Thursday, July 29, 2021
முகப்பு கலைஞர் குடும்பம், நேரு குடும்பம்: பெயர்களின் அரசியல் !
Array

கலைஞர் குடும்பம், நேரு குடும்பம்: பெயர்களின் அரசியல் !

-

குடிசை வீடுகளை மாற்றி காங்கிரீட் வீடு கட்டும் தமிழக அரசின் திட்டத்தின்படி ஒரு வீட்டிற்கு மத்திய அரசு ரூ. 45 ஆயிரம் வழங்குவதாகவும், தமிழக அரசு ரூ.15 ஆயிரம் மட்டும் வழங்கும் நிலையில் அந்த திட்டத்திற்கு கருணாநிதியின் பெயரை வைத்தது நியாயமா என்று காங்கிரசுக் கட்சியின் இளங்கோவன் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது எங்கள் காசைப்பயன்படுத்திக் கொண்டு உங்கள்பெயரை மக்களிடம் பிரபலமாக்குவது சரியா என்பதை அவரது கேள்வி.

இதற்குப் பதிலளித்த கருணாநிதி, இளங்கோவன் கூறும் திட்டம் ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு அங்கமாக இருக்கும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் என்றும், இது 1997 – 98 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும், இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் வாழும் வீடில்லாத ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், கொத்தடிமைகளாக விடுவிக்கப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மற்ற பிரிவு மக்கள் ஆகியோருக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்படுமென்றும், இதற்கு 75 : 25 என்ற விகிதத்தில் மத்திய – மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கும் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கும் எந்த சம்பந்தமில்லை என்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு 21 இலட்சம் வீடுகளைக் கட்டும் திட்டம் 2010 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த ஆண்டு மட்டும் மூன்று இலட்சம் வீடுகள் ரூ. 1800 கோடியில் கட்டப்படும் என்றும் கருணாநிதி விளக்கியுள்ளார். இதன்படி மீதமுள்ள 18 இலட்சம் வீடுகளுக்கான நிதி 10,800 கோடி வருகிறது. இந்த தொகையை எப்படி ஒதுக்கப் போகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க இத்திட்டத்தின்படியே ஒரு வீட்டிற்கு ஒதுக்கப்படும் தொகை ரூ. 60,000 என்றுவருகிறது.

இந்த ரூபாய்க்கு குடிசை வீடு கூட கட்ட முடியாத இன்றைய காலத்தில் காங்கிரீட் வீடு எப்படி கட்ட முடியும்? ஒருவேளை கட்டினாலும் அதன் தரம் எப்படி இருக்கும் என்பது புரிகிறது. இறுதியில் இந்த வீடுகளைக் கட்டும் முகாந்திரத்தில் அதிகாரிகள், கட்சிக்காரர்கள், முதலாளிகளும்தான் சம்பாதிக்கப் போகிறார்கள். மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் தி.மு.க அரசு நிகழ்த்தப் போகும் மற்றுமொரு மோசடி. சரி, இது எப்போதும் உள்ள கதைதானே? இனி விசயத்திற்கு வருவோம்.

இந்த விளக்கத்தின் மூலம் கருணாநிதி என்ன சொல்கிறார் என்றால் காங்கிரீட் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி பயன்படுத்தப்படவில்லை, முற்றிலும் மாநில அரசு நிதிதான் பயன்படுத்தப்படுகிறது என்பதால் இதற்கு கலைஞர் என்ற பெயர் வைத்ததில்  எந்த தவறுமில்லை என்பதே. அதாவது உங்க முதலாளிகளது பணத்தையல்ல, எங்கள் வீட்டுப் பணத்தை பயன்படுத்தும் திட்டத்திற்கு எங்கள் பெயர்தானே வைக்கமுடியும் என்று நியாயம் கேட்கிறார் கருணாநிதி. கூடுதலாக இளங்கோவனது பேச்சு கூட்டணியை வலுப்படுத்தாமல் ‘வலி’ப்படுத்துகிறது என்று வேறு  புலம்பியிருக்கிறார்.

இறுதியில் இந்த அக்கப்போரிலிருந்து நாம் பெறும் விளக்கம் என்ன? மத்திய அரசு என்பது நேரு குடும்பத்தின் சொத்து, மாநில அரசு என்பது கலைஞர் குடும்பத்தின் சொத்து. இருவரும் மக்கள் வரிப்பணத்தை வைத்தே அரசின் செலவுகளை செய்கிறார்கள் என்றாலும் ஏதோ அவர்களது சட்டை பாக்கெட்டிலிருந்து செலவு செய்வதாக கருதிக் கொள்கிறார்கள். அதனால்தான் அனைத்து திட்டங்களும் நேரு, இந்திரா, ராஜீவ், கலைஞர் என்ற பெயர்களைத் தாங்கி வருகின்றன.

இலவச டி.வி என்றால் அது கலைஞர் கொடுத்தது, இலவச மருத்துவக் காப்பீடு என்றால் அது கலைஞர் கொடுத்தது, ஒரு ரூபாய் ரேசன் அரிசியும் அவர் கொடுத்தது, இப்படி தமிழகத்தின் எல்லா திட்டங்களும் கலைஞர் தான் சேர்த்து வைத்த குடும்பச் சொத்திலிருந்து கொடுப்பது போல கருதிக் கொள்கிறார். நேரு குடும்பமும் அப்படியே கருதிக் கொள்கிறது. உண்மையில் கலைஞர் குடும்பத்தின் வருமானம் என்பது ஆசியப் பணக்காரர் பட்டியலில் வரும் தகுதி கொண்டது. அந்த ஆயிரக்கணக்கான கோடிகளே தமிழக மக்களை சுரண்டிச் சேர்த்த பணம்தான். அதிலிருந்து ஒரு காசு கூட சமூகத்திற்கு செலவழிக்காதவர்கள் மக்கள் பணத்தை செலவு செய்வதைக் கூட தமது சொந்த பணத்தை செலவு செய்வது போல பேசுவதும், எண்ணுவதும் எவ்வளவு அயோக்கியத்தனம்?

மக்களும் கூட அப்படித்தான் எண்ணுகிறார்கள் என்பதால் எல்லா ஓட்டுக்கட்சிகளும் இத்தகைய நடைமுறைகளை பச்சையாகக் கையாள்கின்றன. மேலும் மக்கள் வரிப்பணத்திலிருந்தே இவை அமலாக்கப்பட்டாலும் மக்களை ஏதோ பிச்சைக்காரர்கள் போல சித்தரிப்பதும், காங்கிரசு, தி.மு.க கோமான்களை தர்மம் செய்யும் பண்ணையார்களாக காட்டுவதும் மகா மட்டமாக இருக்கிறது.

இந்த திட்டங்கள் எங்கள் பணத்திலிருந்துதான் வருகிறது என்ற உணர்வை மக்கள் பெறாத வரைக்கும் இந்த தர்மவான்களது அயோக்கியப் பெயர்கள் மறையப் போவதில்லை.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. கலைஞர் குடும்பம், நேரு குடும்பம்: பெயர்களின் அரசியல்…

  மத்திய அரசு நேரு குடும்பத்தின் சொத்து, மாநில அரசு கலைஞர் குடும்பத்தின் சொத்து. மக்கள் வரிப்பணத்தை வைத்து செய்யும் செலவுகளை ஏதோ தங்கள் கைக்காசு செலவாவதாக கருதுகிறார்கள்…

 2. மக்களது அறிவை இலவசம், சினிமா எனும் தடித்த உரையினால் மூடப்பட்டிருக்கிறது. அவைகளை பிய்த்தெடுக்கும் வரை மக்கள் இலவசத்தை வாங்கி கொண்டு, கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படத்தை பார்த்துக்கொண்டு, அக்குடும்பத்தின் டிவியை பார்த்துக்கொண்டு தேமேன்னு இருப்பான். கடவுள் என்று ஒருவன் இருந்தால் மக்களை கருணாநிதி குடும்பத்தில் இருந்து காப்பாற்றட்டும்.

 3. கலைஞர் டீ.வி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என விளம்பரங்கள். எதோ சொந்தக் காசப் போட்டு சினிமா எடுத்த மாதிரி. மீடியாவை இவனுங்க கிட்டருந்து புடுங்குனாதான் மக்கள் மாற முடியும்.

 4. இது என்ன காமெடியாக இருக்கிறது.

  கலைஞர் ஆட்சியில் , கொண்டு வரும் திட்டங்களுக்கு செங்கோட்டையன் இலவச தொலைகாட்சி திட்டம், ஆலடி சங்கரையா இலவச காப்பீடு திட்டம், பாலபாரதி மாற்று திறனாளி திட்டம், நல்லகண்ணு சமத்துவ புரம் என்றா பெயர் வைக்க முடியும்.

  அதே போல அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு சாதிக் பாட்சா சத்துணவு திட்டம், அன்பில் தர்மலிங்கம் ஆலய அன்னதான திட்டம், ஜீவா மழை நீர் சேகரிப்பு திட்டம் என்றா பெயர் வைப்பார்கள்.

  இந்த பழக்கம் தமிழகத்தில் மட்டும் அல்ல, கேரளா, உத்திர பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், அமெரிக்க, இங்கிலாந்து எல்லா நாடுகளிலும் உள்ள து தான். அமெரிக்காவில் பெரும்பாலான விமான நிலையங்கள், ஊர்கள், தெருக்கள் பெயர்களே அந்த கட்சிகளின் பழைய தலைவர்கள் பெயரில் தான் உள்ளது.

  கரிகாலன் கல்லணையை கட்டினான் என்று சொன்னால் , மக்களின் வரிப்பணத்தில், அரசு பணத்தில் தான் கட்டினான், அவனுடைய சொந்த பணத்தில் இருந்து கட்டியது அல்ல.

  • கரிகாலன் ஆட்சி அரசர்கள் ஆட்சி, சோனியா, கருணாநிதி மந்திரிகளே மக்காளாட்சியில் மக்கள்தான் அரசர்கள் இந்த மந்திரிகள் தாங்களகவே அரசர்கள் என்று பிரச்சாரம் செய்துகொள்ளும் செயலுக்கு தங்கள் நியாயம் கூறுவது வருத்தத்தை தருகிறது

   • ஸாரி, நான் சொன்னது இதற்கு மேலுள்ள இடுகைக்கு. தவறாக இதில் பதிவாகிவிட்டது.

 5. […] This post was mentioned on Twitter by வினவு, karthickphp. karthickphp said: RT @vinavu: கலைஞர் குடும்பம், நேரு குடும்பம்: பெயர்களின் அரசியல் ! https://www.vinavu.com/2010/08/14/mk-nehru-family/ RT Pls. […]

 6. //இந்த திட்டங்கள் எங்கள் பணத்திலிருந்துதான் வருகிறது என்ற உணர்வை மக்கள் பெறாத வரைக்கும் இந்த தர்மவான்களது அயோக்கியப் பெயர்கள் மறையப் போவதில்லை.//

  makkal sindhikkum thiranai ilandhu vegu kalamakivittadhu. ella thuraikalilum munneruvathaka sollukirarkal. anal, arasiyalil pinnokki sendrukondirukirom.

 7. எவ்வளவு தான் மழை பேஞ்சாலும் எரும மாட்டுக்கு உரைகாதுகோ …

  வினவு …
  நம்ம நீரம் தான் வீண் . என்னினும் சிந்திக்க வைக்கிறிங்க … output வருதோ இல்லையோ …
  உமது பணியை துடருங்கள்

 8. //கரிகாலன் கல்லணையை கட்டினான் என்று சொன்னால் , மக்களின் வரிப்பணத்தில், அரசு பணத்தில் தான் கட்டினான், அவனுடைய சொந்த பணத்தில் இருந்து கட்டியது அல்ல//

  அதைத்தான் நானும் கேட்க வருகிறேன். கரிகாலன் கால்த்தில் மன்னராட்சி. மண்ணின் வளமனைத்தும் மன்னனுக்கே சொந்தம் என்ற கருத்தியல் அடிப்படையில் இயங்கிய ஆட்சி முறை….

  இப்போ நடக்குறதும் அதானா? அப்புறம் என்ன புண்ணாக்குக்கு இதுக்கு ஜனநாயகம், மக்களாட்சி அப்டீன்னு பேரு? வெளக்குமாத்துக் கட்டைக்கு பட்டுக் குஞ்சம் கட்டுனா மாதிரி?

  ஆக, இப்போதைய இந்தியப்பேரரசின் ராணி சோனியா, இளவரசன் ராகுல், தமிழநாட்டுக் குறுநிலமன்னன் கருணாநிதி! சரிதானே?

  இதை வெளிப்படையாக அறிவித்துவிட்டு நீங்கள் என்ன கருமாதிப்பேரையாவது வைத்துவிட்டுப் போங்களேன்! யார் வந்து நொட்டை சொல்லப் போறாங்க?

 9. மிக மிக சரியாக சொல்லப் பட்டு இருக்கு. ஏதோ இவங்க தகப்பன் சம்பாதித்ததை கொடுக்கிற மாதிரி அலட்டிக்கிறாங்க.

 10. இந்த திட்டங்கள் எங்கள் பணத்திலிருந்துதான் வருகிறது என்ற உணர்வை மக்கள் பெறாத வரைக்கும் இந்த தர்மவான்களது அயோக்கியப் பெயர்கள் மறையப் போவதில்லை.//

 11. மக்களை ஏமாற்றி ஏதோ தான் மட்டுமே அவர்களின் நலனுக்காக போராடுவது போல நடித்து ஏமாற்றும் உங்கள் மார்க்சிஸ்ட்டுகள் ஏன் கேரளாவிலோ, மேற்கு வங்கத்திலோ செய்ய வேண்டியது தானே? மானம் கெட்டவர்களே! உங்கப்பனுக்கு பொறந்தா இனிசியலாய் அவன் பேரு தானே போடுவீங்க? இல்ல எங்கப்பன் பேரு சிபிஎம் ரங்கராஜன், ராமகிருஷ்ணன், வரதராஜன் -ன்னு போடுவீங்களா? இல்ல உங்களையெல்லாம் எஸ்மா டெஸ்மா போட்டு தீபாவளிக்கு ஜெயில் கலி சாப்பிட வெச்ச இப்போதைய (ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை) முன்பு வரதராஜன் இப்போ ராமகிருஷ்ணனின் சகோதரி ஜெயா ஆட்சியில ஜெயா டெஸ்மா சட்டம், சந்தியா எஸ்மா சட்டம், அவங்க அப்பா மைசூர் மகராஜா மதமாற்ற தடை சட்டம்-ன்னு பேரு வெக்க வேண்டியது தானே. இப்படி மக்கள் நல திட்டங்கள் எதை செய்ஞ்சாலும் அதை கருணாநிதி செய்தால் குறை சொல்வதற்கே சில மக்கள் நல விரும்பி endra பேரில் அழும் குறை சொல்லும் சில ஒனாயிகள் ஊளையிடுவது மலையை பார்த்து ஏதோ குறைததர்க்கு சமம். முடிஞ்சா நீங்களெல்லாம் போயி கேரளாவிலோ, திரிபுர, மேற்கு வங்கத்தில் போயி மக்களுக்கு உதவற மாதிரி இடுகை எழுதலாம். இல்லையேன்ன மூடிகிட்டு ஜெயாவை ஆதரிச்சோமா, வர எலெக்ட்சியோனில் ஒரு 4 -5 MLA தேத்திநோமான்னு போக வேண்டியது தான். பாவம் எலெக்சன் வந்தாச்சு! எப்படியாவது குறைச்சு நாலு சீட்டு வாங்குற வரைக்கும்…,

  • கோகுலகிருஷ்ணன், இது ஜெயலலிதா கருணாநிதி பிரச்சனை இல்ல, யாரு பேரு வச்சாலும் தப்புன்னுதான் எழுத்தாளர் எழுதிருக்கார் அது பாராட்ட வேண்டிய விஷயம்தான், இப்படியே உட்டா உங்களுக்கு பெறக்ககர குழ்ந்தைகளுக்கும் இது கருணாநிதி ஆஸ்பத்திரில பொறந்தது ஜெயலலிதா ஆட்சில பொறந்தது னு முத்திரை குத்தி வீட்டிக்கு அனுப்பற துரதிஷ்டம் வந்தாலும் ஆச்சர்யபடறதுக்கு இல்லை

   அரசு உழியர்கள் மக்கள்ளுக்கு வேலை செய்யும் தொழிலாளர்களே தவிர அவர்கள் முதலாளிகள் இல்லை என்பதைதான் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

  • கோகுலகிருஷ்ணன்,
   சி. பி. எம் மீதான உங்கள் சீற்றம் நியாயமானது தான். உங்களை விட மூர்க்கமாக சி. பி. எம்மை (போலி கம்யூனிஸ்டுகளை) வினவு விமர்சித்திருக்கிறது. https://www.vinavu.com/category/communism/pseudos/
   அட்ரஸ் மாறி வந்து அசிங்கமாய் திட்டியிருக்கிறீர்கள். சரி… இனி கருணாநிதி மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லிட்டு போங்கள்.

 12. கரிகாலன் தான் தான் கல்லணையை கட்டினேன் என்று எந்த கல்வெட்டிலாவது கூறியிருக்கிறார? எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் இருந்தால் எந்த கல்வெட்டில் கூரியிருக்குறார். என்று கூறுங்கள். நேரு குடும்பத்துக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் மக்கள் அடிமையாக வாழும் சூழ்நிலை. இந்த நிலை கண்டிப்பாக மாறும். மாறாத வரைக்கும் நமக்கு சுதந்திரம் ஒரு கேடா?

 13. இங்கு புலம்பி பிரயாஜனம் இல்லை! படிப்பவர்களில் 90 சதம், வோட்டு சாவடி பக்கம் போகாதவர்கள்! மீதம் வெளி நாட்டர்! (மொத்தம் 109 சதம்?)

  சுயநல மக்களின் தலைவர்களும் அவர்களைப் போலத்தான் இருப்பார்கள்!

 14. கோகுலகிருஷ்ணன்,
  சி. பி. எம் மீதான உங்கள் சீற்றம் நியாயமானது தான். உங்களை விட மூர்க்கமாக சி. பி. எம்மை (போலி கம்யூனிஸ்டுகளை) வினவு விமர்சித்திருக்கிறது. https://www.vinavu.com/category/communism/pseudos/
  அட்ரஸ் மாறி வந்து அசிங்கமாய் திட்டியிருக்கிறீர்கள். சரி… இனி கருணாநிதி மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லிட்டு போங்கள்.

 15. அப்படியே புராணங்களில் இருந்தது வைக்கப் படும் பெயர்களுக்கும் சேர்த்து ஒரு பெரிய ஆப்பா வையுங்கள்…உதாரணமாக் அர்ஜுனா விருது, துரோண்ஆச்சாரியா விருது…இது மாதிரி ஏராளம்.

  Brahmos (cruise missile); derived from Brahmo Samaj. It is an abbreviation combining Brahmo and S of Samaj: Brahmo-s; Brahmos…இப்படி ஏராளம்.

  அப்படியே Brahmos பெயரையும் எடுக்க சொல்லுங்கள். உடனே மீதி மதங்களில் இருந்தது பெயர் வையுங்கள் என்று நான் சொல்லவில்லை. அதையும் செய்யக் கூடாது.

  இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. “எல்லாவற்றையும்” நிறுத்த, மாற்ற, சொல்லுங்கள்…

 16. ஜனநாயகத்தில் மன்னராட்சிபோல் கோலோச்சுவது கண்டிக்கத்தக்கதுதான். மருத்துவப் பல்கலைக் கழகத்துக்கும் எம்.ஜி.ஆர். பெயருக்கும் என்ன பொருத்தம்? பொறியியற் கல்விக்கும் அண்ணாவுக்கும் என்ன சம்பந்தம்? அந்த அந்தத் துறையில் வல்லுனர்கள்/ பங்களித்தவர்களின் பெயர் சூட்டக் கூடாதா என்று நான் எண்ணியதுண்டு. ஆனால் பௌத்தக் கோவில்களை இடித்து பிராமணியக் கோவில்கள் கட்டப்பட்டது (யானையைச் சிங்கம் வென்றடக்குவதுபொல் சிற்பக் குறியீடு உள்ள கோவில்கள்) போல, ஒரு வழிபாட்டு முறை இது. இதிற்போய், உள்நாட்டு வானூர்தி மையத்துக்கு ஏன் காமராஜர் பெயர், பன்னாட்டு வானூர்தி மையத்துக்கு ஏன் அண்ணா பெயர் என்றெல்லாம் குழம்பக் கூடாது என்று பின் தெளிந்தேன்.

  எல்லாக் கட்சிக்காரர்களும் அப்படித்தானே இருக்கிறார்கள்? எம்.ஜி.ஆர். ஆண்ட காலத்தில் கருணாநிதி பெயரை நீக்கி அந்த இடங்களுக்குப் பெரியார் பெயர் இட்டது நமக்கு நினைவில் இருக்கலாம். பாபர் ம்சூதியை இடித்துவிட்டு ராமர்கோவில் கட்டுகிற நியாயச் சமன்பாடு இது. சென் பீட்டர்ஸ்பர்க் லெனின்க்ராடு ஆகித் திரும்பவும் சென் பீட்டர்ஸ்பர்க் ஆன நியாயக் கூத்தும் இதுதான். சீனாவில் மாவோ பெயர் சூட்டப்பட்டிருப்பதும் உண்டுதானே? இந்த வழிபாட்டு வழக்கம் கம்யூனிஸ்ட்களுக்கும் வந்து தொலைந்த கேளிக்கூத்துதான் தத்துவார்த்தமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை!

 17. karunanidhi family occupies almost all major industries in tamil nadu..after five years they will change tamil nadu name to kalinar nadu..they will tell kalinar means tamil….

 18. Named after members of Nehru Dynasty.

  Airports, parks, sanctuaries, national parks, colonies, stadiums, roads, libraries, bridges, museums, universities, colleges, schools, research centres, forest academy, hospitals, Aeronautics institute, Youth training institute.

  —– Nature and Wildlife —-
  Indira Gandhi Wildlife Sanctuary and National Park, Coimbatore
  Indira Gandhi Zoological Park – Visakhapatnam, Andhra Pradesh
  Indira Gandhi Tulip Garden, Srinagar, Jammu & Kashmir
  Indira Gandhi Canal (Indira Gandhi Nahar Project) – Rajasthan, Punjab and Haryana
  Sanjay Gandhi (Borivali) National Park – Mumbai
  Sanjay Gandhi Biological and Zoological Garden, Patna, Bihar
  Sanjay Gandhi Animal Care Centre – Delhi-NCR
  Rajiv Gandhi (Nagarhole) Wildlife Sanctury, Karnataka
  Rajiv Gandhi Wildlife Sanctury, Andhra Pradesh
  Rajiv Gandhi Snake and Zoological Park – Pune, Maharashtra
  Rajiv Gandhi Park – Udaipur, Rajasthan
  Rajiv Gandhi-Regional Museum of Natural History – Sawai Madhopur, Rajasthan

  —– Awards ——
  Rajiv Gandhi Wildlife Conservation Award
  Rajiv Gandhi Khel Ratna Award
  Rajiv Gandhi National Quality Award
  Rajiv Gandhi Award for Social Field, Women Achiever, Young Entrepreneur, Super Achiever, Child Prodigy, Educationist, Global Indian, Sports, Industrialist, Journalism, Best Actress, Best Actor
  Sanjay Gandhi Award for Ecology
  Indira Gandhi National Service Scheme Awards
  Indira Gandhi Prize for Peace, Disarmament and Development
  Indira Gandhi Raj Bhasha Puraskar Award for excellent implementation of the Official Language Policy of the Government of India
  Indira Gandhi Paryavaran Puraskar award for protection of the environment
  Indira Gandhi Award for National Integration
  Indira Gandhi Award for Best First Film of a Director
  Indira Gandhi Lifetime Achievement award
  Indira Gandhi Memorial National Award for Best Environmental & Ecological Implementation

  —– University ——
  Jawaharlal Nehru University – Delhi
  Indira Gandhi National Open University – IGNOU Delhi
  Indira Gandhi National Tribal University – Amarkantak, Madhya Pradesh
  Indira Gandhi Agricultural University – Raipur, Chattisgarh
  Rajiv Gandhi Technological University – Bhopal, Madhya Pradesh
  Rajiv Gandhi University of Health Sciences – Karnataka
  Rajiv Gandhi University – Itanagar, Arunachal Pradesh

  —– Healthcare —-
  Indira Gandhi Co-operative Hospital – Manjodi,Thiruvangadu, Thalassery, Kannur, Kerala
  Sri Rajiv Gandhi College of Dental Sciences & Hospital – Bangalore, Karnataka
  Sanjay Gandhi Hospital,Amethi
  Sanjay Gandhi Memorial Hospital – S-Block, Mangol Puri, Delhi
  Sanjay Gandhi Postgraduate Institue of Medical Sciences – Lucknow, Uttar Pradesh
  Sanjay Gandhi Institute of Trauma and Orthopedics – Byrasandra, Jayanagar East, Bangalore
  North Eastern Indira Gandhi Regional Institute of Health & Medical Science, Shillong, Meghalaya
  Indira Gandhi Institute of Medical Sciences – Patna, Bihar
  Indira Gandhi Institute of Physical Education and Sports Science, New Delhi
  Indira Gandhi Medical College – Nagpur, Maharashtra
  Indira Gandhi Medical College – Shimla, Himachal Pradesh
  Jawaharlal Nehru Cancer Hospital & Research Centre – Bhopal, Madhya Pradesh

  Rajiv Gandhi Cancer Institute & Research Centre – Delhi
  SDS Tuberculosis & Rajiv Gandhi Institute of Chest Diseases – Bangalore, Karnataka
  Sanjay Gandhi College of Nursing – Bangalore

  —- Science and Technology —-
  Indira Gandhi Institute of Technology – Sarang, Dhenkanal, Orissa
  Smt. Indira Gandhi College of Engineering – Navi Mumbai, Maharashtra
  Bharat Ratna Indira Gandhi College of Engineering – Solapur, Maharashtra
  Indira Gandhi Government Engineering College – Bhopal, Madhya Pradesh
  Indira Gandhi Engineering College – Sagar, Madhya Pradesh
  Sanjay Gandhi Polytechnic – Sultanpur, Uttar Pradesh
  Sanjay Gandhi Polythenic – Bellary, Andhra Pradesh
  Sanjay Gandhi Memorial Govt Polytechnic – Hayat Nagar, Hyderabad, Andhra Pradesh
  Rajiv Gandhi National Ground Water Training & Research Institute, Faridabad, Haryana
  Rajiv Gandhi Institute of Petroleum Technology – Rae Bareli, Uttar Pradesh
  Jawaharlal Nehru National College of Engineering – Shimoga, Karnataka
  Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research – Bangalore, Karnataka
  Jawaharlal Nehru Technological University – Hyderabad, Andhra Pradesh
  Jawaharlal Nehru Rajkeeya Mahavidyalaya – Port Blair, Andaman and Nicobar
  Jawaharlal Nehru Architecture and Fine Arts University – Hyderabad, Andhra Pradesh

  Indira Gandhi Government College, Tezu – Arunachal Pradesh
  Indira Gandhi College of Distance Education – Coimbatore, Tamil Nadu
  Indira Gandhi Krishi Vishwavidyalaya, Raipur
  Indira Gandhi Government Post Graduate College – Tohana, Haryana
  Indira Gandhi Women’s College – Cuttack
  Shrimati Indira Gandhi College – Tiruchirappalli
  Indira Gandhi Memorial Trust – Kothamangalam, Kerala

  Sanjay Gandhi Memorial College – Pandra, Ranchi
  Sanjay Gandhi Smriti Govt P.G. Autounomus College, Madhya Pradesh
  Sanjay Gandhi Memorial Pub Vidyalaya – Kurukshetra, Haryana
  Sanjay Gandhi College of Law – Jaipur, Rajasthan
  Rajiv Gandhi Institute of Technology – Kottayam, Kerala
  Rajiv Gandhi Institute of Technology – Bangalore, Karnataka
  Rajiv Gandhi Academy For Aviation Technology – Thiruvananthapuram, Kerala
  Rajeev Gandhi Memorial College of Engineering and technology – Nandyal, Andhra Pradesh

  Indira Gandhi Institute of Aeronautics, Chandigarh
  Indira Gandhi Rashtriya Uran Akademi, Rae Bareli, Uttar Pradesh
  Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam, Tamil Nadu
  Indira Gandhi Institute of Development Research – Mumbai

  Rajiv Gandhi Foundation – New Delhi
  Sanjay Gandhi Institute of Dairy Science and Technology – Patna, Bihar
  Rajiv Gandhi College of Veterinary and Animal Sciences, Puducherry
  Rajiv Gandhi Centre for Biotechnology – Thiruvananthapuram, Kerala
  Rajiv Gandhi Biotechnology Centre – Nagpur, Maharashtra
  Jawaharlal Nehru Krishi Vishwavidyalaya – Jabalpur

  Sanjay Gandhi Institute of Training for Youth in Leadership and Rural Development – Pachmari, Madhya Pradesh
  Rajiv Gandhi National Institute of Youth Development – Tamil Nadu

  Rajiv Gandhi Institute for Contemporary Studies – New Delhi
  Rajiv Gandhi Indian Institute of Management – Shillong, Meghalaya
  Rajiv Gandhi School of Intellectual Property Law – IIT- Kharagpur, West Bengal

  Indira Gandhi Musical Fountain – Bangalore, Karnataka
  Indira Gandhi Computer Saksharta Mission Trust – New Delhi
  Rajiv Gandhi Group of Institutions – Satna, Madhya Pradesh

  —– Infrastructure ——
  Indira Gandhi Road, Naryana, Jammu and Kashmir
  Indira Gandhi Road, Chikmagalur, Karnataka
  Indira Gandhi Road, Ernakulam, Kerala
  Indira Gandhi Road, Kozhikode, Kerala

  Annai Indira Gandhi Road Bridge
  Indira Gandhi statue in Port Blair

  Sanjay Gandhi Transport Nagar – Delhi
  Sanjay Gandhi Puram – Lucknow
  Rajiv Gandhi Science Centre – Mauritius
  Indira Gandhi International Airport – Delhi
  Rajiv Gandhi International Airport – Hyderabad, Andhra Pradesh
  Jawaharlal Nehru Port Trust – Mumbai, Maharashtra
  Rajiv Gandhi Container Terminal – Kochi, Kerala
  Rajiv Gandhi Bridge (Sea Link Project) – Maharashtra
  Rajiv Gandhi Salai (Road) – Chennai, Tamil Nadu
  Rajiv Gandhi Chandigarh Technology Park – Chandigarh
  Rajiv Gandhi IT Park – Pune, Maharashtra
  Rajiv Gandhi Renewable Energy Park – Gurgaon, Haryana
  Sanjay Gandhi thermal power station, Madhya Pradesh

  Indira Gandhi National Centre for the Arts – New Delhi, Bangalore, Varanasi, Guwahati
  Indira Gandhi National Forest Academy, Dehradun, Delhi

  Indira Gandhi Memorial Senior Secondary School – Kolkata, West Bengal

  —– Stadiums ———
  Indira Gandhi Sports Complex – New Delhi
  Indira Gandhi Indoor Stadium – New Delhi
  Indira Gandhi Stadium – Vijayawada, Andhra Pradesh
  Indira Priyadarshini Stadium – Vishakhapatnam, Andhra Pradesh
  Indira Gandhi Stadium – Pondicherry
  Indira Gandhi Stadium – Una, Himachal Pradesh
  Indira Gandhi Stadium – Deogarh, Rajasthan
  Rajiv Gandhi International Cricket Stadium – Hyderabad, Andhra Pradesh
  Rajiv Gandhi Indoor Stadium – Kochi, Kerala
  Rajiv Gandhi Indoor Stadium, Pondicherry
  Rajib Gandhi Memorial Sports Complex, Guwahati, Assam
  Nehru Stadium – Coimbatore, Tamil Nadu
  Nehru Stadium – Pune, Maharashtra
  Jawaharlal Nehru Stadium – New Delhi
  Jawaharlal Nehru Stadium – Chennai, Tamil Nadu
  Jawaharlal Nehru International Stadium – Kochi, Kerala
  Pandit Jawaharlal Nehru Stadium – Goa

  Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya – National Museum of Man
  Indira Gandhi Memorial Museum – New Delhi
  Rajiv Gandhi Velodrome – Port Blair, Andaman and Nicobar

  Indira Gandhi International Hockey Tournament
  Nehru Trophy Boat Race – Alappuzha, Kerala
  Indira Gandhi Boat Race – Kochi, Kerala
  Rajiv Gandhi Boat Race – Pulinkunnu, Kerala
  Rajiv Gandhi National Football Academy – Haryana
  Rajiv Gandhi International Invitation Gold Cup Football Tournament
  Nehru Cup Football

  —- Schemes
  Indira Gandhi Post-graduate Scholarship for Single Girl Child

  Indira Gandhi National Old Age Pension
  Rajiv Gandhi Scholarship Scheme for Students with Disabilities
  Rajiv Gandhi National Fellowship for SC/ST Candidates – UGC
  Rajiv Gandhi Science Talent Research Fellows
  Rajiv Gandhi Fellowship sponsored by the Commonwealth of Learning in association with IGNOU;
  Rajiv Gandhi science talent research fellowship given by Jawaharlal Nehru Centre for advanced scientific research

  Rajiv Gandhi Rehabilitation Package for Tsunami Affected Areas
  Rajiv Gandhi Social Security Scheme, Govt. of Puducherry
  Rajiv Gandhi Rural Housing Corporation Limited, Karnataka
  Rajiv Gandhi Mission for Watershed Management, Madhya Pradesh

  Sanjay Gandhi Yojna
  Sanjay Gandhi Niradhar / Economically Weaker Section Anudan Yojna – Maharashtra
  Indira Gandhi Niradhar and Landless Agricultural Labours Anudan Scheme – Maharashtra
  Indira Gandhi National Old Age Pension Scheme (IGNOAPS)
  Rajiv Gandhi National Drinking Water Mission
  Jawaharlal Nehru National Solar Mission
  Jawaharlal Nehru National Urban Renewal Mission
  Rajiv Gandhi National Crèche Scheme for the Children of Working Mothers, Department of Women & Child Development
  Rajiv Gandhi Shramik Kalyan Yojna
  Rajiv Gandhi Grameen Vidyutikaran Yojana
  Rajiv Gandhi Mission for Poverty Reduction and Women’s Empowerment
  Rajiv Gandhi Udyami Mitra Yojana

 19. ilavasam endru sonnavudan athu malamai irunthalum varisaiyilkuda nirkamal adithu pidithukondu vangi thinnum tamil matrum india kudimakkal irukkum varai intha kudumbangal valnthu konduthan irukkum.thappu avangalodathu illai yen ottu podukirom endru kuda theriyatha intha vesimakkalodathu.pulambiye savungada.

 20. போகட்டும் விடுங்கையா , தங்க பாலு வ இருந்தா, சோனா லக்ஷ்மி பேரை வச்சி இருப்பாரு , அதுக்கு இது எவ்ளோ மேலு .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க