in India now is that poor people are compelled to sell their kidney’s, organs and act as surrogate mothers to serve the rich customers from other countries, this is a shameful state and the country should be ashamed of treating its most poor class citizens without any humanitarian look, this is a pitiable case.

    • //Why do you expect Apollo to treat you free of cost?//

     அட நன்னாரி!

     அப்பல்லோ காரன் ஒரு ஒடம்புல இருந்து இன்னோரு ஒடம்புக்கு தானே மாத்துனான்?
     அவனா தயாரிச்சானா?

     உடல் தானம் செய்சவங்களுக்கு (குடும்பத்துக்கு) என்ன கொடுத்தான்? அவன் எவ்வளவு சுருட்டிகிட்டான்?

     சரி காசே வங்கிட்டு செஞ்சாலும், ஏன் இந்தியாக்காரனுக்கு செய்யாம அமேரிக்காகாரனுக்கு செய்றான்?

     பின்னாடி எதே இடத்துல சொறிஞ்சாலும் அது அமேரிக்காகாரனுக்கு முதல்ல அப்புறம் நம்ம நாட்டு பணக்காரனுக்கு தான் சொறிவேன்னு இருந்தா நாங்க ஏன் ஸார் கேட்க போறோம்? உங்க கை எங்க வேணுமின்னாலும் சொறிங்கன்னு விட்டுட மாட்டோமா?

     இங்க நம்ம ஜனங்ககிட்ட மண்ணுல தானே போகுதுன்னு வியாக்கியானம் பேசி நீங்க காசு பாக்குறத கேட்காம விட்டுடனுமா??

     அதென்ன பிரைன் வாஷ்?? அந்த கருமம் அவ்வளவு அழுக்கு பிடுச்சு இருந்தா அத வாஷ் பண்றது ஒன்னும் தப்பில்லையே?

     நீங்க துணிய நீட்டா போட்டுகிட்டு, மூளை எவ்வளவு அழுக்கா இருந்தாலும் கவலப்படாம போய்கிட்டே இருக்காதீங்க! கொஞ்சம் கிட்னியையாவது யூஸ் பண்ணி யோசிங்க…

    • தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளும் சிங்கபூராரே ..
     இந்தியாவிலும் சிங்கப்பூரைப் போல் மருத்துவமனைகளை (உங்கள் அபிமான அப்பல்லோ உட்பட அனைத்து தனியார் மருத்துவமனையயும்) அரசுடமையாக்க சொல்லவும் .. நாங்கள் உடல் தானம் செய்யத் தயார் . உங்கள் ஆதரவு பெற்ற இந்த அரசு இதை (மருத்துவமனைகளை அரசுடமையாக்குதல்) செய்ய தயாரா ?..

     தவிர நாங்கள் இலவசமாக உங்களிடம் இருந்து எதுவும் கேட்க்கவில்லை . அல்லது உங்கள் ”ஜனநாயக?!?” அரசின் பிரதம மந்திரியின் சட்டைப் பையிலிருந்து காசு கொடுக்க சொல்லி கேட்கவில்லை. தனியார் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கோடி கோடியாக சலுகைகள் கொடுப்பதை நிறுத்தி விட்டு அந்த தொகையை உழைக்கும் மக்களுக்கு இலவச மருத்துவம் கொடுக்க தான் கேட்டுள்ளேன்.

    • I understand why this singaporean is crying. They come to india for cheap medical services when they dont have enough money in CPF or medisave or when they dont want to spend much money. We must stop them coming here!
     Organ from people killed in accidents must be given to government hospitals only.

 13. சரியான செய்தியை பதிந்திருக்கிறீர்கள். இங்கு இன்னமும் பலர் இருதய மாற்று சிகிச்சைக்கென காத்திருக்கக் கூடும்.அவர்களுக்கு சாத்தியமில்லாமல் போனது இருபத்தைந்து லட்சத்திற்காக சாத்தியப்பட்டிருக்கிறது .இதற்கு வெட்கமில்லாமல் விளம்பரம் வேறு .முதல்வர் முதல் எல்லோரும் சிகிச்சைக்கென இங்கு சென்றடையும் வரை இவர்களுக்கு ஏதும் குறைவில்லை

  • பூங்குழலி

   சரியான செய்தியை பதிந்திருக்கிறீர்கள். இங்கு இன்னமும் பலர் இருதய மாற்று சிகிச்சைக்கென காத்திருக்கக் கூடும்.அவர்களுக்கு சாத்தியமில்லாமல் போனது இருபத்தைந்து லட்சத்திற்காக சாத்தியப்பட்டிருக்கிறது

   ——————

   சட்டம் போடணும்.. இப்படி வெளிநாட்டுக்காரர்களுக்கு விற்பதை தடுக்க…

   இந்தியா என்றால் எல்லாவற்றிலும் இளக்காரமா போச்சா?.

 14. suberb, most essential article இது போன்ற விசயங்களை மேலும் விவரங்களுடன் விரிவாக எழுதவும்.

 15. நல்லதொரு கட்டுரை…
  இது குறித்த விரிவானதொரு கட்டுரை எழுத வேண்டுமென நானும் நினைத்திருந்தேன்…
  அபோல்லோ போன்ற மருத்துவ பயங்கரவாதிகள், அவர்களாகவே நேரடியாக இதில் ஈடுபடுவதில்லை. சில பெரிய மருத்துவமனைகள் ஒன்று கூடி, தனியே நிறுவனம் போன்றதொன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் அவர்கள், பல கார்ப்பொரேட் நிறுவங்களுக்கும் சென்று உறுப்பு தானத்தின் அவசியத்தை எடுத்து சொல்லி, உறுப்பினர்களாக்கி வந்தனர்.. சமீப காலத்தில் உறுப்பு தானத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல விளம்பரத்தை பயன்படுத்தி, எல்லா நிலை மக்களிடமும் எளிதாக செல்ல முடிகிறது… அதற்கு பின்னால் இருக்கும் அரசியலெல்லாம் மக்களுக்கு புரியாமல் பார்த்துக்கொள்கிறார்கள் (வழக்கம்போல)…

 16. /**இந்தியாவில் சாலை விபத்துக்கள் குறையப் போவதில்லை. அப்பல்லோவின் வருமானமும் குறையப் போவதில்லை. ***/
  Why you are thinking always Negatively?

Leave a Reply to ஏழர பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க