முகப்புகருணாநிதியின் 'அற'வழியும் மார்க்சிஸ்ட்டுகளின் அசட்டு வழியும் !!
Array

கருணாநிதியின் ‘அற’வழியும் மார்க்சிஸ்ட்டுகளின் அசட்டு வழியும் !!

-

தானைத்தலைவர், தமிழ்த்தாயின் தலைமகன், முன்னவர், மூத்தவர், முதல்வர் டாக்டர் கலைஞர் மார்க்சிஸ்டுகள் மீது வெறுப்பையும் சத்துணவு ஊழியர்கள் மீது நெருப்பையும் கக்கியிருக்கிறார். பணி நிரந்தரம் கோரி சத்துணவு ஊழியர்கள் அறிவித்த கோட்டை முற்றுகைப் போராட்டம்தான் அவரது வெறுப்புக்கு காரணம்.

“கம்யூனிஸ்டுகள் நடத்தும் கிளர்ச்சி எதுவாயினும் அதற்கு ஒரு போர்க்கள முத்திரையை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள். பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள். அதற்கடுத்து மறியல் என்பார்கள். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகை என்பார்கள்… அவர்கள் வைத்த கொள்ளிதான் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதல், அராஜகம், உயிர்ப்பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரிகிற காட்சியைப் பார்க்கிறோம்…”

“அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக போர்முனைக்கு வாருங்கள் என்று திமுகவோ, திகவோ ஒரு போதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தினாலும் அதற்கான கிளர்ச்சியை அமைதியான முறையில் அறவழியில் நடத்தி பழக்கப்பட்டவர்கள் நாங்கள்” என்று சொல்லியிருக்கிறார் கலைஞர்.

தட்டிக் கேட்க ஆளில்லைன்னா அண்ணன் சண்டப்பிரசண்டன்தான். அறவழி தவிர “பிறவழி” எதுவுமே தெரியாத தலைவரின் வாரிசுக்கு எதற்கு தளபதி பட்டம்? எதற்கு இந்த போர்க்கள முத்திரை? எந்த தலையானங்கனத்தின் செறுவென்ற செழியன் அவர்?

திக வுல இருக்கும் போது அண்ணாத்துரைக்கு பேரும் தளபதி அண்ணாதான். “உங்க தளபதி எங்கய்யா படை நடத்துறாரு?” ன்னு எம்.ஆர்.ராதா அன்று கேலி செய்தார். திக விலிருந்து விலகி திமுக ஆரம்பிச்சதும் “தளபதி” அப்டியே “அறிஞர்” ஆயிட்டாரு. நாளைக்கு ஸ்டாலின் முதல்வர் ஆனதும் அடுத்த தளபதி உதயநிதியாக இருக்கும்.

போராட்டத்துக்கு போர்க்கள முத்திரை குத்துகிறார்களாம் கம்யூனிஸ்டுகள்! அதுவாவது பரவாயில்லை. மத்தியான சாப்பாட்டுக்கப்புறம் 3 மணி நேரம் தூங்கி, வீங்கின மூஞ்சிக்கு ரோஸ் பவுடர் போட்டு, மீசைக்கு மை தடவி, ராத்திரி பொதுக்கூட்டத்துல வந்து வாய்ச்சிலம்பம் ஆடுற அண்ணன், தம்பியெல்லாம், தம் பேருக்கு முன்னால தளபதி, பிரிகேடியர், அவில்தார், சுபேதார்னு எதுனா ஒரு போர்க்கள முத்திரையை  குத்திக்கொண்டு திரிகிறார்களே, அறவழி அண்ணன் அதுக்கென்ன சொல்கிறார்?

தம்பி பேரு தளபதியாம் அண்ணன் அஞ்சாநெஞ்சனாம். ஆனா அவுக வழி மட்டும் அறவழியாம். அஞ்சாநெஞ்சன் மதுரையில நடத்தற கட்டப்பஞ்சாயத்தெல்லாம் அறவழியில்தான் நடக்கிறதோ?

திமுகவுக்கு அறவழியத் தவிர “பிறவழி” எதுவும் தெரியாதாம். உடன்பிறப்புகளின் அறவழிப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் இதயம் வெடித்துத்தான் அண்ணன் தா.கிருஷ்ணனும் லீலாவதியும் தற்கொலை செய்து கொண்டார்களோ? மதுரை தினகரன் ஆபீசில் மேயர் தலைமையில் போலீசு அதிகாரிகள் முன்னிலையில் அட்டாக் பாண்டி ஒரு போராட்டம் நடத்தினாரே, அதுவும் கூட அறவழிப் போராட்டம்தானா? அறவழிப் போராட்டத்தின் விளைவாக 3 பேர் உயிர் விட வாய்ப்பில்லை என்பதனால்தான் நீதிதேவன் எல்லோரையும் விடுதலை செய்து விட்டாரோ?

திமுக வின் உட்கட்சி தேர்தல் ஒவ்வொண்ணுலயும் கழக உடன்பிறப்புகள் கையில் தக்கிளியும் பஞ்சும் வைத்துக் கொண்டுதான் திரிகிறார்களோ? திருச்சி கிளைவ் ஆஸ்டல் தாக்குதல், சிம்சன் தொழிலாளிகள் மீதான தாக்குதல், அண்ணாமலைநகர் உதயகுமார் படுகொலையில் தொடங்கி, சமீபத்தில் செட்டிநாட்டரசருக்காக 3 வெளிமாநில மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கொலை செய்யப்பட்டது வரை அத்தனையும் அறவழிப் போராட்டங்கள்தானோ!

“சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் கேட்டு கோட்டையை முற்றுகையிடுவார்கள், நாங்கள் இவர்கள் படைக்கு முரசு கொட்டி வரவேற்பு வழங்க வேண்டுமா?” என்று கேட்கிறார் கருணாநிதி. பதவிப் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு குடும்பத்தோடு சோனியா வீட்டுக்குப் படையெடுத்தாரே தலைவர், அது முற்றுகைப் போராட்டம் இல்லையா?

சன் டிவி, கலைஞர் டிவி, கேபிள் நெட்வொர்க், சினிமா கொட்டகைகள், கலாநிதி, தயாநிதி, உதயநிதி மற்றும் பிற நிதிகளின் சினிமாக் கம்பெனிகள், சிமென்டு கம்பெனிகள், சாராயக் கம்பெனிகள், ரியல் எஸ்டேட், மந்திரி பதவிகள் என்று திருக்குவளைக் குடும்பம் தமிழகத்தையே முற்றுகையிட்டிருக்கிறதே இது முற்றுகையில்லையா?

இதெல்லாம் அற வழியாம். சத்துணவு ஊழியர்களின் போராட்டம் அறம் கொன்ற வழியாம்!

அரசுக்கு எதிராக எப்ப போராட்டம் நடத்தினாலும் அமைதியாக அறவழியில்தான் திமுக போராடுமாம். அதென்னமோ உண்மைதான். அதிகாரத்தில் அம்மா அமர்ந்திருந்த சூழ்நிலையில், அடிவாங்கும் வாய்ப்பு அதிகம் என்பதால் அந்த மாதிரி நேரத்திலெல்லாம் அண்ணன் காட்டும் வழி அறவழிதான். “தலையையே எடுப்பேன்” என்று வேதாந்தி மிரட்டினாலும், “மண்டை போனால் போகட்டும் உடன்பிறப்பே, மகுடம் முக்கியம்” என்று மவுனம் காத்தாரே கலைஞர், அப்பவும் அறவழிப் போராட்டம்தான். அவ்வளவு ஏன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல் எந்த எடுபட்ட காங்கிரசுக்காரன் கழகத்தலைவரின் முகத்தில் காறித்துப்பினாலும் கலைஞருக்கு கோபம் வராது. அடுத்த தேர்தல் முடியும் வரைக்கும் அண்ணன் வழி அறவழிதான்.

ஆனால், சத்துணவு ஊழியர்கள், மாஞ்சோலைத் தோட்டத்தொழிலாளிகள், ஸ்ரீபெரும்புதூர் மக்கள் போன்ற இளித்தவாயர்கள் போராடும்போது மட்டும் கதை வேறு. பாராளுமன்றத்தில் பேசவே முடியாத அழகிரிக்கு முழு சம்பளம். அவர் முழுநேரப் பணியாளர். அடுப்பு ஊதும் சத்துணவுப் பணியாளருக்கு அரைச் சம்பளம், தொகுப்பூதியம். ஏனென்றால் இவர்கள் பகுதிநேரப் பணியாளர்கள்.

உலக முதலாளிகள் உடல் நோகாமல் வந்து இறங்குவதற்கு இவர்கள் இன்டர்நேசனல் ஏர்போர்ட் கட்டுவார்கள். அதற்காக உள்ளூர் தமிழர்களெல்லாம், மாடு கன்று மரம் மட்டை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பாயைச் சுருட்டிக் கொண்டு “யாதும் ஊரே யாவரும் கேளிர்”னு செம்மஞ்சேரிக்கோ கம்மஞ்சேரிக்கோ கிளம்பிவிடவேண்டும். இல்லாவிட்டால் அடித்து உரித்து விட்டு அப்புறம் அறவழியை வலியுறுத்தி இப்படி ஒரு அறிக்கை விடுவார் கருணாநிதி.

காந்தி நேரு ரேஞ்சில் விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட திருவுருவமாக தமிழ்நாடே தன்னைக் கொண்டாடவேண்டும் என்பது முதியவர் கருணாநிதியின் ஆசை. அவர் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் பிம்பத்தின் மீது சத்துணவு ஊழியர் மாதிரி சாதாரண ஆட்கள் லேசாக உரசி விட்டால் போதும், உடனே “எனக்கு இன்னொரு பேரு இருக்கு” என்று பாட்சா கருணாநிதியின் குரல் அவருக்கே தெரியாமல் வெளியே வருகிறது.

பள்ளிப் பிள்ளைகளுக்கு ஒருநாள் சோறு போடத் தவறிய குற்றத்துக்காக நூறுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை தற்காலிகப் பணிநீக்கமும் செய்திருக்கிறார் கருணாநிதி. அப்பனுக்கு சாராயம் ஊற்றிக் கொடுக்கத் தவறினாலும் குற்றம், பிள்ளைக்கு சத்துணவு போடத் தவறினாலும் குற்றம்! மனுநீதிச் சோழன் அரசாட்சியா கொக்கா?

____________________________________________________________________

இந்தப் போடு போட்ட பிறகாவது மார்க்சிஸ்டுகளுக்கு கோவம் வராதா, கருணாநிதியை நறுக்காக நாலு கேள்வி திருப்பிக் கேட்கமாட்டார்களா என்று ஆவலுடன் நேற்றைய நாளிதழைப் புரட்டினால், கருணாநிதிக்கு தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் மார்க்சிஸ்டு செயலர் இராமகிருஷ்ணன்.

மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளின் வன்முறையை எதிர்த்து மார்க்சிஸ்டு கட்சி போராடிக் கொண்டிருக்கிறதாம். மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் மம்தா பானர்ஜியை கருணாநிதி கண்டிக்கவில்லையாம். போராட்டத்தை கருணாநிதி திசை திருப்புகிறாராம். சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவேண்டுமாம். இதுதான் ராமகிருஷ்ணனின் அறிக்கை.

“முதல்வரின் கருத்து துரதிருஷ்டவசமானது. முதல்வர் இனிமேல் இத்தகைய தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கோவையில் பேசியிருக்கிறார். வலது கம்யூ தலைவர் ஏ.பி.பரதன்.

அடி வாங்கினவன் பேசுகிற பேச்சு மாதிரியா இருக்கிறது? அடடா, எப்பேர்ப்பட்ட அரசியல் நாகரிகம்! இப்படிப்பட்ட அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்கச் சொல்லித்தானே கலைஞர் கரடியாக கத்துகிறார்.

வலது, இடது கட்சிகளின் அணிகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. வாங்க வேண்டிய அடியை வாங்கியாகிவிட்டது. திருப்பி அடிக்க முடியாவிட்டாலும், நச்சென்று நாலு கேள்வியாவது திருப்பிக் கேட்டிருக்கலாம்.

அப்படி ஒரு கோபம் மார்க்சிஸ்டு தலைவர்களுக்கு வந்திருக்காது என்று சொல்ல முடியாது. நிலைமை அவர்களுடைய வாயைக் கட்டியிருக்கிறது. 80 களில் எதைக்கேட்டாலும் வங்கத்தைப் பார் என்பார்கள். இப்போது வேறு எந்தக் கட்சிக்காரனாவது வங்கத்தைப் பார் என்று பேச ஆரம்பித்தால் இவர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கிறது. மேற்கு வங்கத்தில் தொகுப்பூதியம் கொடுத்துக்கொண்டு இங்கே வந்து பணி நிரந்தரம் கேட்கிறாயா என்று மடக்குகிறார் கருணாநிதி. “சிறுதாவூர் சீமாட்டியை முதல்வராக்குவதுதான் உங்கள் நோக்கம்” என்று சீண்டுகிறார். இதுக்கெல்லாம் மார்க்சிஸ்டுகள் ஆமாம்னு சொல்லவும் முடியாது. இல்லைன்னு சொல்லவும் முடியாது. “நாங்கள் மாவோயிஸ்டுகள் அல்ல” என்பது மட்டும்தான் அவர்கள் தைரியமாகச் சொல்ல முடிந்த பதில். அதை சொல்லிவிட்டார் இராமகிருஷ்ணன்.

முன்னர் ஒருமுறை ஜனசக்தி பத்திரிகையின் ஆண்டு விழாவில் பேசிய திரைப்பட இயக்கநர் வி.சேகர், “கருணாநிதி உங்களுக்கெல்லாம் ஏன் ரெண்டு சீட் – ஒரு சீட் கொடுக்கிறார் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு ஒரு கணம் பேச்சை நிறுத்தியிருக்கிறார்.

“இந்தப் புதிருக்குத்தானய்யா விடை தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று மேடையில் இருந்த நல்லகண்ணு முதல் மார்க்சிஸ்டு தலைவர்கள் வரையிலானோர் ஆவலுடன் சேகரின் வாயைப் பாத்திருக்கின்றனர். “ஏன்னா, அரை சீட்டுன்னு ஒண்ணு இல்லை. இருந்தா அதைத்தான் உங்களுக்கு கொடுத்திருப்பார்” என்று சொல்லி சிரித்தாராம் சேகர்.

_______________________________________________________________________________________________________

விக்கிரமாதித்தனின் சரியான பதிலைக் கேட்ட பின்னரும், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. முருங்கை மரத்தை வேண்டுமானால் நாம் வெட்டலாம். ஆனால் தலைகீழாய்த் தொங்கியே பழக்கப்பட்ட வேதாளத்தை நிமிர்த்துவது ரொம்ப கஷ்டம்.

_______________________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. கருணாநிதியின் ‘அற’வழியும் மார்க்சிஸ்ட்டுகளின் அசட்டு வழியும் !!…

    தம்பி பேரு தளபதியாம், மதுரையில அஞ்சாநெஞ்சனாம். ஆனா அவுக வழி மட்டும் அறவழியாம். தட்டிக் கேட்க ஆளில்லைன்னா அண்ணன் சண்டப்பிரசண்டன்தான்!…

  2. பட்டுன்னு கேட்டுபுட்டீங்க , குருணா என்ன நாக்க புடிங்கிகிட்டு சாகற ஆளா.

  3. விக்கிரமாதித்தனின் சரியான பதிலைக் கேட்ட பின்னரும், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. முருங்கை மரத்தை வேண்டுமானால் நாம் வெட்டலாம். ஆனால் தலைகீழாய்த் தொங்கியே பழக்கப்பட்ட வேதாளத்தை நிமிர்த்துவது ரொம்ப கஷ்டம்.

  4. எகிடு தகிடான நக்கல், படிச்சா கருணாநிதியும், வலது இடது தலைவர்களும் ஒன்னா நாக்கத் தொங்க விட்டுக் கொள்வார்கள்.

    சிரிப்பை அடக்க இயலவில்லை. எப்புடி இதெல்லாம்….. ஒன்னா உக்காந்து யோசிப்பீங்களோ?

  5. neenkal ketta kelvi oneukum antha allu kitta bathil irukathu… just another suggestion for Vinavu… padipathai kattilum voice and video has more power in reaching the ppl.. why dont you guys record your vidoe/voice recording of certain articles which creates much more impact/awareness among the youths…

  6. இவர் அறிக்கைக்கெல்லாம் பதில் கட்டுரை எழுத வேண்டிய அவசியம் இல்லைதான் என்றாலும், மக்கள் மறந்திருப்பார்கள் என்ற தைரியத்தில்தானே இவர்கள் இப்படியெல்லாம் புளுகுகிறார்கள். இவர்களின் யோக்கியதையை மக்களுக்கு விபரமாக நினைவூட்டிய வினவுக்கு நன்றி…

  7. //காந்தி நேரு ரேஞ்சில் விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட திருவுருவமாக தமிழ்நாடே தன்னைக் கொண்டாடவேண்டும் என்பது முதியவர் கருணாநிதியின் ஆசை//

    பின்ன??… வரலாறு ரெம்ப முக்கியம் மன்னா… வருடங்களுக்கு பின்பு உள்ள மடையர்கள்லுக்கு உண்மை தெரியவா போகிறது?

    ( அது சரி… இப்போது உள்ள மடையர்களுக்கே தெரியவில்லை)

  8. தளபதி ?
    அஞ்கசா நெஞ்சன் ? எந்தப் போரில் இவனுக
    கழித்தானுக என்பது அருமை .
    டெல்லியில் வருகைப்
    பதிவிற்கு போகாதவர்க்கு
    வக்கனையாய் பதவியும்
    பணமும் பட்டமும்
    முழுமையான பதிவு
    வாழ்த்துக்கள்

  9. மீண்டும் ஒரு மிக‌ அற்புத‌மான‌ க‌ட்டுரை! அனைத்துத்த‌மிழ‌னுட‌த்தும் சென்று சேர‌ வேண்டிய‌ க‌ட்டுரை!!

  10. //பாராளுமன்றத்தில் பேசவே முடியாத அழகிரிக்கு முழு சம்பளம். அவர் முழுநேரப் பணியாளர். அடுப்பு ஊதும் சத்துணவுப் பணியாளருக்கு அரைச் சம்பளம், தொகுப்பூதியம். ஏனென்றால் இவர்கள்
    பகுதிநேரப் பணியாளர்கள்.//

    நச்சுன்னு கேட்டுட்டீங்க வினவு. அருமை!!!

  11. என்ன வினவு .. இதெல்லாம் பார்த்து மார்க்ஸிஸ்ட் கட்சி பெரியவாளுக்கு சொரனை வரும்னு நினைக்கிறீங்களா ?..

    அதெல்லாம் இருந்திருந்தா உண்டியல் குலுக்கினு கிண்டல் பண்ணின செயலலிதாவுக்கு கூஜா தூக்குவானுங்களா? ..

    சுயமரியாதைக்கு எதிர்ப்பதம் டிக்சனரி ல தேடிப் பார்த்திங்கனா இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ன்னு போட்டிருக்கும்.

    அதே மாதிரி அயோகியத்தனத்துக்கு அர்த்தம் தேடினால் கருணாநிதி பேர் இருக்கும்..

  12. for solving all the problems you implement the plans:
    1. remove intermediates and give employment to all
    2. remove speculation on commodity market.
    3. implement land sealing.
    4. improve waterways and agriculture
    5. implement gold control
    7. all the industries share ratio should be as follows:
    promoter: 25%
    employee: 25%
    public : 25%
    govt : 25%
    8. ban lottery, race etc
    9. encourage savings

  13. ஐ .. நீங்க காரி துப்பினா .. நாங்க அசந்துடுவோமா ? அதுக்கு தான மஞ்ச துண்ட எடுக்கறதேயில்ல.

  14. இதுபோன்ற பொதுவெளியில் பதியப்படுகின்ற விமர்சனங்களை சத்தமில்லாமல் புறக்கனித்துவிட்டு, மின்னஞ்சல் குழுமங்களின் மூலமாக இதுபோன்ற கட்டுரைகளுக்கான சப்பைக்கட்டுக்களை பகிர்ந்து கொள்கின்றனர் ‘மார்க்சிஸ்டுகள்’.

    மேலும் மின்னஞ்சல்களின் மூலமாக நக்சலிசத்தின் கூறுகளை விளக்குகிறோம் என்கிற பெயரில் புனைவுகளையும் அவதூறுகளையும் தொகுத்து, தமது தோழர்கள் நக்சல்பரி அரசியலால் ஈர்க்கப்பட்டு சென்றுவிடக்கூடாது என்கிற ‘பொறுப்போடு’ தொடர்ந்து எழுதிவருகின்றனர்.

    டைஃபி என்கிற மார்க்சிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பின் மாநிலச் செயலாளர் கண்ணன் என்பவர் தொடர்ந்து நக்சல்பரி அரசியலை அவதூறு செய்து தனது வலைதளத்தில் எழுதிவருகிறார். (http://esskannan.blogspot.com)

    நந்திகிராம், சிங்கூர், லால்கார் போன்ற போராட்டங்களின் மூலம் தகவல் அறிந்த அக்கட்சியின் அணிகள், இதுகுறித்து கேள்வியெழுப்பினால் மாவோயிஸ்டு-மம்தா கூட்டணி செய்யும் மோசடி என்றும் தமது கட்சியின் ஆட்சி அப்பழுக்கற்றது என்றும் கூசாமல் புளுகுகின்றனர்.

    ஏதேனும் ஒரு தோழர் ம.க.இ.க. பற்றியோ அல்லது புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் என்ற நமது பத்திரிக்கைகள் பற்றியோ பேசினால், “அதுகுறித்தெல்லாம் பேசாதீர்கள், அப்புத்தகங்களையெல்லாம் கையில் வைத்திருக்காதீர்கள்; அது தீவிரவாதி பத்திரிக்கை. போலீசு உங்களைக் கைது செய்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல…” என்பதாக பீதியூட்டி வருகின்றனர்.

    இதையும் மீறி ஒருசில மார்க்சிஸ்டு கட்சியின் அணிகளிடையே சரியான கருத்துக்களைக் கொண்டு சேர்ப்பதோடு, அவர்களுடன் விவாதிப்பதற்கும் முயற்சி செய்யலாம் என்கிற ஆலோசனையுடன் இந்த வலைதளத்தை உருவாக்கியிருக்கிறேன்.

    போலிகம்யூனிஸ்டுகளை தெளிவாகவும் கூர்மையாகவும் அம்பலப்படுத்தும் வகையில் ஒருசில வலைதளங்களை தோழர்கள் சிலர் நடத்திவருகின்றனர். எமது இந்த தளமும் அதே வரிசையில் இடம்பிடித்திருந்தாலும், அவர்களுடன் தனிப்பட்ட முறையில் திறந்த மனத்துடன் விவாதிப்பதற்கு மேலும் ஒரு முயற்சியாகவே இருக்கும்.

    தோழர்கள் தங்களது கருத்துக்களை பின்னூட்டங்கள் வாயிலாகவும், ஆலோசனைகளை கீழ்கண்ட மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    (வினவு தோழர்களுக்கு, இப்பதிவுடன் தொடர்பில்லாத வகையில் இப்பின்னூட்டத்தை பதிவிட்டதற்கு மன்னிக்கவும். ஒரு சிறிய அறிமுகத்திற்காகத்தான் இங்கு பதிவிட்டிருக்கிறேன். நன்றி!)

    தோழமையுடன்,
    விவாதகளம்.
    மின்னஞ்சல்: letusdebate1@gmail.com

  15. வினவு தளத்தின் மேற்கண்ட கட்டுரையினை என்னுடன் தொடர்புடைய சில நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பரிந்துரைத்திருந்தேன். அதில் சி.பி.எம். கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்கிற அமைப்பின் பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களும் அடக்கம்.

    இந்த கட்டுரை குறித்த அவருடைய ‘இலக்கியத் தரம் வாய்ந்த’ பதிலையும் அதற்கு நான் அனுப்பிய பதிலையும் இங்கு பதிகிறேன்.
    ======================================

    ////////On 9/8/10, tamil selvan wrote:

    ரொம்ப சரிங்க நீங்க சொல்றது.எனக்கும் கோவம் கோவமா வருது நீங்களாச்சும்
    துப்பாக்கி எடுத்து டுப்புட்டுப்புன்னு சுடுவிங்கன்னு எதிர்பார்த்தேன்.அதுவும்
    நடக்கல.தமிழ்நாட்டை யார்தான் காப்பாத்தப்போறாங்களோ..////////

    எனது பதில்:

    தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு,

    எமது எழுத்துக்களில் நாகரீகமில்லை, இலக்கியத்தரமில்லை என்றெல்லாம்
    அங்கலாய்த்துக் கொள்வீர்கள். யாரையும் திட்டாமல் சொறிந்துவிடுவதை மட்டுமே
    மாபெரும் இலக்கியம் என்று ஆழமாக நம்புகின்ற வழக்கமுடையவர்கள்தான்
    நீங்கள். இலக்கியம் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று வரையறைகளை
    வகுத்து அதன் படி மட்டுமே சொற்களை உதிர்த்துவரும் நீங்களா இந்த மொன்னையான
    பதிலை எமக்கு எழுதுவது?

    உங்களது இந்த பதிலை, உங்கள் கட்சியைச் சார்ந்த, உங்களை நன்கு அறிந்த,
    உங்கள் மீது நன்மதிப்பு கொண்ட உங்கள் தோழர்கள் சுமார் 300 பேர் என்னுடன்
    மின்னஞ்சல் தொடர்பில் உள்ளனர். அவர்கள் முன்னிலையில் உங்களது மேற்கண்ட
    பதிலைப் பரிசீலிப்போமா?

    துப்பாக்கியை எடுத்து டுப்புடுப்புன்னு கருணாநிதியை நாங்கள் சுட்டுக்
    கொண்ணுப்புட்டா அம்மாவோடு கூட்டு சேர்ந்து அண்ணப்போஸ்ட்ல
    ஜெயிச்சிடலாமுன்னு நெனக்கிறீங்களா? எதிரியை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்;
    துப்பாக்கியால் எதிர்கொள்கிறோமா அல்லது அரசியலாக எதிர்கொள்கிறோமா
    என்பதையெல்லாம் களம்தான் முடிவு செய்யும். அது நமக்கு எதிரில் இருக்கும்
    எதிரியை ஒழுத்துக்கட்டுவதற்கான நடவடிக்கை. நமக்கு உள்ளிருக்கும் எதிரியான
    அடிமைத்தனத்தையும், ரெண்டு சீட்டுக்காக சக ஓட்டுக்கட்சிகளின் காலை
    நந்திப்பிழைக்கலாம் என்கிற பிழைப்புவாத சிந்தனையையும் துப்பாக்கியைக்
    கொண்டா ஒழித்துக்கட்ட முடியும்?

    மேடைக்கு ஒரு அரசியல், மேடையை விட்டு கீழிறங்கியதும் அதற்கு எதிரான
    நிலைப்பாடு என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் ‘மார்க்சிஸ்ட்’
    கட்சியின் பித்தலாட்ட நடைமுறையை துப்பாக்கியால் வீழ்த்த முடியாது.
    மேடைக்கு கம்யூனிசத்தையும் மேடைக்கு கீழே நடைமுறையில் பாசிசத்தையும்
    கொள்கையாக கொண்டு செயல்படுவதை, பாட்டாளி வர்க்க துரோகத்தை ஒழிப்பது
    எதிரியை வீழ்த்துவதைக் காட்டிலும் மிகக் கடினமான வேலை. அரசியல் ரீதியிலான
    விமர்சனங்கள் என்கிற தோட்டாக்கள் கொண்டுதான் அவற்றை வீழ்த்த முடியும்.
    அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.

    குறிப்பாக என்போன்றவர்கள், கட்சிக்கு உள்ளிருந்து சரிசெய்ய
    முயற்சித்தோம், முடியவில்லை. கட்சிக்கும் கம்யூனிசக் கொள்கைகளுக்கும்
    ஒட்டுமில்லை உறவுமில்லை என்பது தெளிவாகியதும் வெளியேறிவிட்டோம். என்னைப்
    போன்ற அப்பாவிகள் இன்னும் உங்கள் கட்சி கம்யூனிஸ்டு கட்சி என்று
    நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனை அம்பலப்படுத்தி அரசியல் ரீதியாக
    உங்களை முடக்குவதுதான் புரட்சியை நோக்கிய எமது போராட்டங்களில்
    ஆகமுக்கியமான பணியாகும். இடது, வலது போலிகம்யூனிசக் கட்சிகள்
    புரட்சிகர-போராட்டப் பாதையின் நடுவே படர்ந்துள்ள முட்செடிகள். அவற்றை
    வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவதன் மூலமே புரட்சியை நோக்கி
    முன்னேற முடியும்.

    எங்களது விமர்சனங்களுக்கு நீங்கள் அளிக்கும் மாபெரும் பதில் எது
    தெரியுமா? நாங்கள் பயங்கரவாதிகள், காடுகளில் திரிபவர்கள்,
    மார்க்சிஸ்டுகளை விமர்சிப்பதைத் தவிர வேறெதையும் அறியாதவர்கள் போன்ற
    முத்திரைகளைத்தான் பதில்களாகத் தருகிறீர்கள். அதைத் தவிர்த்து உங்களால்
    ஒரு சொல்லைக் கூட பதிலாகத் தரமுடியவில்லை.

    நாங்கள் முகமூடி அணிந்துகொண்டு அரசியல் நடத்தவில்லை. காடுகளில்
    மறைந்துகொண்டு பத்திரிக்கைகள் நடத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால்
    மார்க்சிஸ்ட் கட்சியை விட வெளிப்படையாக நாங்கள் செயல்படுகிறோம். எமது
    பத்திரிக்கைகளிலிருந்து துண்டுப் பிரசுரம் வரை அனைத்திலும் தொடர்பு
    முகவரிகளை அச்சடித்தே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறோம். ஆனால்,
    இன்னும் உங்களைப் போன்ற ’மாபெரும்’ தலைவர்களும், உங்கள் கட்சியின்
    பத்திரிக்கைகளும் கிளிப்பிள்ளை மாதிரி ”நாங்கள் காட்டில் திரிகிறோம்”
    என்று கூசாமல் புளுகிவருகிறீர்கள். இதில்தான் உங்கள் கட்சியின் அரசியல்
    ஓட்டாண்டித்தனம் வெளிப்படுகிறது.

    தலைமையின் தொடர்ச்சியான துரோகமும், கீழ்மட்ட அணிகளின் தளராத தியாகமுமே
    ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் அடிப்படை. தமிழ்ச்செல்வனின் பதில்கள் அவர்
    அக்கட்சியின் மிகப்பெரும் தலைவர் என்கிற அடையாளத்தைக் கொண்டிருப்பதில்
    வியப்பில்லை. வாழ்த்துக்கள்!

    முடிந்தால் நேர்மையாக பரிசீலித்து பதில் சொல்லவும். நன்றி!

    தோழமையுடன்,
    து.சுரேஷ்.

    http://letsdebate1.blogspot.com

  16. அஅனைவரும் கீழ் உள்ள பின்னூட்டத்தை அவ்சியம் படியுங்கள்.

    விவாதகளம்…

    வினவு தளத்தின் மேற்கண்ட கட்டுரையினை என்னுடன் தொடர்புடைய சில நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பரிந்துரைத்திருந்தேன். அதில் சி.பி.எம். கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்கிற அமைப்பின் பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களும் அடக்கம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க