Wednesday, November 29, 2023
முகப்புசௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!!
Array

சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!!

-

கடந்த 26/07/2010   அன்று சௌதிகெஜட் நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் ஒரு செய்தி வந்திருந்தது,  “கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது” என்று.  வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணால் கடத்தப்பட்டு பின்னர் ஒரு பல்பொருள் அங்காடியில் விட்டுச் செல்லப்பட்டிருந்தது அந்த இரண்டரை வயதுக் குழந்தை. குழந்தையின் தந்தை குழந்தையை மீட்க பணம் தரவேண்டும் என்று தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்தச் செய்தியிலேயே (அதே நகரில்) கடந்த ஆண்டும் இதே போல் குழந்தைக் கடத்தல் ஒன்று நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படி நடைபெறும் குழந்தைக் கடத்தல் நிகழ்வுகளை பணத்துக்காக நிகழ்த்தப்படுபவைகள் என்று பொதுமைப்படுத்திவிடவோ ஒதுக்கிவிடவோமுடியாது. ஏனென்றால் இவைகள் பணத்துக்காக நடைபெறுவதைப்போல் காட்டப்படுபவை. அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்களை உற்றுநோக்கினாலே தெரியும் இவைகளில் பணம் வினையூக்கியாகச் செயல்பட்டிருக்கமுடியாது என்பது.

  1. இந்தக் கடத்தலைச் செய்வது அந்தந்த வீடுகளில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணிப்பெண்கள்.
  2. இந்தக் கடத்தலில் அவர்கள் பணம் பெறுவதும் இல்லை, காவல்துறை கடத்தப்பட்டவர்களை மீட்பதும் இல்லை. ஏனென்றால் அதே நாளோ அல்லது மறுநாளோ எங்காவது பொது இடத்தில்
    விட்டுச்செல்வதுதான் நடந்திருக்கிறது.
  3. இக்கடத்தலை திட்டமிட்டோ சிலருடன் இணைந்தோ செய்வதில்லை

இது போன்ற காரணங்கள் அந்தக் கடத்தல்கள் பணத்துக்காக நடைபெறுவதில்லை என்பதை நிரூபிக்கின்றன. என்றால் அதன் உண்மையான காரணம் என்ன?

சௌதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை ஒரே வார்த்தையில் உச்சரிக்க வேண்டுமென்றால் ‘நரகம்’ என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அதிகாலையில் எழுந்து வீட்டை கழுவித் துடைத்து, காலை உணவுக்கான தயாரிப்புகளைச் செய்து, குழந்தைகளை எழுப்பி கவனித்துக் கொண்டு சற்று பெரிய குழந்தைகளென்றால் பள்ளிக்கூடத்திற்காக ஆயத்தப்படுத்தி, கடந்த நாளின் அழுக்கடைந்த ஆடைகளை துவைத்து உலர்த்தி தேய்த்து, மதிய உணவை தயாரித்து வழங்கி சுத்தப்படுத்தி, குழந்தைகள் பெற்றோரை தொந்தரவு செய்துவிடாமல் கவனித்துக்கொண்டு, இடையிடையே சௌதிகளின் தேவையறிந்து அவற்றில் உதவி, மாலையில் சௌதிப் பெண்களின் கடைவீதி உலாவுக்கு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு பின்சென்று அல்லது வேண்டிய பொருட்களை சுமந்து வருவதற்காக பின்சென்று பின் இரவுச் சாப்பாடு குழந்தைகளைத் தூங்கவைப்பது என்று பின்னிரவு வரை தன்னைத்தானே ஒரு இயந்திரமாய் மாற்றிக் கொள்ளவேண்டியதிருக்கும். வேலை நேரம் ஒழிவு நேரம் என்று தனித்தனியாக கொள்வதற்கு இடம்இருப்பதில்லை. இடையில் கிடைத்தால் சில நிமிடங்களை ஓய்வாக கொள்ளவேண்டியதுதான். இதில் நேர்ந்து விடும் தவறுகளுக்காக திட்டுக்கள் முதல் அடிஉதை வரை அனைத்தும் கிடைக்கும்.

வீடுகளில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையின் சிரமங்கள் அவர்களை ஒரு இயந்திரத்தைப் போல் உணரவைக்கிறது என்றால், நிலவும் சூழல் அவர்களை இயந்திரமாகவே ஆக்கும். வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை, குப்பைகளை கொட்டுவதற்குச் சென்றால்கூட அனுமதியின்றி செல்லமுடியாது. தனியாக செல்லிடப்பேசி வைத்துக் கொள்வதற்கோ, யாருடனும் தொலைபேசியில் பேசுவதற்கோ முடியாது. நாட்டில் பெற்றோர்களிடமோ, உறவினர்களிடமோ பேசுவதற்கு மட்டும் அனுமதிப்பார்கள். சம்பளப் பணத்தை ஊருக்கு அனுப்புவதற்குக்கூட சௌதிதான் வங்கிக்கு சென்று அனுப்புவான். இப்படி ஒழிவின்றி வேலை செய்வதாலும், தங்களின் மனக் குறைகளை பகிர்ந்து கொள்ள வழியின்றி கூண்டுக்குள் அடைபட்ட விலங்கைப் போன்ற சூழலாலும் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள்.

பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதில் சௌதியில் வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களின் நிலை சொல்லும் தரமன்று. வேலை செய்யும் வீடு பெரிய பணக்கார வீடாக இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பணிப்பெண்கள் இருந்தால் வேலையில் ஆறுதலுக்கும், பாலியல் கொடுமைகளிலிருந்து சிறிது தப்பித்தலுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் தனியாக மாட்டிக் கொள்ளும் பெண்களுக்கோ சொல்வதற்கும் யாருமின்றி, செல்வதற்கும் வழியுமின்றி அந்த பாலியல் வதைகளை சகித்துக் கொள்வதைத் தவிர வேறு கதியில்லை.

அண்மையில் விமான நிலையத்தில் 40 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த ஒரு பணிப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவர் கூறியதைக் கேட்டால் பணிப்பெண்கள் எத்தகைய நிலையில் அங்கு பணிபுரிய வேண்டியதிருக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். “பிறந்ததிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை, கொஞ்சம் விபரம் தெரிந்ததும் என் மாரிலேயே கைவைக்கிறான்” என்று கூறி உடைந்த  போது அவர் கண்களிலிருந்து வழிந்தது இரத்தமாக தெரிந்தது.

“பணிப்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எங்களிடம் தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என்கிறது காவல்துறை. ஆனால் புகார் கொடுக்கும் அளவுக்கான சூழலை ஏற்படுத்தாமல், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்பது எந்த விதத்தில் சரியானது? ஒரு பணிப்பெண் தனக்கு நேரும் பாலியல்கொடுமைகளுக்கோ, வதைகளுக்கோ தொலைபேசி மூலம் காவல்துறைக்கு புகார் கொடுக்கிறாள் என்று கொள்வோம். என்ன நடக்கும்?

சௌதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. முதல் கட்டமாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை என வீட்டிலுள்ள அனைவரும் விசாரணைக்காக வரும் காவல்துறையினரிடம் கூறுவர். அப்படி ஒன்று நடந்தது என்று பாதிக்கப்பட்ட பெண்ணே நிரூபிக்க வேண்டியதிருக்கும். அப்படி நிரூபித்தாலும் குற்ற நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசி ஏதாவது இழப்பீட்டுத் தொகை வாங்கி சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதுதான் காவல்துறை செய்யும் அதிகபட்ச நடவடிக்கை. அன்றி கொடுமை நடைபெற்றதை நிரூபிக்க முடியாமல் போனால், இழப்பீடோ, பரிவுத் தொகையோ எதுவுமின்றி சொந்தநாடு திரும்ப வேண்டியதிருக்கும். ஏனென்றால், தொடர்ந்து அந்த வீட்டில் வேலை செய்தால் அது தற்கொலை முயற்சியாகத்தான் இருக்கும்.

முன்னிலும் அதிக சித்திரவதைகளுடனும், நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளுடனும் வேலை செய்ய முடியுமா? புகார் கொடுத்து நிரூபிக்க முடியாத நிலையிலுள்ள பணிப்பெண்களை வேறு இடத்திலிலோ, வேறு வேலையிலோ சேர்த்துவிட காவல்துறை முயலாது. ஏனென்றால் சட்டத்தில் அதற்கு அனுமதியில்லை. வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை வேலைக்காக தருவிக்கும் சௌதி அப்பெண்ணுக்கு வேலைவழங்குனர் மட்டுமல்ல, பாதுகாவலரும்தான்.

பாலியல் கொடுமைகளைச் செய்வது ஆண்கள்தான், வீட்டிலுள்ள பெண்களிடம் அவர்கள் முறையிடலாமே என நினைப்பதும் கொடுமையான அனுபவமாகவே அமையும். அதன்பிறகு பழிவாங்கும் நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதோடு பொருளாதார ரீதியிலும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். ஏனென்றால் சம்பளம் கொடுப்பது அதை பணிப்பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி வைப்பது போன்றவற்றைச் செய்வது சௌதி ஆண்தான்.

நடக்கும் இவைகளுக்கு எதிராக முறித்துக் கொண்டு நாடு திரும்பும் நிலையில் இங்கு வரும் பணிப்பெண்களில் பெரும்பாலானோர் இருப்பதில்லை. வாங்கி வந்த கடனும், வீட்டுச்செலவுகளும், தேவைகளும் அவர்களின் முன் பூதாகரமாக அச்சுறுத்துகின்றன. வறுமைக்குப் பயந்து, குடும்பத்தையும் குழந்தைகளையும் பிரியச் சம்மதிக்கும் பெண்கள் வந்த இடத்தில் எதிர்கொள்ளும் கொடுமைகளால், அதற்கு வடிகாலில்லாத நிர்ப்பந்தங்களால் நொறுங்கிப் போகிறார்கள். வேறுவழி தெரியாததால் பலபெண்கள் சம்மதித்து சகித்துப் போகிறார்கள். சிலர் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக குழந்தைகளை துன்புறுத்துவதையும், கடத்திச் செல்வதையும், ஏதாவது வழியில் பழிவாங்க முடியாதா? எனும் எண்ணங்களுக்கு ஆளாகிப் போகிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே சௌதி அரசு உள்ளே வரும் அனைத்து வெளிநாட்டவர்களையும், புகைப்படமும், கைரேகையையும் விமான நிலையத்திலேயே எடுத்து பதிவு செய்து ஆவணமாக்கி வருகிறது. விடுப்பில் செல்லும், இகாமா (இருப்பிடஅனுமதி) புதுப்பிக்கும் யாரும் கைரேகையை பதிவு செய்யாமல் முடியாது எனும் அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஒரு குழந்தையை கடத்திச் சென்று அதன் மூலம் பொருளாதார பலன்களை அடைந்துவிட முடியும் என்பது நடக்க முடியாத ஒன்று. பெண்கள் வெளியேறிச் சென்று தனியாக எங்கும் வேலை செய்து விடவோ, ஊர் சென்று விடவோ முடியாத சூழலை ஏற்படுத்தி வரும் இந்நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண் தன்னுடைய பொறுப்பில் இருக்கும் குழந்தையை கடத்தி பணம் கேட்கிறாள் என்று கூறுவது அதன் பின்னணியில் தொழிற்படும் காரணங்களை மறைப்பதற்காகத்தானேயன்றி வேறொன்றுமில்லை.

இத்தகைய கொடுமைகள், பாலியல் வதைகள் குறித்து ஒரு சௌதி என்ன விதமான கருத்துகொண்டிருக்கிறான் என்பது இதில் இன்றியமையாத ஒன்றாகிறது. ஒரு சௌதிப் பெண் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்படும்போது ஒரு சௌதி ஆணுக்கு ஏற்படும் அதிர்வலைகள், ஒரு வெளிநாட்டு பணிப்பெண் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்டாள் எனும் போது ஏற்படுவதில்லை, அது ஒரு சாதாரண செய்தியாகவேபடுகிறது. இதை சொந்த நாட்டுப் பெண்ணுக்கும் அந்நிய நாட்டுப் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என எடுத்துக் கொள்ள முடியுமா? நிச்சயம் இல்லை. சௌதியின் உளவியலிலே இத்தகைய வித்தியாசங்கள் இருக்கிறது. இதை புரிந்து கொள்ள நாம் குரானிலிருந்து தொடங்கவேண்டும்.

சௌதி ஆணின் பாலியல் தேவைகளை பொருத்தவரை மதகலாச்சாரரீதியாக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. கட்டற்ற பாலியல் சுதந்திரத்திற்கு சில வரம்புகளை மட்டுமே நிர்ணயம் செய்திருப்பதன் மூலம் ஆணின் பாலியல் சுதந்திரத்தை பேணப்படுகிறது.

அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. குரான் 4:3

சட்டபூர்வமாக நான்கு மனைவிகள் அல்லாது எத்தனை அடிமைப் பெண்களையும் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள ஆணுக்கு அது அனுமதியளிக்கிறது. பரிகாரம் எனும் அடிப்படையில் அடிமைகளின் விடுதலை குறித்து குரான் பேசினாலும், அடிமையை வைத்திருப்பதும், அவர்களை பாலியல் ரீதியில் பயன்படுத்துவதும் மத அடிப்படையில் குற்றச் செயலல்ல. இந்த அடிப்படையிலிருந்து எழுந்து வருவதுதான் இப்போதைய சௌதிகளின் மனோபாவம். 1962ல் சட்டபூர்வமாக சௌதியில் அடிமையை வைத்திருப்பது தடை செய்யப்பட்ட பிறகும் இந்த மனோபாவம் தொடர்கிறது.வெளிநாட்டிலிருந்து வீட்டு வேலைக்கு வரும் பெண்களை பாலியல் அடிமைகளாய் வைத்திருப்பது குற்றமல்ல எனும் உளவியல்தான் அவர்களின் செயல்களில் பிரதிபலிக்கிறது.

வேலை செய்ய வரும் வெளிநாட்டு ஆண்களையும் சௌதிகள் இந்த மனோபாவத்துடனே அணுகுகிறார்கள் என்பதற்கு அனேக எடுத்துக்காட்டுகளைத் தரமுடியும். ஆனால், ஆண்களுக்கு இருக்கும் வாய்ப்பும், வேறு வேலை தேடிக்கொள்வதற்கான வசதிகளும், பணம் செலுத்தி தன் பாதுகாவலரை மாற்றிக் கொள்ள முடிகிற நிலையும் அவர்களை அடிமையாக நடத்துவதினின்றும் ஓரளவு பாதுகாக்கிறது. இதேபோல் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் கூட இத்தகைய கொடுமைகளை சந்திப்பதில்லை. வீட்டு பணிப்பெண்களுக்கு அதில் அழுந்திக் கிடப்பதைத் தவிர வேறுவழியில்லை எனும் சூழல் இருப்பதால் ஆணாதிக்கத் திமிரில் அடிமையாக நடத்துவதும் தொடர்கிறது.

அடுத்து பெரும் சொத்தாய் குவிந்திருக்கும் எண்ணெய் பணத்தின் மூலம் சௌதிகள் சாதாரண வேலைகள் எதனையும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் வேலையாட்களை வைத்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் வீட்டு வேலைகளுக்கான பெண்களும் அழைத்து வரப்படுகிறார்கள். வர்க்க ரீதியில் இருக்கும் இந்த மேட்டிமைத்தனமான மனோபாவமும் வீட்டு பணிப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் வெள்ளைக்காரர்களிடம் நாகரீகமாகப் பழகும் சௌதிகள் ஆசிய நாட்டவரைக் கண்டால் ஆண்டைகள் போலத்தான் நடத்துவார்கள். இதன்படி பணிப்பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவது குறித்து அவர்கள் குற்ற உணர்வு ஏதும் கொள்வதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பன்ஸ் நாட்டைச் சேர்ந்த சாரா எனும் இளம் பெண் தன்னை பாலியல் வன்முறை செய்ய வந்த ஒரு கிழட்டு ஷேக்கை குத்திக் கொன்றாள். அதற்காக அவளுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து முழு உலகும் போராட வேண்டியிருந்தது. காதல், கள்ளக் காதல், விபச்சாரம் போன்ற குற்றச்சாட்டுகளை வைத்தும் சௌதியில் இருக்கும் ஆசிய நாடுகளின் பெண்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது. இத்துடன் ஒப்பிடும் போது சௌதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை மிகவும் குறைவு.

சௌதிகளின் இருப்பை மதம் ஆளுமை செய்து கொண்டிருப்பது வரை அவர்களை இந்த மனோநிலையிலிருந்து மாற்றுவது கடினம். அதேநேரம் வெளியிலிருந்து வருபவர்களும் இவை குற்றம் எனும் நிலையை உணராது மத அடிப்படியில் ஆதரித்து நிற்பது வேதனை. காயம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட பிறகுதான் மருந்திடுவது குறித்து சிந்திக்க முடியும். அந்த வகையில் இதுபோன்ற நிகழ்வுகளை வெளியில் கொண்டு வருவதும், வெளிப்படையாக விவாதிப்பதும் அந்த அடிமைத்தனத்தைக் களைவதற்கான முதற்படியாகும்.

அரசியல், பொருளாதார ரீதியில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சௌதி ஷேக்குகள் உள்நாட்டு மக்களை ஒடுக்குவதற்கு மட்டும் இசுலாத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மதச் சட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டுவது, சவுக்கால் அடிப்பது முதலான கொடூரமான தண்டனைகளை அமல்படுத்தி வரும் ஷேக்குகள் அவர்களது சொந்த வாழ்வில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துதான் வருகிறார்கள். இவர்களை எதிர்த்து ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் எழாத வரைக்கும் இந்த வீட்டுப் பணிப்பெண்களுக்கு விடுதலை இல்லை.

உங்கள் பார்வைக்கு சிலஆதாரச் செய்திகள்

http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/07/070704_saudifeature.shtml
http://archive.arabnews.com/?page=1&section=0&article=131847&d=26&m=1&y=2010
http://archive.arabnews.com/?page=1&section=0&article=130001&d=22&m=12&y=2009
http://archive.arabnews.com/?page=1&section=0&article=128343&d=11&m=11&y=2009
http://archive.arabnews.com/?page=1&section=0&article=122151&d=3&m=5&y=2009
http://archive.arabnews.com/?page=1&section=0&article=117683&d=31&m=12&y=2008
http://archive.arabnews.com/?page=1&section=0&article=113798&d=3&m=11&y=2008
http://archive.arabnews.com/?page=1&section=0&article=113929&d=6&m=9&y=2008
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2010072679168

_____________________________________________
வினவு செய்தியாளர், வளைகுடாவிலிருந்து.
______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!! | வினவு!…

    இடுப்பொடியும் வேலை முதல் பாலியல் வன்முறை வரை எதிர்கொண்டு சௌதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை ‘நரகம்’ என்று சொன்னால் அது மிகையாகாது…

  2. […] This post was mentioned on Twitter by வினவு, Karthikeyan G and karthickphp, karthickphp. karthickphp said: RT @vinavu: சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!! https://www.vinavu.com/2010/08/13/saudi-women-labours/ RT Pls. […]

  3. உண்மை உண்மை மிகவும் வருத்தமான உண்மை.

    எனது மாமா அங்கு பணிபுரிகிறார், அவரது அரபி எனது மாமாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துள்ளார், சமிபகாலமாக சமபளம் எது கொடுக்கவில்லை, ஊருக்கி வரலாம் என்றால் பாஸ்போர்ட் இல்லை, அங்கு உள்ள போலீஸ் கூட அரபிகளுக்குதான் சப்போர்ட் செய்கிறது, வர முடியாமல் மிகவும் கஷ்ட பட்டு கொண்டிருக்கிறார்.

    உண்மையில் அங்கு பணிபுரிபவர்களுக்கு அது நரகம்தான், அதுவும் மீண்டு வராத நரகம், சில பேர்களுக்கு நல்ல வேலை கிடைத்து விடுகிறது அது 5% பேர்தான் இருப்பார் மீதம் உள்ளவர்கள் மிகவும் கஷ்டபடுகிறவர்களே…

    • சகோதரர் Mastan Oli, ///எனது மாமா அங்கு பணிபுரிகிறார், அவரது அரபி எனது மாமாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துள்ளார், சமிபகாலமாக சமபளம் எது கொடுக்கவில்லை, ஊருக்கி வரலாம் என்றால் பாஸ்போர்ட் இல்லை, அங்கு உள்ள போலீஸ் கூட அரபிகளுக்குதான் சப்போர்ட் செய்கிறது, வர முடியாமல் மிகவும் கஷ்ட பட்டு கொண்டிருக்கிறார்/// ஒங்க மாமாவுடைய போன் நம்பர் கொடுங்க கண்டிப்பாக நான் அவருக்கு தேவையான உதவி செய்கிறேன் மற்றபடி போலீஸ் அரபிக்கி சப்போர்ட்டாக இருக்கிறது என்பாதல்லாம் சும்மா நான் இங்கு சவூதியில்தான் வேலை செய்கிறேன்

      • @ஹைதர் அலி, எனது இமெயில் mmastanoli@gmail.com அதில் உங்களது மெயில் அனுப்பவும் நான், எனது மாமுவின் போன் நம்பர் அனுப்புகிறேன், நல்லது நடந்தால் மிகவும் சந்தோசம். அல்ஹம்துலில்லாஹ்.

        • சகோதரர் மஸ்தான் ஒங்களுக்கு மெயில் அனுப்பி விட்டேன் பார்வையிடவும்

  4. அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. குரான் 4:3

    அங்கு வேலை செய்பவர்கள் அடிமை கிடையாது, அந்த காலத்தில் அடிமைகளை விலைக்கு வாங்கும் பழக்கம் இருந்ததாம்… வாங்கினால் அவர்களுக்கே சொந்தம். இப்போது இந்த வசனத்தை எடுத்துகாட்டி தவறு செய்தால் கண்டிப்பா தண்டனைக்கூறியதுதான் இல்லையா?

    சொல்லப்பட்ட காலத்தையிம் நீங்கள் ஆராய வேண்டும்…

    • சகோதரர் மஸ்தான் ஒலி, வேலைக்காரின் நிலை வேறு பண்டைக்கால அடிமைகளின் நிலை வேறு என்று நீங்கள் விளங்கி வைத்திருப்பது முற்றிலும் சரியானது

    • The quranic verses quoted by Vinavu are applicable even now(or that is what a believing muslim would say). Remember, mohammed had sex with his maid. The modern day saudis claim that the quranic sanction is applicable in case of sex with maid servants. Unless the arabs come out of religion, there is no hope for the maid servants there. I have heard this many times from even muslim women! If you think I am lying, see this link someone else have also heard the same reply.

      “I remember once on Ummah.com, AbuMubarak, in his defence of slavery, said that it was not slavery in the modern sense but having a slave in Islam is akin to having a Butler or a Maid. When I pointed out that you don’t own your butler or your maid, your butler or your maid is paid to do a specific job, and your maid does not have to have sex with you on demand, he said “being a slave in Islam is more like being a proffesional footballer”!!!! A proffessional footballer?! I don’t think Alex Ferguson is in any position to be demanding sex from Ryan Giggs!”
      http://councilofexmuslims.com/index.php?topic=9204.10;wap2

      I will give another example. This is a site which defends Islam. See how they are defending this quranic verses.
      “Why does the Quran Allow Slavery? Here is the answer. In Islam if a master has sex with his slave, then when the slave girl is pregnant, she and her child is automatically freed after the masters death. But that’s not the only way a slave can get freedom, infact if a slave request his/her freedom, she or he can get it!”
      http://www.answering-christianity.com/umar/slave_girls.htm

      What a wonderful way to give freedom to a maid servant!! If Allah is giving heaven to these rapists who rape the hapless maids, then Allah must be a devil, not god!

      • சகோதரி ரேவதி எனக்கு சத்தியமாக ஆங்கிலம் தெரியாது தமிழில் நீங்கள் தரவுகளை தந்தால் நான் விவாதிக்க தயராக இருக்கிறேன்

    • 4:3. அநாதைகளிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.. குரான் 4:3//

      அடிமைமுறை தவறு என்றால் அல்லாஹ் ஒரு வசனம் இறக்கி உடனே அடிமை முறையை ரத்து செய்திருப்பாரே? காலாகாலத்துக்கும் நிரந்தரமான அல்குரானில் இந்த வரி இருக்கிறது என்றால், அடிமைமுறை சரியானது; அதன் மூலம் ஆண்கள் அடிமைப்பெண்கள் மூலம் பாலுறவு திருப்தி அடையலாம் என்றுதானே பொருள்?

      //
      2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் – இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு//

      அதாவது ஒருவரது அடிமையை மற்றொருவர் கொலை செய்துவிட்டால், அவரது அடிமையை இவர் கொல்லவேண்டுமாம். இதுதான் நீதியாம்! என்ன கொடுமையடா இது! ஒருவரது பெண்ணை மற்றவர் கொலை செய்துவிட்டால், அவருடைய பெண்ணை இவர் கொல்லவேண்டுமாம். இது என்ன நீதியா? இதிலும் அடிமை முறை தவறு என்று சொல்லப்படவில்லை!

      //4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) //

      போரில் அடிமைப்பெண்களை கைப்பற்றலாம். அவர்களோடு உடலுறவு கொள்ளலாம். அடிமைப்பெண்களுக்கு கணவன் இருந்தாலும் அவர்களை மணமுடிக்கலாம். இது அல்லாவின் கட்டளை! இதிலும் அடிமைமுறை தவறு என்று சொல்லப்படவில்லை.

      //
      16:75. அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து லில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) – என்றாலும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை
      16:76. மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் – இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?//

      அல்லாவின் பார்வையில் அடிமையும் சுதந்திரமானவனும் சமமில்லை! இதிலும் அடிமை முறையை தவறு என்று சொல்லவும் இல்லை. இன்னும் கூடவே மேலே சென்று அடிமையும் சுதந்திரமானவனும் சமமில்லை என்றும் இந்த அல்லாஹ் பேசுகிறார்.

      //30:28. உங்களிலிருந்தே அவன் உங்களுக்காக ஓர் உதாரணத்தை எடுத்துக் கூறுகிறான்: உங்கள் வலக்கரம் உரிமைப்படுத்திக் கொண்டவர்களில் (அடிமைகளில்) எவரையும், நாம் உங்களுக்கு அளித்திருப்ப(தான சம்பத்)தில் உங்களுடன் பங்காளிகளாக ஆக்கிக் கொண்டு அதில் அவர்களுடன் சமமாக இருக்கிறீர்களா? உங்களைப் போன்றோருக்கு பயப்படுவதைப்போல் அவர்களை பயப்படுகிறீர்களா? இவ்வாறாகவே நாம் நம் அத்தாட்சிகளை சிந்தித்துணரும் சமூகத்திற்கு விவரிக்கிறோம்.//

      அடிமைமுறை அல்லாவின் அத்தாட்சிகளில் ஒன்று!

      • ரகு என்ற இந்த பார்ப்பன பயங்கரவாத வெரியனை அடித்து துரத்துங்கள். இவனுக்கு ஏன் இங்கே இடமலிக்கிறீர்கள்? இது போன்ற வெரியனுக்கு இடம் கொடுத்ததன் மூலம் வினவும் ஒரு பார்ப்பன பயங்கரவாத ஊடகம்தான் என்று தெலிவாகிரது.

        • ரகு பார்ப்பனியனா பயங்கரவாதியா என்றெல்லாம் எனக்குத்தெரியாது. ஆனால், இந்தப்பின்னூட்டத்தில் அவரை அடித்துத்துரத்தும்படியான ஒரு வார்த்தையைத்தானும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

          ரகு எடுத்துக்காட்டிய குர் ஆன் வாசகங்க குர் ஆனில் இல்லை, தவறான தகவல் என்று நீங்கள் கண்டால் அதனை ஆதாரத்துடன் மறுக்கலாமே?

    • மஸ்தான்,
      எந்த ஒரு மனிதனும் தான் செய்யும் தவறான செயலுக்கு தனக்குத் தானே ஏதேனும் ஒரு நியாயத்தைக் கற்பிதம் செய்து கொண்டுதான் செயலாற்றுவான். அதற்காக எந்த ஒன்றையும் துணைக்கழைத்துக் கொள்வார்கள். இல்லையென்றால் அதனை அவர்களால் ஒருக்காலும் செய்யமுடியாது. இங்கு குரானில் சொல்லபட்ட இவ்வசனமும் கூட இப்படித்தான் சவூதிகளுக்கு துணைபுரிகிறது. அன்று விலைக்கு வாங்கப்பட்ட அவ்வடிமைப் பெண்களின் கணவன்மார்கள் அருகில் இல்லாத்தினால் அவர்களின் பாதுகாப்புக்காகவும் அவ்வடிமைப் பெண்களின் பாலுறவுத் தேவைக்காகவும் அவ்வடிமைகளிடம் உடலுறவு வைத்துக் கொள்ள இஸ்லாம் அனுமதித்ததாக இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கப்படுகிறது. இன்று சவூதியில் பணிபுரியும் பெண்களின் நிலை மட்டும் என்னவாக இருக்கிறது? இஸ்லாமிய சட்டம் இருக்கும் ஒரே நாடன சவூதியில் இப்பெண்களின் நிலைக்கு குரானிலிருந்து என்னவிதமான தீர்வை எடுக்கமுடியும்?. நீங்கள் கூறுவது போன்று அவ்வசனம் அக்கால சமுதாய சூழ்நிலைக்கு மட்டுமே பொருந்தும் என்றால் குரான் முழுமைக்குமே இக்கருத்து பொருந்தும் என்றாகிவிடும். அன்று, பிடிபட்ட பெண்ணடிமைகளை, ஆணடிமைகளோ அல்லது விலைகொடுத்து வாங்கிய எஜமானர்களோ மணமுடித்துக் கொள்ளுங்கள் என்று ஏன் முஹம்மதால் ஒரு வசனத்தைக் கூறமுடியவில்லை? இவராலும் அக்காலச் சூழ்நிலைக்கேற்பத்தான் சிந்திக்கமுடியும் என்றால், வேறு வழியில்லை குரானையும்,ஹதீதையும் ஒரு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு உங்கள் மாமாவும் நீங்களும் நாங்களும் நமது நாட்டிலேயே வாழ்வதற்குண்டான வழியில் போராடுவோம் வாருங்கள். ஹைதர் அலி நீங்களும்தான்.

    • //சொல்லப்பட்ட காலத்தையிம் நீங்கள் ஆராய வேண்டும்…//

      :-(((

      மஸ்தான்,
      புனித குரானின் ஒவ்வொரு வரிகளும் வார்த்தைகளும் எழுத்துக்களும்…

      1. எல்லாக் காலத்திற்கும்
      2. எல்லா இடத்திற்கும்
      3. எல்லா சமூகத்திற்கும்
      4. எப்போதும்
      5. எங்கும்
      6. எதற்காகவும் பொற்ந்தும் இறைவனின் வார்த்தைகள்.

      எல்லாம் அறிந்த இறைவன் ஒரு காலத்திற்கு மட்டும் என்றோ அல்லது ஒரு பகுதிக்கு மட்டும் என்றோவா இறைவசனத்தை புனித தூதர் முகம்மதுவின் வழியாக உலகிற்கு கொடுத்தார்?

      புனித குரானின் ஒவ்வொரு வரிகளும் வார்த்தைகளும் எழுத்துக்களும் காலத்தால் மாறாதவை. எப்போதும் பொறுந்தும்.

      உங்கள்மீது இறைவனின் சாந்தி நிலவட்டுமாக.

  5. ஹைதர் அலி, சித்திக் போன்றவர்களிடம் பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான குரான் வசனங்களை உடனடியாக கேளுங்கள். அவர்கள் தமிழில் வசனம் தந்தால் அதற்குரிய மூல அரபி வசனத்தை எழுதி அவ்வசனங்களை உடனடியாக சவுதி(அனைத்து அரேபிய நாடுகள்) நாட்டுக்கு தந்தி அடியுங்கள். பெண்களுக்கான பிரச்சனை முடிந்துவிடும்.
    இவ்வளவு எளிதான வழியிருக்க, எதற்கு இவ்வளவு பெரிய கட்டுரை என்று தெரியவில்லை!

    இஸ்லாம்- பெண்கள்- இஸ்லாமிய நாட்டில் பெண்கள் போன்ற கட்டுரைகள் மூலம் வினவு தன்னை விளம்பரபடுத்திக்கொள்கிறது என புரிகிறது.
    அமெரிக்கா- இங்கிலாந்து போன்ற கிறிஸ்தவ நாட்டில் உள்ள பெண்கள் நிலையை குறித்து வெளியிடுமா வினவு?
    சீனா-ஜப்பான் இலங்கை திபெத் போன்ற புத்த நாட்டில் உள்ள பெண்கள் நிலையை குறித்து வெளியிடுமா வினவு?
    ஹைதர் அலி, சித்திக் போன்ற முஸ்லீம் நண்பர்கள் சமீபத்தில் வினவுக்கு வரவில்லை! அதனால் தான் இந்த துணிச்சல் போலும்!
    வாருங்கள் முஸ்லீம் நண்பர்களே! வினவுக்கு குரான் வசனத்தை எடுத்து கூறுங்கள்! தமிழில் வசனம் தவறாக் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாலும்,வரலாறு அறிவு இல்லாததாலும் அரபி மொழியையும், வரலாற்றையும் கற்றுக் கொடுங்கள் வினவுக்கு!
    பெரும்பாலும் தமிழர்களுக்கு அரபி, தெரியவில்லை என்பதால் தான் குரானையும், அது எக்காலத்தில் சொல்லப்பட்டுள்ளது, அக்காலத்தில் ஒரு வசனத்தின் பொருள் என்ன, அதே வசனத்திற்கு இக்காலத்தில் பொருள்(அர்த்தம்) என்ன என்பது குறித்து தெரியாமல் இருக்கிறார்கள்.
    எ.கா: தமிழில் “நாற்றம்” என்ற சொல் பழங்காலத்தில் ”நறுமணம்” என்ற பொருளிலும், அதே சொல் தற்காலத்தில் “கெட்ட வாசனை” என்ற பொருளிலும் பயன்படுத்தப்படிகின்றது.
    எனவே, தமிழர்களே! அரபியை கற்றுக்கொண்டு இஸ்லாத்தை குறித்து விமர்சனம் செய்யுங்கள். அரபியை கற்றுக்கொள்வது என்பது வெறும் எழுத, பேச, படிக்க மட்டுமல்ல! அரபியின் இலக்கணம், வரலாறு,ஒரு சொல்லுக்கு, பல்வேறு கால நிலைகளில் உள்ள பொருள் நிலை போன்ற அனைத்தையும் கற்றுக்கொண்டு பின் விமர்சனம் செய்யுங்கள்!
    அதற்குள் இறந்து விடுவீர்களானால் அதற்கு நான் பொருப்பாளியல்ல!
    எல்லாம் அல்லாவின் செயல்!
    முதலில் வினவுக்குழு அரபி டியூஷன் செல்ல தயாராயிருங்கள்! அல்லது அரபிக்கு சென்றால் அரபியையும் கற்றுக்கொள்ளலாம்! துட்டும் சம்பாதித்து கொள்ளலாம்! Mastan Oli மாமா போல் ஊருக்கு வரமுடியாமலும் போகலாம்!
    அரபி மண்ணில் நீங்கள் உயிர் நீத்தும் போகலாம்! இவ்வாறு நடந்தால் உடனடியாக சொர்க்கம் தான் என்பதையும் மறக்க வேண்டாம்! சொர்க்கத்தில் என்னென்ன உண்டு என்பதை வால் பையனிடம் கேளுங்கள்!

    • கட்டுரையின் சாராம்சம் இஸ்லாமை விமர்சிப்பது என்பதல்ல. அது ஒரு சிறு பகுதி மட்டுமே. கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல ஒரு சௌதி பெண் வதைக்கப்படுவதோ, பாலியல் சுரண்டலுக்குளாக்கப்படுவதோ நம்மில் பலருக்கும் எந்த வித அதிர்வுகளையும் ஏற்படுத்துவதில்லை என்பதை உங்களது பின்னூட்டம் நிரூபிக்கிறது.

      இவ்வளவு பெரிய கட்டுரையில் குறிப்பாய் சிலரின் அவலங்களைச் சொல்லி இருக்கும் ஒரு கட்டுரையில் அது சரி தவறு என்று ஒரு சின்ன முக்கல் முனகலைக் கூட சொல்லாமல் அது எப்படி நீ குரானை தவறு சொல்லலாம் என்று ஆரம்பித்து விட்டீர்கள்.

      //அமெரிக்கா- இங்கிலாந்து போன்ற கிறிஸ்தவ நாட்டில் உள்ள பெண்கள் நிலையை குறித்து வெளியிடுமா வினவு?
      சீனா-ஜப்பான் இலங்கை திபெத் போன்ற புத்த நாட்டில் உள்ள பெண்கள் நிலையை குறித்து வெளியிடுமா வினவு?//

      என்னுடைய புரிதலில் வினவு தளத்திற்கு இந்த பாகுபாடு எல்லாம் இருந்ததே இல்லை. முதலில் ஒரு குற்றத்தைச் சொல்லும் போது அதை ஆம் என்றோ, இல்லை என்றோ ஒரு பதிலைச் சொல்லி விட்டு தொடர்ந்து அவன் யோக்கியமா, இவன் யோக்கியமா என்ற கேள்வியை முன் வைக்கவும்.

    • ஓட்டக்கூத்தன் ஏன் இவ்வளவு குறுகிய மனப்பான்மை. உங்களிடமிருந்து இதை நான் சத்தியமாக எதிர்பாக்கவில்லை. அல்லது இது ஒட்டக்கூத்தன் பெயரில் எதாவது போலியின் வேலையா?

    • //எனவே, தமிழர்களே! அரபியை கற்றுக்கொண்டு இஸ்லாத்தை குறித்து விமர்சனம் செய்யுங்கள். அரபியை கற்றுக்கொள்வது என்பது வெறும் எழுத, பேச, படிக்க மட்டுமல்ல! அரபியின் இலக்கணம், வரலாறு,ஒரு சொல்லுக்கு, பல்வேறு கால நிலைகளில் உள்ள பொருள் நிலை போன்ற அனைத்தையும் கற்றுக்கொண்டு பின் விமர்சனம் செய்யுங்கள்!//

      சம்ஸ்கிருதம் பற்றிய பார்ப்பனர்களின் புலம்பலைப் போலவே அரபி பற்றிய மேலேயுள்ள புலம்பலும் உள்ளது.

      • நன்பர் வினோத்,////சம்ஸ்கிருதம் பற்றிய பார்ப்பனர்களின் புலம்பலைப் போலவே அரபி பற்றிய மேலேயுள்ள புலம்பலும் உள்ளது.///கண்டிப்பாக கேடயாது இது அவரே ஒத்துக்கொண்ட மாதிரி வஞ்ச புகழ்ச்சி

    • நண்பர் ஒட்டகூத்தான் நீங்க நல்லதானே இருந்தீங்க ஏன் இந்த வக்ர பஞ்சர் வேலையேல்லாம்

    • ஒட்டக்கூத்தான்,////ஹைதர் அலி, சித்திக் போன்றவர்களிடம் பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான குரான் வசனங்களை உடனடியாக கேளுங்கள். அவர்கள் தமிழில் வசனம் தந்தால் அதற்குரிய மூல அரபி வசனத்தை எழுதி அவ்வசனங்களை உடனடியாக சவுதி(அனைத்து அரேபிய நாடுகள்) நாட்டுக்கு தந்தி அடியுங்கள். பெண்களுக்கான பிரச்சனை முடிந்துவிடும்./// முற்போக்குவாதிகளுக்கேன்று ஒரு மரியாதை என் மனதில் இருந்தது ஆனால் வஞ்சக புகழ்ச்சியாக R.S.S காரனையும் மிஞ்சிவிடுவீர்கள் என்வதையும் தெரிந்துக்கொண்டேன் ஆமா அது என்ன தந்தி அடிப்பாது கலைஞர் ஆட்சியில இருக்கிறோம் என்கிற அடையாளமா நல்லது ஆனா ஒங்க ஐடியா வேலைக்காகது//
      இவ்வளவு எளிதான வழியிருக்க, எதற்கு இவ்வளவு பெரிய கட்டுரை என்று தெரியவில்லை!/// புரட்சிகர கருத்துக்கள் மூலம் வீனாப்போனவய்ங்கள திருத்தத்தான்///
      இஸ்லாம்- பெண்கள்- இஸ்லாமிய நாட்டில் பெண்கள் போன்ற கட்டுரைகள் மூலம் வினவு தன்னை விளம்பரபடுத்திக்கொள்கிறது என புரிகிறது.
      அமெரிக்கா- இங்கிலாந்து போன்ற கிறிஸ்தவ நாட்டில் உள்ள பெண்கள் நிலையை குறித்து வெளியிடுமா வினவு?
      சீனா-ஜப்பான் இலங்கை திபெத் போன்ற புத்த நாட்டில் உள்ள பெண்கள் நிலையை குறித்து வெளியிடுமா வினவு?/// கண்டிப்பாக வேளியிடும் காத்திருங்கள்
      ///ஹைதர் அலி, சித்திக் போன்ற முஸ்லீம் நண்பர்கள் சமீபத்தில் வினவுக்கு வரவில்லை! அதனால் தான் இந்த துணிச்சல் போலும்!/// நான் வர வேண்டும் என்பதற்காகத்தாம் இந்த கட்டுரையே தவிர பயந்துக்கிட்டு இல்ல அது ஒனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்
      ///வாருங்கள் முஸ்லீம் நண்பர்களே! வினவுக்கு குரான் வசனத்தை எடுத்து கூறுங்கள்! தமிழில் வசனம் தவறாக் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாலும்,வரலாறு அறிவு இல்லாததாலும் அரபி மொழியையும், வரலாற்றையும் கற்றுக் கொடுங்கள் வினவுக்கு!/// குர்ஆனை தெரிந்துக்கொள்ள அரபி மொழிதெரிய தேவையில்லை
      ////பெரும்பாலும் தமிழர்களுக்கு அரபி, தெரியவில்லை என்பதால் தான் குரானையும், அது எக்காலத்தில் சொல்லப்பட்டுள்ளது, அக்காலத்தில் ஒரு வசனத்தின் பொருள் என்ன, அதே வசனத்திற்கு இக்காலத்தில் பொருள்(அர்த்தம்) என்ன என்பது குறித்து தெரியாமல் இருக்கிறார்கள்.////இது மட்டும்தாம் உண்மை
      ///எ.கா: தமிழில் “நாற்றம்” என்ற சொல் பழங்காலத்தில் ”நறுமணம்” என்ற பொருளிலும், அதே சொல் தற்காலத்தில் “கெட்ட வாசனை” என்ற பொருளிலும் பயன்படுத்தப்படிகின்றது.//// ஒங்க தமிழ் அறிவை நேனச்ச எங்கையே போயிட்டீங்க
      ////எனவே, தமிழர்களே! அரபியை கற்றுக்கொண்டு இஸ்லாத்தை குறித்து விமர்சனம் செய்யுங்கள்.///இங்கே ஒங்க பிரிவனை தெளிவாக தெரிகிறது அப்ப அரபி ஒத தெரிஞ்ச நாங்க தமிழர்கள் கேடயாது அப்படித்தானே இந்துக்கள்+தமிழ்=தமிழர்கள்,முசுலீம்கள்+அரபி=அரபிக்களா சவூதியில நோன்பு திறக்கிற டயமச்சு நான் நோன்பு திறந்துட்டு வந்து மிச்சத்த பேசிகிருவோம்

      • //குர்ஆனை தெரிந்துக்கொள்ள அரபி மொழிதெரிய தேவையில்லை- ஹைதர் அலி//
        பி.ஏ. ஷேக் தாவூத்.(31,74)https://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/

        அன்புள்ள செங்கொடி அவர்களே,

        இஸ்லாத்தைப் பற்றி ஒரு விமர்சனம் வைக்கும்போது அந்த கருத்தைப் பற்றி இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர்ஆன் ஹதீஸில் என்ன சொல்லியிருக்கிறது என்பதைப் பற்றி (முழுக் குர்ஆணையும் வாசிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. விமர்சனத்தின் விடயத்தை பற்றிய செய்திகளைத் தான் அறிந்து கொள்ள சொல்கிறேன்.) அறியாமலே கருத்து சொல்லுவது என்பது கண் தெரியாதவன் சரியான வழி காட்டுகிறேன் என்று சொல்லி காட்டுப் பாதையில் மக்களை அழைத்துச் செல்வதற்கு ஒப்பானது. முக்காலமும் தெரிந்த, உள்ளும் புறமும் அறிந்த, மறைவானவற்றின் சாவியை கையில் வைத்திருக்கும் அகிலத்தின் ஏக இறைவன் மிகத்தெளிவாகவே முகம்மது நபி தான் இறுதி நபி என்று குர்ஆனில் சொல்லியிருக்கிறான். பகுத்தறிவோடு படித்துப் பார்த்தால் கண்டிப்பாக இந்த உண்மை விளங்கும். அத்தியாயம் 33 வசன என் 40 மிகத் தெளிவாகவே சொல்லுகிறது. ஹாத்தமுன் நபி என்று மிகத்தெளிவாகவே முஹம்மது நபியைப் பற்றி இந்த வசனம் சொல்லுகிறது. “ஹாத்தமுன்” என்ற வார்த்தைக்கு (sealed) அதாவது முத்திரை என்பது பொருளாகும். இங்கு சிலர் முத்திரை என்ற தமிழ் வார்த்தைக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அதாவது சிறப்பானவர் என்ற பொருளை முன்வைக்கின்றனர். ஆனால் மூலமொழி எந்த பொருளை தருகிறது என்று பார்ப்பதே அறிவுடமையாகும். ஹாத்தமுன் என்ற அரபி வார்த்தைக்கு “(sealed)” என்பதே சரியான அர்த்தமாகும்.

        மேலும் இவ்வுலகில் இறைத்தூதராக தெரிவு செய்யப்படுபவருக்கு வேதங்களை கொடுக்காமல் இருந்ததில்லை என்னும் கருத்தை வலியுறுத்தும் வசனமும் குர்ஆனில் இருக்கிறது. அத்தியாயம் 35 வசன என் 25 ல் போய் தாராளமாக பார்த்துக்கொள்ளலாம். எனவே அஹமதியாக்கள் நபி என கூறும் மிர்சா குலாம் எந்த ஒரு வேதத்தையும் கொண்டு வரவில்லை. இந்த குர்ஆண் வசனங்களை வைத்தே அஹமதியாக்கள் போலிகள் என்பதை எவரும் விளங்கிக்கொள்ளலாம். அசலையும் போலியையும் கண்டுபிடிக்க குர்ஆன் மற்றும் ஹதீஸை தெளிவாக படித்தாலே போதுமானது.

        விருப்பபடி குர்ஆனுக்கு பொருள் கூறுகிறீர்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் செங்கொடி அவர்களே, எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்? உதாரணமாக ஒரு தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் சுய விருப்பபடி பொருள் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்க வேண்டுமானால் குற்றச்சாட்டு வைத்தவருக்கு கண்டிப்பாக தமிழும் ஆங்கிலமும் தெரிய வேண்டும். இரண்டு மொழியையும் தெரிந்த ஒருவர் தான் அத்தகைய குற்றச்சாட்டை வைக்க முடியும். ஏனெனில் மூலமொழியும் மொழிபெயர்க்கப்பட்ட மொழியும் தெரிந்தால் தான் அது சரியான விளக்கமா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலும். அந்த அடிப்படையில் அரபி மொழி தெரிந்தால் மட்டுமே இத்தகைய குற்றசாட்டை நீங்கள் வைக்க இயலும்? அரபி மொழியில் எத்தகைய அறிவை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் விளக்குங்களேன். அல்லது உங்களுக்கு அரபி மொழி தெரியவில்லை என்றால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றே நீங்கள் கருத்து சொல்லியிருப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.

        உளுத்துப்போன கம்யூனிச சித்தாந்தம் என்று சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை எதிர்வினையாற்ற உங்களுக்கும் உரிமையிருக்கிறது. ஆனால் நாம் வைக்கும் குற்றச்சாட்டு வெறுமனே யூகங்களின் அடிப்படையில் இருக்க கூடாது. அது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்காது. நான் உளுத்துப்போன சித்தாந்தம் என்று கம்யூனிசத்தை சொல்வதற்கான காரணத்தை எம்மால் ஒரே வரியில் சொல்லிவிட முடியும்.
        “நடைமுறைப் படுத்தியதால் தோற்றுப்போன சித்தாந்தம் கம்யூனிசம்’. அதனால் தான் இன்று கம்யூனிசம் அதல பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. கம்யூனிசம் என்று சொல்லி உருவாகிய நாடுகளான ருஷ்யாவின் , சீனா மியான்மரின் இன்றைய நிலை என்ன? உருவாகிய காலத்திலேயே மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து தானே அது உருவாகியது. தனிமனிதனின் உணர்வுகளுக்கு எத்தகைய முக்கியத்துவமும் கொடுக்காத இந்த சித்தாந்தம் எப்படி மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தும்? அதனால் தான் மீண்டும் சொல்கிறேன் கம்யூனிசம் உளுத்துப்போன சித்தாந்தம் என்று. ஆனால் இஸ்லாத்தின் கொள்கைகளை பொறுத்தவரை அது நடைமுறைப் படுத்திய காலங்கள் வரலாற்றின் பொற்காலமாகவே எல்லோருக்கும் இருந்தது. நபிகள் நாயகம் இஸ்லாமிய பேரரசின் ஆட்சியாளராக இருந்தபோது இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிகளாக இருந்த யூதர்கள் பாதுகாப்புடனேயே வாழ்ந்தார்கள். அப்படி அவர்கள் வாழ்ந்ததற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் நபிகள் நாயகத்தின் பாதுகாப்புக் கவசம் கூட ஒரு யூதரிடம் தான் அடமானம் வைக்கபட்டிருந்தது. அதேபோல நபிகளாரின் காலத்திற்குப் பிறகு அவரின் தோழர் உமருடைய ஆட்சிக்காலத்தில் பறந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் மிகவும் பாதுகாப்புடனும் கண்ணியமாகவும் வாழ்ந்தனர் என்பதை வரலாற்றை படித்தாலே விளங்கும். அதனால் தான் காந்தி அவர்களும் உமருடைய ஆட்சி போலவே இந்தியாவில் ஆட்சி மலர வேண்டும் என்று ஆசைப்பட்டார். இன்று இஸ்லாத்தின் பெரும்பான்மையான கொள்கைகளை அமுல்படுத்தும் சவூதி அரேபியா மற்ற நாடுகளை விட மிகவும் தரமாக தானே இருக்கிறது. அது முழுமையாக இஸ்லாமிய கொள்கைகளை அமுல்படுத்தினால் இன்னும் சிறப்பாகவே முன்னேறும். இஸ்லாமிய நாடு என்று வெறுமையாக பெயர் சூட்டிக் கொண்டு கொள்கைகளை அமுல்படுத்தாத நாடுகளான பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான், இராக் போன்ற நாடுகள் சீரழிவதற்கு காரணம் இஸ்லாத்தை சரியாக கடைபிடிக்காததே. இஸ்லாமிய கொள்கைகளை கடைபிடிக்காததால் தோற்றுப்போன நாடுகளை வேண்டுமானால் பட்டியலிடலாமே தவிர நடைமுறைப்படுத்தியதால் தோற்றுப்போன ஒரு நாட்டையும் உங்களால் காட்ட இயலாது.

        சி.பி.ஐ., சி.பி.எம் போன்ற கட்சியை சார்ந்தவர்களால் போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப்படும் உங்களுக்கும் (ம.க.இ.க., மாவோயிஸ்டு போன்ற இயக்கங்கள் ) , உங்களால் போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப்படும் சி.பி.ஐ., சி.பி.எம் போன்ற கட்சிகளுக்கும் இடையே அசல் போலியை எவ்வாறு நாங்கள் கண்டுபிடிக்க இயலும் என்பதை எங்களுக்கு கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும் செங்கொடி அவர்களே. இதற்கு காரல் மார்க்ஸ் , லெனின், ஸ்டாலின் , மா. சே போன்றவர்கள் ஏதாவது விளக்கம் அளித்திருக்கிறார்களா? இலக்கு இலக்கு என்று சொல்கிறீர்களே அந்த இலக்கு தான் என்ன?

        சகோதரத்துவத்துடன,
        பி.ஏ. ஷேக் தாவூத்.
        Reply

      • https://www.vinavu.com/2010/04/19/periyardasan-islam/
        மறுமொழி எண் 42
        Raja

        ஹிந்து மதத்தை விமரிசிப்பதற்கு பெர்யர்தாசன் என்ன வடமொழி படித்து அதில் கரை கண்டு வேதங்களை முழுசாக படித்த பிராக விமர்சனம் செய்தார். தமிழில் படித்து தானே செய்தார். பிறகு ஏன் குரான் படிக்க மட்டும் அரபி படிக்க வேண்டும் என்று சப்பை கட்டு கட்டுகிறார். ஏன் குரான் மற்றும் மற்ற இஸ்லாமிய நூல்கள் தமிழில் இல்லையா…இல்லை தமிழில் இருப்பவற்றை கொண்டு விவாதம் செய்ய முடியாத …ஏன் இந்த சப்பை கட்டு…பௌத்தம் மதம் மாறுவதற்கு முன் அவர் பாலி மொழி கற்றார?
        Reply
        Posted on 20-Apr-10 at 9:50 am | Permalink
        a rehman

        அரபு படிக்க தெரிந்தல் மட்டும் தான் அதில் உள்ள அர்த்தம் மட்டும் கருத்து அறிய முடியும்

      • ‘நாற்றம்’ எனபதற்கு உங்களின் விளக்கம் மிகச்சரியானதே. அந்தக் காலத்தில் செய்யுளில் நாற்றம் என்று எழுதியிருந்தால் சாக்கடையின் கெட்ட வாசனை என்று, இன்று பயண்படுத்துவதுபோல் பொருள் கொள்ளக்கூடாது. மலரின் நறுமணம் என்றே பொருள் கொள்ள வேண்டும். அது போல குர்ஆன் வசனத்திற்கும் இன்னறைய திரித்தல் அர்த்தங்களை தூக்கிக் கொண்டு வரக்கூடாது. அன்று எவ்வாறு பயன்பட்டதோ அந்த அர்த்த்திலேயே விவாதிக்கவேண்டும்.

  6. மக்கா அங்கு இருப்பதால் சவுதியை இஸ்லாமியர்களின் சொர்க பூமின்னு இஸ்லாமியர்கள் மதிக்கிறார்கள். நீங்கள் சவுதியை நகரத்தீ என்று சொல்லி தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ரமழான் மாதத்தில் இவ்வாறு சொல்வது அவர்களை புண்படுத்தும்

    • //மக்கா அங்கு இருப்பதால் சவுதியை இஸ்லாமியர்களின் சொர்க பூமின்னு இஸ்லாமியர்கள் மதிக்கிறார்கள். நீங்கள் சவுதியை நகரத்தீ என்று சொல்லி தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ரமழான் மாதத்தில் இவ்வாறு சொல்வது அவர்களை புண்படுத்தும்//

      வாங்க ஆர்எஸ்எஸ் அல்லக்கை….

    • சகோதரர் கோவி.கண்ணன் ///மக்கா அங்கு இருப்பதால் சவுதியை இஸ்லாமியர்களின் சொர்க பூமின்னு இஸ்லாமியர்கள் மதிக்கிறார்கள். நீங்கள் சவுதியை நகரத்தீ என்று சொல்லி தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ரமழான் மாதத்தில் இவ்வாறு சொல்வது அவர்களை புண்படுத்தும்/// உங்களின் அன்புக்கு நன்றி அதே சமயத்தில் அரபிகளின் செயல்களுக்கு எந்த முசுலீம்களின் மனமும் புன்படாது இஸ்லாம் வேறு அரபிகளின் செயல்பாடுகள் வேறு அரபியர்கள் ஒன்றும் இஸ்லாத்திற்கு முழு அத்தாரிட்டிகள் அல்ல

      • சவூதிக்கு வேலைக்குச் சென்று வாழ்ந்து வந்த எவரிடமும் அராபிகள் பற்றிய எந்த நல்ல வார்த்தைகளும் கேட்டதில்லை அது ஏன்

    • //வாங்க ஆர்எஸ்எஸ் அல்லக்கை….//

      //உங்க பின்னூடம் தில்லானா மோகனாம்பா வைத்தியை நினைவு படுத்துது கோவி.//

      கோவி சார்! முத்திரை குத்திட்டாங்கய்யா!
      முற்பகல் செய்யின்…

  7. இதில் பெரும்பாலும் தமிழக பெண்களை விட, ஆந்திரா பெண்களே அதிகம் ஏமாறுகிறார்கள், துன்பம் அனுபவிக்கிறார்கள்.

    இம்மாதிரி பதிவுகளை பிரிண்ட் எடுத்து பாச்ச்போர்ட் அலுவலகத்து வாசலில் ஒட்டி வைக்க வேண்டும். மீனம்பாக்கம் விமான நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில், தொலைக்காட்சி நெடும் தொடர்களின் விளம்பர இடைவேளைகளில் வெளியிட வேண்டும்.

  8. ஹலோ ஒட்டக்கூத்தன்…. பெண்கள் படும் கஷ்டத்த சொல்றார் வினவு … அத விட்டுட்டு நீர் குரான், மதம், அர்த்தம் வேற , நு அரசியல் வாதி மாதிரி திசை திருப்புரிர் …

    அவ்வளவு யோகியணைங்க இருந்தா உண்மையனா இஸ்லாமியனா இருந்தன இத செய்வானா ?. பதில் சொல்லுப்பா

    தன மதம் நு சொன்னதும் ரோசம் வருதா …. அயோக்கியன் எந்த மதத்த சார்ந்து இருந்தாலும் தப்பு தப்பு தான்

  9. PLZ START SENDING E-MAIL TO CHEIF MINISTER TO BRING DOWN THE RETIREMENT AGE OF GOVT EMPLOYEES FROM 58 TO 55.IF U DON’T DO IT NOW IT WILL LIKELY TO GO UP TO 60 BECOZ OF THE ASSEMBLY ELECTIONS…

  10. ALL ISLAMIC COUNTRIES ARE HELL OF THE WORLD. ISLAM IS GOOD RELIGION BUT PEOPLE MISUSED AND MISGUIDED IT.

    NOW IT BECOME AGAINST HUMAN RELIGION. COUNTRIES LIKE MALAYSIA, MIDDLE EAST ..ETC ARE STILL TREATING WORKERS AS SLAVE.

    ITS TIME TO BRING REVOLUTION IN MUSLIM RELIGION, NEED MORE PHILOSOPHERS LIKE PERIYAR, BHARATHIYAR…ETC

    WHEN BHRAMINS MISUSED HINDU RELIGION THEY ARE THE ONE SAVED US .. BUT IN ISLAM NO ONE CAN VOICE AGAINST ITS STUPIDITY OTHERWISE THEY WILL BE KILLED NEXT DAY.

  11. சற்று மிகைப்படுத்தி எழுதியிருந்தாலும், உண்மையே.

    பல சவூதி வீடுகளில் அதிகமாக மாட்டிக்கொண்டு அவதிப்படுவது இந்திய, இலங்கை, இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த ஏழை இஸ்லாமியப்பெண்களே.

    அதற்க்காக சவூதி மொத்தமும் உள்ள வீடுகள் நரகத்தீ என்ற கருத்து, இந்தியா பாம்புகளும் சாமியார்களும் மட்டுமே உள்ள நாடு என்ற பல மேற்கத்திய ‘அறிவாளர்களின்’ கூற்றுக்கு ஒப்பானது.

    பணிப்பெண்கள், அடிமைகள் என்ற கூற்று, உங்கள் அறியாமையே காட்டுகிறது. சவூதியில் பணிப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது சட்டப்படி குற்றம். ஆனால் அந்தச்சட்டம், நம்து நாட்டின் வரதட்சிணைச் சட்டம் போலவே.

  12. //அடுத்து பெரும் சொத்தாய் குவிந்திருக்கும் எண்ணெய் பணத்தின் மூலம் சௌதிகள் சாதாரண வேலைகள் எதனையும் செய்வதில்லை//

    இந்த வரிகள் தவறு. (நான் நிறைய வருடங்கள் அங்கு பணி புரிந்த்தவன்) பிச்சை எடுப்பது முதல், வாகனங்களை சுத்தம் செய்வது, அலுவலகங்களில் துப்புரவு பணி செய்வது, நிறுவனங்களில் காவலாளி என எல்லா வேலைகளிலும் சவுதி அரேபியர்கள் இருக்கிறார்கள். மற்றபடி நீங்கள் சொல்லியிருப்பது எல்லாம் சரியே! என்னுடைய அரபு நாட்டில் வேலை செய்யும் அபலை பெண்கள் என்னும் பதிவையும் படியுங்கள்.

  13. சவுதி பற்றிய முந்தைய பதிவைப் போலவே இந்தக் கட்டுரையும் மிக அருமையான முறையில் உண்மையைப் பேசுகிறது. சவுதி மக்களின் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபடும் அரபிகளின் உளவியல் குறித்துப் பேசுகிறதேயொழிய மதம் பற்றிய விமர்சனமாக இதை எடுத்துக்கொள்வது சரியானதாகாது என்பது எனது கருத்து.

    எல்லா நிறுவனங்களுமே தங்கள் ஊழியர்களை அடிமைகளைப்போலத்தான் நடத்துகின்றன. முதல் வேலையாக ஊழியர்களின் பாஸ்போர்ட்களைத்தான் வாங்கி வைத்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு எதிராகவோ நமது உரிமைகளை வேண்டியோ நாம் எதுவும் செய்ய இயலாது. எங்கள் கஷ்டகாலம் இங்கு தான் இருக்கவேண்டியுள்ளது. மனிதம் மறந்த மனிதர்களுக்கு மத்தியில் வாழ்வதைப்போன்ற துயரம் எதுவுமில்லை. வீட்டு வேலை செய்யும் இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்களின் துயரமான நிலை பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். கண்ணீர் பெருகும் கதைகள் இங்கு கொட்டிக்கிடக்கின்றன.

    இதுபோன்ற கட்டுரைகள் மனதிற்கு கொஞ்சமாவது நிம்மதியைத் தருகின்றன. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக ஏதாவது நிகழ்ந்துவிடாதா என்ற ஏக்கத்தையும்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.

  14. என்ன வளம் இல்லை இங்கே? என்ன வேலை இல்லை இங்கே? சீக்கிரம் பணம் செய்ய வேண்டும் எனும் பேராசை, அதிகம் படிக்காத பாமரரை, நாடு தாண்ட தூண்டுகிறது! இங்கே கவுரவம் பார்ப்பவகள் வெளிநாடு சென்றால், எந்த வேலையையும் செய்ய பணிகிறார்கள்!
    கலாச்சாரம் சவுதி, மலேசியரிடம் எதிபார்க்கலாமா?

    • நன்பர் rammy,///என்ன வளம் இல்லை இங்கே? என்ன வேலை இல்லை இங்கே? சீக்கிரம் பணம் செய்ய வேண்டும் எனும் பேராசை, அதிகம் படிக்காத பாமரரை, நாடு தாண்ட தூண்டுகிறது! இங்கே கவுரவம் பார்ப்பவகள் வெளிநாடு சென்றால், எந்த வேலையையும் செய்ய பணிகிறார்கள்!
      கலாச்சாரம் சவுதி, மலேசியரிடம் எதிபார்க்கலாமா?//// 2004ல் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தேன் 2500 சம்பளம் கலையில் 8மணியிலிருந்து இரவு 12மணிவரை வேலை அதே ஆண்டு சவூதி சென்றேன் சத்தியமாக போரசையேல்லாம் கேடயாதுண்ணே எதோ பொழைக்கலாம் என்று நினைத்துதான் வந்தோன் ஒரு கம்பேனியில் ஆபீஸ் பாய் வேலை அப்ப முதல் மாத சம்பளம் 2000 ரியால் சவூதிகளை பொருத்த வரை 2000 ரியால் சம்பளம் என்பது நம்ம சவுளிக்கடையில் கொடுத்தது மாதிரி குறைவான சம்பளம் ஆனால் இந்தியா மதிப்பிற்கு 12ஆல் பொருக்கும் போது 24000 மாகிறது அதனாலதான் குடும்பத்த விட்டுட்டு இங்கே வந்து கஷ்ட்டப்படுறேம் அண்ணே இந்த சம்பளத்திற்கு ஊரில் நான் கவுரவம் பார்க்காமல் நியாயமான எந்த வேலையும் பார்க்க தயார் கோஞ்சம் சொல்லுங்கண்ணே உடனே ஊருக்கு வந்து விடுகிறேன். பின்குறிப்பு நான் எட்டாப்பு வரை தான் படித்திருக்கிறேன்

      • எங்கள் கொங்கு நாட்டிற்கு வாருங்கள்! 6 மாதங்களில் கார்மெண்ட் தொழில் பழகிக் கொள்ளலாம்! ஓரிரு வருடங்களில், மாதம் சுமார் 10000 சம்பாதிக்கலாம்! பிறகு, சாமர்த்தியம் இருந்தால், குறு/சிறு/பெரு தொழில் முனைவராக முன்னேறலாம்!

        • 007 .. ask your bombrates..they know well about kongu naadu! welcome everybody! any body, who wants to migrate for blue collar jobs, come & visit our place! plenty of jobs awaiting for you!.. (particularly people from tamilnadu!)

        • அதியமான்

          நீங்கள் எழுதியுள்ளதை படிப்பவர்களுக்கு கொங்கு நாட்டில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் என்று தோன்றும்.யதார்த்தம் அப்படித்தான் உள்ளதா.
          நெசவுத்தொழில் நசிந்து போனதால் கடன் சுமையை தாங்கமாட்டாமல் ‘கிட்னி’ யை விற்று கடனை அடைத்த நெசவாளர்களும் கொங்கு நாட்டில்தானே வாழ்கிறார்கள்.

  15. //அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. குரான் 4:3//

    Adultery, Rape இரண்டையும் தெளிவாக குரான் விளக்கவில்லையா? எனக்கு புரியவில்லை.

    Saudi America என்று Morgan Spurlock எழுதியதை படித்தபோது சிரித்துக்கொண்டேன். ஆனால், இந்த கட்டுரையை படித்தபின் அவர் சொன்னது சரிதான் என்று எண்ணத்தோன்றுகிறது. கஷ்டமாகவுள்ளது.

  16. நன்பர் செ.சரவணக்குமார் அவர்களுக்கு, ////சவுதி மக்களின் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபடும் அரபிகளின் உளவியல் குறித்துப் பேசுகிறதேயொழிய மதம் பற்றிய விமர்சனமாக இதை எடுத்துக்கொள்வது சரியானதாகாது என்பது எனது கருத்து./// சரியாக சொன்னீர்கள் வினவின் கட்டுரையாளர் இதில் தேவையில்லாமல் மதத்தை கொண்டு வந்து தினித்துள்ளார்

  17. இந்தக் கட்டுரையின் கருத்து ஒகே தான், இந்த அவல நிலைக்கு இஸ்லாத்தை துணைக்கழைத்திருப்பது தான் வினவின் நோக்கத்தையே சந்தேகப்பட வைக்கிறது. அடிமைப் பெண்களைப் பற்றிய குரான் வாசகம் எப்படி இந்த பணிப்பெண்கள் விசயத்தில் ஒன்றாகும். வைப்பு என்பதே இஸ்லாத்தில் இல்லை.

    //சட்டபூர்வமாக நான்கு மனைவிகள் அல்லாது எத்தனை அடிமைப் பெண்களையும் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள ஆணுக்கு அது அனுமதியளிக்கிறது.//

    ஆட்சேபத்துக்குரிய அறியாமையினால் விளைந்த வரிகள்.

    • நன்பர்Uthayam, ///ஆட்சேபத்துக்குரிய அறியாமையினால் விளைந்த வரிகள்./// இது அறியாமையினால் விளைந்த வரிகள் அல்ல வினவுக்கு நன்றாக தெரியும் இந்த குர்ஆன் வசனத்திற்கும் அரபிகளின் நடைமுறைக்கும் சம்பந்தமில்லை என்பது இன்னும் சொல்லாப்போனல் ஷெக்மார்கள் பணக்கார அரபிகள் இஸ்லாத்தை பின்பற்றுவதில்லை என்பது வினவின் ஆழ்ந்த நம்பிக்கையும் கூட அவருடைய மார்க்ஸிய பார்வையும் அதுதான் உதாரணத்திற்கு./பின்லேடன்: அப்பா இசுலாமியவாதி! மகன் அமெரிக்கவாதி!! | வினவு!/ அப்புடியின்னு ஒரு பதிவு எழுதினார் படித்து பருங்கள்அதில் வினவின் நிலைப்பாடுக்கும் இப்போழுது இந்த பதிவுக்கும் உள்ள முரன்பாடுகளை பாருங்கள் /// மேட்டுக்குடி ஷேக்ககுகள் ஏழை இசுலாமியர்களை இசுலாத்தின் படி வாழவேண்டும் என்று பிரச்சாரம் செய்து நிதி உதவி வழங்கிவிட்டு தங்கள் வாழ்க்கையில் தீவிர அமெரிக்க நுகர்வு வெறியர்களாகத்தான் உள்ளனர். அதில் எல்லா பொறுக்கித்தனங்களும் உண்டு/// இப்படியும் /////ஏழை இசுலாமிய மக்களை தீவிர மதவாதிகளாக மாற்றும் இந்தக் கூட்டம்தான் தங்கள் வாழ்க்கையில் இசுலாத்திற்கு எதிரான எல்லா விசயங்களையும் அனுபவிக்கிறது//// இசுலாத்திற்கு எதிராக எல்லா விசயங்களையும் அனுபவிக்கிதாம் ஆனால் வேலைக்கார பெண்கள் விசயத்தில் மட்டும் குர்ஆன் வசனத்த பலொ பன்னுறாய்ங்களாம் நல்ல கத அப்புறம் வினவு சொல்றத பாருங்க ///ஆக தீவிரமதவாதம், ஒழுக்கம் என்பது அப்பட்டமான பொய் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது//// அப்ப எந்த அரபியும் இசுலாத்த பின்பற்றவில்லை என்றால் வேலைக்கார பெண்கள் விசயத்தில் மட்டும் இசுலாத்த பின்பற்றுகிறார்களோ எது உண்மைண்ணே

  18. நூற்றுக்கு நூறு உண்மையான தகவல்கள். சௌதியில் மட்டுமல்ல எண்ணெய் வளம் பெற்ற எல்லா அரபு நாடுகளிலும் பணிப்பெண்களுக்கு இதே நிலைதான் .நம்முடைய தூதரகங்களின் மீதும் நிறைய தவறுகள் இருக்கிறது. நமக்காக சேவை செய்வதாக கூறிக்கொண்டு விருந்துகளிலும்,கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்கே தூதர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.
    இங்கு குவைத்தில் கூட சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பிலிப்பின்ஸ் நாட்டு பெண் ஒரு குழந்தையை வாஷிங் மெசினில் போட்டு கொலை செய்து விட்டு நாட்டுக்கு தப்பி ஓடி விட்டால். ஒரு குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு இரக்கம் இல்லாத பெண் என்று நினைப்பதை விட அவள் எந்த அளவு கொடுமையை அந்த வீட்டில் அனுபவித்திருந்தால் இப்படி வேலையை செய்திருப்பாள் என்று நினைக்கிறேன்.
    என்ன வளம் இல்லை எம் திருநாட்டில்? இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதி நாய்களால் தானே எங்களுக்கு இந்த கொடுமை எல்லாம். ருசிலதான். இதைப்பற்றி பதிவு எழுதினால் நூறு பக்கத்துக்கு எழுதணும்.

  19. iraivan unkalukku nervaliyai katta pirarthanai seikiren,
    vatham pannalam aanal tharkkam pannathirkal iraivanudaiya markkathin valarchi unkalai kavalai adaya seikirathu

  20. இரண்டு கருத்துகள் இங்கே சொல்ல விருப்பம்:

    1). சவுதி அரேபியாவில் பணிப்பெண் நிலமை நரக நிலைமைதான். வினவு எழுதிய இக்கருத்து சரியே. நமக்கெல்லாம் என்ன ஒரு சுயநலமான ஆறுதலென்றால் நம் தமிழகப் பெண்கள் இந்த வேலைக்கு வருவதில்லை.
    ரேவதி, ஒட்டக்கூத்தன் என்ற பெயர்களில் பின்னூட்டம் எழுதியவர்கள் வினவின் கட்டுரையில் மதம் சார்ந்து வரும் சில வரிகளை வாய்ப்பாகக் கொண்டு, இஸ்லாமை இழித்து பழித்துப்பேசி தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர். (நந்தா கூறுவது போல, பெண்களுக்கெதிரான கொடுமைக்கு குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் கூட தங்கள் மதக்காழ்ப்பையே முன்னிலைப் படுத்தும் பிறவிகளைப் பார்த்து பரிதாபப்படத்தான் முடிகிறது).
    இந்தக் கட்டுரையை வினவின் வளைகுடா செய்தியாளர் மனித உரிமை அமைப்புகளுக்கும், சவுதி கெஜட் போன்ற நாளிதழ்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.இக்கொடுமைகளை த் தடுக்க நம்மால் முடிகிற முயற்சியைசெய்யத்தான் வேண்டும்.
    2). சவூதிகளின் மேட்டிமைக் கொழுப்பு மனப்பான்மைக்கு இஸ்லாம் காரணமாகாது. பணமே பிரதானக் காரணம்.
    பணிப்பெண்கள் வேறு, அடிமைகள் வேறு என்பது விளங்கப்படவேண்டும்.
    அடிமைகள் முறை தலைவிரித்தாடிய ஒரு தேசத்திலிருந்து அம்முறையை துடைத்தொழித்தது இஸ்லாமே. அந்த காட்டுமிராண்டி கால எச்சங்கள் சில மற்றவர்களை இன்றளவும் அடிமையாக நினைப்பதை/நடத்துவதை மறுப்பதற்கில்லை
    முஹம்மதுநபிகளின் காலத்தில் அடிமைகள் சந்தையில் வாங்கப்படவும், விற்கப்படவும் செய்தனர்.அதில் மெல்ல, மெல்ல ஒழுங்கைக் கொணர்ந்து அவர்களுக்கான மனித உரிமையை மீட்டுக்கொடுத்ததும் அன்னாரின் புரட்சியில் ஒன்று.
    விருப்பு வெறுப்பின்றி ஆராய்கிற, முன்முடிவுகளால் நிரப்பப்படாத மனங்கள் உண்மையைக் கண்டுகொள்ளும்.
    ஒன்றை மட்டும் இங்கே சுட்டுகிறேன். வெற்றிகரமான அமெரிக்க அதிபராகக் கருதப்படும் தாமஸ் ஜெஃபர்சனும் 100க்கும் மேற்பட்ட அடிமைகளை வைத்திருந்தார். ஜெபர்சனுடைய மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரியும் அவருடைய பாலியல் அடிமையாகவே இருந்தார். ஜெபர்சனின் மறைவுக்குப் பின்னரே அவருடைய மகளால் அந்த அடிமை விடுதலை செய்யப்பட்டார் என்கிறது வரலாறு.
    ஆக, இன்றைக்கு தவறாகச் சித்தரிக்கப்படும் பல வரலாற்றுச் செய்திகளையும் அதன் கால தேச வர்த்தமானங்களின் பின்னணியிலேயே புரிந்துகொள்ள வேண்டும்.

    • அடிமை முறையை துடைத்த்தொழித்த்து இசுலாம் என்பது பச்சைப்பொய். தெளிவாக அறிய படியுங்கள் எனது ‘அடிமை அது அல்லாவின் ஆணை’

      • பொய்சொல்லிஅண்ணே சாகித் ———————————————– நூல் அடிமை-அது அல்லாவின் ஆணை: பக்கம்72 – தலைப்பு 7.தொடரும் அடிமை முறை என்ற தலைப்புல நம்ம சாகித் இன்ன சொல்றாருன்ன. 1. புனித ஹஜ் யாத்திரையை பற்றி நீங்கள் அறிவீர்கள் அப்போது மக்காவிலே நடைபெறும் சடங்குகளில் அரபாத் மைதானம் என்ற இடத்தை அல்லாவின் புகழ்பாடிக்கொண்டு நடந்து கடக்க வேண்டும் அவ்வாறு நடந்து செல்ல முடியாதவர்களுக்காக அன்று முதல் இன்று வரை பல்லக்கும் அதனைச் சுமந்து செல்லும் அடிமைகளும் உள்ளனர் அன்றோ அவர்கள் அடிமை காட்டரபிகள் இன்று சற்று நிலை மாறி கூலியடிமைகள் சடங்கின் புனிதம் காக்க மனிதனை மனிதன் சுமக்கும் அவலம், ———————————————– சாகித்தின் முதல் பொய் நெ1. அராபா மைதானத்தை கடக்க வேண்டும் என்பது. ———————————————–உண்மை நெ.1 இதற்கு பதிலாக என்னுடைய சொந்த அனுபவத்தை பதிலாக பதிய போகிறேன் நான் 2004ல் ஹஜ் செய்தேன் (இந்த புத்தகம் முதல் பதிப்பு. பிப்ரவரி2003 இரண்டாம் பதிப்பு டிசம்பர்2008 என்பதை நினைவில் கொள்க) ஆனால் அராபா மைதானத்தில் டென்ட் போட்டு அதில் தங்கி இருக்க வேண்டும் என்பதுதான் சடங்காக செய்து வருகிறார்கள் ஹஜ்ஜின் மிக முக்கியமான கிரியை அரபாவில் தங்குவது தான் சிறிது நேரமேனும் அராபவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது, பார்க்க ஹதிஸ்: அறிவிப்பாளர் அப்துல்ரஹ்மான் பின் யமுர்(ரலி) நூல்கள்:நஸயீ2966.2994. திர்மீதி814 “ஹஜ் என்பதே அரபாவில் தங்குவது தான் பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் அரபாவுக்கு வந்து தங்கி விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வர், அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்:முஸ்லிம்2137 “நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சூரியன் மறையும் வரை அரபாவில் தாங்கினார்கள் சூரியன் மறைந்ததும் புறப்பட்டு முஸ்தலிபாவுக்கு வந்தார்கள், இதிலிருந்து இன்னா தெரியவருதுன்னா அரபாவை கடந்து செல்வது சடங்கல்ல அங்கே தாங்க வேண்டும் அதுவும் சூரியன் மறையும் வரை ———————————————– பொய் நெ.2 நடந்து செல்ல முடியாதவர்களுக்காக அன்று முதல் இன்று வரை பல்லக்கும் அதனைச் சுமந்து செல்லும் அடிமைகளும் உள்ளனர் அன்றோ அவர்கள் அடிமை காட்டரபிகள் இன்று சற்று நிலை மாறி கூலியடிமைகள் சடங்கின் புனிதம் காக்க மனிதனை மனிதன் சுமக்கும் அவலம், ———————————————–உண்மை நெ.2 மினாவிலிருந்து அரபா மைதானத்திற்கு போவதற்கு பஸ்ஸில் சொன்றால் அரபா மைதான டென்ட் வாசலில் இறக்கி விட்டு விடுவார்கள் 5ரியால் வடகை டாக்சி இருக்கிறது நம்ம பாகிஸ்தானி டிரைவர்கள் தான் அங்கு முக்கால் வாசி டாக்சி ஒட்டுனார்கள் (ஒருவேல இந்த டாக்ஸி ஒட்டுனார்களைத்தான் நம்ம சாகித்து அடிமையின்னு சொல்றாருன்னு நெனைக்கிறேன்) அவர்கள் வாசலில் கொண்டு போயி இறக்கிவிடுவார்கள் அப்புறம் பல்லாக்கு என்கிற ஒரு விஷயத்தை நான் பார்க்கவேயில்லை அப்புறம் இந்த கபாவை 7 ரவுண்டுகள் சுத்தி வரும்போது தான் நடந்து சுற்ற வேண்டும் இங்கு நடக்க முடியதாவர்களுக்காக கைட்ராலிக் நான்கு சக்கர ரிமோட்டை அமுக்கினால் இயங்கக்கூடிய நற்காலி கொடுக்கிறார்கள் அதுவும் இரண்டாவது தளத்தில் குளு குளு ஏஸியில் மெசைக் தரையில் ட்ராலி செல்வதற்கு தனி ப்ளாட் பாராம் தனி வழித்தடம் புதிதாக இயக்க தெரியதவர்களுக்கு அங்குள்ள தன்னர்வ தொண்டர்கள் சொல்லி கொடுக்கிறார்கள் முடியாத பச்சத்திற்கு அவர்களே தள்ளி கொண்டு செல்கிறார்கள் (நம்ம ஊருல ncc மாணவர்கள் மாதிரி சவூதியில் படிக்கும் அரபிய மாணவர்கள் ஹஜ் மாதத்தில் 10 நாட்களுக்கு ஸ்கூல் லீவு இந்த மாணவர்கள் சேவையில் இருப்பார்கள்) ஒரு வேல இவுங்கள நம்ம சாகித் அடிமையின்னு சொல்றாருன்னு நேனைக்கிறேன் ———————————————– இந்த புத்தகம் மாதிரி கமோடியான புத்தகம் வேற நான் படித்ததேயில்லை பக்கத்து பக்கம் பொய் ஒரே கிச்சு கிச்சு மூட்டல் நம்ம சாகித் நகைச்சுவை உணர்வு ரோம்ப அதிகமுன்னு இந்த புத்தகம் படிச்சு தெரிஞ்சுகிட்டேன்

  21. கருப்பு ஆடைக்குள் காரிகையை அடைத்து வைத்து
    வெள்ளை உடையில் கள்ளர் கூட்டம் உலா வரும்
    எண்ணை வயல் பூமியில், மன்னர் மனுநீதியின் – நீதி
    கிடைத்திடுமோ? மறத்தமிழர் கூட்டம் வாழ்ந்திடுமோ?
    அன்புடன்
    சிங்கம்

  22. Who told Saudi Arabia is a Hell. It feeds a better bread and jam for the millions of expatriates and Indian for past several years.

    Whom ever comes to Saudi Arabia for job is feeling better conditions than any other county and willing to come again and again to Saudi Arabia.

    If you are not believing, Check with any of your friends working in Saudi Arabia.Every country has merits and demerits. Always absorb the good merits and obey the land of the law. All Indians working in India are ready to come and settle in India. Will you or the Government will arrange for the Job. As a Muslim we cannot even dream for the job either in Private or Government. Even Saudi Arabia we are facing racism with Indians to getting a Job.

    I recommend, it is not advisable to send the girls/ladies to send out of the country out of job as alone. It will cause problems to them.

    As an Indian and we have to think about our country job development and job opportunities to our peoples.

    What Revathi mentioned here are not true. All are fake Islamic web sites hosted by Anti Islamic elements.

    Regards
    Sadakka from Udumalpet of Tirupur District

    • What Sadakka said is absolutely true.

      Wherever in this world, whether it may be muslim dominated saudi or Hindutuva dominated India or a captilastic America, girls/ladies goes to work lonely in a alien atmosphere is not recommendable.
      For human, Selfishness and Lust comes before doctrines and principles.

      Even IPS officers are being patted at the backside are the cases in India.

      That is the point. So, NO meaning of taking such articles as a chance to criticize other cultures and religions.

  23. ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபு தாபியில் ஒரு அரபியின் வீட்டில் பணி புரியும் ஒரு பிலிபினோ பெண் இந்த மாதம் ஐந்தாம் (ஆகஸ்ட் 5, 2010) தேதி இஸ்லாத்தை சட்டப்படி ஏற்று கொண்டு முதல் ரமதான் நோன்பு கடைப்பிடித்து வருகிறார். தனது எல்லா கேள்விகளுக்கும் இங்கே விடை இருந்ததாக கூறும் இந்த பெண் இதனாலே இந்த முடிவிற்கு வந்தாராம். இவரை பற்றிய ஒரு படைப்பு இன்றாக அபு தபியின் ‘தி நேஷனல்’ நாளேடில் ஆகஸ்ட் 15, 2010 வெளிவந்தது.

    அதை படிக்க இங்கே சொடுக்கவும்… http://www.thenational.ae/apps/pbcs.dll/article?AID=/20100815/NATIONAL/708149958/1041
    இதற்கு என்ன சொல்றீங்கோ?

  24. உண்மையாளன் சொல்லியிருப்பது உண்மையாக இருக்கக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது உண்மை என்பதால் வினவு சொல்லியிருப்பது உண்மையாக இருக்கத்தேவையில்லை என்ற தொணி உண்மையாளனின் பதிலில் இருக்கிறதே அதுதான் உண்மையில்லை. குரானில் இருக்கும் வரிகள் அடிமை முறையைப் பற்றி சொன்னது அது வேலைக்காரப்பெண்களுக்கு பொருந்தாது, இன்று பொருந்தாது என்றால், இன்று பொருந்தாத வரிகளை கடவுள் எதற்காக அன்று சொன்னார். அப்போது குரான் மொத்தமுமே இன்றைக்கு பொருந்தாத குப்பை தானே. குரானை தூக்கி எறிந்துவிடுவீர்களா அல்லது இது போன்ற நீங்களே ஒப்புக்கொள்ளும் ‘காலாவதியாகிப்போன’ கடவுளின் வசனங்களை(sic!) உளுத்துப்போன விஷயங்கள் என்று குரானிலிருந்து நீக்கிவிடுவீர்களா? அல்லது இன்றைய உலகிற்கு ஏற்றமாதிரியான ஒரு புது குரானை கடவுள் இப்போது இருக்கின்ற யாரையாவது ஒருவரை அல்லது பலரை தேர்ந்தெடுத்து சொல்வாரா?
    ரேவதி சுட்டிக்காட்டியது ஒரு குறிப்பிட்ட சம்பவம். உங்களது “நபி” யே இப்படி வீட்டில் இருந்த பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்பது. அந்த நபி(sic!), இப்படி வேலைக்காரப்பெண்ணை பாலியல் வலுவந்தம் செய்தது உண்மையா பொய்யா என்பது குறித்து இங்கே கொந்தளிக்கும் மதவெறியர்கள் எவரும் பதிலளிக்கவில்லை. ஆனால் விஷயத்தை திசை திருப்புகிறார்கள்.உங்கள் நபி இந்த கேவலமான செயலை செய்தாரா இல்லையா என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். வினவு அரபிகளை குறித்து