முகப்புகொள்ளை போகும் இந்திய வளங்கள்
Array

கொள்ளை போகும் இந்திய வளங்கள்

-

“வேதாந்தா” முறைகேடு: கொள்ளை போகும் இந்திய வளங்கள் ?

பச்சை வேட்டை, காடுகள் வேட்டை, மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரில் ஒரிஸ்ஸா, சதீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டு அங்கு பல்லாண்டுகளாக வசித்து வரும் பழங்குடியினரை துரத்தி பாக்சைட், இரும்பு, அலுமினியம் போன்ற கனிம வளங்களை மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இந்திய அரசு சட்ட விரோதமாக அனுமதித்து வருகிறது என தொடர்ந்து வினவு தளத்திலும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களிலும் எழுதப்பட்டு வருவது இந்த தளத்தின் வாசகர்களுக்கு நன்கு தெரியும். இந்த மாநிலங்களிலெல்லாம் வேதாந்தா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை திரட்டி தன்னெழுச்சி போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கிறது.

சில ஆங்கில நாளிதழ்கள் வேதாந்தாவிற்கும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும் உள்ள உறவுகளையும், மாவோயிஸ்ட் அழிப்பு என்ற பெயரில் மனித வேட்டை நடைபெற்றுவருவதையும் சுட்டிக் காண்பித்திருந்தன.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய திட்டக் குழுவின் உறுப்பினர் திரு என்.சி.சாக்சேனா என்பவர் தலைமையில் 4 நபர்கள் கொண்ட குழு ஒன்றினை மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தினால் நியமிக்கப்பட்டு வேதாந்தாவின் சுரங்க திட்டங்களின் மீதான விசாரணை மேற்கொள்ள பணிக்கப்பட்டது.

17-08-2010 காலை ஆங்கில செய்தித்தாள்களில் “வேதாந்தா சுரங்க திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடு” திரு சாக்சேனா தலைமையிலான குழு அறிக்கை மூலம் தெரிய வந்தது என செய்தி.  ஆனால் இந்த செய்தி எந்த தமிழ் செய்தியிலும் வெளிவரவில்லை.  மாறாக முப்பதாயிரம் கோடி ஊழல் என சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் காமன் வெல்த் விளையாட்டு ஊழலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பது போல் ஒரு புறம் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி சிரித்துக் கொண்டு மறுபுறம் இந்த விளையாட்டிற்கான கொள்கை பாடலை இசைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு என்ற அவர் பக்கத்தில் நின்று சிரித்துக் கொண்டு புகைப்படத்துடன் செய்தி, இங்கொன்றும் அங்கொன்றுமாக சில விபத்துச் செய்திகள், மனித உறவு முறைகேடுகளைச் சொல்லும் செய்திகள், வழக்கம் போல் உயர்நீதிமன்றம் 40 வருடமாக போராடிக் கொண்டிருந்த ஒரு பென்சன் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்த தீர்வு, இலவச தொலைக்காட்சி பெட்டிகள் தமிழக அரசு வழங்கியதில் தவறொன்றுமில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு, தஞ்சை ராஜராஜன் விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு மற்றும் இன்னபிற சினிமா செய்திகளோடு அப்பாவி தமிழர்களின் வாழ்வு துவங்கியது.

வேதாந்தா சுற்றுப்புற சூழல் விதிகள், காடுகள் சட்டம் ஆகியவற்றை முற்றிலுமாக தனது சுரங்க திட்டத்தில் பின்பற்றவில்லை என்றும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக இரண்டு வகை பழங்குடியினரின் வாழ்வினை பாழடித்தது இந்த தேசத்தின் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உடைத்தெறிவதாக அமைகிறது என நிபுணர் சாக்சேனா அறிக்கை கூறுகிறது.  இது குறித்து செய்தியாளர்கள் மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தின் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை கேட்ட போது 10 நிமிடங்களுக்கு முன்பாகத்தான் மேற்படி நிபுணர் குழு அறிக்கை எனக்கு வந்தது.  இந்த நாட்டில் துரதிருஷ்டவசமாக ஒரு முறை உள்ளது.  அதாவது ஏதேனும் ஒரு பெரிய தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அதிலிருந்து தப்புவதற்கு ஒரு ஜன்னல் “அபராதம் செலுத்து – செல்” என்கிற வகையில் திறந்திருக்கிறது என்றார்.  மேலும் தவறு நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.  இதோடு இந்த நாடகத்தின் காட்சிகள் முடிவுற்றுவிடும்.  மக்களும் நாளை காலை இதை மறந்திருப்பார்கள்.  இந்த நிபுணர் குழு விசாரணை, அவர்கள் சில தவறுகளை சுட்டிக்காட்டுவது என்பதெல்லாமே வேதாந்தா நிறுவனத்தின் மீது பெரிய அளவில் மக்கள் எழுச்சி வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காக அரசே திட்டமிட்டு நடத்தும் நாடகமே.

இப்படி ஒரு புறம் செய்தியிருக்க அதே செய்தித்தாளில் கைரன் இந்திய என்கிற பெரிய பன்னாட்டு எண்ணை வள நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை 960 கோடி லாடருக்கு வாங்குவதாக வேதாந்தா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்றொரு செய்தி.  அதைப்பற்றி எழுதிய டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் மறைமுகமாக இப்படி நாட்டின் எண்ணை வளத்தின் பெரும் பகுதியை ஒரு பன்னாட்டு நிறுவனம் வாங்க அனுமதிப்பது என்பது இந்த நாட்டின் பாதுகாப்பிற்கே குந்தகம் விளைவிப்பதாக அமைந்துவிடும் என்கிறது.

ஆனால் இதைப்பற்றியோ அல்லது, சாக்சேனா குழு கூறியுள்ள குற்றச்சாட்டுக்களைப்பற்றியோ சிறிதளவும் கவலைப்படாமல் வேதாந்தா நிறுவனம் தனது பத்திரிகை செய்திக் குறிப்பில் நாங்களும் மற்றொரு பன்னாட்டு அமைப்பான சீசா கோவா என்ற நிறுவனமும் சேர்ந்து 665 கோடி டாலர் மதிப்பிற்கு கைரன் இந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டினை கைப்பற்றும் அளவிற்கு பங்குகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் என தைரியமாக அறிக்கை விடுகிறது.  இந்த வரத்தக பரிமாற்றமெல்லாம் இந்திய அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட வேண்டும். இருக்கவே இருக்கிறார்கள் உலக வங்கி நாயகர்கள் மன்மோகன் சிங், மான்டேக் சிங் அலுவாலியா, உள்துறை சிதம்பரம் போன்றவர்கள் என்கிற நம்பிக்கையில் இத்தகைய திமிரான அறிக்கையை வேதாந்தா வெளியிட்டிருக்கிறது.

சரி இந்த கைரன் இந்தியா என்ற நிறுவனம் யார் என பார்ப்போமானால்- அதுவும் இந்த நாட்டின் எண்ணை வளங்களை சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கிற பன்னாட்டு நிறுவனமே.  இதன் தலைவர் சர் பில் கேம்மல் என்கிற அயல்நாட்டவர் என்பதோடு இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுமத்தில் (போர்டு டைரக்டர்கள்) உள்ள பெரும்பான்மையினரும் அந்நிய நாட்டவரே.

இந்த நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்குமுள்ள உள்ள மகிழ்ச்சியான உறவுகளை மேற்கண்ட புகைப்படங்கள் பறைசாற்றும்.  ஓஎன்ஜிசி என்று சொல்லப்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமான எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கழகம் இந்திய கடற்பகுதிகளில் 30 சதவீத எண்ணை பேசின்களையும் இந்த கைரன் இந்தியா என்கிற பன்னாட்டு நிறுவனம் 70 சதவீத எண்ணை பேசின்களையும் கைவசம் கொண்டிருக்கிறது என்றால் இதன் செல்வாக்கை புரிந்திருப்பீர்கள்.  குஜராத் கடற்பகுதியில் இந்த கைரன் இந்தியா 150 எண்ணை கிணறுகளையும், 3111 சதுர கிலோமீட்டர் அளவிலான எண்ணை பேசினையும் தன்னகத்தே கொண்டது.

அதே போல் மன்னார் வளைகுடா கடலில் சுமார் 1450 சதுர கி.மீ, பரப்பளவிலான எண்ணை பேசினை தன்வசம் கொள்ள ராஜபக்ஷேயுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

காடுகளை அழித்து இந்தியாவின் பாக்சைட், இரும்பு தாது, அலுமினியம் போன்ற கனிம வளங்களை கொள்ளை கொண்டுபோகிறது வேதாந்தா நிறுவனம் என்கிற விமர்சனங்கள் பலமாக எழுந்து அதில் தற்போது தற்காலிகமாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால், நாட்டின் கனிமவள சுரண்டலை தற்காலிகமாக நிறுத்திவைத்து எண்ணை வளங்களை சுரண்ட முனைந்துள்ளது வேதாந்தா.  இது குறித்து இரண்டு நிறுவனங்களும் அனுமதி கேட்டு வரட்டும் நாங்கள் கவனமாக இருப்போம் என இன்று இந்தியாவின் ஓட்டுப்பொறுக்கி அமைச்சர்களும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளும் தெரிவித்திருக்கும் அறிக்கைகளை நம்ப முடியாது.  இப்படி ஒரு அறிக்கை என்றால் எங்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்ட அறிக்கையாகவே கருத வேண்டும்.

இத்தகைய நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சம் விளைவிக்கிற, நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கிற வேதாந்தா, கைரன் இந்தியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து மக்கள் ஒன்றிணைந்து போராடி நாட்டை மீட்க வேண்டிய தருணமிது.

__________________________________
-சித்திரகுப்தன்-
__________________________________

தொடர்புடைய பதிவுகள்

 1. “வேதாந்தா” முறைகேடு: கொள்ளை போகும் இந்திய வளங்கள் ? | வினவு!…

  தனியார் நிறுவனத்திற்காக பழங்குடியினரின் வாழ்வை பாழடித்தது தேசத்தின் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உடைத்தெறிவதாக அமைகிறது என நிபுணர் சாக்சேனா அறிக்கை கூறுகிறது….

 2. தோழர் முன்பே இதை பார்வைக்காக அனுப்பி இருந்தார். சுருக்கமாக தெளிவான பார்வை.

  இந்த பதிவுக்கு நண்பர் அதியமான் என்ன சொல்கிறார் என்பதை நான் கவனிக்க ஆவலாய் உள்ளேன்.

  என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?

  பாடல் மனதில் ஒலித்துக் கொண்டுருக்கிறது.

  புரிந்து மறந்து போய்விடக்கூடியவர்கள் மக்கள்.
  புரிந்தும் சுய லாபத்துக்காக காசாக்க நினைப்பவர்கள் அரசியல் வியாதிகள்.

  நன்றி சித்ரகுப்தன்.

  • ///இந்த பதிவுக்கு நண்பர் அதியமான் என்ன சொல்கிறார் என்பதை நான் கவனிக்க ஆவலாய் உள்ளேன்.///

   என்னங்க இப்படி சொல்லிட்டீங்க??
   வினவு மற்றும் நக்சல் கும்பலின் பிரச்சாரத்திற்க்கு நீங்களும் பலியாகலாமா? ன்னு தான் கேட்பாரு சுட்டிகள் கொடுப்பாரு.. வேற என்னத்த அவர்கிட்ட எதிர்பாக்குறீங்க??

   @அதியமான்,

   நான் மற்றும் தோழர்கள் கேட்கும் போது போலி ஐடி, முகமுடி என்றெல்லாம் பீலா விடுவீங்களே… இப்ப கேட்குறார் பதில் சொல்லுங்களேன்! முன்பு ம.சி கேட்டதற்க்கும் பதில் இல்லை…

   என்ன பண்றது! நம் ராஜ தந்திரமெல்லாம் வீனாய் போய்விட்டதே!! 🙂

   • அதியமானின் மொழி ஐ.ஐ.டி. மாதிரி பெரிய படிப்பு படிச்சவங்களுக்கு தான் புரியும், அவங்க தான் உண்மைய புரிஞ்சுக்குவாங்கன்னு யாரோ சொன்னாங்க பா…..

    ஆனா, அதியமான் பாவம், புரிஞ்சுகிறவங்கள்ல முக்காவாசிபேர் இந்தியாவுல இருக்க மாட்டானுங்க!

    என்ன அதியமான் இதுக்கு ஏதாவது திட்டம் ”கிட்டம்” வெச்சிருக்கீங்களா?

 3. நல்ல கட்டுரை சித்ர குப்தன். இன்னும் எங்காவது கனிம வளம் இருக்கிறதா என ஆராய்ச்சியாளன் கண்டு பிடிப்பான். இந்திய அரசு அதை பன்னாட்டு நிறுவனத்திற்கு விற்கும். இன்னும் சில காலம் சென்றால் இந்தியாவில் இந்தியர்கள் இருக்க முடியாது. இருந்தாலும் கொத்தடிமைகளாக மட்டுமே.

 4. Cairn is the company that found the Oil in the Indian soil. No Indian company found the oil. So a foreign company should spend and put all the resources to fiind the oil and you will call them exploiters of Indian property. Indian people are only living in India but not working to use the resources of the soil

 5. Vinavu,

  Already there was an article in The New Indian Expres by Mr.Devasahayam-Retd IAS about P.Chidambaram that he is ONE OF THE DIRECTORs in VEDANTA and Earlier he has appered in cases for VEDANTA.

  VINAVU I request you to closely watch for articles in THE NEW INDIAN EXPRESS as well as THE INDIAN EXPRESS(New Delhi edition!) .They give very lively and real news.You can acees their sites just by having an log in ID and password.

  The rich bauxite ores of Chattisgarh,orissa,Jharkhand are kept at stake; Meanwhile there are reports that the MAOSISTs are also getting a CUT in the entire transaction !

 6. சித்ரகுப்தன்

  வினவு தளத்தில் வரக்கூடிய தெளிவான பார்வை உள்ள அத்தனை பதிவுகளுக்கும் போடக்கூடிய ஓட்டுகளும் மறைமுகமாக வெளியே காட்டிக் கொள்ளாமல் தங்கள் ஆதரவை தெரிவிக்கக்கூடியவர்கள்.

  சிலவற்றுக்கு விமர்சனம் அதிகமாக வரும். கூடவே சச்சரவும்.

  ஆனால் உங்கள் கருத்துக்கள் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் நல்ல ஆதரவு கிடைத்ததில் எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி.

 7. காட்டை நாசமாக்கிட்டானுங்க. இப்போது கடலை நாசம் பண்ணப்போறாங்களா ?

 8. Cairn invests in oil exploration and there is a risk in that. Oil exploration and extraction needs huge investments and there is no guarantee that the yield would be worth the investment as oil prices flucuate.Sesa Goa is owned by Vednata Resources and is not a MNC from outside India.Vedanta Resources is an Indian MNC and Anil Agarwal is a Non-Resident India. If you are bothered about one company acquiring another company then the issue is whether it affects public interest.How acquiring Carirn interests in India affects the public indnterest.Cairn is a listed company in India with public holding shares
  and its shares are listed in stock exchanges.

 9. நல்ல பதிவு.மக்கள் கலை இலக்கியக் கழகம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு மீண்டும் அடிமை ஆகி வருகிறது என்று செய்து வரும் பிரச்சாரம் இன்றுதான் மக்களுக்குத் தெரியும் நிலை உருவாகியிருக்கிறது.இந்திய மக்கள் இனி பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து ஒரு சுதந்திரப் போரைத் தொடங்க வேண்டியிருக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க