Saturday, August 13, 2022
முகப்பு பதிவரசியல்: புனைவில் துகிலுறியும் வக்கிரக்காரர்கள்!
Array

பதிவரசியல்: புனைவில் துகிலுறியும் வக்கிரக்காரர்கள்!

-

வினவு குறிப்பு: பதிவுலகில் பெண்களை புனைவால் குதறும் வக்கிரம் தொடர்கிறது…!

இருவாரங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டிலிருக்கும் பதிவர் ‘புன்னகைதேசம்’ சாந்தி எங்களைத் தொடர்பு கொண்டார். அவரை இருபதிவர்கள் புனைவு என்ற வடிவில் தாக்கி எழுதியிருக்கும் விசயத்தை சொன்னார். இது தொடர்பாக வேறு சில பதிவுலக நண்பர்களும் தொடர்பு கொண்டு அதன் முழு பின்னணியை தெரிவித்தார்கள். இதில் அநீதி இழைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு புரியவந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தோம். முதலில் சம்பந்தப்ப்ட்ட பதிவரே இந்த விவகாரம் குறித்து எழுதி வினவில் வெளியிட்டு பதிவுலக நண்பர்களிடம் நியாயத்தை கேட்கலாம் என்று முடிவு செய்தோம். இரண்டு, சட்டபூர்வமாக இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை வழக்கறிஞர்களிடம் பேசி வருகிறோம்.

பதிவர் சாந்தி இந்த பிரச்சினையில் பாதிக்கப்ப்ட்டு மன உளைச்சலோடு இருந்தாலும் இதை உறுதியாக எதிர்த்து போராடவேண்டும் என்பதில் தளரவில்லை. பதிவுலகில் ஒரு பெண்பதிவர்  சமையல் குறிப்பையும், மொக்கைகளையும் எழுதினால் பிரச்சினை இல்லை. மாறாக சமூக அக்கறை கொண்டு சில கருத்துக்களை தெரிவித்தால் ” ஒரு பெண்ணா, இப்படி பேசுகிறாள்” என்று சில ஆண் பதிவர்கள் சீறுகின்றனர். அதையும் விவாதமாகவோ, கருத்துப் போராட்டமாகவோ வைக்க வக்கின்றி வக்கிரமாக புனைவு எழுதி தமது ஆணாதிக்கத்தை காப்பாற்றிக் கொள்கின்றனர். அதை எதிர்த்தால் மேலும் பல அந்தரங்களை விடப்போவதாக மிரட்டுகின்றனர்.

ஒரு பெண் ஏதாவது ஒரு புகார் தெரிவித்தால் ஏது என்ன்வென்று விசாரிக்கமாலேயே பல ஆண் பதிவர்கள் ஆதரவு அளிக்க வருகின்றனர் என்று ஒரு மூடநம்பிக்கை இங்கே நிலவுகிறது. இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறோம். எனினும் இந்த உலகில் எந்த பிரச்சினையும் இருபாலினத்தாருக்கும் சமமாக அமைவதில்லை.   பெண்ணைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினை என்றாலும் அவளது பாலினம் என்ற முறையில் கூடுதலாக அலட்சியமாக இழிவுபடுத்தப்படுகிறாள் என்பதைக்கூட உலக இலக்கியம் படித்த சிகாமணிகளே  புரிந்து கொள்ளவில்லை. எனில் மொக்கைகளைப் பற்றி விரித்துரைக்க தேவையில்லை.

எமது அரசியல் பணிகளில் ஒன்றாகவே பதிவுலகில் ஆணாதிக்க அடாவடித்தனத்தை ஒழிப்பதையும் வைத்திருக்கிறோம். இது எழுதுவதோடு மட்டுமல்ல சட்டபூர்வ நடைமுறைகளுக்குட்பட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். எனினும் இந்தப் போராட்டத்தை எங்களது அமைப்பு தோழர்களின் செல்வாக்கை வைத்து செய்யப்போவதில்லை. மாறாக பதிவர்களையும், வாசகர்களையும் திரட்டி அவர்கள் மூலமாகத்தான் போராடுவோம். ஏற்கனவே சந்தனமுல்லைக்கு அநீதி நடந்த போது பதிவுலகின் பெரும்பான்மை அதை தட்டிக் கேட்டார்கள் என்பது நமக்கு உவப்பளிக்கும் செய்தி. எனவே பதிவர் சாந்தி இந்த வக்கிரக்காரர்களின் புனைவுக்கு அஞ்சாமல் தொடர்ந்து இயங்குவார், இயங்க வேண்டும். இனி சாந்தியின் கதையை அவரது எழுத்திலேயே கேளுங்கள்!
————————————————————————————————————————————————–

பதிவரசியல்: புனைவில் துகிலுறியும் வக்கிரக்காரர்கள்!

—————————————————————-
தமிழ்நாட்டை விட்டு வெளியேறி 15 வருடங்கள் ஆகிவிட்டன. வாழ்க்கை நிமித்தம், குடும்பம் நிமித்தம் வெளிநாட்டிலேயே வாழ வேண்டிய சூழல். தாய்மொழி பேசிடவோ, சொந்தங்கள், நட்புகளுடன் உறவாடவோ வாய்ப்பற்ற நிலையில் இணையத்திற்கு வந்தேன். இழந்த தமிழக வாழ்க்கையை அளிக்கும் வாய்ப்பிணை இணயம் தந்தது. எத்தனை நல்ல உள்ளங்கள், ஆறுதல் தந்த இதயங்கள், வழி நடத்திய பெரியவர்கள், தமிழ் ஆர்வத்தை தூண்டிய நட்புகள்…… அதுவரை குடும்பம், குழந்தைகள்  வேலை என்றிருந்த என் உலகம் பரந்து விரிந்தது.

பல குழுமங்கள், பல விஷயங்கள், பல பெரியவர்கள் என அந்த உலகம் தொடர்ந்து விரிந்தவாறே இருந்தது. வயசு வித்தியாசமின்றியும், இளவயது துடிப்புடன் பழகிய தருணங்கள், மனதார சிரித்து மகிழ்ந்த தருணங்கள், சிந்தனையை தூண்டி ஆக்கப்பூர்வமான கருத்துக்களைபரிமாறிக் கொண்டவை என்று அந்த மகிழ்ச்சியான உலகத்தை என்னால் அளவிட முடியவில்லை.

இணையம் என்பது எனக்குபாடசாலை, பயனுள்ள இடம். நம் சுற்று வட்டாரத்தில் சந்திக்க முடியாத அறிஞர் பெருமக்களையும், அனுபவசாலிகளையும் குழுமங்கள், பதிவுகள் மூலம் எளிதாக  உரையாட வைத்த இடம். நூற்றுக்கணக்ககான மடல்களுடன் குழும கருத்தாடல்கள் செய்த இடம். விரைவாக வாசிப்பதில், கருத்துக்களை பகிர்வதில், வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதில் ஆரோக்கியமான போட்டியை வளர்த்த இடம்…

இத்தகைய இணைய சூழலில் இப்போது பெண்களை சில வக்கிரக்காரர்கள் புனைவு மூலம் குதற ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாகவும், இனி இந்த பாதிப்பு எவருக்கும் வரக்கூடாது என்ற உறுதியோடுதான் வினவு தளம் மூலம் உங்களை சந்திக்கிறேன். அந்த வக்கிரக்காரக்ளை நரகல் என்று சகித்து கொண்டோ, ஒதுங்கிக் கொண்டோ போக முடியாது என்ற நிலையிலேயே இதை எழுதுகிறேன். “பூக்காரி” என்ற வார்த்தையை கேட்ட் மாத்திரத்திலேயே வலியும், வேதனையும் வருவதை நானும் ஒரு பெண் என்ற முறையில் உணர்ந்திருக்கிறேன். ஆனால் “பூக்காரிகளை” வன்மத்துடன் இழிவுபடுத்தும் வக்கிரக்காரர்கள் புதிது புதிதாக  முளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி என்கதையை எழுதுகிறேன்.

தமிழ் வலைப்பதிவர் குழுமம் எனும் இணைய தளத்தில் நல்ல கருத்துக்கள் பரிமாறப்படும் என்ற ஆர்வத்தில் இணைந்தேன். ஆரம்பத்தில் நாம் எளிமையாக அணுகவேண்டுமென்று மொக்கை போட்டதுண்டு, மிக சீரியஸான விவாதங்களும் நடந்ததுண்டு.. சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லையென்றால் அவற்றை நாகரீகமாக வைத்தே பேசியிருக்கிறேன்.

http://groups.google.com/group/tamizhbloggersforum/browse_thread/thread/9d11ba9ecbd9314c/dc9f2943012625a7?hl=en&q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&lnk=ol&

ஆனால் நான் ஒரு ஆணில்லை என்ற உண்மை காரணமாக சிலரால் வெறுப்புடன் நோக்கப்பட்டிருக்கிறேன் என்பதை இப்போது புரிந்து கொள்கிறேன். இதை எனக்கு உணர்த்தியவர்கள் பதிவுகள் எழுதும் ‘பதிற்றல்கள்’ முகிலன் மற்றும் ‘இரும்புத்திரை’ அரவிந்த். குழுமத்தில் என்னை அக்கா என்று அழைத்தவர்கள் பிறகு என்னை புனைவில் துகிலுரிந்தார்கள்.

குழுமத்தில் மதார் என்ற பெண்பதிவர், அவருடன் சாட்டில் வந்த ஆண்பதிவர் முறைகேடாக பேசியதை குறிப்பிட்டிருந்தார். இது குறித்து இரும்புத்திரை அரவிந்திடம் பேசும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். அரவிந்திடம் பேசும்போது அவர் இதை ஒரு அநீதி என்று எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கும் ஆர்வத்திற்குப்பதில் அந்த சர்ச்சை குறித்த விவரங்களை, யார் என்ற ஆவலை ஒருகிசு கிசு ஆர்வலன் போலத்தான் அணுகினார். இது எனக்கு பிடிக்கவில்லை. மதாரிடமும் அதை சொல்லிவிட்டேன். அடுத்து இந்த இரும்புத்திரை அரவிந்த் எழுதும் பதிவுகளில் மற்றவர்களை அருவருப்பாக தாக்கி எழுதுவார் என்பதால் இது குப்பை என்று ஒதுக்கிவிட்டேன்..இதில் என்ன தவறு கண்டார்கள்?.நான் தியாகு என்பவருக்கு பதில் போட்டால் இவருக்கு பிடிக்காதம். நர்சிம் பிரச்சினையின் போது இந்த அரவிந்த் நர்சிம்முக்குத்தான் முழு ஆதரவு என்று எழுதியமையால் பதிவுலகமே பயந்து போயிருப்பதாக இப்போதும் பெருமையாக சொல்லிக் கொள்வார். அதனால்தானோ என்ன்மோ இவரது கருத்துக்களுக்கு எதிர்வாதம் செய்ததால் எனக்கு மிரட்டல் விடுக்கிறார்.இப்பத்தான் புரிகிறது, இவர் நர்சிம்மின் அடியாள் என்று. ஏன்னா பதிவர் தீபா எது எழுதினாலும் உடனே எனக்கு லிங்க் அனுப்பி பார்க்கச் சொல்வார். இது எதுக்குன்னு ரொம்ப நாள் புரியாம இருந்தது. என்னை பதிவுலகில் அறிந்தவர்கள் மிக கம்மி. என் பங்களிப்பு குழுமத்தில்தான் அதிகம். எனக்கு யாரிடமும் தனிப்பட்ட பகையோ, எந்த அரசியலுமோ கிடையாது. அரவிந்த் அவருடைய அடியாள் வேலைக்கு நான் உடன்படவில்லை என்பதும் அதை தட்டிக் கேட்டதும்தான் அவருக்கு பிரச்சினை.

பதிவர் ‘ பிதற்றல்கள்’ முகிலன் என்பவர் பதிவர் புலவன் புலிகேசியைப் பற்றி கேவலமாக ஒரு கவிதை எழுதினார். அதில் ஏழைகளைப் பற்றியும், அந்த ஏழைகளுக்காக போராடுபவர்களையும் இழிவு படுத்தியிருந்தார். இதை நான் யதார்த்தமாக பின்னூட்டத்தில் கண்டித்தேன். புலவன் புலிகேசியின் சமூக அக்கறையை இவர்கள் கொச்சைப்படுத்துவது எனக்கு கோபத்தை வரவழைத்தது. இன்னும் சொல்லப்போனால் என் தனிப்பட்ட இகழ்ச்சியை விட இது அதிக வேதனை தந்தது..இதிலும் நான் ஒரு பெண்தானே என்ற உண்மை முகிலனை ஆத்திரப்பட வைத்திருக்கிறது. முகிலனின் அந்த வக்கிரமான கவிதையை கீழே படியுங்கள்,

——————————————————————————————–
புலவன் – புரட்சி எழுத்தாளன்
பிதற்றியது முகிலன் on Tuesday, August 17, 2010
வகைப்படுத்துதல் எதிர் வினை

அருமையான ப்ளாக் டெம்ப்ளேட்தான்
அதனால் நாட்டுக்கு என்ன பயன்?

அடடா போட வைக்கும் எழுத்து நடைதான்
அதனால் ஏழைகளுக்கு என்ன பயன்?

இடுகை படித்து பின்னூட்டமிட்டு
தமிழ்மணத்தில் ஓட்டையும் போட்டு
இண்டர்நெட் லிமிட்டை எக்சீட் செய்து

அடுத்த வேளை ரீசார்ஜ் செய்ய நண்பனின்
பாக்கெட்டைத் தடவ வேண்டிய நிலை

ஒவ்வொரு இடுகை வெளியீட்டின் போதும்
இது இயல்புதான்

அதற்காக புலவர் வந்து உனக்கு
ரீசார்ஜ் செய்தாரா?

நாட்டின் வறுமையை இடுகையில்
விளக்கும் புலவன்

உண்மையில் அதை ஒழிக்க
கெண்டைக்கால் மயிரேனும் பிடுங்கியிருப்பாரா?

ஓசி ப்ளாக்கரில் அவர்கள்
ஓதுவது புரட்சியை
நிஜத்தில் வேண்டுவது புகழை.

________________________________________

இதுதான் முகிலன் எழுதிய கவிதை. முகிலனுக்கு ஏழை என்றால் இளக்காரமா ?.  வெளிநாட்டில் போய் நாலு காசு பார்த்துவிட்டால் யாரை வேணா இழிவுபடுத்தலாமா?.
நமக்கு/நம் பிள்ளைகளுக்கு நாளை அந்த நிலைமை வராது என்று என்ன நிச்சயமுங்க?..இந்த வக்கிரமான கவிதையை எழுதிய முகிலனை நான் கண்டித்தது அவருக்கு கொஞ்சம் கூடப்பிடிக்கவில்லை.
இது நடக்கும்போதும் குழும நடத்துனர் கேபிள் இடையில் வந்து தன் புத்தக விழா பற்றி சொனனாரேயொழிய ஒரு குழும மட்டுறுத்தனராய் பிரச்னையை பற்றி கண்டுகொள்ளவேயில்லை..அதே போல் மணிஜீயும்..இடையில் வந்து மழையில் நனைய சொல்லி போய்விட்டார்..குழுமத்தில் நியாயம் பேச தெரியாவிட்டால் , தட்டி கேட்காவிட்டால்  உங்களுக்கெதுக்கு குழுமம்.?.உங்க சொந்த விளம்பரத்துக்காக மட்டுமா?..  பதிலேயில்லை..

ஆனால் ஜானகிராமன் , அருள் ஸ்டீபன், புலிகேசி வந்து பேச ஆரம்பித்ததும்தான் தவறை உணர்ந்து தோற்றுப்போனர் அர்விந்தும் , முகிலனும்….

ஆக ஒரு பெண்ணிடம் தோற்று போக ஈகோ இடம் தருவதில்லை.. நியாயமென தெரிந்தாலும் அவளை மட்டம் தட்டி ஓட விரட்டணும்.. இப்படி இழிவுசெய்துதான் அவளுக்கு துணிவே தருகின்றீர்கள் என்பதையும் நியாபகம் வையுங்கள்..

இப்படிகருத்தை கருத்தால் சந்திக்க முடியாத பதிவர்கள் முகிலன், அரவிந்த் இருவரும் என்னைப்பற்றி புனைவு எழுதி தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார்கள். அதில் என்னைப் பற்றிய விவரங்கள் அவை நானே சொன்னதுதான், அவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள். நான் நீச்சல் அடிப்பது, வேகமாக கார் ஓட்டுவது, என்.சி.சியில் துப்பாக்கி சுடுவதில் முதலிடம் வந்தது இதெல்லாம் நான் என்னைப்பற்றி சொல்லிய விவரங்கள்தான். இன்றும் நான் டென்னிஸ், ஸ்குவாஷ் விளையாடுகிறேன். என் தந்தையும் என்னை சிறுவயது முதல் அப்படித்தான் வளர்த்திருக்கிறார். 42 வயதில் இருக்கும் நான் இவற்றையெல்லாம் ஒரு பெண் இப்படி சம்பிரதாதயமுறைகளில் இருந்து மாறுபட்டு இருந்திருக்கிறேன் என்ற அடிப்படையில்தான் சொன்னேன். பெண் என்றால் சமையலறை சடங்குக்காக விதிக்கப்பட்டவள் என்ற அடையாளத்தை உடைத்திருக்கிறேன் என்பதைத்தான் அப்படி சொன்னேனே தவிர இது என்னை ஹீரோயிசமாக காட்டுவதற்கு அல்ல. பதிவுலகில் ஒரு பெண் அப்படி ஹீரோயினாகிட முடியுமா என்ன?

என்னைப் பற்றி நான் சொன்னது முகிலனுக்கு சுயசொறிதல் என்று தெரிந்ததாம். பரவாயில்லை, நான் என்னுடைய சுயத்தைத்தானே வெளியிட்டிருக்கிறேன், என்று அதை பெரிதுபடுத்தவில்லை. அடுத்து முகிலன் தனது மனைவியின் வீடியோவை இணைத்திருந்தார். பதிவுலகில் இத்தகைய காட்சிகள் தேவையில்லை, அது பெண்களுக்கு பாதுகாப்பனது அல்ல என்ற முறையில் அதை கண்டித்திருந்தேன். இதை அவர் தப்பாக புரிந்து கொண்டதோடு அது குறித்து விசமப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்..முதலில் என்னைப் பற்றி புனைவே எழுதவில்லை என பொதுவில் சொன்னவர் பிறகு அதை திசைதிருப்ப அவர் மனைவியைப்பற்றி தப்பாகப் பேசினேன் என்று பச்சைப் பொய்யை பரப்ப ஆரம்பித்தார். ஒரு பெண்ணை இழித்துரைக்க இன்னொரு பெண்தான் அவருக்கு தேவைப்பட்டிருக்கிறாள் போல. என்ன புனைவு எழுதினார்கள்? அதை நீங்களே படியுங்கள்….

[[  மெனுவை எழுதி சர்வ் செய்த தாய்லாந்து பெண்ணிடம் வேறு வழியில்லாமல் தர.இப்படியே சாப்பிடும் போதெல்லாம் அவன் மராத்தி கவிதை ஒன்று ஒன்றாக அவளிடம் போக. அவள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஜான்சி அக்காவையும் கூப்பிட்டுக் கொண்டு வந்து விட்டாள். அவள் முப்பது நாளில் மராத்தி புத்தகம் வாங்கி படித்து அவனை காதலிக்க ஆரம்பித்து விட்டாளாம். அவளுக்கு முதலிலேயே அவன் தமிழ்ப்பிளாக்கன் என்று தெரிந்திருந்தால் தமிழ் கற்றிருப்பேன்.இன்னும் முப்பது நாள் அவகாசம் தர சொல்ல சிபாரிசுக்கு ஜான்சி அக்காவை அழைத்து வர,மிரட்டத்தான் வந்தார்கள் என்று நினைத்து விட்ட முகிலனிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டான்.மிரட்டல்களால் தான் அவன் ஓடி விட்டான் என்று முகிலன் எல்லோரிடமும் சொல்வி வைத்து விட்டார். தூரத்தில் இருந்து பார்த்தாலே இதுதான் பிரச்சனை.எப்படி பேசியது காதில் விழும். இதுதான் இந்த தமிழ் சமுதாயத்தின் நிலை.
—————————————————————————-
அரவிந்துக்கும் பொண்ணுகளுக்கும் ராசியே இல்லை. இப்பிடித்தான் பாருங்க ஒரு தாய்லாந்து பொண்ணை ரொம்ப நாள் ரூட்டு விட்டுக்கிட்டு இருந்தாப்ல. அந்தப் பொண்ணு போறப்ப வர்றப்ப எல்லாம் எதாவது கவிதை எழுதி அவ மேல் தூக்கி எறிவாப்ல. அதுவும் பொறுக்கிக்கிட்டு போயிரும். ஆனா ஒரு பதிலும் சொல்லாது. ஒரு நா அந்தப்பொண்ணு ஜான்சி அக்காவைக் கூட்டிக்கிட்டு வந்திருச்சி. எனக்கும் ஷங்கருக்கும் அல்லு விட்டிருச்சி. ஏன்னா ஜான்சி அக்கா பயங்கரமான ஆளு. ஜான்சி அக்கா கையில அரவிந்து இது வரைக்கும் எழுதுன கவிதைத் துண்டு எல்லாம் இருக்கு. வந்தவுக அரவிந்த விட்டு லெஃப்டு ரைட்டு வாங்கிட்டாங்க. நான் என்.சி.சியில இருந்தவ. துப்பாக்கி சுடுறதுல ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன். ]]

ந்ததப் புனைவில் தாய்லாந்து பெண்ணாகவும், ஜான்சி அக்காவாகவும் என்னையே எழுதியிருக்கிறார்கள் என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியுமென்று நினைக்கிறேன். தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் என்னை அக்கா என்று அழைத்தவர்கள் இந்த புனைவில் என்னை ரூட் விடும் பெண்ணாகவும்,  காதலுக்கு அலைபவளாகவும், கவிதைகளை பொறுக்கி எடுக்கும் அற்பமாகவும், சித்தரித்திருக்கிறார்கள். இன்னொரு புறம் என்னையே ஜான்சி அக்காவாக உருவகம் செய்து, நான் என்னைப்பற்றிக் குறிப்பிட்ட என்.சி.சி, துப்பாக்கி சுடுதல் விவரங்களை வைத்து அல்லு விடச் செய்யும் பயங்கரமான வில்லியாகவும் எழுதியிருக்கிறார்கள்.

இதைப்படித்ததும் இது சந்தனமுல்லை விவகாரம் போல இருக்கிறதே என்று நினைத்தேன். குழுமத்தில் சிலரிடம் கேட்டேன்.. வடகரை வேலன் போன்றோரிடம். பதிலே இல்லை.

சிலர் கண்டுக்காதீங்க அக்கா என சொன்னதால்  சின்ன பசங்கள் என்று மன்னித்து விட்டுவிட்டேன். அதுதான் நான் செய்த தவறு. இப்போது இந்த புனைவு எழுதிய அந்த பதிவர்கள் இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த புனைவை நியாயப்படுத்துவதோடு, என் அந்தரங்க விசயங்களை வெளியிடுவதாகவும் மிரட்டுகிறார்கள். அவர்களது நோக்கம்தான் என்ன? என்னைப்பற்றிய அந்தரங்க விசயங்கள் போலத்தான் அவர்களது மனைவி, தாயின் அந்தரங்கமும் இருக்கும். அதை யாராவது வெளியிடுவது என்று ஒரு பேச்சு வந்தால் இந்த வக்கிரக்காரர்கள் என்ன சொல்வார்கள்?

நான் பெண் என்ற நிலையினை தாண்டி ஒரு சுயேச்சையான மனுஷியாக என்றோ மாறிவிட்டேன். எனது பணி நிமித்தம் காரணமாக பல ஆண்களுடன் வேலை செய்திருக்கிறேன். இரவு பணி செய்திருக்கிறேன். என் அலுவலக பணி காரணமாக உடன் பணிபுரியும் ஆண்களோடு விடுதிகளில் தங்கியும் இருந்திருக்கிறேன். ஒரே வாகனத்தில் பல ஆண்களோடு ஒட்டிக்கொண்டே பயணித்திருக்கேன்..தாய்லாந்து நாடு பெண்களை மிகவும் மதிக்கும் நாடு. விபச்சாரத்திற்காக நினைவுக்கு வரும் தாய்லாந்தில்தான் பெண்களையும் நாகரீகத்தோடு நடத்தும் பழக்கமும் இருக்கிறது. இங்கு பெரிய லாரிகளைக்கூட பெண்கள் ஓட்டுவது சர்வசாதாரணம். பொதுவெளியில் தாய்ப்பால் கொடுப்பார்கள் திறந்த மார்போடு.. அதை புனிதமாக கண்டு அந்த தாய்க்கு இடைஞ்சல் வராமல் விலகிச்செல்லும் ஆண்கள் நிறைந்த நாடிது..இங்கு பதிவுலகில் மஞ்சள் பத்திரிக்கைக்கு ஈடாக எழுதும் காம வெறியர்கள் போன்றவர்கள் இங்கில்லை. யாரும் யாரையும் கிண்டல் செய்வதில்லை..இந்த சூழ்நிலையில்தான் நான் என்னுடைய அலுவலக பணிகளை செய்து முன்னேறியிருக்கிறேன்.

பணி காரணமாக ஒரு நாளைக்கு 700 கி.மீட்டர்கள் வரை அப்போது மாதவிடாய் என்றாலும் கூட கார்களை ஓட்டுவேன். அந்த நாட்களின் வலியையும், எரிச்சலையும் உணர்ந்த ஆண் நண்பர்களுக்காகவே இதை கூறுகிறேன். பெண்ணாக குனிந்து வாழ்ந்த காலம் என்றோ முடிந்து போனது என்ற கொள்கையின்படியே நான் வாழ்கிறேன். ஆனாலும் இதற்குமுன் என்வாழ்வில் இத்தகைய வக்கிரபுத்திக்காரர்களை நான் சந்தித்ததில்லை. மொழி தெரியா, வேற்றுதேசத்தவர்களிடமிருந்து வராத ஆபத்து என்னுடைய தமிழ்மொழி பேசும் நபர்களிடமிருந்து வருகிறது.ஆயிரம் ஆண்டானாலும் இந்த ஆணாதிக்க வக்கிர புத்தி தமிழ்நாட்டில் நீங்காது என்பது சாபக்கேடுதானே?…

இனி என் அலுவலக பணிகளை வைத்து நான் பல ஆண்களுடன், எனது அலுவலக நிர்வாகிகளுடன்  சோரம் போனதாக கூட அவர்கள் எழுதுவார்களோ, தெரியவில்லை. :))  . சிலவேளை சிரிப்புத்தான் வருகிறது இந்த கீழ்தரமான மனிதர்களோடு நான் இறங்கி பழக வேண்டியதாயிற்றே என..இந்த மிரட்டலுக்கு நான் பயப்படப்போவதில்லை. இவர்களால் என்ன் செய்துவிட முடியும்? இவர்கள் நோக்கம்தான் என்ன? ஒரு பெண் பாலியல் தொழிலாளியே ஆனாலும் அவளது அனுமதியின்றி அவளை தொடுவதற்கு எவனுக்கும் உரிமை இல்லை. ஆனால் இவர்களைப் பொறுத்தவரை ஒரு பாலியல் தொழிலாளிப் பெண்ணை யார் வேண்டுமானாலும் கற்பழிக்கலாம், அதில் தவறு இல்லை என்பதுதான் விசயம். இரண்டு பிள்ளைகளுக்கு தாயான என்னை, கடித்துக்கதறுவதற்கு இவர்கள் விரும்புகிறார்கள். அதை புனைவு எழுதி தீர்த்துக் கொள்கிறார்கள். அக்கா என்று அழைத்தவர்கள் இப்போது தவறானமுறைகளில் அழைக்கிறார்கள். இதை நான் தட்டிக் கேட்டால் அது தப்பா? இது போன்று நடப்பது எனக்குமுதல்முறையல்ல.சரி இந்த முறை தட்டிக்கேட்டதால் என் அந்தரங்கம்.. அடுத்தடுத்த முறைக்கு என்ன செய்வீர்கள் தம்பிமாரே.? .. 99 வயது கிழவி நடந்து போனாலும் கூடி நின்று கிசுகிசு பேசி தன் மனதின் வக்கிரத்தை தீர்த்துக்கொள்ளும் மன நோயாளிகள்தானே இங்கே அதிகம்.?..

தமிழமுதம் குழுமத்தில் ஒருவர் என்னை விபச்சாரி என்றும் தாய்லாந்தில் தொழில் நடத்துபவள் என்றும் எழுதியிருந்தார். பின்னர் தான் செய்த தவறை மனசார உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். இப்போதும் என்னுடன் நட்பாகவே உள்ளார். ஆனால் முகிலனும், இரும்புத்திரை அரவிந்தும் என்னை புனைவு எழுதியதோடு அது சரிதான் என்பது போல எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். தவறையும் செய்துவிட்டு பின்னர் அதை நியாயப்படுத்துபவர்களை என்ன செய்யலாம்.. நிரந்தரமாக இவர்கள் பெயர்கள்  வலையுலகில் பதியப்படவேண்டும்.. இனி எழுத வரும் பெண்களுக்கு இந்த சாக்கடைகளை அறிமுகப்படுத்தணும்..

கடந்த சில நாட்களில் மிகுந்த மனவேதனையோடும், உளைச்சலோடும்தான் இருந்து வந்தேன். சில பதிவுலக நண்பர்களிடம் நியாயம் கேட்டேன். இதற்கு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும் முயன்றேன். சென்னை சைபர் கிரைம் போலிசிடம் பேசிய போது இது குறித்து தாய்லாந்தில் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார்கள். சில வழக்கறிஞர் நண்ப்ரகளை கேட்ட போது இதை சட்டப்படி மன உளைச்சலுக்காக புகார் அளிக்க சொன்னார்கள். அது குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறோம்..

இறுதியில்தான் வினவு நண்பர்களைக் கேட்டேன். அவர்கள் இந்த விசயத்திற்க்காக தளராமல் போரடாலாம், அஞ்சவேண்டாம் என்று நம்பிக்கை கொடுத்தார்கள். இவ்வளவிற்கும் சந்தனமுல்லை பிரச்சினையின் போது நான் வினவை ஆதரிக்கவில்லை. அப்போது குழுமத்தில் வினவைப் பற்றி தவறான தகவல்களை தந்தார்கள். இன்று அவையும் புனைவு என்று அறிந்து கொண்டேன்.பல பதிவர்கள் தனிமடலில் எனக்கு ஆதரவை அளித்தார்கள். அவர்களுக்கு என் நன்றி.

இணைய உலகில் பெண்களை இப்படி புனைவின் மூலம் வன்முறை செய்பவர்களை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்க்காகவே இதை எழுதுகிறேன். சந்தனமுல்லை அவரது கட்டுரையில் இந்த பிரச்சினை அவரோடு முடிந்து போகவேண்டும் என்றுஎழுதியிருந்தார். ஆனால் அது அவரோடு முடியவில்லை. அடுத்த பலிகடாவாக நான்.இன்று நானும் இது என்னோடு போகவேண்டும் என்று விரும்புகிறேன். என்னை போல எல்லா வசதிகளும் உள்ள ஒரு பெண்ணுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு தமிழ்நாட்டிலிருந்து இணையத்திற்கு வரும் ஏதுமற்ற பெண்ணுக்கு  என்னென்னவெல்லாம் நடக்கும் என்று அஞ்சுகிறேன். பதிவுலகில் நான் புரிந்துகொண்டது…

ஒரு பெண்,

 1. திற்மையாகவும், தனித்தன்மையோடும், சமூக அக்கறையோடும் இருக்கக் கூடாது..
 2. அப்படியே இருந்தாலும் தப்புகளை பொதுவில் தட்டி கேட்கக்கூடாது.. அதுவும் முக்கியமாக ஆண்களை..
 3. பிரச்சனையில்லாமல் ( மொக்கையாகவே ) நீடிக்க வக்கிரம் பிடித்தவர்கள், கயவர்கள் , அடாவடித்தனம் செய்பவர்களோடான நட்பும் ஆதரவும் மிக மிக அவசியம்..
 4. ஒரு ஆணிடம் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்து கொள்ளும் ஆண்கள் , பெண் என்று வந்துவிட்டால் வார்த்தையில் மன்னிப்பும், எண்ணத்தில் வக்கிரமுமாக பழிவாங்க துடிக்கின்றனர்
 5. அதுவே அவளின் அந்தரங்கம் வெளியிடப்படுவதாக மிரட்டல்… இல்லை இருக்கவே இருக்கு கள்ள காதல்… காமம்.. , விவாகரத்து , நோய், கிசு கிசு… புனைவு.. இத்யாதிகள்…..

தமிழ் பதிவுலக நண்பர்களிடம் இனி இதுபோன்று நடக்காமல் இருப்பதற்கான நடைமுறைகளை உருவாக்குமாறும், பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற பெண்கள் இதை உரிய வழிகளில் எதிர் கொள்வதற்கான முறைகளையும் உருவாக்குமாறும் பணிவுடன் கோருகிறேன். கடந்த நாட்களில் நான் பட்ட மனவேதனை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது என்ற வைராக்கியத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

என் குடும்பத்திலோ எனக்கோ ஏதாகிலும் பிரச்னை வந்தால் அதற்கு இரும்புத்திரை அரவிந்த், முகிலன் இவர்களே காரணம் என்றும் சொல்லிக்கொள்கிறேன்..

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. பதிவரசியல்: புனைவில் துகிலுறியும் வக்கிரக்காரர்கள்!…

  ஒரு பெண் மொக்கை பதிவராகயில்லாமல் சமூக அக்கறையோடு சில கருத்துக்களை தெரிவித்தால் ஒரு பெண்ணா இப்படி பேசுவது என ஆணாதிக்க மனம் கனற்று புனைவாய் புகைகிறது…….

  • நண்பர்களே இந்த இடுகைக்கு பின்னூட்ட மட்டறுத்தலை வைத்திருக்கிறோம். எனவே நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டறுத்தல் காரணமாக தாமதாக வெளிவரும். சிரமத்தை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம். நன்றி

 2. “ஒரு பெண் ஏதாவது ஒரு புகார் தெரிவித்தால் ஏது என்ன்வென்று விசாரிக்கமாலேயே பல ஆண் பதிவர்கள் ஆதரவு அளிக்க வருகின்றனர் என்று ஒரு மூடநம்பிக்கை இங்கே நிலவுகிறது. இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறோம்.-”

  சீக்கிரம்.

  # திற்மையாகவும், தனித்தன்மையோடும், சமூக அக்கறையோடும் இருக்கக் கூடாது..
  # அப்படியே இருந்தாலும் தப்புகளை பொதுவில் தட்டி கேட்கக்கூடாது.. அதுவும் முக்கியமாக ஆண்களை..
  # பிரச்சனையில்லாமல் ( மொக்கையாகவே ) நீடிக்க வக்கிரம் பிடித்தவர்கள், கயவர்கள் , அடாவடித்தனம் செய்பவர்களோடான நட்பும் ஆதரவும் மிக மிக அவசியம்..
  # ஒரு ஆணிடம் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்து கொள்ளும் ஆண்கள் , பெண் என்று வந்துவிட்டால் வார்த்தையில் மன்னிப்பும், எண்ணத்தில் வக்கிரமுமாக பழிவாங்க துடிக்கின்றனர்

  இத்துடனாவது இது முடிவுக்கு வரட்டும், வழவழ சமாதானங்கள் இல்லானால்.

 3. என்னவோ போங்க….

  இந்த சமுதாயம் ஆண் ஆதிக்கம் நிறைந்துதான்…… பதிவில் மட்டும் இல்லாவிட்டால் எப்படி… முந்தைய பிரச்னையின் ஆணி வேர்கள் திருந்தியதாக தங்கள் எழுத்தில் (பதிவுகளில்) இன்னமும் காட்டிக்கொள்ளவில்லை….

 4. இந்த நிகழ்வில் முகிலனையும், அரவிந்தையும் வன்மையாக கண்டிக்கிறேன். முன்பு சந்தனமுல்லை அவர்கள், இப்பொழுது சாந்தி…இனியும் இந்த நிலை தொடர கூடாது. சாந்தி அவர்கள் இது குறித்து பிற பதிவர்களிடம் தெரிவித்த பொழுது… கண்டு கொள்ள வில்லை எனும் பொழுது…பதிவர்களின் மனநிலை, அக்கறை வருத்தப்பட வைக்கிறது.

 5. வினவு க்ரூப்பின் மற்ற்றொரு குறுக்கு புத்தி. வினவுக்கு எதிரான அணைத்து பதிவர்களையும் சந்திக்கு இழுத்து அசிங்கப்பட வைக்க நினைக்கும் வக்கிரபுத்தி. ஒரு பெண்ணை பகடைக்காயாக பயன்படுத்தும் கோணல் புத்தி. உண்மையிலே பெண்ணை இழிவுபடுத்தும் செயலைத்தான் வினவு குரூப் செய்கிறது. பதிவர்களே உசார்…..

  • ஆமாம் பதிவர்களே .. உசார் …

   மூட்டூஊஊஊ … சொல்கிறார் கேளுங்கள் ..

   உங்கள் கட்சிப் பதிவர்களின் அயோக்கியத்தனத்திற்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ?..

   பதிவில் வினவு சொல்ல வரும் கருத்தில் ஏதேனும் மாற்றுக் கருத்து சொன்னால் உங்கள் முகத்திரை கிழிந்து விடும் என்பதற்காக இப்படி புலம்பாதீர்கள் மூட்டூஊஊ …

 6. இருவாரங்களுக்கு முன்பே இதைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தாலும் பிரச்னை என்னவென்று தெளிவாகப் புரியவில்லை. இவ்விடுகையில் தான் தெளிவாக எழுதி இருக்கிறீர்கள்.

  //குழுமத்தில் நியாயம் பேச தெரியாவிட்டால் , தட்டி கேட்காவிட்டால் உங்களுக்கெதுக்கு குழுமம்.?.உங்க சொந்த விளம்பரத்துக்காக மட்டுமா?.. பதிலேயில்லை..// நியாயமான கேள்வி.

  //ஆக ஒரு பெண்ணிடம் தோற்று போக ஈகோ இடம் தருவதில்லை.. நியாயமென தெரிந்தாலும் அவளை மட்டம் தட்டி ஓட விரட்டணும்.. இப்படி இழிவுசெய்துதான் அவளுக்கு துணிவே தருகின்றீர்கள் என்பதையும் நியாபகம் வையுங்கள்..//
  நிச்சயமாக; வாழ்த்துக்கள்!

 7. இந்த மாதிரி தனி நபர்கள் சார்ந்த பிரச்னைகள், சச்சரவுகள் அயர்ச்சியை தான் தருகிறது. இருந்தாலும் அடுத்த மனிதர்கள் பற்றி படிக்க பலருக்கும் சுவாரஸ்யமாக இருக்கும். முதல் பத்தி மட்டும் தான் படித்தேன்.

  இணையமும் தொழில் நுட்பமும் வளர்ந்த அளவு நாம் இன்னும் வளர வில்லையே, இன்னமும் ஆண் பெண் உறவு நம் சமூகத்தில் சரியாக வளர வில்லையே என்ற வருத்தம் தான்.

  • //இணையமும் தொழில் நுட்பமும் வளர்ந்த அளவு நாம் இன்னும் வளர வில்லையே, இன்னமும் ஆண் பெண் உறவு நம் சமூகத்தில் சரியாக வளர வில்லையே என்ற வருத்தம் தான்.//

   ராம்ஜி சொல்வதை அப்படியே ஆமோதிக்கின்றேன். ஆணாதிக்க சமூகம் அதன் நீட்சியாக இணையத்தில் அதன் திமிரை நிலைநாட்ட முயல்கிறது!

   வன்மையாக கண்டிக்க தக்க செயல்!

 8. Sorry to hear this injustice wielded to my good friend Shanthi mary from thailand. Wonder if Mukilan, Arvind and the others (ir0 responsible for these posts, would have had the guts to do this face to face. maybe they are happy and sadistic to get away with all these behind the facade of the electronic media!

  Hope the culprits are brought to the book. Soon.

 9. ஆணாதிக்க வக்கிரத்துக்கு எதிராக துணிந்து போராட உறுதி பூண்டுள்ள சாந்தி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  ஆணாதிக்க வக்கிரப் பதிவர்களுக்கு எதிரான கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். இதற்கு எதிரான போராட்டத்தில் ஒரு பதிவராக என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.

  பதிவர் சாந்தி சொல்வதிலிருந்து பதிவுலகில்கூட சாந்தியின் பிரச்சினை போன்ற நியாயமான விசயங்களுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்க மறுத்து வடகரை வேலன் முதல் பல பதிவர்கள் அமைதியாக ஒதுங்கியுள்ளனர் என்பதையும், இதே பதிவர்கள்தான் புரட்சி, போராட்டம் போன்றவற்றை கொச்சைப் படுத்திய பதிவுகளில் வெட்கமின்றி தமது ஆதரவைத் தெரிவித்தனர் என்பதையும் இங்கு ஒப்பிட்டு நோக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இவர்கள் எங்கு ஒற்றுமையாக உறுதியுடன் செயல்பட்டுள்ளனர், எங்கு கட்டாய மௌனத்தை பதிவு செய்துள்ளனர் என்பது பரிசீலிக்கப் பட வேண்டிய விசயமாக உள்ளது.

  நேஞ்சில் நேர்மையும், மனிதாபிமானமும் உள்ள அனைத்து பதிவர்களும் ஒன்றாய் ஆணாதிக்க வக்கிரத்துக்கு எதிராய் குரல் கொடுக்க வேண்டும். மெய் நிகர் உலகமாம் பதிவுலகில் கூட பெண் என்ற அடையாளம் பாலியல் வக்கிரத்திற்கு இரையாவது மனதில் பெரும் குற்றவுணர்வையும், ஆற்றாமையையும் ஏற்படுத்துகிறது.

  பெண் என்றாலே துகிலுரிந்து ரசிக்கும் வாயாரிச பதிவுகளை எழுதும் பதிவர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு தமது பதிவுகளில் என்ன எழுதுகிறோம் என்பதை பொறுப்புணர்வுடன் இத்தருணத்தில் பரிசீலிக்க வேண்டும் என்பதை கூடுதல் கோரிக்கையாக முன் வைக்கிறேன்.

 10. பெண்கள் முற்போக்கு பேசினால் இப்படி புனைக்கதை எழுதும் வக்கிரக்காரர்களுக்கு சரியான சாட்டையடி..

  பெண்களிடம் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்க மறுக்கும் வக்கிரக்காரர்கள் அனைவரும் வெளியில் வீரம் பேசி உள்ளே தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள்.

  சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து இந்த வக்கிரக்காரர்களை சிறையிலடைத்தால் தான் மற்ற வக்கிரக்காரர்களுக்கும் புத்தி வரும்.

 11. இந்த பொங்கல் வடை எல்லாம் பெண்களுக்கு மட்டும் தானா? அப்துல்லா பிரச்சனையின் பொழுது சவுண்டே காணோம்? லீவுக்கு ஊருக்கு போயி இருந்திங்களோ?

 12. பூக்காரியை எழுதிய புனைவர் சாக்கடைக்கு சரியான பாடம் புகட்டியிருந்தால் இதுபோன்ற புனைவுகளை யாரும் எழுத பயப்படுவார்கள். அவரை தலையில் வைத்து கொண்டாடியதன் விளைவுதான் இதோ இந்த மற்றொரு புனைவு.
  எழுதியவர்களுக்கு மற்றும் அல்ல அதற்கு துணைபோகும் எல்லாருக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.

  • Mr.Pulikesi,,

   நீங்க எங்கயாச்சும் நேரடியா தலையிட்டு அதை பாத்து அப்துல்லா தலையிட வேணாமுன்னு சொன்னாருங்களா? அப்படி நீங்க பொங்கி இருந்தா அதுக்கான ஆதாரம் பிளீஸ்..அப்படியே அப்துல்லா அனுப்பிய கடிதம் பிளீஸ்

   • ஐயா சந்தோசு, நீர் அப்துல்லாவுக்கு போன் போட்டு இதப்பத்தி பேசலாமான்னு கேட்டுப் பார். அப்பறம் பேசு. இங்க என்ன பிரச்சினை? அதப்பத்தி பேசமாட்டீரோ?

    • m.m. abdulla
     View profile
     இங்கு இனி விவாதம் வேண்டாம்.பிளீஸ்.நான் பதிவிட்டது விவாதிக்க அல்ல. அவர்கள் 10 பேரிடம் சொல்லும்போது அதில் 5 பேர் உண்மை என்று நம்ப வாய்ப்புண்டு.அவர்கள் அறிந்துகொள்ளத்தான் பதிவிட்டேனே தவிர பிரச்சனை ஏற்படுத்தவோ அல்லது விவாதிக்கவோ அல்ல. என்னுடைய இந்த மெயில் இந்தத்திரியில் கடைசி மெயிலாக இருக்கட்டும். புரிதலுக்கு நன்றி. — m.m.abdulla 93813-77888 தமிழால் இணைவோம்
     More options Aug 9, 4:06 am

    • //” டீச்சர் என் குச்சியை பிடுங்கிட்டான் ” போன்ற பிரச்னைகள் வராமல் உயர்ந்த ,
     சிறந்த கருத்தாடல்கள் வரட்டும்..
     அல்லது சிரித்து மகிழ முழு மொக்கையாக இருக்கட்டும்..//

     இது என் தனிப்பட்ட பிரச்சனையால்தான் என்னுடைய வலைப்பூவில் எழுதினேன்.வினவு
     போன்ற பிற வலைப்பூவில் போய் எழுதவில்லை.இன்னும் சொல்லப்போனால் அந்த இடுகையை
     எந்த திரட்டியிலும்கூட இணைக்கவில்லை.என்னுடைய பிளாகில் எழுதிவிட்டு
     சம்மந்தப்பட்டவருக்கு ஒரு லிங்க் மட்டும் அனுப்பிவைத்தேன்.இங்கு விவாதம்
     வேண்டும் என்று கோரும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது.அண்ணாச்சி என்னிடம்
     ஒருவார்த்தை கேட்டுவிட்டு இந்த ஃபோரத்தில் போட்டு இருக்கலாம்.ஒன்றும்
     பிரச்சனையில்லை. இனி இங்கு இது தொடர்பாக விவாதம் வேண்டாம்.

     முற்றும்


     m.m.abdulla

     —————————

     நண்பர் அப்துல்லா, இதை போடுவதால் உங்கள் பிரச்னைக்கு தீர்வு என்பதல்ல..

     கண்டிப்பாக உங்கள் பிரச்னையையும் பொதுவில் தனியாக போடுங்கள்..

     நீங்கள் விரும்பினால் நடுநிலைமையாளர் வைத்தும் பேசுங்கள் , நான் செய்தது போல… சாட்சிகள் கொடுங்கள்…விளக்கங்கள் பெறுவோம்…

     எனக்கும் உங்களுக்கும் எந்த முன்விரோதமுமில்லை…

     அதே போல இங்கே புதிதாக வந்து கேள்வி கேட்பவர் பலருக்கு என்னை தெரியுமா னு கூட எனக்கு தெரியலை.. ஆனால் அவர்களை எனக்கு தெரியாது…

     இருப்பினும் தெளிவு படுத்தவேண்டியது என் கடமை…

   • //பொங்கி இருந்தா அதுக்கான ஆதாரம் பிளீஸ்..அப்படியே அப்துல்லா அனுப்பிய கடிதம் பிளீஸ்//

    ஆதாரம் கொடுத்தால் சந்தோஷ் நம்பிவிடுவாரா என்ன? சந்தோஷ் என்றால் கொக்கா?

    முகிலனும், அரவிந்தனும் என்ன எழுதினார்கள் என்பதை சாந்தி ஆதாரத்துடன் வைத்துள்ளார், அதற்காக முகிலனையும், அரவிந்தனையும் அவர் கண்டித்துவிட்டாரா என்ன?

 13. //இந்த பொங்கல் வடை எல்லாம் பெண்களுக்கு மட்டும் தானா? அப்துல்லா பிரச்சனையின் பொழுது சவுண்டே காணோம்? லீவுக்கு ஊருக்கு போயி இருந்திங்களோ?//

  காமெடி பண்ணாதீங்க. அவர் தன்னைப் பற்றி ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் பகிர்ந்தது எப்படியோ தன் காதுக்கு வந்தது குறித்து வருந்தி எழுதி இருந்தார். இதெல்லாம் ஒரு விஷயமா?
  பகிரங்கமாக யாராவது அவரைப் பற்றி பேசியதை ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தால் போய்ப் பொங்குங்களேன்.

  முட்டாள்தனமா விதண்டாவாதம் செய்றதுக்குன்னே கெளம்பி வந்துடறாங்கப்பா.

  • //காமெடி பண்ணாதீங்க. அவர் தன்னைப் பற்றி ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் பகிர்ந்தது எப்படியோ தன் காதுக்கு வந்தது குறித்து வருந்தி எழுதி இருந்தார். இதெல்லாம் ஒரு விஷயமா?//
   அட.. ஒரு பெண்ணை பத்தி தப்பா பேசுனா அது வன்கொடுமை.. அதே ஒரு ஆணை பத்தி பேசுனா.. பகிர்தலா.. ஆச்சுடா (கோவை சரளா குரலில் படிச்சிகோங்க)..

 14. சகோதரி சாந்தி அவர்களே, உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் மேலும் இதற்க்கு காரணமான கயவர்களுக்கு என் கண்டனங்கள்.

  ஆனால் ஒரு விஷயம், நீங்கள் பிராது கொடுப்பதற்கு இந்த மரத்தடி சொம்பு கட்ட பஞ்சாயத்து கோஷ்டி தானா கிடைத்தது! இவர்களின் பெண்ணீய யோக்கியதையை லீலா மணிமேகலையிடம் கேட்டால் தெரியும்.

 15. abc,
  படிக்க வேண்டிய காலத்துல படிக்காம பெண்ணுரிமைக்காக ரொம்ப பொங்கியிருப்பிங்க போல..

  அப்துல்லா பிரச்சனை என்னான்னா ஒரு பெண் பதிவர் யாரை பாத்தலும் அப்துல்லாவை பத்தி தரக்குறைவா சொல்லி இருக்காங்க..அது பத்தாதுன்னு ஆதாரங்களை சேகரிக்க ஒரு பெண்ணை செட் பண்ணி அவங்க கிட்ட chat பண்ண சொல்லி இருக்காங்க.. கடசியில இவ்வுளவு நல்லவரா இருக்கிங்க உங்களை பத்தி ஏன் அவங்க இப்படி சொன்னாங்கன்னு சொல்லி இருக்காங்க..

  அவரை விடுங்க மங்களூரு சிவா மேட்டருக்கு வாங்க.. அவர் பிரச்சனையில எந்த ஆதாரத்துல பொங்கல் சாப்டிங்க?.. கோர்டுக்கு போலிஸ் ஸ்டேஷனுக்கு.. போங்கன்னு சொன்னவங்க தானே நீங்க.. இதுக்கு மட்டும் எதுக்கு பதிவு போக வேண்டியது தானே அங்க..

  • இந்த சந்தோஷூ பதிவை படிக்காமலேயே இப்பிடி பின்னூட்ட ஜபஸ்தஸ்து காட்டுகிறாரே… சைபர் கிரைமுக்கும், வக்கீலுக்கும் போயாச்சு என்பதை தெளிவாக எழுதியிருக்கிறார்கள் .. நீங்க படிக்குற காலத்தில படிக்காம என்னத்த செய்ய போயிட்டீங்கன்னெல்லாம் நான் கேக்க மாட்டேன்….. வெளிப்படையா எழுதப்பட்ட இந்த புனைவுக்கு கண்டனம் கூட சொல்லாம மங்களூர் சிவாவுக்குகாக 3 மாசமா தூக்கிய சொம்பை கீழே வைக்காமல் திரியும் நீர்தான் ஓய் சாட்சாத் ‘ஆணி’யப் போராளி…

  • //கடசியில இவ்வுளவு நல்லவரா இருக்கிங்க உங்களை பத்தி ஏன் அவங்க இப்படி சொன்னாங்கன்னு சொல்லி இருக்காங்க..//

   ஒரு வருசமா சேட் பண்ணி இந்த மாபெரும் உண்மையைக் கண்டுபிடிச்சு அதையும் அப்துல்லா கிட்டையே சொன்ன அந்த லூசு யாருப்பா? ந‌ல்ல‌வ‌ருன்னா விட‌ வேண்டிய‌து தானே? எதுக்கு இந்த சடன் டகால்டி வேல‌? அதால தான் பாவம் அப்துல்லாவுக்கு மண்டை கொடச்சல். இது கூடப் புரியலயா?

   அதுவும் தவிர, தேவையில்லாமல் உங்க போதைக்கு இப்ப அவரை இழுக்காதீங்க. யாரும் தனக்காகப் பொங்கலியேன்னு அவர் நீலிக் கண்ணீர் விட்டுக் கூட்டம் சேர்க்க மாட்டார். (அதெல்லாம் பண்ணீ கேவலமா சீன் போடறது வேற ஆளு!) ஜாலியா மனுசன் ரம்ஜான் கொண்டாட்டும். ஈத் முபார‌க் அப்துல்லா!

   இதுக்கு மேல இதப் பத்தி நான் பேச மாட்டேன். மெயின் மேட்டரைத் திசை திருப்ப வேண்டாம்.

   • //ஒரு வருசமா சேட் பண்ணி இந்த மாபெரும் உண்மையைக் கண்டுபிடிச்சு அதையும் அப்துல்லா கிட்டையே சொன்ன அந்த லூசு யாருப்பா? ந‌ல்ல‌வ‌ருன்னா விட‌ வேண்டிய‌து தானே? எதுக்கு இந்த சடன் டகால்டி வேல‌? அதால தான் பாவம் அப்துல்லாவுக்கு மண்டை கொடச்சல். இது கூடப் புரியலயா?//

    என்னாங்க ஒரு பெண் பதிவரை ஒரு பொண்ணை லூசுன்னு சொல்லுறீங்க.. இதெல்லாம் ஆதிக்கம் இல்லிங்களா? அய்யோ வினவு தளத்துளையே பெண்ணுக்கு எதிராக வன்கொடுமையா…இதைக்கேட்க நாதி இல்லையா? இதுக்கு தனிப்பதிவு உண்டா? சைபர்கிரைம் வக்கில் நோட்டீஸ், வேலை செய்யும் இடத்துக்கு சென்று போராடும் போராட்டம் உண்டா? எங்க எப்பன்னு சொல்லுங்க நானும் லீவு போட்டுட்டு வரேன்..

   • // யாரும் தனக்காகப் பொங்கலியேன்னு அவர் நீலிக் கண்ணீர் விட்டுக் கூட்டம் சேர்க்க மாட்டார். (அதெல்லாம் பண்ணீ கேவலமா சீன் போடறது வேற ஆளு!) //

    இப்ப யாரை திட்டறீங்க?

   • //அதுவும் தவிர, தேவையில்லாமல் உங்க போதைக்கு இப்ப அவரை இழுக்காதீங்க. யாரும் தனக்காகப் பொங்கலியேன்னு அவர் நீலிக் கண்ணீர் விட்டுக் கூட்டம் சேர்க்க மாட்டார். (அதெல்லாம் பண்ணீ கேவலமா சீன் போடறது வேற ஆளு!) ஜாலியா மனுசன் ரம்ஜான் கொண்டாட்டும். ஈத் முபார‌க் அப்துல்லா!//

    ABC,
    என்னாங்க பெண்களுக்கெதிரா இவ்வுளவு பெரிய வன்கொடுமையை அதும் வினவு தளத்துல செய்றீங்க அய்யையோ.. இப்ப இவங்க வடிக்கிறதெல்லாம் நீலிக்கண்ணீரா? கொடுமையே நாங்க கூட உண்மைன்னு இல்ல நம்புனோம்.. அப்படி இல்லையா இது?

 16. பெண் விவாதித்தால் புனைவு, பெண் கிண்டல் செய்தாலும் புனைவு.. அடத்தூ மானங்கெட்ட ஆணாதிக்க மனம் கொண்ட பதிவர்களே, புனைவு எழுதுவதினால் கிழிவது உங்கள் டவுசர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்….

 17. உண்மையான பேரை கூட சொல்லத்துப்பு இல்லா துப்பு கெட்ட ஜார்ஜூ புஸ்ஸூ…

  //வெளிப்படையா எழுதப்பட்ட இந்த புனைவுக்கு கண்டனம் கூட சொல்லாம //
  கண்டனத்தை சொல்லிட்டா எல்லாம் சரியாயிடுமா…உண்மையான பிரச்சனை என்னானு தெரியாம.. பிரச்சனையோட ஆழம் புரியாம.. சும்மா சும்மா பொங்க நான் என்ன போலி பெண்ணியம் பித்தாளையா? அதுவும் இல்லாம நான் கேட்டது போவுறவங்க அங்கன போக வேண்டியது தானே.. இங்க பதிவு போட்டு வெளம்பரம் தேடிகிட்டு..பாக்க தானே போறோம் அங்க போயி என்னத்த கிழிக்க போறீங்கன்னு..

  //மங்களூர் சிவாவுக்குகாக 3 மாசமா தூக்கிய சொம்பை கீழே வைக்காமல் திரியும் நீர்தான் ஓய் சாட்சாத் ‘ஆணி’யப் போராளி…//
  நாங்க பொம்பளைங்களுக்கு ஆதரவா தான் பொங்கல் வெப்போமுன்னு சொல்லுங்க சொம்மை காய்லான் கடையில போடுறோம்.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லை..

  • சந்தோஷ் போன்ற ஆட்களுக்கு ஒரிஜினல் பெயர் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன? திரு ஆணாதிக்க பதிவர்களின் அல்லக்கை அவர்களே, உங்கள் கும்பல் வெளிப்படையாக புனைவு எழுதும்போது ‘வாய்’ மூடிக்கொண்டிருக்கும் நீங்கள் புனைவெழுதும் வக்கிரக்காரர்களை வெளிப்படையாக திரை கிழிப்பதைக்கண்டு மட்டும் ஏன் அஞ்சுகிறீர்கள்? இவ்வளவு கோழையா நீங்கள்?

   • சார்ஜு புஸ்ஸு.. ஒருவரை பற்றி எதுவுமே தெரியாமல் அவரை பற்றி முன்முடிவு எடுப்பது ஒரு வித ஆதிக்கம் தான்.. பள்ளிக்கூடத்துல சொல்லிக்குடுக்கலையா? சரி அரை குறை குரூப்பு போல விடுங்க…பொங்குவதற்கு முன்னாடி பால பாடங்களை படிச்சிட்டு வாங்க..

    //சந்தோஷ் போன்ற ஆட்களுக்கு ஒரிஜினல் பெயர் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன? திரு ஆணாதிக்க பதிவர்களின் அல்லக்கை அவர்களே, உங்கள் கும்பல் வெளிப்படையாக புனைவு எழுதும்போது ‘வாய்’ மூடிக்கொண்டிருக்கும் நீங்கள் புனைவெழுதும் வக்கிரக்காரர்களை வெளிப்படையாக திரை கிழிப்பதைக்கண்டு மட்டும் ஏன் அஞ்சுகிறீர்கள்? //

    “நீங்க எங்களுக்கு சொம்படிக்காட்டி நீயும் அல்கொய்தா தான்னு” அந்த சார்ஜு புச்சு சொன்னதை அப்படியே சொல்லுறீங்க.. எதை வெச்சி நான் அந்த கும்பலில் ஒருவனுன்னு சொன்னிங்க ஆதாரம் தர முடியுமா? இல்ல சைபர் கிரைமுக்கு போன்னு வழக்கமான பதிலை சொல்லுவிங்களா?

    போயி என்னோட பதிலை ஒழுங்கா படிங்க..ஒரு விஷயத்த பத்தி முழுசா தெரியாம வினவுல எழுதிட்டாங்கங்கிறதுக்காக முன்முடிவை எடுக்கும் மூடன் அல்ல நான். இம்முட்டு பேசுறீங்களே வினவு கோஷ்டி கிட்ட அவங்க பிராது குடுக்குற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்திங்க.. புனைவை பாத்த மாத்திரத்திலேயே பொங்க வேண்டியது தானே? என்னாங்க நீங்க ஒரு சிறந்த பெண்ணியம் பித்தாளை வாய்ப்பை இழந்துட்டிங்களே?

    //இவ்வளவு கோழையா நீங்கள்?//
    பாருய்யா சொந்த பேரை சொல்ல கூட தைரியம் இல்லாத ஆம்பளை சிங்கம்..

    அப்புறம் புஸ்ஸு.. இந்த லீனா மணிமேகலை லீனா மணிமேகலைன்னு ஒரு அம்மாவுக்கு எதிரா எல்லா வகையிலும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதே அப்ப எங்க ஈராக்குக்கு போயி இருந்திங்களா?

    • ஆனாலும் சந்தோஷ் ரொம்ப பாவங்க நீங்க, அப்துல்லாவையும், மங்சிங்யையும் விட்டுட்டு இப்ப லீனா கிட்ட போயிட்டீங்களா? நல்லது… மறுபடியும் உருப்படியா எதையும் படிக்காத அவசரகுடுக்கைத்தனம்தான் வெளிப்படுது… லீனா ஒரு ஈழத்தமிழரை ஏமாற்றியதையும், சம்பளம் கொடுக்காமல் தொழிலாளியை அடித்ததையும், மார்க்சிய ஆசான்களை (அவர்கள் ஆண்கள்தான்) பற்றி மிகக் கேவலமான புனைவு எழுதியதை எதிரத்துதான் பொங்கினோம்.. போய் பழைய பதிவுகளை படித்து பாருங்கள்…

     ////எதை வெச்சி நான் அந்த கும்பலில் ஒருவனுன்னு சொன்னிங்க ஆதாரம் தர முடியுமா?//// இன்னும் பதிவில் குறிப்பிடுள்ள விசயத்துக்கு கண்டங்களை தெரிவிக்காமல் விசயத்தை திசை திருப்புவதிலேயே குறியாய் இருக்கும் ஆணாதிக்க பதிவர்களின் முதன்மை அல்லக்கை நீங்கள்தானோ என படிக்கும் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் சந்தேகம் வரும்…

   • அப்துல்லாவுக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு கண்டனம் சொல்லவில்லை என்பதாலேயே சாந்தி அவர்களுக்கும் நீதி மறுக்கப் பட வேண்டும் என்று சந்தோஷ் விரும்புவது போலத் தெரிகிறது.

    அவரது கோபம் வினவின் மீதா, பெண்கள் மீதா அல்லது ஆணாதிக்கம் இப்படி அப்பட்டமாக அடி வாங்குவதன் மீதா என்பது அவருக்கே கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். மா. சி முன்பு சொன்னது போல வறட்டுத்தனமாக சைடு எடுத்துக் கொண்டு வறட்டுத்தனமாக நியாயம் பேசும் இவர்களுக்கு மத்தியில் தான் நம்புகிற தத்துவம் கொள்கை சரி என்று விட்டுக் கொடுக்காமல் வாதிடும் அதியமான் கோடி முறை மேலானாவர்.

    சிலரது மன வக்கிரங்கள் இது போன்ற நிகழ்வுகளில்தான் வெளிப்படுகின்றன.

    • //முகிலன் Says:
     8 August 2010 09:16

     நாகரீகமாக வெளிப்படுத்திய அப்துல்லாவுக்கு ஒரு சல்யூட்.

     சிவப்புச்சட்டைக்காரர்கள் இந்த வெள்ளைச்சட்டைக்காரரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.//

     முகிலன் அப்துல்லா பதிவில் இப்படி எழுதியுள்ளார். சிவப்புச் சட்டைக்காரராகிய வினவு நாகரிகமாக ஆணாதிக்கப் பதிவர்களை அம்பலப்படுத்தவில்லை என்பதுதான் சந்தோஷின் கோபமோ?

     சந்தோஷ் எப்போது முகிலனின் பினாமியானார்?

    • அசுரன் அண்ணே.. உங்க மேலயும் உங்க எழுத்து மேலையும் ரொம்ப மரியாதை வெச்சி இருக்கேன்.. நீங்களும் இந்த மொக்கை கூட்டத்துல சேர்ந்தது தான் கொடுமை..என்னோட பதில்களில் எதுலையும் நான் இந்த பதிவை பற்றி பேசவே இல்லை..நீங்க எதை வெச்சி முடிய் பண்ணீங்க? இதுல நான் சாந்தி மேடத்துக்கு நீதி மறுக்கிறேன்னு எதை வெச்சி முன் முடிவு எடுத்திங்க.. நீங்க எப்ப இருந்துண்ணே இது மாதிரியான முன் முடிவுகளை எடுக்க ஆரம்பிச்சிங்க..

     //அவரது கோபம் வினவின் மீதா,//
     ஆம் என்னோட கோபம் முழுவதும் வினவின் மீது தான்.. அவங்க யாருண்ணே பதிவுலகில் கட்டப்பஞ்சாயத்து செய்ய? அப்படியே பஞ்சாயத்து செய்வதாக இருந்தாலும் அதென்னா ஆண்களுக்கு என்றால் ஒரு நியாயம் பெண்களுக்கு என்றால் ஒரு நியாயம்?

     இந்த மாதிரியான பதிவுகளில் என்ன மாதிரியான கொள்கைகளை கண்டீர்கள்? வெட்டித்தனமான காரணங்களுக்காக உருவாக்கப்படும் மின்குழுக்குளில் உருவாகும் வெட்டிச்சண்டைகளை பஞ்சாயத்து செய்வதா மக்கள் புரட்சி? கஷ்டப்படும் மக்களுக்கு இந்த வெட்டிச்சண்டையில் என்ன பிரயோஜனம்?

     ///சிலரது மன வக்கிரங்கள் இது போன்ற நிகழ்வுகளில்தான் வெளிப்படுகின்றன.//

     என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும் என்னுடைய வக்கிரங்களைப்பற்றி.. They know my stands towards women. உங்களிடமிருந்து இப்படியொரு மொக்கையான வாதத்தை எதிர்ப்பார்க்கவில்லை..Any have thanks for your certificate.

    • //என்னோட பதில்களில் எதுலையும் நான் இந்த பதிவை பற்றி பேசவே இல்லை..//

     அதுதான் பிரச்சினையே… இந்தப் பதிவைப் பற்றி பேசாமால் போன வாராம் ஆத்தா செத்துப் போச்சின்னு அழுதால் அதன் பொருள் என்ன சந்தோஷ் அவர்களே?

     இந்தப் பதிவு முன்னிறுத்தும் பிரச்சினையை விட வேறு ஏதோ உங்களுக்கு ஆர்வமூட்டம் விச்யம் உள்ளது என்கிற அளவில் மட்டும்தான் எங்களால் புரிந்து கொள்ள இயலும்.

    • //அவங்க யாருண்ணே பதிவுலகில் கட்டப்பஞ்சாயத்து செய்ய? அப்படியே பஞ்சாயத்து செய்வதாக இருந்தாலும் அதென்னா ஆண்களுக்கு என்றால் ஒரு நியாயம் பெண்களுக்கு என்றால் ஒரு நியாயம்? //

     வினவு மீது உள்ள கோபத்தினால் சாந்தியை தண்டிக்கும் சந்தோஷ் ஒரு நல்ல நீதிமான். வாழ்க அவரது நீதி பரிபாலனம்

   • //இன்னும் பதிவில் குறிப்பிடுள்ள விசயத்துக்கு கண்டங்களை தெரிவிக்காமல் விசயத்தை திசை திருப்புவதிலேயே குறியாய் இருக்கும் ஆணாதிக்க பதிவர்களின் முதன்மை அல்லக்கை நீங்கள்தானோ என படிக்கும் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் சந்தேகம் வரும்…//

    அதாவது நீங்க போட்டிருக்கும் இந்த பதிவுக்கு யாரெல்லாம் கண்டனம் தெரிவிக்கவில்லையோ, அவரெல்லாம் ஆணாதிக்கபதிவர்களின் அல்லக்கைகள். ம்ம்…இதெல்லாம் பாஸிசமா தெரியலையா?

    நீங்க எதெல்லாம் சரின்னு சொல்லறீங்களோ அதுக்கெல்லாம் நாங்க தலை ஆட்டனும், தமிழ்மணத்துல ஓட்டு போடனும், அத ஆதரிச்சு பின்னூட்டம் போடனும். இல்லைன்னா நாங்கள்ளாம் உங்களுக்கு எதிரிங்ககளாம். வெளங்கிறும்.

    • சீனு,, இது என்ன கொடுமை.. ஒரு பாதியை மட்டும் எடுத்து போட்டு பதில் எழுதுனா எப்படி /////் விசயத்தை திசை திருப்புவதிலேயே குறியாய் இருக்கும் //// இப்படி தெளிவாத்தானே எழுதியிருக்கேன்.. அப்புறம் ஏன்?

    • // இன்னும் பதிவில் குறிப்பிடுள்ள விசயத்துக்கு கண்டங்களை தெரிவிக்காமல் விசயத்தை திசை திருப்புவதிலேயே குறியாய் இருக்கும் ஆணாதிக்க பதிவர்களின் முதன்மை அல்லக்கை நீங்கள்தானோ என படிக்கும் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் சந்தேகம் வரும்//

     அட! அதுக்குள்ள ரிப்ளையா?

     நீங்க சொன்னது, பதிவில் குறிப்பிட்ட விஷயத்துக்கு கண்டனம் தெரிவித்தே ஆகவேண்டும் என்று எதிர்பார்ப்பது தான் நெருடுகிறது. தெரிவிக்கவில்லையென்றால் உடனே அவர் ஆணாதிக்கவாதியாகிவிடுவது ஏன்?

    • கண்டனம் தெரிவித்தவனெல்லாம் ஆணாதிக்கத்தை விட்டவன் அல்ல, குறைந்த பட்சம் ஒரு அநீதியை, பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் துணிவையாவது வெளிப்படுத்துகிறான், …, ஆனால் விசயத்தை திசைதிருப்பி பிரச்சனையை மூழ்கடிக்க நினைப்பவன் அக்மார்க் ஆணாதிக்கவாதிதான்… இதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.. இது ஏன் உங்களை நெருடுகிறது என்பதுதான் எனக்கு புரியவில்லை?

    • //ஆனால் விசயத்தை திசைதிருப்பி பிரச்சனையை மூழ்கடிக்க நினைப்பவன் அக்மார்க் ஆணாதிக்கவாதிதான்… இதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.. இது ஏன் உங்களை நெருடுகிறது என்பதுதான் எனக்கு புரியவில்லை?//

     என் கேள்வி மிக சுலபம். ஒரு விஷயத்துக்கு கண்டனம் தெரிவிப்பதும்/தெரிவிக்காததும் அவரவர் விருப்பம். ஆனால், கண்டனம் தெரிவித்தவன் ‘தான்’ உத்தமன் என்று சொல்வது தான் ஏன்?

     அசுரன்,

     கண்டனத்தை எதிர்பார்ப்பது எனக்கு நெருடவில்லை. ஆனால், அதை கட்டாயப்படுத்துவது தான் நெருடுகிறது. புரியும் என்று நினைகிறேன்…

    • //கண்டனத்தை எதிர்பார்ப்பது எனக்கு நெருடவில்லை. ஆனால், அதை கட்டாயப்படுத்துவது தான் நெருடுகிறது. புரியும் என்று நினைகிறேன்…//

     வேறு எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? ஒரு அநீதி நடக்கிறது, அதைக் கண்டியுங்கள் என்று கூட நான் எதிர்பார்க்கக் கூடாது என்பதுதான் சரியான பாசிசம் நடைமுறை.

     அல்லது குறைந்த பட்சம் சாந்திக்கு நிகழ்ந்துள்ளது அநீதியே அல்ல எனவே கண்டிக்க இயலாது என்று சொல்லுங்கள். அதுவேறு.

     அதைத்தான் சொல்கிறீர்களா?

    • சீனு, என் மறுமொழியை நிதானமாக படித்து பதில் எழுதினால் நம் இருவரின் நேரமும் மிச்சமாகும்

    • @@@
     //கண்டனத்தை எதிர்பார்ப்பது எனக்கு நெருடவில்லை. ஆனால், அதை கட்டாயப்படுத்துவது தான் நெருடுகிறது. புரியும் என்று நினைகிறேன்…//

     வேறு எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? ஒரு அநீதி நடக்கிறது, அதைக் கண்டியுங்கள் என்று கூட நான் எதிர்பார்க்கக் கூடாது என்பதுதான் சரியான பாசிசம் நடைமுறை.

     அல்லது குறைந்த பட்சம் சாந்திக்கு நிகழ்ந்துள்ளது அநீதியே அல்ல எனவே கண்டிக்க இயலாது என்று சொல்லுங்கள். அதுவேறு.

     அதைத்தான் சொல்கிறீர்களா?
     @@@

     என்ன கொடுமை இது, அய்யா அநீதியைக் கண்டியுங்கள் என்று சொல்வதும், அநீதியை கண்டிக்காமல் திசை திருப்பாதீர்கள் என்று சொல்வதுமே பாசிசம் என்று புரிந்து கொள்ளப்படுமானால் அது என்ன வகையான நாகரிகம் என்று எனக்குப் புரியவில்லை.

     நான் யாரையும் கூப்பிட மாட்டேன், அவர்களே பார்த்து ஏதாவது செய்யட்டும் என்று இருப்பதற்கு சாந்தியும், வினவும் பிச்சையா எடுக்கிறார்கள்?

     தாம் செய்வது நியயாமான நடவடிக்கை என்ற தார்மீக மன உறுதியிலிருந்து சக பதிவர்களின் மனசாட்சிக்கு கோரிக்கை வைக்கிறார்கள். மனசாட்சி உறுத்திய சீனுவோ அதைப் பாசிசம் என்கிறார்.

 18. உங்க‌ளின் ம‌ன‌உறுதிக்கு என்னுடைய‌ பாராட்டு..

  அந்த‌ குழும‌த்தில் உங்க‌ளை அக்கா என்று அழைத்தில் நானும் ஒருவ‌ன்..

  மேலே எழுத‌ப்ப‌ட்ட‌ புனைவில் அக்கா என்று உங்க‌ளை அழைத்த‌வ‌ர்க‌ள் எழுதியிருக்கும் வ‌க்கிர‌க‌ங்க‌ளை பார்க்கும் போது வெட்கி த‌லைக்குனிகிறேன்

  நானும் ஒரு ஆண்ம‌க‌ன் என்ப‌தால்..

 19. பதிவர் சாந்திக்கு என் முழு ஆதரவு..
  மேலும் முகிலன் அர்விந்த் பகிரங்கமாக உங்கள் தரப்பைச் சொல்லு முடியுமா?… ஆணாதிக்கமே நோக்கம் என்பவர்களுக்கு கடும் கண்டனம்.. அப்படிப் பட்டவர்கள் குறைந்த பட்ச்ம் பதிவுலகில் ஒதுக்கப் படவேண்டியவர்கள்….

 20. இப்பதிவில் இருந்து நாம் பெற வேண்டிய செய்திகள் மிக ஆழமானவை. முதலில், இணையம என்பதும் முதலாளிட்ட்துவ, ஒடுக்கு முறை மற்றும் பார்ப்பனிய அரசியலை விரித்து பரப்ப அமைக்க பட்ட ஊடகம்தான். ஆனால், இங்கு மாற்று கருத்துக்களை சொல்வதும் ஒடுக்கு ம்முரைக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும் இடம் உண்டு. எனவே, இங்கும் நாம் எத்தகைய பதிவுலக தொடர்பை நாடுகிறோம் என்பது மிக முக்கியம். பொதுவாக ஒரு பழக்கம் நம் தமிழர்கள் இடையீ உண்டு. எங்கு தமிழ் பான்ட் தெரிந்தாலும், அவற்றையெல்லாம் நல்ல தமிழ் வலை பக்கங்கள் என்று ஏற்று கொண்டு உடனி இணைந்து விடுகிறார்கள். புத்தகங்கள் வாங்கும் போது,பத்திரிக்கைகள் வாங்கும் போது, திரை படங்கள் பார்க்கும் போது தெரிவு செய்யும் நாம், இணையத்தில் அத்தகைய விழிப்புணர்வை காட்டுவதில்லை. நமது கருத்துக்களுக்கு எங்கு சம வாய்ப்பும், சம அங்கீகாரமும் கிடைக்கும் என்பதை பொறுத்தே, நமது இயக்கம் இருக்க முடியும். அதற்காக அத்தகைய பதிவுகளை எழுதும் நாய்களை விட்டுவிட முடியாது. நான் பிரச்சனையாக அறிவது யாதெனில், தோழி! நீங்கள் எந்த அமைப்போடும் அரசியல் தொடர்பு இல்லைஎன்கிரீர்கள். எனில், உங்கள் கருத்துக்களுக்கு உரமும், அங்கீகாரமும் கிடைக்காது என்பது மட்டும் அல்ல, உங்கள் பிரச்சனைகளையும் துணை நின்று தீர்க்க ஆளிருக்காது. “எனக்கு அரசியல் எல்லாம் பிடிக்காது” என்பது பொதுவாக நடுத்தர வர்க்கம் பழகியிருக்கும் சொற்றொடர். நமக்கு ஒரு அரசியல் இயக்கம் தேவை. ஒரு பேச்சுக்கு, தோழி வினவில் இயங்கி இருந்தால்,எழுதியிருந்தால்???? உங்கள் சுகந்திரத்தை மதிக்கும் அதே வேலையில், ஒரிங்கினைந்து இயங்க வேண்டியதின் தேவையையும்வலியுறுத்த விரும்புகிறேன். தோழியர் யாவருக்கும் இனொரு விஷயம்; ஒருவரை ஒருவர் பார்க்ககூட அரிதான இந்த இணையத்திலேயே இவ்வளவு பிரச்னை உண்டென்றால், நிகழ் உலக ஒடுக்கு முறைகளின் வீச்சு என்னவாக இருக்கும்? எனவே, எச்சூழ்நிலையிலும், எழுதுவத்யும், யாருக்காக எழுத வேண்டும் என்பதும், எங்கு எழுத வேண்டும் என்பதையும் மறக்காமல் இருக்குமாறு வேண்டுகிறேன்.

  • கண்டிப்பாக இனி செய்வேன் சகோதரரே…

   என் எழுத்தை நெறிபடுத்த உதவிடுங்கள்…

   என்னால் ஆன உதவியை என் எழுத்தின் மூலம் பெண்களுக்கு செய்வதே என் முதல் நோக்கம்..

   மற்றவைக்கு என்னை தயார்படுத்துங்கள்..

 21. பதிவுலகில் நட்பென்பது எல்லைகளற்றது. முகந்தெரியாத சக பதிவரிடமும்கூட ஆழ்ந்த நட்புடன் பழகும் சூழலில், இதுபோன்ற மிரட்டல்கள் உருட்டல்களுக்கு முடிவுகட்ட வேண்டியது அவசியமானதாகும். இப்பெண்பதிவரிடம் திமிருடன் நடந்துகொண்ட ஆண் பதிவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

 22. m.m. abdulla – விஜியக்கா, எனக்கு என்ன பிரச்சனைன்னு யாரும் என்னை வினவவை. எனக்காக யாரும் பொங்கலை. நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லையோ?? # டவுட்டு!!!

 23. ஆணாதிக்கத் திமிர், வக்கிரம் என்றால் என்னவென்று ஆணாகிய சந்தோஷ்க்கு தெரிய வாய்ப்பில்லை.

  அப்துல்லாவை ஒரு பெண் பதிவர் இழிவுபடுத்துகிறார் அப்துல்லா தனது பக்கம் நியாயம் உண்டு என்ற துணிபுடன் எழுதுகிறார், இழிவு படுத்திய பெண் பதிவர் திமிருடன் எழுதவில்லை, இன்று வரை அவர் தலைமறைவுதான்.

  ஆனால், நர்சிம் விசயத்தில் நர்சிம்மின் திமிர்த்தனம் சில பல பதிவர்கள் தட்டிக் கேட்க்கும் வரை அப்பட்டமாகவே திரிந்து கொண்டிருந்தது, சாந்தி அவர்களின் விசயத்தில் இதோ இப்போது வரை முகிலனும், அரவிந்தனும் திமிர்த்தனத்துடன் நாங்கள்தான் செய்கிறோம் என்று அறிவித்து செய்து கொண்டுள்ளனர்.

  சந்தோஷ் என்ற நியாயவான் இந்தத் திமிர்த்தனமாக ஆணாதிக்க வக்கிர செயல்பாடுகளை கண்டித்தார் என்றே எல்லாரும் ‘நம்புவோம்’.

  • அசுரன் அண்ணே,
   உங்க போராட்டத்தின் நோக்கம் என்னா? கண்டிப்பு அப்படிங்கிற ஒரு வார்த்தையா? உங்க நியாய்ப்படி ஒருத்தன் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டால் அவனை விட்டுடுவிங்க அப்படி தானே?

   • /உங்க போராட்டத்தின் நோக்கம் என்னா? கண்டிப்பு அப்படிங்கிற ஒரு வார்த்தையா?//

    அப்துல்லா பிரச்சினையில் உங்க போராட்டத்தின் நோக்கம் என்ன சந்தோஷ்?

    கண்டிப்பு என்ற ஒரு வார்த்தையா?

   • //ஒருத்தன் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டால் அவனை விட்டுடுவிங்க அப்படி தானே?//

    கொலை செய்து விட்டு தலைமாறவானவனை விட்டு விடுங்கள் என்று யாரும் சொல்லவில்லை. அப்துல்லாவே அந்தப் பதிவை அவரை இழிவுபடுத்தி எழுதிய பெண் பதிவருக்கான எச்சரிக்கையாத்தான் இட்டுள்ளார். அதில் அதிகபட்சம் சென்று நமது கண்டனத்தை சொல்லலாம், வேறு நடவடிக்கை எனில் அது அப்துல்லா அடுத்து என்ன செய்ய விரும்புகிறார் என்பதைப் பொறுத்தது ஆகும்.

    ஒரு எச்சரிக்கை என்ற அளவில் இட்டுள்ள அப்துல்லா பதிவில் வினவு கருத்துச் சொல்லாததை மட்டுமே கணக்கில் எடுத்து ஆவேசம் கொண்டு குதிக்கும் சந்தோஷின் நடத்தை சீனுவுக்கு பாசிசமாக தெரியுமா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை.

    ஆனால், கொலை செய்து தலைமறைவானவருக்கு கோபப்படும் சந்தோஷ் இதோ இப்போது வரை கொலை செய்துவிட்டு தைரியமாக வலம் வரும் ரவுடி கும்பலுக்கு தனது கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

    இது போன்ற நடைமுறைகளின் மூலம்தான் ஒருவருக்கான சர்டிபிகேட் தானாகவே கருத்து வெளியில் உருவாகிறது என்பதை சந்தோஷ் உணர்கிறாரா என்று தெரியவில்லை.

 24. பெண்கள் சொன்னால் எல்லாமே உண்மை என்ற மனோபவத்தை மாற்றுங்கள் வினவு

  சம்பத்த பட்ட இருபதிவரிடமும் மெயில் அனுப்பி அவர்கள் தரப்பையும் வெளியிட்டு இருக்கலாம்

  இந்த பெண்பதிவரே என்னை பற்றி புனைவு எழுதி பிரபல படுத்து என்று சொன்னவர் தானே !!

  • //பெண்கள் சொன்னால் எல்லாமே உண்மை என்ற மனோபவத்தை மாற்றுங்கள் வினவு //

   மனோபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது வினவு அல்ல. இதில் புனைவு எழுதியவர்களைக் கேட்க என்ன இருக்கிறது? அவர்கள் மிக வெளிப்படையாக ஒரு பெண்ணை இழிவுபடுத்தியிருப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா அல்லது புரிந்துகொள்ள விரும்பவில்லையா?

   இந்தப் புனைவு எனும் வக்கிரமான வார்த்தை வெளிப்பாட்டிற்குப் பின்னால் எந்த நியாயமும் இருந்துவிட முடியாது என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளுங்கள் மின்னல்.

   • அப்படியே இதுக்கும் சேர்த்து பதில் சொல்லிடுங்க

    இந்த பெண்பதிவரே என்னை பற்றி புனைவு எழுதி பிரபல படுத்து என்று சொன்னவர் தானே !!

 25. a)Mr.Vinavu have you read all the relevant blog-posts including comments, emails in google groups before accusing some bloggers. Have you written to them for their version of what has happened and their responses to these accusations. Have you checked the veracity of the accusations and the accuracy of the claims made by Ms.Shanthi Mary.
  b)There is no link the relevant blog-posts/fiction by the two bloggers who have been accused by Ms.Shanthi. So it is difficult to cross-check or verify her claims. Hence one cannot blindly support her.

  Her accusation is
  ‘மெனுவை எழுதி சர்வ் செய்த தாய்லாந்து பெண்ணிடம் வேறு வழியில்லாமல் தர.இப்படியே சாப்பிடும் போதெல்லாம் அவன் மராத்தி கவிதை ஒன்று ஒன்றாக அவளிடம் போக. அவள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஜான்சி அக்காவையும் கூப்பிட்டுக் கொண்டு வந்து விட்டாள்…..

  ‘அரவிந்துக்கும் பொண்ணுகளுக்கும் ராசியே இல்லை. இப்பிடித்தான் பாருங்க ஒரு தாய்லாந்து பொண்ணை ரொம்ப நாள் ரூட்டு விட்டுக்கிட்டு இருந்தாப்ல. அந்தப் பொண்ணு போறப்ப வர்றப்ப எல்லாம் எதாவது கவிதை எழுதி அவ மேல் தூக்கி எறிவாப்ல. அதுவும் பொறுக்கிக்கிட்டு போயிரும். ஆனா ஒரு பதிலும் சொல்லாது. ஒரு நா அந்தப்பொண்ணு ஜான்சி அக்காவைக் கூட்டிக்கிட்டு வந்திருச்சி. எனக்கும் ஷங்கருக்கும் அல்லு விட்டிருச்சி. ஏன்னா ஜான்சி அக்கா பயங்கரமான ஆளு. ஜான்சி அக்கா கையில அரவிந்து இது வரைக்கும் எழுதுன கவிதைத் துண்டு எல்லாம் இருக்கு. வந்தவுக அரவிந்த விட்டு லெஃப்டு ரைட்டு வாங்கிட்டாங்க. நான் என்.சி.சியில இருந்தவ. துப்பாக்கி சுடுறதுல ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன். ]]

  இந்ததப் புனைவில் தாய்லாந்து பெண்ணாகவும், ஜான்சி அக்காவாகவும் என்னையே எழுதியிருக்கிறார்கள் என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியுமென்று நினைக்கிறேன்’.

  This is wrong because it is obvious to any reader that the girl in thailand and Jhansi akka refer to two different characters in this.

  Finally Vinavu who indluged in character assasination in the case of Leena Manimekalai
  is no saint when it comes to writing decently about women. I pity Ms.Shanthi for choosing
  Vinavu and gang to vent her feelings.

  • Finally Vinavu who indluged in character assasination in the case of Leena Manimekalai//// இதெல்லாம் சுத்தப் பொய், பிதற்றல்.. ஆதாரத்தோடு ஆப்பு வைத்திருக்கிறார்கள், போய் தேசம் நெட் தளத்தில் அஜீவன் எழுதிய செய்திகளை வாசித்து பார்க்கவும்

   சாந்தியின் புரிதல் சரியா தவறா என்பது இருக்கட்டும்.. தன்னைப்பற்றி தெருவில் போகிறவன் எழுதினால் அதை அந்த பெண் ஓசையில்லாமல் பொறுத்துகொள்ள வேண்டுமோ..?

 26. ஒரு பெண்ணுக்கு அநீதி என்றவுடன் பொங்கி எழுகிற உங்களது பெருந்தன்மைக்கு வாழ்த்துகள்; வந்தனங்கள்! இதே போல ஒரு ஆண் வலைப்பதிவர் ஒரு பெண்பதிவரால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களிடம் புகார் தெரிவித்திருந்தால், இதே ஆக்கிரோஷத்தோடு அந்த ஆணுக்கும் நீங்கள் துணையாயிருப்பீர்களா? எனக்கும் வலையுலகில் ஓரிரு பெண்களால் மிகுந்த மன உளைச்சலும், துயரமும் ஏற்பட்டிருக்கிறது. ’இனி எழுதவே மாட்டேன்,’ என்று கூட சிறிது நாள் விலகியிருந்திருக்கிறேன். காரணம், ஆண்தரப்பில் எவ்வளவு நியாமிருந்தாலும் ’உதை’யும் அவனுக்குத்தான் விழும் என்பதால் கைநிறைய ஆதாரங்கள் இருந்தும் வாளாவிருந்தேன். இன்னும் அந்த ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன; இப்போது வேண்டுமானாலும் எழுதலாம். ஒருவரும் வர மாட்டார்கள் என்று நன்றாகத் தெரியும். இதோ, இந்தப் பின்னூட்டத்துக்குப் பிறகு கூட, என்னைத் திட்டுகிறவர்கள் தான் இருக்கப்போகிறார்கள். இங்கு பின்னூட்டமிட்ட பிறகு,எனது வலைப்பதிவுக்கு வருகிறவர்கள் நிறுத்துவார்கள் என்றும் ஊகிக்க முடிகிறது. ஆனால், ஆணை எவ்வளவு அசிங்கமாக வேண்டுமானாலும் திட்டலாம், பெண்ணைப் பற்றி எழுதினால் எல்லாருக்கும் பொத்துக்கொண்டு வருகிறபோது, வருகிறவர்கள் வரட்டும், வராதவர்கள் போகட்டும் என்றுதான் இனி எனது வலைப்பதிவைத் தொடரப்போகிறேன்.

  இனி என்போன்று மென்றுவிழுங்குகிற ஆண் வலைப்பதிவர்களெல்லாம் ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தில் போய் உறுப்பினர்களாகச் சேர்வது நலம். நல்லாயிருக்கு நியாயம்!

  • ஒரு பெண்ணான சாந்தி, சந்தன முல்லை போன்றோர் சமூகத்தின் ஆக அதிகபட்ச வன்முறையின் இலக்காக இருப்பவர்கள், வீக்கர் செக்ஸ் என்று பொதுவில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளவர்கள் துணிவுடன் தம்மை இழிவுபடுத்திய ஆண்களை குறிப்பிட்டு எழுதுகிறார்கள்.

   சில கோழைகளோ, தம்மீது அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்த தருணங்களில் எல்லாம் வாளாவிருந்துவிட்டு இப்போது அநீதி இழைக்கப்பட்ட ஒருவர் வெளியில் வந்து போராட நிற்கும் பொழுது பேசுகிறார், அய்யா எனக்கு அன்றைக்கு அநீதி இழைக்கப்பட்டது நான் சொல்லவில்லை அதனால் நான் நியாயவான், ஆனால் இப்போது தைரியமாக சொல்லியுள்ள சாந்தியும், அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளவர்களும் நியாயவான்கள் இல்லை என்று.

   கோழைத்தனத்தைக் கூட பெருமையாகப் பேசும் இவர்களை என்னவென்று சொல்ல?

  • சேட்டை நாம் எத்தனையோ முறை பேசியிருக்கோம்..

   நான் ஆண் பெண் பாகுபாடு பார்ப்பதில்லை என்றும் உங்களுக்கு நன்றாக தெரியும்..

   அதிலும் குழுமத்தில் ஆண்கள் பக்கமே அதிகமாய் வாதாடியுமுள்ளேன்..

   என்னை வளர்த்த ஆண்கள் தாயாஇப்போல , தெய்வம் போன்றவர்கள்..

   நீங்கள் என்னிடம் கூட சொன்னதில்லையே அப்பெண் பெயர்களை..

   நானே கேட்பேனே ..

   இந்த பிரச்னை நடந்ததும் உங்களிடம் கூட முழு விபரம் சொல்லி உதவும்படி கேட்டேனே…

   யாரெல்லாம் முன் வந்தீர்கள் உதவிட.?

   என்னென்ன உதவி செய்தீர்கள்…?

 27. / /ஒரு பெண் ஏதாவது ஒரு புகார் தெரிவித்தால் ஏது என்ன்வென்று விசாரிக்கமாலேயே பல ஆண் பதிவர்கள் ஆதரவு அளிக்க வருகின்றனர் என்று ஒரு மூடநம்பிக்கை இங்கே நிலவுகிறது. //

  இந்த பதிவுக்கு ஆதரவு குடுத்த குடுக்கிற , இன்னமும் குடுக்கபோகும் அத்தனை ஆண்களுக்கும் இது பொருந்தும் . ஈசல் மாதிரி கிளம்பி வருவதை நிறுத்துங்க . என்ன ஏதுன்னு தெரியாமலே ஆதரவு மண்ணு மட்டைன்னு வரது , திருந்தவே மாட்டீங்களா ? இல்ல கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டீங்களா ? இதுக்கு ஆதரவு குடுத்ததுக்கு வெட்கப்பட போறீங்க .

  • //இந்த பதிவுக்கு ஆதரவு குடுத்த குடுக்கிற , இன்னமும் குடுக்கபோகும் அத்தனை ஆண்களுக்கும் இது பொருந்தும் . ஈசல் மாதிரி கிளம்பி வருவதை நிறுத்துங்க . என்ன ஏதுன்னு தெரியாமலே ஆதரவு மண்ணு மட்டைன்னு வரது , திருந்தவே மாட்டீங்களா ?//

   மாதவராஜ் மாதிரி அனுபவசாலி பதிவரே “ஆணாக அவமானப் படுகிறேன்,’ன்னு இடுகை போட்டிருக்காருங்க! திட்டுங்க எசமான், நல்லாத் திட்டுங்க, இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான்! திட்டுங்க! :-)))

  • புலவன் புலிகேசி எழுதின கவிதைக்கு முகிலன் எழுதின கவிதை ஒன்னே போதும். என்ன திமிர் இருந்தால் அப்படி எழுதுவார்? இந்த ஆளை நேராக பாத்தால் இது ஒன்னுக்காக [obscured]. இந்த யோக்கிய சிகமாணிகளை மதார் வந்து காப்பத்தறதில இருந்து ஒன்னு புரியது. அடிமையா இருக்கும் பெண்கள் கூட ஆணாதிக்கத்துக்கு பூஜை போடுவாங்க, இது ஒன்னும் புதுசில்லையே?

   • மதார் ஏன் ஆதரவு தருகிறார் என்பதை நடுநிலைமையாளரிடம் சொல்லியுள்ளேன்…சாட்சியோடு..

    பொதுவில் சொல்ல முடியாதென்பதால்…

    மதார் குழுமத்தில் அந்த கயவன் பதிவர் பற்றி சொன்னாரே யாரென இங்கு சொல்லட்டுமே..

  • தெய்வமே நீங்க யாருன்னு தெரிலை.. இதை தான் நானும் சொல்லுறேன்.. என்னா ஏதுன்னு தெரியாம கண்டனம், ஆமோதிக்கிறேன்னு டெம்ப்ளேட் பின்னூட்டம் போடாதிங்கன்னு.. ஆனா பாருங்க ஆணாதிக்கவாதின்னு சொல்லுறாங்க..

   • //தெய்வமே நீங்க யாருன்னு தெரிலை.. இதை தான் நானும் சொல்லுறேன்.. என்னா ஏதுன்னு தெரியாம கண்டனம், ஆமோதிக்கிறேன்னு டெம்ப்ளேட் பின்னூட்டம் போடாதிங்கன்னு.. ஆனா பாருங்க ஆணாதிக்கவாதின்னு சொல்லுறாங்க..//

    தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்லுவாங்க. இதோ இப்போதான் முதல் முறையா வாய் திறந்து தெய்வம் தனது கருத்தைச் சொல்லியுள்ளது. இதுக்கு முன்ன தெய்வம் நின்னு சொன்னது என்ன? ‘அப்துல்லாவுக்கு கொடி தூக்காத வினவு சாந்திக்கு ஏன் தூக்குது’

    இந்தக் கருத்தை சிறிது நோண்டியவுடன். ‘நானும் பெண்கள் மீதான வன்முறையை எதிர்ப்பவன் தான் ஆனால் அப்துல்லாவை எதிர்த்தவர் தலைமறைவாக இருந்தால் அந்த பதிவரை விட்டு விடுவீர்களா’ என்றார்.

    இப்போ மின்னுது மின்னல், மாதர் என்று சிலர் பூடகமாக(தாம் சொல்லுவது உண்மை, நியாயம் என்றால் பளிச் என்று சொல்லிவிட வேண்டியதுதானே, வினவு என்ன ஜோசியக்காரரா?) குறளி வித்தைக் காட்டத் தொடங்கியவுடன், தெய்வம் வாய்த் திறக்கிறது: ‘இதத்தான் தெய்வமே நானும் சொல்றேன்னு’.

    அடங் கொய்யாலா இந்த இழவுக்குத்தானே தெய்வத்தை நம்பாத நாத்திகனா இருப்பதை பெருமையாக் கருதுறேன்.

    • ஸ்யப்ப்ப்ப் அசுரன்.. தெய்வம் அதையும் சொல்லுது இதையும் சொல்லுது ஆனா பாருங்க.. கேக்குற கேள்விக்கு பதில் சொல்லாம இந்த மாதிரி மொன்னை வாதங்களை வெக்க எப்ப கத்துகிட்டிங்க.. ஆமா பொற்பாறைங்க பெயருல பதிவு எழுதுற அசுரன் தானே நீங்க.. இல்ல வேறயா? ஒரே டவுட்டா இருக்கு…

     கருத்தை நோண்டினிங்களா எங்க எங்க இது எங்க எப்ப நடந்தது.. என்னோட கேள்விகள் அங்க அங்க அப்படி அப்படியே தொங்கிட்டு இருக்கு பதிலை காணோம்.. நானும் உங்களை அங்க எல்லாம் தேடிட்டு இருக்கேன்.. நீங்க இங்க இருக்கிங்க..

     //அடங் கொய்யாலா இந்த இழவுக்குத்தானே தெய்வத்தை நம்பாத நாத்திகனா இருப்பதை பெருமையாக் கருதுறேன்.//

     பாருய்யா ஆணிய பெண்ணிய பிரச்சனை இப்ப ஆத்திக நாத்திக பிரச்சனையா உருமாறுதா.. ரைட்டு..

 28. அசுரன்

  மாதர் என்ற பெண் பதிவர் என்னமோ சொல்கிறார் புரியுதா??

  என் முதல் கமாண்டையும் படிக்கவும்

  • //அசுரன்

   மாதர் என்ற பெண் பதிவர் என்னமோ சொல்கிறார் புரியுதா??

   என் முதல் கமாண்டையும் படிக்கவும்//

   எனக்குப் புரியலிங்க மின்னுது மின்னல். நியாயத்தை பேசுகிறவன் ஏன் குறளி வித்தை காட்டுகிறவன் போல மூடி மறைத்து பேச வேண்டும். வெளிப்படையாக உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.

  • சாந்தி ஒன்னும் பதிலுக்கு புனைவு எழுதி பேசலியே? அவங்க கருத்த, விமர்சனத்தை நேர்மையா வச்சுருக்காங்க. புனைவு எழுதுனவங்களுக்கு திமிர் அதிகம்ங்கறதும் அதுக்கு சில அடிமைப் பெண்கள் கூஜா தூக்குவதும் ஒன்னுப் புதுசு இல்லையே? இரும்புத் திரை அர்விந்த், முகிலன் எழுதிய புனைவுல சாந்தி அக்காவைப் பத்தி எழுதல, வேற யாரையோ எழுதி அவமானப்படுத்தியிருக்காங்கன்னு சொல்ல வாரீங்களா?

 29. shanthi has shared her feelings with vinavu like someother fridends. vinavu has put it to the open session. the other parties can also not write imaganary pathivu but to put the fact so that all are aware who shanti is and who are others.

 30. இந்தப் புனைவு எனும் வக்கிரமான வார்த்தை வெளிப்பாட்டிற்குப் பின்னால் எந்த நியாயமும் இருந்துவிட முடியாது என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளுங்கள் மின்னல்.
  //

  புதுசு புதுசா வர்ராங்கப்பா 🙂

  ”புனைவு எனும் வக்கிரமான வார்த்தை”

  ஆஹா

  புனையு எழுதி என்னை பிரபல படுத்துங்கனு சொன்ன இந்த சாந்தி அக்கா எங்கே??
  (அவங்க சாட்டில் பேசியது பஸ்ஸில் போட்டாங்க)

  • புனையு எழுதி என்னை பிரபல படுத்துங்கனு சொன்ன இந்த சாந்தி அக்கா எங்கே??

   ——-

   ஆதாரம் இருக்கா ?..

   அர்விந்த் என்னை சாட் நைட்டி என மிரட்ட சொன்னார் முகிலனிடம்..

   உடனே சாட்டில் வந்து இன்னும் புனைவு எழுதுப்பா னு கோபத்தில் சொன்னேன்..

   அதையும் இப்படி திரிப்பா.?..:)) கோபத்திலும் சிரிப்பு வருதுங்க..

   புரியலையா அல்லது புரிஞ்சும் பிடிவாதமா?..

   சாட் அனைத்தும் நடுநிலையாளரிடம் காண்பித்தாச்சு..

   உங்க மெயில் ஐடி தாங்க பேசுவோம் ..

   நான் இந்த பிரச்னை குறித்து ஏற்கனவே 2 வாரம் முன்பு என் பிளாகில் போட்டேன்.. யாரும் உதவவில்லை…

   சிலரிடம் மடல் அனுப்பியும் பார்த்தேன்…

   இறுதியில் தான் வினவிடம் வந்துள்ளேன்.

   இப்பவும் எனக்கு யாரும் கட்சியும் இல்லை..

   எல்லோருமா சேர்ந்து தீர்வு தாருங்களேன்..

   வினவு போட்டதால் வினவுக்கு மட்டுமே என் ஆதரவு என ஏன் நினைக்கணும்..

   நாங்களும் குழுமம் நடத்துகிறோம் நடுநிலைமையோடு..

   இங்கு அனாவசியாமாக ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளால் என்று புரியுங்கள்..

   ஜான்சி அக்கா என்பதும் தாய்லாந்து பெண் என்பதும் என்னைத்தான்..

   இது குறித்து அன்றே தனிமடல் சிலருக்கு அனுப்பினேன்..

   வடகரைவேலனுக்கும்..

   பதிலேதும் இல்லை..

   அப்பவே சொன்னேன் என்ன இது சந்தனமுல்லை பிரச்னை போலுள்ளதேன்னு..

   இருப்பினும் பொறுத்தேன்…

   ஆனா திரும்ப புலிகேசி பற்றி கவிதை வந்ததும் மீண்டும் முகிலனும் அர்விந்தும் என்னை தாக்கியதோடு , பூனைக்குட்டி வெளியே வரும் , சாட் நைட்டி என கோட் வார்த்தை சொல்வதுமே என்னவோ என்னை மிரட்டினால் நான் புனைவுக்கு நடவடிக்கை எடுக்காமல் போனது போல பயந்து ஓடுவேன் என நினைத்தார்கள் போல..

   அவர்கள் புனைவை கண்டுகொள்ளாமல் மன்னித்தது தான் நான் செய்த குர்றம் என வெளியில் தெரியப்படுத்தவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாக்கினார்கள்..

   நான் மிகவும் கீழிறிங்கி அவர்களோடு பழகியதும் என்ன வேணா செய்யலாம்னு எண்ணம் போல..

   எங்க குழுமத்திலும் நான் மிக தாழ்ச்சியோடும் கீழிறங்கியும் உறுப்பினருக்கே முன்னுரிமை கொடுப்பதும் வழக்கம்..

   அதை மிக தவறாக ஆணாதிக்க மனப்பான்மையோடு புரிந்தார்களே ..?

   செய்யாத தவறுக்கு மிரட்டல்.?

   யாராவது என்னை பற்றி புனைவு எழுதுன்னு சொல்வார்களா?.. கேட்கவே விஷமாய் , விஷமமாய் இல்லை..

   முடிந்தால் உதவுங்கள்.. இல்லையெனின் திசை திருப்பி பிரச்னை நீர்க்க செய்ய வேண்டாம்..

   எனக்கு எல்லார் நேரமும் முக்கியமே..

   வினவுன்னா எதிரியா?… இல்லை மொத்தம் இங்கு எத்தனை கட்சிகள் இருக்கு யாரெல்லாம் எனக்கு ஆதரவு தர தயாராய் இருக்கீங்க னு லிஸ்ட் போடுங்க..

   இத்தனை நடந்தபின்னும் முகிலனை மட்டும் மதித்து அவருக்கு பதிலளித்தேன்.. ஆனால் அவர் என்ன செய்தார் ?. என்னிடம் கேளாமல் தனிமடலை போட்டார்..

   அதை படித்தும் என் பேச்சில் உள்ள நியாயம் புரிந்திருக்கும்.. மரியாதையும் கூடிதானிருக்கும்..

   நான் இங்கே போராடுவது எனக்கு மட்டுமல்ல ,

   முகிலன் அர்விந்த் வீட்டு பெண்ணுக்கும் சேர்த்துதான்..

   நடு நிலையா எல்லாரும் சேர்ந்து இப்பிரசனிகளை முடிவுக்கு கொண்டு வரலாமே?…

  • “புனைவு” எனும் “வக்கிரமான வார்த்தை வெளிப்பாடு” – புனைவு என்கிற வார்த்தையை வக்கிரம் என்று குறிப்பிடவில்லை, அந்த பெயரில் எழுதப்பட்ட விஷயங்களைத்தான் குறிப்பிட்டேன். (வாக்கியம் உங்களைக் குழப்பியிருந்தால் மன்னிக்கவும்.)

   புனைவு எழுதி பிரபலமாக்கு என அவரே சொன்னார் என்பதை உங்கள் வார்த்தைகளைக் கொண்டு மட்டும் நாங்கள் நம்ப முடியாது மின்னல். உங்களை பிரபலமாக்கிக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அது உங்களை அவமானப்படுத்த நீங்களே கொடுத்த வாய்ப்பாகக் கருதிவிட முடியுமா? தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துவிட்டு அவர் ஏற்கனவே அனுமதி கொடுத்துவிட்டார் என்று பொருள்படும்படி பேசுவது இன்னும் அநாகரீகமானது. உங்களது இந்த கருத்து பதிவின் மைய நோக்கத்தில் இருந்து நழுவிக்கொள்ளப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

   ஒரு பெண் இழிவுபடுத்தப்பட்டால்அதைக் கண்டிப்பது மனித இயல்பா அல்லது காரணம் தேடுவது மனித இயல்பா என நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

 31. பதிவுலகமும் சமுதாயத்தின் ஒரு அங்கமே. சமுதாயத்தில் நடைபெறும் எல்லாம் ஆதிக்கமும் இங்கேயும் தொடருது, தூ.. பதிவுலகம் கொஞ்ச நாள் நல்லாத்தான் இருந்துச்சு. இந்த வருசம் என்ன கொடுமையோ?

 32. /வினவு க்ரூப்பின் மற்ற்றொரு குறுக்கு புத்தி. வினவுக்கு எதிரான அணைத்து பதிவர்களையும் சந்திக்கு இழுத்து அசிங்கப்பட வைக்க நினைக்கும் வக்கிரபுத்தி. ஒரு பெண்ணை பகடைக்காயாக பயன்படுத்தும் கோணல் புத்தி. உண்மையிலே பெண்ணை இழிவுபடுத்தும் செயலைத்தான் வினவு குரூப் செய்கிறது. பதிவர்களே உசார்//

  motto

  வினவின் கோணல் புத்தி இதில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை மேலும் இம்மாதிரி
  வக்கிர மனிதர்களை வினவு கண்டிப்பதை
  ஆமோதிக்கிறேன் .

  ஏன் ஒரு பெண் எழுத கூடாது என இந்த
  புனைவுக்காரர்கள் வந்து பதில் சொல்வார்களா ?
  அல்லது நீங்கள் பதில் சொல்லுங்கள்

 33. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி… ஆதரித்தாலும் எதிர்த்தாலும்…

  எதிர்ப்பதை பற்றி எனக்கேதும் வருத்தமில்லை…

  ஆனால் நடந்ததை புரிந்துகொள்ளணும் என்பதுதான் என் ஆதங்கம்…

  எல்லா பக்கமும் நடுநிலைமியாளர்களை தேர்ந்தெடுங்கள்..

  முழுதுமாய் விளக்குகின்றேன்..

  நான் அவசரப்பட்டோ உணர்ச்சி வசப்பட்டோ இப்பதிவை போடணும்னா புனைவு வந்தபோதே போட்டிருப்பேன்..

  பேச்சுவார்த்தையில் மன்னிப்பில் நம்பிக்கை வைப்பவள் தான்..

  ஆனால் அந்த மன்னிப்பும் அவகாசமுமே தப்பு செய்தவர் திருந்திடாமல் மேலும் மேலும் தன் தவறை நியாயப்படுத்தும்போது தண்டனை ஒன்றே வழி என ஆகிறதல்லவா?..

  முக்கியமா இதை வெளிகொண்டுவந்தது முகிலன் அர்விந்த் மிரட்டலால்தான்….

  அப்பவும் நான் பலரிடம் மடல் அனுப்பி கருத்து கேட்ட பின்பே மெதுவாக நிதானமாக இது போல இனி நடக்க கூடதென்பதற்காகவே இங்கே போட்டேன்..

  வினவில் போட்டதன் முக்கிய காரணம் இது பலராலும் , முக்கியமா பெண்களால் படிக்கப்படும்…

  பெண்கள் இனியும் பயந்து கொண்டிருக்க அவசியமில்லை என்பதற்காகத்தான்..

  அதற்காக நான் வினவின் எல்லா கருத்தையும் ஆதரிக்கிறேன் என்று யாரும்நினைத்தால் அது முட்டாள்தனம்.. அப்படி ஒரு ஜால்ராவை வினவும் விரும்பாது என்பதென் எண்ணம் நான் அவர்களிடம் பேசியதிலிருந்து..

  உங்க பிரச்னைக்கு உதவுகிறோம் என்றார்களே தவிர , உங்கள் கருத்து , கொள்கை உங்களோடே இருக்கட்டும் என்றார்கள் பெருந்தன்மையோடு..

  இன்னும் பெண்களுக்கு பிரச்னை என்றால் துணிவாக தட்டிக்கேட்க வலையுலகில் வினவு மட்டும் தான் இருக்கு என்பது நான் கண்டுகொண்ட உண்மை…

  மற்றவர்களுக்கு என் நியாயம் புரிந்தாலும் துணிவாக தட்டிக்கேட்க முடியா நிலைமை…

  யாரை குற்றம் சொல்ல.?

  இப்ப நேரமானதால் விடை பெறுகிறேன் நாளை பதிலளிக்கிறேன்..

  நன்றி அனைவருக்கும்..

 34. m.m. abdulla – @ விஜிஅக்கா – என் பிரச்சனையில் நானே யாரையும் பொங்க வேண்டாம்னு சொல்லிட்டேன் 🙂

 35. ஆணாதிக்க வக்கிரத்தை எதிர்த்து நிற்கும் பதிவர் சாந்தியின் மன உறுதிக்கு வாழ்த்துகள்!

  சாந்தியின் இடுகையை, அவரது ‘புன்னகை தேசம்’ பதிவிலேயே கடந்த வாரத்தில் வாசித்தேன். ட்விட்டரிலும் பகிர்ந்தேன். மற்ற பதிவர்கள் எவரும் இது குறித்து கண்டுக்கொள்ளாதது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. எனது பிரச்சினையின் போது, ‘நீங்கள் வினவை அணுகியது தவறு, பதிவர்களை அணுகி பதிவர்க‌ளுக்குள்ளாகவே பேசி தீர்த்துக்கொண்டிருந்திருக்க வேண்டு’மென்று என்னிடம் அங்கலாய்த்த/ குற்றம் சாட்டிய பதிவர்கள் இப்போதாவது சாந்திக்கு உதவி இருக்கலாமே! (ஏன், வினவு பதிவர் இல்லையா என்பது அடுத்த கேள்வி.)

  புனைவு எழுதியவர்கள், தாங்கள் என்ன மாதிரியான ட்ரெண்டை பிறருக்கு அமைத்துக்கொடுத்திருக்கிறோமென்பதை இப்போதாவது உணர்ந்தால் நலம். எது எப்படியோ, முற்போக்கு முகமூடியிட்ட முகிலன் போன்ற‌ சில அழுகல் முகங்கள் தற்போது அம்பலமாகி இருக்கின்றன.

  உறுதுணையாக இருந்த வினவுக்கு நன்றிகள்!

  • மிகச்சரியாக சொன்னீர்கள்..

   மதாரோடான , அர்விந்தோடான , சாட்கள் அனைத்தையும் பொது நடுநிலைமையாளர்கள் என கருதும் பலரிடம் நான் அனுப்பியுள்ளேன்..

   அவர்கள் மதார் பற்றியும், அர்விந்த் பற்றியும் புரிவார்கள்..முகிலனின் தனிமடல் அவரே போட்டுவிட்டார்.. அதையும் பலர் புரிந்தனர்…

   மதார் , எத்தனை பேர் பற்றி அதில் குறை என்னிடம் சொல்லியிருக்கார் என்றும் புரியும் ..

   நான் அவரை IAS படிக்க சொல்லி எத்தனை ஊக்கம் கொடுத்தேன் எங்க ஊர் பெண்ணாச்சேன்னு…

   அவரே சொல்லுவார் அக்கா என்னை அடிக்க குழுமத்தில் ஆள் இருக்காம் னு அர்விந்த் சொன்னார்னு… பாவம் அவளையும் எப்படி மிரட்டி வைத்துள்ளார் பாருங்கள்…யார் அந்த அடியாளோ?…அர்விந்துக்கே வெளிச்சம்…

   இன்னும் குழுமத்தில் நடந்தது என்ன என்று ஜானகிராமன் , புலிகேசி , அருள் மூவரையும் கேட்கலாம், என்னை நம்பகூட வேண்டாம்…

   எல்லா ஸ்க்ரீன் ஷாட்டும் இருக்கு…

   நான் மட்டும் ரொம்ப ஒழுக்கமா அதில் பேசியிருக்கேன் என சொல்ல மாட்டேன். சில்ரை குறை சொல்லியிருக்க கூடும்..

   அது பேசும் இருவருக்குள்ளான உடன்பாடு புரிதல் படியே..

   அதையும் விளக்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன்..

   உதாரணமாய் நமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்று வைப்போம்..

   ஆனால் அவரை பொதுவில் எதிர்க்க முடியாது..

   ஆனால் நம்மை நம்பி நம்மிடம் அதே நபரைப்பற்றி ( கயவனை ) ஒருவர் குறை சொல்ல வந்தால் நாம் அவரை புகழுவோமா , இல்லை திட்டுவோமா?..

   பொதுவில் திட்ட முடியாததை தமிப்பட்ட முறையில் கயவர்களை திட்டுவது மன ஆறுதல்தான்..

   பொதுவில் சபை நாகரீகம் கருதி திட்டக்கூடாது தான்..

   இருப்பினும் அநாகரீகமாக இருக்காது என் திட்டுகள் சாட்டிலும்..

   இன்னும் நடுநிலைமையாளர்கள் என சிலரை குறிப்பிட்டால் சாட் அனுப்புவேன் உண்மையை புரிவீர்கள்..

   பெண்ணுக்கு தட்டிக்கேட்க வினவாவது கடவுள் போல இருக்குதே என பெருமைப்படுகிறேன்..

   வினவை நம்பவேண்டாம் னு சொன்ன நானே இப்ப வினவு மட்டுமே வடிகால் ஆகிப்போனது என் அனுபவத்தில்…

   வேறு யாரும் எட்டிக்கூட பார்க்க துணிவு இல்லை இப்பதிவுலகத்தில்… எதுவோ தடுக்குது எல்லாரையும்..

   மணிஜி குழுமத்தில் உள்ள ஒருவருக்கு கடன் கொடுத்தை குழுமத்தில் பொதுவில் கேட்டபோதே எனக்கு சீ என்றிருந்தது…

   அடுத்து நடிகை பற்றி கிசுகிசு பேசியதும் இன்னும் அதிர்ச்சி..

   அப்பவே விலக நினைத்தேன்..

   சிலர் தனிமடலில் பேசியபின்,இருந்தேன் .. முக்கியமா கபீஷ், சஞ்சய் வடகரை வேலன் , ஜான்கிராமன் , கேவிஆர், புலிகேசி, ரகு , தினேஷ் ( MrDin) , ராகவன் அண்ணா , அருள்,..போன்றோருக்காக..நல்ல கருத்தாடலுக்காக..

   வடகரை வேலனை ரொம்பவே மதித்தேன்..தனிமடல் அனுப்பியும் பதிலில்லை.

   ஆனால் அவர் கை கூட கட்டப்பட்டிருக்குன்னு புரிகிறேன்..:((

   பாலபாரதி பஸ்ஸில் இது பற்றி போட்டிருக்காங்க னு ஏழர எனக்கு பின்னூட்டம் போட்டார்..

   அப்பதான் எனக்கே தெரியும்…

   நான் போய் அங்கும் பொய் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தே ஓய்ந்தேன்..

   ஆனால் அந்த பஸ் ஸையும் காணவில்லை..

   🙂

   இப்பவும் சொல்கிறேன், புனைவு எழுதியதை கூட மன்னிப்பேன்.. ஆனால் எந்த தைரியத்தில் எனக்கு மிரட்டல் விட்டீர்கள்?..

   அப்படியானால் எல்லாரும் உங்க அடியாள் ஆகி , மதார் மாதிரி மாட்டிக்கொண்டு , பயந்துகொண்டு , இருப்பார் என நினைத்தீர்களா?..

   நல்லவேளை அந்த கயவனின் பெண்கள் பெயரை சொல்லவில்லை .. இல்லையென்றால் எனக்கு மிரட்டல் விடுத்தது போல அந்த பெண்களையும் மிரட்டுவீர்கள்…

   பாவம் மதார்தான்.. அவரும் ஒருநாள் புரிவார்…..

 36. ஆஹா, ஆரம்பிச்சிட்டீங்களா?

  நீங்கள் எந்த பதிவருக்காக பரிந்து பேசுகிறார்களோ, அவர்கள் தாங்கள் நிர்வாகியாக இருக்கிற குழுமத்தில், இன்னொரு மிகப் பிரபலமான பெண் பதிவர் தனது முகநூல் முகப்பில் போட்டிருந்த படத்தைப் பற்றியும், அதே பெண் பதிவர் குறித்து ஒரு ஆண் எழுதியிருந்த கவிதையையும் போட்டு இழை ஓட்டியவர் என்று எத்தனை பேர் அறிவீர்கள்?

  பெண்களை ஆண்கள் மட்டும் இழிவு படுத்துவதில்லை;

  புன்னகை தேசம் தனது குழுமத்தில் நான் சொல்லியவற்றை செய்யவில்லை, பெண் பதிவர்களைப் பற்றி தனிமனித விமர்சனத்தில் ஈடுபடவில்லை என்று சொல்லுவாரா?

  புனைவில் தன பெயரை உபயோகப்படுத்தி விட்டதற்காக, கொந்தளிக்கிராரே? இவர் பகீரங்கமாக அந்த பெண் பதிவரிடம் மன்னிப்புக் கோருவாரா? ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணின் உடையைப் பற்றியும், அவரது வாசகர் கவிதை பற்றியும் இழை போட்டு ஒட்டியது மட்டும் நியாயமா?

  • மிக சரி

   அதை இங்கேயே போடுவேன்..

   என்னெனில்

   உலகம் பூராவும் பார்க்கப்படும் முக புத்தகத்தில் அந்த இடுகை வந்திருந்தது…

   நாஞ்சில் பிரதாப் கூட கண்டித்திருந்தார் ..

   நான் இன்னும் வருந்துகிறேன் பெண்கள் தங்களை ஆண் வர்ணிப்பதை ஏன் ஏற்கிறார்கள் பொதுவில்… தாமே போகப்பொருளாவதைத்தானே காட்டும்.?

   நான் குழுமத்தில் இட்டதை இங்கே இடுகிறேன் புரிந்து சொல்லுங்கள் என் வருத்தம்/கோபம் தவறா இல்லையான்னு?..

   —————————————-

   சாந்தம் வழியும் சர்வ லெக்ஷனம்;
   காந்தமாய் கவரும் கண்களில் அன்புமழை;
   பொன்னகைப் பூட்டிய பளிங்கு கழுத்தை
   புன்னகைக் காட்டிய பவள இதழ்கள்
   வெல்லும் வண்ணம் வார்த்து எடுத்த—

   இப்படி ஒரு வர்ணனை ஒரு 45 வயது பெண்ணை முக புத்தகத்தில் .அவள் புகைப்படம்
   பார்த்து.

   அவளும் அந்த வழிசலுக்கு நன்றியோடு..

   ஏன் இதை அனுமதிக்கின்றார்கள்..?..

   கணவன் பொதுவில் சொன்னாலே ஏற்க முடியாது..

   ( ஒரு ஆணை வர்ணிப்பதும் இதே..பதில்தான்)

   நானும் தினமும் டிலீட் செய்து பார்க்கிறேன் மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டும்
   விதமாய் வந்துகொண்டே இருக்குது..
   யார் கமெண்ட் மூலமாவது..

   உபயோகமா 4 விஷயம் படிக்கலாம்னா விடுதா பாருங்க..?

   —————————————–

  • ஒரு பெண்ணின் உடை பற்றியும்..

   ஆம கருத்தாடலே செய்தோம் எம் குழுமத்தில்..

   என்ன அது?..

   பொது இடத்தில் நைட்டியில் வரலாமா என்பது பற்றி…

   முக புத்தகத்தில் அப்படி வந்தது எனக்கு வேதனை தந்தது உண்மைதான்.. என் கருத்துதானே அது?..

   அதை ஏன் நான் மறுக்கணும்… அவரே உலகம் பூரா விரும்பி பார்க்கட்டும் என்றுதானே அதை முகபுத்தகத்தில் போட்டிருந்தார்..

   அதன் திடுப்பு கொடுப்பது எப்படி தப்பாகும்…

   தனிப்பட்ட படம் என்றால் முக புத்தகத்தில் ஏன் வருது?..

   உடனே அதைகூட அர்விந்த் , மதார் வந்து என்னை கேள்வி கேட்டார்கள்..

   அக்கா உங்க பிளாகில் மட்டும் நீச்சல் உடையில் படம் போடலாமா என..

   முதலில் அந்த நீச்சல் உடையில் இருந்தது நான் என நினைத்தார்கள்..

   பின் விளக்கினேன் .. தாய்லாந்தில் பக்சோங் என்ற இடத்தில் உள்ள நீரூற்று மிக தெளிவானது.. கூகுளில் தேடும்போது இந்த படம்தான் கிடைத்தது..

   அப்பவும் , நான் சொன்னேன் தாய்லாந்து பெண்ணுக்கும் தமிழ்நாட்டு பெண்ணுக்கும் வித்யாசம் இருக்கே..

   இங்கே தாய்லாந்து பெண்கள் நீச்சல் உடையில் இருந்தாலும் யாரும் திரும்பி பார்ப்பதில்லை… வாயைப்பிழந்து.. நம் நாட்டில் அப்படியா?..

   இருப்பினும் அவர்கள் சொன்னார்கள் என வெறு படம் கிடைத்ததும் மாற்றினேன்..

   ——————————-

   இதுவும் சாட்டில் இருக்கு,.,

   அதன் விபரம் இங்கு பாருங்கள்…

   http://groups.google.com/group/tamizhamutham/browse_thread/thread/9d770f64c5c1ed90/ba18e25d2bd6a5fe?hl=en&lnk=gst&q=%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF#ba18e25d2bd6a5fe

   அடுத்து என்ன கேள்விங்க…? முடிந்தவரை விளக்குகிறேன்..

 37. முகிலன் மற்றும் அரவிந்துக்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்!

  அந்தரங்கங்களை வெளியிடுவேன் என்பதெல்லாம் உச்சபட்ச குற்றம், நிச்சயம் அதற்காக அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்!, கீழ்தரமான அந்த எண்ணத்திற்காக மற்ற நண்பர்களும் உங்களது கண்டனங்களை பதிவு செய்யுங்கள்!

 38. அனானி, காப்பி பேஸ்ட் பண்ரதே பண்றீங்க, எல்லாம் பண்ண வேண்டியது தானே, நல்ல பொழுது போக்க ஐடியா பண்ரீங்களே

  viji ram – அதுக்குள்ள இவ்வளவு நடந்து போச்சா? சும்மா ஒரு லைன் ஷேர் பண்ணினதுக்கா? அப்துல்லா உங்களை எங்களுக்கு தெரியும்.விடுங்க.//

  இது அப்துல்லாக்கு பதில், அவரைப்பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும்..

 39. யார் பக்கம் நியாயம் என்று தெரியவில்லை எப்படியும் ஒரு
  100 பதிவாவது வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

  ஒரே ஒரு சந்தேகம் அந்தக்கா பிரச்சனைய ஏன் வினவிடம் ஒப்படைத்தது வினவு என்ன பதிவுலகில் கட்டப்பஞ்ஜாயத்து நடத்துபவரா யார் இந்த வினவு.

  வினவு அவர்களே உங்களை நீங்கள் பதிவுலகின் அமெரிக்காவாக நினைத்துவிட்டீர்களோ

  மற்றொருப்பெண்னே அவ்வளவும் பொய் என்கிறார்(மதார்)

  சம்மந்தப்பட்ட அக்கா அவர்கள் பதிவிலேயே விபரமாக எழுதி ஆதரவு கோறியிருக்கலாம்.

  எது எப்படியோ பதிவுலகத்திர்க்கு மாதம் ஒரு அவல் மெல்வதர்க்கு கிடைத்துவிடுகிறது.

  • தம்பி என் முந்தைய பதில்களை படித்து பாருங்கள்.. விபரமா சொல்லியிருக்கேன்…

   ஏன் , எப்படி எத்தனை நாள் கழித்து வினவஇடம் வந்தேன்…

   அதற்கு முன் என் பதிவிலும் போட்டேன்…

   இது எனக்கான பிரச்னைன்னு மட்டும் நியாயம் கேட்டு வரவில்லை எல்லா பெண்களுக்குமாய் தான்..

   அதில் உங்க வீட்டு பெண்ணும் அடங்கும்..

   தப்பு செய்தவன் என் மகன் என்றாலும் தயங்காமல் தட்டி கேளுங்கள்…

 40. ennadhu nan yaara-

  I dont support any side. Infact I hate both sides-

  ஆறு வருடங்கள் முன்பு யாகூ, ரீடிப், பால்டாக் சாட் அறைகளில் தான் இந்த மாதிரி தனி நபர் பிரச்னை சார்ந்தே விவாதம் நடக்கும். அதனால் தான் அவைகளால் வலைபப்திவு, முகபுதகம் அளவு முன்னேறி வர முடிய வில்லை.

  தொழில்நுட்பம் எம்மை சாட்டில் இருந்து வலைப் பதிவு, முகப் புத்தகம் என்று முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சி செய்கிறது.

  ஆனால் மனித மனமோ வலைப் பதிவில் இருந்து மீண்டும் பின்னோக்கி சாட் (கூகுளே டாக் சாட்) பக்கம் செல்லவே விருப்ப படுகிறது.

  Backbiting in Gtalk, Twitter, buzz about blogpost/blogger is another shameful act and is to be avoided.

  தமிழ் வலைப்பதிவை முனோக்கி கொண்டு செல்ல எல்லா வித தடைகளையும் உருவாக்க முயலும் இரு பக்க பதிவர்களையும் paarkka/padikka எனக்கு அயர்ச்சியாகவும், வருத்தமாகவும் தான் இருக்கிறது.

  இந்த மாதிரி பதிவுகளில்/பதிவுலகத்தில் கலந்து கொள்ள தான் நாம் விடலை/வாலிப வயதில் உள்ள கொங்கு நாடு கல்லூரி மாணவர்களை/மாணவிகளை ஓடி ஓடி போய் அழைக்கிறோமா.

  • தைரியமான கமென்ட் சார் … பின்னூட்ட எதிர்பார்ப்புகள் எதுவும் உங்களுக்கு இல்லைங்கிறதால உங்களால இயல்பா சொல்லிடமுடியுது … அதே சமயம் கண்டணத்துக்குள்ளாக்கப் பட வேண்டியவற்றை கண்டுக்காமலும் போயிடமுடியாது தானே ராம்ஜி சார் …

   பதிவர் பிரின்ஸ் இந்த மாசக் கடைசில பெரியார் மணியம்மை பல்கலையில வலைப்பூ அறிமுக அரங்கிற்கு ஏற்பாடு செய்யப் போறதா சொன்னார் … அதுக்குள்ளே மழை விட்டுடுமா… இல்ல …அடுத்தசீசன் தொடங்கிடுமா…

   ஆண் பெண் மனோபாவத்திலிருந்து வெளியே வருவது அவ்வளவு எளிதா என்ன?!…மனதின் அலகிலா விளையாடல்கள் புரிதல்களுக்கு அப்பாற்ப்பட்டவை… யாரெல்லாம் மனம் வருந்தி உழன்று கொண்டிருக்கின்றீர்களோ கொண்டிருந்தீர்களோ அவர்களனைவருக்கும் எனது அன்பின் அரவணைப்புகள் ஆறுதல்கள் … மனம் அறிந்தே செயல்பட்டவர் எவராவது இருப்பின் தம் செயல்களை பரிசீலனைக்கு உட்படுத்திக் கொள்ள பேரன்போடும் உரிமையோடும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்…

   தேனக்கா தனது பதிவில் அடிக்கடி சொல்லும் வாசகங்கள் மனதில் சிறு பெருமூச்சோடு தோன்றி மறைகின்றது …

   நன்றிகள் அனைவருக்கும் !

 41. பதிவுலக நாட்டாமைகளே இதை முதலில் படிங்க . ஒரு பெண் என்ன சொன்னாலும் சரி ஆதரவுப் போர்வையை தூக்கிக் கொண்டு வரது . துவைத்து காயப் போட்டு ரெடியா விரிச்சு வச்சுருபீங்களா? அரைகுறை அவசரக் குடுக்கை ஆதரவுக் குரல் ஆண்களே இனியாவது சிந்தித்து செயல்படுங்க . போர்வையை அடிக்கடி இந்த மாதிரி விசயங்களுக்கு விரிக்க வேணாம் . பேச விவாதிக்க ஆதரவு குடுக்க சமூகத்தில் எவ்வளவோ இருக்கு .

  http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/09/blog-post_09.hmtl

 42. //சிலர் தனிமடலில் பேசியபின்,இருந்தேன் .. முக்கியமா கபீஷ், சஞ்சய் வடகரை வேலன் , ஜான்கிராமன் , கேவிஆர், புலிகேசி, ரகு , த