privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: பாசிச ஒடுக்குமுறைக்கான இன்னுமொரு ஆயுதம் !

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: பாசிச ஒடுக்குமுறைக்கான இன்னுமொரு ஆயுதம் !

-

ராஜீவ் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த 1992-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர், மத்திய அரசு இத்தடையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட இத்தடை நீட்டிப்பு உத்தரவு, நடுவர் மன்றத்தில் ஆறு மாதங்களுக்குள் உறுதி செய்யப்பட வேண்டும். இச்சடங்கின்படி, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இலங்கை அரசே புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், இங்கு மீண்டும் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க எந்த நியாயமுமில்லை. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில், நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதாக அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கூட்டம் நடத்தப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இதை அமெரிக்க அரசு தடுக்கவோ அவ்வமைப்பின் செயல்பாடுகளை முடக்கவோ இல்லை. ஆனால், அவ்வமைப்பையும் அபாயகரமானதாகச் சித்தரிக்கிறது, இந்தியா.

பிளவுவாத, பிரிவினைவாத, பயங்கரவாத, தீவிரவாதப் பீதியூட்டி அரசியல் ஆதாயமடைவதே பார்ப்பன பாசிச சக்திகளின் நிரந்தரக் கொள்கையாக உள்ளது. தேவையானபோது அரசியல் எதிரிகள் மீது கருப்புச் சட்டங்களை ஏவிவிட்டுப் பழிவாங்குவதே அவற்றின் நடைமுறையாக உள்ளது.

தமிழகத்தில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை தடையை நீட்டிப்பதற்கான முகாந்திரங்களை உருவாக்கும் நோக்கத்தில் புலி ஆதரவாளர்கள் மீது பொய்வழக்குகள் போட்டு, முதல் தகவல் அறிக்கை தயாரித்து அதைக் காட்டியே பயங்கரவாத அபாயமாகச் சித்தரிப்பதை உளவுத்துறை போலீசார் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். புலி ஆதரவாளர்கள் மீது போடப்பட்டுள்ள எந்த வழக்கும் எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்படவில்லை. புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு ராஜீவ் கொலை மட்டுமே ஒரே காரணமாகக் காட்டப்படுகிறதே தவிர, தகுந்த தடயங்கள் – ஆதாரங்கள் இதுவரை முன்வைக்கப்படவுமில்லை.

இத்தடை விதிக்கப்பட்டதிலிருந்து ஈழம் என்று பேசினாலே குற்றமாகி, தடா – பொடா சட்டங்களின் மூலம் தமிழனின் வாயை மூடியது இந்திய அரசு. ஈழ அகதிகள் அனைவரும் புலி ஆதரவாளர்களாகச் சித்தரிக்கப்பட்டு வதைக்கப்பட்டனர். பொடா சட்டத்தின் கீழ் சிறையிடப்பட்ட பழ.நெடுமாறன்  உள்ளிட்டு, ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும்  இயக்கத்தினர் அனைவரும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகின்றனர். பொதுகூட்டம் நடத்தக்கூட  ஈழ விடுதலை ஆதரவாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெறவேண்டியுள்ளது. 19 ஆண்டுகளாகியும் ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள நளினி, இன்னமும் விடுதலை செய்யப்படாத கொடுமை தொடர்கிறது.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய தேசிய இன உரிமைப் போராட்டங்களை மட்டுமின்றி, இலங்கை, நேபாளம், பூடான் முதலான அண்டை நாடுகளிலும் தலையிட்டு விடுதலைப் போராட்டங்களையும் இயக்கங்களையும் ஒடுக்கி வரும்  தெற்காசியாவின் பிற்போக்கு எதிர்ப்புரட்சி கோட்டையான இந்திய அரசு, இந்தியத் தமிழினத்துக்கும் ஈழத் தமிழினத்துக்கும் எதிரிதான். ஆனால், நெடுமாறன் முதலான தமிழினவாதிகள் இதை மறுத்து, இலங்கையின் இனவெறி பாசிச ராஜபக்சே அரசு சீனாவின் பக்கம் சாவதால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும்,  சில மலையாள அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு காங்கிரசு ஆட்சியாளர்கள் தவறான முடிவுகள் எடுப்பதாகவும் கூறி இந்தியாவைத் தாஜா செய்வதையே நடைமுறையாகக் கொண்டுள்ளனர்.  எதிரி யார், நண்பன் யார் என்பதை வரையறுப்பது ஓர் அரசியல் இயக்கத்துக்கு அடிப்படையான – அவசியமான உயிர்நாடியான விசயம். தமிழினவாதிகளின்  எல்லா தவறுகளும் இங்கிருந்துதான் தொடங்குகின்றன.

இச்சந்தர்ப்பவாதப் போக்குகளை அம்பலப்படுத்தி, ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் புரட்சிகர-ஜனநாயக இயக்கங்களையும் ஒடுக்குவதற்கான இன்னுமொரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படும் இத்தடை நீட்டிப்புக்கு எதிராக தமிழக மக்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: பாசிச ஒடுக்குமுறைக்கான இன்னுமொரு ஆயுதம் ! | வினவு!…

    பிரிவினைவாத, பயங்கரவாத, தீவிரவாதப் பீதியூட்டி அரசியல் ஆதாயமடைவதே இப்பாசிச சக்திகளின் நிரந்தரக் கொள்கையாகவும் கருப்பு சட்டங்களை கொண்டு பழிவாங்குவதே நடைமுறையாகவும் உள்ளது….

  2. இந்தியா-இலங்கை-சீனா இந்த மூன்று நாடுகளுக்கும் அவரவர் தேவை தான் தேசியக்கொள்கை. ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய அக்கறை அல்ல. சீனா இலங்கையில் நன்றாகவே காலூன்றிவிட்டது. இதையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் தமிழினப் படுகொலையை ஈழத்தில் தடுத்து நிறுத்த முடியாத கையறு நிலையில் தானே தமிழ்நாட்டு தமிழர்கள் இருந்தீர்கள். தமிழின வியாதிகளும் தங்கள் பங்கிற்கு எதையோ செய்துவிட்டு போகிறார்கள்.

    புலிகளுக்கு தடை போடுவதை இந்தியாவும் நிறுத்தப்போவதில்லை. ஈழத்தமிழனுக்கு நீங்கள் நினைத்தாலும் உங்களால் உதவ முடியாத நிலை தான் தமிழ்நாட்டின் நிலை. எங்களை எங்கள் வழியில் விட்டுவிடுங்கள். நாங்கள் குறைந்தபட்சம் பெருமைப்படவாவது முடியும். எங்கள் சுதந்திரத்திற்காக போராடினோம் என்று. புலிகளை வைத்து அரசியல் செய்கிற தேவை ஈழத்தமிழனை விட மற்றவர்களுக்குத்தான் அதிகம்.

    //பாசிச ராஜபக்சே அரசு சீனாவின் பக்கம் சாவதால் இந்தியாவுக்கு ஆபத்து//

    ஆபத்து இல்லை என்கிறதா அல்லது இருக்கிறது என்கிறதா கட்டுரை, புரியவில்லை.

    • சகோதரி ரதி,
      புலிகள் ஒரு அரசியல் இயக்கமாக இருந்திருந்தால் தமிழின வியாதிகள் அதை வைத்து அரசியல் பண்ணியிருக்க முடியாது.
      இலங்கையின் இன்வெறி பாசிச ராஜபக்சே அரசு சீனாவின் பக்கம் சாய்வதால் இந்தியாவுக்கு ஆபத்து என்று அதே தமிழின வியாதிகள்தான் கூறுகின்றன என்று கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியாவே(அரசு) ஒரு ஆபத்தானது அதற்கு எப்படி ஒரு ஆபத்து வரும்?
      இங்கே இந்தியாவைப் பற்றிய தமிழினவாதிகளின் கண்ணோட்டத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது கட்டுரை.

      • சகோதரர் இரா.மணிகண்டன்,

        புலிகள் இயக்கம் மதத்தை வளர்க்கவோ அல்லது மத மாச்சாரியங்களை கட்டிக்காக்கவோ, ஏதாவது சித்தாந்தத்தை நிறுவ அல்லது நிலைநாட்ட உருவாக்காப்பட்டதில்லை. இனப்பாகுபாட்டுக் கொள்கைகளாலும் ராணுவ அடக்குமுறையாலும் அடக்கப்பட்ட ஓர் இனத்தின் விடுதலைக்காக போராட, ஈழம் என்ற குறிக்கோளை அடைய “idealistic” ஆக உருவாக்கப்பட்ட ஓர் விடுதலை இயக்கம்.

        விடுதலையை நோக்கிய பயணத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களும், அது சராசரி மனிதன் ஆயினும் சரி, தமிழின வியாதிகள் ஆயினும் சரி உள்வாங்கப்படுவது தவிர்க்கவியலாதது. தவிர, புலிகள் தங்களை ஓர் ராணுவ மற்றும் அரசியல் அமைப்பாகவும் கட்டமைத்துக்கொண்டவர்கள். இதில் புலிகளை ஏதோ அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள், “புலிகள் ஒரு அரசியல் இயக்கமாக இருந்திருந்தால்”, என்கிற கற்பிதங்கள் ஏற்புடையதல்ல.

        தமிழ்நாட்டில் சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசியல் இயக்கமாகப் போராடும் எத்தனையோ இயக்கங்கள் இருந்தும் ஏன் உங்களால் தமிழக அரசியலில் ஓர் நல்ல மாற்றத்தை கொண்டுவரமுடியவில்லை???

      • Rathi:
        புலிகள் இயக்கம் ஓர் இனத்தின் விடுதலைக்காக போராட…. “idealistic” ஆக உருவாக்கப்பட்ட ஓர் விடுதலை இயக்கம் என்கிறீர்கள்.
        அப்படியானால் அது ஏன் மக்களை மந்தைகள் போல நடத்த முற்பட்டது?

        “புலிகள் ஒரு அரசியல் இயக்கமாக இருந்திருந்தால்”, என்கிற கற்பிதங்கள் ஏற்புடையதல்ல என்கிறீர்கள்.
        தமிழீழம் என்ற ஒரு இலக்கை விட எந்தச் சமூகப் பிரச்சனை குறித்தும் கோட்பாட்டு வழியான கொள்கை இருந்ததா? உலகமயமாக்கலையும் திறந்த பொருளாதாரத்தையும் கூட வரவேற்றார்களே! ஒரு ஆக்கிரமிப்பையோ இன ஒடுக்கலையோ எதிர்த்து வாய் திறந்ததில்லையே! காஷ்மீர், நட்பாக இருந்த நேபாள மாஓவாதிகள், இந்திய மாஓவாதிகள் — யாரையாவது ஆதரித்து வாய் திறந்தார்களா?

        தமிழ்நாட்டில்…. எத்தனையோ இயக்கங்கள் இருந்தும் ஏன் உங்களால் தமிழக அரசியலில் ஓர் நல்ல மாற்றத்தை கொண்டுவரமுடியவில்லை என்று கேடகிறீர்களே.
        மாற்றம் வர வேண்டுகிறீர்களா, மாற்றம் வருவதை வெறுக்கிறீர்களா? மாற்றங்களை ம.க.இ.க. கொண்டு வர இயலாது. மக்கள் தான் கொண்டு வர வேண்டும்.

        விடுதலைப் புலிகள் சாதித்த பேரழிவை விளங்கிக் கொள்வது இந்தியாவின் போராடும் சக்கிகள் அனைத்துக்கும் பயனுள்ளது.

  3. […] This post was mentioned on Twitter by வினவு, ஏழர. ஏழர said: விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: பாசிச ஒடுக்குமுறைக்கான இன்னுமொரு ஆயுதம் ! http://j.mp/ciz1zh […]

  4. //ஆபத்து இல்லை என்கிறதா அல்லது இருக்கிறது என்கிறதா கட்டுரை// ஆபத்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது ஆளும்வர்க்கத்தின் கவலை. ஈழத்தமிழர் அவலம் பற்றி பேசும்போது இந்தியாவின் இந்துசமுத்திர ஆதிக்கம் பற்றிக்கவலைப்படுவது ஏன்? அடித்தவன் பாதுகாப்புப் பற்றி அடிவாங்கியவன் ஏன் கவலைப்படவேண்டும்?. சீனாவோ இந்தியாவோ எவருடைய ஆதிக்கமும் ஈழத்தமிழர்க்கும் மொத்த இலங்கைக்குமே எதிரானது.

  5. ராஜீவ் கொலைக்கு முன் இந்தியா வேறு! கொலைக்குப் பின் இந்தியா வேறு! என்ன செய்வது! பொருளாதாரத்தைச் சார்ந்த உலக நாடுகளின் அரசியல் , இந்தியாவின் ஐ.நா நிரந்தர இடம் மறும் இதர காரணங்கள், ஈழத் துயரம் ஏற்பட்டு விட்டது! இந்தியா அதன் நிலைப்பாடை தொடருகிறது!

    • ரம்மி

      தொடர்புடைய பதிவுகளில் ஒன்றான ”இனி ராசீவ் காந்தியின் ஆன்மா சாந்தியடையுமா”கட்டுரையிலிருந்து சிறு பகுதி தாங்கள் பார்வைக்கு

      \\ஆனால், ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்தவுடனே
      வெடிக்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.
      “நன்றி கொன்றவர்கள், எங்கள் தலைவனைக்
      கொன்று விட்டார்கள்! நயவஞ்சகர்கள்,
      முதுகில் குத்திவிட்டார்கள்!
      ஒவ்வொருவரையும் சோதனை போடுங்கள்!
      எல்லோரையும் விரட்டுங்கள்!
      ஈழத்தமிழன் எவனையும் நம்ப முடியாது!”
      ஈழத் தமிழினத்திற்குத் துரோகத் தமிழினம்
      என்று பெயர் சூட்டுகிறார்கள்.

      யார் துரோகி? எவன் நயவஞ்சகன்?
      விடுதலைப் போராளிகளைக்
      கூலிப் பட்டாளமாக உருமாற்றியது யார்?
      ஆதரவுக் கரம் என்று நம்பியவர்கள்
      மத்தியிலே ஐந்தாம் படையை
      உருவாக்கியது எந்தக் கை?
      முகத்தில் சிரிப்பும், கைகளில் இனிப்புமாக
      வரவேற்ற ஈழத்தைப் பெண்டாள முனைந்தது
      யாருடைய ஆட்சி?
      புறாக்களைக் காட்டி ஏமாற்றிக்
      கழுகுகளைப் பறக்கவிட்டு அமைதியை
      நிலைநாட்டியது யாருடைய படை?
      “ஆத்தாள் சிக்கிம் வென்றாள், மகன்
      ஈழம் கொண்டான்” என்று
      கல்வெட்டில் பொறித்துக் கொள்வதற்காக
      பாக். ஜலசந்தியில் குறுக்கு மறுக்காக
      அடித்து விளையாட
      ஈழத்தமிழன் என்ன பூப்பந்தா?

      எது துரோகம்? யார் துரோகிகள்? ஆனந்த
      பவனத்திலும், சத்தியமூர்த்தி பவனத்திலும்
      பொருள் கேட்காதீர்கள்.
      யாழ்ப்பாண மக்களிடம் கேளுங்கள்.
      துரோகம் என்ற
      சொல்லின் பொருள் ராஜீவ் என்பார்கள்;//

      அந்த பதிவையும் முழுமையாக படித்து பாருங்கள்.

      • MR.THIPPU!

        1.இந்திய அமைதிப் படையை அனுப்பி கற்பழிக்கச் சொன்னது ராஜீவா?
        2. ராஜீவை அழித்ததால், ஈழத்திற்கு கிடைத்த இன்பம் என்ன?
        3. மற்ற நாடுகளுக்கு சென்ற இந்திய அமைதிப் படை கற்பழிப்பு புகாருக்கு ஆளாகியுள்ளதா?
        4. அன்று இந்தியாவை திரும்பிப் போகச் சொல்லி விட்டு,இன்று தலையிடவில்லை என்று திட்டுவது எந்த வகையில் சேர்த்தி?

        • ரம்மி..
          ///3. மற்ற நாடுகளுக்கு சென்ற இந்திய அமைதிப் படை கற்பழிப்பு புகாருக்கு ஆளாகியுள்ளதா?///
          அப்படியானால் எங்கள் பெண்கள் கற்பழிக்கப்பட்டது பொய்யென்கிறீர்களா?? அட, நாங்கள் சொல்வது வேண்டாம். இந்தியாவுக்குள்ளேயே காய்ந்த மாடு கம்பில் பாய்வது போலப் பாய்கிறார்களே உங்கள் வீர ஜவான்கள்… அது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?

        • திரு.ரம்மி.
          \\1.இந்திய அமைதிப் படையை அனுப்பி கற்பழிக்கச் சொன்னது ராஜீவா?//
          இந்திய அமைதி படையால் ஈழ சகோதரிகள் மீது ஏவப்பட்ட பாலியல் வல்லுறவு தாக்குதல்களுக்கு யார்தான் பொறுப்பு?

          \\2. ராஜீவை அழித்ததால், ஈழத்திற்கு கிடைத்த இன்பம் என்ன?//
          ராசீவ் கொலையால் ஈழ எதிர்ப்பாளர்களே ஆதாயம் அடைந்தனர்.அதனால் ஈழ மக்கள் கண்டது துன்பம் மட்டுமே.

          \\4. அன்று இந்தியாவை திரும்பிப் போகச் சொல்லி விட்டு,இன்று தலையிடவில்லை என்று திட்டுவது எந்த வகையில் சேர்த்தி//
          இந்தியாவின் தலையீடுதான் ஈழமக்களின் துயரமே.”இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம்”என்று ராசபக்சே சொன்னதன் பொருள் என்ன.

          ”ஆசையே துன்பத்துக்கு காரணம்”என்றார் புத்தர்.ஈழ மக்களிடம் கேட்டால்
          ”இந்தியாவே துன்பத்துக்கு காரணம்” என்பார்கள்

          ராசீவ் கொலை இந்தியாவின் இலங்கை மீதான வல்லாதிக்க கொள்கையில் பெரிய மாற்றங்கள் எதையும் கொண்டுவந்துவிடவில்லை.1983 சூலை கலவரம் முதல் ராசீவ் கொலை வரை இலங்கையில் இந்தியாவின் தலையீடு பற்றி விரிவாக சொல்லவேண்டியதில்லை.அனைவரும் அறிந்ததே.உண்மையில் நடுவணில் ஆளும் கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. இந்திய முதலாளிகள் இலங்கையை மேலும் தாராளமாக கொள்ளையிட ஐக்கிய முன்னணி அரசு இலங்கை அரசுடன் 1997 -ல் செய்துகொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்,2000-த்தில் விடுதலை புலிகள் ஆனையிறவை வென்று யாழ்.நகரை சுற்றி வளைத்து முற்றுகையிட்டு கைப்பற்றவிருந்த தருணத்தில் பா.ச.க.அரசு முற்றுகையில் சிக்குண்டிருந்த சிங்கள வீரர்களை காக்க படை அனுப்ப போவதாக மிரட்டி புலிகளை பின் வாங்க செய்தது, அப்போது புலிகளின் ”ஓயாத அலைகளால்” அடி மேல் அடி வாங்கி சோர்ந்துபோயிருந்த சிங்கள அரசுக்கு 450 கோடிஉருவாக்கள் உதவி அளித்தது, புலிகளின் வான்வழி தாக்குதலை சமாளிக்க வான்நோக்கி (Radar )அளித்தது,இறுதிப்போரில் இந்தியாவின் பங்களிப்பு,என இந்தியாவின் தலையீடு தொடர்ச்சியானது.

          தமிழக மக்களை பொறுத்தவரை ராசீவ் கொலைக்கு முன்பாகவே ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஈழஎதிர்ப்பாளர்கள் மற்றும் பார்ப்பன ஊடகங்களின் நச்சு பரப்புரைக்கு ஓரளவுக்கு பலியாகியிருந்தனர்.ஈழ விடுதலை இயக்கங்கள் தங்களுக்குள்ளான மோதல்களை தமிழகத்திலும் நிகழ்த்தியது போன்ற தவறுகளால் அப்பரப்புரைக்கு வலு சேர்த்திருந்தனர். .குண்டு கலாச்சாரம், துப்பாக்கி கலாச்சாரம் போன்ற சொல்லாடல்கள் தமிழ் அகராதியில் புதிதாக சேர்க்கப்பட்டு தமிழத்தில் ஈழ எதிர்ப்பு பரப்புரை முழுவீச்சாக நடந்து கொண்டிருந்தது. ஏதோ தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் அனைவருமே துப்பாக்கியும் கையுமாக அலைவது போலவும் எந்த நேரத்திலும் தமிழக மக்களில் எவர் வேண்டுமானாலும் அவர்களால் சுட்டு கொல்லப்படலாம் என்பது போலவும் பீதியூட்டப்பட்ட நிலையில் தமிழக மக்கள் இருந்தனர்.
          அதனால்தான் புலி பூச்சாண்டி காட்டி ஆளுநரின் அறிக்கையின்றியே தி.மு.க.அரசு கலைக்கப்பட்ட போது பெரிய எதிர்ப்பு ஏதுமில்லை.உண்மையில் அப்போது தி.மு.க.அரசு காங்கிரசும் அ.தி.மு.க.வும் புலிகள் நடமாட்டம் என்று கூச்சலிட்டு கொடுத்து வந்த அழுத்தத்திற்கு பணிந்து ஈழத்தமிழர் மீது அடக்குமுறைகளை ஏவிக்கொண்டு இருந்தது.ஆனாலும் புலிப்பூச்சாண்டியே வென்றது.அதனால்தான் ராசீவ் கொலை பழியை தி.மு.க மீது சுமத்தி 1991-தேர்தலில் கிட்டத்தட்ட நூறு விழுக்காடு தேர்தல் வெற்றியை அ.தி.மு.க.-காங்கிரசு கூட்டணி சாதிக்க முடிந்தது.

          ஐந்தே ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியது.கொலைபழி சுமத்திய காங்கிரசாரில் பெரும்பகுதி தா.மா.கா.வாக தி.மு.க.வுடன் கூட்டணி கட்டிகொண்டு 1996 -தேர்தலில் அதே போன்று கிட்டத்தட்ட 100 விழுக்காடு வெற்றியை சாதித்தனர்.இம்முறையும் ராசீவ் கொடூரமாக கொல்லப்பட்டு குப்புற விழுந்து கிடக்கும் காட்சி சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டது.ஆனால் மக்கள் காங்கிரசு-அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மறுத்து விட்டனர்.

        • ஹெய்திக்குப் போன இந்திய இலங்கை ராணுவங்கள் கற்பழிப்புக் குற்றச்சாட்டில் வெளியேற்றப்பட்டது தங்களுக்கு தெரியாதா?

        • Mahendran
          //ஹெய்திக்குப் போன இந்திய இலங்கை ராணுவங்கள் கற்பழிப்புக் குற்றச்சாட்டில் வெளியேற்றப்பட்டது தங்களுக்கு தெரியாதா?//

          இலங்கை ராணுவம் தான் ஹெய்தியிலிருந்து வெளியேற்றப்பட்டது. இந்திய ராணுவம் அல்ல.
          http://www.hindustantimes.com/Lankan-troops-in-Haiti-accused-of-visiting-prostitutes-not-rape/Article1-256063.aspx

        • //1.இந்திய அமைதிப் படையை அனுப்பி கற்பழிக்கச் சொன்னது ராஜீவா?//

          ரம்மி,

          இலங்கைக்குச் சென்ற இந்திய ராணுவம் அங்குள்ள தமிழ்ப் பெண்களை கற்பழித்தது பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ராஜீவ், ”அவர்களும் மனிதர்கள் தானே” என்றாரே, இதற்கென்ன பொருள். இந்திய அமைதிப்படையின் செய்கைகளுக்கு வக்காலத்து வாங்கிய ராஜீவ்தானே அதற்கு பொறுப்பு?

      • ராஜீவை கொன்றதற்கு, காரணம் பழி வாங்கல் எனில், அது நியாயம் எனில், நியாயம் கற்பித்தவரை மாற்று பழி வாங்கல்,நியாயம் ஆகாதா?

        • வஞ்சம் வைக்கவும் பழி தீர்க்கவும் ஈழப்பிரச்னை ஒன்றும் ராசீவ்-சோனியா குடும்பத்துக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான சொத்து தகராறோ,கொடுக்கல் வாங்கல் பிரச்னையோ அல்ல.ஒரு தேசிய இனத்தின் உரிமை பிரச்னை.மேலும் ராசீவ் கொலையில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் எதுவும் இல்லையென்றால், அனைத்து உண்மைகளும் மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்பட்டு விட்டதென்றால் 19 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னரும் நளினிக்கு விடுதலை கிடைக்கவில்லையே.அது ஏன்.அவர் விடுதலையாகி வெளியில் வந்து எதுவும் பேசிவிடக்கூடாது என்பதில் இந்த அளவுக்கு அக்கறை காட்டப்படுவது ஏன்.

          சிங்கள பேரினவாதத்தால் உயிரும் உடமைகளும் சூறையாடப்பட்டு,கலாசார அடையாளங்கள் சிதைக்கப்பட்டு,கல்வி,வேலைவாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு இன ஒடுக்குமுறையின் கீழ் அல்லல்பட்டு வந்த|வருகின்ற ஈழதமிழினத்தின் அவலத்தை இந்திய ஆளும் வர்க்கங்கள் தங்களது கேடான வல்லாதிக்க,புவிசார் அரசியல்,பொருளாதார சுரண்டல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தை நாம் அனுமதிக்க முடியாது.

          நமது நாட்டினர் என்பதற்காக இந்திய ஆளும் கும்பலின் அநியாயங்களுக்கு நாம் துணை போக முடியாது.இந்த இடத்தில் நாசிகளின் செருமனி பற்றிய கவிதை நமக்கும் பொருந்தும்.

          ”முதலில் அவர்கள் பொதுவுடைமைவாதிகளை தேடிவந்தார்கள்,
          நான் பேசாமல் இருந்தேன்,
          ஏனென்றால் நான் பொதுவுடமைவாதியல்ல.
          பின்னர் அவர்கள் யூதர்களை தேடிவந்தார்கள்,
          நான் பேசாமல் இருந்தேன்,
          ஏனென்றால் நான் யூதனல்ல.
          பின்பொரு நாள் அவர்கள் என்னையே தேடிவந்தார்கள்,
          அப்போது எனக்காக பேசுவதற்கு யாருமே இருக்கவில்லை.

        • //ராஜீவை கொன்றதற்கு, காரணம் பழி வாங்கல் எனில், அது நியாயம் எனில், நியாயம் கற்பித்தவரை மாற்று பழி வாங்கல்,நியாயம் ஆகாதா?//

          what do you mean by this??? are you giving advance acceptence for another terror atack on indian soil in the name of TIGER’S???

  6. கவலை படாதிர்கள் தமிழர்களே , நாஸ்டேர்டம் versus , படியுங்கள் அதில் மூன்றாம் உலக போரை பற்றி எழுதி இருப்பதை பாருங்கள்,
    நிலைமை மாறும் 2012 விற்கு பிறகு , தமிழனின் நிலை மாறும். தமிழனின் தலை நிமிரும் . அது சரி , சேது சமுத்ரா திட்டம் நிறை வேற்ற பட்டால்
    துத்துக்குடி இனொரு singapor ஆக மாறும் , அதை தடுத்து கொண்டு இருப்பது யாருடைய சதி ?

  7. There is no difference between China and Indaia on Tamil issues. Both are doing Geopolitics for their own interest. But India unable to stop China’s activity in Indian ocean, and done biggest mistake on related to Lankan foreighn policy. So defenetly will face the consequence with in one generation.

    • Namy
      There is a difference.
      China has, thus far, not meddled in the internal affairs of any country. It is an amoral state that will do what is needed (at a state-to-state level) to please any state with which it does business .
      Also, it has not stationed troops outside its territory.
      All this may change when it becomes a strong imperialist economic power. But not yet.

      India has a tradition of meddling in the internal affairs of neighbours.
      It trained militants in Sri Lanka from 1978. It has been meddling ever since.
      It meddles in Bhutan, Bangladesh and Nepal in a big way.
      It gobbled up Sikkim.
      It is now siding with the US in Afghanistan.

      As for the Tamils, they allowed themselves to be used by India, which in the end sided with an oppressor state.
      China kept a distance from the issues. But it sold arms to Sri Lanka when asked.
      It has been cynical in its conduct. It sold Silkworm missiles to both Iran & Iraq during the decade long war in which the US backed Iraq.

      Tamil nationalist leaders have been always anti-left and pro-West. They turned to India when Indira Gandhi sent signals. The anti-left line made them anti-China and remain that way even after China became capitalist.
      The LTTE and its rivals thougt that they were so clever that they can use India and thw West. But thy got used and sold the Tamils down the river.
      Even today the US and India have agents among Tamil leaders. These agents do the bidding of their masters.

      • திபேத், தாய்வான் எல்லாம் உங்கள் கண்ணுக்கு பிரச்சனைகளாகவே தெரியாதே?

      • திபெத், தாய்வான் என்பன் சீனாவின் பகுதிகள்.
        பின்னது அமெரிக்கத் துணையுடன் மாற்று அரசாங்கமாக்கப்பட்டது. அது தனிநாடு என்ற கருத்துக் கூட, 1972இல் சீனா ஐ.ந.வில் இடம் பெறும் வரை யாராலும் கூறப்படவில்லை.
        அங்கு கூடச் சீனா மிக நிதானமாகவே நடந்துள்ளது.
        காஷ்மீரை விடவும் நாகா, மணிப்புரி என்பனவற்றை விடவும் மிக நீண்டகாலமாக திபெத் சீனாவின் பகுதி.

        நான் எழுதியது அயல் உறவுகள் பற்றி.
        சுதந்திர இந்தியா ஆக்கிமித்த மண்ணான காஷ்மீர் பற்றிக் கூட நான் பேசவில்லை.

        விஷயங்களைக் குழப்பாதிர்கள். என் இடுகை இலங்கையில் சீனக் குறுக்கீட்டிற்கான வாய்ப்புப் பறறியது.

        சீனாவை ஒரு புதிய ஏகாதிபத்திய நாடாகவே நான் காணுகிறேன். ஆனால் நடத்தை விடயத்தில் சீனா இந்தியாவின் உச்சத்தை இன்னும் எட்டவில்லை.
        எட்டலாம். தாண்டலாம்.
        அதைப்பற்றி அப்போது பேசுவோம்.

        • this argument can be applied to Eelam areas of Sri Lanka too !! and it is being now used by Rajapakse effectively !! and can this arguement be accepted by erstwhile states within the former Soviet empire like Ukraine and Central Asian Muslim republics ? and what Stalin did to them in the name of Russianisation ?

        • Which Central Asian state has been “Russianised” under Stalin?
          What aspect of their life has been “Russianised”? How?
          It is easy to repeat cheap slogans, but harder to examine the facts.

        • //It is easy to repeat cheap slogans, but harder to examine the facts./

          ths suits the likes of you mister. try to visit Ukraine or Lativia or Azerbekistan and enquire with the people there about their feelings towards Stalinsit USSR. and read histroy with an open mind.

  8. பலக் கொடூரங்களை செய்த பலர் இந்தியாவில் சுதந்திரமாக சுத்தும்போது, தங்கள் நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை தீவிரவாதிகள் என முத்திரையிட்டு தடை செய்யும் இந்திய அரசின் செயலை பழிவாங்கும் நடவடிக்கை என்பதைத் தவிர வேறு எப்படி சொல்லுவது எனத் தெரியவில்லை.

    ஒருத்தரை கொன்றதற்காக இன்னும் எத்தனை உயிர் வேண்டும் இவர்களுக்கு?

    இந்தியாவும், சீனாவும் தமிழர் நலனுக்காக இலங்கையில் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. இருவரின் கவலையுமே, தெற்காசியாவில் யாருடைய ஆதிக்கம் அதிகம் என்பதில்தான்..

  9. சகோதரி ரதி, விடுதலைப் புலிகள் ஒரு இயக்கமாக, அதுவும் இராணுவ ரீதியாக கட்டியமைக்கப்பட்ட இயக்கம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவை மட்டுமே ஓர் விடுதலை இயக்கத்தை வழிநடத்திச் செல்வதற்கான அளவுகோல் கிடையாது. அரசியல் அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல இதனையே முதன்மையாகவும் கொண்டிருக்க வேண்டும். அரசியல் அம்சங்கள் என்றால் குறைந்தபட்சம்: 1. அவ்வமைப்பு தம்மை ஜனநாயகப்படுத்தப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். மற்ற அமைப்புகளிடம், மக்களிடம் ஜனநாயக அனுகுமுறையைப் பேணியிருக்க வேண்டும். 2.கட்டுரையில் சொல்லியிருப்பது போல் ஒரு விடுதலை இயக்கம் எதிரி யார்? நண்பர் யார் என்பதை கறாராக வரையறுத்திருக்க வேண்டும். (அமெரிக்க ஆதரவுடன் சிங்கள அரசை எதிர்த்தல் போல் அல்லாமல்) 3. மக்கள் திரள் போராட்டங்களின் மீது நம்பிக்கை வைத்திருந்திருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஓர் விடுதலை இயக்கம் உயரிய நோக்கம் மட்டும் கொண்டிருந்தால் போதாது. அந்த நோக்கத்தில் நேர்மை வேண்டும். நேர்மையற்ற நடைமுறையும், நடைமுறையற்ற நேர்மையும் வேறு வேறல்ல. விடுதலைப் புலிகளின் தோல்விகளிலிருந்து பரிசீலித்தாலே இது ஒரு அரசியல் இயக்கம் இல்லை என்ற உண்மை புரிய வரும். அடுத்து, தமிழகத்தில் அரசியல் மாற்றங்களுக்கான முன்தேவையான உரிமையியல் போராட்டங்களை ம.க.இ.க போன்ற புரட்சிகர அமைப்புகள் மக்களைத் திரட்டி நடத்திக்கொண்டும், சாதித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.

    • சகோதரர் இரா.மணிகண்டன்,

      புலிகள் பற்றிய உங்கள் புரிதலையும் பதிலையும் பார்த்து உண்மையிலேயே சிரித்துவிட்டேன். ம்ம்ம்ம்ம்ம்… சரி விடுங்கள் அது உங்கள் புரிதல். உங்கள் சித்தாந்தத்தின் கண்ணாடிக்கு முன் வைத்து புலிகளை பார்க்கிறீர்கள். அது இந்த நிறத்ததை தான் காட்டும் என்பது தெரிந்தது தானே.

      //ம.க.இ.க போன்ற புரட்சிகர அமைப்புகள் மக்களைத் திரட்டி நடத்திக்கொண்டும், சாதித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள்//

      ம.க.இ.க என்ற அமைப்பின் வயதென்ன? அதன் சாதனைகளில் முக்கியமான ஒன்றிரண்டை சொல்லுங்களேன்.

      நீங்கள் ஆயிரம் சொல்லுங்கள் மணிகண்டன். ஆறு கோடிப்பேர் இருக்கிறீர்கள். ஈழத்தமிழன் அழியும் போது நீங்கள் சொல்வது போல், “தமிழகத்தில் அரசியல் மாற்றங்களுக்கான முன்தேவையான உரிமையியல்” போராட்டம் நடத்த எத்தனை பேர் உங்கள் பின்னால் திரண்டார்கள்????

      இந்த ஆறுகோடிப் பேரில் ம.க.இ.க என்ற அமைப்பின் பின்னால் எத்தனை பேர் போராட வந்தார்கள், இன்னும் வருவார்கள்? உங்கள் அமைப்பைப் பற்றி எத்தனை தமிழகத்தமிழர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள்?

      • சகோதரி ரதி,
        புறநிலை எதார்த்தத்தை அகநிலைக் கண்ணோட்டத்துடன் மதிப்பீடு செய்தால் கோடி விதமாகப் பார்க்க முடியும். ஆனால் புறநிலை எதார்த்தத்தை அப்படியே அகநிலையில் பிரதிபலித்தால் அந்தக் கோடிப்பேருக்கும் ஒரே கண்ணோட்டம்தான் ஏற்படும். சித்தாந்தம் என்பது அறிவு சார்ந்தது. உங்களுக்கொரு உண்மை, எனக்கொரு உண்மை என்று இருக்கமுடியாது. ஒரு நிகழ்வையோ அல்லது வரலாற்றையோ புறநிலையில் வைத்துப் பார்ப்பது சித்தாந்தம் என்றால் அது எப்படி அது எனக்கானதாக மட்டும் இருக்க முடியும்? உண்மையையும், நேர்மையையும் விரும்புகிறவர்கள் யாராக இருந்தாலும் இப்படித்தான் அணுகமுடியும்.

      • மக்கள் அணிதிரண்டால் சரியான இயக்கம் என்றால் நாசிசம் ஜெர்மனியில் வென்றது சரியாகி விடும். வயதுதான் முக்கியம் என்றால் காங்கிரசு சரியான கட்சி ஆகி விடும். சாதனைகள்தான் முக்கியம் என்றால் மக்கள் கண்காணிப்பகம் போன்ற என்ஜிஓ க்கள்தான் புரட்சியாளர்கள்.. இல்லையா

        அறிவியலை புரிந்துகொள்ள கண்ணாடி அவசியமில்லை. கண்ணில் உள்ள பிரச்சினையை அறிவியலின் பிரச்சினையாக கருதுவது சரியானதுமல்ல‌

      • ரதி,

        புலிகளின் தோல்விக்கான காரணம் என்னவென்று நீங்கள் கருதுகிறீர்கள்?

        • என்னைப்பொறுத்தவரையில் புலிகள் “தோற்கவே இல்லை” என்பது என் உறுதியான நம்பிக்கை. 🙂

    • புலிகள் மக்களைத்திரட்டவில்லை என்றால் போராட்டத்தில் காட்டில் வாழும் புலிகளா சண்டைக்குச் சென்றன.பிள்ளைகளைப் போராட்டத்துக்கு ஒப்படைத்த பெற்றோரை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? ஜனநாயக வழியில் போராடுவது என்றால் சிங்களக் கட்சிகளோடு தாமும் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா? அப்படி மக்களைத்திரட்டும் பணியில் இருக்கும் உங்களைவிட புலிகளில் ஆயுதம் தூக்கிய போராளிகளின் எண்ணிக்கை அதிகம் என்றால் யார் மக்களிடம் அதிகம் சென்று சேர்ந்தவர்கள்.?

      • பிள்ளைகளைப் போருக்கு ஒப்படைத்த சங்ககாலப் பெற்றோரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது வேறு யுகம்.
        இலங்கையில் அப்படி நடக்கவில்லை.

        முதலில் இளைஞர்கள் வலியத் தான் இயக்கங்களில் இணைந்தார்கள்.
        பின்னர் கட்டாயப்படுத்தல் நடந்தது.
        மக்களுக்கு முன்னால் எதுவிதமான மாற்றும் அனுமதிக்கப்படாது அரசாங்கம் ஒரு இன ஒழிப்பை மேற்கொண்ட நிலையில் புலிகளை விட யாருடன் இணைவது என்ற சிக்கலும் இருந்து.
        வசதியான, நடுத்தர வர்க்கப் பிள்ளைகள் புலம்பெயர்ந்த பின் தாழ்த்தப் பட்டேரும் ஏழைகளுமே மிஞ்சினர்.
        இவ்வாறு, வேறு வழியின்றி இணைந்தோரும் இருந்தனர்.

        புலிகள் 1995இலும் 2008இலும் மக்களைக் கட்டாயப் படுத்தியே தம்முடன் கொண்டு சென்றனர். போனவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அழுதழுது சொல்வார்கள்.
        புலிகளே எஞ்சிநின்ற ஆயுதப் போராட்டச் சக்தி என்பதால் எல்லாக் குற்றங்களையும் மூடி மறைத்துவிட இயலாது.

      • எண்ணிக்கை அளவை வைத்து சரியான கொள்கை பிழையான கொள்கை என்று மதிப்பீடு செய்வது அறிவுடைமையாகது
        புலிகள் காற்றடைத்த பலூன் போன்று புலியதரவு ஊடகங்களால் மிகைப்படுத்தி காட்டப்பட்டது
        ஆனால் ஒரு குண்டுசி பட்டதும் உடைந்து சிதறி
        விட்டது

  10. //Mahendran

    ராஜிவை கொன்றது புலிகள் தான் என்று உங்களுக்கு நன்றாக தெரியுமா?//

    இலங்கையைச் சார்ந்த, தமிழை பேசுபவர்கள் என்று உலகிற்கே தெரியும்! அதில் புலிகளும் அடங்குவர்!

    • ராஜீவ் கொலையில் பங்கு இருப்பதாக சு.சாமி,ச.சாமி போன்றோர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி..

  11. hello,

    I am a tamilian I support LTTE but In india’s point of View it’s a terrorist group, because they did a blunder in their era, they assassinated RAJEEV in INDIA. that means they are doing their terrorist activity in INDIA, then how will Indian government reveal the ban on them…and All you forgot about SONIA, it’s a clear-cut revenge of SONIA..she is doing everything…

  12. ரதிக்கு
    என்னுடைய பதிலில் உங்களது கேள்வியின் அபத்தத்தை புறக்கணித்து நேரடியாகவேதான் பதில் சொல்லப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.
    -மணி

    • மணி,

      என் கேள்வியில் அப்படி என்ன அபத்தத்தை கண்டீர்கள்??

      நான் வேலை மினக்கெட்டு அபத்தமாய் கேள்வி கேட்க வேண்டிய தேவை இல்லை.

  13. புலிகள் தான் என்பது என் ஐயமும்.
    அத வேளை, இதில் வேறு பல கைகளும் தொடர்புடையன என நம்பவும் நியாயமுண்டு.

    “இலங்கையைச் சார்ந்த, தமிழை பேசுபவர்கள்” என்பது எப்படிப் புலிகள் என்றாகிவிடும்?
    இந்திய அரசின் கீழே, ஒரு பெரிய இலங்கைத் தமிழ்க் கூலிப்படை உள்ளதே!

    ஊகங்கள் வேறு ஆதாரங்கள் வேறு.

    • இந்திய/தமிழக மக்கள் , புலிகள் தான் செய்தார்கள் என்பதில் திடமாக இருக்கிறார்கள்!
      அதற்கு புலிகள் செய்த அனைத்து கொலைகளும், கொலை செய்த முறைகளும் சாட்சியே!
      புலிகள் செய்தார்கள் என்பது யூகமெனில், ஈழப்போரில் இந்தியாவை குற்றம் சாட்டுவதும் யூகமே!

    • ஆதாரங்களைக் கொடுத்துவிட்டா கொலைகளை செய்கிறார்கள்!

      புலிகள் செய்தால் மட்டும் , அது ஒரு துன்பியல் சம்பவம்!

      மற்றவர்கள் செய்தால்?

    • //இந்திய அரசின் கீழே, ஒரு பெரிய இலங்கைத் தமிழ்க் கூலிப்படை உள்ளதே! //

      புலிகளும் இந்திய அரசின் கூலிப்படைதானே!

        • பல தேசிய இணைகளை அடக்கி வஞ்சித்து இன்றளவும் தேசி இன உரிமையை நசுக்கும் இந்திய ஏகாதியபதியதிற்கு ஒரு சிறு விடுதலை இயக்கமான விடுதலை புலிகள் துரோகம் செய்துவிட்டது என்பது நகைப்புக்குரியது

  14. ///எதிரி யார், நண்பன் யார் என்பதை வரையறுப்பது ஓர் அரசியல் இயக்கத்துக்கு அடிப்படையான – அவசியமான உயிர்நாடியான விசயம். தமிழினவாதிகளின் எல்லா தவறுகளும் இங்கிருந்துதான் தொடங்குகின்றன.///

    அதனால்தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தோல்வியை பரிசீலித்து அதிலிருந்து படிப்பினை கற்க துணிவில்லாமல் தமிழினவாதிகள் அவரை கடவுளாக்கி அடங்கிவிட்டார்கள்.

    • Again, well said Com. Manikandan.

      “Who are our enemies? Who are our friends? This is a question of the first importance for the revolution. The basic reason why all previous revolutionary struggles achieved so little was their failure to unite with real friends in order to attack real enemies. A revolutionary party is the guide of the masses, and no revolution ever succeeds when the revolutionary party leads them astray. To ensure that we will definitely achieve success in our revolution and will not lead the masses astray, we must pay attention to uniting with our real friends in order to attack our real enemies.

      “Analysis of the Classes in Chinese Society” (March 1926), Selected Works, Vol. I, p. 13.

        • “Who are our enemies? Who are our friends? This is a question of the first importance for the revolution. The basic reason why all previous revolutionary struggles achieved so little was their failure to unite with real friends in order to attack real enemies. A revolutionary party is the guide of the masses, and no revolution ever succeeds when the revolutionary party leads them astray. To ensure that we will definitely achieve success in our revolution and will not lead the masses astray, we must pay attention to uniting with our real friends in order to attack our real enemies.

          தோழர் மணிகண்டன்,

          இந்த கட்டுரைக்கும், தங்களது கருத்துக்கும் மற்றும் தோழர் மாவோவின் இந்த மேற்கோளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 1920-ல் இருந்த சீனாவின் நிலைமைக்கு மட்டுமல்ல, முல்லிவாய்க்கால் முதல் வேறு எவ்வகையான போராட்டமாக இருந்தாலும், ”எதிரி யார், நண்பன் யார் என்ற தெளிவான வரையரை மிக அவசியம்” என்ற இந்த மேற்கோள் எக்காலத்துக்கும் பொருந்துவதால் இங்கு மேற்கோளிட்டேன். இனி என்னால் இயன்றவரை மேற்கோளை தமிழில் தர முயலுகி்றேன்.

          “ நமது பகைவர் யார்? நமது நண்பர் யார்? என்பது புரட்சியின் முதல் முக்கியமான கேள்வியாகும். இதுவரை சீனாவில் நடந்த அனைத்துப்புரட்சிப்போராட்டங்களும் பெரிதாக சாதிக்காதமைக்கு, உண்மையான தோழமை அமைப்புகள் ஒன்றுகூடி உண்மையான எதிரியைத் தாக்காதது, என்பதே அடிப்படைக்காரணம். ஒரு புரட்சிகர இயக்கம் என்பது மக்களின் வழிகாட்டி. மக்களைத் தவறான வழியில் நடத்திச்செல்லும் புரட்சி என்றுமே வென்றதில்லை. நமது புரட்சியில் நமது வெற்றியினை உறுதி செய்யவும், மற்றும் மக்கட்திரளை தவறான வழியில் நடத்திச்செல்லாமல் இருக்கவும், நாம் நமது உண்மைத்தோழமை சக்திகளை இணைத்து உண்மையான எதிரிகளைத் தாக்குவதில் கட்டாயமாக மிக அதிக கவனம் செலுத்த வேண்டும்”.

          — ”சீன சமுதாயத்தில் வர்க்கங்களின் பகுப்பாய்வு” (மார்ச் 1926) தோழர் மாசேதுங் தேர்வு நூல் தொகுதி 1, பக்கம் 13.

  15. Dei china thaanda ulagathulaye karunaiyaana naadu. appa saami, ungolada china jaalra thaanga mudialai da…. aana kasu koduthaalum anga poga maateenga. hmm viduthalai puli thadai vengayam endru pesivittu nadu naduve cheenathu jalra. arumai arumai.
    cheena – manidha urimai ha ha ha

  16. சித்தாந்தங்கள் இல்லாமல் யாரும் இல்லை. புலிகளின் சித்தாந்தம் இன்னது என முன்வைக்காமல் அல்லது உங்களது சித்தாந்தம் நிறம் என போகிற போக்கில் பேசுவது,அமைப்பின் வ‌ய‌து ம‌ற்றும் க‌ண்ணிற்கு தெரிந்த‌ உட‌ன‌டியான‌ அல்ல‌து ந‌ம்பிக்கை ஊட்டுகிற‌ அம்ச‌ங்க‌ளை மாத்திர‌மே முத‌ன்மையான‌ விச‌ய‌மாக‌ ஒரு அமைப்பை ம‌திப்பிடுவ‌த‌ற்கான‌ அள‌வுகோலாக‌ பார்ப்ப‌து, அர‌சிய‌ல் செல்வாக்கு பெற்ற‌வ‌ர்க‌ளை மாத்திர‌மே ச‌ரியான‌வ‌ர்க‌ளாக‌ ம‌திப்பிட்டு வால் பிடிக்க‌ ஓடுவ‌து என்ற‌ விச‌ய‌த்தில் ஒளிந்திருக்கும் த‌ர்க்கிப்ப‌தில் உள்ள‌ சோம்ப‌ல் இந்த‌ அப‌த்த‌ங்க‌ளை ஒதுக்கி அதே நேர‌த்தில் அவ‌ற்றை ச‌ரியான‌ முறையில் புரிந்துகொள்ள‌ உத‌வும்வ‌கையில்தான் எழுதிய‌தாக‌ ப‌டுகிற‌து என‌க்கு.

    • நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இன்னமும் சுத்திச்சுத்தி அடிக்கிறீர்கள். ஏனென்று புரியவில்லை.

      உங்கள் பதில் தான் சுத்த அபத்தமாகப் படுகிறது எனக்கு.

    • என்னைப்பொறுத்தவரையில் புலிகள் “தோற்கவே இல்லை” என்பது என் உறுதியான நம்பிக்கை. — ரதி

      இதை விட அபத்தமாகவா மணியின் பதில் உள்ளது?

  17. இங்கே தமிழ் தெரிந்த … தமிழன் என்ற போர்வையை
    போட்ரிக்கொண்டு பதில் சொல்கின்றன .

  18. சகோதரி ரதி, “என்னைப் பொறுத்தவரையில் இவ்வுலகில் கடவுள் உள்ளார் என்பது எனது திடமான நபம்பிக்கை” என்று ஒரு அப்பாவி பக்தனின் நம்பிக்கையும் “புலிகள் தோற்கவே இல்லை” என்ற உங்களது நம்பிக்கையும் வேறு வேறல்ல.

    • சகோதரர் மணிகண்டன்,

      என்னைப்பொறுத்தவரையில் புலிகள் கடவுளுக்கும் மேலானவர்கள். புலிகள் யார், அவர்கள் யாருக்காக போராடினார்கள் என்கிற உண்மையை பெரும்பானமையான ஈழத்தமிழர்கள் மிகத் தெளிவாக அறிந்தவர்கள்.

      புலிகள் பற்றி ஈழத்தமிழர்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை.

      • ஆனால் யாருக்காக போராடினோம் என்பது போராடிய புலிகளுக்கு தெரியுமா

        • ஏன் மணி, புலிகள் உங்களிடம் சொன்னார்களா அல்லது கேட்டார்களா தாங்கள் யாருக்காக போராடவேண்டும் அல்லது போராடினார்கள் என்று.

      • சகோதரி ரதி,
        கடவுளை ஏற்பதோ, ஏற்காததோ அது உங்களின் தனிப்பட்ட விசயம். ஆனால் கடவுள் என்பவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை மட்டும் நீங்கள் மறந்துவிட வேண்டாம் எனத் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

        • சகோதரர் மணிகண்டன், எங்கள் கடவுளர் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்கள் என்றால் பரவாயில்லை. அவதூறாய், குயுக்தியாய் விமர்சித்து எங்களுக்காய் போராடியவர்களை இழிவுபடுத்தினால் நங்கள் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

        • சகோதரி ரதி,
          ஈழ விடுதலை போராட்டத்தை ஆதரிப்பது என்பது வேறு.விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியலை ஆதரிப்பது என்பது வேறு.

          புலிகள் துவக்க காலத்தில் நன்றாகத்தான் அரசியல் பேசினார்கள்.விடுதலை பெற்ற ஈழம் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கப் பெற்ற பொதுவுடைமை குடியரசாக திகழும் என்றார்கள்.பின்னாளில் ஆயுதவலுவில் அதிகாரம் கையில் கிடைத்தபோது சொந்த மக்கள் மீதே அடக்குமுறைகளை ஏவும் பாசிச இயக்கமாக சீரழிந்து போயினர்.போட்டி ஆயுத குழுக்களை ஆயுதங்கள் மூலம் சந்தித்ததை பற்றிய விவாதங்கள் ஒரு புறம் இருக்கட்டும்.ஆனால் ஆயுதம் இல்லாதவர்களின் வேறுபாடான கருத்துகளையும் துப்பாக்கி முனையில் புலிகள் சந்தித்தனரா இல்லையா என்பதை யாழ்.மக்களிடம் குறிப்பாக யாழ்.பல்கலை கழகத்தில் கேட்டுப்பாருங்கள்.

          அது மட்டுமல்ல,இனவெறி கொண்டவர்களாகவும் புலிகள் சீரழிந்தனர்.யாழ்.குடா நாட்டில் வாழ்ந்த முசுலிம் மக்கள் அனைவரையும் அவர்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டியடித்தனர்.இது ”இனத்தூய்மை”நடவடிக்கை இல்லையா.இத்தனைக்கும் முசுலிம்களும் தமிழர்களே.புலிகள் இயக்கத்திலும் முசுலிம் இளைஞர்கள் பங்கேற்றதுண்டு. இனத்தூய்மை செய்வோர் பாசிச வெறியர்களா இல்லையா. இதற்கு புலிகள் தரப்பு விளக்கம் ஒன்றே ஒன்றுதான்.யாழ்.முசுலிம்கள் சிலர் சிங்கள அரசுக்கு ஐந்தாம் படையாக செயல்பட்டனர் என்பதுதான்.வாதத்திற்காக இதை உண்மை என்று வைத்துக்கொண்டாலும் அந்த துரோகிகளை மட்டும் தண்டிப்பதை விடுத்து ஒட்டுமொத்தமாக ஒரு பிரிவு மக்கள் சமூகத்தையே தண்டிப்பது பாசிசமில்லையா. புலிகளின் இத்தகைய பாசிச போக்கு அவர்கள் முசுலிம்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு இட்டுகட்டப்பட்டதாக ஏன் இருக்ககூடாது என்ற கேள்விக்கு வலு கூட்டுகிறது.அம்முசுலிம் மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக முகாம்களில் துன்புறுவதற்கு யார் பொறுப்பு.

          ஆகவே,ரதி,விடுதலை புலிகள் உங்களுக்கு கடவுள்கள் ஆவது இருக்கட்டும். மற்றவர்களிடம் நல்ல மனிதர்களாக நடந்து கொண்டார்களா என்று கேட்டுப்பாருங்கள்.

  19. தன நாட்டு மக்களையே கற்பழித்து கொள்ளும் ராணுவம் தான் இந்திய ஏகாதிபய்த ராணுவம்.
    காஸ்மீரில் எசிய மற்றும் நிலோபார் என்கிற இரண்டு பெண்களை கற்பழித்து மட்டும் அல்லாமல் கொலையும் செய்த கொடுரமான ராணுவம் தான் இந்திய ராணுவம்.
    சமீபத்தில் கூட கனடா நாடு இந்திய ராணுவத்துக்கு விசா மறுத்து பின்பு இந்திய கேஞ்சியத்தின் விளைவாக விசா கொடுத்தனர்.
    அது மட்டும் அல்லாமல் சிங்கள இராணுவமே வெட்கி தலை குனியும் அளவுக்கு கொடூரமான நிகழ்வுகளை நிகழ்த்தியது இந்திய சாத்தான் படை.
    முத்துக்குமார் கூறியது போல் இவர்கள் தான் சிங்களர்களுக்கு பாலியல் கொடுமைகள் செய்வதற்கு கற்று கொடுதுருப்பர்கள்.

    • நண்பர் புரவி,
      இப்படி பாலியல் வக்கிர மிருகங்களைக்கொண்ட இந்திய ராணுவத்தை நீங்கள் நம்பவில்லை. புலிகள் நம்பினார்களா, இல்லையா?

  20. நண்பர் புரவி, ஈழத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை நம்பினார்களா? இல்லை இந்திய அரசை நம்பினார்களா? விடுதலைப் புலிகளை என்றால், வி.பு.கள் செய்த துரோகம் ஈழ மக்களுக்குத்தான். இந்திய அரசுக்கு என்று யாரும் சொல்லவில்லை.

  21. நண்பர் மணிகண்டன்,
    ஒரு போரில் தோற்று விட்டால் நான் அன்றே கூறினேன் இவர்கள் மோசமானவர்கள் அயோக்கியர்கள் இவர்கள் வீழ்ந்து விடுவார்கள் என்று சொல்லிவிடுவார்கள் நம் தமிழர்கள்.
    இது ஒரு உளவியல் எதார்த்தம். தான் எதிர்க்கும் ஒரு அணி தோற்றால் சேரை வாரி பூசுவது ஒன்றும் புதி தானது அல்ல. அதற்காக புதுசு புதுசாக காரணங்களை தேடி
    சேரு பூசுபவர்கள் ஒரு ரகம். தற்பொழுது இது எதில் கொண்டு வந்திருகிறது என்றால் சிங்களர்கள் கூட சில குற்றசாட்டுகளை கூறினால் நம்மை மக்கள் நிராகரித்து விடுவார்கள் என்று சொல்ல பயப்படும் குற்ற சாட்டுகள் எல்லாம் இன்று விடுதலை புலிகளின் மீது அதுவும் தமிழர்களால் வைகபடுகிறது. சமீபத்தில் தான் ஒரு இணையத்தளம் பார்த்தேன். அதில் விடுதலை புலிகள் சொந்த மக்களை பாலியல் கொடுமைல்கு உட்படுத்தினர் என்று எழுதி இருகின்றனர். இதே போல்தான் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக புதிது புதிதாக குற்றசாட்டுகள் வைகபடுகிறது. இந்த உலகத்தில் அனைவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே. ஆனால் சுற்றி சுற்றி விடுதலை புலிகளின் மீது மட்டும் தான் தமது இலக்கு என்று நினைத்து சேரைவாரி பூசுவது அழகல்ல. ஈழ விடயத்தில் ஜனநாயக மொகமூடி கிழிந்து தொங்கும் இந்திய ஏகதிபத்யதை தூக்கி பிடிப்பதற்கு உங்களுக்கு புலிகள் தான் கிடைத்தார்களா?

    • நண்பர் புரவி,
      உங்களின் விளக்கம் எதுவானாலும் நான் பரிசீலிக்கத் தயார். ஆனால் நமது விவாதம் எதில் தொடங்கியது? விடுதலைப் புலிகள் ஈழத் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தார்களா, இல்லையா? இல்லையெனில் அதற்கான விளக்கத்தை கொடுங்கள். அதை விடுத்து விட்டு அகரீதியான விளக்கங்களுக்கோ, மதிப்பீடுகளுக்கோ இங்கு இடமில்லை. அது ஆரோக்கியமான விவாதத்திற்கு எவ்விதத்திலும் உதவாது. விடுதலைப் புலிகளின் அரசியலற்ற வெறும் ராணுவசாகச நடவடிக்கையே அதன் தோல்விக்கு முக்கியக் காரணம் என்பது எனது வாதம். இதைப் பற்றி பேசாமல், இந்திய மேலாதிக்த்தை இலங்கையில் விரிவுபடுத்தும் அரசியல் நோக்கத்தை மூடி மறைத்துவிட்டு அல்லது காண மறுத்துவிட்ட நீங்கள் இந்தியாவை நான் தூக்கிப் பிடிப்பதாக நீங்களாகவே முடிவுசெய்து கொள்கிறீர்கள். வெற்றியோ, தோல்வியோ விடுதலைக்கான திசையில் செல்லும் எந்த ஒரு இயக்கமும் அதிலிருந்து படிப்பினைளை பெறவேண்டும் என்பதுதான் அதன் நேர்மையை அளவிடும் அளவுகோல். விடுதலை புலிகளின் தோல்வியைப் பற்றி பேசினாலும் ஈழத்தமிழ் மக்களைப் பொருததவரை போர் இன்னும் முடியவில்லை என்பதும் எனது வாதம். முக்கியக் குறிப்பு: உங்கள் பரவசத்தையோ, மனக்கிளர்ச்சியையோ அடிப்படையாக வைத்து விவாதிப்பது புறநிலை எதார்த்தமாகிவிடாது. எதார்த்தம் என்பது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது.

      • “விடுதலைப் புலிகளின் அரசியலற்ற வெறும் ராணுவசாகச நடவடிக்கையே அதன் தோல்விக்கு முக்கியக் காரணம் என்பது எனது வாதம்”

        வலுவான ராணுவ சாகசம் புரிவதற்கும் அரசியல் கண்டிப்பாக வேண்டும். இல்லையெனில் முடியாது.
        விடுதலை புலிகளின் தோல்விக்கு அது முக்கிய காரணம் அன்று. இலங்கை ராணுவம் வெற்றி பெற்று விட்டதால் அவர்கள் சிறப்பாக அரசியல் புரிந்தார்கள் என்று வாதிடுவீர்களா?
        புவி சார் அரசியல் மிக முக்கிய காரணம். மற்ற முக்கிய காரணங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு அரசியல் இல்லை என்பது முரண்பாடாக அல்லவா இருக்கிறது.

        புலிகள் துரோகம் செய்தார்கள் என்பது உங்கள் சொந்த கருத்தாக இருக்கலாம்.
        ஆனால் இயங்கியலில் பொதுவான கருது உருவாக வேண்டும். அதுவே பலன் தரும் அனைவருக்கும்.

        • //வலுவான ராணுவ சாகசம் புரிவதற்கும் அரசியல் கண்டிப்பாக வேண்டும். இல்லையெனில் முடியாது.//

          அரசியல் என்று புரவிஎதைச் சொல்கிறார்என்று தெரியவில்லை

        • நண்பர் அசுரன் அவர்களுக்கு,
          அரசியல் என்று எதை நீங்கள் வரையறுத்து இருக்குறீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

        • நண்பர் புரவி,
          பரவாயில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியையாவது ஒத்துக்கொண்டீர்களே! அதற்காவாவது உங்களுக்கு நான் முதலில் நன்றியை உரித்தாக்கிக்கொள்ள வேண்டும்.
          அடுத்து, இலங்கையின் இனவெறி பாசிச அரசு விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டுவதற்கு, இந்திய மேலாதிக்க்வாதிகளையும், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையும் கொண்ட ஒரு சர்வதேச வலைப் பின்னலைக்கொண்ட ஒரு செயல்தந்திரத்தை வகுத்துக்கொண்டுதான் தனது கோரமுகத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். இது அவர்களின் அரசியல்தான். ஆனால் விடுதலைப் புலிகள் யாரை திரட்டினார்கள்? அவர்களுடைய செயல் தந்திர அரசியல் என்ன? ஒரு கூலிப்படைகளுக்கே செயல் தந்திர அரசியல் இருக்கும் போது, ‘கொள்கை’ படையான விடுதலைப் புலிகளுக்கு ஒரு செயல் தந்திர அரசியல் வேண்டாமா? மலிவான கட்சிவாதத்தை ஒதுக்கிவைத்துவிட்டு தோல்வியிலிருந்து படிப்பினையைக் பெற முயலுங்கள்.

        • நண்பர் மணிகண்டன் அவர்களுக்கு,
          நான் மறுபடியும் வலியுறுத்துகிறேன் . விடுதலை புலிகள் நான்காம் கட்ட ஈழபோரில் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணங்கள் பல உள்ளன.
          ஒரு இறையாண்மை குடியரசை நிறுவுவதற்கு ௩௦ வருடமாக அரசியல் இல்லாமல் போராடினார்கள் என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
          விடுதலை புலிகள் நான்காம் ஈழ போரில் தோல்வி அடைந்ததற்கு சிங்கள பேரினவாதிகளை விட தாங்கள் தான் அதிக மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் போலிருக்கிறது.
          விடுதலை போராட்டம் என்பது விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். தொடரும்.

      • ஈழ விடயத்தை பொறுத்த வரை இந்திய ஈழம் அமைவதை விரும்பியதும் இல்லை விரும்ப போவதும் இல்லை.
        அதே நிலைபாடும் தான் சீனாவுக்கும். இதையும் தாண்டி மிக வும் சிரமமான நிலையில் தான் புலிகள் அவர்களது ஆதரவு சக்திகளை திரட்டினர்.
        இந்த இரண்டு ஏகதிபதயதியும் மீறி ஆதரவை பெருகுவது என்பதே மிகவும் ஒர் சிரமமான காரியம். ஆனால் அதையும் அவர்களால் முடிந்த வரை செய்தனர். ஆனால் நான்காம் ஈழ கட்ட போரில் தடை செய்யப்பட்ட அணைத்து குண்டுகளையும் சிங்களம் பயன்படுத்திய போது உலக நாடுகளுக்கு தெரியாத என்ன?. நன்றாக தெரியும். இன்று வரையிலும் மகிந்த மீது கொண்டு வரும் அத்தனை இன படுகொலை குற்றசாட்டுகளும் நிரகரிக்கபடுகின்றன என்றால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதயும் நாம் அறிவோம். ஆக இப்போது கூட ௩ லட்சம் பேரை என்னால் கொல்ல முடியும் என்று மகிந்த கூறுகிறான் என்றால் அதன் பின்னணி என்ன.
        எல்லாம் தெரிந்தே வலுகாட்டயமாக ஒன்றை திணிப்பது போல் இருக்கிறது.

      • ஈழமக்களில் பெரும்பாலானோர் புலிகளுக்குத் துரோகம் இளைத்துவிட்டர்கள் என்பதுதான் என்னைப்பொறுத்தவரையில் உண்மை. இதற்கு முக்கிய காரணம் ஈழத்தமிழர்களுக்குள்ள சாப்பயம். அவர்கள் சவுக்கு அஞ்சி இருக்கவிட்டால் நிச்சயம் இவ்வளவும் நடந்திருக்காது.

  22. //” அடுத்து, தமிழகத்தில் அரசியல் மாற்றங்களுக்கான முன்தேவையான உரிமையியல் போராட்டங்களை ம.க.இ.க போன்ற புரட்சிகர அமைப்புகள் மக்களைத் திரட்டி நடத்திக்கொண்டும், சாதித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள் “//

    மிக சிறந்த நகைச்சுவை…..

      • உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நாட்டில் களத்தில் நிற்கும் போராளிகளிடம் அரசியல் இல்லை என்கிறிர்கள்.
        ஆனால் தமிழகத்தில் இருக்கும் அதிமுக்கியமான பிரச்னை தில்லை நடராசர் கோவில் தான் என்று நினைத்து கொண்டீர்கள் போலிருகிறது.
        இதுதான் புரட்சிகரமான இயக்கங்களின் தலையாய பணிகள் போல. நன்று.
        ஏற்கனவே புரட்சிக்கு நேர்மையான புரட்சி நேர்மை இல்லாத புரட்சி என்று பெயரிடவ்ர்கள் அல்லவா மக இ க வினர்.

        • சந்தர்ப்பவாத்த்தில் நேர்மையான சந்தர்ப்பவாதம் என்றும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதம் என்றும் பெயரிட துவங்கியவர்கள் யார் எனத் தெரியும்தானே. மற்றபடி புரட்சியில் அப்படி எதுவும் முன்வைக்கப்பட்டதாக தெரியவில்லை

        • நண்பர் புரவி,
          “தமிழ் ஒரு இழி மொழி, நீச பாசை, தேவடியாள் பாசை” என்று வரலாறு நெடுக ஒரு தீண்டாமையை ஆளும் வர்க்க ஆதரவோடு நிலைநாட்டி வைத்திருந்த பார்ப்பனியத்தை மண்டியிட வைத்து இத்தீண்டாமைக்கு ஒரு முடிவுகட்டியிருக்கும் உரிமையியல் போராட்டத்தைப் பற்றி, எப்படியாவது அதிமுக வை ஜெயிக்கவைப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு வெற்றி கிட்டிவிடும் என்ற கண்ணோட்டம் கொண்ட உங்களுக்கு இவை பற்றி புரிந்து கொள்ள முடியாது.

      • வாழ்த்துக்கள் திரு மணிகண்டன் அவர்களே.
        # ஆனால் இதை விட உயர் நீதி மன்றத்தில் தமிழ் மொழி கொண்டு வந்தால் அது மிக முக்கிய போராட்டம் என்று சொல்லலாம்.
        # அது ஏழை எலியோருக்கு பயன்படுமே.

      • நான் குறிபிடுவது சொற்பதம் அல்ல. புரட்சியில் என்ன நேர்மையான புரட்சி நேர்மையில்லாத புரட்சி என்றுதான் கேட்கிறேன்.
        அப்படி சொல்லி புரட்சி என்பதயே கேள்விக்கு உள்ளாகினுல்லரே அதுதான் நான் கேட்டது.

  23. சகோதரி ரதி, நான் எனது சொந்த விருப்பு வெறுப்பிலிருந்து விடுதலைப் புலிகளை விமர்சனம் செய்யவில்லை. விமர்சனம் என்பது சுட்டிக்காட்டுவது; அவதூறு என்பது குத்திக்காட்டுவது. முன்னது அக்கறையிலிருந்து வருவது; பின்னது பொறுப்பின்மையிலிருந்து வருவது. நான் ஒரு தமிழன். வர்க்கப் பார்வையுடன் இவ்வுலகைப் பார்க்க விரும்பும் தமின். ஈழ தமிழ் மக்களின் விடுதலையை நேசிக்கும் தமிழன். அந்த அடிப்படையில்தான் விடுதலைப் புலிகளை விமர்சனம் செய்கிறேன். ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் போர் இன்னும் முடியவில்லை. ஒரு விடுதலைப் போரை துவக்கி வைப்பது அதற்குரிய தலைமையாக இருக்கலாம். ஆனால் அப்போரை முடித்து வைப்பவர்கள் அம்மண்ணின் மக்கள்தான். அந்த திசை வழியிதான் நேபாளம் சென்றுகொண்டிருக்கிறது. ஏற்ற இறக்கங்களுக்கிடையே மக்கள் அதிகாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் விடுதலைப் புலிகளோ என்ன அனுபவத்தை மக்களுக்கு கொடுததுள்ளார்கள்? இப்பொழுது அவர்களை நீங்கள் கடவுளாக்கி விட்டால் இனி நம் விடுதலைக்கு அந்தக் கடவுளர்கள்தான் வரவேண்டும் எனற கையறு நிலைக்கு ஆளாகமாட்டோமா? இதைத்தான் அவர்கள் நமக்கு கறறுக் கொடுத்தார்களா? வர்க்கப் பார்வையுடன் பரிசீலிக்க முன்வந்தீர்களாயின் இவர்களின் அரசியல் வெற்றிடத்தை புரிந்துகொள்வதோடு, ஈழவிடுதலைக்கான தீர்வையும் நாம் காண முடியும்.

    • சகோதரர் இரா.மணிகண்டன்,

      உங்கள் கருத்துகளோடு எனக்கு உடன்பாட்டிலாவிட்டாலும், நீங்கள் உங்கள் கருத்துக்களை மிக, மிக நாகரீகமாகத்தான் முன்வைத்தீர்கள்.

      No hard feelings. 🙂

      நீங்கள் சொந்தமாய் தளம் வைத்திருக்கிறீர்களா? உங்கள் பெயரின் மீது கிளிக்கினால் தளம் இல்லை என்று வருகிறதே, என்ன காரணம்?

      • சகோதரி ரதி,
        புலிகளின் மீதான எனது விமர்சனக் கருத்துக்களோடு நீங்கள் உடன்படாமல் இருப்பது என்பது வேறு; அக்கருத்துக்களை பரிசீலிக்கவே தயாராக இல்லை என்பது வேறு. முன்னது நம்மை நாமே வரம்பிட்டுக்கொள்வது. பின்னது தொடர்ந்து வளர்ந்து கொண்டே ஒரு கூட்டுத்துவ சிந்தனை முறையில் துல்லியமாக உண்மைகளைக் கண்டறிதலுக்கு வந்தடைவது.
        கேள்விக்குள்ளாக்குவது மட்டுமே உண்மையைக் கண்டறிவதற்கான முதல் படி.

  24. இது நேரடியான பதில் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா ரதி. அல்லது நேரடியாக பேச தகுதி வாய்ந்தவர்கள் என தாங்களே முடிவுசெய்தவர்கள்தான் தாங்களை பற்றி பேசவும் தகுதி உண்டோ என அறிய ஆவல்

  25. புரவி
    வருசத்தின் எண்ணிக்கை நானூறாக இருந்தாலும் அரசியலின்மையுடன் நீடிக்கும் இயக்கம் ஏன் தொடர முடியாது என விளக்க முடியுமா

    • நண்பர் மணி அவர்களுக்கு,
      அரசியல் என்று எதை நீங்கள் வரையறுத்து இருக்குறீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

  26. நண்பர் புரவி,
    நான் வெளிப்படுத்தும் வார்த்தைகளிலிருந்து பொருள் எடுத்துக்கொள்ளாமல், நான் சொன்னதாக தாங்களே சொல்லி முடிக்கிறீர்களே,இது எதனின் அறிகுறி? அல்லது எந்த வகைப் பண்பாடு? சரி, மறுபடியும் நீங்களே வலியுறுத்துங்கள்.
    1.புலிகளின் அரசியல் நிலைபாட்டை கொஞ்சம் தாங்களே விளக்குங்களேன்?
    2.ஈழப் பிரச்சினையில் எது அடிப்படை?
    3.புலிகள் தோற்றதற்கான முதன்மைக் காரணி எது?
    4.புலிகளின் நட்பு சக்திகள் யார் யார்? எதிரி படியலில் யார் யார் உள்ளனர்?
    5.இந்திய அரசிடம் புலிகள் பயிற்சி பெற்றது எந்த வகை அரசியல்?
    6.புலிகளை வழி நடத்தியது எது?
    7.ஈழப் போரில் இந்திய ஆளும் வர்க்கத்தின் பின்னணி என்ன?.
    8.புலிகளின் ஜனநாயகப் பண்பிற்கு ஒரு உதாரணம் கொடுங்கள்?
    9.புலிகளுக்கு அமெரிக்காவுடனான உறவு பகையா? நட்பா?…………….. …………….. ………….. இது போன்ற் அடிப்படை விசயங்களை விளக்கி விடுங்கள் அப்புறம் விவாவத்தை தொடங்கலாம். முடியாதென்றால் நீங்கள் உங்கள் தரப்பில் எழும் அடிப்படை கேள்விகளை என்னிடம் எழுப்புங்கள். பிறகு விவாதிப்போம்.

    • சோசியலசிமுள்ள தமிழ் ஈழ குடியரசை அமைப்பதே அவர்களின் அரசியல் இலக்கு.

    • புரவி
      சும்மா குதிரை விடாதீர்கள்.
      விடுதலைப் புலிகள் என்றேனும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வாய் திறந்தது கிடையாது. பிறகென்ன சோஷலிசம்?

      • ஈழ தமிழ் இன படுகொலை செய்த அணைத்து வல்லாதிக்கங்கலையும் எதிர்த்து போராடுவதே ஏகதிபதியத்தை எதிர்த்து தானே

        • நண்பர் புரவி,
          ஒரு வரையறை என்று சொன்னால் அது உலகம் தழுவியதாக இருக்க வேண்டும். ஏகாதிபத்தியம் என்பதை இந்தியாவுக்குப் பொருத்தி ‘டில்லி ஏகாதிபத்தியம்’ என்று கூறிவருகிறீர்கள். இது புலிகள் உங்களுக்கு கற்றுக்கொடுத்த வரையறையா? புலிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், இந்திய மேலாதிக்கவாதிகளின் தயவையும் எதிர்பார்க்கவேயில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? பிறகு எங்கே இவர்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது? வரலாறு தெரியவில்லை என்றால் முதலில் படித்துவிட்டு வாருங்கள்.

        • ஈழத்தின் பொருளாதாரம் தராளமயப் பொருளாதாரம் என்று சொன்னார் ஆண்டன் பாலசிங்கம். இதுதான் சோசலிசப் பொருளாதாரம் என்பது இன்று புரவியின் பின்னூட்டத்தை படித்தப் பின்பே தெரிந்து கொண்டேன்.

          உடனே எனக்கொரு சந்தேகம் பிறந்தது, இந்த பொருளாதாரத்தைத்தான் அமெரிக்கா, இந்தியா போன்றவயும் பின்பற்றுகின்றன எனவே, ஒபாமா, மன்மோகன் போன்றோரும் சோசலிஸ்டுகளே என்று முடிவு செய்து கொண்டேன்.

    • இந்திய அடிமையாக இருந்த போது நேதாஜி பாசிச ஹிட்லருடன் உதவி கேட்டது ஏன்?.
      அப்போது இந்தியாவின் அரசியல் வாதிகளின் அரசியல் நிலைப்பாடு என்ன?.
      இரண்டாம் உலக போரில் ஏன் இந்தியர்கள் ஈடுபட்டனர்?.

      • நண்பர் புரவி,
        //இந்திய அடிமையாக இருந்த போது நேதாஜி பாசிச ஹிட்லருடன் உதவி கேட்டது ஏன்?.
        அப்போது இந்தியாவின் அரசியல் வாதிகளின் அரசியல் நிலைப்பாடு என்ன?.
        இரண்டாம் உலக போரில் ஏன் இந்தியர்கள் ஈடுபட்டனர்?.//
        இது நேதாஜியை தூக்கிபிடிப்பவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி.
        அன்றிலிருந்து இன்று வரை இந்திய அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களின் அரசியல் நிலைபாடு என்பது ஏகாதிபத்தியங்களை அண்டிப்பிழைப்பதே.

    • மறுபடியும் சம்பந்தமில்லாத விஷயங்களைக் கொண்டுவந்து புலிகளுக்குச் சப்பைக்கட்டுக் கட்டப் பார்க்கிறீர்களே!

      பலஸ்தீனம் பற்றியோ காஷ்மீர் பற்றியோ ஈராக், ஆப்கான் ஆக்கிரமிப்புக்கள் பற்றியோ வாய் திறந்தார்களா? யாரை மகிழ்விக்க அவர்களது மெளனம்?

      உலகமயமாக்கலும் திறந்த பொருளாதாரத்தையும் வரவேற்றுப் பேசினார்களே, சோஷலிசத்தைக் கொண்டுவரவா?

      சமாதானப் பேச்சுத் தெடங்கி வடக்கக்குப் போக்குவரத்து தொடங்கியவுடன் பெரு வணிகர்களுடன் இரகசியமாக தரகு வேலைகள் பார்த்தார்களே, சோஷலிசத்தைக் கொண்டுவரவா?

      இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம்.
      முதலில் இவற்றுக்கெல்லாம் என்ன சோஷலிச விளக்கம் என்று சொல்லுங்கள்.
      பிறகு மற்ற விடயங்களை விளக்குகிறேன்.

      • காந்தியார் அம்பேத்கரிடம் சென்று நீங்கள் ஏன் விடுதலை போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்று சொன்ன போது
        அண்ணல் சொல்கிறார் “வெறும் 15௦ ஆண்டுகளாக அடிமையாக இருக்கும் உங்களுக்கே இவளவு கோபம் வருகிறதே ஆனால் எங்களை இந்த மண்ணில் 1௦௦௦ வருடங்களுக்கு மேலாக நாயை போலவும் பூனையை போலவும் நடதுகிரிர்களே இதிலிருந்து எங்களுக்கு விடுதலை வேண்டாமா” என்று பதில் கொடுத்தார்.

        புலிகள் மற்ற போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதற்காக ஏதோ ஒரு குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இதை சொல்வது தவறு.
        விடுதலை அடைந்து ஒரு வலுவான நாடக இம்மனில் உருவான கியூபா வே சோரம் பொய் விட்ட காலத்தில் களத்தில் நின்று போராடும் விடுதலை புலிகளின் மீது விமர்சனத்தை வைக்காமல் அவதூறு சொல்வது நகைப்புக்குரியது.

        //பலஸ்தீனம் பற்றியோ காஷ்மீர் பற்றியோ ஈராக், ஆப்கான் ஆக்கிரமிப்புக்கள் பற்றியோ வாய் திறந்தார்களா?//

        மேலே குறிபிட்டுள்ள நாடுகள் எல்லாம் ஈழ பிரச்சனைகாக எப்போதாவது வாய் திறந்தார்களா?
        கியூபா வே ஈழ பிரச்சனயில் சோரம் போனது தானே.

        • நண்பர் புரவி, விவாதத்தின் ஊடே நீங்கள் ஒரு விசயத்தை மறந்துவிடக் கூடாது. அதாவது ஈழப்பிரச்சினை என்பது வேறு; விடுதலைப் புலிகளின் அரசியல் வெறுமை என்பது வேறு.

  27. When the army kills, if they come to know someone is Tamizhian, how can one battle politically? Tamizhians took guns only because they could not bear the torture of the Srilankan army.

    • Not as simple as that.
      Putting politics in command of the gun was something the LTTEnever understood.

      Tamil militancy had started well before military operations by the state.
      Political killings started in 1974.
      That the Sri Lankan state is an oppressive Sinhala chauvinist state is true. But Tamil nationalism of every shade failed to appeal to the progressive forces and isolated itself from all nationalities, including Muslims and Hill country Tamils, who are also badly oppressed by the Sri Lankan state.

      Fighting the army is one thing, killing innocent Sinhalese is quite anither thing. The LTTE harmed people all nationalities– the Hill Country Tamils being an exception as their existence had no impact on the LTTE.

      • Garammasala
        //Tamil militancy had started well before military operations by the state.
        Political killings started in 1974//
        I think you are wrong here because there weren’t military operations by government but there were police and singala kundas’ operation to control tamil’s non-violence protests. Some of the power wanting Tamil politicians joined or Supported government. All these events caused them take arms.

      • My reply was to a statement that Tamil militancy started after military operations against Tamils.

        No police operation or attacks by Sinhala goons can justify the series of political murders initiated by Prabhakaran and others, and encourgaed by Mr & MrsAmirthalingam among others.

  28. போர் நிறுத்தம் புலிகள் அநேக முறை கோரி இருகின்றனர். அவர்கள் வலுவாக இருந்த போதிலும்.
    போர் நிறுத்தம் அமலில் இருந்த பொது அதை முறி அடித்து நான்காம் கட்ட ஈழ போரை தொடங்கியது சிங்கள பேரின அரசு.
    புலிகளின் ஜனநாயக பண்பாடு பற்றி போர் முடிந்ததும் சிங்கள இன வெறியன் ராஜபக்செவே ஒரு பேட்டியில்கூறி இருக்கிறான்.

    • புலிகளின் ஜனநாயகப் பண்பாடு பற்றி யார் பேசுவது என்று ஒரு விவஸ்தையே இல்லையா? ராஜபக்சே ஒரு இனவெறி பிடித்த பாசிஸ்ட்டு. அவன் யோக்கியதை பற்றி உலகம் அறியும். அவன் புலிகளுக்கு சர்டிபிகேட் கொடுத்தான் என்று நீங்கள் வந்து இப்படி பேசுகிறீர்களே இது என்ன வகைக் கண்ணோட்டம்?

      • புலிகளை பயங்கரவாதியாக காமிப்பதற்கு தொடர்ச்சொயாக சிங்கள பேரினவாதம் முயன்று கொண்டிருக்கும் போதுஒரு பாசிஸ்ட் வாயில் இருந்து வருவது மிக சிரமம் தானே.

  29. “எப்படியாவது அதிமுக வை ஜெயிக்கவைப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு வெற்றி கிட்டிவிடும் என்ற கண்ணோட்டம் கொண்ட உங்களுக்கு இவை பற்றி புரிந்து கொள்ள முடியாது”

    இது என்னது? விடுதலை புலிகளை ஆதரித்து பேசினால் அதற்கு தாங்கள் கற்பனை செய்து கொண்டு இப்படி ஒரு பின்னோட்டம் இட்டுருகிரீர்கள்.
    இது எப்படி இருக்கிறது என்றால் கருணா(நிதி), ராசா தாழ்த்த பட்டவர் என்பதால் தான் அவரை பதவியை விட்டு இறங்க சொல்லுகிறார்கள் என்பது போல் உள்ளது.

    • நண்பர் புரவி,
      எப்படிங்க, அதுக்குள்ள சமகால வரலாற்றையே மறந்துவிட்டு, நான் கற்பனையாக பேசுவதாக என் என்மீது பழி சுமத்துறீங்க? கருணாநிதிதான் துரோகி, அ.தி.மு.க. வுக்கு ஓட்டுப்போட்டால் ஜெயலலிதா புலிகளை ஆதரிப்பார் என்று தமிழினவாதிகள் அ.தி.மு.க. வுக்கு பிரச்சாரம் செய்ததை அதற்குள் மறந்தால் நான் என்ன செய்ய முடியும்? இப்படி ஜெயலலிதாவையும், ராசபக்சேவையும் வேறு வேறாக பார்ப்பதுதான் தமிழினவாதிகளின் ஓட்டாண்டி அரசியல். புலிகளை கழுத்தறுத்ததில் இவர்களுக்கும் பங்கு உண்டு. அதனால்தான் இவர்கள் புலிகளின் தோல்வியிலிருந்து படிப்பினை பெறாமல் பிரபாகரனை கடவுளாக்கிவிட்டு அடங்கிவிட்டார்க்ள்.

      • இரண்டு கட்சிகளும் திருடர்கள் முன்னேற்ற கழகமாக மாறி நிறைய நாள் ஆகிவிட்டது.
        நான் கேட்டது என்ன வென்றால் நான் அதி மு க வை ஆதரிக்கவே இல்லையே. தாங்கள் ஏன் தாங்களாகவே கற்பனை செய்து கொள்கிறீர்கள் என்பதே.

  30. தயவு செய்து ராஜபக்ஸ எதை எப்போது சொன்னார் என்று சொல்லுவீர்களா?

    2002 இல் அமெரிக்கா அமைதிப் பேச்சை புலிகள் மீது திணித்த போதே புலிகளை நிராயுதபாணிகளாக்க முடிவுகட்டிவிட்டது.
    இந்தியா 1989க்குப் பிறகு அவர்களை ஒழித்துக்கட்ட முடிவெடுத்து விட்டது.
    புலிகளின் இந்த ‘நண்பர்கள்’ இல்லாமல் ராஜபக்ஸ போரை வென்றிருக்க முடியாது.

  31. Anonymous:
    You said: “this is a wiki link which covers all issues under this topic. you may sneer at wiki, but it is a very useful source and a first door to open many other doors and facts.”

    Wikipedia is not a reliable source. But it is a good starting point for search. Where it leads depends on (1) who dominates cyberspace and (2) what one is looking for.

    You suggersted: “try to visit Ukraine or Lativia or Azerbekistan and enquire with the people there about their feelings towards Stalinsit USSR. and read history with an open mind.”

    Where is Azerbekistan?
    (I will pass on the spelling mistake on Latvia).

    There was no nationalist upheaval in any of the FSU republics during the Stalin era and even 10-15 years after under his enemies.
    Grievances surged with the mounting of the economic problems of the USSR, and the Afghan war in particular.

    Have you visited “Ukraine or Lativia or Azerbekistan”?
    Remember that Stalin dies more than 50 years ago. Thus living memories about life in the USSR will be relating to the post-Stalin era, when, reportedly, all his mistakes were “rectified”.

    So, it seems that it is you who should try the last of your suggestions.

  32. நண்பர் புரவி, புலிகளை ஏன் சிங்கள பேரினவாதிகளின் பார்வையில் பார்க்கிறீர்கள்? மா-லெ கண்ணோட்டத்தில் பார்க்க உங்களை எது தடுக்கிறது?

  33. நண்பர் புரவி, அதிமுக வை நீங்கள் ஆதரிக்காமல் இருந்திருக்கலாம். தமிழினவாதிகள் ஆதரித்தார்களா? இல்லையா? புலிகள் மீதான உங்கள் பார்வையும், அவர்கள் பார்வையும் வேறு வேறு அல்லவே.

Leave a Reply to rammy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க