Monday, August 15, 2022
முகப்பு உமாசங்கர் மீண்டும் பணி நியமனம் : வெற்றிதான், ஆனாலும்...
Array

உமாசங்கர் மீண்டும் பணி நியமனம் : வெற்றிதான், ஆனாலும்…

-

உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கத்தை திரும்பப் பெற்று அவரை டான்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமித்திருக்கிறது தமிழக அரசு. பேச்சுவார்த்தைக்கோ பேரத்துக்கோ சமரசத்துக்கோ பணிய மறுத்த்தால் வேறு வழியின்றி ஒரு அடி பின்வாங்கியிருக்கிறது கருணாநிதி அரசு.

உமாசங்கரின் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், அவர் எழுப்பியிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை கோரியும் கடந்த வாரம் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் 12 மாவட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த்து. கோட்டைக்கு முன் மறியல் போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்திருந்தது. மக்கள் சக்தி கட்சி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி, பசுபதி பாண்டியன் ஆகியோரும் இப்பிரச்சினை தொடர்பாகப் போராடி வருகின்றனர்.

இத்தகைய பின்புலத்தில்தான் திமுக அரசின் இந்த முடிவு வந்திருக்கிறது. இம்முடிவில் நேர்மையோ நாணயமோ கடுகளவும் கிடையாது. தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்று மறுப்பதுடன் உமாசங்கர் நிறுத்திக் கொள்ளவில்லை. ராசாத்தி அம்மாள், அழகிரி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தையும், கருணாநிதியையும், தற்போதைய தலைமைச் செயலர் மாலதி உள்ளிட்ட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் அவர் சந்திக்கு இழுத்திருக்கிறார். தொடர்ந்து அவர் தற்காலிகப் பணி நீக்கத்தில் வைக்கப்பட்டிருந்தால், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பார், பேசுவார். அவருக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரிக்குமே தவிரக் குறையாது. இவை அனைத்தையும் நிறுத்துவதற்கு தற்போது திமுக அரசு செய்யக்கூடிய ஒரே காரியம் இதுதான்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்காக இருபது ஆண்டுகளுக்கு முன் பொய்யான சாதிச்சான்றிதழ் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிகை இறுதியாக்கப்பட்டு, அவருக்கு எதிரான இலாகா பூர்வமான விசாரணை தொடங்க இருப்பதனால் உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கம் திரும்ப பெறப்படுவதாக கூறுயிருக்கிறது அரசின் உத்தரவு. (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், செப்,3) அதாவது, இது வழமையான நடவடிக்கைதானாம். மீசையில் மண் ஒட்டவில்லையாம்!

அவருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுவிட்டதா, அதில் என்ன கூறப்பட்டிருக்கிறது, அதற்கு உமாசங்கர் அளிக்கும் பதில் என்ன என்பன போன்ற விவரங்கள் இனி பொதுமக்கள் பார்வைக்கு வராது. பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற முறையில், சட்டப்படி அவர் இனி பொதுவெளியில் பேசவும் கூடாது. அந்த அளவில் கருணாநிதி அரசுக்கு நிம்மதி.

யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக, ஒரு குறிப்பிட்ட போர்க்களத்திலிருந்து பின்வாங்குவது என்ற உத்தியைத்தான் கையாண்டிருக்கிறது கருணாநிதி அரசு. இந்த வெற்றியை நாம் கொண்டாடிக் கொண்டிருக்க கூடாது. உமா சங்கருக்கு வேலை திரும்பக் கிடைத்திருக்கலாம். என்ன காரணத்துக்காக அவரது வேலை பறிக்கப்பட்டதோ அந்தக் காரணம் அப்படியே இருக்கிறது.

எல்காட் ஊழல், சன் குழுமத்தின் கிரிமினல் நடவடிக்கைகள், குவாரி ஊழல், வீட்டு வசதிவாரிய ஊழல.. என பல்லாயிரம் கோடி ஊழலில் சம்மந்தப்பட்டிருக்கும் கருணாநிதி குடும்பத்தினர், அவர்களது கூட்டாளிகளான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோர் அனைவரும் அப்படியே இருக்கிறார்கள்.

ஊழல் அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காகவும் அவர்களது ஒத்துழைப்புடன் ஆளும் வர்க்கமும் ஆளும் கட்சியினரும் பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பதற்காகவும் உருவாக்கப் பட்டிருக்கும் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்ககம் (Directorate of Vigilance and Anti Corruption) அப்படியே இருக்கிறது.

ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி கையும் களவுமாகப் பிடிபட்டாலும் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுப்பதைத் தடுத்து, திருடர்களைப் பாதுகாப்பதற்கு முதல்வர் தலைமையிலான குழு பெற்றிருக்கும் முறைகேடான (ஆனால் சட்டபூர்வமான) அதிகாரம் அப்படியே இருக்கிறது.இவற்றையெல்லாம் வெளிக்கொண்டு வந்த உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கம் மட்டுமே ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

கழுதையின் முதுகில் ஏற்றப்பட்ட சுமையை அப்படியே வைத்துகொண்டு, ஒரே ஒரு துணியை மட்டும் எடுத்து அதன் முகத்துக்கு எதிரே ஆட்டிவிட்டால், சுமை குறைந்து விட்டதாக நம்பி, சந்தோசமாகப் பொதியைச் சுமந்து செல்லுமாம் கழுதை.

இது கழுதைகளின் வரலாறு. கழுதையினத்துக்குக் கூட வரலாறு உண்டா என்று கேட்கிறீர்களா? நியாயமான கேள்விதான். தனக்கு வரலாறு இருப்பதாக சொல்லிக் கொள்ளும் இனம் கழுதையினமாக இருக்கமுடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. உமாசங்கர் மீண்டும் பணி நியமனம் : வெற்றிதான், ஆனாலும்… | வினவு!…

  பேச்சுவார்த்தைக்கோ பேரத்துக்கோ சமரசத்துக்கோ பணிய மறுத்த்தால் வேறு வழியின்றி ஒரு அடி பின்வாங்கி . உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கத்தை திரும்பப் பெற்றிருக்கிறது கருணாநிதி அரசு…

 2. //உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கத்தை திரும்பப் பெற்று அவரை டான்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமித்திருக்கிறது தமிழக அரசு//

  ரொம்ப நல்ல செய்தி தான் சொல்லி இருக்கிங்க! நன்றி வினவு நண்பர்களே!

  ———————————————–

  நண்பர்களே! மருந்தில்லா இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

  என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

  நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!

 3. மிகவும் சரியான கருத்து. இனி உமா சங்கரால் பேச முடியாது. இனி நாம் தான் உரத்து பேச வேண்டும். அடுத்து ஒரு விசயம் மதுரையில் புத்தகக் கண்காட்சியில் கீழைக் காற்று உண்டெனில், கடை எண், தொடர்பு எண் தரவும். வரும் ஞாயிறு செல்ல வேண்டும். விளம்பரமாக வந்தால் நன்றாக இருக்குமே!

 4. அவரை டான்சியில் பணியில் அமர்த்தியிருப்பதற்கும் ஏதேனும் காரணம் இருக்கக்கூடும். தேர்தல் நெருங்குகின்றது; டான்சி பூசணிக்காய் சோற்றில் இருந்து வெளியில் தெரிந்தால், கருணாநிதிக்குதான் லாபம்

 5. வினவு ஐயா:
  இது உங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல! அல்லவே அல்ல! இது பார்பபன பததிரிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி.

  பார்ப்பான் பததிரிக்கைகளிடம் இரு முறை பதவி இழந்த கருணாநிதி இப்பத்தான் புத்திசாலியாக செயல் படுகிறார். அவருக்கு இப்பத்தான் அறிவு வந்து இருக்கிறது! இப்பவாவது அவருக்கு அறிவு வந்ததிற்கு மிக மிக சந்தோசம்.

  இதே அம்மா முதல் அமைச்சர் ஆக இருந்தால் கருமிக்கும் தருமிக்கும் உங்களுக்கும் இந்த அளவு தைரியம் இருந்து இருக்குமா எதிர்த்து போராட? இருக்கவே இருக்காது.

  ஏன் இருக்காது?

  உங்களுக்கு அந்த சந்திரலேகா என்ற பாட்டை கேட்கவே நேரம் சரியாக இருந்திருக்கும்….

  • எல்லோரும் ஜெயா ஆட்சியில போராட்டம் நடத்துறீங்களே கருணா ஆட்சியில ஏன் நடத்தமாட்டுக்கிறீங்கன்னுதான் கேட்பாங்க. ஆனால் நீங்க மாத்தி கேக்குறீங்களே அம்பி.

   இறால்பண்ணை அழிப்புப் போராட்டம், கிடாவெட்டு போராட்டம், தேக்குபண்ணை அழிப்புப் போராட்டம், மதமாற்று தடைசட்டத்திற்கு எதிரான போராட்டம், அரசு ஊழியர் ஆதரவு இயக்கம், சாதித் தீண்டாமை ஒழிப்பு இயக்கம், இந்து மதவெறி பாசிசத்தை முறியடிப்போம், திடீர் பணக்கார அரசியல் ரௌடிகளை எதிர்த்து போராட்டம், சீறிரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம். இந்த போரட்டமெல்லாம் நடந்தபோது நீங்க பொறக்கலையா!

 6. //தனக்கு வரலாறு இருப்பதாக சொல்லிக் கொள்ளும் இனம் கழுதையினமாக இருக்கமுடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.//???? இந்த இனத்திற்கும் கல்ழுதைக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை என்பதையும் மறுக்க முடியாது. இல்லையென்றால் “நான் தமில்ழ் ஈழம் பெற்று தருகிரீன்” என்று ஜெயா சொன்னதும் அதை நம்பி இருக்குமா அந்த இனம்? இப்பிரச்சனயிலாவுது துணியை விடுத்து பொதியி பார்க்குமா என்று பார்ப்போம், பார்க்க வைப்போம்.

 7. மிகச் சரியான கட்டுரை…பணியில் இருக்கும்பொழுது பொதுவெளியில் பேசமாட்டார்கள் என்ற நோக்கத்துடன் மீண்டும் வழங்கப் பட்ட நியமனம் முறையாகவோ நியாயமாகவோ வழங்கப்பட்ட பணியல்ல…இதுவும் ஒரு கையூட்டுதான்…இந்தக் கையூட்டை வாங்க மறுப்பதாக உமாசங்கர் செய்யும் செயல், அவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கின் நோக்கத்தையும் அந்த வழக்கிலுள்ள அநியாத்தையும் அம்பலப்படுத்துவதுதான்…

 8. ராஜதந்திரி கலைஞர், இந்த விஷயத்துல சற்றே சறுக்கிட்டாரு. இதையே ஒரு பாடமா எடுத்துட்டு, அடுத்த முறை யாரையாவது தூக்கணும்னா கவனமா தூக்கிட்டு போறாரு.

 9. uma shankar should not join this post, he should wait for few more months, he should express about his opinion to the public.

  please contact uma shankar and convey this message.

 10. உமா சங்கருக்கு வேலை கொடுத்திட்டாங்க.
  சன் குழுமத்தின் மீது அவர் வைத்திருந்த ஆதாரங்கள் இருக்கின்றது அல்லவா.
  அதை வைத்து ஒரு அதிகாரி என்ற முறையில் நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா.
  எல்லா அதிகாரிகளுமா அடிமைகளாக இருப்பார்கள்.

 11. கட்டுரை அருமை ..! வெற்றிதான் ஆனாலும் அவருக்கு ஆதரவான மக்களின் போராட்டத்தை மழுங்கடிப்பதட்கான ஒரு யுக்தி இது. ஒரு ஐ. ஏ.எஸ் அதிகாரியாக அவர் சாதிக்க வேண்டியதை செய்து விட்டார். அதில் செய்ய முடியாதவற்றையும் தெரிந்துக்கொண்டு விட்டார். இனி அவர் அரசு பணியை உதறி விட்டு மக்கள் பணியை தேர்ந்தெடுப்பது சமூகத்தின் தேவை. சில நேரங்களில் திறமையாளர்களுக்குக் கூட தன் திறமை முழுமையாக தெரிய வருவதில்லை. அப்படி அவர் வரும் பட்சத்தில் அதனை உணர்வார்.

 12. வினவு ஐயா:

  உமா சங்கர் ஒரு நேர்மையான் அதிகாரி..அது உண்மை.

  நான் சொல்லவந்தது கருணாநிதி தனது தவரை உணர்ந்து விட்டார். எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குள் நான் போகவில்லை.

  ஆனால் வேறு ஒருவர் இந்நேரம் ஆட்சி செய்தால் உமா சங்கர் இந்நேரம் டிஸ்மிஸ் ஆகியிருப்பார். அது தான் உண்மை. காகிதப் புலிகளாகிய நீங்களும் போராடியிருக்க மாட்டீர்கள். உங்களை குற்றம் சொல்லவில்லை. யாராலையும் அது முடியாது. ஏன் பார்ப்பான் பத்திரிக்கைகள் உமா சங்கரை இந்நேரம் நாசம் பண்ணி இருப்பார்கள். அப்புறம் இந்த சந்திரலேகா பாட்டுத் தொல்லை வேற? உங்களால் தான் என்ன பண்ண முடியும். சரி தொன்னூறுகளில் உமா சங்கருக்கு அரசாங்கம் ஆப்பு வய்த்த போது எந்த பார்ப்பான பத்திரிக்கைகள் அவருக்கு சாதகமாக எழுதியது? அவாள் எழுத மாட்டாள். இருந்தால் காட்டுங்கள்ளேன்?

  உமா சங்கருக்கு என்றும் நான் எதிரி அல்ல! அதே மாதிரி பார்ப்பன பத்திரிக்கைகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு கூஜா தூக்கும் சூத்திரக் கன்மனியும் அல்ல.

  இதை புரிந்து கொள்லுங்கள் சூத்திரக் கண்மணிகளான எனது ரத்தத்தின் ரத்தங்களே மற்றும் (அறிவு ஜீவி) உடன் பிறப்புகளே! அவாளுக்கு நன்னா புரிந்தாலும் அவாள் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற வெறி! நூல் பிடிச்சா மாதிரி எல்லோரும் ஒரே கொள்கையில் இருப்பாள். பார்ப்பன பத்திரிக்கைகளின் வேலையே அதான். அதனால் இந்த பின்னூட்டம் அவாளுக்கு அல்ல

  அவாள் மடத்தலைவரை (Mutt head) வெளியிலே விட்டாலும் ஒட்டு போடுவது என்னோவோ அவாளுக்குத் தான். அதுவும் இந்தக் கருணாநிதிக்கு தெரியவில்லை. புரியவில்லை. எல்லாம ஆரிய மாயை! இது தெரியாமால் எனது சூத்திரக் கண்மணிகள் சொம்பு தூக்குகிரர்கள்

 13. //உமா சங்கருக்கு வேலை திரும்பக் கிடைத்திருக்கலாம். என்ன காரணத்துக்காக அவரது வேலை பறிக்கப்பட்டதோ அந்தக் காரணம் அப்படியே இருக்கிறது.//

  இது தெளிவாகத் தெரிந்ததனால்தான், கருணாநிதி அரசு உமாசங்கருக்கு பதவியைத் தந்து, அவரையும், எதிர்த்து போராடுபவர்களையும் வாயடைக்கும் வழியைக் கைக்கொண்டிருக்கிறது. போராடியவர்களுக்கு வெற்றிபோல் தெரிந்தாலும், போராட்டத்தை புத்திசாலித்தனமாக முடக்கிவிட்டனர் இப்போது.

  இன்னொரு வடிவில் டான்சி பிரச்சினைகளை உமாசங்கர் வெளிக்கொணர்ந்தால் அது திமுகவிற்கு தேர்தலுக்கு உபயோகமாயிருக்கும், அப்படியில்லாமல் உமாசங்கரால் சும்மா இருக்கவும் முடியாது – எப்படியும் பாதிப்பு திமுகவிற்கல்ல!

 14. //உமா சங்கருக்கு வேலை திரும்பக் கிடைத்திருக்கலாம். என்ன காரணத்துக்காக அவரது வேலை பறிக்கப்பட்டதோ அந்தக் காரணம் அப்படியே இருக்கிறது.//

  இது தெளிவாகத் தெரிந்ததனால்தான், கருணாநிதி அரசு உமாசங்கருக்கு பதவியைத் தந்து, அவரையும், எதிர்த்து போராடுபவர்களையும் வாயடைக்கும் வழியைக் கைக்கொண்டிருக்கிறது. போராடியவர்களுக்கு வெற்றிபோல் தெரிந்தாலும், போராட்டத்தை புத்திசாலித்தனமாக முடக்கிவிட்டனர் இப்போது.

  இன்னொரு வடிவில் டான்சி பிரச்சினைகளை உமாசங்கர் வெளிக்கொணர்ந்தால் அது திமுகவிற்கு தேர்தலுக்கு உபயோகமாயிருக்கும், அப்படியில்லாமல் உமாசங்கரால் சும்மா இருக்கவும் முடியாது – எப்படியும் பாதிப்பு திமுகவிற்கல்ல!

 15. வினவு தோழர்களுக்கு,

  உமா சங்கர் எனும் அதிகாரியின் இடை நீக்கம் ஏதோ கருணாநிதி குடும்பத்தினரால் மட்டும் நடந்தது போல் வெளியில் காட்டி கொண்டு இருக்கிறீர்கள்…

  இதில் இருக்கும் சில நிதர்சனங்களை புறதள்ளி விட்டு விடுகிறீர்கள் என்பது வருத்தமே…

  உமா சங்கருக்கும் நிதி(கலா-தயா) குழுவினருக்கும் பிரச்சனை கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாகவே இருக்கிறது… 1 3/4 ஆண்டுகளாக கருணாநிதி குடும்பத்தினரும்… நிதி(கலா-தயா) குழுவும் சமரசம் ஆகு விட்டனர்… அப்போது அவர் எல்காட்டில் இருந்து சிறுசேமிப்பு துறைக்குதான் மாற்றப்பட்டார்…

  உமா சங்கர் பிரச்சனையின் மைய புள்ளி தமிழர்கள் அல்ல… உமா சங்கர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை புறக்கணிக்கும் திட்டங்களை கொண்டு வந்த்ததே…

  மேலும் தேவை என்றால் மைக்ரோசாப்ட் டெல்லியில் தலைவி சோனியாவையும், தவப் புதல்வன் ராகுலையும் கவனித்தார்களா என கேட்டு பாருங்கள்…

  சோனியாவின் ஒரு செருப்பையும்… ராகுலின் இன்னொரு செருப்பையும் கொண்டு ஆட்சி செய்யும் கருணாநிதி… அந்த செருப்புகளின் ஆணைகேற்பவே உமாசங்கரை இடைநீக்கம் செய்துள்ளாரா என கேட்டு பாருங்கள்…

  உமாசங்கரும் இடைநீக்கத்தின் போதும் அத்து மீறி அரசியல் பேசியதாக தெரியவில்லை…

  கடந்த 2001-2006 பார்ப்பன ஜெவின் ஆட்சியில் உமாசங்கர், கண்ணகி போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் இருந்த போது கண்டு கொள்ளாத பார்ப்பன ஊடங்களின் குரலில் வினவும் பேசாமல்… கொஞ்சம் ஆய்ந்து அறிந்த பின் பேசினால் சரியாக இருக்கும்…

  நமக்கு எதிரிகள் கருணாநிதி போன்ற அம்புகள் என்பதை விட… எய்த முதலாளிகளான மைக்ரோசாப்ட் மற்றும் தமிழின எதிரிகளான சோனியா-ராகுல் போன்ற விஷ ஜந்துக்களே…

  கருணாநிதியை போதுமான அளவிற்கு ஜெயலலிதாவும்… பார்ப்பன ஊடங்களும் கவனித்து கொள்கின்றன…

  வினவு போன்ற உண்மையான போராளிகள்… பார்ப்பன ஊடகங்கள் போலவே… எல்லா பிரச்சனைகளுக்கும் கருணாநிதி மட்டுமே காரணம் என சொல்லி… பார்ப்பன தரகு முதலாளி அயோக்கியர்களை காப்பாற்றுவதை விட்டு விடலாமே?

 16. > ……………………தொடர்ந்து அவர் தற்காலிகப் பணி நீக்கத்தில்
  > வைக்கப்பட்டிருந்தால், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பார், பேசுவார்.
  > அவருக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரிக்குமே தவிரக் குறையாது. இவை
  > அனைத்தையும் நிறுத்துவதற்கு தற்போது திமுக அரசு செய்யக்கூடிய ஒரே காரியம்
  > இதுதான்.

  Good deal.

  உமாசங்கர் என்று பெயர் வைத்துள்ள கிறுத்துவ அயோக்கியர், பொய் சாதி சொல்லி, இன்னொரு தலித்திற்குக் கிடைக்க வேண்டிய வேலையைத் தட்டிப் பறித்துக் கொள்ளுவார். அந்தக் கேலமான வேலையைக் கருநாநிதி வெளியே சொல்லாமல் இருந்தால், கருநாநிதி செய்துவரும் அயோக்கிய வேலைகளைப் பற்றி வெளியே சொல்லாமல் இந்த அயோகியர் நிறுத்திக் கொள்ளுவார்.

  அதாவது, நீ உன் அயோக்கியத் தனத்தைத் தொடரு. ஆனால், என் அயோக்கியத் தனத்தில் தலையிடாதே. What a deal yaar !!

  கருநாநிதியும், உமாசங்கரும் இந்த விஷயத்தில் ஒன்றுதான். Mutual blackmailing.

  இந்த விஷயத்தில் கருநாதியைத் திட்ட முடியும். திட்டுகிறார்கள். ஆனால், உமாசங்கரைத் திட்ட முடியாது. ரொம்ப நேர்மை வேண்டும். 🙂

  கருநாதியைவிடப் பெரிய ஆள் ஒருவர் இருக்கிறார் என்ற நல்ல செய்தியை கருநாநிதி வெறுப்பாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

  ஒரு அயோக்கியனை நல்லவனாகக் காட்ட, அவனைவிட மோசமான அயோக்கியனோடு ஒப்பிடுவது நல்ல யுக்திதான்.

  ஜனநாயகம், ஸோஷியலிஸம் என்ற பெயர்களில் நடக்கும் இந்த Neo-Zamindari systemல் இதெல்லாம் சகஜமுங்கோ.

  • அவர் சஸ்பெண்ட் ஆனபின்னாடி அரசின் ஊழலைப் பற்றி சொல்லலைப்பா, அவர் ஒவ்வொரு பதவி வகித்தபோதும் அந்த துறையின் நாற்றங்களை அரசிற்கு சொல்லியிருக்கிறார், வழக்குகள் தாக்கல் செய்திருக்கிறார் –

 17. DON’T UNDER ESTIMATE KARUNANITHI!GOVT OFFICERS SHOULD JOIN AS A PARTNER WITH THE POLITICIANS TO MAKE MONEY.IT IS THE SYSTEM THAT HAS TO BE BLAMED!REMEMBER WE ARE FROM THIRD WORLD AND OUR POLITICIANS ARE MERELY THE BROKERS WHO SHUD DO WHAT WORLD BANK ADVISE THEM TO DO!EVERY ELECTION GIVES OPPORTUNITY TO DIFF PEOPLE TO LOOT THIS COUNTRY!WE HAV OUR OWN FIGHT ABT THE RELIGION ,CASTE AND LANGUAGE…LET US FIGHT WITHIN OURSELVES FOREVER!FORGET THE NATION !

 18. டான்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமித்திருக்கிறது தமிழக அரசு; ஒரு கல் பல மாங்காய்கள்!

  உமா சங்கர் டான்சியைத் தோண்டுனா? இப்ப உமா சங்கர் நேர்மையை ஆதரித்த காகிதப் புலிகள் சொல்லவேண்டியவை:

  கருனாநிதி அவரை வாங்கிட்டார்பா! இரண்டு பேருக்கும் ஏதோ ஒரு அண்டர் ஸ்டான்டிங்பா! என்ன இருந்தாலும் ஒரு தலித்தோட இடத்தை கிருத்துவர் எடுத்திருக்கக் கூடாதுபா! அதுக்கு கருணாநிதியை ஆக்க்ஷன் எடுக்க சொல்லுபா! ஓட்டுக்காக உட்டுட்டாங்கபா! ஆக்க்ஷன் எடுத்தாலும் கருணாநிதியை திட்டு. வெளியில் விட்டாலும் திட்டு.

  இது வரை மதிய அரசு செய்ய வேண்டியதை ஏன் கருணாநிதி செய்தார் என்று கேட்டவர்கள், இப்போ கருணாநிதி டில்லிக்கு போய் அம்மையார் கிட்ட சொல்லி உமா சங்கர் மீது ஆக்க்ஷன் எடுக்க சொல்லுபா என்பார்கள். கூடவே பேரனுக்கு வேலை வாங்கிக் கொடுக்க தில்லி போனவர் ஏம்பா இதுக்கு போக மாட்டேனங்குராறு? இதை மட்டும் விடவே மாட்டார்கள்.

  இப்போ இவாளுக்கு தலித் உமா சங்கர் கிருத்துவராக மாறி விடுவார். அதான் கிருத்துவ சோனியா அம்மையாரே மறு படியும் வேலை கொடுதுத்ட்டாங்கபா என்பார்கள். இதை இந்து கிருத்துவர் பிரச்சசனையாக மாற்றி எல்லா சூத்திரன்களையும் ஒரே குடையின் கீழ் வர வைத்து அவாள் அதில் குளிர் காய்வார்கள். நம்ம ஆட்களும் வழக்கமா இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு அவாளோடைய பல்லக்கை தூக்குவோம். நம்ம வேலையே அவாளை பதவியில் உட்காரா வைக்காம ஓய மாட்டோமே.அவா நன்னா வெல்லம் சாப்பிடட்டும். நாமளும் வழக்கம் போல விரல் சூப்புவோம்.அ

  து எப்படிபா அவாள் பத்திரிக்கைகள் எந்த எழவை எழுதினாலும் அப்படியே உண்மை என்று நம்பிவிடுகிரீர்கள்? கேழ்வரகில் நெய் வடியுது என்றால் கேட்பவர்க்கு மதி எங்கே?

  உமா சங்கர் டான்சியைத் தோண்டுனா இதுவரை எழுதிய பதிவர்கள் பதுங்கலாம். அல்லது சிலர் இதுவரை எழுதாத பதிவர்களுடன் சேர்ந்து வீரத்தோடு உமா சங்கரையும் கூடவே கருணாநிதியையும் (அதெப்படிபா ஊருகாவை விட முடியும்) தாக்கி எழுதலாம்.

  நம்ம மெயின் டார்கெட்டே ஊருகா தானேபா.

 19. மிகச்சரியாக குறிப்பிட்டு சொல்லியிருக்கிறீர்கள். கழுதை போல் இல்லாது மனிதர்களாக இருந்து உமாசங்கர் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஊழல் வரலாறுகளை முழுமையாக வெளிக்கொணரவேண்டியது மக்களின் கடமை

  இது என்னுடைய கருத்து, வெளியில் பிரவுசிங் சென்டரிலிருந்து அனுப்பியதால் எனது பெயர் பதிவாகாமல் அனானிமஸ் என பதிவாகிஉள்ளது – சித்திரகுப்தன்

 20. உமா சங்கர் மாதிரி எல்லா அரசு அதிகாரிகளும் நேர்மையாக இருந்தால் ஊழலே இருக்காது. ஆகவே நாம் எல்லோரும் உமா சங்கரை ஆதரிக்க வேண்டும்.

  ஆனால், இப்பொழுது “மனிதர்களாக” இருக்கும் “மக்கள்” உமா சங்கர் டான்சியைத் தோண்டிபோது கழுதைகளாக மாறி இருந்தார்கள். இனி டான்சியைத் தோண்டினால் மறுபடியும் நமது மனிதர்கள் கழுதைகளாக மாறி விடுவார்கள்.

  இந்தப் பாசம் தான் என்னைப் புல்லரிக்க வைக்கிறது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க