privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள்: நாடு ‘முன்னேறுதாம்’!

இந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள்: நாடு ‘முன்னேறுதாம்’!

-

மெரிக்காவின் ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் பைக் நிறுவனம் சமீபத்தில் தனது விற்பனையகத்தை ஹைதாரபாத்தில் திறந்திருக்கிறதாம். இந்த ஆண்டு இறுதிக்குள் சண்டிகர், தில்லி, மும்பை, பெங்களூரு முதலான இந்தியாவின் பொருளாதாரக் கோவில்களான நான்கு இடங்களிலும் விற்பனையகத்தை திறக்கப்போகிறார்களாம்.

குரூயிஸ் பைக் ( cruise bike ) என வகைப்பட்ட மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இந்த நிறுவனம் பெயர் பெற்றதாம். இங்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகியிருக்கும் ஐந்து மாடல்களில் உள்ள பைக்குகள் விற்பனைக்கு தயாராக இருக்கிறதாம். விலை என்ன?

883 சிசி திறன் கொண்ட பைக்கின் விலை ஏழு இலட்சம். 1800 சிசி திறன் கொண்ட பைக்கின் விலை 35 இலட்சம். இது என்ன காரின் விலை போல இருக்கிறது என்று நமக்கு ஐயம் வரலாம். உண்மையில் இவை மோட்டார் சைக்கிள்களுக்கான விலைதான்.

எல்லோரும் சாதா கார்கள் வைத்திருக்கும் போது மெர்சிடஸ் பென்ஸ் எனும் ஆடம்பரக் கார் வைத்திருப்பது பெருமையில்லையா, அது போலத்தான் 100 சிசி அதிகபட்சம் புல்லட்டின் 500 சிசி என்றிருக்கும் போது 1800 சிசி என்றால் விசேடமில்லையா?

பிறகு இந்தியா முன்னேறவில்லை என்று அதியமான் போன்றவர்கள் கவலைப்படக்கூடாதல்லவா? ஆனாலும் நம்மைப் போன்ற பாமரர்கள் இந்த விலையைக் கேட்டதும் வேறு கணக்குப் போட்டு பார்க்கிறோம். முப்பத்தி ஐந்து இலட்சமிருந்தால் எத்தனை சைக்கிள்கள் வாங்கலாம், எத்தனை மொபட்டுக்களை வாங்கி அண்ணாச்சிகளுக்கு கொடுக்கலாம், எத்தனை கார்களை வாங்கி வாடகை ஓட்டுநர்கள் பயன்படலாம் என்றுதான் நாம் யோசிக்கிறோம்.

யாரெல்லாம் இப்படி யோசிக்கிறார்களோ அவர்களெல்லாம் பயன்பாட்டுவாதிகள். ஆனால் 1800 சிசி என்பது வெறுமனே பயன்பாட்டு வாதத்தின்படி பார்க்கக் கூடிய மொக்கை ஐட்டமல்ல. அது வாழ்க்கைத் தரத்தின் ‘கம்பீரமான’ குறியீடு. இந்த உலகில் முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் அதியுன்னதக் கலை ரசனை மிக்க பொருள். அதை வெறுமனே கணக்கு போட்டு புரிந்து கொள்ள முடியாது. அதற்கு ஒரு உயர்மட்ட இரசனை வேண்டும். அதுவும் கோடிகளில் பணத்தை வைத்துக் கொண்டு வாழ்வை சலிப்புறாமல், சோர்வுறாமல் தேடும் பண்பு வேண்டும்.

அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு பெரும்பாலான தொழிலாளர்கள் சைக்கிளில்தான் வருகிறார்கள். அவர்களெல்லாம் கலை ரசனை அற்ற முண்டங்கள். விதர்பாவில் திருமணம் நடத்த முடியாமல் விவசாயிகள் திணறுகிறார்கள். அவர்களெல்லாம் கஞ்சப்பிசுநாரிகள். திருப்பூரில் ஏற்றுமதிக் கூடங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளிகள் மலிவான ஆடைகளைத்தான் உடுத்துகிறார்கள். ஏனெனில் அவர்களெல்லாம் அழகு பற்றி அறியாத ஜென்மங்கள்.

இத்தகைய கலா ரசனையற்ற ஜந்துகளுக்காக நாம் ஹார்லி டேவிட்ஸனை விட முடியுமா? இதுவல்லவோ இந்தியாவின் முன்னேற்றம்.

இனி என்ன நடக்கும்? ஐந்து நட்சத்திர விடுதிகளில் கூத்தடித்துவிட்டு, முழுப் போதையில் இந்த பைக்கை ஓட்டும் மேட்டுக்குடி கனவான்கள் பாதையோரத்தில் படுத்துறங்கும் ஏழைகளை மீது ஏற்றிக் கொல்லக்கூடும்.

எனினும் இந்த விலையுயர்ந்த அமெரிக்க பைக்கினால் ஒரு ஏழை இந்தியனின் உயிர் போவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இல்லையா ?

தொடர்புடைய பாடல்

Adimai_Sasanam_03_Naadu

 

  1. பேஞ்ச மழயில எங்க ரோட்டையே காணோம்… பெருசா பேச வந்துப்புட்டான் ஹார்லி டேவிட்சம்….

  2. இனி என்ன நடக்கும்? ஐந்து நட்சத்திர விடுதிகளில் கூத்தடித்துவிட்டு, முழுப் போதையில் இந்த பைக்கை ஓட்டும் மேட்டுக்குடி கனவான்கள் பாதையோரத்தில் படுத்துறங்கும் ஏழைகளை மீது ஏற்றிக் கொல்லக்கூடும்///

    ஏழைகள் அற்ற இந்தியாவை ஏழைகளை கொன்று உருவாக்கப் போகிறார்களா?

  3. “குடிக்க தண்ணி இல்ல; கொப்பளிக்க பன்னீரு ” என்ற பாடல் வரி தான் ஞாபகத்திற்கு வருகிறது. பெட்ரோல் பயன் பாட்டை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, மாதம் ஒரு முறை பெட்ரோல் விலையை ஏற்றுகிறது. அதனால் ஏற்படும் விலை உயர்வும் நம் தலையில் தான். இந்த இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தின் கீழூம் நம் தலை தானா!

    • நீங்கள் கூறும் கருத்தில் திரு.மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் பல வருடங்களுக்கு முன்பே விவசாயத்திற்கு கிடைக்காத பெட்ரோலிய பொருட்கள் காரணமாக அரசு, இது போன்ற நிறுவனங்கள் விளம்பரங்களுக்காக நடத்தும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான போட்டிகளை தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்

  4. நல்ல பதிவு.

    பாடலை கேட்க அழுத்தினால் “file not found” என்று வருகிறது – கவனிக்கவும்

  5. கட்டுரை நன்றாக உள்ளது. நுகர்வு கலாச்சாரம் எதிர்க்கப்பட வேண்டும். இன்றைய தலைமுறை சிந்திக்க வேண்டும்.

    Please also look at http://en.wikipedia.org/wiki/Harley-Davidson#Steps_towards_export_to_India

    Points to note :

    1) For importing Harley Davidson into India, US has allowed India to export Indian Mangoes to US. This will benefit Indian Farmers.

    2) Harley Davidson price includes 90% to more than 100% taxes imposed by Indian Government which is good for Country. ( பைக்கின் விலை ஏழு லட்சமானால் மூணரை லட்சம் வரியாக அரசுக்கு சென்றுவிடும்).

    3) There are many Indian cruise bikes like Royal Enfield, Bajaj’s Avenger, Eliminator etc. already available in market with price of above Rs. 60,000/-. This is good for motor cycle workers, two wheeler mechanics etc.

    • //This will benefit Indian Farmers//

      1) எந்த விவசாயிகள்? விவசாயிகள் நேரடியாக அமெரிக்காவுக்கு விளைபொருட்களை ஏற்றுமதி செய்து சூரியவம்சம் சரத்குமார் மாதிரி ஒன்னுக்கு பத்து தோட்டம் வாங்கிட்டாங்கன்ற
      மாதிரி சொல்றீங்களே பாஸு… இதுல பயன் படப் போறது ஒப்பந்த விவசாயத்தில் சாதாரண விவசாயிகளை சிக்கவைத்து கொழுக்கும் பன்னாட்டுக் கம்பேனிகள் தான். ஏற்கனவே
      இங்க மதுர பக்கத்துலேர்ந்து வெள்ளரிக்கா ஏற்றுமதியாகுது.. அதுல விவசாயிகள் ஒன்னும் பயன்படலை – அதை ஒப்பந்தங்கள் மூலம் வாங்கி ஏற்றுமதி செய்யும் பெல்ஜியம் நாட்டுக்
      கம்பேனியான Sourze Agro food products தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது. அமெரிக்காவைப் பொருத்த வரை ஒரே கல்லுல ரெண்டு மாங்கா – ஒரு மாங்கா ஹார்லெ டேவிட்சன் இன்னொரு மாங்கா – அவங்களோட ஒப்பந்த விவசாய கம்பெனி.

      2) //பைக்கின் விலை ஏழு லட்சமானால் மூணரை லட்சம் வரியாக அரசுக்கு சென்றுவிடும்// இதுல எத்தனை லட்சம் சலுகையாக அவிங்களுக்கே திரும்பிப் போகும்கிற கணக்கு
      தேவரகசியம். ஒரு லட்ச ரூவா காருக்கு ஒரு லட்ச ரூவா சலுகை வாங்கலியா அதுமாதிரி எதுனா பிராடு இருக்கும் – தேடிப் பார்த்தா தெரியும்.

      3) //This is good for motor cycle workers, two wheeler mechanics etc.// எப்படிங்க.. ஒன்னும் புரியலையே. மெக்கானிக்குகளையே மொத்தமா ஒழிச்சி கட்டிட்டு இருக்காங்க அது
      தெரியுமா உங்களுக்கு? அந்த லைன்ல கொஞ்ச நாள் இருந்த அனுபவத்தில் சொல்றேன் –

      இப்ப வர்ற எல்லா பைக்குகளும் / கார்களும் MPFI டெக்னாலஜியோடு வருது. அதாவது எஞ்ஜினுக்கு பெட்ரோல் கார்புரேட்டர் வழியா போகாம ஒரு மைக்ரோபிராசசர் மூலம்
      கட்டுப்படுத்தப்படும். அது பற்றிய தொழில்நுட்பங்களை கம்பெனிகள் சாதாரண மெக்கானிக்குகளுக்கு தருவதில்லை. அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் நீங்கள் ஆத்தரைஸ்டு
      சர்வீஸ் செண்ட்டருக்குத் தான் தூக்கிக் கொண்டு போக வேண்டும். இன்னும் நவீன தொழில்நுட்பங்களில் சாதாரண மெக்கானிக்குகளுக்கு பயிற்சியளிப்பதில்லை. அங்கே வேலை
      பார்த்து தொழில் கற்றுக் கொண்டு வெளியே வந்து கடை போடுவதும் நடக்காது – ஏனென்றால் MPFI டியூனிங் செய்வது கம்ப்யூட்டர் தெரிந்தவர் – அவருக்கு மெக்கானிசம் தெரியாது.
      மெக்கானிசம் தெரிந்தவருக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தெரியாது.

      நவீன தொழில்நுட்பத்துக்கு நான் விரோதமாய் பேசவில்லை. ஆனால், ஏற்கனவே அந்தத் தொழிலில் இருப்பவர்களை அழிக்காமல் அவர்களையும் உள்ளடக்கிக் கொண்டு நவீனம்
      ஏற்பட்டால் பரவாயில்லை. இங்கோ இருப்பதை ஒழித்துக் கட்டிவிட்டு தானே நவீனம் வருகிறது.

  6. I really can’t understand the purpose of this article. So, if harlie davidson doesn’t enter into indian market, there won’t be no poverty in india, isn’t?. If everyone live like adam and eve, then will you be happy?.

    • ராஜ், 35 இலட்சம் ரூபாயைக்கொடுத்து இந்தியாவில் ஒரு பைக் வாங்க முடியுமென்றால் இந்தியா வறியநாடாக இருந்தால்தானே சாத்தியம்? இத்தகைய ஆடம்பரங்களுக்கு அளவில்லாத பணம் புழங்குகிறது என்றால் அத்தியாவசியத் தேவைகளுக்கே பணமில்லாத இந்தியர்கள் இருக்கிறார்கள் என்றால் டேவிட்சன் பைக் விற்பனை இந்தியாவின் வறுமையை அதிகப்படுத்தத்தானே செய்யும்? உண்மையில் இத்தகைய ஆடம்ரங்களுக்கு ஒதுக்குப்படும் பணத்தை பறிமுதல் செய்தால் இந்தியாவில் வெகுவேகமாக வறுமையை ஒழிக்க முடியும்.

      • Vinavu, 20 or 30 years back (before liberalization), there wasn’t many international brands. Was India very wealthy then?. Do you really think confiscating all this money will resolve the poverty problem?. I’m SORRY for you, if you think so.

        • ராஜ், நீங்கள் குறிப்பிடும் முந்தைய காலத்திலும் பன்னாட்டு பொருட்களை இறக்குமதி செய்தவர்கள் உண்டு. காலனிய ஆட்சிக்காலத்திலும் சமஸ்தான மன்னர்கள் இப்படித்தான் ஆடம்பரமாக வாழ்ந்தனர். இன்று மேட்டுக்குடியினரது எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ப வறியவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியே வருகிறது. முக்கியமாக 35 இலட்சம் கொடுத்து ஒரு பைக் வாங்குவது இந்திய சூழ்நிலையில் ஆபாசமானதும், வக்கிரமானதும் இல்லையா?

        • but Raj’s point is about poverty levels and inequality. Vinavu has not answered that here. Were Indians less poor in those days ? and does preventing this ‘consumption’ thur controls and permits result in less or more poverty ?

      • ///இத்தகைய ஆடம்பரங்களுக்கு அளவில்லாத பணம் புழங்குகிறது என்றால் அத்தியாவசியத் தேவைகளுக்கே பணமில்லாத இந்தியர்கள் இருக்கிறார்கள் என்றால் டேவிட்சன் பைக் விற்பனை இந்தியாவின் வறுமையை அதிகப்படுத்தத்தானே செய்யும்?/// wrong. if this is valid argument, then in the nations where this bike is sold should be a poor as India. There are luxury cars like Rover which are already availabe in India for crores of rupees. diamond jewelley for crores, silk sarees for tens of lacs. this bike is no big deal. actually the sale of this bike may create more tax revenue, employemnt (indirectly). no losses for anyone.

        • அதியமான் அவர்களே!

          120 கோடி மக்கள் தொகை வாழும் நாட்டில் “ஒரு தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று முழங்கினான் பாரதி. இந்த முதலாளி வர்கம், 80 கோடிக்கும் அதிகமாக இருக்கும் ஏழைகளை கவனிக்கின்றதா? மனசாட்சி தொட்டு சொல்லுங்கள்.

          இதற்கு தீர்வு எல்லோருக்கும் வேலைவாய்பை பெற்று தரும் கிராம தொழில்களும், கூட்டாக பாடுபடும் குடிசை தொழில்களுமே தவிர, பெரிய முதல் போட்டு மிக சொர்ப அளவே வேலைவாய்ப்பை தரும் பெரிய பெரிய ஆலைகள் அல்ல.

          எல்லோரும் கூடி வாழ, எல்லோருடைய வாழ்க்கை தரம் உயர பாடுபட வேண்டுமே அன்றி ‘யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, நான் மட்டும் சொகுசாக வாழ்வேன்’ என்றால் இது இயற்கைக்கு விரோதம். அந்த இயற்கை அன்னை பொருக்க மாட்டாள். பெரிய பிரளயங்களை உண்டாக்கி இந்த கேடு கெட்ட மாந்தர்களை அழிக்கவும் தயங்க மாட்டாள்.

          நன்றி

        • ///எல்லோருடைய வாழ்க்கை தரம் உயர பாடுபட வேண்டுமே அன்றி ‘யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, நான் மட்டும் சொகுசாக வாழ்வேன்’ என்றால் இது இயற்கைக்கு விரோதம். //// sure. and i agree. only, we disagree in the methods and ways to acheive this. ok. read my link to my old post about this here.

  7. இந்த நியூசை பேப்பரில் படித்தவுடன் வயிறு எரிந்தது. மேட்டுக் குடியினருக்கு ரோல்ஸ் ரோலர் வாங்குவது கார் சம்பந்தமான கெளரவம் என்றால் ஹார்லே டேவிட்சன் வாங்குவது பைக் சம்பந்தமான பொழுதுபோக்கு போலும்.

    ஒரு வேளை உணவுக்கே பணமில்லாமல் மக்கள் துன்பப்படும்போது, கோடிகளில் குளிக்கின்ற ஆளும் வர்க்கம்………… இப்போதெல்லாம் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதை வெளிப்படையாக தெரிகிறது. ஈழம் ஆகட்டும்… தேர்தலில் பணம் ஆகட்டும்……….., தன் மக்களுக்கு ஆட்சி ஆகட்டும்…. வெளிப்படையாக பாசிசம் வெளிப்படுகின்றது.

    ஆனால் இதனை மேலே சொன்ன ராஜ் போன்றவர்கள் மறைக்கின்றனர். இந்த பிராண்டுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவில் ஏழ்மை இருக்கிறது… இதற்காக இந்த மாடல்கள் எல்லாம் வருவதை எதிர்ப்பதா ? என்று கேட்டும் போதும், இந்த மேட்டுக்குடியினரின் (இந்த மாதிரி ஆடம்பரத்திற்காக) செலவிடப்படும் பணத்தினை பிடுங்கினால் வறுமை போய் விடுமா என்று கேட்கும்போதுஇவர்களின் வர்க்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

    உனக்கு இவ்வளவு பணம் வருவதற்கு காரணம் உன்னிடம் வேலை பார்க்கும் என்னுடைய சம்பளத்தை, உழைப்பை பிடுங்குவதுதான்……….. என்னுடைய இரத்தத்தை உறியும் உனது வேலைக் கருவிகளை உழைக்கின்றவர்கள் உரிமையாக்குவதுதான் உன்னிடம் இருந்து எனக்கான விடுதலையைப் பெறும்.
    இதுதான் உனக்கான என்னுடைய பதி.

    • //என்னுடைய இரத்தத்தை உறியும் உனது வேலைக் கருவிகளை உழைக்கின்றவர்கள் உரிமையாக்குவதுதான் உன்னிடம் இருந்து எனக்கான விடுதலையைப் பெறும்.
      இதுதான் உனக்கான என்னுடைய பதி/

      புரியவில்லை சற்று விளக்கமாக கூற இயலுமா?

    • In a country of such poverty, do we need computers and such internet facilities? Why did “aadhavan” wasted electricity which the poor in this country cant even think off? Why “aadhavn” is spending time on internet and using computers which many poor in this country dont even know?

      Pls stop acting!!!!… I am sure each and everyone in this forum who advocates such “feeeeeeeeelings” for the poor will have all the luxuries in their house (what is luxury and what is necessity differs from person to person ,,,, bear it in mind) and then come here and acts..

      If you are all (including Vinavu) are really concerned about “poors” stop this website and spend quality time to uplift them

      Stop acting!!!

      • You are 100% correct…

        I was born in a poor family. I studied so hard and got this decent paying job. Day and night i put my hardwork… I earn money for my work.

        If I stop working, I can’t pay rent. I can’t buy medicines for my parents. I can’t eat my food. Pitchaithaan edukkanum. Yes, I am in lower middleclass.

        Here in my office, I see sweepers/servants. Even one guy is from a nearby village. He said, he wasted his youth in cinema theater and wine-shops. Now he earns 30% of my salary. Is it my mistake?

        Do you want me to wear the same dress he wears? Do you want me to eat same food he eats? Am I responsible for his poor condition? I am richer because I studied better than him. But if you say we both should get equal life standard, then why I have to study well?

  8. //இங்கோ இருப்பதை ஒழித்துக் கட்டிவிட்டு தானே நவீனம் வருகிறது.///
    aathaane….
    saaniyan naveenam …
    ozhiga ozhiga naveenam ozhiga naveenam…
    romba nalla irukku….

  9. Why do you write a blog, spend money on internet, electricity? when people don’t have money for food.

    Lets say, I earn money in a good way& buy a Bike. What’s your problem?

    • தல, அவங்க சொல்றது புரியலையா?, எல்லாரும் இருக்கிற வேலைய விட்டுட்டு, “அரசே, வேலை வேண்டும்” அப்படின்னு போராட சொல்றாங்க 🙂

      30 கோடி பேர் 1 வேளை சாப்பிடாம இருக்கும் போது, நீங்க மட்டும் எப்படி 3 வேளை சாப்பிடலாம்?, அதுக்காக நீங்க அந்த ஒரு வேளை சாப்பாட சாப்பிடாம இருக்கனும், உங்க கிட்ட இருந்தாலும். சீனா, USSR, கியுபா , வெனிசுவேலா இங்க எல்லாம் இப்படித்தான் பன்ராங்க தெரியுமா?

      USSRல மக்கள் பட்டினி கிடந்த போது, Stalinஉம், மத்த கம்மி தலைவர்களும் அப்படித்தான் பன்னாங்க..மக்கள் நடந்து போன போது எல்லாம் அவங்கெல்லாம் carலியா போனாங்க? மனம் வெதும்பி நடந்துதான் போனாங்க ….சிந்தியுங்க தோழர்,,,

      அப்பா நமக்கும் கம்முயுனிசம் வருதுப்பா!!!..ஆனா எந்த பிரிவுன்னு தெரியலையே ????(மாவோயிஸ்டா, மார்க்சிஸ்டா, லெனினிஸ்டா, இல்ல FARC மாறியா??, ஒன்னும் புரியலடா சாமி…)

      ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், Harley davison, இந்தியாவுக்கு வந்தாலும், வரலைன்னாலும், உழைச்சாத்தான் சோறு,..வெட்டி பேச்சு பேசி குறை சொல்லிக்கிட்டு இருந்தா….சேறு தான்,…என்ன நான் சொல்றது???/

  10. Why the heck there is no way to post the minus vote in Tamilmanam. Dont you think this is hypocrisy???? shame on you Vinavu….
    and you guys are talking about freedom?????
    What you are going to gain without hearing to people, if you dont want to have minus votings, then done have the Tamilmanam voting option, as simple as that.

    you dont have any moral reason to comment on anybody..atleast Indian goverment is allowing you to post this…..you are not even allowing readers to show what they are thinking….

    Hipocrat…Hipocrat…Hipocrat..
    Publish or dont publish this comment, i dont mind, but think for a minute what you guys are doing?

    • webtamilan என்ன உளரல் இது.. மேலே தமிழ்மணம் கருவிப்பட்டையில் மைனல் thumbs down சிம்பலை அழுத்தவும்.. தானாய் மைனஸ் விழுகும் . ஏற்கனவே 2 மைனஸ் ஓட்டு விழுந்திருக்கு அதுல ஒன்னு நீ போட்டது.. http://tamilmanam.net/who_voted.php?id=593981 ஒருத்தர் ஒரு ஓட்டுதான் போடமுடியும்… இது புரியாம கள்ள ஓட்டு போட முயற்சி செருப்படி வாங்கிட்டு வந்து இங்க hypocrite ன்னு குதிக்கிறியா fraud ….. ஹூம் சரியான காமெடி பீசுகளப்பா……………………………..

        • Okay.. I’m sorry too… Let’s leave it at that… வாழ்க ஜனநாயகம்..
          இந்த internet explorer பழைய வெர்சனலெல்லாம் மருந்தடிச்சு கொல்ல முடியாதா..
          கொசு தொல்ல தாங்கலடா நாராயணா

  11. 35 இலட்சம் கொடுத்து ஒரு பைக் வாங்குவது இந்திய சூழ்நிலையில் ஆபாசமானதும், வக்கிரமானதும் இல்லையா?அவாளுக்கு அதெல்லாம் தெரியதுங்க,

    • Athaane…. vinavu anne… enga voottula ennikku kozhi kari vaikkaporraga…. saapadalaama.. konjam unga kammunist panchakatha eduthu kuri sollunga saare….

  12. //தல, அவங்க சொல்றது புரியலையா?, எல்லாரும் இருக்கிற வேலைய விட்டுட்டு, “அரசே, வேலை வேண்டும்” அப்படின்னு போராட சொல்றாங்க 🙂

    30 கோடி பேர் 1 வேளை சாப்பிடாம இருக்கும் போது, நீங்க மட்டும் எப்படி 3 வேளை சாப்பிடலாம்?, அதுக்காக நீங்க அந்த ஒரு வேளை சாப்பாட சாப்பிடாம இருக்கனும், உங்க கிட்ட இருந்தாலும். சீனா, USSR, கியுபா , வெனிசுவேலா இங்க எல்லாம் இப்படித்தான் பன்ராங்க தெரியுமா?

    USSRல மக்கள் பட்டினி கிடந்த போது, Stalinஉம், மத்த கம்மி தலைவர்களும் அப்படித்தான் பன்னாங்க..மக்கள் நடந்து போன போது எல்லாம் அவங்கெல்லாம் carலியா போனாங்க? மனம் வெதும்பி நடந்துதான் போனாங்க ….சிந்தியுங்க தோழர்,,,

    அப்பா நமக்கும் கம்முயுனிசம் வருதுப்பா!!!..ஆனா எந்த பிரிவுன்னு தெரியலையே ????(மாவோயிஸ்டா, மார்க்சிஸ்டா, லெனினிஸ்டா, இல்ல FARC மாறியா??, ஒன்னும் புரியலடா சாமி…)

    ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், Harley davison, இந்தியாவுக்கு வந்தாலும், வரலைன்னாலும், உழைச்சாத்தான் சோறு,..வெட்டி பேச்சு பேசி குறை சொல்லிக்கிட்டு இருந்தா….சேறு தான்,…என்ன நான் சொல்றது???///

    ஏம்பா ? வயித்துக்கு சோத்துக்குப் போராடுவதும், 35 லட்சத்திற்கு வண்டி வாங்குவதும் ஒன்றா ?. ஸ்டாலின் என்ன 35 லட்ச (அல்லது3) லட்சக்காரிலேயா போனார் ?

    ஸ்டாலின் காலத்தில் விவசாயிகள் விமானங்களை வைத்திருந்தார்கள். ஒருமுறை, சோவியத்திற்கு சென்ற ஒரு அமெரிக்கர், ஒரு விமானதளத்தில் அதிகமான விமானங்கள் இருப்பதைப் பார்த்து ஏதாவது விமான கண்காட்சியா ? என்று விசாரித்தபோது, விவசாயிகள் மாநாட்டுக்கு வந்து போவதற்காக வந்த விமானங்கள் என்ற போது வியந்து எழுதி வைத்துள்ளார்.

    நாங்க உழைச்சாத்தான் முதலாளிக்கும் சோறு. உன்னை மாதிரி வெட்டிப் பேசு பேசலை.

    • Dude u r so freaking hilarious. USSR la Vivasaiyanga vimanam vachuranthangala. Ha Ha Ha. Kekuravan Kena paiana iruntha Eruma Madu Aeroplane ottuthunu solvingala.

      • ஏம்பா எருமை ! நீ ஹாட்சன் பைக் வாங்க குடுக்கின்ற 35 லட்சரூபாய் காசு என்னுடைய உழைப்பில் இருந்து வந்த காசு. அதனை நீ உனக்கு உடைமையாக உள்ள உழைப்புக் கருவியிலிருந்து அதாவது (உங்க அப்பன் திருடி) சம்பாதித பணத்தில் இருந்து வைத்துள்ள பேக்டரி அதான் அதில் நான் உழைப்பதால் வரும் பணத்தில் வாங்குகிறாய். (கவனிக்கவும் எந்த சிறு குறு தேசிய முதலாளிகளும் 35 பைக் வாங்குவது இல்லை) ரஷ்யாவில் அந்த உழைப்பு கருவியை அதாவது பேக்டரியை ரஷ்ய உழைப்பாளிகளின் அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்ததால் விவசாயிகளும் விமானம் வாங்க முடிந்தது அல்லது உழைப்பவர்களுக்கே விமானம் முதலானவை கிடைத்தன.

        எவனோ ஒரு பன்னாட்டு பகாசுர ஊடக முதலாளி ஹாலோகிராம் என்று ஹிட்லரிடம் காசு வாங்கிக் கொண்டு கூவியதை நான் நம்ப வேண்டும். ஆனால் விவசாயிகள் விமானம் வாங்கினார்கள் என்றால் நீ நம்பமாட்டாய் ?

        கேட்கிறவன் எருமைமாடு போன்று சொரனை இல்லாமல் இருந்தால் நீ பாட்டுக்கு ஏச்சுட்டு போவாய். நான் கேட்டுக்கனே இருக்கணுமா ?

        பாஸ்கர் இந்த பதில் உமக்கும்தான்.

        ஆதவன்

        • அய்யா வேலை கருவிகள் என்ற சொல்லின் அர்த்தம் புரியாமல் கேட்டால் ஏன் இப்படி? உங்கள் கருத்துகளில் வேறுபட்டு கேட்பதாக புரிந்து கொண்டு இப்படி விவாதிக்க வருபவர்களை தாக்குவது குறித்து வினவின் விவாதிபவர்களின் மீது விமர்சனம் வைத்துள்ளார்கள் அதனை மீண்டும் உறுதி செய்து உள்ளீர்கள். நீங்கள் நடத்தும் விவாதம் புரிதலை ஏற்படுதுவதர்க்குதான் என்பது எனது புரிதல் நான் தவறாக புரிந்து கொண்டேனா என சந்தேகமாக உள்ளது புரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.

        • பாஸ்கர் நோ டென்சன், ஆதவன் உங்களுக்கு விளக்கமாக பதில் கூறுவார் என்று எதிர்பார்கிறேன்

      • ///Kekuravan Kena paiana iruntha Eruma Madu Aeroplane ottuthunu solvingala.////

        முண்டம்,
        உன்னைய நீ கேனப் பையன் மட்டுமில்ல, கேனப் புண்………ணாக்கு ன்னு கூட சொல்லிக்க ஆன, விவசாயிகளையும் எங்கள் உழைக்கும் மக்களையும் எருமை மாட்டுடன் ஒப்பிடுகிறாயே முண்டம்?

        இதுல இருந்தே தெரியலையா? உன் கண்னுல எந்த கருமாந்திரம் இருக்குன்னு?

        விவசாயிகள் விமானம் வைத்திருந்ததை நாங்கள் சொல்லவில்லை! நீங்களே போற்றும் அமெரிக்காவின் பத்திரிக்க்கையாளர் ஒருவர் சொன்னது தான்!

        இதை சொன்ன பிறகும் எருமை மாடு ஏரோப்பிளேன் ல போனது மாதிரி ன்னு சொன்னா…
        “கேக்குறான் பாரு கேள்வி கேணப்பய மாதிரி”

        -கடுப்பை கிளப்புகிறார் யுவர் ஆனர்!

    • நீங்கள் எருமைகள் என உவமைப்படுத்துகிற விவசாயிகள் விமானங்களை ஒட்டினார்கள்.

      சோவியத் ருஷ்யாவின் சோஷலிச ஆட்சியில் ownership ceilings இருந்தன. தனியொரு விவசாயி விமானம் வாங்கியிருக்க முடியாது. ஆனால் ‘Workers and peasants Air fleet’ என்று ஒரு வான்படை இருந்தது. தொழிலாளிகளையும், விவசாயிகளையும் பயிற்சியின் மூலம் விமான தொழில்நுட்ப பொறியியலாளர்களாகவும் விமானிகளாகவும் உருவாக்கியது. மருத்துவர்களாய் மாறிய தொழிலாளர்கள் உண்டு.

  13. I can say buying bike at Rs.75000/- itself luxury with the road facility available in Chennai or India. Bajaj said when introduced 150/170 cc bike. It is definitely male. Then appachi TVS. Honda Hunk. Media and these created a image that owning such bike is prestige. forget the maintenance cost and loan. When people come for seizure they loose their money. I have seen youngster puting petrol for Rs.20/- or Rs.30/-. Price has gone up what they will do.

    The traffic will not permit any one go beyond 20 or 30 per hr. for which 100 cc bike is enough. But people wants different brand and style.

    style, owning a bike is some what prestige. But owning above bike what to tell………….

  14. நம்ம சாலைகளின் தரத்தினாலும், ஜன நெருக்கடியினாலயும் சாதாரண 100 சிசி பைக்லயே 3வது கியருக்கு மேல போகமுடியல . இதுல 1800 சிசிய வேறயா.
    ஆனா இந்த பணநாயகத்தில் ஹார்லி டேவிட்சன் வைத்திருப்பவனுக்குதானே சாலைகளும் சொந்தம்! அதனால மீனவத்தமிழனுக்கு கடல்ல வந்த நிலமை பாமரத்தமிழனுக்கு சாலைல வரக்கூடும்…

  15. முதலில் இந்தியாவில் பெட்ரோல் அதிகமாக உபயோகப்படுத்தக் கூடிய தனி நபர் இரு மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனையை நிறுத்த வேண்டும். 100 சிசி க்கு மேல் எந்த இரு சக்கர வாகனமும் இங்கு விற்க்கப் படக் கூடாது. இது என கருத்து.

  16. அனைவரையும் புகை வண்டி மற்றும் பேருந்தை உகயோகப்படுத்த ஊக்கிவிக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து ஊர்களும் புகை வண்டி மற்றும் பேருந்துகளால் அணைக்கப் பட வேண்டும்.

    இப்படி செய்தால் தனி நபரின் போக்குவரத்து எளிதாகி விடும். அப்படி ஆகின்ற பட்சத்தில் யாரும் இந்த மாதிரி பெரிய விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். மாசும் கம்மி ஆகும்.

  17. வெப்டமிளன், நாகராசு மற்றுமுள்ள நல்லவர்களே..

    ஒரு பக்கத்துல மாத்துக் கோவணத்துக்கும் வழியில்லாதவங்க இருக்கும் போதே உங்க கிட்ட இருக்குன்ற திமிரைக் காட்ட போட்டா ஏரோ சர்ட் தான் போடுவோம் அது எங்க
    உரிமைன்னு சொல்றீங்க. சரி போடுங்க.

    வேகாத வெயில்ல ரோட்டுல நாயா பேயா அலைஞ்சி திரிஞ்சாலும் கால் வயித்து கஞ்சிக்கு ஒரு ரூவா அரிசி வாங்க க்யூவுல நிக்கிற மனுசனை பக்கத்துல குந்த வச்சிட்டு எங்க ஊட்ல
    கோழிக்கறின்னு மேல நொன்னாட்டியம் பேசறீங்க. சரி பேசுங்க

    நெஞ்சு முறிய சைக்கிளை மிதிச்சி மில்லுக்கும் பவுண்டரிக்கும் நேரத்துக்கு போக முடியாம சனங்க நெரிசல்ல வேர்த்து வழிஞ்சிட்டு நிக்கையில நீங்க ஒரே ஆளு பெரிய ஏ.சி காருல
    ரோட்டுல பத்துக்கு அஞ்சி எடத்த அடச்சிக்கிட்டு வெக்கமில்லாம ஒக்காந்து இருக்கீங்க. சரி ஒக்காந்துக்கங்க.

    இத்தனையும் பண்ண உங்களுக்கு பணமும் இருக்கு வசதியும் இருக்கு உரிமையும் இருக்கு திமிரும் இருக்கு கொழுப்பும் இருக்கு மத்த எல்லா எழவும். ஆனா.. மனசோட ஒரு மூலைல கொஞ்சமாவது உறுத்தல் இருக்கா? நீங்க செய்யிறது வக்கிரம்ங்கற நெனப்பு கொஞ்சமாச்சும் இருக்கா?

    தேவை இருந்த வாங்கித் தொலைங்கடா… ஏண்டா ஆர்லி டேவிட்சனை வாங்கி வானத்துலயாடா ஓட்டுவீங்க? இருக்கற டிராபிக்ல பல்சர்காரன் பன்ற லொள்ளுக்கே எறங்கிப் போய்
    பொடனில ரெண்டு சாத்து சாத்தலாமான்னு ஆத்திரமா வருது.. இவரு ஆர்லில ஆட்டிகிட்டு வருவாரம். எங்கடா இங்க எடம் இருக்கு?

    நம்ம ஊர்ல தான் இந்த வக்கிரம். நடந்து போறவனைப் பார்த்தா மொப்பட்டுல போறவனுக்கு எளப்பம் – மொப்பட்டுல போறவனைப் பார்த்தா பைக்குல போறவனுக்கு எளப்பம் – பைக்ல
    போறவனைப் பார்த்தா கார்காரனுக்கு எளப்பம் – அதுலயும் மாருதிகாரனைப் பார்த்தா ஹோண்டா சிட்டி வச்சிருக்கறவனுக்கு எளப்பம். என்னமோ வானத்துல இருந்து வந்தவனுக மாதிரி
    நெனப்பு எல்லாத்துக்கும்.

    சந்து பொந்து கணக்கா இருக்கற ரோட்டுல சின்னப்புள்ளைங்க நடமாடற ரோட்டுல மணிக்கு எரநூறு கிலோ மீட்டர் வேகத்துல பறக்கற பைக்ல தான் நொட்டுவேன்னு சொல்றது
    உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?

    மத்தவனைப் பத்தியும் கொஞ்சமாவது யோசிங்கடா வென்றுகளா

    • ”சந்து பொந்து கணக்கா இருக்கற ரோட்டுல சின்னப்புள்ளைங்க நடமாடற ரோட்டுல மணிக்கு எரநூறு கிலோ மீட்டர் வேகத்துல பறக்கற பைக்ல தான் நொட்டுவேன்னு சொல்றது
      உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?
      மத்தவனைப் பத்தியும் கொஞ்சமாவது யோசிங்கடா வென்றுகளா”

      பொட்டில் அறைந்துவிட்டீர்கள். யோசிப்பாங்கன்னு நினைக்கிறீங்களா!

      • //பொட்டில் அறைந்துவிட்டீர்கள். யோசிப்பாங்கன்னு நினைக்கிறீங்களா!///
        usssss…. anna pottula adichchathu thaangala anna…. meduva adinga….. Ama…marupadiyum santhegam (adikkathinga anna)…. Neenga eann inernet, web-nnu moderna use panringa… print koduththa, printing thozhilalikku velai kedaikkummulla… tamil typewriting adichcha avanukku velai kedaikkumulla… eppidiye sinthikka kaththu kudunga… ellarum pithu pidithu paaya soradaporaanga anna…. nalla sevai… vazhgha…

        • தன்பி R.நாகராசா,
          கார்க்கி அண்ணன் முன்னாலே சொன்னது. பின்னாலே இருக்கு படித்துப்பாருப்பா தன்பி.
          “நவீன தொழில்நுட்பத்துக்கு நான் விரோதமாய் பேசவில்லை. ஆனால், ஏற்கனவே அந்தத் தொழிலில் இருப்பவர்களை அழிக்காமல் அவர்களையும் உள்ளடக்கிக் கொண்டு நவீனம்
          ஏற்பட்டால் பரவாயில்லை. இங்கோ இருப்பதை ஒழித்துக் கட்டிவிட்டு தானே நவீனம் வருகிறது.”

    • yes, we Indians have no road disipline. Over speeding, breaking all traffic rules and regulations and parking everywhere. We are all guilty. the issue here is enforcement of traffic rules and not the size of the bikes or cars. and as license raaj still exists in bus transport sector, the poor and middle class are squeezed in over loaded buses. also see : http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_5704.html போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்

  18. கம்யூனிச சீனாவில் இந்த வகை பைக்குகள், விற்பனை ஆவதில்லையா!?
    அழகு,பணம்,பதவி,அந்தஸ்து – இவற்றை யெல்லாம் அனைவருக்கும், பகிர்ந்தளிக்க முடியாது! நமது குறிக்கோளை நிர்ணயித்து, அதை அடைய முயற்சி செய்யவேண்டுமே தவிர, எரிச்சல் பட்டு பயனில்லை!
    இதே திருப்பூரில், அண்ணாமலை திரைப்பட ரக, பணக்காரர்கள் நிறைய! வெரும் உழைப்பை நம்பி வந்து,ஜெயித்தவர்கள்! தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்!
    இவ்வுலகில், அனைத்து விலைகளில், அனைத்து வகைகளும் கிட்டும்! தேர்ந்தெடுப்பது நம் கையில்!

    • //கம்யூனிச சீனாவில் இந்த வகை பைக்குகள், விற்பனை ஆவதில்லையா!?///
      eppidi solli solli thaan kammunisa seena kapitalisa seena va valarnthu iruku.. nalla valarchi… mudalalikku indha maadiriyana aal thaan venum… konjam kosham poda chollittu nattappidichu meendum mudalali kaila koduthuduvaanga… example russia china nepal…. marupadiyum kammunism varum varumnu “kadavul varuvaar” kathaiya sollikitte irukkanga….

  19. //இந்த பைக்கை ஓட்டும் மேட்டுக்குடி கனவான்கள் பாதையோரத்தில் படுத்துறங்கும் ஏழைகளை மீது ஏற்றிக் கொல்லக்கூடும்// அப்ப விலை குறைவான வண்டியை ஓட்டுபவர்கள் யாரும் குடிச்சிட்டு ஓட்டுறதில்லை? உழைக்கும் வர்க்கமான டாக்சி ஆட்டோ லாரி டிரைவர்கள் எவனும் குடிச்சிட்டு ஓட்டுறதில்லை? நான் vinavu விரும்பி படிப்பதற்கு காரணமே இந்த மாதிரி நீங்க யோசிக்கிறதுதான்..தொடர்ந்து எழுதுங்க.

  20. இந்த விலையுயர்ந்த அமெரிக்க பைக்கினால் ஒரு ஏழை இந்தியனின் உயிர் போவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இல்லையா ? Yes Salman kan and other Khans of india will kill raodside Indians with this bike. I could not find any other use with these kind of things to Indians.

  21. //பிறகு இந்தியா முன்னேறவில்லை என்று அதியமான் போன்றவர்கள் கவலைப்படக்கூடாதல்லவா? ///

    Comrade Vinavu,

    I hope you have read the PDF file from EPW that i had mailed today. The title for that article is “Shinning for the poor too”. There are no short cuts to reduce poverty. your ways of ‘socialism’ is neither possible nor will yield the desired results, as proved repeatedly fo the past 100 years. and with the levels of corruption in public sphere and organised labour unions, you have no chance to usher in any ‘revolution’ ; first of all there must be honesty and sincerity of purpose for any revolution to succeed. How do you propose to reform the lumpen elements and immoral characters within the working class in India ? for e.g : the large railway union SRMU headed by Comrade Kannayya (who has amassed some 300 crores or more) : how do you propose to ‘reform’ this corrupt union ? there are many many such groups who are your real enemies..

    India has a huge number of poor, but the situation was very worse until the 80s. We still have a very long way to go and i don’t share the slogans of “India a super power in 2020, etc” ; they are unrealistic and unless poverty levels are reduced drastically to developed world levels, all this is mere parrot cry.

    and finally, for the benefit of the readers here :

    http://nellikkani.blogspot.com/2007/09/blog-post.html
    வறுமைக்கு காரணமும், விளைவுகளும்

  22. மத்தவங்களை பற்றி கவலைபடும் நாகரீகம் உருவாக வேண்டும். அப்போது தான் நாடு உருபடும். இப்போது தான் நுகர்வு வெறி அதிகமாகவே இருக்குதே. டீவியில் நகைகடை விளம்பரங்கள், ஆடம்பர துணிகடை விளம்பரங்க்ள் அதிகமாகவே வருகின்றன.

    இதெல்லாம் கூட நல்லதுக்கு தான். மிக மிக அருகாமையிலே உள்நாட்டு போர் மூளும் என்று கணிக்க முடிகிறது. நாடு போகும் பாதை ஒன்றும் சரியில்லை. ஆனால் பெரும்பான்மை மக்கள் நுகர்வு வெறியை போதையை போல் தம்முள் ஏற்றிகொண்டு அலைகின்றனர்.

    “என்று மடியும் இந்த அடிமையில் மோகம்” பாரதியாரின் வரிகள்

    நன்றி

  23. உண்மைதான் பாஸ் நீங்க சொல்லுறத ஒத்துக்கிறேன் ஆனால் ரோடு இல்லையே பாஸ் …………வெட்கம் (அமெரிக்கர்களுக்கு)

    நன்றி

    உலகை மாற்றுபவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க