Friday, September 22, 2023
முகப்புNo Ball: சாமியாடும் இந்திய ஊடகங்கள் !
Array

No Ball: சாமியாடும் இந்திய ஊடகங்கள் !

-

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இலங்கையைத் தோற்கடித்திருக்கிறது. இது பத்தோடு ஒன்றாய் சாதரண கிரிக்கெட் செய்தியாக வந்திருக்க வேண்டியது பெரும் விவாதமாய் எழுந்திருக்கிறது.

நேற்றைய போட்டியில் இந்திய வீரர் சேவக் 99 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஒரு ரன்னை சேவக் எடுத்து விட்டால் இந்திய அணி வெற்றி பெறுவதோடு, சேவக் தனது 13வது சதத்தையும் அடித்திருக்கலாம். இறுதி ஓவரை வீசிய இலங்கை அணி சுழற்பந்து வீரர் ரந்திவ் வேண்டுமென்றே “நோ பால்” வீசினார். இதையடுத்து இந்தியா வெற்றி பெற்றாலும், சேவக் சதமடிக்கவில்லை. இதுதான் இப்போது இந்தியாவின் அதி முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு செயலர் ரணதுங்கா இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நன்னடத்தைக்காக ஐ.சி.சியிடம் மூன்று முறை விருது வாங்கிய தங்கள் அணியா இப்படி நடந்திருக்கிறது என்று அவர் அங்கலாய்த்துள்ளார். இலங்கை அணித் தலைவர் சங்ககராவும் இந்த செயலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பாளர்களும் இந்த விவாகரத்தை முடித்துக் கொள்ளலாமென்று பெருந்தன்மையுடன் அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்தியாவின் ஊடகங்கள் இதை முடிப்பதாக இல்லை. இது இந்தியாவின் மாபெரும் கவுரவப் பிரச்சினை போல மாற்றி வருகின்றனர். எல்லா செய்தி சானல்களிலும் இது பெரும் விவதாகமாக காட்டப்படுகிறது. தினசரிகளின் விளையாட்டு செய்திகளில் இதுவே கருப்பொருளாக பேசப்படுகிறது.

கேப்டன் சங்ககராவை வில்லன் என்று பேசுகிறது தினமலர். ஸ்டம்ப் மைக்கில் அவர் பேசியது பதிவாகியிருக்கிறதாம். அது என்ன என்று பார்த்தால் “ஹாய் ரந்திவ், பந்தை சேவக் அடித்துவிட்டால் சதமடித்து விடுவார்” என்று மட்டும் இருக்கிறது. இதில் என்ன சதி இருக்கிறது? சேவக் அடிக்காமல் இருக்கும் வகையில் பந்து வீசச் சொல்வதில் என்ன குற்றம்?

இருப்பினும் சங்ககரா இந்திய இரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பிறகு ஐ.பி.எல்லில் விளையாடும் வாய்ப்பும், வருமானமும் முக்கியம் என்ற விதத்தில் அவரது கவலை இருந்திருக்கும். இந்திய ரசிகர்களுக்கோ சேவக் சதமடிப்பது ஒரு ரன்னில் போய்விட்டதே என்று கவலை. தினமலரின் வாசகர்கள் பலர் இதை வைத்து சிங்களவன் என்றால் இப்படித்தான் அழுகுணி ஆட்டம் ஆடுவான் என்று குறிப்பிடுகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்ட எண்ணிக்கையை விட சேவக் கோட்டை விட்ட ஒரு ரன் என்ற எண்ணிக்கை முக்கியமா? ஈழத் தமிழ் மக்களை வதைமுகாமில் அடைத்து வைத்திருப்பதலிருந்து புரியாத சிங்கள இனவெறி இந்த ஒரு ரன் பிரச்சினையில் புரிந்து கொள்வதாகச் சொல்வது அயோக்கியத்தனமில்லையா?

புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்றிய ராஜபக்சேவுக்கு இந்தியா எல்லா விதங்களிலும் உதவி செய்திருக்கிறது. அதில் போகாத இந்திய மானமா இந்த ஒரு ரன்னில் போய்விடப்போகிறது?

ஈழத்தின் மீதான இறுதிப்போரை அதன் அழிவைப் பற்றியெல்லாம் தேசிய விவாதம் நடத்தாத இந்திய ஊடகங்கள் இந்த ஒரு ரன்/நோ பால் பிரச்சினையை பற்றி மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? இந்தியாவின் கிரிக்கெட் இரசிகனை விட ஈழத்தமிழர்களின் உயிர் மிகவும் மலிவான ஒன்றா?

ஈழத்தை அழிக்க சிங்கள இனவெறி அரசுக்கு இந்திய அரசு ஆதரவளித்ததற்கும், இந்த ஒரு ரன் பிரச்சினைக்கும் பின்னணியாக இருப்பது இந்திய முதலாளிகளின் நலன்தான். ஒன்றுபட்ட இலங்கை என்பதே இந்திய தரகுமுதலாளிகளின் தேவை என்றால், கிரிக்கெட்டை வைத்து நுகர்பொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இந்திய முதாளிகளுக்கு சேவக் ஒரு ரன்னை இழந்ததும் அதனால் இரசிகன் அடையும் எரிச்சலை தணிப்பதும் அவசியமாக இருக்கிறது.

அதே போல இந்திய கிரிக்கெட் சந்தையின் தயவில்தான் வாழ முடியும் என்ற நிலையிலிருக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியமும் இதை பெரிது படுத்தாமல் மன்னிப்பு கேட்டு முடிக்க நினைக்கிறது. ஐ.பி.எல் மூலம் பெரும் வருமானத்தை ஈட்டும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த மன்னிப்பு தேவையாக இருக்கிறது. அரசியலும் விளாயட்டும் அதன் பொருளாதார நலன்களிலிருந்தே தீர்மானக்கப்படும் என்பதற்கு இதை விட எடுப்பான சான்று வேறு ஏது?

அசின், கருணாஸ் போன்ற நடிகரெல்லாம் இலங்கை சென்றதை எதிர்க்கும் சீமானின் “நாம் தமிழர்” போன்ற சூரப்புலிகள் இந்திய அணி இலங்கை சென்றதை ஏன் எதிர்க்கவில்லை என்று தெரியவில்லை. ஒருவேளை எதிர்த்திருந்தால் அதை நாம் தமிழர் தொண்டர்களே எதிர்த்திருப்பார்களோ என்னமோ? ஏனெனில் மற்ற எல்லாவற்றையும் விட கிரிக்கெட் மிகப்பெரும் மதமாயிற்றே?

ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி கிரிக்கெட் இப்படி பேசு பொருளாக இருப்பது இந்தியாவின் இழிந்த நிலையையே காட்டுகிறது. அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளை விட கிரிக்கெட் பிரச்சினை முக்கியமான ஒன்றாக இருப்பது எந்த விதத்திலும் நல்லதல்ல.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. நோ பால் – சாமியாடும் இந்திய ஊடகங்கள் !…

    ஈழத்தின் மீதான இறுதிப்போரை அதன் அழிவைப் பற்றியெல்லாம் தேசிய விவாதம் நடத்தாத இந்திய ஊடகஅங்கள் இந்த நோ பால் பிரச்சனை பற்றி மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?…

  2. விளையாட்டுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை, மக்களின் பிரச்சனைகளுக்கு சொரணை கெட்ட ஊடகங்கள் கொடுப்பதில்லை. அதையே பதிவாக போட்டதில், வினவும் அதே காரியத்தை தானே செய்துள்ளது.

    • அதெப்படிங்க நீங்க மட்டும் இத்தினி புத்திசாலியா இருக்கீங்க.

      உங்களுக்கு தோணிய பாயிண்டு எனக்குத் தோனலியே.. வடை போச்சே…

  3. அதுக்குள்ளே யாரோ ஒரு நல்ல மனுசன் மைனஸ் ஓட்டு குத்திட்டுப் போயிட்டாரு. யாருப்பா அது?

  4. this is india
    this is like american mind
    nobody care about real problems
    light thinks, selfish lifestyle

    why
    ….
    till i am waiting for a article about uma sankar today in vinavu

  5. சுப லாபம் என்ற ஒன்றே அனைத்தையும் தீர்மானிக்கின்றது. ஊடகங்கள் எல்லாம் முதலாளிகளின் ஊதுகுழல்கள் என்பது இப்போது மறுபடியும் நிருபிக்கப்பட்டிருக்கின்றது.

  6. //ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி கிரிக்கெட் இப்படி பேசு பொருளாக இருப்பது இந்தியாவின் இழிந்த நிலையையே காட்டுகிறது. //

    அடுத்த வலைப்பூ, நமிதாவா?

    கம்யூனிச வோட்கா மயக்கத்தை விட, கிரிக்கெட் மயக்கம் பெட்டர்!

  7. ஒரே ஒரு நோ பால்.

    அதன் சூலில் எத்தனை வைடு பால்கள்?

    ஊடகங்களோ அதையும் விடாமல்

    சிக்ஸராக்கியதில்

    குஞ்சுகளின் கூச்சல்கள்.

    இனவெறிக் களத்தில்

    வேண்டியமட்டும் ஸ்லோ பால்கள் வீசப்பட்டும்

    விக்கெட்டைப் பறி கொடுத்தனர்.

    வைடு பால் சிக்ஸரும்,

    ஸ்லோ பால் விக்கெட்டும்

    அரசியல் கிரிக்கெட்டின் மதிப்பில்

    ஒன்றென்றறியா குஞ்சுகள்

    விசில்களைத் தொடர்கின்றன

    வரண்ட தொண்டைகளுக்கு

    புரிய வேண்டும்

    அவர்களுக்கு டிக்கெட் விற்கும் வரைதான்

    உங்கள் கூச்சல்களுக்கு சப்தமிருக்கும் என்பது.

    செங்கொடி

  8. அட போங்கப்பா! ஈழத்தமிழனின் சுதந்திரமும், வாழ்வும் கிரிக்கெட்டு விளையாட்டை விடவா மேல்? அப்புறம், கிரிக்கெட் ரசிக சிகாமணிகள் இதற்கு என்ன சொல்லப்போறாங்க? கிருத்திகன், எங்கே இருக்கிறீர்கள்?

    • வினவு..
      வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன்… கிரிக்கெட் ரசிகன் என்கிற மாயவலையைத் தூக்கிப்போட்டுவிட்டு நிர்வாணமாக. நன்றி வினவு.

    • ரதி…
      கிரிக்கெட்டை ரசிக்கிற ஒரேயொரு காரணத்துக்காக இந்த முட்டாள்தனத்தையெல்லாம் ருசித்துக்கொண்டிருப்பேன் என்று நினைக்கவேண்டாம். மற்ற தளங்களிலும் ரந்தீவ் என்கிற கிரிக்கெட் வீரனைப் பற்றிக் கிரிக்கெட் சம்பந்தமாக மட்டுமே பின்னூட்டியிருக்கிறேன். எந்த நிலையிலும் ஊடகங்கள் செய்கிற அயோக்கியத்தனத்துக்கு ஆதரவாக நான் ஒரு வார்த்தையேனும் பேசிவிடவில்லை. அதைவிட ’ஈழத்தமிழனின் சுதந்திரமும், வாழ்வும் கிரிக்கெட்டு விளையாட்டை விடவா மேல்’ என்கிற கருத்துப்பட நான் எங்கும் எதுவும் உளறிக்கொட்டிவிடவும் இல்லை. நானுண்டு என் வேலையுண்டு என்று இருந்த என்னுடைய பெயரைத் தேவையில்லாமல் இழுத்திருக்கிறீர்கள் இங்கே. என்ன மாதிரி மனநிலை இது? பொதுவான தளம் ஒன்றில் வந்த ஒரு கட்டுரை பற்றி எந்தவிதமான கருத்து ஒன்றும் தெரிவிக்காத ஒருவரை வம்புக்கிழுக்கிற பின்னூட்டங்களை வினவு எப்படி அனுமதிக்கலாம்.

      உங்களுக்கு எப்படியோ தெரியாது ரதி… வினவு மற்றும் மற்றைய முற்போக்காளர்கள் சொல்கிற கிரிக்கெட்டின் பின்னான அரசியல் எங்களுக்கு இப்போதுதான் தெரியும். இந்தியாவில் விளையாடப்படுகிற கிரிக்கெட்டுக்கும் நான் விளையாடிய கிரிக்கெட்டுக்கும் இருந்த அடிப்படை வித்தியாசம், கிரிக்கெட் எந்தளவுக்கு எங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகிப் போனது என்பது எல்லாம் வார்த்தைகளில் விவரிக்கமுடியாதது. என்றும் சொல்வேன், புதுக் கிரிக்கெட் பந்தின் வாசத்தில் நான் நுகர்வது வெறும் நைலோன் மணத்தை அல்ல, எங்கள் வாழ்வில் கடந்து போன வசந்த காலம் ஒன்றின் கருகிய வாசனையை என்று. மற்றபடி செத்தவீட்டிலும் போய் ஊர்க்கதை பேசுகிற கீழ்த்தர மனோநிலை எம்மிடமில்லை. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மற்றவர்களை வம்புக்கிழுத்து வாழப்போகிறீர்களோ.

      • kiruththikan,

        // ஈழத்தமிழனின் சுதந்திரமும், வாழ்வும் கிரிக்கெட்டு விளையாட்டை விடவா மேல்? //
        First of all, this is just a generalized comment. Don’t take it personally.

        secondly, I did call your name just for discussion. I don’t understand why you are talking about my attitude. Your comment really reveals your true nature and attitude.

        //…ஒருவரை வம்புக்கிழுக்கிற..//
        That was not my intention at all. This is a misunderstanding.

        I always get the impression that you are a criket fanatic. I really wanted to know your opinion about this post re: Indian Media.

        My apology for calling your name. Vinavu has nothing to do with it.

        //இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மற்றவர்களை வம்புக்கிழுத்து வாழப்போகிறீர்களோ.//

        This is absolutely an unnecessary comment you made about me. You may be a perfect human being. Good for you. I have to aknowledge that I am not perfect. But, it is way too much that you are talking about my attitude over this frivolus issue.

  9. //ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி கிரிக்கெட் இப்படி பேசு பொருளாக இருப்பது இந்தியாவின் இழிந்த நிலையையே காட்டுகிறது. அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளை விட கிரிக்கெட் பிரச்சினை முக்கியமான ஒன்றாக இருப்பது எந்த விதத்திலும் நல்லதல்ல//

    கசப்பான ஆனால் நிஜமான உண்மை!

  10. //ஈழத்தின் மீதான இறுதிப்போரை அதன் அழிவைப் பற்றியெல்லாம் தேசிய விவாதம் நடத்தாத இந்திய ஊடகங்கள் இந்த ஒரு ரன்/நோ பால் பிரச்சினையை பற்றி மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? //
    Leave other news channels boss, why these tamil news channel dogs doesnt speak about this?? ஒரு வேளை பொலப்பு கெட்டுடும்னு பயமா, இல்ல தலைவர் கோவிச்சுச்குவர்னு பயமா??

  11. போர் கடைசி நாட்களில் திருநெல்வேலியில் சீமான் பேசும் போது இலங்கைக்கு கிரிக்கெட் விளையாடப்போகும் இந்திய அணியையும் தமிழக கிரிக்கெட் ரசிகர்களயும் மிகக்கொச்சையாக விமர்சித்து அதற்கான ஏராளனமான கிரிக்கெட் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டவர் தான் “சீமான்”. அதன் பிறகு இன்று வரை தான் பேசிய பெரும்பான்மையான மேடைகளின் இது குறித்து விமர்சித்துப் பேசியிருக்கிறார். வினவு அந்த பேச்சுக்களையெல்லாம் காணவில்லை என்றால் மீண்டும் “நாம் தமிழர்” தோழர்களிடம் கேட்டு வாங்கி காணொளியைப் பாருங்கள். தெருவில் இறங்கி போராடுபவர்களை “சூறாப்புலிகள்” என்று கொச்சைப்படுத்தாமல் உங்கள் விமர்சனங்களை பதிவு செய்தாலே போதுமானது. காகிதப்புலியைப்போல இணையதளப்புலியாக இருக்கும் ” வினவு” இந்திய அணி இலங்கை செல்லும் போது விமான நிலையத்தில் சென்று மறித்து ஒரு போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்துங்கள். வேண்டுமானால் நாம் தமிழர் தோழர்களும் வந்து போராட்டத்தை வலுப்படுத்துவார்கள். கொச்சைப்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒன்று பட்டு செயல் படுங்கள். நாம் தமிழரை கொச்சைப்படுத்தும் உங்கள் உள் நோக்கம் என்ன?

    • //உங்கள் விமர்சனங்களை பதிவு செய்தாலே போதுமானது. காகிதப்புலியைப்போல இணையதளப்புலியாக இருக்கும் ” வினவு” இந்திய அணி இலங்கை செல்லும் போது விமான நிலையத்தில் சென்று மறித்து ஒரு போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்துங்கள். வேண்டுமானால் நாம் தமிழர் தோழர்களும் வந்து போராட்டத்தை வலுப்படுத்துவார்கள். கொச்சைப்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒன்று பட்டு செயல் படுங்கள். நாம் தமிழரை கொச்சைப்படுத்தும் உங்கள் உள் நோக்கம் என்ன?//

      வாங்க தம்பி… (நாம் தமிழர் இயக்கம் என்பதால் தம்பி என்ற சொல் பிடிக்கும் என்று ஒரு நம்பிக்கை)

      தெருவில் இறங்குவது, இணையத்தில் உளாத்துவது இரண்டில் நீங்களே சூறப்புலிகளாய் இருந்து கொள்ளுங்கள். அதற்காக விமர்சனம் செய்யக் கூடாது என்று எதுவும் இருக்கிறதா என்ன? நாம் தமிழரின் நடவடிக்கைகளில் உள்ள தவறுகளை விமர்சனம் செய்தால் இதெல்லாம் வருகிறது….

      • தம்பி என்று அழைத்ததற்கு நன்றி . //அதற்காக விமர்சனம் செய்யக் கூடாது என்று எதுவும் இருக்கிறதா என்ன?//

        “சூறாப்புலிகள்” என்று கொச்சைப்படுத்தாமல் உங்கள் விமர்சனங்களை பதிவு செய்தாலே போதுமானது.

        கொச்சைப்படுத்துவதன் நோக்கம் என்ன? கருத்து செறிவு மிக்க விமர்சனங்கள் எப்பொழுதும் வரவேற்கப்படுகிறது.

    • poi today iniyan pattri eluthungal

      avar ungala mathuri oru THALIT thaan

      -vanniyan

      irunthalum nangal elllam ore kulaam anal communist illla

  12. பந்து சிறப்பாக வீசப்பட்டிருக்கிறது. எனினும் ”இன்று” இந்தப் பந்துக்கு “ஒய்ட்” கொடுக்கக் கைதூக்கத் தொடங்கிய தருணத்தில்
    ”ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி கிரிக்கெட் இப்படி பேசு பொருளாக இருப்பது இந்தியாவின் இழிந்த நிலையையே காட்டுகிறது. அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளை விட கிரிக்கெட் பிரச்சினை முக்கியமான ஒன்றாக இருப்பது எந்த விதத்திலும் நல்லதல்ல” ..
    என்று அது எடுத்த ஸ்விங் காரணமாகத் தயக்கத்துடன் கையை இறக்கிக்கொண்டேன்.
    சில நாட்கள் முன்னதாகவே இதுபற்றிப் பேச்சு அடிபட்டாலும், அணுசக்தி இழப்பீட்டு மசோதாவை இந்த மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றத் தீர்மானித்து அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் கொடுத்துவிட்ட செய்தியையும், அது பற்றிய தினமணியின் சிறந்த தலையங்கத்தையும் பார்க்கவும். அது கருதியே “இன்று” என்று மேலே குறிப்பிட்டுள்ளேன்.
    பரபரப்பு, பரவசச் செய்திகளிடையே புதைக்கப்படும் பாரதூரமான விசயம் அது.

  13. very good article but i thing ur comment on nam tamilar should have been avoided. because you also did not do anything much when srilangan president rajapakse came to india.

  14. போராட்ட முன்னறிவிப்பு : சண்ரைஸ் கலந்துரையாடல்

    மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் மருதையனின் போராட்டம் தொடர்பான உரையும் ஒலிபரப்பாகும்.

    http://inioru.com/?p=16351

  15. /*அசின், கருணாஸ் போன்ற நடிகரெல்லாம் இலங்கை சென்றதை எதிர்க்கும் சீமானின் “நாம் தமிழர்” போன்ற சூரப்புலிகள் இந்திய அணி இலங்கை சென்றதை ஏன் எதிர்க்கவில்லை என்று தெரியவில்லை. ஒருவேளை எதிர்த்திருந்தால் அதை நாம் தமிழர் தொண்டர்களே எதிர்த்திருப்பார்களோ என்னமோ? ஏனெனில் மற்ற எல்லாவற்றையும் விட கிரிக்கெட் மிகப்பெரும் மதமாயிற்றே? */

    தோழரே நீங்களும் அவர்களும் களத்தில் இறங்கி போராடும் போராளிகள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை, உங்கள் உடைய போராட்டத்தில் மாற்றம் இருக்கலாம், ஆனால் ஒற்றுமையில் அல்ல. நட்பு பாராட்டுங்கள், சீமான் அரசியலுக்கு புதியவர் தவறை உணர்த்துங்கள்.

  16. Tamilians do not have any unity. So Tamilians cannot achieve anything. If you put 5 Tamilians in one room they will not agree on anything. Nothing gets done. It is a waste of time to write the blog abt Eelam Tamilan or Tamilnattu Tamilan. Atleast you start some business and become economically strong. That would be the only best thing you can do to Tamil inam.

  17. your communist leader in Cuba Mr. Fedal Castro….Also support the genoside in Sri Lanka….Did you mention this information anywhere in you r

    “pudhiya Jananayagam”?
    “PUDHIYA Kalaacharam”?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க