privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்இரயாகரனின் குற்றச்சாட்டு : பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறோம் !!

இரயாகரனின் குற்றச்சாட்டு : பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறோம் !!

-

இலங்கையைச் சேர்ந்த டான் டிவி உரிமையாளர் குகநாதன் என்பவரை கடத்தி, சென்னை போலீசுடன் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்த்தாக சபா.நாவலன் (“இனியொரு” இணைய இதழ்), சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அருள் செழியன் மற்றும் அவரது சகோதரர் அருள் எழிலன் ஆகியோர் மீது இரயாகரன் குற்றம் சாட்டி, தமிழரங்கம் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதனை மீள்பிரசுரம் செய்ததுடன், குகநாதனின் பேட்டியையும் வெளியிட்டு தமிழரங்கத்தின் குற்றச்சாட்டினை லண்டனிலிருந்து இயங்கும் தேசம் நெற் என்ற இணையத் தளம் தனக்கேயுரிய பாணியில் வழிமொழிந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து “இனியொரு” தளத்தில் சபா.நாவலன் தனது மறுப்பினை வெளியிட்டிருந்தார். அருள் செழியன், அருள் எழிலன் ஆகியோரும் இனியொரு தளத்தில் தமது மறுப்பை வெளியிட்டதுடன் இக்குற்றச்சாட்டுகளை அவதூறு என்றும் கூறி மறுத்திருந்தனர். இரயாகரன் இக்கட்டுரைகள் மீது குறுக்கு விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கி இன்னொரு கட்டுரையை வெளியிட்டார். பிறகு தேசம் நெற், தமிழரங்கம் தளங்களில் இவை தொடர்பான கட்டுரைகள், பின்னூட்டங்கள், விவாதங்கள் தொடர்ந்தன.

“அருள் எழிலன் வினவு தளத்தில் எழுதுகிறார். சபா.நாவலன் பங்கேற்கும் புதிய திசைகள் அமைப்புடன் இணைந்து ம.க.இ.க ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. எனவே வினவு தளம் மற்றும் ம.க.இ.க இது பற்றிக் கருத்து தெரிவிக்க வேண்டும்” என்று கோரும் பின்னூட்டங்களும், “இதுவரை ம.க.இ.க கருத்து தெரிவிக்காத மர்மம் என்ன” என்று கேள்வி எழுப்பி மகஇகவின் மீது சேறடிக்கின்ற பின்னூட்டங்களும் தமிழரங்கம் மற்றும் தேசம் நெற் ஆகிய இரு தளங்களிலும் பிரசுரமாகின. இலங்கை புதிய ஜனநாயக கட்சியையும் பின்னூட்டக்காரர்கள் விட்டுவைக்கவில்லை. இத்தகைய பின்னூட்டங்களைப் பிரசுரித்த இரயாகரனோ, அல்லது தேசம் நெற் ஜெயபாலனோ அவை பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அவர்களுடைய மவுனம் தற்செயலானதல்ல என்றே கருதுகிறோம்.

இப்பிரச்சினையில் குற்றச்சாட்டை முன்வைக்கும்  இரயாகரன், குற்றம் சாட்டப்படும் நாவலன் மற்றும அருள் எழிலன் ஆகியோர் எம்முடன் தொடர்பில் உள்ளவர்கள். குற்றச்சாட்டோ அருள் எழிலனின் சகோதரர், அருள் செழியனுக்கும் குகநாதனுக்கும் இடையிலான பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் குறித்த குற்றச்சாட்டு. இது பற்றி இரயாகரன் ஒரு பதிவு எழுதி, தேசம் நெற் அதனை வழிமொழிந்த மறுகணமே, “ம.க.இ.க என்ற அமைப்பு அது பற்றி முடிவு சொல்லவேண்டும்” என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் அல்லது வரம்பு மீறிய ஆணவம் என்று கருதுகிறோம்.

“நானே ராஜா நானே மந்திரி” என்ற வகையிலான அமைப்பாக ம.க.இ.க இருக்கும் பட்சத்தில் ஒரு வேளை இக்கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றிருக்க முடியும். துரதிருஷ்டவசமாக நாங்கள் ஜனநாயக பூர்வமாக இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கிறோம். மேலும், ஜனநாயக பூர்வமான பரிசீலனையோ ஆய்வோ தேவைப்படாத, அறுதி உண்மையாகவும் இரயாகரனின் “தீர்ப்பை” நாங்கள் கருதவில்லை.

இப்பிரச்சினையில் குகநாதனின் தரப்பில் நியாயம் இருப்பதாகக் கூறும் இரயாகரனும் சரி, அதனை வழிமொழிகின்ற பெரும்பான்மையான பின்னூட்டக்காரர்களும் சரி, அனைவருமே “குகநாதன் என்பவர் ஒரு பிழைப்புவாதி, அன்று புலிகள் முதல் இன்று ராஜபக்சே, டக்ளஸ் வரை யாருடனும் தனது ஆதாயத்துக்காக கூட்டு சேரக்கூடிய ஒரு நேர்மையற்ற மனிதர், பல பேரை நம்ப வைத்து ஏமாற்றிய மோசடிப்பேர்வழி” என்பதை வெவ்வேறு அளவுகளில் ஒப்புக் கொள்கிறார்கள். “நான் யாரையும் ஏமாற்றியதில்லை” என்று குகநாதனே கூட சொல்லிக்கொள்ளவில்லை. “அவ்வாறு மற்றவர்களை ஏமாற்ற வேண்டிய சூழ்நிலைக்குத தான் தள்ளப்பட்டதை”த் தான் விவரிக்கிறார்.

தங்களாலேயே மோசடிப்பேர்வழி என்று மதிப்பிடப்படும் ஒரு நபர், “சென்னையில் வைத்து தன்னைக் கடத்திப் பணம் பறித்து விட்டதாக” செழியன், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது குற்றம் சாட்டுகிறார். அதில் உண்மை இருக்கக் கூடுமோ என்ற ஐயம்கூட இரயாகரனுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. சென்னையில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்படுபவர்கள் ம.க.இ.க மற்றும் வினவு தளத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் என்பது இரயாகரனுக்கு தெரிந்ததுதான். எனினும் இச்சம்பவம் குறித்து எழுதுவதற்கு முன்னால் அவர் எங்களிடம் தொடர்பு கொள்ளவோ, விசாரிக்கவோ இல்லை. இரயாகரன் நீண்ட நாட்களாக எம்முடன் தொடர்பில் உள்ளவர் என்பதால், அவர் இவ்வாறு எங்களிடம் விசாரித்திருக்க கூடும் என்று வாசகர்கள் யாரேனும் தவறாக கருதிக்கொண்டிருந்தால் அதனைத் தெளிவு படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை குறிப்பிடுகிறோம்.

எங்களைப் பொருத்தவரை, வினவு தளம் தொடங்கிய பின்னர்தான் எமக்கு சபா.நாவலன் அறிமுகம். புதிய திசைகள் குழுவினருடன் பொது முழக்கங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் – சமீபத்திய நிகழ்வு. அதற்கு முன் மகஇக செயலரின் பேட்டி இனியொரு தளத்தில் வெளிவந்திருக்கிறது. புதிய திசைகள் சார்பில் லண்டன் வானொலிப் பேட்டி ஒலிபரப்பானது. ஆபரேசன் கிரீன் ஹன்ட் மற்றும் நேபாளப் புரட்சியில் இந்தியத் தலையீட்டுக்கு எதிராக நாவலன் மற்றும் தோழர்கள் இலண்டனில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

புதிய திசைகள் குழுவினருடன் மகஇக இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை சீர்குலைப்பதற்கு தான் முயற்சிப்பதாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என்று இரயாகரன் எழுதியிருக்கிறார். அத்தகைய கருத்து எதையும் நாவலன் எம்மிடம் கூறியதில்லை. இதற்கு மேல் நாவலனுடன் எமக்கு உள்ள தொடர்பு பற்றிய விளக்கங்கள் இங்கே அவசியமற்றவை என்று கருதுகிறோம்.

அருள் எழிலனைப் பொருத்தவரை எம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது மதிப்பு கொண்ட வெகு சில தமிழ்ப்பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். தமிழகத்தில் உள்ள பல இளைஞர்களைப் போலவே அவரும் புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர். புலிகள் பற்றிய அவரது அபிப்ராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சு போடும் விமரிசனங்கள் அவதூறானவை. அவருடன் தீவிர கருத்து வேறுபாடு கொண்ட பத்திரிகையாளர்கள் கூட அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கியதில்லை. அவருடைய சகோதரரான அருள் செழியனுடன் எங்களுக்கு தொடர்பிருந்த்தில்லை.

இக்குற்றச்சாட்டை இரயாகரன் தனது இணையதளத்தில் எழுப்பி, அதனைத் தொடர்ந்து இதில் வினவு, மற்றும் ம.க.இ.க வை தொடர்பு படுத்தும் பின்னூட்டங்கள் வரத் தொடங்குவதற்கு முன்னமேயே, நாவலன், அருள் எழிலன், பிறகு அருள் செழியன் ஆகியோர் எங்களது தோழர்களைத் தொடர்பு கொண்டு நடந்த விசயங்கள் குறித்த தமது விளக்கத்தை அளித்தனர். அவர்களது விளக்கங்கள் மற்றும் தமிழரங்கம், தேசம் நெற்றில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள் ஆகியவற்றை பரிசீலித்ததன் அடிப்படையில், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுளை நாங்கள் நிராகரிக்கிறோம்.

இப்பிரச்சினையில் எது உண்மை என்ற முடிவுக்கு வருவதில், ஆவணங்கள், சாட்சியங்கள், சத்தியப் பிரமாணங்கள் ஆகியவை ஒரு அளவுக்குத்தான் பயன்படுகின்றன. சத்தியம் செய்பவனின் யோக்கியதை என்ன என்பது பற்றிய நமது மதிப்பீடு, அவர்களது வாயிலிருந்து வரும் சொல்லை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக இருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுடைய சமூக செயல்பாடு, நடைமுறை ஆகியவற்றிலிருந்தே இத்தகைய மதிப்பீட்டை நாம் வந்தடைகிறோம். குகநாதன் இந்தப் புறம். நாவலன், அருள் எழிலன் அந்தப்புறம் – இவர்களது கூற்றுகள் நடந்த நிகழ்ச்சி பற்றி இரு வேறு சித்திரங்களை வழங்கும் நிலையில் நாங்கள் எழிலனையும் நாவலனையும் நம்புகிறோம். செழியனுடன் இத்தனை காலம் எங்களுக்கு நேரடித் தொடர்பு இருந்ததில்லையெனினும், அவர் குறித்த எழிலனின் மதிப்பீட்டை நம்புகிறோம். இது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல.

இரயாகரனும் ஜெயபாலனும் குகநாதனை நம்புகின்றனர். “குகநாதன் தவறான நபராகவே இருந்தாலும், இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் அவர் கூறுவது உண்மையாக இருக்க முடியாதா?” என்ற கேள்வி எழலாம். அந்த சாத்தியக்கூறை நாங்கள் நிராகரிக்கவில்லை.

அதே நேரத்தில், இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் இரயாகரனுடைய கட்டுரை, அவருடைய விசாரணை முறை, விவாத முறை, தீர்ப்பு வழங்கும் முறை, குகநாதனுக்கு அவர் வக்காலத்து வாங்கும் முறை ஆகியவை பற்றியெல்லாம் எங்களுக்கு விமரிசனங்களோ கேள்விகளோ இல்லை என்று கருதிவிடவேண்டாம். இப்பிரச்சினையை பொதுத் தளத்துக்கு அவர் கொண்டு வந்துவிட்டதால், அவை குறித்து அவருடன் தனிப்பட்ட முறையில் பேசவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. அது சரியும் அல்ல.

குகநாதனிடம் கேட்பதற்கும், குகநாதனின் பேட்டியை வெளியிட்ட தேசம் நெற் ஜெயபாலனிடம் கேட்பதற்கும் கூட எங்களிடம் கேள்விகள் உள்ளன.

அத்தகைய கேள்விகளை நாங்கள் இணையத்தில் எழுப்புவதும் விவாதிப்பதும், கொசிப்புக்கும் அரட்டைக்கும் மட்டுமே பயன்படும். குற்றம் என்ன, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை ஒருபோதும் பயன்படாது என்று கருதுகிறோம்.

ஆகவே, இத்தகையதொரு பிரச்சினையில் இணையத் தளத்திலேயே குறுக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவது, பெயர் தெரியாத நபர்களின் கட்டுரையை வெளியிட்டு, முகவரியை வெளியிட விரும்பாத பின்னூட்டக்காரர்களின் மூலம் சேறடிப்பது என்ற வழிமுறைகளை உண்மையை அறிய விரும்பும் யாரும் ஏற்க மாட்டார்கள் என்றே கருதுகிறோம்.

நாவலன், எழிலன், செழியன் ஆகியோர் மீது இரயாகரன் வைத்திருப்பது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. அதற்கு அவர் நாவலனிடம் கோரியிருப்பது சுயவிமரிசனம். “ஆள் கடத்தல், பணம் பறித்தல், மஃபியா வேலை, மாமா வேலை”  என்று அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சுயவிமரிசனம் எப்படி தீர்வாகும்? இது என்ன வகை மார்க்சிய லெனினிய நடைமுறை என்று எங்களுக்கு விளங்கவில்லை. இரயாகரன் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதே எம் கருத்து.

ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதைப் போல இப்பிரச்சினையில் நாவலன், எழிலன் ஆகியோர் பற்றி நாங்கள் தெரிவித்திருப்பது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல. முழுமையானதொரு விசாரணை இப்பிரச்சினையில் நடந்துவிட்டதாக நாங்கள் கருதவில்லை. யாரும் அவ்வாறு கருதவும் இடமில்லை.

நடந்திருக்கும் பிரச்சினையின் அடிப்படை ஒரு பணப்பரிவர்த்தனை விவகாரம். இதில் நியாயம் பேச வருபவர்கள் என்ன நடந்தது என்று இரு தரப்பினரையும் முழுமையாக கேட்கவேண்டும். தீர்ப்பு கூற வருபவர்கள் அந்த தீர்ப்பின் அமலாக்கத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர்களும், குற்றம் சாட்டுபவர்களும் விசாரணையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளிக்க வேண்டும்.

எமது தரப்பில் நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோரிடம் இதனைக் கூறிவிட்டோம். குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் சென்னை நகரத்தில் ஒரு பகிரங்க விசாரணைக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பகிரங்க விசாரணைக்குத் தயார். தங்களது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் கடமை.

இப்பிரச்சினையில் எந்த விதத்திலும் மகஇக விற்கு தொடர்பில்லை என்ற போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா என்று அறிந்து கொள்வதில் இரயாகரனை விடவும், ஜெயபாலனை விடவும் நாங்கள் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறோம். ஏனென்றால், உங்களது இணையத்தளங்களில் நாங்கள் சேறடிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம்.

குற்றம் சாட்டுகின்ற இரயாகரன், குகநாதன், ஜெயபாலன் ஆகியோர் சென்னைக்கு வரட்டும். அவர்களது நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் மற்றும் நாவலன், செழியன், எழிலன் ஆகியோரின் நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் ஆகியோரின் முன்னிலையில் ஒரு பகிரங்க விசாரணையை ஏற்பாடு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அந்த விசாரணையை நாங்கள் நடத்தவில்லை. வழக்குரைஞர்களோ, நடுநிலையாளர்களோ விசாரணையை நடத்தட்டும். கேள்விகள், பதில்கள், குறுக்கு விசாரணைகள் ஆகிய அனைத்தும் வெளிப்படையாகப் பார்வையாளர் முன்னிலையில் நடக்கட்டும். புனை பெயர்களில் பின்னூட்டம் போட்டவர்கள், மகஇக வின் மீது சேறடித்தவர்கள், தம் கையில் ஆதாரம் இருப்பதாக மார்தட்டுபவர்கள் என யாராக இருந்தாலும் நேரில் வரலாம். தமது குற்றச்சாட்டுகளை கூறலாம். முறையாக விசாரணை நடப்பதை உறுதி செய்து கொள்ள அவை அனைத்தையும் ஒளிப்பதிவும் செய்து கொள்வோம்.

குகநாதன் சட்டப்படி கைது செய்யப்பட்டாரா- கடத்தப்பட்டாரா, தற்போது “கட்டப் பஞ்சாயத்து” என்று கூறும் ஏற்பாட்டுக்கு அவர் அன்று உடன்படக் காரணம் என்ன, எவ்வளவு பணம் கொடுத்தார், யாரிடம் வாங்கிக் கொடுத்தார், இதில் நாவலனின் பாத்திரம் என்ன, குகநாதனுக்கும் செழியனுக்கும் இடையிலான வணிக உறவில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் என்ன, அவற்றில் ஏமாற்றியது யார்-ஏமாந்தது யார், குகநாதன்-புலிகள், குகநாதன்-டக்ளஸ், குகநாதன்-ராஜபக்சே அரசு இவர்களுக்கிடையிலான உறவு என்ன, 2008 நவம்பரில் நாவலனை அவதூறு செய்த தேசம் நெற்றை மறுத்து, நாவலனின் நடத்தைக்கு நற்சான்றிதழ் வழங்கிய இரயாகரன் தற்போது அவரைக் “கிரிமினல்” என்றும் குகநாதனை “சூழ்நிலையின் கைதி” என்றும் மதிப்பிடுவதற்கான பின்புலம் என்ன.. என்பன போன்ற எல்லாக் கேள்விகளுக்கான விடையையும் அனைவர் முன்னிலையிலும் சம்மந்தப் பட்டவர்கள் கூறட்டும்.

இறுதியில் விசாரணைக்குப் பொறுப்பேற்கும் நடுநிலையாளர்கள் தமது முடிவைச் சொல்லட்டும். “ஆள் கடத்திப் பணம் பறித்தார்கள்” என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நாங்களே முன் நின்று ஏற்பாடு செய்கிறோம். அவ்வாறு நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், அவதூறு பரப்பியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை பாதிக்கப் பட்டவர்கள் கூறட்டும்.

விசாரணையின் முடிவில் ஒத்த கருத்து எட்டப்படாமலும் போகலாம். ஆனால் விசாரணையின் ஒளிப்பதிவைப் பார்க்கின்றவர்கள், உண்மை யாரிடம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும். இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து நீதிமன்றத்தில் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்பினால், அதற்குத் தேவையான வழக்குரைஞர்களையும் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம்.

தான் சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகவும், சென்னை வருவதில் தனக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்றும் தேசம் நெற்றில் குகநாதன் கூறியிருக்கிறார். ஒரு வேளை அவருக்கு வேறு வழக்குகளோ சிக்கல்களோ இருந்தாலும் அவற்றை சமாளிக்க வேண்டியது குற்றம் சாட்டியவரது தனிப்பட்ட பொறுப்பு. குகநாதனை அழைத்து வரவேண்டியது, அவரது குற்றச்சாட்டை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கிய இரயாகரனின் பொறுப்பு.

இது போகிறபோக்கில் ஒருவர் மீது மேலோட்டமாகத் தெரிவிக்கப்பட்ட விமரிசனம் அல்ல. அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருக்கும் ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. எனவே, குற்றத்தை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் பொறுப்பு. அந்தப் பொறுப்பிலிருந்து வழுவும் உரிமை அவர்களுக்கு கிடையாது.

“குற்றம் சாட்டப்படுபவன்தான் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளவேண்டும்” என்பது இந்தியாவில் அமலில் இருந்த பொடா சட்டத்தின் அணுகுமுறை. இந்து பாசிஸ்டுகள்தான் இச்சட்டத்தின் தீவிர ஆதரவாளர்கள். எனவே இத்தகைய நீதி வழங்கும் முறையை பாசிஸ்டுகளின் அணுகுமுறை என்றும் கூறலாம். புலிப்பாசிசத்தை எதிர்ப்பதாக கூறுபவர்களின் விசாரணை முறை ஜனநாயக பூர்வமானதாக இருக்கவேண்டும்.

பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை மட்டுமல்ல, அதற்கு சற்றும் குறைவில்லாத பிற இயக்கங்களையும், ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும், தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது. “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம், எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை, எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு சீர்கெட்டிருக்கும் இந்தச் சூழலைக் காட்டிலும் எதிரிகளுக்கு உவப்பளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. இப்பிரச்சினை விவாதிக்கப்படும் முறையையும், இதற்கு வரும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, அம்சா தன்னுடைய பணியை இலண்டனில் திறம்பட செய்து வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நாவலன், அருள் எழிலன் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளினால் எங்கள் மீது விழுந்திருக்கும் களங்கத்தை துடைப்பதற்காகத்தான் இப்படி ஒரு விசாரணையை முன்மொழிகிறோம் என்று யாரும் தவறாக கருதிக் கொள்ளவேண்டாம். மகஇக வின் நேர்மையின் மீது எமது அரசியல் எதிரிகள் கூட கேள்வி எழுப்பியதில்லை. மக்கள் மத்தியில் நாங்கள் பெற்றிருக்கும் மதிப்பை ஐரோப்பிய தளங்களில் அனானிப் பெயர்களில் போட்டுக் கொள்ளப்படும் பின்னூட்டங்களால் எதுவும் செய்து விட முடியாது.

இந்தக் குற்றச்சாட்டு தவறு என்று நாங்கள் கருதுகிறோம். அவ்வாறு கூறிவிட்டு ஒதுங்கி நிற்பது சரியல்ல. எனவே, தலையிடுகிறோம். ஒருவேளை எங்கள் மதிப்பீடு தவறு என்று விசாரணையில் தெரிய வருமானால், எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வதில் எங்களுக்குத் தயக்கமில்லை. எனவேதான், தைரியமாகத் தலையிடுகிறோம். எல்லோர் மீதும் எல்லோரும் காறி உமிழ்ந்து கொள்ளும் இத்தகைய விசாரணை முறையிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்களின் இணைய உலகத்தை விடுவிப்பதற்கான சிறிய முயற்சியாகவும் நாங்கள் தலையிடுகிறோம். அங்கே காறி உமிழ்ந்த எச்சில் எங்கள் மீதும் பட்டுத் தெறிக்கின்ற காரணத்தினாலும் தலையிடுகிறோம்.

இதுதான் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாங்கள் முன்வைக்கும் வழிமுறை. குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் இரயாகரன், குகநாதன், ஜெயபாலன் ஆகியோர் இந்த விசாரணையில் பங்கு பெறுவது குறித்த தங்களது பதிலை தம் இணையதளத்தின் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தொலைபேசியிலோ, மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இணையத்தில் புழங்கும் மகஇக வின் ஆதரவாளர்கள், பதிவர்கள் யாரும் “நல்லெண்ண முயற்சி” என்று கருதிக் கொண்டு, இரயாகரன், ஜெயபாலன், நாவலன் போன்ற இப்பிரச்சினையில் தொடர்புள்ள யாருடனும் இது குறித்துத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுருத்துகிறோம்.

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அவதூறு பரப்பும் இரயாகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !!

  1. இரயாகரனின் குற்றச்சாட்டு: பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறோம் !! | வினவு!…

    வன்மம்-விமரிசனம், அம்பலப்படுத்தல்-ஆள்காட்தல், புத்தாக்கம்-சீர்குலைவு என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு கெட்டிருக்கும் இச்சூழலைக் காட்டிலும் எதிரிக்கு உவப்பளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை….

  2. […] This post was mentioned on Twitter by வினவு and sandanamullai, ஏழர. ஏழர said: One Size Fits All ஆப்பு என்பது இதானா? அட்டகாசம் http://bit.ly/blpjzp #MustRead #KughanathanScandal #ArulEzhilan #Rayakaran #ThesamNet […]

  3. please increase the width of essays…i couldnt move down cursor everytime to see the next line of essay… கட்டுரையின் widthஐ அதிகப் படுத்துங்கள். ஒரே ஒரு sidebarஐ மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

  4. இதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. தலையைச் சுத்தி மூக்கைத் தொடுவது என்பதா? நனைச்சுச் சுமப்பது என்று சொல்வதா அல்லது இதனை விடப் பொருத்தமானது வேறு ஏதாவது இருக்கிறதா எனத் தெரியவில்லை. குகநாதன் கேட்டுக் கொண்டபடி அருள் எழிலனிடமோ செழியனிடமோ உள்ள அந்த வீடியோவை வெளியிட்டால் உண்மை என்ன என்பதை எல்லோருமே அறிந்து கொள்ளலாமே.(நடந்ததெல்லாம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு தன்னிடம் இருப்பதாக அவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.) அதை விடுத்து இவர் அவரைக் கூட்டி அவர் இவரைக் கூட்டி இதென்ன இது கூத்து. இதைத் தான் கவிஞர் சிவசேகரம் இல்லாத ஊருக்கு நாளை புறப்பட்டு நேற்றுப் போய்ச் சேருகிற வேலை என்றாரோ? அது அன்றைய வலதுசாரிகளுக்காக எழுதியது. இன்றைய இடதுசாரிகளுக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறதே.

    • eeswara
      நன்றி, ஆனால் மன்னிக்க வேண்டும்
      அக் கவிதை அப்போது தமிழ்ழீழ அரசியலுக்குள் தடுக்கி விழுந்த சில இடதுசாரிகளை மனதில் கொண்டு எழுதப்பட்டது.
      இப்போதும் பொருந்துவது வருத்தத்துகுரியது.

  5. I could understand little about the problem. But what worries me most is Rayaharan, a supporter of Vinavu – though I do not like Rayaharan’s political arguments, may be getting lost in the process of arguments on this issue. I read Arul Ezilan’s Perinavathathin Raja’ and some of his artices in Vinavu. He is more promising than Rayaharan and others. Maoists have very good support base among the intellectual sect. In Tamil Nadu, the scenario is different, no much romance for intellectuals with revolutionary organisations. So it wouldn’t be wise to think of losing Arul Ezilan like rarities from our tamil intellectual pool, for merely some people have levelled baseless allegations against him.

  6. (from Inioru.com)

    visvan
    Posted on 10/02/2010 at 8:51 pm
    இராயகரன் ‘மார்க்சியத்தின்’ கேரால் தனது விருப்பு வெறுப்புக்களையும் தனிமனித தாக்குதல்களையும் மேற்கொள்ளும் போதெல்லாம் ம.க.இ.கவிலிருந்து நாவலன் வரை சிறிரங்கன் ஈறாக அதனைக்கண்டு கொள்ளாமல் அனைவரும் அது குறித்து மெளனம் சாதித்தே வந்திருக்கிறார்கள்.

    xxx
    Posted on 10/03/2010 at 5:53 am
    இரயாகரனின் தாக்குதல்கட்கு ஆளான மார்க்சிச லெனினிச அமைப்புக்களில் புதிய ஜனநாயகக் கட்சி முக்கியமானதாய் இருந்துள்ளது. அதன் தலைவர்கள் மட்டுமன்றி நண்பர்களும் கொச்சைப் படுத்தப் பட்டுள்ளனர். இணையத் தளத்துக்கு வெளியிலும் பிரசாரம் நடந்ததைத் தமிழகத்துக்குப் போயிருந்த போதே அக் கட்சியினர் சிலர் அறிந்தனர். எனினும் யாரும் இரயாகரனுக்குப் பதில் எழுதிக் காலத்தை வீணக்கவில்லை.
    அண்மைய கடுந் தாக்குதலின் போதும் அவர்கள் ரயாகரனை அலட்சியம் செய்தனர். ஏனெனில் அவர்களது இயங்குதளத்தில் இரயாகரனுக்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை.

    இரயாகரன் இப்போது செய்வது, அரசியல் வறுமையின் நிமித்தம் தனிமனிதர் மீது அவதூறு பரப்புவது. கிறிமினல் குற்றஞ் சுமத்தியுள்ள போது அதற்குப் பதில் சொல்லும் தேவையை யாரும் மறுப்பார்களா? அந்த எல்லையைத் தாண்டி இரயாகரன் மீது பதில் அவதூறுகள் பொழிப்பட்டோ அவரது கடந்தகாலம் ‘ஆராயப்பட்டோ’ இருந்தால் கதை வேறு.

    ம.க.இ.பே. மீது இரயாகரன் பாய்ந்த நிலையிற் கூட ம.க.இ.பே. இரயாகரனைத் தாக்கவில்லை.
    இரயாகரனை யாரும் சகித்துக் கொண்டது அவரதுநெருப்பில் குளிர் காய அல்ல. ஒரு நிலையில் ஐரோப்பாவில் தமிழரிடையே அவர் தொடர்ந்தும் இடதுசாரித் தகவல்களைப் பரிமாறி வந்தவர் என்றதால் அவர் மீதான பகிரங்க விமர்சனம் தவிர்க்கப் பட்டே வந்தது. அதே வேளை தனிப்பட அவரிடம் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டே வந்தன.
    இரயாகரனுடன் பலருக்கும் உள்ள பகைமையை நீக்க ஏதாவது செய்ய இயலுமா என்று ம.க.இ.பே., நானறியப், பலரிடமும் கோரி வந்தது.
    ம.க.இ.பே. தனிப்பட்ட முரண்பாடுகளில் தலையிடவில்லை. தன் மீதான தாக்குதலைக் கூடப் பொறுமையுடனேயே எதிர்கொண்டுள்ளது.

    தயவு செய்து நிதானமான பதில்களை இராயகரன் போன்றோரின் குப்பை கொட்டலுடன் ஒப்பிடாதிருப்போமாக.

  7. அது : //பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை மட்டுமல்ல, அதற்கு சற்றும் குறைவில்லாத பிற இயக்கங்களையும், ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும், தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது.//

    நன்றி.

  8. தமிழ்நாட்டிலுள்ள மக்கள் கலை இலக்கியக் கழகம் ஒரு பொய் மாக்ஸீய இயக்கம் என்பதிற்கான நடத்தைகளை இன்று இவர்களால் வெளியிடப்ட்ட அறிக்கைகளும் எடுத்துக்காட்டுகின்றன. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இப்படியான மாக்ஸீய இயக்கங்களின் முகத்திரையை கிழிக்கவும் மக்களின் வாழ்வில் அக்கறையுள்ளவர்களை ஊக்குவிப்பு செய்யவும் இயங்க வேண்டிய தேவை அவசியமாக உள்ளது.

    முதலாவதாக இந்த மாக்ஸீய இயக்கம் தமது அமைப்பு சார்பானவர்களின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால் அதற்கு பதிலாக புலிகள் சொல்வது போன்று வன்னிக்கு வாருங்கள் பதில் சொல்லுகின்றோம் என்ற பாணியில் பதில் அழித்திருப்பது இவர்கள் கூறும் மாக்ஸீயம் என்பது என்ன என்று எமக்கு தெரியவில்லை.

    தமிழ்அரங்கம் தேசம் இன்னும் வேறு ஊடகங்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்தால் அந்த ஊடகங்களின் ஆசிரியர்களை எழுத்தாளர்களை புலிகளின் பாணியில் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறுவதா மாக்ஸிஸ்ட்டுக்களின் பதில். பதில் என எழதாமலே காலத்தை கடத்துவது மாக்ஸீசமா என்று இந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் பதில் தந்தாக வேண்டும்.

    ஒரு மாக்ஸீய இயக்கக்தின் (மக்கள் கலை இலக்கியக் கழகம்)உறுப்பினர் நாவலன் அதிகாலை 3 மணிக்கு ஒரு பெண்ணை நித்திரையால் எழுப்பி அச்சம் ஊட்டும் வகையில் பேசியதும் அந்த பெண்ணுக்கே தெரியாமல் பேச்சை பதிவு செய்து அதிலும் தனக்கு வேண்டியவற்றை வெட்டித் தொலைத்துவிட்டு தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அதை தனது இனியொரு இணையத்தளத்தில் பதிவு செய்தார். பின்னர் அந்த பதிவு தனக்கு எதிரான கருத்துக்களை வளர்க்கிறது என்பதை அறிந்ததும் அந்த ஒலிப்பதிவை நீக்கியதும் எந்த வகையில் ஒரு மாக்சிசவாதியின் செயலாகும் என்பதை மக்கள் கலை இலக்கியக் கழகம் மக்களுக்கு முன்வைக்க வேண்டும். அதாவது தன்னை, ஒரு தனிமனிதனை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு பெண்ணின் உரையாடலை அப் பெண்ணின் அனுமதியில்லாமல் பாவித்ததும் எப்படி சரியாகும் இதற்கு மாக்சீசம் பதில் கொண்டுள்ளதா? மக்கள் கலை இலக்கியக் கழகம் பதில் வெளியிட்டே தீர வேண்டும்.

    ஊடகங்கள் பத்திரிகைகள் விமர்சித்தால் அதற்கு பதில் விசாரணை என்று எந்த மாக்சீசம் சொல்லுகின்றது பதில் தருமா மக்கள் கலை இலக்கியக் கழகம்?

    நாவலனிடம் என்ன விமர்சனங்களை இந்த ஊடகங்கள் முன்வைத்தன. அதற்குப்பதிலை ஒரு சிறிய பந்தியாக முன்வைத்திருந்தால் நாவலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் உறுப்பினர்களின் கட்டைப்பஞசாயம் இவ்வளவு தூரம் போயிராது. இப்படி நாவலனோ அல்லது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் உறுப்பினர்களோ முன்வைக்காததே காரணமாக இருந்துவந்துள்ளது. இவர்கள மாக்சீசம் பற்றிய அறிவு அறிவற்வர்களாகவும் மாக்சிசத்தில் பற்று அற்றவர்களாகவுமே உள்ளனர். இவர்கள் மக்கள் மீது எப்படியான பற்றுதலை கொண்டிருப்பார்கள் என்பது இந்த விசாரணைக்காக தமிழ்நாட்டுக்கு வா என்று புலிப்பாணியில் ஊடகவியலாளர்களை மிரட்டுவதில் இருந்து புரிகின்றது.

    இப்படியான மாக்சிஸ்ட்டுக்கள் தமிழ்நாட்டில் எப்படியான கேவலமான நடத்தைகளில் அப்பாவி மக்கள் மீது நடாத்துவார்கள் என்ற சந்தேகமும் உருவெடுக்கிறது.

    இந்த அறிக்கையை பார்த்துக்கொண்ட மக்கள், கலை இலக்கியக் கழகத்தின் இதர உறுப்பினர்களின் நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படல் வேண்டும் இந்த அறிக்கையுடன் முழுமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் உறுப்பினர்களும் உடன்படுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை அவர்களில் ஒரு சிலராவது இந்த கட்டைப் பஞ்சாயம் பற்றி தாம் தமது கட்சி தமது உறுப்பினர் நாவலன் விமர்சனம் செய்து கொள்வேண்டும் என்ற அடிப்படை மாக்சிசத்துடன் நிற்பார்கள் என்றே தோன்றுகிறது.

    நாவலன் இனிமேல் எப்படியாக தனது அரசியலை புலம்பெயர் சூழலில் முன்வைக்கமுடியும் அதுவும் புதிய திசைகள் சார்பில் ரேடியோ இனியொரு தளங்களில் நாவலனால் எப்படி அரசியலை எழுதமுடியும் தன் மீது எழுப்பப்பட்ட அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ள திராணியில்லாத நாவலன் இனிமேல் எப்படி அரசியலை அல்லது புலிகள் அரசசார்பு கட்சிகள் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க முடியும்

    இன்னும் சொல்லப்போனால் நாவலன் தான் விமர்சனம்பற்றிய தனது அறிவை மீள்பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்………….

    புலம்பெயர் இலங்கைத்தமிழ் மத்தியில் கட்டைப்பஞ்சாயத்திக்கு உடன்தையாக நாவலன் இருந்துள்ளார் என்பதே இங்கு முக்கியமாவிடயமாக உள்ளது அருள் பற்றிய அக்கறையை விட இந்திய எழுத்தாளர்கள் மாக்ஸீயவாதிகள் கட்சிகள் பொலீசாரின் நடத்தைகள் என்பதை விட நாவலன் குகநாதனின் மனைவியாருடன் நடந்து கொண்டதில் இனியொரு இந்த விடயத்தை ரயாகரன் வெளிப்படுத்தும் வரையில் மறைத்ததும் பணம் பறிப்பதில் நாவலனின் பங்கிலுமே பலருக்கும் பலவிதமான விமர்சனங்கள் உண்டு. நாவலன் இந்த விடயத்தில் சம்பந்தம் குகநாதனின் மனைவியின் கருத்துக்கள் ஊடாக வெளிப்படுவதை ஒரு மாக்ஸீயக்கட்சி விளங்கிக்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியதாகவே உள்ளது.

  9. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7464:2010-09-15-12-30-48&catid=322:2010
    -இந்த சேறடிப்புகளுக்கு பெயர் பின்னூட்டம் என்றால் இதனை அனுமதிக்கும் தளம் தனது தோழமை அமைப்பை பொதுவெளியில் பதில் சொல்ல அழைப்பதாகத்தான் அர்த்தம். அதைவிடுத்து நாங்கள் எப்போதுமே பதில் எழுதுவது இல்லை என்பது அதிகார வர்க்கத்தின் மொழி. கேள்விகள் உங்களை நோக்கி வருகையில் ரதி பிரச்சினையில் நீங்களே முன்வந்து பதில் சொல்லியும் உள்ளீர்கள். பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்கிறீர்கள் ரயா
    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  10. தமிழரங்கத்திற்கு,

    ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒத்துக்கொள்வதாலே அவர்தான் குற்றவாளி என முடிவுசெய்து சேறடிக்கும் ஜனநாயகத்தை ஆளும்வர்க்கம்தான் செய்கிறது. இதனை அறிவுஜீவிகள் செய்தால் அவதூறு என சுட்டிக்காட்டுவதுதானே சரியானது.

    மையமான கேள்வி கட்டப்பஞ்சாயத்து சரியா தவறா என்பதுதானே. கட்டப்பஞ்சாயத்துக்கு நீங்கள் வைத்திருக்கும் இலக்கணம் போலீசு ஸ்டேசனுக்கு போயும் வழக்கு பதிவு செய்யாமல் கோர்ட்டுக்கு போகாமல் தீரும் அனைத்துப் பிரச்சினைகளுமே கட்டப்பஞ்சாயத்துதான் அல்லது ஆள் கடத்தல்தான் உங்கள் மொழியில் இல்லையா ரயா. இதில் உள்ள அபத்தம் புரியவில்லையா..

    ப‌ணத்தை பறிகொடுத்தவன் கேஸ் கொடுக்காமல் பணத்த உடனடியா கேக்குறான்னா அவனோட நிதிநெருக்கடி வெளிப்படையா தெரியுது. எனக்கு கூட 3 ஆண்டுக்கு முன் வேல போச்சு. லே ஆப் கொடுத்தாங்க கம்பெனில• கடசி இரண்டு மாத சம்பளம் தரல• நான் லேபர் ஆபீசர்ட்ட போய் புகார் பண்ணிணேன். அவங்ககிட்ட உடனே பணம் தேவன்னு என் மனுல சொன்னேன். அவங்க உடனடியா கம்பெனிக்கு போன் பண்ணி (உங்க மொழில மிரட்டி) சம்பளத்த செட்டில் பண்ண வச்சாங்க• அத வச்சு அடுத்த இரண்டு மூனு மாசம் வண்டி ஓடிச்சு. அந்த கம்பெனி காரங்க உங்க பார்வல குகநாதன் மாதிரி இருப்பதால் அவங்களுக்காகவும் கொஞ்சம் பேசுங்க•நானும் ஒரு மாலெ ஆதவரவாளன்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன். கோர்ட்டுக்கு போகாம அதிகாரிய வச்சு எங்க கம்பெனி எச்ஆர் அ மிரட்டியதால எனக்கும் அந்த தகுதி மேல சந்தேகம் வந்திருச்சு. ப்ளீஸ் உதவ முடியுமா ரயா

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  11. தமிழரங்கத்திற்கு,

    குற்றம் செய்பவர் யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்பது அவ்வளவு முக்கியம் இல்லைதான் உங்களுக்கு. இப்படித்தான் தொடர்ந்து பேசுகிறீர்களா.. அரசியலை கூட யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதற்காக சொந்த அரசியலை தூக்கியெறிந்த மிகச்சமீபத்திய தங்களது நடவடிக்கைகள் எதுவும் தங்களுக்கு ஞாபகத்தில் இல்லையா..நட்பு முரண்பாடு பற்றி மார்க்சிய ஆர்வலர்களுக்கு வேறு யாரும் பாடம் எடுக்க வேண்டியிருக்காது அல்லவா.. நீங்கள் தீர்மானித்த ஆள்கடத்தல் குற்றவாளிகளிடம் கட்டுரை அல்லது பேட்டி வழியாக தொடர்பில் இருக்கும் அமைப்பை ஏன் நேரடியாக விமர்சித்து ஒரு பதிவும் எழுதவில்லை. மாறாக உங்களை சற்று ஒத்த மனநிலையில் உள்ள பின்னூட்டங்களை பிரசுரித்து அதன் மூலம் விமர்சித்தீர்கள்..

    நாவலன் அவதூறு பிரச்சாரம் செய்தார் அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்தார் என எந்த வித குற்றச்சாட்டையும் நீங்கள் முன்வைக்கலாம். அவ்வளவு ஏன் ஒரு அமைப்பின் மீது கூட முன்வைக்கலாம். குற்றச்சாட்டை முன்வைப்பவர்தான் அதற்கான ஆதாரத்தை தர வேண்டும். மாறா ஆளும் வர்க்கம்தான் தான் இயற்றும் பொடா போன்ற சட்டங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்தான் தன்னை நிராபராதி என நிரூபிக்க வேண்டும் என்கின்றன• தமிழரங்கமும் அதைத்தான் கோருகிறது.

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  12. ம க இ க மத்திய குழுவினருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

    ம.க.இ.க மத்திய குழு தோழர்கட்கும், ம.க.இ.க தோழர்கட்கும்

    சீலனின் (இது எனது இயற்பெயரே) தோழமை வணக்கங்கள்.
    வினவுதளத்தில் உங்களின் கட்டுரையைப் பார்த்து அதிர்ந்து போனேன். முதலில் முதிர்ச்சியும் செயற்பாட்டுத்திறனும் கொண்ட அமைப்புகளில் ஒன்றாக விளங்கும் தங்களின் கட்டுரையா இது என என்னால் நம்பமுடியவில்லை. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற காத்திரமான சஞ்சிகைகளை வெளியிடும் உங்களின் ஆய்வுமுறை இந்த விடையத்தில் மாத்திரம் ஏன் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. உங்கள் கட்டுரையில் இருந்து எனது கேள்விகளை உங்கள் முன் வைக்கின்றேன். புதிய திசைகள் குழுவினருடன் ம.க.இ.க இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை சீர்குலைப்பதற்கு தான் முயற்சிப்பதாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என றயாகரன் குறிப்பிட்டிருந்தார் இதில் நாவலன் எங்கு பிரச்சாரம் செய்தார் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. றயாகரன் கூறியது லண்டனில் அவர்சார் நண்பாகளிடம் இவ்வாறு பிரச்சாரத்தை மேற்கொணடடிருந்தார் என்பதே. இதை அறியாது உங்களிடம் அதைப்பற்றி நாவலன் ஒன்றும் கூறவில்லை என எழுதியுள்ளீர்களே என்ன வேடிக்கையிது.
    அருள் எழிலன் அருள் செழியன் நாவலன் போன்றோர் கூறும் கதைகளை நம்புகின்றோம் என அறிவித்துள்ளீர்கள். நல்லது. அருள் சகோதரர்கள் குகநாதனை கடத்தி பணம் பறித்தது சரி என்று மறைமுகமாக இதனுடாக ஏற்றுக் கொள்கின்றீர்கள். காரணம் அருள் எழிலன் றயாகரனின் கட்டுரையின் பின்னூட்டத்தில் தாம் ஒரு நாடகமாடி குகனாதனிடம் இழந்த பணத்தை பெற்றதாக சுயமாகவே ஒப்புக் கொண்டுள்ளார் அவ்வாறிருக்கையில் நீங்களும் ஆட்கடத்தல் கட்டைப்பஞ்சாயத்து போன்றவற்றினை ஆதரிப்பதாக மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.
    றயாகரன், தேசம் நெற் குகநாதனின் வாக்குமூலத்தை நம்புகின்றது என்று குறிப்பிட்டுள்ளீர்களே. குகநாதன் இலங்கை அரசு சார்பானவர் என்பதற்காக அவர் கூறுவதெல்லாம் பொய்யாக இருக்க வேண்டிய அவசியம் உண்டா. அல்லது மார்க்கிசம் பாட்டாளி வர்க்கம் என்று கூறினால் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையா? இங்கு நடந்த சம்பவத்தில் நாவலன் பங்குபற்றியதே றயாகரனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டது. இதில் குகநாதன் உண்மை சொல்கிறாரா அருள் எழிலன் உண்மை சொல்கிறாரா என்றதல்ல மார்க்;சியம் பாட்டாளி வர்க்கம் என்று பீலா விட்டபடி மக்களை ஏமாற்ற புறப்பட்ட மக்களைக் காவுகொடுத்தவர்கள் சொல்வது எல்லாம் சரியா? இங்கு பார்க்க வேண்டியது இச் சம்பவத்துடன் தொடர்பான பகுப்பாய்வே.
    மீண்டும் ஒருமுறை நீங்கள் எல்லோரும் தமிழரங்கத்தில் றயாகரனால் எழுதப்பட்ட இரு கட்டுரைகளையும் வாசிக்கவும். அடுத்து றயாகரன் குகநாதனை அழைத்து வரவேண்டும் என்று சின்னப்பிள்ளைத்தனமாக கூறியுள்ளீர்களே. றயாகரன் குகநாதனுக்காக வக்காலத்து வாங்கியிருந்தால் அப்படிச் செய்யக் கோருவது சரி மாறாக நடந்த ஒரு சம்பவத்தை வெளிக்கொண்டு வந்தால் அதற்காக குகநாதனை அழைத்து வரச் சொல்வது மூன்றாந்தர அரசியலிலும் கேவலமானது.
    இந்த விடையம் தொடர்பாக றயாகரன் பகிரங்கமாக விவாதிக்க வேண்டாம் என்று கூறியுள்ளீர்கள். இதுவரை றயாகரன் ஏதாவது ஒரு விடையத்தை தனிமையில் உங்களுடன் பேசி மற்றவர்களை போட்டுக் கொடுத்ததுண்டா? அப்படி இருக்க இது என்ன புதிதாக எதையும் இணையத்திலேயே பகிரங்கமாக விவாதியுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இவ்விடையம் பற்றி உங்கள் மற்றைய தோழர்களை விவாதிக்க வேண்டாம் என அறை கூவியுள்ளீர்களே. இதுவா ஜனநாயக சக்தியின் முறை இதிலிருந்து உங்கள் அமைப்பினுள்ளேயே இரட்டைப்போக்கு உள்ளது என்பது தென்படுகின்றது.
    தமிழ் தேசியத்தை உயர்த்திப்பிடித்து அதனுடாக ஆட்சேர்க்க புறப்பட்டுள்ளீர்கள் என என்னால் உணர முடிகிறது.
    தோழர்களே உங்களின் போக்கில் தற்போது மாற்றம் உள்ளதை நான் அவதானிக்கின்றேன் ஏன் என்பது மட்டும் புரியவி;ல்லை.

    தோழமையுடன்
    சீலன்

    • இக் கட்டுரை ரயாகரன் மீது குற்றப் பத்திரிகை வாசிக்கவில்லை; அருள் எழிலன், செழியன். நாவலன் குற்றமற்றோர் எனவும் தீர்ப்புக் கூறவில்லை.

      ரயாகரன் துணைக்கழைத்துள்ளவரது அரசியல் யோக்கியத்தை மட்டுமன்றி நிதிக் கையாடல்களையும் அறிந்த யாரும் அவற்றை அலட்சியம் செய்ய இயலாது.
      இலங்கைத் தூதரகத்துக்கு நெருக்கமான ஒருவரது இணையத்தளம் கூறும் கதைகளை ரயாகரன் பிரசாரப் படுத்தும் தேவையும் நோக்கமும் விசாரிக்கப்பட வேண்டியவை.

      ரயாகரனின் அவதூறுகள் தமிழ் இணையப் பிரசித்தமானவை. இலங்கையில் தான் வழி நடத்தாத இன விடுதலையோ சமூக விடுதலையோ நிகழக் கூடர்து என்பதே அவரது குறிக்கோளாகத் தெரிகிறது. முழுக் கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் அதை அவர் முன்னெடுத்து வருகிறார். தவறும் போலத் தெரியும் போது சினக்கிறார். இதை விளங்கிக் கொண்டால் மற்றவை யாவும் தெளிவுடன் விளங்கும்.

  13. தமிழரங்கத்திற்கு,

    புலிகளை அன்று ஆதரித்தால் அவர்களது நேர்மையின்மையையும் ஆதரித்த்தாகத்தான் அர்த்தம் என்கிறீர்கள். சில பொழுதுகளில் அவர்களை மக்கள் கலை இலக்கிய கழகமும் சில நடவடிக்கைகளில் ஆதரித்துதான் உள்ளது. நீங்கள் கூட குகநாதன் என்ற தவறான நபரின் சரியான நடவடிக்கைக்குதானே (அதாவது அவரது மனித உரிமை பாதுகாப்பு, அவர் நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு தீர்வுக்கு முன்வந்த நியாயத்தன்மை உள்ளிட்ட) இவ்வளவு பதிவுகளையும் இடுகிறீர்கள். பதில் அளிக்கின்றீர்கள். குகநாதனை நீங்கள் ஏன் இந்தக் கட்டப்பஞ்சாயத்திற்காக இந்திய நீதிமன்றத்தை அணுகவில்லை என்றெல்லாம் நீங்கள் பேட்டியில் கூட கேட்டீர்களா? சரி இந்திய போலீசுதான் மக்களை ஒடுக்குகிறது. உங்கள ஒருத்தன் பிக் பாக்கட் அடிச்சா கூட ஒரு கம்யூனிச ஆதரவாளன் போலீசுல புகார் கொடுக்க கூடாது. ஏன் என்றால் போலீசு அரசின் ஏவல் நாய். என என்னமா யோசிக்கிறீங்க ரயா.. புலியை சில தருணங்களில் ஆதரித்தால் எல்லா தருணங்களிலும் ஆதரித்த்தாக அர்த்தமா.. அப்படியானால் மாற்றம் என்ற ஒன்றே மாறாத ஒன்று என்பதெல்லாம் உங்களை பொருத்தா சும்மா வா..

    ஒரு செயல்முறை தோல்வி அடைகிறது. அதன்பிறகு அச்செயலை இயக்கிய த்த்துவத்தை ஒருவன் மறு ஆய்வு செய்கிறான். கடந்த காலத்தின் தப்பெண்ணங்களில் இருந்து மெதுவாக விடுபட முயல்கிறான். இது சரியான அறிவுப்பூர்வமான அறிவியல்பூர்வமான மார்க்சிய பூர்வமான இயக்கியவியல்தானே.. நடைமுறையில் தங்களை மாற்றிக்கொண்ட எல்லா மார்க்சிய ஆதரவாளர்களும் இப்படித்தானே மாறி உள்ளார்கள் அல்லது சிலர் சொல்வது போல அவங்க குடும்பமே கம்யூனிஸ்டு குடும்பம் அதுனால மட்டும்தான் ஒருத்தர் கம்யூனிஸ்டா ஆக முடியும் என நீங்கள் நம்புவது போல படுகிறது.

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  14. தமிழரங்கத்திற்கு,

    எல்லாவற்றையும் அரசியலுக்கு கீழ் கொண்டு வந்து பரிசீலிக்கும் தங்களது உயர்ந்த தன்மை தமிழக மா.லெ இயக்கங்களுக்கு அவ்வளவாக வாய்த்திருக்காது போலும் என நீங்கள் கருதுவது புரிகிறது. ஒரு சம்பவத்தை கட்டப்பஞ்சாயத்தாக பார்க்க வேண்டும் என்பது அதன் தன்மையால் புரியப்பட வேண்டுமா அல்லது அதில் சம்பந்த்ப்பட்டவர்களால் புரியப்பட வேண்டுமா என்பதற்கு நீங்கள் பின்னதைத்தான் தெரிவு செய்கிறீர்கள். தீபன் துர்கா மீதான கொடுந்தாக்குதலின் போது கூட தீபன் தாங்களை கடத்தியதை விவரித்து விட்டு கடைசி வரிகளில் நடந்த சம்பவத்தின் எதிரிகளையும் கண்டித்தீர்கள். இந்த தன்மைதான் உங்களை இன்றும் அரசியலற்ற ஒரு பிரச்சினைக்கு அரசியல் சாயம் அடித்தாவது சில முன்முடிவுகளை நியாயப்படுத்த வைக்கிறது.

    செழியனுக்கு தர வேண்டிய பணத்தைத்தானே செழியன் கோரினார். அல்லது மிரட்டி பிடுங்கினாரா? பெறப்பட்ட பணத்தில் 75 சதவீத்த்திற்கும் மேல் அவரது 2.5 ஆண்டு கால ஊதிய பணம் என்பதும் ஆதாரத்துடன் உள்ளது. ஒரு நடுத்தர சம்பளம் வாங்கும் ஒருவனது ஊதிய நிலுவையை அவன் பெற்ற முறை தவறு என்பதற்காக வாதாட வந்திருக்கின்றீர்கள். நடுத்தர வர்க்கத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதா மார்க்சியவாதிகளுக்கு அழகு. அணி சேர்க்கை பற்றி தெரிந்தும் தாங்கள் இம்முடிவுக்கு வர காரணம் என்ன? இவரை விடவும் அதிக சம்பளம் பெறும் அதிகார வர்க்கமாகவே இருக்கும் உமா சங்கருக்கு ஆதரவாக வினவு இணையதளத்தில் கட்டுரை வந்த்தே.. அதனை நீங்கள் ஏன் அரசியல் ரீதியாக எதிர்க்கவில்லை

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  15. தமிழரங்கத்திற்கு,

    அன்றைய குகநாதனுக்கும் இன்றைய குகநாதனுக்கும் உள்ள வித்தியாசங்களையும் அல்லது இன்ன பிறருக்கு உள்ள வித்தியாசங்களையும் வித்தியாசம் இல்லாமல் இருப்பின் அவற்றையும் எப்படி மதிப்பிட வேண்டும். நபர்கள் வழியாகவா அல்லது கொள்கை வழியாகவா. அந்த கொள்கைக்கு நேர்மையாக இருக்கிறார்களா என்பதை பொறுத்தா..
    நேற்று வரை நல்லவனாக நடிப்பவனுக்கெல்லாமோ அல்லது நல்லவனாகவே இருந்து இன்று சூழ்நிலை மீது பழியை போட்டு தற்செயலாக கெட்டவனாக மாறுபவர்களையோ அவர்களது வளர்ச்சி வீழ்ச்சியிலிருந்து அளவிடுவதுதானே மார்க்சிய அணுகுமுறை. நேற்று வரை நடுத்தர வர்க்கத்தின் வசதிகளை அனுபவித்து விட்டு இன்று பாட்டாளி வர்க்க பண்பாட்டுமுறைக்கு மாறிய தோழரை அந்த நாளின் அவரது அற்பவாத சிந்தனையை குத்திக் கொண்டே இருந்தால் தோழர்கள் எப்படி அமைப்பை விரும்பி வருவார்கள். அல்லது மீதம் விமர்சனம் செய்யும் அந்த ஒரு தோழரை தவிர யார் மிஞ்சுவார்கள்.

    ஊசாலாடும் வர்க்கம் என்ற வரலாற்று பாத்திரத்தில் இருந்து தானே எல்லா தோழர்களும வருகிறார்கள். இயக்கவியல் ரீதியாக மாறும் மனிதர்களை ஒன்றிணைத்துதானே புரட்சியை வழிநடத்த முடியும். இனி மாற விரும்பும் ஒவ்வொருவரும் அங்கே ஒருத்தர் இருக்கிறார். அவரிடம் நேற்று ஏன் நான் கள்ள டிக்கட்டில் படம் பார்த்தேன் என்று விளக்கம சொல்லி விட்டுதான் போக வேண்டும் என்றால் யார்தான் இந்த வீட்டுப் பக்கம் வர முடியும். இதற்கு பெயர் மார்க்சிய வரையறையில் என்ன தெரியுமா?

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  16. தமிழரங்கத்திற்கு,

    நான் ஒரு கம்பெனில வேல செய்கிறேன். என் முதலாளி ஒரு பொறுக்கி. உமனைசரும் கூட• என்னோட வேலய பாத்து தொழில் ஆர்வத்துல என்னய ஒர்க்கிங் பாட்னரா சேத்துக்குறான். ஆனா மூணு வருசன் என்ன காசு போட்டு கம்பெனி நடத்த வச்சுட்டு காச தராமா எஸ்கேப் ஆயிடுறான். இதுக்கு என்னோட சேமிப்பு மனைவியோட நகை குடும்ப சொத்து எல்லாம செலவாயிருது. இப்போ பணத்த அவன் ஏமாத்துனத பத்தி நான் பேசுறன்னு வச்சுக்கங்க•. நீங்க என்ன சொல்றீங்க• எதுனாலும் சரி சட்டப்படி செய்யுங்க ங்குறீங்க•.வீட்டுல வர்ற குடும்ப பொருளாதார பிரச்சினைல வீடு ரெண்டாகி இருக்கு..எனக்கு மார்க்சியம் எல்லாம் வழிகாட்டி இல்லனு வச்சுக்குங்க•.. இருந்தாலும் மனச்சாட்சினு ஒன்னு எல்லாருக்கும்தானே இருக்கு. அதுக்கு பயந்த நானே என்னோட மொத்த இருப்பும் காலியான உடனே எவன் காலியாக்குனானோ அவன கொல்ல்லாம் னு நினைக்கிறேன். இது மிருக நிலைன்னு வச்சுக்கங்க• என் மனைவி நகை என்னோட சேமிப்பு இதெல்லாம் அந்த களவாணிப்பயட்ட இருந்து வாங்க போலீச நாடுறன்.

    வந்த இடத்துல அவன் வெளிநாடு போக முடியாதுன்னு நிலம இருக்கு. என் வீட்டு நெலமலயும் காசு தேவ இருக்கு. கேசு போட்டா ரெண்டு பேருக்கும்தான் பாதிப்பு. அதுனால நீதிமன்றம் போகாமலே ஒரு தீர்வுக்கு வர்றோம். இதுல அரசியல் எங்க வருதுன்னு எனக்கோ என் மனைவிக்கோ தெரியல• இது சம்பந்தமா ஒருத்தரு இதுக்கு அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறாரு. அவரு என் தம்பி எழுத்து தொடர்பு வைத்திருக்கும் நண்பர்கள் என தெரிகிறது. அதுனால அவங்க்கிட்ட போறேன். இத பத்தி விளக்கம் தர்றேன். இல்ல அவங்களே கேக்குறாங்கன்னு வச்சுக்குவம் அதுனால என்ன பிரச்சினை.. அவன் உமனைசரு ன்னு இன்னைக்கு சொன்னா .. அது அவன் கம்பெனில வேலக்கு சேரும் போது தெரில•. சம்பளம் நல்லா வாங்குறப்ப தெரியல என்கிறீர்கள். என்ன செய்ய முதலாளிகள் கூட சொல்லக் கூசும் வார்த்தை இது.. பாட்டாளி வர்க்கம் என கருதிக்கொள்ளப்படும் ஒரு இடத்தில் இருந்து வருகிறது.

    ரிசஸசன் வந்து வேலை போன ஐடி தொழிலாளியை பார்த்து இப்பிடி பேசினால், பசுமை புரட்சியில் வாழ்ந்த விவசாயிகளை காட்டி இன்று தற்கொலை செய்யும் விவசாயிகளை காரணம் காட்டினால், அதிகார வர்க்க திமிரை சுட்டிக்காட்டி இன்றைய அரசுத்துறைகளில் நிலைநாட்டும் தனியார்மயத்தை நியாயப்படுத்தினால், .. என இந்த வளர்ச்சி சென்றடையும் இடம் ரியாக்சனரி செட் ஆகத்தான் இருக்கும் ரயா.

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  17. தமிழரங்கத்திற்கு,

    தீர்ப்புகளில் இருந்து அணுகும் உங்களது போக்கால் நடந்த விசயத்தில் உள்ள அரசியல் தன்மை இன்னது என வரையறுக்க இயலாமல், அந்த இயலாமையே கோபாமாக உருவெடுத்து மக்கள் கலை இலக்கிய கழகம் நாவலனுக்கு வக்கலாத்து வாங்குவதாக கூறுகிறீர்கள். ஆனால் நடந்த சம்பவத்தில் நான்காவது நபராகத்தான் அவரை இருத்த முடியும் அல்லவா.. இதுதான் அருள் எழிலன் அல்லது செழியனை விடவும் அவரை இப்பிரச்சினையில் முன்னுக்கு வரவழைக்குமாறு தங்களையும் தூண்டுகிறது. அடக்குமுறைக் காலத்தில் அமைதி காத்தார்கள் என்பதற்காக இன்னும் பிறரையும் நோக்கி வன்மத்துடன் உரையாடவும் வைக்கிறது. அந்த காரணத்தாலேயே இன்றும் அன்றைய பயந்தாங்கொள்ளிகளிடம் இணைய முடியாது என முடிவு செய்து, அந்த முடிவுக்கேற்ப உரையாட முன்வருகின்றீர்கள்.

    இணையத்தில் விசாரணை சாத்தியம் இல்லை என்பதை விளக்கினால் அது உங்களது கண்ணிற்கு மாத்திரம் உங்களை நோக்கியதாக படவே இதனை இனியொரு தான் செய்கிறது என பள்ளிப் பிள்ளைகள் கிள்ளி விளையாடுவதைப் போல பதிலளிக்கின்றீர்கள். அதனால்தான் நீங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் உரையாடிய பிறகு முடிவு எடுத்தீர்களா என பகடி செய்கின்றீர்கள். உங்களால் தமிழகத்திற்கு வருவது சாத்தியமில்லை என்பது சப்பைக்கட்டு.

    மார்க்சியவாதிகளில் சீனியாரிட்டி போய்விடும் என அஞ்சும் ஒரு தோழனாக எனக்கு தெரிந்த சிலர் இருந்துள்ளனர். அவர்கள்தான் புதிய தோழர்களின் கடந்த காலத்தை பற்றி மாத்திரமே பேசி அதே நேரத்தில் தங்களது கடந்த காலத்தை சிந்திக்க மாத்திரமே செய்து அதன் பலனாக பெற்ற புதிய அரசியல் ஒளியில் மார்க்சியத்தை உரசிப்பார்த்து தங்களது பார்வைக்கு உகந்த வழிமுறையை தேர்வு செய்கிறார்கள். அது பின்நவீனத்துவ்வாதமா, அல்லது கலைப்புவாதமா என்றெல்லாம் எனக்கு சத்தியமாக உடனே தெரிந்து விடுவதில்லை. ஆனால் போகப் போகும் திசை புரிந்து விடுகிறது

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  18. நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றை முன்னிறுத்தி, ம.க.இ.க.வின் அரசியல் நிலைப்பாடு
    பதிவேற்றியது பி.இரயாகரன் Monday, 04 October 2010 12:39 பி.இரயாகரன் – சமர் 2010

    கட்டைப் பஞ்சாயத்து மூலம் பணம் அறவிட்டவர்கள், அதை தங்கள் சுயவாக்கு மூலமாக நியாயப்படுத்தியவர்கள், தங்கள் செயலை நியாயப்படுத்த ம.க.இ.க. ஊடாக எம்மை விசாரணைக்கு அழைக்கின்றனர். ஒரு விசித்திரமான அரசியல் வழக்கு. சம்பந்தப்பட்ட இருதரப்பும், தங்கள் சார்பாக தமது தரப்பு வாக்குமூலங்களைக் கொடுத்திருக்கின்றது. அப்படி உண்மைகள் இருக்க, இல்லை அதை நீங்கள் நிறுவ வேண்டும் என்கின்றது மகஇக.
    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7503:2010-10-04-12-40-26&catid=322:2010

  19. சபா நாவலனுக்கு ஒரு பகிரங்க மடல்:
    குகநாதன்- அருள் சகோதரர்கள் விடயத்தில் நீங்களே பிரதான பேசு பொருளாகியிருக்கின்றீர்கள். அப்படியிருக்கையில் உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தொடர்ந்து மௌனமாக இருப்பது பொருத்தமானது அல்ல. இதுதொடர்பாக தமிழ்அரங்கம், தேசம்நெற் இணையத்தளங்களில் வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் பின்னுட்டங்களையும் படித்துவருவதன் பின்னணியில் எம்மிடம் உள்ள சில கேள்விகளை உங்கள் முன் வைக்கவேண்டியிருக்கின்றது. இதற்காக பதிலை தங்களிடமிருந்தே எதிர்பார்க்கின்றோம். அதைவிடுத்து தமிழகத்திலுள்ள அமைப்புக்கள் ஊடாக பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள் என்று கோரிக்கை வைப்பது நல்லதல்ல.

    குகநாதனை இலங்கை அரசின் கைக்கூலியாக தொடர்ந்து நீங்களும் உங்களைச்ச hர்ந்தவர்களும் எழுதிவருகின்றீர்கள். ஆனால் அத்தகைய குகநாதனை இலங்கை அரசுடன் நெருக்கமான உறவைக்nhகண்டிருக்கும் இந்திய அரசின் காவல்துறையின் துணையுடன் கடத்திச்சென்று பணம்பெறுகின்றீர்கள் என்றால், நீங்கள் அவரைவிட இந்திய அரசுக்கு தேவையான ஆட்களாக இருக்கவேண்டும். இல்லையெனில் குகநாதன் இலங்கை அரசின் கைக்கூலி என்று நீங்கள் எழுதுவது உங்கள் கற்பனையில் வந்த ஒன்றாக இருக்கவேண்டும். இதில் எது உண்மை என்பதை முதலில் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். எனவே எங்கள் முன் எழும் இந்தக் கேள்விகளுக்கு தயவுசெய்து பதில்தாருங்கள்.

    1) குகநாதன் பொலிசார் வசம் இருந்தபோது அவருடன் நீங்கள் பேசியபோது, அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிட்டு தப்பப் பாருங்கள் என்று நீர் கூறியது உண்மையா? அப்படியானால் ஏன் அப்படி கூறினிர்கள்?
    2) அப்படி நீங்கள் கூறியதாக குகநாதன் கூறியிருப்பதில் உண்மையில்லையெனில், நீங்கள் கதைத்தது எல்லாம் தன்னிடம் பதிவாக இருக்கிறது என்று அருட்செழியன் கூறியிருப்பதால் அந்த வீடியோ பிரதியை அவரிடமிருந்து பெற்று வெளியிடுவிர்களா? இல்லையெனில் எதற்காக? ஏனெனில் அருள் சகோதரர்களுடன் இப்போதும் நட்பிலும் தொடர்பிலும் இருப்பவர் நீங்கள். உங்களைப்பற்றிய குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கின்றது.
    3)அப்படிக் கூறியிருந்தால், அவர் கேட்பது என்ன எதற்காக கேட்கிறார் என்பது உங்களுக்கு முழுமையாhகத் தெரிந்திருந்ததா? அப்படித் தெரிந்திருந்தது எனில் தனக்கு சம்பளமாக 50 ஆயிரம் ரூபா வீதம் 18 மாதங்களுக்கு 9 லட்சமாகக் கேட்டதை குறைத்து வாங்குங்களேன் என்று அருட்செழியனிடம் கேட்டுப்பார்க்க வேண்டும் என்று நீங்கள் கருதவில்லையா?
    4) தேவையெனில் குகநாதனிற்காக பொறுப்பு (பாரிஸ் சுபாஸ் பொறுப்பு நின்றால்) நிற்க நீங்கள் சம்மதித்ததாக குகநாதன் கூறியிருக்கிறார். அதற்காக குகநாதனின் மனைவி உங்களை நாடியபோது நீங்கள் சம்மதித்தததும், பின்னர் நீங்கள் அருள் எழிலனுடன் தொடர்புகொண்டபோது அவர் இந்த விடயத்தில் தலையிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக நீங்கள் குகநாதனின் மனைவிடம் கூறியது உண்மையா?
    5) நீங்கள் அருள் எழிலனுடன் தொடர்புகொண்டு உங்களை இந்த விடயத்தில் இழுக்காதீர்கள் என்று கூறியதாக எழிலன் கூறியிருக்கிறாரே? அப்படியெனில் அருள் எழிலன் பொய் கூறுகிறார் என்று ஏற்றுக்கொள்கின்றீர்களா?
    6) இனியொரு இணையத்தளத்தின் ஆசிரியர்களில் ஒருவரான அசோக்கிடம் குகநாதனின் மனைவி தொடர்புகொண்டு பொறுப்புக்கு நிற்குமாறு கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அதனைத் தெரிவிப்பதற்காக எழிலனுடன் தொடர்புகொண்டு இந்த விடயத்தில் தன்னை சேர்க்கவேண்டாம் என்று அசோக் கேட்டுக்கொண்டதாக எழிலன் தெரிவித்திருக்கிறார். ஆனால் அசோக் தொடர்புகொண்டபோது எழிலனே இவ்வாறு அசோக்கிடம் கேட்டுக்கொண்டதாக குகநாதன் மனைவியிடம் அசோக் தெரிவித்திருக்கிறார். அப்படியெனில் யார் செல்வது உண்மை என்பதை உங்கள் இணையதத்ள ஆசிரியர்களில் ஒரவரான தோழர் அசோக்கிடம் கேட்டுத் தெரிவிப்பீர்களா?
    7) குகநாதனின் மனைவியிடம்நீங்கள் போசியபோது அவரது பேச்சை ஒலிப்பதிவுசெய்கின்ற விடயத்தை அவரிடம் தெரிவிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா?
    8. அவரின் உரையாடலை இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு முன்னதாக அதனை அவரிடம் சொல்லவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

    இந்தக் கேள்விகளுக்கான பதிலை சபா நாவலனும், அசோக்கும் தெரிவிக்காதவரை இதைப்பற்றி நாம் பின்னுட்டங்களை வெளியிட்டுக்கொண்டிருப்பது பயனற்றது. இதற்கான பதிலை அவர்கள் வெளியிடும்வரை குகநாதன் குறித்த அனுமானங்கயைளயும் நிறுத்திவைப்பது நல்லது.

    • உங்களது 3 வது பாயிண்ட் முதலாளி சார்பாக கட்டப்பஞ்சாயத்து செய்ய சொல்வதுதானே. மற்ற கேள்விகளில் அரசியல் கோட்பாட்டு பிரச்சினை எதுவும் இருப்பது போல தெரியாததால் பதிலோ ஐயமோ இல்லை.

  20. தமிழரங்கத்திற்கு,

    பத்தி பிரித்து பதில் சொல்லுவது அல்ல திறமை. அதன் மையமான விசயம் எதிரில உள்ளவன் இதயத்துக்கு அருகில் இருக்க வேண்டும். நாவலனுக்கு கொடுத்த சான்றிதழை இப்போது ஏன் திரும்ப பெருகின்றீர்கள். ஏற்கெனவே அவர் பற்றி தெரிந்த்தாக சொல்லும் தாங்கள் எதற்காக அப்போது சான்றிதழ் அளித்தீர்கள். சூழ்நிலையின் கைதி மற்றும் கட்டப் பஞ்சாயத்து என்ற சொற்களை மேற்கோளிட்டு சொல்லியிருப்பது நகைமுரணுக்காக என்பது எழுதும் தங்களுக்கு புரியாத ஒன்றா? புரிந்தும் புரியாதவர்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாதுதான். புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் நான் கருதுகிறேன்.

    அறவிட்ட முறை பற்றிய விசாரணை மட்டும்தான் என்பது கூட ஜனநாயகம் போலத்தான் தங்களுக்கு படுகிறது. உண்மையில் நடந்த்து என்ன என்பதை தெரிந்து கொள்ள முதலில் இருந்தே துவங்குவோம். கருத்துக்களை முன்வைத்த தோழர்கள் மீது மீண்டும் தீர்ப்புகளை மாத்திரமே அதுவும் நியாயபடுத்தலின் கூரையின் கீழ் செய்கிறோம் என்ற குற்ற உணர்வு இல்லாமல் பேசுவதுதான் சேறடிப்பு பின்னூட்டங்களை பிரசுரிக்க வைக்கிறது. அதுதான் தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை பலமுறை மட்டறுக்கிறது. இரண்டும் வேறு வேறு அல்ல• இந்த விமர்சன முறையின் வர்க்கத்தன்மை என்ன என உங்களுக்கு தெரியும்தானே.

    ஏற்கெனவே இருக்கும் பதிவுகளையும் ஒரு சாட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாதா என்ன• குகநாதன் கடத்தப்பட்டார் என்ற தீர்ப்பும், பணம் வசூலித்த்தே தவறு அல்லது அம்முறை தவறு என்ற தங்களது வழிகாட்டலும், தரவேண்டிய பணத்திற்கு ஒரு நபர் பொறுப்பு ஏற்பது மூலம் தற்காலிக விடுபடல் சாத்தியம் என்பதை கருத்தாக தெரிவித்த ஒருவரது ஜனநாயக பண்பு மாசுற்று இருப்பதை நுண்ணி நுணுகி பார்க்கும் தங்களது பக்குவத்தையும் பெறுவதற்கு எனக்கு இந்தியாவில் பிறந்த்தால் கொடுப்பினை இல்லையோ என்னவோ ரயா

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  21. தமிழரங்கத்திற்கு,

    உங்கள் மீது சேறடிப்பு என ஆதாரத்துடன் ஒரு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அதனை மறுத்து ஆதாரத்துடன் பேசலாம். ஆனால் உங்களது அரசியிலின் அடிப்படையில் அரசியலற்ற ஒரு விசயத்திற்கு அரசியல் சாயம் பூசி மகிழும் அற்பத்தனத்திற்கு புத்திஜீவிகளின் போக்கு என வரையறுத்து சொன்னதற்காக மீண்டும் தப்பிக்க பார்க்கிறார்கள் என சேறடிக்கிறீர்கள்.

    ஏன் சேறடிப்பு என்கிறேன என்றால், அந்த கட்டுரையின் முழு தன்மையிலும் தாங்கள் முன்னிறுத்தும் நாவலன் மற்றும் அருள் சகோதர்ர்கள் மீது தவறு நிரூபிக்கப்படும் பட்சத்தில் தங்களது புரிதலின் தவறுக்கு சுயபரிசீலனை செய்து மாற்றிக் கொள்வதாக மட்டுமே பல இடங்களில் சொல்லி உள்ளார்கள். ஆனால் மறந்தும் அருள் சகோதர்ர்களின் பக்கம் நியாயம் இருந்தால் என்ற நிலையை தங்களது எந்த கட்டுரையிலும் காணவில்லை. இந்த விசயத்தில் ஒரு தரப்பை மாத்திரம் அறிந்த இருவரில் ஒருவர் (மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பு) தனது தற்போதைய முடிவு மாறுதலுக்கு உள்ளாக வாய்ப்பு இருப்பதை கோடிட்டு பல முறை காட்டியும், தனது முயலுக்கு மூன்று கால் என்பதில் இருந்து விசாரணையை துவக்க தீர்ப்புடன் காத்திருக்கின்றீர்கள்.

    மார்க்சியம் போல பேசுவதற்கும் மார்க்சிய இயக்கவியலை அதன் வரலாற்று பொருத்தப்பாட்டில் வைத்து பேசுவதற்கும் நிரம்பவே வித்தியாசம் உள்ளது. முன்னர் திருடர்களாக இருந்தவர்கள் பின்னாட்களில் கம்யூனிஸ்டுகளாகவோ அல்லது அவர்களை ஆதரிப்போராகவோ மாறவே முடியாது என்ற தங்களது தூய பரிசுத்தவாதம் முயன்றால் ஒரு பெந்தேகோஸ்தே சபையை உருவாக்கலாம்

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  22. தமிழரங்கத்திற்கு,

    நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று என்பது தாங்கள் இந்தியா வருவது. புரட்சி கூட நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்றுதான் என பல முதலாளித்துவ ஆதரவாளர்கள் மட்டுமின்றி அல்ல்ல்படும் நடுத்தர வர்க்கமும் நம்பிக் கொண்டிருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கம் அனுமதிக்கும் பட்சத்தில் அந்த நாட்டு ஆளும் வர்க்கம் இலங்கை பாசிசத்தை ஆதரிப்பதால் நீங்கள் இந்தியா வர மாட்டீர்கள் என எனக்கு தெரியும். இந்திய அரசு உங்களை கைது செய்யவோ அல்லது நாடு கடத்தவோ மாட்டோம் என உறுதிமொழி பெற்றோ அல்லது அவற்றுக்கு தடையாணை பெற்றோ கூட உங்களுக்கு பாதுகாப்புக்கு உறுதி தரலாம்.

    ஆனாலும் நீதிமன்றம் என்பது அந்த அரசின் அங்கம்தானே. அது இலங்கை ஆளும்வர்க்கத்தை எதிர்த்த ஒன்று இல்லைதானே.. அதுதான் சமீபத்திய டக்ளஸ் தேவானந்தா இந்திய வருகையில் தெரிந்த ஒன்று என்பதற்காக அது வழங்கும் ஆளும் வர்க்க உறுதிமொழி உங்களைப் போறுத்தவரையில் பகைவனுடன் படுத்து உறங்குதல் என்பதால் அதனையும் மறுத்து விடுவீர்கள் என தெரிகிறது. எல்லா தோழர்களும் பிரான்சுக்கோ அல்லது இங்கிலாந்துக்கோ வரும் அளவு வசதியும் இல்லை. காரிய சாத்தியமற்ற ஒன்றுதான்.

    ஆனால் தவறான சர்வதேசிய நிலைப்பாடு எடுக்கும் அபாயத்தில் இருந்து உங்களது உயிரை தியாகம் செய்வதாவது காப்பாற்றும் வாய்ப்பு இன்னமும் எஞ்சியபடியே நீடிக்கிறது. இந்த நாட்டின் ஜனநாயக சக்திகள் அல்லது உளுத்துப் போன தமிழ்தேசியவாதிகள் உங்களை இலங்கை அரசிடம் கையளிக்கையில் அல்லது கைது செய்கையில் வாளாது இருப்பார்கள் என்ற முன்முடிவுக்கு முடிவு கட்டுங்கள். வரலாற்றில் உங்களது இந்த பாத்திரம் மென்மேலும் மெருகேற நல்ல வாய்ப்பு இது. அவசியம் கலந்து கொண்டு இந்த வழக்கில் மாத்திரமல்ல இந்திய மாக்சிய லெனிய இயக்கத்தின் புதிய திசைவிலகலை அதன் அணிகளிடமும் அம்பலப்படுத்த அரிய வாய்ப்பு உள்ளது. அவசியம் வரவும்

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  23. nila on October 4, 2010 11:57 am
    சபா நாவலனுக்கு ஒரு பகிரங்க மடல்:
    குகநாதன்- அருள் சகோதரர்கள் விடயத்தில் நீங்களே பிரதான பேசு பொருளாகியிருக்கின்றீர்கள். அப்படியிருக்கையில் உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தொடர்ந்து மௌனமாக இருப்பது பொருத்தமானது அல்ல. இதுதொடர்பாக தமிழ்அரங்கம், தேசம்நெற் இணையத்தளங்களில் வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் பின்னுட்டங்களையும் படித்துவருவதன் பின்னணியில் எம்மிடம் உள்ள சில கேள்விகளை உங்கள் முன் வைக்கவேண்டியிருக்கின்றது. இதற்காக பதிலை தங்களிடமிருந்தே எதிர்பார்க்கின்றோம். அதைவிடுத்து தமிழகத்திலுள்ள அமைப்புக்கள் ஊடாக பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள் என்று கோரிக்கை வைப்பது நல்லதல்ல.

    குகநாதனை இலங்கை அரசின் கைக்கூலியாக தொடர்ந்து நீங்களும் உங்களைச்ச hர்ந்தவர்களும் எழுதிவருகின்றீர்கள். ஆனால் அத்தகைய குகநாதனை இலங்கை அரசுடன் நெருக்கமான உறவைக்nhகண்டிருக்கும் இந்திய அரசின் காவல்துறையின் துணையுடன் கடத்திச்சென்று பணம்பெறுகின்றீர்கள் என்றால், நீங்கள் அவரைவிட இந்திய அரசுக்கு தேவையான ஆட்களாக இருக்கவேண்டும். இல்லையெனில் குகநாதன் இலங்கை அரசின் கைக்கூலி என்று நீங்கள் எழுதுவது உங்கள் கற்பனையில் வந்த ஒன்றாக இருக்கவேண்டும். இதில் எது உண்மை என்பதை முதலில் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். எனவே எங்கள் முன் எழும் இந்தக் கேள்விகளுக்கு தயவுசெய்து பதில்தாருங்கள்.

    1) குகநாதன் பொலிசார் வசம் இருந்தபோது அவருடன் நீங்கள் பேசியபோது, அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிட்டு தப்பப் பாருங்கள் என்று நீர் கூறியது உண்மையா? அப்படியானால் ஏன் அப்படி கூறினிர்கள்?
    2) அப்படி நீங்கள் கூறியதாக குகநாதன் கூறியிருப்பதில் உண்மையில்லையெனில், நீங்கள் கதைத்தது எல்லாம் தன்னிடம் பதிவாக இருக்கிறது என்று அருட்செழியன் கூறியிருப்பதால் அந்த வீடியோ பிரதியை அவரிடமிருந்து பெற்று வெளியிடுவிர்களா? இல்லையெனில் எதற்காக? ஏனெனில் அருள் சகோதரர்களுடன் இப்போதும் நட்பிலும் தொடர்பிலும் இருப்பவர் நீங்கள். உங்களைப்பற்றிய குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கின்றது.
    3)அப்படிக் கூறியிருந்தால், அவர் கேட்பது என்ன எதற்காக கேட்கிறார் என்பது உங்களுக்கு முழுமையாhகத் தெரிந்திருந்ததா? அப்படித் தெரிந்திருந்தது எனில் தனக்கு சம்பளமாக 50 ஆயிரம் ரூபா வீதம் 18 மாதங்களுக்கு 9 லட்சமாகக் கேட்டதை குறைத்து வாங்குங்களேன் என்று அருட்செழியனிடம் கேட்டுப்பார்க்க வேண்டும் என்று நீங்கள் கருதவில்லையா?
    4) தேவையெனில் குகநாதனிற்காக பொறுப்பு (பாரிஸ் சுபாஸ் பொறுப்பு நின்றால்) நிற்க நீங்கள் சம்மதித்ததாக குகநாதன் கூறியிருக்கிறார். அதற்காக குகநாதனின் மனைவி உங்களை நாடியபோது நீங்கள் சம்மதித்தததும், பின்னர் நீங்கள் அருள் எழிலனுடன் தொடர்புகொண்டபோது அவர் இந்த விடயத்தில் தலையிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக நீங்கள் குகநாதனின் மனைவிடம் கூறியது உண்மையா?
    5) நீங்கள் அருள் எழிலனுடன் தொடர்புகொண்டு உங்களை இந்த விடயத்தில் இழுக்காதீர்கள் என்று கூறியதாக எழிலன் கூறியிருக்கிறாரே? அப்படியெனில் அருள் எழிலன் பொய் கூறுகிறார் என்று ஏற்றுக்கொள்கின்றீர்களா?
    6) இனியொரு இணையத்தளத்தின் ஆசிரியர்களில் ஒருவரான அசோக்கிடம் குகநாதனின் மனைவி தொடர்புகொண்டு பொறுப்புக்கு நிற்குமாறு கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அதனைத் தெரிவிப்பதற்காக எழிலனுடன் தொடர்புகொண்டு இந்த விடயத்தில் தன்னை சேர்க்கவேண்டாம் என்று அசோக் கேட்டுக்கொண்டதாக எழிலன் தெரிவித்திருக்கிறார். ஆனால் அசோக் தொடர்புகொண்டபோது எழிலனே இவ்வாறு அசோக்கிடம் கேட்டுக்கொண்டதாக குகநாதன் மனைவியிடம் அசோக் தெரிவித்திருக்கிறார். அப்படியெனில் யார் செல்வது உண்மை என்பதை உங்கள் இணையதத்ள ஆசிரியர்களில் ஒரவரான தோழர் அசோக்கிடம் கேட்டுத் தெரிவிப்பீர்களா?
    7) குகநாதனின் மனைவியிடம்நீங்கள் போசியபோது அவரது பேச்சை ஒலிப்பதிவுசெய்கின்ற விடயத்தை அவரிடம் தெரிவிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா?
    8. அவரின் உரையாடலை இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு முன்னதாக அதனை அவரிடம் சொல்லவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

    இந்தக் கேள்விகளுக்கான பதிலை சபா நாவலனும், அசோக்கும் தெரிவிக்காதவரை இதைப்பற்றி நாம் பின்னுட்டங்களை வெளியிட்டுக்கொண்டிருப்பது பயனற்றது. இதற்கான பதிலை அவர்கள் வெளியிடும்வரை குகநாதன் குறித்த அனுமானங்கயைளயும் நிறுத்திவைப்பது நல்லது.

  24. தமிழரங்கத்திற்கு,

    அரசியலற்ற வாதம் ஒன்றிற்கு விளக்குமாற்றுக்கு பட்டு குஞ்சம் கட்டுவது போல
    கட்டுவதை ஒரு மா.லெ இய‌க்கம் அரசியலின்மையை திரைகிழித்து அதனுள் இருக்கும் ஆள்காட்டி வேலை மற்றும் தனி மனித வன்மத்தால் கிடைத்த இப்பேறு இவற்றை அம்பலப்படுத்துவது அரசியல் ரீதியாக மிகச்சரியான நடவடிக்கைதானே.. மேலும் இவற்றுக்கு ஒரு ஜனநாயக பூர்வமான விசாரணையை பொதுவானவர்கள் முன்னிலையில் தாங்கள் தலைமை தாங்காமலும் நடத்த முன்வந்து இருக்கிறார்கள். அரசியலற்ற தன்மையில் சில மார்க்சிய வார்த்தைகளை பிரயோகிக்க தெரிவதால் மாத்திரமே தங்களை மார்க்சிய‌வாதியாக கருதும் சிலருக்கு அரசியலை விட அரசியலை சொன்ன விதம்தான் புரியாமல் போகிறது. என்ன செய்ய•.குகநாதன் பணத்தை திருடி விட்டு ஓடி டிமிக்கி கொடுத்த ஏமாற்றுக்காரனா என்பதை விட அவனிடம் பணத்தை பறிகொடுத்தவன் திருப்பி பறிமுதல் செய்ததில் முறைதானே உங்களுக்கு மையமான அரசியல் போல படுகிறது.

    அமைப்பின் செயல்பாட்டை அரசியல் ரீதியாக அணுக வேண்டும் என அதிருப்தியுற்ற உங்களது தோழர்களுக்கு நீங்கள் அறிவுறுத்தியதாக சொல்லி உள்ளீர்கள். ஒன்று ம•க•இ.க அரசியலற்ற போராட்டங்களை அரசியலை முன்னெடுப்பதாக இருக்க வேண்டும். அல்லது இவை பற்றிய அறிவு உங்களுக்கு மாத்திரம்தான் (உங்கள் நண்பர்களுக்கெல்லாம் அல்ல, அதற்கான தகுதி இல்லை என்பது அவர்களது விமர்சனத்தின் அரசியலற்ற
    தன்மையில் உள்ளதாக நீங்களே சொல்லி இருப்பதால்) அறவே இல்லாமல் இருக்க வேண்டும். உண்மை ஒன்றுதானே இருக்க முடியும். இதுவும் தீர்ப்பு என்று எழுத வந்து விட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

    என்ன விமர்சனங்களை அரசியல் ரீதியாக முன்வைத்தீர்கள் ? அதனை உங்களது எந்த அரசியலுக்காக சகித்துக் கொண்டு வாளாதிருந்தீர்கள். ? சில முகங்களுக்காக என நீங்கள் கருதினால் இந்த தன்மை குகநாதனின் முகத்துக்காகவும் நடந்திருக்கலாம் என குற்றச்சாட்டை முன்வைக்கலாமா? அப்படி முன்வைக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களை குற்றமற்றவர் என நிரூபிக்குமாறு குற்றம் சாட்டுபவர்கள் சொன்னால் நீங்களே முன்வந்து நிரூபிப்பீர்களா? உங்களது பல நடவடிக்கைகள் கூடத்தான் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. அதற்காக உங்கள் மீது விமர்சனம் வைப்பது சரியா அல்லது உங்களது அரசியல் நிலைப்பாடும் சமூகத்தில் உங்களது பாத்திரமும் நடைமுறையில் விரைவில் வெளியே மக்களுக்கு தெரிந்துவிடும் என்ற அறிவியல்பூர்வமான கண்ணோட்டம் தவறா? தங்களுடன் தொடர்பில் வருபவர் என்ன செய்கிறார் அல்லது எதிரி என்ன செய்கிறார் என்பதை ஒற்றரிந்து கொண்டே இருக்கும் அளவுக்கு அமைப்பிற்கு அரசியல் சித்தாந்த நடைமுறை வேலைகளில் வெற்றிடம் இருக்காது என நம்புகிறேன். தளபதிகளுக்கு இருப்பதற்கு சிவசேகரத்தின் கவிதை காரணம் என்றும் சொல்ல மாட்டேன்.

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  25. தமிழரங்கத்திற்கு,

    கட்டைப் பஞ்சாயத்து செய்தவர்களையும், அதனை நியாயப்படுத்துபவர்களையும் இனம் கண்டு கொள்ள முடியாமல் அவர்களை தனது அரசியலின் வழியே வர அனுமதிக்கும் மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் தோழர்கள், மகிந்த ராஜபக்சே உடன் ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள் உங்களது கட்டுரையில். நடந்த்து ஒரு ஆள்கடத்தல் கட்டைப்பஞ்சாயத்து என இரு தரப்பையும் கேட்காது மன்னர்களின் மனநிலையில் இருந்து தீர்ப்பளிக்கும் தாங்கள் சில சமயங்களில் ஒரு கம்யூனிஸ்டு என்றும் கருதுவதால் அதுவும் ஜனநாயத்தை போராட்டத்தின் வழியே பெற்ற ஒரு தேசத்தில் தரித்திருக்கும் பெருமித்த்தால் ஜனநாயகத்தை உங்களுக்கு பிடித்தவர்கள் பாதிக்கப்படும் போதும் பேசுகின்றீர்கள். ராஜபக்சே நடத்திய பாசிச தர்பாரைத்தான் தங்களை இந்தியாவுக்கு அழைத்த்த‍ன் மூலம் மக்கள் கலை இலக்கிய கழகம் நடத்துவதாக நீங்கள் கூறுவது அவதூறு அல்து எந்திரகதியில் அரசியலை பிரயோகிப்பது.

    ரதிக்கு அன்று நீங்கள் அளிக்க மறுத்த ஜனநாயகத்தை இன்று அமைப்பிற்கும் வழங்க மறுத்திருக்கின்றீர்கள். கடந்த சில மாதங்களாகவே உங்களது தோழர்கள் ம•க.இ.க செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்திருந்தார்கள் என்பதை பிரச்சினை ஆனவுடன் வெளியில் சொல்வதும், அதற்கு முன்னும் தற்போதும் கூட சேறடிப்புகளை வக்கிரமான அனைத்து பெயர்களிலும் வெளியிடும் தங்களது அரசியல் யோக்யதைக்கு குகநாதன் கூட சான்றழிப்பாரா என தெரியவில்லை.

    இப்படி ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் நீங்கள் வினவு தளத்திற்கு தொடர்பு கொண்டு இத்தகைய கயவர்களை எழுதவோ அல்லது பேட்டி எடுத்து ஒலிபரப்பவோ அனுமதிப்பது எந்த வகையில் அரசியல் மற்றும் ஊடக தர்மத்தின் அடிப்படையில் தவறு என விளக்கவோ அல்லது இவற்றை நேரடியான விமர்சனமாகவோ முன்வைத்து இருந்தால் உங்களது அரசியல் நேர்மை பாராட்ட தக்கதுதான். மாறாக தோழர்களை விட தற்போது தோழர்களுடன் தொடர்பில் உள்ள முன்னாள் பயந்தாங்கொள்ளிகள் அல்லது ஏமாற்று பேர்வழிகள் என்று தான் நம்பும் சிலர் அதில் வருகிறார்கள் என்பதற்காக என்ன ஏது என்று தெரியாமலே அவருக்கு எதிரானவர்களை அணுகி அவரிடம் பேட்டியை கோரி பெறுகின்றீர்கள். அந்த பேட்டியில் கூட அவர் அமைப்பு பற்றிய கொசிப்பை பற்ற வைத்தும், அதனை அறிந்தும் அறியாமலும் தாங்கள் பிரசுரிக்கின்றீர்கள். பாதிக்கப்பட்டவராக தங்களால் கருதப்படும் குகநாதனும் தங்களை அணுகி தனக்கு நிகழ்ந்த மனித உரிமை மீறலை வெளியிட வேண்டும் என கோரவில்லை. மாறாக நீங்கள்தான் அணுகி இருக்கின்றீர்கள். உங்களை பார்க்கிலும் உங்களது தோழர்களின் உண்மைதன்மை கொஞ்சம் சரியாக இருக்க வாய்ப்புள்ளது

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  26. தமிழரங்கத்திற்கு,

    தமிழ் தேசியத்திற்கு இடையில் உள்ள வேறுபாட்டின் குறிப்பான அம்சம் என்ன என்று கேட்பதோ அல்லது புலிகளின் உங்களது எந்த விமர்சனத்தை யாரும் மறுத்து பேச முடியாது என கேட்பதோ அரசியல் ரீதியான கொள்கை பிரச்சினை ப்ற்றியதுதான். ஆனால் அவற்றை நீங்கள் இரண்டு மூன்று வரிகளில் நறுக்கு தெரித்தாற் போல சொல்லி விட முடியும். சந்த்தியார் இதையெல்லாம் சொல்லித் தரவில்லையா என்றெல்லாம் நான் நக்கலடிக்க மாட்டேன். உங்களது கடந்தகால ரொமாண்டிச அரசியல் உட்புகுதல் மற்றும் பிற நோஸ்டால்ஜியாக்களை வைத்து உங்களை மதிப்பிடவும் மாட்டேன்.

    புலிகளை பற்றிய உங்களது விமர்சனம் தன்னளவில் எந்த வகையிலும் விமர்சனத்திற்கே தகுதியற்றது. இது ஒரு மனநோய். இந்த மனநோயின் அறிகுறி என்னவென்றால் நடுத்தரவர்க்க தடுமாற்றங்களும் சிந்தனையும்தான். உடனே நான் தட்டு கழுவிதான் பிழைக்கிறேன் என்று சோபா சக்தி போல ஒப்பாரி வைக்க மாட்டீர்கள் என்பதும் எனக்கு தெரியும். ஏனெனில் நான் கூறுவதன் உள்ளே பொதிந்து கிடக்கும் அரசியலை நுண்மையாக புரிந்துகொள்ளும் வல்லமை கொண்டவர் தாங்கள்.

    இலங்கை தமிழ்தேசிய அரசியலில் கடந்த இரு ஆண்டுகளாக அவர்கள் அணுகுமுறையில்தான் முரண்பட்டு இருக்கின்றீர்கள். உங்களது வார்த்தைதான் அணுகுமுறை, மறந்தும் அரசியல் ரீதியில் என சொல்லவில்லை. குகநாதனை கடத்திய பணம்பறித்த அணுகுமுறைதான் உங்களுக்கு அரசியலாக படுகிறது. மக்கள் கலை இலக்கிய கழகம் நான் அறிந்த வரையில் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் அதே நேரம் புலிகளின் பாசிச தலைமையையும் விமர்சிக்கின்றது. ராஜீவ், பத்மநாபா கொலை போன்ற இன்னும் சில சரியான நிலைப்பாடுகளில் அவர்களை ஆதரித்தும், பல சந்தர்ப்பங்களில் விமர்சித்தும் இருக்கிறது. ரதி விசயத்தில் வந்த கடைசி வினவு கட்டுரையிலும் பல புஜ இதழ்களிலும் இதற்கு ஆதாரங்களை பல முறை தமிழ் தேசிய வாதிகளின் அவதூறுகளுக்காக அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். நீங்களும் அதனை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனவே திடீரென சூழ்நிலையின் கைதியாக மாறிய குகநாதனை போலவே ம•க•இ.க வும் தமிழ்தேசியத்திற்கு வால் பிடித்து விட்டதாக நீங்கள் கருதினால் அப்போதே சொல்லி விவாதித்து இருக்கலாம். இப்போதும் முரண்பாடு என்ன என தெரிவிப்பதை விட கொசிப்புகள் முக்கியமான அரசியலாக உங்களால் முன்னிறுத்த படுவதால் அரசியலற்ற வாதம் அரசியல் போன்ற பம்மாத்துடன் முன்னுக்கு வருகிறது.

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  27. தமிழரங்கத்திற்கு,

    புலிகளை நீங்கள் விமர்சனம் செய்யும் முறை (அதாவது வடிவம்) மற்றும் திடீர் மார்க்சியவாதிகள் அதாவது முன்னாள் திருடர்கள் மற்றும் பொறுக்கிகள் அல்லது பயம் கொண்டவர்கள் இணைந்துதான் ஒரு மாலெ அமைப்பின் அரசியலை தீர்மானிக்கின்றார்கள் என நீங்கள் கருதுகிறீர்கள். வடிவம் உள்ளடக்கத்தை விட பெரியது யாருக்கு என மார்க்சிய அரிச்சுவடி தெரியாதவன் கூட சொல்லி விடுவான். புலிகளை விமர்சிப்பது இயக்கத்தின் சிந்தாந்தம் நடைமுறை ஜனநாயகபண்பு மக்களிடேயேயான பணிகள் அதன் திட்டம் நேச அணி தந்திர அரசியல்கின் தொகுப்பு என பல அம்சங்களை மனிதர்கள் அடங்கிய குழுவின் சமூக செயல்பாட்டில் இருந்து அளவிடுவது. உதாரணமாக கருணா ஒரு பெண் போராளியுடன் கள்ள உறவு வைத்திருந்தான் என்பது உண்மையாக இருந்தாலும் அவன் அரச படைகளுக்கு இயக்கத்தின் செயல்பாடுகளை காட்டிக் கொடுத்தான் என்று பார்ப்பது சரியானது. இதற்காக கருணாவை விமர்சிப்பவர்கள் பிரபாவை ஆதரிப்பவர்கள் என்றெல்லாம் மேத்ஸ் வாத்தியார் மாதிரி பேச மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

    உங்களுக்கு விசா கிடைக்காத்து அல்லது பாதுகாப்பு இல்லாமல் இருப்பது உண்மையாக கூட இருக்கலாம். அன்று உமா மகேசுவரனை நம்பி தோணி ஏறியபோது இதனை விட மோசமான பாதுகாப்பின்மை உங்களுக்கு இருக்கவில்லையா.. பிளாட் இயக்கத்தின் தோற்றத்திலே இருக்கும் துரோகத்தை பற்றி நான் கதைக்க விரும்பவில்லை. அப்படியானால் உங்கள் மனதுக்கு பிடித்தால் மாத்திரம் ரிஸக் எடுப்பீர்களா? ஒரு அமைப்பின் அரசியலை சேறடித்து அவதூறு செய்துவிட்டு இதனை எதிர்கொள்ள இயலாமல் சாக்கு போக்கு சொல்கின்றீர்கள். ஏலாதவன் இடுப்ப சுத்தி பதினெட்டு சுருக்கருவாள் என்பார்கள் எங்க ஊர்ப்பக்கம்.. அது சரியா போச்சே

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  28. புரட்சிக்கான மெய்நிகர் கொமிசார் : சி.சிவசேகரம்

    எங்கள் மெய்நிகர் கொமிசார் இவ்வுலகு
    எவ்வாறு உருவாகி இவ்வாறாய் எவ்வாறு
    ஆனதெனவும்― அதை
    எவ்வாறாய் மாற்றல் ஏற்குமெனவும் அறிவர்
    அதை
    அவ்வாறாய் மாற்றல் எவ்வாறெனவும்
    எதையும் எங்கே எப்போது எவ்விதம்
    மாற்றலாம் எனவும்
    எல்லாரும் அறியுமாறு எவருக்கும் ஏவவும்
    மாற்றற்குரிய
    பொருள் இடங் காலம் விதம் என அனைத்தையும்
    வேண்டிய போது வேண்டியவாறு மாற்றவும்
    பொறுப்பும் அதிகாரமும் உரிமையும் கடமையும்
    பிறவும் உடையர்
    ஆதலின்
    பிறர் எவ்வாறு இவ்வுலகை மாற்றலாம் என
    அவர் தனது
    சாய்மனைக் கதிரையிற் சாய்ந்து சுவரை நோக்கியும்
    படுக்கையிற் கிடந்து முகட்டை நோக்கியும்
    உருளு நாற்காலியில் அமர்ந்து திரையை நோக்கியும்
    ஆணைகள் பிறப்பிப்பர்
    அவர் எதுவுமே செய்யாரென்பதுடன்
    எவர் இவ்வுலகை மாற்றுவர் எனவும் அறியார்
    ஆயினும் இவ்வுலகை
    மாற்றத் தகாதோர் எவரென
    அவர் அறுதியாயும் உறுதியாயும் இறுதியாயும்
    அறிவர் ஆதலின்
    அனைவரும் அறிமின்―
    அவரை மீறி உலகை மாற்ற முனையும் எவரையும்
    அவர் என்றென்றுங் கண்காணித்துச்
    சாய்மனைக் கதிரையிலும்
    படுக்கையிலும்
    உருளு நாற்காலியிலுமிருந்து
    கண்டன அறிக்கைகளைப் பிறப்பித்தவாறே
    இறுதி வரையிலும் இருப்பர்

  29. தமிழரங்கத்திற்கு,

    சம்பவம் நடந்த்து உண்மை. சம்பந்தப்பட்டவர்களும் உண்மை. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதில்தான் வேறுபாடு. உங்களுக்கும் குகநாதனுக்கும் உள்ள ஒற்றுமை ஒன்று உள்ளது. அதனை தன்மைரீதியில் அணுகி அதன் அரசியலை வெளிக்கொணர்தல்தான் சரியானதும் கூட• குகநாதன் மீது கடத்தல் கட்டப்பஞ்சாயத்து போன்ற தாக்குதல் நடந்து உள்ளது. ஆனால் அந்த நபர் எதாவது வக்கீல்களை அணுகி தன் மீது நடந்த தாக்குதலை நீங்கள் இருவரும் நம்பும் நீதிமன்றத்திற்கு கொண்டு போயிருக்கலாம்தானே. சரி அதுதான் வேலைக்கு ஆகல•எத்தன மனித உரிமை அமைப்புகள் இருக்கு. அதுக்கு கொண்டு போயிருக்கலாம். வர்க்கம் தடுத்திருந்தா கூட ஹென்ரி திபேன் இடம் கூட போயிருக்கலாம். இல்ல இருக்கவே இருக்காங்க உண்மை அறியும் குழு என்ற பெயரில் புத்தகம் போட்டே போராடும் பேராசிரிய பெருந்தகைகள் இருக்கிறார்கள். மார்க்சிய இயக்கங்கள் பற்றிய கொசிப்பு என்றால் முண்டியடித்து கொண்டு அரங்க கூட்டங்களை கூட ஏற்பாடு செய்து தருவார்கள். அப்படி அவர் செய்யவில்லை. ஒரு பத்திரிகையாளர் சந்திப்ப நடத்தி இருக்கலாம். இத அவரு செய்யாத்து மாத்திரம் பிரச்சின இல்ல• ஏன் இப்படி செய்யல என தாங்களும் பேட்டியில் கேட்கவில்லை. பிரான்சு கற்றுத் தந்த ஜனநாயகம் இதுதானா

    சுயவாக்குமூலத்தையும் உங்களது கட்டுரையையும் மாத்திரமே ஏற்று அவற்றையை வரம்பாக தாங்களே வரையறுத்து விவாதிக்க முனைவது எந்த மார்க்சியவகைப்பட்ட வாதம் ரயா. ஒரே ஒரு பொதுவிசாரணை தங்களது அரசியலை கேலிக்குள்ளாக்கி விடும் என்றால் பொதுவிசாரணை என்ற வடிவம் கட்டப்பஞ்சாயத்தாக இருக்கும் என்பது உங்களது கருத்து. இல்லை எனில் உங்களது ஜனநாயகத்திற்கு எதிரான இந்த அரசியலை கேலிக்குள்ளாகிவிடும் என்ற பரிதாபத்தில் இருந்து விடுதலை அடைய தூக்கி எறியுங்கள்.

    அத்வானி கும்பலாக அருள் எழிலன் மற்றும் செழியன் போன்றோரை ஒப்பிடும் தாங்கள், அமைப்பினை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்பதும் புரிகிறது. இந்தியாவுக்கு வரச்சொல்வது பாபர் காலத்துக்கு கூப்பிடுவது போல நடக்க முடியாத ஒன்றாக உங்களுக்கு படுகிறது. இடத்தை காலத்துக்கு எதிர் நிறுத்தும் கோழைத்தனத்துடன் ஒப்பிடுகையில் கமிசார்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்.

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  30. ரயா ஒரு தீர்ப்பெழுதி விட்டார். அந்த தீர்ப்புக்கு ஏற்ற மாதிரி நியாங்களை உருவாக்குகிறார். அருள் செழியன் குகநாதனிடம் இழந்த பணத்தை மீட்டது தொடர்பாக நடந்தது என்ன? எதற்காக குகநாதனை சென்னையில் எப்.ஐ.ஆர் போட்டு போலீஸ் பிடித்தது. இதே போலீசால் 2005-ல் குகநாதன் ஆட்களால் செழியன் கடத்தி கட்டப்பஞ்சாயத்து செய்யபப்ட்டது உள்ளிட்ட எந்த விசாரணைக்கும் ரயா தயாரில்லை. அவரைப் பொறுத்தவரையில் இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் குகநாதனும், அவரது மனைவி சொல்வதுவுமே வேத வாக்கு. எவ்வித முன் முடிவுகளும் அல்லாமல் இந்தப் பிரச்சனையை முழுவதுமாக விசாரிப்போம் என்று சொல்லும் ம.க.இ.க வையும் இப்போது குற்றம் சொல்லத் தோன்றுகிறது அவருகு. இத்தான் எங்கள் ஊரில் நாட்டாமை செய்யும் கட்டப்பஞ்சாயத்து என்பார்கள்.

  31. தமிழரங்கத்திற்கு,

    புஜ வாசகன் நீங்கள் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அப்படி எப்போதும் எதிரியை கற்பிதம் செய்து அதற்காகவே அவரை பின்தொடர்ந்து அவர் விடும் வெளிக்காற்றை நாடி பிடித்து மாத்திரமே அவர்தம் அரசியலை புரிந்து கொள்ள வேண்டிய அவலத்தில் இந்தியாவில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. எனவே எக்ஸ் அல்லது ஒய் இன்னார் என அம்பலப்படுத்த வேண்டிய அரசியல் வெறுமையும் இங்கு இல்லை என கருதுகிறேன்.

    அப்புறம் புஜ வாசகன் என்ற பெயரில் ஒரு பின்னூட்டத்தை அனுமதித்து இருக்கின்றீர்கள். காலச்சுவட்டுக்கு நாவலன் லிங்க் கொடுத்திருக்கிறார். அவரை அரசியல்படுத்தி எடுக்க வைக்க சொல்லி உள்ளார். இதைத்தான் வேறு தன்மையில் ரதியை எழுத அனுமதித்த வினவுக்கும் சொன்னீர்கள். மாற்றுக் கருத்தாளர்களுடன் பேச மறுக்கும் இந்தப் போக்கின் இறுதியில் மக்களுடன் பேச மறுக்கும் பெரிய அண்ணன் தனம் நமக்கு வந்துவிடும் என்று கூட புரியவில்லை. காலச்சுவடை விரும்பி படித்தால் உங்கள் தோழர்களை கூட வர்க்க எதிரியாக்கி விடுவீர்களோ ? கொள்கை முக்கியம் ரயா ! காலச்சுவடு படிக்கும் போர்டு பவுண்டேசன் ஆதரவாளர்களால் பாட்டாளி வர்க்கம் தன்னை கறைபடுத்த கூடாதுதானே! அம்சாவின் சென்னை பாதிப்பு என்ற தங்களது குற்றச்சாட்டை புஜ வாசகன் நிரூபிக்க வேண்டும். பெயரை வைத்து அரசியல் பண்ண வேண்டாம் என்பதால் இதனை இத்துடன் மட்டறுத்து பதிலுக்கு வருகிறேன்.

    அம்பலப்படுத்தியதறகாக விசாரணைக்கு கூப்பிடுவது என்ன நியாயம் என்பதுதான் உங்கள் வாதம். எழுதுவது கிசுகிசு பத்திரிகை என்றால் கூட பத்திரிகை தர்மத்தின் அடிப்படையில் தான் உண்மை என கருதும் ஒன்றைத்தானே எழுதுபவன் எழுத வேண்டும். தான் எழுதியதற்கு தான் நேர்மையுடன் இல்லாத எத்தனை புத்தி ஜீவிகளை பாரதி உள்ளிட்டு விமர்சிக்கிறோம். எழுதியவுடன் ஆசிரியன் செத்துப் போகிறான். இனி படைப்புடன்தான் வாசகன் பேச வேண்டும் என்பதுதானே கலை கலைக்காகவே தரப்பு முன்வைக்கும் வாதம். அதைத்தானே விசாரணை என்றவுடன் மறுத்து நீங்களும் முன்வைக்கிறீர்கள் ரயா. மார்க்சியவாதியாக இருப்பதை விட முக்கியம் சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இருக்க வேண்டும். இப்படி இருந்தால் எளிதாக நீங்கள் மார்க்சியத்தை நோக்கி வர ஆரம்பித்து விடுவீர்கள். இது முடியாத போது யார் யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களை ஆள்காட்டவும் அவதூறு செய்யவும் கிளம்பி விடுகிறீர்கள்.

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  32. தமிழரங்கத்திற்கு,

    ப‌ணத்தை பறிகொடுத்த எவரும் பறித்தவனை ஏமாற்றி வரவழைப்பதற்கு ஒரு அரசியல் ரீதியாக சரி என நிரூபித்துதான் பறிக்க வேண்டும் என்றால் இதைத்தான் சிபிஎம் இன் தொழிற்சங்க நடவடிக்கைகளே அரசியல் போல இருக்கும் அரசியல் சொல்கிறது. உரிமையை நிலைநாட்ட வழிமுறை முக்கியம் என்கிறார்கள். தொழிலாளி வர்க்கத்தின் அவலத்தை படம் பிடிக்க போகும் ஒரு புகைப்பட கலைஞன் கூட முதலாளியை ஏமாற்றி எடுத்துவிடக் கூடாது என்பதுதான் ஆளும் வர்க்கத்தின் வாதம். லஞ்ச ஊழலை அம்பல படுத்தும் தெகல்காவிற்கு அதற்கு பயன்படுத்திய முறையின் நியாயமின்மையை எடுத்து அதனை முதன்மை படுத்துகிறீர்கள்.

    குறிப்பாக பேசியது நாவலனை பற்றித்தான் என்று வாக்குமூலம் அளித்துள்ளீர்கள். அதுதான் உங்களது அரசியல் உள்ளடக்கமும் கூட• புதைபொருட்களை நோண்டி நுங்கு எடுத்து வளர வேண்டிய அளவில் மாலெ அரசியல் சிறுபிள்ளைத்தனமானது அல்ல என்பதால் சாயங்களால் சிங்கமாக முயலும் நரிகளுக்கு பாரிய அளவில் புரிந்து விடுவதில்லை. நாவலனது பதற்றம் என்ற வடிவம்தான் அவரது சுய அம்பலமாதல் என்ற தங்களது கணிப்பு அரசியலை பின்னுக்கு வைத்திருக்கிறதுதானே.. அரசியலுக்குள் செல்ல என்ன இருக்கிறது அதில். சரி நியாயமாக இச்சம்பவத்தில் நேர்மறையில் சொல்லுங்கள். ஒருவேளை ரயா நாவலனின் பாத்திரத்தை ஏற்க வேண்டியிருந்தால் என்ன செய்திருப்பார் என்பதை தமிழரங்கம் முன்வைக்குமா ? அப்படி முன்வைக்கையில் எந்த எந்த இடத்தில் எந்த எந்த அரசியல் உள்ளடக்கத்தில் தான் மார்க்சியத்தை பின்பற்றுகிறேன் நாவலன் தவறுகிறார் என்பது பற்றி சொல்ல வேண்டும். அதுதான் நியாயமானவர்கள் செய்யும் செயல்.

    மார்க்சியத்தை ஏமாற்றி தேசியம் அவர்களை கையில் போட்டுக் கொண்டு குகநாதனின் சூழ்நிலைக்கைதி என்ற அவலத்தை அவருக்கு வழங்க மறுத்த தன்மையை தேசியத்தின் பெயரால் விமர்சிக்க வந்த்தாகவும் இதனுடன் தாங்கள் கருதுவதை எல்லாம் ஒரு விசேட கவனத்திற்கு தங்களுக்கு வந்த்தும் தற்செயலானது அல்லதான்.

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  33. தமிழரங்கத்திற்கு,

    பாசிச கூறுகளுடன் நீங்கள் குற்றம் சாட்டுபவர்கள் நடந்து கொண்டார்கள் என நிரூபிக்க வேண்டும். நிரூபிக்கும் வரை அவை குற்றமல்ல, குற்றச்சாட்டுதான் என்பதும் நீதிமன்றங்களின் வழியே ஜனநாயக புரட்சியை நிறுவ விரும்பும் தங்களுக்கு தெரியாத ஒன்று இல்லை. ஆனால் இப்படித்தான் நாடாளுமன்ற வழியில் புரட்சியை நடத்த இங்கு பலரும் முயன்று வருகிறார்கள் என்பதையும் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குற்றச்சாட்டை நிரூபிக்க முன்வராத பட்சத்தில் அவை அவதூறுகள்தான். குகநாதனை சரத் பொன்சேகா உடனும் மாலெ அமைப்பினர் அறிந்த நபர்களை மகிந்த உடனும் நிறுத்தி நியாயம் கற்பிப்பதற்காக ஆள் முக்கியமல்ல கொள்கை முக்கியம் என்று வாதாடும் நீங்கள்தான் மையப்புள்ளியே நாவலன்தான் உங்களது அரசியலுக்கு என்பதையும் இதே கட்டுரையில் ஒப்புக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த முரண்பாடு உடைய கட்டுரையை உங்களது தோழர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களுக்கு புரியாது என்பதை தனியாக சொல்ல வேண்டியது இல்லை.

    பின்னூட்டங்களை கையாளும் தங்களது இரட்டை நிலை பற்றி ஏற்கென்வே சொல்லி விட்டேன். மேலும் வாசகரின் அமைப்பு நிலை அறிவதற்கான ஆவல் என்ற ஜனநாயக உரிமைக்காக சரியாக சொன்னால் ஒரு பண கொடுக்கல் வாங்கல் இன்னும் சரியாக சொன்னால் ஒரு ஏமாற்றிய முதலாளியின் ஏமாற்றுவதற்கான உரிமை மறுக்கப்பட்ட ஒரு அவலத்தின் முன் அமைப்பின் நிலைப்பாட்டை கோருகிறீர்கள். சம்பளம் தராமல் ஏமாற்றிய முதலாளி அவனிடம் வேலை பார்த்த தொழிலாளியால் கடத்தியோ அல்லது மிரட்டியோ பணம் பறிகொடுத்து இருந்தால் கூட நீங்கள் வகுத்த மார்க்சிய முறையில் அதாவது மிகவும் நாசூக்கான முறையில் மாத்திரம்தான் வசூலிக்க வேண்டும் என்கிறீர்கள். எங்களது தேசத்தில் இதற்கு முன் இப்படி பேசியவன் கரம்சந்த காந்தி. ஒத்துழையாமை இயக்கம் முன்னணிக்கு வந்தபோது போலீசாரின் தாக்குதலில் இருந்து தப்ப எதிர்தாக்குதல் நடத்திய மக்களை அகிம்சைக்கு பக்குவப்படாத மக்களால் போராட்டத்தை தள்ளி வைப்பதாக சொல்லி போராட்டத்திற்கு துரோகம் செய்தான்,

    தற்செயலானது அல்ல என்ற சொல்லுக்கு நீங்கள் அளித்துள்ள பதில் எனக்கு மிகுந்த மன வேதனை அளித்த்து. முரண்பாடுகளுக்கு பதில் அளிக்கவில்லை என்பதை எங்குமே இதுவரை குறிப்பிடாத தாங்கள் தற்போது பொதுவெளியில் அதை பேசுகின்றீர்கள். நீங்கள் குறிப்பிட்ட முரண்பாடுகள் அரசியல் சிந்தாந்த நடைமுறை யில் அமைந்திருந்து அவர்கள் உங்களுக்கு பதில் தர மறுத்தார்களா ? அல்லது புறக்கணிக்கத்தக்க அளவில் தற்போது முன்வைக்கும் ஏதாவது சிறுபிள்ளை அரசியல் வேறுபாடுகளை முன்வைத்தீர்களா. இதையெல்லாம் விட முக்கியமானது உங்களது அவல இறைஞ்சுதல்கள்தான்.

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  34. தமிழரங்கத்திற்கு,

    உங்களுடன் பாராட்டிய உறவு, பதில் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட எமது சர்வதேசியநிலை இதனால் பாதிக்கப்பட்ட யாம் என தொடரும் தங்களது கழிவிரக்க புலம்பலில் ஒழிந்திருக்கும் விமர்சனம் தன்னளவில் நேர்மையற்ற ஒன்று எனக் கூட தெரியாமலா நீங்கள் எழுதி இருப்பீர்கள். பெரியண்ணன் வேலை தொடர்ந்து நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முனைகிறீர்கள். ஆனால் நாவலனுடன் உங்களது உறவை புரிந்த பிறகுதான் அரசியல் ரீதியாக பார்ப்பேன் என்ற அடுத்த வரியில் அம்மணமாக நிற்பது தெரியவில்லையா

    க‌டந்த காலத்தில் ஒருவர் என்ன செய்தார் என்பது ஒரு பாயிண்டுதான். அதனை விட முக்கியமானது தற்போது எப்படி புரிந்து கொள்கிறார் எவ்வாறு சமூகத்தில் செய்ல்படுகிறார் என்பதுதான். நாவலனோ அல்லது அருள் சகோதர்ர்களோ எப்போதுமே சரியாக இருந்தார்கள் என சொல்லவில்லை. ஆனால் வினவு துவங்கிய காலத்திற்கு பிறகுதான் அறிமுகமாகி அறிமுகமான காலம் தொட்டு தவறுகள் எதுவும் காணப்படாது இருக்கிறது. தொடர்ச்சியாக ஒருவர் தன்னை தனதியல்பை மறைத்து புரட்சிகர அமைப்புகளுடன் நட்பை பேண முடியும் என்ற கொள்கை முடிவு தங்களுக்குள்ளது. தவிர்க்க இயலாமல் நடைமுறை என்றவுடன் அது உங்களை குத்திக்காட்டியது போலவும் பட்டிருக்கும். தனக்கு தெரிந்த தவறானவர்கள் தோழர்களுடன் கலந்து உறவாட துவங்கினார்கள் என்றால் அத்தவறுகள் யாது அதன் அரசியல் தொடர்பும் அத்தவறின் தொடர்ச்சியும் பற்றி குறிப்பாக விளக்க‍ வேண்டும். 2 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் ரயா

    இந்த நிலைப்பாடு மாறுதலுக்குட்பட்டது என்பதை விசாரணையின் ஊடாக மாற்ற வாய்ப்பிருப்பதையும் மறுக்காத நீங்கள், நீங்களிருக்க நாவலனை தோழமையாக புரிந்து கொண்டதால் கொதிப்பேறி, நாவலனே நல்லவன் என்றதன் மூலம் நீங்கள் கெட்டவராகி விட்டீர்கள் நான் மட்டும்தான் விடாது போராடும் நேர்மையானவன் என உங்களுக்கு நீங்களே சான்றிதழ் கொடுத்துக் கொள்ளவும் தயங்கவில்லை. சுயமோகிகள் பற்றிய கட்டுரை தவிர்க்க இயலாமல் ஞாபகத்திற்கு வந்த்து. கடந்த காலத்தை இருவருக்கும் பரிசீலித்து இருவரையும் மதிப்பிட வேண்டும் இல்லை என்றால் உங்களது அரசியல் கடந்த காலத்திலும் தவறானது என்பது உங்களது வாதம். இந்த அழுத்த அரசியலை ரதிக்கு அமல்படுத்த முனைந்த போதே சுட்டிக்காட்டப்பட்ட தாங்கள் ஒரு முதலாளித்துவ பயங்கரவாதிக்கு, சம்பளத்தை சொத்தை ஏமாற்றி தின்பதற்கு உகந்த முறையில் அவனே நினைத்துப் பார்க்க முடியாத ஜனநாயகத்தின் போர்வையில் உதவிக்கு வந்திருக்கின்றீர்கள்.

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  35. தமிழரங்கத்திற்கு,

    இந்த சம்பவத்தில் தற்செயலாக அருள் எழிலனுக்கு நாவலன் போன் செய்திருக்கா விடில் குகநாதனுக்கு உங்களை போன்ற மார்க்சிய வக்கீல் கிடைத்திருக்க மாட்டார். குகநாதனும் உங்களது பலவீனங்களை அறிந்துதான் உங்களிடம் மார்க்சிய லெனிய அமைப்பு ஒன்றுதான் என்னை கடத்தியது என்றெல்லாம் பீலா விடுகிறார். இதனை நீங்கள் ஏற்றால் கூட மார்க்சிய லெனிய அமைப்பு ஒன்று உங்களுக்கு தொடர்பில் இருக்கையில் அவர்கள்தானா என ஏன் விசாரிக்கவில்லை. காலம் எல்லாவற்றுக்கும்தான் பதில் சொல்வதாக எல்லோரும் கருதுவது போல படுகிறது. நீங்கள் இப்படி இல்பொருள் பாடிட காலம் என்ன தவறு செய்த்த‌து.

    அருள் எழிலன் நியாயப்படுத்தும் வாதங்களை முன்வைத்திருப்தாக சொல்லுவதற்கு ஆதாரம் என்ன? எந்த சம்பவத்தை நியாயப்படுத்தினார். நியாயப்படுத்துவோர் யாராக இருந்தாலும் அவருடனான அதனை மீறிய நட்பு அயோக்கியத்தனமானது தானே? ஆதாரம் கேட்பது உங்களை பொன்சேகா போல உணர வைத்தால் நான் பொறுப்பல்ல• ஆதாரங்களை முன்வைக்காது பேசினால் அதுதான் நியாயப்படுத்துவது. நியாயப்படுத்தல் என்ற சொல்லே தன்னளவில் நேர்மையற்றதுதானே

    குற்றச்சாட்டுகளை உங்களது கட்டுரை வழியில்தான் நிராகரித்து உள்ளார்கள். உடனே ஏன் எனது குற்றச்சாட்டு என முரண்பாடுகளை விளக்குவதுதானே சரியானது. அவர்களை பாதுகாக்க குற்றச்சாட்டை நிராகரிக்கிறார்கள் என்கிறீர்கள். எதிரிகள் கூட மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மீது வைக்க கூசும் அவதூறு. சில ஆதாரங்கள் தர முடியவில்லை. மற்றபடி அந்த அமைப்பில் எவ்வளவு பெரிய தோழராக இருந்தாலும் குற்றச்சாட்டில் இருந்து தவறான முறையில் பாதுகாப்பது என்பதே கிடையாது என்பதை ஆளும்வர்க்கம் கூட மறுக்காது. ரயா வழக்கம் போல சேறடிக்கிறார்

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  36. தமிழரங்கத்திற்கு,

    நீங்கள் கூறிய கருத்துக்கு ஒருவரோ அல்லது ஒரு அமைப்போ கருத்து கூறாமல் இருப்பதற்கான அவ்வளவு முகாந்திரமும் இருக்கிறது உங்களது கருத்துக்கு அகவயமாகவே. கருத்து என்ற தரத்திற்கு இருக்கும்பட்சத்தில் எதிரி கூட பதில் சொல்லி விட்டுதான் போவான். சுயவிமர்சனம் செய்யாமல் இருப்பது போதும் எவரது நேர்மையையும் அளக்க என்பதும், எம்மால் தனிநபர் தாக்குதலில் தாக்கப்பட்ட யாராவது யோக்கியனா என இயேசு போல கோருவதும் மார்க்சியவாதிகளின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளா.. கொஞ்சம் யோசிங்க ரயா..மார்க்சிய வகைப்பட்ட அணுகுமுறைக்கும் உங்களுக்கும் உள்ள தூரமும், தான் திட்டிய எல்லாருமே கெட்டவங்க என்பதால் தான் நல்லவனாகும் அபத்தமும் யாருக்குமே பொறுக்க முடியாது ரயா…

    2008 இல் அரசியல் நிலைப்பாட்டுக்காக ஆதரித்திருக்கிறீர்கள். அதில் விமர்சனம் வைத்த்தாக நீங்களே சொல்லவில்லை. இந்த இரண்டாண்டு காலத்தில் நாவலன் தொடர்பில்தான் இருக்கிறார் என்பதும் உங்களுக்கு தெரிந்த்தே. இதில் எதில் தவறினார் என்பதை அரசியல் ரீதியாக முன்வைப்பதுதானே சரி. கருச்சிதைவை காலம் பின்தள்ளி உள்ளது. ஆனால் புத்தாக்கம் என்ற தங்களது போராட்ட முறைதான் சீர்குலைவின் துவக்கம் என்ற புரிதல் இல்லாமல் புத்தாக்கத்தை நாவலனுக்கு பொருத்தும் அணுகுமுறையில் உள்ள சுயவிமர்சனமின்மைதான் ஆக கேடாதனது.

    நாவலன் மீதான தனிப்பட்ட வன்மத்தால், அமைப்பு வரம்புக்குள் யார் யாரை ஆள்காட்ட முனைந்திருக்கிறோம் என்ற புரிதல் இல்லாமல் நீங்கள் மொத்த்த்தில் எதுவும் நடக்க கூடாது என்ற தூய பரிசுத்தவாத கண்ணோட்டத்துடன் சீர்குலைவு வேலையை பழைய வரலாற்று பிழைகள் என்ற பெயரில் முன்வைத்து தொடர்ந்து நடத்துகிறீர்கள். இதற்காக எதிர் வர்க்கத்தின் எதிரி வர்க்க நடவடிக்கையான குகநாதனின் ஏமாற்றுத்தனத்திற்கு ஜனநாயகத்தின் சாயம் பூசி பேச வருகிறீர்கள். ரதி என்ற நடுத்தரவர்க்க பெண்ணின் கருத்து சுதந்திரத்தை விடவும் குகநாத்த‍ன் என்ற பொறுக்கி முதலாளி தனது தொழிலாளியிடம் ஏமாற்றுவதற்கான ஜனநாயகம் உங்களது வர்க்க நிலை அரசியலுக்கு உகந்த்தாக படுகிறது. அதுதான் இதனை கட்டப்பஞ்சாயத்து என்றும் சொல்ல வைக்கிறது. தொழிற்சங்க அனுபவத்தில் இதுபோன்ற பல கட்டைப்ஞ்சாயத்துகள் வரும்போதெல்லாம் தளபதிகள் போல சிந்திக்காமல் தோழர்கள் போல சிந்தித்துதான் அரசியலை தொழிலாளி வர்க்கத்திற்கு புரிய வைக்கிறார்கள் தோழர்கள்.

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  37. வினவு,மணியை வக்கீலாக அமைத்திருக்கிறீர்களோ?

    அவரைப் பேச வைப்பதூடாக உங்கள் ஊடகப் பொறுப்பை இப்படி நாறடிக்க வேண்டாமே!ம.க.இ.க. பேசவேண்டியதும்,கூடவே வினவும் பேச வேண்டியள்ள இந்தச் சூழலில் உங்களுக்காக மணி மொத்தமாகப் பேசுவது சகிக்க முடியவில்லை!

    இதுகூட ,தோழமையைக் கட்டி வளர்க்கும் நிலையை மறுத்துக் கட்சி பிரிப்பாக மாறுகிறது.இரயாகரனையும்,அவரது தொடர்புகளையும் அம்பலப்படுத்தித் தோழராக ஏற்பதே எமது நோக்கமானது.

    அவர் எழுதியவை எவருக்கோ சாதகமாகியுள்ளது.அதை அவர் அனுமதித்ததுவரை அவர் புரட்சியாளனாக ஏற்கப்படுவதற்கு எதுவும் தேவையில்லை-அவரது எழுத்தும் !

    இன்றைய அவரது வாழ்நிலையே அதைத் தீர்மானிக்கும்.இதை விடுத்துக் கட்சி கட்டிக் கூக்குரலிடுதல் புரட்சிகர நடவடிக்கை அல்ல!

    எதிரியுந் திருந்த முடியும்-அவனும்-அவளும் தோழமையாக வளருவும் முடியும்!மணி கட்டியமைப்பது புரட்சிகர விமர்சனம் அல்ல.இதுவும் இரயாவினது அடுத்தவொரு பக்கம்!

    “புரிந்து கொள்வது “பெரியதொரு வாழ்வு.அதைக் கற்பிக்கும் பொறுப்புக் கட்சிக்கு உண்டு.ம.க.இ.க என்ன செய்கிறது?;மணியை வைத்து “கவுண்டமணி-செந்தில்”காமடி ஏதும் பண்ணுகிறீர்களா?

    • தோழர் ஸ்ரீரங்கன்,

      இந்தக் கட்டுரைக்கு வரும் பின்னூட்டங்களை நாங்கள் மட்டறுக்கவில்லை. இங்கே தோழர் மணி எழுதியிருப்பது அவரது சொந்தக் கருத்து, வினவு கருத்தல்ல. இராயகரனது கட்டுரைகளுக்கான பதில் விரைவில் வெளியிடப்படும்.

      • நீங்கள் சொல்வது உண்மயல்ல நானும் வேறு சிலரும் அனுப்பிய பின்னோட்டங்களை தடுத்து உள்ளீர்கள் . வாழ்க உங்கள் சனநாயக புரட்சி

        • நிலா,
          உங்கள் பின்னூட்டம் ஒரு முறைக்கு மேலும் பதிந்துள்ளதை நீங்கள் கவனிக்கவில்லை போலும்

    • ஸ்ரீ ரங்க, நீ அங்காலையும் பாடுவாய், இங்காலையும் படுவாய், திங்கிற சோத்தில பங்கும் கேட்பாய்.
      எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு. இப்போ நாவலன் கை உயர்கிற மாதிரி தெரியுது…. பானையில சோறு இருந்தால்…பூனைகளும் சொந்தம் …பாவம் மக்கள்

      • நிலா என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?;
        என் வீட்டு முகவரி தெரியுமா?;
        அல்லது என்னோடு எப்பவாவது உரையாடியுள்ளீரா?
        அங்கேயும்,இங்கேயும் பாடுவதென்பது நியாயம் எங்கே-அங்கே!
        சும்மா இரயாவுக்குக் கொம்பு சீவுவது எனது நோக்கமில்லை!
        நான்,எவரையும் சந்தேகம் கொள்கிறேன்.
        இரயாவைப் புலியின் இன்போமர் என்று, கடந்த இரு ஆண்டுகள் முன் கூறியவன்.அதுபோல் இன்று பலரைக் குறித்துச் சந்தேகம் கொள்கிறேன்.
        அதிகார வர்க்கத்தோடிணைந்து புரட்சியைக் காட்டுபவர்கள் எல்லோரும் தம்மைப் “புரட்சி “வாதிகளாகவே காட்டுகின்றார்கள்.
        இப்படி ஜேர்மனியில் எத்தனையோ புரட்சிக்காரர்களை-அமைப்பை பார்த்தவன் நான்.சும்மா வீம்பு பேசமால் நியாயமாகச் சிந்திக்கப் பழகினால் அது தோழமைக்கும்-மக்கள்சார் அரசியயலுக்கும் நல்லது.
        இல்லை “இப்படித்தாம் செய்வேன் “என நீங்கள் முனைந்தால் அது உங்கள் வர்க்க நிலையைப் பொருத்தது.
        நான் எப்பவும்”சோத்துக்கு”அலைபவன் இல்லை!அவ்வளவு போக்கிரியாகப் பணத்துக்குப் பந்தாவுக்கு ஓடுபவன் நான் இல்லை!
        என்னை உரைத்துப் பார்க்கும்”தகுதி”எவருக்கு இருக்கிறது.முடிந்தால் செய்யுங்கள்!நான் இரயாகரன் இல்லை!

  38. தமிழரங்கத்திற்கு,

    எங்களது புத்தாக்க நடவடிக்கை அரசியில் விமர்சனம் எல்லாம் சரியாக உள்ளது. மிகச்சரியாக அம்பலப்படுத்துகிறோம் என்ற தீர்ப்புகளைத்தான் ஆதாரங்களாக ராமன் பிறந்த இடம் போல முன் வைக்கிறீர்கள். ஆனால் தனது மதிப்பீடு விசாரணையால் தவறு என தெரிய வந்தால் மாற்றிக் கொள்கிறோம் என்கிறது மக்கள் கலை இலக்கிய கழகம். இரு தரப்புக்கும்தான் எத்தனை வேறுபாடு. எம்மை பொறுத்தவரையில் என்றுதான் இவற்றை சொல்லி உள்ளீர்கள். சமூகத்தை பொறுத்தவரை என்று இதுவரை சொல்லவில்லை. தனிப்பட்ட பாராட்டோ அல்லது வன்ம்மோ இந்த மூளையில் இருந்துதானே வரும்.

    தனிநபர்களை மையப்படுத்திதான் எதார்த்தம் இயங்குவதாக எல்லா புத்திஜீவிகளும் கருதுகிறார்கள். கருத மட்டும்தான் செய்கிறார்கள். அதனை மையமாக வைத்து கம்யூனிச அவதூறை மந்தைகள் சோ அண்டு சோ என பேச துவங்குகிறார்கள். கம்யூனிச போர்வையில் தொடர்ந்து நீடிப்பதால் உங்கள் வாயால் இதனை சொல்ல வைத்திருக்கிறார்கள். அம்சா வந்துதான் இதனை செய்ய வேண்டுமா என்ன வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது இல்லையா ரயாகரன்.

    இதுபோன்ற சில்லறை விசயங்களுக்கு மாபெரும் மகிந்தா சரத்பொன்சேகா மோதல் என்றெல்லாம் பிலட்ப் கொடுப்பதால்தான் பல சமயங்களில் மார்க்சியவாதிகளை மற்றவர்கள் காமடியன்களாக பார்க்க துவங்குகிறார்கள். பொறுப்பின்மையோடு கூடிய வார்த்தைகளை பாவிக்கும் சக தோழராக இருந்தாலும் சுயவிமர்சன் தருதல் என்பதை வலியுறுத்திதான் நடைமுறை உள்ளது. உங்களுக்கோ சுவீப்பிங்காக பேசுவதற்கு அரசியல் உள்ளது என கருதுகிறேன்.

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  39. தமிழரங்கத்திற்கு,

    முக்கியமற்ற ஒன்றை முக்கியமானதாக மாற்ற அரசியல் சாயம் அடிப்பது அதனுடன் சில கழிவுகளையும் உடன் அழைத்து வருகிறது அதுதான் நீங்கள் எழுதிய மற்றும் சில குறிப்புகள். நான் எழுதிய கருத்துக்களின் அடிப்படையில் என்னை ரயாவின் மறுபக்கமாக சிரீ ரங்கன் குறிப்பிட்டு உள்ளார். எனக்கு அதில் வருத்தமில்லை. இல்லை என மறுத்து வாதாடவும் முன்வர மாட்டேன். மறுபக்கம் என்ற தீர்ப்பை எழுதும்போது அதற்கான சான்றாவணங்களை சமர்ப்பிக்கும் போதுதான் அந்த குற்றச்சாட்டுக்கு மதிப்பளிக்க முடியும். மற்றபடி தங்களது சொந்த அவதானிப்பின்படி கட்டப்பஞ்சாயத்து ஆள்கடத்தல் போல ரயா வின் மறுபக்கம் என சொல்வதெல்லாவற்றையும் நானும் நிராகரிக்கிறேன்.

    1. குகநாதனை போலீசுடன் சேர்ந்து கடத்தி அல்லது கடத்தி பிறகு சேர்ந்து இதனால் ஏற்படும் பாரிய அரசியல் திசைவிலகல் என்ன? முதல் பாயிண்டாக இதனை வைக்குமளவுக்கு இதில் உள்ள பாசிசம் என்ன?
    2. மீள்பிரசுமும் அத்தகைய கேள்வியை உள்ளடக்கியதே. தேசம் நெற் இல் உள்ள சேறடிப்புகளுக்கு சக தோழர் என்ற முறையில் ஒரு பின்னூட்டம் கூட போடாத காரணம் என்ன ரயா? மௌனத்தை சம்மதம் என்றுதானே எடுக்க முடியும்
    3. நியாயம் யார் பக்கம் என தெரியாது. ஆனா கையாண்ட முறைதான் சரியா என்பது விமரிசனம் என்றீர்கள். மார்க்சியவாதிகள் பங்களிப்பு சரியா என்றீர்கள். நியாயத்தை விட வழிமுறை முக்கியம். சிபிஎம் கூட ஆயுதப்போராட்டத்த இப்படிதான் விமர்சிக்கிறான்
    4. பணம் பறித்தல் என்ற சொல்லில்தான் அழுத்தமே உள்ளது. நடந்த சம்பவம் பணம் பறித்தலா? உரிமையான பணத்தை திருப்பி வாங்கியதா? அதனை ஆராயாமல் இல்லாத அரசியலை தேடி திணிப்பதற்கு நாவலன் அப்போது போன் பேசியது வாய்ப்பாக போய்விட்டது இல்லையா
    4அ) தொழிலாளி வர்க்கத்தின் உயர் வருவாய் பிரிவு பாதிக்கப்பட்ட இச்சம்பவத்தில் இவர்கள் மனுவின் புஜதொமு தலையிட்டு லேபர் ஆபிசரிடம் போய் டிரிபூனல் க்கு போகாமல் பணம் செட்டில் செய்ய்ப்பட்டிருந்தால் நாவலனின் இடத்தில் நீங்கள் அமைப்பைத்தானே நிறுத்தி இருப்பீர்கள்
    5. உங்கள பத்திய பிரச்சின என்றவுடன் பேச ஏற்பாடு செய்து தருகிறேன் என்று முன்வரும் தாங்கள் மற்றவரை அரசியல் சொல்லாடல்கள் மூலம் விமர்சித்து விட்டு, நிரூபிக்க வர சொன்னால் சப்பை கட்டு கட்டுவது என்ன ஜனநாயகம் ரயா
    6. இந்த பாயிண்டில்தான் சமூக செயல்பாடு மற்றும் அணுகுமுறையில் உங்களதும் அமைப்பினதும் நடைமுறை வேறு என்று சொல்லி விட்டீர்கள். அப்படியானால் இதில் எது மார்க்சிய வகைப்பட்டது அல்ல என்பதை காரணத்துடன் முன்வைக்கலாமே
    7. ஒரு தரப்பை வைத்து மற்ற தரப்பை படபடப்படைய வைத்து வாக்குமூலம் வாங்கி தீர்ப்பெழுதி வருகின்றீர்கள். இதனையும் இன்றைய ஆளும்வர்க்கம்தான் செய்கிறது. நடந்த்து என்ன என்பதை நேருக்கு நேர் நிறுத்து யாருக்கும் பயமற்ற சூழலில் நடத்தினால் சில தனிப்பட்ட வன்மங்களும், ஆள்காட்டலின் சூத்ரதாரிகளும், பொறுக்கிக்கு துணைபோக நேர்ந்த நேரமும் நமக்கு வெள்ளிடை மலையாக தெரிய வரலாம்
    8. விவாதிக்க மாத்திரம்தான் அழைக்கிறார்கள் என நினைக்கிறேன். உங்களது கட்டுரையின் விளிம்பை அது தாண்டுமா என்பதை பார்வையாளர்களும் கூடத்தான் முடிவு செய்வார்கள். ஆனால் ஜனநாயகத்தின் நிழலில் மாத்திரம்தானே இது நடக்க முடியும். ஜனநாயகம் இருக்கிறது என்பதற்காக இணையத்தில் எதை வேண்டுமானாலும் எழுதும் பொறுக்கிகள் இதனை வைத்து வாழ்ந்து விட அனுமதிக்க முடியாதுதானே.
    9. நீங்கள் குற்றம் சாட்டியவர்களை உரசிப் பார்க்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். உங்கள் பற்றி இணையத்தில் உலவும் புரளிகள் என்றே நான் இன்னமும் நம்பும் பிரச்சினைகளுக்கு நீங்களாக முன்வந்து தன்னிலை விளக்கம் தர மாட்டீர்களோ? தளபதிகள் தவறு செய்ய மாட்டார்கள்தான் என்பது ஒருவேளை சரிதானோ .. திருட்டு ஆடியோ என்ற முடிவு அபத்தமாக படவில்லையா
    10. சந்தர்ப்பவாதிகளையும் பிழைப்புவாதிகளையும் பாதுகாக்க அதுவும் ஒரு சம்பந்தமே இல்லாத பணவிவகாரத்தில் ஒரு அமைப்பு முனைந்த்தாக இதுவரை யாரும் துணிவுடன் கூறியதில்லை. இப்படி தங்களை முன்னாள் தோழர்களாக சரியாக சொன்னால் முன்னாள் மார்க்சிய வாதிகளாக மாற்றிக் கொள்ள விரும்பும் பலரும் இதனைத்தான் சொல்லி செல்கிறார்கள். சொந்த வாழ்க்கைக்கு போகும் அரசியலை சரியாக புரியாத தோழர்கள் தங்களது புரிதலின் தரத்தை அறிந்திருப்பதால் சொந்த வாழ்க்கையில் தடுமாறிய தருணங்களை நேர்மையுட்ன ஒத்துக்கொண்டு போய் விடுகிறார்கள். ஆனால் சரியாக புரியாத அரசியலை வைத்துக்கொண்டே அதனை அரசியல் போல நினைப்பவர்கள் விமர்சனங்களை காறி உமிழ்வதாக மாத்திரமே நினைக்கின்றனர். காறி உழிழ்ந்தாலும் செருப்பால் அடித்தாலும் பண்ணைப்புரம் தேநீர் கடை தனிக்குவளை உடைப்பு போராட்டத்தில் எந்த ஆதிக்க சாதி தோழரும் உடைந்து போகவில்லை. முன்னிலும் உரமேறி ஜொலிக்கிறார்கள். அதுதான் அரசியலால் வழிநடத்தப்படுபவர்களின் நிலைமை.

    (copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)

  40. ரயாகரன் மீது பலரும் விமர்சனங்களை தவிர்தே வந்துள்ளனர். அதற்கான சந்தர்ப்பங்கள் பல வாய்க்கப்பட்ட போதும், அது தவிர்க்கப்பட்டது. விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல் ஆர்வமுள்லவர்களை அதிலும் வரட்டு தேசியத்தை மறுக்கும் நிலையிலிருப்பவர்கள் அருகிப்போயுள்ள சூழலில் முரண்பாடுகளை தவிர்த்து நட்பு முரண்பாடுகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய சூழலை ஏற்படுத்தவே அவ்வாறு நடந்து கொண்டார்கள். 6 கோடி ரூபாய் வங்கிக் கொள்ளைப் பணத்திற்கு ரயா பொறுப்பாக இருந்ததை அவரே ஒத்துக்கொள்கிறார். அதெல்லாம் தீப்பொறு என்ற புலோட் என்ற இயக்கதிலிருந்து பிரிந்த தீப்பொயிடம் ஒப்படைத்துவிட்டதாக ரயா சொன்னபோது 25 வருடமாக நம்பித்தான் இருந்தார்கள். சில மாதங்களுக்கு முன்னாக அந்த பணம் பாதிக்கப்பட்ட பல்கலைகளக மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டதாக கூறியதும் சந்தேகம் பலருக்கும் வளர தொடங்கியது.
    அதற்கு பிறகு சில வாரங்களின் முன்னால் பணத்தை இயக்கத்தில் சிலருக்கு ஒப்படைத்து விட்டு வந்ததாகக் எழுதியிருக்கிறார்.எதற்காக இப்படி மாறி மாறி சொல்ல வேண்டும் என்று கேட்டால், அவதூறு தான் மிஞ்சும்.மக்களின் பணம் எங்கே என்பது அவதூறு அல்ல., நியாயமான கேள்வி. அதும் சந்தேகம் வந்ததும் தான் கேட்கிறார்கள்.
    அவரது இயக்கதில் இருந்த நான் எனது பேரி எழுத விரும்பவில்லை. எனக்கு அவர் தாக்குதல்களை எதிர்கொள்ள பலமில்லை. ஆனால் ஒரு கருத்தைச் சொல்கிறேன். பணத்திற்கு கணக்குக் காட்டப்பட வேண்டும்.எப்போ வரும்? அதற்கு அரசியல் முன்வைக்கப்பட்டால் அவர் செய்கிற அவதூறுகளுக்கு கொஞ்சமாவது பெறுமதி இருக்கும்.

    copied to : தமிழரங்கம், வினவு, இனியொரு

    • ரமணனுக்கு சபா நாவலனை தெரியும் என நினைக்கிறன்.
      அவருடன் தொடர்பு கொண்டால் இன்று இந்தியாவில் வசிக்கும் ஐயரின் தொடர்பை ஏற்ற்படுதி தருவார் . ஐயரிடம் கேளுங்கள் பண விபரத்தை . மேலும் ராஜஹரன் இருந்த இயக்கத்தில் தாங்கள் இருந்தீர்கள் என நீங்கள் இங்கு எழுதுவதால் எல்லாம் உண்மயாகாது.

  41. ஒரு நீதி நெறிக்கொள்கையை உருவாக்க, ஒருவரையொருவர் கடித்துத் தின்பதற்கு வெறிகொண்ட இவர்கள் முயன்றனர். கூர்மையான தன்னுணர்வும் தன்னோக்குமுடையவர்கள் தங்களைப் போன்றே அடுத்தவர்கள் இருந்தால் பொறாமையும் பகைமையும் கொண்டனர். மனித உறவுகளில் ஒருவர் மற்றொருவர் மீது பொறாமையும் சந்தேகமும் கொள்வது சாதாரண நிலைமையாயிற்று. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் கால வழக்கமாயிற்று. நல்ல உடல் நலமுள்ளவர்கள் இரண்டு மாதத்தில் பித்துக்குளிகளாகவும் சித்த விகாரமுள்ளவர்களாகவும் ஆயினர். நேற்று வரை நண்பர்களாக இருந்தவர்களை, அலட்சியத்தோடு அற்பமாக நினைக்கும் மனநிலைக்கு மாறினர்.

    நமது அறிவாளிகளின் தனி மனித சுதந்திர உணர்வு சித்தப்பிரமைக்கும் முழுப் பைத்தியத்திற்கும் அவர்களை ஆளாக்கியது. இவ்வாறு தனிமனிதம் என்ற கொள்கையுடையவர்களது உள்ளங்கள் ஒடிந்து, மனம் குழம்பி, உயர்வு எண்ணங்கள் குன்றி பள்ளத்தில் வீழ்ந்து விட்டனர். இவர்கள் மனநோயால் பீடிக்கப்பட்டு உளறுகிறார்கள். தங்கள் மீது கழிவிரக்கம் கொண்டு கதறுகிறார்கள். தங்கள் மீது பிறரும் இரக்கம்காட்டவேண்டும் என்று உரக்கக் கூவுகிறார்கள்.

    ஆம்! இவர்கள்தான் தங்களைத் தாங்களே காதலித்தவர்கள். பிறரைக் காதலிக்கத் தெரியாதவர்கள்.
    -மத்தியதர வர்க்க மனோநிலை குறித்து மக்ஸீம் கார்க்கி

  42. ///அந்த விசாரணையை நாங்கள் நடத்தவில்லை. வழக்குரைஞர்களோ, நடுநிலையாளர்களோ விசாரணையை நடத்தட்டும். கேள்விகள், பதில்கள், குறுக்கு விசாரணைகள் ஆகிய அனைத்தும் வெளிப்படையாகப் பார்வையாளர் முன்னிலையில் நடக்கட்டும். புனை பெயர்களில் பின்னூட்டம் போட்டவர்கள், மகஇக வின் மீது சேறடித்தவர்கள், தம் கையில் ஆதாரம் இருப்பதாக மார்தட்டுபவர்கள் என யாராக இருந்தாலும் நேரில் வரலாம். தமது குற்றச்சாட்டுகளை கூறலாம். முறையாக விசாரணை நடப்பதை உறுதி செய்து கொள்ள அவை அனைத்தையும் ஒளிப்பதிவும் செய்து கொள்வோம்.///

    இந்த எழுத்துமுறைதான் இரயாகரனின் எழுத்துமுறையின் மூலம் என்பதற்கு மகஇக வெளியீடுகளை வாசிக்காதவர்கள் புரிந்துகொள்ளக் கடவீர்.

    ///இறுதியில் விசாரணைக்குப் பொறுப்பேற்கும் நடுநிலையாளர்கள் தமது முடிவைச் சொல்லட்டும். “ஆள் கடத்திப் பணம் பறித்தார்கள்” என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நாங்களே முன் நின்று ஏற்பாடு செய்கிறோம்.///

    ஆகா. இந்த முதலாளித்துவ நீதிமன்றங்களின் விசாரணை, அதன் தீர்ப்பு எல்லாம் தோழர்களுக்கு எப்போ உவப்பானதாக, ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக மாறின?

    ///இது போகிறபோக்கில் ஒருவர் மீது மேலோட்டமாகத் தெரிவிக்கப்பட்ட விமரிசனம் அல்ல. அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருக்கும் ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு.///

    இப்படியான விமர்சனங்களை மகஇக உட்பட புரட்சி பேசிய எந்த அமைப்போ விமர்சகர்களோ மாற்றுக் கருத்தாளர்களோ அரசியல் எதிரிகள்மீது வைக்கவில்லையா என்ன?. குழந்தைத்தனமாக இருக்கிறது.

    ///மகஇக வின் நேர்மையின் மீது எமது அரசியல் எதிரிகள் கூட கேள்வி எழுப்பியதில்லை. மக்கள் மத்தியில் நாங்கள் பெற்றிருக்கும் மதிப்பை ஐரோப்பிய தளங்களில் அனானிப் பெயர்களில் போட்டுக் கொள்ளப்படும் பின்னூட்டங்களால் எதுவும் செய்து விட முடியாது.///

    பிறகேன் தேவையில்லாத விடயங்களின்மீது பார்வை மகஇக க்கு?

    ///எல்லோர் மீதும் எல்லோரும் காறி உமிழ்ந்து கொள்ளும் இத்தகைய விசாரணை முறையிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்களின் இணைய உலகத்தை விடுவிப்பதற்கான சிறிய முயற்சியாகவும் நாங்கள் தலையிடுகிறோம். அங்கே காறி உமிழ்ந்த எச்சில் எங்கள் மீதும் பட்டுத் தெறிக்கின்ற காரணத்தினாலும் தலையிடுகிறோம்.///

    பகிடியாக இருக்கிறது. ஆரசியல் இலக்கிய உலகில் தமிழ்நாட்டிலோ இலங்கையிலோ இதுவரை நடவாததையா புலம்பெயர் இணையத்தளங்கள் புதிதாகச் செய்துகொண்டிருக்கின்றன. ஏல்லாம் ஒரு நீட்சிதான். இந்தச் சேற்றிலிருந்து தமது வேர்களை இழுத்தெறிய தமிழரங்கமென்ன தேசமென்ன இனியொரு என்ன ஏன் நீங்களும்தானென்ன முயலப்போவதில்லை என்ற விடயத்தை வேறு வேறு உச்சரிப்பில் நிகழ்த்திக் காட்டுகிறீர்கள். குட்டைகள் இணைந்து எல்லைதெரியாமல் விஸ்தரித்துப்போவதுதான் இன்னும் அச்சமூட்டுகிறது நமக்கு.

    – வழிப்போக்கன்

    (பிற்குறிப்பு: „இனியொரு“ பிரசுரிக்காமல் விட்ட பின்னூட்டம் இது.)

  43. “பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப் போராட்டம் …. ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும், தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது.” —மீண்டும் மீண்டும் அழுத்திச் செல்ல வேண்டிய சொற்கள்.

    “தவறே செய்யாத” தளபதிகளும் இணையத்தளக் கொமிசார்களும் டொன் கிஹோட்டேக்களும் கையுயர்த்தி “நானே நானே” என்றது போல, இரயாகரனை நியாயப்படுத்தி இங்கும் நடக்கிறது.
    இந்த அருவெறுப்பான சூழலுக்குக் காரணமானோரின் நோக்கங்கள் அறியப்பட வேண்டும். விரைவில் அம்பலமாகும் சாடைகள் ஏலவே தெரிகின்றன.

  44. ஐரோப்பாவில் இருக்கும் பம்மாத்து மாக்சியவாதிகள் Mac Donalsல்` உண்டு,
    Coco Colaல் கை கழுவி, உணவு செமிப்பதற்காக மாக்சியம் கதைப்பவர்கள். உடல் வளையாத மேட்டுக்குடிகள். மக்கள் இவர்களது புரடசி வரும் என்றூ வானத்தை பார்த்திருக்கும் முட்டாள்கள் இல்லை

Leave a Reply to Indli.com பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க